text
stringlengths 11
513
|
---|
மருத்துவமனையில் சேர்த்தனர். திருக்கழுக்குன்றம் முன்னால் ஒரு சரக்குந்து சென்றுகொண்டு இருந்தது. அதில் இருந்த கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டு இருந்தன. அந்தக் கம்பியால் தடுக்கப்பட்டு , தடுமாறிக் கீழே விழுந்தான் அவன். என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே மயக்கம் அடைந்தான். அருகிலிருந்தவர்கள் அவனை மருத்துவமனையில் சேர்த்தனர். பெங்களூரு பெற்றோர் : எதுவும் சொல்ல மறுக்கிறீர்களே ! ஏதாவது சொல்லுங்கள் டாக்டர். எங்கள் மகள் பிழைக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் ? மருத்துவர் : நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் பேசுகிறீர்களே ?
|
உங்கள் மகளுக்கு உடனடியாக இதயமாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டும். இல்லை என்றால் உங்கள் மகளைக் காப்பாற்ற முடியாது. திருக்கழுக்குன்றம் அவனது இதயம் மட்டுமே துடித்துக் கொண்டிருந்தது. வேறெந்த அசைவுமில்லை. சீராட்டிப் பாராட்டி வளர்த்த அன்பு மகனின் நிலைகண்டு பெற்றோர் கதறித் துடித்தனர். செய்வதறியாது தவித்தனர். ' என்ன செய்வதென்றே தெரியவில்லை. நீங்கள் இருவருமே மருத்துவர்கள். நிலைமையைப் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன் ! தலையில் கடுமையாக அடிபட்டிருக்கிறது. மூளை செயலிழந்து விட்டது. தீவிர சிகிச்சை அளித்தாலும் மூளை
|
மீண்டும் செயல்படும் என்று சொல்ல முடியாது. இதயம் மட்டுமே இயங்குகிறது ' என்றார் மருத்துவர். " டாக்டர் ! எங்கள் மகனின் நிலைமை எங்களுக்குப் புரிகிறது. அவனைச் சாகவிட மாட்டோம். எங்கள் இதயம் போன்ற அவனை இழக்க விரும்பவில்லை. நாங்கள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டோம் ! " பெங்களூரு " டாக்டர் ! எங்கள் மகளின் நிலைமை எங்களுக்குப் புரிகிறது. அவளைச் சாகவிட விரும்பவில்லை. எங்கள் இதயம் போன்ற அவளை இழக்க மாட்டோம். நாங்கள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டோம். எங்கள் இதயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். எங்கள் மகளைக் காப்பாற்றுங்கள் ! இனியும்
|
காலம் தாழ்த்த வேண்டாம் ! எங்கள் மகளுக்கு வாழ்வு கொடுங்கள் " திருக்கழுக்குன்றம் எங்கள் மகனின் இதயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவன் இதயத்தை எடுத்துத் தேவைப்படும் யாருக்காவது பொருத்த நாங்கள் சம்மதிக்கிறோம். தயவுசெய்து உடனே செயலாற்றுங்கள். எங்கள் மகனுக்கு வாழ்வு கொடுங்கள். அவனைச் சாகவிட மாட்டோம். இவன் வாழ்க்கையை நிறைவானதாக ஆக்குங்கள். கதறலுடன் மயங்கி விழுந்தனர் பெற்றோர். மருத்துவக்குழுவினர் விரைவாகச் செயல்பட்டனர். அந்த இளைஞனின் இதயத்தைச் சிறுமிக்குப் பொருத்தினர். இதயம் இடம் மாறி நிலைத்தது ; துடித்தது.
|
உறுப்புக்கொடையின் உயர்வினை அன்றுதான் உலகமே அறிந்தது ; வியந்தது ! மனித நேயத்தின் மகத்தான சாதனையாகத் தம் மகனின் துடிக்கும் இதயத்தையே கொடையாகத் தந்த இக்கால வள்ளல்கள் தாம் அசோகன் புஷ்பாஞ்சலி என்ற மருத்துவத் தம்பதியினர். சிறுமிக்குப் பொருத்தப்பட்ட இதயத்திற்குரிய அந்த இளைஞனின் பெயர் ஹிதேந்திரன். பிறந்த போது பெற்றோரின் இதயத்தைக் கொள்ளை கொண்டதால் ஹிதேந்திரன் என்று பெயரிடப்பட்டான். அவன் இறந்த போது உலகத்தார் இதயங்களை எல்லாம் கொள்ளை கொண்டான். இதயம் கொடுத்து இதயங்களை வென்ற ஹிதேந்திரனை இவ்வுலகம் என்றென்றும் நினைவில்
|
கொள்ளும். 1. கற்பவை கற்றபின் " முடிவில் ஒரு தொடக்கம் " உங்கள் உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கத்தினைப் பகிர்க. 2. முதலுதவி பற்றி உங்களுக்குத் தெரியுமா ? அவற்றுள் சிலவற்றையேனும் அறிந்து கொள்க. 3. ஹிதேந்திரனின் உண்மைக் கதையைப் படித்தபின் நீங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழி யாது ? மதிப்பீடு 1. " முடிவில் ஒரு தொடக்கம் " என்ற தலைப்பின் காரணம் குறித்துக் கூறுக. 2. இக்கதைக்குப் பொருத்தமாக மற்றொரு தலைப்பு இடுக. இயல் ஒன்பது கற்கண்டு அணி இலக்கணம் எதிலும் அழகைக் காண விரும்புவது மனிதர்களின் இயல்பு. நாம் நம்மை அணிகலன்களால்
|
அழகுபடுத்திக் கொள்கிறோம். அதுபோல் கவிஞர்கள் தங்கள் கற்பனைத் திறத்தாலும் புலமையாலும் தாங்கள் இயற்றும் பாடல்களில் அழகைச் சேர்க்கின்றனர். இதனை விளக்குவது அணி இலக்கணம் ஆகும். அணி என்பதற்கு அழகு என்பது பொருள். கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது அணி. மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளைச் சுவைபடக் கூறுவது அணியாகும். இயல்பு நவிற்சி அணி ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர். ( எ.கா. ) தோட்டத்தில் மேயுது
|
வெள்ளைப்பசு - அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி அம்மா என்குது வெள்ளைப்பசு - உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி நாவால் நக்குது வெள்ளைப்பசு - பாலை நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி - கவிமணி தேசிக விநாயகனார் இப்பாடலில் கவிஞர் பசுவும் கன்றும் ஒன்றுடன் ஒன்று கொஞ்சி விளையாடுவதை இயல்பாக எடுத்துக் கூறியுள்ளார். எனவே இது இயல்பு நவிற்சி அணி ஆகும். கற்பவை கற்றபின் 1. பின்வரும் பாடலைப் படித்து இதில் அமைந்துள்ள அணியைக் குறிப்பிடுக. ஆறு சக்கரம் நூறு வண்டி அழகான ரயிலு வண்டி மாடு கன்னு இல்லாமத்தான் மாயமாத்தான் ஓடுது
|
உப்புப் பாரம் ஏத்தும் வண்டி உப்பிலிப் பாளையம் போகும் வண்டி 2. நீங்கள் மிகவும் விரும்பிப் பார்த்த இடம் ஒன்றினை இயல்பு நவிற்சியாகவும் உயர்வு நவிற்சியாகவும் விவரிக்க. * மதிப்பீடு குறுவினா 1. உள்ளதை உள்ளவாறு கூறும் அணியின் பெயர் யாது ? 2. உயர்வு நவிற்சி அணி என்பது யாது ? கேட்க மொழியை ஆள்வோம் மனிதநேயத்தை வளர்க்கும் கதைகளைப் பெற்றோர் , ஆசிரியரிடம் கேட்க. பேசுக 1. உங்கள் மீது அதிகம் அன்பு செலுத்துபவர்கள் யார் ? நீங்கள் யார்யார் மீது அன்பு வைத்திருக்கிறீர்கள் ? காரணம் கூறுக. 2. நீங்கள் ஒருவருக்குப் பரிசு கொடுக்க
|
விரும்பினால் யாருக்குக் கொடுப்பீர்கள் ? என்ன கொடுப்பீர்கள் ? எதற்காகக் கொடுப்பீர்கள் ? 3. பின்வரும் தலைப்புகளுள் ஒன்று பற்றி மூன்று மணித்துளிகள் பேசுக. அ ) பொதுநலம் ஆ ) சமூகத்தொண்டு படித்து உணர்க. செல்வி பள்ளிக்கூட மைதானத்தில் அமர்ந்து இருந்தாள். அங்கு ஓடி வந்த முத்து , " செல்வி , உன்னைத் தலைமை ஆசிரியர் அழைக்கிறார் " என்று கூறியவாறே அவளுடைய சக்கர நாற்காலியைத் தலைமை ஆசிரியர் அறையை நோக்கித் தள்ளிக் கொண்டு போனான். தலைமை ஆசிரியர் செல்வியை ஆறாம் வகுப்பிற்கு அழைத்துச் சென்றார். வகுப்பறைக் கதவு மூடப்பட்டிருந்தது.
