text
stringlengths 11
513
|
---|
ஜிளர் ' என்ற சொல்லின் பொருள் யாது ? 2. ' தீர்த்தங்கரர்கள் ' என்பவர் யார் ? 6.2 , பயிற்சி வினாக்கள் 3. சமண சமயத்தின் இருபிரிவுகள் யாவை ? சமண சமயக் கப்பலின் நங்கூரமாக போற்றப்படுவது யாது ? 5. ' பஞ்சமஹாவரதம் ' என குறிப்பிடுவன யாவை ? 6. ‘ கோமதீஸ்வரர் ’ சிலை எங்கு அமைந்துள்ளது ? 7. சமணர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் நூல்கள் யாவை ? 8. அகத்தூய்மையாக சமணம் பின்பற்ற வேண்டிய வழிகள் யாவை ? 4. ஆ. ஒரு பத்தி அளவில் அல்லது பத்து வரிகளுக்கு மிகாமல் விடையளி 1. சமண சமயத்தின் தோற்றம் பற்றி எழுதுக. 2. ' திகம்பரர் , ' சுவேதம்பரர் '
|
- விளக்குக. 3. மகாவீரர் போதித்த உண்மைகள் யாவை ? 4. சமணர் கால ‘ கலை வளர்ச்சியை ’ எழுதுக. 5. சமணசமய ' அறக்கோட்பாடுகள் ' யாவை ? 141 6. 3. புத்த சமயம் இந்து சமயத்தில் நிலவிய குறைபாடுகளான மூடப் பழக்கவழக்கங்கள் வேள்விகள் , சடங்குகள் , சாதிக் கொடுமைகள் போன்றவற்றை நீக்க வழி காண வேண்டும் என்ற சிந்தனையின் விளைவே புத்த சமயம் தோன்றக் காரணமாகும். ஒரு பக்க அளவில் அல்லது முப்பது வரிகளுக்கு மிகாமல் விடையளி 1. ‘ மஹாவீரரின் ’ வாழக்கையை விவரி ? 2. சமணசமயம் கூறும் ‘ மும்மணிகள் ’ , ‘ அநேகாந்த வாதம் ’ பற்றி விவரி ? 3. சமண
|
சமயத்தில் கூறப்பட்டுள்ள “ நவபதார்த்தம் ” பற்றி நீவிர் அறிவன யாவை ? ஈ. நான்கு பக்கங்களுக்கு மிகாமல் விடையளி 1. வர்த்தமானரின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் போதித்த உண்மைகளையும் கட்டுரை வடிவில் எழுதுக. 2. இந்தியப் பண்பாட்டிற்கு சமண சமயத்தின் பங்கினை விவரி. புத்தமதமானது பாலி பௌத்தம் , திருமறை பௌத்தம் , தென்னாட்டு பௌத்தம் , தேரவாதம் அதாவது ஸ்தவிரவாதம் என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. 6.3.1. புத்தர் புத்த மதத்தைத் தோற்றுவித்த புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர் இவர் நேபாள நாட்டில் கபில வஸ்துவில் உள்ள லும்பினி
|
வளத்தில் சுத்தோதனருக்கும் மாயா தேவிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் சாக்கிய வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் “ சாக்கிய முனி ” என்றும் ஆன்மிகத் துறையில் “ புத்தர் ” எனவும் அழைக்கப்பட்டார். சுத்தோதனர் , சித்தார்த்தருக்கு இளமையிலேயே “ யசோதரை ” என்னும் மங்கையை மணம் முடித்து வைத்தார். காலப் போக்கில் அரண்மனை வாழ்க்கை பிடிக்காமல் அமைதியை இழந்த அவர் பொழுது போக்கிற்காக அரண்மனையை விட்டு வெளியே சென்றுகொண்டிருந்தபோது அவர் கண்டகாட்சி - அவர் மனதை மாற்றியது. வயது முதிர்ந்த மனிதன் , நோயாளி , பிணம் , துறவி போன்றவர்கள் படும்
|
துன்பத்தைக் கண்டு அதைப் போக்க வழிகாண முயன்றார். தனது 29 வது வயதில் உண்மையைக் காண அரண்மனை வாழ்வை விட்டு வெளியேறினார். துறவியான புத்தருக்கு ஆசிரியர்களின் அறிவுரையும் , கடுந்தவமும் பயனளிக்காத நிலையில் உருவேலாவிலுள்ள போதி மரத்தடியில் அமர்ந்து 7 வாரங்கள் தியானம் செய்தார். இறுதியில் ஒருநாள் கடுமையான தவம் செய்துக்கொண்டிருக்கும்போது “ புதிய ஒளி ” தோன்றியது. 36 வது வயதில் ஞானோதயம் பெற்று நிர்வாணம் என்றும் உயரிய நிலையை அடைந்தது. முதல் அவர் “ புத்தர் ” என 143 அழைக்கப்பட்டார். தனது 80 வது வயதில் “ குசி ” ” நகரத்தில்
|
இவ்வுலக வாழ்வை நீத்து “ மகாநிர்வாண ” நிலையை அடைந்தார். 6.3.2. புத்தரது சமய போதனைகள் புத்தர் தாம் கண்ட உண்மைகளை 45 ஆண்டுகள் பல இடங்களுக்கும் சென்று , படித்தவரும் பாமரரும் புரிந்துகொள்ளும். வண்ணம் போதனை செய்தார். அனைத்துச் சாதிப் பிரிவை சேர்ந்தவர்களும் புத்த சமயத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். ஆசையை ஒழித்தால் தான் மன அமைதியையும் , ஆனந்தத்தையும் அடைய முடியும் என்றும் , அதற்குத் தீமைகளைக் களைந்து நன்மைகளைச் செய்தால் ஆசை அகன்றுவிடும் என்று போதித்தார். 6.3.2.1. நான்கு உயரிய உண்மைகள் ( அ ) ஆரிய சத்தியங்கள் ‘
|
இவ்வுலக வாழ்க்கை துன்பமயமானது ' பிணி , மூப்பு , சாக்காடு ஆகிய துன்பங்கள் நம்மைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தான் இன்பமாக வாழவேண்டுமென்ற ‘ தன்னல ஆசையே ’ துன்பத்திற்குக் காரணம். 1. 2. 3. ' தன்னல ஆசைகளை ஒழித்தால் ’ துன்பங்கள் அறவே நீங்கும். 4. எண்வகை வழிகளை மேற்கொண்டால் ஆசைகளை ஒழித்து துன்பங்களிலிருந்து விடுபட்டு நிர்வாணம் என்னும் உயரிய நிலையை அடையலாம். 6.3.2.2. எண்வகை வழிகள் 1. நல்ல நம்பிக்கை – புத்தரிடத்திலும் , அவரது கொள்கையிலும் நம்பிக்கை வைத்தல் 2. நல்லெண்ணம் - இல்லற வாழ்க்கையைக் கைவிடுதல் , நல்ல
|
நினைவுகளை மனதில் பதியச் செய்தல். 3. நல்மொழி - புத்தருடைய கொள்கைகளைத் திரும்பத் திரும்பச் சொல்வது பிறர் உள்ளங்களைப் புண்படுத்தும் சொற்களைப் பேசாமல் உண்மையும் இனிமையும் கலந்த சொற்களைப் பேசுவது. 144 4. நற்பணி – துறவு வாழ்க்கையின் மூலம் நற்பணிகளைச் செய்தல். 5. நல்ல வாழ்க்கை - பிச்சை எடுத்து வாழ்வதிலும் நல்ல நெறிகளைப் பின்பற்றி வாழ்வதாகும். 6. நல்ல முயற்சி - சமயக் கோட்பாடுகளை முறையாகப் பின்பற்றி வாழ முயற்சிப்பது. 7. நல்ல சிந்தனை - மனித உடல் அசுத்தமானது என்றும் , நிலையற்றது என்றும் மனதில் கொண்டு நல்லவற்றை நினைவில்
|
கொள்ளுதல். 8. நல்ல தியானம் - மனத்தை நல்லனவற்றில் நிலை நிறுத்தி மௌனத்தை மேற்கொண்டு மன அமைதி பெறுதல். 6.3.2.3. இடைவழி அல்லது மத்திய மார்க்கம் பௌத்த சமயத்தில் அதிகம் உண்டு , உறங்கும் இன்ப வாழ்க்கைக்கு இடமில்லை. உண்ணாமல் , உறங்காமல் தானே வருந்தி வாடுதலும் கூடாது என்ற கோட்பாட்டைக் கடைப்பிடித்து , உலக இன்பத்தை வெறுத்து , கடுந் தவம் புரியாமல் இருந்து துறவியானவர் புத்தர். எனவே இரு வகை உச்சநிலைகளையும் ( Extremes ) தவிர்த்து எளிய வழியில் நற்கதி அடைதல் வேண்டும். இதனை இடைவழி என்றும் ( Middle Path , Golden path )
|
வழங்குவர். 6.3.2.4. நிர்வாணம் “ ஆசையை அகற்றுவதே நிர்வாணம் ” என்று சுத்த பீடகத்தில் கூறப்பட்டிருக்கிறது. பிறப்பு , இறப்பு என்ற துன்பங்களிலிருந்து விடுபட்டு நிர்வாண நிலையை அடைய தூய வாழ்வும் , எண் வழி மார்க்கங்களைப் பின்பற்றுவதுமே இதன் அடிப்படையாக அமைகிறது. 6.3.2.5. கர்மவினை இந்து சமயத்தின் கர்மவினைக் கோட்பாட்டிலும் , மறுபிறப்பிலும் புத்தர் நம்பிக்கைக் கொண்டிருந்தார். “ வினை விதைத்தவன் வினை அறுப்பான் , திணை விதைத்தவன் திணை அறுப்பான் ” என்ற 145 முதுமொழிக்கு ஏற்ப கடந்த கால வாழ்வின் பயனே இப்போதைய வாழ்வும் உடலும்
|
ஆகும் என்றார். எனவே வினையிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பதை வலியுறுத்துகிறார் என அறிய முடிகிறது. 6.3.2.6. ஒழுக்கம் இல்லறத்தாரும் , துறவறத்தாரும் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிகள் பத்து எனக் கணக்கிட்டு கீழ்க்கண்டவாறு முதல் ஐந்து இல்லறத்தாருக்கும் , மற்ற ஐந்து துறவறத்தாருக்கும் கூறப்பட்டுள்ளது. இல்லறத்தார் பின்பற்ற வேண்டியவை வெஃகாமை ( அ ) பிறர் பொருள் விரும்பாமை 1. 2. பொய்யாமை 3. கொல்லாமை 4. பிறன் மனை விழையாமை 5. கள்ளுண்ணாமை 6.3.2.7. துறவறத்தார் பின்பற்ற வேண்டியவை 1. ஆடல் பாடல்களில் பங்கு கொள்ளாமை 2. மலர் ,
|
நறுமணப் பொருள்கள் போன்ற ஆடம்பரப் பொருள்களைப் பயன்படுத்தாமை 3. அகாலத்தில் உண்ணாமை 4. மகிழ்ச்சியளிக்கும் படுக்கைகளில் உறங்காமை 5. பணத்தை வைத்துக்கொள்ளாமை. இவற்றால் புத்தரின் வாழ்க்கை , அவர் போதித்த கொள்கைகள் முதலியவற்றைப் பார்த்தோம். இனி புத்தர் பின்பற்றிய சமயம் , அதன் நூல்கள் முதலியவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். பௌத்தமதத்தின் வேதநூல் திரிபிடகம் ஆகும். இதை மரபின் மூன்று கூடைகள் அதாவது மூவகைச் சட்டம் அல்லது புனிதக் கொள்கைகொண்ட திருமறை என்றும் கூறுவர். அவை சுத்த அல்லது 146 புத்தர் திருவாய் மலர்ந்த மொழிகள் ,
|
விளயம் அல்லது அறநெறிகள் , அபிதமம் ( அ ) தத்துவ இயல்பான ஆய்வுகள் என மூன்று வகைப்படும். 6.3.3. புத்த சமயத்தின் பிரிவுகள் புத்த சமயம் ஹுனயானம் , மஹாயானம் என இரண்டு பிரிவாக உள்ளன. ஹீனயானம் என்பது போதிசத்துவர்களால் பின்பற்றப்பட்டது. பழமையான உண்மைகளை ஏற்றுக்கொள்வது. இச்சமயத்தின்படி புத்தர் சாதாரண மனிதராக மதிக்கப்பட்டார். புத்தரின் நல்லொழுக்க நெறிகளின் மூலம் நிர்வாணம் அடையலாம் என்பதை வலியுறுத்திய சமயம் ஹுனயான புத்தசமயமாகும். தத்துவக் கோட்பாடுகள் பாலி மொழியில் எழுதப்பட்டன. இப்பிரிவு அசோகர் காலத்தைச் சார்ந்தது.
