text
stringlengths 11
513
|
---|
மகளிர் ஆடவருக்கு சமமானவராக கருதப்படவில்லை. பெண் மகவின் பிறப்பு பெரும் வேதனை தருவதாகவும் ஆண்மகளின் பிறப்பு அளவில்லா மகிழ்ச்சி தருவதாகவும் கருதப்பட்டது. பெண்கள் புனிதச் சடங்குகள் செய்யவும் , வேதங்களைக் கற்கவும் அனுமதியளிக்கப்படவில்லை. சொத்துரிமை அளிக்கப்படவில்லை. கற்பு நெறி போற்றப்பெற்றது. 4.3.5.2. உணவு , உடை மற்றும் பொழுது போக்குகள் உணவு மற்றும் உடையில் எவ்வித மாற்றமும் இல்லை. வீடு கட்டும் முறையில் சில மாற்றங்கள் இருந்தன். இறைச்சி உண்பது போற்றப்படவில்லை. சோமபானத்தை ஒரு சுவை நீராகக் கருதி அருந்தினர். குதிரைப்
|
பந்தயம் , தேரோட்டப் பந்தயம் , வாய்ப்பாட்டுக் கருவி , இசை , நடனம் , சூதாட்டம் போன்றவை முக்கிய கேளிக்கைகளாக இருந்தன. 4.3.6. பொருளாதார நிலை 4.3.6.1. வேளாண்மை வேளாண்மையே மக்களின் முக்கியத் தொழிலாக இருந்தது. செழிப்பான சமவெளிப் பகுதியில் இருமுறை சாகுபடி செய்தனர். நிலத்தை உழுதல் , விதை விதைத்தல் , அறுவடை செய்தல் போன்ற வேலைகளை ஆரியர்களும் செய்தனர். கோதுமை , பார்லி , நெய் போன்ற தானியங்களைப் பயிரிட்டனர். அளவற்ற நிலங்களைப் பெற்ற பிரபுக்கள் இருந்ததாக அறிகிறோம். 4.3.6.2. கால் நடை வளர்ப்பு பசு மதிப்பீட்டு அலகாகத்
|
திகழ்ந்தது. மக்கள் பெரும் எண்ணிக்கையில் பசுக்களை வைத்திருக்க விரும்பினர். அரசர்கள் பசு , காளைகள் , குதிரைகள் அதிகம் பெற இறைவனைத் துதித்தனர். 55 யானையையும் , வீட்டுவிலங்காக வளர்க்க முயன்றதாக அதர்வண வேதத்தால் அறிகிறோம். 4.3.6.3. வாணிகமும் தொழில் துறையும் தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. தச்சர் , மீன் பிடிப்போர் , உழவர் , வீட்டு வேலை செய்வோர் , வயல் வேலை செய்வோர் , சமையல் தொழில் புரிவோர் , கூடைமுடைவோர் , கயிறு தயாரிப்போர் , தேர் செய்வோர் , ஆடை நெய்வோர் , சலவை செய்வோர் , பொற்கொல்லர் , சாயமிடுவோர் என
|
பல தொழில் புரிவோர் வாழ்ந்தனர். அழகிய ' பூ வேலைப் பாடமைந்த ’ ஆடைகளை அணிந்தனர். வெள்ளியினால் தயாரிக்கப்பட்ட பலவகை அணிகலன்களை அணிந்தனர். பண்டமாற்று முறையில் வாணிகம் செய்தனர். “ நிஷ்கா ” என்ற நாணயம் வழக்கத்தில் இருந்ததாக அறிகிறோம். 4.3.7. கல்வி முறை கல்வியின் குறிக்கோள் ஆள்மா , இறைவன் அல்லது பரம்பொருள் பற்றிய அறிவைப் பெறுவதே என்றிருந்தது. குருகுலக் கல்வி முறையில் 12 ஆண்டுகள் ஆசிரியருடன் தங்கி கல்வி பயின்றனர் ஆசிரியருக்கு வேள்வியில் உதவுதல் , கால் நடையைப் பராமரித்தல் , மேலும் குருவிற்கு வேண்டிய உணவை தேடி வருதல்
|
இன்றியமையாதக் கடமைகளாகக் கருதப்பட்டன. கல்வியில் பெரும் முன்னேற்றத்தை காணமுடிந்தது. பேச்சுப் போட்டிகள் , பட்டி மன்றங்கள் நடத்தப்பட்டு பரிசுகள் அளிக்கப் பட்டன. கல்வி வாழ்க்கைக்கு உகந்ததாக படிப்படியாக மாற்றம் பெற்றது. 4.3.8. சமய நிலை இக்காலத்தில் சடங்குகள் , ஆன்மதத்துவக் கோட்பாடுகள் துறவுநிலை போன்றவை சமய வாழ்க்கையில் மாற்றங்களை தோற்றுவித்தன. “ பிரம்மா , ” “ விஷ்ணு ” “ சிவன் ' ஆகிய மும்மூர்த்திகளை வணங்கினர். 56 4.3.8.1. தவம் தவம் செய்வது சிறப்பானதாகக் கருதப்பட்டது. மனதையும் , ஆன்மாவையும் தூய்மைபடுத்த தவம்
|
பெருந்துணை புரிவதாகக் கருதினர். பேரறிவையும் , மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட நிலையையும் அடைய தவம் உதவுவதாகக் கருதினர். 43.8.2. தத்துவம் சடங்குகளுடன் தத்துவக் கருத்துகளும் பெருகின. ஆன்மா , இறைவள் , நரகம் , மறுபிறவி கர்மவினை , சொர்க்கம் , வீடுபேறு போன்றவை தத்துவத்தில் இடம்பெற்றன. மக்கள் இத்தகையத் தத்துவக் கருத்துகளை உணர்ந்து பின்பற்றி நற்கதியடைந்தனர். அரசர்களும் , ஆட்சியாளர்களும் ஈடுபாடு கொண்டிருந்தனர். மேலும் இத் தத்துவக் கருத்துகள் வளரத் துணை புரிந்தனர். 4.3.8.3. ஆன்மாவும் பிரம்மமும் ஆன்மா உயிரின் அழியாத
|
அடிப்படைக்கூறு. இவ் உண்மையை உபநிடதங்கள் ஏற்றுக்கொள்கின்றன. உடநிடதங்கள் சடங்குகளையும் வேள்விகளையும் ஏற்கவில்லை. ஆன்மாவின் முக்கிய குறிக்கோள் அழிவற்ற பரப்பிரம்மத்தை அடைவது. இதை உபநிடதமாக வாக்கியமான “ தத்வமஸி ” “ நீ தான் அது ” என்பதும் அகம் பிரம்மாஸ்மி " நான் பிரம்மம் " என்பதுமாகும். இப்பேருண்மையை அடைய உலக ஆசைகளும் ஆணவமுமே தடைகளாக உள்ளன என்ற கருத்து நிலவியது. 4.3.8.4. வினை , வீடுபேது , மறு பிறவி இக்காலத்தில் அவரவர் செய்கின்ற வினைக்கேற்ப வாழ்வு அமையும் என்ற கருத்து நிலவியது. வினையாவது நல்வினை , தீவினை
|
எனப்பட்டது. இவ்விரு வினைகளில் இருந்து விடுபட்டு வீடுபேற்றை அடைவதே முக்கியம் என கருதப்பட்டது. இந்நிலை அடையாதவரை செய்வினைக்கேற்ப மறுபிறவி உண்டு என்ற கோட்பாடு இருந்தது. இவ்வாறு முற்கால , பிற்கால வேத காலங்களில் கண்ட மக்களின் வாழ்க்கை முறைகள் சமய , தத்துவக் கோட்பாடுகள் அக்கால மக்களின் பண்பாட்டுக் கருவூலங்களாக அமைந்திருந்தன. 57 4. 4. வேதங்களின் மேன்மையும் இன்றியமையாமையும் 4.4.1. பாரதப் பண்பாட்டின் மூல ஆதாரம் வேதங்களே அ ) வேதங்கள் காலம் கடந்தவை. மனிதனை மீறியவை. மனித சம்பந்தமே இல்லாமல் தோன்றியவை. எடுத்துக்காட்டாக
|
புவியீர்ப்பு சக்தி என்ற சாதாரண சக்தி மனிதனுக்கு முன்னரே இருப்பது. இச்சக்தி எவ்வாறு என்று தோன்றியதோ அதுபோலத்தான் வேதங்களும். அந்த சக்திக்கு மீறிய வேத உண்மைகளைக் கண்டறிந்தவர்கள் தான் ரிஷிகள். ஆ ) வேதமாகிய ஒலியில் இருந்து தான் பிரபஞ்சம் - உலகம் தோன்றியதாகக் கருதப்படுகிறது. பிழையின்றித் திருத்தமாய் உச்சரிப்பதால் வேத மந்திரங்களுக்கு சக்தி ஏற்படுகிறது என்பதால் அவற்றைக் காதால் கேட்டு கற்பதே சிறந்தது. இதனாலேயே வேதங்களுக்கு ' சுருதி ’ என்ற பெயரும் தோன்றியது. மேலும் இதனால் தான் வேதங்களுக்கு ‘ எழுதாக் கிளவி ’ -
|
எழுதப்படாமல் கேட்டு உணரத்தக்கவை என்னும் பெயர் நிலவி வருகிறது. ஈ ) வேதங்கள் எண்ணற்றவை. அதில் நம் ரிஷிகளுக்குத் தோன்றியவை நான்கு. உ ) வேதம் பல்வேறு உணர்வுகளைத் தூண்டக்கூடிய ஒலிகளை உடையது. வார்த்தைகளாயினும் மிக உயர்ந்த பொருள் உடையவை. உலக வாழ்க்கை , ஆன்மிக வாழ்க்கை இரண்டிற்கும் பயன்தரும் உபதேசங்கள் வேதத்தில் உண்டு. ஒவ்வொரு உயிரும் தோன்றி மடிகின்ற வரையில் எவ்வாறு வாழ்ந்தால் மனநிறைவை அடைய முடியும் என்பதற்கானத் தத்துவங்களைக் கொண்டது. ஊ ) தனிமனித வாழ்க்கை , சமூக வாழ்க்கை , தனிமனிதன் சமூகத்தில் எவ்வாறு நடந்து
|
கொள்ளவேண்டும் , பொது மக்களின் கடமை பற்றியெல்லாம் வேதங்கள் விளக்கியுள்ளன. 58 ள " தன்னைத்தாளே அறிந்து கொள்ளும் " ஆத்ம பலமே வேதத்தின் முக்கிய இலட்சியம் ஆகும். எனவே உபநிடதங்கள் " எல்லா வேதங்களும் சேர்ந்து ஒரு பொருளைத்தான் சொல்கின்றன ” என்பதை விளக்குகின்றன. இத்தகைய மேன்மை பொருந்திய வேதத்தைக் கற்றுணர்ந்து நம் வாழ்வில் பின்பற்றி உயர்வதே மனித வாழ்வின் குறிக்கோளாய் இருக்க வேண்டும். 4.4.2. வேதங்களின் இன்றியமையாமை வேதங்கள் இறைவன் , ஆன்மா , உலகைப் பற்றி மட்டுமே கூறவில்லை. இவற்றோடு நெருங்கிய தொடர்புடைய மனித ஒழுக்கம்
|
பற்றியும் விரிவாகக் கூறியுள்ளன. இறைவன் ஆன்மா பற்றி ஒருவன் எத்தகையக் கருத்துகளை கொண்டுள்ளானோ அவ்வாறே அவனது ஒழுக்கமும் அமையும். மேலும் இறைவன் ஆன்மா என உண்டு என்பதை ஏற்றுக்கொள்பவனுக்கும் ஏற்காதவனுக்கும் வேற்றுமைகள் இருந்தே தீரும். வேதங்கள் மனிதனின் கடமையை ஐந்தாகப் பிரித்துள்ளன. தெய்வம் , ஞானிகள் , பிதிரர் , உடன்வாழும் பிற மாந்தர் , மற்றும் இதர பிராணிகளுக்கும் தன்னால் இயன்றவற்றைச் செய்ய மனிதன் கடமைப்பட்டவன் என்கின்றன. இதனையே வள்ளுவர் , “ தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல்
