text
stringlengths
11
513
வெளியே கடல்கடந்த நாடுகளிலெல்லாம் , இந்திய நாகரிகத்தோடு சென்று பரவியுள்ள இந்திய மொழி தமிழ்மொழியே என்பது உலகறிந்த உண்மை. வேதகாலத்திலேயே சமஸ்கிருதத்தில் கலந்த தமிழ்ச் சொற்கள் பலவாகும். 5.5.2. திருக்கோயில்கள் வானுயர்ந்து நின்று இந்நாட்டின் சமயப் பண்பாட்டு வளர்ச்சிகளை எடுத்துக்காட்டும் அழகிய சின்னங்கள் தமிழகத்தின் திருக்கோயில்களாகும். திருக்கோயில்கள் பண்டைக்காலத்தில் பண்பாட்டு மையங்களாகத் திகழ்ந்தன. கலைக் கூடங்களாகத் திகழந்தன. இவை உயர்ந்த கட்டட , சிற்ப , ஓவியக்கலைகள் நிறைந்து விளங்குவனவாக இருந்தன. பாண்டிய , பல்லவ
, சோழ மன்னர்கள் காலத்தில் இக்கலைகள் பெரிதும் போற்றப்பட்டன. எண்ணற்ற கோயில்கள் எழுந்தன. இவையனைத்தும் தமிழகம் இந்தியாவிற்கு வழங்கிய கொடை எனலாம். இதே அமைப்பில் வடஇந்தியாவில் பலகோயில்கள் எழுந்துள்ளதைக் காணலாம். தமிழகக் கலைப் பாரம்பரியம் உலகமே வியந்து பாராட்டும் வகையில் அமையப்பெற்றுள்ளது. சமய பௌத்த சமயங்களைச் சார்ந்த பள்ளிகளும் , கோயில்களும் , குடைவரைக் கோயில்களையும் தமிழகமெங்கும் காணமுடிகிறது. திருச்சி , தஞ்சை , திருவானைக்கா , சிதம்பரம் , மதுரை , திருச்செந்தூர் , தென்காசி , காஞ்சி , 94 சுசீந்தரம் , திருவரங்கம் ,
திருக்கழுக்குன்றம் , குடந்தை , கன்னியாகுமரி , இராமேஸ்வரம் போன்ற இடங்களில் மிகச்சிறப்பு வாய்ந்த இந்து சமயத்திருக்கோயில்களைக் காணலாம். 5.5.2.1. கோயில்களின் சிறப்பு கோயில்களில் மனிதனை விலங்கு நிலையிலிருந்து உயர்த்தி மனித நிலைக்கு மேலும் தெய்வ நிலைக்கும் உயர்த்தப் பல அரிய கருத்துகளை கேட்டு பயன்பெற சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன. தமிழர் பண்பாட்டை விளக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று கோயில்கள் பண்பாட்டு மையங்களாகத் திகழ்ந்தன. மக்கள் தன் நிலையில் உயர மக்கள் பணி செய்ய , தியாக உணர்வு பெற பக்தியும் , அன்பும் அவசியம் என
உணர்ந்தனர். சிறந்த வழிபாட்டுமுறை , ஆகமங்களின் சாரமான மந்திரவழிபாடு கொண்ட கோயில்கள் பக்தியின் பிறப்பிடமாகத் திகழ்ந்தன. கடவுள் இருக்குமிடத்தை மோட்சம் , வைகுண்டம் , சிவலோகம் , வீடுபேறு எனும் வார்த்தைகளால் உணர்த்தினர். சங்கத்தமிழ் அன்புள்ளம் கொண்டவர் உள்ளம் , ஏழையின் சிறிப்பு இவற்றில் இறைவன் இருப்பதாக எண்ணி வாழ்ந்தனர். அவ்விடத்தை கோயிலாகக் கொண்டு சிறப்பித்தனர். வயது என்பது உயிரோடு கூடிய உடலுக்கு உண்டு என்றும் ஆன்மாவிற்கு இல்லை. ஆன்மா தான் எதிலிருந்து வந்ததோ அதிலே சேர முயன்று வருதலை ' லயமாகுதல் ' என்பர்.
இவ்விடங்கள் பெரும்பாலும் கோயிலாகவே இருந்தன. ஆதலால் கோயில்கள் , ஆன்மா லயமாகுமிடங்களாக இருந்தன எனவே கோயில்களை ஆலயங்கள் எனவும் அழைத்தனர். கோயில்களில் கலைகள் வளர்ந்து சிறந்ததாலும் மக்கள் அவற்றைக் கண்டு மகிழந்ததாலும் கோயில்கள் நுண்கலைகள் வளருகின்ற இடமாகத் திகழ்கின்றன. தேவார , திருவாசகப் பாடல்கள் , சிவன் கோயில்களில் பாடப்பெற்றன. பெரியோர்களுக்கும் குழந்தைகளுக்கும் போதிக்கப்பட்டன. கோயில்கள் திருமுறைகள் வளருமிடமாக இருந்தன. மழை , புயல் , வெள்ளம் போன்ற காலங்களில் மக்களுக்குப் புகலிடமாகத் திகழ்ந்தவை திருக்கோயில்களாகும்.
மேலும் திருமணம் , விழாக்கள் போன்றவை கோயில்களின் மண்டபங்களில் நடைபெற்று வந்தன. எனவே கோயில்கள் சமுதாய புகலிடமாகவும் , ஊர்ப்பணி மன்றங்களாகவும் இருந்தன என அறியமுடிகிறது. தமிழர் வாழ்வு கோயிலோடு இணைந்ததாகவே அமைந்தது. ஔவையாரும் , ' ஆலயம் தொழுவது சாலவும் நன்று ’ என்றார். ‘ கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் ' என்பது பழமொழி. இக்கோயில்கள் மூலம் ஆன்மிகம் வளர்ந்தது. மக்களிடையே ஒற்றுமை ஓங்கி மனித நேயம் மலருமிடமாகத்திருக்கோயில்கள் திகழ்ந்தன என்பதை அறிகிறோம். 5.5.3. சிற்பம் தமிழ்நாட்டின் திருக்கோயில்கள் சிறபக்கலைக்கு
எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. இறைவன் இறைவி திருமேனிகள் , தூண்களில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்கள் , கோபுரங்களில் அமைக்கப்பட்டுள்ள சுதை வேலைச் சிற்பங்கள் இவை அற்புதமாக வடிவமைக்கப்பட்டவை. புராண இதிகாசக் கதைக் காட்சிகளை விளக்கும் வண்ணம் அமைந்துள்ளன. பஞ்ச உலோகங்களால் வடிவமைக்கப்பட்ட இறைவன் திருமேனிகள் இன்றும் தமிழ்நாட்டில் வடிவமைக்கப்பட்டு உலகின் பல நாடுகளுக்கும் அனுப்பப் படுவதைக் காணும்போது பண்டைத் தமிழர் சிற்பக்கலை நுணுக்கங்களை வருங்காலச் சந்ததியினருக்கு விட்டுச் சென்றுள்ள பொக்கிஷமாகும். 5.5.4. ஓவியம் மொழி
தோன்றுவதற்கு முன்பே ஓவியம் தோன்றியது எனலாம். ஓவிய எழுத்துக்கள் இன்றும் மொழி எழுத்துகளாகப் பயன்படுத்தப்படுவதை ஜப்பான் , சீன மொழிகளில் காணலாம். ஓவியங்களை பண்டைத் தமிழர்கள் கற்களில் வடித்தும் , கோயில்களில் வரைந்தும் வளர்த்தனர். வண்ணம் தீட்டப்பெற்ற ஓவியங்கள் கோயில் சுவற்றிலும் மேல் கூரை விதானங்களிலும் 96 வரைந்தனர். இதிகாச , புராணக்காட்சிகள் இதன் மூலம் விளக்கப்பட்டன. தஞ்சைப் பெரிய கோயிலில் இராசராச சோழனின் வரலாற்று நாடகக் காட்சிகள் இன்றும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இவ்வண்ணக் கலவைகள் காலவெள்ளத்தால் அழியா
வண்ணமும் , மாறா வண்ணமும் தீட்டப்பெற்றிருக்கும் விந்தை இன்றும் போற்றுதற்குரியது. 5.5. 5. நாட்டியம் பண்டைத் தமிழர்கள் நாட்டியக் கலையில் சிறந்து விளங்கினர். நாட்டியம் என்பது இசையோடு கூடிய கூத்து ஆகும். சிலப்பதிகாரம் கூத்து வகைகள் பற்றி இயம்புகிறது. கட்புலனாகும் இன்பத்தைத் தருவது ஆடற்கலை. உடல் சோர்வு , மனச்சோர்வையும் நீக்கும் வடிகால் ஆடலும் , பாடலும் என்றால் மிகையாகாது. பண்டைக்காலத்தே ஆடல் நிகழ்வதற்கு அரங்குகள் இருந்தன. மரநிழல்களிலும் தெருக்களிலும் , கோயில் முற்றத்திலும் , மாடமாளிகைகளிலும் , மண்டபங்களிலும்
மகளிர் சிலம்பொலிக்க ஆடினர். “ கை வழிக்கண்களும் கண்வழி மனமும் செல்ல ஆடுதலே ” ஆடலின் நுட்பமாகும். ஆடவல்ல நடனமகள் ‘ விறலி ’ என்றழைக்கப்பட்டாள். நடன மகன் ‘ கூத்தன் ' என்றழைக்கப்பட்டான். வள்ளிக் கூத்து , முருகனை வழிபட்டு ஆடும் ‘ குன்றக்குரவை ,? திருமாலை வழிப்பட்டு ஆடும். ‘ ஆய்ச்சியர் குரவை ’ பெண்கள் கைகோத்தாடும் குரவைக் கூத்து துணுங்கைக் கூத்து , குணலைக் கூத்து போன்றவை இலக்கியங்களில் காணப்படும் கூத்து வகைகளாகும். சிவள் ஆடுகின்ற கூத்து ' தாண்டவம் ' எனப்படும். சைவப்பெருமக்கள் தன் இறைவனை ஆடும் கடவுளாக , அம்பலக்
கூத்தனாக , ஆடல் வல்லானாக நடராசனாகப் போற்றி வணங்கினர். வைணவப் பெருமக்களும் திருமாலைக் குழலூதிக் கோபியருடன் ஆடும் கண்ணனாகப் போற்றினர். தமிழ் நாட்டுத் திருக்கோயில்களின் நடனமாந்தர்கள் பலர் நாட்டிய நிகழ்ச்சிகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். இவர்கள் இறைவனின் திருவிளையாடற் காட்சிகளை நாட்டியமாடி மக்களை பக்திப் பரவசப்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. இந்நடன மாந்தர்களின் நடனக்காட்சிகள் கோயில்களில் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டன. இவற்றிலிருந்தே இன்றைய பரத நாட்டியம் என்ற கலை தோன்றியது.
