text
stringlengths 11
513
|
---|
பொய்கையாழ்வார் , பூதத்தாழ்வார் , பேயாழ்வார் முறையே காஞ்சி , மாமல்லபுரம் , மைலாப்பூரிலும் பிறந்தவர்களாவர். திருமழிசை ஆழ்வார் செங்கற்பட்டு மாவட்டம் பூவிருந்தவல்லிக்கு அருகில் பிறந்தவர். திருமங்கை ஆழ்வார் ஆண்டாள் போன்றோர் பல்லவர் காலத்தில் வைணவ சமயத்தைப் போற்றி வளர்த்தனர். களப்பிரர் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு சைவ வைணவ சமயங்கள் செழித்தோங்கின. சமணமும் பௌத்தமும் மறையத் தொடங்கின. சைவ சமயத்தில் பல கிளைகள் இருந்தன. பாசுபதம் , காபாலிகம் , காளாமுகம் , மகாவிரம் , போன்றவை குறிப்பிடத்தக்கவை. எனவே , பிற்காலத்தில் கி.பி. 7
|
ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு சமயவளர்ச்சியில் ஒரு மறுமலர்ச்சி , தோன்றியது. தேவாரம் , நாலாயிரத் திவ்விய பிரபந்தம் போன்ற சமயநூல்கள் முறையே சைவ , வைணவ சமயங்களின் கருவூலமாக விளங்குகிறது. சமணமும் பௌத்தமும் சமணம் பத்திரபாகுவுடன் சந்திரகுப்த மௌரியர் சரவணபெலகோலா ( மைசூருக்கு அருகில் ) வந்தது முதற்கொண்டே சமணம் தென்னகத்தில் பரவ ஆரம்பித்தது. ' களப்பிரர் ’ காலத்தில் அது மேன்மேலும் சிறப்பு பெற்று விளங்கியது. 184 வஜ்ஜிரநந்தியால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை திராவிட சங்கம் மூலம் சமணம்பெரும் முன்னேற்றம் கண்டு தமிழகத்தின்
|
தென்கோடிவரை பரவலாயிற்று. காஞ்சி , வள்ளிமலை , பொன்னூர் , திருக்காட்டுப்பள்ளி , செந்தலை , நாகமலைப் புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் தங்கி சமணர் சமண சமயத்தை வளர்த்தனர். முதலில் முதலாம் மகேந்திர வர்மன் திருநாவுக்கரசர் மற்றும் கூன் பாண்டியன் போன்றோர் சமண சமயத்திற்கே ஆதரவு நல்கினர் என்பது வரலாற்றின் கூற்றாகும். பௌத்தம் அசோகர் காலத்திலிருந்து தமிழகத்தில் பௌத்த மதம் பரவியது. சங்க காலத்திற்குப் பிறகு முற்காலப் பல்லவர் காலத்தில் சமணமும் பௌத்தமும் நன்கு வளர்ச்சியுற்றது. பல்லவ மன்னர் , பலர் இதற்கு ஆதரவு நல்கினர். யுவான்
|
சுவாங் வருகையின் போது காஞ்சியில் 100 புத்த மடங்களும்அதில் 10,000 புத்த துறவிகள் இருந்ததாகவும் தமது குறிப்பில் கூறியுள்ளார். போதிமங்கை , பழையாறை , நாகை போன்ற இடங்களில் பௌத்த சமயம் செல்வாக்கு பெற்று விளங்கியது. சைவர்களும் வைணவர்களும் சமணர்களையும் , பௌத்தர்களையும் பலவாதங்களில் வென்று இவர்களுடைய செல்வாக்கை ஒழித்ததுடன் சமண , பௌத்த துறவிகள் பலரைக் கழுவிலேற்றிக் கொன்றனர் ; சமணப் பள்ளிகள் இடிக்கப்பட்டன. பௌத்த ஆலயங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. 7.3. 7. கலை வளர்ச்சி இந்தியக் கோயிற் கட்டடக்கலையை நாகரக்
|
கலை , வேசரக்கலை , திராவிடக் கலை என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. திராவிடக் கோயிற் கலை பல்லவர் காலத்தில் ஒரு பெரும் புரட்சியைக் கண்டது. கோயிற் கலையில் அழியாப் பொருளைக் கொண்டு முதலாம் மகேந்திர வர்மன் பெரும் புரட்சியை ஏற்படுத்தினான். 185 கட்டடக்கலை பல்லவர்காலக் கட்டடக் கலையினை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை , 1. குடைவரைக் கோயில்கள் ( Rock Cut Temples ) 2. ஒற்றைக்கல் ரதங்கள் ( Monolithic Rathas ) 3. கட்டுமானக் கோயில்கள் ( Structural Temples ) 1. குடைவரைக் கோயில்கள் தென் இந்திய வரலாற்றில்
|
முதல் முறையான பல்லவர் காலத்தில் முதலாம் மகேந்திர வர்மனின் காலத்திலும் , மாமல்லன் காலத்திலும் பாறையைக் குடைந்து கோயில்கள் உருவாக்கப்பட்டன. மண்டகப்பட்டு , பல்லாவரம் , வல்லம் , மாமண்டூர் , குரங்கண் , மகேந்திரவாடி , சீயமங்கலம் , தளவானூர் , திருச்சி , சித்தன்னவாசல் , ஆகியவை மகேந்திரவர்மன் காலத்தில் குடையப்பட்ட குடவரைக் கோயில்களாகும். மாமல்லன் பாணிக் குகைக் கோயில்கள் , குடவரைக் கோயில்களுடன் இரதங்களையும் ஏற்படுத்தினான். மாமல்லனின் குடைவரைக் கோயில்கள் பெரும்பாலும் மாமல்லபுரத்திலேயே காணப்படுகின்றன. இக்காலத்து
|
மண்டபங்களில் காணப்படும் தூண்களின் சிறப்பு அரிமா முன்னங்கால்களில் நின்று பின்னங்கால்களில் அமர்ந்துள்ளது போலக் காணப்படுவதாகும். 2. ஒற்றைக் கல் இரதங்கள் மாமல்லன் எனும் முதலாம் நரசிம்மனின் மிகப்பெரும் சாதனை மாமல்ல புரத்தில் ஒற்றைக் கல்லிலேயே செதுக்கப்பட்ட ரதங்கள் ஆகும். ஒரே இடத்தில் இருக்கும் ஐந்து இரதங்கள் மொத்தமாக ‘ பஞ்சபாண்டவ ரதங்கள் ' என அழைக்கப்படும். அவையாவன. திரௌபதிரதம் , அர்ச்சுனரதம் , பீமரதம் , தர்மராஜரதம் , நகுல சகாதேவரதம் ஆகியனவாகும். 186 3. கட்டுமானக் கோயில்கள் பல்லவர் காலக் கட்டிடக் கலையின் ஒரு
|
புதிய மாற்றத்தை இராஜசிம்மன் ஏற்படுத்தினான். இவ்வகைக் கோயில்களில் செதுக்கப்பட்ட கற்களைக் கொண்டு கருவறை , அதன்மேல் விமாளம் ) அர்த்த மண்டபம் , முக மண்டபம் , சுற்றுப்புறச் சுவர் போன்றவற்றை ஏற்படுத்தினான் பல்லவர்காலக் கட்டுமான கோயில்களின் வகைகளை இராஜசிம்மன் பாணி , நந்திவர்மன் பாணி என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். மாமல்லபுர கடற்கரைக் கோயில் ; பனை மலை சிவன் கோயில் , காஞ்சி கயிலாயநாதர் கோயில் , இராஜசிம்மன் பாணிக் கோயில்களாகும். காஞ்சி முத்தேசுவரர் கோயில் , கூரம் பெருமாள் கோயில் , திருத்தணி வாடாமல்லீசுவரர் கோயில் ,
|
குடிமல்லம் பரமேஸ்வரர் கோயில் போன்றன நந்திவர்மன் பாணிக் கோயில்களாகும். சிற்பக்கலை மாமல்லபுரத்தில் காணப்படும் ஒற்றைக்கல் சிங்கம் , யானை , நந்தி , குரங்கு பேன்பார்க்கும் காட்சி , மகிஷாசுரமர்த்தினி மண்டப போர்க்கோல காட்சி , மும்மூர்த்தி மண்டபத்திலும் திரௌபதி ரதத்திலும் காணப்படும் சிற்பங்கள் கோவர்த்தனகிரியைக் கண்ணன் பிடிக்கும் காட்சியும் ‘ அர்ச்சுனன் தவக்கோலம் ' எனப்படும் காட்சிகள் யாவும் சிற்பக்கலைக்குப் பிற்காலப் பல்லவர்களின் சிறந்த சான்றுகளாக இன்றும் விளங்குகின்றன. இசைக்கலை விருதுபெயர்களைக் கொண்டே பல்லவ
|
மன்னர்கள் சிறந்து விளங்கினர். ‘ சங்கீரண சாதி ’ ‘ பரிவாதினீ ( வீணையில் வல்லவன் , சைத்தியக்காரி ( குடைவரை கோவிலை கட்டியவன் ’ போன்ற 187 பெயர்களை மகேந்திர வர்மனும் ; ' வாத்ய வித்யாதரன் ’ ‘ ஆதோத்ய தம்புரு ' ( ஆதோதிய வீணை வாசிப்பதில் வல்லன் , ‘ வீணாநாரதன் ' போன்ற பெயர்களை இராஜசிம்மனும் பெற்றிருந்தனர். பல்லவர்கால இசைக்கருவிகளென யாழ் , குழல் , கின்னரி , கொக்கரி , வீணை , தக்கை , முழவம் , மொந்தை , மிருதங்கம் , மத்தளம் , தந்துபி , தமுருகம் , துடி , தாளம் , உடுக்கை , கொடுகட்டி , தத்தலம் , குடமுழா , முரசம் , போன்றவை
|
பயன்படுத்தப்பட்டதாக தேவாரப் பாடல்கள் மூலம் அறிகின்றோம். இசை பற்றிய செய்திகளை குடுமியான் மலைக் கல்வெட்டின்மூலம் அறிகின்றோம். நடனம் , நாடகக்கலை பல்லவர் காலத்தில் நடனக்கலை சிறப்பு பெற்றிருந்தற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாக பல்லவரின் கோயில்களே விளங்குகின்றன. வைகுந்தப் பெருமாள் கோயிலில் காணப்படும் சுவர் சிற்பங்கள் , காஞ்சி கயிலாயநாதர் கோயிற் சிற்பங்களும் ஓவியங்களும் நடனக்கலையின் சிறப்பை வெளிபடுத்துகிறது. நடனக் கலையுடன் நாடகக் கலையும் சிறப்பு பெற்று இருந்ததை மகேந்திர வர்மனின் ‘ மத்தவிலாச பிரகசனம் ’ என்ற வடமொழி
|
நாடக நூல் சமயக் கருத்தோடு மக்கள் வாழ்க்கைப் பற்றியும் எடுத்தியம்புகிறது. ஓவியம் சித்தன்ன வாசல் , காஞ்சி கைலாய நாதர் ஆலயம் , பனமலை கிரீஸ்வரர் ஆலயம் போன்றவற்றின் சுவர்களிலும் , தூண்களிலும் மிக அழகிய வண்ண ஓவியங்கள் காணப்படுகின்றன. முதலாம் மகேந்திரவர்மன் ஓவியம் எனும் சித்திரக் கலையில் சிறந்த ஆற்றல் பெற்றிருந்ததால் இவரைச் ' சித்திரக்காரப் புலி ’ என கல்வெட்டு பாராட்டுகிறது. கல்வி பல்லவர் காலத்தில் காஞ்சி , பர்கூர் பழம்பதி போன்ற இடங்களில் கல்விக் கூடங்கள் இருந்தன. இவை உயர்கல்வி 188 போதிக்கும் இடமாகவும் , வடமொழி
|
கற்பிக்கும் கூடமாகவும் சிறந்து விளங்கின. ‘ தர்மபாலர் ’ என்பவர் கல்வி கற்பதற்காக நாலந்தா பல்கலைக்கழகத்திற்குச் சென்றதாக குறிப்புகள் உள்ளன. “ கல்வியிற் கரையிலாத காஞ்சிமா நகர் ” என அப்பர் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் , அக்கிரஹாரங்களும் , பிரம்மபுரிகளும் கல்வி மற்றும் கலை வளர்ச்சியில் பெரிதும் துணை புரிந்தன. பல்லவர் காலத்தில் கோயில்களும் மடங்களும் கல்விக் கூடங்களாய் செயல்பட்டன. எடுத்துக்காட்டாக காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தில் சிற்பம் , ஓவியம் , இசை , நடனம் , நாடகம் மற்றும் மகாபாரதம் , இராமயணமும் கற்பிக்கப்பட்டன.
