text
stringlengths 11
513
|
---|
கடலும் இயற்கை அரணாக உள்ளன. மேலும் இந்தியா நீண்ட கடற்கரையை உடைய நாடு என்ற பெருமையும் உடையது. இதன் நிலப்பரப்பு , பல்வகைப்பட்ட இளக் கூறுகள் , மாறுபட்ட தட்ப வெப்பநிலைகள் , நில அமைப்புகள். இதனை குறுகிய இருள் சூழ்ந்த கலங்கிய குட்டையாக்காமல் ஒரு கண்டத்தின் பண்பினைக் கொடுத்துள்ளன. இந்த அமைப்பு வரலாற்றில் ஒரு சிறப்பான இடமாக ‘ துணைக் கண்டம் ’ என்ற பெருமையை தோற்றுவித்துள்ளன. 15 TNPSC 2.1 , வேற்றுமையில் ஒற்றுமை வரையறை பரந்த நமது பாரத தேசம் நிலவியல் அமைப்பு , இனம் , மொழி , இலக்கியம் , சமயம் , சமுதாய அமைப்பு , பொருளாதாரம்
|
, வாழ்க்கைச் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களால் வேறுபட்ட கூறுகளைக் கொண்டிருந்தாலும் ‘ இந்தியர் ' என்ற ஒருமைப்பாட்டு உணர்வு மக்களிடம் நீண்டகாலமாகவே நிலவி வருகின்றது. இதனையே வேற்றுமையில் ஒற்றுமை என்கிறோம். இந்த ' வேற்றுமையில் ஒற்றுமை ’ என்னும் உயரிய கோட்பாடே இந்திய பாரம்பரியத்தின் தனிச் சிறப்பு எனலாம். 2 , 2 , வேற்றுமைக் கூறுகள் 2.2.1. நிலவியல் வேற்றுமைகள் நமது நாடு பரந்த நாடு. இத்தகைய பரந்த நாட்டில் ஒரே சீரான இயற்கை அமைப்பைக் காண முடியாது. பல்வேறு வகைப்பட்ட தட்பவெப்ப நிலைகளையும் , புவியியல் அமைப்புகளையும்
|
காண்கிறோம். ஒரு புறம் செழிப்பான சிந்து கங்கைச் சமவெளியையும் அதே நேரத்தில் மறுபுறம் ராஜபுதன , சிந்து பாலைவனங்களையும் காண்கிறோம். செழிப்பான பள்ளத்தாக்குப் பகுதிகளும் மேடான பீடபூமிகளும் உள்ளன. ஆண்டு முழுதும் மழை பெறுகின்ற அஸ்ஸாம் மாநில சிரபுஞ்சியும் , மழையே காணாத வறண்ட தென்னிந்தியப் பகுதிகளும் உள்ளன. கடுங்குளிரும் , கோடையும் மாறி மாறி நிலவி வருவதைக் காண்கிறோம். இத்தகைய நிலவியல் வேறுபாடுகள் நம் நாட்டில் நிலவுகின்றன. 2.2.2. இன வேறுபாடு பழம்பெரும் நாடாகிய நமது நாட்டில் பல்வேறு இனங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து
|
வருகின்றனர். ஆரம்பத்திலிருந்தே இந்தியாவில் மக்கள் தொகை மிகுந்து காணப்பட்டதாகவே அறிகிறோம். நமது நாட்டில் கிரேக்க , சாக்கிய , ஹூன , குஷான , அராபிய , துருக்கிய ஆப்கானிய இனமக்களைக் காண்கிறோம். இன்றைய சூழலில் இன்னும் பழங்குடியினரையும் , நாகரிகத்தில் 16 மூழ்கிய நகரவாசிகளையும் , காண்கிறோம். கேரள மலபார் வாழின மக்கள் தீர்க்கமான முகப்பொலிவுடனும் , காஷ்மீர் மக்கள் நல்ல நிறத்தையும் அழகையும் பெற்றவர்களாய் இருப்பதைக் காண்கிறோம். அஸ்ஸாமியர்கள் இத்தகைய கூறுகள் தேவைப்படும் விதத்தில் இருப்பதையும் காண்கிறோம். எனவே டாக்டர்
|
ஸ்மித் இந்தியாவை ‘ இன அருங்காட்சியகம் ’ என்கிறார். 2.2.3. மொழி வேறுபாடு நமது நாடு இங்கிலாந்து , பிரான்ஸ் போன்ற நாடுகளைப் போல ஒரே மொழியைப் பேசும் நாடு அன்று. நம் நாட்டில் சற்றே ஏறத்தாழ 845 மொழிகள் நிலவி வருகின்றன. இவற்றுள் சில மொழிகள் குறிப்பிடத்தக்கவை. சமஸ்கிருதம் , தமிழ் , ஹிந்தி , வங்காளி , பஞ்சாபி , குஜராத்தி , மராத்தி , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் போன்றவை சிலவாகும். மொழிகளைப் போலவே எழுத்து வடிவங்களிலும் இத்தகைய வேறுபட்ட அமைப்புகள் உள்ளன. ஒரே சீரான எழுத்து முறை இல்லை. பண்டைய பாலி , தேவநாகரி , கிரந்தம்
|
ஆகிய மொழிகளின் எழுத்துமுறை இன்றைய மொழிகளின் எழுத்துமுறைகளினின்று முற்றிலும் மாறுபட்டு உள்ளன. 2.2.4. சமய வேறுபாடு இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரும் ஒரே சமயத்தைப் பின்பற்றுவதில்லை. உலகின் தலை சிறந்த சமயங்களான இந்து சமயம் , சமண சமயம் , பௌத்த சமயம் , இசுலாமிய சமயம் , கிறித்தவ சமயம் பார்சி சமயம் ஆகியவை இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருவதைக் காண்கிறோம். மேலும் இம்மதங்களில் பல உட்பிரிவுகள் இருப்பதையும் , அவற்றையும் மக்கள் பின்பற்றி வருவதையும் பார்க்கிறோம். 2.2.5. சமுதாய அமைப்பில் வேற்றுமைகள் மக்களிடம் காணப்படும்
|
உணவு , உடை , அணிகலன்கள் , பழக்க வழக்கங்களும் மாறுபட்டு இருப்பதைக் காண்கிறோம். வாழும் 17 முறையில் வேறுபாடுகள் உள்ளன. வட இந்திய மக்களின் வாழ்க்கை முறை தென்னக மக்களின் வாழ்க்கை முறையினின்று மாறுபட்டு இருப்பதைக் காண்கிறோம். ஆடை அணிகலன்களை அணியும் முறை , உணவுப் பொருள்களை உண்ணும் முறை ஆகியவற்றில் காணப்படும் வேறுபாடுகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. மக்களின் மரபு முறைகளும் சமுதாய அமைப்புகளில் வேறுபாடுகள் இருப்பதைக் காண்கிறோம். 2.2.6. பொருளாதார வேற்றுமை எந்த ஒரு நாட்டிலும் ஒரே சீரான பொருளாதார வாழ்க்கை நிலையைக் காண
|
இயலாது. நமது நாடும் அதற்கு விலக்கன்று. இங்கும் ஒரு சாரார் உண்ணும் உணவுக்கு ஏங்கியும் ஒரு சாரார் உண்ணும் உணவை வீணடித்தும் வாழும் நிலை உள்ளது. மாட மாளிகைகளில் வாழ்பவர் ஒருபுறமிருக்க , ஓலைக் குடிசைகளிலும் ஒண்ட முடியாமல் தவிக்கும் மக்கள் மறுபுறம் எனப் பொருளாதார வேற்றுமையைக் கண்கூடாகக் காணலாம். இவ்வாறு நம் நாட்டின் அனைத்துத் துறைகளிலும் நிலைகளிலும் வேற்றுமைக் கூறுகள் நிறைந்து கிடப்பதைக் காண்கிறோம். எனினும் ஒற்றுமை நிலவுவது தான் இதன் தனிச் சிறப்பு. 2. 3. ஒற்றுமைக் கூறுகள் 2.3.1. நிலவியல் அமைப்பில் ஒற்றுமை நிலவியல்
|
கூறுகளில் எத்தகைய வேற்றுமைகள் காணப்படினும் புராண காலந்தொட்டே நம்நாடு ' பாரத நாடு ' என்னும் பெயரினைக் கொண்டுள்ளது. நிலவியல் அடிப்படையில் விந்திய சாத்பூரா மலைத் தொடர்கள் நம் நாட்டை வடஇந்தியா என்றும் தென்னிந்தியா என்றும் பிரிப்பது போன்று காணப்படினும் நம் இந்திய நாடு ‘ பாரத கண்டம் ’ என்றே வழங்கப்படுகிறது. இந்த ஒரே பெயரே ஒற்றுமை உணர்வுக்கு முக்கியச் சான்று ஆகும். இக்கருத்தின் அடிப்படையில் தான் தாய் 18 நாடாகிய பாரத நாட்டை தாயாக உருவகம் செய்து ‘ பாரத மாதா ’ என அனைவரும் கொண்டாடி வருகிறோம். 2.3.2. அரசியல் ஒற்றுமை
|
இந்திய வரலாற்றில் ‘ சக்ரவர்த்தி ' என்னும் சீரிய சொல் மிகத் தெளிவாக இந்தியா முழுமையையும் ஒரே அரசர் ஆண்ட நிலையை விளக்குகிறது. எனவே அரசியலும் நாடு முழுமைக்கும் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நம் நாட்டை ஆண்ட மன்னர்கள் முறையே இராஜாதி ராஜன் , அதிராஜன் , ஏக்ராட் , சாம்ராட் , விராட் , சர்வபௌம போன்ற பட்டங்களைப் பெற்று சீரும் சிறப்புமாக ஆண்டமை வரலாற்றால் அறியப்படுகிறது. இந்தியா முழுமையையும் வெற்றி கொண்டு ஆண்டமையை இப்பட்டங்கள் தெளிவு படுத்துகின்றன. மேலும் அரசர்கள் இராஜசுயம் , அசுவமேதம் , வாஜபேயம் என்ற
|
வேள்விகளைச் செய்ததாக அறிகிறோம். அரசியல் ஒற்றுமை நிலவினால் மட்டுமே இத்தகைய வேள்விகளை செய்ய இயலும். எனவே வேதகாலந் தொட்டே அரசியல் ஒற்றுமை இந்தியாவில் நிலவியது. இடைப்பட்ட காலத்தில் ஆண்ட மொகலாயப் பேரரசர்களான அக்பர் , ஔரங்கசீப் போன்றோர் இந்தியா முழுமைக்கும் ஒரே மத்திய நிர்வாக அமைப்பை ஏற்படுத்தினர். நாடு முழுமைக்கும் ஒரே சீரான சட்டங்கள் , பொது நாணயங்கள் , அலுவலக மொழியாக பாரசீக மொழி , நீண்ட நெடுஞ்சாலைகள் என உருவாக்கி ஒற்றுமையை நிலைநாட்டினர். ஆங்கிலேயர் நாடு முழுமைக்கும் பொதுவான இரயில் பாதைகள் , தபால் தந்தி இலாகா என
|
ஒற்றுமை உணர்வை வளர்க்கும் விதத்தில் ஆண்டனர். சுதந்திரத்திற்கு பின் சுதேச சமஸ்தானங்கள் இந்தியக் குடியரசுடன் இணைந்து இந்தியக் குடியரசு நாடாக இன்று உலகில் திகழ்கிறது. 2.3.3. சமய ஒற்றுமை இந்தியாவில் உள்ள சமயங்கள் பலவற்றில் பெரும்பாலானவை ஒரு கடவுள் கோட்பாடு , ஆன்மாவின் அழிவற்ற தன்மை , அவதாரக் 19 கோட்பாடு , வீடுபேறு என்று பல கருத்துகளில் ஒத்த தன்மை யுடையனவாக உள்ளன. சமயச் சடங்குகளிலும் , பழக்க வழக்கங்களிலும் அடிப்படையான தன்மைகள் ஒன்றாகவே உள்ளன. வட இந்தியர்கள் தெற்கே இராமேஸ்வரம் வரை புனிதப் பயணங்களை
|
மேற்கொள்கின்றனர். தென்னிந்தியாவில் வசிப்போர் காசி யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்தியா முழுமைக்கும் இராமாயணம் , மகாபாரதம் ஆகிய இரு இதிகாசங்களும் வீரகாவியங்களாக திகழ்வதுடன் கவிதை வடிவில் பக்திப் பெருக்குடன் பாடப்படுகின்றன. நம் நாட்டில் காணப்படும் அனைத்து சமயங்களின் மையக் கோட்பாடு பக்தி , அஹிம்சை , வீடு பேறு. இதை அடைவதற்குரிய ஆன்மிக நெறிகளும் அறக்கோட்பாடுகளும் இந்தியர் அனைவருக்கும் ஏற்புடையனவாக உள்ளமையால் மதநல்லிணக்கம் நம்மிடையே ஒளிர்வதைக் காண்கிறோம். 2.3.4. பண்பாட்டு ஒற்றுமை பல்வேறு இனத்தைச் சார்ந்த மக்கள்
|
ஒருங்கே கூடி வாழ்ந்து உயரிய பண்பாட்டை உலகறியச் செய்துள்ளனர். இந்தியப் பண்பாட்டை பிரதிபலிக்கும் இலக்கியங்கள் பலவற்றில் ஒரே சீரான பண்பாட்டுக் கூறுகள் , சிந்தனைகள் இருப்பதைக் காண்கிறோம். ஒரே சீரான இலக்கியக் கருத்துகள் , தத்துவ நெறிகள். மரபுகள் , வாழ்க்கை முறைகள் நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியாக இருப்பதைக் காண்கிறோம். சமுதாய வாழ்வின் பண்பாட்டு அடித்தளமாக உள்ள சமயச் சடங்குகள் , சமுதாய வாழ்க்கை முறை , விழாக்கள் , வாழ்வியல் நெறிகள் ஆகியவை ஒரே தன்மையுடன் இருப்பதைக் காண்கிறோம். தீபாவளி , தசரா , பொங்கல் , கிருஷ்ண
