text
stringlengths
11
513
பத்துத் தமிழ்ச் சொற்களைப் பட்டியலிடுக. வாழ்த்துகளைத் தமிழில் கூறுவோம் 3. ( எ.கா. ) பிறந்தநாள் வாழ்த்து நீண்ட நீண்ட காலம் - நீ , நீடு வாழ வேண்டும் ! வானம் தீண்டும் தூரம் - நீ , வளர்ந்து வாழ வேண்டும் ! அன்பு வேண்டும் ! அறிவு வேண்டும் ! பண்பு வேண்டும் ! பரிவு வேண்டும் ! எட்டுத்திக்கும் புகழ வேண்டும் ! எடுத்துக்காட்டு ஆக வேண்டும் ! உலகம் பார்க்க உனது பெயரை , நிலவுத் தாளில் எழுதவேண்டும் ! சர்க்கரைத் தமிழ் அள்ளி , தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறோம் ! பிறந்தநாள் வாழ்த்துகள் ! பிறந்தநாள் வாழ்த்துகள் ! இனிய
பிறந்தநாள் வாழ்த்துகள் ! பிறந்தநாள் வாழ்த்துகள் * மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ' தொன்மை ' என்னும் சொல்லின் பொருள்_ அ ) புதுமை ஆ ) பழமை இ ) பெருமை ஈ ) சீர்மை 2. ' இடப்புறம் ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. - அறிவுமதி அ ) இடன் + புறம் ஆ ) இடை + புறம் இ ) இடம் + புறம் ஈ ) இடப் + புறம் 3. ' சீரிளமை ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ ) சிறு + இளமை ஆ ) சீர்மை + இளமை இ ) சீரி + இளமை ஈ ) சீற் + இளமை | 4. சிலம்பு + அதிகாரம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ஆ )
சிலப்பதிகாரம் ஈ ) சில பதிகாரம் அ ) சிலம்பதிகாரம் இ ) சிலம்புதிகாரம் 5. கணினி + தமிழ் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ ) கணினிதமிழ் ஆ ) கணினித்தமிழ் இ ) கணிணிதமிழ் ஈ ) கனினிதமிழ் 6. " தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் " என்று பாடியவர் அ ) கண்ணதாசன் ஆ ) பாரதியார் இ ) பாரதிதாசன் ஈ ) வாணிதாசன் 7. ' மா ' ன்னும் சொல்லின் பொருள் அ ) மாடம் ஆ ) வானம் இ ) விலங்கு ஈ ) அம்மா கோடிட்ட இடத்தை நிரப்புக. 1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது 2.தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான
இலக்கண நூல் 3.மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் , அஃது அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும். சொற்களைச் சொந்தத் தொடரில் அமைத்து எழுதுக. 1. தனிச்சிறப்பு 2. நாள்தோறும் குறுவினா 1. தமிழ் ஏன் மூத்தமொழி என்று அழைக்கப்படுகிறது ? 2. நீங்கள் அறிந்த தமிழ்க் காப்பியங்களின் பெயர்களை எழுதுக. சிறுவினா 1. அஃறிணை , பாகற்காய் ஆகிய சொற்களின் பொருள் சிறப்பு யாது ? 2. தமிழ் இனிய மொழி என்பதற்கான காரணம் தருக. 3. தமிழ் மொழியின் சிறப்பைக் குறித்து ஐந்து வரிகளில் எழுதுக. சிந்தனை வினா 1. தமிழ் மொழி படிக்கவும் எழுதவும்
எளியது என்பது பற்றி உங்கள் கருத்து யாது ? 2. தமிழ் மொழி வளர்மொழி என்பதை உணர்கிறீர்களா ? காரணம் தருக. இயல் ஒன்று நுழையும்முன் அன்புள்ள அத்தை , விரிவானம் கனவு பலித்தது கடிதம் தமிழில் இயல் உண்டு ; இசை உண்டு ; நாடகம் உண்டு ; இவைமட்டுமல்ல அறிவியலும் உண்டு. தமிழுக்கு அறிவியல் புதிதல்ல. அன்று முதல் இன்று வரை அறிவியல் செய்திகளை இலக்கியங்கள் வாயிலாக வெளியிட்டிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இலக்கியங்கள் கூறும் செய்திகளை அறிவோமா ! அன்புள்ள அத்தைக்கு , வணக்கம். நான் நலம். நீங்கள் நலமா ? என் பள்ளிப்பருவக் கனவு நனவாகி
விட்டது. ஆம் அத்தை. இளம் அறிவியல் ஆய்வாளர் பணிக்கு நான் தெரிவு செய்யப்பட்டிருக்கிறேன். நாளை காலை சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணியில் சேரவேண்டும். இந்த மகிழ்ச்சியான நேரத்தில் உங்களைத்தான் நினைத்துக் கொள்கிறேன். நான் ஆறாம் வகுப்பு படித்தபோது உங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேனே ! நினைவிருக்கிறதா ? நான் நம்மீங்கள் நலமா ? வருங்காலத்தில் உங்களைப் போல அறிவியல் துறையில் பணியாற்ற வேண்டும் என்பது என் விமுப்பம். நான் அரசுப் பள்ளியில் தமிழ்வழியில் படிக்கிறேன். அது உங்களுக்கும் தெரியும். தமிழில் படித்து அறிவியல்
அறிஞர் ஆக முடியாது என்று பலரும் கூறுகிறார்கள். என்னால் சாதிக்க முடியாதா ? தமிழில் படித்தால் என் நனவு நிறை வேருமா ? எனக்கு அழிகாட்டுங்கள். றங்கள் அன்புக்கரிய , இன் சுவை. இடம் : மதுரை நாள் அதன்பிறகு நீங்கள் எனக்குத் தொடர்ந்து பல கடிதங்கள் எழுதினீர்கள். செய்திகள் பலவற்றைக் கூறி ஊக்கம் அளித்துக்கொண்டே இருந்தீர்கள். என் ஐயங்கள் எல்லாவற்றையும் தீர்த்துவைத்தீர்கள். என் கனவுகளுக்கு உரம் ஊட்டியவை உங்களின் கடிதங்களே ! அக்கடிதங்களை அறிவுக் கருவூலங்களாக இன்றும் பாதுகாத்து வருகிறேன். என்னுடைய உயர்வுக்குக் காரணமான அவற்றை
மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. | அன்புள்ள இன்சுவை , இங்கு நான் நலமாக இருக்கிறேன். உன் கடிதம் கிடைத்தது. ஆறாம் வகுப்பிலேயே உன் எதிர்கால இலக்கினை நீ உருவாக்கிக் கொண்டு விட்டாய். மகிழ்ச்சி தமிழில் படித்தால் சாதிக்க முடியாது என்பது தவறான எண்ணம். சாதனையாளர்கள் பலரும் தங்கள் தாய்மொழியில் படித்தவர்களே ! சாதனைக்கு மொழி ஒரு தடையே இல்லை. நீண்ட நெடுங்காலமாகவே அறிவியல் சிந்தனைகளோடு விளங்கியவர்கள் தமிழர்கள். தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் பல காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றை உன்னுடன்
பகிர நினைக்கிறேன். நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என்பது அறிவியல் உண்மை. தொல்காப்பியர் தமது தொல்காப்பியம் என்னும் நூலில் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆற்றிவு வரை வகைப்படுத்தியும் உள்ளார். கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும். பழந்தமிழ் இலக்கியங்களான முல்லைப்பாட்டு , பரிபாடல் , திருக்குறள் , கார்நாற்பது திருப்பாவை முதலிய நூல்களில் இந்த அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. திரவப் பொருள்களை
எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது என்ற அறிவியல் கருத்து ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி என ஒளவையார் கூறப்பட்டுள்ளது. பாடலில் போர்க்களத்தில் மார்பில் புண்படுவது இயல்பு. வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி பதிற்றுப்பத்து என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை , நரம்பினால் தைத்த செய்தியும் நற்றிணை என்னும் நூலில் காணப்படுகிறது. முற்கால இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள அறுவை மருத்துவத்துக்கான இன்றைய கூறுகள் வியப்பளிக்கின்றன
அல்லவா ? நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின். தொல்காப்பியம் கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி.... கார்நாற்பது நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு. தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும். அறிவியல் அறிஞர் கலீலியோ நிறுவிய கருத்து இது. இக்கருத்து திருவள்ளுவமாலை என்னும் நூலில் கபிலர் எழுதிய பாடலில் இடம்பெற்றுள்ளது. -பதிற்றுப்பத்து கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர் -நற்றிணை | தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் - திருவள்ளுவமாலை
தற்காலத்தில் அறிவியல் துறையில் மட்டுமன்றி அனைத்துத் துறைகளிலும் தமிழர்கள் கோலோச்சி வருகிறார்கள். சாதனையாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அறிந்துகொள். நமது ஊர் நூலகம் உனக்கு மிகவும் உதவியாக இருக்கும். நூல் வாசிப்பு உன் சிந்தனைக்கு வளம் சேர்க்கும். அறிவியல் மனப்பான்மை பெருகும். தமிழாலும் தமிழராலும் எந்தத் துறையிலும் எதையும் சாதிக்க முடியும். தொடர்ந்து முயற்சி செய். நீ வெல்வாய் ! உன் கனவு நனவாக வாழ்த்துகிறேன். தெரிந்து தெளிவோம் தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள் மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு டாக்டர் ஆ. ப. ஜெ.
