text
stringlengths
11
513
செய்ய வந்த ஆங்கிலேயர் சிறிது சிறிதாக நமது நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர். அவர்களை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர்கள் பலர். அவர்களுள் வெற்றி பெற்றவர்கள் சிலரே. வீரமும் அதனால் விளையும் வெற்றியும் போருக்கு முக்கியமானவை. சூழ்நிலைக்கேற்பச் செயல்பட்டுப் பெறும் வெற்றியே சிறந்தது. விடுதலைப்போரில் ஆண்களுக்கு நிகராகச் செயல்பட்டு வெற்றி வாகை சூடிய பெண்களுள் ஒருவரைப் பற்றி அறிவோம் வாருங்கள். வேலுநாச்சியார் இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் வேலுநாச்சியார். தாய்மொழியாகிய தமிழ் மட்டும் அல்லாமல்
ஆங்கிலம் , பிரெஞ்சு , உருது ஆகிய மொழிகளையும் சிறப்பாகக் கற்றார். சிலம்பம் , குதிரையேற்றம் , வாட்போர் , விற்பயிற்சி ஆகியவற்றையும் முறையாகக் கற்றுக் கொண்டார். சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். காளையார்கோவிலில் நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டார். வேலுநாச்சியார் ஆங்கிலேயரை வென்று சிவகங்கையை மீட்க உறுதி பூண்டார். திண்டுக்கல் கோட்டையில் தங்கி ஒரு படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார். எட்டு ஆண்டுகளுக்குப் பின்... திண்டுக்கல் கோட்டையில்
ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. கூட்டத்தின் நடுவே வீரமங்கை வேலுநாச்சியார் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி அமைச்சர் தாண்டவராயர் , தளபதிகளாகிய பெரிய மருது , சின்ன மருது மற்றும் குறுநில மன்னர்கள் சிலர் இருந்தனர். நாம் சிவகங்கையை இழந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன " என்று வேலுநாச்சியார் கவலை நிறைந்த குரலில் கூறினார். " கவலைப்படாதீர்கள் அரசியாரே ! நாம் சிவகங்கையை மீட்கும் நாள் நெருங்கிவிட்டது " என்றார் அமைச்சர் தாண்டவராயர். " அந்த இனிய நாளைத்தான் நானும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன் "
என்றார் வேலுநாச்சியார். அப்போது வெளியே பெரும் ஆரவாரம் கேட்டது. " மைசூரிலிருந்து ஐதர்அலி அனுப்பிய படை வந்துவிட்டது என நினைக்கிறேன் " என்றார் வேலுநாச்சியார். அப்போது அறையின் வாயிலில் வீரன் ஒருவன் வந்து நின்றான். " அரசியாருக்கு வணக்கம். மைசூரில் இருந்து ஐயாயிரம் குதிரைப் படை வீரர்கள் வந்துள்ளனர் " என்றான். " அப்படியா ! மகிழ்ச்சி. அவர்களை ஓய்வு எடுக்கச் சொல். நான் பிறகு வந்து பார்க்கிறேன் " என்றார் வேலுநாச்சியார். வீரன் வெளியேறினான். " ஐதர்அலி உறுதியாகப் படையை அனுப்புவார் என்று எனக்கு முன்பே தெரியும் அரசியாரே !
" என்றார் அமைச்சர் தாண்டவராயர். " எதனால் அப்படிச் சொல்கிறீர்கள் ? " " நாம் இருவரும் ஐதர்அலியைச் சந்திக்க மைசூர் சென்றோம் அல்லவா ? அப்போது தாங்கள் அவரிடம் உருதுமொழியில் பேசினீர்கள். அப்போது அவர் முகத்தில் பெரிய மகிழ்ச்சி தோன்றியதை நான் கண்டேன் " என்றார் தாண்டவராயர். " நம் அரசியாரின் பன்மொழி அறிவு நமக்குப் பெரிய நன்மையைத் தந்திருக்கிறது " என்றார் சின்ன மருது. " ஆம். நமது வீரர்களுடன் ஐதர்அலியின் ஐயாயிரம் குதிரைப்படை வீரர்களும் சேர்ந்து விட்டனர். ஆகவே , நாளை சிவகங்கையை மீட்கப் புறப்படலாம் அல்லவா ? " என்று
கேட்டார் பெரிய மருது. " என் கணவர் கொல்லப்பட்ட ஊர் காளையார்கோவில். எனவே , நாம் முதலில் காளையார்கோவிலைக் கைப்பற்றுவோம். பிறகு சிவகங்கையை | மீட்போம் " என்றார் வேலு நாச்சியார். அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர். மறுநாள் காளையார்கோவில் நோக்கி வேலுநாச்சியார் படை புறப்பட்டது. ஆண்கள் படைப்பிரிவுக்கு மருது சகோதரர்களும் பெண்கள் படைப்பிரிவுக்குக் குயிலியும் தலைமை ஏற்றனர். காளையார்கோவிலில் வேலுநாச்சியாரின் படைக்கும் ஆங்கிலேயரின் படைக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றது. இறுதியில் ஆங்கிலேயரின் படை தோற்று ஓடியது. " அரசியார்
அவர்களே ! காளையார்கோவில் நம் கைக்கு வந்து விட்டது. நாம் இப்போதே சிவகங்கைக் கோட்டையைத் தாக்கினால் ஆங்கிலேயரை விரட்டியடித்து விடலாம் " என்றார் பெரிய மருது. " அவசரம் வேண்டாம். இப்போது சிவகங்கைக் கோட்டைக் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும். வரும் விசயதசமித் திருநாள் அன்று கதவுகள் திறக்கப்படும். அப்போது நமது படைகள் உள்ளே நுழையலாம் " என்றார் வேலுநாச்சியார். " அப்போதும் பெரிய காவல் இருக்குமே " என்றார் சின்ன மருது. " விசயதசமி நாளில் கோட்டைக்குள் செல்வதற்குப் பெண்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. நமது பெண்கள் படைப்பிரிவினர்
கூடைகளில் பூக்கள் , பழங்கள் ஆகியவற்றுடன் ஆயுதங்களையும் மறைத்துக் கொண்டு கோட்டைக்குள் செல்லட்டும். உள்ளே அவர்கள் தாக்குதலைத் தொடங்கியதும் நமது ஆண்கள் படைப்பிரிவினரும் கோட்டைக்குள் நுழைந்து தாக்கட்டும். ஆங்கிலேயரை விரட்டியடித்து விடலாம் " என்றார் வேலுநாச்சியார். " அப்படியே செய்யலாம் அரசியாரே ! இன்னும் ஒரு செய்தி. தங்களைக் காட்டிக் கொடுக்குமாறு உடையாள் என்னும் பெண்ணை ஆங்கிலேயர்கள் வற்புறுத்தினார்களாம். அவர் மறுத்ததால் கொன்றுவிட்டார்களாம். அவருக்கு நாம் உரிய முறையில் சிறப்புச் செய்ய வேண்டும் " என்றார் அமைச்சர்
தாண்டவராயர். " அவருக்கு ஒரு நடுகல் நடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே ! அவரது பெருமையை எல்லோரும் அறிந்து கொள்ளட்டும் " என்றார் வேலுநாச்சியார். " அப்படியே செய்வோம் " என்றார் அமைச்சர். விசயதசமிக்கு முதல் நாள் சிவகங்கையை நோக்கிப் புறப்பட்டது படை. வழியில் உடையாளுக்காக நடப்பட்ட நடுகல் முன்பு குதிரையில் இருந்து இறங்கினார் வேலுநாச்சியார். தாம் வைத்திருந்த தாலியை எடுத்து அந்த நடுகல்லுக்குக் காணிக்கையாகச் செலுத்தி வணங்கினார். அருகில் நின்ற வீரர்கள் " உடையாள் புகழ் ஓங்குக " என்று முழக்கமிட்டனர். படை மறுநாள் காலை
சிவகங்கையை அடைந்தது. அரசியாரே ! நான் நமது பெண்கள் படைப்பிரிவுடன் மாறுவேடத்தில் உள்ளே செல்கிறேன். உள்ளே சென்றதும் அங்குள்ள ஆயுதக் கிடங்குக்கு எப்படியாவது தீ வைத்து விடுகிறேன். தீ எரிவது தெரிந்ததும் நம் படை உள்ளே நுழையட்டும் " என்று கூறினார் குயிலி. " அப்படியே ஆகட்டும் " என்றார் வேலு நாச்சியார். குயிலியும் பெண்கள் படையினரும் கோட்டைக்குள் சென்றனர். சிறிது நேரத்தில் கோட்டைக்குள் பெரும் கூச்சல் எழுந்தது. உள்ளே உயரமாகத் தீ எரிவது தெரிந்தது. தெரிந்து தெளிவோம் வேலுநாச்சியாரின் காலம் 1730-1796 வேலுநாச்சியார்
சிவகங்கையை மீட்ட ஆண்டு 1780. ஜான்சிராணிக்கு " நமது படை உள்ளே நுழையட்டும் " என்று ஆணையிட்டார் வேலுநாச்சியார். படை வீரர்கள் கோட்டைக்குள் பாய்ந்து சென்றனர். ஆங்கிலேயரின் படையுடன் கடுமையாகப் போரிட்டனர். இறுதியில் ஆங்கிலப்படை தோல்வியடைந்து கோட்டையைவிட்டு ஓடியது. முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் வேலு நாச்சியார். " வெற்றி ! வெற்றி ! " என்று முழக்கமிட்டனர் வீரர்கள். " இந்த வெற்றிக்குக் காரணமான குயிலி எங்கே ? " என்று கேட்டார் வேலுநாச்சியார். " குயிலி தம் உடலில் தீ வைத்துக் கொண்டு ஆயுதக் கிடங்குக்குள்
குதித்துவிட்டார் " என வீரர்கள் கூறினார்கள். " குயிலி தம் உயிரைத் தந்து நம்நாட்டை மீட்டுக் கொடுத்திருக்கிறார். அவரது துணிவுக்கும் தியாகத்திற்கும் வீரத்திற்கும் தலைவணங்குகிறேன் " என்று உணர்ச்சிப் பெருக்கோடு கூறினார் வேலுநாச்சியார். வேலுநாச்சியாரின் வீரம் , மருது சகோதரர்களின் ஆற்றல் , ஐதர்அலியின் உதவி ஆகியவற்றோடு குயிலியின் தியாகமும் இணைந்ததால் சிவகங்கை மீட்கப்பட்டது. கற்பவை கற்றபின் இக்கதையை நாடகமாக வகுப்பறையில் நடித்துக் காட்டுக. தமிழில் சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட
எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும். இவ்வாறு பொருள் தருபவை சொல் எனப்படும். ( எ.கா. ) ஈ , பூ , மை , கல் , கடல் , தங்கம். இலக்கண அடிப்படையில் சொற்கள் பெயர்ச்சொல் , வினைச்சொல் , இடைச்சொல் , உரிச்சொல் என நான்கு வகைப்படும். பெயர்ச்சொல் இடைச்சொல் ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். ( எ.கா. ) பாரதி , பள்ளி , காலை , கண் , நன்மை , ஓடுதல். வினைச்சொல் வினை என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருள். செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். ( எ.கா. ) வா , போ , எழுது , விளையாடு. உரிச்சொல்
பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வரும் சொல் இடைச்சொல் ஆகும். இது தனித்து இயங்காது. ( எ.கா. ) | கற்பவை கற்றபின் பின்வரும் தொடர்களில் உள்ள நால்வகைச் சொற்களை வகைப்படுத்துக. 1. வளவனும் தங்கையும் மாநகரப் பேருந்தில் ஏறினர். 2. நாள்தோறும் திருக்குறளைப் படி. 3. " ஏழைக்கு உதவுதல் சாலச்சிறந்தது " என்றார் ஆசிரியர். கீழ்க்காணும் குறளில் உள்ள இடைச்சொல்லை எழுதுக. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. செய்தித்தாளில் விளையாட்டுச் செய்தி ஒன்றைப் படித்து , அதில் இடம்பெற்றுள்ள
நால்வகைச் சொற்களை எழுதுக. சொல்வகையை அறிந்து பொருந்தாச் சொல்லை வட்டமிடுக. 1. அ ) படித்தாள் 2. அ ) மதுரை 3. அ ) சென்றாள் 4. அ ) மா தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களுள் ஒருவரின் வரலாற்றைக் கேட்க. கீழ்க்காணும் தலைப்புகளில் ஒரு நிமிடம் பேசுக. 1. பாரதியார் சொல்லக் கேட்டு எழுதுக இந்தியநாடு காந்தியடிகள் ஊன்றுகோல் வாழ்த்துகள் மெய்யுணர்வு நாற்றங்கால் பொதுக்கூட்டம் குற்றாலம் மொழியை ஆள்வோம் ! கொண்டிருந்தார் ? 2. காந்தியடிகள் 3. வேலுநாச்சியார் கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக இந்திய விடுதலைக்குப்
