text
stringlengths
11
513
இலக்கியங்களும் ஒரு நாட்டின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் உலகிற்கு உணர்த்துவன. தமிழர்கள் சிற்பம் , ஓவியம் முதலிய கலைகளில் சிறந்திருந்தனர். காலத்தால் அழியாத கலைச் செல்வங்கள் பலவற்றைப் படைத்தனர். நூற்றாண்டுகள் பல கடந்தும் கலைநயம் குறையாமலும் அழகு சிதையாமலும் விளங்கும் கலைச்செல்வங்கள் பல தமிழகத்தில் உள்ளன. அவற்றுள் ஒன்றைக் காண்போம் வாருங்கள். மனம் கவரும் மாமல்லபுரம் குளிர்ந்த காற்று வீசியது. வெளிச்சம் எங்கும் பரவியது. கயல் தன் கண்களை அகல விரித்துப் பார்த்தாள். ' என்ன இடம் இது ? நாம் எங்கே இருக்கிறோம் ? '
கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தாள். அவளுக்கு முன்னால் ஒரு கோவில் தெரிந்தது. வியப்புடன் பார்த்தாள். ' என்ன இது ? கோவில் போலவும் இருக்கிறது. தேர் போலவும் இருக்கிறதே ! ' இதைப் பற்றி யாரிடம் கேட்பது எனத் திகைத்து நின்றாள். அப்போது தூரத்தில் ஒருவர் குதிரையில் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர் தோற்றத்தில் அரசரைப் போல இருந்தார். ' இவர் யாராக இருக்கும் ? சரி அருகில் வரட்டும் பார்க்கலாம் ' என எண்ணினாள். குதிரை அவள் அருகில் வந்து நின்றது. குதிரையில் இருந்து அவர் இறங்கினார். நான் பல்லவ மன்னன். என் பெயர்
நரசிம்மவர்மன். நான் மற்போரில் சிறந்தவன். அதனால் , எனக்கு மாமல்லன் என்னும் பெயரும் உண்டு. உன் பெயர் என்ன ? " என்று கேட்டார் அவர். " ஐயா , என் பெயர் ம.தி.கயல் " " மதி கயல் என்று இரண்டு பெயர்களா உனக்கு ? " " இல்லை ஐயா. ம. தி. என்பவை என் பெயரின் தலைப்பெழுத்துகள். என் அம்மா பெயர் மங்கை. என் அப்பா பெயர் திருநாவுக்கரசு. அப்பெயர்களின் முதல் எழுத்துகளைத் தலைப்பெழுத்துகளாக வைத்துள்ளனர். " " அப்படியா ? மகிழ்ச்சி. இங்குத் தனியாக எதைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய் ? " " இது கோவிலா தேரா என்று தெரியவில்லை. அதனால்தான்
குழப்பத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் " என்றாள் கயல். " நான் உனக்கு விளக்குகிறேன் கயல். ஒரே பாறையில் செதுக்கிச் செய்யப்பட்ட கோவில் இது. இரதம் ( தேர் ) போன்ற வடிவத்தில் இருக்கிறது. அதனால் இதனை இரதக் கோவில் என்று அழைக்கிறார்கள் " என்று விளக்கினார் மாமல்லர். கயல் சுற்றிலும் பார்த்தாள். அங்கே மொத்தம் ஐந்து இரதங்கள் இருந்தன. வை என்ன ஐயா ? " என்று கேட்டாள். " ஐந்து இரதங்கள் உள்ளதால் இவ்விடத்திற்குப் பஞ்சபாண்டவர் இரதம் என்று பெயர். இவையெல்லாம் என் காலத்தில் உருவாக்கப்பட்டவை " என்றார் மாமல்லர். " வியப்பாக
உள்ளதே ! நீங்கள் நீண்ட காலத்துக்கு முன்பு வாழ்ந்தவர் அல்லவா ? " " ஆமாம் கயல். நான் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் ". " இவற்றை உருவாக்குவதற்குக் கற்களை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள் ? " " இங்கேயே இருந்த பாறைகளில்தான் இவற்றை உருவாக்கினோம் ". 5. தெரிந்து தெளிவோம் மாமல்லபுரத்தில் காணவேண்டிய இடங்கள் அர்ச்சுனன் தபசு கடற்கரைக் கோவில் 1. 2. 3. பஞ்சபாண்டவர் ரதம் ஒற்றைக்கல் யானை குகைக்கோவில் அப்படியா ? இவற்றைக் கோவிலாக மாற்றவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது ? " " நான் சிறுவனாக இருந்த போது ஒருநாள் என்
தந்தையுடன் இந்தக் கடற்கரைக்கு வந்தேன். இந்தப் பாறையின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தேன். இந்தப் பாறையின் நிழல் யானை போல் தரையில் விழுந்தது. என் தந்தையிடம் அதனைக் காட்டினேன். என் தந்தை , ' ஆம் , நரசிம்மா ! இது யானை போலத்தான் தெரிகிறது. அதோ அந்தக் குன்றின் நிழலைப் பார். கோவில் போலத் தெரிகிறது ' என்றார். ' ஆமாம் அப்பா ! அந்தக் குன்றைக் கோவிலாகவும் , இந்தக் குன்றைக் கோவில் முன் நிற்கும் யானை போலவும் மாற்றிவிட்டால் நன்றாக இருக்குமே ' என்றேன். ' நல்ல சிந்தனை. இவை இரண்டை மட்டும் அல்ல , இங்குள்ள ஒவ்வொரு குன்றையும்
சிற்பமாக மாற்றலாம். ஒவ்வொரு பாறையையும் நந்தி , சிங்கம் , யானை என்று மாற்றுவோம். இந்தக் கடற்கரையையே சிற்பக்கலைக் கூடமாக மாற்றிவிடலாம் ' என்று கூறினார் என் தந்தை " என்று சொல்லி முடித்தார் மாமல்லர். " உங்கள் தந்தையும் அரசரா ? " என்று கேட்டாள் கயல். " ஆமாம் கயல். எனக்கு முன்பு பல்லவ நாட்டை ஆட்சி செய்தவர் என் தந்தை மகேந்திரவர்ம பல்லவர். அவர் காலத்தில் இந்தச் சிற்பப் பணி தொடங்கியது. என்காலம் , என்மகனின் காலம் , என் பேரனின் காலம்வரை நடைபெற்றது. நான்கு தலைமுறைகளில் உருவாக்கப்பட்டவை இந்தச் சிற்பங்கள் " என்று
பெருமிதத்துடன் கூறினார் மாமல்லர். " இந்தச் சிற்பங்களை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறதே " என்றாள் கயல். " சிற்பக் கலையின் உச்சத்தை நீ பார்க்க வேண்டுமா ? என்னுடன் வா ! " என்று கூறிக் கயலை அழைத்துச் சென்றார் மாமல்லர். இருவரும் அர்ச்சுனன் தபசுச் சிலைக்கு அருகில் வந்து நின்றனர். அங்குப் பாறையில் இருந்த சிற்பங்களைக் கண்டு கயல் வியந்து போனாள். " ஐயா ! இந்தப் பாறையில் மனிதர்கள் , விலங்குகள் , பறவைகள் போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை உயிருள்ளவற்றை நேரில் பார்ப்பது போல அழகாக உள்ளன "
என்றாள். ஆம் கயல். இவற்றுக்குப் புடைப்புச் சிற்பங்கள் என்று பெயர். இந்த இரண்டு பாறைகளிலும் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் உள்ளன. " " அதில் ஒருவர் கண்களை மூடி , இரு கைகளையும் உயர்த்தி , வணங்குவது போல ஒரு சிற்பம் உள்ளது. அவரது உடல் மெலிந்து , எலும்புகளும் நரம்புகளும் வெளியே தெரிவது போல அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது. " " ஆம் கயல். அர்ச்சுனன் தவம் செய்யும் காட்சி இது. இந்தச் சிற்பம் உள்ளதால்தான் , இப்பாறைக்கு ' அர்ச்சுனன் தபசு ' என்று பெயர். இதனைப் ' பகீரதன் தவம் ' என்றும் கூறுவர். " அப்படியா ! இந்த
இடத்தில் இரண்டு பாறைகளுக்கு இடையில் நீர் வடிந்து வந்த தடம் தெரிகிறதே ? " " 1 " ஆம் கயல். அங்கே ஆகாயகங்கை பூமிக்கு வருவது போல அமைக்கப்பட்டு உள்ளது. மழைக்காலத்தில் இதன் வழியாக மழைநீர் பாய்ந்து வரும். அப்போது உண்மையிலேயே கங்கை ஓடி வருவதைப் போல இருக்கும் " என்றார் மாமல்லர். " இங்கே யானைச்சிற்பங்கள் அழகாக உள்ளன. சிங்கம் , புலி , அன்னப்பறவை , உடும்பு , குரங்குகள் என எல்லாமே உயிருள்ளவை போலச் செதுக்கப்பட்டுள்ளன. இங்கே பாருங்கள் ! மான் தன் காலைத் தூக்கி முகவாயைச் சொறிந்து கொள்வது போன்ற சிற்பம். அது பார்ப்பதற்கு
உண்மையிலேயே மான் ஒன்று இருப்பதைப் போலவே தோன்றுகிறது " என்று வியப்புடன் கூறினாள் கயல். " இங்கு இன்னும் நிறைய இடங்கள் உள்ளன கயல். இந்த ஊரைச் சுற்றிப் பார்க்க ஒரு நாள் போதாது " என்றார் மாமல்லர். " இந்த ஊரின் பெயர் என்ன ஐயா ? " என்று ஆர்வத்தோடு கேட்டாள் கயல். " இதுதான் தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலைக் கூடமாகிய மாமல்லபுரம் " தெரிந்து தெளிவோம் சிற்பக் கலை வடிவமைப்புகள் நான்கு வகைப்படும். குடைவரைக் கோயில்கள் ஒற்றைக் கல் கோயில்கள் இந்த நான்கு வகைகளும் காணப்படும் ஒரே இடம் மாமல்லபுரம். கயல் சிந்தித்தவாறு " உங்கள்
பெயர் மாமல்லன். இந்த ஊரின் பெயர் மாமல்லபுரம். இரண்டுக்கும் ஏதோ ஒற்றுமை உள்ளதே ! " எனக் கேட்டாள். " ஆம் கயல். இந்த ஊர் உருவாக எனது கேள்விதான் காரணம் என்பதால் என் தந்தை என் பெயரையே இந்த ஊருக்கு வைத்துவிட்டார். இக்காலத்தில் இவ்வூரை மகாபலிபுரம் எனவும் அழைக்கிறார்கள் ". " உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா ! " " எனக்கும்தான் கயல். உன்னோடு பேசிக் கொண்டிருந்ததில் என் இளமைக் காலத்திற்கே சென்றுவிட்டது போல உணர்கிறேன். மிக்க மகிழ்ச்சி மங்கை திருநாவுக்கரசு கயல். " அப்போது " கயல் , கயல் எழுந்திரு. இன்று
மாமல்லபுரத்திற்குக் கல்விச் சுற்றுலா செல்ல வேண்டும் என்று கூறினாயே ! இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாய். தூக்கத்தில் எங்கள் பெயரை வேறு சொல்லிக் கொண்டிருக்கிறாய் " என்னும் தாயின் குரல் கேட்டுக் கண் விழித்தாள் கயல். " இவ்வளவும் கனவா ? நேற்று மாமல்லபுரத்தைப் பற்றி ஆசிரியர் கூறிய செய்திகளை நினைத்துக் கொண்டே தூங்கினேன். அதனால் இவை எல்லாம் கனவில் வந்துள்ளன. கனவில் கண்டவற்றை இன்று நேரில் காணப்போகிறேன் " என்று எண்ணி மகிழ்வுடன் சுற்றுலா செல்லத் தயாரானாள் கயல். கற்பவை கற்றபின் 1. நீங்கள் சென்ற சுற்றுலா பற்றிய செய்திகளை