|
மஹாயானம் , புத்தரைக் கடவுளாக நினைத்து வணங்குவதன் மூலந்தான் நிர்வாண நிலையை அடைய முடியும் என்பதை வலியுறுத்தியது. எனவே புத்தருக்கு ஆலயங்கள் எழுப்பி சிலை வைக்கப்பட்டது. சடங்குகள் , வேள்விகள் நடத்தப்பட்டன. மஹாயான புத்தசமயக் கோட்பாடுகள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டன. இப்பிரிவு கனிஷ்கர் காலத்தைச் சார்ந்தது. 6. 3.4. இந்தியப் பண்பாட்டிற்கு பௌத்த சமயத்தின் கொடை 1. புத்தரின் உயர்ந்த அறக்கோட்பாடுகள் , அறக்கொள்கைகள் மக்களின் உணர்வுகளுக்கு ஏற்பவும் , அனைவரும் அறிந்திருந்த மொழியிலும் , நீதிக் கதைகள் மூலமாகவும்
|
கற்பிக்கப்பட்டன. 2. தியாகம் , தூய்மை , அறம் , உண்மை , தன்னடக்கம் , அன்பு , இரக்கம் போன்ற உயரிய பண்புகளை வலியுறுத்தியதோடு மனித நலனுக்காகப் பணிபுரிய வேண்டும் என்பதையும் புத்தர் உணர்த்தினார். 3. புத்தரின் அகிம்சைக் கொள்கை இந்து சமயத்தில் காணப்பட்ட தேவையில்லாத சடங்குகளும் , வேள்விகளும் மறையக் காரணமானது. மஹாயான புத்தமதத்தினரைப் பின்பற்றி 147 ஆலயங்களும் மடங்களும் ஏற்படுத்தப்பட்டது. உருவ வழிபாடும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இலக்கிய வளர்ச்சி 1. “ விஹாரங்கள் ” எனப்படும் பௌத்த மடாலயங்கள் உருவாக்கப் பட்டன. “ பிராக்கிருதம் ”
|
எனப்படும் பேச்சு மொழியில் இலக்கியங்கள் பெரும் வளர்ச்சியைக் கண்டன. 2. பௌத்த பிக்குகளும் , பெண் துறவிகளும் , படிக்காத பாமரர்களும் புரிந்துக்கொள்ளும் வகையில் அவர்களது பேச்சு மொழியில் சமயக் கருத்துகளைப் பரப்பினர். 3. புத்த சமய வேத நூல் - திருமுறை. இது பாலி மொழியில் இயற்றப்பட்டது. 4. “ ஆயுர் வேதம் ” என்னும் மருத்துவநூல் நாகார்ஜுனர் என்பவராலும் சமயத்தொடர்பான உரைநடை நூல்கள் , நாடகங்கள் போன்றவை “ அசுவகோஷா ” “ ஹர்ஷர் ” போன்றவர்களாலும் எழுதப்பட்டன. சம உரிமையும் , சகிப்புத் தன்மையும் 1. சாதி , இனம் , பால் என்ற
|
வேறுபாடின்றி எல்லோரும் புத்த சமயத்தில் சேர்ந்து அதன் கோட்பாடுகளைப் பின்பற்றி வாழ்வில் உயர்நிலை அடையலாம் என்னும் வாய்ப்பை புத்த சமயம் அளித்தது. 2. இதனால் சாதிக் கொடுமைகள் மறைந்து சமத்துவம் நிலைத்தது. 3.அமைதி , அன்பு , கருணை , பொறுமை , சகிப்புத்தன்மை போன்ற உயரிய பண்புகள் இந்திய பண்பாட்டிற்கு அளித்த பெருமை புத்த சமயத்தையே சாரும். 4. புத்தர் தன்னுடைய சீடர்கள் சமயக் கொள்கைகளை கண்மூடித் தனமாக ஏற்றுக்கொள்ளாமல் பகுத்தறிவினைப் பயன்படுத்தி ஆராய்ந்து ஏற்றுக்கொள்வதை விரும்பினார். பௌத்த கலை புத்த மதம் தோன்றுவதற்கு முன்பு
|
இருந்த வேதகால இந்தியாவில் கலை என்பது ஒரு ஏவற் பெண்ணாகக் கருதப் பட்டதால் கட்டடக்கலையோ , சிற்பக்கலையோ வளர்ச்சியடைய வில்லை. வேள்வி செய்வதற்கான யாகசாலைகளும் , பலிபீடங்களும் கட்டப்பட்டன. புத்தர் , போதிசத்துவர் , இவர்களின் நினைவுச் சின்னங்களின்மீது கல்லால் கட்டப்பட்ட ஸ்தூபிகள் போன்ற கட்டடக்கலைகள் மனிதனின் ஆன்மாவை வெளிப்படுத்தி சிறப்பு செய்தது. ஆலயங்கள் , விஹாரங்கள் , நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றில் அழகிய வேலைப்பாடுகளோடு புத்தரின் வாழ்க்கை வரலாறுகள் செதுக்கப்பட்டன. குகைக்கோயிலை உருவாக்கியவர்களும் இவர்களே. பர்ஹட்ம்
|
, சாஞ்சி , அமராவதி போன்ற இடங்களிலுள்ள தூண்களும் கன்ஹேரி , கர்லே போன்ற இடங்களிலுள்ள குகைக்கோயில்களும் பௌத்த சமயச் சிற்பக் கலையினைப் பறைசாற்றும் மிகச் சிறந்த கலைச் சின்னங்களாக விளங்குகின்றன. கனிஷ்கர் காலத்தில் தான் “ காந்தாரக் கலை ” தோன்றியது. புத்த சமயம் இந்தியாவில் தோன்றியதால் இந்தியப் பண்பாட்டின் தனித்தன்மை நீங்கி வெளிநாடுகளுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. புத்தபிக்குகளும் , அறிஞர்களும் புத்த சமயத்தைப் பரப்ப வெளிநாடுகள் சென்றபோது இந்தியப் பண்பாட்டையும் தங்களோடு சுமந்துசென்றதால் சீனா , மங்கோலியா ,
|
மஞ்சூரியா , கொரியா , ஜப்பான் , பர்மா , சாவகம் சுமத்திரா , இந்தோசீனா போன்ற நாடுகளில் இந்தியப் பண்பாடு பரவியது. புத்த சமயத்தை தழுவிய அந்நியர்கள் புண்ணிய பூமியான , வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்தியாவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டதாலும் இந்திய பண்பாட்டின் சிறப்பு மேலும் வெளிநாட்டில் பரவக்காரணமாயிற்று. முடிவுரை இவ்வாறு சமயங்கள் இந்தியப் பண்பாட்டின் ஊற்றுக்கண்களாகத் திகழ்ந்தன. உயரிய வாழ்வியல் நெறிகளை அறிந்து பின்பற்றுமாறு செய்துள்ளன. 149 6. 3. பயிற்சி வினாக்கள் அ. ஓரிரு வரிகளில் விடையளி 1 ‘ புத்தரின் ’ இயற்பெயர்
|
என்ன ? 2. ' இடைவழி ' அல்லது ‘ மத்திய மார்க்கம் ’ பற்றி எழுதுக. 3. புத்தசமயத்தின் இருபிரிவுகள் யாவை ? 4. பௌத்த மடாலயங்களின் பெயர் என்ன ? 5. புத்தசமய ‘ வேதநூல் ’ எது ? அது எம்மொழியில் எழுதப்பட்டது ? 6. ' காந்தாரக் கலை ' என்றால் என்ன ? 7. பௌத்த சமயம் எந்நாடுகளில் பரவியது ? ஆ. ஒரு பத்தி அளவில் அல்லது பத்து வரிகளுக்கு மிகாமல் விடையளி 1 நான்கு ' ஆரிய சத்தியங்கள் ' யாவை ? 2. ' எண்வகை வழிகளை ' விளக்குக. 3. துறவறத்தார் பிள்பற்ற வேண்டுவனவாக புத்தர் கூறுவன யாவை ? 4. புத்தசமயத்தின் இருபிரிவுகளை விளக்குக. 5. பௌத்த சமய
|
இலக்கிய வளர்ச்சி பற்றி விவரி.. இ. ஒரு பக்க அளவில் அல்லது முப்பது வரிகளுக்கு மிகாமல் விடையளி 1. புத்தரின் வாழ்க்கை வரலாற்றை விவரி. 2. ' நிர்வாணம் ' , ' கர்மவினை ' , ' ஒழுக்கம் ' பற்றிய புத்தரின் கருத்துகளை விவரி ? 3. பௌத்தர் கால கலை வளர்ச்சியை நும் திறம் கொண்டு ஆய்க. ஈ. நான்கு பக்கங்களுக்கு மிகாமல் விடையளி 1. புத்தரின் வாழ்கையையும் , சமய போதனைகளையும் விவரி. 2. இந்தியப் பண்பாட்டிற்கு பௌத்த சமயத்தின் கொடையை விவரி. 150 7. இந்தியப் பண்பாட்டிற்கு பேரரசுகளின் கொடை 7.1 , மௌரியர் காலப் பண்பாடு மௌரியர்கள் வருகை இந்திய
|
வரலாற்றில் அரசியல் , பண்பாட்டுத் துறைகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது எனக் கூறலாம். இந்த அரசு மரபு. சந்திர குப்த மௌரியரால் நிறுவப்பெற்றது. மௌரியர்கள் ஒரே சீரான நிருவாக முறையை நடத்தி வந்தனர். இவர்களது ஆட்சிக் காலத்தில் அரசியல் ஒற்றுமை , சமுதாயத்தில் அமைதி , பொருளாதார வளர்ச்சி , சமய சகிப்புத் தன்மை இவையனைத்தும் சிறப்பான நிலையில் இருந்ததையும் காணலாம். கட்டடக் கலை , இலக்கியம் , போன்றவை உன்னத நிலையில் இருந்ததையும் காண்கின்றோம். 7.1.1. காலம் சந்திர குப்த மௌரியன் கி.மு. 322 - லிருந்து கி.மு. 298 வரையும்
|
, பிந்துசாரன் கி.மு. 298 லிருந்து கி.மு. 273 வரையும் , அசோகன் கி.மு. 273 முதல் கி.மு. 232 வரையும் , அசோகருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அரசர்கள் கி.மு. 232 முதல் கிமு. 182 வரையும் ஆண்டு வந்தாக அறிகிறோம். 7.1.2. சான்றுகள் மௌரியர்களுடைய ஆட்சியைப் பற்றி அறிந்து கொள்ள மெகஸ்தனிஸ் எழுதிய ‘ இண்டிகா ’ சாணக்கியர் எழுதிய ‘ அர்த்த சாஸ்திரம் ’ விசாகதத்தர் எழுதிய ‘ முத்ரா இராட்சஸம் ’ என்ற அரசியல் நாடகம் , சமண , பௌத்த சமய நூல்களும் ( தீபவம்சம் , மகாவம்சம் புராணங்களும் , கலை , கல்வெட்டுகள் , சிற்பங்கள் மற்றும் நாணயங்கள்
|
ஆகியவை மௌரியர்களின் நல்ல பண்பாட்டு வாழ்க்கை பற்றி அறிய உதவும் சான்றுகளாக விளங்குகின்றன. 151 7.1.3. முக்கிய அரசர்கள் 1. சந்திரகுப்த மௌரியன் ( கி.மு. 322 - கி.மு. 298 ) 2. பிந்து சாரன் ( கி.மு. 298 - கி.மு. 2731 3. அசோகன் ( கி.மு. 273 - கி.மு. 232 ) 7.1.4. அரசியல் நிலை மைய அரசு மைய அரசு , அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருந்தது. அரசர் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவராக இருந்தாலும் , மக்கள் அவரை எளிதில் அணுக முடிந்தது. அரசர் படைத் தலைவராகவும் முதன்மை நீதிபதியாகவும் திகழ்ந்தார். எத்துறையிலும்அவனுடைய முடிவே இறுதி
|
முடிவாக இருந்தது. மைய அரசு நிருவாக நுணுக்கங்களையும் அமைச்சர்களின் பணிகளையும் , இராணுவ செயல் திறனையும் , நாட்டில் நடைபெறும் ஏனைய நிகழ்வுகளையும் , ஒற்றர்களின் பணியையும் செவ்வளே பராமரிக்க வேண்டும். அமைச்சர்களைத் தவிர அரசனுக்கு அவசர காலங்களில் ஆலோசனை வழங்க ' மந்திரி பரிஷத் ' என அழைக்கப்படும் ஆலோசர்களும் இருந்தனர். செயலகம் அரசு அலுவல்களைக் கவனிக்கப் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ‘ செயலகம் ’ நிறுவப்பட்டது. ஒவ்வொரு துறையும் ‘ அத்யக்ஷர் ’ என்னும் கண்காணிப்பாளரின் கீழ் இயங்கி வந்தது. மாவட்ட ஆட்சியாளர்கள் ' அக்ரநாமி '
|
எனவும் , நகர ஆணையாளர்கள் ‘ அஸ்திநாமாய் ’ எனவும் அழைக்கப்பட்டனர். நகர நிருவாகத்தைக் கவனிக்க ‘ மகாமாத்திரர்கள் ' என்ற உயர்ந்த அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். எழுத்தர்கள் ‘ யுதா ’ எனவும் , செய்தி நிருபர்கள் ‘ பதிவேடகர்கள் ’ எனவும் அழைக்கப்பட்டனர். உயர்ந்த நிலை பூசாரியைப் ‘ புரோகிதர் ’ என்றும் இளவரசரை ‘ யுவராஜா ’ என்றும் சேனைத் தலைவரை ‘ சேனாதிபதி ' என்றும் 152 குறிப்பிட்டனர். பௌத்த சமய தருமத்தை மக்களுக்குப் பிரகடனப்படுத்தி , நீதி போதகர்களாகவும் , சமய ஞானிகளாகவும் இருந்தவர்கள். ' தரும மகாமாத்திரர்கள் ' என்ற ஒருவகை
|
அலுவலர்களை அசோகர் நியமித்தார். கருவூல தணிக்கையாளர் களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். மாநில அரசுகள் மௌரியப் பேரரசு பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அரசு குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர்கள் அல்லது அரச குடும்பத்தைச் சேர்ந்த குமாரரர்கள் தலைமையேற்று மாநில ஆளுநராக ஆட்சிப்பொறுப்பை நடத்தி வந்தனர். மாநிலங்கள் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு அவற்றை ‘ ஸ்தானிகர் ’ என்போர் தலைமையேற்று நடத்தினர். மாவட்ட ஆட்சியாளர்கள் ‘ அக்ரநாமி ’ என அழைக்கப்பட்டனர். கிராமம் தான் நிருவாகத்தில் ஒரு சிறு தொகுதியாக
|
இருந்தது. அதன் பொறுப்பை ஏற்ற அலுவலரைக் ‘ கிராமிகன் ’ எனவும் பத்து கிராமங்களுக்குப் பொறுப்புள்ள அலுவலர் ‘ கோபன் ' எனவும் அழைத்தனர். ஒற்றர் முறை மௌரிய அரசில் சிறந்த ஒற்றர் முறை இருந்தது. அரசு அலுவலர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதும் இரகசிய செய்திகளைத் துப்பறிந்து அரசுக்குத் தெரிவித்தும் வந்தனர். இவர்களைக் கௌடில்யர் ‘ குதபுருஷர்கள் ’ என்று அழைத்தார். நீதி திருவாகம் நீதி வழங்குவதற்கு அரசனே தலைவன் பாடலிபுத்திரத்தில் நாட்டின் உயர்ந்த நீதி வழங்கும் சபை இருந்தது. நாடு முழுவதும் நீதி மன்றங்கள் நிறுவப்பட்டு இருந்தன.