அப்துல்கலாம் இஸ்ரோ அறிவியல் அறிஞர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை. • இஸ்ரோவின் மேனாள் தலைவர் டாக்டர் கை. சிவன். கற்பவை கற்றபின் 1. இக்கடிதத்திற்கு நீங்கள் விரும்பும் வகையில் வேறொரு தலைப்பிடுக. 2. உங்கள் எதிர்காலக் கனவு குறித்து ஒரு கடிதம் எழுதுக. 3. நீங்கள் கூறியபடி நூல்கள் பலவற்றையும் தொடர்ந்து படித்து வந்தேன். உங்கள் அன்பு என் எண்ணம் நிறைவேற உறுதுணையாக விளங்கியது. தமிழ் இலக்கியங்களும் பிற நூல்களும் எனக்கு நம்பிக்கை ஊட்டின. இவற்றை நான் என்றும் மறக்க மாட்டேன். சமுதாயத்திற்கு என்னால் இயன்ற நன்மைகளைச் அதற்கேற்பப்
செய்வேன் பணியாற்றுவேன். நன்றி அத்தை. அன்புடன் உன் அத்தை , நறுமுகை. இன்சுவையின் எண்ணம் நிறைவேறக் காரணங்களாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள் ? மதிப்பீடு அத்தையின் கடிதக் கருத்துகளைச் சுருக்கி எழுதுக. ' கனவு பலித்தது ' என்ற தலைப்பு இக்கடிதத்திற்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதனை விளக்குக. | இயல் ஒன்று தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும் உலகில் உள்ள ஒவ்வொரு பொருளையும் மனிதன் உற்றுநோக்கினான். அவற்றின் இயல்புகளை அறிந்துகொண்டான். இவ்வாறே மொழியையும் ஆழ்ந்து கவனித்தான். மொழியை எவ்வாறு பேசவும் எழுதவும் வேண்டும் என்பதை
வரையறை செய்தான். அந்த வரையறைகளே இலக்கணம் எனப்படும். தமிழ் மொழியின் இலக்கண வகைகள் ஐந்து. எழுத்து இலக்கணம் சொல் இலக்கணம் பொருள் இலக்கணம் யாப்பு இலக்கணம் அணி இலக்கணம் கற்கண்டு சொல் எழுத்து ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும் வரிவடிவமாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது. உயிர் எழுத்துகள் உயிருக்கு முதன்மையானது காற்று. இயல்பாகக் காற்று வெளிப்படும்போது உயிர் எழுத்துகள் பிறக்கின்றன. வாயைத் திறத்தல் , உதடுகளை விரித்தல் , உதடுகளைக் குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் ' அ ' முதல் ' ஔ ' வரையுள்ள பன்னிரண்டு உயிர் எழுத்துகளும்
பிறக்கின்றன. உள் ஐ ஒவ்வோர் எழுத்தையும் உச்சரிப்பதற்குக் கால அளவு உண்டு. எழுத்தை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவைக் கொண்டே குறில் , நெடில் என வகைப்படுத்துகிறோம். · குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு மாத்திரை மாத்திரை என்பது இங்குக் கால அளவைக் குறிக்கிறது. ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கைநொடிக்கவோ ஆகும் கால அளவாகும். வல்லினம் க் , ச் , ட் , த் , ப் , ற் மெய் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு - அரை மாத்திரை ஆகிய ஐந்தும் குறில் எழுத்துகள். மெய்யெழுத்துகள் மெய்
என்பது உடம்பு எனப் பொருள்படும். மெய் எழுத்துகளை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது. க் , ங் , ச் , ஞ் , ட் , ண் , த் , ந் , ப் , ம் , ய் , ர் , ல் , வ் , ழ் , ள் , ற் , ன் ஆகிய பதினெட்டும் மெய்யெழுத்துகள் ஆகும். ஆகிய ஏழும் ஔ நெடில் எழுத்துகள். மாத்திரை 2 மாத்திரை மெல்லினம் ங் , ஞ் , ண் , ந் , ம் , ன் இடையினம் ய் , ர் , ல் , வ் , ழ் , ள் | ஒலித்துப் பார்த்து உணர்வோம் !. க் , ச் , ட் , த் , ப் , ற் ஆகிய ஆறும் வன்மையாக ஒலிக்கின்றன. • ங் , ஞ் , ண் , ந் , ம் , ன் - ஆகிய ஆறும் மென்மையாக ஒலிக்கின்றன. ய் ,
ர் , ல் , வ் , ழ் , ள் - ஆகிய ஆறும் மென்மையாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்டு ஒலிக்கின்றன.. வன்மையாகவும் உயிர்மெய் மெய் எழுத்துகள் பதினெட்டுடன் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றும் 216 எழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகள் ஆகும். மெய்யுடன் உயிர்க்குறில் சேர்ந்தால் உயிர்மெய்க் குறில் தோன்றுகிறது. மெய்யுடன் உயிர் நெடில் சேர்ந்தால் உயிர்மெய் நெடில் தோன்றுகிறது. ஆகவே உயிர்மெய் எழுத்துகளையும் உயிர்மெய்க் குறில் , உயிர்மெய் நெடில் என இருவகைப்படுத்தலாம். ஆய்த எழுத்து தமிழ்மொழியில் உயிர் , மெய் ,
உயிர்மெய் எழுத்துகள் தவிர தனி ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு எழுத்து ஒன்றும் உள்ளது. அது ஃ என்னும் ஆய்த எழுத்தாகும். அரை மாத்திரை கற்பவை கற்றபின் உங்கள் பெயர் மற்றும் உங்கள் நண்பர்களது பெயர்களுக்கான மாத்திரை அளவைக் கண்டுபிடி. ( எ.கா. ) கபிலர் - 1 + 1 + 1 + % = 3 % * மதிப்பீடு கொடுக்கப்பட்டுள்ள மாத்திரை அளவுக்கேற்பச் சொற்களை எழுதுக 1. உயிரெழுத்தில் தொடங்கும் இரண்டு மாத்திரை அளவுள்ள சொல் 2. இரண்டு மாத்திரை அளவுள்ள ஓரெழுத்துச்சொல் - 3. ஆய்த எழுத்து இடம்பெறும் இரண்டரை மாத்திரை அளவுள்ள சொல் இல்லாமல் , குறுவினா
1. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் ? அவை யாவை ? 2. மெய்யெழுத்துகளை மூவகை இனங்களாக வகைப்படுத்தி எழுதுக. 3. தமிழ் எழுத்துகளுக்குரிய மாத்திரை அளவுகளைக் குறிப்பிடுக. | கேட்டும் பார்த்தும் உணர்க. 1. இனிய தமிழ்ப் பாடல்களைக் கேட்டு மகிழ்க. 2.தமிழறிஞர்களின் வானொலி , தொலைக்காட்சி உரைகளைக் கேட்டு மகிழ்க. கீழ்க்காணும் தலைப்புகளில் ஒரு நிமிடம் பேசுக. தமிழ் இனிது தமிழ் எளிது சொல்லக் கேட்டு எழுதுக. இன்பத்தமிழ் பாவேந்தர் உயிரினங்கள் மொழியை ஆள்வோம் ! 2. நோயற்ற வாழ்வைத் தருவது 3.உடல்நலமே தொல்காப்பியம் அஃறிணை கருவூலங்கள்
பிறமொழிக் கலப்பின்றிப் பேசுக. கடிதம் எழுதுக. விடுப்பு விண்ணப்பம் கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக. விரிவான கருத்தைச் சுருக்கிச் சொல்வதே பழமொழியின் சிறப்பு. சான்றாக , சுத்தம் சோறு போடும் என்னும் பழமொழி தரும் பொருளைக் காண்போம். சுத்தம் நோயற்ற வாழ்வைத் தரும். உடல்நலமே உழைப்புக்கு அடிப்படை. உழைத்துத் தேடிய பொருளால் உணவு , உடை , உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகிறோம். இவை அனைத்திற்கும் சுத்தமே அடிப்படை. இவ்விரிந்த கருத்து சிறு அடிக்குள் அடங்கியுள்ளது. 1.பழமொழியின் சிறப்பு சொல்வது அ ) விரிவாகச் ஆ )
சுருங்கச் பழைமையைச் ஈ ) பல மொழிகளில் அடிப்படை 4. உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன யாவை ? 5. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக. 1. எங்க ஸ்கூல்லே சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க. 2. பெற்றோரிடம் பர்மிசன் லெட்டர் வாங்கி வரச் சொன்னாங்க. ஆய்ந்தறிக. பெயரில் தலைப்பெழுத்தைப் பலவகையாக எழுதுகின்றோம். S. இனியன் , எஸ். இனியன் , ச. இனியன் இவற்றுள் சரியானது எது ? ஏன் ? | திரட்டுக. ' மை ' என்னும் எழுத்தில் முடியும் சொற்களின் பட்டியல் தயாரிக்க. சொல் வளம் பெறுவோம். 1. கீழ்க்காணும் சொற்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு
புதிய சொற்களை உருவாக்குக. ( எ.கா ) கரு , கம்பு மொழி கோல் வெளி தமிழ் பொருத்தமான சொற்களைக் கொண்டு தொடர்களை நிரப்புக. அழகு , ஏற்றம் , இன்பம் , ஊக்கம் , இனிமை , ஆற்றல் , ஈடு , இசை , உணர்வு , ஏடுகள் , உரிமை , என்றும் , எளிதாய் , உவகை ,, அன்பு ( எ.கா. ) அன்பு தருவது தமிழ் தருவது தமிழ் தருவது தமிழ் இல்லாதது தமிழ் தருவது தமிழ் தருவது தமிழ் வேண்டும் தமிழ் தருவது தமிழ் என் பொறுப்புகள்... 1. நான் தாய்மொழியிலேயே பேசுவேன். 2. தாய்மொழியிலேயே கல்வி கற்பேன். செயல்பாட்டின் படிநிலைக்கான படங்கள் : படி 2 பிழை
கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்திப் பிழை என்னும் செயலியைப் பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்க. படி 2 செயலியைத் திறந்தவுடன் நல்வரவு என்னும் திரையில் play குறியீட்டு வடிவில் இருக்கும் பொத்தானை அழுத்தவும். படி 3 திரையில் தோன்றும் வார்த்தைகளில் ஒற்று அல்லது எழுத்துப் பிழை உண்டா ? இல்லையா ? என்பதைத் தெரிவு செய்க. நல்வரவு பிழை படி 3 தமிழ் எழுத்துப்பிழை உள்ளதா ?. போருக்கார் ஒன்னுக்ள்பழம்விளர் | இயல் இரண்டு கற்றல் நோக்கங்கள் இயற்கை இன்பம் இயற்கையின் சிறப்புகளை அறிதல் இயற்கையைப்
பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றி விவாதித்தல் உழவுத் தொழிலுக்கு மழை இன்றியமையாதது என்பதை உணர்தல் மழை பெய்யாவிட்டால் ஏற்படும் விளைவுகளை வகுப்பறையில் விவாதித்தல் பறவைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான தொடர்பை அறிதல் | இயல் இரண்டு நுழையும்முன் கவிதைப்பேழை சிலப்பதிகாரம் நம்மைச் சுற்றிலும் எங்குப் பார்த்தாலும் இயற்கையின் அழகு கொட்டிக் கிடக்கிறது. கடலும் , மலையும் , கதிரும் , நிலவும் மழையும் பனியும் இயற்கையின் கொடைகள் அல்லவா ? அவற்றைக் கண்டு மகிழாதவர் உண்டோ ? நிலவின் குளிர்ச்சியையும் கதிரவனின் வெம்மையையும் ,
மழையின் பயனையும் சிலப்பதிகாரம் போற்றுகிறது. திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்றுஇவ் அங்கண் உலகு அளித்த லான் ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேரு வலம் திரிதலான் மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல் மேல்நின்று தான் சுரத்தலான் வான்நிலா போற்றுவோம் ! வான்நிலா போற்றுவோம் ! மாலை அணிந்த சோழனின் குளிர்ந்த வெண்குடை போல அருளை வழங்கும் வான்நிலா போற்றுவோம் ! வான்நிலா போற்றுவோம் ! இளங்கோவடிகள்
