text
stringlengths 11
513
|
---|
எனலாம். வரலாறு அல்லது பரிணாமக் கொள்கை இதற்கு முன் ஐந்து முக்கிய கொள்கைகள் பற்றி இப்பாடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றில் எதுவும் அரசு தோற்றத்தை பற்றி போதுமான விளக்கம் தரவில்லை. ஆனால் வரலாற்று அல்லது பரிணாமக் கொள்கை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இருக்கிறது. இக்கொள்கை அரசு இயல்பான ஆனால் சீரான முறையில் பல கால கட்டங்களில் தோன்றி இப்போதைய நிலையை எட்டி இருக்கிறது என்று விவரிக்கிறது. அரசு கடவுளால் உருவாக்கப்பட்டதென்றோ அல்லது குடும்பம் பெரிதாகி அதனால் ஏற்பட்டதென்றோ அல்லது வலிமை காரணமாக ஏற்பட்டதென்றோ குறிப்பிட
|
முடியாது. பேராசிரியர் கார்னர் என்பவர் செயற்கை அல்லது இயந்திரத்தனமான முறையில் ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற கருத்தை மறுத்து வரலாறு கூறுவது போல இயற்கையாக ஏற்பட்ட அமைப்பு தான் அரசு என்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அரசின் தோற்றத்தில் பல மூலக்கூறுகள் இருக்கின்றன. அவற்றில் இனப்பற்று , மதம் , போர் , இடம் பெயர்தல் , பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அரசியல் விழிப்புணர்வு ஆகியவை முக்கியமானவைகளாகும். 1. இனப்பற்று பொதுவாக மக்கள் குடும்ப அமைப்பு , குல அமைப்பு போன்றவைகளில் வாழ்கின்ற பொழுது அவர்களிடையே உறவு முறை தொடர்பு
|
இருக்கிறது. அவர்கள் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் பந்தம் பாசம் என்பவைகளால் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் மேற்பட்ட அமைப்புகள் எவ்வளவு பெரியவைகளாக அதிக உறுப்பினர்களை கொண்டதாக மாறினாலும் அவர்கள் எல்லோரும் ஏதேனும் ஒரு மூத்த குடும்பத்தை சேர்ந்த ஆண்மகனை தலைவனாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு கட்டுப்பட்டு அவன் கட்டளைப்படி நடக்கின்றார்கள். இக்கருத்தை பேராசிரியர் மாக்ஜவர் ( Mac Iver ) மிகவும் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார். அதாவது பல தலைமுறைகளை சேர்ந்த மக்கள் எல்லோரும் இன அடிப்படையில் ஒன்றுபட்டு அவர்களுக்கு
|
இடையே சகோதரத்துவ பாசத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். ஒருவர் மற்றொருவரை விட்டுக் கொடுக்காமலும் சார்ந்தும் வாழ்கிறார். இத்தகைய அமைப்பு இன அடிப்படையில் பிற்காலத்தில் அரசாக ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். 2. மதம் இனத்தைப் போல மதமும் மக்களை ஒன்றுபடுத்தும் சக்தியாக இருக்கிறது. பொதுவாக மக்கள் எப்பகுதிகளில் வாழ்ந்தாலும் அவர்களுடைய மூதாதையர்கள் எந்த மதத்தைப் பின்பற்றினார்களோ அந்த மதத்தையே பின்பற்றி வாழ்ந்திருக்கிறார்கள். மதம் அவர்களை அணைத்து ஒன்றுபடுத்தியிருக்கிறது. மதத்தலைவர் அவ்வப்பகுதி
|
மக்களுக்கு தலைமை ஏற்று அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி தந்திருக்கிறார்கள். பொதுவாக மதம் பற்றிய பயம் மக்களிடையே காணப்பட்டாலும் இன அடிப்படையில் அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு அரசை தோற்றுவித்திருக்கக்கூடும் என்ற கருத்தும் வற்புறுத்தப்படுகிறது. 3. வலிமை வலிமை அல்லது வல்லமை என்பதும் உலகின் பல பகுதிகளில் அரசுகள் மற்றும் பேரரசுகள் ஏற்படக் காரணமாக இருந்திருக்கிறது. இங்கிலாந்து , பிரான்சு , இத்தாலி மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் அரசுகள் பல மறைந்து புதிய அரசுகள் தோன்றியிருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் வலிமை என்பது
|
தான் ஆகும். 4. உடைமை மற்றும் பாதுகாப்பு இவை இரண்டும் அரசு தோன்றுவதற்கு பழங்காலத்தில் காரணிகளாக இருந்திருக்கின்றன என்று பேராசிரியர் லாஸ்கி போன்றோர்கள் குறிப்பிடுகிறார்கள். மக்கள் தமக்கென்று பொருள்களையும் இதர உடைமைகளையும் சேர்க்கவும் அவற்றை பாதுகாக்கவும் மற்றும் தங்களை சேர்ந்தவர்களுக்கு அவைகள் கிடைக்க வேண்டுமென்று பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இதற்கு பக்க பலமாக , பாதுகாப்பாக அமைந்த ஏற்பாடு பிறகு அரசாக ஏற்பட்டது என்றும் கூறுகின்றார்கள். 5. அரசியல் விழிப்புணர்வு அரசின் தோற்றத்திற்கு அரசியல் விழிப்புணர்வும்
|
முக்கியமான காரணியாக கருதப்படுகிறது. குறிப்பிட்ட நிலப்பரப்பில் நிரந்தரமாக வாழ்க்கையை நடத்த முற்பட்ட போது உயிர் மற்றும் உடமைகளுக்கு பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்பட்டன. அதோடு அவர்களுக்கிடையே தனிப்பட்ட முறையில் சமுதாய அமைப்பு முறையில் அமைதி மற்றும் பாதுகாப்பு சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்டன. இவைகளை தீர்த்து வைக்கவும் அவைகள் மீண்டும் மீண்டும் ஏற்படாமல் தடுக்கவும் தோன்றிய அமைப்பே அரசு என்பதாக கருதப்பட்டது. முடிவுரை மேலே சொல்லப்பட்டவைகளில் இருந்து எந்த ஒரு கொள்கையும் அரசின் தோற்றத்திற்கு முழுமையான காரணியாக
|
அமையவில்லை. ஒவ்வொரு காரணியும் ஏதேனும் ஒரு வகையில் தான் அரசு தோன்றுவதற்கும் மக்கள் திருந்தி சிறந்த குடிமக்களாக வாழ்வதற்கும் துணையாக இருந்திருக்கின்றது என்பது தெளிவாகின்றது. இக்கொள்கைகள் எல்லாவற்றிலும் வரலாறு சார்ந்த பரிணாமக் கொள்கை அரசு இயற்கையாக காலப்போக்கில் மெல்ல மெல்ல தடைகள் பலவற்றைக் கடந்து தோன்றியதெனக் குறிப்பிடுகிறது. இது அறிவியலடிப்படையில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருப்பதால் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அத்தியாயம் 3 புதிய அரசியல் அறிவியல் 3.1 பொருள் மற்றும் முன் கருத்து படிவத்தின் தன்மை அரசு இயங்குகின்ற
|
தன்மை பற்றி அறியும் இயல் அரசியல் அறிவியல் என்பதாகும். அரசாங்கத்தின் கட்டுமானம் மற்றும் அதன் இயக்கத்தை படிப்பதும் இதில் உள்ளடங்கியதாகும். அதனடிப்படையில் அரசியல் அறிஞர்கள் கீழ்க்கண்ட சமூக நிறுவனங்களை பற்றி படிக்க முற்படுகின்றனர். 1. கழகங்கள் 2. கூட்டமைப்புகள் 3. தேவாலயம் 4. நிர்வாக அமைப்புகள் ஜான் போதான் ( 1530 1596 ) என்ற பிரெஞ்சு தத்துவ ஞானி “ அரசியல் அறிவியல் ’ ’ என்ற பதத்தைப் பயன்படுத்தினார். முடிவு எடுப்பதில் அதிகார ஒதுக்கீடு மற்றும் அதிகார இடப்பெயர்வை பற்றிய செய்திகளை அரசியல் அறிவியலாளர்கள் கற்கின்றனர்.
|
அரசியல் அறிவியல் என்பது நேர்மறை எண்ணக் கருத்துகளை முன் நிறுத்துவதிலும் , அரசியலை பகுப்பாய்வு செய்வதிலும் மேலும் கொள்கை உருவாக்கத்திற்கு தேவைப்படும் கருத்துகளை சிபாரிசு செய்வதிலும் முற்படும். பாரம்பரிய அரசியல் அறிவியல் என்பது மனதளவில் உருவாகும் எண்ணக்கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு அறிவை வளர்ப்பதாகும். மேலும் அவைகள் ஒழுக்கலாறு அடிப்படையிலானவை. பாரம்பரிய அரசியல் கோட்பாடுகள் உத்தேசம் மற்றும் ஆசிரியர்களின் தனிப்பட்ட முன் அனுபவம் மற்றும் ஆராய்ச்சி கேள்வி ஞானத்தால் உருவாகுவதாகும். ஆனால் , புதிய அரசியல் அறிவியல்
|
என்பது புள்ளி விவரங்களோடு சார்ந்த அறிவியல் அடிப்படையிலான கேள்வி ஞானமாகும். அரசியல் அறிவியலின் அறிவியல் தோற்றம் என்பது 1950 - களில் நடைபெற்ற நடத்தை இயக்கத்தால் ஏற்பட்டதாகும். அறிவியல் ரீதியான அரசியல் என்பது 1950 - களில் கண்ட நடத்தை இயல் புரட்சியின் மூலம் நாம் கண்டதாகும். இவ்வியக்கத்தின் பிறகே இவ்வியலின் பல உறுப்பினர்கள் அரசியல் பாடத்திற்கு ஒரு அறிவியல் தன்மை இருப்பதாக உணர்ந்து கொண்டனர். அரசியல் நடத்தைகளை உணர்வதிலும் , எண்ணளவு அடிப்படையில் அரசியல் உணர்வுகளை துல்லியமாக எதிர்பார்ப்பதிலும் , அனைவரும் ஏற்றுக்
|
கொண்ட மதிப்பு அடிப்படையில் அல்லாத ஆராய்ச்சி வழிமுறைகளில் , அரசியல் அறிவியல் நடத்தை இயலின் மூலம் நிலைநிறுத்தியது. நடத்தை இயக்கத்தின் பிறகு இவற்றில் சிறிது மாறி இருந்தாலும் நேர்மறை அறிவியல் மாதிரியை இன்றளவும் அரசியல் அறிவியல் பின்பற்றிவருகிறது. இதன் காரணமாய் எண்ண அடிப்படையில் உருவாகும் அரசியல் கோட்பாடுகள் ஓரளவு மங்கத் தொடங்கின. உண்மையில் வெறும் சிந்தனை அடிப்படையை அரசியல் கோட்பாடுகள் எண்ணளவு அடிப்படையிலான ஆதரிக்கவில்லை , என்பதால் நடத்தை இயல் , எண்ணம் அடிப்படையிலான அரசியல் கோட்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