பாடுபட்டவர்களுள் ஒருவர் வ.உ.சிதம்பரனார். வ.உ.சி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். அவர் , வழக்கறிஞர் , எழுத்தாளர் , பேச்சாளர் , தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார். ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் சுதேசி நாவாய்ச் சங்கம் ' என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும் , பாரதியார் பாடல்களை
விரும்பிக் கேட்பார். 1. சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார் ? 2. வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் 3. வ. உ.சி. அவர்கள் யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார் ? வ. உ. சி. அவர்களின் பன்முகத் தன்மைகள் யாவை ? 5. வ. உ. சி. அவர்கள் புலமை பெற்றிருந்த மொழிகள் யாவை ? வேலுநாச்சியார் உரிச்சொல் இடம் அறிந்து பயன்படுத்துவோம் ஒன்று என்பதைக் குறிக்க ஓர் , ஒரு ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுகின்றன. உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஓர் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஒரு என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். ஓர் ஏரி ஒரு நகரம் ஒரு கடல் இவை போலவே , உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அஃது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் அது என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். ( எ.கா. ) அஃது இங்கே உள்ளது அது நன்றாக உள்ளது கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக 1. ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது. 2. ஒரு இரவும் ஓர் பகலும் சேர்ந்தது ஒருநாள். 3. அது இல்லாத இடத்தில்
எதுவும் நடக்காது. 4. அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை. 5. அது ஒரு இனிய பாடல். அகரவரிசைப்படுத்துக பெண்கள் , பாரதம் , புதுமை , பீலி , பேருந்து , பூமி , பழங்கள் , பொதுக்கூட்டம் , பையன் , போக்குவரத்து , பின்னிரவு செயல்திட்டம் காந்தியடிகளின் விடுதலைப் போராட்ட நிகழ்வுகள் பற்றிய படங்களைத் திரட்டிப் படத்தொகுப்பு ஒன்று உருவாக்குக. கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக. தேசிய ஒருமைப்பாடு இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்கு. ( எ.கா. ) எனக்கு எனக்குண்டு வடக்கு பந்து பாட்டு இணையச் செயல்பாடுகள் சொல்
விளையாட்டு சொல்லி அடிப்போமா... தமிழ்ச்சொல்லை ! கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக்குறியீட்டைப் பயன்படுத்தி , " சொல்லி அடி " செயலியை நிறுவுக. சொல்லி அடி செயலியைத் திறந்தவுடன் வரும் திரையில் கொடுக்கப்பட்டிருக்கும் ' படம் பார்த்துக் கண்டுபிடி ' , ' குறிப்புகள் மூலம் கண்டுபிடி ' , ' சொல்லுக்குள் சொல் ' , ' பிற மொழிச்சொற்கள் ' , ' எதிர்ச் சொற்கள் ' மற்றும் ' இணைச்சொற்கள் ' போன்ற தெரிவுகளில் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்க. எடுத்துக்காட்டாகக் கொடுக்கப்பட்டிருக்கும் படங்களைக்கொண்டு அதன் பெயர்களை அடையாளம் காணுதல்.
இதே போன்று பிற விளையாட்டுகளின் மூலம் சொற்களஞ்சிய அறிவை வளர்த்துக் கொள்க. செயல்பாட்டிற்கான உரலி எல்லாரும் இன்புற எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தல் , பிறருக்கு உதவி செய்தல் போன்ற அறச்சிந்தனைகளை அறிதல் வாழும் முறைகளை அறிதல் பிறர் பசியைப் போக்கும் உயர் சிந்தனையை வளர்த்தல் பெற்றோரையும் பெரியோர்களையும் மதிக்கும் பண்பு பெறுதல் இயல் எட்டு நுழையும்முன் அவற்றை நாமும் பின்பற்றுவோம் ; வாழ்வை வளமாக்குவோம். கவிதைப்பேழை தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர் செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே ! * சொல்லும்
பொருளும் தண்டருள் கூர் ஏவல் பராபரமே பராபரக் கண்ணி அற இலக்கியங்கள் நம் முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கியவை. அவை வாழ்வியல் நெறிகளையும் ஒழுக்கங்களையும் விளக்குபவை. நம் தமிழ் இலக்கியங்கள் காட்டும் வாழ்வியல் நெறிகள் உலகம் முழுமைக்கும் பொதுவானவை. அற இலக்கியங்கள் கூறும் கருத்துகளைக் கடைப்பிடித்து வாழ்வதே சிறந்த வாழ்வு. செம்மையருக்கு அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே ! எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே ! * குளிர்ந்த கருணை
மிகுதி சான்றோருக்கு தொண்டு மேலான பொருளே பணி எய்தும் எல்லாரும் அல்லாமல் பாடலின் பொருள் அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும். அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும். இன்பநிலை தானே வந்து சேரும். எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத்தவிர , வேறு எதையும் நினைக்க மாட்டேன். I நூல் வெளி இப்பாடலை எழுதியவர் தாயுமானவர். திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர். இப்பகுதி தாயுமானவர் பாடல்கள் என்னும் நூலில்
உள்ளது. இந்நூலைத் தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றுவர். இப்பாடல்கள் ' பராபரக் கண்ணி ' என்னும் தலைப்பில் உள்ளன. ' கண்ணி ' என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல்வகை. · கற்பவை கற்றபின் 1. உங்கள் வீட்டில் வளர்க்கும் உயிரினங்கள் பற்றிக் கூறுக. நீங்கள் பிறர் மகிழும்படி செய்த நிகழ்வுகளைக் கூறுக. 2. * மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல். அ ) தம்முயிர் ஆ ) தமதுயிர் இ ) தம்உயிர் 2. 3. ' தானென்று ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ )
தானெ + என்று ஆ ) தான் + என்று இன்புற்று + இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ ) இன்புற்றிருக்க ஆ ) இன்புறுறிருக்க இ ) இன்புற்று இருக்க ஈ ) இன்புறு இருக்க ஈ ) தம்முஉயிர் இ ) தா + னென்று ஈ ) தான் + னென்று 4. ' சோம்பல் ' என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் அ ) அழிவு ஆ ) துன்பம் இ ) சுறுசுறுப்பு குறுவினா 1. யாருக்குத் தொண்டு செய்ய வேண்டும் ? 2. இன்பநிலை எப்போது வந்து சேரும் ? சிறுவினா பராபரக்கண்ணியில் தாயுமானவர் கூறுவன யாவை ? நயம் அறிக பராபரக்கண்ணி பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை , மோனைச்
சொற்களை எடுத்து எழுதுக. சிந்தனைவினா குளிரால் வாடுபவர்களுக்கு நீங்கள் எவ்விதம் உதவுவீர்கள் ? 167 வாழ்க்கை பின்திரும்பிச் செல்லாது நேற்றுடன் ஒத்துப் போகாது கொடுப்பவரின் பரிசுடன் அவருக்குச் சமமாக எழுங்கள் சிறகுகளின் மீது எழுவது போல உழைக்கும்போது நீங்கள் இலக்கியங்கள் மக்களின் வாழ்வை நெறிப்படுத்தி அறவழியில் செலுத்துகின்றன. மனித வாழ்வைச் செம்மைப்படுத்துகின்றன. கவிஞர்கள் வாழ்வின் பொருளை உணர்த்தும் உயர்ந்த சிந்தனைகளைக் கூறியுள்ளனர். அத்தகைய சிந்தனைகளைக் கூறும் கவிஞர்கள் உலகெங்கும் உள்ளனர். அயல்நாட்டுக் கவிஞர்
ஒருவரின் சிந்தனைகளை அறிவோம் வாருங்கள். நீங்கள் நல்லவர் புல்லாங் குழலாகி விடுகிறீர்கள் அதன் இதயம் காலத்தின் கிசுகிசுப்பை ஓர் இசையாக மாற்றி விடுகிறது உங்களுக்குள் இருக்கும் கவிதைப்பேழை நன்மையைப்பற்றித்தான் நான் பேச முடியும் தீமையைப் பற்றியல்ல உங்கள்சுயத்துடன் நீங்கள் ஒருமைப்பாடு கொண்டிருக்கும்போது நீங்கள் நல்லவர் என்னைப்போல் இரு பழுத்து உன் உள்ளீடுகளை எல்லாம் முழுசாய்க்கொடு என்று பழம் வேரைப் பார்த்து நிச்சயமாகச் சொல்லாது கொடுப்பது பழத்தின் இயல்பு பெறுவது வேரின் இயல்பு உங்கள் பேச்சின் போது நீங்கள்
விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது உறுதியாகக் கால்பதித்து சொல்லும் பொருளும் சுயம் தனித்தன்மை உள்ளீடுகள் நூல் வெளி கலீல் கிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர். கவிஞர் , புதின ஆசிரியர் , கட்டுரையாசிரியர் , ஓவியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர். இப்பாடப்பகுதி கவிஞர் புவியரசு மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. கற்பவை கற்றபின் 1. உங்களது நிறை குறைகளைப் பட்டியலிடுக. 2. உங்கள் நண்பர் மனம் சோர்ந்து இருக்கும்போது அவரைத் தேற்றும் வழிகள் குறித்துக் கலந்துரையாடுக. * மதிப்பீடு சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக. 1. பரிசு பெறும்போது நம் மனநிலை அ ) கவலை ஆ ) துன்பம் 2. வாழ்வில் உயர கடினமாக அ ) பேச ஆ ) சிரிக்க 6th 5td Tamil CBSE Pages 77-206.indd 169 உள்ளே இருப்பவை வேண்டும். குறுவினா 1. பழம் , வேர் ஆகியவற்றின் இயல்புகள் யாவை ? 2. உழைக்கும்போது என்னவாக ஆகிறோம் ? ஆக இருக்கும். மகிழ்ச்சி 169 இ ) நடக்க சிந்தனை வினா 1. நல்லவர் என்னும் பெயர் பெற நாம் என்ன செய்யலாம் ? 2. உங்கள் குறிக்கோளை அடைய நீங்கள் செய்யும் முயற்சிகளை எழுதுக. இயல் எட்டு நுழையும்முன் உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களுக்கும்
இன்றியமையாதது உணவு. உலக உயிர்கள் அனைத்தும் வாழ்நாள் முழுவதும் உணவு தேடியே உழைக்கின்றன. உணவே உயிர்களுக்கு ஆதாரமாக விளங்குகிறது. ' தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம் " என்றார் பாரதியார். பசித்திருக்கும் ஒருவனுக்கு உணவு அளிப்பது உயிர் கொடுப்பதற்கு இணையானது. அதுவே சிறந்த அறமாகும். தீவதிலகை மணிமேகலை தீவதிலகை இடம் : மணிபல்லவத் தீவு கதை மாந்தர்கள் : மணிமேகலை , தீவதிலகை. மணிமேகலை : ( தனக்குள் ) மணிமேகலை தீவதிலகை மணிமேகலை பசிப்பிணி போக்கிய பாவை நாடகம் எங்குப் பார்த்தாலும் வெண்மணல் குன்றுகள்.
