text
stringlengths 11
513
|
---|
சமூகநிலையை விளக்குக. பிற்காலப் பாண்டியர்களின் சமூகநிலை குறித்து மார்க்கோபோலோ மற்றும் வாசுப் ஆகியோரின் குறிப்புகளை விவரி. 4. பிற்காலப் பாண்டியரின் ‘ சமய வளர்ச்சி ’ குறித்து விவரி. 225 5. பிற்காலப் பாண்டியரின் ' கலை வளர்ச்சி ' குறித்து விவரி. 6. பிற்காலப் பாண்டியரின் ‘ இசை ’ , ‘ நடன ’ , ‘ நாடகக்கலை ’ பற்றி விளக்குக. 7. பிற்காலப் பாண்டியரின் இலக்கிய வளர்ச்சியைக் குறித்து விளக்குக. 8. பிற்காலப் பாண்டியரின் ‘ கல்வி நிலை ’ குறித்து விளக்கி எழுதுக. 9. இந்தியப் பண்பாட்டிற்கு பிற்கால பாண்டியரின் ‘ கொடைகள் ’ யாவை ?
|
10. பிற்காலப் பாண்டியரின் கட்டடக்கலை பற்றி விளக்குக. ஈ. நான்கு பக்க அளவில் விடையளி 1. பிற்காலப் பாண்டியர்களின் பண்பாடு பற்றி ஒரு கட்டுரை வரைக. 2. பிற்காலப் பாண்டியர்களின் கலை , கல்வி மற்றும் இலக்கியம் குறித்து ஒரு கட்டுரை வகை. 8. இந்தியப் பண்பாட்டிற்கு இசுலாம் மற்றும் கிறித்துவ சமயங்களின் பங்கு 8. 1. இசுலாம் விளக்கம் ‘ இசுலாம் ’ என்பது ஓர் அரபுச் சொல். அதன் பொருள் பணிதல் , சரணடைதல் , கீழ்ப்படிதல் என்ற மூலக்கூறுகளை உள்ளடக்கியது. ‘ இசுலாம் ’ என்ற சொல்லின் நேர்ப்பொருள் ' அமைதி ' என்பதாகும். ஒருவன் உடலையும்
|
உள்ளத்தையும் அல்லாவிடம் பணிவாக ஒப்படைக்கும் போது அமைதியைப் பெறுகிறான் எனப் பொருள் படும். அல்லாவின் விதி முறைகளுக்கேற்பப் பணிந்து செயல்படுபவர்கள் ‘ இசுலாமியர்கள் ' என்பர். மேற்காணும் பண்புகளைப் பெற்றிருப்பவன் எந்த இனத்தையும் , சமூகத்தையும் , நாட்டையும் குலமரபையும் சேர்ந்தவனாக இருப்பினும் அவன் ஒரு ‘ முஸ்லீம் ’ என ‘ அபுல் - அலா மௌருடி ’ கூறுகிறார். 8.1.1. நபிகள் நாயகம் இசுலாம் சமயத்தின் தீர்க்கதரிசியாக முஸ்லீம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். முகமது நபியாவார். இவர் மெக்காவில் அப்துல்லா அமீனா என்ற தம்பதியருக்கு
|
மகனாய்ப் பிறந்தார். ‘ கதீஜா ’ என்ற செல்வ சீமாட்டியை மணந்து பிறகு இல்லறத்திலிருந்து விலகி ‘ மெக்கா ’ நகரத்திற்கு அப்பால் இருந்த ' ஹீரா ' என்ற குகையில் தவம் இருந்தபோது இறைதூதராகிய ‘ காபிரில் ’ ( Gabriel ) தோன்றி அல்லாவின் புனித வார்த்தைகளாகிய உண்மைகளை அவரிடம் கூறினார். அதன் தொகுப்பே இஸ்லாமியத்தின் புனித நூலான ‘ திருக்குரான் ’ ஆகும். 227 8.1.2. சமயக் கோட்பாடுகள் “ அல்லா ஒருவரே கடவுள். முகமது நபியே அவருடைய தீர்க்கதரிசி. ஏழுவகையான உடலசைவுகளுடன் ஒரு நாளைக்கு ஐந்துமுறை தொழுகை செய்வது , ' ரம்ஜான் ’ மாதத்தில் நோன்பு
|
இருப்பதும் வட்டி வாங்காமல் இருப்பது , வாழ்க்கையில் ஒரு முறையாவது ' துல் - ஹிஜனா ' என்னும் புனித மாதத்தில் மெக்காவிற்கு கட்டாயமாகச் சென்று வரவேண்டும் ” என்பது இசுலாமியத்தின் ஐந்து தூண்களெனக் கருதப்படுகிறது. இறை தூதரான காபிரில் அல்லாவின் வார்த்தையாக முகமது நபியிடம் கூறியதை ஏற்கும் ‘ சன்னி ’ பிரிவும் , அல்லாவின் புனித வார்த்தைகளை ஏற்று , அதைப் பின்பற்றி இறைத் தன்மையை அடைந்த ‘ தீர்க்கதரிசி ’ எவரோ அவரை மதத்தலைவர் அதாவது ‘ இமாம் ’ என ஏற்றுக்கொண்டு வழி நடக்கும் ‘ ஷியா ’ பிரிவும் இஸ்லாமிய சமயத்தில் ஏற்பட்ட
|
இருபிரிவுகள் ஆகும். ஒரு கடவுட்கோட்பாட்டை ஏற்கும் இசுலாம் உருவ வழிபாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை , இயற்கையின் சீற்றங்கள் வாழ்க்கையின் முடிவை அறிவிப்பதாகவும் , வினைப் பயனைப் பொறுத்து ஒவ்வொரு மனிதனும் ‘ சொர்க்கம் ’ ‘ நரகம் ’ என்பதை அடைவான் என்பதும் இசுலாமியர்களின் நம்பிக்கையாகும். இசுலாமியர்கள் தம் மதக்கோட்பாடுகளுக்கேற்ப பல்வேறு விழாக்களைக் கொண்டாடி வருகின்றனர். அவற்றில் பக்ரீத் , மொஹரம் , மிலாடி - நபி , ரம்ஜான் போன்ற விழாக்கள் முக்கியமானவை ஆகும். இவ்விழாக்களின் மூலம் நட்பு , அன்பு , அமைதி மற்றும் சகோதரத்துவம்
|
ஆகியவற்றை வலியுறுத்துகின்றனர். 8.1.3. இந்திய பண்பாட்டிற்கு இஸ்லாமிய சமயத்தின் கொடை 1. சட்டத்தின் முன் அனைவரும் சமம். 2. மேலும் , பஞ்சாயத்து முறை , பர்கானா அல்லது பிர்கா முறை ( கிராமங்களின் ஒருங்கிணைப்பு ) , மாவட்டம் அல்லது சர்க்காரர் , மாநிலம் அல்லது சபா , என்ற அமைப்புகள் இசுலாத்தின் மூலம் இந்திய அரசியல் பண்பாட்டிற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. 3. இந்திய பண்பாட்டின் ஒற்றுமைக்கு அல்பரூனி என்ற முஸ்லீம் அறிஞர் ‘ சூபி இயக்கத்தை ' ஒரு கொடையாக வழங்கி இந்து - முஸ்லீம் ஒற்றுமையை நிலைநாட்டினார். 4. சாதி ஒழிப்பு ,
|
சமத்துவம் , சகோதரத்துவம் , தீயபழக்கங்களை ஒழித்தல் , மூட நம்பிக்கைகளுக்கு முடிவுகட்டுதல் போன்ற கொள்கைகளைக் கொண்ட சூபி இயக்கமானது நமது இந்தியப் பண்பாட்டிற்கு வழங்கப்பட்ட ஒரு வரப்பிரசாதமாகும். 5. தத்துவம் , சோதிடம் , மருத்துவம் போன்ற சமஸ்கிருத நூல்களைப் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்து நமது இந்தியப் பண்பாட்டின் சிறப்பு அம்சங்கள் உலகிற்கு உணர்த்திய பெருமை இசுலாமியர்களையே சாரும். 6. மொகலாயர்களின் கலையம்சங்களில் ஒன்றான பூச்சித்திர தையல் வேலைப்பாடுகள் , பூ வேலைப்பாடுகள் அமைந்த மணி மண்டபங்கள் , உலோகம் மற்றும் தங்க
|
வேலைப் பாடுகள் போன்ற கவின் மிகு கலைகள் நம் இந்தியப் பண்பாட்டிற்கு மேன்மேலும் பெருமை சேர்ப்பனவாக அமைந்துள்ளன. 7. சமயச்சார்பற்ற பொது அடிப்படையில் அமைந்த விளையாட் டரங்கங்கள் , நகர நுழைவாயில்கள் , பூந்தோட்டங்கள் , அரண்மனைக் கோட்டைகள் , மசூதிகள் மற்றும் கட்டடக் கலையில் காணப்படும் வண்ணக்கற்கள் , ஓடுகள் , சலவைக்கற்கள் போன்றனயாவும் இந்தியப் பண்பாட்டின் சிறப்புக் கூறுகளாகத் திகழ்கின்றன. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் கட்டடக்கலைக்கு இஸ்லாத்தின் அளப்பரும் கொடை எனலாம். 8. இந்தியப் பண்பாட்டின் சிறப்புக் கூறுகளாக
|
விளங்கும் எண்குறியீட்டுமுறை , வானநூல் , மருத்துவம் , கணிதம் , 229 குறிக்கணக்கியல் ( Algebra ) போன்ற நூல்கள் அராபியர் மூலம் ஐரோப்பா முழுதும் பரவி இந்தியாவின் பெருமையை மேலோங்கச் செய்தது. 9. இசுலாமிய சமயத்தாக்கத்தின் விளைவாக இந்திய முழுதும் பக்தி இயக்கம் தோன்றி அதன் மூலம் வட்டாரமொழிகளில் இலக்கியம் வளர்ச்சி பெற்றது. 8. 2. கிறித்துவம் உலகம் முழுவதும் பெரும்பான்மையான நாடுகளில் பரவியிருக்கும் சமயம் கிறித்துவம் ஆகும். இந்தியாவில் இந்து சமயத்திற்கு அடுத்து பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்படும் சமயம் கிறித்துவம்
|
என்று கூறப்படுகிறது. இதனுடைய நற்செயல்களின் மூலம் இந்திய சமயங்களில் காணப்பட்ட மூடப்பழக்கங்களையும் , தேவையற்ற சடங்குகளையும் நீக்கி ஒரு முழுமையான சமய வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள காரணமாய் இருந்தது. கிறித்துவம் என்பது வரலாற்றின் மூலம் அறியும் உண்மையாகும். கிறித்துவம் என்பது ' கிறிஸ்து ’ அதாவது ‘ ஏசு கிறிஸ்து ’ என்ற இயற்பெயரிலிருந்து பெறப்பட்ட சொல்லாகும். ஏசு கிறிஸ்துவின் உயர்ந்த கோட்பாட்டு அம்சங்களைக் குறித்து கூறுவது ‘ கிறித்துவம் ’ எனலாம். 8.2.1. ஏசுகிறிஸ்து கிறித்துவ சமயத்தைத் தோற்றுவித்தவர் ' ஏசு கிறிஸ்து '
|
ஆவார். இவரை ' ஜீஸஸ் ' என்றும் யூத சமயத்தவர் அழைப்பர். இவர் ‘ இஸ்ரலே நாட்டிலிலுள்ள ' பெத்லஹேம் ' என்னுமிடத்தில் கன்னிமேரியின் குழந்தையாகத் தோன்றினார். இவருடைய தந்தை ஜோசப் ஆவார். 8.2.2. சமயக்கோட்பாடுகள் " மனித உயிர்கள் இறைவன் மீது இதயபூர்வமாகவும் , தூய எண்ணத்துடனும் அன்பு செலுத்த வேண்டும் " எனவும் , 230 பரலோகத்திலிருக்கும் ‘ பரமபிதா ' அல்லது ' சொர்க்கம் ’ என்பதை அடைய அன்பு , நீதி , கடமை போன்றவற்றைக் கடைபிடித்து ஒழுக வேண்டும் என்பதும் கிறித்துவ சமயத்தின் கொள்கை எனக் கூறப்படுகிறது. எனவே , அன்பு , கடவுள் , நீதி ,
|
நம்பிக்கை போன்றவை முக்கிய கோட்பாடுகளாகக் கொள்ளப் படுகிறது. மேலும் , உலகத்தில் பேசப்படும் வார்த்தைகள் யாவும் இறைவனையே சார்ந்தது என்பதும் கிறித்துவத்தின் கோட்பாடாகும். கிறித்துவ கோட்பாடுகள் அடங்கிய நூல் ‘ பைபிள் ’ அல்லது ‘ விவிலியம் ’ ( புதிய ஏற்பாடு என்பதாகும். கிறித்துவ சமயத்தினர் ஆங்கிலப் புத்தாண்டு , புனித வெள்ளி , ஈஸ்டர்ஸன்டே கிறிஸ்து ஜெயந்தி , நியூ ஈயர்ஸ் ஈவ் போன்ற முக்கிய விழாக்களைக் கொண்டாடி மகிழ்கின்றனர். விழாக்களின் மூலம் அன்பு , நட்பு , சகோதரத்துவம் , சமத்துவம் ஆகிய நற்பண்புகளை வலியுறுத்துகின்றனர்.