|
ஜெயந்தி , சரஸ்வதி பூஜை , விநாயகர் சதுர்த்தி , இரம்ஜான் , கிறிஸ்துமஸ் , மகாவீர் ஜெயந்தி மற்றும் புத்த பூர்ணிமா போன்ற பண்டிகைகள் நம் பண்பாட்டு ஒற்றுமையை உலகறியச் செய்கின்றன. 2.3.5. மொழி ஒற்றுமை அசோகருடைய காலத்தில் புத்தமதக் கருத்துகள் மக்களுக்கு எளிதில் விளங்கும் ‘ பாலி ’ மொழியில் பரப்பப்பட்டதாக அறிகிறோம். 20 சமஸ்கிருத மொழி , ஹிந்தி , மராத்தி , குஜராத்தி , வங்காளி மொழிகள் இந்திய ஒற்றுமைக்கு உரம் சேர்த்தன. தக்காணத்தில் தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , துளு என்னும் திராவிட மொழிகள் ஐந்து என்ற பெருமையை
|
பெற்றன. எனவே மொழிகள் பலவாயினும் அவற்றிற்கிடையே கருத்தொற்றுமை நிலவியது என்பது ஏற்புடையதாகும். 2.3.6. உடலமைப்பில் ஒற்றுமை ஆரியர்கள் , சாக்கியர்கள் , ஹூனர்கள் என பல்வேறு இனத்தவர்கள் இந்தியாவில் குடியேறினர். நாளடைவில் இந்தியர்களுடன் முழுமையாகக் கலந்து தங்கள் தனித்தன்மையை இழந்தனர். இசுலாமியர்களும் , கிறித்தவர்களும் இங்கே வந்து தங்கி வாழ்ந்தனர். இந்தியாவிலே வாழ்ந்து , இங்குள்ள உணவுப் பொருள்களை உண்டு , ஒரேவிதமான தட்பவெப்ப நிலைகளில் வாழ்ந்து அன்றாட கடமைகளை நிறைவேற்றி அயல்நாட்டவரும் நாளடைவில் இந்தியராயினர். ஆகவே
|
இங்கு வாழும் மக்கள் அனைவரும் இந்தியப் பண்பாட்டுத் தாக்கத்தால் ஒரே ஆளுமைப் பண்பையும் பெற்று வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய பல்வேறு நிலைகளில் வேற்றுமைகள் ஒவ்வொன்றும் ஒற்றுமையை நிலைநாட்டும் அம்சங்களாக செயல்படுகின்றன. 2,4. பண்பாட்டு ஒற்றுமையை வளர்க்கத் துணைபுரிந்த காரணிகள் நம் பாரத நாட்டின் சீரிய கோட்பாடாகிய ' வேற்றுமையில் ஒற்றுமை ' எவ்வாறு மிளிர்கிறது என்பதை அறிந்தோம். இனி ஒற்றுமையை வளர்க்கின்ற காரணிகளைக் காண்போம். 2.4.1. அரசர்கள் இந்தியப் பெருநாட்டை ஆட்சி புரிந்து வரலாற்றில் சிறப்புமிக்க இடம் பெற்றவர்கள்.
|
அசோகர் , சந்திரகுப்தன் , சமுத்திரகுப்தன் , அலாவுதீன் , அக்பர் , ஔரங்கசீப் போன்றவர்களாவர். இவர்கள் மண் ஆசை காரணமாக இந்தியாவின் பெரும்பகுதியை வெற்றி கொண்டனர். பல சிற்றரசுகளை இணைத்து இந்தியாவை ஒரு குடையின் கீழ் ஆள முற்பட்டனர். அரசர்களை தொடர்ந்து வீரர்கள் தங்கள் தீரச் செயல்களை நிலைநாட்ட விரும்பினர். இவர்களுடைய செயல்களும் நமது பண்பாட்டையும் ஒற்றுமையையும் வளர்த்தன. 2.4.2. ஒரே சீரான நிர்வாகம் நாட்டையாண்ட குப்தர்கள் , மொகலாயர்கள் , ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் எல்லா மாநிலங்களையும் , ஒன்றாக்கி சீரான ஆட்சி
|
அமைப்பினால் நிர்வாகம் செய்தனர். இச்சீரிய நிர்வாக அமைப்பு பண்பாட்டு ஒற்றுமைக்கு வித்திட்டது. 2.4.3.மொழியும் சமயமும் பழங்காலத்தில் சமஸ்கிருதமும் , தற்காலத்தில் ஆங்கிலமும் , ஹிந்தியும் , தமிழும் , பண்பாட்டு ஒற்றுமையைப் பேணிவளர்க்க துணைபுரிந்தன. இலக்கியங்கள் , காப்பியங்கள் , புராணங்கள் , இதிகாசங்கள் என அனைத்தும் இம்மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டன. சில மூலக்கருத்தைக் கொண்டு தத்தம் பண்பாடுகட்கும் ஏற்பத் தயாரிக்கப்பட்டன. இராமாயணம் வடமொழியில் வான்மீகி முனிவராலும் , ஹிந்தியில் துளசிதாசராலும் , தமிழில் கவிச்
|
சக்கரவர்த்தி கம்பராலும் இயற்றப்பட்டமையை காண்கிறோம். இம்மூவருமே மையக் கருத்து மாறாமல் தத்தம் பண்பாட்டிற்கிணங்க தொடர்புடைய செய்திகளைக் கூறியுள்ளனர். பல்வேறு சமயங்களுக்கும் நிலைக்களனாகத் திகழும் இந்து சமயம் மக்களின் ஆன்மிக வாழ்விலும் , அகச் சிந்தனையிலும் உயரிய ஒற்றுமையை பேணிவளர்க்கத் துணை புரிந்தன. 2.4.4. போக்குவரத்தும் செய்தித் தொடர்பும் ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட இருப்புப் பாதைகள் , தபால் மற்றும் தந்தி முறை , தொலைபேசி , வானொலி , வான ஊர்தி , பேருந்துகள் , சாலைகள் போன்றவை பயண நேரத்தை குறைத்ததுடன்
|
பாதுகாப்பானப் பயணத்திற்கு உதவியது. செய்தித் 22 தொடர்பை அளித்தது. இதனால் மக்கள் பல இடங்கட்கும் எளிதாக சென்று வந்தனர். பண்பாட்டு ஒற்றுமைக்கு இது வித்திட்டது. இன்று வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பத்தின் காரணமான தொலைக்காட்சி , கணினி , மின்னணு அஞ்சல் முறை ( E - mail ) , தொலை நகலி ( FAX ) இவற்றின் பயன்பாடுகளை அறிந்து மேலும் ஒருவருடன் ஒருவர் நெருங்கிய தொடர்பு கொண்டு வாழ்கின்றோம். 2.4.5. வரலாறும் நாட்டுப் பற்றும் பொதுவான வரலாற்று மரபுகளை நமது இலக்கியங்களும் பிற பாடங்களின் வாயிலாகவும் அறிகிறோம். வரலாற்று மரபுகளை
|
அறிந்து நாமும் நமது பண்பாட்டு ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுகிறது. விடுதலை இயக்க வரலாற்றை அறிந்து நாடு , நாட்டுப்பற்று மிக்கவர்களாய் வாழ வேண்டும் என்ற உணர்வு மேம்படுகிறது. எனவே பண்பாட்டு ஒற்றுமையை நமது வரலாற்று அறிவு நாட்டுப் பற்று , தேசிய உணர்வு ஆகியவை வளர்க்க துணைபுரிகின்றன. 2.4.6. பாரம்பரியமிக்க பண்பாட்டு பின்னணியில் வாழும் நாம் செய்ய வேண்டுவன ‘ வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே ' இந்தியரின் அடிப்படைக் கோட்பாடு என்பதை உணர வேண்டும். இதனை எதார்த்தமாய் உணர்ந்து நாம் நம் ஒற்றுமை உணர்வை போர் மற்றும்
|
அமைதிக்குத் தீங்குதரும் புயல் , வெள்ளம் , பூகம்பம் போன்ற இயற்கைச் சீரழிவின் போது மட்டுமே உலகறியச் செய்கிறோம். இத்தகைய நெருக்கடிக் காலங்களைத் தவிர்த்து அமைதிக் காலத்திலும் அன்றாட வாழ்விலும் அன்பு , அமைதி , சகோதர மனப்பான்மை , ஒற்றுமை , பிற மதத்தவரை அரவணைத்துச் செல்வதும் நல்லிணக்க மனப்பான்மை உடையவராய் வாழ வேண்டும். “ பிறபொக்கும் எல்லா வுயிர்க்கும் ” என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க எவ்வித வேறுபாடும் கருதாமல் அனைவரையும் சமமாகக் கருதிப் பழக வேண்டும். அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும். குறிப்பாகத்
|
தன்னால் இயன்ற உதவியை மற்றவர்கட்கு செய்ய வேண்டும். பிற மதத்தவர்களின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும். “ எம் மதமும் சம்மதம் ” என்ற பரந்த சமய உணர்வு வேண்டும். “ ஒன்றே குலம் , ஒருவனே தேவன் " என்ற உயரிய கோட்பாட்டினை நடைமுறை வாழ்வில் பின்பற்ற வேண்டும். நாட்டுப் பற்று மிக்கவராய் ‘ நாடு நமக்கு என்ன செய்தது ’ என்பதைக் கருதாமல் ‘ நாம் நாட்டிற்கு என்ன செய்தோம் ' என்ற உணர்வுடன் நாட்டின் நலனுக்குப் பாடுபட வேண்டும். நமது அறிவையும் ஆற்றலையும் நம் நாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். உலகிள் அனைத்துத் துறைகளிலும் நம் நாடு வளம்
|
வாய்ந்ததாக திகழப் பாடுபட வேண்டும். இன்று உலக அரங்கில் வேண்டப்படுவது ' சமாதானம் '. எத்தகைய வேற்றுமைகளுக்கும் , உயர்வு தாழ்வுகளுக்கும் இடம் தராமல் சமாதான உணர்வுடன் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். உலக அமைதியே உயர்வுக்கு வழி என்பதை அனைவரும் உணர்ந்து அதற்கு அயராது உழைக்க வேண்டும். சமாதான வாழ்விற்கு அடிப்படை சகோதரத்துவ மனப்பான்மை. மனிதனாய்த் தோன்றிய இராமன் , வேடர் குலத்தலைவனான குகனையும் , குரங்கினத் தலைவனான சுக்ரீவனையும் சகோதரனாக ஏற்றுக் கொண்டதிலிருந்து சகோதரத் தத்துவத்தை அறியலாம். நாமும் நம் வேற்றுமைகளுக்கு
|
அப்பாற்பட்ட சகோதர மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். 24 பயிற்சி வினாக்கள் அ. ஓரிரு வரிகளில் விடையளி 1 ‘ பாரத நாட்டை ’ பாரதியார் எவ்வாறு சிறப்பிக்கிறார் ? 2. இந்தியாவிற்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை ? 3. இந்தியாவை நிலவியல் கூறுகளின் அடிப்படையில் எவ்வாறு அழைக்கலாம் ? 4. இந்தியாவின் இயற்கை அரணாக உள்ளன எவை ? 5. இந்தியாவின் உயரிய ‘ தனிச்சிறப்பு ’ யாது ? 6. இந்தியாவை டாக்டர் ஸ்மித் எவ்வாறு சிறப்பிக்கிறார் ? 7. இந்தியாவில் வழக்கில் உள்ள சில முக்கிய மொழிகளைக் கூறு. 8. இந்தியாவில் மக்கள் பின்பற்றும் ' சமயங்கள்
|
' சிலவற்றைக் கூறு. 9. நம் தாய்நாட் ,ைட தாயாக உருவகம் செய்து எவ்வாறு அழைக்கிறோம் ? 10. அரசர்கள் சூட்டிக்கொண்ட பட்டப் பெயர்கள் சிலவற்றைக் கூறு. 11. அரசர்கள் மேற்கொண்ட வேள்விகள் சிலவற்றைக் கூறு 12. நம் மக்கள் கொண்டாடி மகிழும் சில ' பண்டிகைகளைக் ’ கூறு. 13. இந்தியாவில் வாழும் பல்வேறு இனத்தவர்கள் யாவர் ? 14. இந்தியாவை ஆண்ட பெருமன்னர்கள் சிலரைக் கூறு. 15. இந்தியாவின் இருபெரும் ‘ இதிகாசங்கள் ’ எவை ? ஆ. ஒரு பத்தி அளவில் அல்லது பத்து வரிகளுக்கு மிகாமல் விடையளி 1 பாரதநாடு இந்தியா எனவும் ஹிந்துஸ்தான் எனவும்