கதிரவன் போற்றுவோம் ! கதிரவன் போற்றுவோம் ! காவிரி நாடன் சோழனின் ஆணைச் சக்கரம் போலவே இமயத்தை வலம்வரும் கதிரவன் போற்றுவோம் ! கதிரவன் போற்றுவோம் ! வான்மழை போற்றுவோம் ! வான்மழை போற்றுவோம் ! கடல்சூழ் உலகுக்கு அருளைப் பொழியும் மன்னனைப் போல முகில்வழி சுரக்கும் வான்மழை போற்றுவோம் ! வான்மழை போற்றுவோம் ! சொல்லும் பொருளும் திங்கள் கொங்கு - அலர் திகிரி நிலவு மகரந்தம் மலர்தல் ஆணைச்சக்கரம் பொற்கோட்டு மேரு நாமநீர் அளி பாடலின் பொருள் தேன் நிறைந்த ஆத்திமலர் மாலையை அணிந்தவன் சோழ மன்னன். அவனுடைய வெண்கொற்றக் குடை குளிர்ச்சி
பொருந்தியது. அதைப் போலவே வெண்ணிலவும் தன் ஒளியால் உலகுக்கு இன்பம் அளிக்கிறது. அதனால் வெண்ணிலவைப் போற்றுவோம். காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி செய்பவன் சோழ மன்னன். அவனது ஆணைச் சக்கரம் போல , கதிரவனும் பொன்போன்ற சிகரங்களையுடைய இமயமலையை வலப்புறமாகச் சுற்றிவருகிறது. அதனால் கதிரவனைப் போற்றுவோம் ! அச்சம்தரும் கடலை எல்லையாகக் கொண்ட உலகிற்கு மன்னன் அருள் செய்கிறான். அதுபோல , மழை , வானிலிருந்து பொழிந்து மக்களைக் காக்கிறது. அதனால் மழையைப் போற்றுவோம் ! பொன்மயமான சிகரத்தில் இமயமலை அச்சம் தரும் கடல் கருணை
நூல் வெளி சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள். இவர் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது. இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர். ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். இதுவே தமிழின் முதல் காப்பியம். இது முத்தமிழ்க் காப்பியம் , குடிமக்கள் காப்பியம் , என்றெல்லாம் போற்றப்படுகிறது. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. திங்கள் , ஞாயிறு , மழை என இயற்கையை வாழ்த்துவதாக இந்நூல் தொடங்குகிறது. அவ்வாழ்த்துப்பகுதி
நமக்குப் பாடமாகத் தரப்பட்டுள்ளது. கற்பவை கற்றபின் 1. ' வளர்பிறையும் தேய்பிறையும் ' என்னும் தலைப்பில் பேசுக. 2. நீங்கள் விரும்பும் இயற்கைப் பொருள்களின் பெயர்களைப் பட்டியலிடுக. 3. " நிலா " என்னும் தலைப்பில் நான்கு அடிகளில் கவிதை படைத்திடுக. நுழையும்முன் காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் - அங்குத் தூணில் அழகியதாய் - நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் – அந்தக் காணி நிலத்திடையே - ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும் - அங்குக் கேணி அருகினிலே - தென்னைமரம் கீற்றும் இளநீரும் பத்துப் பன்னிரண்டு தென்னைமரம்
பக்கத்திலே வேணும் நல்ல முத்துச் சுடர் போலே - நிலாவொளி முன்பு வரவேணும் அங்குக் கத்துங் குயிலோசை சற்றே வந்து காதில் படவேணும் - என்றன் சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாய் இளம் தென்றல் வரவேணும். - பாரதியார் சொல்லும் பொருளும் காணி மாடங்கள் சித்தம் கவிதைப்பேழை காணி நிலம் அடுக்ககங்களில் வாழும் பலர் இயற்கை தரும் இன்பத்தை எண்ணி ஏங்குகிறார்கள். ' வீடு ' என்பது எப்படி இருக்க வேண்டும் என்று பாரதியார் கற்பனை செய்கிறார். இயற்கைச் சூழலை உருவாக்க வேண்டியதன் தேவையை உணர்த்துகிறார். இயற்கையைப் பலவகைகளிலும் போற்றிடும் பாரதியின் கனவு
இல்லத்தைப் பற்றி அறிவோம். | பாடலின் பொருள் காணி அளவு நிலம் வேண்டும். அங்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும். அழகான தூண்களையும் தூய நிறமுடைய மாடங்களையும் அது கொண்டிருக்கவேண்டும். நல்ல நீரையுடைய கிணறும் அங்கே இருக்க வேண்டும். இளநீரும் கீற்றும் தரும் தென்னைமரங்கள் வேண்டும். அங்கே முத்து போன்ற நிலவொளி வீச வேண்டும். காதுக்கு இனிய குயிலின் குரலோசை கேட்க வேண்டும். உள்ளம் மகிழுமாறு இளந்தென்றல் தவழ வேண்டும். நூல் வெளி இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார். அவரது இயற்பெயர் சுப்பிரமணியன். இளமையிலேயே சிறப்பாகக்
கவிபாடும் திறன் பெற்றவர். எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர். தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர். மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர். நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர். பாஞ்சாலி சபதம் , கண்ணன் பாட்டு , குயில் பாட்டு போன்ற பல நூல்களை இயற்றி உள்ளார். பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது. கற்பவை கற்றபின் 1. பாடலை ஓசைநயத்துடன் படித்து மகிழ்க. 2. காணி என்பது நில அளவைக் குறிக்கும் சொல். இதுபோல நிலத்தை
அளக்கப் பயன்படும் சொற்களைப் பட்டியலிடுக. 3. என் கனவு இல்லம் என்னும் தலைப்பில் பேசுக. மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ' கிணறு ' என்பதைக் குறிக்கும் சொல் அ ) ஏரி ஆ ) கேணி 2. ' சித்தம் ' என்பதன் பொருள் அ ) உள்ளம் ஆ ) மணம் | 3.மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் அ ) அடுக்குகள் ஆ ) கூரை 4.நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ ) நன் + மாடங்கள் ஆ ) நற் + மாடங்கள் இ ) நன்மை + மாடங்கள் ஈ ) நல் + மாடங்கள் 6. முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து அ ) முத்துசுடர் ஆ ) முச்சுடர்
5.நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ ) நிலம் + இடையே ஆ ) நிலத்தின் + இடையே ஈ ) நிலத் + திடையே இ ) நிலத்து + இடையே பொருத்துக. 1. முத்துச்சுடர்போல சாளரம் 2. தூய நிறத்தில் 3. சித்தம் மகிழ்ந்திட ஈ ) முத்துச்சுடர் 7.நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ ) நிலாஒளி ஆ ) நிலஒளி இ ) நிலாவொளி ஈ ) நிலவுஒளி ஈ ) வாயில் எழுதக் கிடைக்கும் சொல் இ ) முத்துடர் மாடங்கள் தென்றல் நிலாஒளி ‒‒‒‒‒‒ நயம் அறிக. 1. காணி நிலம் பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக. 2. காணி நிலம்
பாடலில் இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக. குறுவினா 1. காணி நிலம் பாடலில் பாரதியார் வேண்டுவன யாவை ? 2. பாரதியார் இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பம் குறித்து எழுதுக. சிந்தனைவினா பாரதியார் வீட்டின் அருகில் தென்னை மரங்கள் வேண்டும் என்கிறார். நீங்கள் எந்தெந்த மரங்களை வளர்ப்பீர்கள் என எழுதுக. | இயல் இரண்டு நுழையும்முன் உரைநடை உலகம் சிறகின் ஓசை மனிதர்கள் வெளியூர்களுக்குச் சென்று மீண்டும் தம் சொந்த ஊருக்குத் திரும்புவதை அறிவோம். அதைப் போலவே பறவைகளும் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்புகின்றன என்பது
உங்களுக்குத் தெரியுமா ? மனிதர்கள் பொருள் தேடுவதற்காக வேறு ஊர்களுக்குச் செல்கிறார்கள். சிலர் திரும்புகிறார்கள். சிலர் அங்கேயே தங்குகிறார்கள். மனிதர்களைப் போலவே பறவைகளும் வேறு இடங்களுக்கும் நாடுகளுக்கும் செல்கின்றன. பறவைகள் போகாத நாடுகள் இல்லை ; மலைகள் இல்லை ; நீர்நிலைகள் இல்லை ; பறவைகளோடு கொஞ்சம் பறந்து போகலாமா ! பறவைகள் கண்டம்விட்டுக் கண்டம் பறக்கின்றன. அவை பெருங்கடல்களையும் மலைகளையும் கடந்து போகின்றன ; குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கின்றன. இவ்வாறு பறவைகள் இடம் பெயர்தலை வலசை
போதல் என்பர். நீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன. உணவு , இருப்பிடம் , தட்பவெப்பநிலை மாற்றம் , இனப்பெருக்கம் இவற்றிற்காகவே பறவைகள் இடம் பெயர்கின்றன. நிலவு , விண்மீன் , புவிஈர்ப்புப் புலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே பறவைகள் இடம் பெயர்கின்றன. பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் , மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை போகின்றன. பறவைகள் தங்களுக்கென வழித்தடத்தைத் தேர்ந்தெடுத்து , அந்தப் பாதையிலேயே பறக்கின்றன. சில பறவை இனங்கள் அதே பாதையில் தாய்நிலங்களுக்குத் திரும்புகின்றன. சில பறவை
இனங்கள் போவதற்கும் வருவதற்கும் இருவேறு பாதைகளைப் பயன்படுத்துகின்றன. பயணம் செய்யும்போது சிலவகைப் பறவைகள் இரை , ஓய்வு போன்ற தேவைகளுக்காகத் தரை இறங்கும். இடையில் எங்கும் நிற்காமல் பறந்து , வாழிடம் சேரும் பறவைகளும் உண்டு. வலசையின்போது பறவையின் உடலில் • தலையில் சிறகு வளர்தல் • இறகுகளின் நிறம் மாறுதல் • உடலில் கற்றையாக முடி வளர்தல் ஒருவகைப் பறவை வேறுவகைப் பறவையாக உருமாறித் தோன்றும் சில அளவிற்குக்கூடச் நேரங்களில் மாற்றங்கள் ஏற்படும். ஏற்படும் மாற்றங்கள் தெரிந்து தெளிவோம் தமிழகத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வலசை
வருவது பற்றி இலக்கியங்களிலும் செய்திகள் உள்ளன. ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சத்திமுத்தப்புலவர் " நாராய் , நாராய் , செங்கால் நாராய் " என்னும் பாடலை எழுதியுள்ளார். அப்பாடலில் உள்ள " தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின் " என்னும் அடிகள் பறவைகள் வலசை வந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன. சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது. கூடுகட்டும் காலங்களில் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும். கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். பதினான்கு நாள்கள் அடைகாக்கும். பதினைந்தாம்
