text
stringlengths
11
513
தெய்வமுண்டு என்று தான்றிதழ் வேண்டும் ” என்பதற்கேற்ப வாழ்ந்தவர் காந்தியடிகள். எல்லா உயிர்களிடத்தும் இறைவன் நீக்கமற நிறைந்திருப்பதால் உலகிலுள்ள எல்லோரும் உடன் பிறந்தாரோ என்ற கருத்தை பலமாக ஆமோதித்தார். இதை அடிப்படையாகக் கொண்டே அகிம்சை கோட்பாட்டை வலியுறுத்தினார். 10.6.2.1. சுதேசி இயக்கம் நாட்டுக்குரிய இயற்கை வாழ்வே சுதேசியமென்பதாகும். ஒரு நாட்டுக்கு இயல்பாய் அமைந்துள்ள மொழி , பழக்க வழக்கங்கள் ஒழுக்கம் , அரசு , அறம் , உணவு , உடை முதலிய யாவும் ஒன்றாய் சேர்ந்ததே சுதேசியமாகும். சுதேசியமென்பது நமது சமய வாழ்வில்
விடுதலை பெறுவதாகும். இதன் மூலம் ஆன்மீகத் துறையில் இறையன்பை பெற முடியும் என்பது அவரது கருத்து. இந்து - முஸ்லீம் ஒற்றுமை , தீண்டாமை முதலியனவும் சுதேசியமேயாகும். ஒரு நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் ஒரு மனிதன் போல் வாழ்தல் வேண்டும். பிறப்பாலோ வேறு எதனாலோ வேற்றுமை நிகழின் , அது நாட்டைத் துண்டாடிவிடும். ஆதலால் மக்கள் மன ஒற்றுமை சுதேசியத்தின் உயிர் போன்றது. " மனிதன் தன் சம மனிதனிடம் நேயத்தைக் காட்டத் தனது சிந்தனை , சொல் மூலம் மட்டும் அல்லாமல் செயல் மூலமும் காட்ட வேண்டியுள்ளது. அதற்கு ஒரே உன்னதமான வழி அவனுடைய 309
உழைப்புக்கு மதிப்பளித்து , அவன் உற்பத்தி செய்யும் பொருள்களை வாங்கிப் பயன்படுத்துவது. இது இயற்கை நியதியோடு இணைந்த தர்மமாகும் ” என்பது காந்தியடிகள் கருத்தாகும். “ இந்தியாவின் முதுகெலும்பு கிராமம் ”. இந்தியா கிராமங்களில் தான் வாழ்கிறது என்பது காந்தியடிகளின் கருத்தாகும். வேளாண்மையை முதன்மைத் தொழிலாய் கொண்ட கிராமங்களை முன்னிறுத்தி , கதரும் , கிராமக் கைத்தொழிலும் சிறக்க பாடுபட்டார். பிறநாட்டுப் பொருள்களை தவிர்த்து இந்தியப் பொருள்களை பயன்படுத்துவதையே குறிக்கோளாகக் கொண்டார். சுதேசி இயக்கம் மூலம் ஆங்கிலேயரிடம்
மனமாற்றத்தை உண்டாக்கி , அமைதிப் புரட்சியை நாம் கொண்டு வர முடிந்தது. “ உன்னைப் போல் உன் அயலாளையும் நேசி " என்ற இயேசு பெருமானின் கூற்றுக்கு மனித நேயச் செயல் திட்ட விளக்கமாகச் சுதேசி அமைந்தது. நூற்பும் நெசவும் புத்துயிர் பெற்று வேளாண்மைக்கு இணைதொழிலாய் மாறின. மனித உழைப்புக்கு மதிப்புக் கூடியது. வாணிகத்தில் நேர்மை திரும்பியது. தன்னாட்சிக்கு வித்திட்டது. கலையுணர்வும் , மனித நேயமும் இந்த சுதேசி இயக்கத்தால் தழைத்தன. 10.6.2.2. சுயராஜ்ஜியம் சுதேசியத்தின் காரியமே சுயராஜ்ஜியமாகும். சுயராஜ்ஜியம் என்பது ஒவ்வொருவரும்
உரிமை பெறுவது. “ நாமார்க்குங் குடியல்லோம் ” என்றார். திருநாவுக்கரசர். சுய ஆட்சி எனது பிறப்புரிமை என்றார் பாலகங்காதர திலகர். “ நம் நாட்டில் தீண்டப்படாதோரும் உரிமை பெறவே , நான் சுயராஜ்ஜியம் என்பதற்கு கொண்ட பொருள் ” என்கிறார் காந்தியடிகள். சுயராஜ்ஜியம் கடவுளாலும் கொடுக்கப்படுவதன்று அதை நமக்கு நாமே முயன்று பெறுதல் வேண்டும். சுயராஜ்ஜியம் கோழைகளின் உடைமையன்று. அஃது அஞ்சா நெஞ்சினர் கடமை. சுயராஜ்ஜியத்துக்கு அடிப்படை அகத்தூய்மை. அகத்தூய்மையில்லா ஒருவன் பல கேடுகளுக்கு அடிமையாவான். உலகில் எத்துணை பேர் பொய்ம்மை , பொறாமை
, சீற்றம் , காமம் முதலியவற்றிற்கு 310 அடிமைகளாக நிற்கின்றனர். இதனின்றும் விடுதலை அடைவது ஆத்ம சுயராஜ்ஜியமென்பதாகும். இச்சுயராஜ்ஜியம் பெறவே மக்கள் படைக்கப்படுகிறார்கள். புறச் சுயராஜ்ஜியம் நமக்கு இன்றியமை யாததாகும். நம் உடலுக்குத் தீங்கு வராது காப்பது போல நம் நாட்டுக்கும் அயல் நாட்டவரால் தீங்கு வராமல் காத்தல் அவசியமாகும். நாடு அதை நாடு என்பதற்கு ஏற்ப நாட்டின் மீது அதன் தொன்மை , பண்பாடு , கல்வி , சமயத்தின் மீதும் பற்றுக் கொண்டு பிறரிடமிருந்து அதனைக் காப்பதே புறசுயராஜ்ஜியம் ஆகும். 10.6.2.3. சர்வோதயம் ‘
கடையனுக்கும் கடைத் தேற்றம் ’ என்ற ஜான் ரஸ்கின் கருத்தின் அடிப்படையில் சமூகத்தில் உள்ள அனைவரும் நலம் பெறுவதே சர்வோதயம் என்பது காந்தியடிகளின் கருத்து. சமுதாயத்தின் கடைநிலையில் இருப்பவர்கள் அரசியல் , பொருளாதார , சமூக சமயத் துறைகளில் ஏற்றம் பெறுவதே இதன் நோக்கமாகும். “ எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு இல்லாதார் இல்லாத நிலை வேண்டும் ” என்பதே இதன் சாராம்சமாகும். 10.6.2.4. அகிம்சை அ + ஹிம்சை = அஹிம்சை. அ என்பதற்கு இல்லை என்பது பொருள். ஹிம்சை என்பதற்கு துன்பம் என்ற பொருள். ஆதலால் அகிம்சை என்பது துன்பம்
இழைக்காமையும் , பிறர் நமக்கு துன்பம் இழைக்கும்பொழுது அதனை அன்பால் பொறுத்துக் கொள்வதேயாகும். சிந்தனை , சொல் , செயல் இம்மூன்றாலும் உலகில் வாழும் எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாததும் அகிம்சையே. அகிம்சையானது தன்னுள் அன்பு , இரக்கம் , அனுதாபம் , பரிவு , அச்சமின்மை போன்ற நற்பண்புகளை உள்ளடக்கியது. அது மேலும் உண்மையை உள்ளீடாகக் கொண்டுள்ளது. அகிம்சைக்குப் பேராற்றல் தேவை. அஞ்சாமை தேவை. 311 உண்மை தேவை. கருவி கொண்டு பிறரைத் தாக்க முயல்பவள் ஆற்றல் உடையவன் அல்லன். அவன் அச்சத்தால் ஆயுதம் தாங்குகிறவன். எனவே , அகிம்சை
அஞ்சாமையின் உச்சியில் நிலவுவதேயாகும். அகிம்சை உயிர் ஆற்றல் வாய்ந்தது. உயிராற்றல் உள்ள ஒருவனுக்கு கையில் ஆயுதம் தேவையில்லை. அது மரணத்துக்கு அஞ்சாதவன் பற்றி நடக்கும் தகுதியுடையது. ஹிம்சை தாழ்மையில் கொண்டு போய் விடும். அகிம்சை என்பது கடவுள் சார்புடையது. அவருடைய உதவி பெற வேண்டுமானால் தாழ்மையோடும் , கனிவோடும் அவரிடம் அணுக வேண்டும் என்பது காந்தியடிகளின் கருத்து. மனிதன் உடலன்று , உயிர் அவள் தன்னை உயிரென்று நினைத்தால் அவனிடத்தில் இயல்பாகவே அகிம்சை விளங்கும். அகிம்சா தர்மம் மனிதனுக்குரிய இயற்கை அறம். தனக்கு தீங்கு
இழைக்க எந்த மனிதனும் உடன்பட மாட்டான். இது மனித இயல்பு. இவ்வியல்புடையோன் பிறர்க்கும் தீங்கிழைக்க மாட்டான். நினைப்பானேல் அந்நினைப்பு இயற்கைக்கு மாறுபட்டதாகும். தன்னைப் போல பிறரையும் கருதுதல் மனிதனது இயல்பு. “ தன்னுயிர் வைகலும் பரிந்தோம்பு மாறுபோல , மன்னுயிர் வைகலும் ஓம்பி வாழுமின் ” என்றார் திருத்தக்க தேவர். இந்நிலை எய்திய பெரியோர் உள்ளமே “ ஆண்டவன் உறைவிடமாகும் ” “ எத்துணையும் பேதமுறா தெவ்வுயிருந் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமையுடைவராய் உவக்கின்றார் யாவரவர் உளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான்
நடம்புரியும் இடமென நான் தெரிந்தேன் அந்த வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என் சிந்தைமிக விழைந்த தாலோ " என்ற அருள் மொழியையும் நாம் உற்று நோக்கல் வேண்டும். 312 அகிம்சை உயர்ந்த தத்துவமாகும். அதாவது மனிதன் , விலங்கு மற்றும் தாவரங்கள் ஆகிய எல்லா உயிரினங்களுக்கும் ஆன்மா உண்டு என்பதேயாகும். அகிம்சை என்னும் ஞாயிறு எழும்போது , பகைமை , சீற்றம் , காழ்ப்பு முதலிய இருள்கள் மனிதனை விட்டு அகன்றுவிடும் என்பது காந்தியடிகளின் செம்மொழியாகும். ஆதலால் அகிம்சையானது ஆன்ம சக்திக்குப் பயன்படுவது , வீரம் என்ற பண்புக்கு அடிப்படையானது