|
நாகை , காஞ்சி , ஸ்ரீபர்வதம் , தான்யகடகம் முதலிய இடங்களில் பௌத்த விஹாரங்களும் கல்விச் சாலைகளும் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் , திருப்பருத்திக் குன்றம் போன்ற இடங்களில் சமணப் பள்ளிகளும் இருந்ததாக கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். இலக்கியம் பிற்காலப் பல்லவர்காலத்தில் , சங்க காலத்தைப் போன்று தூய்மையான தமிழ் இலக்கியமாக அமைந்திருக்கவில்லை. காரணம் பல்லவர்கள் பிற்காலத்தில் வடமொழியாகிய சமஸ்கிருதத்திற்குக் கொடுத்த செல்வாக்கேயாகும். அவர்கள் சாதவாகனரின் கீழ்பணி புரிந்தபோதும் களப்பிரார் காலத்திலும் பிராகிருதம் , சமஸ்கிருதம்
|
மொழிகளைப் போற்றினர். காஞ்சியில் ஒரு சமஸ்கிருத கல்லூரி வைத்து நடத்தினர். எனவே பல்லவர்கள் வட மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழில் கலப்பு மொழி தோன்ற வழி வகுத்தனர் என்பர். வடமொழி இலக்கியம் சிம்மவிஷ்ணுவின் காலத்திலிருந்து இராஜ சிம்மன் காலம் வரை ( கி.பி. 557 முதல் கி.பி. 730 வரை ) சமஸ்கிருத மொழியின் பொற்காலமாகும். 189 1. பாரவியின் - கிரதார் ஜூனியம் / பிரகசனம் 2 முதலாம் மகேந்திரவர்மனின் - மத்த விலாசப் பிரகசனம் போதயானா - பாகவஜீகம் 3. 4. தண்டின் - தசகுமாரகரிதம் , அவந்தி சுந்தரி , கதாச் சாரம் மற்றும் '
|
சுவப்னவாசவதத்தா ’ ' லோகவிபாகம் ' காவியதர்சனம் போன்ற சமஸ்கிருத நூல்கள் வடமொழி இலக்கியத்திற்கு அழகு சேர்ப்பனவாகும். தமிழ் இலக்கியம் பல்லவ பேரரசர்கள் வடமொழியைப் போற்றியது உண்மையெனில் அவர்கள் தமிழ் மொழியை நிராகரிக்கவில்லை. அவர் தம் கல்வெட்டுக்கள் , பட்டயங்கள் ஆகியவற்றில் பெரும்பகுதி தமிழிலேயே வரையப்பட்டவையாயுள்ளன. எனவே , பல்லவர்கால தமிழ் வளர்ச்சி பற்றி இங்கு காண்பது மிக அவசியமாகும். 1. சேரமான் பெருமாள் நாயனார் – ஞானவுலா , பொன்வண்ணத்து அந்தாதி , மும்மணிக் கோவை 2. கங்கநாட்டு மன்னன் கொங்கு வேளிர் - கொங்குவேளிர்
|
மாகதை ( பெருங்கதை ) 3. மூன்றாம் சிம்மவர்மன் - சிவத்தளி வெண்பா 4. தோலா மொழித்தேவர் - சூளாமணி 5. பெருந்தேவனார் - பாரத வெண்பா 6. அப்பர் , சுந்தரர் சம்பந்தர் - தேவாரம் திருமங்கையாழ்வார் - திருவாய்மொழி 7. 8. ஆண்டாள் - திருப்பாவை மற்றும் ‘ நந்திக்கலம்பகம் ( 3 ஆம் நந்திவர்மனைப் பற்றியது ) முத்தொள்ளாயிரம் ( மூவேந்தர்களைப் பற்றியது ) , மற்றும் இலக்கண நூல்களாக சங்கயாப்பு பாட்டியல் நூல் , மாபுராணம் போன்றவை இக்காலத்தைச் சார்ந்தவையாகும். 190 7. 3 , பயிற்சி வினாக்கள் அ. ஓரிரு வரிகளில் விடையளி 1. பிற்காலப் பல்லவர்களின்
|
காலம் யாது ? 2. ' மந்திரி மண்டலம் ’ குறிப்பு வரைக. 3. ' அதிகரணங்கள் ’ சிறுகுறிப்பு எழுது 4. இந்து சமயத்தின் ' அறுவகைச் சமயங்கள் ' யாவை ? 5. பிற்காலப் பல்லவர்கால ‘ கட்டடக் கலையின் ’ மூன்று பிரிவுகள் யாவை ? 6. ' சதுர்வேதி மங்களம் ’ குறிப்பு வரைக. 7. பிற்காலப் பல்லவரின் ‘ இசைக்கருவிகள் ' யாவை ? ஆ. பத்துவரிகளுக்கு மிகாமல் விடையளி 1. பிற்காலப் பல்லவர் காலத்தை அறிய உதவும் சான்றுகள் யாவை ? 2. பிற்காலப் பல்லவ மன்னர்களில் முக்கியமானவர்கள் யாவர் ? 3. பிற்காலப் பல்லவர்களின் ' நீதித்துறையை ’ விளக்குக. பிற்காலப்
|
பல்லவர்காலப் ‘ பெண்களின் நிலை ’ யாது ? 4. 5. பிற்காலப் பல்லவர்களின் ‘ இசைக்கருவிகள் ’ யாவை ? 6. பிற்காலப் பல்லவர்களின் ‘ கல்வி நிலை ’ பற்றி எழுதுக. 7. பல்லவர்கால ‘ நீதிமுறை ' எவ்வாறு இருந்தது. 8. பிற்காலப் பல்லவர்களின் ' சமய நிலை ' எவ்வாறு இருந்தது ? இ. ஒரு பக்க அளவில் விடையளி 1. பிற்காலப் பல்லவர்களின் ‘ அரசியல் நிலையை ' விளக்குக. பிற்காலப் பல்லவர்களின் ‘ சமூக நிலையை ’ பற்றி விளக்கி எழுது. 2. 3. பிற்காலப் பல்லவர்களின் ‘ இசைக்கலை ' பற்றி எழுது. 4. பிற்காலப் பல்லவர்கால ‘ ஆட்சி முறையை ' விளக்குக. 5. பிற்காலப்
|
பல்லவர்களின் ‘ ஆடை அணிகலன்கள் ' யாவை ? 6. பிற்காலப் பல்லவர்களின் ' சமய வளர்ச்சி ' பற்றி விவரி. 7. பிற்காலப் பல்லவர்களின் ' கட்டடக்கலை வளர்ச்சி ’ பற்றி விளக்கி எழுது. 8. பிற்காலப் பல்லவர்களின் ‘ இலக்கிய வளர்ச்சி ’ குறித்து விரிவாக எழுதுக. 9. பிற்காலப் பல்லவர்களின் வடமொழி மற்றும் தமிழ்மொழி இலக்கிய நூல்கள் யாவை ? ஈ. நான்கு பக்க அளவில் விடையளி 1. பிற்காலப் பல்லவர்காலப் பண்பாடு பற்றி ஒரு கட்டுரை வரைக. பிற்காலப் பல்லவர்கால கல்வி , கலை , இலக்கியம் குறித்து ஒரு கட்டுரை வரைக. 2. 192 7. 4. பிற்காலச் சோழர்காலப் பண்பாடு
|
" சோழநாடு சோறுடைத்து ” என்பது முதுமொழி. இது இந்நாட்டின் வளத்தைக் காட்டுகிறது. வானளாவிய கோவில்களும் , கண்ணைக் கவரும் ஓவியங்களும் , மனதை மயக்கும் சிற்பங்களும் , கருத்தை தூண்டும் இலக்கியங்களும் நிறைந்து போற்றப்பட்ட சோழர்காலத்தில் மக்கள் திட்டமிட்ட மக்களாட்சியைக் கண்டனர். அனைத்து மக்களும் மனநிறைவோடு பணிபுரிந்து வளமான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். சுருங்கக் கூறின் , அனைத்து துறைகளும் முழு நிறைவு பெற்ற நிலையில் காணப்பட்டது. எனவே தான் தமிழக வரலாற்றில் சோழர் காலம் பொற்காலம் என்று போற்றப்படுகிறது. 7.4.1. காலம் பிற்கால
|
சோழர்கள் ஏறக்குறை கி.பி. 846 முதல் கி.பி. 1279 வரை சிறந்த முறையில் ஆட்சி செய்து வந்தார்கள். கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் பிற்காலப் பாண்டியரின் எழுச்சியினால் சோழப் பேரரசு வீழ்ச்சிக்குள்ளானது என்பர். 7.4.2 சான்றுகள் சோழர்கால ஆட்சியைப் பற்றி அறிந்து கொள்ள கல்வெட்டுகள் , நாணயங்கள் , கட்டடக்கலை , சிற்பக்கலை , ஓவியக்கலை , படிமக்கலை , முதலியனவும் ( Iconography ) சோழர்கால மிகச் சிறந்த புலவர்களாகிய ஔவையார் , சேக்கிழார் , கம்பர் , ஒட்டக்கூத்தர் , புகழேந்தி ஆகியோரின் இலக்கியப் படைப்புகள் மற்றும் காப்பியங்கள் , இலக்கண
|
நூல்கள் , நிகண்டுகள் சைவத் தமிழ் இலக்கியங்கள் , சைவ சித்தாந்த சாத்திரங்கள் , மடங்கள் , கோயில்கள் போன்றன சான்றுகளாக விளங்குகின்றன. 7.4.3. முக்கிய அரசர்கள் 1. பரகேசரி விஜயாலய சோழன் ( கி.பி. 846 - கி.பி. 881 2. இராஜகேசரி ஆதித்திய சோழன் 1880 - கி.பி 907 ) பரகேசரி முதலாம் பராந்தகன் ( 907 - 955 ) 3. 4. முதலாம் இராஜராஜன் ( கி.பி. 985 - கி.பி. 1012 ) 5. முதலாம் இராஜேந்திரன் ( கி.பி. 1012 - கி.பி. 1044 ) 6. முதலாம் இராஜாதி ராஜன் ( கி.பி. 1044 - கி.பி. 1054 ) 7. முதலாம் குலோத்துங்கன் ( கி.பி. 1070 - கி.பி. 1120 போன்ற
|
அரசர்கள் பிற்கால சோழர்காலத்தில் முக்கிய அரசர்களாக விளங்கினர். 7.4.4. அரசியல் நிலை சோழ மன்னர்கள் தஞ்சாவூர் , கங்கை கொண்ட சோழபுரம் , காஞ்சிபுரம் போன்ற இடங்களைத் தலைநகரங்களாகக் கொண்டு ஆட்சி செய்தனர். குடியாட்சியுடன் கூடிய முடியாட்சியில் சோழர் கால வாரிசுரிமையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையிலும் காணப்பட்ட சிறப்பு அம்சங்கள் வேறெந்த ஆட்சியிலும் காணப்படவில்லை. சோழ மன்னர்கள் தங்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வருவதற்குரிய தம்முடைய புதல்வர்களில் மூத்தோனுக்கு தம் ஆட்சிக் காலத்திலேயே இளவரசுப் பட்டம் சூட்டி ஆட்சியில் அனுபவம்
|
பெறச் செய்ததோடு படையெடுப்புகளையும் மேற்கொண்டு , ஆட்சி நிர்வாகத் திறமைக்கு அடி கோலினர். எடுத்துக்காட்டாக இராஜராஜன் காலத்தில் , தம் மகன் இராஜேந்திரனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டிப் பல போர்களை மேற்கொள்ளச் செய்து நாட்டை விரிவாக்கினான். சோழர் ஆட்சியில் கிராம சபைகள் கொண்டுவந்த தீர்மானங்களை மத்திய அரச செயல்படுத்தக் கடமை பட்டிருந்தது. வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளிப்பது கிராம சபையின் 194 பொறுப்பாக இருந்தது. கிராம சபையால் தீர்க்க முடியாதப் பிரச்சினைகளை அரசன் தன் அதிகாரிகளை அனுப்பி தீர்த்து வைத்தான். சில சமயம் மன்னன்
|
விஜயம் செய்த இடங்களிலும் நீதி விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியதாக கல்வெட்டுகள் பகர்கின்றன. அதிகாரங்கள் அனைத்தும் மன்னனிடமே குவிந்திருக்க வில்லை. ஆகவே அரசன் தன்னிச்சையாக எதையும் செய்ய முடியாது. சோழ மன்னர்கள் முடிசூட்டி அரச உரிமை பெரும் நன்னாளில் , உடையார் , சக்கரவர்த்திகள் , திரிபுவன சக்கரவர்த்திகள் , கோனேரின்மைக் கொண்டான். இராஜ கேசரிவர்மன் , பரகேசரிவர்மன் , கோப்பர கேசரி , இராஜாதி ராஜன் என்ற பட்டங்களை மாறி மாறி புனைந்து கொண்டனர். அரசியல் அதிகாரிகள் பெருந்தனம் , சிறுதனம் ( Gazetted and Non - Gazetted officer )