இறைவனையும் ஆடல் அரசனாகப் பார்த்தது. நம் தமிழர் சமுதாயம் காலைத் தூக்கி நின்றாடும் திருநடராசர் திருமேனி , நடனக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இந்தியப் பெருநாட்டிற்கு பரதக்கலை ஒரு சிறந்த கொடை என்றால் மிகையாகாது. 5. 5. 6. விழாக்கள் தமிழ் மக்கள் உழைப்பே செல்வமாக கொண்டு வாழ்ந்தனர். திரை கடலோடியும் திரவியம் தேடிப் பொருள் வளம் பெருக்கினர். மகிழ்ச்சி நிறைந்த மக்கள் வாழ்வில் விழாக்களுக்குப் பஞ்சமில்லை. தன் நிலத் தெய்வங்களை வணங்கி விழாக்கள் செய்தனர். உயிர்த்தொழிலாம் உழவுத்தொழில் செய்து மகிழ்ந்தனர். பயிர் வளர்வதற்கும்
மழைக்கும் காரணமான சூரியனை வணங்கி விழா வெடுத்தனர். சர்க்கரை பொங்கலிட்டு , கரும்பு வைத்துப் படையல் செய்து சூரியனை வழிபட்டனர். அத்திருநாளை தைமாதம் முதல்நாள் பொங்கல் திருநாளாகக் கொண்டாடினர். உழவுக்கும் தொழிலுக்கும் உதவிய கால்நடைகளுக்கு நன்றி பாராட்டும் விழாவாக மறுநாள் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடினர். அன்பு பாராட்டி உதவிய உறவுக்கும் நட்புக்கும் விருந்து வைத்து காணும் பொங்கல் விழாவெடுத்தனர். இவ்வாறு பொங்கல் திருநாள் தமிழர் திருநாளாக இன்றும் விளங்குவதைக் காணலாம். மேலும் இந்நாளில் “ மஞ்சுவிரட்டு , விற்போர் -
மற்போர் , வாள்போர் ” போன்ற வீர விளையாட்டுக்களை விளையாடி மகிழ்வர் தொழில் செழிக்க உதவிய காவரியாற்றுக்கு விழா எடுத்தனர். ஆடிமாதம் 18 - ஆம் நாள் ஆடிப்பெருக்காக கொண்டாடி நாடும் வீடும் சிறக்க மேலும் அருளுமாறு வேண்டி வழிபட்டனர். இத்தமிழர் பொங்கல் விழாவே வடக்கில் மகர சங்கராந்தியாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய பெருநாட்டுக்குத் தமிழர் வழிபாட்டுமுறையிலும் வழிகாட்டியாக இருந்தனர். 98 5.5.7. கிராமிய விளையாட்டு பண்டைத் தமிழருடைய வீரமும் விளையாட்டும் இணைந்தே இருந்தன. மற்போரும் , விற்போரும் , வீர விளையாட்டாகவே
இருந்திருக்கிறது. இது தவிர பெண் குழந்தைகளுக்கு அம்மானை , ஊசல் போன்றவையும் ஆண் குழந்தைகளுக்கு சிற்றில் , சிறுபறை , சிறுதேர் போன்றவை விளையாட்டாக இருந்தமை அறிய முடிகிறது. தமிழர் கூடிச் சேர்ந்து விளையாடும் விளையாட்டுக்கள் மூலம் ஒற்றுமை உணர்ச்சியும் , சேர்ந்து வாழும் ஆர்வமும் பெருகி நாட்டுப்பற்றையும் மொழிப்பற்றையும் வளர்த்தது எனலாம். 5.5.7.1. ஜல்லிக்கட்டு பண்டைத் தமிழரின் வீரவிளையாட்டில் ஜல்லிக்கட்டும் ஒன்று. இதை அக்காலத்து ‘ ஏறுதழுவல் ’ என்பர். அடக்கமுடியாத காளைகளை அடக்கிப் பரிசாகப் பெண்களை மணப்பர். பண்டைத்
தமிழர். இவ்விழாவே தற்போதும் காணும் பொங்கலன்று ஜல்லிக்கட்டாக நடைபெறுகிறது. 5.5.7.2. இந்திர விழா மருத நிலக்கடவுள் - இந்திரன். இந்திரளை வழிபட்ட மக்கள் இந்திரன் கேளிக்கைகளில் மகிழ்ந்திருப்பதைப் போலவே தாங்களும் , மகிழ்ந்திருக்க விரும்பி , வசந்த காலத்தின் - முழு நிலா நாளை இந்திர விழாவாகக் கொண்டாடி மகிழ்வர். இவ்விழா முன்னும் பின்னுமாக 5 , 6 நாட்கள் நடைபெறும். மக்கள் கேளிக்கைகளிலும் வீர விளையாட்டுக்களில் மகிழ்ந்திருப்பதையே விரும்புவர். பொருள் படைத்தோர் , உணவும் , பொருளும் அளித்து மகிழ்வர். பல மேடைகளில் இசையும் ,
கூத்தும் நடைபெறும். இவ்விழா சங்ககாலத்தில் சிறந்திருந்தது என்பதை சிலப்பதிகாரம் மூலம் அறிகிறோம். 5.5.8. பிற கொடைகள் 5.5.8.1. திருக்குறள் : உலகப்பொதுமறையாம் திருக்குறள் தமிழர்களின் கொடையாகும். மருத்துவம் : சித்த மருத்துவம் என்னும் மூலிகை மருத்துவத்தை உலகிற்கு வழங்கியவர்கள் தமிழர்கள். இசை : தமிழிசை தமிழர்களின் பண்பட்ட உணர்விற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். கப்பல் கட்டுமானம் : பன்னெடுங்காலத்திற்கு முன்னரே கப்பல் கட்டுமானத்தையும் , தொழில் நுட்பத்தையும் அறிந்திருந்தனர். தமிழர்கள் கப்பல் போக்குவரத்து தமிழர்கள் கண்ட
தொழில் நுட்பமாகும். விருந்தோம்பல் : பழந்தமிழர் விருந்தினரை வரவேற்று உபசரிப்பதில் பெருமகிழ்ச்சி அடைந்தனர். நட்பு : பழந்தமிழர் நட்பினை உயிரினும் மேலானதாய் மதித்துப் போற்றினர். உணர்ச்சியொத்து பழகுதலே நட்பு என்றனர். காதல் : தமிழர் காதல் என்னும் சொல்லை அன்பு செலுத்துதல் முதலாய பல நிலைகளில் பயன்படுத்தினர். வீரம் : பண்டைத் தமிழரின் வாழ்வு முறையே அவர்களது வீரம் செறிந்த வாழ்வு முறை எனலாம். மானம் : “ மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் ” என்று தமிழர்கள் மானத்தை உயிரினும் மேலானதாய் போற்றினர்.. கற்பு : கடவுள் நெறிக்கு
மேலானதாய் பெண்கள் கற்பு நெறியில் வாழ்ந்து அழியாப் புகழ் பெற்றனர். இக்கற்புடைமை தமிழரின் உயரிய ஒழுக்க நெறியாம். இவற்றை நோக்கும்போது பண்டைத் தமிழர் , இந்தியப் பெருநாட்டிற்கு வழங்கிய அளவற்ற பண்பாட்டுக் கொடை பற்றி அறிய முடிகிறது. 5.1 , பயிற்சி வினாக்கள் அ. ஓரிரு வரிகளில் விடையளி 1 திராவிட மொழிகள் யாவை ? 2. தமிழர் பண்பாட்டின் சிகரமாய் எதனைக் கூறலாம் ? 3. பண்டைத் தமிழரின் பண்பாட்டை அறிய உதவுவன யாவை ? 4. தமிழரின் அகவாழ்வு எவ்வகையில் அமைந்தது ? 5. ஐந்திணை ஒழுக்கத்தின் தலைமக்கள் யாவர் ? 6. மனைமாட்சியை வள்ளுவர்
எவ்வாறு சிறப்பிக்கிறார் ? 7. பண்டைத் தமிழரின் வீரத்தை எவற்றில் அறியலாம் ? 8. நால்வகைப் படைகளாக கூறப்படுவன யாவை ? 9. சங்ககாலத்தில் போர் எம்முறையில் நடைபெற்றது ? 10. தொல்காப்பியம் கூறும் புறத்திணைகள் யாவை ? 11. விருந்தாவது யாது ? 12 அமிழ்தமேயாயினும் வேண்டுவதில்லை எப்போது ? ஆ. ஒரு பத்தி அளவில் அல்லது பத்து வரிகளுக்கு மிகாமல் விடையளி 1 சங்க இலக்கியங்களால் அறியப்படும் செய்திகள் யாவை ? 2 தமிழர் பண்பாட்டின் சிறப்புக் கூறாகிய மணவாழ்க்கை பற்றிக் கூறுக. 3. அகவாழ்வின் பாத்திரங்களாக படைக்கப்பட்டோராய் இலக்கியங்கள் கூறுவன
யாவை ? 4. சங்க காலத் தமிழின் அறப்போர் முறையை விவரி. 5. எவர் மீது படைக்கலம் செலுத்தக் கூடாதென புறநானூறு கூறுகிறது ? 6. சங்க காலத்தில் ‘ நட்பின் ' மேன்மையைச் சான்றால் விளக்குக. 101 6. இந்தியப் பண்பாட்டிற்கு சமயங்களின் கொடை உலக மனிதர்கள் அனைவரும் துன்பத்தை நீக்கி இன்பத்தை அடைய விரும்புகின்றனர். அவ்வின்பமும் நீடித்து நிலைத்து இருக்கவேண்டும் என்று மேலும் விரும்புகின்றனர். ஆனால் உலக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் சிறிதுகாலம் இன்பத்தையும் சிறிதுகாலம் துன்பத்தையும் மாறிமாறி அனுபவித்து வருவதைக் காண்கிறோம். உலகப்
பொருள்கள் வழியாக மக்கள் அனுபவிக்கும் இன்பம் சிற்றின்பம் எனப்படும். வீடு , வாசல் , மனைவி மக்கள் சொத்து , சுகம் என்பனயாவும் இச்சிற்றின்பத்தையே தரவல்லன. உலகப்பொருள்கள் அனைத்தும் அழியும் தன்மை உடையவை ஆதலால் சிற்றின்பமும் நிலைபெற்று நில்லாமல் அழிந்துவிடுகிறது. உலகில் அழியாமல் நிலைபெற்று நின்று இடையறாமல் அனுபவிக்கத் தகுந்த இன்பம் உள்ளது. அவ்வின்பம் பேரின்பம் எனப்படும் பெருவாழ்வு. இப்பேரின்பப் பெருவாழ்வை மக்கள் அனுபவிக்க பெரியோர்கள் இறைவனது அருளோடு வகுத்த வழியே சமயங்களாகும் இச்சமயங்களில் இந்து சமயம் , சமண , பௌத்த
சமயங்களின் தோற்றம் , கோட்பாடுகள் , மற்றும் அவற்றின் பண்பாட்டுக் கூறுகளை விரிவாக இப்பாடத்தில் காணலாம். 6.1 , இந்து சமயம் ஆரியர்கள் சிந்துநதி தீரத்தில் வசித்துவந்தபோது அவர்களை ‘ சிந்துக்கள் ’ அல்லது ‘ இந்துக்கள் ' எனப் பாரசீகரும் , கிரேக்கரும் அழைத்துவந்தனர். அவர்கள் பின்பற்றிய சமயமே இந்து சமயம் என்று சில சரித்திர ஆசிரியர்கள் கூறிகின்றனர். இந்திய நாட்டினரின் மதமே இந்து மதம் எனப்பொருள் கூறுவாரும் உண்டு. ஒரு நாட்டின் பெயராலோ , ஒரு ஆற்றின் பெயராலோ நமது ஒப்புயர்வற்ற மதம் ஏற்பட்டது என்பது பொருத்தமற்றது. ஆதலால் இதன்
உண்மைப்பொருளை அறிய வேண்டுவது அவசியமாயிற்று. இந்து மதம் என்னும் பெயர் அதன் கொள்கையை மேற்கொண்டுவந்ததாகும். இந்து அல்லது ஹிந்து என்ற சொல்லை ஹிம் + து எனப் பிரிக்கலாம். ஹிம் - ஹிம்சையில் , து - துக்கிப்பவன் எனப் பொருள் படும். ஓர் உயிர் எந்த காரணத்தினாலாவது வருந்துவதாக இருந்தால் , அத்துயரத்தை தனக்கு ஏற்பட்ட துயரமாகக் கருதி அகற்ற முன்வர வேண்டும். அத்தகையவனே இந்து ஆவான். அப்பண்புமிக்க மக்களை கொண்ட மதமே இந்து மதமாகும். அன்பே கடவுள். இறைவன் எல்லா உயிர்களிடத்தும் நீங்காமல் வாழ்கிறாள். எல்லா உயிர்களின் உடம்பையே அவன்
கோயிலாக கொண்டுள்ளான். ஆதலால் எந்த உயிரின் உடலுக்கும் துன்பம் நேராவண்ணம் அவைகளிடம் அன்பு செலுத்தினால் அருள் வடிவமாகிய ஆண்டவனது அருள் பெறலாம். இதனை திருமூலர் தம் திருமந்திரத்தில் , “ அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே ” - என்கிறார். 6.1.1. சனாதன தர்மம் இந்து மதம் என்பதற்கு “ சனாதன தர்மம் ” என வேறு ஒரு பெயர் கூறுவாரும் உண்டு. இதற்கு அழிவில்லாத அறம் என்பது பொருள். மேலும் இந்து சமயம் முறையே திருநெறி , அருள்நெறி தெவநெறி
, மெயந்நெறி , சன்மார்க்கம் என்ற பல பெயர்களைக் கொண்டது. சமயம் என்பதற்கு ‘ சமை ’ என்பது பகுதியாய் உடம்பை வளர்ப்பதற்கு உணவுப் பொருளைச் சமைப்பது போல இறைவனை அடைவதற்கு பக்குவப்படுத்துவது இதன் பொருளாகும். 110 6.1.2. இந்து சமயப் பெருமைகள் இந்து சமயம் காலத்தால் மிகவும் தொன்மையானது. அது ஒருகாலத்தில் உலகெங்கும் பரவியிருந்தது என்பதை தற்கால நவீன புதைபொருள் ஆராய்ச்சி முதலியவற்றால் அறியலாம். பிற சமயங்கள் கூறும் கொள்கைகள் பல நமது இந்து சமயத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளன. ஆதலால் உலகில் உள்ள எல்லா மதங்களுக்கும் தாய்ச் சமயமாக
இந்து சமயம் உள்ளது எனலாம். இந்து சமயம் பிற சமயங்களை இழிவுபடுத்தாமல் அவற்றின் கோட்பாடுகளை மதித்து அரவணைத்துச் செல்கிறது. பிற மதங்கள் தங்கள் மதமே உயர்ந்தது என பிரசாரம் செய்த போதும் அது பற்றி அஞ்சாமல் தன் நிலையில் இருந்து தாழாமல் உயர்ந்து விளங்குகிறது. இந்து சமயம் வெறும் நம்பிக்கை உணர்வோடு நின்றுவிடாமல் ஒவ்வொரு கொள்கையையும் ஆராய்ந்து சந்தேகங்களை அகற்றி அறிவினைப் புகட்டுவது. மனித உணர்வுகளைக் கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்தாமல் சுதந்திரமாய் வாழும் உரிமையை அளிப்பதும் இந்து சமயத்தின் சிறப்பான அம்சம் ஆகும்.