|
8.2.3. கிறித்துவ சமயத் தொண்டு நிறுவனங்களின் பணிகள் 1. இனவேறுபாடுகளையும் சாதிக்கொடுமைகளையும் களைய கிறித்துவ சமயக் குழுக்கள் பெருந்தொண்டாற்றி வருகின்றன. 2. கலப்புத் திருமணங்கள் மூலம் ஒன்றுபட்ட சமுதாயத்தை உருவாக்குவதில் கிறித்துவ சமயம் பெரும்பங்கு ஆற்றிவருகின்றது. 3. அனாதை விடுதிகள் , முதியோர் காப்பகங்கள் நிறுவி , வெள்ளம் , பூகம்பம் மற்றும் பஞ்சம் போன்ற இயற்கையின் சீற்றங்களிலிருந்து விடுவிப்பதற்கான நிவாரணப் பணிகளை செவ்வனே செய்து வருகின்றன. 4. கிறித்துவ சமயக்குழுக்கள் நாடெங்கும் சிறந்த மருத்துவமனை களை நிறுவி ,
|
சமுதாய நலவாழ்வுப் பணிகளைச் செய்து வருகின்றனர். 5. சமுதாயத்தில் காணப்படும் குறைப்பாடுகளைக் களைய , கிறித்துவ சமயம் துண்டுப்பிரசுரங்கள் மற்றும்நூல்கள் மூலம் பெருந் தொண்டாற்றி வருகின்றது. 231 6. கிறித்துவ சமயக் குழுக்கள் பட்டிதொட்டிகளிலும் கல்விக் கூடங்கள் நிறுவி இலவச உணவு , உறையுள் , கல்வி போன்றவற்றை வழங்கி ஒழுக்கம் , கட்டுப்பாடு போன்ற உயரிய நெறிகளையும் , நீதி போதனைகளையும் புகட்டி வருகின்றன. 7. கிறித்துவ சமயக் குழுக்கள் அந்தந்த வட்டார மொழிகளை நன்கு கற்று சமயத்தைப் பரப்பியதுடன் , பல்வேறு நூல்களையும் ஆங்கிலத்தில்
|
மொழி பெயர்த்து , அனைத்து இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் பெருந்தொண்டாற்றி வந்துள்ளனர். குறிப்பாக வீரமா முனிவர் , கால்டுவெல் , ஜி.யு.போப் போன்ற பெரியோர்கள் தமிழ் மொழிக்கு ஆற்றியுள்ள தொண்டு அளவிட முடியாது எனலாம். 8. தன்னலங்கருதாது , உலக சமுதாய நலனுக்காக மாபெரும் பணிகளைக் கிறித்தவ சமயப் பரப்புக் குழுக்கள் ஆற்றி வருகின்றன. இவ்வாறு கிறித்துவ தொண்டு நிறுவனங்கள் யாவும் கல்வி வளர்ச்சிக்கும் சமூக நல வாழ்வுக்கு பல அரிய பணிகளைச் செய்து வருகின்றன. 8.2.4. இந்திய பண்பாட்டிற்கு கிறித்துவ சமயத்தின்
|
கொடை 1. கிறித்துவ சமயத் தாக்கத்தின் விளைவாக இந்து சமயத்தினரின் மூடப் பழக்கங்கள் மற்றும் தேவையற்றச் சடங்குகளை நீக்க முற்பட்டனர். 2. சாதி சமய வேறுபாடற்ற , உலக சகோதரத்துவம் , சமத்துவம் , அன்பு , நட்பு , நீதி , அமைதி போன்ற தத்துவக் கோட்பாடுகள் இந்திய பண்பாட்டிற்கு மிகவும் துணை புரிந்தன. 3. கிறித்துவ தொண்டு நிறுவனங்களின் சமய , கல்வி , சமுதாய நலவாழ்வுப் பணிகள் இந்தியப் பண்பாட்டு வளர்ச்சிக்கு மேலும் சிறப்பு செய்தன. 4. கிறித்தவ சமயக்குழுக்கள் இந்திய வருகையின் போது தம்முடன் அச்சுபொறி இயந்திரம் கொண்டு வந்தமையால்
|
இந்தியருக்கு அது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. 232 5. வட்டார மொழிகளில் இலக்கியம் மற்றும் சமய நூல்களைத் தோற்றுவித்ததால் அனைத்து இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும் இந்தியப் பண்பாட்டின் மேன்மைக்கும் கிறித்துவம் உதவி புரிந்தது. 6. கிறித்துவ சமயத்தாக்கத்தின் விளைவாக இந்து சமயத்தில் பல சீர்திருத்த இயக்கங்களென ஆரிய சமாஜம் , பிரம்ம சமாஜம் , பிரம்ம ஞான சபை மற்றும் இராம கிருஷ்ண இயக்கம் போன்ற இயக்கங்கள் தோன்றி 7. வீரமா முனிவர் ' தேம்பாவணியையும் , ஜி.யு. போப் அவர்கள் திருவாசகம் , திருக்குறள் , நாலடியார் , புறநானூறு ,
|
புறப்பொருள் வெண்பா , போன்றவற்றையும் ஆங்கில மொழியில் மொழி பெயர்ப்பு செய்தார். பயிற்சி வினாக்கள் அ. ஓரிரு வரிகளில் விடையளி 1. ' இஸ்லாம் ' - வரையறு. 2. இஸ்லாம் என்பதன் பொருள் யாது ? 3. இஸ்லாமியர் என்போர் யார் ? 4. இஸ்லாம் பற்றி ‘ அபுல் - அலா மௌருடி ' கூறுவன யாது ? 5. இஸ்லாமியரின் ‘ புனித நூல் ’ யாது ? 6. இஸ்லாம் சமயத்தின் ‘ இருபிரிவுகள் ’ யாவை ? 7. ' சூபி இயக்கத்தைத் ' தோற்றுவித்தவர் யார் ? 8. இஸ்லாமியர் கொண்டாடும் விழாக்கள் யாவை ? 9. ' கிறித்துவம் ' என்ற சொல்லின் பொருளைக் கூறு. 10. கிறித்துவ சமயத்தின் ‘ வேத
|
நூல் ’ யாது ? 233 11. வீரமா முனிவர் எழதிய நூலின் பெயர் என்ன ? 12. ஜி.யு. போப் ஆங்கில மொழியாக்கம் செய்த தமிழ் இலக்கிய நூல்கள் யாவை ? 13. கிறித்துவர்கள் கொண்டாடும் விழாக்கள் யாவை ? ஆ. பத்துவரிகளில் விடையளி 1. இஸ்லாமிய சமயக் கோட்பாடுகள் யாவை ? 2. கடவுள் குறித்து இஸ்லாமியரின் நம்பிக்கை யாது ? 3. கிறித்துவ சமயத்தின் கோட்பாடுகள் யாவை ? இ. ஒரு பக்க அளவில் விடையளி 1. இந்தியப் பண்பாட்டு வளர்ச்சிக்கு ‘ கிறித்துவ தொண்டு ’ நிறுவனங்களில் பணிகள் யாவை ? 2. இஸ்லாம் மற்றும் கிறித்துவ ' சமயக் கோட்பாடுகளை ' விளக்குக. ஈ. நான்கு
|
பக்க அளவில் விடையளி 1. இந்தியப் பண்பாட்டிற்கு கிறித்துவ சமயத்தின் கொடை பற்றி ஒரு கட்டுரை வரைக. 2. இந்தியப் பண்பாட்டில் இஸ்லாம் மற்றும் கிறித்துவ சமயத்தின் கொடை பற்றி ஒரு கட்டுரை வரைக. 9. பக்தி இயக்கம் ( இடைக்காலம் ) இந்து சமயம் மனிதன் நற்கதி அடைய பல்வேறு நெறிமுறைகளை உருவாக்கித் தந்துள்ளது. இந்நெறிமுறைகள் மனிதனின் உள்ளம் , சிந்தனை , செயல்திறன் ஆகியவற்றிற்கு ஏற்ப அமைந்துள்ளன. அவரவர் மனநிலைக்கு எது எளியது , இனியது என்று தோன்றுகிறதோ அதனைப் பின்பற்றி நற்கதி அடையலாம். இத்தகைய பல நெறிகளுள் மிகச் சிறப்பாகக்
|
கருதப்படுவன 1. பக்தி நெறி 2. கருமநெறி 3. ஞானநெறி. இந்நெறிகளுள் மிகவும் எளிமையானதும் எங்கும் , எந்தச் சூழலிலும் , எல்லோராலும் நடைமுறைக்கு எளியதுமானது பக்திநெறியாகும். பக்தி நெறி பற்றியும் , அந்நெறியினை பரப்பியவர்கள் பற்றியும் விரிவாகக் காண்போம். 9. 1 , பக்தி நெறி விளக்கம் இறைவனிடத்தில் நாம் செலுத்தும் ஆழ்ந்த அன்பே ‘ பக்தி ’ எனலாம். பக்தி என்னும் சொல் பஜ் என்ற சொல்லினின்று வந்ததாகக் கருதப்படுகிறது. இதன் பொருள் ' வழிபாடு. ' எனவே பக்தி என்பது உள்ளார்ந்த அன்போடு இறைவனை வழிபடுவது என்பதாகும். மனித இனத்தின் பெரும்
|
பகுதிக்கு ஏற்புடையதாக இருப்பது இந்த அன்பு நெறியாகும். அனைவரும் அமைதியுடன் வாழ ஒருவர் மீது ஒருவரும் , ஒரு நாடு மற்ற நாட்டின் மீது அன்பு செலுத்த வேண்டும் என்பதும் நாம் அறிந்த உண்மையாகும். இந்து சமயம் “ அன்பே சிவம் , ” “ அன்பே கடவுள் ” என்கிறது , பக்தி நெறியாவது ஆழ்ந்த அன்போடு இறைவனை வழிபடும் மார்க்கம் எனப் பொருள்படும். இறைவனது வல்லமையை உணர்ந்து , விரும்பி , அன்புடன் செலுத்தும் அன்பினையே பக்தி எனச் சான்றோர் கூறுகின்றனர். பக்தியின் வகைகள் பக்தி இரு வகைப்படும். அவை அபரபக்தி , பரபக்தி என்பன வாகும். அபரபக்தி :
|
இந்நிலையில் பக்தன் நல்ல தெளிவில்லாமல் சடங்குகளை செய்தும் , பரந்த மனப்பான்மை இல்லாமல் குறுகிய வட்டத்துள் நின்று ஒரு குறிப்பிட்ட தெய்வத்தையே வழிபட வேண்டும் என்ற கருத்துடையவனாய் செயல்படுவான். பிற தெய்வங்களை வழிபடும் பக்தர்களை வெறுக்கிறான். அவர்களது வழிபாட்டுமுறைகளை , தெய்வத்தை ஏற்பதில்லை. பரபக்தி : இந்நிலையில் பக்தன் அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதுடன் , பக்தியின் உயர்ந்த இறுதி நிலையில் செயல் படுகிறான் உலகம் தழுவிய உயர்ந்த அன்பு நெறியே பரபக்தியாகும். இவ்விரு நெறிகளும் தொன்றுதொட்டு வந்தவையாகும். 9.1.1. பக்தி
|
நெறி தோன்றக் காரணங்கள் 1. பழமையான இந்துமதம் தன் தூய்மையையும் புனிதத் தன்மையையும் இழக்கத் தொடங்கியது. 2. மூடப்பழக்க வழக்கங்கள் , சாதிப்பாகுபாடுகள் , தவறான பழக்கவழக்கங்கள் மதத்தின் புனிதத் தன்மையை சீரழித்தன. 3. உயர் குடியினராக கருதப்பட்டவர்கள் , பிற பிரிவினரைக் கொடுமைப்படுத்தினர். இழிவுபட்டவர்களாக கருதிச் செயல்பட்டனர். 4. புதியதாய்த் தோன்றிய சமண , பௌத்த சமயங்கள் இந்து சமயத்தில் காணப்பட்ட தீமைகளைக் கண்டித்தன. எளிதாக ஏற்றுக் கொள்ளக் கூடிய நெறிகளை எடுத்துக் கூறிப் பின்பற்றச் செய்தன. 5. சமயக் கோட்பாடுகள் பாமர
|
மக்கள் புரிந்துகொள்ளும் படி அமையவில்லை. 6. இந்தியாவில் புதியதாய் வந்த சமயத்தினர் வைதீக சமயமான இந்து சமயத்தவர்களையும் கவரும் வண்ணம் செயல்பட்டனர். 236 7. பிற சமயத்தவர்கள் வெளிப்படையாக அறிவித்து செயல்பட்ட ‘ ஒரு கடவுள் கோட்பாடு ' ‘ உலகில் பிறந்தோர் அனைவரும் உடன்பிறந்தோரே ' என்ற கொள்கைகள் மக்களைக் கவர்ந்திழுத்தன. 8. பிற சமயங்களில் காணப்பட்ட சமத்துவக் கோட்பாடுகள் இந்து சமயத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களையும் கவர்ந்திழுத்தன. மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் சமயத்தை நன்னிலை அடையச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில்
|
தோன்றிய இயக்கமே பக்தி இயக்கமாகும். இப்பக்தி இயக்கம் இந்து சமயத்தைத் சீர்திருத்தி , இனிய சமயப்பூங்காவாக்கி தெய்விக மணம் கமழும் வண்ணம் செய்தது. இக்காலத்தில் வடநாட்டிலும் தென்னாட்டிலும் பக்தி நெறியைப் பரப்ப , சமயச் சான்றோர்கள் பலர் தோன்றி இந்த அரிய பணியைச் சிறப்புடன் செய்தனர். சைவ , வைணவ மற்றும் இதர சமயப் பிரிவுகளைச் சார்ந்தவர்களும் நாடெங்கும் , வட்டார மொழிகளில் பக்தி நெறியை , படிப்பறிவற்ற பாமர மக்களும் பின்பற்றும் வண்ணம் தத்தம் சொற்களாலும் , செயல்களாலும் பரப்பினர். 9.1.2. பக்தி இயக்கத்தின் சீரிய பண்புகள் 1.