|
தலை ”. என்பது குறிப்பிடத் தக்கது. வேதங்களும் ஐந்து கடமைகளைக் கூறுகின்றன. குறளும் அதே ஐந்து கடமைகளை வலியுறுத்துகின்றது. வேதங்கள் மனித வாழ்வியல் ஒழுக்கநெறிகளை முறைப்படுத்தி பின்பற்ற வேண்டுவன , செய்ய வேண்டுவன , தவிர்க்க வேண்டுவன என வகைப்படுத்திக் கூறுகின்றன. மேலும் சுயநலமின்மை , தியாகம் , அன்பு , விருந்தோம்பல் ஆகியவற்றை இன்றிமையாத அறங்களாக வேதங்கள் கூறுகின்றன. சூதாடல் , பிறன் மனை விழைதல் , பொய் பேசுதல் , மது அருந்துதல் ஆகியவற்றை பெரும் பாவச் செயல்களாக வேதங்கள் கண்டிக்கின்றன. எனவே வேதங்கள் தனி மனித வாழ்விற்கும்
|
சமுதாய வாழ்விற்கும் உரிய உயரிய கருத்துகளைக் கூறுவதால் மதித்து போற்றப்பட வேண்டிய அறிவுப் பெட்டகங்கள் என்பதை உணர்தல் அவசியம். 4.5. புராணங்கள் இந்தியாவின் இருபெரும் இதிகாசங்களாகிய இராமாயணம் , மகாபாரதம் தோன்றி இந்து சமயத்தின் தத்துவக் கோட்பாடுகளை பிரதிபலித்தன. கற்றறிந்த சான்றோரும் , கல்வியறிவில்லாத பாமரமக்களும் அரிய உண்மைகளை உணரும் வண்ணம் செய்த பெருமைக்குரியன. இவ்விரு இதிகாசங்களும் , புராணங்களும் நம் பண்டைய வாழ்க்கை நெறிமுறைகளை நாம் அறியும் வண்ணம் உதவுகின்றன. இனி இப்புராணங்கள் தோன்றிய காலம் மற்றும் அவற்றின்
|
பண்புகள் , நோக்கங்கள் , உணர்த்தும் முக்கியக் கருத்துகளை விரிவாகக் காண்போம். 4.5.1. புராணம் சொல் விளக்கம் புராணம் என்பது வடமொழிச்சொல். இச் சொல்லுக்கு ' பழமை ’ என்பது பொருள். எனவே இவற்றில் கூறப்படும். செய்திகள் பழங்காலத்தைச் சார்ந்தவை எனக் கருதப்படுகின்றன. புராணம் என்ற சொல் பொதுவாகத் தொன்று தொட்டு வழங்கிவந்த தெய்விகக் கதைகளைக் குறிக்கின்றது. ‘ புராணம் ’ என்பது பழைய கதை என்று பொருள்படும். 45.2. உணர்த்தும் செய்திகள் புராணங்கள் பண்டைய வரலாற்றுப் பட்டியல்கள் , மரபுரைக் கோவைகள் , தத்துவம் , யோகம் , அனுபூதிநிலைகள்
|
ஆன்மிகத்தை 60 உய்த்துணரும் நிலை போன்றவற்றை தன்னகத்தே கொண்டன. இக்கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றை எளிமையாக உணர்த்தும் வண்ணம் நீண்ட அல்லது குறுகிய உரையாடல்கள் நிரம்பிய அறிவும் பெட்டகங்கள் எனலாம். 4.5.3. காலம் புராணங்கள் மிகப்பழமையானவை. எப்பொழுது தோன்றியன எனத் திட்டவட்டமாகக் கூற இயலாது. ஒவ்வொன்றும் வேறு வேறு கால வரையறையில் எழுந்ததாகத் தெரியவருகிறது. சில அறிஞர்கள் அவை உபநிடதங்களைப்போன்று பழமையானவை என்று கருதுகின்றனர். புராணகாலம் கி.பி. 300 லிருந்து கி.பி. 1000 க்கு உட்பட்டதென யு.எஸ்.சர்மா குறிப்பிடுகிறார்.
|
கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கும் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது என்று வேறு சிலர் கருதுகின்றனர். இப்புராணங்களில் மிகப் பழமையானதாக கருதப்படும் “ வாயு புராணம் ” கி.பி. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. 4.5.4. புராணப் பண்புகள் பொதுவாகப் புராணங்களில் பின்வரும் ஐந்து கருத்துகள் இடம் பெற்றிருக்கும். இவற்றை “ பஞ்சலட்சணங்கள் ” என்று வழங்குவர். அவை முறையே : 1. படைப்பு ( அண்டப்படைப்பு ) 2. உலகின் படைப்பின் விரிவும் , ஒடுக்கமும் ( அடுத்து கீழுள்ள படைப்பு ) 3. ஆதி
|
வம்சாவளி - மன்வந்திரர்களைப் பற்றிய செய்தி 4. அக்காலச் சம்பவங்கள் - வரலாறு 5. சூரிய சந்திரகுல அரசர்களின் வம்ச விளக்கம் ( அரச குடிவழிப்பட்டியல். 4.5.5. புராணங்களின் எண்ணிக்கையும் எழுதியவரும் புராணங்களைத் தொகுத்தவர் " வேதவியாசர் ” எனவும் , எழுதியவரும் இவரே என்ற மற்றொரு கருத்தும் நிலவுகிறது. 61 இப்புராணங்களின் தொகுப்பை உலகிற்குத் தெளிவு படுத்திக்காட்டிப் புரிந்துகொள்ளும் நிலையை ஏற்படுத்தியவர் " சூத புராணிகர் ” எனவும் கூறுகின்றனர். புராணங்கள் மும் மூர்த்திகளின் அடிப்படையில் சிவபுராணம் , விஷ்ணு புராணம் , பிரம்ம
|
புராணம் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. சிவ புராணங்கள் : இப்பத்தும் சிவபெருமானின் பெருமையைக் கூறுவன. சிவ புராணம் ( எ ) வாயு புராணம் பவிஷ்ய புராணம் மார்க்கண்டேய புராணம் இலிங்க புராணம் வராக புராணம் மத்ஸ்ய புராணம் கூர்ம புராணம் பிரம்மாண்ட புராணம் என்பனவாம். விஷ்ணு புராணம் - இந்நான்கும் திருமாலின் பெருமையை கூறுவன ஆகும். வைனவம் எனப்படும் விஷ்ணு புராணம் பாகவதம் எனப்படும் பாகவத புராணம் நாரதீயம் எனப்படும் காருடம் எனப்படும் நாரத புராணம் கருட புராணம் பிரம்ம புராணங்கள் பெருமையை விளக்குவன ஆகும். இவ்விரண்டும் பிரம்மனின்
|
பிரம்மம் எனப்படும் பிரம்ம புராணம் பதுமம் எனப்படும் பத்ம புராணம் அக்னியின் பெருமையக் கூறும் ' ஆக்ளேயம் ' எனப்படும் அக்னி புராணமும் , சூரியனின் பெருமையைக் கூறும் பிரமை வர்த்தம் எனப்படும் பிரமைவர்த்த புராணம். ஆக இப்புராணங்கள் எண்ணிக்கை ‘ பதினெட்டு ' என்பர். 62 தமிழ்ப் புராணங்கள் பிற்காலத்தில் தமிழில் தோன்றியவை தமிழ்ப்புராணங்கள். சிவபெருமான் மனித உருவில் தோன்றி சிவனடியார்களுக்கு தீட்சை அளித்தும் , துயரங்களை போக்கவும் செய்தார். இச்செயல்களை திருவிளையாடல் எனவும் இவற்றை இனிய தமிழில் நான்கு புராணங்களாக சுவாமி
|
சிவானந்தர் கூறுகிறார். அவை முறையே ‘ சிவ புராணம் , ’ ‘ பெரிய புராணம் , ’ ‘ சிவபராக் கிரமம் ’ மற்றும் ‘ திரு விளையாடற் புராணம் என்பனவாகும். பதினெண புராணங்களை ' மகா புராணங்கள் ’ என்று வழங்குவர். இவற்றைத் தவிர பதினெட்டு புராணங்கள் உப புராணங்கள் என்றழைக்கப்படும். அவையாவன சூரிய புராணம் : கல்கி புராணம் துர்வாச புராணம் கபில புராணம் நந்திகேஸ்வர புராணம் கணேசபுரானம் சனத்குமார புராணம் வாசிஷ்ட புராணம் பராசர புராணம் பிருகத்தர்ம புராணம் மாவை புராணம் காளிகா புராணம் நரசிம்ஹ புரானம் பார்க்கவ புராணம் கம்ப புராணம் பரான புராணம்
|
முத்கலா புராணம் பசுபதி புராணம் என்பன வாகும். 4.5.6. புராணங்களின் நோக்கம் புராணம் சமயக் கருத்துகளை கொண்ட இலக்கியம். புராணம் ஓர் அறிவியல் , அது உலகின் தொடக்க காலம் முதல் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளையும் சீரிய பண்பாட்டையும் சிறந்த எடுத்துக்காட்டுகள் மூலமாகவும் கதைகள் வாயலாகவும் விளக்குகின்றன. கற்பவர்களை வாழ்வின் உயரிய நிலையை அடையத் தூண்டுகின்றன. ஆழ்ந்த நுண்ணிய கருத்துகளைச் சுவையான கதைகள் மூலம் மக்களின் மனதில் எளிதாக பதியச் செய்வதே இதன் தலையாய நோக்கம். வேதக் கட்டளைகளான “ உண்மை பேசு ” - ஸத்யம் வத
|
“ தர்மம் செய் ” - தர்மம் சர என்பவனவற்றை எளிய நீதிக்கதைகள் வாயிலாக மக்கள் மனதில் உணர்த்தி கடைபிடிக்கச் செய்வது புராணத்தின் 63 நோக்கமாகும். சமய நல்லறிவையும் , இறை பக்தியையும் கலந்த தெய்விக உணர்வை வளர்ப்பது புராணங்களாகும். உலகிள் படைப்பு , மனுவின் காலம் , அரச மரபுகள் தலம் ( இடப் பெருமை ) தீர்த்தம் ( புண்ணிய நீர் நிலைகள் ) விரதம் ( காப்பது விரதம் ) மந்திரம் , யோகம் , பக்தி , ஞானம் , கருமம் , துதி , இறைவனை போற்றுதற்குரிய ஸகஸ்ர நாமம் , அஷ்டோத்திரம் , தருமம் , சிவனின் திருவிளையாடல்கள் விஷ்ணு அவதாரங்கள் என பல்வேறு
|
கருத்துகளை மக்கள் அறியும்படி செய்வதே நோக்கம் எனலாம். புராணங்களின் இன்றியமையாமை புராணங்கள் பழமை வாழ்ந்தவை என்றும் சமயக் கருத்துகளை மட்டுமே பிரதிபலித்தன எனவும் கொள்ளுதல் தவறு. புராணங்கள் வாழ்வின் பல்வேறு நிலைகளில் மக்களுக்கு பயன்படும் அரிய உண்மைகளை எளிமையாக ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கூறியுள்ளன. 1. புராணங்கள் தெய்வங்கள் , அத் தெய்வங்கள் அவதாரங்கள் மூலம் நிகழ்த்திய அருஞ் செயல்களைக் கூறுகின்றன. அத்துடன் அரசியல் , மருத்துவம் , சடங்குகள் , சமூக விதிமுறைகள் வேதாந்தம் , தத்துவம் , சமயம் என்ற பல்வேறு நிலைகட்கு நீண்ட