தியாக உணர்வை வளர்ப்பது என்பதாகும். “ வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற இராமலிங்க சுவாமிகள் கருத்தும் இத்தகையதே. 10. 6.2.5. சத்தியாகிரஹம் ‘ சத்யாகிரஹம் ’ என்ற சொல்லை சத்ய + ஆக்ரஹ எனப் பிரித்துப் பொருள் கொள்ளல் வேண்டும். கடவுளை உண்மை ( சத்யம் ) மூலம் உணர்ந்து பற்றிக் கொள்ளுதல் ( ஆக்ரஹ ) எனலாம். அன்பும் , தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளுதலும் ( உண்ணாநோன்பு ) என்ற இரண்டும் இணைந்து செயல்படுவதே சத்தியா கிரஹம் ஆகும். அது தமிழில் “ உண்மையைக் கடைப்பிடித்தல் ” என்பதாகும். உண்மைக்காக சிறிதும் மனச்சலனமின்றி
தனியாக நின்று அறவழியில் போரிடல் ‘ சத்தியாகிரகம் ’ எனப்படும். “ Fight for the right cause ”. இறைக் கொள்கைளை ஏற்று வளர்ந்த காந்தியடிகள் கடவுளை உருவமான ஒன்றாகத் தான் கண்டார். கடவுளே உண்மை ( God is truth ) என்பதை மாற்றி உண்மையே கடவுள் ( Truth is God ) எனக் கொண்டார். கடவுள் என்ற சொல் யாவருக்கும் ஒரே பொருளைத் தருவதாக இல்லை. ஆனால் உள்ளது என்ற பொருள் தரும் ‘ Truth ’ ஒரே பொருளில் எல்லோராலும் பேசப்படுகிறது. கடவுள் இருப்பதை 313 ஏற்றுக்கொள்ளாதவர்களும் ' உண்மை ' என்பதை ஏற்றுக் கொள்வார்கள். கடவுள் என்ற சொல்லைச்
சொல்லும்போது உண்டாகின்ற வேறுபாடுகள் உண்மை , சத்யம் ( Truth ) என்று சொல்லும்போது உண்டாவதில்லை. எனவே , உள்ளது ( Truth ) { சத் ) என்பது ஒருவகை ஒற்றுமையை உண்டாக்கும் சொல் என்று கொண்டார். கடவுள் நம்பிக்கை உடையவர்களிடம் கூட அக்கடவுளைப் பற்றிய எண்ணங்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மேலும் , சிலர் கடவுள் என்ற தத்துவத்தையே ஏற்றுக் கொள்வதில்லை. எனவே கடவுள் என்று சொல்லும் போது வேறுபாடு வளர்வதையும் ‘ சத்யம் ’ என்று சொல்லும் போது ஒற்றுமை உணர்வு மேலோங்குவதையும் காந்தியடிகள் கண்டார். இதனையே அவர் “ சத்யாகிரஹம் ’ என்ற
சொல்லால் தந்தருளினார். அதற்குச் சத்தியத்தின் ஆற்றல் ( Truth force ) என்று விளக்கம் அமைத்துக் கொண்டார் காந்தியடிகள். சத்தியத்தின் ஆற்றலை ( Truth force ) ஆன்மிக ஆற்றலாகிய அன்பினால் பெறலாம் என்ற முடிவுக்கும் வந்தார். நம் முன்னோர்கள் இந்நெறியை “ உண்மைநெறி என்றும் அருள்நெறி என்றும் திருநெறி என்றும் , நல்லாறு என்றும் , சன்மார்க்கம் என்றும் அழைத்தனர். உயிருக்கு உடல் எத்தன்மையதோ அத்தன்மையுடையது வாழ்விற்குச் சத்தியாகிரஹம். காந்தியடிகள் இளமையில் கொண்ட தாயன்பு , தீண்டாமையில் வெறுப்பு , வாய்மை , ஒழுக்கத்திலுணர்வு
முதலியன அவரது சத்தியாகிரக வாழ்விற்குச் சாரமாக அமைந்தது. மேலும் சத்தியாகிரகத்தின் நேர்மையையும் , பெருமையையும் உணர்த்தி அவரை விழிக்கச் செய்தது. இயேசு பிரானின் மலைப் பிரசங்கமே ஆகும். ( புதிய ஏற்பாடு இதனையே காந்தியடிகள். கிறிஸ்து நாதரின் மலைப்பொழிவை யான் வாசித்தபோது , அதிலுள்ள ( தீமையைத் ) தீமையால் எதிர்த்து நிற்க வேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் , அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டு ( மத்தேயு 5:39 என்பதையும் உங்கள் சத்ருக்களில் அன்பு கூருங்கள் ; உம்மை இம்சைப்படுத்துகிறவர்களுக்காக ஜெபஞ்
314 செய்யுங்கள் , இப்படிச் செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கும் பிள்ளைகளாயிருப்பீர்கள். ( மத்தேயு 5 : 44-5 ) என்பதைக் கண்ட வேளையில் எனக்கு மகிழ்ச்சி வரம்பின்றிப் பொங்கித் ததும்பி வழிந்தது. இவ்வெண்ணத்தை பின்பு பகவத் கீதையைப் படித்த போதும் உணர்ந்தேன். அதன் பின் டால்ஸ்டாய் எழுதிய பரலோக ராஜ்யம் உன்னுள்ளத்திருக்கிறது எனும் நூல் பசுமரத்தாணி போல் பதியச் செய்தது , என்று தம் சுயசரிதையில் விளக்குகிறார். காந்தியடிகளைப் பண்படுத்திய அத்திருமொழி எந்த நாட்டினரையும் , உலகோரையும் பண்படுத்தல் வேண்டும். ஆதலால்
உண்மையின் வழியில் நின்று , அறவழியில் நின்று தீமையை வெல்லுவதே ‘ சத்யாகிரஹம் ’ ஆகும். 10. 6.3. சமுதாய சேவைகள் இந்து முஸ்லீம் ஒற்றமை இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்குப் பெரும்பாடுபட்டவர் காந்தி , பல்வேறு சமயத்தவர். இனத்தவர்களிடம் ஒற்றுமையை நிலை நாட்ட வந்த அருளாளர் எல்லோரும் உடன்பிறந்தார் என்ற உணர்வுடன் வாழ வேண்டும் என விரும்பினார். பல்வேறு இடங்களில் இந்து – முஸ்லீம் போராட்டங்கள் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். மகாத்மா காந்தி இவ்விடங்கட்கு சென்று அமைதியை நிலை நாட்டினார். தாழ்த்தப்பட்டோர் தரம் உயர தாழ்த்தப்பட்டோர்
வாழ்வின் தரம் உயர அயராது பாடுபட்டார். பல்லாயிர ஆண்டுகாலமாகச் சாதிப்பாகுபாட்டில் ஊறித் திளைத்த இந்துக்கள் தாழ்த்தப்பட்டோரைத் தரைக்குறைவாக நடத்தினர். ஆலயத்தின் உள் நுழைய அவர்கள் அனுமதிக்கப்பட வில்லை. அவர்களிடம் காணப்பட்ட தப்பெண்ணங்களைத் தவிர்த்து , அவர் களை ஆலயத்திற்குள் அனுமதிக்க வேண்டினார். தீண்டாமையை எதிர்த்து உரத்தகுரல் எழுப்பினார். தாழ்த்தப்பட்டோரை , அரிசனங்கள் எனப் பெயரிட்டு அழைத்தார். ' ஹரிஜன் ' என்ற செய்தித்தாளைத் தொடங்கி தாழ்த்தப்பட்டோரின் தரம் உயரவேண்டும் என்ற கருத்து அடங்கிய கட்டுரைகளை எழுதினார்.
பெண்களின் நிலை உயர பெண்ணுரிமை பெறவும் , ஆண்களோடு சரிநிகர் சமானமாக அவர்களை நடத்தவும் பெரிதும் பாடுபட்டார். ஆண்கள் அனுபவித்த உரிமைகள் அனைத்தையும் பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக அயராது உழைத்தார். பெண்கள் அனைவரும் கல்விபெற வேண்டுமென்பதை மிகவும் வலியுறுத்தினார். அவருடைய சமுதாய அரசியல் பணிகளில் பல பெண்கள் ஈடுபட்டிருந்தனர். மதுவிலக்கு மது மக்களின் உடல் நலனை , ஒழுக்கத்தை , பொருளாதாரத்தை , மனநிலனைப் பெரிதும் பாதிப்பதால் , இதில் பணத்தை செலவிடக் கூடாதெனக் காந்தி கருதினார். அகவே , மதுவிலக்குக் கோட்பாட்டைக் கடுமையாக
அரசு வலியுறுத்த வேண்டுமென விரும்பிளார். கல்வி முறைகள் மனிதனின் அறியாமையைக் கலைந்து அறிவை விளக்கி அவனது வாழ்வை நேர்மையால் செலுத்தவல்லவது கல்வி. “ தாய்மொழியின் வழி பிள்ளைகளுக்கு கல்வி பயிற்றல் மிக முக்கியமானது. தாய்மொழியை அவமதிப்பது நாட்டுத் தற்கொலை யாகும். தாய்மொழி வழி கல்விகற்று அறிவு விளங்கப்பெற்று பின்னர் உலகில் உள்ள மொழிகளையெல்லாம் கற்கலாம் ” என்பது காந்தியடிகளின் கருத்தாகும். உயிரும் , உடலும் , மனமும் ஒருங்கிணைந்த வளர்ச்சியே கல்வியாகும். இன்றைய கல்விமுறை பயனற்றது எனக் காந்தி கூறினார். மிகுந்த பொருட்
செலவுள்ள கல்வி எல்லாருக்கும் கிடைக்கக் கூடியதன்று. குழந்தைகளின் சூழலோடு ஒட்டிய கல்வி இதுவன்றுக் கூறினார். அடிப்படைக்கல்விக் கொடுத்தார். 316 தொழிற்கல்வியோடு கூடிய கல்விதான் நாட்டுக்கு நலம் பயக்க கூடிய கல்வி எனக்காந்தி கருதினார். “ ஆளும் வளரனும் , அறிவும் வளரனும் ” , அதுவே கல்வியின் வளர்ச்சி என்றார். மேலைநாட்டுத்தொழில்மயம் காந்தி , மேலைநாட்டுப் பாணியில் இந்தியா தொழில் மயமாவதை விரும்பவில்லை. சிலர் பல்வேறு பொறிகளின் துணைகொண்டு பொருள்களை உற்பத்தி செய்வதால் , பலர் வேளாண்மை சார்ந்த தொழில்களை இழக்கும் நிலை
ஏற்படுகிறது. இதனால் இவர் தன்னிறைவுள்ள குடிசைத் தொழிலை ஆதரித்தார். இது பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. இவர் வேலை நிறுத்தத்தையும் , கதவடைப்பையும் எதிர்த்தார். கிராமப் பொருளாதாரம் தாய்மைப் பொருளாதாரமாகும். இதனை நிலைத்த பொருளாதாரம் எனவும் கூறுவர். மகாத்மா காந்தியின் மணிமொழிகள் 1. எல்லாரும் உடன்பிறந்தோர் அனைவருடைய நலனே வாழ்வின் குறிக்கோளாக அமைதல் வேண்டும். 2. உலகம் ஒன்றே , அது மனித உள்ளங்களாலும் இதயங்களாலும் உண்மையாகவே ஒன்றாக வேண்டும். 3. எல்லாரும் மகிழ்ச்சியை அடையாவிடின் , நம்மில் எவரம் மகிழ்ச்சியைப் பெற