|
கதவைத் திறந்ததும் மாணவர்கள் அனைவரும் பிறந்த நாள் வாழ்த்துக் கூறினர். மெழுகுவர்த்திகள் ஒளி வீசின. காகிதத் தோரணங்களால் வகுப்பறை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பலூன்கள் ' பட்பட் ' என வெடித்தன. மாணவர்கள் அவளுக்குப் பிறந்த நாள் வாழ்த்துப் பாடினர். செல்வியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. சொல்லக் கேட்டு எழுதுக. மனிதநேயம் கடுக்கன் நோபல் பரிசு ஹிதேந்திரன் இயல்பு நவிற்சி கைலாஷ் சத்தியார்த்தி அகரவரிசைப்படுத்துக. ஒழுக்கம் உயிர் அன்பு ஈதல் ஆடு இரக்கம் ஓசை ஊக்கம் ஏது பசிப்பிணி தொழிலாளர் எளிமை ஐந்து ஒளவை கீழ்க்காணும்
|
தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கவிதை எழுதுக. அ ) அன்பு ஆ ) நட்பு இ உதவி பத்தியைப் படித்துக் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க. அரசர் ஒருவர் தம் நாட்டு மக்களிடம் " அமைதி என்றால் என்ன ? " என்பதை விளக்கும் வகையில் ஓவியமாக வரைந்து கொடுப்பவர்களுக்கு மிகச்சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை வெளிப்படுத்தும் வகையில் பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்குக் கொண்டு வந்தனர். அரசர் ஒவ்வொரு ஓவியமாகப் பார்த்துக் கொண்டே வந்தார். அழகிய மலையின் அடிவாரத்தில்
|
ஓர் ஏரி இருப்பது போல் ஓவியம் ஒன்று இருந்தது. அது மிகவும் சிறப்பாக இருந்தது. பார்த்த உடனே பறிக்கத் தூண்டும் வகையில் மலர்களின் ஓவியம் ஒன்று இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியைத் தங்களுக்குத் தோன்றியபடி ஓவியத்தில் வெளிப்படுத்தி இருந்தனர். ஓர் ஓவியத்தில் ஒரு மலைமேல் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியின் படம் வரையப்பட்டிருந்தது. அதிலேயே இடியோடு மழை கொட்டிக் கொண்டு இருந்தது. சற்று உற்றுப் பார்த்தால் அருவியின் கீழே இருந்த மரம் ஒன்றில் பறவைக் கூட்டில் பறவை ஒன்று தனது குஞ்சுகளோடு இருந்தது. “ இந்த ஓவியத்தை
|
வரைந்தது யார் ? " என்று அரசர் கேட்டார். அந்த ஓவியர் வந்தார். " இந்த ஓவியத்தில் அமைதி எங்கே இருக்கிறது ? " என்றார் அரசர். அதற்கு ஓவியர் " மன்னா பிரச்சினையும் போராட்டமும் ஆரவாரமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அன்று. இவை எல்லாம் இருக்கும் இடத்தில் இருந்தும் , எதற்கும் கலங்காமலும் , தன்னை எதுவும் பாதிக்க விடாமலும் உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி " என்றார். 1. அமைதி என்றவுடன் உங்கள் மனதில் தோன்றுவது என்ன ? 2. இக்கதையில் அமைதி எங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது ? 3. நீங்கள் இந்த ஓவியப் போட்டியில்
|
பங்கு பெற்று இருந்தால் என்ன ஓவியம் வரைந்து இருப்பீர்கள் ? 4. இக்கதைக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக. கடிதம் எழுதுக. நூல்கள் அனுப்ப வேண்டிப் பதிப்பகத்தாருக்குக் கடிதம் எழுதுக கட்டங்களில் உள்ள சொற்களைக் கொண்டு தொடர்கள் உருவாக்குக. பெய்கிறது பெய்யும் பெய்தது நேற்று இன்று நாளை மொழியோடு விளையாடு கொடுக்கப்பட்ட உரலியைப் பயன்படுத்தி , இணையத்திலிருந்து ' First Aid ' என்னும் செயலியைப் பதிவிறக்கி , நிறுவிக்கொள்ளவும். ' First Aid ' செயலியைத் திறந்ததும் , ' Emergency , Instructions , Call ' போன்ற தெரிவுகள் இருக்கும்
|
, அதில் எமெர்ஜென்சி என்னும் தலைப்பின் கீழிருக்கும் பல்வேறு உடல்நலக் குறைபாடுகளில் BURNS என்பதைத் தேர்வு செய்யவும். = தற்போது தீக்காயங்களுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி அறிவுரைகள் பட்டியலிடப்பட்டிருப்பதைத் தெரிந்து கொள்ளவும். வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. பொறிவாயில் ஐந்து வித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அறிது. கோளில் பொறியில் குணம்இலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. பிறவிப் பெருங்கடல்
|
நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். 2. வான் சிறப்பு வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுஉணரற் பாற்று. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. 6. விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து உள்நின்று உடற்றும் பசி. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
|
தான்நல்காது ஆகி விடின். சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. தானம் தவம் இரண்டும் தங்கா வியன்உலகம் வாணம் வழங்காது எனின். நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. நெஞ்சமலரில் இருப்பவன் அடியை நினைப்பவர் இவ்வுலகில் நெடுங்காலம் வாழ்வர். விருப்பு வெறுப்பு இல்லாதவனை நினைத்தவர்க்கு என்றும் துன்பங்கள் இல்லை. இறைவனது உண்மைப் புகழை விரும்புவாரை அறிவில்லாத வினைகள் நெருங்கா. ஐம்புலனையும் அழித்தவனது மெய்ந் நெறியைக் கடைப் பிடித்தவர் நெடுங்காலம் வாழ்வர். உவமை கடந்தவன்
|
அடியை நினைந்தாலன்றி மனக் கவலையை மாற்ற முடியாது. அறக்கடலாம் அருளாளன் அடியை நினைந்தாலன்றிப் பாவக் கடலைக் கடக்க முடியாது. எண்குணம் உடையவன் அடியை வணங்காத்தலை பாராதகண் கேளாதசெவி போலப் பயனற்றது. இறைவன் அடியை நினைந்தவர் பிறவிக்கடலைக் கடப்பர் நினையாதவர் கடவார். 2. வான் சிறப்பு எளிய உரை மழையால் உலகம் நிலைபெற்று வருவதால் மழையே அமிழ்தம் என்று உணரவேண்டும். உண்பவர்க்கு நல்ல உணவுகளை உண்டாக்கித் தானும் குடிநீராய்ப் பயன்படுவது மழை. மழையில்லாது போகின் கடல்சூழ் உலகத்தில் பசி உயிர்களை வாட்டும். மழைவரத்துக் குறையின் உழவர்கள்
|
உழுவதற்கு ஏர் பிடிக்க மாட்டார்கள். 8. வானம் வறண்டால் திருவிழாவும் வழிபாடும் உலகில் வானவர்க்கும் நிகழ மாட்டா. உழவர்களைக் கெடுக்கவும் துணைநின்று ஆக்கவும் வல்ல பேராற்றல் உடையது மழை. மேலிருந்து துளிமழை விழாவிட்டால் நிலத்தில் பசும்புல்லின் நுனியையேனும் காண முடியுமா ? மேகம் நீரைத்தாங்கித் திரும்பப் பொழியாவிடின் நெடுங்கடலும் தன்வளம் குறைந்து விடும். மேலுலகம் நீரை வழங்கா விட்டால் தானமும் தவமும் மறைந்து விடும். உலக நடப்புக்கு ஒழுக்கம் வேண்டும் ; அவ்வொழுக்கம் மழையில்லா விட்டால் யாரிடமும் இருக்குமா ? நீத்தார் பெருமை I
|
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. 2. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு. குணம்என்னும் குன்றுஏஹி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அறிது. அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டுஒழுக லான். 4. அறன் வலியுறுத்தல் சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கு இல்லை கேடு. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
|
செல்லும்வாய் எல்லாம் செயல் மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். அன்று அறிவாம் என்னாது அறம்செய்க மற்றது பொன்றும்கால் பொன்றாத் து aை ON , அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதஒருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம் புறத்த புகழும் இல. செயற்பாலது ஒரும் அறனே ஒருவற்கு உயற்பாலது ஒரும் பழி. ஐந்தும் அடக்கியவன் ஆற்றலுக்கு வானவர் தலைவனாம் இந்திரனே தக்க சான்று.
|
3. இயன்ற அளவு இடைவிடாது அறத்தை ஏற்கும் இடமெல்லாம் செய்க , அரிய செயல்களைச் செய்பவர் பெரியவர் ; அவற்றைச் செய்ய முயலாதவர் சிறியவர். சுவை , ஒளி , ஊறு , ஓசை , மணம் என்ற ஐவகைகளை அறிந்தவன் வசம் உலகம். நிறைமொழி மாந்தரின் பெருமையை உலகுக்கு அவர்கூறிய உண்மைகளால் அறியலாம். குணக்குன்று போலும் சான்றோரின் சினத்தைச் சிறுபொழுதும் யாரும் தாங்க முடியாது. அந்தணர் என்பவர் துறவிகளே ஏன் ? அவர் எவ்வுயிர்க்கும் அருள் செய்பவர். மனப்பிழை யின்றிநட ; அதுவே அறம் , மற்றவை யெல்லாம் வெளிப்பகட்டு. பொறாமை ஆசை சினம் கடுஞ்சொல் வாராமல் ஒழுகுவதே
|
அறம். 8. நாள் தவறாமல் அறம்செய்க : அது ஒருவன் பிறப்பு வழியை அடைக்கும் கல்லாகும். சாகும்போது பார்த்துக்கொள்வோம் என்னாது நாளும் அறஞ்செய்க , அதுவே உயிர்த்துணை. பல்லக்கில் இருப்பவனையும் சுமப்பவனையும் பார்த்து அறத்தின் பயனை மதிப்பிடாதே. அறநெறியால் வருவதே இன்பம் ; பிறவழியால் வருவன துன்பம் , பழி.. யாரும் செய்ய வேண்டுவது அறமே ; யாரும் விடவேண்டியது பழியே. ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல். 8. அன்புடைமை அன்பிற்கும் உண்டோ
|
அடைக்கும்தாழ் ஆர்வலர் புண்கண்நீர் பூசல் தரும். 6. அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. அண்புற்று அமர்ந்த வழக்கெண்ப வையகத்து இன்புற்றார் எய்தம் சிறப்பு , என்பு இலதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த் தற்று. புறத்துறுப்பு எல்லாம்
|
எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. 7. அவையில் முந்தியிருக்கும்படி அறிவளிப்பதே தந்தை மகனுக்குச் செய்யும் கடமை. தம் குழந்தைகளைப் பேரறிவுடையவர் ஆக்குவது பெற்றோர்க்கும் எல்லோர்க்கும் இனியது. தன்மகன் வீரன் என்று புகழக்கேட்ட தாய் பெற்றகாலத்திலும் பெருமகிழ்ச்சி அடைவாள். எத்தவஞ் செய்து பெற்றான் இவன்தந்தை என்று பலர் சொல்லும்படி நடப்பதே மகன் கடமை. 7. மக்கட் பேறு எளிய உரை அறிவுடைய குழந்தைச் செல்வத்தைத் தவிரப் பிறசெல்வங்களை யாம் மதிப்பதில்லை.