|
தெய்வங்களை பல்வேறு வடிவங்களில் வணங்கினாலும் அவை அனைத்தும் ஒரே இறைவனின் பல்வேறு தோற்றங்கள் என்பதை உணர்ந்து , ' ஒருவனே தேவன் ' , அவனையே வணங்கவேண்டும் என்ற பேருண்மையை வலியுறுத்தியது. 2. முறையான பக்தி நெறியில் சென்றால் நற்கதியாகிய வீடுபேற்றை அடையலாம். 3. நல்ல குருவின் துணையுடன் தான் நாம் இறைவனை அடைந்து பேரின்ப நிலை அடைய முடியும் என்ற உண்மை உணர்த்தப்பட்டது. 4. மக்களுள் உயர்ந்தோர் , தாழ்ந்தோர் என்னும் நிலை கூடாது. ‘ எல்லோரும் சமம் ’ எல்லோரும் உடன்பிறந்தோரே என்பதை உணர வேண்டும். Page 140 of 201 237 9.1.3. பக்தி
|
இயக்கத்தின் விளைவுகள் 5. பாகுபாடு களையமுற்பட்டது. 6. மூடபழக்கவழக்கங்கள் நீக்கப்பட்டன. 7. ‘ மறைநூல்களில் ’ பொதிந்து கிடந்த அரிய பேருண்மைகள் எளிய வட்டார மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டன. சமய உண்மைகள் எளிய நீதிக் கதைகளாகப் பாமரரும் உணரும் வண்ணம் வடிவமைத்துத் தரப்பட்டன. 8. பிற சமயத்தவருடன் ஒற்றுமை உணர்வை வளர்க்கச் சமயச் சான்றோர் பெரிதும் முயன்றனர். 9. பக்தி நெறியைப் பரப்ப வந்தவர்களிடம் சாதி , மத வேறுபாடுகள் இல்லை. அவர்கள் ஏழை பணக்காரர் , உயர்ந்தோர் , தாழ்ந்தோர் என்ற பாகுபாடுகள் கருதாமல் அனைவருடனும் அன்புடன்
|
பழகி , உண்டு உறங்கி , உறவாடினர். அவர்களது இன்ப துன்பங்களில் பங்கேற்று துன்பங்களைக் களைந்து சீரிய எடுத்துக்காட்டாய் வாழ்ந்தனர். 10. பக்தி நெறியாளர்கள் இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து அவனை சரணடைய வேண்டும் என்ற ' சரணாகத தத்துவத்தை உலகிற்கு அளித்தனர். 11. ஞான , கரும நெறிகளைக் காட்டிலும் பக்தி நெறியே எளியது , ஏற்றது , சிறந்தது எனப் போற்றும் வண்ணம் செய்தனர். 12. இறைவனின் திருநாமத்தை இடைவிடாது ஓதுதல் , துதித்தல் வேண்டும் என்றனர். மேற்சொன்னவற்றை வலியுறுத்துவதற்காக பக்தி நிறுவனங்கள் நிறுவப்பட்டன. இவை பண்பாட்டுப்
|
பயிற்சி நிலையங்களாகவும் , அற உணர்வு , ஆன்மிக உணர்வு மையங்களாகவும் செயல்பட்டன. இத்தகைய செயற்கரிய சேவை மனப்பான்மை கொண்ட சமயச் சான்றோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட இப்பக்தி இயக்கம். இந்து மதம் தான் இழந்த பெருமையை மீட்டு , மீண்டும் பொலிவுடன் திகழப் பேருதவி செய்தது. 238 நாடு முழுவதும் பரவிய பக்தி இயக்கத்தால் பல்வேறு விளைவுகள் ஏற்பட்டன. அவையாவன : 1. சமயத் துறையில் குறிப்பாக இந்து சமயத்தைச் சீர்திருத்த இவ்வியக்கம் பெருந்துணைபுரிந்தது. வீணான சடங்குகள் விலகின. மூடநம்பிக்கைகள் அகன்று சமயம் தன் புனிதத் தன்மையை பெற்றது.
|
2. இந்து சமயமும் ' ஒரு கடவுள் கோட்பாட்டையும் , ’ ‘ உலகில் அனைவரும் உடன்பிறந்தோரே ' என்ற கொள்கையையும் வலியுறுத்தியது. இது சமூக நல்லிணக்கத்திற்கு வித்திட்டது. 3. பக்தி இயக்கம் பஞ்சாபில் சீக்கிய சமயம் தோன்றக் காரணமாய் இருந்தது. 4. சமுதாயத்தில் இருந்த சாதி வேற்றுமைகள் வன்மையாக கண்டிக்கப்பட்டன. எனவே , இப்பாகுபாடுகள் நீங்க இவ்வியக்கம் பெருந்துணை புரிந்தது. 5. முக்கியக் கோட்பாடுகளில் இதர சமயங்களுடன் ஒருமித்த கருத்து நிலவியதால் மத நல்லிணக்கம் ஏற்பட்டது. ஒற்றுமை உணர்வு வலுப்பெற்றது. 6. இந்தியிலும் இதர வட்டார
|
மொழிகளிலும் இலக்கியங்கள் தோன்றி ஆன்மிக உணர்வை வளர்த்தன. 7. பக்தி இயக்கத்தின் துணையால் தில்லியை ஆண்ட சுல்தான்கள் இந்து , முஸ்லீம் இருவரிடையே இணக்கத்தையும் , கூட்டுறவையும் வளர்க்க முயன்றனர். 8. பக்தி நெறி இஸ்லாமிய பேரரசரான அக்பரை இந்துக்களையும் முஸ்லீம்களையும் தமது பேரரசின் கீழ் சமமாக நடத்த வழிவகுத்தது. 9. மக்களிடையே அன்பு , அமைதி , சகோதரத்துவம் , இரக்கம் , கருணை முதலிய வாழ்வியல் நெறிகள் செழிக்கப் பெருந்துணை புரிந்தன. 239 9.2.3. இராமாநந்தர் 10. ஆன்மிக வாழ்வும் , அறவாழ்வும் மேன்மேலும் பெருகி மனித வாழ்வு
|
மேம்பாடு அடைய பெருந் தொண்டாற்றியது. 9.2. இடைக்கால பக்தி இயக்கம் இந்திய வரலாற்றில் கி.பி. 1000 க்கும் கி.பி. 1707 க்கும் இடைப்பட்ட காலத்தில் பக்தி நெறி தனது சீரிய பணியை நிறைவேற்றியதை அறிகிறோம். தென்னிந்தியாவில் இராமானுஜர் , மத்துவர் , மெய்கண்டார் மற்றும் பசவர் ஆகியோர் தோன்றி இறை நம்பிக்கையை வலுப்படுத்தும் தத்துவ நெறிகளைப் பரப்பினர். வட இந்தியாவிலும் இக்காலத்தில் எண்ணற்ற சமயச் சான்றோர்கள் தோன்றி அரும்பணி ஆற்றினர். பல சமயங்களைச் சார்ந்தோரும் , பல பிரிவுகளிலிருந்து வந்தோரும் இப்பணியை மேற்கொண்டனர். அவர்களது அரும்
|
பணிகள் சிலவற்றை இப்பகுதியில் காண்போம். 9.2.1. இராமனுஜர் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்பெரும்புதூரில் தோன்றியவர். இல்லற வாழ்வில் ஈடுபட்டு சிறிது காலத்தில் துறவு பூண்டார். வைணவ சமயப் பணிக்குத் தம்மை அர்ப்பணித்தார். இவரது கோட்பாடு விசிட்டாத்வைதமாகும். பேரின்பத்தை அடைய பக்தியே சிறந்த நெறி என்பது இவரது கருத்து. ' சரணாகதி ’ நெறியை வலியுறுத்தி சாதிவேறுபாடின்றி அனைவரம் முக்தி அடையத் தகுதி உடையவர் என்றார். 92.2. மத்துவர் தென் கன்னடத்தில் உடுப்பிக்கு அருகே சிறு கிராமத்தில் தோன்றினர். இவரது இயற்பெயர்
|
வாசுதேவன். இளம் வயதிலேயே துறவு பூண்டார். அச்சுதப் பிரகாசரிடம் தீட்சை பெற்று பூரண பிரக்ஞர் , ஆனந்த தீர்த்தர் எனவும் போற்றப்பட்டார். இவரது தத்துவம் துவைதம் என்பதாகும். துறவு , பக்தி , தியானத்தின் மூலம் இறைவனை நேரில் உணர்ந்து வீடுபேறு அடையலாம் என்பது இவரது கோட்பாடு. 240 இவரது முயற்சியால் வைணவம் வடக்கே பரவியது. ‘ இராமர் - சீதை ' வழிபாட்டை பரப்பினார். சாதிப் பாகுபாட்டினை அறவே வெறுத்தார். இறைவன் முன் அனைவரும் சமம் எனக் கூறினார். சமயக் கருத்துகளை முதன் முதலில் இந்தி மொழியில் பரப்பியவரும் இவரே ஆவார். 9.2.4.