முடியாது. 4. உலகம் ஒன்றுபடாவிடின் , இவ்வுலகில் வாழந்து நாம் எந்த இன்பத்தையும் அடைய முடியாது. ஏழு சமுதாயத் தீவினைகள் காந்தி , தமது மறைவுக்கு முன்னர் அக்காலத்தில் நிலவி வந்த ஏழு சமுதாயத்தீவினைகளைக் கூறி , அவற்றினை அகற்றப் பாடுபட்டார். 1. கொள்கையில்லா அரசியல் 2. உழைப்பில்லா செல்வம் 317 3. மனச்சான்றில்லா மகிழ்ச்சி 4. பண்பில்லா அறிவு 5. நாணயமில்லா வாணிபம் 6. மனித இயல்பில்லாத அறிவியல் 7. தியாகமில்லா வழிபாடு ஆரோக்கிய சூழ்நிலை அமைப்புகள் இந்நாட்டு மக்களின் ஏழ்மையை அகற்றாதவரை , ஆரோக்கியம் வாழ்விற்கேற்ற சூழ்நிலைகளை
மக்களுக்கு அமைத்துத் தருவது அவர்களே. அவ்விதி முறைகளைப் பின்பற்றி அச்சூழலே அமைத்துக் கொள்வதும் இயலாத ஒன்று எனக் கூறினார். இருப்பினும் அவர் தமது ஆசிரமத்தில் ஆரோக்கியச் சூழலை அமைக்க எளிய முறைகளைக் கையாண்டார். இந்நாட்டு மக்கள் தொகையில் பெரும் பகுதியான கிராம மக்கள் பின்பற்றக் கூடிய முறையில் காந்தியின் ஆரோக்கியச் சூழ்நிலை அமைப்புகள் உள்ளன. பிரச்சினைக்கட்குத் தீர்வு ஏழ்மையையும் வேலையின்மையையும் போக்க அவர் கண்ட வழி கையால் நூற்றல் , நெய்தல் , குடிசைத் தொழில்கள் போன்ற கைத்தொழில்களைப் புதுப்பித்தல் , மேலைநாட்டார்
இம்முறையினை எள்ளி நகையாடினாலும் , இந்தியர்கள் இதன் சிறப்பை உணர்ந்து கைத்தொழில்களைப் பேணி வளர்த்தனர் , இந்தியத் தட்பவெப்ப நிலை இவைகட்கு ஏற்றதாக அமைந்திருந்தது. ஏழை உழவர்கள் ஆண்டில் குறிப்பிட்ட காலங்களில் பயிரிட முடியாமையால் அவர்கள் கைத்தொழில்களில் ஈடுபட்டனர். இவை பொருளியல் ரீதியில் பயனுடையனவாக இருந்தன. இயற்கையோடிமைந்த வாழ்வு காந்தி எளிய ஆடம்பரமில்லா வாழ்வு நடத்தும்படி இந்தியர்களுக்கு அறிவுறுத்தினார். இயற்கையோடு இயைந்த எளிய செயற்கை முறைகளை புகுத்தாத , வாழ்வே உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் பயக்கக் கூடியது எனக்
கூறினார். இயற்கை 318 மருத்துவ முறையே உடலுக்கு ஊறு செய்யாத முறை மேலைநாட்டு மருந்துகள் பயனற்றவை என்பது இவரது முடிவு. உடலுக்கு ஊட்டம் தரும் எளிய உணவு முறையைப் பின்பற்றச் சொன்னார். கூட்டு வழிபாடு அனைவரும் ஆன்ம ஈடேற்றம் பெறவேண்டுமென காந்தி விரும்பினார். கூட்டுவழிபாட்டு முறை இறையுணர்வை மட்டுமன்று ஒற்றுமையுணர்வையும் மக்களிடையே தோற்றுவித்தது. மகாத்மா காந்தியின் மகத்தான வாழ்விலும் பணிகளிலும் இந்திய மறுமலர்ச்சி எவரெஸ்ட் சிகரம் போன்று உயர்ந்து நிற்பதைக் காணலாம். சமயம் மனிதன் தெய்வத்தோடு தொடர்பு கொண்டு வாழும்
சத்யாக்கிரக வாழ்வே சமய வாழ்வென்பது. மனிதனிடம் விலங்கு தன்மையும் உண்டு. மனிதத் தன்மையும் உண்டு , முன்னையதைக் களைந்து , பின்னையதை விளங்கச் செய்வது சமயமாகும். “ தன்னை உணர்தலும் ” சமயமாகும். சமயம் என்பது ஒழுக்கம். நாம் ஒழுக்கத்தினின்று தவறினால் சமய நெறியின்று பிறழ்ந்வராகிறோம். சமயத்தின் சாரம் ஒழுக்கமே. சமயமில்லா வாழ்வு பற்றுக் கோடில்லாதது. பற்றுக் கோடில்லா வாழ்வு , சுக்கானில்லாக் கப்பல் போன்றது. நமது சமயம் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. அஃது அன்பின்றி வேறில்லை. அன்பெனின் சுற்றத்தாரையும் , நண்பரையும் மட்டும்
நேசிப்பதன்று. மாற்றாரையும் நேசிப்பது அன்பு. “ சத்தியம் ஒரு சமய வேதத்துக்கு மட்டும் உரிய உடைமையன்று ” “ குரானை ஏற்பதில் எனக்குச் சிறிதும் தயக்கமில்லை. பைபிள் , ஜெந்த அவஸ்தா , கிரந்தாசாகிப் , புத்த சமண நூல்கள் முதலிய எம்மத நூல்களையும் யான் ஏற்பேன். மறைமொழி ஒரு நாட்டுக்கோ , ஒரு வகுப்புக்கோ மட்டும் உரியதன்று ” “ நாம் அனைவரும் ஒரே பரம பிதாவின் பிள்ளைகள். அப்பிதாவை ஹிந்து , முஸ்லீம் , கிறிஸ்துவன் என வெவ்வேறு பெயரால் போற்றுகிறார்கள். “ எம் மதமோ எந்நாடோ அநீதிக்கும் , பொய்மைக்கும் , கொலைக்கும் இடந்தருமாயின் , அது
பூமியின் மீது அழிக்கப்படும். கடவுள் ஒளியாயிருக்கிறார். இருளாயில்லை ; கடவுள் அன்பு ; பகைமையன்று கடவுள் உண்மை , பொய்மையன்று ; கடவுள் ஒருவரே பெரியவர். ” ” மேற்கூறிய யாவும் சமயம் பற்றி காந்தியடிகளின் கருத்துகளேயாகும். அறநெறி என்ற வித்திற்குச் சமயம் என்ற நீர் வார்க்கப்படாவிடின் அதிலிருந்து செடி வளராது. அறநெறி என்ற அடிப்படையில்லாத சமயம் அழிந்தே போகும். ஆகவே , இரண்டும் இணைந்தே செல்ல வேண்டும் என்பது காந்தியின் கருத்து. அறநெறியை அரசியலில் புகுத்தி வெற்றி கண்டவர் காந்தியடிகள். அரசியலும் , பொருளியலும் அறநெறியின்
பாற்பட்டதாக அமைதல் வேண்டும். இறுதியாக , உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருப்பதே ஒழுக்கம். ஒழுக்கத்தைத் தராத கல்வியினால் ஒரு பயனும் இல்லை என்பது காந்தியடிகளின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். மனித குலம் காந்தியடிகளின் அகிம்சை வழியில் சென்று உன்னத நிலையை எய்த வேண்டும். ஒழுக்கம் கல்வியறிவின் பயன் ஒழுக்கமாகும். பன்னூல் பயின்ற ஒருவன் ஒழுக்கமில்லாதவனாயின் அவன் கல்வியாளன் ஆகான். நூலே பயிலாது ஒருவன் ஒழுக்கமுடையவனாயின் அவன் கல்வியாள னாகிறான். நன்றிக்கு வித்து நல்லொழுக்கக் கல்வியேயாகும். இதனையே வள்ளுவர் பெருந்தகை. “
ஒழுக்கத்தினால் எய்துவர் மேன்மை ” என்கிறார். “ கற்ற அறிஞர் குணநலத்தை இழப்பாராயின் , மற்றெல்லாவற்றையும் இழந்தவராவர் 320 என்றும் , “ வெறும் ஏட்டுக்கல்வி மனிதனது ஒழுக்க நிலையை உயர்த்துவதாகா என்பதும் - ஒழுக்க வளர்ச்சி அக்கல்வியினின்றுந் தனித்து நிற்பதென்பதும். எனது வாழ்வில் எனக்கு நன்றாக அறிவுறுத்தியிருக்கின்றன ” என்று கல்வி ைஒழுக்கத்தோடு இயைபுபடுத்தி காந்தியடிகள் கூறியுள்ளார். வள்ளுவப் பெருந்தகையும் “ ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்ப ப்படும் ” என்கிறார். காந்தியடிகள் மூன்றுவிதமான ஒழுக்கங்களை
வலியுறுத்துகிறார். அதாவது தனிமனித ஒழுக்கம் , இல்லற ஒழுக்கம் , சமுதாய ஒழுக்கம் என்பனவாகும். அவர் மூன்று குரங்குகளின் வாயிலாக நமக்கு ஒழுக்கத்தை அறிவுறுத்துகிறார். தீயவற்றைக் கேட்காதே தீயவற்றைப் பார்க்காதே தீயவற்றைப் பேசாதே - என்பதேயாகும். ஆன்ம முன்னேற்றம் ஆன்ம முன்னேற்றத்திற்கு புத்தகப் படிப்பால் ஆன்ம ஞானம் கை கூடாதென்றும் , அதற்கு வாழ்வுப் பயிற்சியே இன்றியமையாதென்றும் வலியுறுத்துகிறார் காந்தியடிகள். ஆன்ம முன்னேற்றம் என்பது அறிவின் பாற்பட்டதே. இறைவனை பற்றிய மெய்ஞானம் பெறும்பொழுது ஆன்மா முன்னேற்றம் அடைகிறது.
ஆன்ம முன்னேற்றம் அடைய உடல் நலம் பேணல் அவசியம். பின்பு மன நலம் பேண வேண்டும். உடலும் மனமும் ஒருங்கிணையும் பொழுது ஆன்ம முன்னேற்றம் அடைகிறது. விலங்கின் இயல்பிலிருந்து மனிதன் தெய்வநிலைக்கு மாறுவதாகும். கவியரசு கண்ணதாசன் இதனையே மிருகத்தன்மை அழிந்து தெய்வத்தன்மை பெற்று மனம் சாந்தி அடைகிறது என்கிறார். ஆன்ம முன்னேற்றத்திற்கு மனத்தூய்மை , பிரம்மச்சரியம் , உண்ணாநோன்பு , கொல்லாமை , கள்ளாமை , கள் உண்ணாமை , பிறர் மனை நோக்கா பேராண்மை போன்றன உறுதுணை புரியும் என்பது உறுதி. 321 பயிற்சி வினாக்கள் அ. ஓரிரு வரிகளில் விடையளி 1.