நாளில் குஞ்சுகள் வெளிவரும். கப்பல் பறவை சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை கப்பல் பறவை ( Frigate bird ). இது தரையிறங்காமல் 400 கிலோ மீட்டர் வரை பறக்கும். இது ஐரோப்பாவில் இருந்து தமிழகத்திற்குச் செங்கால் நாரைகள் வருவது தற்போதைய ஆய்விலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. வெளிநாட்டுப் பறவைகளுக்கும் புகலிடமாகத் திகழ்கிறது தமிழ்நாடு. கப்பல் கூழைக்கடா , கடற்கொள்ளைப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது. தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவையினம் எது ? உங்களுக்குத் தெரியுமா ? சிட்டுக் குருவிதான் அது. உருவத்தில் சிறிய
இந்தப் பழுப்புநிறப் பறவையைப் பார்த்தவுடனே ஆண் , பெண் வேறுபாட்டை உணர முடியும். ஆண்குருவியின் தொண்டைப்பகுதி கறுப்பு நிறத்தில் இருக்கும். உடல்பகுதி அடர்பழுப்பாக இருக்கும். பெண் குருவியின் உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும். | துருவப் பகுதிகள் தவிர மனிதன் வாழும் இடங்களில் எல்லாம் சிட்டுக்குருவிகளும் வாழ்கின்றன. இந்தியா முழுவதும் சிட்டுக்குருவிகளைக் காணலாம். இமயமலைத் தொடரில் 4000 மீட்டர் உயரத்தில் கூட இவை வாழ்கின்றன. தானியங்கள் , புழுபூச்சிகள் , மலர் அரும்புகள் , இளந்தளிர்கள் , தேன் போன்றவை
சிட்டுக் குருவிகளின் உணவாகும். சிட்டுக்குருவியின் குஞ்சுகள் பெரும்பாலும் புழு , பூச்சிகளையே உட்கொள்ளும். அதனால் , தாய்க்குருவி புழு பூச்சிகளைப் பிடித்துத் தம் குஞ்சுகளுக்கு ஊட்டிவிடும். சிட்டுக்குருவியின் வாழ்நாள் பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள் ஆகும். சிட்டுக்குருவி உருவத்தில் சிறியது. ஆனாலும் வேகமாகப் பறக்கும். அதனால்தான் விரைவாகச் செல்பவனைச் சிட்டாய்ப் பறந்து விட்டான் என்று கூறுகிறோம். சிட்டுக்குருவிகளின் அழிவுக்குக் காரணங்கள் . மனிதர்கள் விவசாயத்திற்குப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் குருவிக்
குஞ்சுகளுக்கு உணவான புழுபூச்சிகள் கிடைப்பதில்லை. நவீன கட்டடங்கள் குருவிகள் கூடு கட்ட ஏற்றவையாக இல்லை. • தற்காலத்தில் தாவர வேலிகளுக்கு மாற்றாகச் செயற்கை வேலிகள் அமைக்கப் படுகின்றன. எனவே சிட்டுக்குருவிகள் வாழ உகந்த வேலித் தாவரங்கள் குறைந்துவிட்டன. சிட்டுக்குருவிகள் ஓய்வெடுக்கும் புதர்ச்செடிகளும் இல்லை. • உணவுக்கும் , இருப்பிடத்திற்கும் சிட்டுக்குருவிகளுடன் மற்ற பறவைகள் போட்டியிடுகின்றன. பறவையினங்களைக் காப்பாற்ற நாம் செய்ய வேண்டியவை ஆல் , அரசு போன்ற மரங்களையும் அவரை , புடலை போன்ற கொடிகளையும் வளர்க்க வேண்டும். •
நமது மண்ணுக்கேற்ற பிறவகை உள்ளூர்த் வளர்க்க வேண்டும். தோட் ட ங் க ளிலும் வயல்வெளிகளிலும் செயற்கை உரங்கள் , பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும். காக்கைகுருவி எங்கள் சாதி - என்று பாரதியார் பாடினார். சமைப்பதற்குத் தம் மனைவி வைத்திருந்த சிறிதளவு அரிசியையும் முற்றத்தில் இருந்த சிட்டுக் குருவிகளுக்கு மகிழ்வுடன் போட்டுவிட்டுப் பட்டினியாக இருந்தாராம் இவர். தாவரங்களையும் இந்தியாவின் பறவை மனிதர் இன்றைய ஆய்வாளர்களுக்கு பறவையியல் முன்னோடி டாக்டர் சலீம் அலி. தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப்
பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் அவற்றைப் படம் பிடிப்பதிலும் ஈடுபட்டார். அதனால் , அவர் ' இந்தியாவின் பறவை மனிதர் ' என்று அழைக்கப்படுகிறார். பறவைகள் குறித்துப் பல நூல்களை எழுதியுள்ளார். தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் ' சிட்டுக்குருவியின் வீழ்ச்சி பெயரிட்டுள்ளார். | மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழமுடியும் ! பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழமுடியாது ! என்கிறார் பறவையியல் ஆய்வாளர் சலீம் அலி. இவ்வுண்மையை நாமும் உணர்ந்து இயற்கையைப் போற்றிப் பறவைகளைக் காப்போம். பறவை பற்றிய படிப்பு ஆர்னித்தாலஜி ( ORNITHOLOGY )
எனப்படும். ஆர்டிக் ஆலா. உலகிலேயே நெடுந்தொலைவு 22,000 கி.மீ. பயணம் செய்யும் பறவையினம் உலகச் சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் – 20 கற்பவை கற்றபின் 1. உங்கள் பகுதியில் காணப்படும் பறவைகளின் பெயர்களைப் பட்டியலிடுக. 2. உங்கள் வீட்டுக்கு அருகில் பறவைகள் வருவதற்கு என்னென்ன வழி வகைகள் செய்யலாம் என்பது பற்றி வகுப்பறையில் கலந்துரையாடுக. 3. பறவைகள் தொடர்பான பழமொழிகளைத் தொகுத்து எழுதுக. 4. இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் முழக்கத் தொடர்களை எழுதுக. ( எ.கா. ) காப்போம் காப்போம் ! பறவைகளைக் காப்போம் ! ஏம் மதிப்பீடு சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. ' தட்பவெப்பம் ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ ) தட்பம் + வெப்பம் ஆ ) தட்ப + வெப்பம் இ ) தட் + வெப்பம் ஈ ) தட்பு + வெப்பம் 2.'வேதியுரங்கள் ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ ) வேதி + யுரங்கள் ஆ ) வேதி + உரங்கள் இ ) வேத் + உரங்கள் ஈ ) வேதியு + ரங்கள் 3. தரை + இறங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ ) தரையிறங்கும் தரைஇறங்கும் இ ) தரையுறங்கும் ஈ ) தரைய்றங்கும் | 4. வழி + தடம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ ) வழிதடம் ஆ )
வழித்தடம் இ ) வழிதிடம் 5. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி அ ) துருவப்பகுதி ஆ ) இமயமலை கோடிட்ட இடங்களை நிரப்புக. 1.வெளிநாடு 2.வாழ்நாள் 3. செயற்கை பொருத்தமான சொல் 1. மிக நீண்டதொலைவு பறக்கும் பறவை 2. பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர் 3. பறவைகள் இடம்பெயர்வதற்கு என்று பெயர். 4.இந்தியாவின் பறவை மனிதர் 3.பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று சொற்றொடர் அமைத்து எழுதுக. இ ) இந்தியா ஈ ) வழித்திடம் கொண்டு நிரப்புக. 1. மரங்களை வளர்த்து யைக் காப்போம் உரங்களைத் தவிர்த்து நிலவளம் காப்போம். ( செயற்கை / இயற்கை
) 2. தமிழகத்தில் வலசைப் பறவைக்களின் வருகை சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை மிகுந்துள்ளது ) ஈ ) தமிழ்நாடு குறுவினா 1. பறவைகள் எக்காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன ? 2.வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் யாவை ? சிறுவினா 1. சிட்டுக் குருவியின் வாழ்க்கை பற்றிச் சிறு குறிப்பு எழுதுக. 2. வலசைப் பறவைகளின் பயணம் பற்றி நீங்கள் அறிந்தவை யாவை ? | இயல் இரண்டு நுழையும்முன் விரிவானம் கிழவனும் கடலும் கிழவனும் கடலும் ( The Oldman and the Sea. ) என்னும் ஆங்கிலப் புதினம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு படக்கதையாக இங்குச்
சுருக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நூல் 1954 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றது. இந்நூலின் ஆசிரியர் எர்னெஸ்ட் ஹெமிங்வே. மனிதன் இயற்கையோடு போராடிக்கொண்டே இருக்கிறான். சில நேரங்களில் வெற்றி பெறுகிறான். சில நேரங்களில் தோல்வி அடைகிறான். ஆனால் முயற்சிகள் என்றும் ஓய்வதில்லை. மனிதன் இயற்கையோடு நடத்துகிற போராட்டமே அவன் வாழ்வை அமைக்கிறது. போராடுவதில் மகிழ்ச்சியும் வெற்றியும் இருக்கிறது. மீன் பிடிக்கப் போராடும் மீனவர் ஒருவரின் வாழ்வைப் பார்ப்போமா ! இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் போராட்டமே இந்தக் கதை. இக்கதையின்
நாயகன் சாண்டியாகோ. வயது முதிர்ந்த மீனவர் அவர். முன்பெல்லாம் கடலுக்குச் சென்றால் மீன் இல்லாமல் திரும்பமாட்டார். ஆனால் , கடந்த எண்பத்து நான்கு நாள்களாக ஏனோ அவருக்கு ஒரு மீனும் கிடைக்கவில்லை. மனோலின் என்னும் சிறுவன் மீன்பிடிக்கக் கற்றுக்கொள்வதற்காக முதல் நாற்பது நாள்களும் அவருடன் கடலுக்கு வந்தான். அவன் , அவருக்கு வேண்டிய உதவிகள் செய்ததோடு பேச்சுத்துணையாகவும் இருந்தான். அவரோடு கடலுக்குப் போனால் ஒரு மீனும் கிடைப்பதில்லை என்று அவனை வேறு படகிற்கு அனுப்பிவிட்டனர் அவனது பெற்றோர். இப்போதெல்லாம் தனியாகவே மீன்பிடிக்கச்
செல்கிறார் சாண்டியாகோ. அன்று எண்பத்து ஐந்தாவது நாள்... கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கிறார் சாண்டியாகோ. எனக்கு மீன்கள் கிடைக்கவே கிடைக்காது என்று எவ்லோரும் சொல்கிறார்கள். அதை மாற்றிக்காட்ட வேண்டும். அடுத்த நாள் காலை. இரவு முழுவதும் கடலில் இருந்துவிட்டேன். ஒரு மீனும் சிக்கவில்லையே ! ஆனது ஆகட்டும் ! இனி நான் மீன் இல்லாமல் கரை திரும்பப் போவதில்லை. வா ! வா ! மீனே ! தூண்டில் முள்ளில் உனக்காகச் சூரைமீனை மாட்டி வைத்திருக்கிறேன். சாப்பிடு , சாப்பிடு... அப்போதுதாலே நீ என்னிடம் மாட்டுவாய் வா ! வா ! அப்படித்தான்.. வா !