|
விளக்கங்களைத் தருகின்றன. 2. பண்டைய நாகரிகத்தின் சிறப்புக் கூறுகள் என போற்றப்பட்டு இன்றும் உலகில் நிலைத்துள்ள உறுதிப் பொருள்களாகிய அறம் , பொருள் , இன்பம் , வீடு ஆகியவற்றைப் பற்றித் தெளிவான கருத்துகளைத் தருகின்றன. 3. படைப்பு , அனுபூதி நெறி , விஷ்ணு புராணத்தில் கூறப்படும் “ பரமாத்மாவிற்கு மேலானது ஏதுமில்லை ” என்ற உயரிய கருத்துகள் புராணங்களில் இடம் பெற்றுள்ளன. 4. கர்ம வினைகளிலிருந்தும் , அவற்றின் விளைவுகளில் இருந்தும் விடுபட்டு அமைதி பெறுவதற்கான வழிமுறைகளைக் கூறுகின்றன. அக்கால மக்களின் வாழ்க்கை , அரசு முறை
|
முதலானவற்றை அறியப் பெருந்துணை புரிகின்றன. 6. புராணங்கள் கடவுள் எங்கும் இருக்கிறார் , அவருக்குப் பல திருநாமங்கள் உண்டு , மனித இதயத்தில் கடவுள் இருக்கிறர் என்ற கருத்துகளை விளக்கிக் கூறுகின்றன. பக்தன் , சத்யம் , தருமம் , புலனடக்கம் , தெய்வபக்தி , சகிப்புத் தன்மை , தன்னம்பிக்கை ஆகிய குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இக்குணங்களுக்கு எடுத்துக்காட்டுகளாக இராமன் , கண்ணன் , அர்ச்சுனன் , ஹனுமன் , சபரி , கஜேந்திரன் போன்ற பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன. இத்தகைய நல்ல நூல்களைப் படிப்பதன் மூலம் நல்ல குடிமக்கள்
|
உருவாக்கப்படுகிறார்கள். அரிச்சந்திர நாடகத்தைப் பார்த்து மகாத்மா காந்தியும் , புராணக் கதைகளை கேட்டு இராம கிருஷ்ணரும் , விவேகானந்தரும் , சிவாஜியும் உருவானதாக வரலாறு கூறுகின்றது. பொதுவாக மக்கள் அதிகமாக தம் வாழ்வியல் உயரிய நெறிகளை எளிதாகப் புரிந்துகொண்டு பின்பற்ற உதவுவன புராணங்களே என்றால் அது மிகையாகாது. 4. 6. நவீன காலத்திற்கு வேதங்கள் மற்றும் புராணங்களின் ஏற்புடைமை வேதங்களில் கூறப்பட்டுள்ள அரிய உண்மைகள் இன்றைய உலகில் அறிவியல் உண்மைகளோடு மிகவும் ஏற்படையனவாய் காணப்படுகின்றன. மேலும் இன்றைய வாழ்வின் அடிப்படைப்
|
பண்பாட்டுக் கூறுகளையும் பிரதிபலிக்கின்றன. 1. புவியின் வயது , விண்வெளிகளின் எல்லைகள் , சூரியனின் உட்பகுதி , வானநூல் பற்றிய கருத்துகளை வேதங்களும் , புராணங்களும் கூறியுள்ளன. அவை அனைத்தும் இன்றைய அறிவியல் உலகால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகளாகும். 2. ஆயுர்வேதம் எனப்படும் மருத்துவ இயல் , தனுர் , வேதம் எனப்படும் போர்க்கலை , காந்தர்வ வேதம் எனப்படும் நுண்கலை ஆகிய மூன்றும் வேதங்களாலும் , இதிகாசங்களாலும் விளக்கப்படுகின்றன. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளும் இதனை ஏற்றுக்கொள்கின்றன. 3. மருத்துவத்துறையில் உயர்ந்த நிலையாக
|
இன்று உறுப்புகளை மாற்றும் அறுவைச் சிகிச்சையைத் தமிழ்ப் புராணம் கூறுகிறது. நாயன்மார்களுள் ஒருவரான திண்ணனார் எனப்பெற்ற கண்ணப்பர் தன் இறைபக்தி மிகுதியால் சிவபெருமானின் கண்ணில் இருந்து வழியப்பெற்ற இரத்தத்தை நிறுத்த தன் ஒரு கண்ணைப் பெயர்த்து அப்பியதாகவும் மேலும் மற்றொரு கண்ணிலிருந்து இரத்தம் வர உடனே மறு கண்ணைப் பெயர்த்து அப்பி இறைவனின் துயரை போக்கியதாகவும் அறிகிறோம். 4. சித்த வைத்தியம் என்ற முறை ஆன்மிகத்தையும் மருத்துவத்தையும் இணைக்கிறது. 5. மூலிகை மருத்துவம் பற்றிய தெளிவான அறிவை ஆயுர்வேத சாஸ்திரம் கூறுகிறது. 6.
|
உலோக வியல் பற்றிய கருத்துகள் வேதங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. 7. காலக் கணக்குக்கு உதவும் கணிதசாஸ்திர அறிவும் வேதத்தில் கூறப்பட்ட வாய்பாடேயாகும். 8. விண்வெளியில் காணப்படும் பல்வேறு கிரகங்கள் நட்சத்திரங்கள் பற்றி விளக்கமான செய்திகள் வேதத்தில் காணப்படுகின்றன. 9. நியாய வைசேடிகம் என்ற அணு விஞ்ஞானம் அணுவின் அமைப்பையும் , தன்மையையும் , ஆற்றலையும் குறிப்பிடுகின்றது. 10. வேதத்தில் இந்தியாவின் இருப்பிடம் புவியியல் வல்லுநர்களால் கூறப்பட்டுள்ள அட்ச , தீர்க்க ரேகைகள் தவறாமல் கூறப்பட்டுள்ளன. கிரஹணங்கள் சம்பவிக்கின்ற
|
காலத்தை முன்கூட்டியே கணக்கிடும் கலையை வேதங்கள் விளக்கிக் கூறுகின்றன. 66 இவ்வாறே வாழ்வில் இன்றியமையாத அறக்கருத்துகள் பலவற்றையும் வேதங்கள் தெளிவாகக் கூறுகின்றன. மனித நேயமே வாழ்வின் உயர்ந்த நெறி என்பதை உலகு இன்று போற்றுகின்றது. ஆனால் மிகப்பழமையான வேதங்களோ தாவரங்கள் , விலங்குகள் முதலானவற்றையும் புனிதமாகப் பேணி வளர்க்க வேண்டும் என்கின்றன. இச் செயலை மனித நேயத்திற்கு அப்பாற்பட்ட ‘ ஜீவகாருண்ய ஒழுக்கம் ’ எனலாம். “ வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் , ” என்ற வள்ளலார் வாக்கு இதனை மெய்ப்பிக்கின்றது. இவ்வாறு நம்
|
நடைமுறை வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்விலும் வேதங்களும் , புராணங்களும் உணர்த்தும் பண்பாட்டு நெறிகள் , அறிவியல் பூர்வமாகவும் ஆன்மிக உணர்வாகவும் மிளிர்கின்றன. 67 பயிற்சி வினாக்கள் அ. ஓரிரு வரிகளில் விடையளி 1. ' வேதம் ' என்ற சொல்லின் பொருள் யாது ? 2. தமிழில் ' வித் ' என்னும் சொல்லின் பொருள் என்ன ? 3. வேதங்கள் எத்தனை ? அவையாவை ? 4. முற்கால வேதகாலம் எனப்படுவது யாது ? 5. பிற்கால வேதகாலமாவது யாது ? 6. இந்தோ ஆரியர்கள் குறிப்பு வரைக. 7. ஆரியவர்த்தம் என்றால் என்ன ? 8. பிராமணங்களில் கூறப்படும் செய்திகள் யாவை ? 9. '
|
நான்கு வேதங்கள் ’ யாவை ? 10. ' உபவேதங்கள் ' யாவை ? 11. ' ஜனா ' என்றால் என்ன ? 12. கிராமத் தலைவன் எவ்வாறு அழைக்கப்பட்டான் ? 13. ரிக் வேத கால விளையாட்டு , பொழுதுபோக்குகள் யாவை ? 14. பிற்கால வேதகாலத்தில் தோன்றிய இலக்கியங்கள் யாவை ? 15. ' வேத அங்கங்கள் ’ யாவை ? 16. பிற்கால வேதகாலத்தில் வரிவசூல் செய்தவரின் பெயரைக் கூறு. 17. பிற்கால வேதகாலத்தில் குடும்ப வாழ்வு , மணமுறை பற்றி எழுதுக. 18. பிற்கால வேதகாலத்தில் சிறந்து விளங்கிய பெண்மணிகள் இருவரைக் கூறுக. 19. பிற்கால வேத கால மக்களின் பொழுது போக்குச் செயல்கள் யாவை ? 20.
|
தவத்தால் அடையும் நன்மைகள் யாவை ? 21. தத்துவக் கருத்துகள் மக்களுக்கு உணர்த்துவன யாவை ? 22. இருவினைகளாகக் கூறப்படுவன யாவை ? 23. பிற்கால வேதகால மக்களின் பண்பாட்டுக் கருவூலங்களாக அமைந்தவை யாவை ? 24. இந்தியாவின் இருபெரும் இதிகாசங்கள் எவை ? 25. ‘ புராணம் ’ என்ற சொல்லின் பொருள் யாது ? 26. புராணங்களில் மிகப் பழமையானது எது ? 27. புராணங்களைத் தொகுத்தவர் யார் ? 28. ‘ புராணங்கள் ’ எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன ? 29. விஷ்ணுபுராணங்கள் யாவை ? 30. ‘ ஆக்னேயம் ’ என்றால் என்ன ? 31. ' பிரம்மபுராணங்கள் ’ எவை ? 32. ' பிரமைவர்த்த
|
புராணம் ' என்பது யாது ? 33. புராணத்தின் நோக்கம் யாது ? 34. வேதங்களில் காணப்படும் அறிவியல் கண்டுபிடிப்புகள் யாவை ? ஆ. ஒரு பத்தி அளவில் அல்லது பத்து வரிகளுக்கு மிகாமல் விடையளி 1 வேத இலக்கியங்கள் யாவை ? அவற்றை வகைப்படுத்து 2. ‘ சம்ஹிதைகள் ' - விவரி. 3. ஆரண்யகங்களின் வாயிலாக நாம் அறிவன யாவை ? 4. ' உபநிடதங்கள் ' - விளக்குக. 5. ‘ சுருதி ’ , ‘ ஸ்மிருதி ’ பற்றி நீவிர் அறிவன யாவை ? 6. வேதங்களின் தோற்றம் பற்றிய கருத்துகளை கூறு ? 7. உபவேதங்கள் கூறும் செய்திகளைத் தொகுத்துக் கூறுக ? 8. ' சமிதி ' , ' சபா ' பற்றி விவரி. 9.