மறுமலர்ச்சி என்பது யாது ? 2. ஆங்கிலக் கல்வி முறையால் ஏற்பட்ட நன்மைகள் இரண்டினைக் கூறுக. 3. பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர் யார் ? 4. சுவாமி தயானந்தரால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பின் பெயர் என்ன ? 5. சுவாமி தயானந்தர் எழுதிய அரியநூல் எது ? ஆரிய சமாஜம் கூறும் புனிதப்படுத்துதல் என்றால் என்ன ? இராம கிருஷ்ணரின் சீடர் யார் ? 6. 7. 8. 9. 10. மகாத்மா - சொல் விளக்கம் தருக. 11. நாட்டு விடுதலைக்கு மகாத்மா காந்தி மேற்கொண்ட அறப்போர் முறைகள் யாவை ? 12. கல்வி பற்றி காந்தியடிகளின் கருத்துகளைக் கூறுக. 13. இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு
காந்தியடிகளின் சேவையைக் கூறு. பிரம்ம ஞான சபை யாரால் தோற்றுவிக்கப்பட்டது ? மகாத்மா காந்தியின் இயற்பெயர் என்ன ? 14. மதுவிலக்கு பற்றி மஹாத்மா கூறுவன யாவை ? ஆ. ஒரு பத்தி அளவில் அல்லது பத்து வரிகளுக்கு மிகாமல் விடையளி 1. பதினெட்டாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இந்தியாவின் நிலை எவ்வாறு இருந்தது ? 322 2. ஆங்கிலேயர் ஆட்சி , கல்வித் திட்டம் பெண்களின் நிலை உயர ஆற்றிய பணிகளை விவரி. 3. ஆரிய சமாஜம் - விளக்கம் தருக. 4. ஆரிய சமாஜத்தின் கல்விப் பணியை விவரி. 5. சுவாமி தயானந்தர் பற்றி மதிப்பீடு தருக ? 6. மகாத்மாவின் இளமைப்
பருவம் பற்றி நீவிர் அறிவன யாவை ? 7. அஹிம்சைக்கு காந்தியடிகளின் விளக்கம் யாது ? 8. சத்யாக்கிரஹம் பற்றி காந்தியடிகள் கூறுவன யாவை ? இ. ஒரு பக்க அளவில் அல்லது முப்பது வரிகளுக்கு மிகாமல் விடையளி 1. இந்தியாவில் சீர்திருத்த இயக்கத்திற்கான காரணிகளைத் தொகுத்துக் கூறு ? பிரம்ம சமாஜத்தின் கொள்கைகளை விவரி. 2. 3. ஆரிய சமாஜத்தின் கோட்பாடுகள் யாவை ? 4. பிரம்ம ஞான சபை பற்றியும் , அதன் கோட்பாடுகளைப் பற்றியும் விவரி. 5. இராமகிருஷ்ண இயக்கத்தின் நோக்கங்கள் , குறிக்கோள்கள் விவரி. 6. விவேகானந்தர் பொன்மொழிகளைக் கூறுக. 7. சுதேசி
இயக்கம் பற்றிய காந்தியின் கருத்துகளை விவரி. 8. சுயராஜ்ஜியம் பற்றிய காந்தியின் கருத்துகளை விவரி. 9. கூட்டு வழிபாடு பற்றி காந்தியின் கருத்துகளை விவரி. 10. ஒழுக்கம் பற்றிய காந்தியடிகளின் கருத்துகளை விவரி. 323 11. உலகப் பண்பாட்டிற்கு இந்தியாவின் கொடை கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் இன்றும் சீரும் சிறப்புமாக நிலை பெற்றிருப்பதே இந்தியப் பண்பாடு. பல அன்னியப் படையெடுப்புகளாலும் , புரட்சிகளாலும் சமயப் பூசல்களாலும் , இயற்கையின் பாதிப்புகளாலும் , மேலை நாட்டுத் தாக்கத்தாலும் , அழிந்துபோகாமல் இன்றும் இளமை மாறா
நிலையில் இருந்து வருகிறது இந்தியப் பண்பாடு. 11. 1 , பிற நாடுகளில் இந்தியப் பண்பாடு பௌத்த சமயமும் இந்து சமயமும் கீழைநாடுகளின் பல பகுதிகளில் கி.பி. 100 - லிருந்து 1500 வரை பரவியிருந்ததை வரலாறு மூலம் அறிகின்றோம். இந்து சமயம் தென்னிந்தியாவிலிருந்தும் , பௌத்த சமயம் வட இந்தியாவிலிருந்தும் இப்பகுதிகளுக்கு சென்றன. அசோகர் காலத்திலிருந்து இப்பகுதிகளுக்கு சென்றன. அசோகர் காலத்திலிருந்து பௌத்த சமயக் குழுக்கள் மத்திய ஆசியாவின் பல பகுதிகளுக்குச் சென்று பௌத்த மடாலயங்களைத் தோற்றுவித்து பௌத்த சமயத்தைப் பரப்பினர். கிழக்கு
துருக்கிஸ்தானிலிருந்து ( Turkestan ) சீனாவரை பரவியிருந்தது. இப்பகுதிகளில் அகழ் வாராய்ச்சியில் மடாலயங்கள் , ஸ்தூபிகள் , கல்வெட்டுகள் , கையெழுத்து பிரதிகள் போன்றவைகளின் பௌத்த அழிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. திபெத்தில் ஏழாம் நூற்றாண்டில் பௌத்த சமயம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்பதாம் நூற்றாண்டில் திபெத்திய அரசர்கள் பல இந்தியர்களையும் திபெத்திய அறிஞர்களையும் கூட்டிவைத்து சமஸ்கிருத மொழியிலிருந்த பௌத்த சமய நூல்களை திபெத்திய மொழியில் கொணர்ந்தனர். பௌத்த சமயம் கி.பி முதலாம் நூற்றாண்டில் பர்மாவிற்குள் நுழைந்தது. பின்பு
அங்கு நிலைபெற்றது , பர்மாவில் நூற்றுக்கணக்கான பௌத்த விஹாரங்களை இன்றும் காணமுடிகிறது. சீனாவில் நான்காம் நூற்றாண்டில் ஐம்பது பௌத்த சமஸ்கிருத நூல்கள் சீனமொழியில் கொணரப்பட்டன. சீனாவிலிருந்து பௌத்த சமயம் நான்காம் நூற்றாண்டில் கொரியாவிற்கு சென்றது. பின்பு அங்கிருந்து அது ஜப்பானுக்கு வெகு வேகமாகப் பரவியது. அசோகருடைய முயற்சியால் இலங்கையிலும் பௌத்த சமயம் வெகு வேகமாகப் பரவி நிலையான தன்மையைப் பெற்றது. இந்து சமயமும் சாவகம் , பாலி , போர்னியோ , மலேயா , சயாம் , கம்போடியா சம்பா போன்ற கீழை நாடுகளில் பரவி அங்கு தனது
ஆதிக்கத்தை செலுத்தியது. இவற்றையெல்லாம் பல வரலாற்று சான்றுகளும் அகழ்வாராய்ச்சிகளும் கல்வெட்டுகளும் , இலக்கியங்களும் , அழகு கலைகளும் பழக்க வழக்கங்களும் நமக்கு மிகத் தெளிவாக எடுத்துகாட்டுகின்றன. சமய நூல்களும் , கல்வெட்டுகளும் , இலக்கியங்களும் அழகுக் கலைகளும் , பழக்க வழக்கங்களும் நமக்கு மிகதெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. சமய நூல்களும் , அழகுக் கலைகளும் இந்தியாவின் சமய நூல்களான வேதங்கள் , உபநிடதங்கள் , வீர காவியங்கள் , பகவத் கீதை , பௌத்த சமய நூல்கள் இவை அனைத்தும் மேலை நாட்டு கீழை நாட்டு மொழிகளில் மொழியாக்கம்
செய்யப்பட்டு உலகெங்கும் பரவின. இந்தியக் கட்டடக்கலை , ஓவியக்கலை , இசை , நடனம் , சிற்பக்கலை இவற்றை மேலை நாட்டார் பாராட்டியதுடன் அப்பாணிகளை அங்கு புகுத்தவும் தலைப்பட்டனர். 11.1.1. பௌத்த சமயம் கீழை நாடுகளில் பெரும் செல்வாக்குடன் இன்றும் திகழ்ந்து வருவது பௌத்த சமயம். அது தோன்றிய நாட்டில் சிறப்பான நிலையை பெற்றிராவிடினும் , இந்நாடுகளில் நிலையான இடத்தை பெற்றுள்ளது , இச்சமயம் வலியுறுத்தும் அஹிம்சைக் கோட்பாடு அனைவராலும் இன்றும் போற்றிப் புகழப்பட்டு ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. இச்சமயத்தை சுமந்துசென்ற பௌத்த துறவிகள்
அந்நாடுகளுக்கு இந்நாட்டின் பண்பாட்டு நாகரிகக் கூறுகளையும் அழகுக்கலைப் பாணிகளையும் , பழக்க வழக்கங்களையும் உடன் சுமந்து சென்றனர். இறைவனை அடைய இந்து சமயம் மூன்று முக்கிய நெறிகளை கூறுகின்றது. அவை முறையே ஞான மார்க்கம் ( அறிவு நெறி கரும 326 மார்க்கம் ( கடமை நெறி ) பக்தி மார்க்கம் ( அன்பு நெறி ) எனப்படுபவை. வாழ்வில் வளம்பெற்று இறைவன் திருவடிகளை அடைய இந்த மூன்று நெறிகளும் மிகச் சிறந்தவை எனக் கருதப்படுகின்றன. இந்நெறிகளை மேலை நாட்டுத் தத்துவ ஞானிகளும் சமயச் சான்றோர்களும் பாராட்டுகின்றனர். 11.1.2. சமஸ்கிருதமும் தமிழும்
சமஸ்கிருத மொழியில் உள்ள காளிதாசனின் நாடகங்கள் , இராமாயணம் , மகாபாரதம் போன்ற வீர காவியங்கள் , பகவத்கீதை உபநிடதங்கள் , வேதங்கள் போன்றவை மேலை நாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அவற்றில் பொதிந்துள்ள சமய , தத்துவக் கருத்துக்களை போற்றி பாராட்டி உலகமே பின்பற்ற முயல்கின்றது. காளிதாசனின் சாகுந்தல நாடகமும் இராமாயணமும் இன்றும் உலகெங்கும் நாடகங்களாக நடிக்கப்பட்டு வருகின்றன. “ வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு ”. திருக்குறள் உலகத்தின் முக்கிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது , நமக்கு மிகுந்த
பெருமையை அளிக்கக் கூடிய ஒன்று. ஜெர்மானியத் தத்துவ ஞானிகளாகிய கதேஸ்கோப்பளார் , பிக்டே ஹெகல் போன்றோர் சமஸ்கிருத மொழியில் ஈர்க்கப்பட்டு இந்திய இலக்கியங்களை பயின்று அவற்றால் தாங்கள் பெற்ற அறிவுச் செல்வத்திற்காக இந்தியாவை மிகவும் பாராட்டியுள்ளார்கள். இம்மைக்கும் மறுமைக்கும் அமைதியையும் ஆனந்தத்தையும் தருபவை உபநிடதங்கள் என ஸ்கோப்பளார் கூறுகின்றார். இதே போன்று எமர்சன் , தோரோ , வால்ட்விட்மென் போன்ற அமெரிக்க அறிஞர்களும் இந்திய இலக்கியங்களுக்கும் தத்துவ நூல்களுக்கும் தாங்கள் கடப்பாடுடையவர்கள் எனக்
கூறிக்கொள்கின்றார்கள். 11.1.3. இந்திய விடுதலையும் மகாத்மா காந்தியும் குருதி கொட்டாமல் , குழப்பம் விளைவிக்காமல் பிரிட்டானியரிடமிருந்து அஹிம்சை நெறியைக் கடைபிடித்து மகாத்மா காந்தி இந்நாட்டிற்கு விடுதலை பெற்றுத்துத் தந்த இச்செயல் உலகெங்கும் பாராட்டும் நிலையை உருவாக்கியுள்ளது. இதே வழிமுறைகளை மார்டின் லூதர்கிங் போன்றோர் தங்கள் 327 செயல்களைச் சாதித்துக்கொள்ள கடைப்பிடித்தனர். இவர் கையாண்ட சத்தியாக்கிரக இயக்கத்தையும் அஹிம்சை நெறி முறைகளையும் இவருக்கு முன்பு எவரும் உலக வரலாற்றில் அரசியல் அரங்கில் பெரிய அளவில்
நடைமுறைப்படுத்தியதில்லை. 11.1.4. தேர்தல்கள் உலகிலேயே மிகப் பெரிய குடியரசு நாடு இந்தியா. இக்குடியரசு நாட்டில் இந்தியர்கள் சுதந்திரம் பெற்ற பின்பு பல முறை தேர்தல்கள் அமைதியாக , வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இவை அனைத்தும் சட்டத்தின் அடிப்படையில் ஜனநாயக முறைப்படி மிக நல்ல முறையில் நடந்துள்ளன. இதை இன்றும் பல நாடுகள் பின்பற்றி வருகின்றன. 11.1.5. அறக் கோட்பாடு வாழ்வின் அடிப்படைக் கோட்பாடாக அமைந்திருப்பது அறமாகும். அறநெறியில் நின்று , பொருள் ஈட்டி அறவழியில் இன்பத்தைத் துய்த்து வீடு பேறு அடைய வேண்டும் என்பதற்காக
உறுதிப் பொருள்கள் நான்கில் அறத்தை அல்லது தருமத்தை முதன் முறையாக நமது சமயம் வைத்துள்ளது. இந்திய நாட்டை நம் முன்னோர் “ தரும பூமி ” என்றழைத்தனர். நமது சமயத்தையும் தருமம் என்ற சொல்லால் அழைத்தனர். இத்தரும பூமி ஆன்ம விடுதலையை மிகவும் வலியுறுத்துகின்ற நாடு. இதை மையமாகக் கொண்டே இந்த நாட்டின் பண்பாடு அமைந்துள்ளது. இக்கோட்பாடும் உலகெங்கும் உள்ள மக்களுக்கு உகந்த கோட்பாடாகும். 11.1.6. பஞ்ச சீலம் பஞ்சசீலக் கோட்பாடும் இந்தியப் பண்பாட்டு உணர்வை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்டது அல்லலுறும் உலகிற்கு அருமருந்தாகத் திகழ்வது
இப்பஞ்சசீலக் கோட்பாடாகும் அவையாவன : 1. அமைதியான கூட்டு வாழ்வு 2. பிறநாட்டு நடவடிக்கைகளில் தலையிடாதிருத்தல் 328 3. வலியப்போருக்குச் செல்லாமை 4. நாட்டைக் கூறுபோடாமை 5. வாணிக ஒப்பந்தம் 11.1.7. வேறு சில இந்தியப் பரிசுகள் இந்தியா குறிப்பாக ஐரோப்பியர்கட்கு நறுமணப் பொருள்களைப் பயன்படுத்தும் வழிமுறைகளைக் கற்றுத் தந்தது. இறைச்சியுணவை உட்கொள்ளும் அவர்கள் இப்பொருள்களை இந்தியாவிலிருந்து பெற்று வருகிறார்கள். நெல் , கரும்பு , பருத்தி போன்றவை இங்கிருந்து மேலை நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு உலகின் பல பாகங்களிலும் இன்று