|
பணி சார் குழுமங்களின் ஆதரவினால் அரசியல் படிப்பு என்பது தொழில்ரீதியான இயல் என்ற அந்தஸ்தைப் பெற்றது. 1. நாட்டிடை அரசியல் அறிவியல் குழுமம் 2. இந்திய அரசியல் அறிவியல் குழுமம் 3. இந்திய பொது நிர்வாக நிறுவனம் 4. அமெரிக்க அரசியல் அறிவியல் குழுமம் தூய அறிவியல் நிலையை பெறவேண்டும் என்ற இலக்கை நோக்கி நடத்தை இயல் செல்லும் போது , அரசியல் அறிவியலுக்கு ஒரு தொழில் ரீதியான அந்தஸ்து கிடைக்கப்பெற்றது. நடத்தை இயலின் காரணமாய் அரசியல் அறிவியலோடு தன்னை ஐக்கியப்படுத்தியது. இத்தகைய ஐக்கியப்படுதல் என்பது அன்று முதல் இன்று வரை
|
எந்தவொரு மாற்றமில்லாமல் தொடர்கின்றது. அரசியலைப் பற்றிய உண்மையான அறிவை பெறவேண்டும் என்றால் அரசியல் அறிவியல் ஒரு அறிவியல் அடிப்படையிலான , தனித்தன்மைபெற்ற இயல் என்றும் , தொழில்ரீதியான ஐக்கியப்படுத்துதல் என்ற நிலையில் இவ்வியல் தன்னைக் காட்டிக் கொள்ளவேண்டும். அறிவியல் அடிப்படையிலான வழிமுறைகளின் மூலம் அரசியல் ஆர்வலர்கள் குறிக்கோள் அடிப்படையிலான , எண்ணங்களின் அடிப்படையில் விடுபட்ட , மதிநுட்ப ரீதியாக அரசியலை புதுமைப்படுத்துவதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர். மதிப்பீட்டிலிருந்து விடுபட்ட ( Value - free ) அறிவியலில்
|
எண்ணம் அடிப்படையிலான குறிக்கோள்கள் கிடையாது. ஒரு தொழில் ரீதியான பார்வையின் மூலம் அரசியல் ஆர்வலர்கள் புதிய அரசியல் அறிவியலை அறிமுகப்படுத்தினர். அரசு அமைப்புகளில் அரசியல் அறிவுகளைப் புகுத்தினார்கள். பகுத்தறிவு ரீதியான அரசியல் கட்டளைகள் , புதிய அரசியல் சமுதாயத்தை உருவாக்குவதில் சமூக பொறியாளர்களான சார்லஸ் மேரியம் மற்றும் ஹெரால்டு லாஸ்கி போன்றோர் முற்பட்டனர். புதிய அரசியல் அறிவியல் அறிஞர்கள் குடிமக்களை ஒரு கருவாக மேலும் உற்றுநோக்கி அறிவதில் தங்கள் கவனத்தைச் செலுத்தினர். சுதந்திர மக்களாட்சி அரசை ஊக்கப்படுத்துவதில்
|
புதிய அரசியல் அறிஞர்கள் நாட்டம் கொண்டனர். அறிவியல் அடிப்படையிலான அரசியல் சாத்தியமென்றும் அதனடிப்படையில் உருவாகும் அரசியல் அறிவு சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகளை நிரந்தரமாக தீர்க்கவல்லது என்ற அடிப்படையில் இயங்கினார்கள். நுட்ப ரீதியாய் உருவாக்கப்பெற்ற அரசியல் அறிவியல் அறிவினை அரசியல் அறிஞர்கள் அரசாங்கப் பணிகளில் தக்க வழிகளில் செலுத்தி பயன்பெறச் செய்தனர். மெரியம் தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரைகளில் அரசியல் அறிவியல் ஆழ்ந்த அறிவியல் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கருதினார். எதிர்பார்ப்பு மற்றும் யோசனை அடிப்படையிலான
|
எண்ணங்களை விடுத்து அரசியல் அறிவியல் , அறிவியல் நுட்பங்களையும் , வழிமுறைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை காணத் துடித்தார். மனித நாகரீகத்தை முழுமை படுத்துவதில் எங்ஙனம் அறிவியல் துணை புரிந்ததோ , அதே வகையில் அரசியல் அறிவியல் மனித நாகரீகத்தை காப்பதிலும் , செழுமை படுத்துவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும். அறிவின் பரிணாம வளர்ச்சியினையும் மற்றும் மனித உணர்வுகளையும் Page 4³ of 204 கட்டுப்படுத்தும் குடிமக்கள் கல்வியின் மூலம் மக்களாட்சி மாண்புகளை வளர்க்க முற்பட்டார். இதன் மூலம் முழுமைப்பெற்ற சமுதாயத்தை மற்றும்
|
மனித இனத்தை காணமுற்பட்டார். நடத்தை இயல் அறிஞர்களாகிய ஹீனஸ் யூலா ( Heinz Eulau ) மற்றும் டேவிட் ஈஸ்டன் ( David Easton ) நடத்தை இயல் ஆராய்ச்சி முறைகளை கண்டறிந்து , பயன்படுத்தி “ புதிய அரசியல் அறிவியலை ” வளர்க்க முற்பட்டனர். புதிய அரசியல் அறிவியலின் குணாதிசயங்களாய் கீழ்வருவனவற்றைக் குறிப்பிடலாம். 1. முன் அறிதல் மற்றும் விளக்கங்களை அளிப்பதில் அரசியல் அறிவியல் தக்க நெறிமுறைகளைக் கொண்டு அரசியல் நடத்தைகளைப் பயன்படுத்துவதாகும். 2. தனிமனித நடத்தை மற்றும் அரசியல் குழுக்களின் நடத்தைகளை எண்ணிக்கை அடிப்படையில் ஆராய்ச்சி
|
செய்து அரசியல் புதிர்களை விளக்கச் செய்வதாகும். 3. முன்கூட்டி அறிதலை துணைசெய்யும் வகையில் புள்ளியல் விவரங்கள் அளவிடப்படவேண்டும். ஒரு கோட்பாட்டின் மூலம் ஆராய்ச்சிகள் அமைய வேண்டும். மேலும் அவ்வாராய்ச்சிகள் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்ற கருத்து முன்படிவத்தினை பெற்றிருக்க வேண்டும். 5. உண்மையான அறிவியல் ஆராய்ச்சி முறைகளை அரசியல் அறிஞர்கள் பின்பற்றவேண்டும். 6. அளவிடமுடியாத கருத்துகளாகிய மக்களாட்சி , சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை எண்ணிக்கையளவில் ஆராயமுடியவில்லையென்றால் அவைகளை ஒதுக்கவேண்டும். 7. அரசியல்
|
அறிவியல் ஒரு பல இயல் அறிவாக உருவாகவேண்டும். 4. 8. பல்நோக்கு பகுப்பாய்வு , சர்வே ஆராய்ச்சி , கணக்கு மாதிரிகள் துணைகொண்டு அரசியல் அறிவியல் ஆராய்ச்சி வழிமுறைகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். யூலாவின் கருத்துப்படி பெரு அளவு பகுப்பாய்வு ( Macro level analysis ) என்பது நிறுவனங்களையும் சிறு அளவு பகுப்பாய்வு ( Micro level analysis ) என்பது தனிமனிதனையும் அடிப்படையாகக் கொண்டு அமையும். அறிவியல் ரீதியான அரசியல் என்பது அரசியல் நடத்தைகளை பெரு அளவு மற்றும் சிறு அளவு பகுப்பாய்வின் மூலம் நன்கு தெளிவு படுத்துவதாகும்.
|
ஒருமைதன்மை மற்றும் சீரான நெறிகளை வளர்ப்பதில் எண்ணிக்கை அடிப்படையிலான அறிவியல் தன் நோக்கினை செலுத்தும். நிறுவனங்களின் தாக்கம் தனிநபர் நடத்தையிலும் , தனிநபர் தாக்கம் நிறுவனங்களின் மேலும் உள்ளவற்றை நாம் அறிவியல் ரீதியாய் அறியலாம். அரசியல் அறிஞர்கள் புள்ளியியல் விவரங்களையும் , அதன் முடிவுகளையும் ஒழுங்கு படுத்த வேண்டும் என யூலா கருதுகின்றார். அளவிடுவது , இன்றைய ஆராய்ச்சி வழிமுறைகள் , சோதனைக்குரிய கருத்து முன்படிவங்கள் ஆகியவைகள் செயல்பாட்டிற்குரிய மேலும் நம்பிக்கைக்குரிய அரசியல் அறிவினை பெருக்கும். எண்ணிக்கை
|
அடிப்படையிலான அரசியல் அறிவியல் என்பது பல அரசியல் கருத்துகளுக்கு ஆதாரமாகவும் , நம்பிக்கை தன்மையை கொடுப்பதிலும் முன் நிற்கும். நடத்தை இயல் மூலம் அறியப்படும் அரசியல் அறிவியல் என்பது பகுத்தறிவாக இருக்கும். 3.2 அரசியல் அதிகாரத்தின் பயன்பாடுகள் அரசியல் அதிகாரம் என்றால் என்ன ? மாக்ஸ் வீபரின் கூற்றுப்படி அரசியல் அதிகாரம் என்பது வரலாற்று சமூகங்களில் எதேச்சதிகார வர்க்கம் தன்வசம் உள்ள ஒரு பரிசாகும் , தற்கால சமுதாயத்தில் அது செல்வத்தின் படைகளாகும். தற்கால சமுதாயத்தில் அரசியல் அதிகாரத்தினை அடைவதில் சச்சரவுகள் இருந்தாலும்
|
, அரசியல் அதிகாரத்தினை இன்று குழுக்களின் சமூக அந்தஸ்து , அரசியல் குழாம் , மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவைகள் அரசியல் அதிகாரத்தினை பெற்று விளங்குகின்றன. சமுதாயத்தில் அரசியல் மற்றும் அரசியல் நிறுவனங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். கருத்து முன்படிவமாக , அரசியல் என்பது நாம் அன்றாட வாழ்வில் காணும் அதிகார உறவுகளை தெளிவுப் படுத்துவதாகும். உதாரணமாக , பெற்றோர்களிடையே அதிகார உறவுகள் இருப்பதைக் காணலாம். ஆகவே சமுதாயத்தில் சிறு அரசியல் ( Micro Politics ) மற்றும் பெரு அரசியல் ( Macro Politics ) உள்ளது. நாம் அன்றாட
|
வாழ்க்கையில் காண்பது சிறு அரசியலாகும். நிறுவன அளவில் உள்ள அதிகார உறவுகள் பெரு அரசியல் எனலாம். அரசியல் சமூகவியல் என்ற பாடம் அரசு மற்றும் சமுதாயத்திற்கிடையே நிலவும் உறவுகளை பற்றிய படிப்புகளாகும். அதிகாரத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் நாம் அ மற்றும் ஆ க்களுக்கிடையே உள்ள உறவுகளை அறிந்து கொள்ளவேண்டும். ஆ என்ற நபர் ஒரு காரியத்தை செய்யவேண்டாம் என்று நினைத்திருந்தாலும் அ அந்த காரியத்தை ஆ யின் மூலம் செய்து முடித்தால் , அத்தகைய செயல்பாடு அ என்ற நபர் ஆ என்பவர் மீது செலுத்திய அதிகாரம் என நாம் கருதலாம்.