தூண்டிலிட்டுக் காத்திருக்கிறார். தனியாக வந்திருக்கக் கூடாது. பேச்சுத்துணைக்கு மனோலின் இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ! நண்பகல் தூண்டில் கயிறு அசைகிறது அடடே ! தூண்டில் கயிற்றை ஏதோ இழுப்பது போல் இருக்கிறதே ! ஏதோ மீன்தான் வத்திருக்கும் என நினைக்கிறேன். தூண்டிலில் மீன் சிக்கிக்கொள்கிறது தூண்டிவை வேகமாக இழுக்கிறதே ! திச்சயமாக இது பெரிய மீனாசுத்தான் இருக்கவேண்டும். | மினைப் படகுக்குள் இழுக்க முயற்சி செய்கிறார். முடியவில்லை. மாலை நேரம். | மீன் மீண்டும் தூண்டிலை இழுக்கிறது. சாண்டியாகோவின் உறக்கம் கவைகிறது.
மீணே ! ஏன் இப்படி தூண்டிலை இழுக்கிறாய் ? என்னையும் கடலுக்குள் இழுத்துத் தள்ளிவிடப் பார்க்கிறாயா ? பசியும் சோர்வும் என்னை வாட்டுகின்றன. தண்பகல் தாண்டிலில் சிக்கிய மீன் தாலு மணி நேரமாக என்னிடம் ஆட்டம் காட்டுகிறதே ! ஓ இரவு முழுவதும் தூக்கம் இல்லாததால் என்னை அறியாமல் தூங்கிவிட்டேனோ ? இனியும் சும்மா இருக்க முடியாது. மேலேயும் வராமல் ஆழத்திற்கும் செல்லாமல் ' படகை எங்கோ இழுத்துக் கொண்டே போகிறதே ! இருக்கட்டும். இருக்கட்டும் ! எப்படியும் மேவே வத்துதானே ஆக வேண்டும் ! மீன் அசைவின்றி இருக்கிறது. மீனுடன் போராடிய களைப்பில்
சாண்டியாகோ சற்றுக் கண்ணயர்ந்து விட்டார். ம்ம்... அப்படித்தான் ஆகட்டும். மேலே வா ! இன்று என்னிடம் இருந்து உன்னால் தப்பிக்கவே முடியாது. சாண்டியாகோ தூண்டிவை இழுக்கிறார். மீஸ் முதன்முதவாக நீருக்கு மேலே துள்ளிக் குதிக்கிறது. ஆகா ! தூண்டிலில் மாட்டியது நீதானா ? இப்போதுதான் உன்னை முழுமையாகப் பார்க்கிறேன். அடேயப்பா ! எவ்வளவு பெரிய மீன் ! மீண்டும் மேலே வருகிறாயா ? விடமாட்டேன் நீ , எவ்வளவு பெரிய மீனாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. என் உயிர் உள்ளவரை உன்னுடன் போராடி வெற்றி பெறுவேன். உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நீ
போராடுகிறாய் , நான் என் இலக்கை அடையப் போராடுகிறேன். இந்தப் போராட்டத்தின் முடிவில் ஒன்று நான் உயிரோடு இருப்பேன் அவ்வது நீ இருப்பாய். மீன் படகைச் சுற்றி வட்டமிடுகிறது. தான் சாப்பிடவும் இல்லை , தூங்கவும் இல்வை. இத்தனை மணி நேரமாக உண்னுடன் போராடுகிறேனே ! ஏன் இப்படித் துள்ளுகிறாய் ? இறுதியாக உன்னைக் கொன்று விட்டேன். இனிமேல் தான் நிறைய வேலை இருக்கிறது. கயிறுகளில் சுருக்குகன் போட வேண்டும். ஏ.மீனே ! படகைச் சுற்றிச் சுற்றி ஏன் இப்படி வட்டமிடுகிறாய் ? தில் , நில் என் வலிமையை எல்லாம் மீன் படகுக்கு அருகில் மேலெழும்பிக்
குதிக்கிறது. சாண்டியாகோ ஈட்டியால் மீனைக் குத்துகிறார். ( எனக்கு மீன் கிடைக்காது என்று எவ்வோரும். | சொன்னார்கள். பார்த்தீர்களா ? வலை இல்லாமல் | இவ்வளவு பெரிய மீனை யாராவது ( பிடித்தது உண்டா ? விடா முயற்சியின் பயனை இன்று தான் ( உணர்ந்தேன். கரையில்... மீனின் நீளம் அதிகமாக இருந்ததால் அதைப் படகின் | பக்கவாட்டில் சுட்டுகிறார். மேலும் சில சுறாமீன்கள் வருகின்றன. ( தான் பிடித்த மீனை அவ்வளவு எளிதாகப் பறிகொடுத்துவிட மாட்டேன்... ஒரு வழியாகக் கரைக்கு வத்து விட்டேன். மிகவும் களைப்பாக இருக்கிறது சரி , படகை இழுத்துக்
கட்டுகிறேன். சாண்டியாகோ சுறா மீன்களை வீழ்த்துகிறார். என்ன ஒரு போாராட்டம் ! அப்பாடா ஒருவழியாக எல்லாம் ஓய்ந்தது. இந்த மீன் செய்த அட்டகாசங்களை மனோவின் பார்த்திருக்க வேண்டும் ! சரி போசுட்டும். உடனே சென்று தடந்த எல்லாவற்றையும் அவனிடம் சொல்ல வேண்டும். அப்போது படகை நோக்கிச்சுறா மீன் வருகிறது ! ஆ ! என்ன இது ! சுறாக்கள் தின்றது போக கடைசியில் மீனின் தவையும் அதன் எலும்பும்தாம் மிஞ்சியுள்ளனவா ? சாண்டியாகோவைக் காண மனோலின் வருகிறான். தாத்தா உன்னைப் பார்க்கத்தான் ஓடோடி வந்தேன். மனோவின் நான் பிடித்த மீனை நீ பார்த்தாயா ?
கடைசியில் எலும்பும் தலையும்தான் மிச்சம் ! அடேயப்பா ! எவ்வளவு பெரிய மீன் அது ! மீன்பிடிப்பதில் பெரிய வீரன் தாத்தா தி 2. இக்கதையின்வழியாக நீங்கள் உணர்ந்தவற்றை வகுப்பில் பகிர்க. 3. சாண்டியாகோ குறித்து உங்கள் கருத்து யாது ? அதனால் என்ன தாத்தா ? உன் திறமையும் விடாமுயற்சியும் வென்றுவிட்டதே ! இனி உன்னை யாகும் பழித்துப் போமுடியாது. தாத்தா ! உன்னிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. இனி தான் உன்னோடுதான் மீன் பிடிக்க வருவேன்... மதிப்பீடு ' கிழவனும் கடலும் ' என்னும் படக்கதையை உங்கள் சொந்த நடையில் கதையாக
எழுதுக. இயல் இரண்டு முதலெழுத்தும் சார்பெழுத்தும் எழுத்துகள் இரண்டு வகைப்படும் 1. முதல் எழுத்துகள் 2. சார்பு எழுத்துகள் முதல் எழுத்துகள் உயிர் எழுத்துகள் பன்னிரண்டு , மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர். சார்பு எழுத்துகள் முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகள். இவை பத்து வகைப்படும். முதல் எழுத்துகள் 1. உயிர்மெய் 2. ஆய்தம் 3. உயிரளபெடை 4.