நண்பர்களுடன் பகிர்க. 2. தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டுக. 3. மாமல்லபுரச் சிற்பங்கள் பாறைகளில் செதுக்கப்பட்டவை. வேறு எந்தெந்தப் பொருள்களால் சிற்பங்களைச் செய்யலாம் எனக் கலந்துரையாடுக. கலைகளுள் ஒன்று சிற்பக்கலை. இது போன்ற பிற கலைகளின் பெயர்களைத் திரட்டி எழுதுக. * மதிப்பீடு சிறுவினா 1. மாமல்லபுரம் எப்படி உருவானது ? அதற்குக் காரணமான நிகழ்வு யாது ? 2. மாமல்லபுரத்தில் அர்ச்சுனன் தபசுப் பாறையில் உள்ள சிற்பங்களைப் பற்றி எழுதுக. இயல் ஐந்து மணம் - மனம் ண , ன , ந மேலே உள்ள இரண்டு
சொற்களையும் கவனியுங்கள். உச்சரிக்கும் போது ஏறத்தாழ ஒன்று போலவே ஒலிக்கின்றன. ஆனால் இரண்டுக்கும் இடையே பொருள் வேறுபாடு உண்டு. இவ்வாறு உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்கிறோம். ண மயங்கொலிகள் ல , ழ , ள ர , ற ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும். ண , ன , ந - எழுத்துகள் கற்கண்டு ன ண- நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது. ன - நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது. ந -நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப்
பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது. ( ட் , ண் ) ( த் , ந் ) ( ற் , ன் ) ஆகியவை இன எழுத்துகள். இந்த இன எழுத்துகளைக் கொண்டு டகரத்தை அடுத்து வரும் ணகரம் டண்ணகரம் என்றும் , தகரத்தை அடுத்து வரும் நகரம் தந்நகரம் என்றும் , றகரத்தை அடுத்து வரும் னகரம் றன்னகரம் என்றும் அழைக்கப்படுகின்றன. தெரிந்து தெளிவோம் சொற்களில் ண , ன இடம்பெறும் வகை ட என்னும் எழுத்துக்கு முன் ண் வரும் ( எ.கா. ) கண்டம் , வண்டி , நண்டு ற என்னும் எழுத்துக்கு முன் ன் வரும் ( எ.கா. ) மன்றம் , நன்றி , கன்று | ணகரம் வர வேண்டிய இடத்தில் னகரம்
எழுதப்படுமானால் பொருள் மாறுபடும் என்பதை உணர்க. ( எ.கா. ) வாணம் - வெடி வானம் - ஆகாயம் ல , ள , ழ எழுத்துகள் ள பணி - வேலை பனி - குளிர்ச்சி ல - நா ( நாவின் இருபக்கங்கள் தடித்து ) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும். இது ' வ ' போல இருப்பதால் ' வகர லகரம் ' என்கிறோம். விலை -பொருளின் மதிப்பு விளை உண்டாக்குதல் விழை விரும்பு ர , ற - எழுத்துகள் ள -நா ( நாவின் இருபக்கங்கள் தடித்து ) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும். இதனைப் பொது ளகரம் என்கிறோம். இது ' ன ' போல இருப்பதால் ' னகர ளகரம் '
என்று கூறுவர். ழ- நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் ழகரம் தோன்றும். ( ளகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும் ). ழ தமிழுக்கே சிறப்பானது. எனவே இதனைச் சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம். இது ' ம ' போல இருப்பதால் ' மகர ழகரம் ' என்று கூறுவது இலக்கண மரபு. பொருள் வேறுபாடு உணர்க. ழ இலை - செடியின் இலை இளை - மெலிந்து போதல் இழை - நூல் இழை ர - நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது. இஃது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்கிறோம். ற - நாவின் நுனி மேல் அண்ணத்தில்
மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது. இது வல்லின எழுத்து என்பதால் வல்லின றகரம் என்கிறோம். | பொருள் வேறுபாடு உணர்க நீர்நிலை மேலே ஏறி கற்பவை கற்றபின் 1. ல , ள , ழ ஆகிய எழுத்துகள் அமைந்த சொற்களைப் பொருளுடன் தொகுக்க. 2. மயங்கொலி எழுத்துகளை உங்களது நண்பரிடம் ஒலித்துக் காட்டுக. 2 ) இலைக்கு வேறு பெயர் 3 ) வண்டி இழுப்பது - 4 ) கடலுக்கு வேறு பெயர் கூரை வீட்டின் கூரை மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1 ) சிரம் என்பது 5 ) பறவை வானில் 6 ) கதவை மெல்லத் 7 ) H 8 ) புலியின் 9 ) குழந்தைகள் கூறை - புடவை (
தலை / தளை ) ( தளை / தழை ) ( காலை / காளை ) ( பறந்தது / பரந்தது ) ( திறந்தான் / திரந்தான் ) ( பரவை / பறவை ) வீசும். ( மனம் / மணம் ) 2 ) தேர்த் திருவிலாவிற்குச் செண்றனர். 3 ) வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது. குறுவினாக்கள் சிவந்து காணப்படும். ( கன் / கண் ) விளையாடினர். ( பந்து / பன்து ) போட்டனர். ( கோலம் / கோளம் ) 10 ) வீட்டு வாசலில் தொடர்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளைத் திருத்தி எழுதுக. 1 ) எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின. 116 1. மயங்கொலி எழுத்துகள் யாவை ? 2. ண , ன , ந ஆகிய எழுத்துகள் பிறக்கும்
முறையைக் கூறுக. தொலைக்காட்சி / வானொலியில் வேளாண்மை தொடர்பான நிகழ்ச்சிகளைக் கேட்டு வந்து வகுப்பில் கூறுக. பேசுக 1.மாட்டுப்பொங்கலன்று மாடுகள் பேசிக் கொள்வதாகக் கற்பனை செய்து உரையாடுக. 2. உங்கள் பகுதியில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் குறித்துப் பேசுக. சொல்லக் கேட்டு எழுதுக. பொறையுடைமை , ஆசாரக்கோவை , நந்தவனம் , முத்தேன் , தைத்திங்கள் , தலைவாழை , மஞ்சுவிரட்டு , மாமல்லன் , ஆகாயகங்கை , மயங்கொலிகள். பத்தியைப் படித்து வினாக்கள் அமைக்க. முகிலன் பொங்கல் விழாக் கொண்டாடத் தாத்தா வீட்டிற்குச் சென்றான். அங்குச் செவலை என்ற
காளை இருந்தது. அக்காளையை முகிலனுக்கு மிகவும் பிடிக்கும். அதற்குத் தீவனம் வைப்பது அவனது வழக்கம். வீட்டிற்குப் பின்புறம் உள்ள தோட்டத்தில் இருந்து காய்கறிகள் பறித்துக் கொடுத்துத் தாத்தாவுக்கு உதவுவான். அவன் , தாத்தா பாட்டியோடு மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவைக் கொண்டாடுவான். ( எ.கா. ) முகிலன் யார் வீட்டிற்குச் சென்றான் ? சரியான தொடர் எது ? கண்டறிந்து எழுதுக. 1. கதிரவன் மறையும் காலையில் உதித்து மாலையில் 2.மாலையில் காலையில் உதித்து மறையும் கதிரவன் 3.கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும் 4. மறையும் காலையில்
கதிரவன் உதித்து மாலையில் நாளை விடுதலை நாள் விழா. உங்கள் பள்ளியில் போட்டிகள் நடத்துகிறார்களா ? ஆம் மாமா. நான் வெற்றி பெற வாழ்த்துகள். : கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக. பொங்கல் திருநாள் அளிப்பது நட்பு நட்பு கீழே உள்ள சொற்களைச் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்குக. ( எ.கா. ) கல் + ல் + உண்டு = கல்லுண்டு , கல் + ல் + இல்லை = கல்லில்லை. இயல் ஐந்து நுழையும்முன் வாழ்வியல் திருக்குறள் விருந்தோம்பல் 1. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று அமிழ்தமே ஆனாலும் விருந்தினர்
இருக்கும்போது தான்மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று. கள்ளாமை உலகில் வாழும் மக்கள் அனைவருக்கும் சிறப்பான அறங்களை வலியுறுத்தியவர் திருவள்ளுவர். வீட்டிற்கு வந்த விருந்தினரைப் போற்றுதல் , இனிய சொற்களைப் பேசுதல் , பிறர் பொருளை விரும்பாமை , ஊக்கத்துடன் செயல்படுதல் , பயனற்ற சொற்களைப் பேசாமல் இருத்தல் ஆகிய அறங்களைப் பற்றிய திருவள்ளுவரின் கருத்துகளை அறிவோம் வாருங்கள். 2. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து * மோந்து பார்த்தால் அனிச்ச மலர் வாடிவிடும். நம் முகம் மாறினாலே விருந்தினர்
உள்ளம் வாடிவிடும். 3. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் அடுத்தவர் பொருளைக் களவாடலாம் என உள்ளத்தால் நினைப்பது கூடத் தீமையானது. களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும். களவு மூலம் சேர்க்கப்படும் செல்வம் வளர்வது போலத் தோன்றினாலும் முடிவில் அழிந்துவிடும். ஊக்கமுடைமை 5. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும் ஊக்கமே நிலையான செல்வம். மற்றவை எல்லாம் நிலைத்து நில்லாமல் அழிந்து விடும். 6. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா ஊக்கம் உடையான் உழை. தராத ஊக்கம்
உடையவனிடம் ஆக்கமானது தானே வழிகேட்டுக்கொண்டு செல்லும். 7. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு * தண்ணீரின் உயரத்துக்கு ஏற்ப நீர்ப்பூக்கள் வளரும். ஊக்கத்தின் அளவுக்கு ஏற்ப மனிதர்கள் உயர்வார்கள். 8. உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து எண்ணுவதை உயர்வாகவே எண்ணுக. எண்ணியதை அடையாவிட்டாலும் எண்ணத்தைக் கைவிடக் கூடாது. பயனில சொல்லாமை 9. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல் நன்மை எது என ஆராயும் அறிவு உடையவர்கள் பயன்தராத சொற்களைப் பேசமாட்டார்கள்.
10. சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயன்இலாச் சொல் * பயனுடைய சொற்களை மட்டுமே பேசுக. பயன் இல்லாத சொற்களைப் பேசாமல் விட்டு விடுக. கற்பவை கற்றபின் 1. பாடப்பகுதியில் இடம்பெற்ற அதிகாரங்களில் உள்ள குறட்பாக்களுள் ஐந்தனை பொருளுடன் எழுதி வந்து வகுப்பில் பகிர்க. 2. திருக்குறள் உலகப் பொதுமறை எனப்படுவது ஏன் ? வகுப்பில் பேசுக. ஏக்க மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. விருந்தினரின் முகம் எப்போது வாடும் ? அ ) நம் முகம் மாறினால் இ ) நாம் நன்கு வரவேற்றால் 2. நிலையான செல்வம் அ ) தங்கம் ஆ ) பணம் அ )
பொருளு + டைமை இ ) பொருள் + உடைமை அ ) உள்ளுவதுஎல்லாம் இ ) உள்ளுவத்தெல்லாம் 3. ஆராயும் அறிவு உடையவர்கள் அ ) உயர்வான ஆ ) விலையற்ற இ ) பயன்தராத ஈ ) பயன்உடைய 4. பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ஆ ) பொரு + ளுடைமை ஈ ) பொருள் + ளுடைமை ஆ ) நம் வீடு மாறினால் ஈ ) நம் முகவரி மாறினால் ஊக்கம் நயம் அறிக 5. உள்ளுவது + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ஆ ) உள்ளுவதெல்லாம் ஈ ) உள்ளுவதுதெல்லாம் ஈ ) ஏக்கம் சொற்களைப் பேசமாட்டார்கள். 6. பயன் + இலா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ )
பயனிலா ஆ ) பயன்னில்லா இ ) பயன்இலா ஈ ) பயன்இல்லா உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் இக்குறளில் உள்ள எதுகை , மோனைச் சொற்களை எடுத்து எழுதுக. | இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் ஊக்கம் அசைவுஇலா உடையான் உழை. உள்ளுவது உயர்வுள்ளல் எல்லாம் மற்றது தள்ளாமை தள்ளினும் நீர்த்து , " ஊக்கமது கைவிடேல் " என்பது ஒளவையாரின் ஆத்திசூடி. இவ்வரியோடு தொடர்புடைய திருக்குறளைத் தேர்ந்தெடுக்க. விருந்து புறத்ததாத் தாணுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் அன்று. உள்ளம்
உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயன்இலாச் சொல். பின்வரும் கதைக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க. வீட்டிற்குள் வந்த வேலனைத் தந்தை அழைத்தார். " உங்கள் பள்ளியில் பேச்சுப்போட்டி நடப்பதாகக் கூறினாயே , பெயர் கொடுத்து விட்டாயா ? " என்று கேட்டார். " இல்லையப்பா , அமுதன் என்னைவிட நன்றாகப் பேசுவான். அவனுக்குத்தான் பரிசு கிடைக்கும். எனவே நான் பெயர் கொடுக்கவில்லை " என்றான் வேலன். " போட்டியில் வெற்றியும் தோல்வியும் இயல்புதான். அதற்காகப் போட்டியிடாமல்
இருக்கக் கூடாது. நாம் எந்த அளவு ஊக்கத்துடன் செயல்படுகிறோமோ அந்த அளவிற்கு வெற்றி கிடைக்கும். எனவே நீ போட்டியில் கலந்துகொள் " என்றார் அப்பா. உற்சாகம் அடைந்தான் வேலன். " நாளை பெயர் கொடுத்துவிடுகிறேன் அப்பா " என்றான். மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல். குறுவினா 1. எப்படி உண்பது விரும்பத்தக்கது அன்று ? 2. எது தீமையானது என்று வள்ளுவர் கூறுகின்றார் ? 3. ஆக்கம்
யாரிடம் வழிகேட்டுச் செல்லும் ? 4. நாம் எத்தகைய சொற்களைப் பேசவேண்டும் என்று வள்ளுவர் கூறுகின்றார் ? மகாபலிபுரம் இணையச் செயல்பாடுகள் படிகள் : → கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி Google Arts and Culture என்னும் இணையச் செயலியின் பக்கத்திற்குச் செல்லவும். இப்போது திரையில் Mahabalipuram – Sculpture by the sea என்று தோன்றும். Mahapurarres , culpture by the Sea அதன் வலதுபுறத்தில் உள்ள அம்புக்குறியைச் சொடுக்க வரிசையாகப் படங்கள் தோன்றும். அப்படத்தினைச் சொடுக்கினால் படத்தின் 360 °
கோணத்திலும் உருப்பெருக்கிப் பார்க்கலாம். தமிழர்களின் பண்டைய வணிகம் குறித்து அறிதல் பல்வேறு தொழில்கள் குறித்து அறிதல் வணிகத்தின் வளர்ச்சி நிலைகளைப் புரிந்துகொள்ளுதல் தொழில் மூலம் அடையும் முன்னேற்றத்தை உணர்தல் சுட்டு எழுத்துகள் , வினா எழுத்துகளைப் பொருத்தமாகப் பயன்படுத்துதல் இயல் ஆறு நுழையும்முன் கவிதைப்பேழை நானிலம் படைத்தவன் காடுகளில் வாழ்ந்த மனிதன் அக்காடுகளைத் திருத்தி விளைநிலங்களை உருவாக்கினான். பயிர்களை விளைவித்தான். ஊர்களை உருவாக்கிக் கூடி வாழ்ந்தான். பல்வகைத் தொழில்கள் மூலம் தன் வாழ்வை மேம்படுத்திக்
கொண்டான். தொழிலும் வணிகமும் அவன் வாழ்க்கையை உயர்த்தின. ' தமிழரின் வணிக மேன்மையை அறிவோம் வாருங்கள். கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற பேராக்கி வாழ்ந்த பெருமை அவன்பெற்றான் , மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல் நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தன்அவன் , ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான் சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான் முக்குளித்தான் ஆழிக்குள் முத்தெடுத்தான் தோணிக்குள் எக்களிப்பு மீதூர ஏலம் மிளகுமுதற் ,
பண்டங்கள் ஏற்றிப் பயன்நல்கும் வாணிகத்தால் கண்டங்கள் சுற்றிக் கலமேறி வந்தவன்தான் , அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள் அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான் சொல்லும் பொருளும் மல்லெடுத்த சமர் நல்கும் கழனி பாடலின் பொருள் தமிழன் கற்களும் முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பைத் திருத்திப் பண்படுத்தினான். தனது உடல் வலிமையால் வளத்தைப் பெருக்கினான். ஊர் , நகரம் , நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையைப் பெற்றான். முல்லை , மருதம் , குறிஞ்சி , நெய்தல் என நிலத்தை நால்வகைப்படுத்திய நாகரிக மனிதன் அவன்.
பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான். அச்சம் தரும் போர்களிலும் எளிதாக வெற்றி கண்டான். பனிசூழ்ந்த இமயமலையில் தன் வெற்றிக் கொடியை நாட்டினான். ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தான். ஏலம் , மிளகு ஆகியவற்றைப் பெருமகிழ்ச்சியோடு கப்பல்களில் ஏற்றிக் கண்டங்கள்தோறும் அனுப்பி வணிகம் செய்தான். கப்பலில் உலகை வலம் வந்தான். அவன் எதற்கும் அஞ்சாதவன். ஆனால் , சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சுபவன். நூல் வெளி முடியரசனின் இயற்பெயர் துரைராசு. இவர் பூங்கொடி , வீரகாவியம் , காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார்.
திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர். இப்பாடல் புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. கற்பவை கற்றபின் 1. ' நானிலம் படைத்தவன் ' பாடலை இசையுடன் பாடிக் காட்டுக. 2. குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தலுக்கு உரிய நிலங்களை அறிந்து எழுதுக. 3. படித்து மகிழ்க. வெள்ளிப் பனிமலையின் மீதுஉலாவுவோம் அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம் சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம் ! | ஏற்க
மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. போர்க்களத்தில் வெளிப்படும் குணம்.. அ ) மகிழ்ச்சி ஆ ) துன்பம் இ ) வீரம் ஈ ) அழுகை 2. கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.. அ ) கல் + அடுத்து இ ) கல் + லடுத்து 3. நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. அ ) நா + னிலம் ஆ ) நான்கு + நிலம் ஈ ) நான் + நிலம் இ ) நா + நிலம் 4. நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல். அ ) நாடென்ற ஆ ) நாடன்ற இ ) நாடு என்ற ஈ ) நாடுஅன்ற 5. கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
----- இ ) கலன்ஏறி ஈ ) கலமேறி அ ) கலம்ஏறி ஆ ) கலமறி சொற்றொடரில் அமைத்து எழுதுக. அ ) மாநிலம் ஆ ) கடல் ஆ ) கல் + எடுத்து ஈ ) கல் + லெடுத்து குறுவினா நயம் அறிக. 1. நானிலம் படைத்தவன் பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக. 2. நானிலம் படைத்தவன் பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக. 1. நான்கு நிலங்கள் என்பன யாவை ? இ ) பண்டங்கள் 2. தமிழன் எதற்கு அஞ்சினான் ? 3. தமிழன் எதற்காகக் கண்டங்களைச் சுற்றி வந்தான் ? சிறுவினா 1. தமிழன் தான் வாழ்ந்த நாட்டினை எவ்வாறு உருவாக்கினான் ? 2. தமிழனின்
செயல்களாக முடியரசன் கூறுவன யாவை ? சிந்தனை வினா இயல் ஆறு நுழையும்முன் விடிவெள்ளி நம்விளக்கு ஐலசா விரிகடலே பள்ளிக்கூடம் - ஐலசா அடிக்கும்அலை நம்தோழன் ஐலசா அருமைமேகம் நமதுகுடை ஐலசா வெண்மணலே பஞ்சுமெத்தை ஐலசா விண்ணின்இடி காணும்கூத்து - ஐலசா * பாயும்புயல் நம்ஊஞ்சல் ஐலசா பனிமூட்டம் உடல்போர்வை – இலசா காயும்கதிர்ச் சுடர்கூரை - ஐலசா கட்டுமரம் வாழும்வீடு ஐலசா மின்னல்வரி அரிச்சுவடி – ஐலசா பிடிக்கும்மீன்கள் நம்பொருள்கள் ஐலசா முழுநிலவே கண்ணாடி ஐலசா மூச்சடக்கும் நீச்சல் யோகம் ஐலசா சொல்லும் பொருளும் கவிதைப்பேழை தொழும்தலைவன்
பெருவானம் ஐலசா துணிவோடு தொழில்செய்வோம் ஐலசா * கதிர்ச்சுடர் மின்னல்வரி அரிச்சுவடி கடலோடு விளையாடு பாடல் மனிதர்க்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அசதியைப் போக்குகிறது. உழைக்கும் தொழிலாளர்கள் களைப்புத் தெரியாமல் இருக்கப் பாடி மகிழ்கிறார்கள். வாட்டும் வெயிலையும் தாக்கும் புயலையும் தன் கூட்டாளியாக்கிக் கொண்டு மீன்பிடிப்பவர்கள் மீனவர்கள். அம்மீனவர்களின் பாடலைக் கேட்போம் வாருங்கள். கதிரவனின் ஒளி மின்னல் கோடு அகரவரிசை எழுத்துகள் பாடலின் பொருள் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்பவர்கள் மீனவர்கள். அவர்களுக்கு விண்மீன்களே
விளக்குகள் ; விரிந்த கடலே பள்ளிக்கூடம் ; கடல் அலையே தோழன் ; மேகமே குடை ; வண்மையான மணலே படுத்துறங்கும் பஞ்சு மெத்தை ; விண்ணின் இடி அவர்கள் காணும் கூத்து ; சீறிவரும் புயலே விளையாடும் ஊஞ்சல் ; பனிமூட்டம்தான் உடலைச் சுற்றும் போர்வை ; அனல் வீசும் கதிரவனின் ஒளிச்சுடர்தான் மேற்கூரை ; கட்டுமரம்தான் அவர்கள் வாழும் வீடு ; மின்னல் கோடுகளே அடிப்படைப் பாடம் ; வலைவீசிப் பிடிக்கும் மீன்களே அவர்களது செல்வம் ; முழு நிலவுதான் கண்ணாடி : மூச்சடக்கிச் செய்யும் நீச்சலே அவர்கள் செய்யும் தவம் ; வானமே அவர்கள் வணங்கும் தலைவன் ;
இவற்றிற்கு இடையே மீனவர்கள் மன உறுதியோடு தொழில் செய்கின்றனர். தெரிந்து தெளிவோம் நெய்தல் திணை நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும் மக்கள் : பரதவர் , பரத்தியர் 3. தொழில் : மீன் பிடித்தல் , உப்பு விளைவித்தல் தாழம்பூ பூ நூல் வெளி உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர். ஏற்றப்பாட்டு , ஓடப்பாட்டு முதலான தொழில்பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள் , தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப்
பாடல்களுள் அடங்கும். இப்பாடல் சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. 1. பாடப் பகுதியில் உள்ள பாடலை இசையோடு பாடிக் காட்டுக. 2. உங்களைக் கவர்ந்த நாட்டுப்புறப் பாடல்களை எழுதி வருக. கடல் , வானம் , மலை ஆகியவற்றைப் பற்றி சொந்தமாகப் பாடல் எழுதிப் பாடுக. கற்பவை கற்றபின் மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ ) கதிர்ச் + சுடர் இ ) கதிரவன் + சுடர் ஆ ) கதிரின் + சுடர் ஈ ) கதிர் + சுடர் 2. மூச்சடக்கி என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. அ ) மூச்சு + அடக்கி இ ) மூச் + சடக்கி 3. பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ ) பெருமைவனம் இ ) பெருமானம் ஆ ) மூச் + அடக்கி ஈ ) மூச்சை + அடக்கி அ ) அடிக்குமலை இ ) அடிக்கிலை 4. அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ஆ ) அடிக்கும் அலை ஈ ) அடியலை ஆ ) பெருவானம் ஈ ) பேர்வானம் பாடல் வரிகளுக்கு ஏற்பப் பொருத்துக 1.விடிவெள்ளி 2. மணல் 3.புயல் 4. பனிமூட்டம் பஞ்சுமெத்தை ஊஞ்சல் போர்வை விளக்கு குறுவினா 1. அலையையும் மேகத்தையும் மீனவர்கள் என்னவாகக்
கருதுகின்றனர் ? 2. கடல் பாடலில் கண்ணாடியாகவும் தலைவனாகவும் குறிப்பிடப்படுவன யாவை ? 3. மீனவர்கள் தமது வீடாகவும் செல்வமாகவும் கருதுவன யாவை ? சிந்தனை வினா 1. நீங்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் தொழில்களில் ஒன்றைப் பற்றி ஐந்து வரிகள் எழுதுக. 2. நாட்டுப்புற இலக்கியங்களை வாய்மொழி இலக்கியங்கள் என்று கூறக் காரணம் என்ன ? இயல் ஆறு நுழையும்முன் -ரைநடை உலகம் D வளரும் வணிகம் மனிதர் வாழ்வில் வணிகம் பெரும்பங்கு வகிக்கிறது. வணிகம் இல்லையேல் மனிதர்கள் தம் தேவைகளை எளிதாக நிறைவேற்றிக் கொள்ள இயலாது. வணிகம் பல வகைகளில்
நடைபெறுகிறது. வணிக நிறுவனங்களும் பல வகைகளாக உள்ளன. தமிழர் பழங்காலத்தில் இருந்தே வணிகத்தில் சிறந்து விளங்கினர். உலகம் முழுவதும் வணிகத்தொடர்பு கொண்டு இருந்தனர். அதனை அறிந்து கொள்வோம் வாருங்கள். மனிதன் தனக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் தானே உற்பத்தி செய்து கொள்ள முடியாது. தனக்குத் தேவையான சில பொருள்களை உற்பத்தி செய்யும் பிறரிடமிருந்து வாங்குவான். தான் உற்பத்தி செய்யும் பொருள்களில் சிலவற்றைப் பிறருக்கு விற்பான். இவ்வாறு ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும். பொருள்களை
விற்பவரை வணிகர் என்பர் ; வாங்குபவரை நுகர்வோர் என்பர். பண்டமாற்று வணிகம் நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வது பண்டமாற்று வணிகம் ஆகும். நெல்லைக் கொடுத்து அதற்குப் பதிலாக உப்பைப் பெற்றனர். ஆட்டின் பாலைக் கொடுத்துத் தானியத்தைப் பெற்றனர். இந்தச் செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. இக்காலத்தில் கூட வீட்டிற்கே வந்து பழைய செய்தித்தாள்கள் , பயனற்ற நெகிழிப் பொருள்கள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்கின்றனர். அதற்குப் பதிலாக வீட்டிற்குப் பயன்படும் பொருள்களைத்
தருகின்றனர். | வணிகத்தின் வகைகள் வணிகத்தைத் தரைவழி வணிகம் , நீர்வழி வணிகம் எனப் பிரிக்கலாம். தரைவழியாகப் பொருள்களைக் கொண்டு செல்ல எருது , கழுதை , குதிரை போன்ற விலங்குகளும் வண்டிகளும் பயன்படுத்தப்பட்டன. வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குச் செல்லும் போது குழுவாகவே செல்வார்கள். இக்குழுவை வணிகச்சாத்து என்பர். கடல்வழியாகக் கப்பல்கள் மூலம் பொருள்களை தெரிந்து தெளிவோம் தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி உமணர் போகலும் சிறுவணிகம் நம் அன்றாடத் தேவைகளான பால் , கீரை ,
காய்கறிகள் போன்றவற்றை விற்பனை செய்பவர்கள் சிறு வணிகர்கள் ஆவர். இவர்கள் சிறு முதலீட்டில் பொருள்களை வாங்கி வந்து வீதிகளில் வைத்து விற்பனை செய்வர். தலையில் சுமந்து சென்று விற்றல் , தரைக்கடை அமைத்து விற்றல் , தள்ளுவண்டி மூலம் விற்றல் போன்ற முறைகளில் சிறு வணிகம் நடைபெறுகிறது. சிறு வணிகர்கள் நுகர்வோரிடம் நேரடித் தொடர்பு கொள்பவர்கள் ஆவர். பெருவணிகம் நற்றிணை – 183 பாலொடு வந்து கூழொடு பெயரும் குறுந்தொகை - 23 பொன்னொடு வந்து கறியொடு பெயரும் அகநானூறு - 149 தமிழ்நாட்டின் தலைசிறந்த துறைமுகமாகப் பூம்புகார் விளங்கியது.
