text
stringlengths
11
513
மனத்தினாலும் தீண்டேன் என்று கூறி விலகினார். மாதர் மீது வைத்த காதலை அறவே துறந்து இறைவன் மீது வைத்த பேரன்பினைப் பெரிதாய் மதித்ததால் இவர் பெரியராயினர். இவ்விரதத்தை இனிது பேணிய இவரது இறை அன்பின் திறத்தை உலகிற்கு அறிவித்து இறைவன் அருள் புரிந்தான். உலக இன்பங்களிலும் இறையின்பமே ஏற்றமுடையது என்பதை இவரது வரலாறு விளக்குகிறது. 9.4.2.6. இயற்பகை நாயனார் இவரது பக்தியை உலகிற்கு உணர்த்த இறைவன் திருநீறு பூசியவராய் வேடம் பூண்டு வந்தார். வந்த சிவனடியார் இவரது மனைவியை வேண்டிநிற்க மனமகிழ்வுடன் மனைவியை அழைத்த “ உன்னை இவருக்குக்
கொடுத்தேன் " என்றார். மனைவியார் கணவரிடம் “ தங்கள் கட்டளைப்படி நடப்பதே என் கடமை. என் உயிருக்கும் துணைவராகிய நீர் சொன்னபடி செய்வதையன்றி வேறு சிந்திப்பதற்கு வேறு யாதும் இல்லை ” எனக் கூறி இசைந்து சென்றார். சுற்றத்தார் சினத்துடன் வந்து இயற்பகையை எதிர்க்க 268 அவர்கள் மீது வாள்போர் புரிந்து வெற்றி பெற்றார். இறைவன் இவரது செயற்கருஞ் செயலை கண்டு பாராட்டி இவருக்குச் சிவலோக பதவி அளித்துச் சிறப்பித்தார். நாம் உலகில் அனுபவித்து வரும் மண் , பெண் , பொன் எனும் செல்வங்கள் இறைவனுக்கே உரியன. அதை இறைவனோ இறைவன் அடியார்களோ
வேண்டுமென விரும்பும்பொழுது கொடுத்து விடுவதே முறையாகும். அதனையே இயற்பகையார் மேற்கொண்டார் என்பார். 9.4.2.7. இளையான்குடிமாறனார். இவரது சரித்திரத்தால் அடியார்கள் இம்மைச் செல்வம் அனைத்தையும் இறைவன் அடியவர்களுக்கு அளிக்கச் சிறிதும் தயங்காதவர்கள் என்பது தெரிகிறது. 9.4.2.8. மெய்ப்பொருள் நாயனார் இவரது வரலாறு மிகவும் வியப்பினை உண்டாக்கும் அற்புதச் செயலாகும். மாறுவேடம் பூண்டுவந்த முத்தநாதனை இவர் வரவேற்பதிலிருந்தும் , அவனிடம் உபதேசம் பெற முறைப்படி அமர்ந்திருந்தும் இவரது உயர்ந்த சிவபக்தியை தெரிவிக்கிறது. புத்தகம்
அவிழ்ப்பவன் போலப் பையிலிருந்து ஆயுதத்தை எடுத்து ஊறு செய்த போதும் அவனைத் தொழுது நின்றதிலிருந்து சிவனடியார்களைச் சிவனெனக் கருதும் இவரது சிறப்பு விளங்குகிறது. 9.4.2.9. சிறுத் தொண்டர் சிறுத்தொண்டர் தனது அருமைப் புதல்வனை அடியவருக்கு அமுதூட்ட வாளால் அரிந்தார். குழந்தையிடத்தில் இவர் கொண்ட அன்பு அளவற்றதெனினும் , இறைவனடியாரை அமுதூட்டி உபசரிக்கும் பேற்றின் முன் அவ்வன்பு பெரிதாக போற்றப் படவில்லை. 9.4.2.10. சேரமான் பெருமாள் நாயனார் சேரமான் பெருமாள் நாயனார் யானை மீது பவனி வரும் பொழுது உவர் மண் சுமந்து வெண்ணிற மேனியனாய்
வந்த 269 சலவையாரை வணங்கினார். மேனி முழுதும் திருநீறு பூசிய சிவனடியராய் கருதி வணங்கினார். சலவையாளர் மிகவும் அஞ்சி தான் இன்னார் என அறிவித்த பிறகும் வணங்கி “ திருநீற்றின் வாரவேடம் நினைப்பித்தீர் வருந்தா தேகும் என ’ ’ விடுவித்ததிலிருந்தும் , அரசாட்சியை ஏற்குமாறு மந்திரி முதலானோர் வந்து வேண்டிய பொழுது “ இன்பம் பெருகும் திருத்தொண்டுக்கு இடையூறாக இவர் மொழிந்தார் ” எனக் கூறியதிலிருந்தும் இவரது உள்ளத்தின் உயர்வும் சிவபெருமானிடம் கொண்ட பக்தியும் விளங்குகின்றது. 9.4.2.11. மங்கையர்க்கரசியார் ஆண்பாலரைப் போலவே பெண்பாலரும்
அடியார்களாய் அருந்தொண்டாற்றினர். அவர்கள் மங்கையர்க்கரசியார் , காரைக்கால் அம்மையார் , இசை ஞானியார் என்போர் ஆவர். இவர்களுள் மங்கையர்கரசியார் “ மங்கையர்க்கு தனி அரசி எங்கள் தெய்வம் ” என்று சேக்கிழார் சுவாமிகளால் பாராட்டப் பெற்றுள்ளார். பாண்டி நாட்டில் சைவம் தளர்ந்து சமணம் வளர்ந்ததைப் பாண்டிமா தேவியார் கண்டு வருந்தி , திருமறைக் காட்டிலிருந்த சம்பந்தரை மதுரைக்கு வரவழைத்ததும் , பாண்டியன் நெடுமாறன் சுர நோய் உற்றபொழுது சம்பந்தரைக் கொண்டு தீர்க்கச் செய்ததும் , சம்பந்தர்க்கு சமணர்கள் இடையூறு செய்வார்களோ என
வருந்தியதும் , அம்மையாரின் சமயப்பற்றை இனிது விளக்குகின்றது. சம்பந்தர் சமண மதத்தை வென்று சைவத்தை நிலை நாட்ட உறுதுணையாய் இருந்தவர் இவ்வம்மையாரே ஆவார். சம்பந்தர் , " மங்கையர்க்கரசி வளர்கோன் பாவை வரிவளைக்கை பங்கயச் செல்வி பாண்டிமாதேவி ” என இவரைப் பதிகத்தில் பாராட்டியுள்ளார். 270 இசைஞானியார் சடையனாருக்கு இசைந்த ஞானியராகி சடையனாரது மனைவியராய் இல்வாழ்க்கை நடத்தி , சுந்தரரை மகனாகப் பெரும் பேறு பெற்றார். 9.4.2.12. திலகவதியார் இவர் தனது பெற்றோர் தனக்கென மணம் பேசிய கலிப்பகையார் இறக்க , அது கேட்டுத் தானும் உயிர்விடத்
துணிந்ததில் இருந்து அவரது உயர்ந்த பண்பு விளங்குகின்றது தம்பியராகிய நாவுக்கரசர் உயிர்வாழ வேண்டித் தவநிலை ஏற்று வாழ்ந்ததும் , சமணம் சார்ந்த தம்பியை சைவ சமயத்தில் சாரும்படிச் செய்ததும் அவரது சைவப் பண்புகளை நன்கு விளக்குகின்றன. இதர அடியார்களின் வரலாற்றைப் பெரிய புராணத்தில் கண்டு , ஆராய்ந்து அறிந்து , அடியார்களிடத்து மதிப்பும் மரியாதையும் கொண்டு , அவர்களது குருபூசை விழாவினைக் கொண்டாடி அடியார்க்கு அடியாராகி , நாம் ஆண்டவன் அருள் பெற்று வாழ்வோமாக. 9.4.3.சந்தானாச்சாரியார்கள் மெய்கண்டார் , அருணந்தி சிவசாரியார் ,
மறைஞானசம்பந்தர் , உமாபதிசிவம் எனும் நால்வரும் சந்தனாசாரியர்கள் எனக் கூறப்படுவர். சந்தானம் - இச்சொல்லுக்கு பரம்பரை என்பது பொருள். சந்தானம் அகச்சந்தானம் , புறச்சந்தானம் என இருவகைப்படும். அகச்சந்தானத்தார் - கயிலை மலையில் வாழ்வோராவர். இவர்கள் ஸ்ரீகண்ட பரமசிவனிடம் சிவஞான உபதேசம் பெற்ற நந்திதேவர் , சனற்குமாரர் , சத்திய ஞான தரிசனங்கள் , பரஞ்சோதியர் ஆவர். புறச்சந்தானம் - அகச்சந்தானத்தார் பரம்பரையில் நிலவுலகில் தோன்றிய மெய்கண்ட தேவர் முதலாயோர் ஆவர். பரஞ்சோதி முனிவரிடம் மெய்கண்ட தேவரும் , அவரிடம் அருணந்தி சிவமும் ,
அருணந்தி சிவத்திடம் மறைஞான சம்பந்தமும் , மறைஞான சம்பந்தரிடம் உமாபதி சிவமும் உபதேசம் பெற்றனர். இதை மெய் கண்ட சந்தான பரம்பரை என்பர். 271 அருளிச் செய்த நூல்கள் மெய்கண்ட தேவர் - சிவஞான போதம் அருணந்தி சிவாசாரியார் - சிவஞான சித்தியார் , இருபா இருபஃது 6. நாயன்மார்களால் சைவம் புத்துணர்வு பெற்றது. தனக்கென ஒரு மரபையும் உருவாக்கிப் பொலிவடைந்தது. உமாபதிசிவம் - சிவப்பிரகாசம் முதலிய ' சிந்தாந்த அஷ்டகம் ’ எனும் எட்டு நூல்கள் உமாபதி சிவம் தில்லை மூவாயிரவரில் இவரும் ஒருவர். மறைஞான சம்பந்தரிடம் உபதேசம் பெற்றவர். சிவப்
பிரகாசம் முதலிய சித்தாந்த அஷ்டகம் எனும் எட்டு நூல்களை இயற்றியுள்ளார். தில்லையில் ஏறாதிருந்த கொடியைக் ‘ கொடிக்கவி ' பாடி ஏற்றினார். சித்திரை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் இறையருளில் கலந்தார். 9.4.4. நாயன்மார்களின் சமயத் தொண்டு நாயன்மார்களின் சமயத்தொண்டு அளவிடற்கரியது. அவற்றுள் சிலவற்றை காண்போம். 1. பக்தி நெறியை நாயன்மார்கள் வளர்க்கப் பெருந்துணை புரிந்தனர். 2. சில நாயன்மார்கள் ஆலயப் பணிக்கே முழுமையாகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர். ஆலயங்கள் கட்டுதல் , குடமுழுக்கு செய்வித்தல் , அடியார்களுக்கும் , பக்தர்களுக்கும்
தொண்டு செய்தல் முதலியவற்றில் சிலர் ஈடுபட்டனர். உழவாரப் பணிகளை மேற்கொண்டனர். ‘ என் கடன் பணி செய்து கிடப்பதே ' என்றார் அப்பர் பெருமான். 3. 4. சைவ சமயத் தத்துவக் கோட்பாடுகளையும் , சைவ சமயத்தைப் பின்பற்றுவோர் மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகளையும் நாயன்மார்கள் தங்கள் வாழ்வில் வாழ்ந்து காட்டினார்கள். 5. சைவ சமயத்தை உலகறியச் செய்த பெருமை நாயன்மார் களையே சாரும். 7. நாயன்மார்கள் பல சமய நூல்களை இயற்றியதன் மூலம் தமிழ் இலக்கியம் வளர வழி செய்தனர். 8. நாயன்மார்கள் எல்லா சாதிப் பிரிவுகளிலிருக்கும் வாழ்க்கை நிலையிலிருந்தும்
பொருளாதாரப் பிரிவுகளிலிருந்தும் தோன்றினர். இதனால் ஒருமைப்பாட்டு உணர்வும் சமத்துவ மனப்பான்மையும் சகோதரத்துவமும் வேரூன்றித் தழைத்தது. 9. நாயன்மார்களின் சமுதாய நல்வாழ்வுப் பணிகள் , ஆலயப் பணிகள் மக்கள் மனதில் சேவை மனப்பான்மையை வளர்த்தது. 10. நாயன்மார்களில் சமயக் குரவர் எனப் போற்றப்படும் நால்வர் வாழ்ந்து காட்டிய நன்னெறிப் பாதை போற்றத்தக்கதாகும். பன்னிருதிருமுறை 1. திருஞானசம்பந்தர் 1,2,3 ஆம் திருமுறைகள் ( திருக்கடைக்காப்பு ) 4 , 5 , 6 ஆம் திருமுறைகள் 7 - ஆம் திருமுறை - ( திருப்பாட்டு 8 - ஆம் திருமுறை - திருவாசகம்
2. திருநாவுக்கரசு 3. திருசுந்தரர் 4. திருமாணிக்கவாசகர் 5. திருமளிகைத் தேவர் , சேந்தனர் மற்றும் அருளாளர்கள் பாடியது 6. திருமூலர் 7. திருவாலவுடையார் 8. பட்டினத்தடிகள் , காரைக்காலம்மையார் மற்றும் நம்பியாண்டார் நம்பிகள் பாடல்கள் 9 - ஆம் திருமுறை திருவிசைப்பா , திருப்பல்லாண்டு 10 - ஆம் திருமுறை திருமந்திரம் ( தேவாரம் } 11 - ஆம் திருமுறை - தோத்திரப்பாடல்கள் சேக்கிழார் பெருமான் 12 - ஆம் திருமறை பெரிய புராணம் 273 10. சமய , சமுதாய சீர்திருத்த இயக்கங்கள் 10.1 , சமய , சமுதாய சீர்திருத்த இயக்கங்கள் தோன்றக் காரணங்கள்
10.1.1. இந்தியாவின் நிலை பதினெட்டாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் நமது நாட்டில் அரசியல் , சமுதாய , சமய , பொருளாதாரத் துறைகளில் சீர் குலைவு ஏற்பட்டது. அரசியலில் ஒற்றுமை இல்லாத காரணத்தால் நாட்டில் குழப்பமும் , வன்முறைகளும் , அராஜகமும் தலைவிரித்தாடின. நாட்டில் சட்டம் ஒழுங்கு , மக்களுக்கு பாதுகாப்பு போதுமான அளவு இல்லாத நிலை இருந்தது. சமயத்துறையில் மக்கள் குறுகிய மனப்பான்மையுடையவராயினர். மூடநம்பிக்கைகள் மிகுந்து காணப்பட்டன. குழந்தை மணங்கள் , வரதட்சணை , பெண் சிசுக் கொலை , சாதிக் கொடுமைகள் போன்றவை பரவியிருந்தன.