|
வழங்கப்பெற்றதேன் ? 2. இந்தியா ' துணைக்கண்டம் ' என்றழைக்கப்படுவதேன் ? Page 27 of 201 25 3. ' வேற்றுமையில் ஒற்றுமை ' என்னும் கோட்பாட்டை விவரி , 4. நம் நாட்டில் நிலவும் ' வேற்றுமைக் கூறுகள் ' யாவை ? இந்தியாவை ' இன அருங்காட்சியகம் ' என டாக்டர் ஸ்மித் கூறக்காரணம் யாது ? 5. 6. 7. நம் நாட்டில் காணப்படும் பொருளாதார வேற்றுமையைக் கூறு. ஆங்கிலேயர் ஒற்றுமை உணர்வு தோன்ற எவ்வாறு காரணமாயினர் ? 8. 9. இந்தியாவின் பண்பாட்டு ஒற்றுமையை விவரிட போக்குவரத்தும் செய்தித் தொடர்பு எவ்வாறு ஒற்றுமைக்குத் துணை புரிகின்றன ? 10. ' நாட்டுப்
|
பற்று மற்றும் தேசிய உணர்வை ' வளர்க்க துணைபுரிந்தது எவ்வாறு ? இ. ஒரு பக்க அளவில் அல்லது முப்பது வரிகளுக்கு மிகாமல் விடையளி 1. 2. 3. இந்தியாவின் நிலவியல் வேற்றுமைகள் யாவை ? இந்தியாவில் காணப்படும் மொழி வேற்றுமைகளைக் கூறு. இந்தியாவின் சமுதாய அமைப்பில் காணப்படும் வேற்றுமைகளைக் கூறு. 4. இந்தியாவின் நிலவியல் அரசியல் ஒற்றுமையை விவரி. 5. சமய ஒற்றுமை இந்தியாவில் நிலவுகிறது என்பதை விவரி. 6. வேற்றுமையில் ஒற்றுமை சிறப்புடன் மலர நாம் செய்ய வேண்டுவன யாவை ? ஈ. நான்கு பக்கங்களுக்கு மிகாமல் விடையளி 1. இந்தியாவில் நிலவும்
|
வேற்றுமைக்கிடையே ஒற்றுமை எவ்வாறு திகழ்கிறது ? 2. இந்தியப் பண்பாட்டு ஒற்றுமைக்குத் துணைபுரிந்த காரணிகளைத் தொகுத்துக் கூறுக ? 3. சிந்து சமவெளி நாகரிகம் 1922 ஆம் ஆண்டில் திரு. R.D. பானர்ஜி அவர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் சிந்துப் பகுதியில் லார்க்கான மாவட்டத்தில் அமைந்துள்ள மொஹஞ்சதாரோ என்னுமிடத்திலும் ; R.B. தாயாராம் சஹானி என்பவர் நடத்திய தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் பஞ்சாப் பகுதியில் மாண்ட்கோமரி மாவட்டத்தில் ஹரப்பா என்னும் இடத்திலும் மிகச் சிறந்த நாகரிகம் வளர்ந்திருந்தது என எடுத்துக் கூறினர். 1924 - ல் தொல்
|
பொருள் ஆராய்ச்சித் துறையின் ஆணையராக இருந்த சர் ஜான் மார்சல் என்பவர் தாமே முன்னின்று இந்த ஆராய்ச்சினைச் செய்து அதனை உலகத்திற்குத் தெரியப் படுத்தினார். இந்த நாகரிகம் மிகவும் மேன்மை உடையதும் ஆரியர்கள் வருகைக்கு முந்தையதும் ஆகும் என்பதே அவரது கருத்தாகும். இது தவிர சிந்து - பலுசிஸ்தான் பகுதியில் சான்குடாரோ ( Chanhudaro ) , சுக்கார் ( Jhukar ) நல் ( Nal ) மற்றும் கெலட் ( Kelat ) ஆகிய இடங்களில் நடத்திய அகழ்வாராய்ச்சியின் மூலம் இத்தகைய நாகரிகம் வளர்ந்திருந்தது என்பது நிரூபனம் ஆயிற்று. இந்த நாகரிகம் சுமார் கி.மு.
|
3250 லிருந்து கி.மு. 2750 வரையிலான காலகட்டத்தில் இருந்ததாகத் தெரிகிறது. 3. 1 , குடிமக்கள் இவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் சரித்திர ஆசிரியர்களிடையே பல கருத்துகள் நிலவுகின்றன. இவர்கள் ஆரியர்கள் என்று ஒரு சாரார் கூறுவதை மார்சல் ( Sir John Marshall ) முற்றிலும் மறுத்து இவர்கள் ஆரியர்கள் அல்ல என்பதை பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுகிறார். கார்டன் சில்டே ( Gordon Childe ) என்பவர் , இவர்கள் சுமேரியர்கள் என்று கூறுகிறார். ஆனால் அதற்கான ஆதாரத்தை எடுத்துக்கூற இயலவில்லை. திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று
|
ராகலதாஸ் பானர்ஜி ( Rakhal Das Banerjee ) கூறுகிறார். அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சான்றுகளைக் கொண்டு டாக்டர் குகா ( Dr. Guha ) போன்றோர் இவர்கள் பல இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகிறார்கள். பெரும்பாலான 27 அறிஞர்கள் சிந்து சமவெளி நாகரிகம் திராவிட மக்களின் கொடை என ஒத்துக் கொண்டுள்ளனர். எனவே இங்கு வாழ்ந்தவர்கள் திராவிட இன மக்கள் என்பது தெளிவாகிறது. இம்மக்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெளிவாகக் கூற இயலாவிட்டாலும் , நாகரிகத்தில் உன்னத நிலையை அடைந்திருந்தார்கள் என்பது மட்டும் தெளிவான உண்மை என வேறு சில
|
வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். 3.2. நகர அமைப்பு ( Town Planning ) ‘ மொஹஞ்சாதாரோ ’ மற்றும் ' ஹரப்பா ’ போன்ற நகரங்கள் நதிக்கரையில் அமையப் பெற்றிருந்தன. சிந்து நதியிலிருந்து 3 மைல் தொலைவில் மொஹஞ்சாதாரோவும் ‘ ரபி ’ நதியிலிருந்து 6 மைல் தொலைவில் ‘ ஹரப்பா ' அமைந்துள்ளன. இவ்வாறு நதிகளுக்கு அருகாமையில் அமைந்ததால் ஆற்று வெள்ளத்தில் இந்நகரங்கள் பல தடவை அடித்துச் செல்லப்பட்டன. ஒவ்வொருமுறை அழிந்த போதும் மீண்டும் மீண்டும் இந்நகரங்கள் நிர்மாணிக்கப்பட்டன என்பதை ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. சாலைகளின் அமைப்பைப்
|
பார்க்கும் போது நகர அமைப்பு உன்னத நிலையை எட்டி இருந்தது என்பதை உணரலாம். முக்கியமான சாலைகள் 33 அடி அகலம் கொண்டவைகளாக இருந்தன. மற்ற சாலைகள் 9 அடியிலிருந்து 12 அடி வரை அகலமுடையவைகளாகவும் இருந்தன. தெருவோரங்களில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. கழிவுநீர்க் கால்வாய்களும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன. திட்டமிடப்பட்ட பல தெருக்கள் மாபெரும் கழிவு நீரகற்றும் கால்வாய்கள் முறைப்படி அவற்றைச் சுத்தப்படுத்துதல் போன்றவற்றை பார்க்கும்போது முறைப்படியான நகர நிர்வாகம் ஒன்று இருந்திருக்க வேண்டும் ; அந்த நிர்வாகம் மிகவும்
|
பலமுள்ளதாக இருந்திருக்க வேண்டும் ; அதனால் தான் விதிமுறைகளின்படி வீடுகளும் தெருக்களும் அமைந்திருந்தன என கார்டன் சில்டே ( Gordon Childe ) கூறுகிறார். 28 கழிவுநீர் கால்வாய்கள் பெரிய செங்கற்களாலும் மற்றும் கற்களாலும் மூடப்பட்டிருந்தன. சிறு சிறு கால்வாய்கள் தெரு வோரங்களில் பெரிய கால்வாயுடன் இணைக்கப்பட்டிருந்தன. இவை செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன. வீடுகளில் சேரும் குப்பைகளைக் கொட்ட தெருவின் இருபக்கங்களிலும் குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. மேற்கூறியவற்றைக் கவனத்தில் கொண்டு பார்த்தால் நகரம் சுத்தமாகவும்
|
தூய்மையாகவும் இருக்க மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டனர் என்பது தெளிவாகும். 3. 3. கட்டடக்கலை ( Architecture ) நகரத்தில் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்டடங்களும் , சில குறிப்பிட்ட வரையறைகளுக்குட்பட்டே கட்டப்பட்டிருந்தன. சிறு கட்டடங்கள் 30 அடி நீளமும் 26 அடி அகலமும் கொண்டிருந்தன. அவற்றில் நான்கு அல்லது ஐந்து அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. பெரிய கட்டடங்கள் , சிறிய கட்டடத்தைப் போன்று இரண்டு பங்கு நீள , அகலங்களைக் கொண்டிருந்தது. அதிகபட்சம் 30 அறைகள் கொண்டதாக இருந்தன. பல முறை அழிவுகள் ஏற்பட்டாலும் அவற்றை மூன்று பிரிவுகளாகக்
|
கொள்ளலாம். முதலாவது பழங்காலம் , இரண்டாவது மத்திய காலம் மற்றும் மூன்றாவது பிற்காலமாகும். வெள்ளத்தால் அழிந்தாலும் மீண்டும் ஒரே சீராக திட்டமிட்டப்படி முதல் இரண்டு காலத்திலும் கட்டப்பட்டிருந்தன. ஆனால் பிற்காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் சரியாகத் திட்டமிடப்படாமல் தரத்தில் தாழ்ந்தவைகளாக இருந்தன. இது பிற்காலத்தில் கட்டடக்கலையின் அழிவையே குறிக்கிறது என்பார். டாக்டர் புஸால்கர் ( Dr : Pusalkar ). தோண்டியெடுக்கப்பட்ட வீடுகளை மூன்று வகைகளாகப் பிரிக்கின்றார். 1. குடியிருக்கும் வீடுகள் 2. பெரிய கட்டடங்கள் 3. பொதுக்
|
குளியலறைகள். முதல் இரண்டு வகைக்கட்டங்களைப் பற்றி மேலே பார்த்தோம். மூன்றாவது வகையான கட்டடங்களை இனி பார்ப்போம். 29 சமுதாய நிலை 3.4.1. உணவு ‘ மொஹஞ்சதாரோ ’ வின் மிகப்பெரிய கட்டடம். நீச்சல்குளம் 8 அடி ஆழம் கொண்டதாகவும் இருந்தது. அதைச் சுற்றி படித்துறைகளும் குளியல் அறைகளும் அமைக்கப்பட்டிருந்தன. அதைக் கட்டுவதற்கு சுட்ட செங்கற்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. நீச்சல் குளத்தில் நீரைச் செலுத்தவும் அழுக்கு நீரை வெளியேற்றவும் தனித்தனியே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கிணறுகளிலிருந்து நீர் நீச்சல் குளத்திற்குக் கொண்டு
|
செல்லப்பட்டது. கிணறுகள் சுட்ட செங்கற்களினால் கட்டப்பட்டிருந்தன. அதே போன்று ‘ ஹரப்பா ’ விலும் நீச்சல் குளம் அமைக்கப்பட்டிருந்தது. அதனுடைய அளவு நீளம் 39 அடியாகவும் அகலம் 13 அடியாகவும் ஆழம் 8 அடியாகவும் இருந்தது. திருவிழாக் காலங்களிலும் , சமயச் சடங்குகள் செய்யும் போதும் மக்கள் நீச்சல் குளத்தில் நீராடினர். சமயத் திருவிழாக்காலங்களில் “ நீராடுவதை ” புனிதமாகக் கருதி அதற்கு முக்கியத்துவம் அளித்தனர். ‘ அரசாங்கம் ’ அல்லது ‘ பொது’க் கட்டடங்களும் தோண்டி எடுக்கப்பட்டன. அவைகள் 460 அடி நீளமும் 280 அடி அகலமும் கொண்டனவாகும்.