பூத்துக் குலுங்கும் செடிகொடிகள். அடர்ந்த மரங்கள். இடையிடையே பொய்கைகள். மனதை மயக்கும் காட்சிகள்... ஆகா !... அருமை ! அருமை. ! ( அப்போது அவள் எதிரில் தீவதிலகை வருகிறாள் ) : அழகிய பெண்ணே ! நீ யார் ? இங்கு எப்படி வந்தாய் ? என் பெயர் தீவதிலகை. நான் இத்தீவையும் இதிலுள்ள புத்த பீடிகையையும் காவல் செய்து வருகிறேன். பெருமை மிக்கவர்கள் மட்டுமே இத்தீவிற்கு வந்து இந்தப் புத்த பீடிகையை வணங்க முடியும். நீ அந்தப் பெருமையைப் பெற்றிருக்கிறாய். இன்னும் நீ அறியவேண்டியது ஒன்று உண்டு. அஃது என்ன அம்மா ? நான் பூம்புகார் நகரைச்
சேர்ந்தவள். என் பெயர் மணிமேகலை. மணிமேகலா தெய்வம் என்னை இங்குக் கொண்டு வந்து சேர்த்தது. நீங்கள் யார் அம்மா ? நீங்கள் எப்படி இத்தீவிற்கு வந்தீர்கள் ? நம் எதிரில் பூக்கள் நிறைந்து விளங்கும் இந்தப் பொய்கையைப் பார். இதற்குக் கோமுகி என்று பெயர். கோ என்றால் பசு. முகி என்றால் முகம். பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் இப்பொய்கை கோமுகி என்னும் பெயரைப் பெற்றது. ஓ ! அப்படியா ! வடிவத்திற்கு ஏற்ற பெயராக இருக்கிறதே ! மணிமேகலை தீவதிலகை : அமுதசுரபியா ? அதன் சிறப்பு என்ன ? : அந்தப் பாத்திரத்தில் இட்ட உணவு எடுக்க எடுக்கக்
குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம். : அப்படியா ! வியப்பாக உள்ளதே ! : ஆம். அந்தப் பாத்திரம் தோன்றும் வைகாசி முழுநிலவு நாள் இன்றுதான். ( இவ்வாறு தீவதிலகை சொல்லிக் கொண்டிருக்கும் போதே பொய்கையின் நீருக்குமேல் அப்பாத்திரம் தோன்றுகிறது. மணிமேகலை அதனை வணங்கிக் கையில் எடுக்கிறாள் ). தீவதிலகை மணிமேகலையே ! உயிர்களின் பசிபோக்கும் அமுதசுரபியை நீ பெற்றுள்ளாய். இனி இவ்வுலக உயிர்கள் பசியால் வருந்தாத வகையில் உணவு வழங்கி உயர்வு பெறுவாயாக ! மணிமேகலை தீவதிலகை ஆதிரை
மணிமேகலை ( மணிமேகலை தீவதிலகையை வணங்கி அமுதசுரபியுடன் விடை பெறுகிறாள். பூம்புகாருக்குத் திரும்புகிறாள். ஆதிரையிடம் உணவு பெறச் செல்கிறாள். ) காட்சி - 2. ஆதிரை இடம் : ஆதிரையின் இல்லம் கதை மாந்தர்கள் : ஆதிரை , மணிமேகலை ( ஆதிரையின் வீட்டு வாயிலில் மணிமேகலை கையில் அமுதசுரபியுடன் வந்து நிற்கிறாள் ) இப்பொய்கைக்கு வேறு ஒரு சிறப்பும் உண்டு. வைகாசித் திங்கள் முழு நிலவு நாளில் இப்பொய்கை நீரின் மேல் ஓர் அரிய பாத்திரம் தோன்றும். அஃது ஆபுத்திரன் கையிலிருந்த ' அமுதசுரபி ' என்னும் பாத்திரம் ஆகும். : யார் நீங்கள் ? :
இவ்வூரில் வாழ்ந்த கோவலன் , மாதவி ஆகியோரின் மகள் நான். உங்களின் சிறப்பை அறிந்து இப்பாத்திரத்தில் உணவு பெற வந்தேன். ( மணிமேகலை : ஓ ! நீங்கள் தான் மணிமேகலையா ? உங்கள் பெற்றோரைப் பற்றி அறிவேன். உங்களை இன்றுதான் காண்கிறேன். இஃது என்ன பாத்திரம் ? மிகவும் அழகாக இருக்கிறதே ! : இஃது அள்ள அள்ளக் குறையாமல் உணவு வழங்கும் ' அமுதசுரபி ' ஆகும். : இப்பாத்திரம் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது ? மணிபல்லவத் தீவில் அமுதசுரபி பெற்ற வரலாற்றைக் கூறுகிறாள். ) : ( வியப்புடன் ) அப்படியா ! அமுதசுரபியின் சிறப்பை அறிந்தேன். அதில் இப்போதே
உணவு இடுகின்றேன். ஆமாம். இதைக் கொண்டு என்ன செய்வீர்கள் ? ஆதிரை இடம் கதை மாந்தர்கள் சிறைக்காவலர் மன்னர் ( ஆதிரை அமுதசுரபியில் உணவை இடுகிறாள். மணிமேகலை அமுதசுரபியைக் கொண்டு , உடல் குறையுற்றோர் , பிணியாளர் , ஆதரவு அற்றோர் ஆகியோருக்கு உணவு அளிக்கிறாள். பின்னர்ப் பூம்புகாரில் உள்ள சிறைச்சாலைக்குச் சென்று அங்கு உள்ளவர்களுக்கும் உணவிடுகிறாள் ) காட்சி – 3 மணிமேகலை மன்னர் : அன்பிற்குரிய ஏழை மக்களின் போக்குவதே மேலான அறம். உணவு கொடுத்தவர்களே உயிரைக் என்பதை மன்னர் ( மணிமேகலை மணிமேகலை கொடுத்தவர்கள் உணர்ந்துள்ளேன். அதனால்
, இந்தப் பாத்திரத்தில் இருக்கும் உணவைப் பசியால் வாடும் மக்களுக்கு எல்லாம் வழங்கப் போகின்றேன். : மிகவும் மகிழ்ச்சி. ரையே , பசியைப் உங்கள் அறம் செழிக்கட்டும். மக்களின் பசிநோய் ஒழியட்டும். இதோ ! இப்போதே அமுதசுரபியில் நான் உணவை இடுகிறேன். சிறைக் காவலர் : ஆகட்டும் மன்னா. ( சிறைக்காவலர்கள் மணிமேகலையை மன்னரிடம் அழைத்து வருகின்றனர் ) : ( மன்னரை வணங்கி ) அருள் உள்ளம் கொண்ட அரசே ! வணக்கம். : பெண்ணே ! நீ யார் ? உணவு அள்ள அள்ளக் குறையாத இப்பாத்திரத்தின் பெயர் என்ன ? இஃது உனக்கு எப்படிக் கிடைத்தது ? தனக்கு அமுதசுரபி
கிடைத்த வரலாற்றைக் கூறுகிறாள் ) ( மிக்க மகிழ்ச்சியுடன் ) மாதவம் செய்தவளே ! இந்த உலக மக்களின் பசிப்பிணி தீர்க்கும் பாங்குடைய அறத்தைச் செய்கிறாய். நான் உனக்குச் செய்ய வேண்டிய உதவி ஏதேனும் இருக்கிறதா ? அன்பால் ஆட்சி செய்யும் அரசே ! சிறைச்சாலையில் தண்டனை பெற்றுள்ளவர்கள் திருந்தி வாழ வழிகாண வேண்டும். சிறைக் கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும். அரண்மனை : சிறைக்காவலர் , மன்னர் , மணிமேகலை. : வேந்தே ! வணக்கம். இன்று காலை நம் சிறைச்சாலைக்கு இளம்பெண் ஒருத்தி வந்தாள். அவள் கையில் ஒரு சிறிய பாத்திரம் இருந்தது. அந்தச் சிறிய
பாத்திரத்திலிருந்து உணவை அள்ளி அள்ளிச் சிறையில் இருந்த அனைவருக்கும் வழங்கினாள். ஆனால் , அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவு குறையவே இல்லை. : : ( வியப்புடன் ) என்ன ! ஒரு சிறிய பாத்திரத்திலிருந்து உணவை எடுத்து அத்தனை பேருக்கும் வழங்கினாளா ? அப்பெண்ணை உடனே அழைத்து வா. மன்னர் மணிமேகலை மன்னர் : அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் ? : வாழ்க்கைக்கு அறம் சொன்ன வள்ளுவர் வாழ்ந்த நாடு இது. புத்தர் பிறந்து அறம் போதித்த பூமி இது. எவை நன்மைகள் எவை தீமைகள் என்பவற்றை எல்லாம் தக்க அறிஞர்களைக் கொண்டு சிறையில் உள்ளவர்களுக்கு
எடுத்துக் கூறவேண்டும். மேலும் அவர்களுக்குப் பெற்றோரை மதித்தல் , முதியோரைப் பேணல் , உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வியை அளிக்க வேண்டும். இதுவே என் வேண்டுகோள் மன்னா ! நல்லறம் புரியும் நங்கையே ! உன் வேண்டுகோள் அனைத்தையும் நடைமுறைப்படுத்த ஆணை இடுகிறேன். நீ வாழ்க ! உன் அறம் வளர்க ! மணிமேகலை 1 நன்றி மன்னா ! ( வணங்கி விடைபெறுகிறாள் ). கற்பவை கற்றபின் 1. பசிப்பிணி போக்கிய பாவை நாடகத்தை வகுப்பில் நடித்துக் காட்டுக. 2. பசிப்பிணி போக்கிய பாவை என்னும் நாடகத்தைக் கதை வடிவில் சுருக்கி எழுதுக.
மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு அ ) இலங்கைத் தீவு ஆ ) இலட்சத் தீவு இ ) மணிபல்லவத் தீவு 2. மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் அ ) சித்திரை ஆதிரை இ ) காயசண்டிகை சொற்றொடரில் அமைத்து எழுதுக. 1. அமுதசுரபியின் சிறப்பு யாது ? 2. ' கோமுகி " என்பதன் பொருள் யாது ? 6th Std Tamil COSE Pagas 77-206.inidd 173 அ ) செடிகொடிகள் ஆ ) முழுநிலவு நாள் இ ) அமுதசுரபி ஈ ) நல்லறம் குறுவினா சிறுவினா 1. மணிபல்லவத்தீவு எவ்வாறு காட்சி அளித்தது ? 2.
மணிமேகலை மன்னரிடம் வேண்டியது யாது ? சிந்தனை வினா அறச்செயல்கள் என்று நீங்கள் எவற்றை எல்லாம் கருதுகிறீர்கள் ? கதை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். கதையை விரும்பாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அதிலும் நம்ப முடியாத கற்பனைகளைக் கொண்ட விந்தைக் கதைகள் அனைவரையும் கவரும். கதையில் சிறந்த கருத்தும் கூறப்படுமானால் அது சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல மேலும் சுவையாக இருக்கும். அத்தகைய என்றைக்கும்போல் தியேட்டர் வாசலில் உட்கார்ந்திருந்தார் காலணி தைக்கும் மாரி. காலையிலே தொடங்கிய மழை இடைவிடாது தனது அரூப விரல்களால்
நகரமெங்கும் எதையோ தேடுவதுபோல் படர்ந்து கொண்டிருந்தது. எவரேனும் காலணி தைக்க வரக்கூடுமோ எனப் பசியுடன் காத்திருந்தார். ஒரு டீ குடித்தால் கூடப் பசி அடங்கிவிடும். அதற்கும் ஒரு ரூபாய் வேண்டி இருக்கிறதே என்ற யோசனை தோன்றியது. வலுத்துப் பெய்யத் துவங்கியது மழை. காற்றூம் மழையோடு சேர்ந்து கொண்டது. அந்த நீண்ட தெருவில் எவருமில்லை. அவரும் ஒரு மரமும் எட்டுப் பழைய செருப்புகளும் தவிர. சினிமா தியேட்டரின் குறுகிய வலப்புறச் சந்தில் இருந்து குடையில்லாமல் நனைந்தபடி வெளிப்பட்ட சிறுமியொருத்தி ஒரு மீனைப் போலச் சுழன்று அவர் அருகில்
வந்து தனது இடக்கையில் வைத்திருந்த காலணி ஒன்றைக் குனிந்து தரையிலிட்டு , தைத்து வைக்கும்படி சொல்லிவிட்டு அவர் நிமிர்ந்து அவளைப் பார்க்கும் முன்பு தெருவில் ஓடி அடுத்த வளைவின் சுவர்களைக் கடந்து சென்றாள். அந்தக் காலணி இளம் சிவப்பு நிறத்தில் இருந்தது. வழக்கமான சிறுமிகளின் காலணிபோல அல்லாது வெல்வெட் தைத்துப் பூவேலை கொண்ட காலணியாக இருந்தது. அந்தக் காலணியில் சிறுமியின் பாதவாசனை படிந்திருந்தது. அது ஏதோ ஒரு பெயரிடப்படாத நறுமணம். கிழிசலைத் தைத்து வைத்துக் கொண்டு காத்திருந்தார். இப்போதே குடிக்கப் போகும் டீயின் ருசி
நாக்கில் துளிர் விட்டது. ற்றும்ழையும் தீவிரமாகிச் சுழன்றன பின் மதியம் அஃது ஓய்ந்த போது ஒளித் திவலைகள் ஆங்காங்கே தெரியத் துவங்கின. அந்தச் சிறுமிக்காகக் காத்திருந்தார் மாரி. நிச்சயம் இரண்டு ரூபாய் கிடைக்கும். மாலைவரை அந்தச் சிறுமி வரவில்லை. ஆனால் மீண்டும் மழை வந்துவிட்டது. பின்பு இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா வரை மரத்தடியில் காத்துக் கொண்டிருந்தார். அவள் வரவில்லை. மழைக்குப் பயந்து வீட்டிலேயே இருக்கக் கூடும் என நினைத்துக்கொண்டு காலணியைத் தன்னுடன் எடுத்துக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தார். அடுத்த நாள் காலை
மழையில்லை. நல்லவெயில் அந்தக் காலணியைத் தினமும் கொண்டுவந்து காத்துக்கிடந்தார். இளம் சிவப்பான அந்தக் காலணியை எடுத்து மீண்டும் ஒருமுறை நன்றாகத் துடைத்து , தனது நீலநிற விரிப்பில் வைத்துவிட்டு மற்ற வேலைகளில் ஈடுபடத் துவங்கினார். அன்றும் அந்தச் சிறுமி வரவேயில்லை. மறந்துவிட்டாளா ? இல்லை , யாரிடம் கொடுத்தோம் எனத் தெரியாமல் அலைகிறாளா தெரியவில்லையே ! என்றபடி இரவில் அதை வீட்டிற்கு எடுத்துப்போனார். மறுநாள் , மூன்றாம் நாள் என நாட்கள் கடந்தபோதும் அவள் வரவேயில்லை. ஆனால் அவர் ஓர் இரவில் மாரியின் மனைவி அந்தக் காலணியைக்
கண்டாள். அதன் வசீகரம் தொற்றிக்கொள்ளக் கையில் எடுத்துப் பார்த்தாள். சிறுமியின் காலணி போலிருந்தது. அதைப் போட்டுப் பார்க்க ஆசையாக இருந்தது. தனது வலது காலில் அந்தக் காலணியை நுழைத்துப் பார்த்தாள். அது அவளுக்குச் சரியாக இருந்தது. சிறுமியின் காலணி அவளுக்குப் பொருந்துகிறதே என்றவள் மற்றொரு காலணியைத் தேடிப் பையைக் கொட்டினாள். சப்தம்கேட்டு மாரி கோபமாக உள்ளே வந்தபோது , மனைவியின் வலக்காலில் இருந்த சிவப்புக் காலணியைக் கண்டார். ஆதீதிரத்துடன் திட்டி , அவள் சொல்வதைக் கேட்காமல் கழற்றச் சொல்லிக் கிழிந்துவிட்டதா எனப் பார்க்கக்
கையில் எடுத்து உயர்த்தினார். கிழியவில்லை. சிறுமியின் காலணி இவளுக்குத் தைத்தது போலச் சரியாக இருக்கிறதே என்ற வியப்புடன் அது ஒற்றைக் காலணி எனப் பிடுங்கிப் பையில் போட்டுக் கட்ட முயன்றார். அவள் முணுமுணுத்தபடி பின் வாசலுக்குப் போய்விட்டாள். காலணி அவருக்குள்ளும் ஆசையைத் தூண்டியது , போட்டுப் பார்க்கலாமென. தன் வலக்காலைச் சிறிய காலணியில் நுழைத்தபோது அது தனக்கும் சரியாகப் பொருந்துவதைக் காண வீடுத்திரளயிகுந்தது இரண்டு வேறுபட்ட அளவுள்ள கால்களுக்கு எப்படி ஒரே காலணி பொருந்துகிறது. அவரால் யோசிக்க முடியவில்லை. எப்படியோ
உரியவரிடம் அதை ஒப்படைத்துவிட வேண்டியது தனது வேலை என்றபடி பையில் போட்டுக் கொண்டார். I மறுநாள் பகலில் உடன் தொழில் செய்யும் நபரிடம் இந்தக் காலணியின் விசித்திரம் பற்றிச் சொல்ல அவர் தன் வலக் காலைப் பொருத்திப் பார்த்தார். அவருக்கும் சரியாக இருந்தது. இச்செய்தி நகரில் பரவியது. அந்தக் காலணியைப் போட்டுப் பார்க்க ஆசை கொண்ட பலர் தினமும் வந்து அணிந்து தமக்கும் சரியாக உள்ளதைக் கண்டு அதிசயித்துப் போயினர். அந்தக் காலணி ஒருவயது குழந்தை முதல் வயசாளி வரை எல்லோருக்கும் பொருந்துவதாக இருந்தது. அதைக் காலில் அணிந்தவுடன்
மேகத்துணுக்குகள் காலடியில் பரவுவதுபோலவும் , பனியின்மிருது படர்வதுபோலவும் இருப்பதாகப் பலர் கூறினர். அவர் , வராது போன , காலணிக்கு உரிய சிறுமியை நினைத்துக் கொண்டார். கோடைக்காலம் பிறந்திருந்தது. எண்ணற்ற சிறுமிகளும் பெண்களும் ஆண்களும் அந்த விந்தைக் காலணியை அணிந்து பார்த்துப் போயினர். அதை அணிந்து பார்க்க அவர்களே பணம் தரவும் தொடங்கினர். தினசரியாகப் பணம் பெருகிக் கொண்டே போனது. வருடங்கள் புரண்டன. அவர் பசு இரண்டு வாங்கினார். வீடு கட்டிக் கொண்டார். வாழ்வின் நிலை உயர்ந்து கொண்டே போனது. இப்போதும் அந்தச் சிறுமி வரக்கூடும்
என்று பலர் முகத்தின் ஊடேயும் அவளைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் வருவதற்கு முன்பாகவே காலையில் பலர் மரத்தடியில் அவருக்காகக் காத்து நிற்பார்கள். அணிந்து பார்ப்பார்கள். சூத்தில் சம்தேனும் பீறிடும். கலைந்து போவார்கள். இப்படியாக மாரியின் முப்பது வருடம் கடந்தது. அந்த வருடம் மழைக்காலம் உரத்துப் பெய்தது. ஓர் இரவில் காலணியோடு வீடு திரும்பும்போது அதைத் திருட முனைந்த இருவர் தடியால் தாக்க , பலமிழந்து கத்தி வீழ்ந்தார். யாரோ அவரைக் காப்பாற்றினார்கள். காலணி திருடு போகவில்லை. ஆனால் , தலையில் பட்ட அடி அவரைப்
