id
stringlengths 1
6
| url
stringlengths 31
789
| title
stringlengths 1
93
| text
stringlengths 9
259k
|
---|---|---|---|
597365
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D
|
முகமது அயாத்
|
முகமது அயாத் (Mohammad Hayat) (பிறப்பு: சூலை 15, 1942, ஹிந்தி: मोहम्मद हयात) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1993 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் மூலம் உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஜனதா தளம் (யு) உறுப்பினராக உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினரானார்.
அரசியல் வாழ்க்கை
அயாத் முதன்முதலில் 1974 ஆம் ஆண்டு அம்ரோஹா சட்டமன்றத்தில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சி அளித்த வாய்ப்பில் உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்ரோகாவில் நடந்த நெசவாளர் இயக்கத்தில் பங்கேற்றார்.
மேற்கோள்கள்
1942 பிறப்புகள்
வாழும் நபர்கள்
உத்தரப் பிரதேச நபர்கள்
|
597366
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87.%20%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
|
கே. அசுங்பா சங்கதம்
|
Articles with hCards
கே. அசுங்பா சங்கதம் (K. Asungba Sangtam) ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சேவகர் மற்றும் நாகாலாந்திலிருந்து மக்களவையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் நாகாலாந்து மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பன்னிரண்டாவது மற்றும் பதின்மூன்றாவது மக்களவை உறுப்பினராக இருந்தார்.
சுயசரிதை
வடகிழக்கு இந்திய மாநிலமான நாகாலாந்தில் உள்ள துயன்சாங் மாவட்டத்தில் உள்ள சாரு என்ற கிராமத்தில் 27 சூலை 1945 இல் பிறந்தார். இவர் தனது பள்ளிக் கல்வியை சில்லாங்கில் உள்ள செயின்ட் எட்மண்ட் பள்ளியில் பயின்றார் (1962). மேலும், 1964-ஆம் ஆண்டில் ஷில்லாங்கில் உள்ள செயின்ட் எட்மண்ட் கல்லூரியில் தனது பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பை முடித்தார். தில்லியில் உள்ள செயின்ட் இசுடீபன் கல்லூரியில் தனது பட்டப்படிப்பைத் தொடங்கிய இவர், நாகாலாந்தில் உள்ள மோகோக்சுங்கில் உள்ள பசல் அலி கல்லூரியில் 1970 இல் முடித்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தார். இவர் நாகாலாந்து பிரதேச காங்கிரசு கமிட்டியின் உறுப்பினராக இருந்தார். 1987-ஆம் ஆண்டில் இணைச் செயலாளராகவும், 1989-ஆம் ஆண்டில் செயலாளராகவும் பணியாற்றினார், ஆனால் 2014-ஆம் ஆண்டில் பதவி விலகினார். மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், தகவல் தொடர்புக் குழுவின் உறுப்பினராகவும், வேளாண் அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார். 2004 மற்றும் 2009 பொதுத் தேர்தல்களிலும் போட்டியிட்டார், ஆனால் தோல்வியடைந்தார். 2009 ஆம் ஆண்டில், பொது விவகாரங்களில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.
இவர் 2005 ஆம் ஆண்டு முதல் தில்லியின் பாப்டிஸ்ட் சர்ச் டிரஸ்ட் அசோசியேஷன் (BCTA), பிஎம்எஸ் வேர்ல்ட் மிஷனின் கூட்டமைப்பின் தலைவராக இருந்து வருகிறார், அவர் யாஷிலா அசுங்கை மணந்தார் மற்றும் இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
மேலும் காண்க
நாகாலாந்து (லோக்சபா தொகுதி)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
13வது மக்களவை உறுப்பினர்கள்
12வது மக்களவை உறுப்பினர்கள்
வாழும் நபர்கள்
1945 பிறப்புகள்
பொது அலுவல்களுக்காகப் பத்மசிறீ விருதுபெற்றவர்கள்
|
597369
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF
|
தேவேந்திர சிங் பாப்லி
|
தேவேந்தர் சிங் பாப்லி (Devender Singh Babli) ஜனநாயக ஜனதா கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 28 டிசம்பர் 2021 அன்று அரியானா அரசாங்கத்தில் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 24 அக்டோபர் 2019 அன்று தோஹானாவில் இருந்து அரியானா சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
தேவேந்தர் சிங் பாப்லி 1,00,621 வாக்குகள் பெற்று பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரும் மாநில கட்சி தலைவருமான சுபாஷ் பராலாவை 52,302 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். வெற்றி வித்தியாசம் மாநிலத்தில் எந்த ஒரு வேட்பாளரும் பெற்ற இரண்டாவது அதிகபட்ச மதிப்பெண் ஆகும்.
28 டிசம்பர் 2021 அன்று, அரியானாவில் கேபினட் அமைச்சராக தேவேந்திர சிங் பப்லி பதவியேற்றார்.
மாநில அமைச்சராக (சுயேச்சைப் பொறுப்பு), பாப்லி இரண்டு இலாகாக்களை வைத்திருக்கிறார். இவருக்கு வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துகள் துறையின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, இது முன்னர் துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலாவால் வகித்தது, மேலும் அவர் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் துறையின் தலைவராகவும் உள்ளார்.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
அரியானா அரசியல்வாதிகள்
|
597370
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
|
பால்முகுந்த் கௌதம்
|
பால்முகுந்த் சிங் கௌதம் (Balmukund Singh Gautam) மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரான இவர், மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக (மத்தியப் பிரதேச விதான் சபா) தார் தொகுதிக்கான உறுப்பினராகப் பணியாற்றினார்.
அரசியல் வாழ்க்கை
பால்முகுந்த் சிங் கௌதம் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சியான இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். இவர் தார் மாவட்ட காங்கிரசு குழுவின் தலைவராக உள்ளார்.
இவர் 2008 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் தார் சட்டமன்றத் தொகுதியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டார், ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) நீனா வர்மாவுக்கு எதிராக நியாயமற்ற முறையில் தோல்வியடைந்தார். முதல் வாக்கு எண்ணிக்கையில் கௌதம் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வர்மாவின் 50,505 வாக்குகளுக்கு எதிராக அவர் 50,507 வாக்குகளைப் பெற்றார். வர்மாவும் இவரது கட்சியினரும் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி கேட்டுக் கொண்டனர். மேலும், இவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இவர் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார் மற்றும் 2009-ஆம் ஆண்டில் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் வர்மாவின் தேர்தல் மற்றும் மறு எண்ணும் செயல்முறையை சவால் செய்தார். தபால் ஓட்டுகளை எண்ணுவதில் முறைகேடு நடந்துள்ளதாக மனு தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றத்தின் இந்தூர் பெஞ்ச் கெளதமுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்காததன் அடிப்படையில் வர்மாவின் தேர்தல் செல்லாது என்று அறிவித்தது. கவுதமுக்கு எதிராக வர்மா தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை பெஞ்ச் நிராகரித்தது. இவர் நீதிமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு 24 செப்டம்பர் 2013 அன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்
நவம்பர் 5, 2013 அன்று, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, 2013 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தார் தொகுதியில் இருந்து கட்சியின் வேட்பாளராக கெளதமை அறிவித்தது. நவம்பர் 25 அன்று தேர்தல் நடைபெற்றது. இவரது வேட்புமனுவை சில காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தனர். இவர் 11,482 வாக்குகள் வித்தியாசத்தில் நீனா வர்மாவிடம் தோல்வியடைந்தார்.
கைது
3 ஆகத்து 2003 அன்று இராசத்தான் காவல்துறை, பில்வாராவின் சுபாஷ் நகரில் ஒரு டேங்கரை சட்டவிரோத மதுபானம் கொண்டு சென்றதற்காக பறிமுதல் செய்து, கௌதம் மற்றும் அவரது தம்பி ராகேஷ் சிங் உட்பட ஐந்து பேர் மீது ராஜஸ்தான் கலால் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. தர் மற்றும் ஜாபுவா காவல்துறையினரின் உதவியுடன் ராஜஸ்தான் காவல்துறையினரால் 11 டிசம்பர் 2012 அன்று பீதாம்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து கெளதம் கைது செய்யப்பட்டார். இவரது சகோதரர் தார், கந்த்வா மற்றும் டெல்லி காவல்துறையின் உதவியுடன் 15 ஏப்ரல் 2012 அன்று டெல்லியில் இருந்து கைது செய்யப்பட்டார்.
மேற்கோள்கள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
வாழும் நபர்கள்
|
597372
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D
|
கோனேரு ரங்கா ராவ்
|
கோனேரு ரங்கா ராவ் (Koneru Ranga Rao) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1936 ஆம் ஆண்டு சூலை மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். காங்கிரசு கட்சியை சேர்ந்த இவர் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக இருந்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
கோனேரு ரங்கா ராவ் ஆந்திர மாநிலம் விசயவாடாவில் உள்ள குடவல்லியில் பிறந்த ஒரு தலித் தலைவராவார். இவர் ஒரு பி.ஏ. பட்டதாரியாக அறியப்படுகிறார்.
அரசியல் வாழ்க்கை
கோனேரு ரங்கராவ் தனது கிராமமான குண்டவல்லியின் சர்பஞ்சாக தேர்ந்தெடுக்கப்பட்டு 20 ஆண்டுகள் அந்த கிராமத்தில் பணியாற்றினார்.
கானிபாடு தொகுதியில் இருந்து ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சமூக நலத்துறை அமைச்சரானார். திருவூர் தொகுதியில் இருந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். நகராட்சி வளர்ச்சி, அறநிலையத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். கோட்லா விசய பாசுகர ரெட்டி ஆட்சியின் போது கோனேரு ரங்கா ராவ் துணை முதல்வராக இருந்தார்.
இறப்பு
கோனேரு ரங்க ராவ் 2010 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் தேதியன்று இறந்தார்
தனிப்பட்ட வாழ்க்கை
கோனேரு ரங்கராவ் திருமணமாகி நான்கு குழந்தைகளைப் பெற்றார். முன்னாள். நாடாளுமன்ற உறுப்பினர் மல்லு ரவி இவரது மருமகன் என்றும் அறியப்படுகிறது.
மேற்கோள்கள்
இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள்
2010 இறப்புகள்
1936 பிறப்புகள்
ஆந்திரப் பிரதேச அரசியல்வாதிகள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
|
597375
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%20%E0%AE%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
வெள்ளை வயிற்று நீல ஈபிடிப்பான்
|
வெள்ளை வயிற்று நீல ஈபிடிப்பான் ( White-bellied blue flycatcher ) என்பது குருவி வரிசையைச் சேர்ந்த பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தின் ஒரு சிறிய பறவையாகும். இது தென்மேற்கு இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் (நீலகிரி உட்பட) வாழும் அகணிய உயிரி ஆகும். ஆண் பறவைகளின் உடலின் வயிறு நீங்கிய பிற பகுதிகள் நீலமாகவும் வயிறு மட்டும் சாம்பல் கலந்த வெண்மையாக இருக்கும். பெண் பறவைகளின் மார்பு சாம்பல் தோய்ந்த வெண்மையாகவும், முகம் வெள்ளையாகவும், உடலின் மேற்பகுதி கருஞ்சிவப்புத் தோய்ந்த ஆலிவ் பழுப்பாகவும் இருக்கும்.
விளக்கம்
இந்த ஈபிடிப்பான் சுமார் நீளமும், நீளமான அலகும் கொண்டது. இது அடர்ந்த காடுகளின் நிழலில் தாழ்வான புதர்களிடையே உணவு தேடுகிறது. சிறு கிளைகளில் அமர்ந்து பூச்சிகளைத் தொடர்ந்து மறந்து பிடித்து மீண்டும் வேறொரு கிளையில் வந்து அமரும். ஆண் பறவை பொதுவாக கருநீல ஊதா நிறத்தில் இருக்கும். புருவம் நெற்றி போன்றவை கடல் நீல நீல நிறம். கண்-அலகு இடைப்பகுதியும், முகமும் அடர் சாம்பல் நிறத்தில் இருக்கும். வயிறு வெண்மையானது. பெண் பறவையில் உடலின் மேற்பகுதி கருஞ்சிவப்புத் தோய்ந்த ஆலிவ் பழுப்பாக இருக்கும். தொண்டை ஆரஞ்சு செம்பழுப்பாகவும் மார்பும் வயிறும் சாம்ல் தோய்ந்த வெண்மையாகவும் வால் கருஞ்சிவப்புப் புற இறகுகளோடு பழுப்பு நிறமாகவும் இருக்கும். இதற்கு கருப்பு வெள்ளை வால் அமைப்பு இல்லாதது மற்ற ஈபிடிப்பான் பறவைகளிடமிருந்து வேறுபடுத்தி அறியதக்கதாக உள்ளது. குறைந்த வெளிச்சத்தில் பழனி மலைகளில் காணும்போது குட்டை இறக்கையனுடன் சேர்த்துக் குழப்பமேற்படலாம்.
பரவல்
வெள்ளை வயிற்று நீல ஈபிடிப்பான் பறவையானது, அடர்ந்த காடுகளிலும், சோலைக்காடுகளிலும் மகாபலீசுவரிலிருந்து தெற்கே மேற்குத் தொடர்ச்சி மலைகள் வழியாக நீலகிரி மற்றும் பிலிகிரிரங்கன் மலைகள் வரை பரவி, தென் தமிழ்நாடு மற்றும் கேரளா வரை பரவியுள்ளது. இது முக்கியமாக நீலகிரியில் மலையடிவாரத்திலிருந்து சுமார் 1700 மீ வரையிலான மலைக்காடுகளில் காணப்படுகிறது.
நடத்தையும் சூழலியலும்
வெள்ளை வயிற்று நீல ஈபிடிப்பான் அமைதியாகவும், பரபரப்பற்றதாகவும் இருக்கும், முக்கியமாக வன விதானத்திற்குக் கீழே இருண்ட நிழலில் உணவு தேடுகிறது. நெருக்கத்தில் மட்டும் கேட்கக்கூடிய பாடல் ஒலியை எழுப்புகின்றன. இவை பொதுவாக தனித்தனியாகவோ அல்லது இணையாகவோ காணப்படுகின்றன, மேலும் இவை பெரும்பாலும் இரைதேடும் பிற பறவைப் பட்டாளங்களோடு சேர்ந்து உணவு தேடும்.
இதன் இனப்பெருக்க காலம் பெப்ரவரி முதல் செப்டம்பர் வரை, குறிப்பாக பருவமழைக் காலத்தின் போது ஆகும். வேர், புல், மரக்காளான் முதலியவற்றால் பாசியினைப் புறத்தில் வைத்து பெரும் போக்காகக் கோப்பை வடிவான கூடு அமைக்கும். காய்ந்து போன பெரிய மரங்களில் காணப்படும் பொந்துகளிலோ ஆழ்ந்த புதர்களிலோ கூடுகளைக் காண இயலும். பொதுவாக நான்கு முட்டைகளை இடும். முட்டைகள் கடல் பச்சை நிறமாக சாக்லெட் பழுப்பு கரும் பழுப்புக் கறைகளுடன் காட்சியளிக்கும்.
மேற்கோள்
தென்னிந்தியப் பறவைகள்
ஈ-பிடிப்பான்கள்
|
597376
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
|
பிரதாப் சந்திர மொகந்தி
|
பிரதாப் சந்திர மொகந்தி (Pratap Chandra Mohanty) (அக்டோபர் 23, 1920 - மார்ச் 15, 1993) இந்தியாவின் ஒடிசாவைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் டிர்டோல் தொகுதியிலிருந்து, 4 முறை ஒடிசா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 3வது சட்டமன்றத்திற்கான தேர்தல் (1961), 5வது சட்டமன்றத்திற்கான தேர்தல் ( 1971 ), ஆகியவற்றிலும் 6வது சட்டமன்றத்திற்கான தேர்தல் ( 1974 ), மற்றும் 7வது சட்டமன்றத்திற்கான தேர்தல் ( 1977 ) ஆகியவற்றிலும் இவர் வெற்றி பெற்றார். 1970 களில் வருவாய், நீர்ப்பாசனம் மற்றும் மின்சாரம், வணிகம் மற்றும் போக்குவரத்து, கல்வி மற்றும் இளைஞர் விவகாரத் துறைகளை வைத்திருந்த இவர் ஒடிசாவில் அமைச்சராக இருந்தார். பிரதாப் சந்திர மொகந்தியும் அவசரநிலையின் போது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (MISA) கீழ் சுமார் ஒரு வருடம் காவலில் வைக்கப்பட்டார். இவர் 09 டிசம்பர் 1957 முதல் 26 அக்டோபர் 1966 வரை ஜகத்சிங்பூர் மா சரளா கோயில் அறக்கட்டளையின் தலைவராக இருந்தார்
மேற்கோள்கள்
1993 இறப்புகள்
1920 பிறப்புகள்
ஒடிசா அரசியல்வாதிகள்
|
597377
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
|
பொம்மிரெட்டி சுந்தர ராமி ரெட்டி
|
பொம்மிரெட்டி சுந்தர ராமி ரெட்டி (Bommireddy Sundara Rami Reddy) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1935 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த இவர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஒரு மருத்துவராகவும் அறியப்படுகிறார். பொம்மிரெட்டி சுந்தர ராமி ரெட்டி ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சுயசரிதை
ராமி ரெட்டி 1935 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி பிறந்தார் சென்னையில் மருத்துவத்தில் எம்பிபிஎசு பட்டம் பெற்றார். பின்னர், அரசுப் பணியில் சேர்ந்தார். 1970 ஆம் ஆண்டில் தனது மருத்துவமனையைத் திறந்தார்.