சமயத்தின் பெயரால் மக்கள் ஏமாற்றப்பட்டு பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல்களைச் செய்ய தலைப்பட்டனர். ஆண்களின் ஆதிக்கம் மிகுந்தும் , பெண்கள் ஒடுக்கப்பட்டவராயும் இருந்தனர். இந்தியாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அரசியல் , பொருளாதார , சமய , சமுதாய , பண்பாட்டு , இலக்கியத் துறைகளில் பல மாற்றங்கள் தோன்றின. ஆங்கிலேயப் பேரரசு தன் ஆட்சியை நாடு முழுவதும் மேற்கொண்டது. ஆங்கிலேய ஆட்சியில் நாட்டின் பல்வேறு துறைகளில் மாற்றங்களும் வளர்ச்சியும் ஏற்பட்டது. மேலைநாட்டுப் பண்பாட்டின் தாக்கத்தால் மக்களுடைய பொருளாதார , சமூக , அரசியல்
துறைகளில் பல மாற்றங்கள் தோன்றின. இம்மாற்றங்களை விழிப்புணர்வு என்றே கூறலாம். இந்த விழிப்புணர்வையே ' மறுமலர்ச்சி ' என்று கூறுகின்றனர். 279 இம்மறுமலர்ச்சி பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியது. உண்மையாகவே இன்றைய இந்தியா தனது நிலைக்கு மறுமலர்ச்சிக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது என பி.என். லூனியா கூறுகிறார். 10.1.2. சீர்திருத்த இயக்கங்கள் தோன்றக் காரணிகள் 1. ஆங்கிலேய ஆட்சி நாடு முழுமையும் பரவியதையடுத்து இந்நாட்டில் நிலவிவந்த அராஜக சூழ்நிலையும் , குழப்ப சூழ்நிலையையும் அகற்றத் தன் பணியை
மேற்கொண்டது. இதன் விளைவாக நாட்டில் அமைதியும் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டன. இது இந்திய மக்கள் மனதில் தங்களது உண்மையான நிலையை அறிந்து கொள்ள வாய்ப்பை அளித்தது. 2. கி.பி. 1835 ஆம் ஆண்டு மெக்காலே பிரபுவின் முயற்சியால் ஆங்கிலம் பயிற்று மொழியாக்கப்பட்டது. இதன் வாயிலாக இந்தியர்கள் மேற்கத்திய நாகரிகத்தை எளிதில் அறிந்தனர். மேலை நாடுகளின் முன்னேற்றத்தையும் முன்னேற்ற முறைகளையும் அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. மேலும் ஆங்கிலக் கல்வி முறை அறிவியல் கல்வி முறையால் அறிவியல் , தொழில்நுட்ப அறிவை விளக்கும் ஆர்வத்தை
உண்டாக்கியது. 3. மேலைநாடுகளின் வரலாற்றுச் செய்திகளின் வாயிலாக அவர்கள் பின்பற்றிய எளிய போக்கும் , செயற்கையான போலியான வாழ்க்கை முறைகளும் இல்லாததையும் தெரிந்து கொண்டனர். மக்களிடையே நம் நாட்டையும் சமுதாய தீய பழக்க வழக்கங்களில்லாத நாடாக மாற்ற வேண்டும் என்ற உணர்வு தோன்றியது. இதற்கு முன்னோடியாக வித்திட்டவர் இராஜாராம் மோகன்ராய் என்றால் அது மிகையாகாது. 4. கிறிஸ்தவ சமயப் பரப்புக் குழுக்களின் கல்விப் பணியும் , சமய வளர்ச்சிப் பணியும் குறிப்பிடத்தக்கது. இந்து சமயத்திலும் , சமுதாயத்திலும் காணப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்
சுட்டிக்காட்டப் பட்டன. எனவே சமயத்துறையிலும் சமுதாயத் துறையிலும் குறிப்பாக பிரம்மசமாஜம் , ஆரியசமாஜம் , பிரம்மஞான சபை போன்ற சீர்திருத்த இயக்கங்கள் உருவாயின. 5. ஆங்கிலேய ஆட்சியின் விளைவாக இந்தியா , அறிவியல் தொழில்நுட்பத்துறைகளில் முன்னேறி உலக நாடுகளுடன் தொடர்பை உண்டாக்கிக் கொண்டது. இத்தொடர்பு இந்திய மக்களிடையே முற்போக்கு சிந்தனை மனப்பான்மை , பொருளாதாரம் மற்றும் தொழில்துறைகளில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது. 10.1.3. சீர்திருத்த இயக்கங்களின் விளைவுகள் 1. நம் நாட்டின் உயரிய பண்பாட்டையும் ,
தன்னம்பிக்கையையும் மறந்து வாழ்ந்து வந்த மக்களுக்கு இச்சீர்திருத்த இயக்கங்கள் ஒரு வரப்பிரசாதமாய் அமைந்தன. நமது பாரம்பரிய பெருமையை உலகறியும் வண்ணம் வேதங்களையும் , உபநிடதங்களையும் சமஸ்கிருத மொழியிலிருந்து மேலைநாடுகளில் மொழிபெயர்த்தனர். இது மக்களிடையே நாட்டுப் பற்றையும் , நாமும் உலக அரங்கில் உயர வேண்டும் என்ற உயரிய எண்ணத்தையும் ஏற்படுத்தியது. 2. நமது நாட்டு இலக்கியங்கள் , கையெழுத்துப்பிரதிகள் , கல்வெட்டுகள் , நாணயங்கள் , புதைபொருள் ஆய்வுகள் மூலம் பெற்ற பொருள்களை ஆதாரமாய்க் கொண்டு மேலை நாட்டு வரலாற்று ஆசிரியர்கள்
இந்திய வரலாற்றை எழுதினர். இவற்றை அறிந்து இந்தியர்கள் தாங்கள் மேலும் தக்க ஆதாரங்களுடன் இந்திய வரலாற்றை தெளிவாக உலகம் வியக்கும் வண்ணம் எழுதினர். 3. இந்து சமயத்திலேயே சீர்திருத்தங்களை பல சீர்திருத்தவாதிகள் மேற்கொண்டனர். பிரம்மசமாஜம் , ஆரிய சமாஜம் , பிரம்மஞான சபை மற்றும் இராமகிருஷ்ண இயக்கம் போன்ற சமய சமூக சீர்திருத்த இயக்கங்கள் வாயிலாக இந்து சமயச் சிறப்பை உலகிற்கு எடுத்துரைத்து இந்து சமயத்தை அழிவுப் பாதையிலிருந்து காப்பாற்றின. சுவாமி விவேகானந்தர் உலகச் 281 சமய மாநாட்டில் சிகாகோவில் இந்து சமயச் சிறப்பை பற்றி
ஆற்றிய உரை உலகறிந்த ஒன்றாகும். 4. இந்து சமயத்தில் நிலவிவந்த பல்வேறு தீமைகளையும் , மூடப்பழக்கவழக்கங்களையும் மக்கள் அறியத் தொடங்கினர். கிறிஸ்தவ சமயப்பரப்பு குழுவினர் சமுதாயத்தில் காணப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை தங்கள் பால் ஈர்த்தனர். இதைக் கண்டு சீர்திருத்தவாதிகள் விரைந்து செயல்பட்டு அவர்களது நிலை மேம்பாடு அடைய அயராது உழைத்தனர். சதியென்னும் உடன்கட்டையேறுதலையும் , குழந்தை மணத்தையும் இராஜாராம் மோகன்ராய் வன்மையாகக் கண்டித்தார். ஆரிய சமாஜம் , பிரம்ம ஞான சபை , இராமகிருஷ்ண இயக்கம் வாயிலாக
சமய , சமுதாய சீர்திருத்தங்கள் பெருமளவில் செயல்படுத்தப்பட்டன. தீண்டாமை என்னும் கொடுமையைக் களைய மகாத்மா காந்தியடிகள் ஒரு பெரும் இயக்கத்தினை வழிநடத்தி வெற்றியும் கண்டார். பகுத்தறிவுச் சிந்தனை மக்கள் மனதில் வேரூன்றியது. மக்கள் மனதில் குறுகிய கண்ணோட்டம் அகன்று பரந்த மனப்பான்மையும் சமத்துவ , சகோதரத்துவ மனப்பான்மையும் மேலோங்கியது. 6. ஆங்கிலேயர் ஆட்சி , கல்வித்திட்டம் பெண்கள் நிலையை உயர்த்தியது. ஆங்கிலேயர் பெண் கல்வியில் பெரும் அக்கறை காட்டினர். ஆண்களுக்கு சமமாய்ப் பெண்களும் கல்வி கற்று அனைத்துத் துறைகளிலும் முன்னேற
வழிவகுக்கப்பட்டது. ‘ பர்தா ’ முறை ஆரிய சமாஜத்தில் கடுமையாக எதிர்க்கப்பட்டது. ‘ விதவை மணம் ’ பல சீர்திருத்தவாதிகளால் ஆதரிக்கப்பட்டது. குழந்தை மணம் சட்டரீதியாக தவறு என உணரத்தப்பட்டது. ‘ சாரதா ’ சட்டம் நிறைவேற்றப்பட வேண்டிய அளவு மக்கள் உணர்ந்தனர். மகளிர் முன்னேற்றத்திற்கு மாபெரும் தொண்டாற்றியவருள் ஈசுவர சந்திர த்யாசாகர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். 7. அறிவியல் கல்வியறிவு தாமும் கற்று , கற்றவற்றை நம் நாட்டிலேயே செயல்படுத்தவும் துணைபுரிந்து , இளைஞர் 282 முன்னேற்றத்துக்கு வழிவகுத்தது. இந்திய இளைஞர்கள் அறிவியல்
ஆய்வுகளில் ஈடுபட ஆரம்பித்தன. கணித மேதை இராமானுஜம் , ஜெகதீஸ் சந்திர போஸ் போன்றோரது கண்டுபிடிப்புகள் உலகை வியப்படையச் செய்து இந்திய புகழை உலகறியச் செய்தன. 8. நமது பாரம்பரியம் மிக்க நுண்கலைகள் வளர்ச்சி பெற்றதற்கு மறுமலர்ச்சி முக்கிய காரணம் எனலாம். மேலை நாட்டினர் நம் அழகுக் கலைகளை நூல்களாக எழுதி உலகறியச் செய்தனர். இசை , ஓவியம் , சிற்பம் , நாட்டியம் , கட்டடக்கலை போன்ற கலைக்கென கல்வி நிறுவனங்களும் தோன்றின. 9. தொழில் துறையில் வியத்தகு முன்னேற்றம் காணப்பட்டது. பல புதிய தொழில்கள் உருவாயின. வணிக நிறுவனங்கள் தோன்றின.