|
இதனடிப்படையில் அதிகாரம் என்பது ஒரு முக்கியமான முன் கருத்துப்படிவமாகும். மற்றொரு வகையில் நியமன அதிகாரம் என்பது ஆளுமையாகும் ( Authority ). உதாரணமாக , ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் தங்கள் மக்கள் மீது அதிகாரம் செலுத்த முற்படுவர். இதன் காரணமாய் நியமன அதிகாரத்தை மக்கள் மீது இத்தலைவர்கள் செலுத்துகின்றனர் என்று மக்களை நம்பச் செய்வார்கள். அதிகாரம் , நியாயத்தன்மை மற்றும் ஆளுமை ஒன்றொடு ஒன்று தொடர்புடையது. மேலும் இணைந்தே செல்வதாகும். மற்றவர் செய்ய மறுப்பினும் , அதை அவர்கள் கொண்டே செய்வது என்ற அதிகாரம் பல வகைகளை
|
கொண்டதாகும். ஆளுமை என்பது அதிகாரத்தைப் போலத்தான். ஆனால் ஆளுமைக்கு நிறுவனங்களின் துணையுண்டு. ஆளுமையில்லாமல் அதிகாரம் மட்டுமே இருக்குமிடத்தில் அதிகாரத்திற்கு நியாயத்தன்மை தேவைப்படுகிறது. அதிகாரத்திற்கு நம்பிக்கை மற்றும் நியாயத்தன்மையிருக்குமேயானால் அது ஆளுமையாகும். அதிகாரம் ( Power ) மற்றும் ஆளுமை ( Authority ) அரசியல் சமூகவியல் அறிஞர்களை சிந்திக்கச் செய்யும் இரு அடிப்படையான முன் கருத்துப்படிவமாகும். தனிமனித கருத்து , குழுக்களின் நடத்தை குணாதிசயங்கள் மக்களின் எண்ணம் மற்றும் செயல்பாடுகளை இயக்கவல்லது
|
அதிகாரமாகும். ( உதாரணம் : பெற்றோர் மற்றும் குழந்தைகள் அரசாங்கம் மற்றும் வரிகள் ) ஆளுமை என்பது அதனோடு தொடர்புடைய நிறுவனங்களையும் குறிப்பிடுவதாகும். நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கிடையே தான் ஆளுமை வெளிப்பாடு அடையும். உயர் குடியினர் என்பதை பரிட்டோ கீழ்க்கண்ட வகையில் விளக்குகிறார். 1. ஒவ்வொரு சமுதாயத்திலும் சமத்துவமின்மை எப்பொழுதும் இருக்கும். 2. சிறுபான்மையினரான உயர்குடியினர் பெரும்பான்மையான மக்களை ஆள்வார்கள். உயர் குடியினரை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம். “ ஆட்சி செய்யும் ” உயர் குடியினர் மற்றும் “ ஆட்சி செய்யா ”
|
உயர் குடியினர் ஆவார்கள். இவ்விரு உயர் குடியினர் சமூக சமன்நிலையை செய்கின்றார்கள். உயர் குடியினர் என்ற கருத்து முன்படிவம் , உயர்ந்த தகுதிகள் , திறமை மற்றும் சிறப்பு சலுகைகளை பெற்றவர்களை குறிப்பதாகும். பரிட்டோவின் விளக்கப்படி உயர்குடியை இரண்டு விதமாக பார்க்கலாம். 1. ஒவ்வொரு சமுதாயத்திலும் சலுகைகளையுடைய மக்கள் உள்ளனர். ஆகவே சமூக வாழ்வில் சமத்துவமின்மை தவிர்க்க இயலாதது. ( சமூக வகைபாடுகள் ) 2. ஒவ்வொரு சமுதாயத்திலும் உயர் குடியினர் சிறுபான்மையினராகவே இருந்து பெரும்பான்மையான மக்களை ஆட்சி செய்வர். உயர் குடியினர்
|
கோட்பாட்டாளர்கள் கூறுவது என்னவென்றால் மக்களாட்சி அமைப்புகளில் ஆட்சி செய்கின்ற ஒரு சில உயர் குடியினரே கொள்கை முடிவினை எடுக்கின்றார்கள். பல குழுக்களுக்கிடையே நடைபெறும் பகிரங்க போட்டியின் விளைவாய் ஏற்படும் கொள்கை முடிவுகள் அல்ல என்பதை நாம் அறியலாம். ராபர்ட் மைக்கேல் கூற்றுப்படி கீழ்க்கண்டவைகள் உயர்குடி வகுப்பினரை விளக்கும் கொள்கைகள் ஆகும். ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு குறிப்பிட்ட அதிகாரம் உடையவர்கள் சமுதாயத்தை கட்டுப்படுத்துவார்கள். எந்தவிதமான அரசாங்கமோ அல்லது பொருளாதாரமோ , அவற்றில் என்றும் உயர்குடி ஆட்சிதான்
|
கோலோச்சும். பெரும்பான்மையான மக்கள் தங்களை ஆட்சி செய்யமாட்டார்கள். கிடைக்கின்ற வளங்களை தக்க அமைப்பு ரீதியாகவும் , கூட்டு முயற்சியிலும் பெருமளவில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பர். உயர்குடி உறுப்பினர்கள் அதிகாரத்தை மையப்படுத்தி ஆட்சி செய்வார்கள். கிடைக்கின்ற அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி உயர்குடி வகுப்பினர் தங்கள் அதிகாரத்தை பாதுகாத்தும் , விரிவுபடுத்தியும் கொள்வர். தங்களுக்கு பயன்படும் என்றாலொழிய அதிகாரத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். தன்னிச்சையாக தங்கள் அதிகாரத்தை மற்றவர்களுக்கு
|
விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தங்கள் சமுதாயத்தை ஆட்சி செய்ய பல நுட்ப முறைகளை உயர் குடியினர் பின்பற்றுவர். பொருளாதாரத்தை கட்டுப்படுத்தல் , காவல் மற்றும் இராணுவத்தை தங்கள் நலன் காக்க பயன்படுத்துதல் , கல்வி முறை மற்றும் மக்கள் தொடர்பு சாதனங்களை தங்களுக்கு சாதகமாக சூழ்ச்சியாக நடத்துதல் , தங்களை எதிர்பவர்களை தனிமைப்படுத்துவது அல்லது தீர்த்துகட்டுவது , தங்கள் அதிகாரத்தையும் ஆட்சியையும் நியாயப்படுத்தும் அரசியல் உருவாக்குவது போன்ற வழிகளை பின்பற்றி தங்கள் ஆட்சியை நிலைப்படுத்துவர். கொள்கைகளை தங்கள் அதிகாரத்தைப்
|
பயன்படுத்தி தங்களின் சுயநலத்தை பேணவும் , தங்களின் அதிகார இடத்தை தக்க வைத்துக்கொள்வதில் அக்கறை காட்டுவர். இரண்டு காரணங்களுக்காக மார்கீசிய கோட்பாட்டினை உயர் கோட்பாட்டாளர்கள் மறுக்கின்றனர். சமூக வர்க்க கோட்பாடு என்பது : 1. மார்கீசியம் குறிப்பிடுகின்ற ‘ ஆதிக்க வர்க்கம் ’ என்பது தவறு , ஏனெனில் தற்கால தொழிற்கூட சமுதாயங்களில் உயர்குடி வகுப்பினரின் தொடர்ச்சியான சுழற்சி முறைதான் வழக்கில் உள்ளது. 2. ஒவ்வொரு சமுதாயத்திலும் சமூக படிநிலைகள் இருப்பதால் வர்க்கம் என்ற பிரிவு முக்கியத்துவம் பெறுகின்றது. மக்களாட்சி மற்றும்
|
உயர்குடியினர் கோட்பாட்டில் உள்ள அடிப்படை முரண்பாடுகள். 1. உயர்குடியினர் கோட்பாடு என்பது ஒவ்வொரு சமுதாயத்திலும் சமத்துவமின்மை இருப்பதை குறிப்பிடுகின்றது. ஆனால் மக்களாட்சி கோட்பாடு சமுதாயத்தில் சமத்தவம் இருப்பதாகக் கூறுகிறது. 2. உயர் குடியினர் கோட்பாடு என்பது ஒரு சில உயர் குடியினரே பெரும்பான்மையான மக்கள் மீது ஆதிக்கம் செய்வதாகப் பகர்கின்றது. ஆனால் மக்களாட்சி கோட்பாடு என்பது பெரும்பான்மையாளர்களே ஆட்சி செய்கின்றனர் எனக் கருதுகின்றது. ராபர்ட் மைகேல் அதிகார வர்க்க எதேச்சதிகார ஆட்சியைப் பற்றி கூறுகிறார். தற்கால
|
மக்கள் நலம் நாடும் அரசுகளில் அதிகார வர்க்கத்தின் ஆட்சி அதிகாரங்கள் வளர்ந்து வருவதாகக் கூறுகின்றார். 1. இராணுவத்தின் துணைகொண்டு , சிறு குழு தலைவர்கள் அரசியல் ரீதியாக ஆட்சி செய்வது. 2. நுட்ப பணியாளர்களை சார்ந்து ஆட்சி செய்யும் அரசியல் தலைவர்கள்இத்தகைய நுட்ப பணியாளர்கள் சமுதாயத்தின் அன்றாட நடவடிக்கையை கட்டுப்படுத்தி ஆட்சி செய்வர். 3. பொருளாதார மந்தநிலை ஏற்படுகின்ற காலங்களில் சமுதாயத்தில் பொருளாதார வளர்ச்சியினைப் பெருக்குதல். 4. பல வர்க்கங்களின் மீது அடக்குமுறையைப் பயன்படுத்துதல் , குறிப்பாக மத்திய வருவாய்
|
வர்க்கத்தினர் மீது. காரல் மார்க்ஸின் உயர்குடி வகுப்பினர் அல்லா கோட்பாடு ஒரு சமுதாயத்தில் அரசியல் அதிகாரம் எவ்வாறு பிரித்தளிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆரம்ப காலம் முதற்கொண்டே விளக்கியது மார்கீசிய கோட்பாடாகும். மார்க்ஸின் கூற்றுப்படி ஒவ்வொரு நாகரீகமடைந்த சமுதாயத்திலும் அரசியல் அதிகாரம் என்பது அளவில் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றது. பொருள் உற்பத்தி செய்யும் முறையை தங்கள் வசமாக்கி கொண்டு ஆட்சியில் உள்ளவர்கள் அரசியல் சமமான அதிகாரத்தை ஒருமுகப்படுத்துவர். ஆகையால் அரசியல் தலைவர்கள் ஆதிக்க
|
வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் ஆவார்கள். அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க சமூக பொருளாதார காரணிகள் தீர்மானிக்கின்றது. ஆளப்படுவோருக்கும் , ஆள்வோருக்கும் இடையே தொடர்ச்சியாக நடைபெறும் சச்சரவுகள் சமூக முறைமைகளை நிலை நிறுத்துகிறது. இத்தகைய சச்சரவுகள் உற்பத்தி சக்திகளை தீர்மானம் செய்கின்றது. வர்க்கரீதியாக முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என இருவேறு கூறாக மாறும் வர்க்க வேறுபாட்டுடன் வர்க்க பேதங்கள் உருவாக்குகின்றன. சச்சரவுகளின் தன்மைகளின் அடிப்படையில் அதிகார பகிர்ந்தளிப்பு நடைபெறுகிறது. ஆகவே பொருளாதார
|
தன்மையை தீர்க்கவல்லது மார்க்கீசிய கோட்பாடு. அது வர்க்க போராட்டத்தை தூண்டவல்லது. வன்முறை அடிப்படையில் புரட்சியை ஆதரிப்பது. ஆகவே மற்ற சிந்தனையாளர்கள் மார்க்சீய கோட்பாட்டினை எதிர்க்கின்றார்கள். 3.4 தன்மை மற்றும் மற்றவரை கவருதலின் நன்மைகள் அரசியல் சமூகவியல் என்பது எங்ஙனம் மற்றவரை கவருதல் , அரசியல் அதிகாரம் மற்றும் அதன் பகிர்வு ஆகியவற்றைப் பற்றி அறிவதாகும். தற்கால சமுதாயத்தில் மற்றவரை எந்தளவுக்கு நாம் கவருகிறோம் என்ற அடிப்படையில் நாம் வளமை பெறுகின்றோம். ஆகவே அதிகாரம் என்பது மற்றவரை கவரும் விதத்தில்