|
பழியில்லாப் பண்புக் குழந்தைகளைப் பெற்றால் பெற்றோரை எப்பிறவியும் தீயவை நெருங்கா. தம் நல்வினையால் குழந்தைகள் பிறத்தலின் குழந்தைகளே பெற்றோரின் பொருளாவார். 2. அன்பிலார் எல்லாம் தமக்கே கொள்வர் ; அன்பினர் உடம்பையும் பிறர்க்கு வழங்குவர். 3. உயிர் உடம்பினைப் பெற்ற தொடர்பு இருவர் அன்புத்தொடர்பால் வந்தது என்பர். தமிழ்தினும் மிக இனிக்குமே தம் குழந்தைகள் இளங்கையால் கிண்டிய உணவு. குழந்தை மேனிபடுவது உடலுக்கு இன்பம் ; மழலைச் சொல் கேட்பது காதுக்கு இன்பம். 5. உலகத்தில் காதலர்கள் அடையும் சிறப்பு அன்போடு வாழ்ந்ததால் வந்தது
|
என்பர். தம் குழந்தைகளின் மழலைச்சொல் கேளாதவரே குழலிசை யாழிசை இனியது என்பர். 8. அன்புடைமை எளிய உரை அன்புக்கும் அடைப்பு உண்டோ ? அன்புடையவர் கண்ணீரே உள்ளத்தைக் காட்டிவிடும். அன்பு பழகும் விருப்பத்தைத் தரும் ; அவ்விருப்பம் புதிய நட்புச் சிறப்பைத் தரும். அறத்திற்கு மட்டும் அன்பு துணையில்லை ; வீரத்திற்கும் அதுவே துணை. எலும்பில்லாப் புழுவை வெயில் வருத்தும் ; அன்பில்லா உயிரை அறம் வருத்தும். நெஞ்ச அ பின்றி வாழ முடியுமா ? பாலை நிலத்தில் பட்டமரம் தளிர்க்குமா ? அன்பாம் உறுப்பு அகத்தில் இல்லையெனின் புறத்து உறுப்பெல்லாம்
|
இருந்தும் என்ன ? உயிருடைய உடம்பாவது அன்புடைய வாழ்வு : அன்பிலார் உடம்புகள் எலும்புத் தோல்கள். இணைத்துணைத்து என்பதொன்று இல்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு , மோப்பக் குழையும் அணிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம் இன்சொ லினதே அறம். துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. பணிவுடையன் இன்சொலன் ஆதல்
|
ஒருவற்கு அணிஅல்ல மற்றுப் பிற அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின். நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும். 9. விருந்தோம்பல் எளிய உரை 1 குடும்பமாக இருந்து சிறந்து வாழ்வதெல்லாம் விருந்துபேணி உதவி செய்தற்கே. 2. வந்தவிருந்து வெளிப்புறம் இருக்க , தனக்குச் சாவாமருந்து கிடைப்பினும் உண்ணல் ஆகாது. 3. நாளும் வருகின்ற விருந்தைப் போற்றுக ; வாழ்வு துன்பப்பட்டு அழியாது. 5. விருந்து செய்தபின் மிச்சத்தை உண்பவனது நிலத்துக்கு
|
விதைகூட இடவேண்டுமா ? 6. வந்தாரைப் போற்றி வருவாரை ஏற்பவன் தேவர்க்கு நல்விருந்து ஆவான். விருந்து என்னும் வேள்வியில் ஈடுபடாதவர் காத்த பொருளையும் இழந்து பின் வருந்துவர். 9. செல்வத்தில் வறுமை விருந்திடா மடமையாம் ; இக்குணம் முழுதும் அறிவிலியிடமே இருக்கும். 10. அனிச்சப்பூ மோந்தால் வாடும் ; விருந்தோ முகமாறிப் பார்த்தாலே வாடிப் போம். முகம் மலர்ந்து விருந்து செய்பவன் வீட்டில் அகம் மலர்ந்து திருமகள் தங்கிவிடுவாள். 10. இனியவை கூறல் 1 அன்பும் தூய்மையும் அறமும் உடைய 4. இன்சொல் இனிதுரன்றல் காண்பான் எவன்கொலோ 9. வன்சொல்
|
வழங்கு வது. O. இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. விருந்தின்பயன் இதுவென்று அளக்க முடியாது ; விருந்தினர் பெருமையே விருந்தின் பெருமை. 5. பணிவும் இன்சொல்லுமே உயிரணிகள் ; பிறவெல்லாம் உடலணிகள். 208 எளிய உரை உண்மையாளர் சொல்லே இன்சொல்லாம். 7. பிறர்க்கு நற்பயன் தரும் உயர் பண்புச்சொல் தனக்கும் நயமும் நலமும் தரும். முகமலர்ந்து என்றும் இன்சொற் கூறின் அகமலர்ந்து கொடுப்பதினும் சிறந்தது. முகம் மலர்ந்து இனிமையாகப் பார்த்து உள்ளத்தோடு சொல்லுக ; அதுவே அறம். யார்க்கும் இன்பச் சொல்லைச் சொல்லுக ; துன்பந்தரும்
|
வறுமை வாராது. நல்லவற்றைக் கண்டு இனிமையாகக் கூறின் தீமை தேயும் : அறம் வளரும். சிறுதன்மை இல்லாத இன்சொல் எப்பிறப்பிலும் இன்பம் தரும். இன்சொல் தனக்கு நலந்தருவதைக் கண்டவன் ஏன் பிறரிடம் கடுஞ்சொற் கூறுகிறான் ? இன்சொல் இருக்கவும் கடுஞ்சொல் கூறாதே ; கனியை விடுத்துக் காயைக் கவரலாமா ? நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்புஇல்சொல் பல்லார் அகத்து. 8. பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி எனல். நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர் பயன்இல சொல்லாமை நன்று. அரும்பயன் ஆயும் அவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்.
|
பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர். 2. நல்ஆறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்எனினும் ஈதலே நன்று. சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் , 3. இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன்உடையான் கண்ணே உள். 23 , ஈகை வரியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லலாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து , இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகம் காணும் அளவு. ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் , அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன் பெற்றான் பொருள்வைப் புழி. 7.
|
பாத்துஊண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது. ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தா வைத்துஇழக்கும் வன்க ணவர். 9. இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல். O. சாதலின் இன்னாதது இல்லை இனிதுஅதூஉம் ஈதல் இயையாக் கடை. 20. பயன்இல சொல்லாமை - எளிய உரை 1 கேட்டார் வெறுக்க வீணாகப் பேசுபவனை எல்லாரும் இகழ்வர். 2. பலர்முன் வீண்பேச்சுப் பேசுவது நண்பர்க்கு வேண்டாதன செய்தவினும் தீது. 3. பயனில்லாதவற்றை விரித்து உரைத்தால் விளங்காதவன் என்று பேராகும். 5. பண்புடையவர்கள் பயனில சொன்னால் தரமும் சிறப்பும் போய் விடும்.
|
1 6. பயனில சொல்வானைப் புகழ்கின்றவனை மனிதன் என்னாதே ; மனிதப்பதர் என்று சொல். 7. சான்றோர் முறையல சொல்லினும் சொல்லலாம் ; பயனற்றவை சொல்லல் ஆகாது. பயனில்லாத சிறுசொல்லைப் பலர்முன் கூறுவது அறிவும் இல்லை ; நன்மையும் இல்லை. 2. வீட்டுநெறி என்றாலும் வாங்குவது தீது : வீடில்லை என்றாலும் கொடுப்பது நல்லது. இல்லை என்ற துயரை எடுத்துரைக்கும் முன்பே கொடுக்குங்குணம் குடிப்பிறந்தவனிடம் உண்டு. கேட்பவரின் முகமலர்ச்சியைக் காணும் வரை கேட்கவிடுதல் இனியது ஆகாது. 7. டைமை 8. 5. பசி பொறுப்பது பேராற்றல் ; அதனினும் பேராற்றல் பிறர் பசியை
|
ஆற்றுவது. 9. 10. அரிய பயனை அடைய முயலும் அறிஞர் பெரியபயன் இல்லாதவற்றைச் சொல்லார். மயக்கம் இல்லாத நல்லறிஞர் மறந்தும் பொருளற்ற சொற்களைச் சொல்லார். 209 பயனுள்ள நல்ல சொற்களையே சொல்லுக : பயனில்லா வீண் சொற்களைச் சொல்லாதே , 23. ஈகை எளிய உரை ஈகை என்பது ஏழைகளுக்குக் கொடுப்பதே : பிறர்க்குச் செய்வது எதிர்பார்த்துக் கொடுப்பது. ஏழைகளின் பெரும் பசியைத் தீர்ப்பாயாக ; அதுதான் செல்வனுக்குச் சேமிப்பிடம். பகுத்துக் கொடுத்து உணவருந்தியவனைத் தீய பசிநோய் என்றும் தீண்டாது. பொருளைத்தேடி இழக்கும் கொடியவர்கள் கொடுத்து மகிழும் இன்பத்தை
|
அறியாரோ ? நிறைந்த உணவைத் தனித்து உண்பது இரப்பதினும் பார்வைக்கு அருவருப்பானது. ஓர் ஏழைக்கு உதவ முடியாத போது விரும்பாச் சாவும் விரும்பத் தகும். உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல். களவீனால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து ஆவது போலக் கெடும். 9. களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வியா விழுமம் தரும். O அருள்கருதி அன்புடையார் ஆதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். களவுஎன்னும் கார்அறி வாண்மை அளவுஎன்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல் அளவுஅரிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும் களவுமந்தார்
|
நெஞ்சில் கரவு. அளவுஅல்ல செய்துஆங்கே விவர் களவுஅல்ல மற்றைய தேற்றா தவர். கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தேள் உலகு.. 3. செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமம் தரும். 32. இன்னா செய்யாமை சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசுஅற்றார் கோள். கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா செய்யாமை மாசுஅற்றார் கோள். இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். 6. இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல். அறிவினான் ஆகுவது உண்டோ
|
பிறிதின்நோய் தம்நோய்போல் போற்றாக் கடை , 29. கள்ளாமை எளிய உரை வசைவேண்டாம் என்பவன் மிகச் சிறிதும் கள்ளமின்றித் தன் நெஞ்சைக் காக்க. 32. இன்னா செய்யாமை எளிய உரை சிறப்புச் செல்வம் கிடைப்பினும் பிறர்க்குத் துன்பம் செய்யாமையே தூயவர் கொள்கை. கருவம் கொண்டு துன்புறுத்தினும் திரும்பத் துன்பம் செய்யாமையே தூயவர் நோக்கம். நன்னுயிர்க்கு , ன்னாமை தான்அறிவான் என்கொலோ 8. மன்னுயிர்க்கு இன்னா செயல். பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும். பிறன் பொருளை மனத்தால் நினைப்பதும் தீது ; ஆதலின் திருடிப் பறிக்க
|
எண்ணாதே. 10. திருடுபவருக்கு விரைவில் உயிர் போகும் ; திருடாதவர்க்கு வானுலகமும் போகாது. 9. நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் 10. நோயின்மை வேண்டு பவர். பிறர் ஏமாந்த நிலையைப் பார்த்திருப்பவனிடம் அருளும் அன்பும் இரா. களவிலே மிக்க சுவை கண்டவர்கள் அளவிலே நின்று வாழ்க்கை நடத்தார். நெறிபட வாழும் உறுதியுடையவர் இடத்துத் திருடும் பெரும்பேதைமை இராது. 5. பிறர் துன்பத்தைத் தன்துன்பம் போலக் கருதாத இடத்து அறிவினால் என்ன பயன் ? தனக்குக் கொடியது எனப் பட்டதைத் தான் பிறர்க்குச் செய்ய விரும்பலாமா ? களவுதவிர வேறொன்றும்
|
அறியாதவர்கள் தீமைகள் செய்து விரைவில் அழிவர். வலிய வந்து பகைத்தவர்க்குங்கூடத் துன்பம் செய்யின் துயரம் நீங்காது , கொடுமை செய்தாரைத் தண்டிப்பது எப்படி ? அவர் வெட்கப்படும்படி நன்மை செய்வது. எவ்வகையாலும் என்றும் எவர்க்கும் மனமறியக் கொடுமை செய்யாதே. தன்னுயிர்க்குப் பிடிக்காது என்ற தீமையைப் பிறவுயிர்க்கு ஏன் செய்கின்றான் ? காலையில் பிறர்க்குக் கொடுமை செய்யின் மாலையில் உனக்குக் கொடுமை தானேவரும். கேடுகள் கேடுசெய்தார்க்கே வந்துசேரும் ; துன்பம் வேண்டாதார் துன்பம் செய்யார். 9. பகுத்துஉண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்
|
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. NO. ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன் பின்சாரப் பொய்யாமை நன்று. நல்ஆறு எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும் கொல்லாமை சூழும் நெறி. 60. ஊக்கம் உடைமை 1 உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதுஇல்லார் உடையது உடையரோ மற்று. நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை. கொல்லாமை மேற்கொண்டு ஒழுதவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிர்உண்ணும் கூற்று. தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்உயிர் நீக்கும் வினை. நன்றுஆகும் ஆக்கம் பெரிதுஎனினும் சான்றோர்க்குக் கொன்று ஆகும் ஆக்கம் கடை.