பலவீனமடையச்செய்தது. வீட்டைவிட்டு வெளியேறி நடக்க முடியாதவராகிப் போனார். அந்தச் சிறுமிக்காக அவர் மனம் காத்துக் கொண்டே இருந்தது. தனது மரணத்தின் முன்பு ஒரு தரம் அவளைச் சந்திக்க முடியாதோ என்ற ஏக்கம் பற்றிக் கொண்டது. தான் அவளால் உயர்வு அடைந்ததற்கான கடனைச் சுமந்தபடி மரிக்க வேண்டும் என்பது வேதனை தருவதாக இருந்தது. பார்வையாளர்கள் அவர் வீடு தேடி வந்து அணிந்து பார்த்துப் போயினர். ஒரு மழை இரவில் பார்வையாளர் யாவரும் வந்து போய் முடிந்த பின்பு கதவை மூடி மாரி உள்ளே திரும்பும் போது யாரோ கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. கதவைத்
திறந்த படி , " காலையில் வாருங்கள் " எனச் சொன்னார். மத்திய வயதில் ஒரு பெண் நனைந்தபடி நின்றிருந்தாள். அவள் தணிவான குரலில் சொன்னாள் , " வெகு தாமதமாகிவிட்டது எனது காலணியைத் தைத்துவிட்டீர்களா இல்லையா ? " அவளை அடையாளம் கண்டுவிட்டார் மாரி. அதே சிறுமி. அந்தப் பெண் தன் கையிலிருந்த கூடையிலிருந்து சிவப்புநிற இடக்கால் காலணியை எடுத்து அவர் முன்னே காட்டிச் சொன்னாள். " இதன் வலது காலணி தைக்கக் கொடுத்தது நினைவிருக்கிறதா ? " அவர் தலையாட்டியபடி தன்னிடமிருந்த காலணியை எடுத்து வந்து துடைத்து அவளிடம் காட்டினார். அவள் கைகளில்
தந்தபடி அதன் விந்தையை எடுத்துச் சொன்னார். " இந்தக் காலணி உலகின் எல்லாப் பாதங்களுக்கும் பொருந்துகிறது. " I அவள் ஆச்சரியமின்றித் தலையாட்டினாள். தன்னிடம் இருந்த நாணயம் எதையோ அவரிடம் கூலியாகக் கொடுத்துவிட்டுக் கூடையில் அந்தக் காலணியைப் போட்டாள். இந்தச் சொத்து , வாழ்வு யாவும் அவள் தந்ததுதான். அவள் யார் என அறிய ஆவலாகிக் கேட்டார். பதிலற்றுச் சிரித்தபடி மீண்டும் மழையில் வெளியேறிச் சென்றுவிட்டாள். தெருவின் விளக்குக் கம்பம் அருகே வந்து நின்ற அவள் கூடையில் இருந்த இரண்டு காலணிகளையும் எடுத்துத் தரையிலிட்டு காலில் அணிய
முயன்றாள். அவள் கொண்டு வந்த இடது காலணி சரியாகப் பொருந்தியது. தைத்து வாங்கின வலது பாதக் காலணியை அணிந்த போது அது பொருந்தவில்லை. சிறியதாக இருந்தது. நூல் வெளி எஸ்.ராமகிருஷ்ணன் தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். நாவல்கள் , சிறுகதைகள் , கட்டுரைத் தொகுப்புகள் , சிறுவர் இலக்கியங்கள் என இவருடைய படைப்புகள் நீள்கின்றன. உபபாண்டவம் , கதாவிலாசம் , தேசாந்திரி , கால் முளைத்த கதைகள் முதலிய ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இக்கதை தாவரங்களின் உரையாடல் என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. கற்பவை கற்றபின்
1. தனக்குப் பெரும் வருமானத்தைத் தந்த காலணியைத் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென மாரி நினைத்தது ஏன் ? வகுப்பில் கலந்துரையாடுக. 2. மீண்டும் வந்த பெண்ணுக்குக் காலணி பொருந்தாதது ஏன் ? 3. மாரிக்குக் கிடைத்தது போன்ற காலணி உங்களுக்குக் கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் ? வகுப்பில் உரையாடுக. 4. பாதம் என்னும் கதையின் மூலம் நீங்கள் அறிந்து கொண்ட கருத்து யாது ? மதிப்பீடு ' பாதம் ' கதையைச் சுருக்கி எழுதுக. 1. பொருட்பெயர் 2. இடப்பெயர் மரம் , பள்ளிக்கூடம் , சித்திரை , கிளை , இனிப்பு , பாடுதல் ஆகிய சொற்களைக் கவனியுங்கள். இவை
அனைத்தும் பெயரைக் குறிக்கின்றன. இவ்வாறு ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவையாவன 3. காலப்பெயர் 4. சினைப்பெயர் 5. பண்புப்பெயர் 6. தொழிற்பெயர் பொருட்பெயர் கற்கண்டு பெயர்ச்சொல் பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் எனப்படும். இஃது உயிருள்ள பொருள்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும். ( எ.கா. ) மரம் , செடி , மயில் , பறவை , புத்தகம் , நூற்காலி. இடப்பெயர் ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர் இடப்பெயர் எனப்படும். ( எ.கா. ) சென்னை , பள்ளி , பூங்கா , தெரு.
காலப்பெயர் காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும். ( எ.கா. ) நிமிடம் , நாள் , வாரம் , சித்திரை , ஆண்டு. சினைப்பெயர் பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர் எனப்படும். ( எ.கா. ) கண் , கை , இலை , கிளை. பண்புப்பெயர் பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் பண்புப்பெயர் எனப்படும். ( எ.கா. ) வட்டம் , சதுரம் , செம்மை , நன்மை. தொழிற்பெயர் அறுவகைப் பெயர்ச்சொற்களுக்கான சான்றுகளைத் தொடரில் அமைத்து எழுதுவோம். காவியா புத்தகம் படித்தாள் காவியா பள்ளிக்குச் சென்றாள் காவியா மாலையில் விளையாடினாள் காவியா தலை
அசைத்தாள் காவியா இனிமையாகப் பேசுவாள் காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும் இடுகுறிப்பெயர் , காரணப்பெயர் நம் முன்னோர் பெயர்ச்சொற்களை அவை வழங்கும் அடிப்படையில் இடுகுறிப்பெயர் , காரணப்பெயர் என இருவகைப்படுத்தினர். இடுகுறிப்பெயர் நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப்பெயர்கள் ஆகும். ( எ.கா. ) மண் , மரம் , காற்று இடுகுறிப் பொதுப்பெயர் , இடுகுறிச் சிறப்புப்பெயர் என இடுகுறிப்பெயர் இரண்டு வகைப்படும். பொருட்பெயர் -இடப்பெயர் - காலப்பெயர் -
சினைப்பெயர் - பண்புப்பெயர் தொழிற்பெயர் இடுகுறிப் பொதுப்பெயர் ஓர் இடுகுறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பது இடுகுறிப் பொதுப்பெயர் எனப்படும். ( எ.கா. ) மரம் , காடு. இடுகுறிச் சிறப்புப்பெயர் ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது இடுகுறிச் சிறப்புப்பெயர் எனப்படும். ( எ.கா. ) மா , கருவேலங்காடு. காரணப்பெயர் நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதிப் பெயரிட்டனர். இவ்வாறு காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயர் எனப்படும். ( எ.கா. ) நற்காலி ,
கரும்பலகை காரணப் பொதுப்பெயர் , காரணச் சிறப்புப்பெயர் எனக் காரணப் பெயர் இரு வகைப்படும். காரணப் பொதுப்பெயர் காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தால் அது , காரணப்பொதுப்பெயர் எனப்படும். ( எ.கா. ) பறவை , அணி குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது காரணச்சிறப்புப்பெயர் ஆகும். ( எ.கா. ) வளையல் , மரங்கொத்தி கற்பவை கற்றபின் கீழ்க்காணும் பத்தியைப் படித்து அதில் இடம் பெற்றுள்ள இடுகுறி , காரணப் பெயர்களை அறிந்து எழுதுக. நீர் வற்றிப்போன குளத்தில்
செந்தாமரை , ஆம்பல் , கொட்டி , நெய்தல் முதலான கொடிகளும் வாடியிருந்தன. நீர் நிரம்பி இருந்தவரை ஊர் மக்களும் , விலங்குகளும் | மரங்கொத்திபோன்ற பறவைகளும் பயன்படுத்தி மகிழ்ந்த குளம் அது. காலை நேரம் சூரியன் காய்ந்து கொண்டிருந்தது. இப்போது அக்குளத்தைக் கண்டுகொள்வார் யாருமில்லை. மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. இடுகுறிப்பெயரை வட்டமிடுக. அ ) பறவை ஆ ) மண் உங்கள் பகுதிகளில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் குறித்துப் பேசுக. படித்து மகிழ்க அன்பினில் இன்பம் காண்போம் ; அறத்தினில் நேர்மை காண்போம் ; துன்புறும்
உயிர்கள் கண்டால் ; துரிசறு கனிவு காண்போம் ; வன்புகழ் கொடையிற் காண்போம் ; வலிமையைப் போரில் காண்போம் ; தன்பிறப் புரிமை யாகத் தமிழ்மொழி போற்றக் காண்போம். - அ.முத்தரையனார் , மலேசியக் கவிஞர். குறிப்புகளைக் கொண்டு கதை எழுதுக. நாய்க்குட்டி குழிக்குள் கத்தும் சத்தம் முகிலன் முதலுதவி பால் தூங்கியது - வாலாட்டியது. அகராதியைப் பயன்படுத்தி பொருள் எழுதுக. 1. கருணை 2. அச்சம் 3. ஆசை கீழ்க்காணும் பெயர்ச் சொற்களை அகரவரிசையில் எழுதுக. பூனை , தையல் , தேனீ , ஓணான் , மான் , வௌவால் , கிளி , மாணவன் , மனிதன் , ஆசிரியர் , பழம்