|
அவைகட்கு மகாமாத்திரர்கள் மற்றும் இராசுக்கர்கள் என்போர் தலைமையேற்றனர். ‘ தருமஸ்தேயம் , ’ ‘ கண்டக்க சோதனம் ' என்ற இருவகை நீதி மன்றங்கள் இருந்தன. சிறிய வழக்குகள் கிராமப் பஞ்சாயத்துகளால் தீர்க்கப்பட்டன. தண்டனைகள் கடுமையாக வழங்கப்பட்டன. 153 இராணுவ நிருவாகம் மௌரிய இராணுவம் காலாட் படை , குதிரைப்படை , யானைப்படை , தேர் படை மற்றும் கடற்படை போன்றவை அடங்கி இருந்தன. போர் வீரர்கட்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு மிகத் திறமையாகவும் நல்ல ஒழுக்கம் , கட்டுப்பாடுகளுடனும் செயல்பட்டு வந்தன. வருவாய்த் துறை நாட்டின்
|
முக்கிய வருவாய் நிலவரியாகும். விளைச்சலில் நான்கில் ஒரு பங்கு , வரியாக வசூலிக்கப்பட்டது. நில வரியை , ‘ அக்ரநாமி ’ என்பவர் வசூலித்தார். வணிகர் , கைவினைஞர் பல்வேறு தொழில் புரிபவர்களும் வரி செலுத்தி வந்தனர். மதுவின் மேலும் வரி வசூலிக்கப்பட்டது. நாணயமாகவும் பொருளாகவும் கிடைத்த வருவாயை அரசு மக்கள் நலனுக்குச் செலவிட்டது. நீர்ப்பாசனம் நீர்ப்பாசனப் பணிகளைக் கவனிக்க அதற்கென ஒரு துறை நிறுவப்பட்டு , நீர்த் தேக்கங்களைக் கட்டடக் கால்வாய்களை அமைத்து நீர் வேளாண்மைக்குக் கிடைக்க அனைத்துச் சிறந்த முறைகளையும் கையாண்டது மற்றும்
|
நாடு முழுதும் ஆங்காங்கே ஏரிகள் அமைத்து கால்வாய் மூலம் பாசன முறை செம்மைப் படுத்தப்பட்டது. பொதுப்பணிகள் சாலை அமைப்பு முறைகளைக் கவனிக்க ஒரு துறை செயல்பட்டது. இதன் மூலம் புதிய சாலைகள் அமைக்கும் பணியும் , பழைய சாலைகளை பழுது பார்க்கும் பணியும் மேற்கொண்டனர். சாலையோரங்களில் தங்கும் விடுதிகள் ( தருமசாலா ) அமைத்தனர். சாலைகளின் இரு மருங்கிலும் நிழல் தரும் மரங்கள் வளர்க்கப்பட்டன. நகராட்சி நிருவாகம் உஜ்ஜியினி , தட்சசீலம் , பாடலிபுத்திரம் ஆகிய நகரங்கள் நகராட்சி , நிர்வாகங்களால் நிர்வாகம் செய்யப்பட்டது. இவற்றை 154
|
நிர்வாகம் செய்தவர்கள் ‘ நகரகர் ’ என்று அழைக்கப்பட்டனர். நகர ஆணையாளர்கள் ‘ அஸ்திநாமாய் ' என்னும் அழைக்கப்பட்டனர். ‘ நகர நிர்வாகம் ’ செயல்படும் விதத்தைப் பற்றி ‘ அர்த்த சாஸ்திரம் ’ மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது. மருத்துவ வசதிகள் மௌரியர் காலத்தில் பொது மக்கட்கும் , விலங்குகட்கும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தனர். அறுவை சிகிச்சைக்கு அதற்குரிய கருவிகளை தயார் செய்தனர். மருந்து மூலிகைகள் உற்பத்தி செய்யப்பட்டது. தாதிகளும் , மருத்துவச்சிகளும் அக்காலத்தில் இருந்து வந்ததாக அறிகின்றோம். மேலும் பிறப்பு ,
|
இறப்பு மக்கட்தொகை கணக்கெடுப்பை முறைப்படுத்த ஒரு நிலையான துறை செயல்பட்டு வந்தது. 7.1.5. சமுதாய நிலை உயர்ந்த ஒழுக்கம் அன்றைய சமுதாயம் உயர்ந்த ஒழுக்கம் நிறைந்ததாய் அமைந்திருந்தது. மக்கள் எளிமையாகவும் சிக்கனமாகவும் வாழ்ந்து வந்தனர். அவர்களிடம் உண்மை , நேர்மை , நாணயம் , தைரியம் , அறிவாற்றல் ஆகிய அனைத்து நற்பண்புகளும் ஒருங்கே காணப்பட்டன. அசோகரின் அறக்கோட்பாடுகளால் மக்கள் பாவம் , புண்ணியம் , இம்மை , மறுமை ஆகிய நம்பிக்கைகளுடன் வாழ்ந்து வந்தனர். திருட்டு என்பது சிறிதும் காணமுடியாத நிலை இருந்தது. சாதிப்பிரிவுகளும்
|
கடமைகளும் மௌரியர்களின் சமுதாயத்தில் வேதகாலத்தில் காணப்பட்டது போன்று பிராமணர்கள் , க்ஷத்திரியர்கள் வைசியர்கள் , சூத்திரர்கள் என்று நான்கு வகை சாதி பிரிவுகள் காணப்பட்டன. 1. பிராமணர்கள் : - ஓதுதல் , ஓதுவித்தல் , வேட்டல் , வேட்பித்தல் , ஈதல் , பெறுதல் போன்று அறுவகைப்பட்ட தொழில்கள் செய்தனர். 155 2. க்ஷத்திரியர்கள் : - ஓதுதல் , வேட்டல் , ஈதல் , போர்புரிதல் , நாட்டைப் பாதுகாத்தல் போன்ற தொழில்களைச் செய்தனர். 3. வைசியர் : - ஓதுதல் , வேட்டல் , ஈதல் , விவசாயம் , வியாபாரம் , ஆடு மாடு வளர்த்தல் முதலியன செய்தனர். 4.