ராமி ரெட்டி 1978 ஆம் ஆண்டு ஆத்மகூரில் இருந்து ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் 1985 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் அந்தத் தொகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் 1985 தேர்தலில் வெங்கையா நாயுடுவை தோற்கடித்தார். இவரது மகன் பொம்மிரெட்டி ராகவேந்திரா ரெட்டி ஆந்திர பிரதேச சட்ட மேலவையின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.
ராமி ரெட்டி 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதியன்று தனது 84 வயதில் இறந்தார்
மேற்கோள்கள்
கர்நூல் மாவட்ட நபர்கள்
2020 இறப்புகள்
1935 பிறப்புகள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
ஆந்திரப் பிரதேச அரசியல்வாதிகள்
|
597380
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
|
ஆசனா சட்டமன்றத் தொகுதி
|
ஆசனா சட்டமன்றத் தொகுதி (, ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஹாசனா மாவட்டத்தில் உள்ளது. ஹாசனா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 196 ஆகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
குறிப்பு
மேற்கோள்கள்
கர்நாடக சட்டமன்றத் தொகுதிகள்
ஹாசன் மாவட்டம்
|
597382
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF
|
பிரவத் சவுத்ரி
|
பிரவத் சவுத்ரி (Pravat Chowdhury)(பிறப்பு 28 திசம்பர் 1976) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்தியப் பொதுவுடமை கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினரும் ஆவார். சவுத்ரி 2014ஆம் ஆண்டு முதல் தெற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள மனு சட்டமன்றத் தொகுதியின் திரிபுரா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2014ஆம் ஆண்டு இந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் சவுத்ரி முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார், முந்தைய பதவியிலிருந்த ஜிதேந்திர சவுத்ரி, 2014இல் வெற்றி பெற்ற பின்னர் திரிபுரா கிழக்கு மக்களவைத் தொகுதியில் மக்களவை உறுப்பினராகப் பதவியேற்கப் பதவி விலகினார். இதன் காரணமாக நடைபெற்ற இடைத்தேர்தலில் பிரவத் சவுத்ரி அமோக வெற்றி பெற்றார். கிட்டத்தட்ட 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வெற்றிபெற்றார். 2018 திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தலின் போது சவுத்ரி மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார், ஆனால் இந்த முறை மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணியின் தனஞ்சோய் திரிபுராவுக்கு எதிராக 193 வாக்குகள் அல்லது 0.48% வாக்குகள் வித்தியாசத்தில் இவர் வெற்றி பெற்றது மாநிலத்தில் மிக நெருக்கமான போட்டியாக இருந்தது.
மேலும் பார்க்கவும்
ஜிதேந்திர சவுத்ரி
மேற்கோள்கள்
1976 பிறப்புகள்
வாழும் நபர்கள்
திரிபுரா அரசியல்வாதிகள்
|
597384
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF
|
பாதல் சௌத்ரி
|
பாதல் சவுத்ரி (Badal Choudhury) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினரும் ஆவார். சவுத்ரி தெற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள கிருஷ்யமுக் தொகுதியிலிருந்து திரிபுரா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் 2013-18-ல் (மாணிக் சர்க்கார் அரசாங்கத்தில்) சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் மற்றும் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார்.
அரசியல் வாழ்க்கை
பாதல் சவுத்ரி தனது மாணவப் பருவத்திலேயே மாணவர் இயக்கங்களில் மிகவும் தீவிரமாக இருந்தார். 1968ஆம் ஆண்டு தனது 17வது வயதில் இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினரானார். 1972 முதல் 1981 வரை சவுத்ரி, பெலோனியா பிரதேசக் குழுவின் செயலாளராக இருந்தார். 1974-ல், இவர் பொதுவுடைமைக் கட்சியில் திரிபுரா மாநிலக் குழு உறுப்பினராகப் பதவி உயர்வு பெற்றார். 1977-ல் திரிபுரா சட்டமன்ற உறுப்பினராக முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1993 வரை இப்பதவியிலிருந்தார். 2008-ல், இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மத்தியக் குழு உறுப்பினரானார்.
மேற்கோள்கள்
1951 பிறப்புகள்
11வது மக்களவை உறுப்பினர்கள்
வாழும் நபர்கள்
|
597398
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE
|
டெய்லி தேஷர் கதா
|
டெய்லி தேஷர் கதா தமிழில் தினசரி நாட்டுப் பேச்சு (ஆங்கிலம்: Daily Desher Katha; Ḍeili Desher Kôtha) என்பது அகர்தலாவிலிருந்து வெளியிடப்படும் வங்காள மொழி நாளிதழ் ஆகும். இது திரிபுராமாநில இந்திய பொதுவுடமைக் கட்சியின் தினசரி வெளியீடாகும்.
வரலாறு
தேஷர் கதா 1979-ல் நிறுவப்பட்டது..காங்கிரசு-டியுஜெஎசு கூட்டணி ஆட்சியின் போது பத்திரிகை மீது கடுமையான நெருக்கடிக்கு உடபட்டது..
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
தேஷர் கதா 30 வருட வெளியீட்டைக் கொண்டாடுகிறது
வங்காள நாளிதழ்கள்
|
597399
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
|
முத்துசேர்வமடம்
|
முத்துசேர்வமடம் (Muthuservamadam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
மக்கள்தொகை
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, முத்துசேர்வமடத்தில் 2239 ஆண்கள் மற்றும் 2289 பெண்கள் என மொத்தம் 4528 பேர் இருந்தனர்.
மேற்கோள்கள்
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
|
597400
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%28%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%29
|
காரைக்குறிச்சி (அரியலூர்)
|
காரைக்குறிச்சி (Karaikurichi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் தாலுக்காவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
மக்கள்தொகை
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, காரைக்குறிச்சியில் 1928 ஆண்கள் மற்றும் 1850 பெண்கள் என மொத்தம் 3778 பேர் உள்ளனர்.
காரைக்குறிச்சி கிராமத்தில் கீழ்க்கண்ட கோவில்கள் உள்ளன.
1. சிவன் கோயில்
2. மாரியம்மன் கோயில்
மேற்கோள்கள்
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
|
597401
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
|
இராமநல்லூர்
|
இராமநல்லூர் (Ramanallur) கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு. இது தமிழ்நாடு, அரியலூர் மாவட்டம் , அரியலூர் வட்டம், அழகியமணவாளம் வருவாய் கிராமத்தின் ஒரு பகுதியாகும் . இது 2016-ல் சுமார் 2,500 மக்கள்தொகையைக் கொண்டிருந்தது.
நிலவியல்
இராமநல்லூர் அமைந்துள்ளது.
இத்தீவு இரண்டு குக்கிராமங்களைக் கொண்டுள்ளது: மேல இராமநல்லூர் மற்றும் கீழ இராமநல்லூர்.
நிலப்பரப்பிற்கான இணைப்பு
இத்தீவை அழகியமணவாளத்துடன் இணைக்கும் பாலம் பிப்ரவரி 2016-ல் திறக்கப்பட்டது. இதற்கு முன், பரிசலே பெரும்பாலும் ஆற்றைக் கடக்கப் பயன்படுத்தப்பட்டன. கோடைக் காலத்தில் மிதவைகள் மற்றும் காளை வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. வெள்ளக் காலங்களில் பெரும்பாலும் இத்தீவு பிரதான நிலப்பகுதியிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்படும்.
, பிரதான நிலப்பகுதியிலிருந்து தீவுக்கு ஒரு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தின் தெற்கே இணைக்கத் திட்டமிடப்பட்ட மற்றொரு பாலம் க்கு சமமான தமிழ்நாடு அரசாங்கத்தின் நிதியுதவி பெறப்பட்டு 2017-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. 2019 செப்டம்பரில், மேல இராமநல்லூரிலிருந்து தஞ்சாவூர் மாவட்டம் நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், பாலத்தைக் கட்டி முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் எழுப்பியது.
மேற்கோள்கள்
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata
|
597402
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D
|
பிசுதயோசெமிகார்பசோன்
|
பிசுதயோசெமிகார்பசோன் (Bisthiosemicarbazone) என்பது தயோசெமிகார்பசைடுக்கும் ஓர் இருகீட்டோனுக்கும் இடையில் நிகழும் நீக்கல் வினையில் உருவாகும் வழிப்பெறுதியாகும். இவற்றின் கட்டமைப்பு என்பதாக அமையும். ஒரு தயோசெமிகார்பசோன் என்பது செமிகார்பசோனில் உள்ள கீட்டோனிக் ஆக்சிசனுக்குப் பதிலாக ஒரு கந்தக அணுவைக் கொண்டிருக்கும். பிசுதயோசெமிகார்பசோன்கள் வைரசு எதிர்ப்பு, மலேரிய எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு செயல்பாட்டைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. பொதுவாக செல்களில் இவை தாமிரம் அல்லது இரும்புடன் பிணைப்பதன் மூலம் செயல்படுகின்றன. இவை கதிரியக்க ஐசோடோப்பு விநியோகத்திற்குச் சாத்தியமான தசைநார்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக இதயம், மூளை போன்ற உறுப்புகளிலுள்ள தாழாக்சிய திசுக்களை இவை தேர்ந்தெடுக்கின்றன. துத்தநாக அணுக்களுடன் கொடுக்கிணைப்பு செய்யப்படும்போது சில பிசுதயோசெமிகார்பசோன்கள் ஒளியியல் நுண்ணோக்கியில் ஒளிரும் முகவர்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கோள்கள்
வேதி வினைக்குழுக்கள்
தயோகார்பனைல் சேர்மங்கள்
|
597403
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF
|
புங்கங்குழி
|
புங்கங்குழி (Pungankuzhi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
மக்கள்தொகை
மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, புங்கங்குழி கிராமத்தில் 1853 ஆண்கள் 1815 பெண்கள் என மொத்தம் 3668 பேர் வசிக்கின்றனர்.
மேற்கோள்கள்
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
|
597404
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%20%E0%AE%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
போர்னிய நீல ஈப்பிடிப்பான்
|
போர்னிய நீல ஈப்பிடிப்பான் (Bornean blue flycatcher)(சைனோரிசு சூப்பர்பசு) என்பது மியூசிகாபிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது புரூணை, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
பேர்ட் லைஃப் இன்டர்நேஷனல் 2011 .
ஈ-பிடிப்பான்கள்
|
597405
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8B%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%20%E0%AE%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
கலோ நீல ஈப்பிடிப்பான்
|
கலோ நீல ஈப்பிடிப்பான் (Kalao blue flycatcher)(சைனோரிசு கலோலெனிசு) என்பது மியூசிகாபிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினமாகும். இது தெற்கு சுலவேசியின் செலயர் தீவுகள், கலாவ் தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநில காடுகள் ஆகும்.
இந்த ஈப்பிடிப்பான் முன்பு அலையாத்திக் காட்டு நீல ஈப்பிடிப்பானின் (சைனோரிசு ரூபிகாசுட்ரா) துணையினமாகக் கருதப்பட.டது, ஆனால் தற்பொழுது இது இதன் தனித்துவமான குரல் மற்றும் இறகுகளின் அடிப்படையில் தனி இனமாக கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
ஈ-பிடிப்பான்கள்
அகணிய உயிரிகள்
|
597406
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE
|
உமேஷ் மக்வானா
|
உமேஷ்பாய் நாரன்பாய் மக்வானா (Umeshbhai Naranbhai Makwana) ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சேவகர் மற்றும் பரோபகாரர் ஆவார். இவர் 8 டிசம்பர் 2022 முதல் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினராக பொடாட் சட்டமன்றத் தொகுதியிலிருந்து குஜராத் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார் மக்வானா குஜராத்தின் கோலி இனத்தைச் சேர்ந்தவர்.
உமேஷ் மக்வானா இந்தியாவின் குஜராத்தின் போட்டாத்தில் நரன்பாய் மக்வானா என்பவருக்கு மகனாகப் பிறந்து வளர்ந்தார். இவர் இளங்கலைப் பட்டம் படித்துள்ளார். இவர் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியைத் தொடங்கினார். இவர் தனது முன்முயற்சியான மானவ்தா சேவா ரத்தின் கீழ் இந்தியாவில் கொரோனாவைரசால் ஏற்பட்ட நாடு தழுவிய ஊரடங்கின் போது 6 லட்சத்திற்கும் அதிகமான உணவுப் பொட்டலங்களை விநியோகித்தார்.
மேற்கோள்கள்
ஆம் ஆத்மி கட்சி அரசியல்வாதிகள்
வாழும் நபர்கள்
குஜராத் அரசியல்வாதிகள்
|
597407
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%20%E0%AE%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
செம்பழுப்பு மார்பு நீல ஈப்பிடிப்பான்
|
செம்பழுப்பு மார்பு நீல ஈப்பிடிப்பான் (Rufous-breasted blue flycatcher)(சைனோரிசு கேமரினென்சிசு) என்பது மியூசிகாபிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும். இது முன்னர் நீல மார்பு ஈப்பிடிப்பானின் (சியோர்னிஸ் ஹெரியோட்டி) துணையினமாகக் கருதப்பட்டது.
மேற்கோள்கள்
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அழிவாய்ப்பு இனம்
ஈ-பிடிப்பான்கள்
பிலிப்பீன்சு பறவைகள்
அகணிய உயிரிகள்
|
597408
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
|
அர்ஃபாக் இயற்கை காப்பகம்
|
பெகுனுங்கன் அர்ஃபாக் இயற்கை காப்பகம் (Pegunungan Arfak Nature Reserve) இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தில் பறவைத்தலை தீபகற்பத்தின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. இது மாகாணத் தலைநகர் மனோக்வாரிக்கு தெற்கே 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது கடற்கரைக்கு அருகாமையில் இருந்து மாகாணத்தின் மிக உயரமான இடமான பெகுனுங்கன் அர்ஃபாக் (2955 மீ அல்லது 9695 அடி) வரை பரவியுள்ளது.
இங்குள்ள தாவரங்களில் தாழ்நிலம், மலை மற்றும் மலை மழைக்காடுகள் அடங்கும் (பிந்தையது ஓக், செஷ்ட்கொட்டைகள் மற்றும் தெற்கத்திய பீச்களை உள்ளடக்கியது). தாழ்நில மற்றும் மலை மழைக்காடுகளில் மரம் வெட்டுதல் நிகழ்கிறது. உள்ளூர் சிறப்புமிக்க, அரிதான மற்றும் வணிக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பாலூட்டி இனங்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஆய்வுகள் 110 வகையான பாலூட்டிகள் இங்கு காணப்படுவதாகக் குறிப்பிடுகின்றன, அவற்றில் இருபத்தி ஒன்று நியூ கினி தீவில் உள்ள மர கங்காருக்கள், வன வாலாபீஸ், பேண்டிகூட்ஸ், பாசம்ஸ் மற்றும் கஸ்கஸ் தீவுகளில் உள்ளன. இருபத்தி ஏழு வகையான கொறித்துண்ணிகள் உள்ளன, அவற்றில் பதினேழு தீவில் மட்டுமே உள்ளன. 320 பறவை இனங்கள் காப்பகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் பாதி நியூ கினியாவைச் சேர்ந்தவை. இராத்சைல்டின் பேர்ட்விங் என்பது அர்ஃபாக் மலைகளில் இருந்து மட்டுமே அறியப்படும் ஒரு பூச்சியாகும்.
அங்கி கிஜி மற்றும் கீதா ஆகிய இரண்டு ஏரிகள் மலைகளில் அமைந்து இந்த நிலப்பரப்பை மேலும் அலங்கரிக்கின்றன. காலப்போக்கில், இந்த காப்பகம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு சுவாரசியமான இடமாக மாறி வருகிறது.
மேற்கோள்கள்
Coordinates on Wikidata
இயற்கைச்சூழல் பாதுகாப்பு
|
597412
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE
|
செர்க்களம் அப்துல்லா
|
செர்க்களம் அப்துல்லா (15 செப்டம்பர் 1942 - 27 ஜூலை 2018) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1987 முதல் 2006 வரை மஞ்சேஸ்வரம் சட்டமன்றத் தொகுதியில் கேரள சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்கின் தலைவராகவும் பணியாற்றினார்.
வாழ்க்கை
அப்துல்லா செப்டம்பர் 15, 1942 அன்று பரிகாத் முகமது ஹாஜிக்கும் ஆஸ்யம்மாக்கும் செர்க்களம் என்னும் ஊரில் பிறந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் ஆயிசா என்னும் பெண்ணை மணந்தார். இவருக்கு 2 மகள் மற்றும் 2 மகன் ஆகவே இவருக்கு மொத்தம் 4 குழந்தைகள். இவரது முழு குடும்பமும் அரசியலில் இணைந்துள்ளனர்.
மேற்கோள்கள்
காசர்கோடு மாவட்ட நபர்கள்
இந்திய ஒன்றிய முசுலிம் லீக் அரசியல்வாதிகள்
2018 இறப்புகள்
1942 பிறப்புகள்
மலையாள அரசியல்வாதிகள்
|
597417
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%20%E0%AE%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
மீரட்டசு நீல ஈப்பிடிப்பான்
|
மீரட்டசு நீல ஈப்பிடிப்பான் (Meratus blue flycatcher)(சைனோரிசு கடயாங்கென்சிசு) என்பது தயாயக் நீல ஈப்பிடிப்பான் (சியோர்னிஸ் மாண்டனசு) உடன் நெருங்கிய தொடர்புடைய பழைய உலக ஈப்பிடிப்பான் சிற்றினமாகும். இந்தோனேசியாவின் போர்னியோவில் உள்ள மெரடசு மலைகப் பகுதிகளில் மட்டுமே இது காணப்படுகிறது. இப்பகுதி சிதைந்த இரண்டாம் நிலை வனப்பகுதி அல்லது மாற்றப்பட்ட நிலப்பகுதியால் சூழப்பட்டுள்ளன.