அவ்வூர்த் துறைமுகத்தில் பல்வேறு நாட்டுக் கப்பல்கள் தத்தம் நாட்டுக் கொடிகளோடு வந்து நின்றன. அவற்றின் மூலம் வெளிநாட்டுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தமிழ்நாட்டுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. வணிகத்தைத் தனிநபர் வணிகம் , நிறுவன வணிகம் என்றும் பிரிக்கலாம். தனிநபரால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் வணிகம் தனிநபர் வணிகம் ஆகும். ஒன்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து முதலீடு செய்து நடத்துவது நிறுவன வணிகம் ஆகும். ****** பெருந்தொகையை முதலீடு செய்து பொருள்களை அதிக அளவில் திரட்டி வைத்து விற்பனை செய்வது பெருவணிகம்
ஆகும். பெருவணிகர்கள் பொருள்கள் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் இருந்து மொத்தமாகக் கொள்முதல் செய்வர். அவற்றைச் சிறுவணிகர்களுக்கு விற்பனை செய்வர். பெருவணிகர்களுக்கு நுகர்வோருடன் நேரடித் தொடர்பு இருப்பது அரிது. ஏற்றுமதியும் இறக்குமதியும் ரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களைப் பிற நாடுகளுக்கு அனுப்புவது ஏற்றுமதி எனப்படும். பிற நாடுகளில் இருந்து பொருள்களை வாங்குவது இறக்குமதி ஆகும். பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து தேக்கு , மயில்தோகை , அரிசி , சந்தனம் , இஞ்சி , மிளகு போன்றவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி
செய்யப்பட்டன. சீனத்திலிருந்து கண்ணாடி , கற்பூரம் , பட்டு போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன. அரேபியாவில் இருந்து குதிரைகள் வாங்கப்பட்டன. வணிகத்தில் நேர்மை அக்கால வணிகர்கள் நேர்மையாகத் தொழில் செய்தனர் என்பதைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின் திருக்குறள் – 120 என்னும் திருக்குறள் வணிகரின் நேர்மையைப் பற்றிக் கூறுகிறது. வணிகர்கள் பொருளை வாங்கும்பொழுது உரிய அளவைவிட அதிகமாக வாங்க மாட்டார்கள். பிறருக்குக் கொடுக்கும் பொழுது அளவைக் குறைத்துக்
கொடுக்கமாட்டார்கள். எனவே வணிகரை " நடுவு நின்ற நன்னெஞ்சினோர் " என்று பட்டினப்பாலை பாராட்டுகிறது. இணையவழி வணிகம் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்க நேரம் இல்லாதவர்களுக்கு இணையவழி வணிகம் உதவுகிறது. இணையத்தளம் மூலம் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பல உள்ளன. இவற்றின் இணையத்தளப் பக்கத்தில் நமக்குத் தேவையான பொருள்களைப் பற்றிய விவரங்கள் இருக்கும். பொருள்களின் தரம் , விலை , சிறப்பு ஆகியவற்றைப் பிற நிறுவனப் பொருள்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். நமக்குப் பிடித்த பொருள்களை நம் வீட்டிற்கே வரவழைக்கலாம். பொருளைப்
பெற்றுக் கொண்ட பிறகு பணம் செலுத்தலாம். மின்னணுப் பரிமாற்றம் மூலமும் பணத்தைச் செலுத்தலாம். வணிகம் பண்டமாற்று முறையாகத் தொடங்கியது. பணத்தைப் பயன்படுத்தும் முறையாக வளர்ந்தது. இன்று மின்னணுப் பரிமாற்றம் செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளது. வருங்காலத்தில் வணிகத்தில் இன்னும் பல புதுமைகள் வரக்கூடும். கற்பவை கற்றபின் 1. உங்கள் ஊரில் உற்பத்தியாகும் பொருள்களின் பெயர்களைப் பட்டியலிடுக. 2. ஒவ்வொரு ஊரிலும் கிடைக்கும் சிறப்புப் பொருள்களின் பெயர்களை 3. அட்டவணைப்படுத்துக. ( எ.கா. ) மதுரை மல்லி படித்து மகிழ்க . கொள்வதும் மிகை
கொளாது கொடுப்பதும் குறைபடாது -பட்டினப்பாலை சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்கு அணி. -திருக்குறள் * மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர் அ ) நுகர்வோர் இ ) முதலீட்டாளர் ஆ ) தொழிலாளி ஈ ) நெசவாளி 2. வணிகம் + சாத்து என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ ) வணிகசாத்து இ ) வணிகச்சாத்து ஆ ) வணிகம்சாத்து ஈ ) வணிகத்துசாத்து 3. பண்டம் + மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ ) பண்டமாற்று இ ) பண்மாற்று ஆ )
பண்டம்மாற்று ஈ ) பண்டுமாற்று | 4. மின்னணு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ ) மின் + னணு இ ) மின்னல் + அணு 5. விரிவடைந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ஆ ) விரி + அடைந்த ஈ ) விரிவ் + அடைந்த அ ) விரி + வடைந்த இ ) விரிவு + அடைந்த பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக அ ) வணிகம் ஆ ) ஏற்றுமதி இ ) சில்லறை ஈ ) கப்பல் குறுவினா 1. வணிகம் என்றால் என்ன ? 2. பண்டமாற்று முறைக்கு எடுத்துக்காட்டுத் தருக. 3. சிறுவணிகப் பொருட்கள் யாவை ? ஆ ) மின்ன + அணு ஈ ) மின் + அணு சிறுவினா 1. சிறுவணிகம் ,
பெருவணிகம் - வேறுபடுத்துக. 2. பழந்தமிழர் ஏற்றுமதி , இறக்குமதி செய்த பொருள்கள் எவை ? சிந்தனை வினா 1. வணிகப் பொருள்கள் தற்காலத்தில் எவ்வாறெல்லாம் மக்களை வந்தடைகின்றன ? 2. உங்கள் பகுதியில் நடைபெறும் தொழில்களைப் பட்டியலிடுக. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எடுத்து எழுதுக. ( மின்னணு வணிகம் , காசோலை , இணையத்தள வணிகம் , வரைவோலை , வங்கி , மின்னணு மயம் , பற்று அட்டை , பணத்தாள் , கடன் அட்டை ) தமிழ்ச்சொல் ஆங்கிலச் சொல் கரன்சி நோட் பேங்க் செக் டிமாண்ட் டிராஃப்ட் டிஜிட்டல் டெபிட் கார்டு கிரெடிட் கார்டு ஆன்லைன்
ஷாப்பிங் ஈ - காமர்ஸ் இயல் ஆறு நுழையும்முன் உழைப்பே மூலதனம் பூங்குளம் என்னும் ஊரில் அருளப்பர் என்னும் வணிகர் இருந்தார். ஒருமுறை அவர் வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டி இருந்தது. தமது பிள்ளைகள் வளவன் , அமுதா , எழிலன் ஆகிய மூவரையும் அழைத்தார். அருளப்பர் அவர்களிடம் விடைபெற்றுச் சென்றார். அவர் சென்றதும் மூன்று பிள்ளைகளும் ஆலோசனை செய்தனர். " பிள்ளைகளே ! நான் வெளிநாட்டிற்குச் செல்ல இருக்கிறேன். நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் பணம் தருகிறேன். நான் கொடுத்த பணத்தைக் கவனமாகப் பாதுகாத்து எனக்குத் திருப்பித்தர வேண்டும் " எனக்
கூறினார். " நமது திறமையை எடைபோடவே தந்தை நமக்குப் பணத்தைக் அமுதா. " 1 " பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர் " என்பது ஒளவையாரின் அறிவுரை. பணத்தைப் பயன்படுத்தாமல் வைத்திருப்பது மடமை ஆகும். பணத்தைக் கொண்டு ஏதேனும் ஒரு தொழில் செய்து வாழ்வில் முன்னேற வேண்டும். பிறருக்கு உதவியாக வாழ வேண்டும். அதுவே பணத்தின் பயன். இக்கருத்தை விளக்கும் கதை ஒன்றை அறிவோம் வாருங்கள். ஒவ்வொருவருக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் கொடுத்தார். மூவரும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர். கொடுத்திருக்கிறார் ' என்றான் வளவன். விரிவானம் "
நானும் அப்படித்தான் நினைக்கிறேன் " என்றாள் பாதுகாக்கத் தெரிகிறதா ? என்று பார்க்கவே கொடுத்திருக்கிறார் " என்றான் எழிலன். வளவன் உழவுத்தொழிலில் ஆர்வம் உடையவன். தந்தை கொடுத்த பணத்தைக் கொண்டு நிலத்தைக் குத்தகைக்குப் பிடித்தான். அந்நிலத்தை உழுது பண்படுத்தினான். வேலியிட்டான். பண்படுத்திய நிலத்தில் காய்கறித் தோட்டத்தை அமைத்தான். நாள்தோறும் கவனமுடன் பாதுகாத்துப் பராமரித்து வந்தான். தோட்டம் முழுவதும் அவரை , பாகல் , வெண்டை , கத்தரி முதலிய காய்கள் காய்த்துக் குலுங்கின. அவற்றை நகரத்திற்குக் கொண்டு சென்று விற்பனை
செய்தான். அமுதாவிற்கு ஆடு , மாடுகள் வளர்ப்பதில் விருப்பம் அதிகம். தந்தை கொடுத்த பணத்தைக் கொண்டு நாட்டு மாடுகள் சிலவற்றை வாங்கினாள். அவற்றை அக்கறையோடு வளர்த்து வந்தாள். அவை தந்த பாலை வீடு வீடாகச் கொண்டு சென்று விற்றாள். மேலும் தயிர் , வெண்ணெய் , நெய் போன்றவற்றை மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் விற்றுப் பொருள் ஈட்டினாள். எழிலன் தந்தை கொடுத்த பணத்தைப் பத்திரமாக வைத்திருந்து மீண்டும் தந்தையிடம் L ஒ க வேண்டும் என முடிவு செய்தான்.'பணம் வீட்டில் இருந்தால் திருட்டுப் போய்விடும் ; வட்டிக்கு முதலீடு செய்தால் வட்டிக்கு