|
சூத்திரர் : - மேற்கூறிய மூன்று சாதியினருக்கும் பணி செய்தல் , ஆடு மாடு மேய்த்தல் , கைவினைத் தொழில் புரிதல் , ஆடலிலும் , பாடலிலும் ஈடுபடுதல் போன்ற செயல்களைச் செய்தனர். திருமண முறை ஒரே சாதியில் திருமணம் செய்துக் கொள்ளும் பழக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இருப்பினும் , கலப்பு சாதி திருமணமான அநுலோமாத் திருமணம் மற்றும் பிரதி லோமா திருமணம் ( உயர்குலப் பெண் - தாழ்ந்த குல ஆண் நடைமுறையில் காணப்பட்டது. நான்குவகை ஆசிரமங்கள் பிற்கால வேதகால பண்பாட்டில் காணப்பட்டது போன்று மௌரியர்களின் சமூக அமைப்பிலும் தனி மனிதரின் வாழ்க்கை
|
நெறியில் நான்குவகை ஆசரமங்களைக் கடைப்பிடிக்கப்பட்டது. அவை 1. பிரம்மச்சரியம் 2. கிரகஸ்தம் 3. வனபிரஸ்தம் 4. சந்நியாசம் மெய்ஞானிகள் மெய்ஞானிகள் எனப்படுபவர் , பிராமணர்கள் , பிராமணிகர்கள் , சிரமணர்கள் , பௌத்தர்கள் என நான்கு வகை பிரிவினர் இருந்தனர். பிராமணர்களில் உதிசா பிராமணர்கள் ( ஆசிரியர் புரோகிதர் ) சதகஹண பிராமணர் ( ஜோதிடம் தந்திரம் ) என இரு பிரிவினர் 156 வாழ்ந்தனர். பிராமணிகர்கள் என்போர் ' ஆன்மா மரணம் எய்தாது , மேனியே மரணம் எய்தும் ’ என்று நம்பினர். சிரமணர்கள் ( ஹைலோபியாய் ) என்போர் துறவிகளாவர். மது , மாமிசம்
|
, பெண் இன்பம் நீக்கி காடுகளில் வாழ்ந்தனர். பௌத்தர்கள் என்போர் தூய்மையான அறவாழ்க்கையைப் போற்றி வாழ்ந்தனர். சமுதாயப் பழக்க வழக்கங்கள் ‘ சதி ’ என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் நடைமுறையில் இருந்தது என்று ‘ அரிஸ்டோ கூலஸ் ' என்ற ஆசிரியர் குறிப்பிடுகிறார். மௌரியர் காலத்தில் மக்கள் வேள்விக்காலம் தவிரப் பிற்காலங்களில் மது அருந்தியதாகத் தெரியவில்லை. அரிசி அவர்களுடைய நிலையான உணவாக இருந்தது. சந்நியாசிகளும் பிராமணர்கள் மாமிசம் சாப்பிட வில்லை. பொன்னாலான தட்டுகளில் தனித்தனியே அமர்ந்து சாப்பிடும் பழக்கமே மௌரியர்களிடம்
|
காணப்பட்டதாக கிரேக்கர்கள் கூறுகின்றனர். ஆடை அணிகலன்கள் ஆடைகள் எளிமையாய் இருந்தன. சிலர் விலையுயர்ந்த ஆடைகளை அணிந்தனர். துறவிகள் மரவுரிகளையும் மான் தோல்களையும் அணிந்து திரிந்தனர். செல்வந்தர்கள் விலையுயர்ந்த மணிகள் , பூ வேலைப்பாடுகள் அடங்கிய மஸ்லின் ஆடைகளை அணிந்தனர். வேட்டி , துண்டு , தலைப்பாகை அணிந்தனர். தந்தத்தாலும் , தங்கத்தாலுமான அணிகலன்களைக் காது , மூக்கு , கழுத்து , இடுப்பு , கைகள் ஆகியவற்றில் பெண்கள் அணிந்துக்கொண்டனர். பெண்கள் நிலை சமுதாயத்தில் பெண்கள் நல்ல நிலையில் இருந்தனர் என்று கூற முடியாது. சிலர்
|
தத்துவக்கல்வி பயின்று தன்னடக்கம் நிறைந்தவர்களாக வாழ்ந்தனர். சிலர் அடிமைகளாகவும் இருந்தனர். அரண்மனைகளில் நாட்டியமாடியும் பாடல்கள் பாடியும் மகிழ்வித்தனர். பெண்கள் தங்கள் கணவருடன் சமயச் சடங்குகளில் ஈடுபட்டனர். கணவர் ஈட்டிய பொருளை மனைவியிடம் கொடுத்தார். திருமணமான பெண்டிர் புனித நூல்களால் அறிவைப் பெறுவதற்குத் தடைவிதிக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. கேளிக்கைகள் மக்கள் பல்வேறு விழாக்களைக் கொண்டாடி மகிழ்ச்சி அடைந்தனர். ‘ வசந்தகால விழா ’ ‘ தீபாவளி , ’ ‘ கிரிபூஜை ' முதலிய விழாக்களைக் கொண்டாடினர். பெண்கள் பந்து
|
விளையாடினர். வேட்டையாடுதல் , படகோட்டுதல் , நீந்துதல் முக்கியப் பொழுதுபோக்கு. வில்வித்தை கற்றல் , விலங்குகளுடன் போரிடல் , தேரோட்டப் பந்தயம் போன்றவையும் பிரசித்தமானவை. சதுரங்க விளையாட்டும் விளையாடினார்கள். ஆடல் , பாடல் , இசைக்கருவி மீட்டல் போன்றன பெண்களுக்கே உரிய தொழிலாகக் கருதப்பட்டன. 7.1.6. சமய வளர்ச்சி வேதகாலச் சமயத்துடன் சமண சமயமும் , பௌத்த சமயமும் மக்களிடையே பிரசித்தி பெற்றிருந்தன. சந்திர குப்த மௌரியர் சமண சமயத்தைப் பின்பற்றினார். தம் வாழ்நாள் இறுதியில் அரச பதவியைத் துறந்து ‘ பத்ரபாகு ' என்ற
|
சமயத்துறவியுடன் மைசூருக்கு அருகிலுள்ள ‘ சரவண பெலகொலா ' என்ற இடத்தில் வந்து பகுதியில் வாழ்ந்தார். இறந்த பிறகு நினைவாக ' சந்திரபாஸ்டி ' எனப்படும் கோயில் ஒன்று கட்டப்பட்டது. மௌரிய பேரரசராக விளங்கிய அசோகர் கலிங்கப் போருக்குப் பிறகு புத்த துறவியான ' திஸா ' எனப்படும் உபகுப்தருடன் பல இடங்களுக்குச் சென்று புத்த சமய கோட்பாடுகளை மக்களிடையே பரப்பி வந்தார். மெசபடோமியா , சிரியா , எகிப்து , திபெத் , சீனா , பர்மா போன்ற நாடுகளுக்கு புத்தத் துறவிகளை அனுப்பி வைத்தார். நாட்டில் மக்கள் தூய , ஒழுக்கமான வாழ்க்கையை வாழ வேண்டி ,
|
தர்ம மகாமாத்திரர்களையும் , தர்மயுக்தரர்களை அசோகர் நியமித்தார். அசோகர் தம் மகன் மகேந்திரனையும் மகள் சங்கமித்திரை யையும் இலங்கைக்கு அனுப்பி புத்தசமயக் கொள்கைகளைப் பரப்பினார். பௌத்தர்களுக்கிடையேயிருந்த வேற்றமைகளை அகற்றி ஒற்றுமை ஏற்படுத்த ஒரு மகாநாட்டைக் கூட்டி பௌத்த மதத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டினார். தர்மநெறிக் கருத்துகளை நாடு முழுவதிலும் பரப்பி எக்காலத்திலும் மக்கள் அதனை அறியும் பொருட்டு கற்களிலும் தூண்களிலும் , பாறைகளிலும் , குகைக் கோயில்களிலும் பொறித்தார். பௌத்த நெறிக் கொள்கைகள் கொண்ட தர்மக்கட்டளைகளை
|
நிறைவேற்ற பல தூதர்களை நியமிக்கப்பட்டதை கல்வெட்டில் கூறியுள்ளார். காஷ்மீர் , காந்தாரம் , மைசூர் , வனவாசி , அபராந்தகம் , மகாராஷ்டிரம் , இமயமலைப் பகுதிகள் , சுவர்ண நாடுகளுக்கு அனுப்பியுள்ளார். அசோகர் காலந்தவிர பிறகாலங்களில் வேதகால தெய்வங்களை வழிபட்டனர். விஷ்ணு , சிவன் , ஸ்கந்தன் போன்ற தெய்வங்களை மக்கள் போற்றி வணங்கினர். சைவ , வைணவ வடிவில் பக்திநெறி நாடு முழுதும் பரவின. அசோகர் காலத்தில் பௌத்த சமயம் அரசாங்கத்தின் சமயமாக விளங்கினாலும் மற்ற சமயத்தினர் துன்புறுத்தப்படவில்லை. வெளிநாடுகளிலும் இச்சமயம் பரவியது. 7.1.7.
|
கலை வளர்ச்சி கல்வி மௌரியப் பேரரசின் பெரும்பகுதியில் பள்ளிகளும் உயர்கல்வி நிறுவனங்களும் அரசாலும் , பொது அற நிலையங்களாலும் நடத்தப்பட்டன. பிராமணர்களும் புத்த துறவிகளும் பாடங்களைக் கற்பித்தனர். தட்சசீலம் , உஜ்ஜயினி , காசி போன்ற இடங்களில் பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட்டன. இலக்கியம் , சமயக்கல்வி கற்பிக்கப் 159 பட்டன. பாடத் திட்டத்தில் இலக்கணம் , பேச்சுக்கலை , கலை , அரசியல் , பொருளாதாரம் தருமசாத்திரம் , தத்துவம் சேர்க்கப்பட்டிருந்தன. பெண்களுக்குக் கல்வி பெண் மடாலயங்களால் கற்பிக்கப்பட்டு வந்தது. நுண்கலைகள் மௌரியர்கள்
|
காலத்தில் சிற்பக்கலை கட்டடக் கலை மிகவும் புகழ் பெற்ற விளங்கின. சாரநாத்தில் காணப்படும் கற்றூண் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. நமது நாட்டின் தேசிய சின்னத்திலும் நாணயங்களிலும் நான்கு முக சிங்கங்கள் இடம் பெற்றுள்ளன. தேசியக் கொடியில் ‘ தர்மச்சக்கரம் ’ இடம் பெற்றுள்ளது. அசோகர் எண்ணற்ற ஸ்தூபிகளை ( B400 ) தம்முடைய நாடு முழுதும் நிறுவினார். இவற்றில் சிறப்பு வாய்ந்தது. சாஞ்சியிலும் , வைசாலி , பருகட் என்ற இடத்திலும் நிறுவப்பட்டவையாகும். சாஞ்சி ஸ்தூபி 7711 அடி உயரமும் 121 அடி குறுக்களவும் உள்ளது. இதன் நான்கு
|
பக்கங்களிலும் உயரமான நுழைவாயில்கள் அமைந்துள்ளன. இத்தூண்கள் யாவும் சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். கட்டடங்கள் பெரும்பாலும் மரத்தாலும் , கற்களாலும் கட்டப் பட்டிருந்தன. மௌரியர்கள் கட்டிய அரண்மனைகள் உலகத்திலேயே மிக அழகு வாய்ந்தவை. பாகியான் இதனை , “ இக்கட்டடங்கள் கடவுளின் படைப்புகள் போன்று காட்சியளிக்கின்றன ” என்பார். அசோகர் காலத்தில் செதுக்கப்பட்ட குகைகள் மிகவும் சிறப்புடையன. புத்தகயாவிற்கு வடக்கில் “ பராபர் குன்றுகளில் காணப்படும் குகைகளும் , நாகர்ஜுனக் குன்றுகளில் காணப்படும் குகைகளும்
|
முக்கியமானவை. இராஜ கிருகத்திற்கு அருகில் ‘ சீதா மாருதி ’ அருகேயும் குன்று காணப்படுகிறது. ' லோமாரிஷி ’ குகை மிகவும் சிறப்புடையது. உட்புறம் கண்ணாடி போல் பளபளப்பாகவும் , இருபுறத்திலும் இருதூண்கள் நிற்க வைத்து வீடு கட்டியது போல குகை அமைந்துள்ளது. நுழைவாயில் முக்கோண வடிவமான கூரையுடையது. 160 கல்லாலான ஸ்தூபிகளுக்கும் , குகைக் கோயில்களுக்கும் கட்டடங்களுக்கும் மெருகு ஏற்றி பளபளப்பாக இன்றும் கண்ணாடி போல் மின்னும் வகையில் செய்துள்ளனர். அசோகர் தம்முடைய 7 வது தூண் கல்வெட்டில் “ தர்மமானது நீண்டநாள் வாழும் பொருட்டு
|
எங்கெல்லாம் கற்றூண்களும் , கற்பலகைகளும் காணப்படுகின்றனவோ ( பாறைகள் ) அங்கெல்லாம் ( தர்மம் ஆணைகள் ) பொறிக்கப் படுவதாக ” என்று கூறியுள்ளார். ஆகவே , பல இடங்களில் காணப்படும் தூண்களின் அமைப்பையும் , இடத்தையும் கருதி , அங்கெல்லாம் கல்வெட்டுக்களைப் பொறிக்கச் செய்தார். மௌரியர் காலக் கலையின் சிறப்புகளைக் கொண்டு அவற்றைக் கீழ்கண்டவாறு பிரிக்கலாம். 1. அசோகரின் ஒற்றைக்கல் தூண்கள் 2. அசோகராலும் பிறராலும் குடையப்பட்ட குகைகள் 3. பாடலிபுத்திர அரண்மனை 4. சாஞ்சி , சாரநாத் கோயில்கள் 5. துமுளிகள் ( ஸ்தூபம் ) 6. இந்துக்கோயில்கள்