விளக்கம்
மீரட்டசு நீல ஈப்பிடிப்பான் சிற்றினத்தின் மேற்பகுதி உள்ள தயாக் நீல ஈப்பிடிப்பான்களை விட வெளிர் நீல நிறத்தில் காணப்படும். அதிக வெண்மை மற்றும் கீழ்ப் பகுதியில் குறைந்த சிவப்பு நிறத்துடன் காணப்படும். இந்த சிற்றினத்தின் கீழ் எந்த துணையினமும் அங்கீகரிக்கப்படவில்லை.
மேற்கோள்கள்
ஈ-பிடிப்பான்கள்
இந்தோனேசியப் பறவைகள்
|
597418
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
கய் சான்
|
கய் சான் ( Chinese ) என்பது ஆங்காங்கின் புதிய பிரதேசங்களில் உள்ள வாங் சாவில் உள்ள ஒரு மலையாகும், இது யுவன் லாங் மற்றும் டின் ஷுய் வாய் ஆகிய புதிய நகரங்களைப் பிரிக்கிறது. இதன் உயரம் ஆகும்.
கை சான் ஒரு தனியாருக்கு உரிமையான பகுதியாகும். இது டாங் குலத்திற்கு சொந்தமானது. அறிக்கைகளின்படி, தாவரங்கள் குறைவாக இருக்க மலையில் தாவரங்கள் தொடர்ந்து எரிக்கப்படுகிறது.
இது ஒரு பிரபலமான சுற்றுப்புற பாதையைக் கொண்டுள்ளது, இங்கு உள்ளூர்வாசிகள் பூக்களை நட்டு கலைத் தோற்றங்களை உருவாக்கியுள்ளனர், இம்மலையின் மேலிருந்து யுவன் லாங் மற்றும் சென்சென் இரண்டின் தனித்தன்மையான காட்சிகளைக் காணலாம்.
மேற்கோள்கள்
ஹொங்கொங்கில் உள்ள மலைகள்
|
597420
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
|
சப்ரூம் சட்டமன்றத் தொகுதி
|
சப்ரூம் சட்டமன்றத் தொகுதி (Sabroom Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.
இது தெற்கு திரிபுரா மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தேர்தல் முடிவுகள்
2023
2018
மேலும் பார்க்கவும்
திரிபுரா சட்டப் பேரவையின் தொகுதிகளின் பட்டியல்
தெற்கு திரிபுரா மாவட்டம்
மேற்கோள்கள்
திரிபுரா சட்டமன்றத் தொகுதிகள்
தெற்கு திரிப்புரா மாவட்டம்
|
597421
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
|
சமா தொலைக்காட்சி
|
சமா தொலைக்காட்சி (Samaa TV; ) பாக்கித்தானிய உருது மொழி செய்தி தொலைக்காட்சி ஆகும். 7 சதவீத சந்தைப் பங்கைக் கொண்ட பாக்கித்தானின் நான்காவது பெரிய செய்திச் தொலைக்காட்சி ஆகும். "சமா" ("سما") என்றால் உருது மொழியில் 'வானம்' அல்லது 'சொர்க்கம்' என்று பொருள். கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத், குவெட்டா, பெசாவர் உள்ளிட்ட ஐந்து நகரங்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்படுகிறது.
வரலாறு
சமா தொலைக்காட்சி 2007 இல் சாக் புரோட்காசுட்டிங் சிசுடம்சு என்ற தனியார் நிறுவனம் மூலம் நிறுவப்பட்டது. 2020 ஆம் ஆண்டில், முன்னாள் மாகாண அமைச்சர் அலீம் கான், அவரது துணை நிறுவனமான பார்க் வியூ லிமிடெட் மூலம் சாக் ஒலிபரப்பு ஒருங்கியம் நிறுவனத்திடமிருந்து சமா தொலைக்காட்சியை வாங்கினார்.
உண்மைகளின் அடிப்படையில் பொதுமக்களுக்கு செய்திகளை வழங்குவதில் கவனம் செலுத்துவதாகவும், உணர்ச்சி உணர்வு மிக்க செய்திகளை நாங்கள் எதிர்ப்பதாகவும் சாமா தொலைக்காட்சி கூறுகிறது. இந்த தொலைக்காட்சியின் முழக்கம் 'சன்சானி நஹின், சிர்ஃப் கப்ரைன்' என்றால் உருது மொழியில் "உணர்ச்சி உணர்வுகள் இல்லை, செய்திகள் மட்டுமே" என்று பொருள்.
2022 ஆம் ஆண்டு சாமா தொலைக்காட்சியின் தயாரிப்பாளர் அதர் மதின் வடக்கு நசிமாபாத் கராச்சியில் ஒரு கொள்ளையின் போது கொல்லப்பட்டார்.
மேற்கோள்கள்
பாக்கித்தானிய ஊடகங்கள்
2007 இல் நிறுவப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் நிலையங்கள்
|
597422
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
கருஞ்சாம்பல் தலை ஈபிடிப்பான்
|
கருஞ்சாம்பல் தலை ஈபிடிப்பான் ( Grey-headed canary-flycatcher ) என்பது வெப்பமண்டல ஆசியாவில் காணப்படும் சிறிய ஈபிடிப்பான் பறவை இனமாகும். இது சதுரமாகன உச்சந்தலை, கருஞ்சாம்பல் தலைமுடி மற்றும் மஞ்சள் நிற அடிப்பகுதியைக் கொண்டுள்ளது. இவை முக்கியமாக காடுகளை வாழ்விடங்களாக கொண்டுள்ளன. அங்கு இவை பெரும்பாலும் மற்ற பறவை இனங்களுடன் கூட்டமாக சேர்ந்து உணவு தேடுகின்றன. பல துணையினங்கள் இவற்றின் பரந்த வாழிட வரம்பிற்குள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் குலிசிகாபா பேரினமானது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தைச் சேர்ந்தவையாக கருதப்பட்டது. ஆனால் ஆய்வுகளில் அவை ஸ்டெனோஸ்டிரிடே அல்லது ஆப்பிரிக்க இனவகைகளான ஸ்டெனோஸ்டிரா மற்றும் எல்மினியாவை உள்ளடக்கிய தேவதை ஈப்பிடிப்பான் என்னும் புதிய குடும்பத்தைச் சேர்ந்தவை என்று கண்டறிந்துள்ளன.
விளக்கம்
கருஞ்சாம்பல் தலை ஈபிடிப்பான் சுமார் 12–13 செமீ (4.7–5.1 in) நீளமான உடலும், சதுர வடிவத்தை ஒத்த தலை, சாம்பல் தலைமுடி, மஞ்சள் வயிறு, பசுமை தோய்ந்த மஞ்சள் மேல் பகுதியைக் கொண்டுள்ளது. இவை மிகவும் சுறுசுறுப்பாக மரங்களில் உயர புழுபூச்சிகளைத் துரத்திப் பிடித்தபடி இருக்கும். இறகுகளின் நிறத்தைக் கொண்டு பாலினங்களை பிரித்தறிய முடியாது. இவை மிகவும் தட்டையான அலகைக் கொண்டுள்ளன (இதுவே பிளாட்டிரிஞ்சஸ் என்ற முந்தைய பேரினப் பெயருக்கு காரணமாயிற்று) இது மேலே இருந்து பார்க்கும் போது சமபக்க முக்கோணம் போல தோன்றும்.
இவற்றின் வாழிட வரம்பில், காணப்படும் பறவைகள் அதன் நிறங்களின் திட்டுக்களில் வேறுபடுகின்றன. மேலும் பரிமாணங்களிலும் சிறிது வேறுபடுகின்றன. அதனால் இவற்றில் பல துணையினங்கள் பரிந்துரைக்கபட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட துணையினங்கள் தீபகற்ப இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகள், நீலமலை, மத்திய இந்தியா மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் (லம்மசிங்கி ), இலங்கை ஆகிய இடங்களில் இனப்பெருக்கம் செய்து வாழ்கின்றன. 1923 ஆம் ஆண்டில் ஹாரி ஓபர்ஹோல்சரால் விவரிக்கப்பட்ட கலோக்ரிசியா என்ற துணையினம் இமயமலைக்கு கிழக்கே மியான்மர் மற்றும் தாய்லாந்து மற்றும் தென்னிந்தியா முழுவதும் குளிர்காலத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. ஓபர்ஹோல்சரால் விவரிக்கப்பட்ட ஆன்டிஆக்சாந்தாவின் துணை இனம் தெற்கு பர்மா, தாய்லாந்து முதல் மலேசியா வழியாக சாவகம் மற்றும் பாலி வரை இனப்பெருக்க எல்லையைக் கொண்டுள்ளது. 1897 இல் எர்ன்சுட் ஆர்டெர்ட்டால் விவரிக்கப்பட்ட தீவு வாழ் பறவைகள் செஜுங்க்டா சும்பாவா, புளோரஸ் மற்றும் லோம்போக்கில் காணப்படுகிறது, அதே சமயம் 1931 இல் பெர்ன்ஹார்ட் ரென்ஸ்ச் விவரித்த பறவைகள் சும்பா தீவில் வாழ்கின்றன.
கருஞ்சாம்பல் தலை ஈபிடிப்பான் அதன் புதுமையான உச்சி, வண்ணங்கள், குரலின் தன்மை போன்றவற்றைக் கொண்டிருந்தபோதிலும் பழைய உலக ஈப்பிடிப்பான், குடும்பத்தைச் சேர்ந்ததாக முன்னர் கருதப்பட்டது. இருப்பினும், மூலக்கூறு சாதிவரலாறு ஆய்வுகள், இவை முற்றிலும் வேறுபட்டவை என்றும், இவை ஸ்டெனோஸ்டிரிடே குடும்பத்தில் வைக்கப்பட்டன.
வாழ்விடமும் பரவலும்
இந்த இனமானது பாக்கித்தான், மத்திய இந்தியா, வங்காளதேசம் இலங்கையிலிருந்து கிழக்கே இந்தோனேசியா மற்றும் தெற்கு சீனா வரையிலான வெப்ப மண்டல முதவெப்பமண்டல தெற்காசியா வரையிலான நிலப்பரப்பில் உள்ள மொன்டேன் ஓக் (குவெர்கஸ்) மற்றும் பிற, பரந்த இலைகள் கொண்ட காடுகள் மற்றும் இதே போன்ற மரங்கள் நிறைந்த பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கிறது. பல பறவை துணையினங்கள் ஒரே இடத்தில் வசிப்பறவையாக உள்ளன. ஆனால் சில இமயமலைப் பறவைகளின் ஒரு பகுதி குளிர் காலத்தில் தீபகற்ப இந்தியப் பகுதிகளுக்கு வலசை போகின்றன. பூட்டான் போன்ற கிழக்கு இமயமலைப் பகுதிகளில், இவை ஆண்டு முழுவதும் காணப்படுகின்றன. மேலும் அவை கடல் மட்டத்தில் இருந்து 2,000 மீ வரையும் அதற்கு மேலும் காணப்படுகின்றன. இனப்பெருக்கம் செய்யாத பருவத்தில், சமவெளிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் (செப்டம்பர் முதல் மார்ச் வரை) காணப்படுகின்றன.
நடத்தையும் சூழலியலும்
கருஞ்சாம்பல் தலை ஈபிடிப்பான் ஒரு பூச்சியுண்ணி ஆகும். இது மரத்தின் மேலே ஒரு தாழ்வான இடத்தில் இருந்து பறக்கும் பூச்சிகளை பிடித்து உண்கிறது. இது இணையாக உணவு தேடும். பெரும்பாலும் பூச்சி உண்ணும் பிற பறவைகளுடன் கூட்டமாக சேர்ந்து உணவு தேடும். இவை கோடையில் இனப்பெருக்கம் செய்கின்றன (ஏப்ரல் முதல் சூன் வரை இந்தியாவில் மற்றும் மேற்கு சீனாவில் ). பெண் பறவையானது சிறு கோப்பை வடிவிலாக கூட்டினைப் பாசி பிடித்த மரக்கிளையில் மரக்காளான், மரப்பாசி ஆகியன கொண்டு தரையிலிருந்து ஆறு மீட்டர் உயரத்தில் சிலந்தி நூல்களைக் கொண்டு கட்டும். பொதுவாக மூன்று அல்லது நான்கு முட்டைகளை இடும். வடக்கு போர்னியோவில் இந்த இனத்தின் கூடுகளில் Hodgson's hawk-cuckoo குயில் முட்டை இடுவது கண்டறியப்பட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
In Internet Bird Collection
காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்
தென்கிழக்காசியப் பறவைகள்
தெற்காசியப் பறவைகள்
ஈ-பிடிப்பான்கள்
|
597424
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%9C%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D
|
நிக்கோலா ஜேக்சன்
|
நிக்கோலா கிளெயர் ஜேக்சன் (Nicola Clare Jackson) (பிறப்பு:19 பிப்ரவரி 1984) ஒரு பிரிட்டிசு முன்னாள் நீச்சல்போட்டி வீரர் ஆவார். அவர் ரிலே போட்டிகளில் இரண்டு உலக சாம்பியன்ஷிப்புகளை வென்றிருக்கிறார்.
நீச்சல் வாழ்க்கை
1999ஆவது ஆண்டில், 4 × 200 மீட்டர் சுதந்திரபாணி ரிலேயில் ஜேக்சன் உலகளவினாலான குறுகிய பாடநெறி சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அடுத்த ஆண்டு, சர்வதேச நீச்சல் கூட்டமைப்பின் (FINA) 2000வது ஆண்டுக்கான உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில் (25 மீ), அவர் 50 மீ வண்ணத்துப்பூச்சி போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும், [[பெரிய பிரித்தானியா]]வின் 4 × 200மீ. சுதந்திரபாணி ரிலே அணியின் ஒரு பகுதியாக தங்கப் பதக்கத்தையும் வென்றார். ஜேக்சன் 2000வது ஆண்டு [[சிட்னி]]யில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கு விளையாட்டில் நீச்சல் போட்டியில் பெரிய பிரித்தானியா 4 × 200மீ. சுதந்திரபாணி ரிலே அணியின் உறுப்பினராக நீந்தினார், அது ஆறாவது இடத்தைப் பிடித்தது. 2001இல் உலக நீர்வாழ் சாம்பியன்ஷிப் போட்டிகளின் 4 × 200 மீ. சுதந்திர ரிலேயில் நீண்ட பாடநெறி போட்டியில் அவர்களது குழுவினர் ஒரே சர்வதேச பதக்கத்தை வென்றனர்.
1999இல் இவர் தேசிய பிரிட்டிசு சாமபியன்ஷிப்பில் 50மீ. வண்ணத்துப்பூச்சி போட்டியில் வென்றார். ஜேக்சன் டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் (காலிங்வுட் கல்லூரி) படித்தார். நிக்கோலா பிரிட்டிஷ் நீச்சல் வீரர் ஜோவான் ஜேக்சனின் சகோதரி ஆவார்.
குறிப்பு
1984 பிறப்புகள்
|
597428
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81
|
செர்மான் அலி அகமது
|
செர்மான் அலி அகமது (Sherman Ali Ahmed) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இவர் உறுப்பினராக இருந்தார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்பர் தொகுதியில் அகில இந்திய ஐக்கிய சனநாயக முன்னணி வேட்பாளராக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக போட்டியிட்டு இதே தொகுதியில் இருந்து இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டில் கற்பழிப்பு பற்றி தொலைக்காட்சியில் இவர் தெரிவித்த கருத்துகள் குறித்து பெண்ணிய ஆர்வலர் சுமித்ரா அசாரிகா இவர் மீது முதல் தகவல் அறிக்கையை உருவாக்கினார்.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
அசாம் சட்டமன்ற உறுப்பினர்கள்
|
597429
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF
|
அனுசய் அப்பாசி
|
அனுசய் அப்பாசி (Anoushay Abbasi) என்பவர் ஒரு பாக்கித்தான் தொலைக்காட்சி நடிகையும் வடிவழகியும் ஆவார். இவர் தனது வாழ்க்கையை பாக்கித்தான் தொலைக்காட்சியில் குழந்தை கலைஞராக தொடங்கினார். மேரா சாயின் 2 (2012), மேரி சஹேலி மேரி ஹம்ஜோலி (2012), டூடே ஹுவே பெர் (2011), நன்ஹி (2013), பியாரே அப்சல் (2013), மலிகா-இ-அலியா (2014), பன்வார் (2014), மலிகா-இ-அலியா பாகம் 2 (2015), மேரே பாஸ் தும் ஹோ (2019), ரக்ஸ்-இ-பிஸ்மில் (2020), பெனாம் (2021) போன்ற தொலைக்காட்சி நாடகத் தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்
பாக்கித்தான் நடிகைகள்
1993 பிறப்புகள்
வாழும் நபர்கள்
|
597430
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
|
கால் நுனித் திண்டு
|
கால் நுனித் திண்டு (Pulvilli) என்பது பூச்சிகள் மற்றும் இதர கணுகாலிகளில் மென்மையான, பஞ்சு போன்ற பட்டை ஆகும். இது வீட்டு ஈ மற்றும் இக்சோடிட் உண்ணி போன்றவற்றில் காணப்படுகிறது. இவை நகங்களின் அடிப்பகுதியில் அமைந்துள்ளன (வலதுபுறத்தில் உள்ள படத்தில் #2).