ஒற்றளபெடை 5. குற்றியலிகரம் 6. குற்றியலுகரம் 7. ஐகாரக்குறுக்கம் 8. ஒளகாரக்குறுக்கம் உயிர்மெய் கற்கண்டு உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும். வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும். முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும். . 3. மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது. முப்புள்ளி , முப்பாற்புள்ளி , தனிநிலை , அஃகேனம் என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு. நுட்பமான ஒலிப்புமுறையை உடையது. தனக்குமுன் ஒரு
குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும். தனித்து இயங்காது. முதல் எழுத்துகளாகிய உயிரையும் , மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும் கற்பவை கற்றபின் 1. முதல் எழுத்துகள் , சார்பு எழுத்துகள் தொடர்பைப் பற்றி விவாதிக்க 2. முதல் எழுத்துகள் மட்டும் இடம்பெறும் சொற்களை எழுதுக. ( எ.கா. ) ஆம் முதல் எழுத்துகள் இடம்பெறாத சொற்களை எழுதுக. ( எ.கா. ) குருவி மதிப்பீடு 1. முதல் எழுத்துகள் என்பவை யாவை ? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
2. சார்பெழுத்துகள் எத்தனை ? அவை யாவை ? 3. சொற்களில் ஆய்த எழுத்து எவ்வாறு இடம்பெறும் ? | கேட்டும் கண்டும் அறிந்தும் மகிழ்க 1. இயற்கை சார்ந்த பாடல்கள் , கதைகள் , உரைகளைக் கேட்டு மகிழ்க. 2. பறவைகள் , விலங்குகளின் வாழ்க்கை முறை பற்றிய காணொலிக் காட்சிகளைக் கண்டு மகிழ்க. கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள் , அவற்றின் இயக்கம் , அவை இயங்கும் இடம் , இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம். பனிபடர்ந்த நீலமலைகள் , பாடித்திரியும் பறவைகள் ,
தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள் , சலசலக்கும் ஓடைகள் , ஆர்ப்பரித்து வீழும் அருவிகள் , நீந்தும் மீன்கள் , அலைவீசும் அழகிய கடல் , கண்சிமிட்டும் விண்மீன்கள் , தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா இவையெல்லாம் இயற்கை நமக்குத் தந்த கொடைகள். மொழியை ஆள்வோம் ! இயற்கையின் அழகைக் கண்டு இன்புற்றால் மட்டும் போதாது. அந்த அழகை நாம் பாதுகாக்க வேண்டும். நாம் நமது தேவைக்காக மலைகள் , காடுகள் , விலங்குகள் , பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம். மேலும் நிலம் , நீர் , காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். அதனால்
இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் மட்டுமே நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும். 1. எதனை இயற்கை என்கிறோம் ? 2. இப்பத்தியில் உள்ள இயற்கையை வருணிக்கும் சொற்கள் யாவை ? 3. இயற்கையை ஏன் பாதுகாக்க வேண்டும் ? 4. பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக. ஆசிரியர் கூறக்கேட்டு எழுதுக. மாமழை வலசை போதல் சாண்டியாகோ வான் சிறப்பு பறவை இனங்கள் தோற்கடிக்க முடியாது கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக. இயற்கையைக் காப்போம் தொடர்களைப் பிரித்து இரண்டு
தொடர்களாக எழுதுக. ( எ.கா. ) பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின. விடை : பல நாள்களாக மழை பெய்யவில்லை. பயிர்கள் வாடின. 1. கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறான். 2. இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள். பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப்.. 2. இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக 3. முத்து தம் 4. கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை ( அலைத்தாள் / அழைத்தாள் ). பொருத்தமான சொற்களால் கட்டங்களை நிரப்புக. 1.'புள் ' என்பதன் வேறு
பெயர் 2. பறவைகள் இடம்பெயர்தல் 3.சரணாலயம் என்பதன் வேறு பெயர் வரிசை மாறியுள்ள சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து எழுதுக. 1. இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம். 2. மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது. 3. மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார் 4. மனிதர் இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை. கட்டங்களில் சில சொற்கள் மறைந்துள்ளன. குறிப்புகளைக் கொண்டு அவற்றைக் கண்டுபிடித்து எழுதுக. ஆய்ந்தறிக. பெருகிவரும் மக்களின் தேவைக்காக இயற்கையை அழிப்பது சரியா ? இயற்கையைச் சுரண்டாமல் , மக்களின் தேவைகளை
நிறைவேற்ற மாற்று வழிகள் உண்டா ? கவிதை படைக்க. கீழே காணப்படும் மழைபற்றிய கவிதையைச் சொந்தத் தொடர்களால் நிரப்புக. வானில் இருந்து வந்திடும் மனதில் மகிழ்ச்சி தந்திடும் என் பொறுப்புகள்... கலைச் சொல் அறிவோம் கண்டம் Continent வலசை Migration புகலிடம் அ ) சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வேன் ஆ ) இயற்கையைப் பாதுகாப்பேன் . நிற்க அதற்குத் தக... Weather Sanctuary புவிஈர்ப்புப்புலம் Gravitational Field ணையத்தில் காண்க அழிந்து வரும் உயிரினங்கள்பற்றி இணையத்தில் தேடி அறிந்து பட்டியலிடுக. தட்பவெப்பநிலை Climate வானிலை
பறவைகள் வலசைபோதல் செயல்பாட்டில் கிடைக்கப்பெறும் படம் படிகள் : கொள்ளலாம். இணையச் செயல்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி " plahenthirdmigration " என்னும் இணையச் செயலியின் பக்கத்திற்குச் செல்லவும். இணையச் செயவி இயங்கு நிலைக்கு வர , சற்று நேரம் -ஆகும். அதுவரை காத்திருக்கவும். இணையச்செயலி தயார் நிலைக்கு வந்தவுடன் ஓர் உலக உருண்டையைக் காணலாம். அதன் மையத்தில் இருக்கும் " Click to Stan : " என்பதைச் சொடுக்கவும். இப்போது திரையின் இடப் பக்கத்தில் பறவைகளின் பெயர்ப் பட்டியல் தெரியும்.
அதில் ஏதேனும் ஒரு பறவையைத் தெரிவு செய்து அதன் வலசை போகும் பாதையைத் தெரிந்து அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. வாழ்வியல் திருக்குறள் மக்கள் பயனுள்ள முறையில் வாழ வழிகாட்டிகளாக அமைபவை அறநூல்கள். அறநூல்களில் ' உலகப் பொது மறை ' என்று போற்றப்படும் சிறப்புப் பெற்றது நம் திருக்குறள். திருக்குறளில் இல்லாத செய்திகளே இல்லை. ஏழு சொற்களில் மனிதர்களுக்கு அறத்தைக் கற்றுத்தரும் திருக்குறளைப் பயிலுவோம் ; வாழ்வில் பின்பற்றுவோம். அகரமே எழுத்துகளுக்குத் தொடக்கம். அதுபோல ஆதி பகவனே உலகுக்குத் தொடக்கம். வான் சிறப்பு
2. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. மழை உரியகாலத்தில் பெய்யாது போனால் , உலகத்து உயிர்களை எல்லாம் பசி நீத்தார் பெருமை துன்புறுத்தும். கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. * செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். உரிய காலத்தில் பெய்யாது கெடுப்பதும் மழைதான். உரிய காலத்தில் பெய்து காப்பதும் மழைதான். முடியாத செயலையும் முடித்துக் காட்டுபவர் பெரியோர் ; முடியாது என்பவர் சிறியோர். மக்கட்பேறு 5. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை
மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது. தம்மைவிடத் தம் பிள்ளைகள் அறிவுடையோர் என்றால் மக்களுக்கு அதுதான் மகிழ்ச்சி. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். தன் பிள்ளையின் புகழைக் கேட்ட தாய் பெற்றெடுத்தபோது அடைந்த மகிழ்ச்சியைவிடப் பெருமகிழ்ச்சி அடைவாள். அன்புடைமை 8. 7. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. * அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கே என்பார்கள். அன்பு உடையவர்கள் தம் உடம்பும் பிறர்க்கே என்பார்கள். அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல்
போர்த்த உடம்பு. அன்பு இருப்பதுதான் உயிருள்ள உடல். அன்பு இல்லாதது வெறும் எலும்பும் தோலும் தான். இனியவை கூறல் 9. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற. பணிவும் இன்சொல்லுமே ஒருவருக்கு மிகச்சிறந்த அணிகலன்கள் ஆகும். மற்றவை அணிகலன்கள் ஆகா. 10. இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. இனிய சொல் இருக்கும்போது இன்னாச்சொல் பேசுவது கனி இருக்கும்போது காயை உண்பதைப் போன்றது. நூல் வெளி திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர். எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறிகளை வகுத்துக்