இல்லறத்தாரும் துறவறத்தாரும் நல்வாழ்வின் வாயிலாக முக்தி பெறலாம் என்னும் உண்மையை உலகறியச் செய்கிறது. உலக வாழ்க்கையோடு சமய வாழ்க்கையையும் இணைத்து நற்கதி அடையச் செய்வது இதன் தனிச் சிறப்பு. முக்தி பெறுவதற்கான வழி முறைகளை மக்களின் வயது. அறிவு முதிர்ச்சிக்கு ஏற்ப எளிதாக்கி பின்பற்றச் செய்வதும் சீரிய கூறாகும். மக்கள் செய்த நல்வினை தீவினைகளுக்குத் தகுந்தவாறு மறுபிறப்பு உண்டு என்பதை வலியுறுத்தி , மக்களின் இன்ப , துன்ப வாழ்வுக்குக் காரணம் அவையே என்பதை விளக்குவது. சில மதங்கள் அறிவியலுக்கு பொருத்தமற்ற கொள்கைகளை உடையனவாய்
இருக்க. இந்து மதம் விஞ்ஞானத்தாலும் உணர முடியாத மெய்ப்பொருளை தனது மெய்ஞ்ஞானத்தால் இனிதாக இயம்புகிறது. இத்தகைய பெருமைகளை வேற்று நாட்டுப் பெருமக்களின் கூட்டங்களில் “ சுவாமி விவேகாளந்தர் " போன்ற இந்துமத ஞானிகள் எடுத்தியம்பியுள்ளனர். அவற்றைக் கேட்ட பல மேலை நாட்டு அறிஞர்களும் , பத்திரிகைகளும் இந்து மதத்தை பெருமைப்படுத்தி பேசியும் எழுதியும் பாராட்டியுள்ளனர். இத்தகைய சீரும் சிறப்பும் மிக்க சமய பெருமைகளை நாம் அறிவதுடன் பிறர் அறியும் வண்ணம் விளக்கிக் கூறி நற்பணியாற்ற வேண்டும். 6.1.3. அறுவகைச் சமயங்கள் இந்து சமயம்
முறையே சைவம் , வைணவம் காணாபத்யம் , கௌமாரம் , சாக்தம் , சௌரம் என்று ஆறுவகையாகப் பகுத்துக் கூறப்படுகிறது. திருமூலர் இதனை " ஒன்றது பேரூர் வழி ஆறு அதற்குள ” என்று கூறுகிறார். சைவம் : சிவ பெருமானை முழுமுதற் கடவுளாக ஏற்றுக்கொண்ட சமயம் ' சைவம் ' எனப்பட்டது. சைவத்தில் பதி , பசு , பாசம் என்னும் முப்பொருள் உண்மை மிகவும் விளக்கமாய் கூறப்படுகிறது. இவற்றை இறைவன் உயிர் , தளை எனவும் கூறுவர். பசு - இதனை உயிர் எனவும் ஆன்மா எனவும் கூறுவர். உலகில் எண்ணிலா உயிர்கள் உள. பசுவாகிய உயிர் பாசத்தை விட்டு நீங்கினால் வீடு பேற்றை
அடையலாம் என்ற கோட்பாட்டை விளக்குகிறது. வைணவம் : விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயம் வைணமாகும். இது வடகலை , தென்கலை என இருவகைப்படும். வட கலையார் வட மொழியில் உள்ள வேத சாத்திரங்களுக்கு முதலிடம் கொடுப்பர். தென் கலையார் தமிழ் மொழியில் உள்ள ஆழ்வார்களால் அருளப்பெற்ற பிரபந்தங்களுக்கு ஏற்றும் தருவர். 112 காணாபத்யம் : “ கணபதியே முழுமுதற்பரம் பொருள் ". ஓங்கார வடிவினனாக அவரை வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையது காணாபத்யம். இதனை கணாபத்யம் எனவும் வழங்குவர். கௌமாரம் : குமாரனாகிய முருகனே கடவுள். பேரின்ப
வடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையது. சாக்தம் : சக்தியை வழிபடு கடவுளாகக் கொள்ளும் சமயமே சாக்தம் ஆகும். சக்தி வழிபாடு - சக்தியே தெய்வம். அவரைத் தாயாக வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையது. சௌரம் : சூரியனை வழிபடுகடவுளாகக் கொள்வது சௌர சமயமாகும். பேரொளி வடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்று கூறுவது இச்சமயமாகும். சிவஞான சித்தியார் , “ அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய் ” கடவுள் இயங்குகிறார் என இயம்புகிறது. இதன் அடையாளமாகவே நமது சிவ ஆலயங்களில் கணபதி , முருகன் , சூரியன் , விஷ்ணு , அம்மையப்பர்
மற்றும் துர்க்கையம்மன் ஆகிய திருவுருவங்களை அமைத்து வழிபாடு செய்து வருகின்றோம். 6.1.4. இந்து சமய இலக்கியங்கள் ஒவ்வொரு சமயத்திற்கும் முக்கியமான சமய நூல் ஒவ்வொன்று உள்ளது. நமது இந்து சமயத்திற்கும் வேதம் , ஆகமம் , தோத்திரம் , சாத்திரம் , இதிகாசம் , புராணம் எனப் பல நூல்கள் உள்ளன. வேதங்கள் : தெய்விகமான கருத்துகளைத் தன்னுள் அடக்கி மறைத்து வைத்திருப்பதால் அது மறையெனப் பெயர் பெற்றது. வேதங்கள் நான்கு. வேதங்களைப் பற்றி விரிவாக முன்னரே பார்த்தோம். வேதங்களை வியாசர் நான்காக வகுத்துள்ளார். வேதங்களோடு தொடர்புபடைய சம்ஹிதைகள்
, பிராம்மணங்கள் , ஆரண்யகங்கள் மற்றும் உபநிடதங்கள் இந்து சமய இலக்கியங்களாய் பெருமை சேர்க்கின்றன. ஆகமங்கள் : இவை மொத்தம் இருபத்தெட்டு என்பர். ஆகமம் என்றால் ஆன்மாக்களின் பாசங்களை நீக்கி வீடுபேற்றை அருளுதல் எனலாம். தோத்திரம் : பன்னிரு திருமுறைகள் : திருமுறை என்பதற்கு தம்மை அடைந்தவர்களை சிவமேயாக்குகின்ற முறையெனப் பொருள் கூறுவர். சைவத் திரு முறைகள் பன்னிரண்டு. திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் முதல் மூன்று திருமுறைகளாகும். ( திருக்கடைக்காப்பு ) திருநாவுக்கரசர் அருளிய தேவாரம் நாள்கு , ஐந்து , ஆறு திருமுறைகளாகும். (
திருப்பாட்டு சுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம் ஏழாம் திருமுறையாகும். மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகம் , திருக்கோவையார் – எட்டாம் திருமுறை திருமாளிகைத் தேவர் முதலாய ஒன்பதின்மர் அருளிய திருவிசைப்பா , திருப்பல்லாண்டு - ஒன்பதாம் திருமுறையாகும். திரு மூலதேவநாயனார் ( திருமூலர் ) அருளிய திருமந்திரம் - பத்தாம் திருமுறை திருவாலவாயுடையார் , காரைக்காலம்மையார் முதலிய பன்னிருவர் அருளியவை - பதினொன்றாம் திருமுறை சேக்கிழார் சுவாமிகள் அருளிச் செய்த பெரிய புராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணம் - பன்னிரண்டாம்
திருமுறை நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : வ வைணவ சமயத்தில் , விஷ்ணுவை தமிழ்ப் பாமாலைகளால் வழிபட்ட பன்னிரு ஆழ்வார்கள் அருளிச் செய்தவை. அமிழ்தினும் இனிய தமிழினில் விளம்பிய இவர்களது பாசுரங்கள் தேன் போன்ற தெய்வீக உணர்வை ஊட்டுவன ஆகும். 114 சைவசித்தாந்த சாத்திரங்கள் : சாத்திரங்கள் 14 ஆகும். இவற்றை மெய் கண்ட சாத்திரங்கள் என்பர். இவற்றில் தலை சிறந்தது சிவஞான போதம். சிவம் என்றால் ஒப்பற்ற மெய்ப் பொருள். ஞானம் என்றால் அதனை அறிதல். போதம் என்றால் தெளிதல். எனவே சிவஞான போதம் என்றால் ஒப்பற்ற மெய்ப்பொருளாகிய கடவுளை அறிந்து
தெளிய உதவும் நூல் என்று பொருள் இது மெய் கண்ட தேவரால் அருளிச் செய்யப்பட்டது. இதனையடுத்து அருணந்தி சிவாசாரிய சுவாமிகளால் இயற்றப்பட்டது சிவஞான சித்தியார் என்பதாம். மேலும் உமாபதி சிவாசாரியாரால் எட்டு நூல்கள் எழுதப்பட்டன. மெய் கண்டார் , அருள் நந்தி , உமாபதி சிவம் ஆகிய சந்தனாச்சாரியார்கள் சைவ சித்தாந்தத்தை முறைப்படுத்தியவர் என்ற பெருமை படைத்தோராவர். இதிகாசங்கள் : இந்தியாவின் இரு ஒப்பற்ற வீர காவியங்கள் இராமாயணம் மற்றும் மஹாபாரதம் ஆகும். இதிகாசம் என்பதற்கு “ ஐதீகத்தை நிரூபணம் செய்யும் வரலாறு ” என்று பொருள். இராமாயண