பயிரிடப்பட்டு வருகின்றன. சதுரங்க விளையாட்டு , அனைத்து நாடுகளும் பின்பற்றும் எண்முறை , பதின்கூறான கணக்கீடு முறை ( Decimal System ) போன்றவை இந்தியா உலகுக்களித்துள்ள பரிசுகளாகும். 11.1.8. பல்வேறு இயக்கங்கள் இராமகிருஷ்ணன் இயக்கம் , பிரமஞான சபை , பிரமசமாஜம் , ஆரியசமாஜம் போன்றவை உலகெங்கும் தங்கள் கிளைகளை நிறுவி. இந்நாட்டின் வளமிக்க சமத்துவ சமுதாயச் சீர்திருத்தக் கோட்பாடுகளை உலகுக்கு உயர்ந்த கொடையாக வழங்கியுள்ளன. 11.1.8.1. மனித நேயம் இந்தியப்பண்பாடானது , மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டது. உயிர்களிடத்தில் அன்பு
காட்டுதல் , எவ்வுயிரையும் தன்னுயிர் போல் பாவிக்கும்பொழுது இறைவனின் அருள் கிட்டும் என்பதையும் உணர்த்துகின்றது. பண்பாடு மனித நேயத்தை மட்டுமின்றி ஆன்ம நேயத்தை உலகிற்கு அளித்துள்ளது. 11.1.8.2. உயர்ந்த தத்துவங்கள் இப் பண்பாடு உயர்ந்த தத்துவங்களின் மொத்த கூறுகளாகவே விளங்குகின்றது. மனிதன் வெறும் சடப்பொருள் அன்று. அவனுக்கு ஆன்மா உண்டு. அந்த ஆன்மா அழிவற்றது. ஆன்மா வீடு பேறு அடைவதே இதன் நோக்கமாகும். 11.1.8.3 சிறந்த உலகத்தரம் வாய்ந்த இலக்கியங்கள் ‘ பிறன்மனை நோக்காப் பேராண்மையினையும் , சகோதரத்துவத் தையும் ’ இராமாயணம்
எடுத்தியம்புகிறது. ‘ தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் ’ என்று மகாபாரதம் உலகத்திற்கு உணர்த்துகிறது. ரிக் , யஜூர் , சாமம் அதர்வணம் போன்ற வேதங்கள் , பகவத்கீதை , திருக்குறள் , காளிதாசரின் சாகுந்தலம் போன்றவை இன்றும் உலக மக்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றன. பகவத்கீதையானது மனிதகுலத்திற்காக இந்திய நாட்டின் கொடையாக வழங்கப்படுகிறது. 11. 1. 8. 4. தாய்மை , பெண்மை பாரத நாட்டின் பண்பாட்டுக் கூறுகளில் மிக முக்கியத்தன்மை வாய்ந்த ஒன்று அன்னை வழிபாடு , பாரதத்தாய் என்று நம் நாட்டை தாயின் பெயரால்
போற்றுகின்றோம். தாய்நாடு என்றே அழைத்து மகிழ்கிறோம். ஆறுகள் , மலைகள் இவற்றினை பெண்மையின் பெயராலேயே மிகவும் அழைக்கப்படுகின்றது. பெண்மையைப் போற்றாத எந்த நாடும் மேன்மை அடையாது என்பதை இந்தியப் பண்பாடு உலகிற்கு எடுத்துரைக்கின்றது. 11. 1. 8. 5. அகிம்சை சத்யம் என்பது உள்ளது அல்லது உண்மையெனப் பொருள்படும் , இவ்வுலகம் சத்யத்தின் மீது கொண்ட நம்பிக்கையில் தான் இயங்கிக்கொண்டுள்ளது. ' சத்தியம் தவறாத உத்தமராக வாழவேண்டும் ’ என்பதை வலியுறுத்துகின்றது. 11. 1. 8. 6. அமைதி சுமார் பத்தாயிரம் ஆண்டுகளாக இந்தியா எந்தவொரு நாட்டின்
மீது வலியச் சென்று போர் தொடுத்தாக வரலாறு இல்லை. எத்தனையோ படையெடுப்புகளால் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் கூட , அது அமைதியையே நாடுகிறது. மேலும் உலக அமைதிக்காக இன்றுவரை உலக அரங்கில் போராடிவருகிறது. 11. 1. 8. 7. நுண்கலை கலைகளின் பிறப்பிடம் இந்தியாவாகும். ஆய கலைகள் அறுபத்தி நான்கு என்பர். இக்கலைகள் எழில் உணர்வால் 330 தோன்றியவை. இசை , கவிதை , ஓவியம் , சிற்பம் , கட்டடக்கலைப் போன்றன நுண்கலைகளில் போற்றத் தக்கன. இவை மனிதப் பண்பாட்டை வளர்க்க இன்றியமையாதன. இவை மனிதன் முழுமையான , மகிழ்ச்சியான வாழ்வு வாழப்பெரிதும் துணை
புரிகின்றன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு நடனம் என்றும் , வட இந்திய தென்னிந்திய இசை என்றும் இந்திய இசை பிரிக்கப் பட்டுள்ளது. பரதம் , கதகளி , கதக் , மோகினியாட்டம் , குச்சிப்புடி , ஓடிசி போன்ற நடளங்கள் மூலமாக இந்தியப் பண்பாட்டை உலக நாடுகளில் பரவச் செய்கின்றது. 11.1.8.8. யோகா ‘ யோகா ’ என்பது ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இணைப்பதேயாகும். உடலும் , மனமும் ஒன்றிணைந்து செயல்படுவதே யோகம் ஆகும். உடலை போற்றுதல் மட்டும் போதாது உள்ளத்தையும் பண்படுத்துதலின் அவசியத்தை யோகா கல்வியின் மூலம் உலகிற்கு இந்தியப் பண்பாடு
எடுத்துரைக்கிறது. 11.1.8.9. எளிமையானவாழ்வும் உயர்ந்த சிந்தனைகளும் இப்பண்பாடு எளிமையான வாழ்வினை வலியுறுத்துகின்றது. அக்காலத்தில் இயற்கை உணவு , உண்ட காரணத்தால் , நோய்கள் நீங்கி மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தனர். காந்தியடிகளின் கதர் ஆடை இன்றளவும் உலக மக்களால் போற்றுதற்குரியதாகும் , எனவே எளிய உடை , உணவு பழக்கவழக்கங்கள் போன்றவற்றை உலகக்கொடையாக இந்தியப்பண்பாடு வழங்கியுள்ளது. காடுகளில் வசித்த ஞானிகள் மூலமாக உயர்ந்த சிந்தனைகள் நமக்கு கிடைத்துள்ளன. ஸ்ருதி , ஸ்மிருதிகள் போன்றவை உயர்ந்த உள்ளங்களின் சிந்தனைத் தொகுப்பேயாகும்.
எனவே , இந்தியப் பண்பாடு தியாக வாழ்வை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளது. முடிவுரை இன்றும் ஐக்கிய நாட்டுச் சபையில் இந்தியா உலகெங்கும் அமைதியை நிலைநாட்டப் பெரும் பாடுபட்டு வருகிறது. அமைதியை நாடும் இந்நாட்டினர் பிறநாட்டு மக்களுடன் அமைதியுடன் வாழ விரும்புவதில் வியப்பொன்றுமில்லை. 12. இந்தியப் பண்பாடும் , சுற்றுச் சுழல் கல்வியும் 12,1 , சுற்றுப்புறச் சூழல் கல்வி - விளக்கம் காக்கை குருவி எங்கள் சாதி - நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்ற பாரதியின் கருத்தினை உள்ளடக்கியதே இந்தியப் பண்பாடும் , சுற்றுப்புறச் சூழலும்
ஆகும். இயற்கையின் மிகப்பெரிய உள்ளடக்கம் சுற்றுப்புறமும் , ( environment ) மற்ற உயிரினங்களும் ஆகும். இவை இரண்டிற்கு இடையே உள்ள இந்த உறவுகளையெல்லாம் பற்றி கற்கும் கல்விக்கு சூழ்நிலையியல் ( Econology ) என்று பெயர். வீடு என்று பொருள் உணர்த்தும் ஆய்காஸ் என்ற கிரேக்கச் சொல்லும் , கற்றல் என்ற பொருள் உணர்த்தும் லோகாஸ் என்ற கிரேக்கச் சொல்லும் சேர்க்கப்பட்டு ‘ யிகோலஜி ’ ( Ecology ) என்ற சொல் உருவாக்கப்பட்டது. உயிருள்ளவைகளும் , ( Biotic ) உயிரற்றவைகளும் ( Abiotic ) அடங்கிய இயற்கையின் தொகுப்பிற்கு சூழ்மண்டலம் அல்லது
சூழ்நிலைத் தொகுப்பு ( Ecosystems ) எனப்படும். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதன. சுவாசிப்பதற்கு நல்ல தூய காற்று , பருகுவதற்குச் சுவையான நீர் மற்றும் ஊட்டச்சத்து மிக்க நல்ல உணவு ஆகியவை ஆகும். இவை அனைத்தும் கொண்டதே தூய்மையான சுற்றுச்சூழல் ஆகும். மலை , நதி , கடல் , சூரியன் , ஆகாயம் , காற்று மற்றும் விலங்கினங்கள் இவற்றைப் பற்றி அறிவதும் அவற்றில் மனிதனின் பங்கிளைப் பற்றியும் தெரிந்து கொள்வதே சுற்றுப்புறச் சூழல் கல்வியாகும். அதாவது இயற்கையோடு இயைந்த வாழ்வு என்பதேயாம். Page 191 of 201 333 புல்லாகிப் பூண்டாகி
பல்விருகமாகிப் பலவகைப் பிறவி களெடுத்து மனிதனாய்ப் பிறப்பெடுப்பது இவ்வையத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்காகவே. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்றில்லாது இப்படித்தான் வாழவேண்டுமென்று வாழ்வதுதான் திட்டமிட்ட வாழ்க்கை. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆனால் இன்றுள்ள உலகில் மனிதன் தான் விரும்புவதுபோல் உடல்நலத்துடன் வாழ முடிவதில்லை. நமது உலகம் அழிந்து வருகிறது. ஆனால் இந்த அழிவை இயற்கை உருவாக்கவில்லை. மனிதர்களாகிய நாம் உருவாக்கி வருகிறோம். நம் ஒவ்வொருவருக்கும் இரண்டு வீடுகள் இருந்து வருகின்றன. ஒன்று நாம் வாழ்ந்து வரும்
வீடு , மற்றொன்று நாம் வாழ்ந்துவரும் உலகம். வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கிறோம். ஆனால் உலகம் என்ற இன்னொரு வீட்டை மாசுபடுத்தி வருகிறோம். உலகம் என்ற வீட்டை நாம் தூய்மையாக வைத்துக்கொள்ளா விட்டால் நம் நாட்டைச் சுற்றிலும் இருந்துவரும் பலதரப்பட்ட மாசு நம் வீட்டையும் தூய்மையற்றதாக மாற்றிவிடும். ஆனால் , நமது பண்பாடு எவ்வாறு சுற்றுப்புறத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதை பின்வரும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் காண்போம். 12 , 2 , இந்திய சுற்றுச்சூழல் “ பாரதநாடு பழம் பெரும் நாடு நீர் அதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் ”
என்றான் பாரதி. இப்பாரத பூமி பண்பாட்டின் சிகரமாக திகழ்கின்றது. இந்தியப் பண்பாட்டிற்கு இந்தியச் சுற்றுச்சூழல் ஒரு சிறப்பம்சமாகும். இந்தியா கிழக்கே வங்காள விரிகுடாவாலும் , மேற்கில் அரபிக்கடலாலும் , தெற்கே இந்து மகா கடலாலும் , வடக்கே இமயமலையாலும் சூழப்பட்டுள்ளது. இந்தியாவின் அமைவிடம் மிகச் சிறப்பு வாயந்ததாகும். உலகிலேயே அதிக மழைபெறும் இடம் சிரபுஞ்சியாகும். உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் 334 இங்கு தான் அமைந்துள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் பனியாறுகளில் மிக முக்கிய ஆறு கங்கையாகும். இது இந்தியாவின் ‘
புனிதநதி ’ என்று அழைக்கப்படுகின்றது. கங்கை , யமுனை , சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளின் சங்கமமானது ' திரிவேணி சங்கமம் ’ என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவை கடகரேகையானது தீபகற்ப இந்தியா , புறதீபகற்ப இந்தியா என இரண்டாகப் பிரிக்கிறது. இங்கு பாலைத் தாவரங்கள் முதற்கொன பசுமை மாறாத் தாவரம் வரை பரவியுள்ளது. 12.2.1. மலைகள் நம் பண்பாட்டில் அனைத்து மலைகளையும் கடவுள் எனப் போற்றுகின்றோம். எல்லா மலைகளையும் இறைவனின் வடிவமாக பாரதப் பண்பாடு ஏற்கின்றது. கைலாய மலையை சிவன் உறையும் இறைத்தன்மை உடையது என்று சொல்கிறார்கள். திருப்பதிமலையும்
இறைவன் வடிவமாகும். திருமால் அங்கு உறைகின்றார். ஆகவே , அதனைக் காலால் மிதியாமல் முழங்காலிட்டே தவழ்ந்து ஏறினார் ஒரு வைணவப் பெரியார். ' காரைக்கால் அம்மையாரும் ' கைலாயத்திற்குத் தலையால் நடந்து போனதாகச் சொல்வார்கள். பராசக்திக்கு விந்திய மலையாகும். அதனால் ‘ விந்தியாசல நிவாசினி ” என்றும் , சாமுண்டி மலையின் மீது வாசம் பண்ணுவதால் ‘ சாமுண்டீஸ்வரி ’ என்றும் போற்றப்படுகின்றாள். திருச்சியில் பிள்ளையார் மலை உச்சியில் இருப்பதால் ' உச்சிப் பிள்ளையார் ’ என்று பெயர் பெறுகிறார். சபரிமலையை ஐயப்பனுக்குச் சமர்ப்பிக்கிறோம். குன்று
இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் என்பதால் முருகளை ' குன்றுதோறும் ஆடுபவன் ' என்பர். திருத்தணியும் , திருப்பரங்குன்றமும் , பழனியும் , விராலி மலையும் அதற்குச் சான்று. ' திருவண்ணாமலையே சிவனின் வடிவம் ’ என்று மகரிஷி கூறியுள்ளார். ஆகையால் , இறைவனையே “ அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே ” என்று ஒருவர் பாடினார். எனவே நமது பண்பாட்டில் மலை ஒரு முக்கிய கூறாகச் செயல்பட்டு வருகின்றது. 335 12. 2.2. நதிகள் இந்தியப் பண்பாட்டில் அனைத்து நதிகளும் இறைவன் மயம். சில நதிகளுக்கு இறைவனின் திருநாமத்தையே வைத்திருக்கிறார்கள்.