|
கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர் புண்மை தெரிவார் அகத்து. உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின் செல்லாத்தி வாழ்க்கை யவர். உள்ளம் உடைமை உடைமை பொருள்உடைமை நில்லாது நீங்கி விடும். ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துஉடை யார். ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு. உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅது தள்ளினும் தள்ளாமை நீர்த்து. சிதைவிடத்து ஒவ்கார் உரவோர் புதைஅம்பின் பட்டுப்பாடு ஊன்றும் களிறு. உள்ளம்
|
இலாத வள்ளியம் என்னும் செருக்கு , உலகத்து பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குரின். உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கைஅஃது இல்லார் மரம்மக்கள் ஆதலே வேறு. & th Std Tamil COSE Pagas 77-200.indd 211 33. கொல்லாமை எளிய உரை 1 எவ்வுயிரையும் கொல்லாமையே அறமாம் ; கொல்லுதல் எல்லாத் தீமையும் தரும். 2. ஆசிரியர்கள் கூறிய அறத்துள் மேலானது பகுத்துண்டு பல்லுயிரையும் காப்பதுவே. 3. நிகரற்ற அறம் கொல்லாமை ; அதற்குத் துணையாகும் வாய்மையும் நல்ல அறம் , நன்னெறி என்பது யாது ? ஒருயிரும் கொலைப் படாதபடி எண்ணும் நெறி. 10.
|
நோயுடலும் தீயவாழ்வும் உடையார் யார் ? ஒருயிரை உடம்பிலிருந்து பிரித்தவர். 60. ஊக்கம் உடைமை - எளிய உரை ஊக்கமே சொத்தாகும் ; அது இல்லாதவர் பிற இருப்பினும் சொத்துடையர் ஆகார். 5. 6. 3. ஊக்கத்தைத் திண்ணமாகக் கையில் கொண்டவர் செல்வம் போயிற்றென்று வருந்தார். சோர்வில்லா ஊக்கம் உடையவனது வீட்டுவழி கேட்டுச் செல்வம் சேரும். பிறந்த உயிரைக் கொல்ல அஞ்சுபவனே பிறவிக்கு அஞ்சும் துறவியினும் மேலானவன். கொல்லா அறத்தைக் கொண்டவன் ஆயுளை உயிருண்ணும் யமன் நெருங்க மாட்டான். இன்னொருவன் உன்னுயிரை எடுக்கும் போதும் அவனது இன்னுயிரை எடுக்காதே.
|
வீரர்க்குப் போரில் படை விளைவு சிறந்தது ; தனிக்கொலை விளைவு இழிந்தது. 8. எல்லா இழிவுகளையும் ஆராய்ந்த பெரியவர் கொலைஞனை மிக இழிந்தவனாகக் கருதுவர். 9. 10. 7. உறுதியாளர் அழிவிலும் ஊக்கம் தளரார் ; அம்புகள் தைத்தாலும் யானை வலி பொறுக்கும். உலகத்தில் பெருஞ்செல்வன் என்னும் சிறப்பை ஊக்கம் இல்லாதவர் அடையார். பருமனும் கூரிய கொம்பும் இருந்தும் புலி தாக்கினால் யானையும் அஞ்சுமே. ஊக்கச் சொத்தே சொத்து ; பொருட்சொத்து நில்லாது போய்விடும். மலரின் நீளம் நீரின் அளவு ; மாந்தர்தம் வாழ்வின் உயர்ச்சி ஊக்கத்தின் அளவு. நினைப்பதெல்லாம்
|
உயர்வையே நினைக்க ; உயர்வு வராவிடினும் அந்நினைவை விடாதே. ஊக்க மிகுதியே வலிமை ; அது இல்லாதவர் நிலையால் மரம் ; வடிவால் மானிடர். | 90. பெரியாரைப் பிழையாமை 1 ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை. வலியாரை மெலியார் வம்புக்கு இழுத்தல் யமனைக் கையால் அழைப்பதுபோலாகும். வலிமிக்க வேந்தனை எதிர்த்துக்கொண்டவர் எங்கெங்கு போனாலும் உய்ய முடியுமா ? தவறி நெருப்பில் விழுந்தாலும் தப்பிக்கலாம் ; பெரியவர்க்குத் தவறு செய்தால் பிழைப்பில்லை. எல்லாத் தகுதியும் நிறைந்தவர் சினத்தால் ஏற்றமான வாழ்வும் செல்வமும் என்னாகும்
|
? வான்புகழ் வள்ளுவரின் அறக்கருத்துகள் மாணவரிடம் சென்று சேர வேண்டும் ; அதன்வழி நன்னெறிப் பண்புகள் மாணவரிடையே வளர வேண்டும் என்ற நோக்கில் புதிய பாடத்திட்டத்தில் திருக்குறளின் 150 பாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 212 குன்றுபோல் வலியுடையார் அழிக்க நினைப்பின் குடிதழைத்து நின்றவரும் வழியின்றி மறைவர். * திருக்குறளை நாள்தோறும் வழிபாட்டுக் கூட்டத்தில் பொருளுடன் கூறலாம். நாள்தோறும் ஒரு திருக்குறளைப் பொருளுடன் பள்ளியின்தகவல்பலகையில் காட்சிப்படுத்தலாம்.. திருக்குறள் ஒப்பித்தல் போட்டியை வகுப்புவாரியாக நடத்தலாம். திருக்குறள்
|
கலைவிழாக்கள் , ஓவியக் கண்காட்சிகள் , நாடக விழாக்கள் , குறளின் பொருளை வாழ்வியல் அனுபவங்களோடு பொருத்துதல் , குறளை இசையமைத்துப் பாடுதல் போன்ற நிகழ்வுகளைப் பள்ளிகளில் ஒருங்கிணைக்கலாம். மேலான கொள்கையர் சீறினால் இடைநடுவே வேந்தனும் அரசு இழப்பான். 10. சிறப்பு மிக்க பெரியவர் சினந்தால் ஆற்றல் மிக்கவர் துணையிருப்பினும் மீளமுடியாது. இலக்கிய மன்றக் கூட்டங்களில் குறட்பாக்கள் தொடர்பான கதைகள் சொல்லலாம் ; நாடகங்களை நடத்தலாம். குறட்பாக்கள் தொடர்பான வினாக்களைத் தொகுத்து " வினாடி வினா " நடத்தலாம். சான்றோர் வாழ்வில் நிகழ்ந்த
|
சுவையான நிகழ்ச்சிகள் மூலம் திருக்குறள் கருத்துகளை விளக்கலாம். பள்ளி சார்ந்த அழைப்பிதழ்கள் , பரிசுச் சான்றிதழ்களில் திருக்குறளை அச்சிட்டு வழங்கலாம். உலகப் பொதுமறையாம் திருக்குறளில் இடம்பெற்றிருக்கும் நன்னெறிக் கருத்துகளின் அடிப்படையில் நீதிக்கதைகள் , இசைப்பாடல்கள் , சித்திரக் கதைகள் , அசைவூட்டப் படங்கள் வாயிலாகத் திருக்குறள் வளங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கலாம். குறிப்பு : மாணவர்கள் எளிதில் படித்துப் புரிந்துகொள்வதற்கு ஏற்றவகையில் குறட்பாக்களின் சொற்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன ; அலகிடுவதற்கு அன்று.
|
ஆலோசனைக் குழு முனைவர் பா. வீரப்பன் பேராசிரியர் , தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , புதுடில்லி , முனைவர் டி. சகாய தாவி பேராசிரியர் மற்றும் துறைத்தவைவர் , மாதிவக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , கேரணா. முனைவர் தா. அருன்முருகன் இணை இயக்குநர் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , சென்னை - கி. மேலாய்னாளர் குழு. முனைவர் இராம , பாண்டுசங்கள் இணை இயக்குநர் ( ஓய்வு ) , மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , சென்னை. முனைவர் ச.மாடசாமி பேராசிரியர் ( ஓய்வு ) , சென்னை. திரு. ச.