கூறியுள்ளார். வான்புகழ் வள்ளுவர் , தெய்வப்புலவர் , பொய்யில் புலவர் முதலிய பல சிறப்புப் பெயர்கள் இவருக்கு உண்டு திருக்குறள் அறத்துப்பால் , பொருட்பால் , இன்பத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. பதினெண் கீழ்க்கணக்கு நூல் ளுள் ஒன்று. திருக்குறள் 133 அதிகாரங்களில் 1330 குறள்பாக்களைக் கொண்டுள்ளது. " திருக்குறளில் இல்லாததும் இல்லை , சொல்லாததும் இல்லை " என்னும் வகையில் சிறந்து விளங்குகிறது. திருக்குறளுக்கு உலகப் பொதுமறை , வாயுறை வாழ்த்து முதலிய பல சிறப்புப் பெயர்கள் வழங்குகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட
மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. மக்களுக்கு மகிழ்ச்சி தருவது மதிப்பீடு அ ) ஊக்கமின்மை ஆ ) அறிவுடைய மக்கள் இ ) வன்சொல் ஈ ) சிறிய செயல் 2. ஒருவர்க்குச் சிறந்த அணி அ ) மாலை ஆ ) காதணி இ ) இன்சொல் ஈ ) வன்சொல் பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக. 1. இனிய கனியிருப்பக் 2. அன்பிலார் நயம் அறிக. இன்னாத கூறல் கவர்ந் தற்று குறுவினாக்கள் தமக்குரியர் அன்புடையார் உரியர் பிறர்க்கு செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் இந்தக் குறளில் உள்ள எதுகை ,
மோனைச் சொற்களை எடுத்து எழுதுக பின்வரும் செய்திக்குப் பொருத்தமான திருக்குறள் எது எனக் கண்டறிந்து எழுதுக. 2016 ஆம் ஆண்டு ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் கலந்துகொண்டார். உயரம் தாண்டுதல் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் பெற்றார். செய்தியாளர்கள் அவருடைய தாயிடம் நேர்காணல் செய்தனர். " என் மகனின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவனைப் பெற்ற பொழுதைவிட இப்போது அதிகமாக மகிழ்கிறேன் " என்று மகிழ்ச்சியுடன் கூறினார். அ ) செயற்கரிய செய்வார் பெரியர்
சிறியர் செயற்கரிய செய்கலா தார் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் இ ) இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று 1. உயிருள்ள உடல் எது ? 2. எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமைவது எது ? 3. அன்பிலார் , அன்புடையார் செயல்கள் யாவை ? இயல் மூன்று எந்திர உலகம் கற்றல் நோக்கங்கள் எதையும் காரண காரியத்துடன் அறிந்துகொள்ள முயலுதல் அறிவியல் மனப்பான்மை பெறுதல் நம் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்கு எவையெல்லாம் தேவை என அறிதல் அறிவியல் கண்டுபிடிப்புகளினால் ஏற்படும் விளைவுகள் பற்றி விவாதித்தல்
வளர்ந்துவரும் அறிவியல் , தொழில் நுட்பங்கள் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் பெறுதல் தமிழில் பிழையின்றி எழுதுதல் இயல் மூன்று நுழையும்முன் கவிதைப்பேழை D அறிவியல் ஆத்திசூடி அறிவியல் சிந்தனை கொள் ஆய்வில் மூழ்கு சொல்லும் நாம் அறிவோம். ஆத்திசூடி என்பது அகர வரிசையில் அறிவுரைகளைச் ஒளவையின் ஆத்திதடியை பாரதியார் ' புதிய ஆத்திசூடி ' என்று இலக்கியம். காலத்திற்கேற்ற அறிவுரைகளைக் கூறினார். அகர வரிசையில் அறிவியல் அறிவோம் ; அகில உலகையும் ஆய்வு செய்வோம் ; அனைத்தையும் உலகின் நலத்திற்கு வழங்குவோம் ! இயன்றவரை புரிந்துகொள்
ஈடுபாட்டுடன் அணுகு உண்மை கண்டறி ஊக்கம் வெற்றிதரும் என்றும் அறிவியலே வெல்லும் ஏன் என்று கேள் ஐயம் தெளிந்து சொல் ஒருமித்துச் செயல்படு ஓய்வற உழை ஔடதமாம் அனுபவம் - நெல்லை சு.முத்து சொல்லும் பொருளும் இயன்றவரை ஒருமித்து ஒளடதம் முடிந்தவரை - ஒன்றுபட்டு மருந்து நூல் வெளி " தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் " என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து. இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர். விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் , சதீஷ்தவான் விண்வெளி மையம் , இந்திய விண்வெளி மையம் ஆகிய
நிறுவனங்களில் பணியாற்றியவர். அறிவியல் கவிதைகள் , கட்டுரைகள் பலவற்றைப் படைத்துள்ளார். எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அறிவியல் ஆத்திசூடி என்னும் நூலின் ஒரு பகுதி இங்குத் தரப்பட்டுள்ளது. கற்பவை கற்றபின் 1. ' அறிவியல் ஆத்திசூடி ' பகுதியில் உங்களுக்குப் பிடித்த அடியை எழுதி அதன் காரணத்தைக் கூறுக. 2. அறிவியல் சிந்தனையைத் தூண்டும் முழக்கத் தொடர்கள் ஐந்து உருவாக்குக. ( எ.கா. ) அறிவியலை வளர்ப்போம் ! உலகை வெல்வோம் ! * தழ் மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. உடல் நோய்க்கு தேவை. அ )
ஒளடதம் இ ) உணவு விளையாடு. 2. நண்பர்களுடன் அ ) ஒருமித்து ஆ ) மாறுபட்டு இ ) தனித்து 3. ' கண்டறி ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. அ ) கண் + அறி ஆ ) கண்டு + அறி இ ) கண்ட + அறி I 4. ' ஓய்வற ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது. அ ) ஓய்வு + அற ஆ ) ஓய் + அற இ ) ஓய் + வற 5. ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ ) ஏன்என்று ஆ ) ஏனென்று இ ) ஏன்னென்று எழுதக் கிடைக்கும் சொல் 6. ஒளடதம் + ஆம் என்பதனைச் சேர்த்து அ ) ஒளடதமாம் ஆ ) ஒளடதம் ஆம் இ ) ஔடதாம் எதிர்ச்சொற்களைப் பொருத்துக. 1.
அணுகு 2. ஐயம் 3. ஊக்கம் 4. உண்மை விலகு பாடல் வரிகளுக்கேற்றவாறு முறைப்படுத்துக. 1. சிந்தனை கொள் அறிவியல் 2. சொல் தெளிந்து ஐயம் 3. கேள் ஏன் என்று 4. வெல்லும் என்றும் அறிவியலே குறு வினா மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது ? சிறுவினா தெளிவு சோர்வு பொய்மை பாடலின் கருத்தை உங்கள் சொந்த நடையில் எழுதுக. சிந்தனை வினா உங்களுக்குத் தெரிந்த மருத்துவ முறைகள் யாவை ? கவிதைப்பேழை அறிவியலால் ஆள்வோம் அறிவியல் ஆய்வுக்கு எல்லை இல்லை. மண்ணில் , விண்ணில் , கடலில் , காற்றில் என எங்கும் ஆய்வுகள் நிகழ்கின்றன. மனிதனின் நகலாக எந்திர
மனிதனை மனிதரே படைக்கின்றனர். மனித உடலின் பாகங்களையும் இயந்திரத்தின் பாகங்கள் போல் மாற்றுகின்றனர். கோள்கள் இனி நமக்குத் தொலைவு இல்லை. நேற்றைய மனிதன் நினைத்துப் பார்க்காத பலவற்றை இன்றைய மனிதன் நிகழ்த்திக் காட்டுகிறான். இன்றைய மனிதனின் கனவுகளை நாளை நாம் நனவாக்குவோம் வாருங்கள் ! ஆழக் கடலின் அடியில் மூழ்கி ஆய்வுகள் செய்து பார்க்கின்றான் நீல வானின் மேலே பறந்து நிலவில் வாழ நினைக்கின்றான் செயற்கைக் கோளை விண்ணில் ஏவி செய்தித் தொடர்பில் சிறக்கின்றான் இயற்கை வளமும் புயலும் மழையும் எங்கே என்று உரைக்கின்றான் எலும்பும்
தசையும் இல்லாது இயங்கும் எந்திர மனிதனைப் படைக்கின்றான் இணைய வலையால் உலகம் முழுமையும் உள்ளங் கையில் கொடுக்கின்றான் உறுப்பை மாற்றும் மருத்துவம் கண்டு உடலும் உயிரும் காக்கின்றான் அணுவைப் பிளந்து ஆற்றலை எடுத்து அனைத்தும் செய்து பார்க்கின்றான் நாளை மனிதன் கோள்களில் எல்லாம் நகரம் அமைத்து வாழ்ந்திடுவான் வேளை தோறும் பயணம் செய்ய விண்வெளிப் பாதை அமைத்திடுவான். பாடநூல் ஆசிரியர் குழு I பாடலின் பொருள் மனிதன் ஆழ்கடலுக்கு உள்ளேயும் சென்று ஆய்வுகள் செய்கின்றான். நீல வானத்தின் மேலே பறந்து நிலவில் சென்றும் வாழ நினைக்கிறான்.
வானத்தில் செலுத்தப்படும் செயற்கைக்கோள்கள் உதவியுடன் செய்தித் தொடர்பில் சிறந்துள்ளான். இயற்கை வளங்களையும் புயல் , மழை ஆகியவற்றையும் கண்டறிந்து கூறுகிறான். எலும்பும் தசையும் இல்லாமல் செயல்படும் எந்திர மனிதனையும் படைத்து விட்டான். இணையவலையின் உதவியால் உலகத்தையே நம் உள்ளங்கையில் கொடுக்கின்றான். பாதிக்கப்பட்ட உடலுறுப்புகளை மாற்றிப் பொருத்தி உடலையும் உயிரையும் காக்க வழிவகை செய்துவிட்டான். அணுவைப் பிளந்து ஆற்றலை எடுத்து அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறான். நாளைய மனிதனோ விண்ணிலுள்ள கோள்களில் எல்லாம்
நகரங்கள் அமைத்து வாழ்ந்திடுவான். அங்குச் சென்றுவர விண்வெளியிலும் பாதை அமைத்திடுவான். கற்பவை கற்றபின் 1. அறிவியலால் ஆள்வோம் கவிதையை உரிய ஓசையுடன் படிக்க. 2. உங்களைக் கவர்ந்த அறிவியல் சாதனங்கள் நான்கினை எழுதுக. 3. ' அலைபேசியால் நன்மையே ' என்னும் தலைப்பில் வகுப்பில் கலந்துரையாடல் செய்க. வானை அளப்போம் கடல் மீனையளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம் சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம். -பாரதியார் I மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. மனிதன் எப்போதும் உண்மையையே அ ) உரைக்கின்றான் ஆ )