காவியத்தை இயற்றியவர் வால்மீகி முளிவராவார். இதில் அரசநீதி , சத்ய பரிபாலனம். பிள்ளைகளின் கடமை , பெரியோர் வழிபாடு , கற்பின் மேன்மை ஆகிய உயரிய நெறிகள் விளக்கப்பட்டுள்ளன. பாரதத்தை இயற்றியவர் வியாச முனிவர். இதனை ஐந்தாம் வேதம் என்று சிறப்பித்துக் கூறுவர். இதில் இல்லாதது வேறு எங்கும் சொல்லப்படவில்லை என்ற சிறப்பினை உடையது. ஞானநூல்களில் தலைசிறந்த பகவத்கீதை இதனுள் அடங்கியுள்ளது. இவ்வாறு இதிகாசங்களும் தர்ம , அதர்ம போராட்டத்தில் தர்மமே முடிவில் வெற்றி பெறும் என்பதை நன்கு விளக்கியுள்ளன. புராணங்கள் : புராணம் என்பதற்கு
பழமையான வரலாறு என்பது பொருள் என்பதையும் புராணங்களை எழுதியவர் வேத வியாசர் என்பதையும் 115 இதனை உலகிற்கு அளித்தவர் சூதபுராணிகர் என்பதையும் அறிவோம். மேலும் மகாபுராணங்கள் பதினெட்டு என்றும் அவற்றால் உணர்த்தப்படும் உண்மைகளையும் அறிவோம். இத்தகைய இந்து சமய இலக்கியங்கள் அனைத்தும் வேதம் உணர்த்தும் “ ஸத்யம் வத ” , “ தர்மம் சர ” என்பதையே வலியுறுத்து கின்றன. இந்து சமயத்தவர் அனைவரும் இம்மேலான உண்மைகளைத் தம் வாழ்வில் கடைபிடித்து சீரிய வாழ்வை மேற்கொள்வோம். 6.1.5. இந்து சமயக் கோட்பாடுகள் இந்து சமயம் வலியுறுத்தும் சாதாரண அறக்
கோட்பாடுகள் தவிர முக்கியமாளவை இரண்டு ; 1 ) வேதாந்த நெறிகள் 2 ) பகவத் கீதையில் கூறப்படும் நான்கு யோகங்களாகிய மார்க்கங்கள். வேதாந்த நெறிகள் முறையே அத்வைதம் , விசிஷ்டாத் வைதம் , துவைதம் ஆகும். 6.1.5. 1. அத்வைதம் அத்வைதக் கோட்பாட்டை உலகிற்களித்தவர் சங்கரர். இவர் சுமார் 1200 ஆண்டுகளுக்குமுன் கேரளமாநிலத்தில் காலடி என்னும் ஊரில் அவதரித்தார். இளம் வயதிலேயே துறவியாகி வேதாந்தக் கருத்துகளில் கரைகண்டவராய் காஷ்மீரம் வரை கால்நடையாகவே சென்றார். சென்ற இடங்களில் எல்லாம் நமது உயரிய அத்வைதக் கருத்துகளை பரப்பினார். மடாலயங்களை
நிறுவினார். சமண , பௌத்த மதக் கொள்கைகளைக் கண்டித்து வாதாடி வெற்றி கண்டார். இவரது வெற்றியால் பழைய வேதாந்த நெறி மீண்டும் தழைத் தோங்கியது. அத்வைதக் கோட்பாடுகள் “ வேதாந்த மதம் ” என்றும் இதனைப் பின்பற்றுவோர் வேதாந்திகள் எனவும் கூறுவர். அத்வைதம் என்னும் சொல்லை அ + துவைதம் எனப் பிரிக்கலாம் அ = இல்லை , துவைதம் - இரண்டு. அத்வைதம் = 116 இரண்டற்ற ஒன்று ' அகம்பிர்மாஸ்மி ” - நான் பிரம்மமாய் இருக்கிறேன் என்பது. “ பிரம்மம் ” என்ற ஒரு பொருளே உண்மை , நிலையானது. ஜீவன்கள் அனைத்துமே பிரமம் ஆவர். இறைவனைப் பரமாத்மா என்றும்
உயிர்களை ஜீவாத்மா என்றும் ஒவ்வொரு ஜீவாத்மாவும் “ பரமாத்மா தான் ” என்பதே இவ் உயரிய கோட்பாடு ஆகும். நாம் காணும் உலகம் , கயிற்றில் காணும் பாம்பைப்போல் பொய்த் தோற்றப் பொருளாகும். ஒரே சூரியன் நீர்த் திவலைகள் பலவற்றில் பலவாகத் தோன்றுதல் போல ஒரு பிரமமே எல்லா உயிர்களிலும் நிலைத்துள்ளான். நம்மிடம் உள்ள அவித்தையால் ( பாசம் ) இப்பேரின்பத்தை உணர முடியாமல் இருக்கிறோம். அவித்தைக் கட்டுகள் அனைத்தும் விலகி ஞானம் தோன்றும் போது உண்மையான இன்பம் கிடைக்கும் என்கிறார். இந்நிலையில் பிரம்ம மயமாகி வீடுபேற்றை அடையலாம் என்றார். 6.1.5.
2. விசிஷ்டாத்வைதம் இவ்வேதாந்த நெறியை உலகிற்கு அளித்தவர் இராமானுஜர் ஆவார். இவர் செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் கி.பி. 1017 - ல் அவதரித்தார். தமது பதினைந்தாம் வயது வரை பீட்டிலேயே வேதாந்தத் தத்துவங்களை கற்றறிந்தார். பின்னர் ஸ்ரீரங்கம் சென்று பெரிய நம்பிகளைக் குருவாகக் கொண்டு மேலும் தம் தத்துவக் கோட்பாடுகளை அறிந்துகொண்டார். இல்லறத்தில் இருந்த இவர் தம் பதினெட்டாம் வயதில் துறவு மேற்கொண்டார். பிரம்ம சூத்திரம் பகவத் கீதை முதலியவற்றிற்கு தமது விசிஷ்டாத்வைதக் கொள்கைப்படி உரை எழுதினார். விசிஷ்ட +
அத்வைதம் = விசிஷ்டாத்வைதம். அத்வைதம் இரண்டற்ற ஒன்றாக உள்ளது. விசிஷ்டம் - விசேஷம். விசிஷ்டாத்வைதமானது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை என்றும் ஜீவாத்மா பரமாத்மாவிலிருந்து வெளிப்பட்டது என்றும் கூறுகிறது. சித்து , அசித்துச் சேர்க்கையால் விளங்கும் இரண்டற்றதான பிரம்மம் உண்டென்பதே உட்கருத்து. பிரம்மம் ஒருவரே. அவர் சத்து என்றும் பிரம்மம் என்றும் ஈஸ்வரன் என்றும் விஷ்ணு என்றும் பெயர் பெறுகிறார். அவர் 117 1. ஞான மார்க்கம் 2. இராஜ மார்க்கம் 3. கர்ம மார்க்கம் 4. பக்தி மார்க்கம் - என்பனவாம். இவை முறையே ஞானநெறி ,
இராஜநெறி , கர்மெநெறி மற்றும் பக்தி நெறி என்னும் யோகம் என்றும் போற்றப்படுகின்றன. 6.1.6.1. ஞான மார்க்கம் சித்து என்னும் ஆத்மாவுடனும் அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார். பரமாத்மாவே நிலையானவர். சுதந்திரம் உடையவர் சித்தும் அசித்தும் அவரைச் சார்ந்திருப்பவை. ஆசாரிய அன்பு , சுருதி , ஸ்மிருதி - நம்பிக்கை , மோட்ச விருப்பம் , உலக ஆசை அறுதல் , தரும சிந்தனை , வேத பாராயணம் , சாது சங்கமச் சேர்க்கை முதலானவற்றால் கர்மபந்தத்தை விட்டு முக்தி பெறலாம். 6.1.5,3. துவைதம் இந்நெறியை அல்லது சமயத்தைப் பரப்பியவர்
மத்துவர். இவர் துளுவ நாட்டில் உள்ள உடுப்பிக்கு அருகில் அநந்தேஸ்வரம் என்னும் கிராமத்தில் அவதரித்தார். தமது ஒன்பதாம் வயதில் அச்சுதபிரகாசரின் சீடராகி துறவு மேற்கொண்டார். துவைதம் : துவி என்றால் இரண்டு. பிரபஞ்சமும் , பரமாத்மாவும் வேறானவை. பரமாத்மா தனி , மற்றவை அதில் சேராதவை என்பதாம். பரமாத்மா , ஜீவாத்மா , ஜட உலகம் இவை எவராலும் உண்டாக்கப்படாத நித்தியப் பொருள்கள். உலகம் ஒரு தோற்றம் அன்று. சுதந்திரம் இறைவனுக்கு மட்டும் உண்டு. கர்மத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம். 6.1.6. கீதை உணர்த்தும் நான்கு மார்க்கங்கள் மனிதன்
தான் போகின்ற போக்கிலேயே தன்னை விட்டால் அவன் படிப்படியாக நிதானமாய் வளர்ச்சியடைவான். ஓர் அறிவு உயிரிலிருந்து ஆறறிவுள்ள மனிதனாக வளர்ந்த “ பரிணாம வளர்ச்சி ” யைக் காண்கிறோம். மேலும் ஒருபடி சென்று தெய்விகத் தன்மை அடையலாம். இப்படி காலத்தே வளர்ச்சி தானே நிகழும் என இருதலை “ எறும்பு வழி ” அல்லது பிப்பீலிகா மார்க்கம் என்பர். மாறாக மனிதன் தன் உடல் மூச்சு , மனம் அறிவு ஆகியவற்றை பயன்படுத்தி பெரு முயற்சி செய்து இறையருளைப் பெற்று விரைவில் தன்னை முன்னேற்றிக் கொள்வது “ விஹங்கம மார்க்கம் ” அல்லது “ பறக்கும் வழி ” எனப்படும்.
தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளும் மார்க்கங்கள் ( நெறிகள் ) முறையே , 118 கூர்மையான அறிவுடையவர்கள் நல்லதையும் கெட்டதையும் அறிந்து , என்றும் நிலைத்திருப்பதையும் , விரைவில் அழிந்து விடுவதையும் சிந்தித்து உணரும் ஆற்றல் உடையவர்கள். இவ் அறிவின் துணை கொண்டு சத்தியத்தையும் முழுமையான பரம்பொருளை தேடும் வழியே ‘ ஞானமார்க்கம் ’ எனப்படும். நல் அறிவிற்கு வழிகாட்டுவன முறையே வேதாந்தங்கள் , உபநிடதங்கள். பகவத்கீதை ஆகியனவும் , இரமணமகரிஷி , அரவிந்தர் , தாயுமானவர் மற்றும் திருமூலர் மற்றும் பல ஆன்றோர் ஆகியோரின் உபதேசங்களும் ஆகும்.