உதாரணம் கிருஷ்ணா , பிரம்மபுத்திரா போன்றவைகள். சில நதிகளோடு இறைவனின் பெருமையை இணைத்துச் சொல்கின்றோம். கங்கை திருமாலின் திருவடியை கழுவுகின்றது என்றும் , சிவபெருமானின் முடியில் உறைகிறது என்றும் கூறுகிறோம். யமுனை நதியில் கண்ணன் விளையாடினான். சரயு நதிக்கரையில் ராமன் வாழ்ந்தான். நர்மதை நதியில் ஒவ்வொரு கூழாங்கல்லும் சிவனின் வடிவம் என்ற பழமொழிகள் கூறுகின்றன. கங்கையோடு தொடர்புடையதால் முருகனுக்கு ' காங்கேயன் ’ என்று பெயர். ஆடி பதினெட்டாம் பெருக்கில் நதிகளின் பொங்கி வரும் புது நீரை வழிபடுகின்றோம். இவ்வாறு நதிகள் யாவும்
இந்தியப் பண்பாட்டில் ‘ பரம்பொருளின் வடிவம் ’ என்று நம் மக்கள் நம்புகின்றார்கள். நதிகள் பெண்மைத்தன்மையுடையன. எனவே அவற்றைத் தாயாகப் போற்றுகிறோம். 12.2.3. மரங்கள் நயக்ரோத , உதும்பர , அசுவத்த என்ற மரங்கள் விஷ்ணுவின் நாமங்கள் என்று போற்றப்படுவதாக. விஷ்ணு சகஸ்ரநாமம் கூறுகிறது. அதாவது அத்திமரம் , ஒதிய மரம் , அரச மரம் ஆகிய யாவுமே இறைவனின் திருவடிவங்களாகப் போற்றப் படுகின்றன. அதனால் இறைவனின் உருவத்தை மரக்கட்டைகளாலும் செய்து வழிபடும் வழக்கம் பாரதத்தில் உண்டு. நம் மரபில் வேப்ப மரத்தை மாரியம்மனோடு இணைத்துப் பேசுகின்றோம்.
ஆலமரத்தின் அடியில் அறிவுக்கடளாகிய தட்சிணா மூர்த்தியும் , அதன் இலையில் பாலகிருஷ்ணன் படுத்திருப்பதாக நாம் பேசுகின்றோம். திரிவேணி சங்கமத்தில் ஆலமர வடிவத்தில் விஷ்ணு வணங்கப்படுகிறார். “ கதம்ப வனக்குயிலே ” எனப் பராசக்தியை கதம்ப மரத்தோடு இணைத்துப் பேசுகின்றோம். முருகனையும் ' கடம்பன் ' என்று கூறுவது வழக்கம். அரசமரத்திற்கு பிள்ளையார். இதனால் தான் 336 ஒவ்வொரு மரத்திலும் இறைவன் இருப்பதாக உணர்ந்த நம் முன்னோர்கள் ' தலவிருட்சம் ' என்ற பெயரில் ஒவ்வொரு திருத்தலத்திலும் புனிதமான மரங்களை வணங்க வேண்டுமென்று விதித்து
இருக்கிறார்கள். ‘ குறும்பலா ’ குற்றாலத் தலவிருட்சமாகும். திருவானைக் காவலில் ‘ நாகலிங்க மரம் ’ வணங்கப்படுகிறது. ' புன்னை மரத்தை ' மயிலையிலும் , மாமரம் காஞ்சிபுரத்திலும் தலவிருட்சமாகப் போற்றப்படுகின்றன. ‘ பனைமரம் ’ திருப்பனந்தாளில் தெய்வமாக வணங்கப்படுகிறது. நெல்லிமரத்து நிழலில் சித்தர்கள் வாழ்ந்தார்கள். இப்படி எல்லா மரங்களும் தெய்வ வடிவமாக வணங்கப்படுகிறது. இதனையே , ' ஈசா வாஸ்யம் இதம் ஸர்வம் ' என்று பாரதப்பண்பாடு விளங்குவதோடு அதன் அடிப்படையிலும் அமைந்துள்ளது. இன்றைய அறிவியலும் மரங்களும் உயிருள்ளவையென கூறுகிறது.
12.2.4. பறவைகளும் விலங்குகளும் " எங்கு எங்கு பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய் அங்கு அங்கு இருப்பது நீ அன்றோ பராபரமே ” என்று தாயுமானவர் கூறுகின்றார். திருமாலின் அவதாரங்களில் மீன் , ஆமை , பன்றி , சிங்கம் ஆகிய வடிவங்கள் அடங்கும். கருடனைத் திருமாலும் , காளையை சிவனும் , முஞ்சூற்றினை பிள்ளையாரும் , மயிலை முருகனும் புலியை ஐயப்பனும் , கிளியை மீனாட்சியும் , சிங்கத்தைப் பராசக்தியும் , யானையை இந்திரனும் வாகனமாய் ஏற்றிருப்பது அவற்றின் இறைத் தன்மையை அனைவரும் உணர வேண்டும் என்பதற்காகத்தான். எருமையைக் கூட எமனின்
வாகனம் என்கிறோம். காக்கை சனிபகவானுக்கும் , ஆந்தை இலக்குமிக்கும். அன்னம் சரஸ்வதிக்கும் வாகனமாகும். பாம்பைத் திருமாலின் , படுக்கையாகவும் சிவனின் அணியாகவும் வழிபடுகின்றோம். கோகுல கண்ணனை பசுக்களோடு சேர்ந்து தியானிக்கிறோம். இப்படி விலங்குகள் , பறவைகள் அனைத்தும் ஏன் உயிர்கள் அனைத்தும் தெய்வத்தன்மை பெற்றவை என்று இந்தியப் பண்பாடு கருத்துரைக்கின்றது. காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் பல்லியையும் , இராஜஸ்தான் கோயிலில் எலிகளையும் திருவானைக் காவல் கோயிலில் சிலந்திப் பூச்சிகளையும் தெய்வத்தோடு சேர்ந்து வணங்கி வருகின்றோம். 12.
2.5. கடலும் , காடும் காட்டில் தவம் புரிந்த ஞானிகள் ரிஷிகள் தாங்கள் உணர்ந்த யாவற்றையுமே இறைவடிவமாகக் கண்டனர். இதனையே நம் வேதங்கள் “ ஆரண்யம் ’ ” என்றழைத்து மகிழ்ந்ததுண்டு. இராமயணத் திலும் ‘ ஆரண்ய காண்டமே ' முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆகவே , காட்டையும் இறைவனாக அவர்கள் கண்டது வியத்தகு ஒன்றாகும். கடல் திரையறியாப் பெருங்கடலே என்று சிவபெருமானை புலவர் ஒருவர் போற்றிப் புகழ்ந்தார். இன்றைக்கும் ஆடி அமாவாசைக்கும் , தை அமாவாசைக்கும் , கிரகணங்கள் அன்றும் கடலில் நீராடுதல் நமது வழக்கம். உலகிலுள்ள தீர்த்தங்கள்
அனைத்திற்கும் புனிதத்தன்மை தருபவன் இறைவன். திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் எழுந்தருளி யுள்ளான். திருபாற்கடலில் திருமால் பள்ளி கொண்டுள்ளான். இலக்குமி கடலில் பிறந்தவள் , எனவே ‘ கடல் மகள் ’ என்றும் அழைக்கப்படுகிறாள். எனவே , இந்தியப் பண்பாடு கடலினையும் தெய்வமாகக் காண்கின்றது. 12.2.6. பஞ்சபூதங்கள் நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் ஆகியன ஐந்தும் பஞ்சபூதங்கள் என அழைக்கப்படுகின்றன. தமிழகத்தில் 338 சிவபெருமானின் ஐந்து தலங்களும் பஞ்சபூதத் தலங்களாக வழிபடப்படுகின்றன. காஞ்சி ஏகாம்பரநாதரும் ,
திருவாரூர் , இராமேஸ்வரம் ஆகிய திருத்தலங்களில் சிவன் மண் வடிவத்தில் வணங்கப்படுகிறார். " மண்ணை இருந்து துழாவி வாமனன் மண்ணிது வெண்ணும் என்று ஆழ்வார் பாடுகின்றார். திருவானைக் காவலில் சிவபெருமான் நீர் வடிவத்திலும் காற்று வடிவத்தில் காளத்தியிலும் , சிவபெருமான் வணங்கப்படுகிறார். மேலும் , ஆகாய வடிவத்தில் சிதம்பரத்திலும் , ஜோதி ( நெருப்பு ) வடிவத்தில் திருவண்ணாமலையிலும் இறைவனை போற்றி வணங்குகின்றோம். 12 , 3. இயற்கையோடு இயைந்த வாழ்வு இந்தியப் பண்பாட்டின்படி இயற்கையின் அழகான அமைப்பில் புழு , பூச்சி முதல் மனிதன் வரை
அனைவருக்கும் ஒரு நிரந்தரமான மதிப்புமிக்க இடம் உண்டு. மனிதன் தான் வாழ்வதற்கு எப்படி உரிமை உண்டோ , அதைப்போலவே துளசிச் செடிக்கும் , அருகம்புல்லுக்கும் , வில்வ மரத்துக்கும் , விஷத்தன்மையுடைய ஜீவராசிகளுக்கும் உரிமையுண்டு. இயற்கையில் மனிதன் மதிக்கத் தகுந்தவனாக இருப்பதைப் போலவே , அனைத்து உயிரினங்களும் , கடல் , நதி , மலைகளும் , காடுகளும் போற்றத்தக்கவை. இறைத்தன்மை வாய்ந்தவை. தனக்குள் இருக்கும் இறையம்சத்தை வெளிக்காட்ட வல்லவை என்று இந்தியப் பண்பாடு எடுத்துரைக்கின்றது. ஆகவே தான் புராணங்களில் பசுக்களும் , யானைகளும் ,
பாம்பும் எலியும் கடவுளை வணங்கி பெருமை அடைந்ததாக நாம் கேள்விப்படுகின்றோம். பாரதப் பண்பாட்டில் அறிவியல் இயற்கையோடு இணைந்து மனிதன் வாழவேண்டும் என்கிறது. இயற்கையை இயற்கையின் போக்கில் விடுவது நலம். அதனை போற்றுதல் நமது கடமை. மனிதன் தன்னுடைய அன்பை , தன்னலமின்றி , சுற்றத்தை மீறி மனித குலம் முழுவதும் செலுத்த வேண்டும். உயிருள்ள அனைத்தையும் போற்றிப் பாதுகாத்தல் 339 வேண்டும். படைப்புகள் அனைத்தையும் நேசிக்க வேண்டும். இதனையே “ வள்ளலாரும் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் , பசியால் இளைத்தேன் ” என்று உரைக்கின்றார்.