பின்வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்கள் எவ்வகைப் பெயர்கள் என எழுதுக. 1. கைகள் இரண்டும் பிறர்க்கு உதவவே எனச் சான்றோர் கருதினர். - 2. அறம் , பொருள் , இன்பம் , வீடு அடைதல் நூலின் பயனாகும். 3. குழந்தை தெருவில் விளையாடியது. 4. நீதிநூல் பயில் என்கிறார் பாரதியார். 5. மாலை முழுதும் விளையாட்டு. 6. அன்பு நிறைய உடையவர்கள் மேலோர். I பின்வரும் தொடர்களில் உள்ள பெயர்ச்சொற்கள் எவ்வகைப் பெயர்கள் என எழுதுக. விடியலில் துயில் எழுந்தேன் இறைவனைக் கை தொழுதேன் நான் மதுரைக்குச் சென்றேன் புத்தகம் வாங்கி வந்தேன் கற்றலைத் தொடர்வோம்
இனி நன்மைகள் பெருகும் நனி கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக. அறம் செய விரும்பு கட்டங்களில் உள்ள வார்த்தைகளைக் கொண்டு தொடர்களை அமைக்க. தீதும் யாவரும் வாய்மையே வெல்லும் வாரா யாதும் ஊரே சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துங்கள் 1. சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள். 2. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள். 2. மனம் மணம் 3. சிறைச் சாலைக்குச் சென்று உணவிட்டாள். அமுதசுரபியைப் பெற்றாள். 5. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள். ஒலி வேறுபாடறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக. 1. அரம்
அறம் இருபொருள் தருக. ( எ.கா. ) ஆறு ஆறு 1. திங்கள் I புதிர்ச் சொல் கண்டுபிடி 1. இச்சொல் மூன்றெழுத்துச் சொல். உயிர் எழுத்துகள் வரிசையில் முதல் எழுத்து இச்சொல்லின் முதல் எழுத்து. வல்லின மெய் எழுத்துகளின் வரிசையில் கடைசி எழுத்து இச்சொல்லின் இரண்டாம் எழுத்து. வாசனை என்னும் பொருள்தரும் வேறு சொல்லின் கடைசி எழுத்து இச்சொல்லின் மூன்றாம் எழுத்து. அஃது என்ன ? கட்டத்தில் உள்ள சொற்களைக் கொண்டு தொடர்கள் உருவாக்குக. மாலையில் பிறருக்கு உதவி பெரியோரை நூல் பல உடற்பயிற்சி அதிகாலையில் செயல்திட்டம் 1. நீங்கள் சேவை செய்ய
விரும்பும் பணிகளைப் பட்டியலிடுக. 2. உயர்ந்த குறிக்கோளை அடைந்து வெற்றி பெற்ற சாதனையாளர்கள் தொகுப்பு ஒன்றைத் தயாரிக்க. கலைச்சொல் அறிவோம் என் பொறுப்புகள் 1. உணவை வீணாக்க மாட்டேன். 2. நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன். 3. பயணம் செய்யும் போது தேவைப்படுவோருக்கு எழுந்து இடம் தருவேன். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவேன். வாழ்வியல் திருக்குறள் அறன் வலியுறுத்தல் 1. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. * உள்ளத்தில் குற்றம் இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும். மற்றவை எல்லாம் வெறும் ஆரவாரமே. 2. அழுக்காறு
அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். பொறாமை , பேராசை , சினம் , கடுஞ்சொல் பேசுதல் ஆகிய நான்கும் இல்லாமல் வாழ்வதே அறம் ஆகும். ஈகை 3. வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து. இல்லாதவர்க்குத் தருவதே ஈகை ஆகும். மற்றவை எல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்பவை ஆகும். இல்லாதவர்க்குத் தருவதால் உண்டாகும் இன்பத்தை அறியாதவர்கள் பொருளைச் சேர்த்து வைத்துப் பின் அதனை இழந்து விடுவார்கள். இன்னா செய்யாமை 5. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். * நமக்குத் துன்பம்
செய்தவர் நாணும்படி அவருக்கு நன்மை செய்வதுதான் அவரைத் தண்டிக்கும் வழியாகும். 6. அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை. பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் கருதாவிட்டால் தாம் பெற்றுள்ள அறிவால் எந்தப் பயனும் இல்லை. 7. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை. I கொல்லாமை 8. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. * தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்ற வேண்டும். அதுவே அறநூல்களில் கூறப்படும் அறங்களுள்
சிறந்தது. பெரியாரைப் பிழையாமை 9. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை ஆற்றல் உடையவர்களை இகழக் கூடாது. அதுவே தம்மைத் தீங்கிலிருந்து காத்துக்கொள்ளும் வழிகளுள் சிறந்த வழியாகும். 10. எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ஏழைகளுக்கு உதவி செய்வதே அ ) பகை பிற உயிர்களின் அ ) மகிழ்வை உள்ளத்தில் அ ) மகிழ்ச்சி இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக. வறியார்க்கு ஒன்று ஈகைமற்று ஈவதே எல்லாம் குறியெதிர்ப்பை உடைத்து நீரது. 2. பெரியார்ப்
பிழைத்தொழுகு வார். தீயினால் சுடப்பட்டவர்கூடப் பிழைத்துக்கொள்ள முடியும். ஆனால் பெரியவர்களுக்குத் தீங்கு செய்தவர் தப்ப முடியாது. 3. ஆகும். ஆ ) ஈகை இ ) வறுமை.... க் கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும். ஆ ) செல்வத்தை இ ) துன்பத்தை இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும். ஆ ) மன்னிப்பு இ ) துணிவு எனைத்தானும் யார்க்கும் எஞ்ஞான்றும் மனத்தானாம் மாணாசெய் தலை யாமை. குறுவினா 1. அறிவின் பயன் யாது ? 2. பிற உயிர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் ? 3. ஈகை பற்றிய வள்ளுவரின் கருத்து யாது ? www.tnpscjob.com ஈ ) கொடுமை ஈ ) பகையை ஈ )
குற்றம் 2/15/2023 10:51:17 AM I பின்வரும் நிகழ்வைப் படித்து அதற்குப் பொருத்தமான திருக்குறள் எதுவெனக் காண்க. நிறைமதி அவளுடைய தோழிகளுடன் பூங்காவிற்குச் சென்றாள். அங்குள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தாள். நண்பகல் நேரத்தில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தான் கொண்டு வந்திருந்த உணவைத் தோழிகளுடன் பகிர்ந்து உண்டாள். அவர்களின் அருகே பறவைகள் பறந்து வந்தன. தன்னிடம் இருந்த உணவைப் பறவைகளுக்கும் அளித்தாள். 1. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. 2. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய்
யாமை தலை. 3. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. விளையாட்டின் வழி குறள் கற்போமா... படிகள் : ணையச் செயல்பாடுகள் செயல்பாட்டிற்கான உரலி கநல் அவைஹந்து. கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தித் திருக்குறள் என்னும் செயலியைப் பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்க. செயலியின் முதல் பக்கத்தில் ஆரம்பிக்க , தொடர்க , வகைப்பாட்டியல் போன்ற தெரிவுகள் தோன்றும். இதன் வழியே விரும்பும் திருக்குறளை அறிக. மேலும் குறள் விளையாட்டு என்பதைத் தெரிவு செய்து மாறி இருக்கும் சீர்களை
வரிசைப்படுத்தித் திருக்குறளை விளையாட்டின் மூலம் அறிக. கொடுக்கப்பட்டுள்ள படங்கள் அடையாளத்திற்காக மட்டுமே அதுடம்பு இயல் ஒன்பது கற்றல் நோக்கங்கள் இன்னுயிர் காப்போம் பிற உயிர்களைத் தம் உயிர் போல் மதித்தல் பிற உயிர்களுக்குத் துன்பம் தராமல் இருத்தல் உதவி செய்யும் பண்பைப் பெறுதல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அறிதல் இயல்பு நவிற்சி , உயர்வு நவிற்சி அணிகளை இனம் காணுதல் இயல் ஒன்பது நுழையும்முன் கவிதைப்பேழை இரக்கம் என்பது தலைசிறந்த பண்பு. மனிதரிடம் மட்டுமன்று , மற்ற எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொள்ள வேண்டும்.