6.1.6.2. இராஜ மார்க்கம் மனிதன் சுய உணர்வுடன் உடம்பு , மூச்சு , மனம் இவற்றைக் கட்டுப்படுத்தி , ஒழுங்குபடுத்தி , தனக்குள்ளே ஒளிந்துகிடக்கும் சக்திகளைத் தூண்டி வெளிப்படுத்துவது ' ராஜயோகம் ’ எனப்படும் இதுவே இராஜமார்க்கம் எனப்படுகிறது. இதன் இறுதி இலட்சியம் மனதில் அல்லது உணர்வில் தோன்றும் அலைகளை அடக்குவது ஆகும். “ ஒம் ” என்ற பிரணவம் இங்கு வழிபடப்படுகின்றது. 6.1.6.3 கர்ம மார்க்கம் வாழ்க்கையில் மனிதன் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் இரண்டு விதமான பயன்கள் இருக்க வேண்டும். 1. அச்செயலினால் சமுதாயத்திற்கு லாபம் கிடைக்க
வேண்டும். 2. அச்செயல் அவனுடைய தெய்வ பக்தியை வளர்க்க வேண்டும். 119 இந்த இருவிதமான பயன்கள் உடையவையாக ஒவ்வொரு செயலையும் ஆக்கும் விதியைக் கர்ம நெறி என்ற பெயரில் பகவத் கீதை உணர்த்துகிறது. தொழில் வாழ்க்கை , புறவாழ்க்கை என்ற வெளி வாழ்க்கையையும் குளித்தல் , நடத்தல் , உண்ணுதல் , தானம் செய்தல் போன்ற சொந்த வாழ்க்கையின் செயல்கள் ஆகிய அனைத்துமே தனக்கு அக இன்பமும் சமுதாய நலமும் வளரும்படி செய்கின்றன. ஒரு மனிதன் தன் சொந்த வாழ்க்கையில் செய்கின்ற ஆசனம் , பிராணாயாமம் , தவம் , நன்னூலறிவு ஆகிய அனைத்தும் உலக நன்மைக்கும் உதவும்படி
எல்லோரும் இன்ப வாழ்வுவாழ கீதை வழி சொல்கின்றது. எனவே சமுதாயத்தின் அங்கத்தினராகிய ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளை முறையாகவும் திறமையாகவும் ஆற்றுவதை கர்மமார்க்கம் எனலாம். 6.16.4. பக்தி மார்க்கம் பரம்பொருள் மீது கொண்ட அன்பினால் மனிதன் அகந்தையை ஒழித்து , தன் சிறுமையைத் தவிர்த்து , உலகளாவிய உணர்வுள்ளவனாய் தியாகம் , அன்பு வாயலாக உயரிய நிலையை அடைவது பக்தி மார்க்கம். பக்தன் எதை நம்புகிறானோ அதுவாகவே தான் ஆகிவிடுகிறான் என்பது கீதையில் கண்ணன் கருத்து. இதை உணரும் விதம் நாம் பின்வருவனவற்றில் காணலாம். அடக்கமுடைய சரஸ்வதி போன்ற
தெய்வங்களை வணங்கும்போது பக்தனும் பணிவுடையுவன் ஆகிறான். பற்றற்ற சிவனாரை வணங்கும் போது பக்தனும் பற்றற்றவனாகிறான். அன்பு மிகுந்த கண்ணனை வணங்கும் போது தருமம் ஆகிய ஆறு நற்குணங்களைக் கொண்ட இறைவனை பக்திப்பரவசத்தால் வழிபடும்போது நாமும் அந்த ஆறு நற்குணங்களை உடையவராகிறோம். 6.1.7. இந்து சமய விழாக்கள் இறைவனது பரிபூரண அருள் பக்தனுக்கு கிடைக்கும் என்பதை நினைவூட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இவ்விழாக்கள் 120 மக்கள் மனதில் அன்பு , இரக்கம் , ஈகை , மனித நேயம் முதலான நற்புண்புகளை வளர்த்து ஆன்மிக அறிவைப் பெருக்கி வளமான
வாழ்க்கை வாழ உதவுகின்றன. இத்தகைய விழாக்கள் பல அவற்றுள் சில. 6.1.7.1. விநாயக சதுர்த்தி விழா விநாயகர் ஆதிமூலப் பொருள். அவரே ஓங்காரத்தின் வரிவடிவம். இறைவனிடத்திலிருந்து முதற் கண் தோன்றிய ஒலியே ஓங்காரமாகும். ஆதலின் அவரை அனைவரும் வழிபட்டு தம் குறைகளை களைந்து இன்புறுகின்றனர். அவருக்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் அமாவாசைக்குப் பின் வரும் நான்காம் நாள் சதுர்த்தி அன்று விழாக் கொண்டாடி மகிழ்கின்றனர். இவ்விழாவை எல்லா ஆலயங்களிலும் , ஆலயமில்லாத இடங்களிலும் , வீடுகளிலும் நடத்தி மகிழ்கின்றனர். ஆலயமில்லாத இடங்களில் தற்காலிகமாக
மஞ்சள் , சந்தனம் , பசுஞ்சாணம் , களிமண் முதலியவற்றால் உருவம் செய்து வழிபடுவர். இவற்றை விழா முடிந்தபின் நீரில் கரைத்துவிடுவர். வட இந்தியாவில் " கணேஷ் சதுர்த்தி ” என கொண்டாடப்படுகிறது. 6.1.7.2. நவராத்திரி விழா நவராத்திரி என்பதற்கு ஒன்பது இரவுகள் என்பது பொருள் புரட்டாசி மாத்தில் அமாவாசைக்குப் பின் வரும் ஒன்பது நாட்கள் இரவில் சர்வ வல்லமை பொருந்திய பராசக்தியைப் பல வடிவாக வழிபட்டு விழா நடத்தி வருகின்றனர். முதன் மூன்று நாட்கள் பார்வதி தேவியையும். நடு மூன்று நாட்கள் இலட்சுமி தேவியையும் இறுதி மூன்று நாட்களில் சரஸ்வதி
தேவியையும் முறையாக வழிபட்டு பத்தாம் நாள் விஜயதசமி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். வட நாட்டிலும் , தென் நாட்டிலும் உள்ள எல்லா கோயில்களிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பத்து இரவுகள் இவ்விழா நடந்து வருவதால் இதனை ‘ தசரா ’ எனவும் வழங்குகின்றனர். மகிடா சுரன் என்ற அரக்கனை அழித்து தேவர்களைக் காத்த பராசக்தியைக் கொண்டாடும் விழா வாகும். 6.1.7.3. தீபாவளி அரக்க குணம் படைத்த நரகாசுரனை வதம் செய்து நல்லவர்களைக் காத்தவர் திருமால். தன் சக்ராயுதத்தால் நரகாசுரனை அழித்து மக்களை காத்தருளினார். மேலும் இந்நாளை
மகிழ்வுடன் கொண்டாடும் விதத்தில் அன்று விடியலில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து இனிப்புகளை உண்டு மகிழ்வர். பட்டாசுக்களை வெடித்து சிறுவர் மகிழ்வர். வட இந்தியாவில் தீப ஒளித் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. 6.1.7.4. கத்தவிரத விழாக்கள் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய்த் திகழும் முருகப் பெருமானை நினைந்து தவம் இயற்றும் விழாக்கள் மூன்று. அவை வாரவிரதம் எனப்படும் வெள்ளிக்கிழமை விரதம். நட்சத்திர விரதம் எனப்படுவது மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகனை வழிபடுதல் , விரதம் இருத்தல். திதி விரதம் எனப்படும்
சஷ்டிதிதியன்று முருகனை வழிபட்டு மேற்கொள்ளும் விரதம். இம்மூன்று விழாக்களுமே சூரனை அழித்து தேவர்களைக் காத்த முருகப் பெருமானை வழிபடும் விழாக்களாகும். 6.1.7.5. திருக் கார்த்திகை விழா கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் கார்த்திகை நட்சத்திரம் வரும் அன்று கொண்டாடப்படும் விழாவாகும். கார்த்திகை நாளில் வரிசை வரிசையாக திருவிளக்கேற்றி எங்கும் பிரகாசமாய் கொண்டாடும் வழக்கம் மிகப் புராதன காலந்தொட்டே இருந்துவருகிறது. இத்திருவிழா திருவண்ணாமலையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று அண்ணாமலை அழற் சோதி மலையாய் ,
அருணாசலமாய் , சோண கிரியாய்த் திகழும் ( அருணம் , சோணம் - சிவப்பு நிறம் - சோதி மயம் ). இம்மலை ஏறத்தாழ மூவாயிரம் அடி உயரத்தில் உள்ளது. கார்த்திகை அன்று மலைமேல் பெரிய பாத்திரம் ஒன்றில் நெய் ஊற்றி , துணித் திரியிட்டு , 122 கற்பூரத்தை இட்டு விளக்கிடுவர். பல கி.மீ. தொலைவிற்கு அப்பாலும் பல நாட்களும் இச்சோதி ஒளிவீசும். “ நினைக்க முக்தி தரும் ” தலமாகிய திருவண்ணாமலையில் இறைவன் மலைவடிவாய் காட்சி அளிப்பதாய் கருதுகின்றனர் பௌர்ணமி , அமாவாசை , தமிழ் மாதப் பிறப்பு , பிரதோஷம் முதலாய நாட்களில் மலையை வலம் வருகின்றனர். 6.1.7.6.
சிவராத்திரி விழா இவ்விழா மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் நடைபெறும் விழாவாகும். அன்று சிவாலயங்களில் இரவு நான்கு கால பூஜைகள் நடைபெறும். அன்று கண் விழித்து பகலும் இரவும் உபவாசம் இருப்பர். இந்நாளில் திருவருள் பெற விழைவோர் ஆகமங்களை ஆராய்ந்து , அவற்றில் சொல்லியருளிய பூஜையை அன்பினாலேயே மனதில் தியானித்து மூர்த்தி , தீர்த்தம் , தலம் எனும் மூன்றும் சிறந்து விளங்கும் தலத்தை அடைந்து அங்கு எழுத்தருளியுள்ள சிவபெருமானை வழிபடுவர். இவ்விரதத்தை மேற்கொள்வதால் அறம் பெருகி , செல்வத்தைப் பெற்று , இன்பத்திறம் பெற்றுத்
திளைக்கலாம். சிவனருள் முழுமையாய் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்விழாக்களைத் தவிர இராமன் , கண்ணன் போன்ற அவதாரங்களின் பிறந்த நாட்கள் முறையே இராமநவமி என்றும் , ‘ ஸ்ரீஜெயந்தி ’ அல்லது ‘ ஸ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி ' எனவும் நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வேத வியாசரின் நினைவு நாளான “ குரு பூர்ணிமா ” சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. மேலும் பல விழாக்களை கொண்டாடப்படுகின்றன. அவை அ ) மாசி மக விழா – மாசி மாதம் - பௌர்ணமி - மகநட்சத்திரம் ஆ ) பங்குனி உத்திர விழா - பங்குனிமாதம் பௌர்ணமி - உத்திர நட்சத்திரம் சித்ரா
பௌர்ணமி விழா - சித்திரைமாதம் – பௌர்ணமி - சித்திரை நட்சத்திரம் ஈ ) வைகாசி விசாக விழா - வைகாசி மாதம். பௌர்ணமி - விசாக நட்சத்திரம் உ ) ஆனித் திருமஞ்சனம் - ஆனிமாதம் - உத்திர நட்சத்திரம் ஊ ஆடிப் பூரம் - சிவத் தலங்களில் அம்பாளுக்கும். திருவல்லிபுத்தூரில் , ஆண்டாளுக்கும் இவ்விழா மிகச் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. எ ) பிரதோஷ விழா - ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை , தேய்பிறை ஆகிய இரு காலங்களிலும் திரயோதசி அன்று கொண்டாடப்படுகிறது. 6.1.8. சடங்குகளும் சம்பிரதாயங்களும் சடங்குகள் - விளக்கம் வேதத்தை புரிந்து கொள்ளவும் ,
விளக்கிக் கொண்டு முழுமை அடையவும் ஆறு அங்கங்கள் உள்ளன. இவற்றை வேதாங்கங்கள் என்பர். அவை முறையே 1. சிட்சை என்ற எழுத்திலக்கணம் 2. வியாகரணம் என்ற சொல்லிலக்கணம் 3. நிருக்தம் என்ற பொருளிலக்கணம் 4. கல்பம் என்ற செயல் முறை 5. சந்தஸ் என்ற யாப்பிலக்கணம் 6. ஜ்யோதிஷம் என்ற சோதிடம் இந்த ஆறு அங்கங்களை பயன்படுத்தி செய்யும் செயல்கள் உடலாலும் , மனத்தாலும் , ஐம்புலன்களினாலும் செய்யப்படும். இவை ஆறும் வேதத்தின் ஆறு அங்கங்களை ஆதாரமாகக் கொண்டவை. இவை ஷடங்கங்கள் அல்லது ' சடங்குகள்’என்று வழங்கப்படுகிறது. முக்கியச் சடங்குகள் இந்து
மதத்தில் பிறப்பதற்கு முன்னும் , பிறந்து வாழும் காலத்திலும் , இறந்த பிறகும் சடங்குகள் விதிக்கப்பட்டுள்ளன. 124 இச்சடங்கினை கிரியை என்பர். தொல்காப்பியர் இதனை கரணம் என்றார். மந்திரங்களுடன் செய்யப்படுவன சிறப்பானவை என்றும் மந்திரம் அதிகம் கலவாமல் செய்யப்படுவன பொதுவானவை என்றும் கூறப்படுகின்றன. அவற்றில் சில மட்டுமே தற்காலத்தில் நடைமுறையில் உள்ளன. 1. கருக்கொள்ளல் ( பும்ஸவனம் ) ஒரு பெண் கருவுற்ற மூன்றாவது மாதத்தில் கர்ப்பத்திற்கு எவ்வித ஊறும் உண்டாகாதவாறு இறைவனை வேண்டுவதாகும். 2. வளைகாப்பு ( ஸீமந்தம் ) பெண் கருவுற்ற