|
ரிக் வேத கால பொருளாதார நிலையை விளக்குக ? 10. முற்கால வேதகாலத் தொழில் - வணிகம் பற்றி குறிப்பு வரைக. 11. ரிக் வேதகால சமயநிலை விளக்குக. 12. பிற்கால வேதகாலத்தில் நிலவிய அரசியல் முறையை விவரி. 69 13. பிற்கால வேதகாலத்தில் மகளிர் நிலை எவ்வாறு இருந்தது ? 14. ஆன்மா , பிரம்மம் பற்றிய பிற்கால வேத கால கருத்துகள் யாவை ? 15. புராணம் உணர்த்தும் செய்திகள் யாவை ? 16. புராணங்கள் தோன்றிய காலம் பற்றி அறிவன யாவை ? 17. ‘ பஞ்சலட்சணங்கள் ' பற்றி ஒரு பக்க அளவில் விடையளி 18. ‘ சிவபுராணங்கள் ’ யாவை ? 19. ' தமிழ்ப் புராணங்கள் ’ பற்றிக்
|
கூறு. 20. புராணங்களின் நோக்கங்கள் யாவை ? 21. ‘ ஜீவகாருணிய ஒழுக்கம் ’ என்றால் என்ன ? இ. ஒரு பக்க அளவில் அல்லது முப்பது வரிகளுக்கு மிகாமல் விடையளி 1. நான்கு வேதங்களில் கூறப்படும் செய்திகளைத் தொகுத்துக் கூறுக ? 2. ரிக் வேதகால அரசியலமைப்பை விவரி. 3. ரிக்வேத கால சமுதாய நிலையை விவரி. 4. பிற்கால வேதகாலத்தில் சமுதாயநிலைப் பற்றித் தொகுத்து எழுதுக ? 5. பிற்கால வேதகால மக்களின் பொருளாதார நிலைபற்றி விளக்குக. 6. பிற்கால வேதகால சமயநிலைப் பற்றி நீவிர் அறிவன யாவை ? 7. பதினெண் புராணங்கள் யாவை ? வகைப்படுத்துக. 8. புராணங்களில்
|
இன்றியமையாமையை விவரி. ஈ. நான்கு பக்கங்களுக்கு மிகாமல் விடையளி 1. முற்கால வேதகாலப் பண்பாடு பற்றி தொகுத்துக் கட்டுரை வரைக. 2. பிற்கால வேதகாலப் பண்பாடு பற்றிய செய்திகளைக் கட்டுரை வடிவில் விளக்குக. 3. வேதத்தின் மேன்மை இன்றியமையாமையைப் பற்றி கட்டுரை வரை. 4. நவீன காலத்திற்கு வேதங்கள் , புராணங்களின் ஏற்புடைமையை விவரி. 5. இந்தியப் பண்பாட்டிற்கு தமிழ்நாட்டின் கொடை 5.1. தென்னகப் பண்பாடு “ கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி ”. தமிழ்க்குடி. இதனால் தமிழ்க் குடியின் பழமையும் வீரமும்
|
புலப்படுகின்றது. மனிதனின் தோற்றம் எவ்வளவு தொன்மையானதோ அவ்வளவு பழமையானது தென்னகப்பண்பாடு. தென்னவர் வாழ்ந்த நாட்டை ‘ திராவிடம் ’ என்றும் அவர்களின் மொழியைத் திராவிட மொழி என்றும் வரலாறு கூறுகிறது. பண்பாடு மிக்க அவர்கள் பேசிய மொழி தமிழ். மொழியினால் சிறப்புப் பெற்றவர்கள் தமிழர்கள். ' உணவு தேடல் ’ காரணமாக பிரிந்தவர்கள் , தங்களுக்குள் தொடர்பு இன்மையால் பேசிய மொழிகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. அவையே இன்று திராவிட மொழிகள் என்று கூறப்படும் தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் ஆகும். 5.1.1. தமிழ்ப் பண்பாடு தமிழர் சுமார்
|
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்திருந்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன. மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர். தமிழர் வாழ்வை அகவாழ்வு , புறவாழ்வு என இரண்டாக இலக்கணம் வகுத்து வாழ்ந்தமை பண்பாட்டின் சிகரமாகக் கருதப்படுகிறது. 5.1.2. தமிழ்ப் பண்பாட்டின் கூறுகள் இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி ; தான் தோன்றிய கால மக்களின் நாகரிகம் , பண்பாடு , பழக்கவழக்கங்கள் , வாழ்க்கை முறை , அரசு , அமைச்சர் , ஆட்சிமுறை , போர் , வீரம் , காதல்
|
போன்றவற்றை 71 நமக்குக் காட்டி நிற்கின்றன. நமக்குக் கிடைத்திருக்கும் சங்க இலக்கியங்களிலிருந்து தமிழர் பண்பாட்டை நன்கு அறிகிறோம். பண்பாட்டின் கூறுகள் சிலவற்றைப் பற்றி இங்கு காண்போம். 5.1.2.1. காதல் தமிழர் காதலை அன்பின் ஐந்திணை என்றனர். இஃது ஒருவனும் ஒருத்தியும் கொண்ட உளமொத்தத் தூயகாதல் வாழ்க்கையாகும். இது களவு , கற்பு என இரண்டாக அமையும். ஐந்திணை ஒழுக்கத்தில் தலைமக்களாக விளங்குபவர்கள். அறிவும் , செல்வமும் உடைய நல்லகுலத்தில் பிறந்தவர்கள். இக்காதல் நாடகத்தில் தலைவன் , தலைவி நற்றாய் , செவிலித்தாய் , தோழி , பாணன் ,
|
பாடினி போன்றோரும் ஊர் மக்களும் பாத்திரங்களாக வருவர். இக்காதல் வாழ்வு அறத்திலிருந்து மாறுபடாமல் அன்பின் வழிப்பாட்டாக அமையும். “ மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு " என்று வள்ளுவரும் காதல்வழிவந்த மனை மாட்சியைச் சிறப்பிக்கின்றாார். 5.1.2.2. வீரம் பண்டைய தமிழர்கள் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல் எடுத்துக் கூறுகின்றது. பெரும்பாலும் தற்காப்பு முறையில் தான் போர் நடைபெற்றது. தேர்ப்படை , யானைப்படை , குதிரைப்படை , காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் போரில் ஈடுபட்டன. வெட்சி , வஞ்சி , உழிகை ,
|
தும்பை என்ற நான்கு புறத்திணை பகுதிகளிலும் தமிழர்களின் போர்முறைகள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. அக்காலத் தமிழரிடம் அறப்போர் முறையே அமைந்திருந்தது. இதனை நெட்டிமையார் புறப்பாடலால் அறியலாம். பசுக்களும் , பசுவை ஒத்த பார்ப்பனர்களும் , பெண்களும் , நோயுடையவர்களும் , புதல்வர்களை பெறாதவரும் , யாம் அம்பு 72 விடுவதற்குமுன் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள் , என வீரன் ஒருவன் கூறுவதிலிருந்து தமிழரின் அறப்போர் முறை விளங்கும். “ ஆவும் ஆளியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க்கு
|
அருங் கடன் இறுக்கும் பொன் போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம் அம்பு கடிவிடுமுன் நும் அரண்சேர்மின் " மேலும் வீரர் அல்லாதவர்கள் , புறங்காட்ட ஓடுவார் , புண்பட்டார் , முதியோர் , இளையோர் , இவர்கள் மீது படைக்கலம் செலுத்தலாகாது என்பதும் புறநானூற்றால் அறிய முடிகிறது. 5.1.2.3. நட்பு சங்ககாலத் தமிழர் நட்பினை பெரிதும் மதித்து வாழ்ந்தனர். திருவள்ளுவரும் உண்மையான நட்புக்கு இலக்கணம் கூறியுள்ளார். " முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு ”. உள்ளன்புடன் மனம் மகிழ்ந்து நட்பு கொள்வதே உண்மையான நட்பாகுமென்றார்.
|
கபிலரும் பறம்பு மலைத்தலைவன் பாரியும் நட்பாயிருந்தனர். பாரியின் மகளிர் இருவரையும் பாரி இறந்தபின் கபிலரே மணமுடித்து வைக்கிறார். மேலும் கபிலர் சேரன் செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கண்டு பறம்பு நாட்டின் வளம் , பாரியின் சிறப்பு , அவள் வீரம் , அவனைப் பிரிந்து வாடும் மக்கள் நிலையைக் கூறுகிறார். தன் வறுமையைக் கூறாது , நண்பனின் பிரிவை சேரமன்னனிடம் கூறும் நிலை அவர்கள் நட்பின் ஆழத்தைக் காட்டுகிறது. கோப்பெருஞ்சோழன் தம் மக்களிடம் நாட்டை விட்டு மனம் நொந்து வடக்கிருந்து உயிர் துறக்க முயல்கிறான். அது கேட்டு , இதுவரை
|
கோப்பெருஞ்சோழனை நேரில் பாராமலே நட்புக் 73 கொண்டிருந்த புலவர் பிசிராந்தையார் தாமும் நண்பனுடன் வடக்கிருந்து உயிர்துறக்க வந்து விரும்பியவாறு உயிர் துறக்கிறார். “ அழிவி னவை நீக்கி , ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு ” என்ற வள்ளுவரின் வாக்குப்படி தீமையை நீக்கி , நல்வழியில் செலுத்தி , துன்பம் வரும்போது உடனிருந்து அனுபவிப்பதே நட்பாகும் என்பதற்குத் தாமே சான்றாகிறார் பிசிராந்தையார். அதியமான் நெடுமானஞ்சியிடம் நட்பு கொண்ட ஔவையார் தொண்டை மானிடம் சென்று அதியமானின் வீரம் வெளிப்படுமாறு வஞ்சப்புகழ்ச்சியாகப் பாடி
|
நடக்க விருந்த பெரும்போரைத் தடுத்ததும் சங்க இலக்கியங்களால் அறியப்படும் செய்திகளாகும். அதியமானும் அமிழ்தினும் இனிய நெல்லிக்கனியை தானுண்ணாது ஔவைக்குக் கொடுத்து மகிழ்ந்தான். சங்க காலத் தமிழர் நட்பினை பெரிதும் மதித்துப் போற்றினர். 5.1.2.4. விருந்தோம்பல் ‘ விருந்து ’ என்ற சொல்லுக்குப் ‘ புதுமை ’ என்பது பொருள். உறவினரும் நண்பரும் அல்லாதவராய் புதியராக நம்மிடம் வரும் மக்களை ' விருந்து ' என்றனர் தமிழர். அறியாதவர்களையும் அழைத்து உணவளித்து இடமளித்து உபசரித்து மகிழ்ந்தனர் தமிழர். “ செல்விருந்து ஓம்பி வருவிருந்து
|
பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு ” என்கிறார் திருவள்ளுவர். “ அறவோர்க்கு அளித்தல் , அந்தணர் ஓம்புதல் , ஆகிய அறங்களைத் தான் செய்யாது விட்டேன் ” என்று கண்ணகி வருந்திக் கூறுவதை சிலப்பதிகாரம் உணர்த்துகிறது. விருந்தினர்களை வெளியில் இருக்கச் செய்து தான் மட்டும் வீட்டின் உள்ளே உண்ணுதல் சாவாமைக்கு மருந்தாகிய அமிர்தமாக இருந்தாலும் வேண்டப்படுவதில்லை என்பதை வள்ளுவர் , “ விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று ” 74 என்று கூறுவதிலிருந்து விருந்தோம்பல் சங்க கால மக்களின் பண்பாக இருந்தமை
|
அறிய முடிகிறது. 5.1.2.5. ஈகை கொடையிலிருந்து வேறுபட்டது ஈகை. திருவள்ளுவர் ஈகைக்கு இலக்கணம் வகுத்துள்ளார். “ வறியார்க்குஒன்று ஈவதேஈகை ; மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து ” என்னும் குறளில் பதில் உதவி செய்ய முடியாத ஏழைகளுக்குக் கொடுப்பதே ஈகையாகும் ; பிற கொடைகள் யாவும் பயன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையை உடையது என்கிறார். இதிலிருந்து ஈகை என்பது வறியவர்களுக்கு பதில் உதவி எதிர்பாராது கொடுக்கும் சிறு உதவியே ஈகை எனக் கொள்ளலாம். வறியோர் பசி தீர்த்தலே ஒருவன் தான் செல்வத்தைச் சேர்த்து வைக்கும் இடமென்று