|
நிம்பர்க்கர் இவர் தென்னிந்தியாவில் கோதாவரி நதிக்கரையில் சிறு கிராமத்தில் பிறந்தார். வட இந்தியாவில் மதுராவிற்கருகேயுள்ள பிரஜா என்ற இடத்தில் வாழ்ந்தார். இவரது பக்தி நெறியைச் சேர்ந்தோர் ‘ இராதா - கிருஷ்ண ’ வழிபாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தனர். இவரும் ‘ சரணாகதி ’ நெறியை வலியுறுத்தினார். இவரது கொள்கை ‘ பேதா பேதம் ’ என்றழைக்கப்படுகிறது. 9.2.5. கபீர் காசிக்கருகே ' லகர்டேலோ ' என்ற ஏரியில் தாமரை மலரிலிருந்த குழந்தையை முஸ்லீம் நெசவாளரால் வளர்க்கப்பட்டவர். இராமானந்தரால் சீடராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர் இந்து - முஸ்லீம்
|
சமய ஒற்றுமைக்குப் பெரிதும் பாடுபட்டார். கடவுளிடம் அன்பு செலுத்துவதே நற்கதி அடைய வழி என்றார். “ உண்மையே இயல்பானது. அது எல்லோர் இதயத்திலும் உறைகின்றது. அவ்வுண்மை அன்பினால் வெளிப்படுகிறது " என்ற கருத்தை உடையவர் “ பக்தியை வலியுறுத்தாத சமயம் சமயமன்று " என்றார். 926. நாமதேவர் மஹாராஷ்டிர மாநிலத்தில் பண்டரிபுரம் என்னுமிடத்தைச் சார்ந்தவர். சாதியை , உருவ வழிபாட்டை , பொருளற்ற சடங்குகளை வன்மையாகச் சாடினார். உண்மையான பக்தியும் , கடவுள் வழிபாடுமே இவரது முக்கிய கொள்கையாகும். 9.2.7. குருநானக் சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த
|
இவர் பஞ்சாப் மாநிலத்தில் இலாகூர் மாவட்டத்தில் “ டால்வந்தி ” என்ற கிராமத்தில் பிறந்தார். 241 இல்லற வாழ்வில் இருந்தாலும் காடு சென்று கடுமையான தியானத்தை மேற்கொண்டார். இவரது இனிய மற்றும் உள்ளத்தை உருக்கும் பாடல்கள் ‘ ஆதிகிரந்தத்தில் ’ இடம் பெற்றுள்ளன. ‘ ஒன்றே கடவுள் ’ என்ற கருத்தைக் கூறி இந்து - முஸ்லீம் ஒற்றுமையை உருவாக்க முயன்றார். சீக்கிய சமயம் இவரால் உருவாக்கப்பட்டது. ஒழுக்கம் , பணிவு , நேர்மை , தருமம் , உண்மை , கருணை போன்றவை இவர் போதனைகளில் முக்கிய இடம் பெற்றன. இறைவனின் பெயரை எப்போதும் உச்சரித்தல் ,
|
உடலாலும் உள்ளத்தாலும் குருவிற்குக் கீழ்ப்படிந்து நடத்தல் சீக்கியர்களின் முக்கிய கடமையாகும். இறைவனின் திருநாமங்களை இனிய பாடல்களால் இசையுடன் பாடி இதயத்தைத் தூய்மை செய்து கொள்ள வேண்டும் என்பது இவரது கொள்கை. 9.2.8. வல்லபாச்சாரியார் இவர் காசியில் பிறந்தார். தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்து பெற்றோருடன் வாழ்ந்தார். தம் இளம் வயதிலேயே கற்றுத் தேர்ந்தார். புண்ணியத் தலங்களுக்கு சென்றார். இல்வாழ்வில் ஈடுபட்டு இரு புதல்வர்களைப் பெற்றார். வடமொழியிலும் , பிரிஜ் மொழியிலும் நூல்களை எழுதினார். இவரது கோட்பாடு ' சுத்த அத்வைதக்
|
கோட்பாடு ’ ஆகும். இதனை தூய ஒரு பொருள் கோட்பாடு என்பர். கிருஷ்ணனே உயர்ந்த பிரம்மம் , ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் வேறுபாடில்லை. பக்தியின் மூலம் முக்தி அடைந்து பரமாத்மாவுடன் ஆத்மா கலந்து கொள்ளலாம் என்பது இவரது கோட்பாடு. 92.9. மீராபாய் அரச குடும்பத்தைச் சார்ந்த இவர் வைணவ சமய மரபில் வளர்க்கப்பட்டார். கிருஷ்ணரிடம் மிகுந்த ஈடுபாடு குழந்தைப் பருவம் முதலே ஏற்பட்டது. தம் கருத்துகளை வட்டார மொழியான ‘ பிரிஜ் ’ மொழியில் பரப்பினார். பிறப்பு - இறப்பு என்னும் சுழற்சியினின்று விடுபட்டு பேரின்ப நிலையை அடைய கிருஷ்ணபக்தி
|
அவசியம் என்றார். இவரது பக்திப்பாடல்கள் 242 இனிமையானவை. பக்தி நெறியைச் சுவையான பாடல்கள் வாயிலாகப் பரப்பினர். எளிய பக்தியும் , நம்பிக்கையுமே வீடு பேற்றினை அடைய நல்வழி என்றார். பிறப்பால் எவரும் உயர்ந்தவர் இல்லை. உயர்விற்கு காரணம் “ செயல் ” என்னும் கருத்தைப் பரப்பினார். 9.2.10. சைதன்யர் வங்காள மாநிலத்தில் பக்தி நெறியைப் பரப்பிய இவர் ‘ ஸ்ரீசைதன்ய மகா பிரபு ’ என்று அழைக்கப்பட்டார். இல்வாழ்வில் ஈடுபட்ட இவர் தம் 25 ம் வயதில் இல்வாழ்வைத் துறந்து இறைவன் திருப்பணிக்கு தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கிருஷ்ணன் அல்லது ஹரி
|
என அழைக்கப்படும் புருஷோத்தமன் மேல் ஆழ்ந்த நம்பிக்கையும் அன்பும் கொள்ள வேண்டும் என்பது இவரது கருத்து. “ சடங்குகளிலிருந்து விடுபட்டு , ஆடிப்பாடி உணர்வுப் பிழம்பாய் இறைவனின் அருள் வெள்ளத்தில் திளைக்க வேண்டும். கண்ணனை வழிபட்டு , குருவைப் பணிந்து பணிபுரிந்து வந்தால் மாயையில் இருந்து விடுபட்டு இறைவன் திருவடிகளை அடையலாம் ” என்றார். 9.2.11. துக்காராம் இவர் மஹாராஷ்டிர ஞானி. இல்வாழ்வைத் துறந்து பக்தனாகவும் , சீர்திருத்தவாதியாகவும் செயல்பட்டார். மராட்டிய மக்களிடம் நாட்டுப் பற்றை வளர்க்க , சிவாஜி காலத்தில் வாழ்ந்த இவரது
|
போதனைகள் உதவின. கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர் , வரம்பில்லா ஆற்றல் உடையவர் என்பது இவரது கருத்து. பேரரசர் சிவாஜி இவர் சீடர்களில் ஒருவர். சைதன்யரைப் போன்று பக்திப் பாடல்களை இயற்றியுள்ளார். 9.2.12. துளசிதாசர் இவர் சிறந்த பக்திமான் , பண்பட்ட கவிஞர் ஆவார். இல்லற வாழ்விலிருந்து துறவற வாழ்வை மேற்கொண்டார். இராமாயணத்தை இந்தி மொழியில் ‘ இராம சரிதமானஸ் ' என்ற பெயரில் படைத்தார். 243 இராம சரித மானஸ் பெரிய இலக்கியப் படைப்பு மட்டுமன்று , உயர்ந்த தெய்விக பக்திக் காவியமும் ஆகும். இராமனை இறைவனின் அவதாரம் எனக்
|
கருதினார். அவரை மனிதன் பக்தியால் அணுகலாம் என்றார். சிறந்த வைணவ பக்தராகவும் ஆசார்யராகவும் போற்றப்படுகிறார். 9.2.13. பசவர் வீர சைவம் எனப்படும் இலிங்காயதம் என்னும் உயரிய நெறியை நிறுவியவர் பசவர் ஆவார். கர்நாட மாநிலத்தில் தோன்றியவர். சாளுக்கிய மன்னரிடம் அமைச்சராகப் பணியாற்றியவர். இந்நெறி ' சிவனை ' மட்டுமே கடவுளெனக் கருதியது. சிவவழிபாட்டின் மூலம் வீடு பேற்றை அடையலாம் என்பது இவரது ஆழ்ந்த நம்பிக்கை. சாதிப்பாகுபாடு , சடங்கு , உருவ வழிபாடு இவற்றை களைவதில் பெரிதும் ஈடுபட்டார். தம்மைப் பின்பற்றுபவர்கள் புலால் உண்பதையும்
|
, கள் குடிப்பதையும் கைவிட வேண்டும் என்ற கடுமையான நிபந்தனை விதித்தார். சமூக சீர்திருத்த வாதியாக விதவை மறுமணத்தை ஆதரித்தும் , குழந்தை திருமணத்தை எதிர்த்தும் செயல்பட்டார். இவரைப் பின்பற்றுவோர் லிங்காயத்துகள் என்றழைக்கப்பட்டனர். 9.2.14. ஏகநாதர் இவர் மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர். பைத்தான் என்னும் ஊரில் பிறந்தார். சிறு வயதிலேயே இவரது உள்ளத்தில் பக்தி , கனல் விட்டு எரிந்தது. இல்வாழ்வில் ஈடுபட்ட இவர் தீண்டத்தகாதோரிடம் எல்லையற்ற அன்புடையவரானார். கண்ணனை அனைத்திலும் கண்டார். கண்ணனின் தீவிர பக்தர் , பெரிய பாகவத புருஷர் ,
|
சிறந்த இல்லற நெறியாளர் , பெரிய ஞானி. இன்றும் மக்களுக்கு உயரிய எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார். 9.2.15. சூர்தாசர் இவரைப் பற்றி கூறாமல் இருந்தால் பக்தி இயக்கம் நிறைவு பெறாது. இவர் உயர்ந்த ஞானி , நல்ல சமயபரப்புநர் , சிறந்த சீர்திருத்தவாதியாவார். இந்தியில் மிகச் சிறந்த நூல்களை 244 எழுதியுள்ளார். இந்நூல்கள் அனைத்தும் தான் விரும்பும் தெய்வத்தின் பால் செலுத்த வேண்டிய அன்பையும் பக்தியையும் விளக்குகின்றார். இவர் எழுதிய சூர்சாகர் என்ற நூல் அன்பு , பக்தி இவற்றின் மேன்மையையும் கண்ணளைக் குழந்தையாய் கருதி சித்தரிக்கும்
|
அற்புத நிலையையும் விளக்குகிறது. இவர் “ வாழ்வு ஒரு விளையாட்டு , வீர தீரச் செயல் , ஆனால் போராட்டமன்று ; ஏமாற்றம் மிக்க கதையும் அன்று ” என்கிறார். இவரது கவிதைகள் மனித இனத்தின் பால் வியத்தகு விளைவை ஏற்படுத்தியதுடன் பக்தி நெறியின் வழிகாட்டியாகவும் திகழ்ந்தன. 9. 3. ஆழ்வார்கள் இந்து சமயம் குறிப்பிடும் அறுவகை சமயங்களுள் சைவம் , வைணவம் இரண்டும் இன்றும் மிகவும் சிறப்புடன் போற்றப்பட்டு வருகின்றன. மனித உடலுக்குத் தலை சிறப்பான உறுப்பு. அதில் இருகண்கள் உயரிய இடத்தைப் பெறுகின்றன. அது போல இந்து சமயத்தின் இவ்விரு பிரிவுகளும்
|
கண்களென போற்றத்தக்கவை எனலாம். இவ்விரு சமயங்களும் வாழ்விற்கு இன்றியமையாத நெறிகளை , விரிவாக பின்பற்ற வேண்டிய முறைகளை கூறுகின்றன. இவ்விரு சமயச் சான்றோர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை , அருளிச் செய்த அற்புதச் செயல்கள் , மற்றும் இலக்கியங்கள் பெரிதும் போற்றத்தக்கவை. சைவ சமயத்தைச் சார்ந்த நாயன்மார்களும் வைணவ சமயத்தைச் சார்ந்த ஆழ்வார்களும் போற்றத்தக்கவர்கள். இப்பாடத்தில் ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களின் வரலாறு , அவர் தம் கோட்பாடுகள் , இலக்கியச் சிறப்புகளை விரிவாகக் காண்போம். 9.3.1. ஆழ்வார்கள் விளக்கம் இறைவனின் அருள்
|
வெள்ளத்தில் ஆழ்ந்து கிடப்பவர் , இறைவனின் அன்பிலும் , இன்பத்திலும் மூழ்கி இருப்பவர் ‘ ஆழ்வார் ’ எனப்பட்டனர். ‘ திராவிட வேத ' மென போற்றப்பட்ட ‘ திவ்யப் பிரபந்தத்தை ’ அருளியதால் ‘ திராவிடாசாரியர்கள் ’ என்றழைக்கப் பட்டனர். இவர்களுக்கு ‘ மயற்வற மதிநலம் அருளப் பெற்றவர்கள் ? ' இருந்தமிழ்புலவர்கள் , ஆதிபக்தர்கள் என்ற பெயர்களும் உண்டு. இவர்கள் எண்ணிக்கையில் பன்னிருவர் ஆவர். வைணவ நெறியைப் போற்றிப் பரப்பியவர் ஆவார். 9.3.1.1. ஆழ்வார்கள்காலம் ஆழ்வார்கள் அவதரித்த கால அடிப்படையில் 1. முற்காலத்தவர்கள் 2. இடைக்காலத்தலர்கள்
|