|
தமிழ்ச்செல்வன் எழுத்தாளர். திருமதி ஏ.எஸ். பத்மாவதி எழுத்தாளர் , சென்னை. திரு.டீ. இராமகிருட்டினன் முதன்மைக்கல்வி அனுவவர் , திருச்சி. பாட வல்லுநர் குழு முனைவர் வி. கிருஷ்ணன் தமிழ்த்துறைதவைனர் , அரசு கலைக்கல்லூரி , உடுமலைப்பேட்டை. முனைவர் காசி. மாரியப்பன் இணைப் பேராசிரியர் , பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி , திருச்சி. முனைவர் பா. முத்துசாமி உதவிப் பேராசிரியர் , பச்சையப்பன் கல்லூரி , சென்னை. முனைவர் மா. வெங்கடேசன் இணைப் பேராசிரியர் , அரசு கலைக் கல்லூரி ( ஆடவர் ) , கிருஷ்ளாகிரி. முனைவர் கவிதா ராணி இணைப்பேராசிரியர் ,
|
வேடி டோக் கல்லூரி , மதுரை. முனைவர் அ. மணமலர்ச்செல்வி முதுநிலை நிறுவனம் அரியலூர் மாவட்டம் , விரிவுரையாளர் , மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி கலை மற்றும் வடிவமைப்புக்குழு வரைபடம் திரு. இளையராஜர் திரு. இனைமயாரதி திரு , கோபு கப்பைன் திரு. பி. தனபாய் ஓனிய -ஆசிரியர். இராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி , குழிபிறை , புதுக்கோட்டை மாவட்டம். திரு. சோ.வேஸ்முருகள் ஓளிய ஆசிரியர் , அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி , கோவில்டாட்டி , தூத்துக்குடி மாவட்டம். ஆறாம் வகுப்பு திரு. ஏ.நத்துக்குமரன் ஓவிய ஆசிரியர் , அ.மே.தி.பள்னி
|
, பண்ருட்டி , கடலூர் மாவட்டம். திரு. எஸ். கோடாவகிருஷ்ணன் ஓவிய ஆசிரியர் , குமார நாஜா முத்தையா மேல்நிலைப் பள்ளி , காத்தி தகர் , அடையார். சென்னை , திரு. கா. தனஸ் தீபக் ராஜன் திரு. கா தலன் தான்சி ராஜன் திரு , மசார்வஸ் மாணவர்கள் , அரசு கவின் ககஸ்லூரி , சென்னை மற்றும் கும்பகோளளயம் பக்க வடிவமைப்பாளர் உழையளம் பா. இராமநாதஸ் விரஜ்னோவேஷன்ஸ் , சென்னை தரக் கட்டுப்பாடு திரு. கோபு சுப்பையன் திரு. எம். கரண் கி. ஜெரால்டு வில்சன் நன்றி கோபுலு , மருது , வதா தட்டச்சர் திருமதி இரா.வித்யா மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
|
பயிற்சி நிறுவனம் , சென்னை. அட்டைப்படம் கதிர் ஆறுமுகம் ஒருங்கிணைப்பு ரமேஷ் முனிசாமி தமிழ் ஆக்கம் பாடநூலாசிரியர் குழு நிருமபிரமணியழ் ரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம். கரூர். திருமதிராஜலஷ்மி பட்டதாரி காஞ்சிபுரம் மாவட்டம் , ஜீவானத்தம் பட்டதாரி ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி , அட்டப்பட்டி , கொட்டாம்பட்டி ஒன்றியம் , மதுரை மாவட்டம். திரு. சிவ. முரணி டட்டதூரி ஆசிரியர் , ஜே.எப்.மேல்நிலைப் பள்ளி , புவிளவம் , திருச்சி மாவட்டம். கு - சம்பந்தம் தக்ராட்சி மேல்திலைப் பள்ளி , சேவையூர் , தாம்பரம் , புவவர்
|
முதுகலை ஆசிரியர் ( ஓய்வு ) , டி.ஆர்.பி.சி.சி.சி இந்து மேல்நிலைப் பள்னி , திருவள்ளூர் , திருமதி சிவ , அன்புச்செல்வி முதுகலை ஆசிரியர் , பெ.கா.அரசு மகளிர் மேல்நிலைப் பன்னி , அம்பத்தூர். திருவள்ளூர் மாவட்டம் , புலவர் தமிழ். திருமால் முதுகலை ஆசிரியர் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி , குடியாத்தம் முனைவர் செ.தாரகேஸ்வரி முதுகலை ஆசிரியர் , அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி , கே.ளி.குப்பம் , வேலூர் திரு.மொ. மருகமுத்து டதாரி ஆசிரியர் , அரசு மேல்நிலைப் பள்ஸி , ஐ.கிரனூர் , கடலூர் மாவட்டம். திருமதி ஆர். சந்திரா டட்டதாரி திருமதி
|
ஐ.சஈ.மேபல் ஜெசி சந்திரா ஆசிரியர் , அரசு மேல்நிலைப் பள்ளி , மேடவாக்கம் , சென்னை. டாட்டதாரி ஆசிரியர் , சி.சி.எம்பஏ.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி , ராஜாதெரு , திரு. த. தமிழ்க் காவலன் பட்டதாரி மாவட்டம். ஆசிரியர் , அரசு மேல்நிலைப் பள்ளி , அடியக்கமங்கலம் , திருவாரூர் திருமதி மு. கீதா இடைநிலை ஆசிரியர் , அரசு மகளிர் மேல்திவைப் பள்ளி , சத்தைபேட்டை , புதுகோட்டை மாவட்டம். திருமதி ச. சாந்த சுந்தரி டட்டதாரி ஆசிரியர் , -ஆர்.கே.ஸ்ரீ. ரங்கம்மாள் கல்வி நிலையம் , கோவை. மிருமதி செரிமாை தனி மேல்நிலைப் பள்ளி , சிறுமலை ராயபுரம் ,
|
திண்டுக்கள் மாவட்டம். திருமதி ஆ. கலைவாணி பட்டதாரி கோலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய கடுதிவைப் பள்ளி , காளம்பாளையம் , மாவட்டம். திருமதி நா. ஜானகி பட்டதாரி ஆசிரியர் , அரசு பெண்கள் மேல்திலைப் பன்னி , சின்ளத்தடாகம் , கோலை மாவட்டம். முனைவர். ஆ - சக்தி வடிவு முதுகளை ஆசிரியர் , அறிஞர் அண்ணா அரசு மேல்திலைப் பள்ளி , குன்னூர் , நீலகிரி மாவட்டம். திருமதி வசத்தா டாட்டதாரி ஆசிரியர் , பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் ( CBSE ) , கீழ்யாக்கம் , சென்னை. திருமதி ஜே.பி.ஆர். விளா ஜிடியா பட்டதாரி ஆசிரியர் , டி.ஏ.வி. ஆண்கள் மேல்நிலைப் பன்னி
|
, கோபாலயுரம் , திரு. மா , பழனி தன்வமை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி , சின்னப்பள்ளத்தூர் , பென்னகரம் , தருமபுரி மாவட்டம். திருமதி ப. சித்ரகவா டாட்டதாரி ஆசிரியர் , சின்மயா வித்யாலயா ( CBSE ) , சின்மயா நகர் , விருகம்பாக்கம் , 213 முளைவர் த. சுரேஷ்ராஜன் டாட்டதூரி கடலூர் மாவட்டம். ஆசிரியர் , புனித வளனார் அரசு மேல்நிலைப் பள்ளி , மஞ்சக்குப்பம் , மிரு - ப்ரகாஷ் , ஆசிரியப் பயிற்றுநர் , அனைவருக்கும் கல்வி இயக்கம் , நாமக்கள். திரு. இ. அப்துல்கஃபூர் பட்டதாரி ஆசிரியர் , அரசு மேல்திலைப் பஸ்ஸி , தேவர் சோலை ,
|
நீலகிரி மாவட்டம். ஒருங்கிளையட்டாளர் திருமதி மு. செல்வி பட்டதாரி ஆசிரியர் , அரசு மேல்நிலைப் பள்ளி , காட்டூர் , மீஞ்சூர் ஒன்றியம் ,.திருவள்ளூர் மாவட்டம் இந்நூல் ஜி.எஸ்னம் அழகிய மேப்மித்தோ தாளில் அச்சிடப்பட்டுள்ளது. ஆப்செட் முறையில் கச்சிட்டோர் !
|
1. பண்பாடு பற்றிய கருத்துகளும் அதன் தொடர்புகளும் உலகில் வாழும் மக்கள் அனைவரும் இயல்பாகவே சீரும் சிறப்புமாக வாழ விரும்புகின்றனர். அமைதியும் மன மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வே நல்வாழ்வு ஆகும். இத்தகைய நல்வாழ்வு வாழ சமுதாயம் சான்றோர்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். இதனாலேயே வள்ளுவப் பெருந்தகை , “ பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அஃது இன்றேல் மண்புக்கு மாய்வது மள் " - என்கிறார். செம்மையான வாழ்விற்கு அடித்தளமாய் அமைவது பண்பாடு. இச்சொல் ‘ கலாசாரம் ’ என வழங்கப் பெற்றது. ' கலாசாரம் ’ என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக
|
‘ பண்பாடு ' என்ற சொல்லை திரு. டி.கே.சிதம்பரநாதனார் அவர்கள் உருவாக்கிக் கொடுத்துள்ளார். இப்பாடத்தில் பண்பாடு பற்றிய கருத்துகளையும் பண்பாட்டுக் கல்வியால் நாம் பெறும் நன்மைகள் , மற்றும் இந்தியப் பண்பாட்டின் சிறப்புகளையும் விரிவாகக் காண்போம். 1 , 1 , பண்பாடு விளக்கம் ‘ பண்படு ’ என்னும் சொல் ' பண்பாடு ' ஆயிற்று என்பர் பண்படுத்துதல் என்றால் சீர்படுத்துதல் , செம்மைப் படுத்துதல் எனப் பொருள்படும் உலக உயிர்களின் வாழ்கைக்கு இன்றியமையாதது உணவு. இவ் உணவை நல்கும் உழவுத் தொழில் பற்றி கூறுமிடத்து வள்ளுவர் உழவன் நிலத்தை
|
பலசால் உழ வேண்டும் என்கிறார். பெரிய மண் கட்டிகள் துகளாகும் வரை உழ வேண்டும். அவ்வாறு உழுவதால் அந் நிலத்திற்கு ஒரு பிடி எருவும் இட வேண்டா என்கிறார். இவ்வாறு உழுவதால் மண் துகள்களிடையே காற்றும் சூரிய வெளிச்சமும் புகுந்து பயிர்கட்கு வேண்டிய ஊட்டச் சத்தை தருகின்றன என்ற பேருண்மையை உணர்த்துகிறார். இதனையே , ‘ பண்படுத்துதல் ’ என்கிறோம். இத்தகைய பண்பட்ட நிலத்தில் உழவன் தான் விதைத்தவற்றை பன்மடங்கு பெருக்கி விளைபொருளைப் பெறுகிறான். அதுபோல நம் மனத்தை நல்ல பழக்க வழக்கங்களாலும். கல்வியறிவாலும் , உயர்ந்த அனுபவங்களாலும்
|
பக்குவப்படுத்தி நற்குணத்தை வளர்ப்பதே ‘ பண்பாடு ’ ஆகும். மனதை முதன்மை படுத்தக் காரணம் நாம் எதை மனதில் சிந்திக்கின்றோமோ அதனையே சொல்லாகவும் செயலாகவும் வெளிப்படுத்துகிறோம். எனவே தான் “ அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ” என்ற பழமொழி வழக்கில் உள்ளது. எனவே மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல எண்ணங்களாகிய சிறந்த அறிவு , ஒழுக்கம் , அடக்கம் , பணிவு , இன்சொல் பிறர்க்கு உதவும் மனிதநேயம் போன்ற உயரிய பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். 1.1.1. பண்பாடு - வரையறை பண்பாடு பற்றி சான்றோர்களும் , வரலாற்று
|