|
தீர்மானிக்கப்படுகிறது. மற்றவரை கவருதல் என்பது ஒரு நபரின் நடத்தையை இயல்பாக கட்டுப்படுத்துவதாகும். இது அவர்கள் விரும்பும் வண்ணமாக இல்லாமல் எதிராகவும் இருக்கலாம். ஹரால்டு லாஸ்வேல் மற்றும் ஆபிரகாம் கப்பலான் மற்றவரை கவருதல் என்ற கருத்தை விளக்க முற்படும் பொழுது “ கவருகின்ற தன்மையின் அடிப்படையில் அரசியல் தன்மைகள் தீர்மானிக்கப்படுகிறது ” எனக் கூறுகின்றார்கள். மற்றவரின் நடத்தையை பாதிப்பு அடையச் செய்யும் குணாதியசத்தை நாம் கவருதல் எனக் கூறுகிறோம். சில சமயம் மற்றவரை கவரும் தன்மை உச்சநிலையில் இருக்கும். இத்தகைய
|
தருணத்தில் அதிகாரத்தை வைத்திருப்போர் அதிக கவருகின்ற தன்மையை பெற்றிருக்கவேண்டும். மூர்க்கதனம் கவருதல் என்பதற்கான ஈடு கொடுக்கும் தன்மையில் சிறிது குறையும் பொழுது மூர்க்கத்தனத்தோடு கூடிய அதிகாரத்தை நாம் பயன்படுத்துகின்றோம். இதை நாம் மூர்க்கத்தனமான கவருதல் எனக் கூறுகிறோம். அச்சுறுத்துதல் அல்லது கட்டுப்பாட்டுகளை விதித்தல் என்ற விதத்திலான கவருகின்ற தன்மைகளை நாம் பயன்படுத்துகின்றோம். இத்தகைய அச்சுறுத்துதல்கள் பாராட்டுகள் அல்லது கொடுமைப் படுத்துதல் என்பவற்றோடு துணைவரும். தண்டனைகள் என்பது எதிர்மறையான கட்டுபாடுகள்
|
எனவும் , பாராட்டுகள் நேர்மறையான கட்டுப்பாடுகள் என நாம் எடுத்துக் கொள்ளலாம். மற்றவரை கவரும் தன்மையின் அளவு மற்றவரின் நடத்தையை தாக்கம் செய்கின்ற வகையில் பயன்படுத்தும் எதிர்மறையான அல்லது நேர்மறையான கட்டுப்பாடுகளை நாம் அதிகாரம் என்ற பொருள் விளக்கத்தை அளிக்கின்றோம். தொடர்புடையது அதிகாரம் என்பது தனிநபரின் சொத்து அன்று. அடிப்படையில் அது மற்றவையோடு தொடர்புடையதாகும். மற்றவர்களை தொடர்புபடுத்தியே அதிகாரம் பயன்படுத்தப்படும். ஏனையவரின் நடத்தையை பாதிக்கச் செய்வது அதிகாரம் எனக் கூறுகிறோம். ஒரு சமுதாயத்தில் அதிகாரம்
|
செலுத்துகின்றவர் , அதிகாரம் செலுத்தப்படுகின்றவர்கள் என்று உறவுகள் அதிகாரத்திற்கு தொடர்புடையவனவாக உள்ளது. நகரம் மற்றும் கிராம சமுதாயங்களில் இத்தகைய அதிகார உறவுகளை நாம் காணலாம். அரசு மற்றும் அதன் நிறுவனங்களின் அரசியல் அதிகாரம் செயலாக்கப்படுகிறது. அரசின் அதிகாரத்தின் மூலம் அரசியல் தீர்மானிக்கப்படுகிறது. சமுதாயத்தின் பல அடுக்குகளில் காணப்படும் அதிகாரத்தைக் காட்டிலும் எந்த விதத்திலும் அரசின் அதிகாரம் வேறுபட்டது அல்ல. ஆகவே சமுதாய மாற்று காரணிகளின்பார்வையில் அதிகாரம் தீர்மானிக்கப்படுகிறது. சமூக செயல்பாட்டின்
|
அடிப்படையில் , அரசியல் அதிகாரம் தீர்மானம் செய்யப்படுகிறது. சமுதாயம் செயல்படும் விதம் மற்றும் அரசியல் அதிகாரங்கள் மாறும் தன்மைபடைத்தது. |. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க : 1. வருமான வரியை கட்டுப்படுத்துதல் என்பது எதனைக் குறிக்கின்றது ? அ. பாரம்பரிய ஆளுமையை ஆ. பகுத்தறிவு – சட்ட ஆளுமையை இ. சிறப்பியல்புகளை உடைய தலைமை ஆளுமையை ஈ. மேற்கூறிய எதுவுமில்லை அரசியல் அறிவியல் என்று யார் முதல் முதலில் பயன்படுத்தினார் ? அ. அரிஸ்டாட்டில் ஆ. பிளாட்டோ இ. ஜான் போதான் ஈ. ஆடம் ஸ்மித் கோடிட்ட இடத்தை நிரப்புக : 3. தனிநபர் நடத்தையின்
|
அரசியல் பகுப்பாய்வு என்பது 4. ஆளுமையின் வகைப்பாட்டினை கூறியவர். சரியா அல்லது தவறா 5. எண்ண அடிப்படையிலான அரசியல் அறிவியல் என்பது எண்ண மதிப்பீட்டிலிருந்து விடுபட்டது. 6. புதிய அரசியல் அறிவியல் என்பது நடத்தை பகுப்பாய்வாகும். அத்தியாயம் 4 அரசு இறைமைக்கு ஏற்படும் சவால்கள் ஒரு அரசுக்கு , இறைமை தலையாய பண்பு கூறாகக் கருதப்படுகின்றது. இவ்வுலகில் சுதந்திரமான ஒவ்வொரு நாடும் இறைமை பெற்று திகழ்கின்றது. பொதுவாக இறைமையை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். உள் இறைமை மற்றும் வெளி இறைமை 1. 2. உள் இறைமை என்பது ஒரு நாடு
|
தன்னில் உள்ளடக்கிய கழகங்கள் மற்றும் குழுக்களைக் காட்டிலும் தலையாய அதிகாரத்தை உடையது. வெளி இறைமை என்பது , ஒரு நாடு பன்னாட்டு அமைப்புக்களான ஐ.நா. சபை மற்றும் பன்னாட்டு நீதிமன்றம் ஆகியவற்றை தவிர மற்ற எந்த நாட்டிற்கும் , அமைப்புக்கும் சட்ட ரீதியாக கட்டுப்பட வேண்டாம். உள் இறைமையை பொறுத்த வரையில் ஒரு அரசுக்கு இறைமை முழுமையாக உரித்தானது. அத்தகைய இறைமை உடைய அரசு அதன் விருப்பப்படி சட்டங்களை இயற்ற முடியும். அதன் விருப்பப்படியான A.V. டைசியின் கருத்துப்படி இறைமைக்கு இரண்டு விதமான எல்லை தடைகள் உள்ளன. குடிமக்கள் சட்டத்தை
|
மதித்து நடத்தலும் , எதிர்க்காமலும் இருக்கும்போது உள் இறைமை என்பது நிலைநாட்டப்படுகிறது. வெளி அல்லது புற இறைமை என்பது இறைமைப்பண்புடைய அரசொன்று இதர அயல்நாடுகளுடனான தொடர்பில் கொள்கையை பின்பற்றும் துணிவையும் ஆற்றலையும் பெற்றிருப்பதென்பதாகும். இன்றைக்கு அடிப்படையிலேயே நாடுகளின் உள் இறைமையும் , வெளி இறைமையும் சவாலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. நாடுகளின் இறைமைக்கு இப்போது தொடர்ச்சியாக அச்சுறுத்துதல் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இத்தகைய அச்சுறுத்துதல்கள் புதிய காலனி ஆதிக்கம் அல்லது பொருளாதார , உலகமயமாக்குதல்
|
போன்றவற்றால் ஏற்படுகின்றது. பல அரசியல் அறிஞர்கள் தேசிய இறைமை கண்ணுக்கு புலப்படுகின்ற மற்றும் புலப்படாத காரணிகளால் பாதிப்புக்கு அல்லது சுருக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகக் கருதுகின்றனர். 4.1 தேசிய இறைமைக்கு ஏற்படும் பாதிப்பு தனிமனிதர்களையும் , அமைப்புகளையும் , அரசாங்கத்தையும் தகவல் தொடர்பு வலைப் பின்னலில் இணைக்கின்ற இவ்வுலகத்தை “ உலக கிராமம் ” என்று கூறுவது சால பொறுத்தமாகும். இத்தகைய உலக கிராமம் வளர்ச்சி பெறுகின்ற செய்தி தொடர்பு நுட்ப அறிவியல் ரீதியாக ஒரு உலக கலாச்சாரத்தை ஏற்படுத்தும் நோக்கில் சென்று
|
கொண்டிருக்கிறது. தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் பொருளாதார சக்திகளின் உந்துதலின் காரணமாய் உலகமயமாக்குதல் என்பது 1990 களிலிருந்து வளர் தொடங்கியது. உண்மையில் G8 நாடுகளின் பொருளாதார இச்சைகளைப் பூர்த்தி செய்வதிலும் , பல தேசிய கழகங்களின் வியாபாரச் சந்தையை விரிவுப்படுத்துவதிலும் தான் உலகமயமாக்குதல் மிக முனைப்பாக செயல்பட்டு வந்துள்ளது. கடந்த 1990 - ஆம் ஆண்டு முதல் பல தேசிய கழகங்களின் எண்ணிக்கை அபரிமித வளர்ச்சியினை அடைந்துள்ளன. கடந்த 1990- ஆம் ஆண்டுகளில் 3000 பல தேசிய கழகங்கள் என்ற எண்ணிக்கையில் இருந்தது. இன்று 63,000
|
எண்ணிக்கையை தொட்டுள்ளது. சோவியத் யூனியன் சிதைவுக்குப் பின்னும் ஐரோப்பிய யூனியன் ஏற்பட்டதிலிருந்து பல பல்தேசியகழகங்கள் வியத்தகு வளர்ச்சியை பெற்று உலக நாடுகளுக்கிடையே வாணிபத்தை விரிவுபடுத்துயிருக்கின்றன. பொருளாதார அடிப்படையில் நாடுகள் பலவும் இணைக்கப்பட்டது போல அரசு சாரா அமைப்புகளும் மிக அதிக அளவில் தோன்றின. உதாரணம் : சிறைவாழுநர் விடுவிப்பு உலக அமைப்பு செஞ்சிலுவைச் சங்க உலக அமைப்பு எல்லையில்லா மருத்துவர்கள் பசுமை வழி அமைதி ( Green Peace ) சிக்கனமான தொலைதொடர்பு வசதிகளின் மூலம் மேற்கூறிய அமைப்புகள் எளிதில்
|
தங்களுக்குள் தொடர்புகளை ஏற்படுத்தி ஒரு நாட்டின் பொதுக்கொள்கையின் மீது பாதிப்பை ஏற்படுத்தியது. வலிமை குன்றிய நாடுகளில் இத்தகைய அரசு சாரா நிறுவனங்களின் பாதிப்பு என்பது அந்த நாட்டின் உள் இறைமையை பாதிப்பதாக உள்ளது. பன்னாட்டு நிதி நிறுவனம் மற்றும் பலநாடுகளைச் சேர்ந்த நிதிநிறுவனங்கள் பலவும் நிபந்தனைகள் மற்றும் இதர பல்வேறு கட்டுப்பாடுகள் அடிப்படையில் நிதி வழங்குவதாலும் அரசின் உள்நாட்டு இறைமை பாதிப்புக்குள்ளாகிறது. சமீபத்தில் தோற்றுவிக்கப்பட்ட ஐரோப்பிய யூனியன் அமைப்பு பாரம்பரிய இறைமையின் செயல்பாட்டு விதிகளுக்கு
|
முற்றிலும் பொருத்தமற்றது. ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்கள் தேசிய அரசுக்கும் மேலான ( Supra national ) நிறுவன அமைப்புகளை உருவாக்கினர். உதாரணம் : ஐரோப்பிய நீதி மன்றம் ஐரோப்பிய ஆணையம் ஐரோப்பிய அமைச்சர்கள் அவை தேசியத்திற்கு அப்பாற்பட்ட இத்தகைய நிறுவனங்கள் உறுப்பு நாடுகள் இயற்றுகின்ற முடிவுகளை எதிர்க்கலாம். உறுப்பு நாடுகளின் பணப்புழகத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி மற்றும் ஐரோப்பிய நிதிக் கழகம் ஏற்படுத்தப்பட்டன. ஒருங்கிணைக்கப்பட்ட ஐரோப்பிய சட்டம் , மற்றும் மாஸ்ட்ரீட் உடன்படிக்கை ஆகியவை ( Maastricht Treaty )