வேளாண்துறையில் வளர்ச்சியும் புதிய முறைகளும் காணப்பட்டன. இந்தியாவில் பல பொருள்கள் தயாரிக்கப்பட்டன. நூற்பு ஆலைகளும் , நெசவு ஆலைகளும் தோன்றின. 10. ஆங்கிலேயர் வருகையாலும் , ஆளுகையாலும் சமுதாய நிலையில் மாற்றங்கள் காணப்பட்டன. எழுத்தர்களும் , அலுவலகம் பணியார்களும் சமுதாயத்தில் மதிக்கப்பட்டனர். ஆங்கிலம் தெரிந்தோர் உயர்ந்தவர்களாக சமுதாயத்தில் மதிக்கப்பட்டனர். 11. மொழித் துறையில் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டது. ஆங்கில இலக்கியத்தில் உள்ள புதினம் , கவிதை , நாடகம் முதலானவை இந்திய மொழிகளில் தோன்றின. ஆங்கில முறையில்
பின்பற்றப்பட்ட விமர்சன முறையும் பாங்கும் இந்திய மொழிகளில் பிரதிபலித்தன. இலக்கியத்துறையில் உலகம் போற்றும் இலக்கிய மேதைகள் உருவாயினர். 12. இந்திய மறுமலர்ச்சி இந்நாட்டு மக்களிடையே பண்டைய பெருமையை உணரச் செய்தது. மேலை நாட்டுப் பண்பாட்டில் நாகரிகத்திலும் , அறிவியலிலும் கண்ட நல்ல தீய கூறுகளை மக்கள் அறிந்து பின்பற்றி உயரச் செய்தது. 283 10 , 2 , பிரம்ம சமாஜம் பிரம்மசமாஜத்தை நிறுவியவர் இராசாராம் மோகன் ராய் ஆவார். இவரைப் புதிய இந்தியாவை நிறுவியர் என்னும் புதிய மறுமலர்ச்சியை தொடங்கி வைத்தவர் என்றும் கூறுவர்.
பிரம்மசமாஜம் கி.பி. 1828 ல் நிறுவப்பட்டது. இதுவே முதல் சீர்திருத்த இயக்கமாகும். இராசாராம் மோகன்ராய் கி.பி. 1772 ல் பிறந்தார். வங்காளத்திலுள்ள வசதி படைத்த வைதிக பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கற்றறிந்த மொழிகள் ஆங்கிலம் , பிரஞ்சு , இலத்தீன் , ஹீபிரு , கிரேக்கம் , சமஸ்கிருதம் மற்றும் இந்தி போன்றவைகளாகும். இந்து சமய தரும சாத்திரங்கள் , வேதங்கள் , உபநிடதங்கள் போன்ற பிறவற்றையும் ஆழ்ந்து பயின்றிருந்தார். ஆங்கில நாகரிகத்தில் அதிக நாட்டம் கொண்டதால் பலமுறை இங்கிலாந்து சென்று திரும்பினார். அவர் தமது நாற்பதாவது
வயதில் வேலையை விட்டு விலகினார். எஞ்சிய வாழ்நாளைச் சமுதாயப் பணிக்காக அர்ப்பணித்தார். அவர் இந்து சமுதாயத்தில் இருந்த மூடநம்பிக்கை களுக்கும் மற்றும் ஏனைய தீமைகளுக்கும் எதிராகக் குரல் எழுப்பினார். இந்த நிறுவனத்தை நிறுவியதன் மூலம் அவர் ஒரு புதிய சமயத்தைப் பரப்ப விரும்பவில்லை. மாறாக இந்த அமைப்பில் அனைத்துச் சமயங்களின் அரிய கோட்பாடுகள் அமைந்திருந்தன. எல்லா மக்களும் சாதி , சமய பாகுபாடின்றி ஒன்றாக சேர்ந்து ஒரே இறைவனை வழிபட இந்நிறுவனம் வழிவகுத்துக் கொடுத்தது. கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது
கிறித்துவப் பாதிரியார்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. இதன் விளைவாக இந்து சமயத்தை சீர்திருத்தி அமைக்க வேண்டுமென விரும்பினார். கி.பி. 1815 ல் கல்கத்தாவில் ‘ ஆத்மிக சபை என்பதை நிறுவினார். இதில் நடுத்தர , கீழ் தர மக்கள் கலந்து கொண்டனர். 1819 ல் வேதாந்த சாத்திரங்களின் சாரத்தை ஆங்கிலத்திலும் , வங்காள மொழியிலும் வெளியிட்டார். பின்பு நான்கு உபநிடதங்களை மொழிபெயர்த்தார். 1820 ல் ஏசுவின் போதனைகளை திறனாய்வு செய்து , ‘ ஏசுவின் கொள்கைகள் - அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் வழிகாட்டி ' என்ற நூலை வெளியிட்டார். கிறித்துவ
திருச்சபைக் குருக்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்தனர். அவற்றையெல்லாம் 284 சிறிதும் பொருட்படுத்தாது , கிறித்துவ மக்களுக்கு ஒரு முறையீடு என மூன்று கட்டுரைகள் வெளியிட்டார். 10.2.1. பிரம்மசமாஜத்தின் தொண்டுகள் 10.2.1.1. சமயத்தொண்டு ‘ ஒரு தெய்வ ’ வழிபாட்டைத் தான் இந்நிறுவனத்தை சார்ந்தோர் பின்பற்ற வேண்டும். இதனை பிரம சமாஜ பொறுப்பாவணத்தில் இராசாராம் மோகன்ராய் தெளிவுபடுத்தியுள்ளார். இறைவனை இரு கைகளால் மட்டுமின்றி இதயத்தாலும் வழிபட வேண்டும். ‘ தான் ’ என்ற அகந்தையை அழித்து விட்டு தனது ஆத்மாவை இறைவனுக்கு திருப்படையல்
செய்ய வேண்டும். ஒன்றே குலம் , ஒருவனே தேவன் என்பதையும் மக்கள் அனைவரும் சகோதரர்களே என்பதையும் இவர் வலியுறுத்திக் கூறினார். எல்லாச் சமயங்களையும் அவற்றின் சமய இலக்கியங்களையும் நன்மதிப்புடன் போற்றினார். இந்த இயக்கத்தின் கதவுகள் எப்பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் திறந்து விடப்பட்டிருந்தன. இந்து சமயத்தை விட்டு விலகாமல் அதே நேரத்தில் மேலைநாட்டுத் தாக்கத்தால் தோன்றிய நல்ல கருத்துகளையும் தன்வயப்படுத்திக் கொண்டு விரிந்த பரந்த உணர்வுடன் செயல்பட விரும்பியது இந்த இயக்கம். 10.2.1.2. சமுதாயத் தொண்டு இத்துறையில் இவரது பணி
அளவிடற்கரியது. பயனற்ற சமுதாய பழக்கவழக்கங்களைச் சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவிக்க ஆங்கில ஆட்சியாளரின் துணையை நாடினார். ' சதி ’ அல்லது ‘ உடன்கட்டை ஏறுதல் ’ என்ற பழக்கம் அந்நாளில் இருந்த வந்தது. வில்லியம் பெண்டிங்கை அது சட்டத்திற்கு புறம்பானது என அறிவிக்கச் செய்தார். அவர் வாழ்ந்த காலத்தில் வங்காளத்தில் இளம் விதவைகளுக்கு எண்ணற்ற இன்னல்கள் இழைக்கப்பட்டன. பல இளம் விதவைகள் இதனால் இஸ்லாமிய சமயத்தைத் தழுவினர். விதவைகள் மறுமணம் செய்து கொள்வதை இராசாராம் மோகன்ராய் ஆதரித்தார். பலதாரமணத்தையும் , குழந்தை மணத்தையும்
வன்மையாகவே எதிர்த்தார். பெண் குழந்தைகளைக் கொல்வதையும் 285 கண்டித்தார். உருவ வழிபாட்டையும் , வேள்விகளையும் முற்றிலுமாகச் சாடினார். மகளிர் நலனுக்காக போராடினார். பெண்கள் சொத்துரிமை பற்றியும் கலப்பு மணத்தை பற்றியும் சமுதாயத்திற்கு உணர்த்தினார். 10.2.1.3. எழுத்துரிமை செய்தித்தாள்கள் முழு உரிமையுடன் செயல்படவேண்டு மென்றார். மனிதன் எண்ணுவதிலும் , எழுதுவதிலும் எந்தவிதமான கட்டுப்பாடும் இருத்தல் கூடாது என்பதே இவரது கருத்து. செய்தித்தாள்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளை எதிர்த்தார். இதுவரை நாம் கண்ட சமுதாயப் பணிகளோடு மேலும்
இவர் ஏழை உழவர்களின் நிலை உயர பாடுபட்டார். ஜமின்தார்கள் அவர்களுக்கு விதித்த நிலத்தீர்வைகளைக் குறைக்கும்படி கோரினார். 10.2.2. இராசாராம் மோகன்ராய் - ஒரு மதிப்பீடு இவர் சமுதாய சீர்திருத்தவாதி மட்டுமல்லாமல் சிறந்த நாட்டுப்பற்று உடையவராகவும் திகழந்தார். மக்களிடையே அரசியல் விழிப்புணர்வைத் தோற்றுவிக்க முயன்றார். இந்தியாவின் “ புத்துலகச் சிற்பியென ” இவரைக் கூறினால் அது மிகையாகாது. சமயம் , அரசியல் , தத்துவம் , சமுதாயம் , கல்வி , இலக்கியம் மற்றும் சட்டம் போன்ற துறைகளில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வர இவர் காரணமாக