வல்லுநர்களும் கூறியுள்ள கருத்துகள் பண்பாட்டின் சிறப்பினை விளக்குவதாக அமைகின்றன. 1. E.B. டெய்லர் : - “ மனிதன் சமுதாயத்தில் ஓர் அங்கத்தினன். இந்நிலையில் அவன் அடைந்துள்ள அறிவு , நம்பிக்கை , கலை , ஒழுக்கக் கோட்பாடுகள் , சட்டம் , பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தன்னுள் அடக்கிய ஒரு முழுமையான தொகுப்பே பண்பாடு ” 2. வால்டேர் : - “ அவரவர் அன்றாடப் பணிகளை நேர்மையான மனநிலையுடனும் , நேர்மையான நோக்குடனும் , மகிழ்ச்சியுடனும் செய்வதில் தான் பண்பாடு மிளிர்கிறது. 3. கே.எம். முன்ஷி : - “ பண்பாடு என்பது சீரிய வாழ்வு முறை , இவ்வாழ்வு
|
முறை மக்கள் நம்பிக்கை வைத்துள்ள அடிப்படை மதிப்பீடுகளால் ஊக்குவிக்கப்படுகிறது. ” 4. டாக்டர் சர்.சி.பி. இராமசாமி அய்யர் : - “ வாழ்விற்குரிய வழக்கமான பணிகளை திறமையாகச் செய்வதை உபநிடதங்கள் 2 வலியுறுத்துகின்றன. உபநிடதக் கருத்துகளை பிரதிபலிப்பதே பண்பாடு. " 5. தமிழறிஞர் கருத்து : - தமிழ் மொழியில் ' பண்பாடு ' என்பது “ சான்றாண்மையாகிய ஒழுக்கம் ” அல்லது “ உயர்ந்த வழிச் செல்லுதல் ” என்ற பொருளை தன்னுள் கொண்டு வாழ்வை சிறப்படையச் செய்வது என்று பொருள்படுகிறது. பண்பாட்டை சுருங்கக் கூறுமிடத்து ஒரு மனிதனிடம் காணப்படும் மூன்று
|
கூறுகள் முறையே உடல் , உள்ளம் , ஆன்மா. இவற்றுள் உடல் அழியக்கூடியது. அழியாத தன்மையுடைய உயிரின் பிரதிபலிப்பே உள்ளம். எனவே பண்பாடாவது உயிரையும் உள்ளத்தையும் செம்மைப்படுத்தி அக வளர்ச்சியை மையமாகக் கொண்டதே என்பர். 1 , 2 , பண்பாட்டின் இயல்புகள் பண்பாடு கற்று உணரத் தக்கது. உலகில் தோன்றும் எவரும் இயல்பாகவே உயரிய பண்பாளராகப் பிறப்பதில்லை. தான் வாழும் சமுதாயத்தில் இருந்து கற்றுக்கொள்ளும் உயரிய வாழ்க்கை நெறிமுறைகளே சிறந்த பண்பாளராக உருவாக்குகின்றது. 12.1. நிலைத்த தன்மை : பண்பாடு நிலையான தன்மை கொண்டது. பண்பாட்டுக்
|
கூறுகள் மாறாத , அழியாத தன்மையுடையன. மனிதன் அழிந்தாலும் அழியாத தன்மையுடைய பண்பாடு அவனைத் தொடர்ந்து வரும். இதனையே வள்ளுவர் , “ ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து ”. என்ற குறள் மூலம் விளக்குகிறார். கல்வி என்பது நூலறிவை மட்டும் கொள்ளாமல் நன்னெறிகளைப் பின்பற்றுதலையும் வள்ளுவர் கல்வி என்றே கூறுகிறார். 3 1.2.2. நெகிழுந் தன்மை : பண்பாடு நிலைத்த தன்மை கொண்டதுடன் நெகிழும் தன்மை கொண்டது. விடாப்பிடியாக ஒன்றையே கொள்ளாமல் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல வளைந்து தரும் இயல்பு கொண்டது சில இடங்களில்
|
கடினமான உறுதியுடனும் , சில இடங்களில் எளிமையானதாகவும் பண்பாட்டுக் கூறுகள் செயல்படுவதைக் காண்கிறோம். வள்ளுவர் வாய்மையே உயர்ந்த அறம் என்றும் வாய்மையினின்று தவறுதல் கூடாது என்றும் வலியுறுத்துகிறார். ஆனால் அவரே ‘ பொய்மையும் ’ குற்றமற்ற நன்மையைப் பிறர்க்குத் தருமாயின் வாய்மையாகவே கருதப்படும் என்கிறார். “ பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் ” என்னும் குறள் மூலம் விளக்குகிறார். 1.2.3. நடைமுறை வாழ்விற்குப் பயன்படுதல் பண்பாடு தனி மனிதனின் முன்னேற்றத்திற்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் உரிய
|
குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டது. நடைமுறை வாழ்விற்கு வேண்டிய இன்றியமையாத வாழ்வியல் நெறிகளைக் கொண்டது. வாய்மையாகிய பொய் பேசாமை , அஹிம்சையாகிய பிற உயிர்கட்கு தீங்கு செய்யாமை , இரக்கமாகிய கருணை மனப்பான்மை என்று பல அன்றாட வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம். 1.2.4. முழு வளர்ச்சிக்கு உதவுதல் ஒவ்வொரு நாடும் பிற நாடுகளுடன் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு கொண்டுள்ளன. பழங்காலத்தில் வாணிகத்தாலும் படையெடுப்புகளாலும் தொடர்பு ஏற்பட்டது. இத்தொடர்பு பண்பாட்டுத் தாக்கத்திற்கு வித்திட்டது. இன்றைய நாளில் அறிவியல்
|
மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் அனைத்துத் துறைகளிலும் உலக நாடுகள் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. இந்த நிலையில் பண்பாட்டுத் தாக்கம் உண்டாவது இயற்கையே. ஆனால் இந்த பண்பாட்டுத் தாக்கம் எவ்வகையிலும் அந்நாடுகளின் முழுமையான வளர்ச்சிக்கு தடையாக இல்லாமல் “ யாதும் ஊரே யாவரும் கேளிர் ” என்ற பரந்த உலகளாவிய மனப்பான்மையை நிலைநாட்டுவதற்கு உறுதுணையாக உள்ளது. 1.2.5. பொது அனுபவம் பண்பாட்டுடன் செயல்படுவது ஒரு மனிதனுக்கு மட்டுமோ அல்லது ஒரு சமுதாயத்திற்கு மட்டுமோ உரிய அனுபவம் அன்று. அது உலகம் முழுவதும் வாழும் மனித
|
இனம் அனைத்திற்கும் உரிமையான பொது அனுபவம் ஆகும். 1.2.6. அனுபவ அறிவின் விளைவு உலகில் எந்த இரு நாடுகளின் பண்பாடும் ஒன்றாக இருப்பதில்லை. ஒவ்வொன்றும் மற்றொன்றிலிருந்து மாறுபட்டு விளங்குகின்றது. ஒவ்வொரு பண்பாடும் ஒரு குறிப்பிட்ட மக்களின் அனுபவ அறிவினால் வந்த விளைவு ஆகும். 1.3. இந்தியப் பண்பாட்டின் சிறப்பியல்புகள் இந்தியப் பண்பாடு உலக அளவில் உள்னத இடத்தைப் பெற்றுள்ளது. இப் பண்பாட்டின் உன்னதக் கருத்துகளாவன. 1.3.1. ஆன்மிக அடிப்படை இறையுணர்வு , ஆன்மிக வேட்கை இவ்விரண்டுமே இந்தியப் பண்பாட்டின் அடித்தளம். அழியாத
|
ஆன்மாவின் வேட்கையாகிய வீடுபேற்றையடைய இறை உணர்வு இன்றியமையாதது. இறை உணர்வை வளர்க்க சமயம் இன்றிய மையாதது. சமயம் இந்தியப் பண்பாட்டின் ஆணி வேர். சமயத்தைப் புறக்கணித்தால் இந்தியப் பண்பாடு பொருளற்றதாகி விடும். சத்யம் , தர்மம் , அஹிம்சை போன்ற பல்வேறு அறக்கோட்பாடுகளையும் கர்மநெறி , மறுபிறவிக் கோட்பாடு , அவதாரக் கோட்பாடு ஆகிய அனைத்தையும் ஒரு சேரப் பெற்று சிறந்து விளங்குவது இந்தியப் பண்பாட்டின் முதலாவது சீரிய தன்மை எனலாம். Page 16 of 201 1.3.2. அழியாத் தன்மை நமது இந்தியப் பண்பாடு மிகவும் பழமை வாய்ந்தது. சம காலத்தில்
|
தோன்றி உன்னத நிலையில் திகழ்ந்த எகிப்திய , கிரேக்க , உரோமானிய , பாபிலோனியப் பண்பாடுகள் கால வெள்ளத்தில் அழிந்து போயின. ஆனால் நமது இந்தியப் பண்பாடு இன்றும் நிலைபெற்று உறுதியுடனும் உன்னத நிலையிலும் , திகழ்ந்து வருகிறது. அரசின் ஆதரவு இல்லாமலும் , பல்வேறு அந்நியப் படையெடுப்புகள் நிகழ்ந்த போதும் நமது இந்தியப் பண்பாடு அவற்றால் எவ்வித பாதிப்பும் இல்லாமல் ஆலமரமென விரிந்து பரந்துள்ளது. 1.3.3. பல பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கியது வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்து இன்றுவரை ஆரிய , திராவிட , பாரசீக , கிரேக்க , அரேபிய ,
|
ஐரோப்பிய , இசுலாமிய , கிறித்தவ பண்பாடுகளின் சீரிய கோட்பாடுகளின் கூட்டிணைப்பாகச் சிறந்து விளங்குவதே இந்தியப் பண்பாட்டின் தனிச் சிறப்பு எனலாம். 1.3.4. சகிப்புத் தன்மையும் நல்லிணக்கமும் இந்தியப் பண்பாட்டின் மிகச் சிறந்த பண்பு அதன் சகிப்புத் தன்மை எனலாம். அது தன்னை நாடி வந்த யூதர்கள் , இசுலாமியர் , கிறித்தவர்களின் பண்பாட்டுக் கூறுகளை வெறுக்கவில்லை. மாறாக அவற்றில் காணப்பட்ட அரிய உண்மைகளை தாமும் ஏற்றுக்கொண்டு அரவணைத்துச் செல்வது இதன் உயரிய பண்பாகும். 1.3.5. மனித நேயம் இந்தியப் பண்பாடு , இரக்கம் , கருணை , அஹிம்சை ,
|
இன்னா செய்யாமை போன்ற பல்வேறு கூறுகளை அடிப்படையாகக் கொண்டது. பிறர்க்கு உதவும் அருங்குணம் , இந்தியப் பண்பாட்டின் சிறந்த கூறாகும். இதனையே வள்ளுவர் , “ அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன் பெற்றான் பொருள்வைப் புழி ” என்னும் குறள் மூலம் பொருளைப் பெற்றவர் பிறர்க்கு உதவுதலே பொருளைப் பெற்றதன் பயன் என்கிறார். பொருளுதவி மட்டும் அன்று , பிற அனைத்து வகை உதவிகளைப் பண்பட்டோர் பிறர்க்கு செய்து அழியாப் புகழ் பெற்று விளங்குவதை வரலாற்றில் நாம் காண்கிறோம். 1.3. 6. வேற்றுமைகளுக்கிடையே ஒற்றுமையை வளர்ப்பது இந்தியத் துணைக்
|
கண்டத்தில் இனம் , மொழி , எண்ணம் , சமயம் , தத்துவம் , சடங்கு , பழக்கவழக்கம் போன்ற பல்வேறு வாழ்க்கை நிலைகளில் வேற்றுமைகள் இருப்பினும் அந்த வேற்றுமைகளுக் கிடையே ஒற்றுமை உணர்வை ஊட்டுவது இந்தியப் பணபாட்டின் சிறப்பு. 1.3.7. தத்துவக் கோட்பாடுகள் பொருளுலக வாழ்க்கைக்குத் தேவையான மருத்துவம் , அறிவியல் , கலைகள் , சமுதாய அறிவு , போர்முறை , வரவு , செலவு , பொருளாதாரக் கோட்பாடுகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துவது இந்தியப் பண்பாடு. ஒரு பொருளின் பல நிலைகளில் இருந்து அதன் உண்மை நிலையை அறிய உதவும் தத்துவக் கோட்பாடுகளை
|
அடிப்படையாகக் கொண்டது இந்தியப் பண்பாடு. 1.3.8. அழிவில்லாத மதிப்பீடுகளின் நிலைக்களன் 1.3.8.1. அன்பு ஒருவர் மீது ஒருவர் செலுத்தும் பாசமே அன்பு எனப்படும். இஃது இரக்கம் , பரிவு , கருணை போன்ற பல சொற்களால் அழைக்கப்படுகின்றது. அருளின் அடிப்படையே அன்பாகும். 1.3.8.2. சத்யம் சத்யம் என்பது உண்மை எனப்படுகிறது. உள்ளத்திலிருந்து வருவது உண்மையௌவும் , வாயிலிருந்து வருவதால் வாய்மை எனவும் அழைக்கப்படுகிறது. உடலால் வருவது மெய்மை இம்மூன்றையும் உள்ளடக்கிய சொல் சத்யமாகும். 1.3.8. 3. தர்மம் இப்பிரபஞ்சம் இயங்கி கொண்டிருப்பதே