|
இது தவிர ‘ ஹரப்பா ’ வில் தானியக் கிடங்குகளும் காணப்பட்டன. 50 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்டிருந்தன. அதன் நுழைவாயில்கள் நதியை நோக்கி அமைந்திருப்பதால் நீர் வழியைப் போக்குவரத்திற்கு மக்கள் பயன்படுத்தி கருதுகிறார்கள் என்பது தெளிவாகும். இதே தானியக்கிடங்குகள் அரசாங்கத்தின் ‘ சேமிப்புக் களஞ்சியமாக ’ திகழ்ந்திருக்க வேண்டும். இது தவிர 150 அடி நீளம் 75 அகலம் கொண்ட கட்டடம் ஒன்றும் 280 அடி நீளமும் 78 அடி அகலமும் கொண்ட மற்றொன்றுமாக இரண்டு கட்டடங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை சிந்து சமவெளி காலத்திய மக்கள்
|
கட்டடக்கலைக்கு முக்கியத்துவம் கொடுத்தது மட்டுமில்லாமல் மிகத் தூய்மையான வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டோம். 30 சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை மக்கள் உண்டனர். முக்கியமாக கோதுமை , பார்லி , அரிசி , பால் , மீன் , கடல் ஆமை மற்றும் ஆட்டிறைச்சி ஆகியன உணவுப் பொருள்களாக இருந்தன. இது தவிரவும் பேரிச்சம்பழம் அவர்களது விருப்பமான உணவாக இருந்தது. 3.4.2. உடை பருத்தி மற்றும் கம்பளி ஆடைகளை அணிந்தனர். நூற்பாடைகள் ‘ மொஹஞ்சாதாரோ ' நகரின் முக்கிய வணிகமாக இருந்தது. எளிமையான ஆடைகளே உடுத்தினர். ஆண்கள் மேலே துண்டு போன்ற
|
ஆடையும் கீழே வேட்டி போன்ற ஆடையையும் அணிந்தனர். பெண்கள் தலைமேல் விசிறி போன்ற அமைப்பு கொண்ட ஆடைகளை அணிந்தனர். 3.4.3. நாகரிகம் இம்மக்கள் மிகவும் நாகரிகத்தில் நாட்டம் கொண்டவர் களாயிருந்தனர். சிலர் தாடியும் மீசையும் வைத்திருந்தனர். தந்தத்தில் ஆன சீப்பும் , வெண்கலத்தால் ஆன கண்ணாடியும் , உபயோகப் படுத்தினர். பெண்களும் நாகரிகத்தில் நாட்டம் கொண்டிருந்தனர். 3.4.4. அணிகலன்கள் தங்கம் , வெள்ளி , பித்தளை போன்ற உலோகங்களினால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிவதில் அக்காலத்தில் பெண்களும் மிகுந்த ஆர்வம்கொண்டிருந்தனர் என்பதையும்
|
ஆராய்ச்சிகள் புலப்படுத்துகின்றன. தந்தத்தினால் ஆன அணிகலன் களும் விரும்பி அணியப்பட்டன. கழுத்தணி , வளையல் , மோதிரம் மற்றும் காதணிகள் ஆகியவை முக்கிய அணிகலன்களாகும். 31 3.5. பொருளாதார வாழ்க்கை முறை 3.4.5. பொழுது போக்கு ‘ பகடைக்காய்கள் ’ ஒரு வகையான சதுரங்கம் ஆகியவை பொதுவான பொழுதுபோக்காக இருந்தது. சூதாட்டம் மிகவும் விருப்பம் உள்ளதாக இருந்தது. இதற்கு பல பகடைக்காய்கள் உபயோகிக்கப்பட்டன. வேட்டையாடுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். குழந்தைகள் களிமண்ணால் பொம்மைகள் செய்து விளையாடினார். பறவைகள் வளர்ப்பதிலும் ஆர்வம்
|
காட்டியிருக் கின்றனர். ஒரு வேளை பறவைகளைச் சண்டையிட விட்டு அதைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்திருக்கக் கூடும். 3.4.6. பெண்களின் நிலை பெண்களின் வாழ்க்கை பெரிதும் மேன்மை அடைந்திருந்தது. ஆண்களுக்கு நிகராக சம உரிமைகளைப் பெண்களும் சமுதாயத்தில் பெற்றிருந்தனர். ‘ தாய்த்தெய்வ ' வழிபாட்டுமுறை இருந்தது என்று அறிகிறோம். இதுவே பெண்கள் மிகவும் போற்றப்பட்டார்கள் என்பதற்குச் சான்றாகும். 3.4.7. போக்குவரத்துத் தொடர்பு மாட்டு வண்டியே முக்கியமான போக்குவரத்துச் சாதனமாய் பயன்படுத்தப்பட்டது. 3.4.8. இறந்த உடல்களை அடக்கம் செய்தல் இறந்த
|
உடலை அடக்கம் செய்வதில் மூன்று வகையான வழிகளைப் பின்பற்றினர். முதலாவதாக இறந்த உடலைப் புதைத்தனர். இரண்டாவதாக எரித்த உடலின் எஞ்சிய பாகங்களைப் புதைத்தனர். மூன்றாவதாக இறந்த உடல்களை காட்டு விலங்கு களிடத்தில் விட்டு விடுதலாக இருந்தது. சர் ஜான்மார்ஸல் ( Sir. John Marshall ) கூற்றுப்படி இரண்டாவது வழிமுறைகளே பெரிதும் பழக்கத்தில் இருந்தது. 3.4.9. மருத்துவம் எந்த வகையான மருத்துவமுறையைப் பயன்படுத்தினார்கள் என்பது தெளிவாக அறிய முடியவில்லை. இருப்பினும் வேப்பிலையின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தனர். மிக வளர்ச்சி அடைந்த
|
மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா ஆகிய நகரங்களில் வாழ்ந்த மக்களின் பொருளாதார வாழ்க்கை முறைகளே அதற்குச் சான்றாகும். அவற்றைக் கீழ்க்கண்ட தொழில் மற்றும் வாணிகம் ஆகியவைற்றின் மூலமாக அறிவோம். 3.5.1. விவசாயம் விவசாயம் அவர்களது முதன்மையானத் தொழிலாக அமைந்திருந்தது. கோதுமை , பார்லி , அரிசி , பருத்தி மற்றும் காய்கறிகள் ஆகியவற்றைப் பயிர் செய்தனர். ' கலப்பை ’ யின் உபயோகத்தை அறிந்திருந்தனர். 3.5.2. வீட்டுவிலங்குகள் முக்கியமாக பசு , எருது , எருமை , செம்மறி ஆடு , வெள்ளாடு மற்றும் ஒட்டகம் ஆகியவற்றை வளர்த்து வந்தனர் என்பதை
|
ஆராய்ச்சியில் தோண்டி எடுத்த முத்திரைகள் மூலமாகக் காணலாம். இவர்கள் குதிரைகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. 3.5.3. வேட்டையாடுதல் பொழுதுபோக்கு மட்டுமின்றி வாழ்க்கைத் தேவையினைப் பெறுவதற்காகவும் வேட்டையாடுதலை மேற்கொண்டனர். மிருகங்களின் தோல் , முடி மற்றும் எலும்பு ஆகியவற்றை வாணிகம் செய்தனர். மீன் பிடித்தலும் மிகவும் பெயர் பெற்றிருந்தது. 3.5.4. நூற்றலும் நெய்தலும் நூற்றலும் , நெய்தலும் மக்களிடையே பழக்கத்தில் இருந்தன என்பதை அகழ்வாராய்ச்சியின் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. பருத்தியும் , விலங்குகளின் தோல்களும் ஆடை
|
நெய்வதற்குப் பயன்படுத்தப்பட்டன. 3.5.5. மட்பாண்டங்கள் சிந்து சமவெளி மக்கள் மட்பாண்டங்கள் தயாரிப்பதில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அவை சக்கரத்தினால் செய்யப்பட்டன. 33 3 , 6 , சமயம் தண்ணீர் சுட வைப்பதற்கான பாத்திரம் , பொருள்களை சேமிப்பதற்கான பாத்திரம் போன்றன செய்யப்பட்டன. இத்துடன் செம்பு , வெள்ளி , பித்தளை மற்றும் பீங்கான் ஆகிய உலோகங்களைக் கொண்டு வேலைப்பாடு அமைந்த பாத்திரங்களைச் செய்தனர். 3.5.6. உலோகங்களும் தாதுப் பொருள்களும் தங்கம் , வெள்ளி , பித்தளை போன்ற உலோகங்களைப் பயன்படுத்தினர். அகழ்வாராய்ச்சியில்
|
கண்டுபிடித்தவைகளில் பெரும்பாலானவை செம்பு மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்டவைகள் ஆகும். இவர்கள் ஒருவேளை இரும்பின் உபயோகத்தை அறியாமல் இருந்திருக்கக் கூடும். 3.5.7. வாணிகம் பழங்கால நாகரிகம் , அண்டை நாடுகளுடன் கொண்டிருந்த வர்த்தகத்தை எடுத்துரைக்கிறது. முக்கியமாக துணிகள் வர்த்தகத்தில் பயன்படுத்தப்பட்டன. சுமேரியாவில் சில குறிப்பிட்ட பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை சிந்து சமவெளி மக்களுடையதைப் போன்றே இருந்தது. இது இவ்விரு நாடுகளிடையே வர்த்தகம் நடைபெற்றது என்பதை உறுதி செய்கிறது. மேற்காசிய நாடுகளுடனும் வர்த்தகம்
|
நடைபெற்றுள்ளது. பெரும்பாலும் நீர் வழிகளே வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்பட்டன. 3.5.8. அளவீடுகள் வாணிகத்திற்கு தராசுகள் எடைக்கற்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தினர். சில படிக்கற்கள் அதிக எடை கொண்டவை. அவற்றை பெரிய கயிற்றைக் கட்டியே தூக்க முடியும். சிறிய எடைக்கற்களை நகை வியாபாரிகள் உபயோகப்படுத்தினர். இத்துடன் நீளத்தை அளப்பதற்கு ‘ அடி ' முறைகள் பயன்படுத்தப்பட்டன. இதுவரையில் சிந்து சமவெளி மக்கள் மிகவும் ஆக்கபூர்வமான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வாழ்வில் பெரிதும் மேம்பாடு அடைந்திருந்தனர் என்பதைக் கண்டோம். 34
|
அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பல்வேறு வகையான சிலைகளும் முத்திரைகளும் சிந்துசமவெளி மக்கள் சமயப்பற்று அதிகம் கொண்டவர்கள் என்பதை பறைசாற்றுகின்றன. அதிகப் படியான சிலைகளும் , களிமண்ணால் ஆன பொம்மைகளும் ( Terro Cotta ) இவர்கள் உருவவழிபாட்டில் அதிகம் நம்பிக்கை கொண்டவர்கள என்பதை நமக்கு உணர்த்துகின்றன. 3.6.1. தாய் வழிபாடு ‘ தாய் வழிபாடு ’ இம்மக்களின் சமயவாழ்வில் பெரும் பங்கு வகித்தது. ஹரப்பாவில் கிடைத்த மிக நீண்ட முத்திரையின் மூலம் தாய்த் தெய்வத்தின் உருவத்தை நாம் அறியலாம். 3.6.2. சிவ வழிபாடு இம்மக்கள் சிவனை வழிபடுதலை
|