இருந்தார். மகளிர் நலனுக்காகவும் விடுதலைக்காகவும் இதற்கு முன்பு இவரைப் போல் எவரும் பாடுபட்டதில்லை என்பதை உறுதியாகக் கூறலாம். தீண்டாமையை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தினார். அக்காலத்தில் நல்ல இலக்கிய புலமை நிறைந்தவராக இருந்தார். இலக்கிய படைப்புகளை அளித்தவராகவும் இருந்தார். இவர் உருது , வங்காளம் , இந்தி , சமஸ்கிருதம் , பாரசீகம் மற்றும் ஆங்கில மொழிகளில் பல நூல்களை எழுதியுள்ளார். ' சம்வத் கௌமதி ’ என்ற வங்காளப் பத்திரிக்கையை 1819 ல் நிறுவி அதன் ஆசிரியராக பணியாற்றினார். அதற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு பாரசீக
மொழியில் ‘ மிராதுல் அக்பர் ' என்ற இதழையும் வெளியிட்டார். செய்தித்தாள் உலகில் முன்னோடியாக விளங்கி , இளம் 286 எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அரசியல் வானில் இவர்தான் புதிய இந்தியாவின் தீர்க்கதரிசியாக ( வருவது உரைப்பவராக ) இருந்தார். உரிமை பெற வேண்டும் என்பதும் அதனைச் சட்டத்தின் மூலமே பெற வேண்டும் என்பதும் இவரது கொள்கையாக இருந்தது. மானியர் வில்லியம்ஸ் என்பவர் ' இராசாரம் மோகன்ராய் தான் முதன் முதலில் சமய ஒப்புமை ஆய்வை அறிவியல் முறையில் அக்கறையுடன் செய்ய முற்பட்டவர் ' என்று கூறுகிறார். உலகம் தழுவிய
மனித நேய உறவை வலியுறுத்திய எளிய தூய மனிதாபிமானியாகவும் திகழ்ந்தார். பட்டுப் போகாத பழமைக்கும் வளரும் புதுமைக்கும் இணைப்புப் பாலமாகவே இவர் இருந்தார். ‘ இவர் இந்தியாவில் புதிய காலத்தைத் தொடங்கி வைத்தவர் ' என இரவீந்திர நாத தாகூர் கூறுகிறார். 10.2.3. பிரம்மசமாஜம் - இராசாராம் மோகன்ராய் காலத்திற்குப்பின் இராசாராம் மோகன் ராய் 1833 ல் பிரிஸ்டல் என்ற இடத்தில் அகால மரணமடைந்தார். இதன் விளைவாக இவ்வியக்கம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயிற்று. நிர்வாக அமைப்பு முறைகளும் , சட்டதிட்டங்களும் முறையாக இல்லாத காரணத்தினால் அதன்
முன்னேற்றம் தடைபெற்றது. 1843 - ல் தேவேந்திரநாத் தாகூர் இவ்வியக்கத்தில் சேர்ந்து இதைப் புதுப்பித்தார். அவருடைய தலைமையின் இவ்வியக்கம் வெற்றி நடைபோட்டது. அவர் மாதா கோயில் வழிபாட்டு முறை , நன்றி நவிலும் தொழுகை முறை , புகழஞ்சலி வழிபாடு போன்றவற்றை அறிமுகப்படுத்தினார். ' கேசவ சந்திர சென் ' என்பவர் 1862 - ல் இவ்வியக்கத்தில் சேர்ந்தார். கிறித்துவ மற்றும் வைணவ போதனைகளை வலியுறுத்தினார். இது மற்றவர்களால் பெரிதும் வெறுக்கப்பட்டது. இதன் விளைவாக இவ்வியக்கம் இரண்டாக பிளந்தது. 1884 - ல் கேசவ சந்திர சென் மறைந்தார். பிரம
சமாஜத்தில் பல உட்பிரிவுகள் இருந்தாலும் இவ்வியக்கத்திற்குப் பின் தோன்றிய ' ஆர்யசமாஜம் ’ போன்று செல்வாக்குடன் விளங்கவில்லை. இந்துக்களின் இதயங்களை மாற்றுவதிலும் , மேலைநாட்டுக் கருத்துகளைச் சிந்திக்க வைப்பதிலுமே இவ்வியக்கம் பெரும் பங்காற்றியது. 10. 3. ஆரிய சமாஜம் ஆரிய சமாஜம் கி.பி. 1875 - ல் தோற்றுவிக்கப்பட்டது. இதைத் தோற்றுவித்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆவார் அவரது இயற்பெயர் மூலசங்கரன். கி.பி. 1824 - ல் குஜராத்தில் வசதியுள்ள பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் ‘ அம்பா சங்கரர் ’ ஆகும். இவரது
20 வது வயதில் திருமணம் முடிக்க இவரது தந்தை விரும்பினார். அதில் விருப்பம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார். உண்மையைத் தேடி இந்தியா முழுமைக்கும் சுற்றி பல இடங்களில் கல்வி கற்றார். 15 ஆண்டுகள் அலைந்து , திரிந்து இறுதியாக மதுராபுரிக்குச் சென்றார். அங்கு சுவாமிஜி வீராஜானந்தரிடம் சீடராக ஆனார். அதன் பின்பு ' சத்தியார்த்த பிரகாசம் ’ என்ற நூலை எழுதினார். அவர் தம் வாழ்நாளை வேத சமயத்தைப் பரப்புவதிலும் இந்து , சமய , சமுதாயப் பணிகளிலும் கழித்தார். ஐந்தாண்டுகளுக்குள் பல்லாயிரக் கணக்கானோர் இவரைப் பின்பற்றத்
தலைப்பட்டனர். 10.3.1. ஆரியசமாஜம் - விளக்கம் ‘ ஆரியா ’ என்பதன் பொருள் கடவுளின் குழந்தை என்பதாகும். ( Arya means son of God ). அனைத்து ஆன்மாக்களும் , கடவுளின் குழந்தைகள் என்றும் , அவை கடவுளுக்கு கீழ்படிதல் உள்ளவையாக இருக்க வேண்டும் என்பதும் தயானந்தரின் கருத்துகளாகும். 10.3.2. ஆரியசமாஜத்தின் கோட்பாடுகள் 1. அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்பதால் அவர் களிடையே சாதி , மத , இன வேறுபாடுகள் அர்த்தமற்றதாகும். 2. மரம் , உருவம் , கோள்கள் , மனிதர்கள் , புத்தகங்கள் இது போன்ற இன்ன பிற பொருள்களை முன்னிறுத்தி வழிபாடு செய்வதை
வேதங்கள் போதிக்கவில்லை. தியானத்தின் மூலமாகவும் , தன்னலமற்ற நற்செயல்களின் மூலமாகவும் வேதங்களை பரப்புவதன் மூலமாகவும் கடவுளை வழிபட முடியும். 3. கடவுளிடம் நமது குறைகளை முறையிட எந்தவொரு பிரதிநிதியும் ( Agents ) தேவையில்லை. மாறாக அனைத்து ஆண்களும் , பெண்களும் கடவுளின் பிரதிநிதிகளே. கடவுளைப் பற்றியும் , அவரது கருத்துகளைப் பரப்புவதற்கும் மக்கள் அனைவரும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். 4. ஆன்மாவின் பயணம் முடிவற்றது. அது பல்வேறு பிறப்பு மற்றும் இறப்புகளின் மூலம் தன்னை சுத்தப்படுத்தி மேன்மை அடையச் செய்கிறது. 5. இறப்பு
என்பது முடிவற்றது. தவிர்க்க முடியாததும் கூட. எனவே அதனைப் பற்றிய அச்சம் கூடாது. வாழ்வில் மேற்கொள்ளும் நற்செயல்கள் மூலமாக இறப்பை , அடுத்த பிறவியல் அதனை புனிதப் பிறப்பாக்கிக் கொள்ளலாம். 6. ஆன்மா பிறப்பதும் இல்லை. இறப்பதும் இல்லை. கடவுளைப் போன்றே ஆன்மாவும் நிலையானது. 7. தீபம் ஏற்றுதல் என்பது அதன் ஒளியில் எதிர்காலத்தில் நற்செயல்களைச் செய்தற்கு திட்டமிடுதல் ஆகும். 8. நாளைய செயல்கள் என்பது கடமையாகும். அதுவே இன்றைய கடமையாக மாறுகிறது. அக்கடமையினை முழுமனத்துடன் செவ்வனே செய்யும்போது , அது அடுத்த பிறவிக்கான கருவூலமாக
மாறுகிறது. 9. ஆன்மா பாவம் அற்றது. அது கடவுளின் கோட்பாடுகளை மீறும் போது பாவமடைகிறது. ஆன்மாவானது மன எழுச்சிக்கு அடிமையாகும் போது இச்செயல் நடைபெறுகின்றது. எனவே மன எழுச்சியானது ஆன்மாவைப் பாதிக்கா வண்ணம் பார்த்துக் கொள்வது அவசியமாகிறது. 10. எல்லா பாவத்தினின்றும் விடுதலை பெருவதே வீடுபேறாகும். பல்வேறு பிறப்பு மற்றும் இறப்பின் மூலமாகவே வீடு பேற்றை அடைய முடியும். 11. சொர்க்கமும் , நரகமும் இப்புவியில்தான் உள்ளது. வேறெங்கும் இல்லை. தன் செயல்களின் மூலமாகவே சொர்க்கத்தையும் நரகத்தையும் தானே நிர்ணயம் செய்து கொள்ளுகிறான்.
12. ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம். ஆன்மாவிற்கு பாலின வேறுபாடுகள் கிடையாது. ஆன்மா முழுமையானதும் புனிதமானதும் ஆகும். 13. சமயச் சடங்குகளின் வழி முறைகள் மூலமாக உலகில் அமைதியை ஏற்படுத்த முடியும். 14. மதம் மற்றும் மதநம்பிக்கைகள் மூலமாக மட்டும் இன்றைய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இயலாது. மாறாக அறிவுப்பூர்வமான சிந்தனை மற்றும் செயல்பாட்டினால் மட்டும் தீர்வுகாண இயலும். 10.3.3. ஆர்ய சமாஜத்தின் செயல்பாடுகள் இது ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் மனித சமுதாய மேம்பாட்டிற்கு பல சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளது. இந்து
சமயத்தில் இருந்து வரும் தீமைகளைக் களையவும் வேத சமயத்திற்கு புத்துயிர் அளிக்கவும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. 10.3.3.1. வேதங்களைப் பரப்புவது வேதங்கள் மிகவும் நம்பத்தகுந்த செய்திகளை உள்ளடக்கி இருப்பதால் அதனைப் பரப்ப நூற்றுக்கணக்கான போதகர்களும் , துறவிகளும் நாடு முழுமைக்கும் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வேதக் கருத்துகளில் உடன்பாடு இல்லாதவர்கள் அதைத் திரித்துக் கூற நினைத்தவர்களிடம் விவாதம் நடத்தி அவர்களுக்குத் தேவையான விளக்கங்களைத் தருவதும் அவர்களது கடமையாகும். மேலும் போதகர்கள் ' ஒரு கடவுள் கோட்பாட்டினை
' வலியுறுத்தி வருகிறார்கள். 290 10.3.3.2. இந்தியப் பண்பாட்டை மக்களிடம் எடுத்துச் செல்வது சமஸ்கிருதம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஈடுபாடு ஏற்படும் வகையிலும் பண்டைய நாகரிகங்களை அறியும் வகையிலும் இச்சமாஜத்தின் ஊழியர்கள் செயல்படுகின்றர். நம் மூதாதையர்கள் கூறிச் சென்றுள்ள அறிவியல் கருத்துகளை ஆய்வு ( Research ) செய்வதற்கு இன்றைய இளைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் அதன் செயல்பாடுகள் அமைந்துள்ளன. 10.3.3.3. கல்வி நிறுவனங்களை உருவாக்குதல் ஆரியசமாஜத்தின் கல்வி நிறுவனங்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவற்றிலொன்று ‘
குருகுலம் ’ மற்றொன்று ‘ பள்ளி மற்றும் கல்லூரிகளாகும். குருகுலத்தில் குறிப்பாக சமஸ்கிருத மொழியிலும் சமயம் மற்றும் மதம் பற்றிய கருத்துக்களும் பயிற்றுவிக்கப்படுகின்றன. பள்ளி மற்றும் கல்லூரிகள் Dayanand Anglo vedic பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என்ற பெயர்களைக் கொண்டிருக்கும். சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் கல்வித்துறை அல்லது பல்கலைக்கழகங்களில் ஒப்புதலோடு மேற்கூறிய கருத்துகளை கற்பிக்கின்றனர். Dayanand Anglo vedic பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்களும் , மாணவிகளும் தனித்தனியாக பயிலவும் , ஒன்றாகப் பயிலவும் வசதிகள்
செய்யப்பட்டுள்ளன. சில நிறுவனங்களில் வணிகப்படிப்பும் ( Commercial Education ) சொல்லித்தரப்படுகின்றன. நாடு முழுமைக்கும் கல்வி நிறுவனங்கள் இச்சமாஜத்தால் நடத்தப்படுகின்றன. ஒரே நகரில் பல கல்வி நிறுவனங்களும் நிறுவப்பட்டுள்ளன. இந்திய நாட்டில் இளைஞர்களும் இளம் பெண்களும் ஏற்றம் பெறும் வகையில் , வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்திய பெருமை இவ்வியக்கத்தையே சாரும். 10.3.4. சமுதாயத் தொண்டு 10.3.4.1. பெண்கள் நலம்பேணுதல் பல நகரங்களில் அநாதை ஆசிரமங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் எண்ணற்ற ஆண் குழந்தைகளும் , பெண் குழந்தைகளும்
291 பேணிக் பாதுகாக்கப்படுகின்றனர். மேலும் அவர்களுக்கு அடிப்படை மற்றும் தொழில் கல்விகளும் போதிக்கப்படுகின்றன. இதனால் வாழ்க்கையில் தனக்குத் தேவையானவற்றை தாங்களே பெற்றுக் கொள்ள வழிவகை கிடைக்கின்றது. 10.3.4.2. குழந்தைகள் இல்லம் படிப்பறிவு இல்லாத ஏழைப் பெற்றோர்களின் குழந்தைகளுக்குக் கல்வி புகட்ட ஆஜ்மீர் நகரில் குழந்தைகள் இல்லத்தை இந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. 10.3.4.3. விதவைகள் இல்லம் பல குடும்பங்களில் விதவைகள் மனிதாபிமானமின்றியும் , ஈவு இரக்கம் இல்லாமலிலும் நடத்தப்படுகின்றனர். மேலும் பல வழிகளில் அவர்கள்
துன்பப்படுத்தப்படுகின்றனர். எனவே விதவைகள் வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படிப்பட்ட விதவைகளுக்கு புகலிடமாக விதவைகள் இல்லங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் அவர்களுக்கு சரியான துணை கிடைக்கும்போது மறுமணம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படுகின்றது. 10. 3. 4. 4. கைவிடப்பட்ட / அநாதைப் பெண்களுக்கான ஆசிரமம் கைவிடப்பட்ட / அநாதைப் பெண்களுக்காக சில ஆசிரமங்களை இவ்வியக்கம் ஏற்படுத்தியுள்ளது. அத்தகைய பெண்களுக்கு தன்னம்பிக்கை உண்டாகவும் தம் வாழ்விற்கு தேவையானவற்றை தாமே சம்பாதித்து கொள்ளவும் தொழிற்கல்விகள்
இங்கு போதிக்கப்படுகின்றன. 10.3.4.5. தொண்டர் குழுக்கள் ‘ தைரியமான ஆரியன் ' என்ற தொண்டர் படையும் இந்நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள் , மக்களை மகிழ்விப்பதற்கான பொது விழாக்களை ஏற்பாடு செய்வது மட்டுமன்றி தூய்மையான குடிநீர் கிடைக்க செய்வதிலும் , மருத்துவ மனைகளை ஒழுங்காக செயல்பட வைப்பதிலும் பங்கேற்கின்றனர். 292 மேலும் இளைஞர்கள் உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள யோகா மற்றும் தியானம் ஆகியவைகளை கற்றுத் தருகின்றனர். 10.3.5. சமுதாய மறுமலர்ச்சி இச்சமாஜம்சமுதாய மறுமலர்ச்சிக்கு பல்வேறு வகைகளில்
பாடுபடுகின்றது. அவையாவன. 10.3.5.1. குழந்தை மணத்திற்கு எதிராக சமுதாயத்தில் மிகவும் கொடிய பழக்கமாக குழந்தை திருமணம் உள்ளது. இதனால் எண்ணற்ற பெண்கள் இளம் வயதிலேயே விதவையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தீய நடைமுறையை இவ்வியக்கமானது முற்றிலுமாக எதிர்க்கிறது. இதனை தடுக்க ஆரிய சமாஜம் சாரதா சட்டத்தை ( Saradha Act ) ஆதரித்தது. அரசாங்கமும் 18 வயதிற்குட்பட்ட பெண்ணும் 21 வயதிற்குட்பட்ட ஆணும் திருமணம் செய்துகொள்ள கூடாது என்று சட்டம் இயற்றியுள்ளது. மீறியவர்கள் தண்டனைக்குட் படுத்தப்படுவார்கள். 10.3.5.2. பலதார மணத்திற்கு
எதிராக இந்து சமுதாயத்தில் உள்ள மற்றுமொரு இழிச்செயல் ஒரு ஆண் பல பெண்களை மணந்து கொள்வது என்பதாகும். தற்போது இந்து மதத்தைச் சார்ந்த எந்தவொரு ஆணும் பெண்ணும் இரண்டு திருமணங்கள் செய்து கொள்ள முடியாதவாறு அரசாங்கம் சட்டம் இயற்றியுள்ளது. பலதார மணத்தை ஆரிய சமாஜம் எப்போதும் எதிர்த்து வந்துள்ளது. 10.3.5.3. வயதான ஆண்மகனின் திருமணத்திற்கு எதிராக வயதான ஆண் , இளம் வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதை இவ்வியக்கம் கடுமையாக எதிர்க்கிறது. 10.3.5.4. ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமானம் சமுதாயத்தில் கணவனுக்குத் தேவையான பணிவிடைகளை
செய்து , நான்கு சுவர்களுக்குள் முடங்கி கிடப்பதே பெண்ணின் 293 கடமை என்று கருதப்பட்டு வந்தது. இதை ஆரிய சமாஜம் வன்மையாக எதிர்க்கிறது. ஆண்களையும் பெண்களையும் சமுதாயத்தின் இருகண்களாகவே பாவிக்கின்றது. கடமைகளும் உரிமைகளும் இருபாலருக்கும் சமமாக இருக்க வேண்டுமென்று கூறுகிறது. கணவள் இறந்துவிட்டால் , வேறொரு ஆணின் துணை அவசியமென்று உணரும் பட்சத்தில் பெண்கள் மறுமணம் செய்து கொள்ளலாம் என்று கூறுகிறது. 10.3.5.5. சாதி முறைகளும் தீண்டாமையும் இந்தியாவில் தொன்று தொட்டு இருந்து வந்த சாதி முறைகளையும் தீண்டாமையையும் ஆரிய சமாஜம்
ஆரம்ப காலம் முதலே எதிாக்கிறது. மேலும் பிறந்த ஜாதியினால் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ இல்லை என்று வலியுறுத்துகிறது. மேலும் எவன் ஒருவன் உள்ளதமான செயல்களை செய்கிறானோ அவனையே உயர்ந்தவனாக கருத வேண்டும் என்று கூறுகிறது. இந்நிறுவனம் நூற்றுக்கணக்கான கலப்புத் திருமணங்களை நடத்தி வைத்துள்ளது. அதில் பல்லாயிரக்கானோர் பங்கேற்றுள்ளனர். எனவே அவர்களது உள்ளத்தில் இருந்து சாதி மற்றும் தீண்டாமை போன்ற எண்ணங்கள் மறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 10.3.5.6. புனிதப்படுத்துதல் ( Shuddhi ) ஆரிய சமாஜம் தோன்றுவதற்கு முன் பிற மதத்தை சார்ந்த எவரும்
இந்து மத கோட்பாடுகளை ஏற்று இந்துவாக மாறமுடியாத நிலை இருந்தது. ஆனால் ஆரிய சமாஜமோ இந்து மதத்தின் கதவுகளை எல்லோருக்கும் திறந்து வைத்துள்ளது. 10.3.5.7. ஆரியசமாஜத்தின் தொண்டுகள் நடைபெறும் இடங்கள் இந்தியாவில் நிறுவப்பட்டாலும் இதன் கிளைகள் அயல்நாடுகளிலும் பரவியுள்ளன. இந்தியர்கள் குடியேறி வாழ்கின்ற இலண்டன் மற்றும் நியூயார்க் போன்ற பெருநகரங்களில் இதன் கிளைகள் தொடங்கப்பட்டுள்ளன. வடஇந்தியாவில் மாவட்டம் தோறும் இதன் கிளைகள் அமைந்துள்ளன. பெரு நகரங்கள் மட்டுமல்லாது சிறு கிராமங்களிலும் இதன் கிளைகள் விரிந்து கிடைக்கின்றன.