நான்காவது அல்லது எட்டாவது மாதத்தில் குழந்தையின் காப்பிற்காக சில தேவர்களை வேண்டுதலாகும். கர்ப்பிணியின் தலைமுடியை வகுத்தல் , கீதங்கள் பாடுதல் , வளைகாப் பிடுதல் முதலான சம்பிரதாய முறைகள் பின்பற்றப்படுகின்றன. 3. ஜாதகம் கணித்தல் ( ஜாதகர்மம் ) இது குழந்தை பிறந்தவுடன் செய்ய வேண்டிய கிரியையாகும் தேனும் நெய்யும் கலந்து தேவதைகளை ஆராதிப்பர். வந்திருப்பவர்களுக்கு பழமும் சர்க்கரையும் வழங்குவர். குழந்தை நீண்ட ஆயுளுடன் வாழவும் , புத்திக் கூர்மை உண்டாகவும் , சாமர்த்தியம் அழகு முதலானவை பெறவும் பிரார்த்தனை செய்வர். இந்திரன்
செல்வ வளத்தை கொடுக்கவும் வேண்டுவர். 4. பெயர் சூட்டல் ( நாமகரணம் ) தந்தையின் தந்தை அல்லது தாய் அல்லது தாயின் தந்தை அல்லது தாய் , மற்றும் தம் குலத்தில் போற்றப் பட்டவர்கள் பெயரை குழந்தைக்கு வைத்து ஆசீர்வதிப்பர். சிலர் இறைவனின் திருப்பெயரைச் சூட்டுவர். தற்காலத்தில் எண் ஜோதிஷப்படி பெயர் சூட்டுகின்றனர். 5. தூய்மைப்படுத்தல் ( புண்யா வாசனம் ) இதில் விசேட மந்திரக் கிரியைகள் எதுவும் இல்லை. சுத்தியின் பொருட்டு புண்யா வாசனம் செய்து அந்நீரை மாவிலைகளால் 125 வீட்டின் பல பகுதிகளிலும் தெளிப்பர். மனிதர்கள் மீதும் அப்புனிதநீரை
தெளிப்பர். இதனால் சுத்தி ஏற்படுவதாக கருதுவர். 6. குழந்தையை வெளியே கொண்டு செல்லல் ( நிஷ்க்ராமணம் ) குழந்தை பிறந்து நான்குமாதம் ஆனபின் முதன் முதலாகக் குழந்தையை வீட்டைவீட்டு கோயிலுக்கு அல்லது உறவினர் வீட்டிற்கு எடுத்துச் செல்வர். இவ்வாறு குழந்தையின் பயணங்கள் வெற்றிகரமாய் அமைய இறைவனை வேண்டுவர். 7. சோறூட்டுதல் ( அன்னப்பிராசனம் ) ஆறாம் மாதத்தில் சோறும் , தயிரும் , நெய்யும் , தேனும் கலந்து பிள்ளைக்கு முதன் முதலாக சோறூட்டுதலாகும். குழந்தை உடல் நலத்தோடும் , நீண்ட நாள் உணவு முறையாக உண்டு வாழவும் கடவுளின் அருளை
வேண்டுவர். 8. கல்வி தொடங்குதல் ( வித்யாரம்பம் ) இது குழந்தையைப் பள்ளியில் சேர்க்கின்ற விழாவாகும். குழந்தைக்கு ஐந்து வயதானதும் நவராத்திரி விழா முடிவான விஜயதசமி தினத்திலோ வேறு நல்ல நாளிலோ முதன் முதலில் கல்வி கற்க குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பர். “ ஹரி ஓம் , ஸ்ரீ கணபதியே நம ” எனக் கூறி கணபதியை வணங்கச் செய்து பிள் “ குருவாழ்க ! குருவே துணை ” என்று கூறி குருவை வணங்கும்படி செய்வர். பின் சரஸ்வதி தேவியை வணங்கி தானியத்தில் அதாவது நெல் அல்லது அரிசியில் “ ஹரி ” என்னும் எழுத்தை எழுதவும் சொல்லவும் செய்வர். இவ்வாறு
கல்வியைக் கற்கத் தொடங்கும் நிலையே “ வித்யாரம்பம் ” எனப்படுகிறது. 9. காது குத்துதல் ( கர்ண பூஷணம் ) காது குத்துதலின் நோக்கம் குண்டலம். தோடு முதலிய காதணிகளை அணிவதாகும். தங்கத்தின் வழியாகப் பாயும் நீர் 126 உடம்புக்கு ஆரோக்கியம் தருகிறது. நல்ல செய்திகளை , நற் கருத்துகளை செவியின் உள்ளே செலுத்தவேண்டும் ; கெட்ட தீய செய்திகளை உள்ளே செலுத்தாமல் துளை வழியாக வெளியே செலுத்தி விட வேண்டும் என்பதையும் இச்சடங்கு குறிக்கிறது. 10. குடுமி வைத்தல் ( சௌளம் ) குழந்தைக்கு முதன் முதலாக சவரஞ் செய்து வைத்தலாகும். தாயின் மடியில்
குழந்தையை வைத்துத் தந்தையும் உடன் இருந்து செய்யும் கிரியை ஆகும். 11. பூணூல் அணிவித்தல் ( உபநயனம் ) குழந்தைக்கு ஏழுவயதானதும் உபநயனம் அல்லது பூணூல் இடுதல் என்னும் சடங்கை நடத்தி வைக்க வேண்டும். இதில் முக்கிய அம்சம் “ காயத்ரி ” மந்திர உபதேசம் ஆகும். உபநயனக் கிரியை செய்யாதவர்களுக்கு தீட்சை செய்து வைக்க வேண்டும். உபநயனம் அல்லது தீட்சை பெறுவதற்கு முன் ஒரு பிறப்பும் உபநயனம் அல்லது தீட்சைப் பெற்றபின் ஒரு பிறப்புமாக ஒரு மனிதனுக்கு ஒரு பிறப்பிலேயே இரு பிறப்பு உண்டு என இந்து மதம் கூறுகிறது. 12. பள்ளியில் சேர்த்தல் (
குருகுலவாசம் ) குழந்தைகள் குருகுலத்தில் குருவுடன் இருந்து கல்வி பயின்று வருவது நமது பூர்வீக வழக்கமாகும். குருகுலத்தில் கல்வியும் நன்னடத்தையும் கற்றுக்கொடுக்கப்படும். மாணவர் குரு கூறிய பணிவிடைகளை செய்ய வேண்டும். ஆடம்பர வாழ்க்கையின்றி அமைதியோடும் கீழ்ப்படிதலோடும் கல்வி பயில வேண்டும். 13. திருமணம் ( கல்யாணம் ) குருகுல வாசம் முடிந்த பின் , குருவின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்வர். திருமணச் சடங்குகள் நாம் அறிந்ததே. திருமணமானதற்கு அடையாளமாக மணமகன் தனது சகோதரியின் உதவியோடு திருமங்கலநாணை ஆச்சாரியன் கொடுக்க
மணமகள் கழுத்தில் அணிவிப்பர். 14. அறுபதாம் ஆண்டு நிறைவு விழா ( சஷ்டி அப்த பூர்த்தி ) பெற்றோரிடம் நன்றி செலுத்தும் பொருட்டும் அவர்களின் உடல் நலம் குன்றாமல் திடம்பட நலத்துடன் நீடித்து வாழ வேண்டும் என வேண்டி பிள்ளைகள் கொண்டாடுவதாகும். சிற்றின்ப வாழ்வை வெறுத்துக் கடவுள் பணியை மேற்கொண்டு இனிமேல் ஆன்மிக நெறியில் நிலைபெற வேண்டும் என அத்தம்பதியர் உறுதி மேற்கொள்வதை இந்நிகழ்ச்சி விளக்குகிறது. 15. ஆயிரம் பிறை கண்டவிழா ( சதாபிடேகம் ). எண்பது அல்லது எண்பத்தி நான்கு ஆண்டுகளில் செய்யும் சடங்கிற்கு சதாபிடேகம் என்று பெயர்.
எண்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர்களை “ ஆயிரம் பிறை கண்டவர் ” எனக் கூறுவர். 16. இறந்தபின் செய்யும் கிரியை ( அபரக்கிரியை ). ஒருமனிதன் இறந்தபின் அவனது ஆன்மா நலம் அடையும் பொருட்டு , அவனது மகன் முதலாயோர் செய்யும் கிரியைக்கு அபரக்கிரியை என்று பெயர். மகன் செய்யும் கிரியை இறந்தவனை ஈடேற்றுகிறது. மகனைப் புத்திரன் என்பர். “ புத்திரன் ” என்பதற்கு புத்தென்னும் நரகத்தில் தந்தை விழுந்து வருந்தாமல் கரையேற்றுபவன் என்பது பொருளாகும். இறந்தவர்கட்கு புதல்வர் முதலாயோர் செய்யும் கிரியைகள் சாந்தி அளிக்கின்றன. ஆதலால் தாய் ,
தந்தையர்க்கு அவர்கள் இறந்தபின் பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமைகளை நம்பிக்கையுடனும் , சிரத்தையுடனும் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் நம் சந்ததி தழைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. முக்கியத்துவம் : இத்தனை சடங்குகளை செய்வதால் ஒரு மனிதனுக்கு என்ன பயன் என்ற எண்ணம் பலருக்கு எழலாம். நல்ல அறிவும் ஆற்றலும் உடைய ஒருவன் இத்தனை சடங்குகளும் விழாக்களும் , மரியாதையும் , அன்பும் தன்னுடைய வெறும் உடலுக்கு அல்ல என்பதை உணர வேண்டும். உள்ளே உறையும் தெய்வமயமான 128 ஆத்மாவிற்கு என உணர வேண்டும். சர்வ வல்லமை பொருந்திய பரம்பொருளை தேடி
அடையவே இச்சடங்குகள் வழிகாட்டி களாகவும் தூண்டு கோல்களாகவும் இருக்கின்றன. 6.1.9. இந்து சமயக் கோட்பாடுகளின் முக்கியத்துவம் இந்து சமயக் கோட்பாடுகள் எல்லாமே உயர்ந்த தத்துவ அடிப்படையில் விளக்கப்பட்டவை. பக்குவப்படாத ஆன்மாக்கள் வீடுபேறடையும் வழிபாட்டு முறைகளான உருவம் மற்றும் ஆலய வழிபாட்டையும் கூறுகின்றன. இந்து சமயம் சடங்குகள் , பழக்க வழக்கங்கள் , விழாக்கள் போன்றவற்றிற்கு காரண காரியங்கள் உண்டு என்று எடுத்துக் கூறுகிறது. இந்து சமயமானது ஆன்மிகத் துறையில் கடைநிலையில் இருப்பவனும் , கடைத்தேற்றம் பெறுவதற்கு எளிய
வழிமுறைகளைக் கூறி ஒவ்வொரு மனிதனின் எதிர்காலத்திற்கும் ஒளியைத் தந்து கொண்டிருக்கிற இணையற்ற சமயமாகும். 6.1.10. இந்தியப் பண்பாட்டிற்கு இந்து சமயத்தின் கொடை 1. இந்து சமயத்தில் காணப்படும் இல்லறம் , துறவறம் , பலகடவுட் கோட்பாடு , மனிதாபிமான உணர்வு , சகிப்புத் தன்மை , உயர்ந்த ஆன்மிகக் கோட்பாடுகள் போன்றவை இந்திய பண்பாட்டைச் சிறப்படையச் செய்கின்றன. 2. இந்து சமய இலக்கியங்களான வேதங்கள் , உபநிடதங்கள் , இதிகாசங்கள் , புராணங்கள் போன்றவை இந்துக்களுக்கோ , இந்தியாவிற்கு மட்டுமோ சொந்தம் என எண்ணமுடியாமல் உலகமே இவற்றை போற்றுவதன்
மூலமும் , அமைதியான வாழ்க்கைக்கான யோக நெறியை வழங்குவதன் மூலமும் இந்தியப் பண்பாட்டிற்கு இந்து இலக்கியங்கள் மேலும் சிறப்பைக் கூட்டி இந்து சமய சமயத்தின் உயர்வுக்கு வழிவகுக்கின்றன. 3. கட்டடக்கலை , சிற்பக்கலை , ஓவியக்கலை , இசைக்கலை இவற்றில் மனிதனின் ஆன்மிக உணர்வுகள் பொதிந்து 129 கிடக்கின்றன என்பதை உலகிற்குக் காட்டிய சமயம் இந்து சமயம் ஆகும். 4. உருவ வழிபாட்டுமுறை , வீடுபேறடைவதற்கான அறநெறிக் கோட்பாடுகள் அத்வைதம் , விசிட்டாத்வைதம் , துவைதம் , சைவ சித்தாந்த நெறிகள் போன்ற தத்துவக் கோட்பாடுகளையும் இந்திய பண்பாட்டிற்கு
அளித்திருப்பபது இந்து சமயந்தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை. 5. சமயம் , தத்துவம் இரண்டின் அடிப்படையில் வாழ்ந்து ஆன்ம ஈடேற்றம் பெறலாம் எனக் கூறிய ரிஷிகள் , ஞாளிகள் , யோகிகள் , சித்தர்கள் , சமயச் சான்றோர்கள் , தத்துவ ஞானிகள் , தீர்க்கதரிசிகள் போன்றவர்களையும் தியாக உணர்வினை வெளிப்படுத்தும் ‘ ஹோமம் ' , ' யாகம் ' போன்ற வழிபாட்டு முறைகளையும் , ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்ட முடிவுகளை உலகிற்கு உணர்த்தி , இந்தியப் பண்பாட்டை எல்லாரும் போற்றச் செய்வதும் நமது பழம்பெரும் இந்து சமயத்தின் வாயிலாகத்தான் என்றால் அது
மிகையாகாது. எல்லாவற்றிற்கும் மேலாக எல்லா சமயத்தைச் சார்ந்தவர்களும் ஏற்றுக்கொள்ளும் தத்துவ நெறிகளடங்கிய புனித நூலான பகவத் கீதையைத் தந்துள்ள சமயம் , இந்து சமயம் என்பது உலகெங்கும் பிரசித்தமான உண்மையாகும். 130 6. 1. பயிற்சி வினாக்கள் அ. ஓரிரு வரிகளில் விடையளி 1. ‘ இந்து'என்ற சொல்லின் பொருளைக் கூறுக. 2. ' இந்து சமயத்தின் ' சிறப்பம்சம் யாது ? 3. ' அறுவகை சமயங்கள் ' யாவை ? 4. ' வைணவ ’ சமயத்தின் இருபிரிவுகள் யாவை ? 5. ‘ சாக்தம் ’ குறிப்பு வரைக. 6. வேதங்கள் ‘ மறை ’ எனப்படுவதேன் ? 7. ' ஆகமங்கள் ' என்றால் என்ன ? 8. '
திருமுறை ' என்பதன் பொருள் யாது ? 9. ' மாணிக்கவாசகர் ' எழுதிய நூல்கள் எவை ? 10. ‘ திருமூலர் ’ எழுதிய நூல் எது ? 11. ' நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் ’ - குறிப்பு வரைக. 12. ‘ சிவஞான போத ’ ஆசிரியர் யார் ? 13. ' இதிகாசம் ' என்பதன் பொருள் யாது ? 14. ' இராமயணத்தை ' இயற்றியவர் யார் ? 15. ' இந்து சமயக் கோட்பாடுகள் ' பற்றி எழுது. இந்து சமயம் வலியுறுத்தும் முக்கிய வேதாந்த நெறிகள் யாவை ? அந்நெறிகளைத் தோற்றுவித்தவர் யார் ? 16. இந்து சமயம் வலியுறுத்தும் ' நான்கு மார்க்கங்கள் ' யாவை ? 17. ‘ இராஜமார்க்கம் ’ என்றால் என்ன ? 18.