|
ஐரோப்பிய நாடுகளின் நீதிமன்ற சுதந்திரத்தை பாதிக்கச் செய்வதால் , உறுப்பு நாடுகளின் இறைமை பாதிப்படைவதாக உள்ளது. தேசிய இறைமையை உலகமயமாக்குதலோடு தொடர்பு படுத்தப் பார்க்கும் போது பல கருத்துப் படிவமாக தென்படுகின்றது. பொருளாதாரம் மற்றும் கலாச்சார வாழ்வில் ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளுடன் ார்ந்து உள்ளது என்பது தெளிவாகும். பொருளாதார தஞ்சத்தோடு ( வியாபாரம் , நிதி , மற்றும் நேரடி முதலீடு ) கல்வி , தொழில்நுட்பம் , அரசியல் கொள்கை , கலாச்சாரம் , சுற்றுச்சூழ்நிலை , சட்டம் , இராணுவ மற்றும் அரசியல் ஆகியவற்றிலும் மற்ற நாடுகளிடம்
|
தஞ்சம் அடைகின்ற நிலை உலகமயமாக்குதல் மூலம் நடைபெறுகின்றது. பொருள் மற்றும் சேவைகள் நாடுகளின் எல்லையிலிருந்து மிக எளிதில் கடந்து செல்ல முடிகின்றது. சிறப்பு தகுதிகளைப் பெற்ற தொழிலாளர்கள் வெளி நாடுகளுக்கு செல்வதற்கு சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளன. பல மென்பொருள் பணியாளர்கள் அமெரிக்கா சென்று நிரந்தர தொழிலாளர் அல்லது குடிமக்கள் தகுதியை பெற்றனர். பலர் இந்தியாவில் வசிக்காத இந்தியர்கள் ( NRI ) இரட்டை குடியுரிமை பெறுவதில் ஆர்வமாக உள்ளனர். இங்ஙனம் மாறுபட்ட உலகில் அரசுகள் செயல்படுவது என்பது மிகவும் சிக்கல்மிகுந்தது. உலக
|
பொருளாதாரத்தை இணைக்கும் முயற்சியும் , ஒரு நாட்டின் எல்லையை கடந்து மக்கள் இடப்பெயர்வு செய்வதும் தேசிய இறைமையைப் பாதிப்பதாக உள்ளது. தேசிய இறைமை என்பது இன்று தேசிய ராஜ்ஜிய மற்றும் உலகஅளவில் பிளவுப்பட்டுள்ளது. நாடுகளுக்கு அப்பாற்பட்ட நிறுவன அமைப்புகள் மற்றும் நாட்டிடை வணிகச் சட்டமும் தேசிய இறைமையை வலிமை குன்றச் செய்ய வழிவகுத்தது. உலகமயமாக்குதலின் பல கூறுகள் மொத்தத்தில் தனிப்பட்ட இறைமை பெற்ற அரசுகள் கொள்கை உருவாக்கத்தில் தனிகவனமும் கட்டுப்பாட்டையும் செய்ய தவறிவிட்டன. தேசத்திற்கு அப்பாற்பட்ட அமைப்புகளான உலக
|
வியாபார அமைப்பு ( WTO ) ஐரோப்பிய யூனியன் ( EU ) வட அட்லாண்டிக் வியாபார உடன்படிக்கை கூட்டமைப்பு ( NAFTA ). உலக வங்கி ( WB ) மற்றும் பன்னாட்டு நிதிக்கழகம் ( IMF ) ஆகியவைகள் ஒரு நாட்டின் கொள்கையில் இன்று அதிக அளவில் தலையிட்டு இறைமைக்கு ஒரு சவாலாக திகழ்கின்றன. உலகமயமாக்குதல் என்பது அரசின் இறைமைக்கு பலவீனத்தை அளிக்கின்றது. பன்னாட்டு சட்டங்கள் மற்றும் நிறுவன அமைப்புகள் , பன்னாட்டு அரசு சாரா அமைப்புகளின் செயல்பாட்டுத்திறம் ஆகியவற்றால் தேசிய இறைமை மிகவும் பாதிப்புக்குள்ளாகியது. எண்ணக் கருத்து முன்படிவமான தேசிய இறைமை
|
உலகமயமாக்குதலின் மூலம் நலிவடைந்து பல சவால்களை சந்திக்க நேரிடுகின்றது. தேசிய இறைமை அதிகாரமுடைய அரசு நியாயமான வன்முறையை பயன்படுத்தும் அதிகாரத்தைகூட நலிவடையச் செய்யும் வகையில் பன்னாட்டு அரசு சாரா அமைப்புகள் ஒரு சவாலாக திகழ்கின்றன. தனியார் மயமாக்குதல் மற்றும் தாராளமயமாக்குதல் ஆகிய இரண்டும் உலக மயமாக்குதலின் இரண்டு ஆணிவேர்களாகும். இது வரை அரசாங்கம் மக்களுக்கு செய்த சேவைகள் இனிமேல் தனியார் வசம் ஒப்படைக்கும் போக்கு இன்று பல நாடுகளில் காணப்படுகிறது. தென்கொரியாவில் சேவைகள் தனியார் வசம் ஆனதால் கண்ட வெற்றியினால் பல
|
ஆசிய நாடுகள் இன்று வரம்புக்குட்பட்ட அரசாங்கத்தையும் , தாராள பொருளாதாரத்தையும் ஏற்க முனைகின்றன. தாராளமயமாக்குதல் இந்தியாவில் 1991 ம் ஆண்டு கொண்டு வரப்பட்டதால் பல பொது நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன. இந்திய அரசாங்கம் பொருள்கள் உற்பத்தி மற்றும் சேவைகள் மேல் விதித்திருந்த கட்டுப்பாடுகள் சிலவற்றை தளர்த்தியதால் , சுதந்திரமான பகிரங்க போட்டியின் காரணமாய் இந்தியாவில் இன்று பல பல்நாட்டு கழகங்கள் ( MNC's ) வியாபாரம் செய்ய முன்வந்துள்ளன. இத்தகைய பல்நாட்டு கழகங்கள் தங்கள் வியாபாரச் செயல்பாடுகள் தங்குதடையின்றி
|
நடைபெற தேசிய மற்றும் மாநில அளவில் கொள்கை முடிவுகள் மேற்கொள்வதில் தலையிடுகின்றன. உலகளவில் அரசாங்கம் செய்யவேண்டிய பணிகள் தனியார் வசம் ஆக்கப்படுவதால் தேசிய இறைமை மங்கும் நிலை உள்ளது. உலகமயமாக்குதல் என்ற அடிப்படையில் பெரும் வியாபார மேலாண்மையாளர்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதோர் புதிய கொள்கையை உருவாக்குபவர்கள் போல் உள்ளனர். சுருங்கும் தன்மையான அரசின் பொறுப்புகளும் விரிவாக்கம் செய்யப்படுகின்ற தனியார் சேவைகளினால் அரசாங்கத்தில் அதிகார வர்க்கத்தின் முக்கியத்துவம் குறைக்கப்படுகின்றது. ஒழுங்குபடுத்தும் பணிகளேஅரசுக்கு
|
ஒதுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்தியாவில் 1991 முதல் ‘ லைசென்சு ராஜ் ’ என்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலக உலகமயமாக்குதலின் முதன்மைக் கொள்கையின் முக்கிய நோக்கம் பொருளாதாரத்தை ஒருங்கிணைப்பதே ஆகும். ஆகவே இது அரசியல் மற்றும் கலாச்சார இணைப்பில் தோல்வியை கண்டது. இதன் காரணமாய் பல கலாச்சார குழுக்களிடம் தத்தம் கலாச்சார உணர்வுகள் மேலோங்கி உலக பொது கலாச்சாரத்தை ( அமெரிக்கா மேற்கு கலாச்சாரம் ) எதிர்க்க முற்பட்டது. சாமுவேல் பி.ஹண்டிங்டன் கருதுவது போல , உலகமயமாக்குதல் என்பது நாகரீகங்களின் மோதல்களை தூண்டச் செய்ததாகும்.
|
நாகரீகங்களின் ' பிழையான கோடுகள் ’ நாகரீக மோதல்களுக்கு துணை நிற்கும். நாகரீக மோதல்களை கட்டுப்படுத்த உருவாக்கப்படும் தீர்மானங்களினால் தேசிய இறைமைக்கு முக்கியத்துவம் இல்லாமல் போகின்றது. இத்தகைய சூழ்நிலைகளில் தேசிய எல்லை கோடுகள் திருத்தப்படலாம் மற்றும் தேசிய இறைமைக்கான பொருள் விளக்கம் மாற்றமடையலாம். பல சமூகவியல் அறிஞர்கள் உலகமயமாக்குதலின் மூலம் தேசிய இறைமை கீழ்க்கண்ட சக்திகளின் மூலம் பாதிப்பை அடையும். அ. அடிப்படைவாத சக்திகள் ( மதவாதிகள் ) ஆ. புதிய காலனி ஆதிக்கம் இ. நாகரீக மோதல்கள் மற்றும் ஈ. புதிய அரசியல். 4.2
|
உலகமயமாக்குதல் மற்றும் அரசு இறைமை எதிர்கொள்ளும் சவால்கள் உலகமயமாக்குதலுக்கும் அரசு இறைமைக்கும் தொடர்புண்டு. திறந்தவெளி , எல்லையில்லா உலக பொருளாதாரத்தை தோற்றுவிக்க காணப்படும் ஒரு நாடுகளிடையே வியாபாரக் கட்டுப்பாடுகளை தவிர்த்து தடையில்லா வாணிபம் நடக்கச் செய்வது என்பதுதான் உலகமயமாக்குதல் என்பதாகும். ஆகவே உலகமயமாக்குதல் என்பதற்கு சக்திவாய்ந்த அரசியல் , பொருளாதார மற்றும் சமூக படிவங்கள் உண்டு எனலாம். ஒரு உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் தேசிய இறைமை மற்றும் தேசிய எல்லைகளுக்கு ஒரு அளவு உண்டு. மேலாண்மை இயலின்
|
குருவென்று அழைக்கப்படும் பீட்டர் டிரக்கர் கூறுவது போல் உலகமயமாக்கப்பட்ட பெருளாதாரத்தில் தேசிய எல்லைகள் பொறுத்தமில்லாமல் போய்விடுகின்றன. ஒரு உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் ஒரு நாட்டின் இறைமை கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் வாயிலாக பாதுகாக்கப்படலாம். 1. தொழிற்கூட சமுதாயம் முதன்மையாக்கப்படவேண்டும். 2. சரிசம சமுதாயம் 3. மக்களாட்சி அரசியல் நிறுவனங்கள் 4. உலகளவில் பொருளாதார ரீதியாக பேரம் பேசும் சக்தி 5. அரசு சாரா அமைப்புகள் அமைக்கப்படுதல் 6. அறிவை அடிப்படையாக கொண்ட சமுதாயம் 7. வளர்ந்த செய்தி தொடர்பு
|
சாதனங்கள் 8. உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தின் விளைவால் பெறப்பட்ட நன்மைகளை தக்க முறையில் பகிர்ந்தளிக்கும் முறைமைகள். 9. தொழிலாளர்களுக்கு தக்க சமூக பாதுகாப்புகள் 10. அதிகார வர்க்கத்திற்கு வரையறை செய்யப்பட்ட பங்குபணி மற்றும் அரசின் நலன் காக்கும் பணிகளின் விரிவாக்கம். பண்புகள் மேற்கூறிய இல்லாத நாடுகளில் உலகமயமாக்கப்படுதலை அறிமுகப்படுத்துதல் என்பது தேசிய இறைமையை பல் தேசிய கழகங்களுக்கு சரண் செய்வதற்கு ஒப்பாகும் என பல அறிஞர்கள் கருதுகின்றனர். இந்தியாவில் உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரம் ஒரு சோசலிச தளத்தில் தான்
|