|
என இருவகையாக செயல்பட்டனர். மன்னனின் செயலகத்தில் கீழ்கண்டவாறு பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 1. திருவாய்க் கேள்வி ( அரசனின் ஆணைகளை உடனுக்குடன் வெளியிடுபவன் ) 2. திருமந்திர ஓலை நாயகம் ( மன்னனின் ஆணைகளை ஓலையில் எழுதுபவன் ) 3. திருமந்திர ஓலை நாயகம் ( தலைமைச் செயலாளர் - Chief Secretary ) 4. கருமவிதின் ( ஆணைகளை நாட்டின் பல இடங்களுக்கு கொண்டு செல்பவன் ) 5. நாடு காவலதிகாரி ( நாட்டில் அமைதி காப்பவன் ) 6. புரவுவரித்திணைக் களத்தார் ( நிலவரிக் கழகம் ) 7. புரவுவரித்திணைக் களத்துக் கண்காணி ( நிலவரிக் கணக்குகளை
|
மேற்பார்வை செய்பவர் ) வரிப்பொத்தகக் கணக்கு ( தணிக்கை அதிகாரி ) 9. திருமுகக் கணக்கு ( அரண்மனைக் கணக்குகளை சரிபார்ப்பவன் 10. நாடு வகை செய்வார் ( விளை நிலத்தின் தரத்தைப் பிரிப்பவன் ) சோழப் பேரரசின் உட்பிரிவுகள் ஆட்சியில் நலனைக் கருதி சோழப் பேரரசை பல மண்டலங்களாகப் பிரித்திருந்தனர். ஒவ்வொரு மண்டலத்திற்கும் இளவரசர்கள் அல்லது உறவினர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். மாநிலத்தில் அமைதிகாப்பது பிரச்சினைகளை மத்திய அரசுக்கு எடுத்துரைப்பது , மத்திய அரசின் ஆணைகளைச் செயல்படுத்துவது ஆகியவை அவர்களுடைய பணிகளாகும். ஒவ்வொரு
|
மண்டலமும் பல வளநாடுகளாகவும் வளநாடுகள் பல நாடுகளாகவும் நாடுகள் கூற்றங்களாகவும் வழங்கப்பட்டன நாடுகளை அடுத்து சதுர்வேதி மங்கலம் எனவும் , ஒவ்வொரு சதுர்வேதி மங்கலமும் சில சிற்றூர்களைக் கொண்டிருந்தன. மண்டல அதிகாரி மண்டலிகள் என அழைக்கப்பட்டனர். நாட்டு அதிகாரி நாடான்வான் , நாட்டு நாயகம் , நாடுடையான் என்று அழைக்கப்பட்டான். கிராம ஆட்சி முறை சோழர்கால ஊராட்சிமுறை உலகம் வியக்கும் வண்ணம் சிறப்புப் பெற்று இருந்தது. கிராம சபை தேர்ந்தெடுக்கும் முறை அதன் செயல்பாடுகள் குறித்து ( உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலத்துச் சபையைப் பற்றி
|
) உத்திரமேரூர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சபைகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தன. அவையாவன 1. சதுர்வேதி மங்கலத்திலிருந்த சபை பிராமணர்கள் பிரமதேய உரிமையுடன் வசித்தனர். 2. திருக்கோயிலுக்குரிய தேவதானங்களில் இருந்த சபை 3. பிராமணர் அல்லாதவர் வாழ்ந்த ஊர்களில் காணப்படும் சபை 4. வணிகர்கள் வாழ்ந்த நகரங்களில் இருந்த சபை 196 ஊரின்கண் வசித்து வந்த தகுதி பெற்ற அனைத்து ஆண்மக்களும் கிராம சபையின் தகுதி பெற்ற உறுப்பினராவர். அச்சபைகளை பெருங்குறி என்றும் மகா சபை என்றும் கூறுவர். இச்சபையினர் நடத்தும் குடவோலை
|
முறையில் தேர்ந்தெடுக்கும் தகுதிவாய்ந்த உறுப்பினர்கள் கிராமப் பணிகளில் ஈடுபடும் பல்வேறு வாரியங்களில் இடம் பெறுவர். தேர்தல் முறை தேர்தல் நாளன்று ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடுவர். முப்பது குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டு தகுதியுடையோரின் பெயர்களை ஓலையில் எழுதி அந்தந்த பகுதிகளைச் சார்ந்த ஓலை என்பதை அறிய அதனை தனித்தனியே முப்பது கட்டுகளாகக் கட்டிக் குடத்தில் விடுவர். பின்னர் சிறுவனை அழைத்து ஓர் ஓலைக்கட்டை எடுக்கச் செய்து , அவிழ்த்து மற்றொரு குடத்தில் இட்டு குலுக்கி அச்சிறுவனையே ஒரு ஓலையை மட்டும் எடுக்கச் செய்வர்.
|
இவ்வாறு தனித்தனியே முப்பது கட்டுகளிலிருந்தும் முப்பது பேர்கள் குடவோலை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். வாரியங்களும் கடமைகளும் குடவேலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு உறுப்பினர்களும் பல வாரியங்களில் சேர்க்கப்பட்டு பணிபுரிவார்கள். 1. சம்வத் சரவாரியம் ( ஊரின் பொது காரியங்கள் செய்வர் ) 2. ஏரிவாரியம் ( ஊரின் நீர்நிலைகளைக் கவனித்தல் 3. தோட்ட வாரியம் ( விளை நிலங்கள் புறம்போக்கு நிலங்களைக் கவனித்தல் 4. பஞ்ச வாரியம் ( பஞ்சத்தைச் சரிசெய்ய ஊர் மக்களிடம் தானியம் சேகரித்து பாதுகாத்தல் ) 5. பொன் வாரியம் ( பொன் உரைத்தல் ,
|
பொற்காசுகளை ஆராய்தல் 6. கணக்குவாரியம் ( ஊர் கணக்கு கண்காணித்தல் 7. கலிங்கு வாரியம் ( நீர்ப்பாசனத்தைக் கண்காணித்தல் 8. தடவழி வாரியம் ( ஊர் வழிச்சாலைகளைச் செப்பனிடுதல் ) படை வகைகள் சோழர்காலப் படைகள் இருவகையாகப் பிரிக்கப்பட்டிருந்தன. 1. நிலப்படை 2. கப்பற்படை. நிலப்படையில் யானைப்படை , குதிரைப்படை , காலாட் படைகள் இருந்தன. படைத்தலைவன் படை முதலி , சேனை முதலி என அழைக்கப்பட்டான். முப்படைத் தளபதியை “ மாதண்ட நாயகன் ” என அழைக்கப்பட்டான். 7.4.5. சமுதாய நிலை சாதிமுறை சோழர்கால சமூக நிலை சாதி அடிப்படையாகக் கொண்டு
|
அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சாதியும் அதன் தேவைகளையும் , உரிமைகளையும் உறவுகளையும் பாதுகாத்துக் கொள்வதில் முழுகவனம் செலுத்தின. மரபு வழியில் தொழில்கள் பின்பற்றப்பட்டன. எனவே , வேதகால சாதிமுறைகளே சோழர் காலத்திலும் தொடர்ந்து இருந்தன என்றார். பிராமணர்கள் பிராமணர்கள் கல்வியறிவும் , வேதங்களை நன்கு கற்றவர்களாகவும் சிறந்து விளங்கினர். சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் காணப்பட்டனர். அவர்களுக்கு ' பிரம்ம தேயங்களும் ’ அளிக்கப்பட்டன. அரசருக்குரிய ஆச்சாரியர்களாகவும் , அமைச்சர்களாகவும் , படைத்தலைவர்களாவும் மற்றும் வேதங்கள்
|
ஓதியும் வேள்விகள் செய்தும் மன்னர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாகவும் இருந்தனர். இவர்களது பணிகளைப் பாராட்டி பிரமராய பட்டங்களும் ‘ ஏகபோக பிரமதேயமும் ' அளிக்கப்பட்டன. கோயில் நிர்வாகத்தையும்அவர்களே கவனித்தனர். சத்திரியர்கள் சத்திரியர்கள் நாட்டில் அமைதி காப்பதும் எல்லைகளைக் கண்காணிப்பதும் , போர்க்காலங்களில் அரசனது வெற்றிகளுக்கு 198 உறுதுணையாக நிற்பதும் சத்திரியர்களின் பணிகளாகும். மன்னர்கள் தம்மை சத்திரியர் எனக் கூறிக் கொள்வதை பெரிதும் விரும்பினர். முதலாம் இராஜராஜன் தன்னை சத்திரிய சிகாமணி என்று
|
கூறிக்கொண்டான். வெள்ளாளர் வேளாண்மை முக்கியத் தொழிலாகக் கருதப்பட்டு , அரசாங்கத்தில் இவர்களுக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டன. கொலை தண்டனையிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது. எக்காரணம் கொண்டும் இந்த இனத்துப் பெண்களைச் சபைக்கு அழைத்து வரக் கூடாது என்று காவிரி பாக்கத்துக் கல்வெட்டு , கூறுகின்றது. தொன்று தொட்டு நிலத்தை உழுது சமுதாயத்தின் முதுகெலும்பாக இவர்கள் விளங்குவதால் இவர்களை ‘ சத்திரமேழி பெரிய நாட்டார் ’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர். வாணிகம் வாணிகம் செய்பவர் வாணியர் , என்று அழைக்கப்பட்டனர். உள் நாட்டு வாணிகம்
|
வெளிநாட்டு வாணிகம் சிறப்புப் பெற்று விளங்கியது. இவர்களில் நகரத்தார் , மணிகிராமத்தார் , வலஞ்சியர் , நானா தேசியத் திசையாயிரத்து ஐநூற்றுவர் என்ற பல வணிகக் குழுக்கள் இருந்தன. பெண்கள் நிலை சோழர்காலப் பெண்கள் உயர்ந்த நிலையில் காணப்பட்டனர். அவர்களுக்கு சொத்துரிமை இருந்தது. சமய இலக்கியங்கள் , புராணங்கள் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று இருந்தனர். கணவன் இறந்தபின் தன் சொத்தைக் கோயிலுக்கு எழுதிவைப்பதும் , கோயில்கள் கட்டி பல நிவந்தங்கள் அளிக்கும் உரிமையும் பெற்று இருந்தனர். கணவனை தெய்வமாக நினைத்து வழிபட்டனர். பெண்கள் கணவன்
|
இறந்த பின் சிலர் உடன்கட்டை யேறியது பற்றியும் சிலர் குழந்தைகளுக்காக வேண்டி உயிர்வாழ்ந்ததையும் கல்வெட்டுக்களில் காணலாம். திருமணங்கள் திருமணத்தின்போது பெண்ணுக்கு வரதட்சனையும் , சீதனமும் நிலமாகவோ , பண்டமாகவோ கொடுக்கப்பட்டன. சொத்தை தனித்து எவரும் விற்க முடியாது. பெரும்பாலும் சாதித் திருமணங்களே நடைபெற்றன. ஒருவன் பல பெண்களை மணக்கும் பழக்கம் இருந்தது. எனினும் ஒருவர் மட்டுமே பட்டத்து அரசியாக இருந்தார். நடனமாந்தர் தேவரடியார் என்றும் ' தளிச்சேரி பெண்டுகள் ’ ‘ கோயில் பிணாக்கள் ’ என்றும் அழைக்கப்பட்டனர். கோயிலைத்