10.3.6. சுவாமி தயானந்தர் ஒரு மதிப்பீடு சுவாமி தயானந்தர் சிறந்த சீர்திருத்தவாதி. வேத சமயம் , நாகரிகம் , பண்பாடு இவை மூன்றையும் உலகிலேயே சிறந்தவையாக அவர் கருதினார். இவற்றிற்கு புத்துயிர் அளித்தால் தான் இந்தியா மேம்பாடு அடைய முடியும் என்றும் கருதினார். வேறு சமயத்திற்கு மாறிய இந்துக்கள் , இந்து சமயத்திற்கு திரும்பி வர புனித சடங்குகளை பின்பற்றினார். இந்துக்களிடம் நாட்டுப்பற்றை வளர்க்க பெரிதும் பாடுபட்டார். ‘ இந்தியா இந்தியருக்கே ' என்ற முழக்கத்தை எழுப்பியவரும் இவரே. நம்மை நாமே ஆண்டு கொள்வதுான் நல்லாட்சியாகும்
எனக் கருதினார். இவர் அடிக்கடி சுயராஜ்யம் ( நமது அரசு ) சுய பாஷை ( நமது மொழி ) சுய தர்மம் ( நமது சமயம் என்று மக்களிடையே கூறியது விடுதலை உணர்வை , மக்களிடையே தோற்றுவித்தது. சுவாமி தயானந்தர் ஒரு சிறந்த ஞானி கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் பாலமாக அவர் விளங்கினார். ' உண்மையே வெல்லும் ' ' மீண்டும் வேதங்களுக்கு செல் ’ என்பன அவருடைய பொன் மொழிகளாகும். அவர் மறைந்த பின்னும் அவரது வழித் தோன்றல்கள் அவர் விட்டு சென்ற பணிகளை தொடர்ந்து மேற்கொண்டனர். இவ்வியக்கம் லாலா லஜபதிராய் , சுவாமி சிரத்தானந்தர் போன்ற
பெருந்தலைவர்களை நாட்டிற்கு தந்துள்ளது. சுவாமி தயானந்தா ஆரிய சமாஜத்தை நிறுவிய 8 ஆண்டுகளில் அகால மரணமடைந்தார். அதன் பின் மகாத்மா ஹன்ஸ்ராஜ் என்பவர் தயானந்த ஆங்கில வேத கல்லூரி நிறுவினார். 1902 - ல் ஆரிய சமாஜத்தில் டிஎ.வி ( D.A.V. ) கல்லூரி பிரிவு , குருகுலப் பிரிவு என இரு பிரிவுகள் தோன்றலாயின. குருகுலப்பிரிவு குருகுல கங்கேரி என்ற ஒரு நிறுவனத்தை தொடங்கியது. அது பின்னர் பல்கலைக்கழகமாக வளர்ந்தது. இந்தியத் திருநாட்டில் 295 Page 170 of 201 இளைஞர்களும் இளம்பெண்களும் ஏற்றம் பெரும் வகையில் வாழ்க்கையில் மாற்றங்களை
ஏற்படுத்திய பெருமை இவ்வியக்கத்தையே சாரும். இவ்வியக்கமானது மனித சமுதாயத்தை ' ஒன்றே குலம் ஒருவனே தேவன் ' என்ற பாதையின் கீழ் வரவேற்கிறது. 10.4. இராமகிருஷ்ண இயக்கம் 10.4.1. இராமகிருஷ்ணரின் வாழ்வு இந்தியாவில் குழப்பமும் அமைதியின்மையும் தலை விரித்தாடிக் கொண்டிருந்தபொழுது அமைதியையும் அறிவொளியை யும் நல்க இந்திய வானில் தோன்றிய விடிவெள்ளி இராமகிருஷ்ண பரமஹம்சர். இவர் தமது மனமென்னும் ஆய்வுக் கூடத்தில் ஆன்மா பற்றிய ஆராய்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார். தூய கங்கை நதிக்கரையில் கல்கத்தாவிற்கு அருகிலுள்ள தக்ஷணேஸ்வரம் என்ற
இடத்தில் அமைந்திருந்த காளிகோயிலில் தமது காலத்தைக் கழித்த இவர் , எல்லாச் சமயங்களின் சாரத்தையும் அறிந்து , உண்மைகளை உணர்ந்து சுவைத்து வாழ்ந்து காட்டிய ஞானி , 1875 ஆம் ஆண்டு இறுதியில் அவருடைய ஆய்வுகள் முடிந்தன. பின்பு கேசவ சந்திரசென்னும் பிரம்ம சமாஜமும் காணவிரும்பிய மறுமலர்ச்சி எண்ண அலைகளோடு தொடர்பு கொண்டார். பின்பு 1886 ல் அவர் மகாசமாதி நிலையை அடையும்வரை 11 ஆண்டுகட்கு எளிய சொற்களில் இனிய நடையில் கதைகள் , நீதிக்கதைகள் அன்றாட நிகழ்ச்சிகளை வைத்து அரிய சமய , தத்துவ கருத்துகளை எவரும் புரிந்து கொள்ளும் வண்ணம்
போதித்தார். படித்தோரும் , பாமரரும் ஆடவரும் , பெண்டிரும் , இளைஞரும் , முதியோரும் கேட்டு இன்புற்று அறநெறியில் நிற்க முனைந்தார். சாரதா தேவியார் இவருக்கு உற்ற துணையாக இருந்து , இவருடைய சமயப் பணிகள் சரிவர நடைபெறப் பல்லாற்றானும் துணை புரிந்தார். இவர் 1834 ஆம் ஆண்டு வங்காளத்தில் ஹுக்ளி மாவட்டத்தில் காமர் புக்கூர் என்ற கிராமத்தில் பிராமண குடும்பத்தில் தோன்றினார். தமது குலதெய்வத்தை ஒன்பதாவது வயதிலே வழிபடத் தொடங்கி , பின்பு தக்ஷ்ணேஸ்வரக் காளியுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 296 காளியைக் காண வேண்டுமென்று பல மணிநேரம்
இவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்துவிடுவார். நாளடைவில் காளியைக் கண்டு , கண்ட அந்தப் பேரின்ப நிலையிலே இருப்பார். பின்பு பல்வேறு அநுபூதி நிலைகளில் கண்ணனையும் இராமனையும் கண்டு பேரானந்தம் எய்தினார். இவரை இளம்வயதில் ‘ கதாதரீ ’ என அழைப்பர். 10.4.2. இராமகிருஷ்ணரின் கொள்கைகள் சமயவெறியில் நிற்பதெனின் இறைவனை உணருதல் என்பது இவரது கருத்து. சமயத்தைப் புறக்கணிப்பது என்பது சமயத்திற்கு பெரும் தீங்காகக் கருதப்படுகின்றது. இது சமயத்தைப் பின்பற்றாமல் இருப்பதை விடக் கீழாகக் கருதப்படுகின்றது. தொண்ணூறு கோடி மக்கள் இரண்டாயிரம் ஆண்டு
காலம் வாழ்ந்த வாழ்வின் முழுமைச் சின்னம் இராமகிருஷ்ணர் , அவர் , பல்லாயிர மக்களின் குரல்கள் , மனித இன நம்பிக்கைகள் கூடி அமையப் பெற்ற இயைபுடைய சீரிய பவ்வியமாக விளங்கினார் என உரோமன் ரோலந்து கூறுகிறார். சமயம் ஓர் அனுபவம் விந்தை நிறைந்தது சமயம். இதை இலக்கணமும் , அளவை இயலும் ( Logic ) விளக்கிவிட முடியாது. அனுபவத்தின் ஆண்டவனைக் கண்டோர் அதைக் குறித்து வாதிடுவதில்லை , கண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் என்பது இவரது கருத்து. வாழ்வின் சீரிய குறிக்கோள் இறையனுபவம் , அடிப்படைத் தத்துவ நுணுக்கங்களையும் , தத்துவ
உரையாடல்களையும் தவிர்த்தார். இறைவனை அடைய வேண்டுமென்ற ஏக்கம் , இறைவன் பால் அன்பு இவைகளே வேண்டுபவை ; ஆனால் இறைவனைப் பற்றிய அறிவென்று உருவவழிபாடு சமயவாழ்விற்கு இன்றியமையாதது எனக் கருதினார். அனைத்துத் திருவுருச் சிலைகளிலும் ஆண்டவன் நிறைந்திருப்பதைக் காணலாம் என்பது இவரது கருத்து. இறைவனை அடைய உருவ வழிபாடு ஒரு வழி. அதுவே முடிந்த முடிவு அன்று. குறிக்கோள் இறையனுபவம். இவரது சமயம் நடைமுறை வாழ்விற்கு ஏற்ற ஒன்று. இவர் பண்டைய உண்மைகளை விளக்கவந்த ஓர் ஆன்மப்பெட்டகம் , அழியாத சமயச் சின்னம். இவர் , “ இறைவனும் மனிதனும் கலந்த
வியத்தகு கலவை ” என விவேகானந்தர் கூறுகிறார். 297 10.4.3. சுவாமி விவேகானந்தர் விவேகம் + ஆனந்தம் = விவேகானந்தம். விவேகத்தால் ஆனந்தம் பெற்றதால் விவேகானந்தர் என அழைக்கப் பெற்றார். இராமகிருஷ்ணரின் மிகச் சிறந்த சீடர் விவேகானந்தர். இவர் 1863 ஆம் ஆண்டில் சில்லாவைச் சேர்ந்த தத்தா குடும்பத்தில் கல்கத்தாவில் பிறந்து , ஆங்கிலப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயின்று புலமை பெற்றார். இவரை இளம் வயதில் நரேந்திரர் அல்லது நரேந்திரநாதர் என அழைப்பர். இவரது தந்தை விஸ்வநாத தத்தா , தாயார் புவனேஸ்வரி தேவி. மேலை நாட்டு அறிவியல்
கல்வியும் , பகுத்தறிவு மனப்பான்மையும் , குழந்தைப் பருவத்திலே இறை நம்பிக்கையும் , வைதீக நம்பிக்கையும் சரியா என வினவத் தலைப்பட்டன. இவற்றின் விளைவாக இவரது அறிவென்னும் அடிவானம் அகன்ற நிலையை அடைந்தது. பின்பு பிரம சமாஜத்தின் உறுப்பினரானார். இங்கும் இவரது ஆன்ம திருப்திக்கு உணவு கிட்டவில்லை. உண்மையே உய்த்துணரப் பலரையும் , பல இடங்களையும் நாடிச் சென்றார். இறுதியில் எழுத்தறிவில்லா ஞானி இராமகிருஷ்ணரைத் தக்ஷணேஸ்வரத்தில் நேருக்கு நேர் சந்தித்தார். பரமஹம்சர் இதுபோன்ற வீரம் செறிந்த ஆன்மாவை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார். அவர்
இவரால்தான் விரும்பிய தெய்விகப்பணி நிறைவேறும் என நம்பி இருந்தார். கல்வியாலும் பண்பாலும் இரு துருவங்களைப் போன்ற இரண்டு உள்ளங்கட்கு ஏற்பட்ட சந்திப்பு இறைவனின் திருக் கருணையால் ஏற்று , இவருக்கு இறையுணர்வை உணர்த்தித் தம் சீடராக ஏற்றுக் கொண்டார். நரேந்தரரின் ஐயப்பாடுகள் அகன்றன. மனதில் அமைதி தோன்றியது. குழப்பங்களுக்கு தீர்வுகள் கிடைத்தன. இராமகிருஷ்ணரின் ஆன்மிகச் செய்தியை அனைத்துலகிற்கும் பரப்பத் தகுந்த அருட்செல்வராக உருவானார். பின்பு இவர் ‘ விவேகானந்தர் ’ என அழைக்கப்பட்டார். இவரது ஆசானின் ஆன்மா இவருள்
குடிகொண்டமையால் அயராது சமயப்பணிகளை ஆற்றத் தலைப்பட்டார். இராமகிருஷ்ணரின் இறுதிநாள்களில் அறிவாற்றல் நிறைந்த ஒரு இளைஞர் கூட்டம் அவரைச் 298 சூழ்ந்திருந்தது. அன்னையின் பரிவோடும் பாசத்தோடும் அவர்களை வளர்த்து சமயப் பணிகளுக்குப் பெறச் செய்தார். அவர்களை விவேகானந்தரிடம் ஒப்படைத்ததாக ‘ உனது பராமரிப்பில் அவர்களை விடுகிறேன். அவர்கள் திரும்பாமல் பார்த்துக்கொள் ' என விவேகானந்தரிடம் பரமஹம்சர் கூறினார். இவர்கள் இராமகிருஷ்ணரிடம் தீக்கை பெற்றனர் ; துறவற வாழ்வை மேற்கொண்டனர். எதிர்கால இராமகிருஷ்ண இயக்கத்தினைச் சார்ந்தோராக
இவர்கள் மாறினார் 10.4.4. இராமகிருஷ்ண இயக்கம் நிறுவப்படல் 1896 ஆம் ஆண்டு தமது குரு இராமகிருஷ்ண பரஹம்ஸாரின் நினைவாக , விவேகானந்தர் இராமகிருஷ்ண இயக்கத்தை நிறுவினார். இந்தியப் பண்பாட்டை உலகெங்கும் பரப்புவது இதன் முக்கிய குறிக்கோள். விவேகானந்தர் , ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பரவலாகப் பயணம் செய்து வேதாந்த தத்துவத்தைப் பரப்ப முயன்றார். நடைமுறை வாழ்விற்கும் பயன்தரும் வகையில் நாகரிக உலகிற்கு இந்து சமயத்தை எடுத்துரைத்தவர் விவேகானந்தர். இந்திய பண்பாடு , நாகரிகம் இவைகளின் சீரிய நிலைமை உலகுக்கு உரத்த குரலில் உணர்த்திய
உத்தமர் இவர். உலக அரங்கில் இந்தியாலை உன்னத நாடாகக் கருதச் செய்தமையால் இவரை நாட்டுப்பற்று மிக்க ஞானியென அழைத்தனர். இவர் ஏழ்மையை மூட நம்பிக்கைகளை , தீமைகளை அறவே நீக்க முற்பட்டார் அனைவரும் கல்வி பெற வேண்டும். சமுதாயத்தின் அடிமட்டத்திலிருப்போருக்குப் பணி புரிய வேண்டும் என மக்களைத் தூண்டினார். இராமகிருஷ்ண இயக்கத்தின் கிளைகள் உலகெங்கும் உள்ளன. இந்த இயக்கம் ஆன்ம வளர்ச்சியில் நாட்டம் கொண்டோருக்குப் பயிற்சி அளித்து , அவர்களைக் கல்வி , சமய , சமுதாயப் பணிகளைச் செய்யவும் , நன்கொடை திரட்டவும் அனுப்பி வைக்கின்றது. தூய
வேதாந்தக் கருத்துகளை உயர்ந்த பணியிலும் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு கிளைகளைக் கொண்டு மருத்துவமனைகள் , பள்ளிகள் , கல்லூரிகள் , நூலகங்கள் , அனாதை இல்லங்கள் போன்றவற்றை நிறுவி மிக சிறிய பணிகளை செய்து வருகின்றது. சிகாகோ உலகச் சமய மாநாட்டில் விவேகானந்தர் இந்து சமயத்தைப் பற்றி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உரை நிகழ்த்தி இந்தியாவிற்குப் பெரும் விளக்கத்தைக் கேட்டு அமெரிக்கர்களும் பிற நாட்டுச் சமயச் சார்பாளர்களும் பெரிதும் வியந்தனர். விவேகானந்தர் சமத்துவத்திலும் சமய ஒற்றுமையிலும் நம்பிக்கை கொண்டிருந்தார். 10.4.5.