கட்டப்பட்டுள்ளது. வறுமை , கல்வி , அறியாமை , சமத்துவமின்மை என்ற கட்டத்தில் தாராள பொருளாதாராம் என்பது மக்களின் எதிர்ப்பையும் , தொழிலாளர் அமைதியின்மையையும்தான் வளர்க்கும். இதன் விளைவாய் தேசியத்திற்கு அப்பாற்பட்ட அமைப்புகளை பன்னாட்டு நிதிக் கழகம் ( IMF ) மற்றும் உலக வங்கி ( WB ) ஆகிய சக்திகளுக்கு தேசிய இறைமை வழிவிட்டுச் செல்கின்றது. மேலும் , இத்தகைய மாறுதல்கள் நாடுகளுக்கிடையே செய்து கொள்ளப்படும் உடன்படிக்கைகள் மற்றும் தேசிய கொள்கையின் மூலம் நியாயப்படுத்தப்படுகின்றன. அரசாங்கம் இன்று உலக அளவிலான மனித உரிமை
|
சட்டங்களுக்கு ஓரளவிற்கு மாற்றப்பட்டுள்ளது. தேசத்திற்கு அப்பாற்பட்ட உலக தேசிய அமைப்புகள் பல நாடுகளின் மனித உரிமைகளை பாதுகாக்க முற்படுவதால் தேசிய இறைமையும் குடிமக்கள் உரிமையும் வெகுவாக வலுவிழந்துள்ளன. வேறு நாட்டிற்கு குடிபெயறும் சட்டங்கள் இன்று மிகவும் தளர்த்தப்பட்டுள்ளன. இதன் விளைவால் முரண்பாடுடைய சட்டங்கள் தோன்றியுள்ளன. வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள பெரும் வியாபாரக் குழுக்கள் தங்களுக்கு சாதகமான வகையில் எல்லையை கடந்து செல்லும் விதிமுறை கட்டுப்பாடுகளை தளர்த்தி தங்களின் நிதி மற்றும் பணியாளர் தேவைகளைப் பூர்த்தி
|
செய்து கொண்டன. இருப்பினும் வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்குள் நுழைவதை கட்டுப்படுத்தி ஒழுங்கு செய்யும் தங்களின் இறையாண்மை அதிகாரத்தை பலநாடுகள் இன்றும் தொடர்ந்து பின்பற்றுகின்றன. உள்நாட்டு நீதிமன்றங்கள் உலக மனித உரிமை உடன்பாடுகளை கையில் கொண்டு தனிமனித உரிமைகளை பாதுகாக்க முற்படும் செயல்பாடுகள் அரசு இறைமையை வெகுவாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாய் அரசு இறைமையின் அடித்தளமும் , தேசியமும் மறுவிளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் குடியுரிமை என்பது மறைய தொடங்கி குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் என்பதற்கு
|
வேறுபாடு இல்லாமல் போய்விடும். ஒரு ஆராய்ச்சியாளர் கூறுவது போல தேசிய இறைமையின் வளர்ச்சியை , தேசிய தேவைகள் , முன்னுரிமைகள் என்பதைக் காட்டிலும் சந்தை நிலவரமே தீர்மானம் செய்கின்றது. ஆகவே நாடுகளின் இறைமை செல்லத்தக்கது அல்ல என்ற நிலைமையில் உள்ளது. தேசிய சமூக உடன்படிக்கைகள் முறியடிக்கப்பட்டு இன்று பன்னாட்டு உடன்படிக்கைகள் செய்யப்பட்டு செயலாக்கப்படுகின்றன. மேற்கூறிய பகுப்பாய்வின் மூலம் நாம் அறிவது என்னவென்றால் தேசிய இறைமையின் உலகமயமாக்குதலின் தாக்கம் என்பது வளர்ச்சி குன்றிய மற்றும் வளர்ச்சி பெறும் நாடுகளைக்
|
காட்டிலும் வளர்ச்சி பெற்ற நாடுகளேஅதிக நன்மைகளை பெற்றுள்ளன. வளர்ச்சி குன்றிய மற்றும் வளர்ச்சி பெறுகின்ற நாடுகள் தாராள பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தினால் அது தேசிய இறைமையை மிகவும் பாதிக்கச் செய்கின்றது. வளர்ச்சி பெறும் நாடுகளின் இறைமையின் மீது உலகமயமாக்கப்படுதலின் பொதுவான தாக்கங்கள் கீழ்வருவனவாகும். 1. பன்னாட்டுதேசிய அமைப்புகள் பல்வேறு இடங்களில் உள்ள சமூகங்களில் தங்கள் தாக்கத்தை வெளிப்படுத்தும். முதலில் தொடர்பு சார்ந்த செயலாக்கத்தில் ( உற்பத்தி , சேவைகள் மற்றும் விற்பனை ) ஈடுபடுவர். மேலும் அப்பகுதியில் உள்ள
|
குறைந்த ஊதியத்திற்கு உழைக்கும் தொழிலாளர்கள் மற்றும் வளங்களைச் சுரண்டுவர். புதிய மற்றும் இதுகாறும் குறைந்த அளவில் சுரண்டப்பட்ட சந்தையைத் தேடுவார்கள். பன்னாட்டு தேசிய கம்பெனிகள் இராஜ்ஜிய குழுக்கள் மற்றும் ஒரு நாட்டின் கொள்கை உருவாக்கத்தில் அதிக அளவில் தலையிடுவர். தனியார் வசமாக்கப்படுதலிலும் , சிறந்த சேவை கொள்கையின் மூலம் அவ்வமைப்புகளுக்கு லாபம் கிடைக்கும். 5. உலகமயமாக்குதலின் மற்றொரு தாக்கம் என்னவெனில் அமைப்புகளில் பணிபுரியும் மூத்த மேலாண்மையாளர்கள் , கணக்கர்கள் , சட்ட வல்லுநர்கள் மற்றும் பொது - தொடர்பு
|
பணியாளர்கள் உள்நாட்டு போட்டியாளரைக் காட்டிலும் மிக அதிகமான ஊதியத்தை பெறுவர். இதன் விளைவாய் ஏற்படும் இழப்பு என்பது ஒரு நாட்டின் தேசிய அரசாங்கம் நேரிடையாக தங்கள் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்த இயலாது. ( குறிப்பாக பரந்த பொருளாதார மேலாண்மையை பொறுத்தமட்டில் ) பன்னாட்டு தேசிய அமைப்புகள் வருவதற்கு முன்பிருந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதில் வேலைபார்த்த பலபேர் பணியை இழப்பார்கள். இத்தகைய போக்கு வேலையில்லா நிலமையை உருவாக்கும். நிலம் , பன்னாட்டுதேசிய உயிரியல் மற்றும் டிஜிடல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலமாக
|
இன்று புதிய உற்பத்தியும் மற்றும் மாறுதலையும் நாம் கண்டுள்ளோம். புதிய கண்டுபிடிப்புகளான இண்டர்நெட் மூலம் உலகஅளவில் பல செய்திகளை அறிந்து ஒருங்கிணைப்பு செயல்பாடுகளில் மகத்தான வளர்ச்சியடைந்துள்ளோம். உபகரணம் மற்றும் உழைப்பைக் காட்டிலும் இன்றைக்கு அறிவு வாழ்க்கைதரத்தை வகுப்பதில் ஒரு முக்கியமான காரணியாக உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சிபெற்ற நாடுகள் இன்றைக்கு அறிவை அடிப்படையாகக் கொண்டுள்ளன. 9. பெரிய பன்னாட்டு தேசிய கழகங்கள் இன்றும் பொருளாதார மற்றும் கலாச்சார அதிகாரங்களை பெற்று விளங்குகின்றன. உதாராணம் : கோக்கோ
|
கோலா , நைகி , மக்டோனால்ட் மற்றும் லிவிஸ் , 10. இந்திய தொழிலதிபர்கள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் முதலீடு செய்வதில் தோல்வியுற்று , உலகமயமாக்கப்படுதலில் தங்களை இணைத்துக் கொண்டு , பெரிய பல்தேச கழகங்களோடு பங்குதாரராக சேர்ந்து வீழ்ந்து போகின்ற தங்களின் வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முற்படுகின்றனர். உலகமயமாக்கப்படுதலை ஆதரிக்கின்ற நபர்கள் இதனால் இந்திய தொழிற்கூடங்கள் நசிவடைவதில்லை என்றும் மாறாக அது புதிய தொழிற்கூடங்களை தோற்றுவிக்கவும் , இந்திய பொருளாதாரத்தை மிக விரைவாக முன்னேற துணை செய்கின்றது என்றும்
|
பகர்கின்றனர். ஆனால் ஒரு விரிவான பகுப்பாய்வில் பார்க்கும் போது கடந்த பல ஆண்டுகளில் வெளிநாட்டின் நேரடி முதலீட்டின் மூலம் புதிய உற்பத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எனக் கூற இயலாது. உலகமயமாக்கப்படல் மற்றும் இந்திய கலாச்சாரம் மேற்கு கலாச்சாரம் உன்னிப்பாக கவனிக்க தக்கது என்னவெனில் இந்தியர்கள் பொதுவாக இந்திய கலாச்சாரத்தை பின்பற்ற எண்ணுவர். சாமுவேல். P. ஹட்டிங்டன் கூறுவது போல் இந்திய கலாச்சாரம் மிகவும் “ பலம் ” வாய்ந்ததாகும். மேலும் வேற்று கலாச்சாரத்திலிருந்து பல நடவடிக்கை மற்றும கருத்துக்களை பெற்றாலும் , இந்திய
|
கலாச்சாரத்தின் அடிப்படை தன்மையை அது விட்டுக் கொடுப்பதில்லை. வெளிநாட்டு பொருட்கள் மற்றும் சேவைகள் மீது இந்தியாவில் பல எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதன் மூலம் இந்தியர் தம் கலாச்சாரத்தையும் , தனித்தன்மையையும் பாதுகாக்க தவறவில்லை. மேற்கு நாட்டு மேலாண்மை செயல்பாடுகள் நம்நாட்டின் வியாபாரத்தில் , குறிப்பாக கணினி மென்பொருள் தொழிற்கூடங்களில் மிக விரைவில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இந்தியர்கள் இன்றும் , உள்நாட்டு உணவு வகைகள் , உள்நாட்டு தொலைக்காட்சி மற்றும் உள்நாட்டு திரைப்படம் ஆகியவற்றை கண்டுகளிக்கின்றனர். பாரம்பரிய
|
உடைகளையே பெரிதும் அணிகின்றனர். இதன் காரணமாய் மேற்கு நாட்டின் கம்பெனிகள் இந்திய சந்தையில் ஊடுருவுவதில் பல சங்கடங்களை எதிர் கொள்கின்றன. அமர்த்தியா சென்னின் கருத்துக்கள் அமர்த்தியா சென் கூறுகிறார் , * “ சந்தை பொருளாதாரம் ’ ’ தன்னைத்தானே இயக்கவல்லது அல்ல. புதிய தாராள பொருளாதாரக் கொள்கை நல்ல வளர்ச்சியினைக் கண்டுள்ளது. இதை ஆதரித்தவர்கள் அமெரிக்காவில் அரசியல்வாதியான ரீகன் மற்றும் இங்கிலாந்தின் தாட்சர் ஆவார்கள். மனிதாபிமான வளர்ச்சியே இன்றைய வளரும் நாடுகளான இந்தியாவிற்கு தேவையாகும். உலகமயமாக்கப்படுதலில் அரசியல்
|
மற்றும் பொருளதார சுதந்திரத்தை நாம் இழந்து விடக்கூடாது. சந்தைப் பொருளாதாரம் மற்றும் பொதுநலப்பொருளாதாரம் ஆகிய இரண்டுகளுக்குமிடையே ஒரு சமனிலையான அணுகுமுறை தேவைப்படுகிறது. அமர்த்தியா சென் ( பிறப்பு 1933 ) பன்னாட்டு தேசிய கழகங்கள் பிரெட்டன் வுட்ஸ் ( Bretton Woods ) அமைப்புகளோடு ( உலக வங்கி , பன்னாட்டு நிதிக்கழக மானிய நிதி மற்றும் உலக வியாபார அமைப்பு ) ஒன்றிணைந்து காட் ( GATT ) ஒப்பந்தத்தின் மூலம் பல திட்டங்களை திணித்துள்ளன. இத்திட்டத்தின் காரணமாய் இன்று பல பன்னாட்டு தேசிய கழகங்கள் பல வியாபாரத் தடைகளைக் கடந்து