தங்களுக்குள் பழக்கமாகக் கொண்டிருக்கலாம். ‘ ஹரப்பாவில் ’ கண்டெடுத்த முத்திரை ஒன்றில் ‘ சிவன் ’ போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளதை அறிகிறோம். அது மூன்று முகங்களைக் கொண்ட கடவுள் யோக நிலையில் அமர்ந்திருப்பது போலவும் அதனைச் சுற்றி யானை , புலி மற்றும் எருமை போன்ற விலங்கினங்கள் சூழ்ந்திருப்பது போலவும் அமைந்துள்ளது. இது சிவனுக்குரிய ‘ திருமுக ’ ‘ பசுபதி ’ மற்றும் ‘ மகாயோகி ’ என்னும் அம்சங்களை உணர்த்துகின்றன. 3.6.3. விலங்கு வழிபாடு முத்திரைகள் மூலம் நமக்கு தெரிவது சிந்து சமவெளி மக்களிடையே விலங்கு வழிபாடு இருந்தது தெரிய
|
வருகிறது. இவ்வழிபாட்டை மூன்று வகையாகப் பிரிக்கலாம் முதலாவதாக பாதி மனிதன் உருவைக் கொண்டன. இரண்டாவதாக , அறிந்து கொள்ள முடியாதன , மூன்றாவதாக உண்மையான விலங்குகளின் உருவங்களைக் கொண்டதாகவும் அமைந்துள்ளன. 3.6. 4. நீர்வழிபாடு ஆரம்ப கால முதற்கொண்டே நதிகள் புனிதமானவையாகவே கருதப்பட்டன. ‘ மொஹஞ்சதாரோ ' வில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய நீராடுதல் என்ற வழக்கம் மக்களின் சமயவாழ்வில் நீர் மிகச் சிறந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. சமயச் சடங்குகளை ஆரம்பிப்பதற்கு முன் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்காக ‘ நீராடுதல் ’
|
வழக்கத்தில் இருந்து வந்துள்ளது. 3.6.5. மரவழிபாடு கண்டுபிடிக்கப்பட்ட முத்திரை ஒன்றில் கடவுள் ஒருவர் மரங்களுக்கு நடுவே இருப்பது போல் சித்திரிக்கப்பட்டுள்ளது. மேலும் " வேம்பு ' போன்ற மரங்கள் புனிதமானவையாக கருதப்பட்டன. 3.6.6. ' சூரியன் மற்றும் நெருப்பு ’ வழிபாடு பல முத்திரைகளில் ‘ சக்கரமும் ’ ‘ சுவஸ்திக் ’ ( Wheel and Swastika ) இருப்பதைக் கொண்டு சூரிய கடவுளை மக்கள் வழிபட்டதாகத் தெரிகிறது. இதே போன்று நெருப்புக்குரிய கடவுளை வழிபடுதலையும் அறியலாம். 3.6.7. நம்பிக்கைகள் மக்கள் பல நம்பிக்கைகளைக் கொண்டிருந்தார்கள்
|
என்பதற் கான ஆதாரங்களும் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. இதுவரை நாம் படித்த பல செய்திகளான ‘ மரம் ’ ‘ நீர் , ’ ‘ சூரியன் ’ ‘ நெருப்பு ’ மற்றம் விலங்குகள் ஆகியவற்றை வழிபடுதல் என்னும் இயற்கை வழிபாடு இருந்தது. 3. 7. கலை முத்திரைகளின் வாயிலாக நாம் இவர்களது கலை நுணுக்கங்களை காண இயலும். ஆண் தெய்வம் , பெண் தெய்வம் , பல்வேறு வகையான விலங்குகள் ஆகியவற்றின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மண்பாண்டங்களில் கூட மிருகங்களின் 36 உருவங்கள் பொறிக்கப்பட்டள்ளன. முத்திரைகள் , தந்தத்தினாலும் , கற்களினாலும் மற்றும் களிமண்ணாலும்
|
பொறிக்கப்பட்டுள்ளன. விலை மதிக்கமுடியாத கற்கள் நகைகளில் பதிக்கப்பட்டன. மேலும் இவர்கள் இசை மற்றும் நடனத்தில் அதிக நாட்டம்கொண்டிருந்தனர். வெண்கலத்தினாலான நடனமாதுவின் சிலை இவர்களின் உன்னதமானப் படைப்பாற்றலைக் காட்டுகிறது. 38. எழுத்துகள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துகளை சித்திர எழுத்து என்றோ அல்லது கண்ணெழுத்து வகை என்றோ குறிப்பிடலாம். இதனுடைய வடிவம் என்னவென்று காண இயலவில்லை. எழுத்துகள் இடமிருந்து வலமான ஒரு வரியிலும் , வலமிருந்து இடமாகவும் எழுதப்பட்டுள்ளன. இவை சுமேரிய , எகிப்து ஆகிய எழுத்துகளுக்கு
|
தொடர்புடையன போல காணப்படுகின்றன. ஈராசுப் பாதிரியார் சிந்து சமவெளி எழுத்துகளும் , மொழியும் தமிழே என்று கூறியுள்ளார். இவர்களின் எழுத்துமுறை ‘ சித்திர எழுத்துமுறை ’ ஆகும். ( Pictography ) 3. 9. சிந்துவெளி நாகரிகத்தின் அழிவு இந்திய நாகரிகத்தில் மிகச் சிறந்து விளங்கிய சிந்துவெளி நாகரிகம் அழிந்ததற்கான காரணங்கள் பல உள்ளன. 1. சிந்து ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் இந்நகரம் மூழ்கியிருக்கக் கூடும். 2. அகழ்வாராய்ச்சயின் போது கிடைத்த மனித எலும்புக் கூடுகளை ஆராய்ந்த அறிஞர்கள் அவைகளின் மேல் காணப்படும் சிதைவுகள் போர்க் காலங்கள்
|
என முடிவு செய்கின்றனர். அந்நியர் படையெடுப்பு நடைபெற்றிருக்க வேண்டும். பொருளாதார வீழ்ச்சியினால் மக்கள் இடம் பெயர்ந்து நாட்டை விட்டுச் சென்றிருக்கலாம். ஆரியர்கள் வருகையால் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றின் விளைவால் நகர நாகரிகம் அழிந்திருக்கலாம். 37 இறுதியாக சிந்துசமவெளி நாகரிகத்திற்கும் வேதகால நாகரிகத்திற்கும் உள்ள வேற்றுமைகளை திரு. ஜான்மார்சல் ( Sir. John Marshall ) என்பவர் கீழ்கண்டவாறு கூறுகிறார். 1. சிந்து சமெவெளி நாகரிகம் அடிப்படையில் நகர நாகரிகம் ஆகும். ஆனால் வேதகால நாகரிகமோ அடிப்படையில் கிராம
|
நாகரிகமாகும். சிந்து சமவெளி மக்கள் விவசாயத்தையும் , வாணிகத்தை முதன்மையான தொழிலாகக் கொண்டிருந்தனர். வேதகால மக்களோ நாடோடிகளாக இருந்தனர். 2. சிந்து சமவெளி மக்கள் உருவ வழிபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள். ‘ தாய் வழிபாடு ' சிவ வழிபாடு ‘ மர வழிபாடு ’ மற்றும் ' விலங்கு வழிபாடு ' ஆகிய வழிபாடுகளைச் செய்தவர்கள். ஆனால் வேதகால மக்களோ ' உருவ வழிபாட்டை ' போற்றவில்லை. இவர்கள் இயற்கையை வழிபட்டனர். நீர் , நெருப்பு , ஆகாயம் , சூரியன் ஆகியவற்றை வழிபட்டனர். அவர்கள் நெருப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் சிந்து சமவெளியினால்
|
அவ்வாறு செய்யவில்லை. 3. சிந்துசமவெளியினர் முற்றிலுமாக இரும்பின் உபயோகத்தை அறிந்திருக்கவில்லை. ஆனால் வேதகாலத்தினர் ஆரம்பத்தில் தங்கம் , தாமிரம் ஆகியவற்றை உபயோகப்படுத்தினர். நாளடைவில் வெள்ளி , இரும்பு மற்றும் வெண்கலம் ஆகியவற்றை உபயோகப்படுத்தினார். 4. குதிரைகளின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்பாடு ஆகியவற்றை சிந்து சமவெளியினர் உணர்ந்திருக்கவில்லை. ஆனால் வேதகாலத்தினரோ , குதிரை மற்றும் பசு ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். 5. சிந்து சமவெளியினர் எழுதவும் , எழுத்து முறையும் கற்றிருந்தனர். அதனால் கலை மற்றும்
|
கலாசாரத்தில் மேலோங்கி இருந்தனர். 3.10. இந்தியப் பண்பாட்டிற்கு சிந்துவெளி நாகரிகத்தின் கொடை பழமையும் பெருமையும் வாய்ந்த சிந்துவெளி நாகரிகம் இந்தியப் பண்பாட்டிற்கு பின்வரும் அரிய கொடைகளை வழங்கியுள்ளது. 1. சிந்துவெளி மக்களின் நாகரிகம் ' ஒரு சிறந்த நகர நாகரிகம் ’ ஆகும். 2. சிந்து வெளி நாகரிக காலத்தில் தோன்றிய நகரங்களின் வடிவமைப்பு இன்றைய நகரங்களின் அமைப்பைக் காட்டிலும் மேம்பட்டதாக இருந்தது. 3. நகரம் மாசு அடைவதை தவிர்க்க சுண்ணாம்பு காளவாய்கள் , நகரின் ஒதுக்குப் புறத்தில் அமைக்கப்பட்டதாக அறிகிறோம். ‘ புகை நமக்கு
|
பகை ’ என்பதை உணர்ந்திருந்தனர் என்பதை இச்செயல் நமக்கு உணர்த்துகிறது. 4. சிந்து வெளி மக்கள் “ தாயிற் சிறந்த கோயிலுமில்லை " என்பதை உலகறியச் செய்யும் பொருட்டு தாய்வழிபாட்டினை மேற்கொண்டனர். 5. அரிய விலங்கினமான ஒற்றைக் கொம்பு எருது பற்றி இவர்களுக்கு தெரிந்திருந்தது. களிமண்ணால் ஆன ஒற்றைக் கொம்பு எருதின் பொம்மைகள் கிடைத்துள்ளன. மேலும் அவர்கள் இந்த ஒற்றைக் கொம்பு எருதினை தெய்வமாக போற்றி வணங்கினர். 6. இவர்களின் கலைத்திறனை ‘ வெண்கலத்திலான நடனமாதின் சிலை ’ உலகறியச் செய்கிறது. 39 பயிற்சி வினாக்கள் அ. ஓரிரு வரிகளில்
|
விடையளி 1. ‘ சிந்துவெளி நாகரிகத்தை ’ உலகறிய செய்தவர் யார் ? 2. ' சிந்துவெளி நாகரிக காலம் ’ எது ? 3. சிந்துவெளி நாகரிக மக்கள் ‘ இனம் ’ பற்றி கூறு. 4. சிந்துவெளி மக்களின் ‘ பொழுது போக்கினை ' கூறுக. 5. சிந்துவெளி மக்களின் ‘ எழுத்து முறை ' யாது ? 6. சிந்துவெளி ‘ மக்களின் நிலை ’ யாது ? 7. சிந்துவெளி மக்களின் ‘ மருத்துவ அறிவினை ’ குறிப்பிடுக. 8. சிந்துவெளி மக்களின் ' அணிகலன்களை ' குறிப்பிடுக. ஆ. ஒரு பத்தி அளவில் அல்லது பத்து வரிகளுக்கு மிகாமல் விடையளி 1. சிந்துவெளி மக்களின் சமுதாய வாழ்வினை எழுதுக. ஹரப்பா
|
நாகரிகத்தின் அழிவிற்கான காரணங்கள் யாவை ? 2. சிந்துவெளி மக்களின் உடை , உணவு பற்றி எழுது. இ. ஒரு பக்க அளவில் அல்லது முப்பது வரிகளுக்கு மிகாமல் விடையளி 1. சிந்துவெளி நாகரிக மொஹஞ்சாதாரோ , ஹரப்பா நகரங்கள் பற்றி விவரி. 2. சிந்துவெளி மக்களின் ' சமயம் ’ பற்றி விவரி. 3. சிந்துவெளி மக்களின் ' கலையினை ' விவரி. 4. சிந்துவெளி மக்களின் ‘ பொருளாதாரம் ’ பற்றி எழுதுக. 5. சிந்துவெளி மக்கள் இந்தியப் பண்பாட்டிற்கு அளித்த ‘ கொடையினை ’ விவரி. ஈ. நான்கு பக்கங்களுக்கு மிகாமல் விடையளி 1. சிந்துவெளி நாகரிகம் பற்றி விவரித்து எழுதுக.