3. பிற்காலத்தவர்கள் எனப்பிரிக்கலாம். 9.3.1.2. முற்காலத்தவர்கள் பொய்கை ஆழ்வார் , பூதத்தாழ்வார் , பேயாழ்வார் , திருமழிசை , ஆழ்வார் அல்லது திருமழிசைப்பிரான் என்பவர்கள் முற்பட்டவர்கள். 9.3.1.3. இடைக்காலத்தவர்கள் நம்மாழ்வார் , மதுரகவியாழ்வார் , குலசேகராழ்வார் , பட்டர்பிரான் என்ற பெரியாழ்வார் , கோதை நாச்சியார் என்ற ஆண்டாள் என்பவர்கள் இடைக்காலத்தவர். 9.3.1.4. பிற்காலத்தவர்கள் தொண்டரடிப் பெரியாழ்வார் , திருப்பாணாழ்வார் , கலியன் என்ற திருமங்கையாழ்வார் என்பவர்கள் பிற்காலத்தவர் ஆவார். 9.3.2 ஆழ்வார்கள் பற்றிய குறிப்பு ,
|
பாடல்கள் 9.3.2.1. பொய்கை ஆழ்வார் இவர் திருமாலின் கையிலுள்ள ‘ பாஞ்ச சன்யத்தின் ’ அம்சமாக பூவுலகம் பொலிவுற காஞ்சிபுரத்தில் ' திருவெஃகா ' என்னும் இடத்தில் தோன்றினார். இவர் அருளிச் செய்தவை - முதல் திருவந்தாதி , பாசுரங்கள். இயற்கையே இறைவன் , அருளே இறைவன் , அன்பே இறைவன் , அறிவே இறைவன் என்ற உயரிய கருத்துகளை இவர் பாடல்களில் காணலாம். முதலாழ்வார்கள் காலத்தில் சைவ வைணவ தமிழின் இனிமை , பெருமை , சிறப்பு , இயற்கைக் காட்சி அனைத்தையும் இவர் பாடல்களில் காணலாம். 246 இவரது பாடலில் ஒன்று “ நயவேன் பிறர்பொருளை , நன்னேன் கீழாரோடு
|
; உயவேன் உயர்ந்தவரோடு அல்லால் ; - வியவேன் திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன் , வருமாறு என் நம்மேல் வினை ? ” இப்பாடல் ‘ பிறர் பொருளை விரும்ப மாட்டேன் ' கீழான தன்மை உடையவர்களுடன் நட்பு கொள்ள மாட்டேன். உயர்ந்தவரோடு சேர்ந்து வாழ்வேனே அல்லாமல் மற்றர்களோடு சேர மாட்டேன். திருமாலைத் தவிர வேறு தெய்வத்தையும் தெய்வம் என்று புகழ மாட்டேன் , வணங்கமாட்டேன். ஆதலால் நம்மை நாடிப் பிறப்பு இறப்புத் துன்பத்தைத் தரும் வினை இனி வரமுடியாது. இத்தகைய உயர்ந்த சமயக் கருத்துகளின் கருவூலங்களாக ஒவ்வொரு பாடல்களும் திகழ்கின்றன. 9.3.2.2.
|
பூதத்தாழ்வார் இவர் மகாபலிபுரத்தில் குருக்கத்தி மலரில் தோன்றினார். எம்பெருமானிடம் பக்தி நிறைந்தவராய் இரண்டாம் திருவந்தாதி எனும் பாசுரங்களை அருளிச் செய்தார். காஞ்சியில் கோயில் கொண்டுள்ள பெருமானைப் புகழ்ந்து பாடியுள்ளார். தமிழ் மொழியை ஞானத் தமிழ் என்றும் , தன்னை தமிழன் என்று சொல்லிக் கொள்வதிலும் இருந்து தமிழ்மொழி மீது இவர் கொண்டிருந்த பற்றினையும் விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறது. இவர் சமய சமரச நோக்கம் உடையவர். அன்பு , சிந்தனை இவற்றால் ஞானத்தைப் பெற்ற நிலையைப் பிள்வரும் பாடலால் , “ அன்பே தகழியா , ஆர்வமே
|
நெய்யாக , இன்புருகு சிந்தை இடுதிரியா , - நன்புருகி ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு ; ஞானத் தமிழ் புரிந்த நான் ” என விளக்குகிறார்.
|
திருமழிசையாழ்வார் அறிவை பெருக்கும் தமிழை விரும்பிய நான் அன்பையே அகலாக - எண்ணெய் , திரி முதலியவற்றைத் தாங்கும் கருவியாக அமைத்து அறிவாகிய சுடர்விளக்கை ஏற்றினேன். ஆசையை நெய்யாக்கிக் கொண்டேன். எம்பெருமானை எண்ணி இன்பத்தால் உருகுகின்ற உள்ளத்தையே எண்ணெயில் இட்ட திரியாகக் கொண்டேன். நன்றாக மனம் உருகி ஞான ஒளியாகிய விளக்கைத் திருமாலுக்காக ஏற்றினேன் என்பது இப்பாடலின் கருத்தாகும். 9.3.2.3. பேயாழ்வார் இவர் சென்னையிலுள்ள மைலாப்பூரில் தோன்றியவர். இவர் அருளிச் செய்தவை மூன்றாம் திருவந்தாதி பாசுரங்கள். எந்த தெய்வத்தை
|
வணங்கினாலும் , கடவுளிடம் நம்பிக்கை வேண்டும். இந்த உறுதியான நம்பிக்கை கொண்டவர்களே உண்மையான பக்தர்களாவர். இவ்வுண்மையை கூறும் பேயாழ்வார் அருளிச் செய்த வெண்பா ஒன்றினையும் கருத்தையும் காண்போம். “ அது நன்று , இது தீது என்று ஐயப்படாதே , மது நின்ற தண்துழாய் மார்பன் - பொது நின்ற பொன் அம் கழலே தொழுமின் ! முழு வினைகள் முன்னம் கழலும் முடிந்து ” என்கிறார் பேயாழ்வார். அது நல்லது. இது கெட்டது என்ற சந்தேகம் வேண்டாம். மனக்குழப்பம் வேண்டாம். தேன் சிந்துகின்ற , குளிர்ந்த அழகிய துளசி மாலையை அணிந்த மார்புடைய திருமால்
|
எல்லோருக்கும் பொதுவானவள். அவனுடைய அழகிய திருவடிகளை வணங்க வேண்டும். அவளை நினைத்தாலே போதும் , வணங்குவதற்க முள்பே உங்கள் வினைகள் எல்லாம் ஓடிப்போய் விடும். மீண்டும் அவை உங்களை அணுகாது என்பது உறுதி என்கிறார். இவரும் பொய்கையாழ்வார் , பூதத்தாழ்வார் போன்று சமரச நோக்குடையவர். பகுத்தறிவாகிய ஒளிவிளக்கைப் பயன்படுத்தி எந்த தெய்வத்தை வழிபட்டாலும் நன்மை அடையலாம் என்பது இவரது கோட்பாடு ஆகும். 248 இவர் திருமழிசை என்ற தலத்தில் அவதரித்தமையால் திருமழிசை ஆழ்வார் என்ற பெயர் பெற்றார். இவர் சக்ராம்சமாய் அவதரித்தார். சிவவாக்கியர்
|
என்னும் பெயருடன் சைவ சமயத்தில் இருந்தார் என்றும் பேயாழ்வாரிடம் உபதேசம் பெற்று வைணவத்தைச் சார்ந்தவர் என்றும் கூறுவர். இவர் அருளிச் செய்தமை 1. நான்முகன் திருவந்தாதி , 2 திருச்சந்த விருத்தம். இறைவன் ஒருவனே என்ற உண்மை இவர் பாடல்களில் பொதிந்து கிடப்பதைக் காணலாம். இவர் , ' எல்லாம் திருமால் மயம் ’ என எண்ணுகிறார். இறைவனிடமிருந்தே எல்லாம் பிறக்கின்றன. அவனிடமே எல்லாம் அடங்குகின்றன என்பதை சிறந்த எடுத்துக்காட்டுடன் விளக்குகிறார். கடல் எவ்வாறு அலைகளை உண்டாக்கி சீறி எழச் செய்து பின் தன்னுள்ளே அடங்கிவிடச் செய்கிறதோ , அது
|
போல் இறைவனிடமிருந்து பிறந்த தாவரங்களும் , மற்ற உயிரினங்களும் மீண்டும் இறைவனிடமே சென்றடைகின்றன. இத்தகு சீரிய இயல்புகள் இறைவனிடம் உள்ளன. இக்கருத்தை “ தன்னுள்ளே திரைத்தெழும் தரங்கவெண் தடம்போல் தன்னுள்ளே திரைத்தெழுந்து அடங்குகின்ற தன்மைபோல் நின்னுள்ளே பிறந்து இறந்து நிற்பவம் திரிபவும் நின்னுள்ளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே ” என்ற பாடலால் விளக்குகிறார். 9.3.2.5. நம்மாழ்வார் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரில் தோன்றியவர். இவருக்கு மாறன் , சடகோபன் , பராங்குசன் , வகுளபூஷணன் என்ற சிறப்பு பெயர்கள்
|
இருந்தன. இவர் மொத்தம் 1296 பாசுரங்களை இயற்றியுள்ளார். இப்பாசுரங்களை நான்காவது ஆயிரம் என்பர். இவர் திருவித்தம் , திருவாசிரியம் , பெரிய 249 திருவந்தாதி , திருவாய்மொழி போன்ற பாசுரங்களை இயற்றியுள்ளார். இவருக்கிருந்த இடத்திலயே 108 வைணவத்தலங்களில் உள்ள பெருமாள் காட்சியளித்தார் என்பர். இவரது பாசுரங்கள் நான்கு வேதங்களின் சாரத்தை பிரதிபலித்தன. இவரது பாடல்கள் பெரும்பாலும் அகப்பொருள் துறையைச் சார்ந்தவை. இவர் தலைவியாக , நற்றாயாக , செவிலியாக , தோழியாக நின்று தலைவியின் காதலை பாடலாக பாடியுள்ளார். இவர் 108 வைணவத் தலங்களைப்
|
பற்றியும் , பாசுரங்கள் பாடியுள்ளார். சிறந்த வேதாந்தக் கருத்துகள் , உயர்ந்த அறிவுரைகள் , இயற்கை காட்சிகள் , நல்ல உவமைகள் , உருவகங்கள் , சமரச சன்மார்க்க நெறி ஆகிய அனைத்துமே இலக்கியச் சுவை மிகுந்தவை ; பழந்தமிழ்ப் பண்பாட்டை உணர்த்துபவை. படிக்கப் படிக்கத் தெவிட்டாத இன்பம் தருபவை. வைணவ தத்துவத்தை பாடல்கள் வாயிலாக மிகவும் சிறந்த முறையில் வெளியிட்ட பெருமை இவரைச் சாரும். பேரின்பம் பெறத் தடையாய் இருப்பது உலகப் பற்று. உலகப் பற்றினை விட்டு இறைவனைச் சரணடைந்தால் அனைத்தையும் பெறுவது எளிது. யான் , எனது என்ற இருவகைப்
|
பற்றுகளையும் ஒழித்தல் வேண்டும். நமது ஆத்மா இறைவனின் இல்லம் ஆதலால் அதை உரியவனாகிய இறைவனிடமே ஒப்படைத்துவிடுதலே முறை என்கிறார் நம்மாழ்வார். இதனை , “ வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர் வீடுடையானிடை வீடு செய்துய்ம்மினே ” என்னும் பாடலில் விளக்குகிறார். 9.3.2.6. மதுரகவியாழ்வார் இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆழ்வார் திருநகருக்கு அருகில் உள்ள திருக்கோளூர் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் 250 வேதம் உணர்ந்த நம்மாழ்வாரைத் தவிர வேறு தெய்வம் இல்லை என்றிருந்தவர். எனவே இவரது பாசுரங்கள் அனைத்தும் நம்மாழ்வாரைப்
|
பற்றியனவாகவே இருந்தன. இருந்தாலும் நாதமுனிகள் இவரது பிரபந்தத்தையும் நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் சேர்த்து பெருமைப்படுத்தினார். 9.3.2.7. குலசேகராழ்வார் இவர் கூடலர்கோள் , கொல்லி கூவலன் , குலசேகரப் பெருமாள் என்ற வேறு பெயர்களால் அழைக்கப் பெற்றார். கேரளத்தில் ‘ திருவஞ்சிக்களம் ’ என்னுமிடத்தில் அரச வம்சத்தில் பிறந்தார். இவர் பாடியது பெருமாள் திருமொழி எனப்படும். மண்ணாளும் செல்வத்தை விட , மகா விஷ்ணுவுக்குச் செய்யும் சேவைகளும் , காட்டும் பக்தியும் சிறந்தவை. இன்பம் தருபவை என்ற கொள்கை உடையவர். இவர் பாடல்கள் எல்லாம்
|
தெவிட்டாத தேனாக , வற்றாத சுவைக் கடலாய் விளங்குகின்றன. இவர் இராமாவதாரத்தில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் உடையவராய் இருந்தார். பத்துப் பாடல்களில் இராமாயணக் கதையின் சுருக்கத்தைக் கொடுத்துள்ளார். இயற்கை வருணனை , பல அறிவுரைகள் , அருள் மொழிகள் , உயரிய சரணாகதி நெறி போன்றவற்றை தம்முள் கொண்ட பாசுரங்களைப் பாடினார். ஒரு பொருளின் மேல் நீங்காத அன்பு , ஆசை , காதல் உடையவர்கள். அப்பொருளை விட்டு எக்காரணத்தைாலும் பிரிய விரும்ப மாட்டார்கள். இது மனிதரது இயல்பும் அன்பின் தன்மையுமாகும். இக்கருத்தை இவரது பாடல்கள் வெளிப்படுத்தின.