|
7. இதர கட்டடங்களும் சிற்பங்களும் இலக்கியம் மௌரியரின் ஆட்சி காலத்தில் சமஸ்கிருதம் பாலி , பிராகிருதம் போன்ற மொழிகள் வட இந்தியா முழுதும் சிறப்புப் பெற்றிருந்தன. மற்றும் கன்னடம் , தமிழ் போன்ற மொழிகள் தென்னிந்திய திராவிட இனத்தவரின் மொழிகளாக சிறப்புற்று விளங்கின. இந்திய கிழக்குப் பகுதியில் பிராகிருத மொழியே அரசாங்க மொழியாக இருந்தது. இலக்கியத்திற்கு சமஸ்கிருதமும் பேச்சிற்கு பாலியும் மக்களிடத்தில் எளிமையாகக் கையாளப்பட்டன. 161 1. கௌடில்யரின் - ' அர்த்த சாஸ்திரம் ’ 2. பத்ரபாகுவின் - ‘ கல்பசூத்திரம் ’ 3. வ்யாதியின் - '
|
வியாக்கரணம் ’ ( இலக்கணம் ) 4. பாணினீயின் – ‘ அஸ்டத்யாயி ' 5. வாத்ஸ்யாயனரின் - ‘ காமசூத்திரம் ’ 6. ‘ சுபந்து ’ வின் - ‘ வாசவதத்தா நாட்டிய தாரா ( நாட்டிய கலை ) ’ 7. வருருசி என்பவர் - ‘ வருருச காவியம் ’ 8. பௌத்த சமயநூல் - ‘ திரிபீடகங்கள் ’ 9. காப்பியங்கள் - ' இராமயணம் , மகாபாரதம் ’ 10. வேதாந்த நூல்கள் - ‘ கிருஹ்ய சூத்திரம் ’ 11. பிங்கலர் என்பவர் - ‘ சந்த சூத்திரங்கள் ’ 12. சிலாலின் கிருசாஸ்வர் - ' நாடக சூத்திரங்கள் ’ வாமனர் என்ற கவிஞர் - ' காயியலங்கார சூத்தி விருத்தி ’ 13. போன்ற இலக்கிய படைப்புகள் மௌரியர்
|
காலத்தில் எழுதப்பட்டனவாகும். 7.1.8. இந்திய பண்பாட்டிற்கு மௌரியர்களின் கொடை 1. மௌரியர்களின் ஆட்சி முறையில் மைய அரசு , தலைமைச் செயலகம் , மாநில அரசுகள் நிதி , நீதி நிருவாகம் , பொதுப் பணித்துறை நகராட்சி முறை போன்றன நமக்கு அளிக்கப்பட்டுள்ள கொடைகளாகும். 2. தட்சசீலம் , உஜ்ஜையினி , காசி போன்ற மௌரியர்கால பல்கலைக் கழகங்கள் இன்றும் நமது இந்தியப் பண்பாட்டு மையங்களாகச் சிறந்து விளங்குகின்றன. 3. மௌரியர் கால கலை - கட்டடக் கலை , சிற்பக் கலை , கோயில்கள் மற்றும் மடங்கள் போன்றவை இந்தியப் பண்பாட்டின் பிரதிபலிப்பைப் பறை
|
சாற்றுகின்றன. 162 4. இந்து தர்மக் கோட்பாடுகளையும் அன்பு , அஹிம்சை போன்ற பௌத்த சமய நெறிகளையும் வெளிநாடுகளில் பரப்பி இந்திய பண்பாட்டிற்குப் பெருமை சேர்த்தவர்கள் மௌரிய பேரரசர்கள். 5. மௌரியர்கள் கல்வி , கலை , இலக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்தியது போன்று , பிராகிருதம் ( ஆட்சிமொழி ) சமஸ்கிருதம் ( இலக்கியமொழி ) பாலி ( எளிய மக்கள் பேசும் மொழி ) போன்ற மொழிகளின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். 6. கௌடில்லியரின் ‘ அர்த்த சாஸ்திரம் ’ பௌத்த சமய நூலான ‘ திரிபீடகம் , ’ இலக்கண நூலான ‘ வியாக்கரணம் ’ போன்ற நூல்கள்
|
இந்தியப் பண்பாட்டிற்கு மௌரியர் காலத்தில் வழங்கப்பட்ட கொடைகளாகும். 7. பொதுப் பணித்துறைகளில் சாலைப்போக்குவரத்து , நீர்ப்பாசன வசதிகள் மற்றும் சாலையோரங்களில் தரும சாலைகள் , மக்களுக்கும் விலங்குகளுக்கும் மருத்துவமனைகள் போன்றவை மௌரியர்களின் இந்தியப் பண்பாட்டின் கூறுகளாக விளங்குகின்றன. 8. அசோகரின் தர்மக் கோட்பாடுகளான 1. அஹிம்சை 2. சத்தியம் 3. தயை ( இரக்கம் ) 4. தானம் 5. சௌசம் ( புறத்தூய்மை ) மார்த்தவம் ( அருளுடைமை ) 7. சர்துதா ( அமைதி ) 8. அப்பந்ததா ( சிக்கனம் ) 9. சாம்யமா ( புலனடக்கம் ) 10. பாவ சுத்தி ( அகத்தூய்மை
|
) 11. கித தக்ஞதா ( நன்றியுடைமை ) 12. தருத பக்திதா ( அன்புடைமை ) 13. சுஷ்ருசா ( பெற்றோருக்குப் பணிவிடை ) 14. அபிச்சித்தி ஆளரியர் ( பெற்றோருக்கு மரியாதை ) 15. தர்ம மகாமாதா ( அறம் செய்தல் ) 16. பயம் 17. பரிக்ஷா ( தன்னம்பிக்கை ) 18. உத்சாஹா ( மகிழ்ச்சி ) போன்றவை இந்திய பண்பாட்டிற்கு வழங்கப்பட்ட கொடையாகும். 163 7.1 , பயிற்சி வினாக்கள் அ. ஓரிரு வரிகளில் விடையளி 1. மௌரியர்களின் ஆட்சிக்காலம் யாது ? 2. ' சாணக்கியர் ’ ( கௌடில்யர் ) எழுதிய நூல் யாது ? 3. மௌரிய மன்னர்களில் சிறந்தவர்கள் யாவர் ? 4. ' மந்திரி பரிஷத் ’ சிறு
|
குறிப்பு வரைக ? 5. ' தரும மகா மாத்திரர்கள் ' என்போர் யாவர் ? 6. ' கிராமிகர் ’ குறிப்பு வரைக 7. ' குதபுருஷர்கள் ' என்போர் யாவர் ? 8. ‘ நகரகர் ’ சிறு குறிப்பு தருக 9. ‘ அக்கிரநாமி ’ என்பவர் யார் ? 10. நகராட்சி நிருவாகம் இருந்த இடங்கள் யாவை ? 11. நான்கு வகை ஆசரமங்கள் யாவை ? 12. ' மெய்ஞ்ஞானிகள் ' என்பவர் யாவர் ? 13. ‘ சரவண பெலகொலா ’ குறிப்பு வரைக. 14. ' சிரமணர்கள் ' என்போர் யாவர் ? 15. ஆரிய மொழிகள் என்பவை யாவை ? ஆ. பத்து வரிகளுக்கு மிகாமல் விடையளி 1. மௌரியர்களைப் பற்றி அறிய உதவும் சான்றுகள் யாவை ? 2. மௌரியர் கால
|
பெண்களின் நிலையாது ? 3. ' அநுலோமா ' ' பிரதிலோமா ’ திருமண முறை யாது ? 4. மௌரியர் கால மக்களின் பொழுது போக்குகள் யாவை ? 5. மௌரியர்கால ஆடை அணிகலன்களை விளக்குக 6. மௌரியர்கால நான்கு வகை சாதிகளும் கடமைகளும் யாவை ? 7. மௌரியர்கால மைய அரசின் செயல்பாடுகள் யாவை ? 8. மௌரியர்கால கலையின் சிறப்புகளைக் கொண்டு எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம் ? 9. மௌரியர் காலக் கல்வி நிலை யாது ? 10. அசோகரின் ஏழாவது கல்வெட்டின் செய்தி யாது , இ. ஒரு பக்க அளவில் விடையளி 1. மௌரியர்கால அரசியல் நிலையை விளக்குக. மௌரியர்கால சமூகநிலையை விளக்குக.
|
மௌரியர்கால சமய நிலையை விளக்குக. 4. மௌரியர்கால இலக்கிய வளர்ச்சியை விவரி. 5. மௌரியர்கால கலை வளர்ச்சியை விவரி. 6. மௌரியர் கால சமுதாயப் பாகுபாடு மற்றும் அவர்களுடைய பழக்க வழக்கங்களை விவரி. 2. 3. ஈ. நான்கு பக்க அளவில் விடையளி 1. மௌரியர்காலப் பண்பாடு பற்றி ஒரு கட்டுரை வரைக. 2. இந்தியப் பண்பாட்டிற்கு மௌரியர்களின் கொடை மற்றும் கலை அம்சங்களைத் தொகுத்து ஒரு கட்டுரை வரைக. 7.2. குப்தர் காலப் பண்பாடு குப்தப் பேரரசு இந்தியப் பண்பாட்டிற்கு வழங்கியுள்ள கொடை அளவிட்டுக் கூற இயலாது. இவர்கள் அரசியல் , சமுதாயம் , பொருளாதாரம் ,
|
கல்வி , கலை , இலக்கியம் , சமயம் , இசை , நடனம் ஆகிய அனைத்து துறைகளிலும் மிகச் சிறந்த நிலையில் காணப்பட்டார்கள். அகவே தான் வரலாற்றில் குப்தர்காலம் பொற்காலம் ’ என்று கூறப்படுகிறது. 7.2.1. காலம் 7.2.3. முக்கிய அரசர்கள் கி.பி. நான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஸ்ரீ குப்தர் என்பவர் பாடலிபுத்திரத்தில் சிறிய அரசு ஒன்றை அமைத்து குப்த மரபை தோற்றுவித்தார் என்று கூறப்படுகிறது. இவர்கள் காலம் கி.பி. 300 முதல் கி.பி. 500 க்கும் இடைப்பட்ட காலமாக வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். 7.2.2. சான்றுகள் குப்தர்களின் வரலாற்றை அறிய
|
இலக்கியங்களும் , புராணங்களும் , வெளிநாட்டவரின் குறிப்புகளும் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் குறிப்புகளும் சான்றுகளாக கிடைத்துள்ளன. 1. விசாகதத்தர் எழுதிய ‘ முத்ரா இராட்சசம் ’ , 2. காளிதாசரின் இலக்கியங்கள் 3. பாணரின் ' ஹர்ஷ சரிதம் ’ 4. பதினெட்டு புராணங்கள் 5. சீனப்பயணி ‘ பாகியானின் ’ குறிப்புகள் 6. சமுத்திர குப்தரின் அலகாபாத் கற்றூண் 7. நாணயங்கள் 8. முத்திரைகளும் வரலாற்றுச் சின்னங்களும் ஆகியன நமக்குச் சான்றுகளாக கிடைக்கப்பெற்றுள்ளன. 166 1. முதலாம் சந்திர குப்தர் ( கி.பி. 320 - கி.பி. 3300 2. சமுத்திர
|
குப்தர் ( கி.பி. 330 - கி.பி. 3800 3. இரண்டாம் சந்திர குப்தர் ( கி.பி 380 - கி.பி. 415 ) 4. ஸ்கந்த குப்தர் - ( கி.பி. 456 - கி.பி 468 ) 7.2.4. அரசியல் நிலை குப்தர்களின் காலத்தில் திறமைமிக்க மிகச் சிறந்த நிருவாக அமைப்பு நிறுவப் பெற்றிருந்தது. அவர்கள் தங்கள் நாட்டை பிரிவுகளாக பிரித்து சிறப்பாக ஆட்சி செய்தனர். 1. மத்திய நிருவாகம் 2. மாநில நிருவாகம் 3. மாவட்ட நிருவாகம் 4. கிராம நிருவாகம் 5. நகர நிருவாகம் 1. மத்திய நிருவாகம் மத்திய நிர்வாகத்திற்குத் தலைவன் அரசன் ஆவாள். மன்னருக்கு சட்டமியற்றவும் , நீதி வழங்கவும்
|
நிர்வாகம் செய்யவும் அனைத்துப் பிரச்சினைகட்கும் தீர்வுகாணும் பொறுப்பினைப் பெற்றிருந்தான். நீதித் துறைக்கும் அரசனே தலைவனாக விளங்கினாள். நாடு முழுவதும் உயர் அதிகாரிகளை நியமிக்கும் பொறுப்பு அரசனையே சார்ந்தது. படையெடுப்புகளைத் தாமே நடத்திச் சென்று மன்னர்கள் பல வெற்றிகளை நிலை நாட்டினர். அரசன் அனைத்து அதிகாரங்களும் பெற்றிருந்த போதிலும் அவன் தன்னிச்சையாகச் செயல்படவில்லை. அரசனுக்கு ஆலோசனை கூறுவதற்கு ‘ மந்திரி பரிஷத் ’ ( மந்திரி மண்டலம் ) என்ற அமைச்சர் குழு இருந்தது. அமைச்சரவையில் இருந்த மூத்த மந்திரிக்கு முக்கிய
|
மந்திரி என்று பெயர். பொதுவாக அமைச்சரவை பரம்பரைப் பதவியாக இருந்தது. மத்திய நிருவாகத் துறைகள் 1. மகா சேனாதிபதி ( இராணுவ நிர்வாகம் ) 2. மகா தண்ட நாயகன் ( நீதித்துறை நிர்வாகம் ) 3. இராணா - படகாரிகள் ( போர்க்கருவிகள் மற்றும் உணவு சேகரித்தல் ) 4. மகாபாலாதிகாரன் ( இராணுவம் தங்குமிடம் , போர்த் தந்திர முறைகள் போன்ற பணிகள் ) 5. தண்டாபிஷேகன் ( காவல் துறை ) 6. மகாசந்துவி கிரிகன் ( நாட்டைக் கண்காணிப்பது போர் ( அ ) அமைதி நிலைநாட்டுவது ) 7. பண்டாரகாதிகாரன் ( கருவூல அலுவலர் ) 8. வினியோசித ஸ்தாபிகன் ( சமயத்துறைத் தலைவன் ) 9.