|
40 4. வேதங்கள் மற்றும் புராணங்களில் காணப்படும் பண்பாட்டுக் கூறுகள் 4.1. வேதம் - சொல் விளக்கம் , இலக்கியங்கள் வேதம் என்ற சொல் ‘ வித் ’ ( Vid ) என்ற சமஸ்கிருதச் சொல்லின் அடியாகப் பிறந்தது. வேதம் என்பது ‘ அறிவு ’ என்றும் தெய்விகச் சிந்தனைகள் நிரம்பப் பெற்றமையால் ' புனித அறிவு ' எனவும் பொருள் கொள்ளப்படுகிறது. தமிழில் ‘ வித் ’ என்ற சொல் விதை என்ற பொருளைத் தருகிறது. விதையானது முறையாக வளர்ந்து பெரிய மரமாகி பூத்துக் காய்த்து குலுங்குவது போல் வேதங்கள் மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் ஆன்மிக மற்றும் அருள் உணர்வை
|
வளர்ப்பனவாக உள்ளன. வேதங்கள் முறையே ரிக் , யஜீர் , சாமம் , அதர்வணம் என்ற நான்கு ஆகும். இவ்வேதங்கள் தோன்றிய காலம் , உணர்த்தும் அரிய கருத்துகள் , இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் உயரிய பண்பாட்டு நெறிகளைக் காண்போம். 4.1.1. வேத காலம் சிந்து வெளிநாகரிகத்திற்குப்பின் அதற்கு முற்றிலும் மாறுபட்ட கிராம நாகரிகம் இந்தியாவில் வேரூன்றியது. இதற்கு வித்திட்டவர்கள் ஆரியர்கள். ஆவர். இவர்களது பூர்வீகம் பற்றி பல்வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவின் வடமேற்கே உள்ள கைபர் மற்றும் போலன்
|
கணவாய்கள் வழியாக வந்தவர்கள் என்பது பெரும்பாலோர் கருத்து. இங்ஙளம் வந்தவர்கள் ‘ இந்தோ ஆரியர்கள் ’ எனப்பட்டனர். 41. ஆரிய வர்த்தம் இந்தியாவில் ஆரியர்கள் சிந்து மற்றும் கங்கைச் சமவெளியில் வந்து குடியேறி நிலையாக வாழ்ந்தனர். செழிப்பான நிலப்பகுதியும் , வற்றாத நீர் வளமும் அவர்களது வாழ்க்கைக்கு வளமை சேர்த்தது. ஆரியர்கள் குடியேறிய இப்பகுதி ‘ ஆரிய வர்த்தம் ’ என்று அழைக்கப்பட்டது. இந்தியா ஆரியர்களின் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருந்த சமயம் வேதங்கள் தோன்றின. இக்காலமே வேத காலம் என அழைக்கப்படுகிறது. பழமையான “ ரிக் ” வேதம்
|
தோன்றிய காலம் முந்திய வேதகாலம் எனவும் மற்ற வேதங்களின் தோற்றம் மற்றும் இலக்கியம் வளர்ந்த காலத்தைப் பிந்தைய வேதகாலம் என்றும் வழங்குவர். 4.1.3. வேத இலக்கியங்கள் வேத இலக்கியங்கள் மிகவும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய , மிகவும் முக்கியமான மதிப்புள்ள ஆரியர்களின் அரிய கொடையாகும். இவ்விலக்கியங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களுக்கு நல்வழி காட்டி பண்பாட்டினை வளர்த்தன. அறிவு , கர்மம் , வழிபாடு என்பள வேத இலக்கியங்கள் உணர்த்தும் அரிய உண்மைகளாகும். இவற்றை விரிவாகக் காண்போம். இலக்கியங்கள் - வகைப்பாடு 1. சம்ஹிதைகள் -
|
Samhitas 2. பிராமணங்கள் - Bramhanas 3. ஆரண்யகங்கள் - Aranyakas 4. உபநிடதங்கள் - Upanishads 5. " சுருதி " மற்றும் " ஸ்மிருதி ” - Sruti and Smruti 6. வேதங்கள் - Vedas என வகைப்படுத்தி விரிவாகக் காண்போம். 4.1.3.1. சம்ஹிதைகள் அறிவுக் கருவூலமாகத் திகழ்வன. இவற்றின் துணையால் அக்கால மக்களின் அரசியல் , பொருளாதார , சமூக , சமய வாழ்க்கை முறைகளை அறிய முடிகிறது. ஒவ்வொரு வேதத்திற்கும் தனித்தனியே சம்ஹிதைகள் உள்ளன. இவற்றுள் ரிக் வேத சம்ஹிதைகள் மிகப் பழமையானவை. ரிக் வேத சம்ஹிதையைக் கொண்டு ‘ முற்கால வேத கால பண்பாட்டை விரிவாக
|
அறியலாம். பிற வேதங்களின் சம்ஹிதைகள் வாயிலாக ' பிற்கால வேதகால ' மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் பண்பாட்டுச் சிறப்பினை அறியலாம். சம்ஹிதைகள் என்பன துதிப்பாடல்கள் , வழிபாட்டு முறைகள் , வேள்விகளுக்கான சூத்திரங்கள் , ஆகியவற்றைக் கொண்ட தொகுப்பாகும். வேள்விக் காலங்களில் இவை முழுமையாக பயன்பட்டன. அதர்வண வேத சம்ஹிதை மட்டும் பில்லி , சூனியம் , பிசாசு , மந்திரக் கட்டு என்பனவற்றைக் கூறுகிறது. 4.1.3.2. பிராமணங்கள் வேத மந்திரங்களுக்கான விளக்கவுரையுடன் எழுதப்பட்ட பகுதிகள் பிராமணங்கள் ஆகும். வேதங்களில் உள்ள
|
துதிப்பாடல்களுக்குரிய உரைநடை நூல்கள் எனலாம். சமயச் சடங்குகள் , வேள்விகள் பற்றிய விளக்கங்களும் அவற்றைச் செய்யும் முறைகளும் உள்ளன. புரோகிதர்களுக்கு சரியான வழியைக் காட்ட இவை பெரிதும் உதவுகின்றன. 4.1.3.3. ஆரண்யகங்கள் அமைதியாகக் காட்டிற்குச் சென்று அங்கு கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளைக் கொண்டமையால் ஆரண்யகங்கள் என்ற பெயர் பெற்றன. வேள்விகளைச் செய்ய இயலாத முதியவர்கள் , துறவிகள் ஓய்வு பெற்று காட்டிற்குச் சென்று பின்னர் கற்பதற்காக உருவானவை. இவற்றில் வேள்வியை விட அமைதியான தியானமே மிகவும் மேலானது என்று
|
வலியுறுத்தப்படுகிறது. அநுபூதி நெறிகள் மற்றும் தத்துவக் கருத்துகள் 43 அடங்கிய கருத்துப் பெட்டகம் எனலாம். ஆரியர்கள் ஆன்மிகத் துறையில் அடைந்த பண்பாட்டின் உள்ளத நிலையை எடுத்துக்காட்டுவனவாகும். 4.1.3.4. உபதிடதங்கள் வேதங்களின் சாரமே ' உபநிடதம் ’ என்றால் அது மிகையாகாது. ஆரியர்களின் ஆன்மிக , சமயக் கருத்துகளை இவை விவரிக்கின்றன. இறைவன் ஆன்மா , உலகம் , கர்மவினை , முக்தி போன்ற கருத்துகளை ஆராய்ந்து தெளிவான விளக்கங்களை உலகிற்கு அளிக்கின்றன. மேலும் மறைபொருள் , ஞானங்களை விளக்குகின்றன. உலக பந்த பாசங்களினின்று விடுபட்டு வீடு
|
பேற்றினை அடைய ஞானம் தேவை என்பதை விளக்குகின்றன. பரம்பொருளாகிய “ பிரம்மன் ” ஒன்றே என்ற கருத்தையும் நிலைநாட்டுகிறது. ஏறத்தாழ 200 உபநிடதங்களுக்கு மேல் உள்ளன. 4.1.3.5. கருதி மற்றும் ஸ்மிருதி சுருதிகள் செவி வழியே கேட்டு உணரப் பெற்ற செய்திகளின் தொகுப்பு சுருதி எனப்படும். ஆரியர்கள் காலத்தில் எழுத்துமுறை இல்லாமையால் மனப்பாடமாகவே இலக்கியங்கள் வந்திருக்கின்றன. நினைவாற்றல் வழியாக வரும் அறிவுக் கருவூலமாக வந்தவை சூத்திரங்கள். இவை வேதங்களின் ஒரு பகுதி அல்ல. வேதங்களோடு நெருங்கிய உறவுடையவை. இவை மூன்று வகைப்படும். அவையாவன. அ
|
) தரும சூத்திரம் : - ஆரியர்களின் நம்பிக்கைகளைக் கூறுகின்றது. ஆ ) ச்ரௌத்த சூத்திரம் : - இது யாகங்கள் மற்றும் சடங்குகள் செய்யும் முறைகளைக் கூறுகின்றது. இ ) கிருஹ்ய சூத்திரம் : - இது ஆரியர்களின் வாழ்வைக் கூறுகின்றது. 44 ஸ்மிருதிகள் " இவை உயர்ந்த உள்ளங்களின் சிந்தனைத் தொகுப்புகள் ” சூத்திரங்கள் , தரும சாஸ்திரங்கள் , இதிகாசங்கள் , புராணங்கள் என்பன ஸ்மிருதிகளாகும். இவை எழுதப் பெற்றவை. இதில் தரும சாஸ்திரம் என்பது சட்டம் , சமுதாய நடைமுறைகளை விவரிக்கின்றன. பல்வேறு சாதிக் கடமைகளையும் , பல்வேறு நிறுவனங்களையும் (
|
அமைப்புகளை ) விளக்குகின்றன. நடைமுறை வாழ்வில் குற்றம் , குற்றங்களுக்குரிய தண்டளை முறை , மகவேற்பு ( adoption ) , மரபுரிமையாக சொத்தை பெறும் சட்ட உரிமைகள் விவரிக்கப்பட்டுள்ளன. 4.1.3.6. நான்கு வேதங்கள் வேதம் என்பது பற்றிய கருத்துகளை முன்னரே அறிந்தோம். இவ்வேதங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் எழுதப்படவில்லை. இவை பல்வேறு ரிஷிகளால் பல்வேறு காலத்தில் எழுதப்பட்டவை. சில அறிஞர்கள் இவை கி.மு. 1000 ல் தொகுக்கப்பட்டவையென்றும் வேறு சிலர் கி.மு. 2000 க்கும் 3000 க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்டவை என்றும் கூறுகின்றனர்.