இராமகிருஷ்ண இயக்கத்தின் நோக்கங்களும் குறிக்கோள்களும் 1. இராமகிருஷ்ணா எடுத்துரைத்த வண்ணம் , வேதாந்தக் கொள்கைகள் அடங்கிய கல்வியைப் புகட்ட வேண்டும். இதைப் புகட்ட அவருடைய அன்றாட நடைமுறை வாழ்வில் கண்ட எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்த வேண்டும். பிற சமய இறையியலுடனும் ஒப்பிட்டுச் சென்மையாகச் செய்தல் வேண்டும். 2. கலைகள் , அறிவியல்கள் , தொழில்கள் பிறவற்றையும் புகட்டுவதும் , மேம்பாடடையச் செய்வதுமாகும். 3. மேலே கூறிய துறைகள் அனைத்திலும் ஆசிரியர்களைப் பயிற்றுவித்து அவர்கள் பொதுமக்களை அணுகும் வழிவகை செய்தல் 4. பொது
மக்களும் கல்வி புகட்டும் பணியினைத் தொடர்ந்து செய்துவரல் 5. பள்ளிகள் , கல்லூரிகள் , அனாதை இல்லங்கள் , தொழிற் சாலைகள் , ஆய்வுக்கூடங்கள் , மருத்துவமனைகள் , மருந்தகங்கள் , உடலுறுப்பிழந்தோருக்கும் பிணியாளர்கட்கும் துயருறுவோருக்கும் உறைவிடங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் , அறப்பணிகள் போன்றவற்றை நிறுவிப் பேணி வளர்த்துத் தொடர்ந்து அப்பணிகளைச் செய்துவரல். 6. இவ்வியக்கம் தன் நோக்கங்களை நிறைவேற்றி , எவற்றை விரும்பத் தக்கதெனச் சிந்திக்கின்றதோ அதற்குரிய 300 சஞ்சிகைகளை , பருவ இதழ்களை , நூல்களை தூண்டுப் பிரசுரங்களை
அச்சடித்துப் பதிப்பித்து விற்றல் அல்லது இலவசமாக வழங்கல் 7. மேலே கண்ட நோக்கங்களைக் கணக்கிடப்பட்ட முறையில் நேரடியாகவோ , மறைமுகமாகவோ , நிறைவேற்றத் தொடர்புடைய பணிகளையும் , பிறபணிகளையும் எவற்றை எல்லாம் இயக்கம் செய்யத் தகுதி வாய்ந்ததெனக் கருதுகிறதே அவையனைத்தையும் செய்தல். இவ்வியக்கம் கீழ்கண்ட பணிகளையும் செய்தன 1. மருத்துவப்பணி 2. கல்விப் பணி 3. கிராமத்தில் உழைப்பாளிகட்கும் , பிற்பட்டோர்க்கும் பணி புரிதல் , கிராமிய முன்னேற்றத்திற்குப் பாடுபடல் 4. வெள்ளம் , புயல் , பெருமழை , நிலநடுக்கம் , நாகரிகம் , தத்துவம் , சமயம்
இவற்றை வெளிநாடுகளில் பரப்புதல் 5. ஆன்ம , பண்பாட்டுத்துறைகளில் பணிபுரிதல். 6. மகளிர் நலனுக்காகப் பல நிறுவனங்களை நிறுவிப் பணிபுரிதல். இவ்வாறாக இராமகிருஷ்ண இயக்கம் இன்றும் உலகெங்கம் உயர்ந்த பணிகளை ஆற்றி வருகின்றது. 10. 4. 6. விவேகானந்தர் பொன்மொழிகள் இளைஞர்களே , உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் , என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் , ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன். பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது. பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால்
மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது. 301 பிரம ஞான சபை இந்தியாவை முன்னேற்றமடையச் செய்ய விரும்பினால் , பாமர மக்களுக்காக நாம் வேலை செய்தாக வேண்டும். அடிமைகள் எல்லோருக்கும் பெரிய சனியனாக இருப்பது பொறாமையே ஆகும். நமது நாட்டைப் பிடித்த சனியனும் அதுதான். ஏழை , எளியவர்கள் , ஒதுக்கப்பட்டவர்கள் , கல்வியறிவில்லாதலர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும். பகை , பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் , அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும். உண்மைக்காக எதையும் துறக்கலாம் ; ஆனால்
எதற்காகவும் உண்மையைத் துறக்காதே. வலிமையே மகிழ்ச்சிகரமான , நிரந்தரமான , வளமாக , அமரத்துவமான வாழ்க்கை ஆகும். தன்னலம் சிறிதும் இல்லாமல் , நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள். இரக்கம் உள்ள இதயம் , சிந்தனை ஆற்றல் படைத்த மூளை , வேலை செய்யக் கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை. வீரர்களே , கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள் ! தளைகளிலிருந்து விடுபடுங்கள் ! இளைஞனே , வலிமை , அளவற்ற வலிமை - இதுவே இப்போது தேவை சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக
விளங்கு ! உடல் பலவீனத்தையோ , மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது. 302 பிற இயக்கங்கள் சமுதாய சீர்திருத்தங்களை மேற்கொண்டதைப் போலவே பிரம ஞான சபையும் இந்திய மக்களின் வாழ்வைச் சீர்ப்படுத்துவதில் பெரும்பங்காற்றியுள்ளது. இச்சபை முதன் முதலில் 1875 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நிறுவப்பட்டது. ஹெச்.பி. பிளவாட்ஸ்கி என்ற ரஷ்ய மாதுவும் , கர்னல் ஹெச்.எஸ். ஆல்காட் என்ற அமெரிக்கரும் சேர்ந்து இச்சபை நிறுவினர். பின்பு இவர்கள் சென்னைக்கு வந்து அடையாற்றில் தலைமை அலுவலகத்தைத் தொடங்கினார். அவ்வியக்கத்தின்
வெற்றிக்கு திருமதி. அன்னிபெசன்ட் அம்மையார் பெரிதும் உதவினார். இவ்வியக்கத்திற்குத் தலைமைப் பொறுப்பையும் ஏற்றார். 1847 - ஆம் ஆண்டு ஆங்கில அயர்லாந்து பிறந்தவர் இவர் 1897 - ஆம் ஆண்டு இந்தியா வந்தார். 1898 ஆம் ஆண்டு காசியில் மத்திய இந்திய கல்லூரியைத் தொடங்கினார். சுயமரியாதையும் பண்டைய கோட்பாடுகளில் நம்பிக்கையும் பெருமையும் கொண்டதாக இருந்தது. எதிர்காலத்தில் நம்பிக்கை உடையதாகவும் இருந்தது. அம்மையார் உபநிடதங்களின் அறிவுச்சாரம் , கீதை , வீரகாவியங்கள் , புராணங்கள் , தரும சாத்திரங்கள் , ஸ்மிருதிகள் , கதைகள் மற்றும்
தொல் மரபுகள் ஆகியவற்றை இந்து , பௌத்த மதங்களிலிருந்து எடுத்து அதற்கு மிக எளிய உயர்ந்த விளக்கங்களை அளித்தார். இந்துக் கோட்பாடுகளான கருமவிளை , மறு பிறவி , ஆன்மாவின் அழியாத இயல்பு , பல்வேறு யோக நிலைகள் மற்றும் அவதாரங்கள் போன்றவற்றை மிக அற்புதமாக அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் விளக்கி இந்துக்களின் அகக் கண்களைத் திறந்தார். எனவே இந்து சமய மறுமலர்ச்சி இயக்கங்கள் அவருக்கு நன்றிகடன் பட்டனவாக இருக்க வேண்டும். இந்து சமயச் சடங்குகளுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் அம்மையார் முழு மனதான ஆதரவைக் காட்டினார். அறிவியல்
வளர்ச்சியால் ஏற்பட்ட மேல்நாட்டு பொருளியல் கோட்பாட்டை வன்மையாகக் கண்டித்தார். அதன் விளைவாக இந்து சமயத்தில் ஒரு விழிப்புணர்ச்சி தோன்றியதுடன் , மக்கள் அதை மிகுந்த ஊக்கத்துடன் பின்பற்றத் தலைப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான ஆங்கிலம் கற்ற நம் நாட்டு மக்களின் உள்ளத்தில் இந்து சமயத்தை மீண்டும் குடியேற வழிவகை செய்தார். இந்தியாவின் உடனடியாக தீர்க்க வேண்டிய பண்டைய கோட்பாடுகளின் துணையை நாடி தீர்த்து வைத்தார். 1898 ல் காசியில் மத்திய இந்து பள்ளியை நிறுவினார். இந்து சமயத்தை ஈட்டி முனையாக்கி அதற்கு ஒரு எதிர்காலத்தை உருவாக்கி
உறுதிப்படுத்தி மக்கள் உள்ளத்தில் அதை படியச் செய்ய ஆவன செய்தார். இந்து பள்ளி வளர்ச்சி அடைந்து நாளடைவில் கல்லூரியாகவும் பின்பு பல்கலைக் கழகமாக மாறியது. இந்திய அரசியல் அரங்கில் , இந்தியா சுதந்திரம் பெறுவதற்கும் சமுதாயச் சீர்திருத்தங்களைப் புகுத்துவதற்கும் இவர் ஆற்றிய தொண்டு இவரை பெரும் தலைவராக்கியது மட்டுமில்லாமல் உலகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் கருதும்படி செய்தது. பிரம்ம ஞான சபையின் கிளைகள் உலகெங்கும் உள்ளன. அவற்றின் மூலம் இந்தியாவின் ஆன்மிகச் சிறப்பு உலகெங்கும் பரவியது. கீழை நாட்டுச் சமயங்களான
இந்து சமயம் , பௌத்த சமயம் , போன்றவற்றில் பொதிந்துள்ள அறிவுக் கருவூலங்களின் மதிப்பை வெளிக்கொணர இச்சபை பெருந்தொண்டாற்றியது. இச்சபையின் ‘ மறைவியல் கல்விப் பள்ளி ' ( Esoteric School ) , இந்திய மறைவியலை ( Occultism ) இந்தியாவில் மட்டுமின்றி மேலை நாட்டிலும் மிகப் பிரசித்தமாக்கியது. இச்சபை கீழை நாட்டுச் சமய இலக்கியங்களை மேலை நாடுகளில் பரவியது. தொழில் பொருட்காட்சிகளைச் சீராக அமைத்தது. சுதேசி இயக்கம் , பால்ய விவாகத் தடை , மது விலக்கு அறசமயக் கல்வியை பள்ளியில் போதித்தல் , மகளிர் கல்வியைப் பரப்புதல் , எழுத்தறிவின்மையை
அகற்றுதல் மற்றும் பர்தா முறையை ஒழித்தல் போன்ற அரும்பணிகளை இந்த இயக்கம் செய்து வந்தது. இதனுடைய கல்வி நிறுவனங்கள் இந்தியப் பண்பாட்டையும் , கலைகளையும் பரப்பும் மையங்களாகத் திகழ்ந்தன. கீழை 304 நாடுகளிலும் மேலை நாடுகளிலும் நிற வேறுபாட்டால் மக்களிடையே வெறுப்புணர்வு கொழுந்து விட்டு எரிந்தபோது அதைத் தணித்து உலகில் எல்லோரும் உடன்பிறந்தோரே என்ற கோட்பாட்டை உணரச் செய்த சமத்துவத்தை நிலை நாட்ட முயன்றது. இவ்வியக்கம் ஒரு சமயமாகவோ , சாதீய இயக்கமாகவோ அல்லது தனிப்பிரிவை சார்ந்ததாகவோ அமைந்திருக்கவில்லை. மாறாக எல்லா சமயங்களும்