|
தூய்மையாக வைத்து இருப்பதும் , விழாக்காலங்களில் நடனமாடுவதும் மாலை கட்டுவதும் , திருவாசகம் பாடுவதும் தொழிலாகக் கொண்டிருந்தனர். இவர்கள் அரண்மனையில் நடனமாடுவோர் , கோயில்களில் நடனமாடுவோர் என இரு பிரிவுகளாகக் காணப்பட்டனர் இம்மாந்தர்கள். அடிமை முறையும் சோழர்காலத்தில் நிலவியது. ஆண்களும் பெண்களும் சிலர் அடிமையாக்கப்பட்டனர். நடனமாந்தர்கள் அரண்மனையிலும் கோயில்களிலும் காணப்பட்டனர். இவர்கள் காசுக்கு விற்கப்பட்டனர். ஆடை அணிகலன்கள் மக்கள் பருத்தியாலும் பட்டாலும் ஆடைகள் அணிந்தனர். ‘ தய்யான் ’ ( Tailor ) என்பவன் கோயில்
|
சிலைகளுக்குத் துணிகளைத் தைத்து அணிவித்தான். ஆண் பெண் இருபாலரும் புடவை அணிந்தனர். மெல்லிய ஆடையையும் பெண்கள் விரும்பினர். படை வீரர்கள் ‘ வட்டுடை ’ அணிந்தனர். அணிகலன்களை ஆண்களும் , பெண்களும் பெரிதும் விரும்பியணிந்தனர். முத்து , பவழம் , மரகதம் , மாணிக்கம் , மணிமாலை போன்றவற்றை அணிகலன்களில் பயன்படுத்தினர். கழுத்து அணிகளும் கைகாப்புகளும் இடுப்பி அணிகளும் பெண்கள் அணிந்தனர். 200 உணவுவகை செந்நெல் செஞ்சாலி , தூவெள்ளரிசி , பயிறு , வரகு , எள் , திணை , மலையரிசி , சோளம் , கம்பு , உளுந்கு , அவரை முதலிய தானியங்கள்
|
வழக்கத்தில் இருந்தன. புளிச்சோறு , தயிர்ச்சோறு , நெய்ச்சோறு , கறியமுது முதலியன உணவாக சமைக்கப்பட்டன. இறைச்சி மற்றும் ஏழைகள் கஞ்சியையும் உணவாக உட்கொண்டனர். பொழுதுபோக்கு கோழிச்சண்டை , நீர் விளையாட்டு , பந்தாடுதல் , இசைக்கருவி மீட்டல் , நடனம் , நாடகம் காணுதல் , சமயச் சொற்பொழிவுகளைக் கேட்டல் மற்றும் வேட்டையாடுதல் , குத்துச்சண்டையிடுதல் போன்றனவற்றை பொழுதுபோக்காகக் கொண்டிருந்தனர். நம்பிக்கைகளும் பழக்கங்களும் கால நேரம் பார்த்தல் , ஜாதகம் பார்த்தல் , குறி சொல்லல் , பேய் பிசாசு , புண்ணியம் , பாவம் , பல்லி சொல்லுதல் ,
|
காகம் கரைதல் , கனவின் பலன் , தும்மல் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தனர். குழந்தை பிறந்த பின் மண் பொட்டிடல் , ஜாதகம் கணித்தல் , பெயர்சூட்டு விழா நடத்துதல் மற்றும் சமய சடங்குகள் போன்ற பழக்கங்களை மரபு வழியில் பின்பற்றி வந்தனர். 7.4.6. சமய வளர்ச்சி சோழர் காலத்தில் சமயத்துறையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டு இந்து சமயம் செழித்தோங்கின. சைவ , வைணவ சமயத் தத்துவக் கருத்துகள் வேரூன்றி கோயிற் பணிகள் உயர்ந்த நிலை அடைந்து சோழர் காலத்தை சமயத்துறையில் ஒரு பொற்கால மாக்கின. சோழ மன்னர்கள் கோயில்களுக்கும் மடங்களுக்கும்
|
நிலம் தானமாக வழங்கி வளர்ச்சியுறச் செய்தனர். 1. தேவதானம் ( சிவன் கோயில் 2. திருவிடையாட்டம் ( திருமால் கோயில் ) 3. பள்ளிச் சந்தம் ( சமண , பௌத்த கோயில் ) 4. மடப்புறம் ( மடங்கள் ) , 5. சாலபோகம் ( அந்தணர் , சிவயோகி ) 6. பிரமதேயம் ( வேதம் பயின்ற பிராமணர் 201 வைணவம் தஞ்சை , கங்கை கொண்ட சோழபுரம் , தாராசுரம் போன்ற நகரங்களில் பெரிய கோயில்கள் கட்டியதோடு அருகிலுள்ள கிராமங்களிலும் பல சிறிய கோயில்கள் கட்டப்பட்டு சமயப் பணிக்கு மன்னர்கள் பெரிதும் உதவி புரிந்தனர். சைவ , வைணவக் கோயில்கள் பல அமைக்கப்பட்டு , பல்வேறு கடவுளர்
|
அவதாரங்களும் , தோற்றங்களும் , சிலைகளாக வடிவமைக்கப்பட்டு வழிபாடு செய்து வந்தனர். இது தவிர இந்துக் கடவுளாக வணங்கும் பல்வேறு கடவுளர்களின் சிலைகளும் கோயில்களில் அமைத்து சமய வளர்ச்சிக்கு மேலும் வித்திட்டனர். சோழ மன்னர்களைப் போன்றே அரசியரும் சமய வளர்ச்சிக்கும்பெரும்ஆதரவு தந்தனர். செம்பியன் மாதேவி , குந்தவை , பஞ்சவன் மகாதேவி , வானவன் மாதேவி , போன்றோர் ‘ நிவந்தங்கள் ’ அளித்து சமய வளர்ச்சிக்குப் பாடுபட்டனர். மேலும் , சோழர்காலத்தில் ஆச்சாரியர்களும்சமயக் கொள்கைகளைத் தத்துவ முறையில் பரப்பினர். இராமானுஜர்
|
விசிஸ்டாத்துவைத் தத்துவக் கொள்கையைப் பரப்பியதோடு தாழ்த்தப்பட்ட மக்களைக் கோயிலுக்குள் சென்று வழிபடச் செய்தார். முதலாம் பராந்தகனின் காலத்தவராக நாதமுனிகள் ஆழ்வார்களின் பாசுரங்களை ' நாலாயிரத் திவ்விய பிரபந்தம் ’ என்ற பெயரில் தொகுத்தளித்தார். சைவம் சைவ சமய வளர்ச்சிக்கு நாயன்மார்களின் தொண்டு அரும்பெரும் தொண்டாகும். திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி பன்னிரு திருமுறைகளையும் , சைவ சித்தாந்தத்தை சந்தானாசாரியர்களும் ( மெய் கண்டார் , அருள் நந்தி , மறைஞான சம்பந்தர் , உமாபதி சிவம் ) சமய வளர்ச்சிக்கு பெருந்தொண்டு
|
புரிந்தனர். 202 நடனக்கலை , நாடகக்கலை , இசைக்கலை மூலமாகவும் சமயக்கருத்துகளை எளிய முறையில் பாமரமக்களுக்குப் புரியும்படி எடுத்துரைத்தனர். மேலும் , இலங்கைப் படையெடுப்பின் போது இராஜராஜன் அங்கு சிவாலயங்கள் கட்டியதோடு அக்கோயிலுக்கு பல நிலதானங்களும் கொடுத்ததாகக் கல்வெட்டு மூலம் அறியலாம். மற்றும் , வேதநூல்கள் , இராமாயணம் , மகாபாரதம் முதலானவை பல வேதபாட சாலைகள் மூலம் கற்பிக்கப்பட்டு சமய வளர்ச்சியை ஊக்குவித்தனர். சோழர்கள் கோயில் விழாக்களை கொண்டாடினர். கோயில் விழாக்களின் போது நாடகத்தின் மூலம் சமயத்தைப் பரப்பினர். அங்கே
|
சமய சாத்திரங்களையும் திருமறைகளையும் மக்களுக்கு அவ்வப்போது விரிவுரை செய்து சமயக் கொள்கைகளை எடுத்துக் கூறினர் எனக் கல்வெட்டுக்கள் மூலமாக அறியலாம். சமணமும் , பௌத்தமும் சோழ மன்னர்கள் பலர் பல நிவந்தங்கள் அளித்து சமண பள்ளிகளையும் பௌத்த மடாலயங்களையும் ஏற்படுத்தி கல்வி மற்றும் சமய வளர்ச்சிக்குப் பாடுபட்டனர். சோழர்காலத்துச் சமணநூல் திருத்தக்கதேவரின் ‘ சீவக சிந்தாமணி ’ யாகும். ‘ பள்ளிச் சந்தம் ’ எனப்படும் சமணக் கோயிலுக்கு வரியில்லா நிலதானம் அளித்துள்ளனர். முதலாம் ராஜராஜன் , முதலாம் குலோத்துங்கள் காலங்களில் நிலதானம்
|
அளித்து சமணசமயம் வளர்ச்சிக்கு பெருந்தொண்டாற்றியுள்ளனர். நாகப்பட்டினம் புத்தர்களின் முக்கிய பட்டினமாக சோழர் காலத்தில் விளங்கியது. நாகப்பட்டினம் பௌத்த விகாரத்துக்கு அளிக் கப்பட்ட கிராமதானம் பற்றி ‘ லீடனின் ’ செப்பேடுகள் கூறுகின்றன. காஞ்சியிலும் பௌத்த சமயம் செல்வாக்கு பெற்றிருந்தது. இலங்கையில் நடைபெற்ற புத்த மகாநாட்டிற்கு சோழ நாட்டிலிருந்து புத்த பிட்சுகள் சென்றனர். அதன் பொருட்டு சிங்கள 203 மன்னன் பல அன்பளிப்புகளைச் சோழ மன்னனுக்கு அளித்தான் என்று ‘ தீபவம்சம் ’ கூறுகின்றது. 7.4.7. கலை வளர்ச்சி இன்று உலகம்
|
போற்றும் உள்ளத காலமாக சோழர்காலம் விளங்குவதற்கு அக்காலத்திய கட்டடக்கலை , சிற்பக்கலை , படிமக்கலை , இசைக்கலை , நடனக்கலை மற்றும் நாடகக்கலை போன்றவற்றின் வளர்ச்சியே காரணமாகும். சோழர்கால கோயில் கட்டடக் கலை : 1. முற்காலச் சோழர் கோயிற் கட்டடக் கலை ( கி.பி. 866 முதல் 985 வரை ) 2. பிற்காலச் சோழர் கோயிற் கட்டடக்கலை ( கி.பி. 1170 முதல் 1270 வரை ) பிற்காலச் சோழர் கோயில்களில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் , கங்கை கொண்ட சோழாபுரம் கோயில் , தாராசுரம் கோயில் திரிபுவணம் கோயில் ஆகியன புகழ்வாழ்ந்தவை இவற்றில் உலகப் புகழ்பெற்ற
|
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் முதலாம் ராஜராஜனால் கட்டப்பட்டது. கங்கை கொண்ட சோழபுரம் கோயில் முதலாம் ராஜேந்திரனால் கட்டப்பட்டது. சிற்பக்கலை ( Sculpture ) ‘ கல்லும் கவிபாடும் ’ என்பதற்கேற்ப சோழர்காலச் சிற்பங்கள் இப்புவி மாந்தர்களுக்கு எடுத்துக் கூறும். அத்தகைய சிற்பங்களைக் கீழ்கண்டவாறு பிரிக்கலாம். 1. தெய்வ திருவடிவங்கள் 2. மனித உருவங்கள் ( மன்னர்கள் உருவம் ) 3. நாயன்மார்களின் வடிவங்கள் நடனமாந்தர்களின் நடனப் படிமங்கள் 5. தூண் சிற்பங்கள் 6. விலங்குகளின் உருவங்கள் போன்றளவாகும். 204 படிமக்கலை ( Iconography ) கல்லில்
|
சிலை வடித்ததைப் போன்று உலோகங்களினால் வார்ப்புச் சிலைகள் உண்டாக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. அவை , செம்பு , வெண்கலம் , வெள்ளி போன்றவற்றால் வடிவமைக்கப்பட்டன. ஓவியக்கலை ( Painting ) சோழர் காலத்தில் தஞ்சைக் கோயிலின் கருவறையின் சுவற்றில் காணப்படும் ஓவியங்கள் மிகச் சிறப்புடையதாகும். அவற்றில் தடுத்தாட் கொண்ட சுந்தரர் வரலாறும் , சிவபெருமான் புலித்தோல் மீது அமர்ந்துள்ள கைலாய காட்சியும் சுந்தரர் வெள்ளை யானை மீது அமர்ந்து செல்லும் காட்சியும் , சேரமான் பெருமாள் நாயனார் குதிரை மீது அமர்ந்து செல்லும் காட்சியும் மிகவும்