|
மகாபக்ச பாலிதன் ( அரசு அலுவலக கோப்பு மற்றும் செலவினங்கள் கவனித்தல் ) 10. சர்வதியாக்சன் ( மத்திய நிர்வாகத் தலைமைச் செயலர் ) 2. மாநில நிருவாகம் குப்த பேரரசு பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு மாநிலத்தை புக்தி அல்லது தேசம் , ராஷ்டிரம் , மண்டலம் என அழைத்தனர். மாநிலங்களில் மன்னரின் பிரதிநிதியாக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். பெரும்பாலும் இளவரசர்களே இப்பொறுப்பில் நியமிக்கப்பட்டனர். ஆளுநருக்கு உதவியாகப் பல்வேறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். 1. மகா தண்டநாயகர் ( நீதித்துறையை கவனித்தல் 2. தண்ட பாசாதி கரணிகர் ( காவல்
|
துறைத்தலைவர் ) 168 3. பாலாதி கரணிகர் ( இராணுவத் தளபதி ) 4. மகா பிரதிகாரர் ( ஆளுநரின் தலைமை அதிகாரி பாட்டியுபரிகர் ( தலைமைக் கணக்காயர் ) கர்த்தா கிருத்திகர் ( தலைமைச் செயவர் ) ஔதரங்கிதர் ( வரிவசூல் புரியும் உயர் அதிகாரி 0 5. 6. 7. 8. அக்கிரகாரிகள் ( அக்கிரகாரத்தை மேற்பார்வையிடுதல் 9. ததாயுக்தர் ( கருவூலத் தலைமை அதிகாரி ) 10. ஆவசதிகர் ( அற நிலையத் தலைமை அதிகாரி ) 11. ஹிரண்யசமுதாயகர் ( அக்கால சாலை உயர் அதிகாரி இவர்கள் உள்நாட்டுக் குழப்பங்களினின்றும் அந்நியரின் படையெடுப்பினின்றும் மாநிலங்களை பாதுகாத்தனர்.
|
மாநிலத் தலைவன் ( ஆளுநர் ) சட்டம் , ஒழுங்கு , அமைதி போன்ற பணிகளை நிலைநாட்ட வேண்டும். பொதுப்பணித் துறையையும் கவனிக்க வேண்டும். 3. மாவட்ட நிருவாகம் மாநிலங்கள் ஒவ்வொன்றும் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. அவைகள் ‘ புக்தி ’ என்ற பெயருடன் அழைக்கப் பட்டன. ‘ புக்தியின் ’ தலைவர் ' உபரிகர் ' என்று அழைக்கப்பட்டார். மேலும் ‘ புக்திகள் ’ ( மாவட்டங்கள் ) சிறுசிறு விஷயங்களாகப் ( வட்டங்களாக ) பிரிக்கப்பட்டன. விஷயத்தின் தலைவர் ‘ விஷயாதிபதி ’ ஆவார். மாவட்டத் தலைநகருக்கு ‘ அதிட்டாணம் ’ என்றும் மாவட்ட ஆட்சித்தலைவரின் அலுவலகம்
|
' அதிகரணம் ' என்று அழைக்கப்பட்டன. மாவட்ட அதிகாரியின் கீழ் 1. சௌல்கிகர் ( சுங்க அதிகாரி ) 2. துருவாதி கரணிகள் ( நிலவரி அதிகாரி ) 3. மகாட்ச படலிகர் ( ஆவணக் காப்பாளர் ) 4. பண்டாகாராதி கிரிதர் ( காசாளர் ) போன்று பலர் இருந்தனர். 4. கிராம நிருவாகம் விஷயம் ( வட்டம் ) பல கிராமங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கிராமம் ‘ பட்ட ’ என்றும் ‘ அக்கிரஹாரம் ’ என்றும் பிரிக்கப் பட்டிருந்தது. கிராமத்தின் தலைவர் ‘ கிராமேயகர் ' எனப்பட்டார். கிராமத் தலைவருக்குத் துணையாக கணக்கர் , எழுத்தர் ( கரணிகர் ) , நிலவரி அதிகாரி , வருவாய்த்துறை
|
அதிகாரி , நிலத்தகராறு தீர்க்கும் நியாயத்தர் என்ற பல அதிகாரிகள் செயல்பட்டனர். 5. நகர நிருவாகம் குப்தர் ஆட்சி காலத்தில் நகர நிருவாகம் இருந்து வந்தது. நகரத்தைப் ‘ புரம் ’ என்றும் அதன் ஆட்சித்தலைவனை ‘ புரபாலர் ’ ( அல்லது ) ‘ நகர ரட்சகன் ' என்றும் அழைத்தனர். இவர் மாநில ஆளுநரால் நியமிக்கப்பட்டார். நகரத்தைச் சுற்றி கோட்டையும் அகழியும் அமைக்கப்பட்டிருந்தன. இராணுவம் குப்த அரசர்கள் வலிமை , வீரம் , தந்திரம் , ஆற்றல் மிக்கவர்களாக விளங்கினர். காலாட் படை , குதிரைப்படை , யானைப்படை , தேர்ப்படை என்ற நான்கு படைகள் இருந்தன.
|
சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுப்பதில் சமுத்திரகுப்தரே முன்னின்றார் என்பதால் , படைகளின் வளர்ச்சிக்கு மன்னர் அளித்த ஊக்கம் மகத்தானதாகும். நீதித்துறை குப்தர் காலத்து நீதிமுறைகளைப் பற்றி பிரகஸ்பதி , நாரதர் , காத்தியாயனர்போன்றோர் குறிப்பிட்டுள்ளனர். வழக்குகளை 1 சிவில் வழக்குகள் 2. குற்ற இயல் வழக்குகள் ( கிரிமினல் ) என்று இருவகைப்படுத்தினர். நாரதர் 18 வகைப்பட்ட சட்டங்களை 170 விளக்கியுள்ளார். உயர்நீதி மன்றம் தலைநகரிலும் ( மத்திய ) மற்ற நீதிமன்றங்கள் மாநிலங்களில் முக்கிய நகரங்களிலும் இருந்தன. தீர்ப்புகளை சான்றோர்கள்
|
கொண்ட ஒரு தனிக் குழு விசாரணை நடத்தும் திருப்தியடையாதவர் உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் அரவர் நீதியின் காவலராக இருந்து தலைநகரில் வழக்குகளை விசாரித்தார். தற்காலிக நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டிருந்தன. கிராமங்களில் கிராம பஞ்சாயத்து முறையும் இருந்தது. 7.2.5. சமுதாய நிலை 1. குப்தர்கள் சமுதாய நிலை சிறந்து விளங்கியது , குடும்பம் , கூட்டுக் குடும்பமாக இருந்தது 2. இந்திய பாணியில் மக்கள் ஆடைகளை அணிந்தனர். அரசர்கள் ஆடம்பரமான ஆடைகளைப் பயன்படுத்தினர். 3. ஆண் , பெண் இருபாலரும் பலவகை அணிகலன்களை அணிந்து வந்தனர்.
|
4. உணவு வகையில் சைவ , அசைவ உணவுப் பொருள்களை உண்டனர். பெரும்பான்மையான மக்கள் சைவ உணவையே பயன்படுத்தினர். 5. பெண்கள் உயர்ந்த நிலையில் வைத்து மதிக்கப்பட்டனர். மகளிர் கல்வியறிவு பெற்றனர் ; நிர்வாகத்தில் பங்கு பெற்றனர் ; சமூகத்தால் போற்றப்பட்டனர். கணவனின் நன்னடத்தைக்கு வழிகாட்டியாக மனைவி விளங்கினாள். கலப்புச் சாதியைச் சமுதாயம் ஏற்காவிட்டாலும் , அது தவிர்க்க முடியாததாக்கியது. கணவன் இறந்த பிறகு உடன்கட்டை ஏறும்முறை வழக்கத்தில் இருந்தது. 6. பிரகத்சம்ஹிதையின் நான்கு சாதிமுறை இருந்ததாக குறிப்பிடப் பட்டுள்ளது.
|
பிராமணர்கள் உயர்ந்தவர்களாக கருதப்பட்டனர். சண்டாளர்கள் ( கலப்பு சாதியினர் ) கீழ்சாதிக் காரர்களாகக் கருதப்பட்டனர். அவர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதி , ஊருக்குப் புறத்தே வசித்து வந்தனர். 7. வேட்டையாடுதல் முக்கிய பொழுது போக்கு ஆகும். ஆடு , எருமை , யானை , மான் இவைகளுடன் சண்டை போடுவதும் விழாக்காலங்களில் ஆடிப்பாடி மகிழ்வதும் முக்கியப் பொழுதுபோக்கு. 8. போர்க்கைதிகள் , கடனாளிகள் , சூதாட்டத்தில் தோற்றவர்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். 7.2.6. சமய வளர்ச்சி குப்தர் காலத்தில் சமயநிலை மேலோங்கிய நிலையில் காணப்பட்டது. வேத சமயம்
|
( இந்து சமயம் ) புத்துயிர் பெற்றது. திருமாலும் சிவனும் உயர்ந்த கடவுளர்களாகக் கருதப்பட்டனர். சமய வேள்விகளும் சடங்குகளும் நடத்தப்பட்டன. சமுத்திர குப்தர் அசுவ மேதயாகங்கள் நடத்தினார். வாயு புராணம் , மச்ச புராணம் போன்ற புராணங்கள் இயற்றிச் சிவபெருமானின் பெருமையைப் போற்றினர். மேலும் , சிவன் , திருமால் ஆகிய கடவுளர்களுக்குக் கோயில்கள் எழுப்பிச் சமயத்தை வளர்த்தனர். திருமாலின் அவதாரங்கள் உருப்பெற்று விழாக்கள் டத்தப்பட்டன. சூரிய வழிபாடு , நாக வழிபாடு , சக்தி வழிபாடு , விநாயகர் வழிபாடு போற்றப்பட்டன. விஷ்ணுவின் பத்து
|
அவதாரக் கோட்பாட்டினை நம்பினர். புனித இடங்களுக்கு யாத்திரை செல்லும் பழக்கம் மக்களிடம் இருந்தது. இந்து சமயத்திற்கு ஆதரவு தந்த மன்னர்கள் புத்த , சமண சமயங்களை வெறுக்கவில்லை. சில குப்த மன்னர்கள் புத்த சமயத்தைப் பின்பற்றினர். மதுரா , உதயகிரி போன்ற இடங்கள் சமண மதத்தின் இருப்பிடங்களாக இருந்தன. 7.2.7. கலை வளர்ச்சி கல்வி வேதங்களும் புத்தசமயக் கருத்துகளும் கல்வி நிலையங்களில் போதிக்கப்பட்டன. குருகுல கல்வி முறையும் தொடர்ந்து நீடித்தது. ஆசிரியர்களுடன் மாணவர்கள் 14 வயது வரை தங்கிப் படித்தனர். 172 பாடத்திட்டத்தில் , நான்கு
|
வேதங்கள் , வேதாந்தங்கள் , புராணங்கள் நியாய மீமாம்சங்கள் , தனுர் வேதம் , கந்தர்வ வேதம் , அர்த்த சாஸ்திரம் போன்றவை சேர்க்கப்பட்டு கற்பிக்கப்பட்டு வந்தன. மேலும் வானவியல் , கணிதம் , சோதிடம் ஆகியவை குறிப்பிட்ட பாடங்களாகக் கற்பிக்கப்பட்டன. அளவை இயல் , தத்துவம் , நியாயம் , இலக்கணம் போன்ற பாடங்களும் கற்பிக்கப்பட்டன. இலக்கியம் குப்தர் காலத்தில் பல இலக்கிய அறிஞர்கள் பல்வேறு வகை இலக்கியங்களை எழுதி வடமொழியில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர். 1. காளிதாசர் - சாகுந்தலம் , விக்கரமோர்வசியம் மாளவிகாக் னிமித்திரம் ( நாடகம் )
|
இரகுவம்சம் , குமாரசம்பவம் , ( காப்பியங்கள் ) மேகதூதம் , ரிது சம்ஹாரம் ( பாடல்கள் ). 2. விசாகதத்தர் - முத்ரா ராக்ஷஸம் , தேவிசந்திரகுப்தம் போன்ற நாடகங்கள் 3. வாத்ஸ்யாயனர் - காமசூத்திரம் 4. வராகமிஹிரர் - பிருகத் சம்கிதை ( கவிதை ) கணிதம் , சோதிடம் 5. சந்திரர் - சந்திராச்சாரிய வியாக்கரணம் ( இலக்கணம் ) 6. ஜயினேந்திரர் - ஜயினேந்திர வியாக்கரணம் 7. அமரர் - அமரகோசம் 8. பாமகர் - காவியலங்காரம் ( கவிதை ) 9. வாக்பட்டர் அஷ்டாங்க சங்கிரக , அஷ்டாங்க கிருதய சம்ஹிதை ( மருத்துவம் ) 10. ஆரியபட்டர் - கணித நூல்கள் , வானவியல் 11.