|
தர்மத்தின் அடிப்படையிலேயாகும். பிறருக்கு உதவுவது ( வறியவருக்கு ) தமிழில் அறம் , ஈகை எனப் பொருள் கொள்ளப்படுகிறது. 1.3.8. 4. அஹிம்சை கொல்லாமை என்பதே அகிம்சையாகும். எண்ணம் , சொல் , செயல் இவைகளின் மூலம் பிறருக்கு துன்பம் செய்யாமை. 1.3.8. 5. சாந்தி மன நிம்மதியே சாந்தியாகும். மன நிம்மதியே மன அமைதிக்கு வழிவகுக்கிறது. ஒருவன் இறைவனிடத்தில் தன்னை அர்ப்பணிக்கும்பொழுது சாந்தி கிடைக்கிறது. 1.3.8. 6. சகோதரத்துவம் அனைவரும் சகோதரரே. எல்லாரும் ஓரினம் , எல்லாரும் ஓர்நிறை என்பதும் சகோதரத்துவத்தை எடுத்து இயம்புவதேயாகும். “
|
யாதும் ஊரே யாவரும் கேளிர் ” , என்ற கணியன் பூங்குன்றனாரின் கருத்தும் இதுவே. 1.3.8.7. கருணை பிற உயிர்களிடைத்துக் காட்டும் அன்பே கருணை. மரம் , செடி , கொடி , புழு , பூச்சி , விலங்கு போன்ற அனைத்து உயிர்களிடத்தும் செலுத்தப்படும் ‘ இரக்கமே ' கருணையாகும். 1 , 4 , பண்பாடும் நாகரிகமும் 1.4.1. நாகரிகம் மனித வாழ்வின் தொடக்க காலமாகிய பழைய கற்காலம் , புதிய கற்காலத்தில் மன வளர்ச்சி மற்றும் அறிவு வளர்ச்சி இல்லாமல் விலங்குகளைப் போல மனிதன் வாழ்ந்தான். பழைய கற்காலத்தில் கரடுமுரடான கற்களைக் கருவிகளாக பயன்படுத்தினான். புதிய
|
கற்காலத்தில் கூர்மையும் , வழுவழுப்பும் உடைய கற்களை 8 கருவிகளாகப் பயன்படுத்த முற்பட்டான். இதிலிருந்து மனிதரிடையே படிப்படியான அறிவு வளர்ச்சி தோன்றியதை அறியலாம். இத்தகைய மனிதன் அடுத்து உலோகங்களை அறிந்து உலோகங்களால் ஆன கருவிகளைப் பயன்படுத்தினான். தொடக்கத்தில் வேட்டையாடியே வாழ்ந்த மனிதன் படிப்படியாக கால்நடை வளர்ப்பு , பயிர்த் தொழில் , நெசவுத் தொழில் என பல தொழில்களில் ஈடுபட்டான். பொருளாதார முன்னேற்றத்தால் வசதியான வீடுகளை அமைத்து வாழத் தொடங்கினான். மேலும் தன் புறவாழ்வைச் சிறப்படையச் செய்யும் ஆடை , அணிகலன்கள் ,
|
ஒப்பனைப் பொருள்கள் , உணவு வகைகள் , பாத்திரங்கள் , வானளாவிய கோபுரங்கள் , மாட மாளிகைகள் , அழகிய நெடுஞ்சாலைகள் , ஊர்திகள் , தொழிற்சாலைகள் , வானொலி , தொலைபேசி , தொலைக்காட்சி , மின்னணு அஞ்சல் போன்ற துறைகளில் வளர்ச்சியடைந்துள்ளான். எனவே மனிதன் தன் அன்றாடத் தேவைகளின் அடிப்படையில் வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொண்டான். இப்புறத் தேவைகளின் வளர்ச்சியே நாகரிகம். 1. 4. 2. நாகரிகம் - விளக்கம் நாகரிகம் என்ற சொல் நகர் என்னும் சொல்லடியாகப் பிறந்தது. நகர் + அகம் – நகரகம் – நகரிகம் - நாகரிகம். சிற்றூர் மக்களினும் நகர மக்கள்
|
புறவாழ்விற்குரிய வசதிகள் அனைத்தும் பெற்று விளங்குபவர்கள். நகர வாழ்க்கையே நாகரிக வாழ்க்கை என்பது கருத்து. நாகரிகம் நகரும் தன்மையுடையது. புறவளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருவதைக் காண்கிறோம். 1.4.3. பண்பாடு - நாகரிகம் - ஒற்றுமை - வேற்றுமைகள் நாகரிகமும் பண்பாடும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய இரு மாறுபட்ட கூறுகள் எனலாம். நாகரிகம் என்பது புற வளர்ச்சியைக் கூறுகின்றது. பண்பாடு என்பது அகவளர்ச்சியாகிய ஆன்மிக உயர் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகிறது. மனித வாழ்வின் இரு அடிப்படைக் கூறுகள் முறையே உடலும் உயிரும் ஆகும்.
|
இதில் நாகரிகத்தை உடல் எனலாம். 9 புறத் தேவைகளின் வளர்ச்சியால் ஒரு நாடு இன்றுள்ள சூழலில் வாழ்வின் எல்லாத் துறைகளிலும் உலகப் புகழ் பெற்று முதலிடத்தைப் பெறலாம். அந்நாடு அடைந்துள்ள அறிவியல் துறை , தொழில் துறை மற்றும் பல்வேறு கண்டுபிடிப்புகள் அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தலாம். தொழில் வளர்ச்சியால் பொருளாதார உயர்வும் ஏற்படலாம். இவ்வளர்ச்சிகள் அனைத்துமே புறவளர்ச்சி. பண்பாடு உயிருக்கு இணையானது. பண்பாடு மக்களின் அக வளர்ச்சி. மக்கள் மனதில் தோன்றி ஒளிர்கின்ற உயர் குணங்களின் தொகுப்பு. இச்சீரிய பண்பாடு
|
மக்களின் எண்ணம் , சொல் , செயல் இவற்றால் வெளிப்படுகிறது. மனித வாழ்வில் புற வளர்ச்சிக்கிடையே அகவளர்ச்சிசயாகிய ஒழுக்கம் , பணிவு , வாய்மை , தூய்மை , இரக்கம் மனிதநேயம் முதலான அகவளர்ச்சிக் கூறுகளின் செயல் பாடே ‘ பண்பாடு ’ எனலாம். எனவே ' உடலின்றி உயிர் அமையாது ' என்பதற்கேற்ப நாகரிகமும் பண்பாடும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இரு அடிப்படைக் கூறுகள் எனலாம். வேற்றுமைகள் அ. நாகரிகம் புறவளர்ச்சி - பண்பாடு அகவளர்ச்சி. ஆ. புறவளர்ச்சியைக் குறிக்கும் நாகரிகத்தின் காலத்தை , தன்மையை அளவிட்டுக் கூறலாம். ஆனால் சூழ்நிலைகளுக்கு ஏற்ப
|
மாறுபடுகின்ற அகமாற்றத்தை ஏற்படுத்தும் பண்பாட்டை அளவிட முடியாது. இ. நாகரிக வளர்ச்சி வேகமானது. பண்பாடு ஒரு முறையான சீரான வளர்ச்சியைக் கொண்டது. ஈ. நாகரிக மாற்றங்கள் , வளர்ச்சிகள் உலகில் எந்த நாட்டில் எந்த இடத்தில் ஏற்பட்டாலும் அவற்றை எவ்வித கடினமும் இல்லாமல் எளிதாக எல்லோரும் அறிந்து பின்பற்றலாம். பண்பாடு என்பது மிகுந்த முயற்சியின் அடிப்படையில் மனம் ஒன்றியவர்கள் , ஒருமித்தக் கருத்துடையவர்கள் மட்டுமே பின்பற்றக் கூடியது. 10 எடுத்துக்காட்டு : தகவல் தொடர்பு சாதனங்களின் பயன்பாடு இப்பரந்த உலகின் எந்தப் பகுதியிலும்
|
மாறாத ஒன்று. மாற்றங்களை உடனுக்குடன் அறிந்து பின்பற்றலாம். மாறாக கலைகள் , இலக்கியங்கள் , சமயக் கோட்பாடுகள் ஆகிய அகக்கோட்பாடுகளில் ஒவ்வொரு நாட்டிற்கும் இனத்திற்கும் இடையே வேறுபாடுகள் நிலவுகின்றன. எனவே அவற்றை ஏற்குமிடத்து வேண்டியன , வேண்டாதனவற்றை ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது. உ நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்குமிடையே வேறுபாடுகள் காணப்படினும் சிறந்த புற வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாகரிகம் இல்லையெனில் சிறந்த பண்பாட்டைக் காண இயலாது. அமைதியின்மை , அச்சம் , குழப்பம் , பொறாமை , பூசல் , உடலிலும் , உள்ளத்திலும் ,
|
முதிர்ச்சியற்ற நிலை அல்லது ஒவ்வாத நிலை காணப்பட்டால் பண்பாடு வளர்ச்சியை காண முடியாதோ அதே நிலை தான் நாகரிக வளர்ச்சிக்கும் ஏற்படும். சுருங்கக் கூறின் பண்பாடாகிய அகவளர்ச்சியின் அடிப்படையில் ஆன்ம வேட்கையை நிறைவு செய்து கொண்டு புறவளர்ச்சியாகிய நாகரிகக் கூறுகளில் சிறந்தனவற்றை ஏற்று அல்லாதனவற்றை நீக்கி வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கை இனியதாகும். எடுத்துக்காட்டாக இன்று அணு சக்தித் துறையில் பெரும் மாறுதலும் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சியை மின்சக்தி மற்றும் பல்வேறு நலப் பணிகளுக்கு பயன்படுத்தலாம் மாறாக
|
அணுசக்தியை அழிவிற்கு பயன்படுத்த வேண்டா. 1.5. பண்பாட்டுக் கல்வியின் பயன்கள் வரலாற்றுக் கல்வியானது நம் முன்னோர்களைப் பற்றியும் வாழ்க்கை முறைகள் , அரசியல் பண்பாட்டு முறைகளை அறிய உதவுகிறது. அறிவியல் கல்வி இன்றைய வாழ்விற்கு உகந்த அறிவியல் தொழில் நுட்ப அறிவை வளர்க்கிறது. அது போல மருத்துவம் , வானநூல் , வணிகம் , பொருளாதாரம் போன்ற பல்வேறு பாடங்களை அறிவதன் வாயிலாக வாழ்வை வளப்படுத்திக் கொள்கிறோம். இனிப் பண்பாட்டுக் கல்வியால் நாம் அடையும் பயன்களை விரிவாகக் காண்போம். 1.5.1. அடிப்படைக் கோட்பாடுகளை அறியச் செய்தல் உலகின்
|
உறுதிப் பொருள்களாகிய அறம் , பொருள் , இன்பம் வீடு ஆகிய நாள்கினையும் அறிந்து அறவாழ்வு வாழ உதவுவது பண்பாட்டுக் கல்வி. ‘ பயன் கருதாது கடமையை செய்தல் ’ என்னும் கடமை உணர்வு , இன்னா செய்யாமை , வாய்மை , சகிப்புத் தன்மை போன்ற பல்வேறு உயரிய அடிப்படை உண்மைகளை அறியச் செய்வது பண்பாட்டுக் கல்வி என்றால் அது மிகையாகாது. 1.5.2. தவறைத் தவிர்த்து சரியை உணரச் செய்வது வாழ்வியல் பண்பாட்டு நெறிகளை அறிந்து நம் செயல்களில் சரியானவை எவை ? தவறானவை எவை ? என அலசி , ஆராய்ந்து சரியானவற்றை ஏற்கவும் தவறானவற்றை தவிர்ப்பதற்கும் உரிய ஆற்றலைத்
|
தருவது பண்பாட்டுக் கல்வி. 1.5.3. பிரச்சினைகளில் தீர்வுகாண உதவுதல் இன்றைய பிரச்சினைகள் எவ்வளவு சிக்கலானவையாக இருப்பினும் அவற்றிற்கு தீர்வு காண உதவுவது இந்தியப் பண்பாடு. அரசியல் , பொருளாதார , வாளவியல் , மருத்துவ கருத்துகளை நமது அற நூல்களான திருக்குறள் முதலானவை பிரதிபலிக்கின்றன. இவற்றைக் கற்பதன் வாயிலாக பிரச்சினைகளுக்கு தீர்வு எளிதில் காணலாம். 1.5.4. இயற்கையோடு இயைந்த நிறைவாழ்வு பண்பாட்டுக் கல்வி வாயிலாக நம் முன்னோர் வாழ்ந்த இயற்கை வாழ்வு முறையை அறிந்து நாமும் பின்பற்றி வாழ்ந்து உயர உதவுகின்றது வேதங்கள்.