பிற உயிர்களைத் தம்முயிர் போல் எண்ணிக் காக்க வேண்டும். அதுவே சான்றோர் போற்றும் உயிர் இரக்கம் ஆகும். அவ்விரக்கமே மனித குலத்தை வாழ வைக்கிறது. உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் புத்தர். அவரின் அறவுரையை அறிவோம் வாருங்கள். ஆசியஜோதி முன்கதைச் சுருக்கம் அரச வாழ்வைத் துறந்து நள்ளிரவில் அரண்மனையை விட்டு வந்தவர் புத்தர்பிரான். பிம்பிசார மன்னனின் யாகத்துக்காக ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன. அவற்றின் நடுவில் அடிபட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியைப் புத்தர் தம்
தோளில் சுமந்து சென்றார். யாகசாலையை அடைந்தார். மன்னனுக்கு அறவுரை கூறினார். நாடெங்கும் உயிர்க்கொலையைத் தடுத்து நிறுத்தினார். நின்றவர் கண்டு நடுங்கினாரே - ஐயன் நேரிலே நிற்கவும் அஞ்சினாரே ; துன்று கருணை நிறைந்த வள்ளல் அங்கு சொன்ன மொழிகளைக் கேளும் ஐயா ! வாழும் உயிரை வாங்கிவிடல் மண்ணில் எவர்க்கும் எளிதாகும் ; வீழும் உடலை எழுப்புதலோ ஒரு வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா ! யாரும் விரும்புவது இன்னுயிராம் ; – அவர் என்றுமே காப்பதும் அன்னதேயாம் ; பாரில் எறும்பும் உயிர்பிழைக்கப் - படும் பாடு முழுதும் அறிந்திலீரோ ? காட்டும்
கருணை உடையவரே - என்றும் கண்ணிய வாழ்வை உடையவராம் ; வாட்டும் உலகில் வருந்திடுவார்– இந்த மர்மம் அறியாத மூடரையா ! காடு மலையெலாம் மேய்ந்துவந்து - ஆடுதன் கன்று வருந்திடப் பாலையெல்லாம் தேடிஉம் மக்களை ஊட்டுவதும் - ஒரு தீய செயலென எண்ணினீரோ ? அம்புவி மீதில்இவ் ஆடுகளும் உம்மை அண்டிப் பிழைக்கும் உயிரலவோ ? நம்பி இருப்பவர் கும்பி எரிந்திடில் நன்மை உமக்கு வருமோ ஐயா ? ஆயிரம் பாவங்கள் செய்தவெல்லாம் - ஏழை ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ ? தீயவும் நல்லவும் செய்தவரை - விட்டுச் செல்வது ஒருநாளும் இல்லைஐயா ! ஆதலால் தீவினை செய்யவேண்டா -
ஏழை ஆட்டின் உயிரையும் வாங்கவேண்டா ; பூதலந் தன்னை நரகம்அது ஆக்கிடும் புத்தியை விட்டுப் பிழையும் ஐயா ! சொல்லும் பொருளும் அஞ்சினர் கருணை வீழும் ஆகாது நீள்நிலம் கவிமணி தேசிக விநாயகனார் பயந்தனர் இரக்கம் விழும் பாடலின் பொருள் யாகசாலையில் நின்றவர் அனைவரும் புத்தர்பிரானைக் கண்டு நடுங்கினர். அவர் முன்னால் நிற்கவும் அஞ்சினர். கூடி இருந்த மக்களின் முன்னால் இரக்கமே உருவான புத்தர்பிரான் கூறிய உரையைக் கேளுங்கள். வாழ்கின்ற உயிர்களை அழிப்பது இந்த உலகத்தில் எல்லார்க்கும் எளிய செயல். ஆனால் , இறந்த உடலுக்கு உயிர் கொடுத்து
எழுப்புவது மன்னனாலும் முடியாத செயல். எல்லாரும் தம் உயிரைப் பெரிதாக மதித்துப் பாதுகாக்கின்றனர். எறும்பு கூடத் தன் உயிரைக் காத்துக் கொள்ளப் பாடுபடுவதை அறியாதவர் உண்டோ ? நேர்மையான இரக்க மனம் கொண்டிருப்பவரால் மட்டுமே பரந்த இவ்வுலகம் முழுமையையும் ஆட்சி செய்ய முடியும். உலகில் மழை பெய்வதால் வயல் பக்குவம் அடைவதை அறியாதவர் உண்டோ ? எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்பவரே நேர்மையான வாழ்வு வாழ்பவர். இந்த மறைபொருளை அறியாதவர் பிற உயிர்களை வருத்தித் தாமும் துன்புறுவர். காடுமலை எல்லாம் மேய்ந்து வருகிறது ஆடு. அது தன் குட்டி
வருந்திடும் வகையில் பாலை எல்லாம் மக்களுக்குத் தருகிறது. இதனைத் தீயசெயல் என்று நீங்கள் கருதுகிறீர்களா ? இந்த உலகில் ஆடுகளும் உங்களை நம்பி இருக்கும் உயிர்கள் அன்றோ ? நம்மை நம்பி இருப்பவரின் வயிறு எரியும்வகையில் நடந்து கொள்வதால் உங்களுக்கு நன்மை கிடைக்குமா ? ஆயிரம் பாவங்கள் செய்துவிட்டு , ஆட்டின் உயிரை எடுப்பதால் பாவங்கள் நீங்கி விடுமா ? ஒருவர் செய்த நன்மையும் தீமையும் ஒருநாளும் அவரை விட்டுச் செல்லாது. ஆகையால் , தீய செயல்களைச் செய்யாதீர்கள். பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள். இந்தப் பூமியை
மகிழ்ச்சியற்றதாக மாற்றிடும் எண்ணத்தை உங்களைவிட்டு நீக்குங்கள். இங்கு மக்களோடு சேர்ந்து மற்ற உயிர்களும் மகிழ்வோடு வாழ வழி செய்யுங்கள். நூல் வெளி தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிமணி என்னும் பட்டம் பெற்றவர். ஆசிய ஜோதி , ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா ( Light of Asia ) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது. கற்பவை கற்றபின் 1. நீங்கள் மிகவும் விரும்பும் தாவரங்கள் ,
பறவைகள் , விலங்குகளின் பெயர்களைப் பட்டியலிடுக. 2. உங்களைப்போல் பிறரையும் நேசியுங்கள் - என்னும் தலைப்பில் பேசுக. மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் அ ) ஜீவ ஜோதி ஆ ) ஆசிய ஜோதி இ ) நவ ஜோதி ஈ ) ஜீவன் ஜோதி 2. நேர்மையான வாழ்வை வாழ்பவர் அ ) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர் ஆ ) உயிர்களைத் துன்புறுத்துபவர் இ ) தம்மை மட்டும் காத்துக்கொள்பவர் ஈ ) தம் குடும்பத்தையே எண்ணி வாழ்பவர் 3. ஒருவர் செய்யக் கூடாதது. அ ) நல்வினை ஆ ) தீவினை இ ) பிறவினை ஈ ) தன்வினை 4. '
எளிதாகும் ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ ) எளிது + தாகும் ஆ ) எளி + தாகும் இ ) எளிது + ஆகும் ஈ ) எளிதா + ஆகும் 5. ' பாலையெல்லாம் ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. அ ) பாலை + யெல்லாம் ஆ ) பாலை + எல்லாம் இ ) பாலை + எலாம் ஈ ) பா + எல்லாம் 6.இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ ) இன்உயிர் ஆ ) இனியஉயிர் இ ) இன்னுயிர் 7. மலை + எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ஆ ) மலையெலாம் அ ) மலைஎலாம் குறுவினா 1. அரசனாலும் செய்ய முடியாத செயல் எது ? 2. எறும்பு
எதற்காகப் பாடுபடுகிறது ? 3. ஒருநாளும் விட்டுச் செல்லாதது எது ? உலகம் முழுமையையும் எப்போது ஆளமுடியும் ? வேண்டும் ? சிறுவினா எல்லா உயிர்களும் மகிழ்வோடு வாழப் புத்தர்பிரான் கூறும் அறிவுரைகள் யாவை ? சிந்தனை வினா பறவைகளும் , விலங்குகளும் சுதந்திரமாக வாழ வேண்டும் எனில் நீங்கள் என்ன செய்ய இயல் ஒன்பது நுழையும்முன் உரைநடை உலகம் இல்லாதவர்க்குக் கொடுத்து மகிழ்வதே ஈகை. பசி என்று வந்தவர்க்கு வயிறார உணவிட வேண்டும். தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்ய வேண்டும். ஆதரவு இல்லாதவர்களை அன்புடன் அரவணைக்க வேண்டும். பிறர் துன்பத்தைத்
தமது துன்பமாக நினைத்து வருந்தும் பண்பினைக் கொள்ள வேண்டும். இப்பண்புகளைக் கொண்டு வாழ்வோர் உயர்வு அடைவர். அப்படி வாழ்ந்தோரின் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளைக் காண்போம் வாருங்கள். மனிதநேயம் உலகில் எந்த ஆறும் தனது தாகத்திற்காக ஓடுவதில்லை. எந்த நிலமும் தன் பசிக்காக விளைவதில்லை. எந்த மரமும் தனக்காகக் கனிகளை உருவாக்குவதில்லை. இவற்றைப் போல மனிதனும் தனக்கென வாழாமல் , பிறர்க்கென வாழ வேண்டும். அவ்வாறு வாழ்வதற்குக் அருள் , பொறுமை , பரிவு , நன்றி உணர்வு , இன்சொல் பேசுதல் போன்றவை தேவை. எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துதல்
வேண்டும். அதுவே மனிதநேயம் ஆகும். மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையை , தமக்கென முயலா நோன்றாள் - பிறர்க்கென முயலுநர் உண்மையானே ( புறம் – 182 ) என்னும் புறநானூற்று அடிகள் உணர்த்துகின்றன. வள்ளலார் வள்ளலார் வாழ்வில் நடந்ததாக ஒரு நிகழ்வைப் பலரும் கூறுவதுண்டு. வள்ளலார் தம் இளம் வயதில் ஒருநாள் நடந்து வந்து கொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்ததால் களைப்பு ஏற்பட்டது. எனவே ஓய்வெடுக்க விரும்பினார். வழியில் சத்திரம் ஒன்று இருந்தது. அதன் திண்ணையில் படுத்து உறங்கினார். அப்போது
ஒருவன் அங்கு வந்தான். படுத்திருந்த வள்ளலாரின் காதில் கடுக்கன் இருப்பதைக் கண்டான். அதனைத் தனதாக்கிக் கொள்ள முடிவெடுத்தான். தங்கக்கடுக்கனை மெதுவாகக் கழற்றினான். அவனது செயலை அறிந்தும் வள்ளலார் கண் மூடியபடியே படுத்திருந்தார். ஒரு கடுக்கனைக் கழற்றியவுடன் , மறுகாதில் உள்ள கடுக்கனை அவன் கழற்றுவதற்கு ஏதுவாகத் திரும்பிப் படுத்தார். அவன் அதையும் கழற்றிக் கொண்டு , அந்த இடத்தைவிட்டு அகன்று செல்ல முற்பட்டான். அப்போது வள்ளலார் மென்மையான குரலில் , " அப்பா , இவை இரண்டும் தங்கக்கடுக்கன்கள். குறைந்த விலைக்கு விற்றுவிடாதே !