இப்படிப் படைப்பு முழுவதிலுமே தன்னையே காண மனிதனுக்குக் கற்றுத் தருவது இந்தியப் பண்பாடாகும். நாம் எல்லோரும் விரும்புவது வேண்டுவது , வாழ்க்கையில் மகிழ்ச்சியாக , இன்பமாக இருக்க வேண்டும் என்பது தான். உடலும் , உள்ளமும் நலமாகவும் , வாழ்வு வளமாகவும் இருந்தால் இன்பத்திற்கு குறை இருக்காது. சுற்றுச் சூழலையும் பண்பாட்டையும் நாம் பாதுகாப்போம் எனில் நம் வாழ்வு மட்டுமல்லாது. நம் வருங்கால சந்ததியினர் வாழ்வும் நலமடையும். 12 , 4. சுற்றுப்புறச் சூழலில் மாணவர்களின் பங்கு 1. மாணவர்கள் தங்கள் வகுப்பறையையும் , விளையாட்டு
மைதானத்தையும் தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும். இது அவர்களின் தலையாய கடமையாகும். 2. மக்கள் தொகைப் பெருக்கத்தினால் ஏற்படும் விளைவுகளை மாணவர்கள் உணர்தல் வேண்டும். மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி மக்களிடையே எடுத்துரைத்தல் வேண்டும். சுற்றுச் சூழல் கேடு அடைவதற்கு இதுவும் ஒரு காரணம் என அறிதல் அவசியம். 2. “ வீட்டுக்கு ஒரு மரம் ” “ நட்டமரங்கன்றுகளை காப்போம் ” என்ற அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். புதிய காடுகளை உருவாக்க வேண்டும். 3. " மரம் நடுவோம். மழை பெறுவோம் " என்பதற்கு
ஏற்ப , மாணவர்கள் தங்கள் வீட்டில் ஒரு சிறுசெடியாவது வளர்க்க வேண்டும். 4. புகை கக்கும் வண்டிகளின் பயன்பாட்டைக் குறைத்தல் வேண்டும். சிறிய தூரத்திற்கு நடந்து செல்ல பழக வேண்டும். முடிந்தவரை மிதிவண்டிகளை பயன்படுத்துதல் வேண்டும். 5. மின்சக்தியை பயன்படுத்துவதை முடிந்த மட்டும் குறைத்து கொள்ள வேண்டும். 340 6. அறிவியல் முன்னேற்றத்தாலும் தேவைகளாலும் கண்டு பிடிப்புகள் அதிகரித்துவிட்டன. இதன் காரணமாக தொழிற் சாலைகள் பெருகி விட்டன. அத்தொழிற்சாலைகள் ஏற்படுத்தும் கழிவுகள் சுற்றுப்புறத்தை மாசு அடையச் செய்கின்றன. எனவே , தேவைகளை
குறைத்து எளிய வாழ்வு வாழப் பழகிக் கொள்ள வேண்டும். 7. சுற்றுப்புறத்துத் தூய்மை பற்றிய விழிப்புணர்வினை மக்களிடையே எடுத்துச் சொல்ல வேண்டும். “ சுத்தம் சோறு போடும் ” “ கந்தையாளாலும் கசக்கிக் கட்டு ” “ கூழானாலும் குளித்துக் குடி ” போன்ற பழமொழிகளின் பொருளை மக்களுக்கு உணர்த்தல் வேண்டும். 8. நாம் மட்டும் தூய்மையாக இருந்தால் போதாது. நாம் வாழும் உலகத்தையும் , சுற்றுச்சூழலையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது நமது கடமையென உணர்தல் மிக அவசியம். 9. நம் பண்பாட்டின் முக்கியத்துவம் அறிதல் வேண்டும். இந்தியப் பண்பாடு
எவ்வாறு சுற்றுச் சூழலோடு தொடர்பு கொண்டுள்ளது என தெரிந்து கொள்வது நன்று. 10. இந்திய மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினார்கள் என்பதையும் , அதனால் நோயற்ற வாழ்வு வாழ்ந்தனர் என்ற விழிப்புணர்வையும் மக்களிடையே பரப்புதல் அவசியம். 11. உலக பூமி தினம் , உலக சுற்றுப்புறச் சூழல் தினம் , உலக சுகாதாரதினம் போன்ற தினங்களை மாணவர்கள் கொண்டாடி , அதன் முக்கியத்துவத்தை பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும். 12. குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தும் வழிமுறைகளைக் கடை பிடிக்க வேண்டும். 13. பிளாஷ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவனத்
தவிர்க்க வேண்டும். 14. நீர்நிலைகளை மாசு படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். 15. இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ வேண்டும். 341 Page 195 of 201 பயிற்சி வினாக்கள் அ. ஓரிரு வரிகளில் விடையளி 1. சுற்றுச்சூழல் கல்வி என்றால் என்ன ? 2. சூழ்நிலையியல் கல்வி என்பது என்ன ? 3. கோலஜி ( Ecology ) என்றால் என்ன ? 4. சூழ்நிலைத் தொகுப்பு ( Eco Systems ) என்பது என்ன ? 5. பஞ்சபூதங்கள் யாவை ? ஆ. ஒரு பத்தி அளவில் அல்லது பத்து வரிகளுக்கு மிகாமல் விடையளி 1. இந்தியச் சுற்று சூழலினை விவரி. 2. இந்தியப் பண்பாட்டில் மலைகளுக்கு அளிக்கப்படும்
சிறப்பினைக் கூறுக. ? 3. இந்தியப் பண்பாட்டில் நதிகளுக்கு அளிக்கப்படும் சிறப்பினைக் கூறுக ? 4. இந்தியப் பண்பாட்டில் மரங்களுக்கு அளிக்கப்படும் சிறப்பினைக் கூறுக ? 5. இந்தியப் பண்பாட்டில் பறவை மற்றும் விலங்குகளுக்கு அளிக்கப்படும் சிறப்பினைக் கூறுக ? இ. ஒரு பக்க அளவில் அல்லது முப்பது வரிகளுக்கு மிகாமல் விடையளி 1. சுற்றுச் சூழலைப்பேணுவதில் மாணவர்களின் பங்கை விவரி. 2. இந்தியர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தனர் என்பதை விளக்குக. ஈ. நான்கு பக்கங்களுக்கு மிகாமல் விடையளி 1. இந்தியப் பண்பாடும் , சுற்றுச்சூழலும்
பற்றி கட்டுரை வரைக. 342 நேரம் : 3 மணி இந்தியப் பண்பாடு மாதிரி வினாத்தாள் மதிப்பெண்கள் : 200 பகுதி - அ எல்லா வினாக்களுக்கும் விடையளி. ஒவ்வொன்றிற்கும் ஓரிரு வரிகளில் விடையளி. 15 x 2 = 30 1. பண்பாடு பற்றி வால்டேர் கூறுவது யாது ? 2. உலகின் உறுதிப் பொருள்கள் யாவை ? 3. இந்தியாவின் உயரிய தனிச் சிறப்பு யாது ? 4. சிந்துவெளி நாகரிகக் காலம் எது ? 5. ' ஜனா'என்றால் என்ன ? 6. பண்டையத் தமிழரின் பண்பாட்டை அறிய உதவுவன யாவை ? 7. நாடக உலகின் இமயம் எனப் போற்றப்படுபவர் யார் ? 8. பிரம்ம ஞான சபை யாரால் தோற்றுவிக்கப்பட்டது ? 9.