|
அற்புதமானவையாக இருக்கின்றன. நடனக்கலை ( Dance ) சிதம்பரம் , தஞ்சை , காஞ்சி போன்ற கோயில்களில் காணப்படும் நடனமாந்தர்களின் சிற்பங்களும் , பெரியபுராணம் , கம்பராமாயணம் காட்டும் நடனக்கலையும் சோழர்கால சிறந்த நடனக்கலைக்குச் சான்றாகும். கோயிலில் நடனம் பயிற்றுவித்தவன் ' நிருத்தப் பேரரையன் ’ என்று அழைக்கப்பட்டார். நாட்டியக் கலையில் சிறந்த பெண்களுக்குத் ‘ தலைக்கோலி ' என்ற பட்டம் வழங்கப்பட்டது. நாடகக்கலை ( Drama ) ஸ்ரீ இராஜ ராஜச்சுரம் , ஸ்ரீ இராஜ ராஜ விஜயம் போன்ற நாடகங்கள் நடைபெற்றன என்பதை தஞ்சையில் காணப்படும்
|
கல்வெட்டுக்களின் மூலம் அறியலாம். இவை இராஜ ராஜனின் படை யெடுப்பு மற்றும் சாதனைகளை விளக்குவதாக அமைந்திருந்தன. இசைக்கலை ( Music ) நாயன்மார்கள் ஆழ்வார்கள் ஆகியோரின் பாடல்களை இசையுடன் பாட ஒதுவார்கள் இருந்தனர். யாழ் வாசித்துப்பாடும் 205 பாணர்களும் இசைக்கேற்றபடி நடனமாகும் நடனமாந்தர்களும் இருந்தனர். மன்னர்கள் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்த்தனர். கோயில்களில் காணப்படும் சிற்பங்களில் பலவகைப்பட்ட இசைக்கருவிகளைக் காணலாம். மேலும் நடராஜர் சிலையின் கையில் உடுக்கை இருப்பதையும் நடனமாந்தர்களின் நடனத்திற்கேற்ப பலவகைப்பட்ட
|
தாளங்கள் , மேளங்கள் , இசைக்கருவிகள் யாவும் இசை வல்லுநர்களிடம் இருப்பதை கோயில் சிற்பங்களில் காணலாம். கல்வி ( Education ) முதல் பராந்தகள் வேத பாட சாலை நடத்த மான்யம் அளித்துள்ள செய்தி காமப்புல்லூர் கல்வெட்டு பகர்கின்றது. முதல் இராஜ ராஜன் காலத்தில் வேதங்களையும் இலக்கணங் களையும் கற்பிக்கும் ஆசிரியரின் தகுதிகளை அணியூரில் காணப்படும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. முதல் இராஜேந்திரனின் எண்ணூர்க் கல்வெட்டில் அவ்வூரிலிருந்த கல்லூரியைப் பற்றியும் அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களின் ஊதியம் , மாணவர்கள் பயின்ற பாடங்களைப் பற்றியும்
|
கூறுகின்றது. வீரராஜேந்திரனின் திருமுக்கூடல் கல்வெட்டில் கோயில் நிர்வாகத்தின் கீழ் கல்லூரி , மருத்துவமனை இருந்ததைக் குறிப்பிடுகின்றது. விக்கிரம சோழனின் திருவிடைமருதூர்க்கல்வெட்டு மருத்துவம் பயிலும் மாணவர்கள் மடத்தில் உணவு பெற்றதையும் , திருவொற்றியூர் கல்வெட்டில் ஒரு இலக்கண பாடசாலை அமைத்த செய்தியும் , திருவிடைக்கழியிலுள்ள கல்வெட்டு , மலையாளத் திலிருந்து வந்து வேதாந்தம் பயிலும் மாணவர்களுக்கு மடத்தில் உணவு அளித்ததையும் கூறுகின்றன. இவையன்றி இராமாயணம் , மகாபாரதம் , புராணங்கள் முதலியவற்றில் சொற்பொழிவு நடைப்பெற்ற
|
செய்தியும் கல்வெட்டு கூறுகின்றது. திருபுவனம் , எண்ணாயிரம் , திருவொற்றியூர் , வேப்பூர் முதலிய இடங்களில் தமிழ் மொழிக்கல்விச் சாலைகள் இருந்தாக அறிகிறோம். இலக்கியம் சோழர்காலத்தில் ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம் , மணிமேகலை , வளையாபதி , குண்டலகேசி , சீவகசிந்தாமணி போன்றவைகளில் முதல் இரண்டு தவிர மற்ற மூன்று காப்பியங்களும் இலக்கிய வளர்ச்சிக்குச் சான்றுகளாக உள்ளன. ஐஞ்சிறு காப்பியங்களான உதயன குமார காவியம் , நாக குமார காவியம் , யசோதா காவியம் , சூளாமணி மற்றும் நீலகேசி போன்ற வற்றோடு சமண பௌத்த காப்பியங்களும்
|
குறிப்பிடத் தக்கவையாகும். இவை தவிர இலக்கண நூல்களாகிய நன்னூல் , வீரசோழியம் தண்டியலங்காரம் மற்றும் நிகண்டுகள் யாவும் சோழர்கால இலக்கிய வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. புகழ்வாய்ந்த புலவர்களும் படைப்புகளும் ஒளவையார் சேக்கிழார் கம்பர் புகழேந்திப்புலவர் ஒட்டக்கூத்தர் ஜெயங்கொண்டார் கச்சியப்ப சிவாச்சியார் ஆத்திச்சூடி , கொன்றை வேந்தன் , நல்வழி , ஞானக்குறள் பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் கம்பராமாயணம் , ஏரெழுபது சடகோபரந்தாதி , சரஸ்வதி அந்தாதி , இலக்குமி அந்தாதி நாளோபாக்கியானம் மூவருலா , பிள்ளைத்
|
தமிழ் ( குலோத்துங்க சோழன் ) கலிங்கத்துப்பரணி கந்த புராணம் போன்ற நூற்படைப்புகள் சோழர்கால இலக்கியத்திற்கு பெருமை சேர்ப்பவையாகும். நம்பியாண்டார் நம்பி என்பவர் சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் தொகுத்ததுடன் , மேலும் பத்து நூல்களையும் தாமே இயற்றியுள்ளார். மேலும் சைவ சமயம் சாத்திரங்கள் பதிநான்கு நூல்களும் சேக்கிழார் காலத்தைத் தொடர்ந்து இயற்றப்பட்டு உள்ளன. இவையாவும் சோழர்கால இலக்கிய வளர்ச்சிக்கு சான்றுகளாக விளங்குகின்றன. 7.4.8. இந்திய பண்பாட்டிற்கு சோழர்களின் கொடை 1. மன்னருக்கு வாரிசு இல்லாத போது அரச குடும்பம் சாராத
|
ஒருவர் மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட முறை சோழர்காலத்தில் ‘ குடியாட்சி ’ முறை மலர்ந்ததற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். 2. கிராம சபைகள் கொண்டுவரும் தீர்மானங்களைத் தான் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்ற நிலை வலிமையான ஒரு சிறந்த ஜனநாயக ஆட்சிக்கு அடிகோலியது எனலாம். 3. கிராம சபை உறுப்பினர்கள் ' குடவோலை ' முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் முறையானது இந்திய பண்பாட்டிற்கு சோழர்கள் நல்கிய சிறந்த கொடையெனலாம். 4. சோழர்காலத்தில் மக்களின் நலன் கருதி ஏற்படுத்தப்பட்ட பல்வேறு வாரியங்கள் ( துறைகள் ) இன்றுள்ள ஜனநாயக
|
ஆட்சி முறைக்கு வழங்கப்பட்ட கொடை ஆகும். 5. சோழர்காலத்தில் ஆன்மிகத்தின் மூலம் மக்களின் வாழ்க்கையை நெறிப்படுத்த நாயன்மார்களும் ஆழ்வார்களும் மற்றும் ஆச்சாரியார்களும் தொண்டு புரிந்து இந்தியப் பண்பாட்டு வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிந்தனர். 6. சோழர்கால கோயில் கட்டடக்கலை , சிற்பக்கலை , படிமக்கலை , இசைக்கலை , நடனக்கலை மற்றும் நாடகக்கலை போன்ற 208 வற்றின் சிறப்பான அம்சங்கள் யாவும் இந்தியப் பண்பாட்டிற்குச் சிறந்த கொடைகளாகும். 7. ஐம்பெரு மற்றும் ஐஞ்சிறு காப்பியங்களும் , இலக்கண நூல்கள் , நிகண்டுகள் போன்றவை தமிழ்
|
இலக்கியப் படைப்பிற்கும் இந்தியப் பண்பாட்டிற்கும் சிறந்த கொடைகளாக விளங்கு கின்றன. 8. நாதமுனிகளால் தொகுத்தளித்த ' நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் ’ சோழர்காலத்தில் வழங்கப்பட்ட சிறந்த கொடையாகும். 9. நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு திருமுறைகளைத் தொகுத்ததோடு தாமே பத்து நூல்களை இயற்றி இந்து சமயத் திற்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் பெரிதும் தொண்டாற்றியுள்ளார். 10. சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கை வழங்கியதும் , இந்தியப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வால்மீகி ராமாயணத்தை தமிழில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றியதும்
|
சோழர்கள் இந்தியப் பண்பாட்டிற்குச் வழங்கிய கொடையாகும். 11. சோழர்காலத்தில் வேதக்கல்வி மற்றும் மருத்துவக்கல்வி போன்றவை அனைத்தும் இந்தியப் பண்பாட்டிற்கு மெருகூட்டு வனவாக அமைந்துள்ளன. 7. 4. பயிற்சி வினாக்கள் அ. ஓரிரு வரிகளில் விடையளி 1. பிற்காலச் சோழர்களின் ஆட்சிக்காலம் யாது ? 2. சோழ மன்னர்கள் புனைந்து கொண்ட ‘ பட்டங்கள் ’ யாவை ? 3. ' சதுர்வேதி மங்கள சபை ' குறிப்பி வரைக 4. ' குடவோலை ’ முறை என்றால் என்ன ? 5. ' சித்திரமேழி பெரிய நட்டார் ’ சிறு குறிப்பு எழுதுக. 6. ' தேவரடியார் ’ என்போர் யாவர் ? 209 7. பன்னிரு
|
திருமுறைகளைத் தொகுத்தளித்தவர் யார் ? 8. சைவ சித்தாந்த நூல்களை எழுதியவர்கள் யார் ? 9. ‘ படிமக்கலை ’ ( Iconography ) குறிப்பு எழுதுக. 10. ' ஐம்பெரும் காப்பியங்கள் ' யாவை ? 11. ' ஐஞ்சிறு காப்பியங்கள் ' யாவை ? 12. சோழர்கால இலக்கண நூல்கள் யாவை , 13. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தளித்தவர் யார் ? ஆ. பத்து வரிகளுக்கு விடையளி 1. பிற்காலச் சோழர் கால பண்பாட்டைக் குறிக்கும் முக்கிய சான்றுகள் யாவை ? 2. பிற்காலச் சோழ அரசர்களில் முக்கியமானவர்கள் யாவர் ? 3. சோழ மன்னனின் செயலகத்தில் பணிபுரிந்தவர்கள் யாவர் ? 4.