கால் நுனித் திண்டு ஒரு ஒட்டு அமைப்பாகச் செயல்படுகிறது. இவற்றின் ஒட்டும் சக்தி ஓரளவு வான் டெர் வால்சு விசை மூலம் செயல்படுகிறது, மேலும் ஓரளவு பிசின் திரவத்திலிருந்து முனைகளில் மேற்பரப்புகளிலிருந்து ஒட்டும் பசையும் சுரக்கப்படுறது.
மேற்கோள்கள்
பூச்சியியல்
உடற்கூற்றியல்
|
597464
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
|
ஸ்ரீரங்கபட்டணா சட்டமன்றத் தொகுதி
|
ஸ்ரீரங்கபட்டணா சட்டமன்றத் தொகுதி (, ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மண்டியா மாவட்டத்தில் உள்ளது. மண்டியா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 190 ஆகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
குறிப்பு
மேற்கோள்கள்
கர்நாடக சட்டமன்றத் தொகுதிகள்
மண்டியா மாவட்டம்
|
597466
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%28%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%29
|
சஞ்சய் குமார் சிங் (பீகார்)
|
சஞ்சய் குமார் சிங் (Sanjay Kumar Singh) என்பவர் சஞ்சய் யாதவ் என்று அழைக்கப்படுகிறார். இவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இராச்டிரிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் 2015 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் இராச்டிரிய ஜனதா தள வேட்பாளராக கரகா சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
1977 பிறப்புகள்
பீகார் சட்டமன்ற உறுப்பினர்கள்
|
597467
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
|
மெக்ரன்கர்
|
மெக்ரன்கர் (Mehrangarh) என்பது இந்தியாவின் இராசத்தானில் உள்ள சோத்பூரில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோட்டையாகும். இது ஒரு மலை உச்சியில் அமைந்துள்ளாது. சுற்றியுள்ள சமவெளிகளில் இருந்து சுமார் 122 மீட்டர் உயரத்தில் உள்ளது. வளாகம் 1,200 ஏக்கர் (486 எக்டேர்) பரப்பளவில் பரவியுள்ளது. இது ஆரம்பத்தில் 1459 ஆம் ஆண்டு ராத்தோர் குலத்தின் ராஜபுத்திர ஆட்சியாளரான ராவ் ஜோதாவால் கட்டப்பட்டது. இருப்பினும் தற்போதுள்ள கட்டமைப்புகளில் பெரும்பாலானவை 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. 1806 ஆம் ஆண்டில் ஜெய்ப்பூர் மற்றும் பிகானேர் படைகளை வென்றதன் நினைவாக மகாராஜா மான் சிங்கால் கட்டப்பட்ட பிரதான நுழைவாயில் ஜெய் போல் ('வெற்றி வாயில்' என்று பொருள்படும்) உள்ளிட்ட ஏழு வாயில்கள் கோட்டையில் உள்ளன. பத்தேபோல் என்றா வாயில் முகலாயர்களுக்கு எதிரான மகாராஜா அஜித் சிங் வெற்றியை நினைவுகூறுகிறது.
இதன் எல்லைகளுக்குள், பல அரண்மனைகள், அவற்றின் சிக்கலான சிற்பங்கள் மற்றும் விரிவான முற்றங்கள், சாமுண்டி கோயில் மற்றும் பல்வேறு நினைவுச்சின்னங்களை வைத்திருக்கும் அருங்காட்சியகம் ஆகியவற்றைக் காணலாம். ஒரு வளைந்த சாலை கீழே நகரத்திற்குச் செல்கிறது. ஜெய்ப்பூரின் படைகளைத் தாக்கிய பீரங்கி குண்டுகளின் அடையாளங்கள் இன்றும் இரண்டாவது வாயிலில் காணப்படுகின்றன. கோட்டையின் வடகிழக்கில் கிரத் சிங் சோதாவின் கல்லறை மாடம் உள்ளது, அவர் மெக்ரன்கரைக் காக்கும் போரில் இறந்தார்.
உலக புனித ஆவி விழா மற்றும் இராசசுதான் சர்வதேச நாட்டுப்புறக் கலைத் திருவிழா ஆகிய விழாக்கள் இங்கு நடைபெறும் குறிப்பிடத்தக்க திருவிழாக்களில் சில.
சொற்பிறப்பியல்
மெக்ரன்கரின் சொற்பிறப்பியல் சமசுகிருத வார்த்தைகளான 'மிகிர்' (சூரியன் என்று பொருள்) மற்றும் 'கர்' (கோட்டை என்று பொருள்) ஆகியவற்றில் வேரூன்றியுள்ளது. இந்த கோட்டைக்கு மிகிர்கர் என்று பெயரிடப்பட்டது. அதாவது 'சூரியனின் கோட்டை' - இது ஆளும் குலமான ரத்தோர் வம்சத்தின் குலதெய்வமான சூரியனிடமிருந்து புராண வம்சாவளியைக் குறிக்கிறது. ஒலிப்பு ரீதியாக இது இராசத்தானி மொழியில் 'மிகிர்கர்' என்பதிலிருந்து 'மெக்ரன்கர்' ஆக உருவானது.
சுற்றுலா ஈர்ப்புகள்
தேசிய புவியியல் நினைவுச்சின்னம்
ஜோத்பூர் குழுமம் - மலானி இக்னீயஸ் சூட் காண்டாக்ட் மீது கோட்டை கட்டப்பட்டுள்ளது. நாட்டில் புவி சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்திய புவியியல் ஆய்வு மையத்தால் தேசிய புவியியல் நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான புவியியல் அம்சம் 43,500கிமீ 2 பரப்பளவில் பரவியுள்ள தார் பாலைவனப் பகுதியில் காணப்படும் மலானி இக்னீயஸ் சூட்டின் ஒரு பகுதியாகும். இந்த தனித்துவமான புவியியல் அம்சம் இந்திய துணைக்கண்டத்தில் பிரீகாம்ப்ரியன் யுகத்தின் (பூமி வரலாற்றின் ஆரம்பகால பகுதி) கடைசி கட்டத்தை குறிக்கிறது.
சாமுண்டி கோயில்
சாமுண்டி ராவ் ஜோதாவின் விருப்பமான தெய்வமாகும். அவர் 1460 இல் பழைய தலைநகரான மாண்டூரிலிருந்து இச்சிலையைக் கொண்டு வந்து கோட்டையில் நிறுவினார். சாமுண்டி அரச குடும்பத்தின் குலதெய்வமாகும். மேலும் சோத்பூரின் பெரும்பாலான குடிமக்களால் வழிபடப்படுகிறார். விஜயதசமி கொண்டாட்டங்களின் போது மக்கள் கூட்டம் மெக்ரன்கரில் திரளும்.
ராவ் ஜோதா பாலைவனப் பாறை பூங்கா
ராவ் ஜோதா பாலைவனப் பாறைப் பூங்கா, மெக்ரன்கர் கோட்டையை ஒட்டி 72 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. பூங்காவில் சுற்றுச்சூழல் ரீதியாக மீட்டெடுக்கப்பட்ட பாலைவனம் மற்றும் வறண்ட நில தாவரங்கள் உள்ளன. இந்த பூங்கா 2006 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு, கோட்டையை ஒட்டிய மற்றும் கீழே உள்ள ஒரு பெரிய, பாறைப் பகுதியின் இயற்கை சூழலை மீட்டெடுக்க முயற்சி செய்து, பிப்ரவரி 2011 இல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் தனித்துவமான எரிமலை பாறைகள் மற்றும் மணற்கல் அமைப்புகளைக் கொண்டுள்ளது.
2008 நெரிசல்
30 செப்டம்பர் 2008 அன்று, கோட்டையின் உள்ளே உள்ள சாமுண்டி தேவி கோயிலில் ஒரு மனித நெரிசல் ஏற்பட்டது. இதில் 249 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கலாச்சாரம்
கோட்டையின் நுழைவாயிலில் நாட்டுப்புற இசையை இசைக்கும் இசைக்கலைஞர்கள் உள்ளனர். அருங்காட்சியகம், உணவகங்கள், கண்காட்சிகள் மற்றும் கைவினைப் பொருட்கள் சந்தையும் கொண்டுள்ளது. டிஸ்னி என்ற திரைப்பட நிறுவனம் 1994இல் வெளியிட்ட தி ஜங்கிள் புக் மற்றும் 2012 ஆம் ஆண்டு வெளியான த டார்க் நைட் ரைசஸ் போன்ற திரைப்படங்களின் படப்பிடிப்பு இந்த கோட்டையில் நடைபெற்றது. இம்ரான் ஹாஷ்மி நடித்த அவரப்பன் படமும் இங்கு படமாக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில், இஸ்ரேலிய இசையமைப்பாளர் சை பென் துசூர், ஆங்கில இசையமைப்பாளர் மற்றும் கித்தார் கலைஞர் ஜானி கிரீன்வுட் மற்றும் ரேடியோஹெட் தயாரிப்பாளர் நைகல் கோட்ரிச் உள்ளிட்ட இசைக்கலைஞர்களின் கூட்டு இசைத் தொகுப்பை இங்கு பதிவு செய்தனர். இந்த பதிவு அமெரிக்க இயக்குனர் பால் தாமஸ் ஆண்டர்சனின் ஜுனுன் என்ற ஆவணப்படத்தின் பொருளாக இருந்தது. மார்ச் 2018 இல், பாலிவுட் படமான தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தானின் படக் குழுவினர் கோட்டையைப் பயன்படுத்தினர்; நடிகர் அமிதாப் பச்சன் தனது அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் தனது அனுபவத்தைப் பற்றிய ஒரு பிரதிபலிப்பு இடுகையை விட்டுவிட்டார்.
மேற்கோள்கள்
மேலும் படிக்க
SuryanagariJodhpur by Prem Bhandari
Maharaja Umaid Singhji by Prem Bhandari
Paintings from the royal collection of the Mehrangarh Museum Trust, Jodhpur பிரித்தானிய அருங்காட்சியகம்
வெளி இணைப்புகள்
இராஜஸ்தான் கோட்டைகள்
|
597470
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D
|
தினகா் ராம்
|
தினகர் ராம் (Dinkar Ram)(பிறப்பு 1947) பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மற்றும் பீகார் சட்டமன்ற மேனாள் உறுப்பினர் ஆவார். பிப்., 2005ல் முதல் முறையாகவும், 2005 அக்டோபரிலும் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் பத்னாகா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 2015 பீகார் சட்டமன்றத் தேர்தலில் சுமார் 21000 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் சுரேந்திர ராமைத் தோற்கடித்தார்.
மேற்கோள்கள்
1947 பிறப்புகள்
வாழும் நபர்கள்
பீகார் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்கள்
|
597471
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D
|
தனி ராம் சத்ரிக்
|
தனி ராம் சத்ரிக் (4 அக்டோபர் 1876 - 18 டிசம்பர் 1954) ஒரு இந்திய கவிஞரும் அச்சுக்கலைஞரும் ஆவார்.
நவீன பஞ்சாபி கவிதையின் முன்னோடிகளில் ஒருவராக அவர் கருதப்படுகிறார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் பஞ்சாபி கலாச்சாரம், மொழி மற்றும் புத்தகவெளியீடுகளை மேம்படுத்தினார். 1926இல், பஞ்சாபி இலக்கிய சங்கமான பஞ்சாபி சாஹித்து சபாவின் தலைவர் ஆனார்.
ஆரம்பகால வாழ்க்கை
அவர் தற்பொழுது பாகிஸ்தானில் உள்ள சேய்க்குபுரா மாவட்டத்தில் பாசியன்-வாலா கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை போஹு லால் சாதரணமான ஒரு கடைக்காரராக இருந்தார். அவரது தந்தை வேலை தேடி லோபோக்கு கிராமத்துக்கு சென்றார். தந்தையால் அவருக்கு குர்முகி மற்றும் உருது எழுத்துக்கள் கற்பிக்கப்பட்டன. தனி ராமுக்கு [[வனப்பெழுத்து|வனப்பெழுத்தில்]] ஈடுபாடு அதிகமாகவே, அவர் குர்முகி அச்சுக்கலை கற்க பம்பாய் சென்றார். பிறப்பால் இந்துவாக இருப்பினும், அக்காலத்தின் பிரபல பஞ்சாபி கவிஞரான வீர் சிங்குடன் தொடர்பு கொண்ட பிறகு அவர் சீக்கியமத நம்பிக்கையின் அபிமானி ஆனார். இந்த சந்திப்பை தொடர்ந்து அவர் பஞ்சாபிமொழி வசனங்களை எழுதத் தான் தூண்டப்பட்டதை உணர்ந்தார்.
நூல் பட்டியலின் ஒரு பகுதி
புலாம் தீ தோக்கரி (1904)
பர்த்தரிஹரி (1905)
நள-தமயதி (1906)
தர்மவீர் (1912)
சந்தன்வாடி (1931)
கேசர் கியாரி (1940)
நவாம் ஜஹாம் (1942)
நூர் ஜஹான் பாட்ஷாபேகம் (1944)
சூஃபிகானா (1950)
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
https://apnaorg.com/translations/chatrik/ வட அமெரிக்க கலைக்கூடத்தால் பிரசுரிக்கப்பட்ட தனி ராம் சத்திரிக்கின் மெலே விட்ச் ஜாட் என்ற கவிதையின் ஆங்கில ஒலிபெயர்ப்பு
பஞ்சாப் நபர்கள்
1954 இறப்புகள்
1876 பிறப்புகள்
|
597473
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE
|
ராவ் ஜோதா பாலைவனப் பாறை பூங்கா
|
ராவ் ஜோதா பாலைவனப் பாறைப் பூங்கா (Rao Jodha Desert Rock Park) இந்தியாவின் இராசத்தானிலுள்ள சோத்பூரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மெக்ரன்கர் கோட்டைக்கு அருகில் 72 எக்டேர் பரப்பளவில் பரவியுள்ளது. பூங்காவில் சுற்றுச்சூழல் ரீதியாக மீட்டெடுக்கப்பட்ட பாலைவனம் மற்றும் வறண்ட நில தாவரங்கள் உள்ளன. கோட்டையை ஒட்டிய மற்றும் கீழே உள்ள ஒரு பெரிய பாறைப் பகுதியின் இயற்கை சூழலை மீட்டெடுக்க முயற்சிப்பதற்காக இந்த பூங்கா 2006 இல் உருவாக்கப்பட்டது. இது பிப்ரவரி 2011 இல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் தனித்துவமான எரிமலை பாறைகள் மற்றும் மணற்கல் அமைப்புகளைக் கொண்டுள்ளது. சுமார் 880 மீ முதல் 1115 மீ வரையிலான நான்கு பாதைகளில் (மஞ்சள், பச்சை, சிவப்பு மற்றும் நீலப் பாதைகள்), பார்வையாளர்கள் செல்லலாம். பயிற்சி பெற்ற வழிகாட்டிகளும், இயற்கை ஆர்வலர்களும் இங்கு உள்ளனர்.
ஜோத்பூர் தேசிய புவியியல் நினைவுச்சின்னம்
இங்குள்ள ஜோத்பூர் சாம்பல் பாறைகள் இந்தியாவின் தேசிய புவியியல் நினைவுச்சின்னமாக இந்திய புவியியல் ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது, அவற்றின் பாதுகாப்பு, பராமரிப்பு, மேம்பாடு மற்றும் புவிச் சுற்றுலாவை மேம்படுத்துகிறது. ராவ் ஜோதா பாலைவனப் பாறை பூங்காவில் உள்ள எரிமலை பாறைகள் 745 முதல் 680 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எங்கோ உருவானது. பூங்காவின் வழியாக ஒரு பள்ளம் செல்கிறது (வடக்கில் உள்ள ஒரு பரந்த நீர்ப்பிடிப்பிலிருந்து கோட்டையின் அடிவாரத்தில் உள்ள பதம்சர் ஏரிக்கு மழைநீரை எடுத்துச் செல்ல ஒரு பழைய ஆழ்குழாய் அல்லது கால்வாய்). இங்கு உடைந்த பாறையாலான கனிமத்துண்டுகள் காணப்படுகிறது. பெரிய மற்றும் இடைநிலை படிக அளவுகள் கொண்ட பாறைகள் மற்றும் நன்றாக கடினமான பாறைகள் முதல் பெரிய தானிய ரியோலைட் வரை காணப்படுகின்றன.
தாவர மற்றும் விலங்கு வாழ்க்கை
பூங்காவில் சுமார் 250 வகையான பூர்வீக தாவரங்கள் உள்ளன. இதில் ஏராளமான வறண்ட பகுதி பாறைவாழ்தாவரங்கள் உள்ளன. உகாய், வெள்ளெருக்கு போன்ற சில பொதுவான தாவரங்களும் காணப்படுகின்றன.
இந்த பூங்காவில் பல ஊர்வன இனங்களும், 200 க்கும் மேற்பட்ட பறவை இனங்களும் உள்ளன. பறவைகாணல் நிகழ்வுகளைப் பதிவு செய்து அதை இணையத்தில் காணும் ஈபேர்டு திட்டமும் உள்ளது. பாலூட்டிகளில் நாய்கள், இந்திய முகடு முள்ளம்பன்றி மற்றும் வடக்கு அல்லது ஐந்து-கோடுகள் கொண்ட பனை அணில் ஆகியவை அடங்கும்.