|
வராகமிகிரர் - பஞ்ச சித்தாந்தகம் ( வானவியல் 12. சாமண்டகன் - நீதிசாஸ்திரம் 13. வீரசேனர் வியாகரணம் கட்டடக்கலை குப்தர்கள் கலை வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள தொண்டு மிகவும் போற்றத்தக்கதாகும். குப்தர் கால கலைவளர்ச்சியை கட்டடக்கலை , சிற்பக்கலை , ஓவியக்கலை , உலோகக்கலை , இசை , நடனம் , நாடகக்கலை என வகைப்படுத்தலாம். குப்தர் காலத்தில் அழியாப் பொருளான கருங்கல் பயன்படுத்தி கட்டடங்கள் கட்டினார்கள். இவர்கள் காலத்துக் கட்டடக்கலையை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். 1. குகைக் கோயில்கள் 2. விமானமற்ற கோயில்கள் 3. மேடை மீது கட்டப்பட்டக்
|
கோயில்கள் 4. செங்கற் கோயில்கள் குகைக் கோயில்கள் அஜந்தாவில் உள்ளன. ஔரங்காபாத்துக்கு அருகில் கல்லில் குடைந்த பன்னிரண்டு குகைகளும் இதற்குச் சான்றாகும். பௌத்த , சமண , இந்து சார்புடைய குகைக் கோயில்கள் எல்லோரா என்னுமிடத்திலும் காணப்படுகின்றன. மேலும் சாஞ்சிக் கோயில் , தியோகாவிலுள்ள கங்காளிக் கோயில் மற்றும் உதயப்பூர் கோயில் யாவும் இவ்வகையைச் சார்ந்ததாகும். நாச்சனக்குதாரா விலுள்ள பார்வதி கோயில் , பூமாரா விலுள்ள சிவன் கோயில் போன்றன. விமானமற்ற ( கூரை மட்டும் உண்டு கோயில்களாகும். தோகரில் ’ காணப்படும் விஷ்ணுகோயில்
|
நாச்சனக்குதாரா விலுள்ள உள்ள மகாதேவர் ஆலயம் மேடை மீது கட்டப்பட்ட கோயில்கள் ஆகும். பிதார்கான் கோயில் ( கான்பூர் மாவட்டம் ) , தியோகார கோயில் ( ஜான்சி மாவட்டம் ) சாரநாத்தில் உள்ள பெரிய கோயில் , திகாவா வில் உள்ள சிவன் கோயில் ( ஜபல்பூர் மாவட்டம் ) பூமாராவில் உள்ள சிவன் கோயில் ( மத்திய பிரதேசம் ) போன்ற கோயில்களை கருங்கல் மற்றும் செங்கற்கள் துணை கொண்டு கட்டினார்கள். 174 சிற்பக்கலை குப்தர்கால சிற்பங்கள் மிகவும் அழகு வாய்ந்த , இந்தியக்கலைப் பாணியைத் தழுவியே காணப்பட்டன. இந்துக்கடவுளின் உருவங்களில் நரசிம்ம மூர்த்தி ,
|
வராக மூர்த்தி ( உதயகிரி ) சிவன் , பார்வதி போன்றவை குறிப்பிடத்தக்கவை. புத்தரது எண்ணற்ற சிலைகள் சாரநாத் திலும் மதுராவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தியோகர் மற்றும் மதுராவில் உள்ள விஷ்ணு சிலை , காசியிலுள்ள கார்த்திகேயன் சிலை , கௌசாம்பியுள்ள சூரிய சிலைகள் மேலும் சிவலிங்கங்கள் , சமண சிலைகள் போன்றன யாவும் குப்தர் காலச் சிற்பக்கலையின் சிறப்பைப் பறைசாற்றுகின்றன. ஓவியக்கலை அஜந்தா , எல்லோரா , பாக் ( Bagh ) போன்ற இடங்களிலுள்ள ஓவியங்கள் மிக அற்புதமான ஓவியங்களாகும். பெண்கள் மெலிந்த இடையுடனும் அழகிய அணிகலன்களுடனும்
|
காட்டப்பட்டுள்ளனர். அஜந்தாவில் காணப்படும் குகைகளின் ஓவியங்களில் தாயும் சேயும் , புத்தரின் துறவு , மரணப்படுக்கையில் இருக்கும் அரசி , நடன மகளிர் , குரங்குகள் , புத்தர் , திருஉருவங்கள் அவரது போதனைகள் , வாழ்க்கை நிகழ்ச்சிகள் போன்றன சித்திரிக்கப்பட்டுள்ளன. இசையும் நடனமும் குப்தர் காலத்தில் இசையும் நடனமும் செழித்தோங்கிய காலமாகும். இசையும் நடனமும் ஒன்றாகவே இருந்தன. மத்தளம் , உடுக்கை , யாழ் , பறை , சங்கு போன்ற இசைக்கருவிகளைக் கொண்டு நிற்கும் கலைஞர்களும் நடனமாதர் அபிநயம் பிடித்து ஆடும் காட்சிகளைக் கோயிலின்
|
சிற்பங்களிலும் ஓவியங்களிலும் நாணயங்களிலும் காணப்படுகின்றன. காலக் கண்ணாடியாக அஜந்தா குகை ஓவியங்கள் இன்றும் மிளிர்வதைக் காணலாம். நாடகக்கலை காளிதாசரின் ‘ சாகுந்தலம் , ’ ‘ இரகுவம்சம் ’ ‘ குமாரசம்பவம் , ‘ மேகதூதம் ’ ஆகியன நாடகக் கலைக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். Page 107 of 201 175 ‘ தேவி சந்திரகுப்தம் , ’ ‘ கௌமுதி மகோத்சவம் ' போன்ற நாடகங்களும் நடிக்கப்பட்டன. மேலும் நாடகக் குழுவினர்களுக்கு மன்னர்கள் பெரிதும் உதவி செய்தனர். 7.2.8. இந்தியப் பண்பாட்டிற்கு குப்தர்களின் கொடை 1. மத்திய அரசு மற்றும் மத்திய
|
நிருவாகத் துறைகள் மாநில அரசு மற்றும் மாநில நிருவாகத் துறைகள் , மாவட்ட ஆட்சிமுறை , நகர மற்றும் கிராம நிருவாக சபைகள் போன்றவை இந்திய பண்பாட்டிற்கு குப்தர்களால் வழங்கப்பட்ட கொடைகள் எனலாம். 2. காளிதாசரின் ' சாகுந்தலம் , ’ ‘.விக்கரமோர்வசியம் , ’ ‘ இரகுவம்சம் ’ ‘ குமாரசம்பவம் , ’ ‘ மேகதூதம் ' மற்றும் பல இலக்கிய படைப்புகள் குப்தர்காலக் கொடையாகும். 3. மேலும் ஆரியபட்டரின் ' கணிதநூல் , ' ' வானவியல் ’ வாக்பட்டரின் அஷ்டாங்க சங்கிரகம் ( மருத்துவம் ) வராக மிஹிரரின் பஞ்ச சித்தாந்தகம் ( வானவியல் ) சந்திரரின் சந்திராச்சாரிய
|
வியாக்கரணம் ( இலக்கணம் ) மற்றும் அமரரரின் நிகண்டு போன்ற நூல்கள் இந்தியப் பண்பாட்டு வளர்ச்சிக்கு உதவியாக இருந்தன. 4. குப்தர் கால நீதித்துறை மத்திய , மாநில அரசுகளின் கீழ் செயல்பட்டதை இன்றைய நீதித் துறையைப் போன்ற முறைகளையே பறைசாற்றுகின்றன. 5. குப்தர் காலத்தின் சமயச் சார்பற்ற ஆட்சிமுறையானது நமது இந்திய பண்பாட்டிற்கு அடிகோலியது எனலாம். 6. குப்தர் கால குகைக் கோயில்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள் குப்தர்களின் கலை வளர்ச்சிக்கும் , சமயவளர்ச் சிக்கும் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குவதுடன் இந்தியப் பண்பாட்டு
|
வளர்ச்சிக்கும் துணை புரிந்தன. 7. சாரநாத் , மதுரா , அஜந்தா , எல்லோரா , பாக் ( Bagh ) போன்ற இடங்களில் உள்ள சிற்பங்கள் , ஓவியங்கள் போன்ற கலை அம்சங்கள் யாவும் இந்தியப் பண்பாட்டின் சிறந்த கூறுகளாக விளங்குகின்றன. எனவே குப்தர் காலம் ‘ பொற்காலம் ’ என்பர். 176 7.2 , பயிற்சி வினாக்கள் அ. ஓரிரு வரிகளில் விடையளி 1. குப்த மன்னர்களின் ஆட்சிக்காலம் யாது ? 2. ' காளிதாசரின் ’ இலக்கியப் படைப்புகள் யாவை ? 3. குப்த மன்னர்களில் மிகச் சிறந்தவர்கள் யாவர் ? 4. குப்தர்களின் நான்கு வகைப்படைகள் யாவை ? 5. சிவபெருமானின் பெருமைகளைப்
|
போற்றும் புராணங்கள் யாவை ? 6. குப்தர்கால வழிபாடுகள் யாவை ? 7. குப்தர் கால நான்கு வகை கட்டடக் கலைகள் யாவை ? 8. குப்தர்கால ‘ ஓவியங்கள் ’ எங்கு காணப்படுகின்றன ? 9. குப்தர்கால ' நாடகக் கலைக்கு ' சிறந்த எடுத்துக்காட்டுகள் யாவை ? 10. குப்தர்கால ‘ சிற்பக்கலைக்கு ' சில எடுத்துக்காட்டுகள் கூறு ? 11. இசையும் நடனமும் குப்தர் காலத்தில் சிறந்து விளங்கியது என்பதை நீ எவ்வாறு அறிவாய் ? ஆ. பத்து வரிகளில் விடையளி 1. ‘ குப்தர்காலம் பொற்காலம் ’ என்பதை நீ எவ்வாறு அறிவாய் ? 2. குப்தர்காலம் பற்றி அறிய உதவும் சான்றுகள் யாவை ? 3.
|
குப்தர்கால ‘ மத்திய நிர்வாகம் ’ எவ்வாறு செயல்பட்டது ? குப்தர் கால ‘ நீதித்துறையின் ' செயல்பாட்டு முறையினை விளக்குக. 4. குப்தர்காலச் சமய நிலையை விளக்குக. இ. ஒரு பக்க அளவில் விடையளி 1 குப்தர் கால அரசியல் நிலையைப் பற்றி விளக்குக. 2. குப்தர்கால சமுதாயநிலை எவ்வாறு இருந்தது ? 3. குப்தர் கால கல்வி மற்றும் இலக்கியம் குறித்து விளக்கி எழுதுக. 4. குப்தர்கால கலை வளர்ச்சி குறித்து விளக்கி எழுதுக. ஈ. நான்கு பக்க அளவில் விடையளி 1. ‘ குப்தர்காலப் பண்பாடு ' பற்றி ஒரு கட்டுரை வரைக. 2 குப்தர்கால கலை , இலக்கிய வளர்ச்சிகள்
|
குறித்து ஒரு கட்டுரை வரைக. 3. இந்தியப் பண்பாட்டிற்கு ‘ குப்தர்களின் கொடை ’ குறித்து ஒரு கட்டுரை வரைக. 178 பிற்காலப் பல்லவர்களின் ஆட்சிக்காலம் தமிழக வரலாற்றில் ஒரு பொற்காலமாகத் திகழ்ந்தது. இவர்கள் சோழ , பாண்டியர்களுக்கு ஆட்சித்துறையில் முன்னோடிகளாய் திகழ்ந்தனர் என்பர். பல்லவர்களின் பேரரசு தொண்டை மண்டலம் என்பர். இது வடக்கே கிருஷ்ணா நதி தீரத்திலிருந்து தெற்கே காவிரி வரை பரந்திருந்தது. அவர் தம் ஆட்சி முறையின் சிறப்புகளை இலக்கியங்களும் கல்வெட்டுக்களும் விளக்குகின்றன. 7. 3. 1. காலம் 7.3. பிற்காலப் பல்லவர் காலப்
|
பண்பாடு இவர்கள் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு முடிய தொண்டை மண்டலப் பகுதியை சிறப்புடன் ஆட்சி செய்தனர். 7.3.2. சான்றுகள் 4. 5. 1. 2. மகேந்திரனின் ‘ மத்த விலாச பிரகசனம் ’ 3. மூன்றாம் நந்திவர்மனைப் பற்றிய ‘ நந்திக்கலம்பகம் ’ தேவாரப் பாடல்கள் சீனப் பயணி யுவான் சுவாங்கின் குறிப்புகள் ஆம்பூர் மற்றும் ஒலிக்கூரிலுள்ள வீரக்கற்கள் மாமல்லபுர பஞ்சபாண்டவ ரதங்கள் , கடற்கரைக் கோயில் குடவரைக்கோயில்கள் 6. 7. பல்லவர்களின் ஆட்சிகாலம் பற்றி அறிய காசக்குடி செப்புப் பட்டயம் 7.3.3. முக்கிய அரசர்கள் 1.