|
சோழப் பேரரசின் உட்பிரிவுகள் யாவை ? 5. சோழர்கால ' கிராம ஆட்சி ' முறையின் நான்கு பிரிவுகள் யாவை ? 6. சோழர்கால ' தேர்தல் முறை ' யாது ? 7. சோழர்கால ‘ வாரியங்களும் ’ அதன் கடமைகளும் யாவை ? 8. சோழர்காலப் ‘ பெண்களின் நிலை ’ யாது ? 9. சோழர்காலப் ' மடங்கள் ’ எவ்வாறு செயல்பட்டன ? 10. சோழர்காலச் ‘ சிற்பங்கள் ’ எவ்வாறு வகைப்படுத்தலாம் ? 11. சோழர்கால ‘ ஆடை அணிகலன்கள் ' யாவை ? 12. சோழர்கால ‘ கல்வி நிலை ' எவ்வாறு இருந்தது ? 13. சோழர்காலச் ' சிற்பக்கலையை ’ எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம் ? அவை யாவை ? 14. சோழர்கால ‘ இசைக்கலையைப்
|
’ பற்றி விளக்கு. 210 இ. ஒரு பக்க அளவில் விடை எழுதுக 1. சோழர்கால அரசியல் நிலையை விளக்குக. 2. சோழர்கால சமூகநிலை எவ்வாறு இருந்தது ? விளக்குக. 3. சோழர்கால சமயவளர்ச்சி பற்றி விளக்கி எழுதுக. 4. சோழர்காலத்தில் ' சமணமும் , ' ' பௌத்தமும் ’ எவ்வாறு செயல்பட்டன ? 5. சோழர்கால , கல்வி மற்றும் இலக்கிய வளர்ச்சி குறித்து விளக்கி எழுதுக. ஈ. நான்கு பக்க அளவில் விடையளி 1. சோழர்காலப் பண்பாடு குறித்து ஒரு கட்டுரை வரைக. 2. சோழர்கால , கலை மற்றும் இலக்கிய வளர்ச்சி குறித்து ஒரு கட்டுரை வரைக... 3. இந்தியப் பண்பாட்டிற்கு சோழர்களின்
|
கொடை குறித்து ஒரு கட்டுரை எழுதுக. 7.5. பிற்காலப் பாண்டியர் பண்பாடு அரச குடும்ப மரபில் மிகப் பழமை வாய்ந்த சிறப்பு மிக்கவர்களுள் பாண்டியர்களும் ஆவர். இவர்கள் மதுரையை தலைநகராகக் கொண்டு தமிழகத்தின் தென்பகுதியை ( மதுரை , இராமநாதபுரம் , திருநெல்வேலி , கன்னியாகுமரி மாவட்டங்கள் அடங்கியது ) ஆட்சி செய்தனர். பாண்டிய அரசு பதவி வாரிசு உடையதாகவே இருந்தது. மகள் இல்லாதபோது மன்னரின் சகோதரன் பதவிக்கு வந்ததுண்டு. பாண்டியர்கள் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க சிறப்பு களைப் பெற்று நல்ல நேர்த்தியான பண்பாட்டினை உருவாக்கினர்.
|
பிற்காலப் பாண்டியர் காலத்தில் குடியிருப்புகள் அதிகமாயின. வாணிகம் பெருகியது. தரிசு நிலங்கள் விளை நிலமாக்கப்பட்டன. நீர் நிலைகளைப் பெருக்கி மக்கள் மகிழ்வுடன் எல்லா நலமும் பெற்று வாழ்ந்தனர். இதனால் கலைப் பணிகளில் புதிய பரிணாம வளர்ச்சி ஏற்பட்டது. 7.5.1. காலம் பிற்காலப் பாண்டியர்கள் கி.பி. 1179 முதல் கி.பி. 1311 வரை ஆட்சி புரிந்தனர் என்று குறிப்பிடப்படுகின்றது. சோழருக்குத் தலைவணங்கி தலைநகர் மதுரையைத் துறந்த பின்னர் சடையவர்மன் குலசேகரன் ( கி.பி. 1190-1216 ) காலத்தில் பாண்டியர் சோழர்களை அடக்கி ஆட்சி செய்தனர்.
|
மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் முற்றிலும் சோழர்கள் தோற்கடிக்கப்பட்டனர். 7.5.2. சான்றுகள் பாண்டியர்களின் ஆட்சியைப் பற்றி கல்வெட்டுக்கள் , செப்புப் பட்டயங்கள் தல புராணத்தில் அடங்கியுள்ள வரலாற்றுக் குறிப்புகள் , அக்கால இலக்கிய நூல்கள் , சமய நூல்கள் , கோயில் கட்டடங்கள் 212 காசியல் ( Numismatics ) மற்றும் மார்க்கோபோலோவின் குறிப்புகள் , சீனர்களின் குறிப்புகள் மற்றும் வாசுப் , அமிர்குசுரு , இபின்பட்டுடா , பரணி போன்றோரின் குறிப்புகள் மூலம் நாம் அறிகிறோம். 7.5.3. முக்கிய அரசர்கள் 1. சடையவர்மன் குலசேகரன் (
|
கி.பி. 1190-1216 ) 2. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ( கி.பி. 1216 - 1238 ) 3. இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ( கி.பி. 1239 - 1251 ) 4. சடையவர்மன் சுந்தரபாண்டியன் ( கி.பி. 1251 - 1284 ) 5. முதலாம் மாறவர்மன் குலசேகரன் பாண்டியன் ( கி.பி. 1268 - 1311 ) போன்றோர் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் தலைசிறந்து விளங்கினர். 7.5.4. அரசியல் நிலை மதுரையைத் தலைநகராகக் கொண்டு பிற்காலப் பாண்டியர் ஆட்சி புரிந்தனர். பாண்டிய நாடு நிர்வாக வசதிக்கென பல வளநாடுகளாகவும் ( மண்டலங்கள் , வளநாடுகள் கூற்றங்களாகவும் ( கோட்டம் ) ,
|
கூற்றங்கள் கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. வளநாடுகளை அரச குடும்பத்தினர் நிருவகித்து வந்தனர். மத்திய மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையே நல்ல தொடர்பு இருந்து வந்தது. அதனால் ஆட்சியின் நிருவாகம் வெற்றிகரமாகவும் வலிமையுடனும் செயல்பட்டு வந்தது. நாட்டின் நிருவாகத்திற்கு மன்னரே முழுப் பொறுப்பு ஏற்றார். அதிகாரம் அனைத்தும் அவரிடமே இருந்தது. அரசனுக்கு ஆலோசனை வழங்க ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள் கல்வி அறிஞர்களாக மட்டுமின்றி தெய்வபக்தி நிரம்பியராகவும் நாட்டு நலனில் அக்கறை கொண்டவராகவும்
|
விளங்கினர். மன்னனுக்குத் துணையாக பல அதிகாரிகள் இருந்தனர். அவர்களுக்கு ‘ அகப்பிரிவார முதலிகள் ' என்று பெயர். அவ்வதிகாரிகள் கொங்கரையார் , காலிங்கராயன் , மழவரையர் , முனையகரயர் , விழப்பரையர் என்று சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்தனர் மற்றும் , 1. நாடுவகை செய்வோர் ( நிலம் தரம் பிரித்து வரிவிதித்தல் 2. திருமந்திர ஓலை ( அரசின் ஆணைகளை எழுதுபவர் ) திருமந்திர ஓலைநாயகம் ( ஆணைகளை கையொப்பமிட்டு வெளியிடுபவர் ) 3. 4. புரவுவரித் திணைக்கலம் ( வருவாய்த் துறை உயர்குழு ) 5. மகாதண்ட நாயகன் ( படையின் உயர் தலைவன் ) போன்ற உயர்
|
அதிகாரிகளும் பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தனர். ஊராட்சி நிருவாகம் பாண்டியர்களின் ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகள் வலிமை பெற்று திகழ்ந்தன. இதில் மூன்று வகை சபைகள் செயல்பட்டன. 1. பிராமணர்கள் இருந்த பிரமதேய சபை 2. பிரமதேயம் அல்லாத ஊர்களிலிருந்த சபை 3. வணிகர் வாழ்ந்து வந்த நகரசபை மேற்காணும் சபைகளைப் பற்றி மானூர் கல்வெட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சபை உறுப்பினர்களை ' குடவோலை ’ முறையில் தேர்ந்தெடுத்து , தகுதிக்கேற்ப பல்வேறு வாரியங்களில் செயல்படச் செய்தனர். படைவலிமை பாண்டியர்களின் போர்ப்
|
படையில் தேர்ப் படை , யானைப் படை , குதிரைப் படை , காலாட் படை மற்றும் கப்பற் படையும் 214 இருந்ததாக அறிகிறோம். படைகளில் வலிமை மிக்க ஒரு பெரும் படை ( Regiment ) ஒன்று இருந்தது. இதில் எட்டு சிறிய படைகளும் இருந்தன. மகா சாமந்தன் , மகா தண்ட நாயகன் என்போரும் படையின் உயர் தலைவர்களாகவும் , சேனாதிபதி சாமந்தன் , தண்டநாயகன் போன்றோர் படைகளின் தலைவர்களாகவும் இருந்தனர். கல்வெட்டுக்களின் ‘ முற்பேர்படையர் ’ ‘ வளவன் உள்ளிட்ட பெரும்படையர் , ’ ‘ வலங்கைமா சேனையர் ' என்ற படைப்பிரிவுகள் குறிக்கப்பட்டுள்ளன. வருவாய்த்துறை
|
வரிவிதிப்புத் துறையானது புரவுவரி திணைக்களம் , இறைபட்டம் , கடமை , இடைவரி , இனவரி , நிலவரி , துறைமுகவரி , தொழில்வாரி மற்றும் வணிகவரி போன்ற பல்வேறு வரிகள் வசூலிக்கப்பட்டு அரசுக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டன. நிலதானம் செய்பவர்களுக்கு நிலவரி வசூலிக்கப்படவில்லை. நீதித்துறை பாண்டியரின் ஆட்சிக்காலத்தில் முறையான நீதி நிர்வாகத் துறை இருந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும் ஊர் மக்களின் பிரச்சினைகளை ' ஊர்ச்சபை ' தீர்த்து வைத்தது. நீதி வழங்கும் ‘ நியாயத்தார் ’ வராத நிலையில் வழக்குகள் அரசவைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
|
அரசனும் தகுந்த தண்டனைகள் வழங்கி நாட்டில் நீதியையும் அமைதியையும் நிலை நாட்டினாள். 7.5.5. சமுதாய நிலை பாண்டியர் காலச் சமூதாயத்தில் , அந்தணர் , வணிகர் , வேளாளர் , மறவர் , மருத்துவர் மற்றும் சோதிடர் , என்ற பல பிரிவினர் வாழ்ந்து வந்தனர். பொதுவாக இவர்களை பிராமணர்கள் , வேளாளர்கள் , ஆயர்கள் , கம்மாளர் , நகரத்தார் வலங்கை - இடங்கை வகுப்பினர் மற்றும் ‘ பாஞ்சாலர்கள் ’ என அழைக்கப்பட்டு வந்தனர். 215 சமூகநிலைப் பற்றி மார்க்கோபோலோ மற்றும் வாசுப் ஆகியோரின் குறிப்புகள் : 1. பாண்டிய நாட்டில் வாழும் மக்கள் பசுக்களை போற்றி
|