ஆசைப்பட்டான் எனத் தந்தை தாழ்வாக நினைத்துக் கொள்வாரே ' என எண்ணினான். அருகில் உள்ள வங்கிக்குச் சென்று பாதுகாப்புப் பெட்டக அறை ஒன்றை வாடகைக்கு எடுத்தான். அதில் வைத்துப் பூட்டி விட்டுத் திரும்பினான். அருளப்பர் தம் பயணத்தை முடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார். வளவனை அழைத்தார். " நான் கொடுத்த பணம் எங்கே ? " என்று கேட்டார். வளவன் " அப்பா , நீங்கள் எனக்குக் கொடுத்த பணத்தைக் கொண்டு வேளாண்மை செய்தேன். நல்ல வருவாய் கிடைத்தது. நீங்கள் கொடுத்த பணம் இப்போது இரண்டு மடங்காக உயர்ந்து உள்ளது " எனக் கூறித் தந்தையின் முன்
பணத்தை வைத்தான். தந்தை மகிழ்ச்சி அடைந்தார். " நல்லது ! உண்மையும் உழைப்பும் உன்னிடமும் உள்ளன. அந்தப் பணத்தை நீயே வைத்துக் கொள். வேளாண்மையைத் தொடர்ந்து செய் " என்றார். அடுத்து அமுதாவை அழைத்தார். அமுதா , " அப்பா நான் மாடுகளை வாங்கிப் பால் கறந்து விற்றேன். நீங்கள் தந்த பணம் இரண்டு மடங்காக ஆகியிருக்கிறது. இதோ பெற்றுக் கொள்ளுங்கள் " என்று கூறிப் பணத்தைத் தந்தையிடம் கொடுத்தாள். " மிக்க மகிழ்ச்சி , இந்தப் பணத்தை எனது பரிசாக நீயே வைத்துக்கொள். பண்ணையை மேலும் விரிவாக்கி நடத்து , வாழ்த்துகள் " என்றார் தந்தை. இறுதியாக
எழிலனை அழைத்தார் தந்தை. அவன் வங்கியிலிருந்து தந்தை கொடுத்த தொகையை எடுத்து வந்தான். " அப்பா நீங்கள் கொடுத்த பணத்தை வங்கிப் பாதுகாப்புப் பெட்டகத்தில் பத்திரமாக வைத்திருந்தேன் " என்று கூறிக் கொடுத்தான். " பணம் என்பது வங்கி காப்பறையில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய பொருளன்று. அதைப் பயன்படுத்தித் தொழில் செய்து முன்னேறுவது இளம் வயதும் ஆற்றலும் உடையோர் செயல். எழிலா ! நீ பணத்தையும் பயன்படுத்தவில்லை. காலத்தையும் வீணாக்கிவிட்டாய். வயதில் இளையவன் நீ. என்னுடன் சிறிதுகாலம் உடனிருந்து தொழிலைக் கற்றுக்கொள். உன் எதிர்கால
வாழ்வுக்கு அது உதவும் " என்றார். எழிலன் தன் தவற்றை உணர்ந்தான். தந்தையிடம் தொழில் கற்று முன்னேற வேண்டும் என முடிவு செய்தான். கற்பவை கற்றபின் 1. உழைப்பே மூலதனம் கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக் காட்டுக. 2. நீங்கள் எழிலனாக இருந்திருந்தால் என்ன செய்து இருப்பீர்கள் ? வகுப்பறையில் பேசுக. 3. கதையில் இடம் பெறும் கதாபாத்திரங்களில் உங்களைக் கவர்ந்தவர் யார் ? ஏன் ? ஏர் * மதிப்பீடு சுருக்கி எழுதுக உழைப்பே மூலதனம் கதையைச் சுருக்கி எழுதுக. இயல் ஆறு சுட்டு எழுத்துகள் , வினா எழுத்துகள் சுட்டு எழுத்துகள் அவன் , இவள் , அங்கு
, இங்கு , அந்த , இந்த ஆகிய சொற்களைக் கவனியுங்கள். அவை ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றன. இவ்வாறு சுட்டிக்காட்டுவதற்கு அச்சொற்களின் முதலில் அமைந்துள்ள அ , இ ஆகிய - எழுத்துகளே காரணம் ஆகும். இவ்வாறு ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர். அ , இ , உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும். ஆனால் , இன்று ' உ ' என்னும் எழுத்தைச் சுட்டாகப் பயன்படுத்துவது இல்லை. அகச்சுட்டு கற்கண்டு இவன் , அவன் , இது , அது இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள்
தருவதில்லை. இவ்வாறு , சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே ( அகத்தே ) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது அகச்சுட்டு எனப்படும். புறச்சுட்டு அவ்வானம் - இம்மலை - இந்நூல் - இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும். இவ்வாறு சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே ( புறத்தே ) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது புறச்சுட்டு எனப்படும். தெரிந்து தெளிவோம் அண்மைச்சுட்டு இவன் , இவர் , இது , இவை , இம்மரம் , இவ்வீடு இச்சொற்கள் நம் அருகில் ( அண்மையில் ) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே , இஃது
அண்மைச்சுட்டு எனப்படும். அண்மைச்சுட்டுக்குரிய எழுத்து ' இ ' ஆகும். சேய்மைச்சுட்டு அம்மரம் அவள் , அவர் , அது , அவை , அவ்வீடு , இச்சொற்கள் தொலைவில் ( சேய்மையில் ) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே , இது சேய்மைச்சுட்டு எனப்படும். சேய்மைச்சுட்டுக்குரிய எழுத்து ' அ ' ஆகும். அம்மரம் , இவ்வீடு ஆகியவை புறச்சுட்டுகள் என்பதை அறிவோம். இச்சொற்களை அந்த மரம் , இந்த வீடு என்றும் வழங்குகிறோம். அ , இ ஆகிய சுட்டு எழுத்துகள் மாற்றம் பெற்று ( திரிந்து ) அந்த , இந்த என வழங்குகின்றன. இவ்வாறு , அ , இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த ,
இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது சுட்டுத்திரிபு எனப்படும். கற்பவை கற்றபின் கரிகாலனும் அவனுடைய தங்கை மலர்க்கொடியும் பூங்காவிற்குச் சென்றனர். அங்கு இருந்த செடிகளில் பூக்கள் மலர்ந்து இருந்தன. " இங்கு உள்ள மலர்களில் இம்மலர் அழகாக உள்ளது. அம்மலர் பெரியதாக உள்ளது " என்றாள் மலர்க்கொடி. " இந்த மலரைப் பார் அந்த மலரை விட அழகாக உள்ளது " என்றான் கரிகாலன். 1. இப்பத்தியில் உள்ள சுட்டுச் சொற்களை எடுத்து எழுதுக 2. நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சுட்டுச் சொற்கள் சிலவற்றை எழுதுக. வினா எழுத்துகள் வினாப் பொருளைத்
தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர். சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும். எ , யா , ஆ , ஓ , ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும். மொழியின் முதலில் வருபவை மொழியின் இறுதியில் வருபவை மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை - ஏ ( ஏன் , நீதானே ) அகவினா எது , யார் , ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகளுக்குப் பொருள் இல்லை. - எ , யா ( எங்கு , யாருக்கு ) ஆ , ஓ ( பேசலாமா , தெரியுமோ ) இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே
இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும். புறவினா அவனா ? வருவானோ ? இச்சொற்களில் உள்ள ஆ , ஓ ஆகிய வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும். இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும். கற்பவை கற்றபின் பத்தியில் உள்ள வினாச் சொற்களை எடுத்து எழுதுக. செழியன் துணிக்கடைக்குச் சென்றான். விற்பனையாளர் ஒருவரிடம் " ஆயத்த ஆடைகள் பகுதி எங்கு உள்ளது ? " என்று வினவினான். " யாருக்கு ஆடை வேண்டும் ? உனக்கா பெரியவர்களுக்கா ? " என்று கேட்டார் விற்பனையாளர். " ஏன்
அப்படிக் கேட்கிறீர்கள் ? சிறுவர்களுக்கான ஆடைகள் இல்லையோ ? " என்று வினவினான். " நீ கேட்பது உன் அளவுக்குரிய ஆடைதானே ? அதோ அந்தப் பகுதியில் இருக்கிறது " என்றார் விற்பனையாளர். மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது. 1. என் வீடு 2. தம்பி 3. நீர் 4. யார் 5. உன் வீடு உள்ளது. தேங்கி இருக்கிறது ? தெரியுமா ? அமைந்துள்ளது ? ( அது / அங்கே ) ( இவர் / இங்கே ) குறுவினா 1. சுட்டு எழுத்துகள் என்றால் என்ன ? அவை யாவை ? 2. அகவினா , புறவினா - வேறுபாடு யாது ? சிந்தனை வினா அகச்சுட்டு , அகவினா , புறச்சுட்டு , புறவினா என்று
பெயரிட்ட காரணத்தை எழுதுக. T சொற்றொடர்ப் பயிற்சி. அ ) அந்த , இந்த என்னும் சுட்டுச்சொற்களை அமைத்துத் தொடர்கள் எழுதுக. ஆ ) எங்கே , ஏன் , யார் ஆகிய வினாச்சொற்களை அமைத்துத் தொடர்கள் எழுதுக. சொற்களைச் சேர்த்துச் சொற்றொடரை நீட்டி எழுதுக. அ ) நான் பள்ளியில் படிக்கிறேன். ( ஆறாம் வகுப்பு , அரசு ) ஆ ) பொன்னன் முன்னேறினான். ( வணிகம் செய்து , பொருளீட்டி , துணி ) பின்வரும் கட்டங்களில் உள்ள சொற்களைக் கொண்டு சொற்றொடர்கள் அமைக்க. நீ நான் அவன் அவள் அவர் மொழியை ஆள்வோம் ! சொல்லக் கேட்டு எழுதுக மல்லெடுத்து பண்டமாற்று வணிகம்
வேளாண்மை ஊ குச் ( ஒரு ) அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தக்க இடத்தில் சேர்த்து எழுதுங்கள். அ ) நீங்கள் வரும்போது எனக்குப் புத்தகம் வாங்கி வாருங்கள். ஆ ) நாம் உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும். ( இயற்கை ) இ ) நான் சொன்ன வேலையை அக்கறையுடன் செய்திருக்கிறார்கள். ( மிகுந்த ) சென்றாய் சென்றார் சென்றேன் சென்றான் சென்றாள் கதிர்ச்சுடர் மின்னணுப் பரிமாற்றம் அண்மைச்சுட்டு கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக மனிதர்களுக்குத் தேவையான பொருள்களைக் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கங்களுள் ஒன்று.