மேற்கோள்கள்
ஜோத்பூர் மாவட்டம்
இராஜஸ்தான் வரலாறு
|
597474
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D
|
தரில் மிட்செல்
|
தரில் யோசப் மிட்செல் (Daryl Joseph Mitchell, பிறப்பு: 20 மே 1991) நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் நியூசிலாந்து அணிக்காக பல்துறைகளிலும் விளையாடி வருகிறார். இவர் உள்ளூரில் கேன்டர்பரி துடுப்பாட்ட அணியில் விளையாடுகிறார்.
200 இற்கும் அதிகமான உள்ளூர் போட்டிகளில் பங்குபற்றிய மிட்செல், 2019 இல் பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். 2022 பெப்ரவரியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2022 இந்தியன் பிரீமியர் லீக் சுற்றில் விளையாட இவரை ஏலத்தில் வாங்கியது.
பன்னாட்டுப் போட்டிகள்
2019 சனவரியில், மிட்செல் நியூசிலாந்தின் பன்னாட்டு இருபது20 அணியில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாட இணைக்கப்பட்டார். தனது முதலாவது இ20ப போட்டியை இந்தியாவுக்கு எதிராக 2019 பெப்ரவரி 6 அன்று விளையாடினார். 2019 நவம்பரில்,தேர்வு அணியில் இங்கிலாந்துக்கு எதிரான சுற்றில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது 1-ஆவது தேர்வுப் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக 2019 நவம்பர் 19 இல் விளையாடினார்.
சிறப்புகள்
அபுதாபியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான பரபரப்பான அரையிறுதி மோதலின் முக்கியமான தருணத்தின் போது, இங்கிலாந்து பந்துவீச்சாளர் அடில் ரசீத்தை அவர் வழியில் தடுத்ததை உணர்ந்த பிறகு, ஒரு ஓட்டம் கூட ஓடக்கூடாது என்ற மிட்செல் எடுத்த முடிவுக்காக, 2021 ஐசிசி விருதுகளின் போது ஐசிசி துடுப்பாட்ட உணர்வு விருதை வென்றவராக இவர் பெயரிடப்பட்டார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
1991 பிறப்புகள்
வாழும் நபர்கள்
மிடில்செக்ஸ் துடுப்பாட்டக்காரர்கள்
நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்கள்
விசுடென் துடுப்பாட்டக்காரர்கள்
|
597477
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
|
கிருஷ்ணராஜபேட்டே சட்டமன்றத் தொகுதி
|
கிருஷ்ணராஜபேட்டே சட்டமன்றத் தொகுதி (, ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மண்டியா மாவட்டத்தில் உள்ளது. மண்டியா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 192 ஆகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
குறிப்பு
மேற்கோள்கள்
கர்நாடக சட்டமன்றத் தொகுதிகள்
மண்டியா மாவட்டம்
|
597478
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE
|
சாகி லால் தேரா
|
சாகி லால் தேரா (Shahi Lal Dera) (சிவப்பு கூடாரம், அரச சிவப்பு கூடாரம்), என்பது ஒரு ஏகாதிபத்திய முகலாயக் கூடாரமாகும். இது ஐந்தாவது முகலாயப் பேரரசர் ஷாஜகானுக்கு சொந்தமான துணி அமைப்பாகும். இக்கூடாரம் நகரக்கூடிய அரண்மனையாக இருந்தது.
அம்சங்கள்
இது ஒரு முகலாய கூடாரத்தின் எஞ்சியிருக்கும் ஒரே உதாரணம். 17 ஆம் நூற்றாண்டின் முகாம் சோத்பூரில் உள்ள மெக்ரன்கரின் அரச சேகரிப்பின் ஒரு பகுதியாகும். இதன் அரச நிலை சிவப்பு நிறத்தில் பிரதிபலிக்கிறது. மேலே உள்ள கிரீடம். சிவப்புத் துணி முழுக்க முழுக்க பட்டு, வெல்வெட் மற்றும் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அழகான சித்திரத்தையல் மற்றும் புரோகேட் வடிவங்களைக் கொண்டுள்ளது. கூடாரத்தில் முகலாயப் பேரரசரின் சிம்மாசனத்திற்கான அழகான பலகைகள் உள்ளன. அத்துடன் மடல் கொண்ட வளைவுகளும் ஒரு உள் அறையும் உள்ளது . கூடாரத்தில் நான்கு மீட்டர் உயர உச்சி உள்ளது. இது இரட்டை அடுக்கு பேருந்துடன் ஒப்பிடத்தக்கது.
அபுல்-ஃபஸ்ல் இபின் முபாரக், முகலாயப் பேரரசர்களின் துணிகள், ஆயுதங்கள் மற்றும் கூடாரங்களைப் பற்றி ஐன்-இ-அக்பரியில் விரிவாக விவரித்துள்ளார்.
சீரமைப்பு
2017 ஆம் ஆண்டு முதல் இதை சுத்தப்படுத்தி பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதனையும் காண்க
முகலாயக் கட்டிடக்கலை
மேற்கோள்கள்
இந்திய வரலாறு
முகலாயப் பேரரசு
|
597479
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D
|
பிஸ்ராம்
|
பிஸ்ராம் (1907-1950) ஒரு இந்திய போச்புரி மொழி எழுத்தாளர், பாடகர் மற்றும் கவிஞர் ஆவார், அவர் பிரஹா கவிதைகளுக்கு பெயர் பெற்றவர்.
வாழ்க்கை
இவர் 1907ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் ஆசம்கர் அருகே உள்ள சியாராம்பூர் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை பெயர் விபூதி ராய். ஆரம்ப கல்வியை முடித்ததும் விவசாயத்தில் தந்தைக்கு உதவ துவங்கினார். அதேநேரத்தில் தான் இவர் பிரஹாவை கற்றுக்கொண்டார். இவர் 1925இல் திருமணம் புரிந்து கொண்டார். இவரது மனைவி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நிமோனியா காய்ச்சலால் இறந்தார். இந்த சம்பவத்துக்குப் பிறகு இவர் தனிமையில் வாழத் தொடங்கினார், தனிமையில் பாடத் தொடங்கினார், மற்றும் இவரது இதயத்தை அமைதிப்படுத்த பிரஹா எழுதத் தொடங்கினார். பின்னர், கலவரங்களில்க் கூட பாடல்களை பாடத்துவங்கவே, இவர் ஆசம்கர் மாவட்டத்தில் புகழ் பெற்றார். இவர் 1950இல் திசு தடிமனாதல் காரணமாக இறந்தார்.
குறிப்புகள்
1950 இறப்புகள்
1907 பிறப்புகள்
|
597480
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
|
தத்தனூர் கிழக்கு
|
தத்தனூர் கிழக்கு (Thathanur East) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
மக்கள்தொகை
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தத்தனூரில் (கிழக்கு) 2144 ஆண்கள் மற்றும் 2065 பெண்கள் என மொத்தம் 4029 பேர் உள்ளனர்.
மேற்கோள்கள்
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
|
597481
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
|
தத்தனூர் மேற்கு
|
தத்தனூர் மேற்கு (Thathanur West) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
மக்கள்தொகை
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தத்தனூரில் (மேற்கு) 2002 ஆண்கள் மற்றும் 2055 பெண்கள் என மொத்தம் 4057 பேர் உள்ளனர்.
மேற்கோள்கள்
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
|
597482
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
|
சிலம்பூர் வடக்கு
|
சிலம்பூர் வடக்கு என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
மக்கள்தொகை
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சிலம்பூரில் (வடக்கு) 666 ஆண்கள் மற்றும் 643 பெண்கள் என மொத்தம் 1309 பேர் இருந்தனர்.
மேற்கோள்கள்
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
|
597483
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
|
சிலம்பூர் தெற்கு
|
சிலம்பூர் தெற்கு (Silumbur South) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
மக்கள்தொகை
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சிலம்பூரில் (தெற்கு) 1340 ஆண்கள் மற்றும் 1320 பெண்கள் என மொத்தம் 2660 பேர் இருந்தனர்.
மேற்கோள்கள்
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
|
597484
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF.%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE
|
வி. சுப்ரமணிய சர்மா
|
வி. சுப்பிரமணிய சர்மா, கேரள நாட்டுப்புறவியல் கலைக்கூடத்தின் ஆய்வு உதவித்தொகை பெற்ற கேரள நாட்டுப்புற கலையான பத்திரகாளி தீயாட்டுக் கலைஞர் ஆவார். இவர் கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலத்தை சேர்ந்தவர். இவர், அறுபது ஆண்டுகளாக பத்திரகாளி தீயாட்டு கலையை நிகழ்த்தி வருகிறார்.
விருதுகள்
2012 கேரள நாட்டுப்புறவியல் கலைக்கூடத்தின் ஆய்வு உதவித்தொகை
மேற்கோள்கள்
மலையாள நபர்கள்
நாட்டுப்புற நடனக் கலைஞர்கள்
|
597485
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88
|
கீழமாளிகை
|
கீழமாளிகை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
மக்கள்தொகை
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கீழமாளிகையில் 1,484 ஆண்கள் மற்றும் 1,534 பெண்கள் என மொத்தம் 3,019 பேர் இருந்தனர்.
மேற்கோள்கள்
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
|
597487
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
|
கோடாலிகருப்பூர்
|
கோடாலிகருப்பூர் (Kodalikaruppur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா. பழுவூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
மக்கள்தொகை
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கோடாலிகருப்பூர் கிராமத்தில் 1570 ஆண்கள் மற்றும் 1658 பெண்கள் என மொத்தம் 3228 பேர் இருந்தனர்.
மேற்கோள்கள்
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
|
597493
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
|
உதயநத்தம் மேற்கு
|
உதயநத்தம் மேற்கு (Udayanatham West) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
மக்கள்தொகை
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, உதயநத்தம் (மேற்கு) 1937 ஆண்கள் மற்றும் 1931 பெண்கள் என மொத்தம் 3868 பேர் இருந்தனர்.
மேற்கோள்கள்
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
|
597497
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF.%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D
|
வி. பல்ராம்
|
வி. பல்ராம் (V. Balram) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.
வி. பலராம் என்ற பெயராலும் இவர் அழைக்கப்பட்டார். மேலும் இவர் ஒரு வழக்கறிஞர் என்றும் கேரளாவைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதி என்றும் அறியப்படுகிறார். கேரளப் பிரதேச காங்கிரசு கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். 1996 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் வடக்கஞ்சேரியில் இருந்து கேரள சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வாழ்க்கைக் குறிப்பு
டி. ராமன் நாயர் மற்றும் வெள்ளூர் சின்னம்மு அம்மா தம்பதியருக்கு 1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று பல்ராம் பிறந்தார். கேரளப் பிரதேச காங்கிரசு கமிட்டியின் பொதுச் செயலாளராக இருந்தார்.
1996 ஆம் ஆண்டு வடக்கஞ்சேரி தொகுதியில் போட்டியிட்டு கேரள சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டில் மீண்டும் இதே தொகுதியில் வென்று தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகினார். கே. முரளீதரன் இவரது சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். 2004 ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் பல்ராம் போட்டியிட்டார். இருவரும் அத்தேர்தலில் தோல்வியடைந்தனர்.
பல்ராம் காஞ்சனமாலாவை மணந்து கொண்டார். இவர்களுக்கு தீபா , லட்சுமி என்று இரண்டு மகள்கள் பிறந்தனர்.
பல்ராம் 18 ஜனவரி 2020 ஆம் ஆண்டு சனவரி மாதம் 18 ஆம் தேதியன்று தனது 72 ஆவது வயதில் காலமானார்
மேற்கோள்கள்
இந்திய வழக்கறிஞர்கள்
திருச்சூர் மாவட்ட நபர்கள்
2020 இறப்புகள்
1947 பிறப்புகள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
|
597505
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D
|
தலேக்குன்னில் பசீர்
|
தலேக்குனில் பசீர் (Thalekunnil Basheer) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1945 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 7 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். பசீர் முதன்முதலில் 1977 ஆம் ஆண்டு கசகூட்டம் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலில் நுழைந்தார். காங்கிரசு கட்சி ஏ.கே.ஆண்டனியை முதலமைச்சராக நியமித்த பிறகு, பசீர் தனது பதவியை துறந்து ஆண்டனியை சட்டசபைக்கு போட்டியிட அனுமதித்தார். பசீர் 1977 ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரையும் 1979 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரையிலும் மாநிலங்களவை உறுப்பினராகவும், 1984 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரையும் 1989 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரையிலும் சிராயன்கீழு மக்களவைத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவை உறுப்பினராகவும் இருந்தார். பின்னர் இவர் திருவனந்தபுரம் மாவட்ட காங்கிரசு கட்சித் தலைவராகவும், கட்சி பொதுச் செயலாளராகவும், கேரள பிரதேச காங்கிரசு கட்சியின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
பசீர் மலையாள நடிகர் பிரேம் நசீரின் மைத்துனர் என்று அறியப்படுகிறார். நசீரின் தங்கையான சுக்ராவை இவர் மணந்தார்.
பசீர் மார்ச் 25, 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 25 ஆம் தேதியன்று தனது 77 ஆவது வயதில் வெம்பாயத்தில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பால் காலமானார்
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
9வது மக்களவை உறுப்பினர்கள்
8வது மக்களவை உறுப்பினர்கள்
மலையாள அரசியல்வாதிகள்
2022 இறப்புகள்
1945 பிறப்புகள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
|
597506
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D
|
முதுகலை மலையாளம்
|
முதுகலை மலையாளம் (M. A. Malayalam) என்பது மலையாள மொழியில் வழங்கப்படும் முதுநிலை பட்டப்படிப்பு ஆகும்.
பல்கலைக்கழகங்கள்
முதுகலை மலையாளம் பட்டம் வழங்கும் பல்கலைக்கழகங்கள்:
கோழிக்கோடு பல்கலைக்கழகம்
கேரளா பல்கலைக்கழகம்
கண்ணூர் பல்கலைக்கழகம்
மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்
ஸ்ரீ சங்கராச்சாரியா சமசுகிருத பல்கலைக்கழகம்
துஞ்சத்து எழுத்தச்சன் மலையாள பல்கலைக்கழகம்
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை
திராவிட பல்கலைக்கழகம், குப்பம்
சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை
மேற்கோள்கள்
மொழிக் கல்வி
|
597507
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE
|
ஐய்யுன்னி சாலக்கா
|
சி. ஆர். ஐயுன்னி (Iyyunni Chalakka) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருச்சூரைச் சேர்ந்த ஓர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி அரசியல்வாதியாவார். 1952 முதல் 1957 ஆம் ஆண்டு வரை திருவிதாங்கூர்-கொச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
ஐயுன்னி சாலக்கா 1890 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி இராப்பாய் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். திருச்சூரில் உள்ள சிஎம்எசு உயர்நிலைப் பள்ளி, எர்ணாகுளம் மகாராசா கல்லூரி, மெட்ராசு கிறித்தவக் கல்லூரி, திருவனந்தபுரம் சட்டக் கல்லூரி ஆகியவற்றில் இவர் கல்வி பயின்றார்.
அரசியல் வாழ்க்கை
வட்டாரத்தில் காங்கிரசு கட்சி சார் நடவடிக்கைகளுடன் திருச்சூரில் வழக்கறிஞராக பணியாற்றினார். கத்தோலிக்க சிரியன் வங்கி , மலபார் வங்கி, கொச்சின் ரிசர்வ் வங்கி, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் வங்கி ஆணையம் போன்ற வங்கி நிறுவனங்களை மேம்படுத்துவதில் இவர் ஆற்றிய பங்கிற்காக புகழ் பெற்றார். திருச்சூர் நகராட்சித் தலைவர், திருச்சூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர், சிவில் உரிமை சங்கத் தலைவர், நிர்வாகக் குழுத் தலைவர், இந்தோ-மெர்கண்டைல் வங்கி, கொச்சி மாநில வருவாய்த் துறை அமைச்சர், கேரள பிரதேச காங்கிரசு கட்சி உறுப்பினர், கொச்சி மாவட்ட காங்கிரசு கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வாரியம் மற்றும் திருவிதாங்கூர்-கொச்சி மாநில மக்கள் தொடர்புக் குழு உறுப்பினர் போன்ற பிற பதவிகளையும் வகித்துள்ளார்.
இறப்பு
ஐயுன்னி 1961 ஆம் ஆண்டு சனவரி மாதம் 21 ஆம் தேதியன்று இறந்தார்.
மேற்கோள்கள்
1961 இறப்புகள்
1ஆவது மக்களவை உறுப்பினர்கள்
1890 பிறப்புகள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
|
597508
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BE
|
ஜஸ்வந்த் தடா
|
ஜஸ்வந்த் தடா (Jaswant Thada) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலுள்ள சோத்பூரில் அமைந்துள்ள ஒரு கல்லறை ஆகும். இது சோத்பூர் மாநிலத்தின் மகாராஜா சர்தார் சிங் என்பவரால் 1899 ஆம் ஆண்டு அவரது தந்தை மகாராஜா இரண்டாம் ஜஸ்வந்த் சிங் நினைவாக கட்டப்பட்டது. மேலும் இது மார்வாரின் அரச ராஜ்புத்திர குடும்பத்திற்கு தகனம் செய்யும் இடமாக செயல்பட்டது.
மக்ரானா பளிங்குக் கற்களால் கல்லறை கட்டப்பட்டுள்ளது. இந்த கற்கள் மிகவும் மெல்லியதாகவும், மெருகூட்டப்பட்டதாகவும் இருப்பதால், சூரிய ஒளியில் அவை ஒரு சூடான பிரகாசத்தை வெளியிடுகின்றன.