|
எக்காலத்தும் அழியாத செல்வ வளங்களுடன் தேவலோக மங்கையர் புடைசூழ தேவலோகத்தினரை ஆளும் வாய்ப்பு கிடைத்தாலும் அந்நிலை வேண்டியதில்லை என பலமுறை தம் பாசுரங்களில் கூறியுள்ளார். மேலும் திருவேங்கட மலையில் உள்ள கோனேரிச் சுனையில் சிறு மீனாகப் பிறந்து இறைவன் வாழும் வேங்கட மலையை விட்டு நீங்காமல் இருக்க விரும்புவதாக கூறுகிறார். அனைவரின் நெஞ்சிலும் இறை பக்தியை ஊட்டுகிறார். இதனைப் பின்வரும் பாடலில் உணர்த்துகிறார். 251 “ ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன் தேனார் பூஞ்சோலைத் திருவங்கடச்
|
சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே ” என்று அழகாகப் பாடுகின்றார். 9.3.2.8. பெரியாழ்வார் இவருக்குப் ‘ பட்டாபிரான் ’ ' விஷ்ணுசித்தர் ’ என்ற பெயர்களும் உண்டு. இவர் பாண்டி நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தார். திருப்பல்லாண்டுடன் பெரியாழ்வார் திருமொழி பாசுரங்களைப் பாடியுள்ளார். நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் முதலில் அமைந்துள்ள பாடல்கள் இவரது பாடல்களே. இவரது பாடல்கள் இனிய ஓசை நயமுடையவை. தெவிட்டாத தேன் போன்ற சுவையுடையவை. இவர் பாடல்களில் குழந்தைகளின் உள்ளம் , குறும்பு மனம் , விளையாட்டு இயல்பு ,
|
நடையுடை பாவனைகளை அற்புதமாய் படம் பிடித்து காட்டப்பட்டுள்ளதைக் காணலாம். தாய்க்குத் தன் பிள்ளைகளிடம் காட்டும் அன்பையும் , தாயின் தியாகத்தையும் இவரது பாடல்களில் காணலாம். இயற்கை எழில் , உலகியல் நடை , பக்தியின் பெருமை , உய்வடையும் நெறிமுறைகளையும் இவரது பாசுரங்கள் விளக்குகின்றன. சூழ்நிலையால் மனிதன் உருவாக்கப்படுகிறான். தீய சூழலில் வாழ்ந்தவன் நல்ல சூழலை நாடி வரும்போது முன்பு அவனிடமிருந்த தீய பழக்க வழக்கங்கள் நீங்கி விடுகின்றன. நல்ல சூழலில் வாழ்ந்த எவராவது அதனை விட்டு விலகித் தீய சூழலில் அகப்பட்டு சிக்கி துயரப்பட
|
விரும்புவாரா ? ஒரு போதும் விரும்பார். சூழலைப் பொறுத்தே அதாவது , நண்பர்களைப் பொருத்தே மக்கள் நல்லவர்களாகவோ , கெட்டவர்களாகவோ மாறுகின்றனர் என்ற பேருண்மையை விளக்குகிறார். 9.3.2.9. ஆண்டாள் இவருக்குக் கோதை , சூடிக் கொடுத்த நாச்சியார் , என்ற பெயர்கள் உண்டு. பெரியாழ்வாரின் வளர்ப்புப் பெண் ஆண்டாள். 252 இவ்விருவரும் ஒரே காலத்தவர். இவர் அருளிச் செய்த பாசுரங்கள் திருப்பாவை , நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு தலைப்புகளில் அமைந்துள்ளன. இயற்கையில் எழில் வண்ணம் , பக்திச்சுவை , உயரிய ஒழுக்க நெறி , மகளிர் மனப்பான்மை ,
|
காதலில் ஈடுபட்ட மகளிரின் மனநிலை , கற்புடை மகளிர் பண்பு , பெண்களின் கடமை , அரிய தத்துவக் கருத்துகள் ஆகிய அனைத்தும் ஆண்டாளின் பாடல்களின் கொஞ்சும் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளன. பண்டையத் தமிழ் மரபையொட்டிய அகப்பொருள் துறைக் கருத்துகள் ஆண்டாள் பாடல்களில் அமைந்துள்ளன. இவரது பாடல்களின் தமிழரின் பழக்க வழக்கங்களைக் காணலாம். இனிமை , தெளிவு , எளிமை வாய்ந்தவை இவரது பாடல்கள். இவரது பாடல்கள் நாயக நாயகி பாவத்தை உணர்த்துகின்றன. திருப்பாவையின் இரண்டாம் பாடலில் ' பாவை நோன்பு ’ பற்றி மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். அறக் கோட்பாடுகள்
|
, அருள் உணர்வு நோன்புக்கு வேண்டிய உடல்நிலை , உள நிலை இவற்றை இப்பாடல் அழகாக எடுத்துரைக்கின்றது. “ வையத்து வாழ்வீர்கள் ” எனும் பாடலில் பாவை நோன்பு இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி நெய் , பால் உண்ணாது , மையிட்டு மலரிட்டு அழகு செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும். மேலும் தீய செயல்களில் ஈடுபடாமல் , தன்னால் இயன்றவரை தகுதி கருதி தானமும் , இல்லையென யாசிப்போர்க்கு தருமமும் செய்து அறவழியில் நிற்க வேண்டும். இப்பிறப்பிளின்றும் உய்யும் வழியைக் கருதி திருமாலை வணங்க வேண்டும் என்பது இப்பாடலின் கருத்தாகும். 93.2.10.
|
தொண்டாரடிப் பொடியாழ்வார் இவர் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருமண்டங்குடியில் பிறந்தவர். திருமால் பாசுரங்களையும் , திருப்பள்ளியெழுச்சி 253 பாசுரங்களையும் இவர் இயற்றினார். இவர் திருமாலே முழு முதற்கடவுள் , வைணவமே உயர்ந்த சமயம் என்ற கொள்கை உடையவர். இவர் திரு அரங்கப் பெருமானை பற்றியேப் பாடினார். இவருடைய பாடல்கள் உலக நீதியையும் ஒழுக்கத்தின் உயர்வையும் , வாழ்வின் நிலையாமையையும் எடுத்துக்காட்டுகின்றன. “ ஒன்றே குலம் ஒருவனே இறைவன் " என்ற கொள்கையில் சாதி வேற்றுமை இல்லை என்பதை வலியுறுத்தினர். 9.3.2.11. திருப்பாணாழ்வார்
|
திருச்சியை அடுத்துள்ள உறையூரில் பிறந்த இவர் ‘ அமலனாதிபிரான் ’ என்னும் பத்துப் பாசுரங்களை அருளிச் செய்தார். ஏழைகள் மத்தியில் இறைவன் நடம்புரிகிறான் என்பதும் இறைவன் முன் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பதும் இவரது முக்கிய கோட்பாடாகும். இவர் திருஅரங்கப் பெருமானைப் பற்றியே பாடினார். 9.3.2.12. திருமங்கை ஆழ்வார் இவருக்கு பரகாலன் , மங்கை மன்னன் , ஆலிநாடன் , நாலுகவிப்பெருமாள் என்ற பல பெயர்கள் உண்டு. தஞ்சை மாவட்டத்தில் திருவாலி நகரை அடுத்துளள திருக்குறையலூரில் தோன்றினார். இவர் பாடியவை பெரிய திருமொழி , திருக்குறுந் தாண்டகம் ,
|
திருநெடுந்தாண்டகம் , திருவெழு கூற்றிருக்கை , சிறிய திருமடல் , பெரிய திருமடல் அடங்கிய பாசுரங்கள் ஆகும். திருவரங்கக் கோயிலின் சுற்றுச் சுவர்கட்டி கோயில் திருப்பணி செய்த பெருமையை உடையவர். அடியவர்களுக்கு அன்னமிடுவதை அரிய தொண்டாகக் கருதி செயல்படுத்தி வந்தவர். திருமாலின் அழகிய பண்புகளை இனிய பாடல்களால் பாடி மனம் உருகி அனுபூதி நிலையில் நின்று ஆனந்தம் பெற்றவர். இவரது பாடல்களில் பழந்தமிழர் பண்பாடும் , அறநெறியும் ஒளிர்வதைக் காணலாம். வைணவர் அனைவரும் அறிந்து அன்புடன் பக்திச்சுவை ததும்ப பாடும் பாடல் ஒன்றினைக் காண்போம்.