ஓர் இடத்தில் உற்பத்தியாகும் பொருள்களைப் பல இடங்களுக்கு அனுப்புவதும் பல இடங்களில் கிடைக்கும் பொருள்களை ஓர் இடத்தில் கிடைக்கச் செய்வதும் வணிகம் ஆகும். கிடைக்கும் பொருள்களின் மதிப்பைக் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகமாகும். சான்றாகக் கல் என்பது விற்பனைப் பொருளன்று. ஆனால் அதனைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இதனை மதிப்புக் கூட்டுதல் என்பர். மதிப்பை 2. சிலை செதுக்கப்படும்போது உதிரும் கல்தூளை 3. வணிகத்தின் நோக்கம் என்ன ? 4. மதிப்புக் கூட்டுதல் என்றால் என்ன ? 3.
இப்பத்திக்கு ஏற்ற தலைப்பை எழுதுக விடுகதைக்கு விடை காணுங்கள் க் கூட்டிப் புதிய பொருளாக இ ) எண்ணிக்கையை ( ஈ ) எடையை கடிதம் எழுதுக. பிறந்த நாள் பரிசு அனுப்பிய மாமாவுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதுக. மொழியோடு விளையாடு ( கப்பல் , ஏற்றுமதி இறக்குமதி , தராசு , நெல்மணி , குதிரை ) 1 ) தனி ஆளாய் இருந்தால் நடுநிலையாய் இருந்திடுவான் ; யாரும் வந்து அமர்ந்தால் ஏற்றம் இறக்கம் காட்டிடுவான். அவன் யார் ? 2 ) தண்ணீரில் கிடப்பான் ; தள்ளாடித் தள்ளாடி நடப்பான் ; காலில்லாத அவன் யார் ? 3 ) பேசமுடியாத ஓட்டப்பந்தய வீரனுக்கு
வாய்க்கு மட்டும் பூட்டு. அவன் யார் ? 4 ) இயந்திரத்தால் செய்ய முடியாத மணி ; ஊசி நூலில் கோக்க முடியாத மணி ; பூமியில் விளையும் மணி ; பூவுலகத்தார் விரும்பும் மணி. எந்த மணி ? மாற்றலாம். 5 ) ஒருமதி வெளியே போகும் ; ஒருமதி உள்ளே வரும் ; இருமதியும் சேர்ந்துவிட்டால் பலநிதியும் சேர்ந்து வரும். அவை என்ன ? & ith 5td Tamil COSE Pagns 77-206.indd 144 பின்வரும் நவமணிகளை அகரவரிசைப்படுத்தி எழுதுக. நீலம் , கோமேதகம் , மாணிக்கம் , வைரம் , பவளம் , வைடூரியம் , முத்து , புஷ்பராகம் , மரகதம் செயல்திட்டம் 1. பண்டைத் தமிழகத்தின்
துறைமுகங்கள் பற்றியும் அங்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களைப் பற்றியும் எழுதுக. 2. உங்களுக்குத் தெரிந்த மூன்று தொழில்களின் பெயர்களை எழுதுக. அத்தொழிலின் தொடர்புடைய ஐந்தைந்து சொற்களைப் பட்டியலிடுக. ( எ.கா. ) உழவுத் தொழில் = ஏர் , கலப்பை , அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது ஒரு பொருளைக் கொடுத்து வேறு பொருளைப் பெறும் முறை பயணப்படகுகள் பாரம்பரியம் நுகர்வோர் மேலிருந்து கீழ் 1. காடும் காடு சார்ந்த இடமும் என் பொறுப்புகள் 1. இந்தியக் குடிமகனாக எனது கடமையை நிறைவேற்றுவேன். 2. கலப்படம் பற்றிய
விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவேன். 3. நெகிழிப் பயன்பாட்டை இயன்றவரை தவிர்ப்பேன். 4. கடைக்குச் செல்லும்போது துணிப்பைகளை எடுத்துச் செல்வேன். 3. தோட்டத்தைச் சுற்றி அமைக்க வேண்டும். 145 கீழிலிருந்து மேல் மீனவருக்கு மேகம் போன்றது. 5. உடலுக்குப் போர்வையாக அமைவது நிற்க அதற்குத் தக... கடற்பயணம் தொழில் முனைவோர் கலப்படம் வணிகர் பல்வேறு நிறுவனங்களின் கைப்பேசி விலைப் பட்டியலையும் அதன் சிறப்பு இயல்புகளையும் இணையத்தில் கண்டு தொகுத்து வருக. இணையச் செயல்பாடுகள் மி ழ் http : / விளையாடிப் பார்ப்போமா... சொல்லினம் (
Sollinam ) இணையத்தில் காண்க சொல்லினம் ( 5oliram ) கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்திச் சொல்லினம் என்னும் செயலியைப் பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்க. செயலியின் முதல் பக்கத்தில் எளிமை , கடினம் என்னும் இரு தெரிவுகள் தோன்றும். ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்து கொடுக்கப்பட்டிருக்கும் எழுத்துகளில் இருந்து புதிய சொற்களை உருவாக்குக. அரிசை தடினம் சிறப்பு 31 சரியான கோர்வை சரியாக சிகார்திரவை 9 146 100 இயல் கற்றல் நோக்கங்கள் புதுமைகள் செய்யும் தேசமிது இந்திய நாட்டின் சிறப்புகளை அறிதல் வாழ்வில்
எளிமையின் சிறப்பை உணர்தல் சமூக மாற்றத்தில் காந்தியின் பங்கினைத் தெரிந்து கொள்ளுதல் விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கினை அறிந்து போற்றுதல் சொற்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல் இயல் பாரதம் அன்றைய நாற்றங்கால் நமது நாடு வளம் பொருந்தியது. இங்கு இயற்கை வளங்கள் மட்டுமன்றி இலக்கிய வளங்களும் மிகுந்துள்ளன. வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டது நமதுநாடு. இமயம் முதல் குமரி வரை வாழும் இந்தியர்கள் அனைவரும் உணவு , உடை , மொழி , நாகரிகம் ஆகியவற்றால் வேறுபட்டு இருந்தாலும் உணர்வால் ஒன்றுபட்டவர்களே. தேசிய ஒருமைப்பாட்டைப்
போற்றும் பாடலை அறிவோம் வாருங்கள். நுழையும்முன் புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வாசலிது ! கவிதைப்பேழை தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான் தேசம் உடுத்திய நூலாடை ! மெய்களைப் போற்றிய இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வு என்கிற மேலாடை ! காளி தாசனின் தேனிசைப் பாடல்கள் காவிரிக் கரையில் எதிரொலிக்க கம்பனின் அமுதக் கவிதை களுக்குக் கங்கை அலைகள் இசையமைக்க கன்னிக் குமரியின் கூந்த லுக்காகக் காஷ்மீர்த் தோட்டம் பூத்தொடுக்கும் ! மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக் கிழக்குக் கரையின் நலம்கேட்கும் ! * புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப்
புன்னகை செய்த பொற்காலம் ! கல்லைக் கூட காவிய மாக்கிக் கட்டி நிறுத்திய கலைக்கூடம் ! அன்னை நாட்டின் அமுத சுரபியில் அன்னிய நாடுகள்பசிதீர அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி அறத்தின் ஊன்று கோலாக புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வாசலிது ! * சொல்லும் பொருளும் மெய்- உண்மை தேசம் - நாடு பாடலின் பொருள் பூமியின் கிழக்கு வாசலாகத் திகழும் நமது இந்தியநாடு பல புதுமைகளைச் செய்த நாடு. திருக்குறள் நமது நாடு அணிந்திருக்கும் ஆடையாக விளங்குகின்றது. உண்மைகளைப் போற்றும் இந்தியத் தாய்க்கு மெய்யுணர்வே மேலாடையாக விளங்குகின்றது.