இந்து சமயத்தின் சிறப்பம்சம் யாது ? 10. ' நிஷ்காமகர்மா ’ என்றால் என்ன ? 11. மௌரியர்கள் பற்றிய ஆதாரங்கள் யாவை ? 12. குடவோலை முறை என்றால் என்ன ? 13. வீரமா முனிவர் எழுதிய நூலின் பெயர் என்ன ? 14. ' சிவஞானபோதம் ' இயற்றியவர் யார் ? 15. சுற்றுச்சூழல் கல்வி என்றால் என்ன ? பகுதி ஆ எவையேனும் ஆறு வினாக்களுக்கு ஒவ்வொன்றிற்கும் பத்து வரிகளுக்கு மிகாமல் விடையளி. 6 x 5 = 30 16. ' இந்தியப் பண்பாடு அழியாத் தன்மை உடையது ’ எங்ஙளம் ? 17. ' வேற்றுமையில் ஒற்றுமை ' என்னும் கோட்பாட்டை விவரி. 18. சுருதி , ஸ்மிருதி பற்றி நீவிர் அறிவன
யாவை ? 19. கற்புடைமை பற்றி சங்க இலக்கியங்கள் கூறுவன யாவை ? 20. இராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் தமிழிசைக்கு ஆற்றிய அரும்பணி யாது ? 21. உலகத் தோற்றம் பற்றி தொல்காப்பியர் கூறுவன யாவை ? 22. ' குடைவரைக் கோயில் ’ விளக்குக. 23. பக்தியின் இருவகைகளை விவரி. பகுதி இ எவையேனும் ஆறு வினாக்களுக்கு ஒவ்வொன்றிற்கும் ஒரு பக்க அளவில் விடையளி. 6 x 10 = 60 24. சிந்துசமவெளி நாகரிக , நகர் அமைப்பு பற்றி விவரிக்க. 25. பிற்கால வேதகாலத்தின் சமுதாய நிலையைப் பற்றித் தொகுத்து எழுது. 26. நாடகக் கலை பற்றி பெருமைப்பட வேண்டிய செய்திகளைத்
தொகுத்து எழுதுக. 27. சோழர்கால சமூக நிலை மற்றும் சமய நிலையை விவரி. 28. கிறித்துவர்கள் ஆற்றிய சமுதாய நல்வாழ்வுப் பணிகளைப் பற்றி விவரி. 29. பக்தி இயக்கத்தின் விளைவுகள் யாவை ? 30. இந்தியப் பண்பாடு வெளிநாடுகளில் பரவிய முறையை விவரி ? 344 31. சுற்றுப்புறச் சூழலைப் பேணுவதில் மாணவர்களின் பங்கை எழுதுக. பகுதி ஈ எவையேனும் நான்கு வினாக்களுக்கு ஒவ்வொன்றிற்கும் நான்கு பக்க அளவில் விடையளி. 4 x 20 = 80 32. இந்தியப் பண்பாட்டின் சிறப்பியல்புகளைத் தொகுத்து ஒரு கட்டுரை வரைக. 33. சிந்துவெளி நாகரிகம் பற்றி விவரித்து ஒரு கட்டுரை
வரைக. 34. பழந்தமிழரின் சீரிய பண்பாட்டுக் கூறுகளைத் தொகுத்து ஒரு கட்டுரை வரைக. 35. இந்தியப் பண்பாட்டிற்கு மௌரியர்களின் கொடை மற்றும் கலையம்சங்களைக் குறித்து ஒரு கட்டுரை வரைக. 36. உலகப் பண்பாட்டிற்கு இந்தியாவின் கொடை என்ற தலைப்பில் நீவிர் தரும் செய்திகளை விவரி. 37. இந்தியப் பண்பாடும் சுற்றுப்புறச் சூழலும் பற்றி ஒரு கட்டுரை வரைக. துணை நூற்பட்டியல் அரசு அருட்காட்சியகம் , ( 1999 ). பழங்காலப் பண்பாடும் பழங்குடிகள் பண்பாடும். சென்னை. ஆறுமுக நாவலர் , K. ( 2003 ). இந்துமத இணைப்பு விளக்கம். மதுரை. கந்தையா பிள்ளை ,
ந.சி. ( 1966 ). தமிழர் பண்பாடு. சென்னை. கல்யாணசுந்தரனார் , வி. ( 1975 ). மனித வாழ்க்கையும் காந்தியடிகளும். சென்னை கேந்திரத் தொண்டர் , ( 2003 ). பாரதப் பண்பாடு. தூத்துக்குடி. சந்திரசேகரன் , P. ( 2001 ) , தமிழக வரலாறு. ராஜபாளையம். சுப்பிரமணியன் , ( 1987 ). இந்தியப் பண்பாட்டு வரலாறு. மதுரை. சுவாமிநாதன் , A. ( 1984 ). தமிழக வரலாறும் பண்பாடும். சென்னை. . ( 1998 ). இந்திய சமுதாயப் பண்பாட்டு வரலாறு ( கி.பி. 1556 வரை ). சென்னை. ( 1998 ). தமிழ்நாட்டு சமுதாயப் பண்பாட்டு வரலாறு. சென்னை , ( 1994 ). தமிழ்நாட்டு சமுதாயப்
பண்பாட்டு வரலாறு. சென்னை. சேதுராமன் , G. ( 2001 ) , தமிழக வரலாறு. ராஜபாளையம். தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் , ( 2004 ). வரலாறு மேல் நிலை முதலாம் ஆண்டு. சென்னை. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் , ( 2001 ). சமூகவியல். ஒன்பதாம் வகுப்பு. சென்னை. தமிழக அரசு பாடநூல் நிறுவனம் , ( 1996 ). இந்தியப் பண்பாடு. சென்னை. 346 பரிமேலழகர் உரை. திருக்குறள். சென்னை. பழநியப்பன் , எஸ். ( 2002 ). சூழ்நிலையியல். சென்னை பாண்டியன் , ச. ஜெயராஜ் சா. மகாத்மா காந்தி நேசிப்பது எப்படி ? சுதேசி. மதுரை. பாஸ்கரன் , க. ( 2002 ). தத்துவமும் பண்பாடும்.
தஞ்சாவூர். புரட்சிதாசன் , ( 1993 ). சிந்துவெளி. சென்னை. மெர்சிபாஸ்கர் , ( 2004 ) , சுற்றுச்சூழல் புதிய கல்வி. திண்டுக்கல். லஷ்மணள் , கி. ( 2002 ). இந்திய தத்துவஞானம். சென்னை. ஸ்ரீசத்யசாய் புக்ஸ் அண்ட் பப்ளிகேஷன்ஸ் , ( 2003 ). தெய்வத்திருவாக்கு. சென்னை. ஸ்ரீ சத்யசாய் பாலவிகாஸ் கல்வி அறக்கட்டளை , பிரசாந்தி நிலையம். ( 1986 ). தெய்வீகப் பாதை. சென்னை.
For More Materials அத்தியாயம் 1 அரசின் வளர்ச்சி ‘ அரசு ’ என்பது மனித சமுதாயத்தின் வாழ்விற்கும் வசதிக்கும் ஏற்படுத்தப்பட்ட ஒரு இன்றியமையாத அமைப்பாகும். ‘ அரசு ’ இயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட அத்தியாவசியமான அமைப்பாகும். பல்வேறு அரசியல் அறிஞர்கள் ‘ அரசு ஒரு தேவையான துன்பம் ’ என்ற கூற்றை ஆமோதித்துள்ளனர். லாஸ்கி , “ அரசு என்பது சமூகம் என்ற தோரண வாயிலின் முக்கிய கல் ’ ’ என குறிப்பிடுகிறார். மனிதரில் எளியோரை வலியோரிடமிருந்து காப்பாற்றும் பொருட்டும் , மனித சமுதாயத்தின் ஆசாபாசங்களை ஒரு கட்டுக்குள் வைத்திடவும்
தோற்றுவிக்கப்பட்ட அமைப்பாக அரசு கருதப்படுகிறது. பைனர் என்பவர் , அரசு இல்லையெனில் உலகில் சச்சரவும் குழப்பங்களுமே மிஞ்சும் என குறிப்பிடுகிறார். இவ்வத்தியாயத்தில் , அரசின் வளர்ச்சி குறித்து காண்போம். நாம் காணும் தற்கால அரசு , பல காலகட்டங்களில் பலவாறாக உருவெடுத்து தற்போதைய நிலையை அடைந்துள்ளது. எனினும் , இதுதான் அரசின் பரிணாம வளர்ச்சி என்று அறுதியிட்டு கூற இயலாத அளவிற்கு , அரசு படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அரசு என்கிற அமைப்பு ஒரே மாதிரியாக இல்லாமல் ஆரம்ப காலத்தில் பழமைப்
பேரரசாக , கிரேக்க நகர அரசாக தற்போதைய மக்கள் நல அரசாக மாறுவதற்கு முன் உருப்பெற்றிருந்திருக்கிறது. கீழே சில முக்கியமான வகை அரசுகள் பற்றிய விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. 1. நகர அரசு 2. நிலப்பிரபுத்துவ அரசு 3. தேசிய அரசு 4. சமஉடைமை அரசு , மற்றும் 5. மக்கள் நல அரசு. நகர அரசு பழமைப் பேரரசு முடிவுக்கு வந்த பின்னர் கிட்டத்தட்ட கி.மு. 1000 வது ஆண்டு சமயத்தில் கிரேக்க நாட்டில் நகர அரசு தோன்றியது. நகர அரசு தோன்றிய அதே காலத்தில் அரசியல் கோட்பாட்டின் தோற்றமும் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. கிரேக்க சமூகங்களே முதன்
முதலில் அரசியல் சிந்தனையின் , முக்கியத்துவத்தை உணர்ந்து நடைமுறைப்படுத்தின. கிரேக்கர்கள் , ‘ அரசியல் ’ என்பதை வெறும் தர்க்க , தத்துவார்த்த நிலைகளிலேயே வைக்காமல் வாழ்க்கையோடு இணைத்து அதையே அரசாங்கமாகவும் ஏற்படுத்தி பெருமை பெற்றார்கள். ஐரோப்பாவில் புலம் பெயர்ந்த கிரேக்கர்கள் , சிறு சிறு குழுக்களாக பிரிந்து , ஆங்காங்கே மலைப்பகுதிகளிலும் சமவெளிகளிலும் இதர பிரதேசங்களிலும் குடியேறினர். காலப்போக்கில் அவர்களின் ஒவ்வொரு வாழ்விடமும் , அரசின் இருப்பிடமாக , முன்பிருந்த பழமைப்பேரரசுக்கு முற்றிலும் மாறுபட்டுத் திகழ்ந்தது.
அவ்வகை ஆட்சி முறை , பழங்குடியினரின் நிர்வாகத்தினை ஒத்திருந்தது எனலாம். இத்தகைய உள்ளாட்சி நிர்வாகமானது காலப்போக்கில் உருப்பெற்று நகர அரசாக திகழ்ந்தது. கிரேக்க நகரம் , எல்லா வகையிலும் , நவீன அரசின் அத்தனை அம்சங்களையும் கொண்டு உண்மையான அரசாக இருந்ததெனக் கருதப்படுகிறது. மக்களுடைய அரசியல் , பொருளாதார , அறிவார்ந்த , ஒழுக்க வாழ்க்கை முழுவதும் நகர அரசைச் சார்ந்திருந்தது. DSCO aavas கிரேக்க நகர அரசின் அம்சங்கள் ஒவ்வொரு நகர அரசும் சுதந்திர அமைப்பாக செயல்பட்டது. அவ்வாறு சுதந்திரமாக இருப்பதை பெருமையாகக் கருதியது.
கிரேக்க நகர அரசுகள் அனைத்தும் அளவில் சிறியவைகளாகவும் மக்கள் தொகையில் குறைவான எண்ணிக்கையும் கொண்டவைகளாக இருந்தன. இத்தகைய அரசில் மட்டுமே சமூக , பொருளாதார , அறிவியல் சார்ந்த வாழ்க்கை அமைய முடியும் எனக் கருதப்பட்டது. இக்கருத்தை அரிஸ்டாட்டிலும் வலியுறுத்தியுள்ளார். வரி செலுத்துதலும் , தேர்தலில் வாக்களிப்பதும் மட்டுமே குடிமகனின் கடமை என்பது வன்மையாக மறுக்கப்பட்டது. ஒவ்வொரு குடிமகனும் அவன் சார்ந்துள்ள அரசின் மேம்பாட்டிற்கென வாழ்தல் வேண்டும். அவன் தன்னுடைய அரசு சார்ந்தப் பணிகளை தானே செய்தான். நகரத்தின் கடவுள்களை
அவனுடைய கடவுள்களாக பாவித்தான். அனைத்து விழாக்களிலும் அவன் பங்கு பெற்றான். அரசும் சமுதாயமும் இருவேறு அமைப்பன்று , அவை ஒன்றே என்ற நிலை அக்காலத்தில் இருந்தது. கிரேக்க நகரம் அரசு , திருச்சபை , பள்ளி என்கிற அமைப்புகளின் ஒட்டுமொத்த அமைப்பாக இருந்து மனித வாழ்க்கையை முழுவதுமாக ஆக்ரமித்தது. நல்வாழ்க்கையை பெற்றுத் தருவதுதான் அரசின் குறிக்கோளாக இருந்தது. இதனை நோக்கமாகக் கொண்ட அரசின் நடவடிக்கைகள் எல்லாம் நியாயப்படுத்தப்பட்டன. அரசியல் , ஒழுக்கம் , சமயம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றிற்கிடையே எவ்வித பாகுபாடும்
காணப்படவில்லை. ஆயகலைகள் அறிவியல் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை அடைய அரசு பங்காளியாக இருக்கிறது என்னும் எட்மண்டு பர்க்கின் கருத்தையொட்டியதாகவே கிரேக்க நகர அரசு திகழ்ந்தது. ஏதென்ஸ் நகர அரசு புகழின் உச்சத்திலிருந்த போது கிரேக்கத்தின் சிறந்த அரசியல் கருத்துக்களின் பிரதி பிம்பமாகக் கருதப்பட்டது. கிரேக்க நகர அரசுகளில் நேரடி மக்களாட்சி நடைபெற்றது. மக்கள் நேரடியாக அரசாங்கத்தில் பங்கேற்றனர். இது மக்கள் சக்திக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது. அரசாங்க அமைப்புகள் என்பது மாற்றத்திற்குட்பட்டது என்பதை கிரேக்க அரசியல்