|
சங்ககால மக்கள் எண்ணி வாழ்ந்தனர். 5.1.2.6. கொடை சங்க காலத்தில் அரசர்கள் கொடை வள்ளல்களாக இருந்திருக்கிறார்கள். தம்மைப் பாடி வரும் புலவர்களுக்கும் மற்றவருக்கும் பொன்னையும் பொருளையும் வரையாது கொடுத்து மகிழ்ந்தமை சங்க இலக்கியங்களால் உணர முடிகிறது. பாரி , ஓரி , காரி , பேகன் போன்றோர் கடையேழு வள்ளல்கள் என்று போற்றப்பட்டனர். பாரி முல்லைக்குத் தேரையும் பேகன் மயிலுக்குப் போர்வையையும் அளித்து அழியாப் புகழ் பெற்றனர். ஆற்றுப்படை இலக்கியங்கள் மன்னர்களின் கொடைத் தன்மையைக் கூறுவனவாக இருத்தலைக் காண்கிறோம். கல்வெட்டுக்கள் ,
|
செப்பேடுகள் மூலமும் மன்னர்களின் கொடைத்தன்மை அறிய முடிகிறது. 5.1.2.7. கற்புடைமை சங்க கால மக்களின் இல்லறம் நல்லறமாக நடந்தமை இலக்கியங்களால் அறிய முடிகிறது. பெண்கள் தற்காத்துத்தற் 75 கொண்டாள் பேணி. சொற்காத்துச் சோர்வு இல்லாதவர்களாகக் கற்புக் கடம்பூண்டு இருந்தமை அறிய முடிகிறது. திருவள்ளுவர் 5.2. முத்தமிழ் “ தெய்வம் தொழாஅள் கொழுநன் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை ” என்று கூறுகிறார். காலத்தில் பெய்து காக்கும் மழைக்குச் சமமானவர்களாகக் கற்புடைய பெண்டிர் மதித்து வணங்கப்பட்டனர். ஆண்கள் போர் முதலியவற்றால் இறந்து
|
படுதலின் , ஆண் இனம் குறைந்தே இருந்தமையால் ஒரு ஆண் இரண்டு அல்லது மூன்று பெண்களை மணந்து வாழ்ந்தமை அறிய முடிகிறது. 5.1.2.8. உலக ஒருமைப்பாடு பண்டைத் தமிழர்கள் நாகரிகம் பண்பாட்டில் சிறந்து இருந்தனர். தமிழ்நாட்டில் உழவு , நெசவு , வாணிகம் போன்ற தொழில்களும் அவற்றின் சார்பு தொழில்களும் சிறந்திருந்தன. கடல்கடந்து வெளிநாடுகளுக்கும் சென்று தமிழர் வணிகம் செய்து சிறந்தனர். நமது பண்பாடு , நாகரிகம் , மொழி யாவும் வெளிநாடுகளில் சிறக்கக் காரணம் பண்டைத் தமிழர்களே. கணியன் பூங்குன்றனார் என்னும் புலவரின் புறப்பாடல் ஒன்றே நம்
|
தமிழரின் உலக ஒற்றுமைக் கொள்கையை உலகுக்குப் பறைசாற்றும். “ யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா ” உலக மக்கள் யாவரையும் உறவாக எண்ணும் பண்டைத் தமிழரின் உள்ளம் உயர்ந்ததேயாகும். கணியன் பூங்குன்றனாரின் “ யாதும் ஊரே யாவரும் கேளிர் ” என்ற புறப்பாடல் வரி ஐக்கியநாடுகள் சபை நுழைவு வாயிலில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் கல்லில் வடித்து பதிக்கப் பெற்றிருக்கிறது என்று எண்ணி மகிழத்தக்கது. உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழி மிகவும் தொன்மை வாய்ந்தது. மொழியியல் வல்லுநர்கள் ஆய்வுகள் பல செய்து தமிழ் மொழியின் தொன்மையைச்
|
சான்றுகள் கூறி நிறுவியுள்ளனர். “ திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் பொங்கு கடல் இவற்றோடும் பிறந்த தமிழ் ” என்று பாரதிதாசன் கூறிய கருத்து இங்கு நோக்கத்தக்கது. ஆண்டு பல ஆயினும் சீரிளமைத் திறத்தோடு திகழும் தீந்தமிழ் மொழி இயற்றமிழ் , இசைத்தமிழ் , நாடகத்தமிழ் என்னும் முப்பிரிவுகளைக் கொண்டு விளங்குகிறது. மனித வளத்தை மேம்படுத்தி , மனித நேயத்தை வளர்க்கின்ற இலக்கியப் படைப்புகள் நிறைந்தது தமிழ்மொழி. அது இயல் , இசை , நாடகம் என முத்தமிழாக முகிழ்ந்து உடல் , உள்ளம் , ஆன்மா ஆகிய மூன்றின் வளர்ச்சியை
|
முழுமையாக்கி நல்ல வளமான ஆளுமையை அளிக்கிறது எனில் மிகையாகாது. எனவேதான் நாட்டு மக்களுக்கு நல்வழி கூறவிழைந்த தமிழ் மூதாட்டி ஔவையாரும் விநாயகரை “ சங்கத் தமிழ் மூன்றும் தா ” என்று வேண்டுகின்றார். மொழியியல் விளக்கப்படி இயற்றமிழ் அகச்சிந்தனைகளையும் , இசைத்தமிழ் ஆன்மாவின் இயல்பினையும் , நாடகத்தமிழ் உடலின் மெய்ப்பாடுகளையும் குறிப்பிட்டு நிற்கின்றன. கண்ணுக்கும் கருத்துக்கும் , செவிக்கும் , சிந்தனைக்கும் விருந்தளிப்பது முத்தமிழ். மூவேந்தர் மடி தவழ்ந்து முச்சங்கம் தனில் வளர்ந்த முத்தமிழ் , சுவைக்க வல்லார்க்கு முக்கனிச்
|
சாறாக இனிக்கும் தன்மை கொண்டது. 5.2.1. இயற்றமிழ் முத்தமிழில் முதலில் நிற்கும் இயற்றமிழ் , ஏனைய இரண்டிற்கும் , மொழிக்கும் அடிப்படையாய் அமைகிறது. மொழி முதற்காரணமாகிய அணுத்திரள் ஒலி , அங்காத்தல் , இதழ்குவிதல் , நா , அசைவு இவற்றால் வெவ்வேறு எழுத்தாகிறது. இவ்வெழுத்துகள் தனித்தோ தொடர்ந்தோ 77 சொல்லாகிறது. சொற்களும் சொற்றொடர்களும் பொருள் குறித்தனவாக அமைகின்றன. கட்டுரைகள் , சிறு கதைகள் , புதினங்கள் , கவிதைகள் , செய்யுள்கள் , புதுக்கவிதைகள் , நாடக இலக்கியங்கள் , விமர்சனங்கள் திறனாய்வுகள் , உரையாசிரியர்களின் விளக்கங்கள்
|
என்று அனைத்தும் இதனுள் அடங்கும். ஆழமாகவும் , அகலமாகவும் வளர்ந்து வரும் அறிவியல் துறைசார்ந்த மருத்துவம் , பொறியியல் , தொழில் நுட்பம் , கணக்கியல் , வணிகவியல் , விண்ணியல் ஆகிய எண்ணற்ற இயலுக்கான நூல்களும் இயற்றமிழில் அடங்கும். உலகை ஆட்கொள்கின்ற அனைத்து அறிவியல் துறைசார்ந்த நூல்களும் தமிழில் உரைநடை வடிவில் வர வேண்டும். “ பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும். ” “ இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றப்படுதல் வேண்டும் ”. இயற்றமிழ் மனிதனுக்குரிய கல்வியைப் புகட்டப்
|
பயன்படுகிறது. மனிதனின் சிந்தனையை வளப்படுத்தி வாழ்வு செழிக்க வழிவகை செய்கிறது. சுற்றம் காக்கும் கருவியாய் அறிவினைப் பெருக்கப் பயன்படுகிறது. 5.2.2. இசைத்தமிழ் ஆன்மாவோடு பேசுகிற அந்தரங்க மொழி இசை , இறைவனே ஏழிசையாய் இசைப்பயளாய் விளங்குபவன் தானே ! தமிழ் என்று தோன்றியதோ அன்றே இசையும் தோன்றியது. தமிழர் வாழ்வில் இசைப்பாட்டு இணைந்து வளர்ந்தது. கருவறை தொடங்கி கல்லறை வரைக்கும் இசையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தனர் தமிழர். பிறந்த குழந்தைக்குத் தாலாட்டுப் பாட்டு , விளையாட்டுப் பாட்டு , வேடிக்கையோடு அறிவுக்கு விருந்து வைக்கும்
|
விடுகதைப் பாட்டு , தொழில் பாட்டு , நாற்று நடவுப் பாட்டு , எதிர்பாட்டே இல்லாத ஏற்றப்பாட்டு , திருமணப் பாட்டு , ஊஞ்சல் பாட்டு , வழிநடைப் பாட்டு , இறைவழிபாட்டுக்கு உரிய பக்திப் பாட்டு , இறுதியில் கையறு 78 நிலையாக ஒப்பாரிப் பாட்டு. இப்படி ஏற்றமிகு தமிழர் வாழ்வில் எண்ணற்ற பாட்டுக்கள் இடம் பெற்றிருந்தன. ‘ பண் ’ என்னும் தமிழ்ச் சொல் இசையைக் குறித்து நின்றது. திருத்தியமைக்கப்பட்ட , பண்படுத்தப்பட்ட இசையை ‘ பண் ’ என்றனர் தமிழர். மனிதன் தன் இயல்பான உணர்ச்சிகளை , ஒழுங்குப்படுத்தப்பட்ட ஓசையுடன் கூடிய பாட்டாக்கி
|
இன்புறுகிறான். இசை உலக உயிர்களின் களைப்பையும் , அலுப்பையும் அறவே அகற்றுகிறது. நாடோடிப் பாடல்களும் , நாட்டுப்புறப் பாடல்களும் இத்தன்மை வாய்ந்தவையே ! இறைவழிபாட்டிலும் இசை உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கிறது. இறைவனோடு கலக்க இசையைக் கருவியாக்கி மகிழ்ந்தனர் தமிழர். இவ்வழிபாட்டு முறையை “ நாதோபாசனை " என்றனர் வடமொழியாளர். இதயத்தைத் தொட்டுவிடும் இசை , “ காதுகளுக்கும் போர்த்து விடுகிற கௌரவப் பொன்னாடை ’ ” என்று கூறுகிறார் கவிஞர் மு.மேத்தா. பழந்தமிழ் இசை நூல்களாக இன்று அறியப்பெறுபவை பெருநாரை , பெருங்குருகு , பஞ்ச பாரதீயம்
|
, இசை நுணுக்கம் , பஞ்ச மரபு , தாள சமூத்திரம் , கச்சபுட வெண்பா , இந்திரகாளியம் , பதினாறு படலம் , தாளவகை கோவையோத்து , இசைத் தமிழ்ச் செய்யுள் துறைக்கோவை , இன்னபிற பலவாம். இந்நூல்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை. “ இன்பத் தமிழிசை எமது – அது இன்பந்தரும்படி வாய்ந்த நல்அமுது ” என்பார் பாவேந்தர் பாரதிதாசன். நாயன்மார்களுள் சம்பந்தர் , அப்பர் , சுந்தரர் மூவரும் இறைவழிபாட்டிற்கு உறுதுணையாக இசையைப் போற்றி வளர்த்தனர். “ நாளும் இன்னிசையால் தமிழ்ப் பரப்பும் ஞானசம்பந்தன் ” என்று ஞானசம்பந்தப் பெருமான்
|
போற்றப்படுகிறார். திரிகூடராசப்பக் கவிராயர் , இராமலிங்க அடிகளார் , கோபால கிருஷ்ண பாரதியார் , குணங்குடி மஸ்தான் சாகிபு , சென்னி குளம் அண்ணாமலை ரெட்டியார் , பாவேந்தர் பாரதிதாசன் போன்றோர் நிறைய இசைப் பாடல்களை இயற்றியுள்ளனர். தமிழிசையை வளர்க்கக் காலஞ்சென்ற இராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் ஆற்றிய அருந்தொண்டு அளவிடற்கரியது. தமிழிசைச் சங்கம் , தமிழிசைக் கல்லூரி இவற்றை நிறுவியும் , தமிழிசைப் போட்டி , தமிழிசை ஆராய்ச்சி போன்றவற்றை நடத்தியும் அவர் தமிழிசை சிறக்க அனைத்து வழிகளிலும் முயன்றார். சங்க காலத்தில் ஐவகை
|