|
முதலில் தோன்றியது ரிக் வேதம் எனவும் பிற வேதங்களாகிய யஜூர் , சாமம் , அதர்வணம் பின்னர் தோன்றியன என்றும் கூறுகிறார்கள். அ ) ரிக் வேதம் - ( Rig veda ) மிகப்பழமையானதும் முதலில் தோன்றியது என்ற பெருமையும் கொண்டது. இது பத்து மண்டலங்களையும் 1028 சூக்தங்களையும் கொண்டது. அக்னி , வருணன் , இந்திரன் போன்ற தெய்வங்களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இது கி.மு. 1200 ல் எழுதப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. ஆ ) யஜீர் வேதம் - ( Yajur veda ) இவ்வேதம் நடைமுறை சடங்குகள் , வேள்விகளுக்கான பாடல்களைக் கொண்டது. இது சுக்ல யஜூர் வேதம் ,
|
கிருஷ்ண யஜூர் வேதம் என்னும் இரு பிரிவுகளைக் கொண்டது. 40 அத்தியாயங்களைக் கொண்டது. 45 4.2.1. அரசியல் அமைப்பு சாம வேதம் - ( Sama veda ) இது வக்கதர் என்னும் ஒரு குறிப்பிட்ட புரோகிதர்களால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பாகும். இது 1459 பாடல்களைக் கொண்டது எனவும் இசையோடு இறைவனை துதிப்பதற்கான பாடல் தொகுப்பு எனவும் கூறுவர். ஈ ) அதர்வண வேதம் - ( Atharvana ) இது பிரம்மவேதம் எனப்படும். இது 731 பாடல்களைக் கொண்டு 20 பகுதிகளாக உள்ளது. இது உச்சாடனம் மாந்ரீகம் போன்றவற்றால் தீயசக்திகளையும் எதிரிகளையும் வென்று உலகத்தில் வெற்றி
|
பெறும் வழிகளைக் கூறுவது எனலாம். 4.1.4. உபவேதங்கள் - ( Upa vedas ) ஒவ்வொரு வேதமும் உபவேதங்களைக் குறிப்பிடுகின்றன. அவை நான்கு. ஆயுர் வேதம் , தனுர் வேதம் , காந்தர்வ வேதம் , சில்ப வேதம் என்பனவாகும். அ ) ஆயுர்வேதம் : - ரிக் வேதத்தின் உபவேதம். இது மருந்து , மூலிகை போன்றவற்றைக் குறிப்பிடுகின்றது. ஆ ) தனுர் வேதம் : - யஜூர் வேதத்தின் உபவேதம். இது போர்க்கலையை விவரமாகக் கூறுகின்றது. இ ) காந்தர்வ வேதம் : - சாம வேதத்தின் உபவேதம். இது இசை , நடனம் , ஆகிய நுண்கலைகளை விளக்குகின்றது. ஈ ) சில்ப வேதம் : - அதர்வண வேதத்தின்
|
உபவேதம். இது கட்டடக் கலையை விவரிக்கின்றது. 4.2. முற்கால வேதகாலப் பண்பாடு மிகப்பழமையும் பெருமையும் வாய்ந்த ரிக் வேதகாலத்தில் வாழ்ந்த மக்களின் அரசியல் , பொருளாதார சமூக , சமய வாழ்க்கை முறை மற்றும் மக்களது இலக்கிய கலை மேம்பாட்டையும் குறிப்பதே பண்பாட்டின் வெளிப்பாடு ஆகும். 46 இந்தியாவில் குடியேறிய ஆரியர்கள் இக்காலத்தில் பல குழுக்களாகப் பிரித்து வேறுபட்ட இடங்களில் வாழ்ந்தனர். இக்குழுக்களுக்கு ‘ ஜனா ' என்று பெயர். ஒவ்வொரு ஜனாவிற்கும் ஓர் அரசன் இருந்தான். அவன் பொதுவாக ‘ இராஜன் ' என்றழைக்கப்பட்டான். அரச உரிமை
|
பெரும்பாலும் பரம்பரை வழி வந்து கொண்டிருந்தது. சில சமயங்களில் சிறந்த அரசன் அரச மற்றும் பிரபுக்கள் குடும்பத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டான். 4.2.1.1. அரசியல் பிரிவுகள் குடும்பம் அல்லது குலம் என்பது ஓர் அரசின் சிறு தொகுதி. அதன் தலைவன் ‘ குலவன் ' என்றழைக்கப்பட்டான். பல குடும்பங்கள் சேர்ந்தது ‘ கிராமம் ”. அதன் தலைவன் ' கிராமணி ' என்று அழைக்கப்பட்டான். பல கிராமங்கள் சேர்ந்து விஷு எனவும் பல விஷுக்கள் சேர்ந்தது ஒரு ஜனம் என்றும் அழைக்கப்பட்டது. அதிகாரம் : - அரசனிடம் நிதி , நீதி ஆகிய இரண்டும் இருந்தன. அரசர்கள் சரியாக
|
இயங்காத போது அவர்களை விலக்கி தகுந்தவர்களை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மக்களுக்கு இருந்தது. அரசனுக்கு உதவ அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அமைச்சர்கள் அரசனுக்கு பல்வேறு துறைகளில் அறிவுரை கூறி நல்வழிகாட்டி நல்லாட்சி நடைபெற உதவினர். 4.2.1.2. அரச சபைகள் அரசனது அதிகார வரம்பு ' சமிதி ' , ' சபா ' என்ற இரு அவைகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அரசன் தான் விரும்பியவாறு எந்த முடிவும் எடுக்கமுடியாத நிலை இருந்தது. 4.2.1.3. சமிதி என்னும் சட்டமன்றம் பொதுவாக மக்கள் மன்றம் சமிதி என்று அழைக்கப்பட்டது. மக்கள் மன்றத்தில் கலந்து
|
கொள்வதும் , அதில் கருத்துகளை விவாதித்து முடிவுமேற்கொள்வதும் அரசனின் கடமையாக கருதப்பட்டது. மேலும் அரசனை தேர்ந்தெடுப்பதும் அதன் முக்கிய பணிகளில் ஒன்று என்று பேராசிரியர் ஜெய்ஸ்வால் கூறுகிறார். 47 சபா என்ற முதியோர் அவை முதியோர்கள் அல்லது பிரபுக்களின் அவையாக இது விளங்கியது. சபாவின் கூட்டங்களை சட்டமன்ற அறையில் கூட்டப்பட்டன. அரசியல் மற்றும் அரசியல் அல்லாத பொதுவாழ்வு முறைகளை நடைமுறைப்படுத்த உதவியது. நீதி : - அரசனே நீதி வழங்குவதைப் பொறுத்தமட்டில் உயர்ந்தோளாகத் திகழ்ந்தான். குற்றங்கள் குறைந்து காணப்பட்டன. கடுமையானக்
|
குற்றங்களுக்கு மரண தண்டனையும் , சில குற்றங்களுக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டன. 4.2.2 சமுதாய நிலை 4.2.2.1. குடும்பம் ரிக் வேத காலத்தில் மக்கள் கிராமங்களில் வாழ்ந்தார்கள். சமுதாயத்தில் மிகச் சிறிய கூறான குடும்பமே வாழ்வின் அடிப்படை அலகு. ஒவ்வொரு குடும்பத்திற்கும் அக்குடும்பத்தின் மூத்தவளே தலைவனாக இருந்தான். அவன் " கிருஹபதி ' என்றழைக்கப் பட்டான். தவறுகளைக் கண்டிப்பதும் சமயச் சடங்குகளை செய்து நல்வாழ்வு வாழ்வதும் குடும்பத் தலைவனின் கடமையாக கருதப்பட்டது. 4.2.2.2. பெண்கள் நிலை சமுதாயத்தில் பெண்கள்
|
மதிப்பும் மரியாதையும் மிக்கவராய் இருந்தனர். திருமணம் தூய்மையானதாகவும் , புனிதமானதாகவும் பிரிக்க முடியாத ஒன்றாகவும் மதித்து போற்றப்பட்டது. குழந்தை மணம் இல்லை. விதவை மணம் ஆதரிக்கப்பட்டது. சதி அல்லது உடன்கட்டையேறும் வழக்கம் இல்லை. மகளின் திருமணத்தை அவளது இசைவினைப் பெற்றே பெற்றோர் முடித்து வைத்தனர். இக்கால மகளிர்அறிவும் பண்பாடும் ஒருங்கே அமையப் பெற்றவராய் விளங்கினர். 4.2.2.3. கல்வி கல்வி வாய்மொழியாகவே அமைந்தது. கல்வி மாணவரின் உடல் , உயிர் இவற்றின் வளர்ச்சிக்கு வழி செய்தது. கல்வியின் குறிக்கோள் பேரறிவு அல்லது
|
வீடுபேற்றை அடைவது என்ற உயரிய நிலை இருந்தது. 4.2.2.4. உணவு , உடை ஆரியர்கள் எளிமையான வாழ்வை மேற்கொண்டனர். கோதுமை முதலான தானியங்கள் , பழவகைகள் , பால் , வெண்ணெய் , தயிர் , தேன் போன்றவை அவர்களது உணவுப் பொருள்களாகும். வேள்விக் காலத்தில் அவிர்பாகமாக இறைச்சியையும் , சோம , சுரா பானங்களையும் அருந்தினர். பருத்தி , உரோமம் , மாள்தோல் , கம்பளம் போன்றவற்றால் ஆன ஆடைகளை அணிந்தனர். பொதுவாக ஆடையை வஸ்திரம் என்றழைத்தனர். கீழாடையை ' நிவி ' என்றும் மேலாடையை ‘ ஆதிவாஸ் ’ என்றும் அழைத்தனர். பொதுவாக தலைப்பாகை அணிந்தனர். அழகிய பூ
|
வேலைப்பாடு கொண்ட , தங்க வேலைப்பாடமைந்த ஆடைகளை விரும்பி அணிந்தனர். 4.2.2.5 விளையாட்டும் பொழுதுபோக்கும் தேர் , குதிரைப் பந்தயம் , சூதாட்டம் , நடனமாடுதல் , இசைபாடுதல் அக்கால மக்களின் பொழுது போக்குச் செயல்களாக இருந்தன. இசைக் கருவிகளின் பயனை அவர்கள் அறிந்திருந்தனர். 4.2.3. பொருளாதார நிலை வேளாண்மையே முக்கிய தொழிலாக இருந்தது. கோதுமை , பார்லி , நெல் , பருத்தி , எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றை பயிரிட்டனர். நீர்ப்பாசனத்திற்குரிய நீர் கிணறுகள் , கால்வாய்கள் , ஏரிகள் மூலம் பெறப்பட்டது. மக்கள் பெரும்பாலும் மழையையே நம்பி
|
இருந்தனர். இரு எருதுகளை நுகத்தடியில் இணைத்து நிலத்தை நன்கு உழுது விளைநிலமாக்கிப் பயிரிட்டனர். பசுவைப் புனிதமானத் தெய்வமென மதித்துப் போற்றிப் பாதுகாத்தனர். கால்நடை வளர்த்தல் இவர்களது மற்றொரு தொழிலாகும். ஒருவரது செல்வத்தின் மதிப்பு அவர் பெற்றிருந்த பசுக்களின் எண்ணிக்கையையும் அவற்றின் பயன்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்பட்டது. வீடுகளில் பசுக்கள் , எருதுகள் , குதிரைகள் , ஆடுகள் , கழுதைகள் , நாய்கள் முதலியன வீட்டு விலங்குகளாக வளர்க்கப்பட்டன. 4.2.3.1. தொழிலும் , வணிகமும் இக்காலத்தில் வேளாண்மையைத் தவிர
|
பிற தொழில்களையும் வாணிகத்தையும் மக்கள் மேற்கொண்டனர். பண்டமாற்று முறை வழக்கத்தில் இருந்தது. புனிதமான பசுவினை அளவு கோலாகக் கொண்டு பண்டமாற்று வாணிகம் நடந்தது. வணிகம் பெரும் பகுதி தரை வழியே நடைபெற்றது. கடல் வணிகத்தையும் அறிந்திருந்தனர். கப்பல்களையும் , படகுகளையும் போக்குவரத்திற்கும் , வணிகத்திற்கும் பயன்படுத்தினர். அக்காலத்தில் பொற்கொல்லர் , தச்சர் , கருமார் , நெசவாளர் என பல தொழில் புரிவோர் வாழ்ந்து சிறந்தனர். 4.2.4. சமயம் இவர்களது சமயம் எளிமையானது. இயற்கையை தெய்வமாக வழிபட்டனர். வானம் , சூரியன் , இந்திரன் , வாயு
|
வருணன் , பிருதிவி போன்ற எண்ணற்ற கடவுளர்களை வழிபட்டனர். ஆரியர்கள் தெய்வங்களை , அ ) விண்ணுலகத் தெய்வங்கள் ஆ ) பனிமண்டலத் தெய்வங்கள் மண்ணுலகத் தெய்வங்கள் என வகைப்படுத்தினர். தெய்வங்களை மகிழ்விக்க வேள்விகளைச் செய்தனர். பால் , நெய் , தானியங்கள் , மாமிசம் , சோமா என்னும் பானம் முதலானவற்றை கடவுளுக்கு காணிக்கையாக்கினர். மனித உயிர்களைப் பலியிடும் வழக்கம் இல்லை. ஆலயங்கள் இருந்ததாக சான்றுகள் இல்லை. மோட்சத்தை அடைய கடவுளை வணங்கி வேள்விகளைச் செய்தனர். 50 பொதுவாக கூறுமிடத்து ஆரியர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு மேற்கொண்டனர்.