உழைக்கின்றான் இ ) உறைகின்றான் 2. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ ) ஆழமான + கடல்ஆ ) ஆழ் + கடல் இ ) ஆழ + கடல் விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ ) விண் + வளி ஆ ) விண் + வெளி இ ) விண் + ஒளி நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ ) நீலம்வான் ஆ ) நீளம்வான் இ ) நீலவான் இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் அ ) இல்லாதுஇயங்கும் இ ) இல்லாதியங்கும் 3. 5. நயம் அறிக. 1. பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எழுதுக. 2. பாடலில் இடம்பெற்றுள்ள
எதுகைச் சொற்களை எழுதுக. 3. பாடலில் இடம்பெற்றுள்ள இயைபுச் சொற்களை எழுதுக. குறுவினா 1. செயற்கைக்கோள் எவற்றுக்கு எல்லாம் பயன்படுகிறது ? 2. நாளைய மனிதனின் வாழ்வு எவ்வாறு இருக்கும் ? இல்லாஇயங்கும் ஈ ) இல்லதியங்கும் ஈ ) ஆழம் + கடல் சிந்தனை வினா 1. எவற்றுக்குப் புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்பது பற்றிச் சிந்தித்து எழுதுக 2. இதுவரை எத்தனை கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன ? அவை யாவை ? 3. இந்தியா அண்மையில் நிலவுக்கு அனுப்பிய செயற்கைக்கோளின் பெயர் யாது ? ஈ ) விண் + வொளி ஈ ) நீலவ்வான் I இயல் மூன்று எல்லாம் எந்திரமயமாகி
வருகிற காலம் இது. மனிதர்கள் தாங்கள் செய்யும் செயல்களை எந்திரங்களைக் கொண்டு செய்யும் வகையில் பலவற்றை உருவாக்கி வருகிறார்கள். மனிதர்கள் செய்ய முடியாத பணிகளையும் எந்திரங்கள் செய்கின்றன. வீடு. அலுவலகம் , தொழிற்சாலை , மருத்துவமனை என்று பல இடங்களிலும் எந்திரங்கள் பணியாற்றுகின்றன. கணக்குப்போடும் எந்திரம் , கற்றுத்தரும் எந்திரம் , வேலை செய்யும் எந்திரம் , விளையாடும் எந்திரம் என்று எங்கெங்கும் எந்திரங்கள். எந்திர உலகில் நுழைவோம் ! எல்லாவற்றையும் கற்போம் ! நுழையும்முன் -ரைநடை உலகம் கணியனின் நண்பன் கணியன் பள்ளி
முடிந்து வீடு திரும்பினான். அழைப்பு மணியை அழுத்தினான். " யார் அங்கே ? ' வீட்டிற்குள் புதிய குரல் ! அதைக் கேட்டுத் திகைத்தான். " யாருடைய குரல் இது ? அம்மாவின் குரல் போல இல்லையே ! " சிந்தித்தான். அப்போது கதவு திறந்தது. உள்ளே நின்றிருந்த உருவத்தைப் பார்த்ததும் அவனுக்குள் வியப்பு ! ' கணியன் வணக்கம் ! உள்ளே வா ' என்றது அவ்வுருவம். கணியன் சற்றுப் பயத்துடன் தயங்கி நின்றான். அப்போது அங்கு வந்த அவனுடைய அம்மா , ' கணியா , ஏன் அங்கேயே நிற்கிறாய் ? பயப்படாதே ! உள்ளே வா ! " என்றார். உள்ளே வந்த கணியன் ' அம்மா யார் இது ? '
எனக் கேட்டான். " இதுதான் எந்திரமனிதன். தொழில்நுட்பக் கண்காட்சிக்கு அப்பா போயிருந்தார் இல்லையா ? அங்கிருந்து வாங்கி வந்துள்ளார். இனி இதுவும் நம் வீட்டின் உறுப்பினர்தான் " என்றார் அம்மா. " இது என்னோடு பேசியதே ! " , எனக் கேட்டான் கணியன். ' ஆம் இது பேசும் , பாடும் , வீட்டு வேலைகள் செய்யும் , படிப்பதில் உனக்கு உதவி செய்யும் , என்னுடைய அலுவலக வேலைகளை முடிக்க உதவும். அப்பாவுடைய கணக்குவழக்குகளையும் முடித்துத் தரும் ' , என்றார் அம்மா. I " அப்படியா ! இதனுடன் நான் பேசிப் பார்க்கட்டுமா ? " என ஆவலோடு கேட்டான். " பேசு ,
பயப்படாமல் பேசு " என்றார் அம்மா. " இங்கே வா ! " என்றான் கணியன். எந்திரமனிதன் நகர்ந்து கணியன் அருகில் வந்து நின்றது. ' யார் நீ ? ' எனக் கேட்டான் கணியன். ' நான் ஓர் எந்திரமனிதன். என்னை ' ரோபோ ' என்றும் அழைப்பார்கள் ' , என்றது. " நீ எல்லா வேலைகளையும் செய்வாய் என்று அம்மா கூறினார். எப்படி உன்னால் அது முடிகிறது ? " " அதற்கு நான் உருவான வரலாற்றை நீ முதலில் அறிந்து கொள்ள வேண்டும் " என்று கூறிய ரோபோ தொடர்ந்து பேசியது. " நான் உருவாவதற்கு முன்பே என்னைப் பற்றிய கற்பனை மனிதர்களிடம் இருந்தது. காரல் கபெக் ( Karel capek )
என்பவர் ' செக் ' நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர். இவர் 1920 ஆம் ஆண்டு நாடகம் ஒன்றை எழுதினார். அதில் " ரோபோ " ( Robot ) என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார். ரோபோ என்ற சொல்லுக்கு ' அடிமை ' என்பது பொருள். ஒரு தொழிற்சாலையில் ரோபோக்கள் வேலை செய்வதாக அந்த நாடகத்தில் காட்சிகளை அமைத்திருந்தார். இவ்வாறு ரோபோ என்னும் சொல் வழக்கத்திற்கு வந்தது. மனிதர்கள் தம் வேலைகளை எளிதாகச் செய்ய முதலில் எந்திரங்களைக் கண்டுபிடித்தனர். அவற்றை இயக்குவதற்கு மனித ஆற்றல் தேவைப்பட்டது. இக்குறையைப் போக்க மனிதன் கண்டுபிடித்தவையே
தானியங்கிகள். தானியங்கி என்றால் என்ன தெரியுமா ? நுட்பமான , கடினமான , ஒரே மாதிரியான வேலைகளை மனிதரைவிட விரைவாகத் தானே செய்துமுடிக்கும் எந்திரமே தானியங்கி ஆகும். ஒவ்வொரு தானியங்கியிலும் ஒரு கணினி இணைந்து இருக்கும். தானியங்கியின் செயல்களை அந்தக் கணினி கட்டுப்படுத்தும். இவ்வகைத் தானியங்கிகள் இன்று பல தொழில் நிறுவனங்களில் பயன்பட்டு வருகின்றன. இவை பயன்படும் இடத்திற்கு ஏற்ற வகையில் எந்திரக் கைகள் , நகரும் கால்கள் , சூழ்நிலைகளை உணர்வதற்கான நுண்ணுணர்வுக் கருவிகள் ( Sensors ) ஆகியவற்றுடன் உருவாக்கப்படுகின்றன " என்று
கூறி நிறுத்தியது. " நான் அவற்றைப் பார்க்க வேண்டுமே ! " என்றான் கணியன். " வா உனக்குக் காட்டுகிறேன் " என்று தெரிந்து தெளிவோம் மனித முயற்சிகளுக்கு மாற்றாகத் தானே இயங்கும் எந்திரம் தானியங்கி ஆகும். " இவை தோற்றத்தில் மனிதர் போல இல்லாமலும் இருக்கலாம். மனிதர்களைப் போலச் செயல்களை நிறைவேற்றும் " என்று பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் தானியங்கிகளுக்கு விளக்கம் தருகிறது. ஆனால் I கூறிய எந்திரமனிதன் , கணினியை இயக்கத் தொடங்கியது. கணினித்திரையில் காட்சிகள் தோன்றின. " இவை தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் தானியங்கிகள். உற்பத்தி
செய்தல் , பழுதுகளை நீக்குதல் போன்ற பணிகளைச் செய்கின்றன. இந்தக் காட்சியைப் பார் கணியா ! " என்றது எந்திர மனிதன். " இது என்ன செய்கிறது ? நோய்க்கு மருத்துவம் செய்வது போல உள்ளதே ! " என்று கேட்டான். " ஆம் கணியா ! இவை மருத்துவத்துறையில் நோயின் அறிகுறிகளைக் கண்டுபிடிக்க உதவுகின்றன. மருத்துவம் பார்க்கவும் பயன்படுத்தப்படுகின்றன. சிக்கலான அறுவை சிகிச்சைகளைச் செய்யும் ரோபோக்களும் உள்ளன. " " அப்படியா ! அடுத்து... ? " எனக் கேட்டான். " பிற கோள்களுக்குச் சென்று ஆய்வு நடத்தவும் செயற்கைக்கோள்களை இயக்கவும் தானியங்கிகள்
பயன்படுகின்றன. உலகில் மனிதர்கள் செல்ல முடியாத இடங்கள் பல உள்ளன. பெருங்கடலின் அடி ஆழம் , வெப்பநிலை உறைநிலைக்கும் கீழே உள்ள துருவப்பகுதிகள் ஆகியவை அவற்றுள் சில. இவ்விடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தவும் இவை உதவுகின்றன. " " ஆனால் இவை உருவ அமைப்பில் உன்னைப் போல இல்லையே ? " எனக் கணியன் வினவினான். " தமது வேலைகளை எளிமையாகச் செய்ய முதலில் தானியங்கிகளை உருவாக்கினான் மனிதன். பிறகு தன்னைப் போன்றே சிந்தித்துச் செயல்படும் தானியங்கிகளை உருவாக்க முயன்றான். அம்முயற்சியின் விளைவாகத் தோன்றியவர்களே என்னைப் போன்ற
எந்திரமனிதர்கள். மனிதர்களைப் போலவே எங்களுக்குத் தலை , உடல் , கை , கால்கள் இருக்கும் " " அப்படியானால் எந்திர மனிதர்களுக்கும் தானியங்கிகளுக்கும் உள்ள வேறுபாடு " அதுதான் எங்களிடம் உள்ள செயற்கை I எங்களுக்குள் சில கட்டளைகள் வடிவமைத்து வைக்கப்பட்டு உள்ளன. இந்தச் செயற்கை நுண்ணறிவைக் கொண்டே நாங்கள் இயங்குகிறோம். " உண்மையாகவே செயற்கை நுண்ணறிவைக் கொண்டு மனிதர் போலச் செயல்பட முடியுமா ? " செயற்கை முடியும். நுண்ணறிவின் வலிமையை நீ அறிந்துகொள்ள வேண்டுமா ? ஒரு நிகழ்ச்சியைக் கேள் ! கூறுகிறேன் 1997 - ஆம் ஆண்டு மே மாதம்
சதுரங்கப் போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் உலகச் சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவ் என்பவர் கலந்து கொண்டார். ஐ.பி.எம். என்னும் நிறுவனம் உருவாக்கிய டீப் புளூ ( Deep blue ) என்னும் மீத்திறன் கணினி ( Super Computer ) அவருடன் போட்டியிட்டது. போட்டியின் முடிவு என்ன தெரியுமா ? ஆம் , நீ நினைப்பது சரிதான். போட்டியில் டீப் புளூவே வெற்றி வாகை சூடியது ". " என்னால் நம்பவே முடியவில்லை ! அப்படியானால் நீயும் கூட சதுரங்கம் விளையாடுவாயா ? " விளையாடுவேனே ! என்னைப்போன்ற எந்திரமனிதர்கள் , உணவகங்களில் உணவு பரிமாறுகின்றனர். பொது