|
அப்பாடல் 254 “ குலம் தரும் ; செல்வம் தந்திடும் ; அடியார் படுதுயர் ஆயின எல்லாம் , நிலந்தரம் செய்யும் ; நின் விசும்பு அருளும் ; அருளொடு பெரு நிலம் அளிக்கும் வலம் தரும் ; மற்றும் தந்திடும் ; பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் ; நாராயணா வென்னும் நாமம் ” என்று ‘ நாராயண ’ மந்திரத்தின் சிறப்பைக் கூறுகிறது. இப்பாடலின் பொருள். நாராயணன் என்னும் திருப்பெயரை நாள்தோறும் சொல்லி வந்தால் இழிந்த குடியிலே பிறந்தாலும் தாம் பிறந்த குடியை உயர்ந்த குடியாக்கும் , உலக வாழ்விற்குரிய செல்வத்தைத் தரும் ;
|
மறுமைக்கு வழிகாட்டி அருளாகிய அழியாத செல்வத்தை அள்ளித் தரும். அடியவர்கள் அடைகின்ற துன்பங்கள் அனைத்தையும் அழித்துவிடும். அத்துயரங்கள் நிலைத்து நிற்கா வண்ணம் அழித்துவிடும். பெரிய இன்பம் நிறைந்த வானுலகத்தை அளிக்கும். அவ்வுலக இன்பத்தை நிரந்தரமாக்கும். நினைந்த காரியங்கள் யாவற்றினும் வெற்றியைத் தரும் எண்ணற்ற நன்மைகள் , அளவிடற்கரிய இன்பங்களைத் தரும். ஈன்றெடுத்த தாயைக் காட்டிலும் பெருங்கருணை பூண்டு அளவற்ற நன்மையை தரும். ஆகவே அத்தகைய அளவிடற்கரிய நன்மை தரும் சொல்லாகிய “ நாராயணா ” என்னும் சொல்லை மனதார போற்றி
|
உச்சரிப்போமாக ! மேலும் இவர் வைணவத்தில் மட்டுமன்றி சைவ நெறியிலும் ஈடுபாடு கொண்டவர். இக்கருத்தை " மன்னுமலை அரையன் பொற்பாவை ” – எனத் தொடங்கும் சிவனது நடனத்தை விளக்கும் பாடலை அருளியுள்ளார். இப்பாடல் பெரிய திருமடல் என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இவ்வாறு பன்னிரு ஆழ்வார்களும் வைணவ சமய நெறிகளையும் , வாழ்வியல் நெறிகளையும் , ஆன்மீக உணர்வையும் ஊட்டி வைணவ சமயத்தைப் புதுமெருகூட்டி ஒளிபெறச் செய்தனர். 255 9.3.3. ஆழ்வார்களின் அரிய தொண்டு 1 வைணவ பக்தி இயக்கம் இந்து சமயத்திற்கு புதிய தெம்பையும் , புதிய ஆற்றலையும் ,
|
பெருஞ்செல்வாக்கினையும் அளித்தது. இதற்கு முக்கிய காரணம். ஆழ்வார்களே ஆவர். 2 ஆழ்வார்களால் தமிழ் இலக்கியம் நல்ல வளர்ச்சி அடைந்தது. 3. வைணவ சமயக் கருத்துகளையும் , விஸிஷ்டாத் வைதக் கருத்துகளையும் , அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிய இனிய நடையில் தமிழில் கொடுத்த பெருமை ஆழ்வார்களையேச் சாரும். 4. பக்தி இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இந்தியாவின் பல்வேறு பாகங்களில் பேசப்படும் வட்டார மொழிகளில் தத்துவ , ஆள்மீக கருத்துகளை வெளியிட்டனர். ஆழ்வார்களும் இப்பணியில் பெரும்பங்கு வகிக்கின்றனர். 5. சாதி , இனப் பாகுபாடுகளைக் கடந்த
|
நிலையில் சமயப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாய் இவர்களது வாழ்வு அமைந்தது. ஆழ்வார்களின் திருக் கூட்டத்தில் பல இன மக்கள் இருப்பதையும் காண்கிறோம். 6. எளிய ‘ சரணாகதித் தத்துவத்தை ’ தங்கள் பாசுரங்களில் அனைவரும் அறிந்து பின்பற்றும்படி விளக்கியுள்ளனர். 7. ' திருப்பாவை'யில் ஆண்டாள் சிறப்பித்துக் கூறியுள்ள ‘ நாயகநாயகி ’ உறவுமுறை இறைவனிடத்து அடியார் மேற்கொள்ள வேண்டிய அன்பு நெறியினை உலகறியச் செய்கிறது. 8. வேதங்கள் , உபநிடதங்கள் , புராணங்கள் , காவியங்கள் அனைத்திலும் உள்ள உயரிய நெறிகளையும் , தத்துவங்
|
களையும் இவர்களது எளிய பாடல்கள் எடுத்துக்கூறுகின்றன. அவர்களின் தூய வழியில் செல்ல தூண்டுகின்றன. 256 9. ஆழ்வார்கள் உருவ வழிபாட்டில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இறைவனை ஆராதிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். இது பாமர மக்களை நல்வழிப்படுத்த உதவியது. 10. உலக இன்பங்கள் நிலையற்றவை , பிறப்பு , இறப்பு இல்லாத இறைவனின் திருவடிகளைப் பற்றி நற்கதி அடைவதே நிலையானது என்ற அறநெறியைப் பரப்பினர். 11. பேரின்ப நிலையை அடைவது எவ்வித வேற்றுமைகளும் தடையாக இருக்கக் கூடாது என்ற உணர்வுடன் சமத்துவ மனப்பான்மையுடன் சேவை
|
புரிந்தனர். 12. ஆலயத் திருப்பணிகளுக்கும் , சமூக நற்பணிகளிக்கும் ஆழ்வார்கள் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டனர். 13. இவ்வாழ்வார்கள் நாடு முழுவதுமுள்ள வைணவத் தலங்களை வடநாடு - நேபாளம் , துவாரகை மலை நாடு - திருவனந்தபுரம் நடுநாடு - திருக்கோவிலூர் , திருவேங்கடம் தொண்டை நாடு - காஞ்சிபுரம் எனப் பிரித்து அவ்விடங்களில் கோயில் கொண்டுள்ள பெருமாளைப் புகழ்ந்து பாடியும் , மங்கள சாசனம் செய்துள்ளனர். 14. இவர்களின் ' அருளிச் செயல்கள் , ' ' நாலாயிரத் திவ்யப் பிரபந்தமாகத் ’ தொகுக்கப்பட்டுள்ளன. 257 வழிபட்டு தமிழர் சமயக்
|
கோட்பாடுகளை மேற்கொண்டார். தேவாரம் அருளிச் செய்து அம்மையப்பரைக் கண்குளிரக் கண்டு களித்தார். சமணர்களை வென்று சைவ சமயத்தை நிலை நாட்டினார். சமணர்களை வெல்லும் வாதப் போரில் நெருப்பில் தமது ஏடுகளை இட்டும் வேகாமல் பசுமையுடன் எடுத்தும் , வைகை ஆற்று நீரில் எதிர்த்தோடும் படியும் செய்தார். இதனையே அனல்வாதம் , புனல் வாதம் என்பர். திருக்கொள்ளம்புதூரில் பதிகம் பாடி ஓடத்தை ஓடச் செய்தார். திருவோத்தூரில் ஆண்பனையை பெண்பனையாக்கினார். திருமைலாப்பூரில் எலும்பைப் பெண்ணாக்கினார். திருநல்லூர் பெருமணத்தில் வைகாசி திங்களில்
|
மூலநட்சத்திரத்தில் முக்தியடைந்தார். இவர் நிகழ்த்திய அற்புதங்களைக் குறிக்கும் பாடல் வருமாறு “ புனலில் ஏடெதிர் செல்லெனச் செல்லுமே புத்தனார் தலை தத்தெனத் தத்துமே கனலில் ஏடிடப் பச்சென்றிருக்குமே கதவு மாமறைக் காட்டில் அடைக்குமே பனையில் ஆண்பனை பெண்பனையாகுமே பழைய என்புபொற் பாவையது ஆகுமே சின அராவிடந் தீரௌத் தீருமே சிறந்த சம்பந்தர் செந்தமிழ்ப் பாடலே ” சமயக் கருத்து இவரது தேவாரம் முழுவதும் சிவனையே முழு முதற் கடவுளாக கூறுகிறது. சிவனுடைய பல வடிவங்களையும் , பல பெயர்களையும் , அவன் அடியவர்கட்கு செய்த பல அருட்செயல்களையும் ,
|
பல திருவிளையாடல்களையும் அவன் எழுந்தருளியுள்ள பல பதிகளையும் அவருடைய தேவாரப் பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன. இவர் பாடல்களில் 1 சிவபெருமான் மக்களுக்கு கடவுள் 2. பிறப்பு , இறப்பு இல்லாதவன் 3. உலகத்தினிடத்தும் , உயிர்களிடத்தும் ஒன்றாயும் வேறாயும் , உடனாயும் இருப்பவன் 4. உயிர்களின் பிறவிப்பிணிகளை நீக்குபவன் 5. தன்னை வந்தடைபவர்களது பாவங்களை நீக்கி முக்தி தருபவள் 6. தான் இன்புற்றிருப்பதைப் போல தன்னை அடையும் உயிர்களையும் இன்புற்று இருக்கச் செய்கிறான். தன் அடியார்களுக்குப் பல வழிகளில் அருள் செய்து அவர்களை ஆட்கொள்கிறான்
|
போன்ற கோட்பாடுகளைக் காணலாம். சிவனை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் சிவனைத் தம் கடவுளாகவும் , தம்மை அவன் திருவடிகளை வணங்கும் அடியாராகவும் உள்ளத்தில் கொண்டு வணங்கும் மக்கள் பின்வரும் நன்மைகளைப் பெறுவர் என்கிறார். 1. தமக்கு நேரும் துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவர். 2. வினைகளில் இருந்து விடுதலை அடைவர். 3. இன்பம் அடைகின்றனர். 4. மறுபிறப்பினின்று நீங்குகின்றன. 5. வீடு போற்றை அடைகின்றனர். இவரது வாழ்க்கை இரு பெரும் தத்துவங்களை உணர்த்துகிறது. 1. இறைவனுடைய புதல்வர் என்ற பெருந்தகுதியை பெற்றார். சத்புத்திர மார்க்கத்தை
|
உணர்த்துகிறது. 2. தமக்கென்று வாழாமல் , உயிர்கட்கு உதவி செய்ய வேண்டுமென்ற ‘ தன்னலமற்ற வாழ்க்கை ’ நெறி என்பனவாகும். 9.4.2.2. அப்பர் திருநாவுக்கரசு சுவாமிகளே ' அப்பர் ' என வழங்கப்படுகிறார். திருஞானசம்பந்தரால் ‘ அப்பரே ' என அழைக்கப் பெற்றார். இவரது இயற்பெயர் ‘ மருள்நீக்கியார் ’ ஆகும். இவர் திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் , வேளாளர் மரபில் பிறந்தார். இவரது பெற்றோர் புகழனார். மாதினியார் ஆவர். இவரது தமக்கையர் திலகவதியார். இவர் சமண சமயத்தை சார்ந்து தருமசேனர் என்றழைக்கப் பட்டார். அச்சமய நூல்களில் வல்லவரானார்.