நிலத்திலும் முறையே குறிஞ்சிப்பண் , பாலைப்பண் ( பஞ்சுரம் ) முல்லைப்பண் ( சாதாரி , மருதப்பண் , நெய்தல் பண் ( செவ்வழி ) என்ற அடிப்படைப் பண்கள் பொதுவாக இசைக்கப்பட்டன. மேலும் வைநளம் , சீகாமரம் போன்ற பண்களும் இருந்ததாக அறியமுடிகிறது. சங்க கால இசைக் கருவிகள் , யாழ் , குழல் , ஆகுளி , பதலை , பாண்டில் , தடாலி , தண்ணுமை , கரடிகை முதலானைவையாகும். குறிஞ்சியாழ் , பாலையாழ் , முல்லையாழ் , மருதயாழ் , விளரியாழ் , சீறியாழ் , பேரியாழ் போன்றவை இசைக்கப்பட்டன. பிற்காலத்தில் புல்லாங்குழல் , நாதசுவரம் , கிளாரிநெட் , ஆர்மோனியம் ,
|
வீணை , முகவீணை , வயலின் , கிட்டார் , ஜலதரங்கம் முதலிய இசை வாத்தியங்களும் தவில் , பஞ்சமூகம் வாத்தியம் டமாரம் , உடுக்கை , பம்பை , கடம் , முகர்சிங் , மிருதங்கம் , கஞ்சிரா , டோலக் , ஜாலரா போன்ற தாள வாத்தியங்களும் தோன்றின. பத்துப்பாட்டு , எட்டுத்தொகை , திருக்குறள் , சிலப்பதிகாரம் , மணிமேகலை , பதிளெண் கீழ்க்கணக்கு நூல்கள் முதலியன இசையைப் பற்றிய குறிப்புகளைத் தருகின்றன. 5.2.3. நாடகத்தமிழ் முத்தமிழின் மூன்றாம் பகுதியான நாடகத் தமிழ் சிறப்பு மிக்கது. இது இயற்றமிழையும் , இசைத்தமிழையும் தன்னுள் கொண்டு உள்ளதால்
|
மக்களிடத்தில் இதன் தாக்கம் அதிகம் காணப்படுகிறது. மக்களின் அக , புற இயல்புகளை நடிப்பின் மூலம் மேடையில் வெளிப்படுத்துவது நாடகம். வாழ்வின் நல்ல , தீய கூறுகளை எடுத்துக்காட்டி , அதனால் விளையும் பலன்களையும் சித்திரிப்பது 80 நாடகம். நற்பண்புகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதன் சிறப்பை விளக்குவது நாடகம். தமிழிசை போல் , தொன்மையான தமிழ் நாடக நூல்களும் , நாடகக் கலை நுணுக்க நூல்களும் அழிந்து போயின. தொல்காப்பியரின் மெய்ப்பாட்டியல் , நாடகக் கலைஞர்கள் வெளிப்படுத்த வேண்டிய நகை , அழுகை , இளிவரல் ( இழிவு ) , மருட்கை ( வியப்பு ) ,
|
அச்சம் , பெருமிதம் , சினம் , உவகை என்றும் எட்டு மெய்ப்பாடுகளையும் , அவை தோன்றுவதற்கு வேண்டும் நிலைக்களன்களையும் குறிப்பிட்டுள்ளது. முறுவல் , சயந்தம் , குணநூல் , செயிற்றியம் , செயன்முறை , மதிவாணனார் நாடகத்தமிழ் என்னும் நூல்கள் முறையே அடியார்க்கு நல்லார் , யாப்பருங்கல உரையாசிரியர் , இறையனார்களவியலுரை ஆசிரியர் ஆகியோரால் குறிப்பிடப்பட்டுள்ளன. கூத்தும் , நாடகமும் நடக்கின்ற ஆடுகளம் பற்றி விரிவான செய்திகள் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளன. இடைக்காலத்தில் தோன்றிய ‘ இராச ராச விஜயம் ’ ‘ பூம்புலியர் ’ , ‘ குலோத்துங்க
|
சோழ சரிதை ' போன்ற நாடகங்கள் இருந்தமை பிற்காலச் சோழர் காலத்தில் நாடகக்கலை சிறந்திருந்ததைக் காட்டுகிறது. 18 - ஆம் நூற்றாண்டில் அருணாசலக் கவிராயரின் ‘ இராம சரித நாடகமும் , ' கோபால கிருஷ்ண பாரதியின் ‘ நந்தனார் சரித்திரக் கீர்த்தனை ' என்ற நாடகமும் புகழ் பெற்றனவாகும். 19 - ஆம் நூற்றாண்டில் நாடகம் மேன்மேலும் நன்கு வளரத்தொடங்கியது. பரிதிமாற் கலைஞரின் ‘ கலாவதி ’ ‘ ரூபாவதி , ’ ‘ மானவிசயம் ’ என்னும் நாடகங்களும் ‘ நாடகவியல் ’ என்னும் நாடக இலக்கணம் பற்றிய நூலும் பெருமைப்படத்தக்கனவாகும். பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் '
|
மனோன்மணீயம் ’ நாடக நூலும் , அவரைப் பின்பற்றி அண்மையில் புலவர் ஆ. யூனி எழுதிய ‘ அனிச்ச அடி ’ நாடக நூலும் நல்ல கவனிப்பைப் பெற்றன. 81 நாடகத்தின் தந்தை என போற்றப்பட்ட பம்மல் சம்பந்த முதலியாரின் ‘ மனோகரா ’ , ‘ லீலாவதி ’ ‘ வேதாள உலகம் ’ , ‘ சபாபதி ’ போன்ற பல்வேறு நாடகங்கள் சிறப்பாக அமைந்து அனைவரது பாராட்டையும் பெற்றன. ' நாடக உலகின் இமயம் ' எனக் கருதப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் ‘ பவளக்கொடி ’ , ‘ சதி அநுசுயா ’ , ‘ வள்ளிதிருமணம் ’ , ‘ சத்தியவான் சாவித்திரி ' என்னும் புராண நாடகங்களையும் , ஆங்கிலம் , வடமொழி ஆகிய
|
மொழிகளிலிருந்து மொழி பெயர்த்துச் செய்யப்பட்ட தமிழ் நாடகங்களையும் இயற்றினார். நவாப் இராசமாணிக்கம் பிள்ளை , எம். கந்தசாமி முதலியார் போன்ற நாடக உலக ஜாம்பவான்களை யாராலும் மறக்க முடியாது. மாரியப்ப சுவாமிகள் , கிட்டப்பா , கே.பி. சுந்தரம்பாள் ஆகியோர் நடிப்பாற்றலும் குரல் வளமும் கொண்ட கலைஞர்களாகத் திகழ்ந்தனர். இருபதாம் நூற்றாண்டில் எண்ணற்ற நாடகக் குழுக்களும் , நாடக ஆசிரியர்களும் , நாடகத் தமிழுக்குத் தொண்டாற்றி வருகின்றனர். தமிழ்நாடு அரசும் இயல் , இசை , நாடக மன்றத்தின் மூலம் நற்பணி ஆற்றி வருகின்றது. குசா. கிருஷ்ண
|
மூர்த்தியின் ' அந்தமான் கைதி ' , பநீலகண்டனின் ‘ முள்ளில் ரோஜா , ' என்.எஸ்.கே. நாடகக் குழுவின் ‘ நாம் இருவர் , பைத்தியக்காரன் ’ , நாரண துரைக்கண்ணனின் ‘ உயிரோவியம் ’ டாக்டர். மு. வரதராசனாரின் ‘ டாக்டர் அல்லி ’ , அரு. ராமநாதனின் , ‘ இராசராச சோழன் ' , பேரறிஞர் அண்ணாவின் ‘ வேலைக்காரி ’ , ‘ ஓர் இரவு ’ , ‘ சந்திரோதயம் ’ , ‘ நீதி தேவன் மயக்கம் ’ , கலைஞர். கருணாநிதியின் ‘ மந்திரி குமாரி ’ , ‘ தூக்குமேடை ' போன்ற நாடகங்கள் மக்கள் மத்தியில் பெரும்பாராட்டைப் பெற்றன. வீரபாண்டிய கட்டபொம்மன் , மருத சகோதரர்கள் போன்ற வரலாற்று
|
நாடகங்களும் புகழ் மிக்கவையாகத் திகழந்தன. கரம்பை டி.கே. சண்முகமும் , டி.கே.பகவதியும் , நாடகக்கலைக்கு ஆற்றிய தொண்டு அளவிடற்கரியது. ஆர்.எஸ். மனோகர் காட்சிகளைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் அற்புதமான மேடை அமைப்புகளுடன் நாடகங்களை நடத்தி நாடகக் கலைக்கு 82 அருமையான தொண்டு செய்துள்ளார். சகஸ்ரநாமம் , என்.எஸ். கிருஷ்ணன் , கே.ஆர்.ராமசாமி , எஸ்.எஸ்.இராசேந்திரன் , எம்.ஜி.ராமச்சந்திரன் , சிவாஜி கணேசன் போன்ற திரைக்கலைஞர்கள் நாடகத்துறை மூலம் திரைஉலகுக்கு வந்தவர்கள் என்று அறியும்போது நாடகத்தின் சிறப்பு மேலும் கூடுகிறது.
|
கோமல் சுவாமிநாதனின் ' தண்ணீர் , தண்ணீர் ' நாடகம் மக்களிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியது. சோ. இராமசாமி , மௌலி , பூரணம் விஸ்வநாதன் , மெரீனா , எஸ்.வி.சேகர் , கிரேஸி மோகன் போன்றவர்களும் , தெருக்கூத்துக் கலைக்கு புது மெருகு தரும் கூத்துப்பட்டரை அமைப்பாளர்களும் நாடகக் கலைக்கு புத்துயிரூட்டி வருகின்றனர். காலவெள்ளத்தின் வேகத்தாலும் , அறிவியல் முன்னேற்றத் தாலும் , வானொலி நாடகங்கள் , தொலைக்காட்சித் தொடர்கள் , மேடை நாடகங்கள் , கவிதை நாடகங்கள் என்று பல்வேறு பரிமாணங்களில் நாடகக்கலை வளர்ந்து வருவது பெருமைப்பட வேண்டிய
|
ஒன்றாகும். சைவர் வணங்கும் சிவபெருமாள் கைச்சூலம் மூன்று முனையாக இருப்பதுபோல் தமிழர்களின் தமிழ் மொழியும் இயல் , இசை , நாடகம் என மூன்றாக அமைந்து தமிழர்களைத் தலை நிமிர்ந்து நிற்கச் செய்கிறது. 5.3. தொல்காப்பியம் உணர்த்தும் வாழ்க்கை முறை ( அகம் , புறம் ) இன்றுள்ள தமிழ் நூல்களில் மிகப்பழைமையான நூல் தொல்காப்பியம் ஆகும். இது முதல் நூலாக திகழ்ந்தாலும் ' அகத்தியம் ' என்னும் இலக்கண நூலுக்கு வழிநூலென்பர். குள்ளமுனிவர் , அகத்தியர் என்னும் முனிவரால் செய்யப்பட்ட முதல் தமிழ் இலக்கண நூல் ‘ அகத்தியம் ' என்று கூறுவர். அஃது
|
தற்போது கிடைக்கப் பெறாமையால் தொல்காப்பியம் முதல் நூலாகியது. தமிழுக்கு மட்டுமல்லாமல் தமிழர் வாழ்வுக்கும் அமைக்கப்பட்ட அற்புதமான இலக்கண நூல் எனக் கருதப்படுகிறது. இதன் காலம் 83 பற்றி வெவ்வேறு கருத்துகள் நிலவுகின்றன. எனினும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என அறிஞர் பலரும் ஏற்றுக் கொண்டுள் ளனர். தொல்காப்பியத்தை இயற்றியவர் பழமையான ‘ காப்பியக் குடியில் ’ தோன்றிய ‘ தொல்காப்பியர் ’ என்று கருதப்படுகிறது. இந்நூல் எழுத்து , சொல் , பொருள் பற்றி விளக்குகிறது. 5.3.1. உலகத்தோற்றம் பற்றிய கருத்து நிலம் , நீர் , நெருப்பு , காற்று
|
, வான் ஆகிய ஐவகை இயற்கைப் பொருள்களைக் கொண்டு தானாகவே இவ்வுலகம் தோன்றியது என்ற கருத்தை தொல்காப்பியர் வெளிப்படுத்தியுள்ளார். " நிலம் , நீர் , தீ , வளி , விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ” என்று உலகத்தோற்றம் பற்றி அறிவு அடிப்படையில் அழகாகக் கூறுகின்றார். 5.3.2. அகவாழ்வு பெரியோர்களாலும் , பெற்றோர்களாலும் நிச்சயிக்கப்பட்ட திருமண முறைகளும் , ஆடவர் பெண்டிர் தாமாகவே கண்டு காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் பழக்கமும் இருந்ததாக தொல்காப்பியம் கூறுகிறது. சடங்குகளில் புரோகிதர்கள் பயன்படுத்தப்படவில்லை. ஆடவர் ,
|
பெண்டிரின் நிலைபற்றி தொல்காப்பியர் விளக்குகிறார். சமுதாயத்தில் ஆடவர் பெண்டிரினும் உயர்வாகவே கருதப்பட்டனர். ஆண் ‘ ஆளப்பிறந்தவன் ' என்றும் , பெண் ' கற்பைப் பேணிக் காத்து ’ இல்லறம் புரிய துணை நிற்பவள் என்றும் தொல்காப்பியர் கூறுகிறார். பரத்தையர் என்னும் ஊர்ப் பொதுமகளிர் சமுதாயத்தில் இருந்தனர். பொருந்தாத காமவேட்கையால் வயது வரம்பின்றி ஆசை கொள்வதும் , ஒருவர் மட்டும் காதல்கொள்வதும் தொல்காப்பியரால் கண்டிக்கப்படுகிறது. இதிலிருந்து இல்லறம் சிறப்புமிக்கதாகக் கருதியமையும் , மக்கள் வீரம் , அறிவாற்றல் மிக்கவர்களாக
|