வணங்குவர் ; அதைக் கொல்ல மாட்டார்கள். 2. இல்லத்தை ( வீடு ) சாணம் போட்டு மெழுகி மிகவும் தூய்மையாக வைத்து இருந்தனர். 3. பர்வு - தாழ்வு இன்றி அனைவரும் தரையில் அமர்ந்தனர். “ மண்ணில் பிறந்து மண்ணிலேயே மடிகிறோம் அதனால் மண்ணை மதித்து வாழ வேண்டும் ” என்பர். 4. இவர்களின் ஆடை ஆபரணங்கள் மிகவும் எளியதாக இருந்தது. ஆயினும் , மன்னன் - அரசி ஆகியோரின் ஆடை - ஆபரணங்கள் விலை உயர்ந்ததாகக் காணப்பட்டன. 5. கூழானாலும் குளித்துக் குடிப்பர். வலக்கையில் மட்டும் உணவுண்பர். நீர் அருந்தும்போது குவளையை உதட்டில் வைத்து குடிக்காமல் மேலே
|
உயர்த்தி குடிப்பர். 6. தெருவில் படுத்து உறங்குவர். மது அருந்துவது தீமையெனவும் , பாவமெனவும் கருதினர். மது அருந்துபவர் கூறும் சாட்சியை ஏற்றுக் கொள்வதில்லை. 7. பெண்கள் உயர்ந்த நிலையில் இருந்தனர். ஆண்களுக்கு நிகராகவே இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர். பாய் முடைதல் , நாற்று நடுதல் , தயிர் , மோர் , வெண்ணெய் , மீன் விற்றல் போன்ற தொழில்களில் ஈடுபட்டனர். 8. பெண்கள் உயர்கல்வி கற்றுப் பாடல்கள் இயற்றினர். அரச குடும்பப் பெண்கள் சமயத்திற்கு முக்கியத்துவம் தந்து கோயில்களுக்கு நிலதானம் செய்தனர். 9. மார்கழி மாதத்தில்
|
கன்னிப் பெண்கள் நோன்பு இருந்தனர். கோலமிட்டு ஓவியத்தை வரைந்தனர். திருமணம் பெற்றோரின் விருப்பப்படியே நடந்தது. பெண்வீட்டாரே திருமணச் செலவை ஏற்றனர். மேலும் , பெண்களுக்குச் சீதனமும் கொடுக்கப்பட்டது. 216 10. பெண்களில் தேவரடியார் என்ற வகுப்பினர் கோயில்களில் பணிபுரிந்தும் நடனமாடியும் வந்தனர். வசதி படைத்த பெண்கள் ஆண்டவனுக்கு அடிமையாகி சமயத்தொண்டு புரிந்த வந்தனர். 11. கணவன்மார் இறந்ததும் மனைவியர் உடன்கட்டை ஏறும் பழக்கத்தையும் சமுதாயம் அவர்களை உயர்வாகப் போற்றுவதையும் காணமுடிகிறது. 12. பதின்மூன்று வயதானதும் ஆண்மகன்
|
பொருளீட்டும் பொருட்டு வெளியில் அனுப்பப்பட்டான். அவனே தனக்கு உணவு தேட வேண்டும். தாய்க்கும் உணவளித்தான். ஒரு நாளும் தந்தையின் உழைப்பில் வாழவில்லை. முத்துக்குளித்தல் முத்துக்குளித்தல் பாண்டிய நாட்டின் ஒரு முக்கியமான தனிச்சிறப்பு வாய்ந்த பணியாகும். முத்துக்குளிக்கும்போது தங்கள் உயிருக்கு ஆபத்தில்லாமல் காக்கின்ற மந்திரவாதிகளுக்கு இருபதில் ஒரு பங்கு அளித்தனர் என்பது மார்க்கோபோலோவின் கூற்று. 7.5. 6. சமய நிலை இடைக்காலப் பாண்டியர் காலத்தில் சமயப் பூசல் இருந்து வந்தது. ஆனால் , பிற்காலப் பாண்டியர் காலத்தில் சமயப்பூசல்
|
இல்லை. பாண்டியர்கள் இந்து சமயத்தை முழுக்க முழுக்க ஆதரித்தனர். எனவே , சைவமும் வைணவமும் சிறந்து விளங்கியது. களப்பிரர் காலத்தில் இந்துசமயம் சீர் குலைக்கப்பட்டது. சமணமும் பௌத்தமும் செழித்தோங்கின. சமணர்களின் ஆதிக்கம் தலை தூக்கியபோது மீண்டும் மதுரையில் பாண்டியர்களும் , தொண்டை மண்டலத்தின் பல்லவர்களும் எழுச்சியுற்று இந்து சமயத்தை போற்ற ஆரம்பித்தனர். இதனால் கலகம் பிறந்தது. அமைதி அழிந்தது. கூன் பாண்டியன் காலத்தில் பல்லாயிரக் கணக்கான சமணர்களைத் துன்புறுத்தியதாகவும் கழுவிலேற்றிக் கொன்றதாகவும் வரலாறு கூறுகிறது.
|
குப்தர்களைப் போல பாண்டியர்களும்அசுவமேத யாகம் , வாஜபேய யாகம் போன்ற யாகங்களையும் ; ஹிரண்ய கர்ப்பம் , 217 துலாபாரம் போன்ற தாளங்களையும் செய்து அக்கிரஹாரம் பல ஏற்படுத்தி இந்து சமயத்திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டினர் என பாண்டியரின் செப்பேடுகள் , கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம். சைவம் ( Saivism ) பாண்டிய நாட்டில் சைவ சமயம் வளர்ந்ததற்கு மன்னர்கள் செய்த தொண்டு குறிப்பிடத்தக்கதாகும். பாண்டிய மன்னன் அரிகேசரி என்ற நின்ற சீர் நெடுமாறன் என்பவன் சமண சமயத்தைத் தழுவி இருந்தான். சைவ சமயக் குரவர் திருஞான சம்பந்தரின் முயற்சியால்
|
அம்மன்னன் சைவ சமயத்துக்கு மாறி , பெரும் ஆதரவு வழங்கினான். அவரது மனைவி மங்கையர்க்கரசி , அமைச்சர் குலச்சிரையாரும் சைவ சமயத்திற்குப் பாடுபட்டனர். பாண்டிய மன்னர்கள் பலர் பல நிவந்தங்கள் வழங்கி சைவக்கோயில்களின் வளர்ச்சிக்கு பெருந்தொண்டு புரிந்துள்ளனர். வரகுண பாண்டியன் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவள் கோயிலுக்கும் , முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் சிதம்பரம் கோயிலுக்கும் , குலசேகரபாண்டியன் மதுரைக் கோயிலுக்கும் பல தொண்டுகள் புரிந்தனர். கோயில்களில் விழாக்காலங்களில் பக்திப்பாடல்களும் ( மார்கழி மாதம் ) நடனங்களும்
|
நடத்தப்பட்டன. நாயன்மார்களின் உருவச் சிலைகள் கோயில்களில் வைக்கப்பட்டு ஒவ்வொரு நாயன்மார் பிறந்தநாள் நட்சத்திரத்திலும் விழாக் கொண்டாடப்பட்டன. மன்னர்கள் பிறந்த நாள்களிலும் விழாக்கள் கொண்டாடப்பட்டன. ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான சிவஞான போதக் கருத்துகள் பாண்டியர் காலத்தில் பரப்பப்பட்டன. அதற்கௌ நாடு முழுதும் மடங்கள் பல ஏற்படுத்தி சமயத்தைப் பரப்பினர் என்பதை இரண்டாம் மாறவர்மன் சுந்தரப்பாண்டியனின் கல்வெட்டு மூலம் அறிகிறோம். வைணவம் ( Vaishnavism ) ஆழ்வார்கள் காலத்தில் வைணவ சமயம் சிறப்பாக வளர்ச்சி பெற்றது.
|
ஆழ்வார்களின் தெய்விகப் பாடல்களின் தொகுப்பு 218 ‘ நாலாயிரத் திவ்வியப்பிரபந்தமாகும். ' இதை தொகுத்தளித் நாதமுனிகள் ஆவார். பாண்டிய நாட்டு ஆழ்வார்கள் , நம்மாழ்வார் , மதுரகவியாழ்வார் , பெரியாழ்வார் , ஆண்டாள் ஆகிய நால்வரும் வைணவ சமயத்தை வளர்த்தனர். சைவக் கோயில்களுக்கு நிவந்தங்கள் அளித்தது போன்றே பாண்டியர்கள் வைணவக் கோயில்களுக்கும் நிவந்தங்கள் வழங்கி வைணவ சமயத்தை வளர்த்தனர். மேலும் வைணவ மடங்கள் மூலமாகவும் வைணவ சமயத்தைப் போற்றி வளர்த்தனர். சமண , பௌத்த சமயங்கள் பாண்டியரின் இடைக்காலத்தில் சமண மதம் மதுரைப் பகுதிகளில்
|
மிகவும் செல்வாக்குப் பெற்று திகழ்ந்திருந்ததை பெரியபுராணம் கூறுகிறது. பல்வேறு இடங்களில் சமணர் இருக்கைகள் இருந்ததற்கான ஆதாரங்கள் மண்டபங்களும் ( மடங்கள் ) கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. பிற்காலப் பாண்டியர் காலத்தில் ‘ சமணர் மலை ' முக்கிய இடமாகத் திகழ்ந்தது. ‘ சிரவண பெல்கோலா ’ விலுள்ள ( மைசூருக்கு அருகில் மூலச் சங்கத்தைச் சார்ந்த ‘ பாலச்சந்திர தேவர் ' மற்றும் ‘ ஆரிய தேவர் ' போன்றோர் சமணர் மலையில் ‘ சல்லேகணம் ’ ( உண்ணா நோள்பு பூண்டு வடக்கிருத்தல் ) முறைப்படி உயிர் துறந்தனர். மற்றும் , வஞ்சி , காஞ்சி ,
|
பூம்புகார் போன்ற இடங்களில் பௌத்த இருப்பிடங்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. ‘ தர்ம கீர்த்தி ’ என்பவர் பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவர். இவர் இலங்கையில் கூட்டப்பட்ட பௌத்த மாநாட்டில் முக்கிய பங்கேற்றவர் ஆவார். இவ்வாறு பாண்டியர் காலத்தில் இந்து சமயங்களான சைவமும் வைணமும் நன்கு வளர்ச்சி பெற்றது. பாண்டிய மன்னர்களும் அரசியரும் சமய வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நின்றனர். சமண சமயம் , பௌத்த சமயம் ஓரளவுக்கே காணப்பட்டது எனலாம். 219 7.5.7. கலை வளர்ச்சி கட்டிடக்கலை பிற்காலப் பாண்டியர் காலத்தில் கோயில்
|
கட்டடக்கலையின் விரிவாக்கும் புதிய அமைப்பு முறைகள் ஆரம்பமானது. வெளிப்புறத்தில் உயர்ந்த அளவிலான கோபுரங்கள் , கருவறை , அர்த்த மண்டபம் , மகாமண்டபம் சுற்றுப்புறப் பிரகாரங்கள் , பல தூண் களைக் கொண்ட மண்டபங்கள் போன்றன எழுப்பப் பட்டுள்ளன. பிற்காலப் பாண்டியர் பத்தாம் நூற்றாண்டு முதற்கொண்டு நுழைவு வாயிலில் பெரும் கோபுரங்களை கட்டி , கட்டடக் கலையில் மாற்றத்தை ஏற்படுத்தினர். சிதம்பரம் , ஸ்ரீரங்கம் போன்ற கோயில்களில் துணைக் கோயில்களையும் மண்டபங்களையும் , மற்றும் கோபுரங்களையும் கட்டினர். மதுரை மீனாட்சிக் கோயில் ,
|
திருநெல்வேலி , விசுவநாதர் கோயில் , தென்காசி அழகர் கோயில் , நெல்லை விசுவநாதர் கோயில் போன்றவை. குலசேகரப் பாண்டியர் காலத்தில் சிறப்படைந்தன. இவற்றில் அர்த்த மண்டபம் , மணி மண்டபம் , சன்னதி , முன் கோபுரம் முதலியவை கட்டப்பட்டன. சிற்பக்கலை திருப்பரங்குன்றத்தில் காணப்படும் சோமாஸ்கந்தர் திருமால் , துர்க்கை , கணபதி ஆகியோரின் சிற்பங்களும் நரசிம்மர் வராகர் , நடராஜர் , சிவகாமி குன்னக் குடியில் காணப்படும் விஷ்ணு சிற்பம் மேலும் , மதுரை , திருநெல்வேலி , தென்காசி , சிதம்பரம் போன்ற இடங்களில் உள்ள சிற்பங்களும் சிற்பக்கலைக்கு