|
எளிமையும் நேர்மையும் இறையுணர்வும் மிக்கவராய்த் திகழ்ந்தனர். நல்வாழ்வு வாழ்ந்து நற்கனி அடைவதை தம் வாழ்வின் உயரிய குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தனர். 4.3. பிற்கால வேதகாலப் பண்பாடு தொடக்கம் : - ரிக் வேதத்தைத் தொடர்ந்து சாம , யஜூர் , அதர்வண வேதங்களும் இலக்கியச் செறிவுமிக்க சம்ஹிதைகள் பிராமணங்கள் , ஆரண்யங்கள் , உபநிடதங்கள் தோன்றி பண்பாட்டை உயர்வடையச் செய்த காலமே பிற்கால வேத காலமாகும். 4.3.1. இலக்கியம் இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களை விரிவாக முதலில் கண்டோம். மேலும் வேத அங்கங்கள் என்ற ஆறும் தோன்றி வளர்ச்சியடைந்தன. அ
|
) ஈ ) சிட்சை கல்பம் வியாகரணம் - எனப்படும் இலக்கணம் நிருக்தம் ஜோதிடம் சந்தம் 4.3.2. அரசியல் துறை முடியாட்சியே வேத கால இறுதியில் நிலையான ஆட்சி முறையாக அமைந்தது. அரசுரிமை பரம்பரை வழி வந்தது. முடியரசு முறை பெரும்பாலும் இருந்த போதிலும் சில பகுதிகளில் குடியாட்சி முறையைக் காண முடிந்தது. அரசர்களைத் தேர்வு செய்யும் முறையும் இருந்ததாக சில அறிஞர்கள் கூறுகிறார்கள். அரசர்கள் மிகுந்த அதிகாரம் பெற்றிருந்தாலும் அவர்களது அதிகாரத்திற்கு சில தடைகளும் , வழிகாட்டி நெறிகளும் காணப்பட்டன. சமிதி , சபா அமைப்புகளும் காணப்பட்டன. ஊ ) -
|
எனப்படும் ஒலியியல் எனப்படும் சடங்கியல் , சமய ஒழுக்கம் - எனப்படும் சொல்லாக்க விளக்கம் - எனப்படும் வானநூல் - எனப்படும் சீர். என்ற ஆறாகும். 4.3.2.1. அமைச்சர்களும் அலுவலர்களும் இக்காலத்தில் அரசனுக்குத் துணை புரியவும் நல்வழி காட்டவும் அமைச்சர்கள் மற்றும் அலுவலர்கள் எண்ணிக்கை பெருகியது. அவற்றுள் சில. புரோகிதர் , கருவூலத்தார் , வரிவசூலிப்போர் , தேரோட்டி , அரண்மணை அக வினைஞர் , படைத்தலைவர் , கிராமணி , சடபதி ( நூறு கிராமங்களை ஆள்வோர் ) , சட்சிவள் - ( அமைச்சர் ) என்போர் சிலராவர். 4.3.2.2. நீதிமுறை அரசர்கள் நீதி
|
வழங்குவதில் முக்கிய பொறுப்பு ஏற்றனர். கொலைக் குற்றம் கடுமையானதாக கருதப்பட்டது. அதிலும் பிராமணரைக் கொலை செய்வது பெருங்குற்றமாக கருதப்பட்டது. அரசத்துரோகம் மிகக் கடுமையானதாக கருதப்பட்டு மரண தண்டணை விதிக்கப்பட்டது. சில சிக்கலான வழக்குகளை மன்னர் சபாவின் துணை கொண்டு தீர்ப்பளித்தார். 4.3.2.3. வகுவாய் முற்கால வேத காலத்தில் மக்களிடமிருந்து முறையான வரி வசூலிக்கப்பட வில்லை. இக்காலத்தில் அது சீராக்கப்பட்டது. வரிசூலிக்க “ பஹதுஹன் " என்ற அலுவலர் நியமிக்கப்பட்டார். அதர்வண வேதத்தல் கூறப்பட்டிருப்பது போல் வருவாயில் ஆறில் ஒரு
|
பங்கு தானியமாகவோ விலங்குகளாகவோ வசூலிக்கப்பட்டது. 4.3.3. சமுதாய நிலை இக்காலத்தில் சாதிப் பாகுபாடு தொழில் அடிப்படையில் காணப்பட்டது. அவையாவன. பிராமணர் , க்ஷத்ரியர் , வைசியர் , சூத்திரர் ஆகும். 4.3.3.1. பிராமணர்கள் கல்வி கற்பது , சமயச் சடங்குகள் செய்வது , வெகுமதிகளைப் பெறுவது , சமுதாயத்திற்கு நல்வழி காட்டுவது. உலக நன்மைக்காக இறைவனை தியானிப்பது இவர்களது வாழ்வியல் ஒழுக்கம். 52 4.3.3.2. க்ஷத்திரியர்கள் நாட்டை ஆள்வதும் , நாட்டைக் காப்பதும் இவர்களுக்குரிய கடமைகள். வீரம் பொருந்தியவராயும் ஆளுந்தன்மை உடையோராகவும்
|
திகழ்ந்தனர். தன்னலம் கருதாமல் பிறரைக் காக்கும் கடமை உணர்வு மிக்கவர்கள். 4.3.3.3. வைசியர்கள் வாணிகத்திலும் , பொருளியியல் நடவடிக்கைகளிலும் ஈடுபாடு உடையவர்கள். நேர்மையான வாணிகம் செய்து அறவழியில் பொருளீட்டுவதை குறிக்கோளாகக் கொண்டு வாழந்தனர். 4.3.3.4. சூத்திரரர்கள் முதல் மூன்று பிரிவினர்களுக்கும் வேண்டிய பணிகளைச் செய்தல் , நிலத்தை உழுது பயிரிடுதல் இவர்களது பணிகளாகும். தமக்கு இடப்பட்ட பணியை நிறைவேற்றி உண்டு வாழும் சுக வாழ்க்கையை அனுபவித்தனர். 4.3.4 ஆசிரம முறை மனிதனின் நிறை வாழ்வு என்பது நூறு ஆண்டுகளாக
|
கருதப்பட்டது. அதனாலேயே பெரியோர்கள் ஆசீர்வதிக்கும் போது சமஸ்கிருதத்தில் “ ஸதமானம் பவது ” சதம் - என்றால் நூறு - நூறாண்டுகள் வாழ்வாயாக ! என்று வாழ்த்துகின்றனர். இந்நூற்றாண்டுகால வாழ்வு நான்கு பகுதிகளாக அல்லது நிலைகளாக பிரிக்கப்படுகிறது. இதனை ஆசிரமம் என்று குறிப்பிட்டனர். அவை முறையே 1 ). பிரம்மச்சர்யம் 2 ). கிரஹஸ்தம் 4.3.4.1. பிரம்மச்சர்யம் 3 ). வனப் பிரஸ்தம் 4 ) சந்நியாசம் என்பனவாகும். தன்னடக்க நிலை அல்லது மாணவப் பருவம் ஆசிரியர் களுக்குக் கட்டுபட்டு அவர்களுக்கு பணிவிடைகளை செய்து 53 பயின்று சமயச் சடங்குகளை
|
செய்து நன்னடத்தை உடையவராய் திகழும் மாணவப் பருவமே பிரம்மச்சரியம். 4.3.4.2. கிரஹஸ்தம் இல்லற வாழ்வில் ஈடுபட்டு அறம் பிறழாமல் தான தர்மங்களைச் செய்து வாழ்தல் , மக்களை பெற்றெடுத்து கல்வி புகட்டி , நன்னிலை அடையச் செய்தல். அவர்களுக்கு மணம் செய்வித்து நல்வாழ்வு வாழச் செய்வதுமான காலம். இருபத்தைந்துக்கு மேற்பட்டு ஐம்பதுக்கு உட்பட்ட காலம். 4.3.4.3. வனப்பிரஸ்தம் இல்லற வாழ்வில் கடமைகளை முறையாகச் செய்து முடித்தபின் மனைவியுடன் காட்டிற்கு சென்று தவ வாழ்வினை மேற்கொள்ளுதல். பொருளாசையை முற்றும் துறத்தலும் பாச பந்தங்களிலிருந்து
|
படிப்படியாக விடுபடுதலும். இக்காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளாகும். சுருங்கக் கூறின் துறவற வாழ்க்கைக்கு ஆயத்தப்படுத்துதல் ஆகும். ஐம்பது வயதிற்கு மேல் எழுபத்தைந்து வயதுக்கு உட்பட்ட காலமாகும். 4.3.4.4. சந்நியாசம் பந்த பாசங்களினின்று விடுபட்டு தன்னை வருத்தி துறவு மேற்கொள்ளுதல். இக்காலத்தில் இடம் விட்டு இடம் சென்று உடல் சுகத்தைத் துறந்து , கடவுளை தியானிப்பதும் , தான் அறிந்த உண்மைகளையும் நீதிகளையும் மக்களுக்கு கூறுதலும் ஆகும். சமய வாழ்வில் மக்களை ஈடுபடச் செய்தல். ' முற்றும் துறந்த நிலையே ’ சந்நியாசமாகும்.
|
எழுபத்தைந்து வயதிற்கு மேற்பட்ட காலம். 4.3.5. குடும்ப வாழ்வும் மணமுறையும் அமைதியான குடும்ப வாழ்வே இக்காலத்தின் சிறந்த அம்சம். கலப்பு மணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. பலதார மணம் , வரதட்சணை முறை , குழந்தை மணம் , ' சதி ' என்னும் உடன்கட்டையேறும் வழக்கம் போன்ற தவறான முறைகள் சமுதாயத்தில் இருந்தன. ஒரே இடத்திலும் உறவு முறையிலும் திருமணம் செய்வது தடுக்கப்பட்டது. 54 4.3.5.1. மகளிர் நிலை மகளிர் உயர்கல்வி பெற்றுச் சீரிய அறிவுடன் திகழ்ந்தனர். கார்கி , மைத்ரேயி போன்ற பெண்பால் தத்துவ ஞானிகள் வாழ்ந்ததாக அறிகிறோம். எனினும்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.