காளிதாசர் இயற்றிய இனிமையான பாடல்கள் காவிரிக்கரை வரை எதிரொலிக்கின்றன. கம்பரின் அமுதம் போன்ற கவிதை வரிகளுக்குக் கங்கை ஆற்றின் அலைகள் இசையமைக்கின்றன. குமரிமுனை ஆகிய கன்னியின் கூந்தலுக்காகக் காஷ்மீரத்து மலர்கள் மாலையாகத் தொடுக்கப்படுகின்றன. மேற்கே தோன்றும் நதிகள் கிழக்கு எல்லை வரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன. புல்வெளிகள் எல்லாம் பூக்கள் மலர்ந்து பொற்காலமாகப் புன்னகை புரிகின்றன. கல்லில் செதுக்கிய சிற்பங்கள் யாவும் காவியக் கலைக்கூடமாகக் காட்சி தருகின்றன. அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக அன்னை பாரத நாடு
திகழ்கின்றது. நம் நாடு பிறநாட்டு மக்களின் பசியையும் போக்கி வருகின்றது. அறத்தின் ஊன்றுகோலாக காந்தியடிகளின் அகிம்சை என்னும் சிறிய கைத்தடி விளங்குகின்றது. நூல் வெளி தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன். கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர். புதிய விடியல்கள் , எங்கள் கிழக்கு , விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இயற்றிய நூல்களாகும். இப்பாடல் தாராபாரதியின் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. கற்பவை கற்றபின் 1. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலை இசையோடு பாடுக. 2. நாட்டு முன்னேற்றத்தில் நம் பங்கு
என்னும் தலைப்பில் பேசுக. மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல் அ ) திருவாசகம் இ ) திரிகடுகம் ஆ ) திருக்குறள் ஈ ) திருப்பாவை 2.காளிதாசனின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம் அ ) காவிரிக்கரை ஆ ) வைகைக்கரை 3. கலைக்கூடமாகக் காட்சி தருவது அ ) சிற்பக்கூடம் ஆ ) ஓவியக்கூடம் இ ) பள்ளிக்கூடம் 4.நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ ) நூல் + ஆடை ஆ ) நூலா + டை இ ) நூல் + லாடை கங்கைக்கரை ஈ ) யமுனைக்கரை 3. எதிர் + ஒலிக்க என்பதைச் சேர்த்து
எழுதக் கிடைக்கும் சொல் அ ) எதிரலிக்க ஆ ) எதிர்ஒலிக்க இ ) எதிரொலிக்க ஈ ) சிறைக்கூடம் ஈ ) நூலா + ஆடை நயம் அறிக 1. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக. 2. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக. ஈ ) எதிர்ரொலிக்க 3. பாரதம் அன்றைய நாற்றங்கால் என்னும் பாடலில் அமைந்துள்ள இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக. 150 குறுவினா 1. தாராபாரதியின் பாடலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்களைக் குறிப்பிடுக. 2. இந்தியாவின் மேற்கு , கிழக்கு ஆகிய
திசைகளை இணைத்துக் கவிஞர் காட்டும் காட்சியை எழுதுக. சிந்தனை வினா நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டியவை பற்றிச் சிந்தித்து எழுதுக. I இயல் காந்தியடிகள் இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர் என்பதை நாடு நன்கு அறியும். பெண்கள் முன்னேற்றம் , சமுதாய மறுமலர்ச்சி , தீண்டாமை ஒழிப்பு முதலியவற்றுக்காகவும் அவர் பாடுபட்டார். எளிமையை ஓர் அறமாகப் போற்றினார். இந்தியாவில் அவர் காலடி படாத இடமே இல்லை. ' தமிழ்நாட்டின் மீதும் தமிழ்மொழியின் மீதும் காந்தியடிகள் கொண்ட பற்றினைக் காண்போம் வாருங்கள். நுழையும்முன் -ரைநடை
உலகம் தமிழ்நாட்டில் காந்தி மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகம் காந்தியடிகளுக்குத் தமிழ்நாட்டின் மீதும் தமிழ் மக்கள் மீதும் மிகுந்த அன்பு உண்டு. அவர் பலமுறை தமிழ்நாட்டில் பயணம் செய்துள்ளார். அப்போது சுவையான பல நிகழ்வுகள் நடந்துள்ளன. அவற்றில் சிலவற்றைக் காணலாம். 1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காந்தியடிகள் சென்னைக்கு வந்தார். அப்போது ஆங்கில அரசு ரௌலட் சட்டம் என்னும் கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்தது. அதனை எதிர்த்துப் பெரிய போராட்டத்தை நடத்தக் காந்தியடிகள் திட்டமிட்டார். அதைப் பற்றிய கருத்தாய்வுக்
கூட்டம் இராஜாஜியின் வீட்டில் நடைபெற்றது. காந்தியடிகள் , அங்கு ஒரு மெத்தையில் அமர்ந்து இருந்தார். அவருக்கு அருகில் இராஜாஜியும் மற்ற தலைவர்களும் நின்றுகொண்டு இருந்தனர். I அப்போது அங்கு வந்த பாரதியார் விரைந்து சென்று காந்தியடிகளின் அருகில் அமர்ந்தார். " திரு. காந்தி அவர்களே ! நான் இன்று மாலை ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். அதற்குத் தாங்கள் தலைமைதாங்க முடியுமா ? " என்று கேட்டார். " இன்று எனக்கு வேறு பணி இருக்கிறது. உங்கள் பொதுக்கூட்டத்தை நாளை நடத்த முடியுமா ? " என்று கேட்டார் காந்தியடிகள். " அது
முடியாது. திட்டமிட்டபடி கூட்டம் நடக்கும். தாங்கள் தொடங்கப்போகும் இயக்கத்துக்கு என் வாழ்த்துகள் " என்று கூறிய பாரதியார் " நான் போய் வருகிறேன் " என்று கூறி எழுந்து சென்றுவிட்டார். அவர் சென்றதும் " இவர் யார் ? " என்று காந்தி வியப்புடன் கேட்டார். " இவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர் " என்றார் இராஜாஜி. " அப்படியா ! இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் " என்றார் காந்தியடிகள். இந்நிகழ்ச்சியின் மூலம் பாரதியார் பற்றிய காந்தியடிகளின் மதிப்பீட்டை அறியலாம். 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு
வந்தார். அப்போது புகைவண்டியில் மதுரைக்குச் சென்றார். செல்லும் வழியில் பெரும்பாலான மக்கள் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே அணிந்து இருப்பதைக் கண்டார். அப்போது காந்தியடிகள் நீளமான வேட்டி , மேல்சட்டை , பெரிய தலைப்பாகை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பெரும்பாலான இந்தியர்கள் போதிய உடைகள் இல்லாமல் இருக்கிறார்கள். தான் மட்டும் இவ்வளவு துணிகளை அணிவதா ? என்று சிந்தித்தார். அன்றுமுதல் வேட்டியும் துண்டும் மட்டுமே அணியத் தொடங்கினார். அவரது தோற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. அந்தக்
கோலத்திலேயே தம் வாழ்நாள் முழுவதும் இருந்தார். உலகம் போற்றிய எளிமைத் திருக்கோலம் இதுவாகும். காந்தியடிகள் ஒருமுறை காரைக்குடியைச் சுற்றியுள்ள ஊர்களில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது கானாடுகாத்தான் என்னும் ஊரில் அன்பர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்தார். அந்த வீடு மிகவும் ஆடம்பரமாக இருந்தது. வீட்டில் எங்குப் பார்த்தாலும் வெளிநாட்டு அலங்காரப் பொருள்கள் நிறைந்து இருந்தன. காந்தியடிகள் அந்த அன்பரிடம் , " உங்கள் வீட்டை வெளிநாட்டுப் பொருள்களால் அழகு செய்து இருக்கிறீர்கள். அதற்குச் செலவு செய்த பணத்தில் பத்தில் ஒரு பங்கு
பணத்தை என்னிடம் கொடுத்தால் I போதும். இதைவிட அழகாகச் செய்துவிடுவேன் " என்று கூறினார். அதனைக் கேட்டு , அன்பர் தலைகுனிந்தார். அந்த வீட்டுக்குக் காந்தியடிகள் மறுமுறை வந்தபோது அங்கே வெளிநாட்டுப் பொருள்கள் ஒன்றுகூட இல்லை. காந்தியடிகள் மகிழ்வுடன் அவரைப் பாராட்டினார். காந்தியடிகள் ஒருமுறை மதுரையில் தங்கி இருந்தார். மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று வரலாம் என்று தலைவர்கள் அவரை அழைத்தனர். " அந்தக் கோவிலுக்குள் செல்ல எல்லா மக்களுக்கும் அனுமதி உண்டா ? " என்று காந்தியடிகள் கேட்டார். அங்கு இருந்தவர்கள் " இல்லை "
என்றனர். " அப்படியானால் அங்கே வரமாட்டேன் " என்று கூறிவிட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கோவிலுக்குள் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு மதுரைக்கு வந்த போதுதான் காந்தியடிகள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்றார். இதே போன்ற நிகழ்ச்சி குற்றாலத்திலும் நடைபெற்றது. குற்றால அருவியில் நீராட அனைவருக்கும் உரிமை அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் , அருவிக்குச் செல்லும் வழியில் ஒரு கோவில் இருந்தது. அதன் வழியாகச் செல்ல ஒருசாராருக்குத் தடை இருந்தது. எனவே அனைவரும் அருவியில் நீராட முடியாத
நிலை இருந்தது. அதனை அறிந்த காந்தியடிகள் குற்றால அருவியில் நீராட மறுத்துவிட்டார். மனிதர்களிடம் உயர்வு தாழ்வு பாராட்டக் கூடாது என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்ததை இதன்மூலம் அறிய முடிகிறது. காந்தியடிகள் தமக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பலமுறை கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியதாகக் கூறியுள்ளார். ஜி.யு.போப் எழுதிய தமிழ்க்கையேடு தம்மைக் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார். திருக்குறள் அவரைப் பெரிதும் கவர்ந்த நூலாகும். மோ.க.ஞாந்த காந்தியடிகளின் தமிழ்க்
கையெழுத்து 1937 ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது. அம்மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார். உ.வே.சாமிநாதர் வரவேற்புக்குழுத் தலைவராக இருந்தார். உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்தார். " இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது " என்று கூறினார் காந்தியடிகள். இந்நிகழ்வுகள் மூலம் ஏற்றத்தாழ்வு அற்ற சமுதாயம் மலர வேண்டும் என்னும் காந்தியடிகளின் உள்ள உறுதியை அறிந்து கொள்ளலாம். மேலும் அவர் தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றையும் அறிந்து
கொள்ள முடிகிறது. 1. காந்தியடிகளின் பொன்மொழிகளைத் திரட்டுக. 2. காந்தியடிகள் நடத்திய அறவழிப் போராட்டங்களின் பெயர்களைத் தொகுக்க. கற்பவை கற்றபின் ஏற்க மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. காந்தியடிகளிடம் உடைஅணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர் அ ) கோவை ஆ ) மதுரை இ ) தஞ்சாவூர் பொருத்துக 2. காந்தியடிகள் விரும்பினார். அ ) நாமக்கல் கவிஞர் ஆ ) பாரதிதாசன் இ ) உ.வே.சாமிநாதர் ஈ ) பாரதியார். 1. இலக்கிய மாநாடு 2. தமிழ்நாட்டுக் கவிஞர் 3. குற்றாலம் 4. தமிழ்க் கையேடு சொற்றொடரில் அமைத்து எழுதுக 1.ஆலோசனை 2.
பாதுகாக்க ஈ ) சிதம்பரம் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று பாரதியார் சென்னை ஜி.யு.போப் அருவி 3.மாற்றம் குறுவினா 1. காந்தியடிகள் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் முதலில் ஏன் நுழையவில்லை ? 2. காந்தியடிகளுக்குத் தமிழ் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிகழ்வைக் கூறுக. சிறுவினா 1. காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக அமைந்த நிகழ்வினை எழுதுக. 4. ஆடம்பரம் 2. காந்தியடிகளுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை எழுதுக. சிந்தனை வினா காந்தியடிகளிடம் காணப்படும் உயர்ந்த பண்புகளாக நீங்கள் கருதுபவை யாவை ? வணிகம்