மேலும் , ஒரு கடுக்கனுடன் சென்றால் உன்னைத் திருடன் என எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்கள். எனவேதான் இரண்டு கடுக்கன்களையும் நீ எடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பாகத் திரும்பிப் படுத்தேன் " என்றார். வள்ளலார் கூறியதைக் கேட்ட அவன் வெட்கித் தலைகுனிந்தான். இவ்வாறு தம்பொருளைக் கவர்ந்தவரிடம் அன்பு காட்டியவர் வள்ளலார். தெரிந்து தெளிவோம் வள்ளலார் மக்களின் " வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் ' பசிப்பிணியைக் கண்டு – வள்ளலார் உள்ளம் வாடினார். அதனை நீக்க விரும்பினார். தம் பெருமுயற்சியால் வடலூரில் சத்திய தருமச்சாலையைத்
தொடங்கி எல்லாருக்கும் உணவளித்தார். பசித்தோருக்கு உணவு வழங்கும் வள்ளலாரின் மனிதநேயச் செயல் வடலூரில் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அன்னை தெரசா ஒரு நாள் அன்னை தெரசா சாலையின் ஓரமாக நடந்து சென்றார். அப்போது வழியில் மூதாட்டி ஒருவர் சாலையின் ஓரம் படுத்திருந்தார். அவர் முகத்தைத் துணியால் மூடி இருந்தார். ஒரு கையால் பூனைக் குட்டியை அணைத்துக் கொண்டு இருந்தார். அன்னை தெரசா அவரின் அருகில் சென்று உற்றுநோக்கினார். தொழுநோயின் கடுமையால் உண்டான வேதனை மூதாட்டியின் முகத்தில் தெரிந்தது. கைகளில் விரல்கள் இல்லை. அன்னை
தெரசா மனம் கலங்கினார். மூதாட்டியின் அருகில் சென்று அவரைத் தொட்டுத் தூக்கினார். " சாலை ஓரத்தில் படுத்து இருப்பது ஏன் ? " எனக்கேட்டார். " என்னைத் தொடாதீர்கள். என் நோய் உங்களுக்கும் தொற்றிக்கொள்ளும். என் உறவினர்களே என்னை வெறுத்து விலக்கி விட்டனர். என்னுடன் பேசுவதில்லை. என்னைக் கண்டாலே விலகி ஓடுகின்றனர். இந்தப் பூனை மட்டுமே என்னுடன் இருக்கிறது " என அழுதார் மூதாட்டி. இதைக் கேட்ட அன்னை தெரசா கண்ணீர் விட்டார். இவரைப் போல ஆயிரக்கணக்கான நோயாளிகள் உதவி செய்ய யாருமின்றி வாடுவதைக் கண்டார். அக்காலத்தில் தொழுநோய் கடுமையான
தொற்றுநோயாகக் கருதப்பட்டது. கருணை உள்ளம் கொண்ட அன்னை தெரசா அவர்களுக்குத் தொண்டு செய்ய முடிவெடுத்தார். தமது இறுதிக் காலம் வரை பிறருக்காகவே வாழ்ந்தார். I மக்களுக்குச் செய்யும் பணியே இறைவனுக்குச் செய்யும் பணி என்று வாழ்ந்தார். அதனால் அமைதிக்கான நோபல் பரிசு அவரைத் தேடி வந்தது. கைலாஷ் சத்யார்த்தி அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் அன்னை தெரசா கைலாஷ் சத்யார்த்தி. இவர் சிறு வயதில் தினமும் பள்ளிக்கூடம் செல்லும் பொழுது சாலையோரத்தில் ஒரு சிறுவனைக் காண்பார். அவன் தன் தந்தையுடன் அமர்ந்து
வேலை செய்து கொண்டு இருப்பான். ஏன் அந்தச் சிறுவன் தன்னைப் போல் பள்ளிக்கு வரவில்லை என்ற கேள்வி அவர் உள்ளத்தில் உறுத்திக் கொண்டே இருந்தது. தம் ஆசிரியரிடமும் பெற்றோரிடமும் இக்கேள்வியைக் கேட்டார். " பணம் இல்லாததால் அச்சிறுவன் பள்ளிக்கு வரவில்லை. வீட்டின் உணவுத் தேவையை நிறைவு செய்யப் பணம் வேண்டும். எனவே அவன் பணம் ஈட்ட வேலை பார்க்கிறான் " என்ற பதில் கிடைத்தது. அந்தப் பதில் அவருக்கு மிகுந்த மன வருத்தத்தைக் கொடுத்தது. தெரிந்து தெளிவோம் வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை அவருடைய மனிதநேயம்
பிற்காலத்தில் அவரைப் பள்ளி செல்லாத குழந்தைகள் மேல் பரிவு கொள்ள வைத்தது. அதற்காக அவர் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்னும் இயக்கத்தைத் தொடங்கினார். அந்த இயக்கத்தின் மூலம் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கப் பாடுபட்டு வருகிறார். கடந்த முப்பது ஆண்டுகளில் எண்பத்து ஆறாயிரம் குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார். உலகக் குழந்தைகள் கல்வி உரிமைக்காக 103 நாடுகளில் 80,000 கி.மீ தூரம் நடைப்பயணம் சென்றுள்ளார். குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைக்காக நாடு கடந்து பரப்புரை ஆற்றி வருகிறார். தெரிந்து தெளிவோம் குழந்தைகளைத்
தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம். உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது. கைலாஷ் சத்யார்த்தி இவரைப் போல் மனிதநேயம் மிக்க பலர் உள்ளனர். அமைப்பாக உதவுவது மட்டுமன்று ; சூழலுக்கேற்ப மனிதநேயம் கொள்ளும் இவர்களைப் போல நாமும் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். நமக்குள் இருக்கும் மனிதநேயத்தை மலரச் செய்ய வேண்டும். எங்கே அன்பு இருக்கிறதோ அங்கே மனிதநேயமும் இருக்கும். T கற்பவை கற்றபின் 1. நாளிதழ்களில் வந்துள்ள மனிதநேயம் பற்றிய செய்திகளைச் சேகரித்துக் கூறுக. 2. எவரேனும்
ஒருவருக்கு நீங்கள் உதவி செய்த அனுபவத்தைக் கூறுக. 3. ஒற்றுமையாக வாழும் பண்பே சிறந்தது என்பது பற்றி நண்பர்களுடன் கலந்துரையாடுக. ஏம் * மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் அ ) மனித வாழ்க்கை ஆ ) மனித உரிமை 2. தம் பொருளைக் கவர்ந்தவரிடமும் அ ) கோபம் ஆ ) வெறுப்பு 3. அன்னை தெரசாவிற்கு அ ) பொருளாதாரம் ஆ ) இயற்பியல் 4. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் அ ) குழந்தைகளைப் பாதுகாப்போம் இ ) குழந்தைகளை வளர்ப்போம் பொருத்துக 1. வள்ளலார் 2. கைலாஷ் சத்யார்த்தி 3. அன்னை
தெரசா சொற்றொடரில் அமைத்து எழுதுக. 1. மனிதநேயம் 2. உரிமை குறுவினா இ ) மனித நேயம் ஈ ) மனித உடைமை. காட்டியவர் வள்ளலார். இ ) கவலை ஈ ) அன்பு க்கான ' நோபல் பரிசு ' கிடைத்தது மருத்துவம் குழந்தைகளை நேசிப்போம் ஈ ) குழந்தைகள் உதவி மையம் ஈ ) அமைதி நோயாளிகளிடம் அன்பு காட்டியவர் பசிப்பிணி போக்கியவர் குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர் 4. அன்புசெய்தல் 3. அமைதி 1. யாரால் உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது ? 2. வள்ளலார் பசிப்பிணியை நீக்க என்ன செய்தார் ? 3. அன்னை தெரசா கண்ணீர் விடக் காரணம் யாது ? சிறு னா கைலாஷ் சத்யார்த்தி
நோபல் பரிசு பெறத் தூண்டுகோலாக அமைந்த இளமைக்கால நிகழ்வு யாது ? சிந்தனை வினா அன்னை தெரசாவின் மனிதநேயம் பற்றிய வேறு ஒரு நிகழ்வினை அறிந்து எழுதுக. 195 விரிவானம் பொன்னையும் பொருளையும் வாரி வழங்குவது மட்டும் வள்ளல் தன்மை அன்று. நமது இறப்பிற்குப் பின் மண்ணுக்குச் செல்லும் உடல் உறுப்புகளைப் பிறர் வாழ வழங்குவதும் வள்ளல் தன்மையே. உறுப்புக் கொடை செய்வோம். மண்ணில் ஒருவரையாவது வாழ வைப்போம். இன்றே இந்தச் சூளுரை ஏற்போம். உறுப்புக் கொடை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய நிகழ்வை அறிவோம் வாருங்கள். முடிவில் ஒரு தொடக்கம்
பெங்களூரு மாலை நேரம் ' அம்மா... என் தோழிகள் வந்து இருக்கிறார்கள். எங்களுடன் விளையாட வரமாட்டாயா ? என்று கேட்கிறார்கள். அவர்களுடன் நான் விளையாடப் போகட்டுமா ? அம்மாவும் அப்பாவும் கண்கலங்குகின்றனர். " உன் உடல் நிலை சரியாகட்டும் கண்ணு. நீ சீக்கிரமே விளையாடப் போகலாம். சரியா ? " " சரிம்மா , எனக்கும் அவர்களுடன் சேர்ந்து விளையாட ஆசைதான். ஆனால் முன்பு போல் என்னால் ஓடியாட முடியவில்லை. மூச்சு விடவும் சிரமமாக உள்ளது " என்று தாயிடம் சொல்லிவிட்டு , பிறகு தோழிகளை அனுப்பிவிட்டு உள்ளே வந்தாள். " அம்மா என் நண்பர்கள் விளையாட
அழைக்கிறார்கள். நான் விளையாடப் போகட்டுமா ? " என்றான். " விளையாடிட்டுச் சீக்கிரமாக வந்துவிட வேண்டும் " என்று கூறிய அம்மாவிடம் " சரிம்மா " என்று கூறி நண்பர்களுடன் விளையாடத் தனது இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றான். நண்பர்களுடன் சேர்ந்து விளையாடினான். நேரம் போனதே தெரியவில்லை. வீட்டிற்குப் புறப்பட்டான். நண்பர்களோடு விளையாடியதை மகிழ்வுடன் அசைபோட்டுக் கொண்டு வீட்டை நோக்கிச் சென்றான். நேரமாகிவிட்டதே ; பெற்றோர் கவலைப்படுவார்களே என்னும் சிந்தனையுடன் வாகனத்தை ஓட்டினான். திருக்கழுக்குன்றம் மாலை நேரம் பெங்களூரு "
உங்கள் மகளின் இதயம் நாளுக்கு நாள் வலுவிழந்து கொண்டே வருகிறது. இதயமாற்று அறுவைசிகிச்சை ஒன்றுதான் கடைசி நம்பிக்கை. அதற்கு முயற்சி செய்யுங்கள் " என்று மருத்துவர் கூறியது நினைவிற்கு வந்தது. எந்த வழியிலாவது தம் மகளின் இதயம் சரியாகிவிடாதா என்ற ஏக்கத்துடன் , படுக்கையில் இருக்கும் தம் ஆசை மகளின் நிலை கண்டு பெற்றோர் உள்ளம் பதைத்தனர். கவலையோடு மகளின் படுக்கை அருகில் அமர்ந்திருந்த பெற்றோர் தம்மை அறியாமல் உறங்கி விட்டனர். திடீரெனக் கண்விழித்தனர். தங்கள் மகள் அசைவற்றுக் கிடப்பதைக் கண்டு அதிர்ந்தனர். உடனடியாக