இருந்தனர் என்பதும் அறியமுடிகிறது. 84 உருவத்தாலும் , பருவத்தாலும் , அகவையாலும் அறிவாலும் ஒத்த தலைவன் - தலைவி சேர்ந்து வாழ்வது அகவாழ்வு. தலைவனும் தலைவியும் ஊழ்வினைப் பயனால் ஒன்று கூடித் தாம் துய்த்த இன்பம் இத்தகையது என பிறர்க்குப் புலப்படுத்த முடியாததே அகவாழ்க்கையாகும். இதை விளக்குவது அகத்திணை எனப்படும். ‘ திணை ’ என்பது ஒழுக்கம் பற்றிய பெரும்பிரிவு , “ துறை ” என்பது அகத்திணையில் அமைந்த சிறுஉட்பிரிவுகள் ஆகும். 5.3.3. திணை வகைகள் தமிழ் மக்கள் வாழ்ந்த நிலம் ஐந்தாகப் பிரிக்கப்பட்டது. அங்கு வாழும் மக்கள் ஒழுக்கமும்
|
நிலத்தோடு இயைந்ததாய்க் காணப்பட்டதால் சில வேறுபாடுகள் இவர்களுக்குள் இருந்தன. நில அமைப்பு மேற்கு தொடங்கி கிழக்கு வரை , முறையே மலைகளும் , காடும் , சமவெளிகளும் , கடற்கரையும் இருப்பதை குறிஞ்சி , முல்லை , மருதம். நெய்தல் எனப் பெயரிட்டு பின்னர் பாலை என்ற புதிய நிலத்தையும் அதில் வாழ்மக்களின் ஒழுக்கத்தையும் அறிந்து இயம்பினர். ஆகவே திணை ஐந்தாக பிரிக்கப்பட்டது. இத்திணைகள் மக்களின் அக வாழ்க்கையை விளக்குவதால் அதில் சிறப்பில்லாது விளங்கும் மற்ற இரண்டு ஒழுக்கங்களுக்குக் கைக்கிளை , பெருந்திணை எனப் பெயரிட்டு அதை
|
புறத்திணைகளோடு சேர்த்தனர். கைக்கிளை என்பது ஒரு ' தலைக்காமம் ’. ஆண் பெண் இருவரில் ஒருவர் மட்டும் காதல் கொண்டு இருப்பது. பெருந்திணை என்பது ‘ பொருந்தாக் காமம் ’. வயது முதிர்ந்தவர் மிக இளையவர் பால் காதல் கொள்வதும் பலவந்தம் செய்வதும் ஆகும். 5.3.3.1. குறிஞ்சித்திணை மலை நிலமாகிய குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்களின் ஒழுக்கத்தைக் கூறுவது குறிஞ்சித்திணை ஆகும். மலையும் மலையைச் சார்ந்த இடமுமே குறிஞ்சியாகும். தலைவனும் தலைவியும் சேர்ந்து மகிழ்ந்து இருப்பதை அதிகம் விரும்புவது இதன் உரிப்பொருள். இவ்விருவருக்கிடையே நிகழும்
|
சந்திப்பு , அதற்குரிய காரணங்களை எடுத்துரைப்பதே ‘ குறிஞ்சி ஒழுக்கம் ’ 85 அல்லது ‘ குறிஞ்சித் திணை '. இத்திணையின் தெய்வம் ‘ மாயோன் ’ எனப்படும் முருகன் ஆவார். 5.3.3.2. முல்லைத்திணை காடும் , காடு சார்ந்த நிலமும் முல்லை நிலம். இதன் தெய்வம் மாயோன் ( திருமால் ) பிரிந்து சென்ற தலைவன் திரும்பும்வரை காதலி தன் கற்பின் வலிமையால் தன் துயரத்தைப் பொறுத்துக் கொண்டிருப்பது முல்லையொழுக்கம். அவள் ஆறுதல் பெறுதற்குரிய காரணங்களைக் கூறுதலும் , முல்லைத் திணையே. இத்திணையின் ஒழுக்கம் ‘ ஆற்றி இருத்தல் ’ ஆகும். 5.3.3.3. மருதத்திணை
|
வயலும் , வயல் சார்ந்த இடமும் மருத நிலம் ஆகும். நீர் வளம் , நிலவளம் அமைந்த நிலப்பகுதியாகும். இதன் தெய்வம் ‘ இந்திரன் ’. நல்ல அரசும் , நாகரிகமும் , கூட்டு வாழ்க்கையும் அமையப் பெற்ற நிலம் மருதம் ஆகும். தலைவன் , தலைவி இருவரிடையே தோன்றும் ஊடல் , அவ்வூடலின் காரணங்கள் பற்றிக் கூறும் இத்திணை. ஊடல் நீக்கும் வாயிலாக பாணன் , கூத்தன் , பாங்கன் , தோழி ஆகியோர் செயல்படுவதைக் கூறுவதும் இத்திணையாகும். 5.3.3.4. நெய்தல் திணை கடலும் , கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலமாகும். இந்நில ஒழுக்கத்தைக் கூறுவது நெய்தல் திணையாகும்.
|
இந்நிலத்துத் தெய்வம் ‘ வருணன் ’. தலைவன் வரவுக்குக் காத்திருத்தல் , தன்மனத் துயரை பிறரிடம் கூறுதலும் நெய்தல் ஒழுக்கமாகும். ‘ இரங்கல் ’ என்ற நிலையே நெய்தலின் ஒழுக்கமாகும். பண்டைத் தமிழர் வாழ்வில் அமைந்த காதல் களவு , கற்பு என்ற நிலைகளில் மணவாழ்வாக அமையும். இந்நெறிமுறைகளை எடுத்துக் கூறுவதே அகத்தின் மையக்கோட்பாடு , 5.3.3.5. பாலைத்திணை பாலை நிலத்திலே நிகழும் ஒழுக்கத்தைப் பற்றிக் கூறுவது பாலைத் திணை. நீரில்லாது வறண்டுபோன நிலப்பகுதியே பாலை நிலம். இதற்குத் தொல்காப்பியர் தனிநிலம் குறிப்பிடவில்லை. வானம் பொய்த்து வறண்டு
|
போனால் எந்த நிலத்திலும் பாலை தோன்றலாம். எனினும் ‘ சிலப்பதிகாரத்தில் ' இளங்கோவடிகள் பாலைநிலம் பற்றிக் கூறும்போது. “ குறிஞ்சி நிலமும் அதை அடுத்து அமைந்துள்ள முல்லை நிலமும் சந்திக்கும் இடத்தில் நிலம் மயங்கி பாலை என்ற நிலம் மீது தோன்றுகிறது ” என்பது தோன்ற “ குறிஞ்சியும் முல்லையும் முறைமையிற் றிரிந்து பாலை என்பதோர் படிமம் கொள்ளும் ” என்கிறார். இதற்குத் தெய்வம் கொற்றவை. இத்திணைக்குரிய ஒழுக்கம் “ பிரிவு ”. தலைவன் தலைவி பிரிவைப் பாடும் பாடல்கள் பாலையின் பாடல்களாகவே கருதப்படும். 5.3.4. புறவாழ்வு மனித வாழ்வின்
|
உறுதிப்பொருள்களில் அறம் , பொருள் , வீடு என்ற மூன்றைப் பற்றிய செய்திகள் இங்கு கூறப்படுகின்றன. புறத்தூர் யாவருக்கும் புலப்படும் ஒழுக்கத்தைப் பற்றி கூறுவதால் “ புறப்பொருள் ” எனப்பட்டது. இப்புற ஒழுக்கம் பத்து வகைப்படும் அவை முறையே வெட்சித்திணை , கரந்தைத் திணை , வஞ்சித்திணை , காஞ்சித்திணை , உழிஞைத் திணை , நொச்சித் திணை , தும்பைத் திணை , வாகைத் திணை , பாடாண் திணை , பொதுவியல் திணை என்பனவாகும். சிலர் கைக்கிளை , பெருந்திணை என்ற இரண்டு அகப்பொருள் புறத்திணைகளையும் சேர்த்து எண்ணுவர். 5.3.4.1. வெட்சித்திணை பகைவர்
|
நாட்டின் மீது படையெடுக்க விரும்பும் அரசன் தன் பகைமையை உணர்த்த பகைவர் நாட்டு பசுக்களை கவர்ந்து வரச் செய்வான். அவ்வாறு கவர்ந்து வரச்செல்லும் வீரர்கள் ‘ வெட்சிப் பூமாலை ' அணிந்து செல்வர். இதுவே போருக்குக் காரணமாக அமைகிறது. 5.3.4.2. கரந்தைத் திணை வெட்சி மாலை சூடிய வீரர்கள் கவர்ந்து செல்லத் தொடங்கிய பசுக்களை பகைமன்னனின் வீரர்கள் ‘ கரந்தைப்பூமாலை ’ அணிந்து மீட்டுச் செல்வர். இது கரந்தைத் திணையாகும். அக்காலத்தில் மாடுகளே செல்வமாகக் கருதப்பட்டது. அதிக மாடுகள் உள்ளவனே செல்வந்தனாகக் கருதப்பட்டான். அதனால் ‘ மாடு ’ என்ற
|
சொல்லுக்கும் செல்வம் என்ற பொருள் வழங்கலாயிற்று. திருவள்ளுவரும் , “ கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடுஅல்ல மற்றை யவை ” என்ற இடத்தில் ' மாடென்ற சொல்லுக்கு செல்வம் ' எனப்பொருள் கொள்ளுதல் நோக்கற்பாலது. 5.3.4.3. வஞ்சித்திணை பகைவர் நாட்டின் மேல் படையெடுத்துச் செல்லுதல் வஞ்சித்திணையாகும். இவ்வீரர்கள் ' வஞ்சிப்பூமாலையை ’ சூடிச்செல்வர். 5.3.4.4. காஞ்சித்திணை நாட்டின் மேல் படையெடுத்து வரும் வஞ்சிமலர் சூடிய வீரர்களை காஞ்சித்திணை வீரர்கள் நாட்டு எல்லையில் தடுத்து நிறுத்துவர். இவ்வீரர்கள் ‘ காஞ்சிப்பூமாலையை ’
|
சூடிச்செல்வர். 5.3.4.5. உழிஞைத் திணை பகைவர் நாட்டின் மீது படையொடு சென்று மதிலை வளைத்துப் போரிடுவது உழிஞைத் திணையாகும். இவ்வீரர்கள் ‘ உழிஞைப்பூ ’ மாலை சூடுவர். 5.3.4.6. நொச்சித் திணை மதிலை வளைத்துப் போர் செய்யும் உழிஞைத் திணை வீரர்கள் மதிலுள் புகாமல் தடுத்துப் போரிடுபவர். நொச்சித் திணை வீரராவர். இவர்கள் ‘ நொச்சிப்பூ ’ மாலையைச் சூடிப் போர் செய்வர். 88 5.3.4.7. தும்பைத்திணை இருபெரும் வேந்தர்களும் நாள் குறித்து , பொதுவிடத்தில் போர் செய்தல் தும்பைத் திணையாகும். இவ்வீரர் இருபக்கத்தவர்களும் ‘ தும்பைப் பூமாலை ’
|
சூடிப் போர் செய்வர். 5.3.4.8. வாகைத்திணை போர் செய்யும் இருவேந்தருள் ஒருவர் வெற்றி பெறுவர். அவ்வீரர்கள் ‘ கைப்பூச்சூடி ' வெற்றியை மகிழ்ந்து கொண்டாடுவர். வெற்றி பெற்றவரைப் புகழ்ந்து பாடும் பாடல்கள் வாகைத் திணையைச் சார்ந்த பாடலாகும். 5.3.4.9. பாடாண் திணை தனிப்பட்ட ஒருவரின் வீரம் , கொடை , புகழ் முதலிய ஒழுக்கத்தைச் சிறப்பித்துப் பாடுதல் பாடாண் திணை எனப்படும். 5.3.4.10. பொதுவியல் திணை மேற்கூறப்பட்ட ஒன்பது திணைகளில் வகைப்படுத்த முடியாத பாடல்களான அறம் கூறும் பாடல்களையும் , அறிவு கூறும் பாடல்களையும் இப்பொதுவியல்
|
திணையில் அடக்கிக் கூறுவர். இவற்றுள் வெட்சி , கரந்தைத் திணைகள் பசுக்களை கவர்தல் , அவற்றை மீட்டல் எனவும் , வஞ்சி , காஞ்சித் திணைகள் பகைவர் நாட்டின்மேல் படையெடுத்தல் , அவர்களை நாட்டுள் விடாமல் தடுத்தல் எனவும் , உழிஞை , நொச்சித்திணைகள் மதிலை வளைத்தல் , அதைக் காத்தல் என அமைந்து எதிர் எதிர் திணைகளாக அமைந்திருத்தல் சிறப்புடையது. அடுத்துக் கூறப்படும் தும்பைப் போர்முறை , இடம் , நாள் , நேரம் குறித்துச் செய்யப்படும் அறப்போராக வீரம் விளைய நின்றது என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றியைப் பாராட்டுதல் வாகை என்பதோடு அமையாமல் ,
|
தோற்றவர் பக்கத்தும் வீரம் வெளிப்பட போர் செய்தவர்களையும் சிறப்பித்து , பொதுவான வீரம் , கொடை இவற்றைப் பேசும் பாடாண் 89 சிவவழிபாடு திணை. தமிழர் நாகரிகத்திற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது. உலகில் எந்த மொழியிலும் இல்லாத உயரிய திணைப்பாகுபாடு என்பது ஒழுக்கத்தின் உன்னத நிலை என்றால் அது மிகையாகாது. 5. 4. சங்க இலக்கியங்களில் காணப்படும் சமயக்கருத்துகள் சங்ககாலத் தமிழரிடையே அவர்களுக்கே உரிய சமயம் இருந்தது. இச்சமயத்தின் செல்வாக்கைத் தனிமனிதனிடமும் காண முடிந்தது. இச்சமயம் அவர்களின் சமூக வாழ்வில் குறுக்கிடவில்லை.