|
தங்கள் வாணிபத்தை விரிவாக்கம் செய்துள்ளன. பன்னாட்டு நிதிக்கழகம் மற்றும் உலக வங்கியின் திட்டங்கள் வரவு - * செலவு திட்டத்தின் அரசு மானியத்தைக் குறைப்பது. விவசாய உற்பத்தி சார்ந்த பொருட்களுக்குரிய அரசு மானியத்தை குறைத்தல். உணவிற்கான அரசு மானியத்தை நீக்குதல். தாராள பொருளாதார கொள்கையைப் பின்பற்றுதல். வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவித்தல். வங்கிகளை தனியார் வசப்படுத்துதல். இறக்குமதிக் கொள்கையை எளிமையாக்குதல். உலக வர்த்தக அமைப்பு ( WTO ) அரசு மானியத்தை குறைத்தல். உள்நாட்டு விவசாயத்திற்குரிய ஆதரவை குறைத்தல். பொது விநியோக
|
முறையை நீக்குதல். வளர்ச்சி பெறுகின்ற நாடுகள் தடையில்லா வியாபாரத்தை பின்பற்றுதல். பயன்படு தொழிற்கூடங்களை அமைப்பதில் பன்னாட்டு தேசிய கழகங்களுக்கு எந்தவொரு தடையும் இல்லாதிருத்தல். இறக்குமதி மீதான தடைகளை நீக்குதல். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீதான தடைகளை நீக்குதல். வளர்ச்சி பெறும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் வண்ணம் பிரெட்டன் வுட்ஸ் அமைப்புகள் பொருளாதாரக் கொள்கைகளை வளர்ச்சி பெறும் நாடுகளின் மீது திணிக்கின்றன. இந்திய பொருளாதாரத்தை ஜுலை 1991 க்குப் பிறகு தணிக்கை செய்யப்பட்ட போது குறிப்பிடும் வகையில்
|
எந்தவொரு வளர்ச்சியையும் எட்டவில்லை. உற்பத்தி துறையில் முதலீடோ அல்லது தொழில்நுட்பமோ திறந்த பொருளாதாரத்தின் மூலம் இந்தியாவில் பெருமளவு வந்தது எனக் கூற இயலாது. செய்தி உலகம் செய்தி தொடர்புகளில் நாம் கண்ட புரட்சி இன்று அரசுகளை வெறும் சிறிய நகர அரசுகளாக மாற்றியுள்ளது. தொழிற்புரட்சி ஒரு மையப்படுத்தும் சக்தியாக விளங்கியது. ஆனால் செய்தி தொடர்பு புரட்சி பரவலாக்கும் சக்தியாக உள்ளது. கோடிட்ட இடத்தை நிரப்புக 4. இந்தியா ஒரு 5. சாமுவேல் ஹண்டிங்டன் சரியா தவறா. 6. G - 8 நாடுகளில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது. 7. ஐரோப்பிய
|
யூனியனில் இந்தியா ஒரு உறுப்பு நாடாகும். பகுதி ஆ 8. அறிவு சார்ந்தசமுதாயம் என்றால் என்ன ? 9. நாடாகும். சச்சரவை பற்றி விவாதம் செய்கின்றார். செய்தி தொடர்பு தொழில் நுட்பத்தை விளக்குக. பகுதி இ 10. ‘ உலக கிராமம் ’ என்றால் என்ன ? 11. ‘ திறந்த பொருளாதாரம் ’ விளக்குக. பகுதி ஈ 12. உலக மயமாக்கப்படுதலால் இந்தியாவிற்கு ஏற்பட்ட தாக்கங்களை வெளி கொணர்க. 13. உலகமயமாக்குதலில் வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் யாவை ? ஈரவை உடைய அரசு மேலவையில் சட்டமன்றத்தின் இயல்பு சட்டமன்றத்தின் அமைப்பு மைய செயலாட்சிக்குழுவின் இயல்பு |
|
நீதித்துறையின் இயல்பு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட அரசு பாராளுமன்றம் மற்றும் பொறுப்புடைய அரசாங்கம் ஓரவை உடைய அரசு மேலவையில் தேர்ந்தெடுக்கப்படாத உறுப்பினர்கள் கொண்ட அரசு தலைவர்முறை | அரசாங்கம் | நிர்வாக சட்டத்தை சட்ட ஆட்சி பின்பற்றப்படும் அரசுகள் பின்பற்றும் அரசுகள் மேற்கூறப்பட்ட சி.எப். ஸ்டராங்கின் அரசாங்க வடிவங்கள் சட்டப்படி அமைந்த அரசாங்க வடிவங்களை பற்றி கூறுவனவாகும். 5.1 ஒற்றை அரசாங்க முறை ஒற்றை அரசாங்கமுறையில் மைய அரசில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டு இருக்கின்றன. அரசாங்கம் மாநில மற்றும் பகுதி
|
அரசாங்கங்களை ஏற்படுத்தி அவைகளுக்கு அதிகாரங்களை மாற்றி தருகிறது. இது நிர்வாகம் சீராக நடப்பதற்கான ஏற்பாடாகும். இந்த அமைப்புகள் பிரதேச அரசாங்கம் என அழைக்கப்படுகின்றன. ஒற்றை அரசாங்க முறைக்கு இங்கிலாந்து , பிரான்ஸ் , ஜப்பான் , ஸ்ரீலங்கா நாடுகள் உதாரணங்கள் ஆகும். விளக்கம் ஒற்றை அரசாங்கமுறை பற்றிய சில அறிஞர்களுடைய விளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன. கார்னர் : மத்தியில் அமைந்துள்ள அரசாங்க அமைப்புக்கு அரசியல் சட்டம் சகல அதிகாரங்களையும் அளித்தல். எ.வி.டைசி. : “ மத்திய அரசாங்கம் வழக்காறு அடிப்படையில் உயரிய சட்டம் இயற்றும்
|
அதிகாரத்தை செலுத்துவது ” சி.எப்.ஸ்டராங் : இரண்டு முக்கியமான தகுதிகள் பற்றி குறிப்பிடுகிறார். அவை 1. மத்திய அரசாங்கத்தின் உயரிய தன்மை 2. இறைமை அதிகாரம் உடைய இதர அமைப்புகள் எதுவுமில்லாமல் இருப்பது. இறைமை அதிகாரம் இல்லாத இதர அமைப்புகளுடன் மைய அரசாங்கம் உள்ள முறை ஒற்றை அரசாங்க வகையை சேர்ந்தது. மத்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கம் சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்ற அமைப்பு கூட்டாட்சி முறை எனப்படுகிறது. நிறைகள் 1. ஒற்றுமை , ஒரே மாதிரியான சட்டமுறை , கொள்கை மற்றும் நிர்வாகம். 2. ஆட்சி அதிகாரம் மற்றும் பொறுப்பு
|
வகிப்பவர்களிடையே சச்சரவுகள் இல்லாத தன்மை. 3. முடிவுகள் விரைவாக எடுக்கப்பட்டு அவை விரைவாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. 4. செலவு குறைவான அமைப்பு. 5. அரசியல் சட்டத்தை எளிதில் மாற்றக்கூடிய நிலை. குறைகள் 1. அதிகார குவிப்பு மத்திய அரசாங்கத்தின் சர்வாதிகாரத்திற்கு ஏதுவாகும். 2. மத்திய அரசாங்கம் பல சிக்கலான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.மேலும் பிரதேச அலுவல்களை கவனிப்பதற்கு நேரம் இல்லாமல் போகும். 3. மத்திய அரசாங்கத்திற்கு பிரதேச பிரச்சினைகள் , அவற்றின் துவக்கம் மற்றும் அவற்றில் ஈடுபாடு இல்லாமல் போகும். 4. அளவில் பெரிய
|
நாடுகளுக்கு ஒத்து வராது. கூட்டாட்சி அரசாங்கம் ஒப்பந்தம் என்று பொருள்படும் இலத்தீனிய போடஸ் ( Foedus ) என்ற சொல்லிலிருந்து கூட்டாட்சி என்ற சொல் ஏற்பட்டது. இதற்கு கூட்டாட்சி அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கங்களுக்கிடையேயும் ஒப்பந்தம் இருக்கிறது என்று பொருள். தேசிய ஒற்றுமையோடு மாநில உரிமைகளை பாதுகாத்து தர அமைக்கப்படும் அரசாங்க முறைக்கு கூட்டாட்சி என்று பேராசிரியர் டைசி என்பவர் விளக்கம் தந்திருக்கிறார். கூறப்படுகிறது. கூட்டாட்சி கொள்கை அல்லது கூட்டாட்சி அரசியல் முறை என்பது மத்திய அரசு மற்றும் மாநில
|
அரசாங்கங்களுக்கிடையே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு அரசியலமைப்பு ரீதியாக செயல்படக்கூடிய அமைப்பென்று இவ்வமைப்பு ஒற்றையரசு முறைக்கு எதிரானது. இறைமை அதிகாரம் இருவகை அரசாங்கங்களுக்குமே குறிப்பிட்ட சில துறைகளில் இருக்கிறது. இத்தகைய அமைப்பில் மத்திய அரசாங்கம் தேச பாதுகாப்பு இதர நாடுகளுடனான கொள்கை தேசம் முழுவதற்குமான பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகளை அதற்கு என்று கொடுக்கப்பட்டுள்ள அதிகார எல்லைக்குள் செயல்படுகிறது. இதே போல மாநில அரசாங்கங்களும் அவற்றிற்கு என்று தரப்பட்டுள்ள அதிகார எல்லைக்குள் செயல்படுகின்றன. கூட்டாட்சி
|
அரசாங்கத்தின் கூறுகள் : 1. அரசியலமைப்பின் உன்னத நிலைமை. 2. மத்திய மாநில அரசாங்கங்களுக்கிடையே அதிகார பங்கீடு 3. அரசியலமைப்பின் இறுகிய தன்மை 4. நீதித்துறை சுதந்திரம் இவற்றின் விளக்கம் வருமாறு 1. அரசியலமைப்பின் உன்னத நிலைமை : அரசியலமைப்பு எழுதப்பட்டிருக்க வேண்டும். மத்திய மாநில அரசாங்கங்களுக்கிடையே இருக்க வேண்டிய அதிகாரங்கள் என்னென்ன என்று தெளிவாக சொல்லப்படவேண்டும். இரண்டிற்குமிடையே அரசியல் சட்டமே உயரியது அல்லது மேலானது. 2. அதிகார பங்கீடு : கூட்டாட்சி முறை அரசாங்கத்தில் மத்திய அரசாங்கத்திற்கென சில இனங்களும்
|
மாநில அரசாங்கத்திற்கென சில இனங்களும் பிரித்து ஒதுக்கப்படுகின்றன. இவ்வாறு ஒதுக்கப்பட்ட இனங்கள் அல்லது துறைகளில் ஒவ்வொரு வகை அரசாங்கமும் சட்டம் இயற்றவும் அவற்றை நிறைவேற்றவும் அதிகாரம் படைத்தவைகளாக , சுதந்திரம் உடையவைகளாக இருக்கின்றன.. அரசியலமைப்பின் இறுகிய தன்மை : பேராசிரியர் டைசி என்பவர் கருத்துப்படி அரசியலமைப்பில் சொல்லப்பட்டிருக்கின்ற விதிகள் அவற்றின் அடிப்படையில் இயற்றப்படும் சாதாரண சட்டங்கள் அல்லாத இதர சட்டங்களை எளிதில் மாற்றமுடியாது. அவைகள் ஆதார சட்டங்கள் எனப்படுகின்றன. அரசியல் சட்டம் சாதாரண சட்டங்களை
|
விட மேலானது. அதை எளிதில் மாற்றமுடியாது. 4. நீதித்துறை சுதந்திரம் : கூட்டாட்சி அரசாங்க முறையில் மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கங்களுக்குமிடையே அல்லது மாநில அரசாங்கங்கள் மட்டத்தில் அவைகளுக்கு இடையே சச்சரவுகள் ஏற்படும். இந்த சச்சரவுகளை தீர்த்துவைப்பதற்காகவும் அரசியலமைப்பு விதிகளை தேவைப்படும் போது விளக்குவதற்காகவும் நீதித்துறை தேவைப்படுகிறது. இத்துறையினுடைய ஆணைகள் மற்றும் விளக்கங்கள் சம்மந்தப்பட்ட அரசாங்கங்களால் ஏற்றுக்கொள்ளப் படவேண்டும். நிறைவேற்றப்படவும் வேண்டும். 5.3 பாராளுமன்ற முறை அரசாங்கம் அரசாங்க