கல்லறையின் மைதானம் செதுக்கப்பட்ட ஒரு கூடாரம், ஒரு அடுக்கு தோட்டம் மற்றும் ஒரு சிறிய ஏரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மைதானத்தில் மேலும் மூன்று கல்லறைகள் உள்ளன. மகாராஜா ஜஸ்வந்த் சிங்கின் கல்லறை . சோத்பூர் ஆட்சியாளர்களின் அரிய உருவப்படங்களும் ஜஸ்வந்த் தடாவில் காணப்படுகின்றன.
புகைப்படங்கள்
சான்றுகள்
*
வெளி இணைப்புகள்
Jaswant Thada – A beautiful memorial in Jodhour
இராஜஸ்தான் வரலாறு
|
597509
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%A4%20%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE
|
குயின்டா த ரிகலெய்ரா
|
குயின்டா த ரிகலெய்ரா (Quinta da Regaleira) என்பது போர்த்துகல்லின் சிண்ட்ரா வரலாற்று மையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு தோட்டமாகும். இது யுனெஸ்கோவால் "சிண்ட்ராவின் கலாச்சார நிலப்பரப்பில்" உலக பாரம்பரிய தளமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. குயின்டா டோ ரெலோஜியோ, பெனா தேசிய அரண்மனை, மான்செரேட் மற்றும் செட்டாய்ஸ் அரண்மனைகள் போன்ற இப்பகுதியில் உள்ள மற்ற அரண்மனைகளுடன், இது சிண்ட்ராவின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த சொத்து ஒரு காதல் அரண்மனை , தேவாலயம், ஏரிகள், கோட்டைகள், கிணறுகள், சாய்வு அமர்வுகள், நீரூற்றுகள் மற்றும் பரந்த அளவிலான நேர்த்தியான கட்டுமானங்களைக் கொண்ட ஒரு ஆடம்பரமான பூங்காவைக் கொண்டுள்ளது. இந்த அரண்மனை "தி பேலஸ் ஆஃப் மான்டீரோ தி மில்லியனர்" என்றும் அழைக்கப்படுகிறது. இது அதன் சிறந்த முன்னாள் உரிமையாளரான அன்டோனியோ அகஸ்டோ கார்வால்ஹோ மான்டீரோவின் புனைப்பெயரை அடிப்படையாகக் கொண்டது. இந்த அரண்மனை இத்தாலிய கட்டிடக் கலைஞர் லூய்கி மனினியால் வடிவமைக்கப்பட்டது.
இதனையும் காண்க
பெனா தேசிய அரண்மனை
சான்றுகள்
Portuguese Association for Investigation
"Rotas & Destinos" magazine
Quinta da Regaleira: Sintra Portugal. Fundação Cultursintra
Anes, José Manuel (1998, interviewed by Victor Mendanha). O Esoterismo da Quinta da Regaleira. Lisbon: Hugin
Anes, José Manuel (2005). Os Jardins Iniciáticos da Quinta da Regaleira. Lisbon: Ed. Ésquilo
Adrião, Vitor Manuel (2006). Quinta da Regaleira: A Mansão Filosofal de Sintra. Lisbon: Via Occidentalis Editora
Veigas, Ana Sofia Fernandes (2007), Para uma Antropologia do Símbolo Estético: o paradigma da Quinta da Regaleira, Lisbon, Faculdade de Letras da Universidade de Lisboa
வெளி இணைப்புகள்
Quinta da Regaleira homepage
Portuguese Institute for the Architectonic Heritage (Portuguese)
Antonio Augusto Carvalho Monteiro-Um Naturalista Pioneiro (Portuguese)
போர்த்துகல்
|
597510
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE
|
தேரா
|
தேரா (Tera), மேற்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள அப்தசா வருவாய் வட்டட்த்தில் அமைந்த வரலாற்று சிறப்புமிக்க கிராமம் ஆகும்.இக்கிராமம் கட்ச் மாவட்டத்தின் தலைமையிடமான புஜ் 84 கிலோ மீட்டர் தொலைவிலும், தாலுகா தலைமையாக நல்லியாவிற்கு 13 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இக்கிராமம் சமணர்களின் புனிதத் தலமாக உள்ளது. இது மாநில நெடுஞ்சாலை எண் 49 மீது அமைந்துள்ளது. தேரா கிராமம் இந்தியாவின் முதல் பாரம்பரிய கிராமம் ஆகும்.
வரலாறு
கட்ச் இராச்சிய மன்னர் பிராக்மல்ஜி, அவரது சகோதரர் ஹமீர்ஜி தேரா கிராமம் உள்ளிட்ட 36 கிராமங்களை ஜாகீராக வழங்கினார். தேரா கோட்டையின் சுவர்கள் 1819ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சேதமடைந்தன.
தற்போதைய நிலை
தேரா கிராமத்தினர் தற்போது வேளாண்மை மற்றும் கைவினைக் கலைஞர்களாக உள்ளனர். இக்கிராமம் சுற்றுலா மற்றும் சமணர்களின் புனிதத் தலமாக உள்ளது. ஆண்டுதோறும் 50,000 சமணர்கள் இக்கிராமத்திற்கு வருகை புரிகின்றனர்.
இந்திய அரசு தேரா கிராமத்தை இந்தியாவின் முதல் பாரம்பரியக் கிராமமாக அறிவித்தது.
தேரா கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல வகையாக காட்டுயிர்களான மான்கள், எருதுகள், காட்டுப் பன்றிகள், கழுதைப் புலிகள், கான மயில்கள், மயில்கள், கவுதாரிகள், சிவப்பு நரிகள், ஓநாய்கள் மற்றும் கறகால் பூனைகள் காணப்படுகிறது.
இக்கிராமத்தில் 3 செயற்கை ஏரிகள் உள்ளது.
மேற்கோள்கள்
கட்சு மாவட்டம்
குஜராத் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
|
597511
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
|
பெல்தங்கடி சட்டமன்றத் தொகுதி
|
பெல்தங்கடி சட்டமன்றத் தொகுதி (, ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ளது. தட்சிண கன்னட மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 200 ஆகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
குறிப்பு
மேற்கோள்கள்
கர்நாடக சட்டமன்றத் தொகுதிகள்
தட்சிண கன்னட மாவட்டம்
|
597512
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B
|
தோர்தோ
|
தோர்தோ கிராமம் (Dhordo), மேற்கு இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தின் புஜ் தாலுகாவில் இந்திய-பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் அமைந்த கிராமம் ஆகும். இது புஜ் நகரத்திலிருந்து 86 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கிராமத்தில் ஆண்டுதோறும் 3 மாதங்கள் ராண் ஆப் கட்ச் உற்சவம் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
கட்சு மாவட்டம்
குஜராத் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
|
597513
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%20%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D
|
தேர்-இ கச்சின்
|
தேர்-இ கச்சின் கேரவன்செராய் (Deir-e Gachin Caravansarai) என்பது ஈரானில் உள்ள ஒரு வரலாற்று கேரவன்செராய் ஆகும். இது காவிர் தேசிய பூங்காவின் மையத்தில் அமைந்துள்ளது. அதன் வரலாறு மற்றும் தனித்துவமான குணங்கள் காரணமாக, இது சில நேரங்களில் "ஈரான் கேரவன்சராய்களின் தாய்" என்று அழைக்கப்படுகிறது. இது கும் கவுண்டியின் மத்திய மாவட்டத்தில், கும் நகரத்துக்கு வடகிழக்கே 80 கிலோமீட்டர் தொலைவிலும் வரமினின் தென்மேற்கே 35 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த நினைவுச்சின்னம் செப்டம்பர் , 2003 அன்று ஈரானின் தேசிய பாரம்பரிய பட்டியலில் பதிவு செய்யப்பட்டது. கேரவன்செராய் முதலில் சாசானிய சகாப்தத்தில் கட்டப்பட்டது. பின்னர் செல்யூக், சபாவித்து மற்றும் குவாஜர் காலங்களில் மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்புகளுக்கு உட்படுத்தப்ட்டது. அதன் தற்போதைய வடிவம் சபாவித்து சகாப்தத்தைச் சேர்ந்தது. இந்த கேரவன்செராய் இரேயிலிருந்து இசுபகான் வரையிலான பழங்கால பாதையில் அமைந்துள்ளது.
சான்றுகள்
ஈரான்
|
597514
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE
|
ஒனகோனா
|
ஒடமாதி (Odemadih) என்றும் அழைக்கப்படும் ஒனகோனா(Onakona) என்பது இந்தியாவின் சத்தீசுகரின் துர்க் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும்.
ஒனகோனா மகாநதி ஆற்றின் மீது கட்டப்பட்ட கேங்க்ரல் அணை நீர்த்தேக்கத்தின் கரையில் அமைந்துள்ளது. 21 ஆம் நூற்றாண்டில், தம்தரியைச் சேர்ந்த தீரத் ராஜ் புதான், மகாராட்டிராவில் உள்ள திரிம்பகேசுவர் சிவன் கோயிலைப் போல, ஒனகோனாவில் ஒரு சிவன் கோயிலைக் கட்டுவதற்கு ஆணையிட்டார். கோயில் ஒருபுறம் மலையாலும், மறுபுறம் நீர்த்தேக்கத்தாலும் சூழப்பட்டுள்ளது. அருகில் ஒரு அருவி குளம் உள்ளது. இது ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக உள்ளது.
ஒனகோனா குருர் வட்டத்தில் அமைந்துள்ளது . கர்ராஜர் ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் வருகிறது. 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, கிராமத்தில் 38 வீடுகளில் வசிக்கும் 95 ஆண்கள் மற்றும் 87 பெண்கள் உட்பட 182 பேர் வசிக்கின்றனர். 7 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 72.53% ஆகும்.
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Coordinates on Wikidata
சத்தீசுகரில் உள்ள கிராமங்கள்
|
597516
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE
|
தேபகுந்தா
|
தேபகுந்தா (Debakunda) இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள மயூர்பஞ்சு மாவட்டத்தில் இயற்கையாக அமைந்துள்ள ஒரு குளமாகும். தேவ்குண்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. இது சிம்லிபால் தேசிய பூங்காவின் ஒரு பகுதியுமாகும். அருகில் உள்ள ஓர் அருவியில் இருந்து பாய்ந்த தண்ணீர் இந்த குளத்தை உருவாக்கியுள்ளது. அம்பிகா மந்திரா என்றழைக்கப்படும் கோயில் ஒன்றும் இங்குள்ளது. இராச்குமார் பிரபுல்ல சந்திர பஞ்சா தியோ என்பவரால் இக்கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆராய்ச்சியாளரும், பிரிட்டிசு ஆட்சியின் போது ஒரு மன்னருமாக இவர் தேவகுண்டில் தங்கி இந்த இடத்தைப் பற்றி ஆய்வு செய்தார். தேபகுந்தா பார்மீலியாசியே பூஞ்சை வகையான இலைக்கன் கற்பாசி இனங்களின் தாயகமாகும்.
அமைவிடம்
உதலா நகரத்திலிருந்து 50 கிமீ தொலைவிலும், பரிபடா நகரத்திலிருந்து 60 கிமீ தொலைவிலும், பாலேசுவர் தொடருந்து நிலையத்திலிருந்து 66 கிமீ தொலைவிலும் தேபகுந்து குளம் அமைந்துள்ளது.
பெயர்க்காரணம்
தேபகுந்து என்பது இரண்டு ஒடிய சொற்களின் சேர்க்கையாகும். தேப என்ற சொல் தெய்வத்தையும் குந்தா என்ற சொல் ஒரு சிறிய குளம் அல்லது தொட்டி என்ற பொருளையும் குறிக்கின்றன.
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Tourists Places in Odisha
மயூர்பஞ்சு மாவட்டம்
ஒடிசா அருவிகள்
|
597517
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
|
ஆமணக்கந்தோண்டி
|
ஆமணக்கந்தோண்டி (Amanakkanthondi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
மக்கள்தொகை
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அமனக்கந்தோண்டி கிராமத்தில் 534 ஆண்கள் மற்றும் 577 பெண்கள் என மொத்தம் 1111 பேர் இருந்தனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
கிராமத்துடன் கூடிய மாவட்ட வரைபடம்
குடிநீர் பாதுகாப்பு
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata
|
597519
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%88
|
இஸ்ரேல் பாதுகாப்பு முகமை
|
இஸ்ரேல் உள்நாட்டு பாதுகாப்பு முகமை அல்லது சின் பெத் (Israel Security Agency or Shin Bet), உள்நாட்டு உள்வு அமைப்பாகும். இதன் தலைமையிடம் டெல் அவிவ் நகரம் ஆகும். இது உள்நாட்டு உளவுப் பணிகளை கவனிக்கும் இந்திய உளவுத்துறை போன்றதே. இஸ்ரேல் தனது வெளிநாட்டு உளவுப் பணிகளை மொசாட் அமைப்பு மூலம் செய்கிறது.
அமைப்பு
சபாக் அமைப்பு இஸ்ரேலின் நான்கு நடவடிக்கைக் குழுக்களைக் கொண்டது:
அரபுத் துறை:இது இஸ்ரேல் நாட்டில் அரபுகளின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பானது. மேலும் மேற்குக் கரை மற்றும் காசாக்கரையில் உள்ள யூத குடியிருப்புகளுக்கு பாதுகாப்பு அளிப்பது. இதனை யூதத் துறை என்றும் அழைப்பர்.
உள்நாட்டு பாதுகாப்புத் துறை:இஸ்ரேல் நாட்டின் உயர் மதிப்பு மிக்க தனிநபர்கள் மற்றும் இடங்களான அரசு அலுவலகங்கள், தூதரகங்கள், வானூர்தி நிலையங்கள் மற்றும் ஆய்வு நிலையங்களுக்கு பாதுகாப்பு அளித்தல்.
இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டவர் துறை:இத்துறை யூதப் பகுதிகளில் எதிர்-உளவுத்துறை மற்றும் நாசத்தைத் தடுப்பதற்கான துறையாக செயல்படுகிறது.
இந்த அமைப்பு பாதுகாப்பு முகமையாக இருப்பினும், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் பகுதியாக செயல்படாது. இந்த அமைப்பு இஸ்ரேலிய பிரதம அமைச்சரின் அலுவலகத்தின் கீழ் செயல்படுகிறது.
விமர்சனங்கள்
2023 இஸ்ரேல்-பாலத்தீனம் போரில் காசாக்கரையில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவினர் 7 அக்டோபர் 2023 அன்று 5,000 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவிய போதும், ஹமாஸ் குழுவினர் எல்லைப்புற வேலிகளை அகற்றிவிட்டு இஸ்ரேல் பகுதியில் புகுந்து நூற்றுக்கணக்கானவர்களை பணயக் கைதிகளாக சிறைபிடித்தும், கொன்றதற்கும் முன்கூட்டி உளவு அறிய தவறியதற்கு இஸ்ரேல் உள்நாட்டு பாதுகாப்பு முகமை பொறுப்பேற்றது.
இதனையும் காண்க
மொசாட்
இசுரேலிய பாதுகாப்புப் படைகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Shabak website
Profile: Israel's Shin Bet agency, BBC News
Text of the 1999 High Court of Justice ruling (PDF)
B'tselem report on Shabak's use of torture
"Inside Shin Bet" video documentary by Al Jazeera
Knesset said "No" to Shabak
Photos
இஸ்ரேலிய உளவு அமைப்புகள்
|
597520
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87.%20%E0%AE%AE.%20%E0%AE%B5%E0%AF%86.%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
|
இ. ம. வெ. கிருட்டிணமூர்த்தி
|
இடையாற்று மங்கலம் வெங்கடராம கிருட்டிணமூர்த்தி (E. M. V. Krishnamurthy)(18 சூன் 1934 - 26 அக்டோபர் 2012) இந்தியாவில் பிறந்த கணினி அறிவியலாளர் ஆவார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் கணினி அறிவியல் துறையில் பேராசிரியராக இருந்தார். இவர் முதுபெரும் பேராசிரியர் கணினி அறிவியல் ஆய்வகம், தகவல் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி பள்ளி, கான்பெரா ஆத்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் பணியாற்றியுள்ளார்.
கிருட்டிணமூர்த்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மதிப்புமிக்க சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதினைப் 1978ஆம் ஆண்டு பெற்றார். இவர் இந்தியா, ஆத்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற நாடுகளின் பல நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ஈ.வி.கிருஷ்ணமூர்த்தி
தமிழக அறிவியலாளர்கள்
அரியலூர் மாவட்ட நபர்கள்
2012 இறப்புகள்
1934 பிறப்புகள்
|
597522
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
|
உபர்கோட் குகைகள்
|
உபர்கோட் குகைகள் (Uparkot Caves) என்பது, பண்டைய மனிதனால் உருவாக்கப்பட்ட குகைகளாகும். குகைகள் இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் ஜுனாகத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜூனாகத் பௌத்த குகைக் குழுமங்களின் ஒரு பகுதியாகும்.
குகைகள்
300 அடி ஆழமான அகழிக்கு அப்பால் உள்ள இந்த குகைகள், ஆதி காதி கிணற்றுக்கு அருகில், கி.பி 2-3 ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டவை. இந்த குகைகள் இந்தோ சிதியன் பாணியின் கலவையுடன் சாதவாகன கட்டிடக்கலையின் செல்வாக்கைக் கொண்டுள்ளன. இக்குடைவரைகள் அழகிய தூண்கள் கொண்டது. மேலும் சன்னல்களுடன் கூடிய விகாரையும், பிக்குகள் தங்கித் தியானம் செய்வதற்கான சிறு சிறு அறைகளுடன் கூடியது.
இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கூற்றுப்படி, "குகைக் குழுமம் மூன்று அடுக்குகளில் உள்ளது. ஆனால் இரண்டு மாடிகள் மட்டுமே வழக்கமான தளங்களைக் கொண்டிருக்கின்றன. உபர்கோட்டில் உள்ள குகைகள் இரண்டு தளங்களாக வெட்டப்பட்டுள்ளன. முதல் தளத்தில், சுமார் 11 அடி சதுர ஆழமான ஒரு குண்டா உள்ளது. அதன் மூன்று பக்கங்களிலும் மூடப்பட்ட அறை உள்ளது. ஆறு தூண்களுடன் கூடிய ஒரு பெரிய அறை, அதை ஒட்டி கூரையைத் தாங்கி நிற்கிறது. தாழ்வாரத்தின் கீழ், மீதமுள்ள பகுதியில், வடகிழக்கு மற்றும் மேற்குப் பக்கங்களில் உள்ள சுவர்களில் சாய்வு கல் பலகை-இடைவெளிகள் உள்ளன. கீழ் தளத்தில், ஒரே மாதிரியான அறைகள், ஒரு நடைபாதை, மேலே தரையைத் தாங்கும் தூண்கள், கல் பலகை-இடைவெளிகள் மற்றும் அவற்றுக்கு மேலே, சைத்தியம் - சாரள வேளைப்பாடுகள் உள்ளன.
கீழ் தளத்தில் நேர்த்தியாக செதுக்கப்பட்ட தூண்கள் உள்ளன. அவற்றின் அடித்தளம், தனித்துவமான அலங்கார வடிவமைப்பைக் கொண்டுள்ளன. இந்த குகைகள் அழகான தூண்கள் மற்றும் நுழைவாயில்கள், தண்ணீர் தொட்டிகள், குதிரைவாலி வடிவ சைத்ய சாரளங்கள், ஒரு மண்டபம் மற்றும் தியானத்திற்கான அறை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
புகைப்படங்கள்
சான்றுகள்
பௌத்த தொல்லியற்களங்கள்
குஜராத்தின் தொல்லியற்களங்கள்
இந்தியத் தொல்லியற்களங்கள்
ஜூனாகத் மாவட்டம்
இந்தியாவில் உள்ள குகைகள்
|
597524
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
|
வெமுலா பிரசாந்த் ரெட்டி
|
வெமுலா பிரசாந்த் ரெட்டி (Vemula Prashanth Reddy) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர், தற்போது 8 செப்டம்பர் 2019 முதல் தெலுங்கானாவின் சாலைகள், கட்டிடங்கள் மற்றும் சட்டமன்ற விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சராகப் பணியாற்றுகிறார். இவர் 2 சூன் 2014 முதல் பால்கொண்டா தொகுதியில் இருந்து தெலுங்கானா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
இவர் பாரத் இராட்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் உறுப்பினராகவும், தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மாவட்டத்தின் பால்கொண்டா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
மேற்கோள்கள்
இந்திய அரசியல்வாதிகள்
1966 பிறப்புகள்
வாழும் நபர்கள்
தெலங்காணா அரசியல்வாதிகள்
|
597526
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D
|
இராஜையா சைமன்
|
இராஜையா சைமன் (Rajiah Simon) இந்தியாவின் சென்னையில் உள்ள கணித அறிவியல் கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ளார்.
குவையம் ஒளியியலில் ஆய்வுகளில் சைமன் ஆற்றிய பணிகளுக்காக 1993-ல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது வழங்கப்பட்டது.
டைராக் சமன்பாட்டைப் பயன்படுத்தி ஒரு காந்த நான்முனைவில் கவனம் செலுத்தும் செயலின் மூலம் மின்னூட்ட-துகள் கற்றை ஒளியியல் குவையம் கோட்பாட்டை சைமன் மற்றும் கூட்டுப்பணியாளர்கள் தொடங்கினர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Google Scholar profile
தமிழக அறிவியலாளர்கள்
|
597527
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
|
போரம் மார்ட்டு
|
போரம் மார்ட்டு (Forum Mart) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகமாகும். இவ்வணிக வளாகம் இருநூறாயிரம் சதுர அடி பரப்பளவில் பரவியுள்ளது. 2004 ஆம் ஆண்டு பொது மக்களுக்காக திறக்கப்பட்ட இந்த பேரங்காடி ஒடிசாவின் மிகப் பெரிய மற்றும் பழமையான அங்காடிகளில் ஒன்றாகும். போரம் குழுமத்தால் வடிவமைக்கப்பட்ட நான்கு தளங்களில் 200,000 சதுர அடி பரப்பளவில் இந்த வணிக வளாகம் பரவியுள்ளது. போரம் குழுமம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வணிக வளாகங்களை நிறுவுவதில் பெயர் பெற்ற நிறுவனமாகும்.
சிற்றுண்டிச்சாலை, உணவு விடுதி, உணவகங்கள், வாகன நிறுத்துமிடம் மற்றும் ஓர் உயர் சந்தை உட்பட தோராயமாக 50 விற்பனை நிலையங்கள் இப்பேரங்காடியில் உள்ளன.
சிறப்புகள்
100 சதவீத மின்சார வசதி
தீ தடுப்பு அமைப்பு
வெப்பவேற்றம், காற்றோட்டம், குளிர்பதனம் உள்ளிட்ட வசதிகள்
காற்றைக் கையாளும் இயந்திரம்
நிலநடுக்கப் பாதுகாப்பு
சிறப்பம்சங்கள்
பொழுதுபோக்கு
திறந்தவெளி
விருந்தோம்பல்
சிற்றுண்டியகம்
தாமே பரிமாறிக் கொள்ளும் சிற்றுண்டியகம்
உணவகங்கள்
வணிகம்
அலுவலகங்கள்
பிற வசதிகள்
உயர் சந்தை
துறை சார் முகவர்கள்
தீத்தடுப்பு
போரம் மார்ட்டு உட்பட 10 பேரங்காடிகளில் ஒடிசா தீயணைப்பு சேவைகள் துறை நடத்திய ஆய்வில் போதுமான தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் பல குறைபாடுகளைக் கண்டறிந்ததாக அறியப்படுகிறது.
மேற்கோள்கள்
புவனேஸ்வர்
பேரங்காடிகள்
|
597528
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF
|
அதார் ஏரி
|
அதார் ஏரி ( ); அரே மாகாணத்தின் தாசுலிகே மாவட்டத்தில் உள்ள ஒரு ஏரி ஆகும். இது துருக்கியின் மிக உயரமான ஏரிகளில் ஒன்றாகும்.
நிலவியல் மற்றும் புவியியல்
இது அரேயின் மையத்திலிருந்து 72 கிமீ தொலைவிலும் தாசுலிகேயின் மையத்திலிருந்து 38 கிமீ தொலைவில் உள்ள எர்சிசு எல்லைக்கு அருகில், தாசுலிகே எல்லைக்குள் அமைந்துள்ள அலாடாக் மலைகளின் மிக உயர்ந்த சிகரமான கோக்பாசி மலையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. ஏரியின் ஆழம் இன்னும் அறியப்படவில்லை.
மேற்கோள்கள்
Coordinates not on Wikidata
துருக்கியின் புவியியல்
|
597529
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
|
புத்தநாத்து கோயில்
|
புத்தநாத்து கோயில் (Buddhanath Temple) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ளது. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தநாத் கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இந்துக் கோயிலாகும். புவனேசுவரம் நகரத்திலிருந்து சுமார் 22 கிமீ (14 மைல்) தொலைவில் உள்ள பாலிபட்னா தொகுதியில் உள்ள கரேடி பஞ்சனா என்ற கடற்கரை கிராமத்தில் இக்கோயில் உள்ளது. புவனேசுவரத்திலிருந்து கோயிலை அடைவது எளிதாகும். சோமவன்சி வம்சத்தைச் சேர்ந்த சோடகங்கா தேவ் என்பவரால் புத்தநாத்து கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோயில் தாந்த்ரீக கொள்கைகளின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. கடலுக்கு அருகாமையில் இருப்பதால், உப்பு நிறைந்த காற்றினால் கற்கள் அரிக்கப்பட்டு கோயிலின் சிதைவு துரிதப்படுத்துகிறது. 14 ஆவது நிதிக்குழுவின் நிதியில் சமீபத்தில் கோயில் புதுப்பிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
புவனேஸ்வர்
ஒரிசாக் கோயில்கள்
|
597530
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D
|
அஞ்சன் குமார் யாதவ்
|
அஞ்சன் குமார் யாதவ் (Anjan Kumar Yadav)(பிறப்பு 5 மே 1961) தெலங்காணா பிரதேச காங்கிரசு கட்சியின் செயல் தலைவராக பணியாற்றும் இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய மக்களவையின் உறுப்பினராக இவர் இருந்துள்ளார். இவர் தெலங்காணாவின் செகந்திராபாது தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்திய தேசிய காங்கிரசு அரசியல் கட்சியின் உறுப்பினராக உள்ளார். 2014 தேர்தலில் செகந்திராபாது தொகுதியில் பாஜக வேட்பாளர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் தோல்வியடைந்தார். 2023-ல் நடைபெறும் தெலங்காண சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அஞ்சன் குமார் யாதவ் போட்டியிடுகிறார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Home Page on the Parliament of India's Website
Anjan Kumar Yadav's Website
1961 பிறப்புகள்
தெலங்காணா அரசியல்வாதிகள்
14வது மக்களவை உறுப்பினர்கள்
15வது மக்களவை உறுப்பினர்கள்
|
597531
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%2C%20%E0%AE%89%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D
|
ஜும்மா மஸ்ஜித், உபர்கோட்
|
ஜும்மா மஸ்ஜித் அல்லது ஜமா மஸ்ஜித் (Jumma Masjid or Jama Masjid) என்பது இந்தியாவின் குசராத்தின் ஜுனாகத்தில் அமைந்துள்ள உபர்கோட் கோட்டையில் உள்ள ஒரு மசூதி ஆகும். இந்த மசூதி 15 ஆம் நூற்றாண்டில் உள்ளூர் மக்களால் தற்போது இரணகாதேவி மகால் என்று அடையாளம் காணப்பட்ட ஒரு கோவில் அல்லது அரண்மனையை மாற்றியமைத்து கட்டப்பட்டது. கட்டிடத்தை அடையாளம் காண்பதில் சர்ச்சை உள்ளது.
வரலாறு
ஜும்மா மஸ்ஜித் (வெள்ளிக்கிழமை மசூதி) 1472 இல் ஜுனாகத் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து 15 ஆம் நூற்றாண்டில் குசராத்தின் சுல்தான் மக்மூத் பேகடா என்பவரால் கட்டப்பட்டது. இது ஒரு இந்து அல்லது [[சைனக் கோயில் அல்லது முன்பு இருந்த அரண்மனையின் பொருட்களால் கட்டப்பட்டது என்பது தெளிவாகிறது. சுதாசம ஆட்சியாளர் கெங்கராவின் புகழ்பெற்ற ராணியான இரணகாதேவியின் பெயரால் இரணகாதேவி மகால் என்று உள்ளூர் மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஜும்மா மஸ்ஜித்தும் பீரங்கிகளும் குஜராத் அரசின் தொல்லியல் துறையால் மாநில பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக (S-GJ-115) பட்டியலிடப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டில், குஜராத் சுற்றுலாத் துறை அந்த இடத்தை ஜாமி மஸ்ஜித்-இரணகாதேவி மகால் என்று குறிக்கும் பலகையை வைத்தது. உள்ளூர் ராஜ்புத்திர சமூகத்தினர் மசூதி என அடையாளப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் பலகை அகற்றப்பட்டது.
2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, குஜராத் அரசின் உபர்கோட் கோட்டை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் இது மீட்டெடுக்கப்படுகிறது.
கட்டிடக்கலை
மசூதி ஒரு செங்கல் மேடையில் கட்டப்பட்டுள்ளது. மேலும் ஒரு கோட்டை போல் உள்ளது. இது திடமான தடிமனான சுவர்கள் மற்றும் ஒரு மூலையில் இருந்து உயரும் மெலிதான நெடுவரிசையைக் கொண்டுள்ளது. தூண் ஒரு மினாரை விட ஒரு கோபுரம் போல் தெரிகிறது. மசூதி கட்டி முடிக்கப்படவில்லை. அதன் மண்டபத்தின் ஒரு பகுதி திறந்த வெளியாகவே உள்ளது. மாடிக்கு செல்லும் படிக்கட்டு உள்ளது. மறுசீரமைப்பின் போது அது மீண்டும் நிறுவப்பட்டது.
பீரங்கிகள்
மசூதிக்கு வெளியே சுவர்களுக்கு எதிரே, 10 அங்குல துவாரமும், 17 அடி நீளமும், வாயில் 4 அடி 8 அங்குலம் சுற்றும் கொண்ட நிலாம் என்ற பெரிய மணி உலோக பீரங்கி உள்ளது. இந்த பீரங்கி தியூவிலிருந்து கொண்டு வரப்பட்டது, போர்ச்சுகீசியர்களுடனான அவர்களின் போராட்டத்திற்கு எதிராக குஜராத் சுல்தானகத்திற்கு உதவியபோது, தியூ முற்றுகையில் (1538) அவர்கள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, உதுமானிய தளபதி சுலைமான் பாஷாவால் விட்டுச் செல்லப்பட்டது. முகவாயிலில் ஒரு அரபு கல்வெட்டு உள்ளது. அதை இவாறு மொழிபெயர்க்கலாம்: "இந்த பீரங்கியை சர்வவல்லமையுள்ளவரின் சேவையில் பயன்படுத்துவதற்கான உத்தரவை அரேபியா மற்றும் பெர்சியாவின் சுல்தான், சலீம் கானின் மகன் சுல்தான் சுலைமான் வழங்கினார். 1531 ஆம் ஆண்டு எகிப்தின் தலைநகரில் அரசு மற்றும் நம்பிக்கையின் எதிரிகளை தண்டிக்க அவரது வெற்றி மகிமைப்படுத்தப்படட்டும். குழலின் முன்பகுதியில் இவ்வாறு பொறிக்கப்பட்டுள்ளது: "ஹம்சாவின் மகன் முகமனின் வேலை." 13 அடி நீளமும், முகவாய் 4 அடி விட்டமும் கொண்ட 'கடனால்' என்று அழைக்கப்படும் மற்றொரு பெரிய பீரங்கி, தியூவில் இருந்து கொண்டு வரப்பட்டது. இது, கோட்டையின் தெற்குப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
புகைப்படங்கள்
இதனையும் காண்க
உபர்கோட் கோட்டை
உபர்கோட் குகைகள்
சான்றுகள்
பள்ளிவாசல்களாக மாற்றப்பட்ட பிற சமய வழிப்பாட்டிடங்கள்
Coordinates on Wikidata
|
597532
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%201
|
புவனேசுவர் 1
|
புவனேசுவர் 1 (Bhubaneswar 1) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலம் புவனேசுவரம் நகரத்தில் வரவிருக்கும் ஒரு வணிக வளாகமாகும். கதாகனா மௌசாவில் இப்பேரங்காடி அமைந்துள்ளது. புவனேசுவரம் நகரத்திலுள்ள மிகப்பெரிய பேரங்காடிகளில் ஒன்றாக இது இருக்கும். பேரங்காடி மொத்தம் 350,000 சதுர அடி (33,000 சதுர மீட்டர்) பரப்பளவைக் கொண்டிருக்கும். பேரங்காடி யுனிடெக் குழுமத்தால் வடிவமைக்கப்பட்டு ஐந்து தளங்களில் பரவியுள்ளது என்று அறியப்படுகிறது. 200 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட கடைகள், அலுவலகங்கள், உணவு விடுதிகள், உணவகங்கள், குடும்ப பொழுதுபோக்கு மண்டலங்கள், பல்சேர் திரையரங்குகள் மற்றும் பல் நிலை வாகன நிறுத்துமிடம் ஆகியவை இப்பேரங்காடியில் அடங்கியுள்ளன. பேரங்காடி இன்னும் திறக்கப்படவில்லை. ஒரிசா உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு காரணமாக அனைத்து கட்டுமானங்களும் தற்போது முடங்கியுள்ளன.
மேற்கோள்கள்
புவனேஸ்வர்
பேரங்காடிகள்
|
597534
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF
|
செங்காய் ஏரி
|
செங்காய் ஏரி ( Chinese ) என்பது சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள ஒரு இடைநிலை ஊட்ட பீடபூமி ஏரியாகும். ஏரியின் மொத்தப் பரப்பளவு சுமார் 77.22 சதுர கிலோ மீட்டர்கள் (29.81 சதுர மைல்கள்) ஆகும். இந்த ஏரியின் சராசரி ஆழம் , ஏற்றமும் கொண்டதாகும் . இந்த ஏரியின் நீர் சேமிப்பு திறன் சுமார் 19.87×10 8 மீ 3 ஆகும். சுருள்பாசி இயற்கையாகக் காணப்படும் உலகில் உள்ள மூன்று ஏரிகளில் செங்காய் ஏரியும் ஒன்றாகும்.