ஒரே உண்மையைப் போதிக்கின்றன என்பதே இவ்வியக்கத்தின் கருத்தாகும். பல்வேறு சமயங்களை சார்ந்தோர்கள் இச்சங்கத்தின் உறுப்பினர்கள் ஆனார்கள். இந்தியர்கள் குழந்தைகள் அல்லவென்றும் அவர்கள் பொறுப்புள்ள மனிதர் களென்றும் அவர்களுக்குச் சுதந்திரம் வழங்கப்படல் வேண்டும் என்பதும் அம்மையாரின் கருத்துகளாகும். இவ்வாறாக இச்சபை பலவழிகளிலும் இந்திய விடுதலைக்கும் , சமூக மறுமலர்ச்சிக்கும் , நாட்டுயர்விற்கும் இடையறாது பாடுபட்டு வந்தது. 10. 6. காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு வாழ்க நீ எம்மான் , இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமை
மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசத் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா ! நீ வாழ்க ! வாழ்க. என மகாகவி பாரதியாரால் பாராட்டப்பட்ட மகாத்மா காந்தியைப் பற்றி நாம் அறிவது மிகச் சிறந்ததாகும். அடிமைகளாய் , கோழைகளாய் , ஏழைகளாய் ஆங்கில ஆட்சியில் அவதியுற்று , அல்லல்பட்டு எவ்வுரிமையின்றி இருளில் வாழ்ந்தோம். இந்திய மக்களை இருளினின்றும் , வெளிச்சத்துக்கு கொணர ஓயாது உழைத்தவர். அகிம்சை வழிநின்று , விடுதலை பெற்றுத் தந்த மகான். 305 அன்பு நெறியைப் போதித்த உலக உத்தமர்கள் வரிசையிலே , உயர்வான இடத்தைப்
பெற்றவர் காந்தியடிகள். தேசத் தந்தை என்று இந்தியரால் பாசத்தோடு அழைக்கப்படும் பண்பாளர். அவருடைய வாழ்க்கை , உண்மையானது , எளிமையானது , மனித இனத்துக்கும் மகத்தான பாடமாக என்றும் விளங்குவது ஆகும். இவர் 1869 -ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2 - ஆம் நாள் குஜராத்திலுள்ள போர்பந்தரில் பிறந்தார். காந்தி என்பது குடும்பப் பெயர். காபர் காந்தி என்று அழைக்கப்பட்ட கரம்சந்த் காந்திக்கும் , புத்திலிபாய் அம்மையாருக்கும் நான்காவது குழந்தையாகப் பிறந்தவரே ‘ மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ' என்பதாகும். 10.6.1. மகாத்மாவின் இளமைப்பருவம்
படிக்கும் காலத்தில் ஒருவருடைய கையெழுத்து தெளிவாகவும் , திருத்தமாகவும் இருக்க வேண்டும். அப்படிப் பழகிக் கொள்வது நல்லது. பள்ளிப் பருவத்தில் காந்தி தம் கையெழுத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தார். பிற்காலத்தில் அதற்காக அவர் வருந்தினார். ' நல்ல கையெழுத்தும் படிப்பிள் ஒரு பகுதியே’என்பதை அவர் மக்களுக்கு வலியுறுத்தி வந்தார். காந்தி பாடப் புத்தகங்களை அக்கறையோடு படித்து வந்ததோடு தந்தையாரிடமிருந்து புத்தகங்களையும் ஆர்வத்தோடு படித்து வந்தார். அவ்வாறு அவர் படித்த ஒரு நூல் ' சிரவணன் பிதிர் பக்தி நாடகம் '
என்பது. அந்நூலிலிருந்து பெற்றோர்களிடம் ஒரு பிள்ளை எந்த அளவிற்கு பயத்தோடும் , பக்தியோடும் , பண்போடும் , பாசத்தோடும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொண்டார். தம் இளமைப் பருவத்திலே காந்தியின் மனத்தை மிகவும் பாதித்த ஒரு நாடகம் ஹரிசந்திரன் ஆகும். அந்த நாடகத்தை அடிக்கடி பார்த்தார். தாமும் எந்த நிலையிலும் பொய்யே பேசக் கூடாது என்று தமக்குள் உறுதி செய்து கொண்டார். 306 சிறு வயதிலேயே எம்மதமும் சம்மதம் என்ற எண்ணம் அவர் நெஞ்சில் பதிந்துவிட்டது. காந்தியடிகள் தனது 13 - வது வயதில் கஸ்தூரிபாயை மணந்தார். அதன் பின்பு
தொடர்ந்து கல்வி பயின்றார். காந்தி உயர்கல்விக்காக இங்கிலாந்து செல்ல விரும்பினார். ஆனால் , மிகவும் ஆசாரமாக இருந்த அவர் அன்னை அவரை அங்கு அனுப்ப விரும்பவில்லை. அங்கு சென்றால் அவர் பாழ்பட்டு விடுவார் எனக் கருதினார். ஆனால் காந்தி , தாம் இங்கிலாந்து சென்றால் மதுவையும் , மாமிசத்தையும் , பிற மாதினியையும் அறவே தொடமாட்டேன் என சத்திய வாக்கு அளித்தார். இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்பட்டார். வழக்கறிஞர் ( Barrister ) பட்டம் பெற்று இந்தியா திரும்பினார். காந்தியடிகள் சில காலம் ராஜ்கோட்டிலும் , பம்பாயிலும் வழக்கறிஞராகப்
பணியாற்றினார். பின்பு ஒரு இஸ்லாமிய நிறுவனம் சார்பாக தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு வெள்ளையர்கள் இந்தியர்களுக்கு இழைக்கும் இன்னல்களைக் கண்டு அமைதிப் போராட்டத்தை ஆரம்பித்தார். இதன் விளைவாக நீதிக்குப் புறம்பான சட்டங்கள் அங்கே அகற்றப்பட்டன. அங்கு வாழ்ந்த இந்திய மக்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டினார். அவர்கள் அச்சம் தவிர்த்து , தீமை எதிர்த்து உண்மையறிய உதவினார். தென்னாப்பிரிக்காவில் தாண்டவமாடிய நிறவெறிக் கொடுமையை அகற்ற மகாத்மா ஆற்றிய தொண்டு அளவிட்டுக் கூற முடியாது. 10.6.2. இந்திய விடுதலையும் மகாத்மாவும் 1914 -
ஆம் ஆண்டு காந்தி இந்தியாவிற்குத் திரும்பினார். அப்போது முதல் உலகப்போர் தொடங்கியது. ஆங்கிலேயர் மேல் கொண்ட நம்பிக்கையின் பால் இந்தியர்களை இப்போரில் ஈடுபட்டு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார். பின்பு 1918 - ஆம் ஆண்டு ஆங்கில அரசு இந்தியர்களுக்கு வேண்டிய சலுகைகளை அளிக்கவில்லை. பின்பு அரசு ரௌலட் சட்டத்தை மக்களுடைய விருப்பத்திற்கு எதிராக நிறைவேற்றியது. இதைக் கண்டு மகாத்மா காந்தி வேதனையுற்று மக்களை வேலை நிறுத்தம் செய்யச் சொன்னார். பஞ்சாபில் நிலைமை மிகச் சீர்கேடு அடைந்தது. 307 Page 176 of 201 போர்க்காலச் சட்டத்தை அரசு
பிரகடனப் படுத்தியது. ஜெனரல் டையர் அமிர்தசரசில் நிகழ்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமாக மகாத்மா காந்தி பிரிட்டானியாரிடமிருந்து நீதியையும் நேர்மையையும் சிறிதும் எதிர்பார்க்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார். இந்து - முஸ்லீம் ஒற்றுமையை உருவாக்க ஓர் இயக்கத்தை ஆரம்பித்தார். அதனால் நல்ல பலன் கிட்டியது. 1920 - ல் பாலகங்காதர திலகர் மறைவுக்குப் பிள் மகாத்மா காந்தி காங்கிரஸின் தலைமையை ஏற்றார். இவர் , பின்னர் பல முறை நாட்டு நலன் கருதிப் பல போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறை சென்றார். இவர் இரண்டாவது வட்ட மேஜை
மாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்து சென்று பிரிட்டானிய அரசின் போக்காலும் இந்தியா திரும்பினார். இந்நாட்டிற்குக் கத்தியின்றி இரத்தமின்றி 1947 - ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 - ஆம் நாள் விடுதலை பெற்றுத் தந்தார். விடுதலை பெற்றுத் தந்த இந்த உத்தமரை நாத்துராம் கோட்ஸே பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது ஜனவரி 30 - ஆம் நாள் 1948 - ல் சுட்டுக் கொன்றான். இவர் ' வெள்ளையனே வெளியேறு ' என்ற இயக்கம் , ஒத்துழையாமை இயக்கம் , சுதேசி இயக்கம் , உப்புச் சத்தியாகிரக இயக்கம் போன்ற பல்வேறு இயக்கங்களை நடத்தினார். இவரது பணிகள்
பல்வேறு துறைகளைத் தழுவியுள்ளதோடு ஒவ்வொரு துறைக்கும் புதிய கொள்கையையும் நடைமுறை நெறிகளையும் அளிந்துள்ளன. சபர்மதியில் ஓர் ஆசிரமத்தை நிறுவித் தமது கொள்கையையும் , கோட்பாடுகளையும் நடத்திக் காட்டி , அவை நடைமுறைக்கு ஒவ்வாத வெறும் வரட்டுத் தத்துவங்கள் அன்று நடைமுறை வாழ்வுக்கு உகந்தவை தாம் என நிரூபித்தார். மகாத்மா - சொல் விளக்கம் மகாத்மா என்பது ஆழ்ந்த பொருளுடையது. அது வெறும் மகான் எனும் பொருளில் மட்டும் அடங்கிக்கிடப்பதன்று. மகாத்மா என்பது பெரிய ஆத்மா என்னும் பொருளுடையது. கடவுள் பெரிய ஆத்மா செயற்கரிய செய்வது கடவுள்.
கடவுளருளால் செயற்கரிய செயல் செய்வோரும் மகாத்மா ஆவர். மகாத்மாக்கள் தமக்கென்று வாழாதவர். பிறர்க்கென்று வாழ்பவர். 308 மகாள் எனும் சொல்லுக்குப் பெரியவர் என்று பொருள். இஃது உலக வழக்கு. மகான்களால் நற்செயல் நிகழ்த்தல் கூரும். செயற்கரிய செய்தல் அரிது. மகாத்மா என்பதற்கு தமிழில் அடிகள் என்பதாகும். ஆன்ற ஒழுக்கத்திற் சிறந்த அறவோரை அடிகள் என்று சொல்வது தமிழ் வழக்கு , கவுந்தி அடிகள் , இளங்கோ அடிகள் , அறவண அடிகள் , வாதவூரடிகள். பட்டினத்தடிகள் என்றழைப்பது தமிழர் வழக்கு. மானிட இனத்துவ ஒற்றுமை “ உயிர்களிடத்தில் அன்பு வேணும்