|
புராணங்கள் ஆகிய சமய இலக்கியங்கள் இயற்கை வழிபாடு. இயற்கை உணவு , இயற்கை மருத்துவ முறைகளைத் தெளிவாகக் கூறுகின்றன. அவற்றை கற்பதால் நாமும் நம் வாழ்வில் பின்பற்றி சிறப்படைய உதவுகிறது. நமது தொன்மையான சிறந்த பண்பாட்டு பாரம்பரியத்தை அறிய இக்கல்வி பயன்படுகிறது. பழமையில் புதுமையை இணைத்து சீரிய வாழ்வு வாழ பண்பாட்டுக் கல்வி உதவுகிறது. 12 பயிற்சி வினாக்கள் அ. ஓரிரு வரிகளில் விடையளி 1 மக்கள் எத்தகைய வாழ்வு வாழ விரும்புகின்றனர் ? 2. ' நல்வாழ்வு ' என்பது எத்தகையது ? 3. சமுதாயம் எத்தகையோர் நிறைந்ததாய் இருக்க வேண்டும் ? '
|
பண்பாடு ' என்ற சொல்லிற்கு இணையான வேறு ஒரு சொல்லை எழுது. 4. 5. ' பண்பாடு ' என்னும் சொல்லின் அடிப்படையான சொல் எது ? 6. ' பண்படுத்துதல் ’ என்ற சொல்லின் பொருள் யாது ? 7. மனத்தை எவற்றால் பண்படுத்தலாம் ? 8. ‘ பண்பாடு ’ பற்றி E.B. டெய்லரின் கருத்து யாது ? 9. ' பண்பாடு ' பற்றி வால்டேர் கூறுவது யாது ? 10. கே.எம். முன்ஷியின் ' பண்பாடு ' பற்றிய கருத்து யாது ? 11. பண்பாட்டைப் பற்றி ஸர். ஸி.பி. இராமேஸ்வாமி ஐயர் கூறுவது யாது ? 12. ' பண்பாட்டின் இயல்புகள் ’ குறித்து ஏதேனும் இரண்டைக் கூறு ? 13. பண்பாடு - ஒரு பொது அனுபவம்
|
எவ்வாறு ? 14. அனுபவ அறிவின் விளைவே பண்பாடு எவ்வாறு ? 15. இந்தியப் பண்பாட்டின் சிறப்பு இயல்புகளில் ஏதேனும் இரண்டைக் கூறு ? 16. இந்தியப் பண்பாட்டின் தனிப் பெருஞ்சிறப்பாவது எது ? 17. புறவாழ்வை சிறப்படைய செய்யும் கண்டுபிடிப்புகள் எவை ? 18. ' நாகரிகம் ’ - சொல்விளக்கம் தருக. 19. ' நாகரிக ' வளர்ச்சி எத்தகையது ? 20. ‘ நாகரிக ’ வளர்ச்சியும் ‘ பண்பாட்டு ’ வளர்ச்சியும் எத்தகையன ? 21. ‘ பண்பாட்டுக் கல்வியால் ' நாம் அடையும் பயன்கள் இரண்டைக் கூறுக. 22. வரலாற்றுக் கல்வியால் நாம் அறிவன யாவை ? 23. அறிவியல் கல்வியறிவால் நாம்
|
அறிவன யாவை ? 24. உலகின் ' உறுதிப்பொருள்கள் ’ யாவை ? 25. அகவளர்ச்சிக் கூறுகளின் செயல்பாட்டை எவ்வாறு அழைக்கலாம் ? 13 Page 20 of 201 ஆ. ஒரு பத்தி அளவில் அல்லது பத்து வரிகளுக்கு மிகாமல் விடையளி 1. நிலத்தைப் பண்படுத்த வேண்டியதன் அவசியத்தை வள்ளுவர் எவ்வாறு கூறுகிறார். 2. ' பண்பாடு ' பற்றிய தமிழர்களின் கருத்தைக் கூறு. 3. பண்பாட்டின் மையக்கருத்தாக கூறப்படுவது யாது ? 4. 5. 6. 7. 8. ' பண்பாடு நிலைத்த தன்மையது ' என்பதை விளக்குக. நடைமுறை வாழ்வில் பண்பாட்டின் பயன்பாட்டை எழுதுக. இந்திய பண்பாட்டிற்கு ' ஆன்மிக உணர்வே '
|
அடிப்படை எவ்வாறு ? இந்தியப் பண்பாடு ' அழியாத் தன்மை ' உடையது எங்ஙனம் ? மனிதரிடையே படிப்படியாக அறிவு வளர்ச்சி ஏற்பட்டதை விளக்குக 9. ' நாகரிகம் ' - புறவளர்ச்சி என்பதை விளக்குக. 10. உலகின் உறுதிப்பொருள்கள் என கூறப்படுவன யாவை ? 11. நாகரிகம் தோன்றிய விதத்தை விவரி. 12. பண்பாட்டை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ளலாம். 1. 2. 3. 4. இ. ஒரு பக்க அளவில் அல்லது முப்பது வரிகளுக்கு மிகாமல் விடையளி ' பண்பாடு ' பற்றி சான்றோர்களின் கருத்துகளை தொகுத்துக் கூறுக. பண்பாடு ' நெகிழுந்தன்மை ’ கொண்டது என்பதை விளக்குக. முழுவளர்ச்சிக்குப்
|
பண்பாடு உதவுகிறது - இதனை ஆய்வு செய் இந்தியப் பண்பாடு ' பல பண்பாட்டுக் கூறுகளை ' உள்ளடக்கியது என்பதை விவரிட 5. ' மனித நேயமே ' இந்தியப் பண்பாட்டின் அடித்தளம் என்பதை விவரி. 6. ' இந்தியப் பண்பாட்டின் அழிவில்லாத மதிப்பீடுகளின் நிலைகளை ' விவரி. 7. பண்பாடு அகவளர்ச்சி என்பதை விவரி. 8. பண்பாட்டுக் கல்வியின் பயன்கள் இரண்டினை விவரி. ஈ. நான்கு பக்கங்களுக்கு மிகாமல் விடையளி 1. பண்பாட்டின் இயல்புகளை விவரித்து எழுதுக. 2. பண்பாடு பற்றியும் பண்பாட்டுக் கல்வியால் நலம்பெறும் பயன்களை விவரி. 3. இந்தியப் பண்பாட்டின்
|
சிறப்பியல்புகளைத் தொகுத்துக் கூறுக. 4. ‘ நாகரிகம்'- ‘ பண்பாடு ' என்னும் சொற்களை விளக்கி , தொடர்பு மற்றும் வேற்றுமைகளை எழுது. 2. வேற்றுமையில் ஒற்றுமை “ பாரத நாடு பழம்பெரும் நாடு நீர் அதன் புதல்வர் - இந்நினைவு அகற்றாதீர் ” என்றார் மகாகவி பாரதியார். இத்தகைய பெருமை வாய்ந்த பாரத நாட்டை முன்னொரு காலத்தில் பரதன் ஆண்ட காரணத்தால் ‘ பரதகண்டம் ’ எனவும் ‘ பாரத வருஷ் ’ என்றும் அழைக்கப்படுவதாகப் புராணச் செய்திகளால் அறிகிறோம். ‘ ஜம்புத்தீவு ' என்ற மற்றொரு பெயரும் வழக்கில் உள்ளது. ஆரம்ப காலத்தில் பாரசீக , கிரேக்கப்
|
படையெடுப்புகளின் விளைவால் இந்தியா , இந்துஸ்தானம் என்ற பெயர்கள் உருவாயின. இவர்களது படையெடுப்புகள் சிந்து நதி தீரத்துடன் நின்று போயின. சிந்து என்பதை அவர்கள் ஹிந்து என்று உச்சரித்தார்கள். இதனைத் தொடர்ந்து இடைக்காலத்தில் வந்த முஸ்லீம்களும் நம் நாட்டை ‘ ஹிந்துஸ்தான் ’ என்று அழைத்தனர். இத்தகைய பழமையும் பெருமையும் வாய்ந்த நம் நாடு ஒரு தீபகற்ப நாடு என்ற நிலவியல் பெருமையை உடையது. பளி மூடிய இமயமலைத் தொடர்கள் வடக்கில் இயற்கை அரணாகவும் , தெற்கே இந்துப் பெருங்கடலும் , கிழக்கிலும் மேற்கிலும் முறையே வங்கக் கடலும் , அரபிக்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.