|
சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். பிற்காலப் பாண்டியரின் பிந்திய காலச் சிற்பங்கள் விஜயநகரக் காலச் சிற்பங்களின் தன்மையோடு இணைந்து விட்டதைக் காணலாம். 220 வார்ப்புக்கலை பல உற்சவ மூர்த்திகள் ஆழ்வார்கள் நாயன்மார்களின் செப்பு படிமங்கள் மற்றும் சிதம்பரம் நடராசரின் சிலையாவும் வார்ப்புக் கலை வளர்ச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இசை , நடனம் , நாடகம் நடனக் கலைஞர்கள் அரண்மனையிலும் , தேவரடியர்கள் கோயில்களிலும் நடனம் ஆடினர். நடனக்கலையின் சிறப்பு மற்றும் அதன் வளர்ச்சியினை கோயில்களில் காணப்படும் சிற்பங்கள்மூலம்
|
அறியலாம். சிதம்பரம் மற்றும் திருப்பரங்குன்றத்தில் உள்ள நடராஜரின் சதுரதாண்டவத் திருக்கோலம்நடனக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இசையின் மேன்மையைப் பற்றி “ மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத ” என்ற பாடலின் மூலம் நன்கு அறியலாம். பாண்டிய அரசர்களும் இசையைப் போற்றி வளர்த்தனர். மேலும் இசையைப் பற்றி , வீரமத்தளம் , மத்தளம் , திபிலை , சேமக்கலம் , திருச்சின்னம் போன்ற இசைக்கருவிகள் யாவும் கோயிற் சிற்பங்களில் காணப்படுவதின் மூலம் பாண்டியர் இசையைப் போற்றி வளர்த்தனர் என்பதை அறிய முடிகிறது. பாண்டிய மன்னர்கள் நாடகக்
|
கலையையும் போற்றி வளர்த்தனர். கோயில்களில் நாடகங்கள் நடிக்கப்பட்டன. ‘ அழகியப் பாண்டியன் கூடம் ’ என்று நாடக அரங்கிற்குப் பெயரும் இருந்தது. நாடகத்தில் நடிப்போருக்கு ‘ கூத்துக்காணி ’ வழங்கப்பட்டது. ஆடல் மகளிருக்கு ‘ தலைக்கோல் ’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. கூத்து ‘ சாந்திக் கூத்து ’ ‘ வினோதக் கூத்து ' என இருவகைக் கூத்துகள் இருந்தன என்று ஆத்தூர் கோயில் கல்வெட்டு மூலம் அறிகின்றோம். கல்வி பாண்டியர் காலத்தில் கல்வி வளர்ச்சிக்கு பெரும் ஆதரவு தரப்பட்டது. கிராமங்களில் திண்ணைப் பள்ளிகூடங்களும் , கோயில்களும் , மடங்களும்
|
மக்களுக்கு கல்வியறிவூட்டும் பணியில் ஈடுபட்டன. கோயில்களில் சிறு சிறு நூலகங்கள் இருந்தன. 221 நூலகங்கள் ‘ சரஸ்வதி பண்டாரங்கள் ' என அழைக்கப்பட்டன. சிதம்பரத்தில் 13 ஆம் நூற்றாண்டில் சுவாமி தேவர் என்பவர் நூலகத்தை அமைத்தார். ' சேரமா தேவி ' என்ற இடத்திலும் நூலகம் இருந்தது. எல்லாவிதமான அதாவது கணிதம் , வேதம் , தத்துவம் , சமயம் போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இசை , நாட்டியம் , நாடகம் போற்றி வளர்க்கப்பட்டன. பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பட்ட விருத்தி , சாலபோகம் முதலியவை வழங்கப்பட்டன. அந்தணர்கள் வடமொழிக் கல்விக் கூடங்களை
|
நடத்தினர். அவை ‘ கடிகை ’ ‘ வித்யாஸ்தானம் ' என்ற பெயர்களின் வழங்கப்பட்டன. மாணவர்கட்கு ஒழுக்கம் , நேர்மை , முக்கியமென கட்டாயப்படுத்தப்பட்டது. பாண்டிய நாட்டில் இருந்த சைவ , வைணவ , சமண , பௌத்த மடங்களும் ஆன்மிகக் கல்வி ( சமயக்கல்வி ) போதித்தன. சைவ சித்தாந்த வல்லுநர்கள் திருப்பத்தூர் மடத்தில் தங்கி பாடம் கற்பித்தனர். இக்காலத்தில் மேலும் வேதம் , உபநிடதம் , இதிகாச புராணங்கள் , நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் போன்றவை கற்பிக்கப்பட்டன. கோயில்களும் கல்வியை வளர்த்தன. வரியில்லா நிலதானங்களும் ( நிலக்கொடை ) அளித்து
|
இசைக்கல்வியும் , நாடகமும் போற்றப்பட்டது. ஸ்ரீவல்லப் பெருஞ்சாலை ( உயர்கல்வி கூடம் ) கன்னியாகுமரியிலும் , ‘ காந்தளூர் சாலை ’ திருவனந்தபுரத்திலும் , ஆய் நாட்டில் பார்த்தீகசேகர புரத்தில் ஒரு கல்விச் சாலையும் நடைபெற்றன. மாணவர்களுக்கு இலவச உணவு வழங்க , நில தானங்களைச் சாலபோகமாக அளித்ததாக தெரிகிறது. வேதங்களேயன்றி , அரச நிருவாக பயிற்சி , ராணுவமும் தரப்பட்டன. இலக்கியம் தமிழ் வளர்ச்சிக்கு பாண்டியர் பெரும் ஆதரவு தந்தனர். ‘ தமிழ்க்கூடல் ’ என்று மதுரையை சிவகாசிச் செப்பேடு புகழ்கிறது. நம்மாழ்வார் , மதுரகவியாழ்வார் ,
|
பெரியாழ்வார் , ஆண்டாள் ஆகியோரின் சமயப்பணியைப் போல் இலக்கியப் பணியும் போற்றுதற்குரியது. 222 1. நம்மாழ்வார் - திருவாய்மொழி 2.மதுரகவியாழ்வார் - நம்மாழ்வார் பற்றிய ஏழு பதிகங்கள் 3. பெரியாழ்வார் – பெரியாழ்வார் திருமொழி 4. ஆண்டாள் - திருப்பாவை 5. மாணிக்கவாசகர் - திருவெம்பாவை போன்ற நூல்களை எழுதியுள்ளனர். பாண்டியர் காலத்தில் தமிழுக்கும் வடமொழிக்கும் ஊக்கம் அளித்து இலக்கிய வளர்ச்சிக்கு பேருதவி புரிந்தனர். “ நால்வகை வேதமும் நவின்றுடன் வளர ” என்று முதலாம் மாறவர்மன் சுந்தரனின் மெய்கீரத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
|
இரண்டாம் மாறவர்மன் சுந்தரனின் மெய்கீர்த்தியில் , “ சுருதியும் தமிழும் தொல் வளங்குலவ ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 18 ஆம் அண்டு மெய் கீர்த்தியில் , “ அருந்தமிழ் ஆரியமு மறு சமயத்தற நெறியும் திருந்துகின்ற மனுநெறியுந் திறம்பாது தழைத்தோங்க முத்தமிழும் மனுநூலும் நான்மறை முழுவதும் எத்தவச் சமயமும் இனிதுடன் விளங்கவும் ” என்று கூறப்படுவதிலிருந்து வடமொழி , தென் மொழி என பாராது இரண்டிற்கும் சமமாக ஆதரவு தந்தனர். பாண்டிய மன்னர்கள் என்பதை இதன் மூலம் அறிகின்றோம். 7.5.8. இந்திய பண்பாட்டிற்கு
|
பிற்காலப் பாண்டியரின் கொடை 1. பாண்டியர்களின் கிராம ஆட்சி நிருவாக அமைப்பு முறை இந்திய ஜனநாயக அமைப்பைக் கொண்டு விளங்கியது. கிராம சபை உறுப்பினர்களைத் தேர்தல் முறையில் தேர்ந்தெடுத்தனர். 223 2. கோயிற் கட்டடக் கலையில் சிறந்த மாற்றங்களைக் கொண்டு வந்து பிற்காலக் கட்டடக்கலை வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிந்தது. 11. ' கூத்துக்காணி ’ என்பது யாது ? 3. கல்விச் சாலையில் இலவச உணவுடன் அரசு நிருவாகப் பயிற்சி மற்றும் இராணுவப் பயிற்சி அளித்ததின் மூலம் இன்றுள்ள அரசு நிருவாகத்திற்கு அவை ஒரு கொடையாக திகழ்கிறது. 4. ' சரஸ்வதி
|
பண்டாரம் ' போன்ற நூலகங்கள் ஏற்பட்டதின் மூலம் வேதங்கள் , புராணங்கள் பயிற்றுவிக்கப்பட்டு இந்தியப் பண்பாட்டு வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிந்தது. 5. பாண்டியர்கால கோயிலின் நுண்கலைகள் ( இசை , நடனம் , சிற்பம் , ஓவியம் ) யாவும் இன்றும் சிறப்பாகத் திகழ்வதுடன் அவை இந்தியப் பண்பாட்டு வளர்ச்சிக்குச் சிறந்த பொக்கிஷமாகத் திகழ்கிறது. 7. 5. பயிற்சி வினாக்கள் அ. ஓரிரு வரிகளில் விடையளி 1. பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சிக்காலம் யாது ? 2. ' பாஞ்சாலர்கள் ' என்போர் யாவர் ? 3. ' இந்து சமய மடங்கள் ' யாவை ? 4. விசிட்டாத்துவைதக்
|
கொள்கைகளைப் பரப்பியவர் யார் ? 5. ' சிரவணபெலகோலா ' குறித்து சிறு குறிப்பு வரைக. 6. ' தருமபாலர் ' என்பவர் யார் ? 7. பாண்டியர் கால இசைக்கருவிகள் யாவை ? 8. ' தமிழ்க் கூடல் ’ - சிறு குறிப்பு எழுதுக. 9. ' சரஸ்வதி பண்டாரம் ’ - குறிப்பு எழுது. 10. தர்மகீர்த்தி என்பவர் யார் ? 224 12. பிற்காலப் பாண்டியரின் இசைக்கருவிகள் யாவை ? ஆ. பத்து வரிகளுக்கு மிகாமல் விடையளி 1. பிற்காலப் பாண்டியர்களைப் பற்றி அறிய உதவும் சான்றுகள் யாவை ? 2. பிற்காலப் பாண்டிய மன்னர்களின் முக்கியமான அரசர்கள் யாவர் ? 3. பிற்காலப் பாண்டியர் காலத்தில்
|
சமண மனமும் புத்த மதமும் எவ்வாறு செயல்பட்டன ? 4. பிற்காலப் பாண்டியர்கால சிற்பக்கலைக்கு சில எடுத்துக்காட்டுகள் தந்து விளக்கு. 5. பிற்காலப் பாண்டியர்கால வருவாய்துறை குறித்து விளக்குக. 6. பிற்காலப் பாண்டியர் நீதித்துறையைப் பற்றி விளக்குக 7. பிற்காலப் பாண்டியரின் இலக்கிய வளர்ச்சி பற்றி விளக்கு. 8. பிற்காலப் பாண்டியரின் ‘ ஊராட்சி நிர்வாகம் ’ எவ்வாறு செயல்பட்டது ? 9. பிற்காலப் பாண்டியரின் ‘ நீதி முறை ’ யாது ? இ. ஒரு பக்க அளவில் விடையளி 1. 2. 3. பிற்காலப் பாண்டியரின் அரசியல் நிலையை விளக்குக. பிற்காலப் பாண்டியரின்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.