' பக்திமார்க்கம் ' என்றால் என்ன ? 131 19. இந்து சமய விழாக்கள் பற்றி எழுதுக. 20. ‘ கணேஷ் ’ சதுர்த்தி எங்கு எப்போது கொண்டாடப்படுகிறது ? 21. ‘ கிரியை ’ என்றால் என்ன ? ஆ. ஒரு பத்தி அளவில் அல்லது பத்து வரிகளுக்கு மிகாமல் விடையளி 1. ' சமயம் ’ என்றால் என்ன ? அவற்றுள் சிலவற்றைக் கூறு ? 2. இந்து மதத்தின் தோற்றம் பற்றி எழுதுக. ' இந்து மதம் ’ பற்றி திருமூலர் கூறுவது யாது ? சைவ சமயக் கோட்பாட்டை விவரி. 3. 4. ' பன்னிரு திருமுறைகளை ' வரிசைப்படுத்து ? 5. 6. ' சைவ சித்தாந்த சாத்திரங்கள் ' யாவை ? 7. ' இதிகாசங்கள் ’ உணர்த்தும்
உயரிய நெறிகள் யாவை ? 8. ' எறும்பு வழி ’ , ‘ பறக்கும் வழி ' பற்றி எழுதுக. 9. ' ஞானமார்க்கம் ’ - பற்றி எழுதுக. 10. ' கர்ம நெறி ' பற்றி கீதை கூறுவன யாவை ? 11. ‘ பக்தி மார்க்கம் ’ பற்றி விவரி. 12. ' தசரா பண்டிகையைப் பற்றி எழுதுக. 13. ‘ கந்த விழாக்கள் ’ பற்றி விவரி. 14. இந்துக்கள் கொண்டாடும் ‘ தீபாவளிப் பண்டிகைப் பற்றி எழுதுக. 15. ' திருக்கார்த்திகை ' விழாவின் சிறப்பைக் கூறு. 16. ' சடங்குகள் ' என்றால் என்ன ? 17. ‘ வித்யாரம்பம் ’ பற்றி சிறுகுறிப்பு வரைக. 18. ' உபநயனம் ' , குருகுல வாசம் ’ பற்றி எழுதுக. 132 இ. ஒரு
பக்க அளவில் அல்லது முப்பது வரிகளுக்கு மிகாமல் விடையளி 1. இந்து சமயப் பெருமைகளாக ஆசிரியர் கூறுவன யாவை ? 2. ' அறுவகை சமயங்களை ' விவரித்தெழுது. 3. ‘ சங்கரரின் அத்வைதக் கோட்பாட்டை ' விவரி. 4. ' இராமானுஜர் விவரித்த விசிஷ்டாத்வைத நெறியை ’ விவரி. ' மத்துவர் பரப்பிய துவைத நெறியைப் பற்றி எழுதுக. 5. 6. இந்து சமய விழாக்களை விவரி , 7. 8. 9. ‘ சிவராத்திரி விழா ’ மற்றும் மாத விழாக்கள் பற்றி தொகுத்து எழுதுக. ' மத்வரின் ’ வாழக்கையை விவரி ? ' அபரக்கிரியை ' என்றால் என்ன ? அவற்றை செய்ய வேண்டியதன் அவசியம் என்ன ? ஈ. நான்கு
பக்கங்களுக்கு மிகாமல் விடையளி 1. இந்து சமயத்தவர் பின்பற்ற வேண்டிய சடங்குகளையும் , சம்பிரதாயங்களைப் பற்றி விவரி. 2. இந்து சமயக் கோட்பாடுகளின் முக்கியத்துவத்தை விவரி ( அல்லது ) இந்தியப் பண்பாட்டிற்கு இந்து சமயத்தின் பங்கினை விவரி. 6. 2 , சமண சமயம் இந்தியாவிலுள்ள பழம்பெரும் சமயங்களுள் சமண சமயம் ஒன்றாகும். பழமையான ரிக் வேத மந்திரங்களில் இரு சமண தீர்த்தங்கரர்களைப் பற்றிய தெளிவான குறிப்புகள் உள்ளன. பல சான்றுகள் வாயிலாக இச்சமயமும் வைதிக சமயத்தைப் போன்று பழமையான சமயம் என்பதை அறியலாம். இருபத்தி நான்கு
தீர்த்தங்கரர்களின் போதனைகள் அடங்கியது “ சமணம் ” எனக் கருதுகின்றனர். முதல் 22 தீர்த்தங்கரர்களைப் பற்றிய வரலாறு கிடைக்கப் பெறவில்லை. கடைசி இருவராகிய பார்சவ நாதரையும் மகா வீரரையுமே வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டு விளக்குகின்றனர். பார்சவநாதர் உயிர்க்கொலை கூடாது , பொய் பேசுதல் கூடாது , சொத்துக்கள் பெற்றிருத்தல் கூடாது. திருடுதல் கூடாது என்ற நான்கு உண்மைகளை உலகம் அறிந்து ஏற்று வாழும்படிச் செய்தார். பக்தர்கள் வெண்ணிற ஆடை அணிய அனுமதிக்கப்பட்டனர். மகாவீரரின் பெற்றோரும் பார்சவநாதரது போதனைகளைப் பின்பற்றியதாய்த்
தெரிகிறது. 6.2.1. சமணம் - சொல்விளக்கம் ஜீனரின் வழிச் செல்பவர்கள் ஜெயினர் - சமணர் எனப்பட்டனர். ஜூன் என்பது ஜீத் என்ற பகுதியின் அடியாகப் பிறந்தது. ஜீத் என்பதற்கு ஜெயித்தல் , வெற்றிபெறுதல் என்பது பொருள். ஜீளன் என்றால் வெற்றி கண்டவன் - அதாவது தனது மனதையும் பொறிகளையும் அடக்கி வெற்றி கண்டவர் என்பது பொருள். அத்தகைய ஜீனர்களைக் கொண்ட சமயமே சமண சமயம். 6.2.2. தீர்த்தங்கரர் தீர்த்தம் என்பது ஆறு - குளத்தின் துறை என்று பொருள் தெய்வத் தன்மையும் , மெய்யுணர்வும் பெற்ற தீர்த்தங்கரர்கள் மக்கள் மனதில் உள்ள அறியாமை மற்றும்
அஞ்ஞானமாகிய இருளை அகற்றி ஆன்ம ஒளி வீசி கரையேற்றுபவர்கள் ஆவர். ' தான் கண்ட நெறியைப் பிறருக்குப் பயன்பட உதவியவர்கள் என்று பொருள் கொள்ளலாம். 134 6.2.3. சமண சமயப் பிரிவுகள் சமண சமயத்தில் ‘ திகம்பரர்கள் ' , ' சுவேதம்பரர்கள் ’ என்ற இரு பிரிவினர் உள்ளனர். திகம்பரர் = திக் + அம்பரம் - திக் - திசை. அம்பரம் – ஆடை திகம்பரர் என்றால் ஆடை அணியாதோர் என பொருள்படும். எவன் திசைகளை ஆடையாகக் கொண்டு வாழ்கிறானோ அவன் திகம்பரன் ஆவான். சுவேதம்பரர் வெண்ணிற ஆடை அணிவோர் சுவேதம்பரர் என்று அழைக்கப்பட்டனர். சுவேதம் - தூய்மையான வெண்ணிறம்
என்பது பொருள். 6.2.4. வர்த்தமான மகாவீரர் இவரது இயற்பெயர் வர்த்தமானர். இவர் சமண சமயத்தின் கடைசி தீர்த்தங்கரர் ஆவார். இவரது தந்தையார் சித்தார்த்தர் என்றும் தாயார் திரிசலா என்றும் அறிகிறோம். இவர் வைசாலிக்கு அருகில் உள்ள குண்டக் கிராமம் என்னுமிடத்தில் கி.மு. 546 ல் பிறந்ததாக டாக்டர் இராதா குமுத் முகர்ஜி குறிப்பிடுகிறார். இவரது மறைவு கி.மு. 468 ல் என்பதனை வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இவர் யசோதை என்ற மங்கையை மணந்து இல்லற வாழ்வை மேற்கொண்டார். “ பிரியதர்சனா ” என்ற பெண் மகவைப் பெற்றார். பின்னர்
வர்த்தமானர் துறவு மேற்கொண்டார். பன்னிரண்டு ஆண்டுகள் அலைந்து திரிந்தார். தவவாழ்வினை மேற்கொண்டார். பதின்மூன்றாம் ஆண்டில் இரிஜீபாலிகா என்னுமிடத்தில் சால் மரத்தினடியில் ‘ நிர்வாணம் ’ எனப்படும் உயர் நிலையை அடைந்தார் என்று கூறப்படுகிறது. அதன் பிறகே “ மகாவீரர் ” என்ற சிறப்புப் பெயர் வழங்கப்பட்டது. மகதம் , கோசலம் ஆகிய நாடுகளிலும் , பிற அருகிலுள்ள பகுதிகளிலும் சமண சமயக் கருத்துகளை விளக்கி 135 Page 86 of 201 3. நற்செயல் : கொல்லாமை , பொய்பேசாமை , திருடாமை சொத்து சேர்க்காமை , கற்புடைமை ஆகிய ஐந்து நல்லொழுக்கங்களை
பின்பற்றுவது. இதனை “ சம்யக் சரித்திரம் ” என வழங்குவர். 6.2.5.2 சியாத்வாதம் அல்லது அநேகாந்த வாதம் சமண சமயத்தின் மிக உயர்ந்த கொள்கை “ சியாத் வாதம் ” அல்லது அநேகாந்த வாதம் ஆகும். ஒரே பொருள் பல இயல்புகள் பொருந்திய தாய் இருப்பதே அநேகாந்தம் பல்வேறு கோணங்களில் பார்க்கும்போது ஒரே பொருள் அநேக இயல்புகள் உள்ளதாய் காணப்படுகின்றன. எப்பொருளைக் குறித்தும் திட்டவட்டமான தெளிவான கருத்தினை வெளியிட முடியாது என்பதே இதன் விளக்கம். வாழ்ந்தார். தமது 72 ஆம் வயதில் “ பாவா " என்னுமிடத்தில் உயர் நீத்தார். போதித்த உண்மைகள் : சமணக்
கொள்கைகளை செம்மைப்படுத்தி முறையாக அனைவரும் ஏற்கும் விதம் வழங்கியவர் மகாவீரர் ஆவர். பார்சவ நாதர் உலகிற்கு அளித்த அஹிம்சை , சத்யம் , அஸ்தேயம் , அபரிக்ருஹம் என்ற நான்குடன் மகாவீரர் ' பிரம்மசரியம் ' எனப்படும் ‘ தன்னடக்கத்தை ’ மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். கடவுள் என்ற ஒருவர் இல்லை என்றும் " மனிதரிடம் மறைந்திருக்கின்ற உயர்ந்த குணங்களும் மிகச் சிறந்த பண்புகளும் கடவுள் தன்மை பொருந்தியது " என்னும் நிலையில் உலகம் இயற்கையாக இயங்குகிறது என்பதை வலியுறுத்தினார். 6.2.5. சமணக் கோட்பாடுகள் வினைப் பயனிலிருந்த