|
முறையில் சட்டமன்றத்திற்கு பாராளுமன்ற செயலாட்சிக்குழு பொறுப்புடையதாக விளங்குகிறது. அவ்வரசு காபினெட் அரசாங்கம் அல்லது பொறுப்புடைய அரசாங்கம் என்றழைக்கப்படுகிறது அரசாங்கம் முக்கிய அம்சங்கள் . சட்டமன்றம் செயலாட்சிக்குழு நீதித்துறை உதாரணம் : இந்தியா , இங்கிலாந்து 1. செயலாட்சிக்குழு இரண்டு வகையான பண்புகளை உடையது. ஒன்று பெயரளவிலானது. மற்றொன்று உண்மையானது. பெயரளவிலான தலைவர் அரசின் தலைவராகிறார். உண்மையான தலைவர் அரசாங்கத்தின் தலைவர். இங்கிலாந்தில் அரசின் தலைவர் ராணி அல்லது ராஜா. அரசாங்கத்தின் தலைவர் பிரதமர். பெயரளவிலான
|
செயற்குழுவுக்கு இங்கிலாந்தில் அரசர் அல்லது அரசியாரும் இந்தியாவில் குடியரசுத்தலைவரும் உதாரணமாவார்கள். இவர்கள் சட்டப்படி எல்லா அதிகாரங்களும் உடையவர்கள். உண்மையான அல்லது நிகழ்முறை குழுவுக்கு இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் பிரதம அமைச்சர் உதாரணமாவார்கள். இவர்கள் எல்லா அதிகாரங்களையும் பெயரளவிலான செயற்குழு பெயரில் செலுத்துகிறார்கள். 2. நாட்டை ஆட்சி செய்யும் கட்சி தெளிவான மற்றும் திடமான பெரும்பான்மை சட்டமன்றத்தில் பெற்றிருக்க வேண்டும். “ தொங்கும் பாராளுமன்றம் ” கூட்டணி ஆட்சி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. உதாரணம்
|
இந்தியா மைய அரசாங்கத்தில் திரு.தேவேகௌடா பிரதமராக இருந்த போது ( 1996 ) ஐ.கே.குஜரால் ( 1998 ) ( தொங்கும் பாராளுமன்றம் ) கூட்டணி ஏற்பட்டபொழுது. 3. இம்முறையில் மக்கள் பிரதிநிதித்துவமுடைய மன்றத்தின் பெரும்பான்மை கட்சி தலைவர் அமைச்சரவையின் தலைவராக இருக்கிறார். அவரே பிரதம அமைச்சராகவும் இருக்கிறார். 4. பிரதம அமைச்சரும் இதர காபினெட் அமைச்சர்களும் பாராளுமன்றத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 5. ஒவ்வொரு அமைச்சரும் அவர் மேற்பார்வையிலுள்ள துறையின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பு ஏற்கிறார். அதே போல அரசாங்கத்தினுடைய
|
நடவடிக்கைகளுக்கு அமைச்சர்களும் கூட்டுப்பொறுப்பு கொள்கை அடிப்படையில் பொறுப்புடையவர்களாக இருக்கிறார்கள். எல்லா பாராளுமன்றத்திற்கு நிறைகள் 1. இம்முறை அரசாங்கத்தில் நிர்வாக துறைக்கும் சட்டதுறைக்கும் இடையே ஒற்றுமையும் , ஒத்துழைப்பும் பெருமளவில் காணப்படுகிறது. 2. அவசியப்படும் போது விட்டுக்கொடுத்து நடக்கும் முறை நிலவுகிறது. நெருக்கடி காலங்களில் அமைதியான முறையில் அரசாங்க மாற்றம் ஏற்படுகிறது. 3. எதிர்க்கட்சிகள் நடைமுறைக்கு சாத்தியமான ஆலோசனைகள் வழங்குவதோடு நியாயமான குறைகளை எடுத்துக்கூறுகின்றனர். பிரதம 4. இம்முறை
|
மக்களுடைய விருப்பத்திற்கேற்ப செயல்படுகிறது. குறைகள் 1. இது அதிகாரப் பிரிவினை கோட்பாட்டிற்கு எதிரானது. நிர்வாகத்துறை மற்றும் இடையே ஒற்றுமை அடிப்படையில் அமைச்சர் அதிகாரம் சர்வாதிகாரியாக மாறிவிடக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. சட்டத்துறைகளுக்கு பணிகள் நிறைவேற்றப்படுவதால் 2. சட்டமன்றத்தில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத போது பல கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைக்கின்றன. இத்தகைய அரசாங்கம் கட்சிகளுக்கிடையே காணப்படும் பிரச்சினைகள் காரணமாக அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுவதோடு அரசாங்கமும்
|
வலிமை குன்றி காணப்படும். மேலோங்கியவராக 3. ஆட்சியிலிருக்கும் கட்சி பதவியிருந்து விலகுகின்ற போதோ அல்லது சட்டமன்றத்தில் தோற்கடிக்கப்படும் போதோ எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் உரிமையை பெறுகிறது. இந்த அரசாங்கம் முன்னால் இருந்த அரசாங்கத்தினுடைய முடிவுகளை ஏற்காமல் போகக்கூடும். இத்தகைய சூழ்நிலையில் பின்பற்றும் கொள்கையில் தொடர்ச்சி இல்லாமல் போகும். 5.4 தலைவர்முறை அரசாங்கம் இம்முறை தலைவர் சட்டமன்றத்திற்கு பொறுப்புடையவராக இருக்கமாட்டார். இதற்கு சிறந்த உதாரணம் அமெரிக்க ஐக்கிய குடியரசு ஆகும். அரசாங்கத்தில் இம்முறையின்
|
சிறப்பு அம்சங்கள் 1. குடியரசு தலைவர் நடைமுறையிலும் அரசியலமைப்பு அடிப்படையிலும் உண்மையான அதிகாரம் உடையவராக இருக்கிறார். 2. அரசாங்கத்தின் பிரிவுகளான சட்டத்துறை , செயல்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் அதற்கென சில அதிகாரங்களை பெருகின்றன. இந்த அளவில் ஒவ்வொன்றும் தனித்தன்மையுடயதாக இருக்கிறது. 3. இவ்வாறு அதிகாரப்பிரிவினை இருந்தபோதும் ஒரு துறை பிறிதொரு துறையை கண்காணித்து தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் சமநிலை மற்றும் தடை கோட்பாடு பின்பற்றப்படுகிறது. எந்த ஒரு துறையும்
|
எந்த ஒரு சூழ்நிலையிலும் எதேச்சதிகாரம் செலுத்த முடியாது. 4. குடியரசு தலைவரது பதவிக்காலம் வரையறை செய்யப்பட்டது. எந்த காரணத்தை கொண்டும் பதவிக் காலத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ அல்லது அவரை பதவியிலிருந்து தேசத் துரோக குற்றச்சாட்டு அடிப்படையில்லாமல் விலக்கமுடியாது. நிறைகள் 1. நிலையான அரசு சாத்தியமாகிறது. 2. குடியரசு தலைவர் விருப்பப்படி கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வெளியில் உள்ளவர்களும் அரசாங்கத்தின் துறைகளுக்கு தலைமை தாங்க பொறுப்பு ஏற்க நியமிக்கப்படலாம். அவசியமானால் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள்
|
இப்பொறுப்புகளை ஏற்க நியமிக்கப்படலாம். கூட 3. கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படுவதால் செயலாக்கம் இணக்கமாக இருக்கிறது. 4. தேசிய நெருக்கடிகள் ஏற்படும்போது இத்தகைய அரசாங்கம் சிறந்ததாக இருக்கிறது. 5. அதிகார குவிப்பிற்கு வாய்ப்பு இல்லை. குறைகள் 1. நிர்வாகத்துறை சட்டத்துறைக்கு பொறுப்பு ஏற்காமல் இருப்பதால் அதன் விருப்பப்படி செயல்படமுடிகிறது. 2. நிர்வாகத்துறைக்கும் சட்டத்துறைக்கும் இடையே பிரச்சனைகள் தீர்க்கப்படமுடியாத சூழ்நிலைகள் அதிகம். 3. இம்முறை அரசாங்கம் இறுக்கமானதாக இருக்கிறது. 4. சட்டத்துறைக்கும் நிர்வாக துறைக்கும்
|
இடையே சுமூகமாக சூழ்நிலை இல்லாமல் போகும் போது சுதந்திரமான வெளிநாட்டுக்கொள்கையை பின்பற்றுவதற்கு முடியாமல் போகிறது. நிர்வாகத்துறை பின்பற்றும் கொள்கை சட்டத்துறையால் ஏற்கப்படாமலும் போகலாம். 5.5 குழுமுறை அரசாங்கம் குழுமுறை அல்லது பன்மை நிர்வாக அமைப்பு முறையில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்டவர்கள் சமதகுதியும் அதிகாரமும் உடையவர்களாக இருக்கிறார்கள். இம்முறையில் பாராளுமன்றமுறை அரசாங்கம் மற்றும் தலைவர் முறை அரசாங்கத்தில் நல்ல அம்சங்களையும் அதே சமயத்தில் குறைகளையும் பெற்றிருக்கிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு
|
சுவிட்ஸர்லாந்து அரசாங்கமாகும். சுவிட்ஸர்லாந்து நாட்டில் கூட்டாட்சி முறையில் குழுவாட்சி முறை பின்பற்றப்படுகின்றன. இங்குள்ள செயற்குழு உறுப்பினர்கள் ஏழுபேர் நான்கு ஆண்டு பதவி காலத்திற்கு கூட்டுக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு அமைச்சரும் ஒருதுறைக்கு பொறுப்பு ஏற்கிறார். இவ்வடிப்படையில் அரசாங்க துறைகள் ஏழாக இருக்கிறது. கவுன்சிலர் என்று அழைக்கப்படும் அமைச்சர் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் கூட்டாட்சி சட்டமன்ற உறுப்பினர் பதவியிருந்து விலகவேண்டும். இவர்கள் எத்தனை முறைவேண்டுமானாலும் திரும்ப
|
திரும்ப தேர்ந்தெடுக்கப்படலாம். கூட்டாட்சி கவுன்சில் என்று அழைக்கப்படும் அரசாங்கத்தில் தலைவர் பொறுப்பு , உதவி தலைவர் பொறுப்பு , சுழற்சி முறையில் ஒவ்வொரு கவுன்சிலருக்கிடையே மாறி மாறி ஓராண்டு காலத்திற்கு தரப்படுகிறது. நிறைகள் 1. இந்த நாட்டில் உள்ள கூட்டு செயற்குழு நிலையானதாகவும் பொறுப்புடையதாகவும் இருக்கிறது. 2. தனி அமைச்சர் ஒருவரிடம் அதிகாரங்கள் குவிப்பதற்கான சந்தர்ப்பமே கிடையாது. 3. கொடுங்கோன்மை மற்றும் சர்வாதிகார போக்கு இந்த செயல்துறையில் ஏற்படவாய்ப்பில்லை. 4. நாட்டில் உள்ள பகுதிகள் அனைத்திற்கும் எல்லா
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.