|
திலகவதியார் திருவதிகையில் சிவத்தொண்டு செய்து வந்தார். இறைவன் இவருக்கு சூலை நோய் உண்டாக்கிளார். அந்நோய் பெறாது தமது தமக்கையாரிடம் வந்து சேர்ந்தார். திலகவதியாரும் சிவாலயம் சென்று சிவனை வணங்கி நோய் நீங்கும் வண்ணம் பதிகம் பாடி திருநீற்றினை வயிற்றில் தடவ நோய் நீங்கப் பெற்றார். சைவ சமயத்திற்கு மீண்டார். இச்செயலை அறிந்த பல்லவன் இவரை சுண்ணாம்பு நீற்றறையால் வைத்தும் , விஷத்தைக் கொடுத்தும் , யானையை ஏவிக் கொல்லச் செய்தும் , கல்லில் பிணைத்துக் கட்டி கடலில் தள்ளியும் பலவித தீங்குகளைச் செய்தார். இறை அருளால் அவை
|
அனைத்தையும் வென்றார். அருஞ் செயல்கள் 1. திருத்தூங்கானை மாடத்தில் தனது தோளில் ரிஷப , சூலமுத்திரைகளை பொறிக்கப் பெற்றார். 2. அப்பூதி அடிகளாரின் மகனை பாம்பு தீண்ட , இறை அருளால் அவ்விஷத்தை நீக்கி அருளினார் 3. திருமறைக்காட்டில் வேதங்களால் அடைக்கப்பட்ட கதவினைப் பதிகம் பாடி திறக்கச் செய்தார். திருவையாற்றிலேயே கயிலைக் காட்சியைக் கண்டு களித்தார். திருப்புகலூரில் சித்திரை மாதம் சதயத் நாளில் இறைவனடி 262 சேர்ந்தார். இவரது அற்புதங்களை விளக்கும் பாடல் “ தலைகொள் நஞ்சமு தாக விளையுமே தழலின் நீனு தடாகம தாகுமேறு கொலை - செய்
|
யானை குனிந்து பணியுமே கூர் அரா விடந் தீரெனத் தீருமே கலைகொள் வேதவனப் பதி தன்னுள்ளே கதவு மீண்டு கடுகத் திறக்கும் அலைகொள் வாரியில் கல்லும் மிதக்குமே அப்பர் போற்றும் அருந்தமிழ்ப் பாடலே ” இவரது கோட்பாடுகள் : சிவன் பிறப்பில்லாதவன் 1. 2. “ என்கடன் பணி செய்துகிடப்பதே ” என்றார் 3. சொற்களால் விவரிக்க முடியாத பெருமை உடையவன் என்கிறார். சிவபெருமானை வழிபடுவதால் 1. துன்பத்தினின்று விடுபட்டு , இன்பம் அடைகின்றனர் 2. வினையினின்று விடுபடுகின்றனர் 3. பிறப்பு , மூப்பு , பெரும்பசி , பிணி , இறப்புகளில் இருந்து நீங்குகின்றனர்
|
என்றார். அற்புதமான தத்துவ பூசனை முறை , “ காயமே கோயிலாகக் கடிமளம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக நேயமே நெய்யும் பாலா நிறைய நீ ரமைய ஆட்டிப் பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே ” இதன் கருத்து - உடம்பே கோயிலாகவும் காக்கப்படுகின்ற மனம் அடிமையாகவும் வாய்மையே பரிசுத்தமாகவும் , பரிசுத்தம் பெற்ற மனத்திலுள்ள ஒளியே அழகிய இலிங்கமாகவும் , அன்பே 263 நெய்யும் பாலுமாக நன்கு நிறைய அபிஷேகம் செய்து துதியை உணவாக்கி , ஈசனுக்குப் பூசனை செய்யும் முறையைக் கூறுகிறார். 9.4.23. சுத்தரர் திருக்கயிலாயத்தில்
|
ஆண்டவனுக்குத் திருத்தொண்டு செய்து வந்த ஆலாலசுந்தரர். திருநாவலூரில் சடையனார் , இசைஞானியார் என்பவர்களுக்கு மகனாய்ப் பிறந்தார். இவருக்கு திருமணம் நடந்த காலத்தில் இறைவன் அடிமை ஓலை காட்டி , தடுத்தாட் கொண்டார். திருவதிகையில் இறைவனின் திருவடி சூட்டப்பெற்றார். ஆரூரில் பரவையாரை மணந்தார். அடியாரது பெருமையை விளக்கும் ‘ திருத்தொண்டர் தொகையைப் பாடி அருளினார். குண்டையூரில் நெல்மலை பெற்றார். திருப்புகலூரில் செங்கல்லைப் பொன்னாக்கிக் கொண்டார். திருமுதுகுன்றில் இறைவன் அளித்த பொன்னை ஆற்றில் போட்டு திருவாரூர் குளத்தில்
|
எடுத்துக் கொண்டார். திருவொற்றியூரில் சங்கிலியாரை மணந்தார். பரவையார் ஊடலை இறைவனைத் தூது விடுத்துப் போக்கிக் கொண்டார். திருவையாற்றில் காவிரி நீர்ப்பெருக்கடங்கி வழிவிடபதிகம் பாடினார். அவிநாசியில் முதலை வாய்ப்பிள்ளையை மீட்டருளினார். ஆடிமாதம் சுவாதி நன்னாளில் வெள்ளையானையில் அமர்ந்த சேர மன்னருடன் கயிலாய மலை சென்று , தான் முன் செய்த திருத்தொண்டைச் செய்து வந்தார். இச்செய்தியை விளக்கும் பாடல் “ வெம்கரா வுண்ட பிள்ளையை நல்குமே வெள்ளை வாரண மீதில் இருத்துமே மங்கை பாகரைத் தூது நடத்துமே , மருவி ஆறு வழிவிட்டு நிற்குமே
|
செங்கல் ஆனது தங்கமதாகுமே திகழும் ஆற்றிட்ட செம்பொன் அளிக்குமே , தூங்க வான்பரி சேரற்கு நல்குமே துலங்க சுந்தரர் செந்தமிழ்ப் பாடலே ” இவரது பாடல் கருத்துகள் : சிவன் பிறப்பில்லாதவன் 1. 2. இன்ள தன்மையன் என்று உயிர்களில் அறியப்படாதவன் 3. ஓராயிரம் பேரும் உடையவன் 4. பெண் வடிவோ ஆண்வடிவோ இல்லாதவன் 5. அடியார் செய்யும் பிழைகளைப் பொறுத்தருள்பவன் என்பனவாகும். வழிபாட்டுப் பயன்கள் சிவனை வழிபடுபவர்கள் 1. மும்மலங்களை அறுப்பர் ( மும்மலங்களாவன ஆணவம் , கன்மம் , மாயை என்பன. 2. சிவலோகம் எய்துவர் 3. பசி , பிணி இவைகளிலிருந்து
|
விடுபடுவர் 4. பிறப்பினின்று நீங்குவர் 5. வினையை விட்டொழிப்பர் என்கிறார். மேலும் கடுந்தவம் புரிவோர்க்கு வேண்டுவற்றை தடையின்றி கொடுப்பவர். தேவாரப் பாடல் இவர் தான் இறைவனுக்கு அடிமை என்பதை பல பாடல்களால் விவரிக்கிறார். அவனை என்றும் மறக்காமல் அடிமையாய் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் பாடல் ஒன்றைக் காண்போம். பாடல் “ பித்தாபிறை சூடிபெருமானே அருளாளா எத்தான்மற வாதேனினைக் கின்றேன் மனத்துன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள் அத்தாவுனக் காளாய்இனி அல்லேன் எனலாமே ” 265 இதன் கருத்து : அடியார்க்கு
|
அருள்புரியும் வகையில் பெருங் கருணையில் பித்தர் போன்றவனே , பிறைச் சந்திரனை முடியில் சூடிக் கொண்டவனே , எல்லா உயிர்களுக்கும் தலைவனே , அருளையே செல்வமாக உடையவனே , இனி நான் உன்ைைன மறவாமல் இடைவிடாமல் தியானிப்பேன். இவ்வாறு நினைக்கின்ற என் மனத்திலே எழுந்தருளியுள்ள , பெண்ணையாற்றில் தென்கரையில் உள்ளதாகிய திருவெண்ணெய் நல்லூரில் திருவருட்துறை என்னும் ஆலயத்தில் அமர்ந்தருளிய என் அய்யனே ! இனி நான் உனக்கு என்றென்றும் அடிமை என்கிறார் , திருநாவுக்கரசர் 9.4.2.4. மாணிக்கவாசகர் சமயம் ஒரு காலத்தில் செழிப்புற்று வளரும். மற்றொரு
|
காலத்தில் மெலிவுற்றுத்தளரும். அச்சமயத்தில் இறையருளால் ஈடு இணையற்ற அடியார் தோன்றுவர். ஒரு காலத்தில் பௌத்த மதத்தினரால் நமது இந்து மதம் தாக்கப்பெற்று தளர்ச்சியுற்றது. அவ்வேளையில் மாணிக்கவாசகர் திருவாதவூரில் தோன்றினார். பாண்டிய நாட்டின் மந்திரியாகத் திகழ்ந்தார். திருப்பெருந்துறையில் குருவருள் பெற்றுத் திருவாசகம் பாடியருளினார். சிதம்பரத்தில் பௌத்தர்களை வாதில் வென்றார். ஊமைப் பெண்ணை பேசுமாறு செய்தார். “ திருச்சிற்றம்பலக் கோவையாரை ” பாடியருளினார். இவர் “ செய்ய திருவாசகங்கள் அறுநூறும் , திருக்கோவை நானூறும் '
|
மொழிந்தருளினார். ஆனிமாதம் மக நட்சத்திரத்தில் திருச்சிற்றம் பலத்தில் இறைவனுடன் இரண்டறக் கலந்தார். இறைவன் இவர் பொருட்டு நரிகளைக் குதிரைகளாக்கினார். வையை நதியை பெருக்கெடுத்ததோடச் செய்தார். பிட்டுக்கு மண் சுமந்தார் பிரம்படிபட்டார். ஏடு , எழுத்தாணி கொண்டு இவர் கூறியனவற்றை எழுதினார். இந்த அற்புத நிகழ்ச்சிகளை பின்வரும் பாடலால் அறியலாம். “ பெருகும் வையை தனை அழைப்பிக்குமே பிரம்படிக்குப் பிரான்மேனி கன்றுமே நரியெலாம் பரியாக நடத்துதுமே 266 நாடி மூகைதனைப் பேசுவிக்குமே பாரிற் பாட்டுக்கு மண்சுமப் பிக்குமே பரமன் ஏடெழுதக்
|
கோவை பாடுமே வருகும் புத்தரை வாதினில் பாடலுமே வாதவூரர் வண்தமிழ்ப் பாடலே ” இவரது பாடல் கருத்துகள் : 1. சிவன் முன்னனப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருள் 2. பிறரால் இன்ன தன்மையன் என அறியமுடியாதவன் 3. ஆண் , பெண் , அலி என்ற வடிவில்லாதலன் , ஆக்கல் , காத்தல் , அழித்தல் , மறைத்தல் , அருளல் என்ற தொழில்களைச் செய்பவன் 4. உயிர்களின் பிறப்பை நீக்குபவன் 5. பிறப்பு , இறப்பு இல்லாதவன் என்பனவாம். உயிர்க்கோட்பாடுகள் 1. உலக உயிர்கள் எண்ணற்றவை. அவை ஆணவம் , கன்மம் , மாயை என்ற மும்மலங்களின் விளைவாகப் பிறப்பை அடைகின்றன. 2. புல் ,
|
மரம் , ஊர்வன , நீர்வாழ்வன , விலங்கு , மக்கள் , தேவர் என்ற ஏழுவகைப் பிறப்புகளையும் அடைகின்றன. 3. உயிர்கள் அவனருளாலேதான் அவன் தாள் வணங்க வேண்டும். 4. உயிர்கள் மும்மலங்களிலிருந்து விடுபடும்போழ்து சிவபெருமானை அடைகின்றன என்றார். இறைவன் பெருமையைக் கூறும் திருவாசகப் பாடல் “ வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யாள் எனது என்று ) அவர் அவரைக் கூத்தாட்டு வான் ஆகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே ” 267 இதன் கருத்து இறைவன் நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் என்னும் ஐம்பெரும்
|
பூதங்களாய் விளங்குபவன். எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன். அறியாமையால் யான் , எனது உலகப் பற்றால் மயங்கி கூத்தாடும் படி செய்பவன். எம் தலைவனாகிய உன்னை எவ்வாறு வாழ்த்துவேன் ! என்கிறார். 9.4.2.5. திருநீலகண்டர் திருநீலகண்டர் தில்லையில் வாழ்ந்தவர். இளமையும் அருந்ததிக்கு நிகரான கற்புமிக்க மனைவியிருந்தும் , இன்பத் துறையில் எளியராய் பரத்தைபால் சென்று வந்தார். அதைக் கண்ட அவர் மனைவியார் , “ தீண்டுவீராயின் எம்மைத் திருநீலகண்ட மென்றார். ” இறைவன் மீது ஆணை கேட்ட பெரியவர் , எம்மை என்றதனால் மற்ற பொது மாதர்களையும் என
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.