விடுதலை பெற்று நற்கதி அடைவதே சமணத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்கு மும்மணிகள் அல்லது மூன்று இரத்தினங்கள் என்னும் உயரிய நெறிகளை பின்பற்ற வேண்டும். மும்மணிகளாவன நன்னம்பிக்கை , நல்லறிவு , நல்லொழுக்கம் என்பனவாகும் 6.2.5. 1. மும்மணிகள் 1. தன்னம்பிக்கை : வீடு பேற்றினை அடைய வர்த்தமான மகாவீரர் போதித்த ஏழுதத்துவங்களிலும் முழுமையான நம்பிக்கை கொள்ள வேண்டும். இதுவே நல்ல நம்பிக்கை எனப்பட்டது. இதனை “ சம்யக் தரிசனம் ” எனவும் வழங்குபர். 2. நல்லறிவு : இந்த உலகத்தை யாரும் படைக்கவில்லை , இது இயற்கையாகத் தோன்றியது. என்ற
முழுமையான " ஞானம் ” அல்லது “ சம்யக்ஞானம் ” பெற்று பொருள்களைப் புரிந்து கொள்வதே நல்லறிவாகும். 136 எடுத்துக்காட்டாக இராமன் என்பவன் ஒருவனுக்கு மகள் என்றால் இன்னொருவனுக்கு தந்தையாகவும் , மூன்றாமவனுக்கு அண்ணன் அல்லது தம்பியாகவும். நான்காமவனுக்கு மாமனாகவும் இருக்கலாம். மேலும் ஒருவன் மற்றவனுக்கு நண்பனாயும் வேறு ஒருவனுக்கு பகைவனாயும் காட்சியளிக்கிறான். இவ்வாறு ஒவ்வொரு பொருளையும் அநேக கோணங்களில் பார்ப்பது ‘ அநேகாந்த வாதம்’ஆகும். ஒரு பொருள் எழுவகையாக இருக்கலாம் என வாதிடுவது சியாத்வாதம் ஆகும். 6.2.5.3. அகிம்சை
சமணர்களின் அடிப்படைக் கோட்பாடுகளான இன்னா செய்யாமை , அருளுடைமை , கொல்லாமை , புலால் மறுத்தல் ஆகிய நான்கும் இணைந்த ' அகிம்சையே ' சமணம் என்ற சமயக்கப்பலின் நங்கூரமாகும். 6.2.5.4. ஐந்து பெரும் நோன்புகள் அல்லது பஞ்சமஹாவிரதம் 1. அகிம்சை ( அ ) இன்னா செய்யாமை 2. சத்யா ( அ ) வாய்மை 3. அஸ்தேயா ( அ ) பிறர் பொருளைக் கவராமை 4. அப்பரிகிரஹா ( அ ) பற்று பாசம் இவற்றிலிருந்து விடுபடுவது 5. பிரம்மச்சரியம் ( அ ) ஐம்புலன்களையும் அடக்கியாளுகின்ற தன்னடக்கம் 6.2.5.5. நவபதார்த்தம் ஆன்மாவின் பரிணாமங்கள் ஒன்பது 1. நல்வினை தீவிளை அகற்றி
தானாகவே அனைத்தையும் உள்ளது உள்ளபடியே அறியும் ஜீவன். 2.உடலோடு கட்டுண்ட நிலையில் இன்ப துன்பங்களைத் துய்க்கும் அஜீவன் ( உயிர் அற்றவை ). 3. நல்லெண்ணம் , நல்ல செயல் , நல்ல சொல் இவற்றால் விளைந்த புண்ணியம். ( நல்வினை ). 4. தீய எண்ணம் , தீய செயல் , தீய சொல் இவற்றால் விளைந்த பாவம். ( தீவினை ) , 5. உயிர்கள் செய்த புண்ணிய பாவங்களுக்கேற்ப பயன்கள் வந்து சேரும் என்னும் ஊற்று ( ஆஸ்ரமம் ). 6. மனம் , வாக்கு , காயங்களை அடக்கி நல்வினை , தீவினை உயிரை வந்து அடையாமல் தடுக்கும் செறிப்பு. ( சம்வளா ) 7. இரு வினைகளும் உயிருடன்
சேராமல் தடுத்தபின்பு ஏஞ்சிய வினைகளை நீக்கும் உதிர்ப்பு. ( நிர்ஜரை ) , 8.சிந்தை , சொல் , செயல் , ஐம்புலன்கள் ஆகியவற்றால் உண்டான வினைகள் உயிரோடு கலப்பதாகிய பந்தம். ( கட்டு ) , 9. ஐம்புல ஆசைகளையும் அறவே அழித்து இரு வினைகளினின்றும் நீங்கி உயர்ந்த வீடுபேறு அடைவது. ( மோட்சம் ) இவையே சமணத்தில் கூறப்படும் நவபதார்த்தங்களாகும். 138 6.2.5.6. சமண சமய இலக்கியங்கள் சமணத்தின் இலக்கியமான ஆகமசித்தாந்தம் 12 அங்கங்களைக் கொண்டது. ஜைனத்திருமுறையானது அர்த்தமகதி மொழியில் “ தேவாதி ” என்பவரின் தலைமையில் திருத்தியமைக்கப்பட்டது. இவை
உரைநடையும் செய்யுள் நடையும் கலந்தவையாகும். 6.2.6. இந்தியப் பண்பாட்டிற்கு சமணத்தின் கொடை 6.2.6.1. சமண இலக்கியமும் வளர்ச்சியும் சமணர்கள் இந்தியப் பண்பாட்டில் தங்களின் அழிக்கமுடியாத முத்திரைகளைப் பதித்திருக்கிறார்கள். பிராகிருதம் , தமிழ் , பாலி , போன்ற மொழிகளைப் படித்து அவற்றின் மூலம் சமயக் கருத்துக்களைப் பரப்பி மொழியை வளர்த்தார்கள். தொல்காப்பியம் , நன்னூல் , சீவகசிந்தாமணி , வளையாபதி போன்ற தமிழ் நூல்களை அளித்தவர்கள் சமணர்களே மற்றும் இந்தி , குஜராத்தி , மராத்தி , கன்னடம் , சமஸ்கிருதம் போன்றவற்றிலும் சமண
இலக்கியங் களையும் , தத்துவங்களையும் அளித்துள்ளனர். 6.2.6.2. சமணர்களின் அறக்கோட்பாடுகள் மனித உயிர் தனது கர்ம வினைகளிலிருந்து விடுபட அகத்தூய்மை , புறத்தூய்மை வேண்டும் என்பதால் பிச்சையெடுத்தல் , உண்ணா நோன்பு போன்ற செயல்களைப் புறத் தூய்மைக்கும் , பணிவு , பணி , கல்வி. தியானம் , உடலை வெறுத்துப் பாவத்திற்குப் பரிகாரம் தேடல் , உண்மை பேசுதல் , தவம் போன்றவை அகத்தூய்மைக்கும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளாக சமணத்தில் கூறப்பட்டுள்ளது. நல்ல நம்பிக்கை , நல்ல அறிவு , நல்ல ஒழுக்கம் என்ற மூன்று இரத்தினங்களைப் பின்பற்றி ஆன்ம
விடுதலையாகிய நிர்வாண நிலையை அடைய வேண்டிய வழியை வகுத்துக் காட்டுகின்றன. இல்லற வாழ்வில் ஈடுபட்டு இருப்பவர்கள் அகிம்சை , சத்தியம் அஸ்தேயம் , அப்பரிகிரஹம் , பிரம்மசர்யம் போன்ற ஐம்பெரும் நோன்புகளையும் கடைபிடிக்க வேண்டும். இந்த அனுவிரதங்களோடு சில ஒழுங்கு முறைகளை சமணத்துறவிகள் பின்பற்றும்போது அவை மகா விரதங்கள் எனப்படுகின்றன. 6.2.6.3 அகிம்சை சமணர்க்குரிய பல்வேறு அறங்களுள் அகிம்சையே தலை சிறந்ததாகும். சிந்தை , சொல் , செயல் இவற்றால் பிற உயிர்க்கும் துன்பச் செய்யாமல் அன்பையும் , கருணையையும் காட்டுவதே அகிம்சை ஆகும்.
6.2.6. 4. சமணத் தத்துவம் உலகில் உள்ள எல்லா ஜீவனும் மற்றும் அஜீவனும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால் ஏற்படும் பிறப்பு , இறப்பு என்ற நீண்ட பயணத்திலிருந்து விடுபட வேண்டும். அதற்குக் கடுமையான அறக்கோட்பாடுகளையும் , நெறிகளையும் பின்பற்ற வேண்டும் என்பது சமணத் தத்தவம். 6.2.6.5. கலை சமணர்கள் தங்கள் ஞானிகளை பெருமைப்படுத்தும் வகையில் ஸ்தூபிகள் எழுப்பினார்கள். மதுரா , பந்தல்கண்ட் , மத்திய இந்தியா போன்ற இடங்களில் சமண கட்டடக்கலையின் இடிபாடுகளும் , கல்வெட்டுகளோடு கூடிய படிமங்களும் , தீர்த்தங்கர்களின் சிலைகளும்
காணப்படுகின்றன. மைசூரில் சரவணபெலகுலாவில் காணப்படும் 59 அடி உயரமான கோமதீஸ்வரர் சிலை சமணக்கலைக்கு மேலும் சிறப்பைக் கூட்டுவதாக அமைந்துள்ளது. மேலும் உதயகிரியிலுள்ள புலிக்குகை , எல்லோராவிலுள்ள இந்திரசபை , அடி , கஜீரஹோ போன்ற இடங்களிலுள்ள ஆலயங்களும் சமணர்காலக் கட்டடக் கலைச் சிறப்பினை காட்டுகின்றன. இவ்வாறு சமணம் சமயத்துறையோடு நில்லாமல் கலை , இலக்கியம் , நடைமுறை வாழ்வில் பின்பற்றவேண்டிய ஒழுக்க நெறிகளை மேம்பாடு அடையச் செய்ததன் வாயிலாக இந்தியப் பண்பாட்டிற்கு பெருந்தொண்டாற்றியுள்ளது. 140 அ. ஓரிரு வரிகளில் விடையளி 1. '