|
முதலாம் மகேந்திரவர்மன் ( கி.பி. 590 - கி.பி. 630 ) 2. முதலாம் நரசிம்ம வர்மன் ( கி.பி. 630 - கி.பி. 668 ) 3. இரண்டாம் மகேந்திரவர்மன் ( கி.பி. 668 - 670 4. முதலாம் பரமேஸ்வரன் ( கி.பி. 670- 6900 5. இராஜ சிம்மன் ( கி.பி. 690 - கி.பி. 730 ) 6. இரண்டாம் நந்திவர்மன் ( கி.பி. 731 - 796 ) போன்றோர் குறிப்பிடத்தக்க மன்னர்கள் ஆவர். 7.3. 4. அரசியல் நிலை பல்லவர்காலத்தில் மன்னர்கள் மக்களால் பெரிதும் போற்றப்பட்டனர். மன்னரை ' இறை ' எனவும் ' கோன் ' எனவும் அழைத்தனர். பல்லவருள் தந்தைக்குப்பின் மூத்தமகன் ஆட்சிக்கு வருவது ஒரு
|
பண்பாடாகக் கருதப்பட்டது. வாரிசு அற்ற காலத்தில் முன்னாள் மன்னரின் சகோதரர் ஆட்சியின் பொறுப்பை ஏற்றான். நீதி , நிர்வாகம் , இராணுவம் போன்றவற்றிற்கு அரசனே தலைவனாவான். அரசனுக்கு ஆலோசனை வழங்க ' மந்திரி மண்டலம் ’ என்ற குழு செயல்பட்டது. அமைச்சர்களுக்கு ' பிரம்மராஜன் , ’ ‘ பேரையன் ’ என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டன. அரசனுக்கு உதவியாக அந்தரங்க ஆலோசகர் , இரகசிய வேலை செய்வோர் , வாயில் காப்போர் , பட்டய எழுத்தர் , காரணிகர் , தமிழ் அதிகரணிகர் போன்றோர் செயல்பட்டு ஆட்சி நிர்வாகத்திற்கு உதவி செய்தனர். வருவாய் துறை , நிலவரித்துறை
|
நில அளவைத் துறை , காவல் துறை , வனத்துறை , இராணுவத்துறை என பல துறைகள் பிரிக்கப்பட்டு தனித்தனி உயர் அதிகாரிகளின் கீழ் சிறந்த முறையில் செயல்பட்டன. 180 ஆட்சிமுறை பல்லவநாடு பல ராஷ்டிரங்களாகவும் , ( மண்டலம் ) , ராஷ்டிரங்கள் கோட்டங்களாகவும் வளநாடுகளாகவும் ) , கோட்டம் நாடுகளாகவும் , நாடு ஊர்களாகவும் பிரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப்பட்ட.டது. கோட்டங்கள் அதன் இயற்பெயரிலேயே ஆட்சி செய்யப்பட்டு வந்தன. அவை புழல் கோட்டம் , களத்தூர் கோட்டம் , ஆம்பூர் கோட்டம் , வேலூர் கோட்டம் என 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ‘
|
ராஷ்ரிகர் ’ என்பவர் மாநில ஆளுநராவார். இவர் கீழ் பல அதிகாரிகள் பணி புரிந்தனர். அரசகுமாரன் என்பவர் மாநிலப் பிரிவின் ஆட்சியாளராயிருந்தார். நாடு என்பது சிற்றூர்களை விடப் பெரியதும் கோட்டங்களை விடச் சிறியதுமாகும். அதனை நாட்டார் என்போர் கட்டுப்படுத்தினர். நாட்டுக்கு அடுத்தது ஊர். அதனை ஊரர் என்பவர் கட்டுப்படுத்தினர். ஆழ்வார் என்பவர் சிற்றூரை ஆண்டுவந்த அவையினர் ஆவர். மன்னர் விடுக்கும் திருமுகத்தை ( ஆணை ) நாட்டார் பொதுமக்கட்கு அறிவிப்பார். அதனை ‘ அறைஓலை ' என்பர். சிற்றூர்கள் என்பது தல ஆட்சிப்பிரிவின் இறுதி அங்கமாகும்.
|
இச்சிற்றூர்களை பிரம்மதேயச் சிற்றூர்கள் , தேவதானச் சிற்றூர்கள் என அழைத்தனர். ஒவ்வொரு சிற்றூரிலும் கிராம சபை ஒன்று இருந்தது. ஏரி வாரியம் , தோட்ட வாரியம் எனப் பல்வேறு வாரியங்கள் கிராம சபையின் பணிகளைச் செய்து வந்தன. நீதிமுறை பல்லவர்காலத்தில் நகரங்களில் அறங்கூறும் அவைகள் இருந்தன. அவை ‘ அதிகரணங்கள் ' என்று பெயர் பெற்றிருந்தன. இதன் தலைவர் ‘ அதிகரணிகர் ' மற்றும் ‘ அதிகரண போசகர் ’ எனப்பட்டனர். இவர்கள் நீதி வழங்குமிடம் ‘ அதிகரணமண்டபம் ’ எனப்பட்டது. சிறிய ஊர்களில் இருந்த நீதிச்சபை ‘ கரணம் ’ எனப்பட்டது. இதன் தலைவன் '
|
கரணத்தான் ' எனப்பட்டார். பல்லவர் கால நீதிமன்றங்கள் வழக்குகளை மூன்று வித ஆதாரங்களைக் கொண்டு விசாரித்தன. அவை 1 சாட்சி 2. ஆவணம் 3. அயலார் சாட்சி என்பதாகும். எல்லா நீதி மன்றங்களுக்கும் தலைமை நீதிமன்றமாக ( பொதுமன்றம் ) விளங்கிய நீதிமன்றம் தருமாசனம் என்பதாகும். இது அரசரது நேரடிக் கண்காணிப்பில் இருந்தது. காரண தண்டம் , அதிகரணதண்டம் என தண்டணை வழங்கும் முறையும் இருந்தது. இவற்றிற்கெல்லாம் மேலாக மன்னனே நாட்டின் தலைமையான நீதிபதியாகச் செயல்பட்டார். படையமைப்பு பல்லவர் காலத்தில் யானைப்படை , குதிரைப்படை , காலாட் படை ,
|
தேர்ப்படை , மற்றும் கடற்படை என ஐந்து வகைப்படைகள் இருந்தன. ‘ கூரம் ’ பட்டயம் படையின் வலிமையையும் போர் முறைகளையும் கூறுகின்றது. மேலும் , வேலூர் பட்டயம் படைக்கருவிகளைப் பற்றி தெளிவுப்படுத்துகின்றது. இவர்கள் காலத்தில் சிறந்த கடற்படை இருந்ததெனத் தெரிகிறது. முதலாம் நரசிம்மன் தனது நண்பன் மாறவர்மனுக்காக இலங்கை மீது படை நடத்தி வெற்றிக் கொண்டான். கடற்படை உதவியால் இராஜ சிம்மன் லட்சத் தீவை வென்றான். 7.3.5. சமுதாய நிலை பல்லவர் காலத்தில் வருணாசிரம தர்ம முறை பின்பற்றப்பட்டது. பிராமணர் , க்ஷத்தியர் , வைசிரியர் , சூத்திரர்
|
என்ற நான்கு பிரிவுச் சமுதாயத்திற்குப் பல்லவர்கள் முக்கியத்துவம் கொடுத்தனர். இந்து சாஸ்திரக் கோட்பாடுகளைப் பின்பற்றி சமுதாயத்தை அமைத்தனர் என்று முதலாம் பரமேஸ்வரனின் ' கூரம் ' பட்டயமும் நந்திவர்மனின் காசக்குடி பட்டயமும் குறிப்பிடுகின்றது. பிராமணர்கள் , க்ஷத்திரியர் களைத் தவிர , வணிகர்கள் , கலைஞர்கள் , பொற்கொல்லர்கள் , கருமான் , தச்சன் , உழவர்கள் போன்றோரைப் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. 182 மேலும் சமுதாயத்தில் பல்வேறு தொழில் செய்பவர்களும் இருந்தனர். பெண்கள் நிலை பல்லவர் காலத்தில் பெண்கள் உயர்வாகக்
|
கருதப்பட்டனர். அவர்கள் சமயத்திலும் , கோயிற் பணிகளிலும் ஈடுபட்டனர். அவர்களுக்கு சொத்துரிமையும் இருந்தது. பெரும்பாலும் ஒருவன் ஒருத்தியையே மணக்கும் பழக்கம் காணப்பட்டது. அரசியரும் அரசகுலப் பெண்களும் பெரும்பாலும் கோயிற்பணிகளிலேயே ஈடுபட்டனர். மற்ற சமூகப் பெண்கள் நூல்நூற்றல் , நெசவு செய்தல் , பால் விற்றல் , பூவிற்றல் போன்ற வியாபாரங்களில் ஈடுபட்டனர். நடன மாந்தர் கோயில் பணிகளில் ஈடுபட்டனர். திருமணம் பெற்றோரின் இசைவுடன் நடைபெற்றது. உணவுப் பழக்கம் செந்நெல் , வெண்நெல் , குத்தி அப்பம் கலந்த சிற்றுண்டி , கும்மாய அமுது (
|
பருப்பும் வெண்ணெயும் ) அக்கார அடிசில் ( சர்க்கரைப் பொங்கல் ) நெய் கலந்த சோறு , அவல் அமுது , மற்றும் தயிர்ச் சோறும் உண்டனர். ஆடை அணிகலன்கள் பல்லவர் காலத்தில் பொதுவாக நீண்ட அங்கியான வேட்டி அணிந்தனர். செல்வந்தரும் , அரசக் குடும்பத்தாரும் ‘ உத்தரீயம் ’ எனப்படும் ஆடையை அணிந்தனர். மேலும் கலிங்கம் , பட்டு , பீதாம்பரம் போன்றவையும் செல்வந்தர்கள் அணிந்தனர். துவைத்த ஆடை , துவர் ஆடை போன்றவை சமயத் துறவிகளும் சந்நியாசி களும் அணிந்தனர். சிற்றாடை , மேலாடை , சேலை போன்றவற்றைச் சாதாரண மக்கள் அணிந்தனர். கழுத்து அணிகளும் , காது
|
அணிகளும் , கால் கொளுசுகளும் அணியப்பட்டன. அரசியர் தலையில் மகுடம் , விலை உயர்ந்த நகைகள் அணிந்தனர். Page 111 of 201 183 7.3.6. சமய நிலை பல்லவர்காலச் சமயவாழ்க்கை கோயிலைச் சுற்றியே அமைந்திருந்தது. சிவன் , விஷ்ணு என்னும் கடவுளர் மீது பக்தி பெருக்கெடுத்தோடியது. சக்தி வழிபாடும் சிறப்புற்றிருந்தது மற்றும் சப்தமாதர் , ஜேஷ்டா வழிபாடும் பிற்கால சமயத்தில் வளர்ச்சி பெற்றன. பல்லவர் காலத்தில் இந்துசமயத்தினை காணாபத்தியம் , கௌமாரம் , சௌரம் , சாக்தம் , சைவம் , வைணவம் என்று ஆறுவகைச் சமயமாக பிரித்து மக்கள் வழிப்பட்டனர்.
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.