|
சமயத்தின் துணை கொண்டு மனித உறவையும் , கடவுளுடன் பிணைப்பையும் பெற விரும்பினர். சிற்சில சடங்குகள் இருந்தன. இறப்பிற்குப் பின்னால் நிகழ விருப்பதைச் சிந்திக்கத் தலைப்பட்டனர். தன்னுடைய நிலத்தின் தெய்வத்தை வழிபட்டதோடு அமையாமல் வைதீக சமய வழிபாட்டு முறையும் இருந்தது. சொர்க்கம் , நரகம் , வீடுபேறு , மறுபிறப்பு , வினைப்பயன் பற்றிய நம்பிக்கைகளும் இருந்தன. வீரர்களின் நடுகல் வணக்கமும் , இறந்துபட்ட முன்னோர் வணக்கமும் இருந்தது. மரம் , கல் , மலை , விலங்குகள் போன்றவையும் வணங்கப்பட்டன. மேலே கூறியவற்றிற்குச் சான்றுகளாகச்
|
சிலவற்றைப் பார்ப்போம். 5.41. கடவுள் , இயவுள் , இறை தனி முதற்பொருள் , அளவில் ஆற்றலுடைய ‘ இயவுள் ’ எனப்பட்டது. அதைக் கடவுள் என்றும் அழைத்தனர். நம்மை இயக்குபவன் ‘ இயவுள் ’ என்றழைக்கப்பட்டான். நம்மைக் கடந்தவன் , அறியமுடியாதவன் , ஆனால் உள்ளவன் என்பது தோன்ற ‘ கடவுள் ’ என்றும் அழைக்கப்பட்டான். உலகப்பொருள்களின் உள்ளீடாகவும் , அவற்றைக் கடந்தும் இருப்பவன் ‘ கடவுள் ’ என கூறப்பட்டான். அனைத்திலும் நீக்கமற நிறைந்து ஒளிர்பவன் ‘ இறை ' என அழைக்கப்பட்டான். 90 சங்ககாலத் தமிழர் சிவனை வழிபாடு செய்தனர். முப்புரம் எரித்தவர் ,
|
முக்கண் முதல்வர் , வார்சடைக் கடவுள் , என்றெல்லாம் அழைக்கப்பட்ட சிவபெருமான் வழிபடுகடவுளாகக் கையில் சூலம் ஏந்தி இருந்தான் என அறியப்படுகிறது. 5.4.1.2. வருணன் வழிபாடு மழைக்குக் கடவுள் வருணன் , திருவள்ளுவரும் ' வான்சிறப்பு ’ என மழையைப் போற்றியுள்ளமையும் , இளங்கோவடிகளும் ‘ மாமழை ’ போற்றதும் என வருண வழிபாட்டைக் காண முடிகிறது. நெய்தல் நிலத்தெய்வம் வருணன் என சான்றோர் வகுத்தனர் இலக்கியங்களும் இதனைப் பகிர்கின்றன. 5. 4.1.3. இந்திரன் மருதநில மக்கள் இந்திரனை வழிபட்டிருக்கிறார்கள். எப்போதும் இன்பம் விழைந்து ஆடல் பாடல்களில்
|
மனம் செலுத்தும் இந்திரனைப் போலவே இன்பம் விழைந்து வாழ்ந்தமை சங்க இலக்கியங்களால் அறிய முடிகிறது. 5. 4.1.4. திருமால் திருமால் முல்லை நில மக்களின் தெய்வம் ஆவார். திருமால் பண்டைத் தமிழர்களால் வணங்கப்பட்டவர். பரிபாடல் என்னும் இலக்கியம் திருமால் பெருமையினைப் பகரும் பலராமர் வழிபாடும் சிறப்புப் பெற்றிருந்தது. 5.4.1.5. நிமித்தங்கள் நிமித்தங்கள் தமிழர் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டன. எதிர்வரும் தீமையை முன் உணர்த்துவன நிமித்தங்கள் ஆகும். போருக்கு செல்லும் முன் நிமித்தமறியும் பண்பு நம் தமிழரிடையே இருந்தது. 5.4.1.6.
|
ஊழ்வினை ' ஊழ் ' என்னும் ' வினைப்பயனை மக்கள் மதித்தனர். முற்பிறப்பில் செய்த வினைப்பயன்களை ஊழ்வினைப் பயன் என்றனர். தொடர்ந்து அடுத்த பிறவியும் இவ்வினைப் பயன் காரணமாகவே அமையும் என நம்பினர் தமிழர். திருவள்ளுவரும் “ ஊழிற் பெருவளி யாவுள " என்று வினவுகின்றார். மாடலனும் கோவலன் பற்றி கவுந்தி அடிகளாரிடத்துக் கூறுங்கால் இக்கோவலன் இம்மை செய்தலே யன்றி நல்வினை இத்திருத்தகு மாமணிக் கொழுந்துடன் ஈண்டுப் போயிருந்தது முன்வினை என்றார். இதனால் ஊழ்வினைப் பயன் தப்பாது வந்து சேரும். 5.4.1.7. தென்புலத்தார் இறந்துபட்ட முன்னோர்கள்
|
இடையுலகம் ஒன்றில் வாழ்வதாக எண்ணினர். அவர்கள் வாழும் உலகம் தென் திசையில் இருப்பதாக நம்பினர். அதனால் அவர்கள் “ தென்புலத்தார் ” என்றழைக்கப் பட்டனர். 5.4.18. நடுகல் வணக்கம் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களை அடக்கம் செய்த இடத்தில் அவ்வீரனது பெயர் , புகழ் , சிறப்பியல்புகளை எழுதிய கல்லை நட்டு வணங்கினர். இதற்கு நடுகல் வணக்கம் என்ற பெயர் வந்தது. 5.4.19. பத்தினி வணக்கம் கணவனைத் தெய்வமாக மதித்து வாழ்ந்த பெண்களுக்குச் சிலையெடுத்துச் சிறப்பு வழிபாடுகள் செய்தமையை சிலப்பதிகாரம் வாயிலாக அறிகிறோம். 5.4.1.10. பேய் ,
|
பூதம் , அணங்குகள் பேய் , பூதம் , அணங்குகள் இருப்பதாகவும் அவை மக்களை அச்சுறுத்துவதாகவும் கருதி அஞ்சினர். அணங்குகள் , மலை , குளம் , கடல் போன்ற இடங்களில் இருப்பதாக நம்பினர். பேய்கள் சுடுகாட்டில் பிணம் தின்று வாழ்வதாக நம்பினர். குற்றம் செய்பவர்களை பூதம் தண்டிக்கும் என்றும் நம்பினர். 5.4.1.11. இயற்கை வழிபாடு பழந்தமிழர் இயற்கையை வழிபாடு செய்தனர். சூரியன் , மழை , ஆறு , மரம் , ( வேம்பு , அரசு ) ஆகியவற்றை வழிபாடு செய்து வாழ்ந்தனர். 5.4.2. பிறசமயங்கள் ‘ மணிமேகலை ’ என்ற சிறப்பு வாய்ந்த காப்பியத்தை தமிழ்மொழி
|
அச்சமயத்திற்கு வழங்கிச் சிறப்பிக்கிறது. வளையாபதியும் , குண்டலகேசியும் , பௌத்த காப்பியங்களே. வீரசோழியம் என்ற இலக்கணநூலும் பௌத்தர்கள் இயற்றியதே. இந்திய நாட்டின் தொன்மையான சமயங்களில் சமண சமயமும் ஒன்று. சமணர்கள் மதுரையில் ‘ வச்சிர நந்தி சங்கத்தை ’ நிறுவித் தமிழ்த் தொண்டு புரிந்து வந்தனர். சங்க கால சமணப்புலவர் உலோச்சனார் , நிகண்டனார் என்னும் இருவர். சமணரான இளங்கோவடிகள் ‘ சிலப்பதிகாரத்தைப் ' படைத்தார். ‘ சீவக சிந்தாமணி ' திருத்தக்க தேவர் என்ற சமணச் சான்றோரால் இயற்றப்பட்டது. இவை தவிர ஐஞ்சிறு காப்பியங்களாகிய உதயண
|
குமார காவியம் , நாக குமார காவியம் , யசோதர காவியம் , சூளாமணி , நீலகேசி ஆகியவையும் சமணப் பெரியோர்கள் பாடியதேயாகும். நீதி நூல்கள் பலவும் , இலக்கண் நூல்களும் , நிகண்டும் , சமணப் பெரியோர்களால் செய்யப்பட்டிருக்கின்றன. சமயத்தில் சாராது ஆன்மிகத்தை அடித்து கூறும் ‘ திருக்குறள். ’ உலகத்தின் தலைசிறந்த மொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டு , அதனுடைய அறிவியல் , பொருளியல் , இன்பவியல் கருத்துகளுக்காகப் பெரிதும் போற்றிப் பாராட்டும் நிலையைப் பெற்றிருக்கிறது. இது வட இந்திய மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
|
5.5. இந்தியப் பண்பாட்டிற்குத் தமிழ்ப்பண்பாட்டின் கொடை தமிழர்கள் மிகச் சிறந்த பண்பாட்டையும் , நாகரிகத்தையும் உடையவர்கள். இதனை உலக வரலாற்று ஆசிரியர்கள் ஒருமனதாக ஏற்றுக் கொள்கின்றனர். இவர்கள் இந்தியப் பண்பாட்டு வளர்ச்சிக்கு வழங்கியுள்ள கொடை அளவிடற்கரியது. 5.5.1. மொழிக்கொடை மொகஞ்சதாரோ , ஹரப்பா போன்ற இடங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே திராவிடர்கள் மிக உயர்நத நாகரிகத்துடன் வாழ்ந்ததை அறிகிறோம். வடநாட்டு மொழிகள் பலவற்றிலும் , தென்னாட்டு மொழிகள் அனைத்திலும் தமிழ்ச் சொற்களை இன்றும் காண முடிகிறது. இந்தியாவிற்கு
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.