சூழலியல்
செங்காய் ஏரி குறிப்பிடத்தக்க மதுவம் பல்லுயிர் கொண்டதாக அறியப்படுகிறது; ஒரு ஆய்வு 8 வகைகளில் 22 இனங்களில் 64 மதுவ வகைகளை சேகரித்து அடையாளம் கண்டுள்ளது. இந்த ஏரி ஒரு மூடிய சுற்றுச்சூழல் அமைப்பாகும், மேலும் இது இடைநிலை ஊட்ட, அதாவது இது உயிரியல் உற்பத்தியின் இடைநிலை அளவை ஆதரிக்கும் தன்மை கொண்டதாகும். ஏரியில் நீர்வாழ் தாவரங்கள் குறைந்துள்ளன, ஒருவேளை மாசுபாடு, வாழ்விட அழிவு, ஊட்டஞ்செறிதல் (யூட்ரோஃபிகேஷன்) ஆகியவற்றின் விளைவுகளால் ஏற்பட்டிருக்கக் கூடும்.
மாசுபாடு
சீசியம்-137, ஒரு கதிரியக்க வீழ்பொருள் ஓரிடத்தான் இந்த ஏரியில் உள்ளது.
குறிப்புகள்
Coordinates on Wikidata
சீன ஏரிகள்
|
597535
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88
|
ஆயுத பூஜை
|
ஆயுத பூஜை அல்லது சரஸ்வதி பூஜை என்பது நவராத்திரி விழாவின் அங்கமான ஒரு இந்து சமய பண்டிகையாகும். இது இந்து நாட்காட்டியின்படி புரட்டாசி மாதம் வளர்பிறை நவமியிலும் பொது நாட்காட்டியின்படி செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்தியத் துணைக் கண்டம் முழுக்கக் கொண்டாடினாலும் வெவ்வேறு வழிபாட்டு முறைகளால் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் தங்களது தொழிலுக்குப் பயன்படும் கலப்பை, கருவிகள், ஆயுதங்கள், வாகனங்கள், புத்தகங்கள், கல்விப் பொருட்கள் போன்றவற்றை சரஸ்வதிக்கு முன் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இதனை அஸ்திர பூஜை என்றும் அழைப்பர். பூஜைக்காக வைக்கப்பட்ட பொருட்கள் மறுநாள் விஜயதசமி வரை எடுக்கப்படாமல் இருக்கும். இவ்வாறு வழிபடுவதன் மூலம் தொழில் வளர்ச்சியும், கல்வியில் சிறந்த தேர்ச்சியும் பெறுவதாக இந்து சமயத்தவர்கள் நம்புகின்றனர்.
புராணக்கதை
புராணங்களின்படி இரண்டு கதைகள் சொல்லப்படுகின்றன. கவுரவர்களிடம் சூதாட்டத்தில் தோற்று பாண்டவர்கள் பதின்மூன்று ஆண்டுகள் வனவாசம் சென்றனர். பின்னர் ஓராண்டு அஞ்ஞாத வாசம் எனப்படும் ஆயுதங்களையும் அடையாளங்களையும் துறந்து வாழ்ந்து வந்தனர். இறுதியாக ஓராண்டு கழித்து ஒன்பது நாட்கள் விரதமிருந்து, பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை வன்னி மரப் பொந்திலிருந்து ஆயுத பூஜை நாளில் வழிபட்டு அருச்சுனன் எடுத்ததாகக் கருதப்படுகிறது. மற்றொரு கதையில் மகாபாரத குருச்சேத்திரப் போருக்கு முன் விரதமிருந்து காளிதேவிக்கு ஆயுத பூஜையன்று அரவான் களப்பலி கொடுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
இலக்கியத்தில்
பனிரெண்டாம் திருமுறையான பெரியபுராணத்தில் ஒன்பது நாள் வழிபாடு நடத்தி போரிடும் யானைகளுக்கு மரியாதை செய்வதாகக் குறிப்புள்ளது.
சிலப்பதிகாரத்தில், கொற்றவைக்கு நேர்த்திக்கடன்களைச் செய்யாவிட்டால் வெற்றியைத் தரமாட்டாள் என்ற வரிகளின் மூலம் கருவிகளைப் படைத்து வழிபாடும் முறையை அறியமுடிகிறது.
வாளுக்கு விழா எடுத்த செய்தியைப் பதிற்றுப்பத்தும் தொல்காப்பியமும் குறிப்பிடுகின்றன.
இதையும் பார்க்கலாம்
விஜயதசமி
வித்தியாரம்பம்
குலு தசரா
மேற்கோள்கள்
செப்டம்பர் சிறப்பு நாட்கள்
அக்டோபர் சிறப்பு நாட்கள்
இந்து சமய விழாக்கள்
|
597537
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF.%20%E0%AE%95%E0%AF%87.%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D
|
வி. கே. சிறீகண்டன்
|
வி. கே. சிறீகண்டன் (V. K. Sreekandan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். வெள்ளாளத் கொச்சுகிருட்டிணன் நாயர் சிறீகண்டன் என அழைக்கப்படும் இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் பாலக்காடு மாவட்ட காங்கிரசு கட்சியின் தலைவருமாவார். சிறீகண்டன் இந்தியாவின் 17ஆவது மக்களவையின் பாலக்காடு மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், பாலக்கோடு தொகுதியில் ஐக்கிய சனநாயக முன்னணியின் வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
1971 பிறப்புகள்
வாழும் நபர்கள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
கேரள அரசியல்வாதிகள்
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
|
597539
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
அசோக் குமார் சவுகான்
|
அசோக் குமார் சவுகான் (Ashok Kumar Chauhan) (அசோக் குமார் அல்லது அசோக் சௌஹான் என அறியப்படுகிறார்) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினராக இருந்த இவர், தில்லி மாநில சட்டமன்றத்தில் உள்ள அம்பேத்கர் நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
அரசியல் வாழ்க்கை
2013 டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் அம்பேத்கர் நகர் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளராக சவுகான் அறிவிக்கப்பட்டார். இவர் 11670 வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் குஷி ராம் சுனாரை தோற்கடித்து, அந்த இடத்தை வென்றார்
2014 ஆம் ஆண்டில், ஆம் ஆத்மி கட்சிக்குள் அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்வாதிகார ஆட்சியைக் கண்டு, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாக தெரிவித்தார். இவர் சுதந்திரமான பேச்சு மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனத்தின் கருத்தை நம்புவதாகவும், சமூக-பொருளாதார நிலைப் படிநிலையில் மிகவும் தாழ்ந்த நிலையில் வாழும் லட்சக்கணக்கான ஏழைகளின் வாழ்க்கையை மாற்றுவதாக சபதம் செய்துள்ளார்.
2015 டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில், இவர் அம்பேத்கர் நகரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட இவர் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் அஜய் தத்திடம் 42460 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மேற்கோள்கள்
ஆம் ஆத்மி கட்சி அரசியல்வாதிகள்
தில்லி நபர்கள்
வாழும் நபர்கள்
|
597541
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF.%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D
|
டி. என். பிரதாபன்
|
டி. என். பிரதாபன் (T. N. Prathapan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1960 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதியன்று தளிக்குளத்தில் தொடுங்கல் நாராயணன் மற்றும் காளிக்குட்டி தம்பதியருக்கு இவர் மகனாகப் பிறந்தார். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக உள்ளார். தற்போது திருச்சூர் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார். 2011 ஆம் ஆண்டில் கேரள சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கொடுங்கல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். முன்னதாக இவர் 2001 ஆம் ஆண்டு மற்றும் 2006 ஆம் ஆன்டுகளிலும் நாட்டிகை சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு கேரள சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்துள்ளார்.
டி. என். பிரதாபன் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் கேரளாவிலிருந்து திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரசி பிரதிநிதியாக நாட்டளுமன்றத்தில் பணியாற்றிவருகிறார்.
மேற்கோள்கள்
1960 பிறப்புகள்
வாழும் நபர்கள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
கேரள அரசியல்வாதிகள்
திருச்சூர் மாவட்ட நபர்கள்
|
597542
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D
|
தாமசு சாழிகடன்
|
தாமசு சாழிக்கடன் (Thomas Chazhikadan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பட்டயக் கணக்காளர், கோட்டயம் மக்களவைத் தொகுதியில் இருந்து தற்போதைய தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர், 1991 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை கேரளாவின் ஏற்றுமானூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என பன்முகங்களுடன் இவர் அறியப்படுகிறார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோட்டயத்தில் இருந்து கேரள காங்கிரசு (எம்) வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் கேரள காங்கிரசு (மணி) கட்சியைச் சேர்ந்தவராவார்.
அரசியல்வாதியான பாபு சாழிக்கடனின் மூத்த சகோதரர் என்று இவர் அறியப்படுகிறார். ஏற்றுமானூர் சட்டமன்றத் தொகுதியின் அசல் வேட்பாளராக இருந்த பாபு சாழிக்கடன் 1991 தேர்தல் பிரச்சாரத்தின் போது மின்னல் தாக்கி கொல்லப்பட்டார்.
தாமசு சாழிகடன் இப்போது கேரளாவின் கோட்டயத்தில் உள்ள பட்டய கணக்காளர் நிறுவனமான தாமசு சாழிக்கடன் & இணையர்கள் நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தாமசு சாழிக்கடன் 25 செப்டம்பர் 1952 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதியன்று கோட்டயத்தில் உள்ள வெளியன்னூரில் சிரியாக்கு மற்றும் ஏலியம்மா சாழிகடன் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். ஒய்எம்சிஏ போன்ற பல சமூக சேவைக் கழகங்களில் உறுப்பினராக இருந்தார்; அரிமா சங்க உறுப்பினராகவும், கோட்டயம் மாவட்ட கூட்டுறவு சங்கத்தின் தலைவராகவும், நியூ பேங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். கோட்டயத்தில் உள்ள வங்கியாளர்கள் மன்றத்தின் செயலாளராகவும், மகாத்மா காந்தி பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
அதிகாரப்பூர்வ தளம்
1952 பிறப்புகள்
17வது மக்களவை உறுப்பினர்கள்
வாழும் நபர்கள்
மலையாள அரசியல்வாதிகள்
|
597543
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%A9%20%E0%AE%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
சாம்பல் மார்பு வன ஈப்பிடிப்பான்
|
சாம்பல் மார்பு வன ஈப்பிடிப்பான் (Grey-chested jungle flycatcher)(சைனோரிசு அம்ப்ராடிலிசு) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பமான மியூசிகாப்பிடேவில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல சதுப்புநிலங்கள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
இந்த சிற்றினம் முன்பு ரைனோமியாசு பேரினத்தில் வைக்கப்பட்டது. ஆனால் 2010 மூலக்கூறு தொகுதி வரலாற்று ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் சையோரினிசுக்கு மாற்றப்பட்டது.
மேற்கோள்கள்
மலேசியப் பறவைகள்
ஈ-பிடிப்பான்கள்
இந்தோனேசியப் பறவைகள்
|
597544
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
நீலநிறக் கரும் பிடரி அரசவால் ஈபிடிப்பான்
|
நீலநிறக் கரும்பிடரி அரசவாலன் ஈபிடிப்பான் (Black-naped monarch) என்பது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் மோனார்க் ஈபிடிப்பான் குடும்பத்தைச் சேர்ந்த மெலிதான மற்றும் சுறுசுறுப்பான குருவி வரிசையைச் சேர்ந்த பறவை யாகும். இது பால் ஈருருமை கொண்டது. ஆண் பறவையின் பிடரியில் ஒரு தனித்துவமான கருப்புத் திட்டும், கழுத்தின் கீழ்ப்பகுதியில் முன் பக்கம் ஒரு கருப்புக்கோடும் காணப்படும். அதே சமயம் பெண் பறவை ஆலிவ் பழுப்பு நிற இறக்கைகளுடன் மங்கிய நிறத்திலும், பிடரியிலும், கழுத்திலும் கருப்புக் கோடுகள் இன்றியும் காணப்படும். ஆசிய அரசவால் ஈபிடிப்பானைப் ஒத்த குரல் கொண்டது. வெப்பமண்டல வன வாழ்விடங்களில் வாழக்கூடிய இவை, இணையாகவோ, பிற இனப் பறவைகளுடன் இணைந்து கூட்டமாகவோ இரை தேடக்கூடியது. இறகுகளின் நிறம் மற்றும் அளவுகளில் இப்பறவைகள் பிராந்திய ரீதியாக சற்று வேறுபடுகின்றன.
வகைப்பாடு
துணையினங்கள்
இதில் இருபத்தி மூன்று துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:
H. a. styani – ( ஹார்ட்லாப், 1899) : இந்தியா மற்றும் நேபாளத்திலிருந்து தென்கிழக்கு சீனம் மற்றும் வியட்நாம் வரை காணப்படும் ஃபிகெடுலா பேனத்தில் ஒரு தனி இனமாக முதலில் விவரிக்கப்பட்டது. ஆண் பறவைகளுக்கு வயிறு வெண்மையாக இருக்கும்.
H. a. oberholseri – Stresemann, 1913 : தைவானில் காணப்படுகிறது
H. a. ceylonensis – Sharpe, 1879 : இலங்கையில் காணப்படும் இது முதலில் ஒரு தனி இனமாக விவரிக்கப்பட்டது. ஆண் பறவைகளுக்கு கழுத்தில் கருப்புக் கோடு இல்லை.
H. a. tytleri – ( பீவன், 1867) : முதலில் மியாக்ரா பேனத்தில் ஒரு தனி இனமாக விவரிக்கப்பட்டது. அந்தமான் தீவுகளில் காணப்படுகிறது. ஆண் பறவைகளின் வயிறு நீலமானது.
H. a. idiochroa – Oberholser, 1911 : கார் நிக்கோபாரில் (வடக்கு நிக்கோபார் தீவுகள் ) காணப்பட்டது. ஆண் பறவைகளின் வயிறு நீல நிறத்துடன் வெள்ளை நிறத்தில் இருக்கும்.
H. a. nicobarica – Bianchi, 1907 : தெற்கு நிக்கோபார் தீவுகளில் காணப்பட்டது. ஆண்களின் வயிறு நீல நிறத்துடன் வெள்ளை நிறத்தில் இருக்கும்.
H. a. montana - ரிலே, 1929 : வடக்கு மற்றும் நடு தாய்லாந்தில் காணப்படுகிறது
H. a. galerita – ( Deignan, 1956), 1929 : தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு தாய்லாந்தில் காணப்படுகிறது
H. a. forrestia – Oberholser, 1911 : மெர்குய் தீவுக்கூட்டத்தில் (மேற்கு மியான்மருக்கு அப்பால்) கண்டுபிடிக்கப்பட்டது
H. a. prophata – Oberholser, 1911 : மலாய் தீபகற்பம், சுமாத்திரா மற்றும் போர்னியோவில் கண்டுபிடிக்கப்பட்டது
H. a. javana - சேசன் & க்ளோஸ், 1929 : சாவகம் மற்றும் பாலி (இந்தோனேசியா)
H. a. penidae – மீஸ், 1942 : நுசா பெனிடாவில் (பாலிக்கு அருகில் சிறு சுண்டாத் தீவுகளில் ) காணப்பட்டது
H. a. karimatensis – Chasen & Kloss, 1932 : கரிமாட்டா தீவில் (மேற்கு போர்னியோவில்) கண்டுபிடிக்கப்பட்டது
எச். ஏ. opisthocyanea – Oberholser, 1911 : அனம்பாஸ் தீவுகளில் ( தென் சீனக் கடலில் ) காணப்பட்டது
H. a. gigantoptera – Oberholser, 1911 : நதுனா பெசாரில் (நடுனா தீவுகள், தென் சீனக் கடல்) காணப்படுகிறது
H. a. consobrina – Richmond, 1902 : முதலில் ஒரு தனி இனமாக விவரிக்கப்பட்டது, சிமியுலுவில் (வடமேற்கு சுமத்ராவிற்கு வெளியே) காணப்படுகிறது
H. a. leucophila – Oberholser, 1911 : சிபெருத் (மேற்கு சுமத்ராவிற்கு வெளியே) கண்டுபிடிக்கப்பட்டது
H. a. richmondi - ஓபர்ஹோல்சர், 1911 : எங்கனோ தீவில் (தென்மேற்கு சுமத்ராவிற்கு வெளியே) கண்டுபிடிக்கப்பட்டது
H. a. abbotti – ரிச்மண்ட், 1902 : முதலில் ஒரு தனி இனமாக விவரிக்கப்பட்டது, ரியுசம் மற்றும் பாபி தீவுகளில் (வடமேற்கு சுமத்ராவிற்கு வெளியே) காணப்பட்டது
H. a. symmixta – Stresemann, 1913 : மேற்கு மற்றும் மத்திய சிறு சுண்டத் தீவுகளில் காணப்பட்டது
பிலிப்பைன்ஸ் கரும்பிடரி அரசவால் ஈப்பிடிப்பான் ( H. a. azurea ) – ( Boddaert, 1783) : பிலிப்பைன்சில் காணப்படுகிறது ( கமிகுயின் தீவு தவிர)
H. a. aeria – பேங்சு & Peters, JL, 1927 : முதலில் ஒரு தனி இனமாக விவரிக்கப்பட்டது, மரட்டுவா தீவில் (கிழக்கு போர்னியோவிற்கு வெளியே) காணப்படுகிறது
H. a. catarmanensis – Rand & Rabor, 1969 : காமிகுயின் சுர் தீவில் (தெற்கு பிலிப்பைன்ஸ்) காணப்படுகிறது
விளக்கம்
முதிர்ச்சியடைந்த ஆண் நீலநிறக் கரும்பிடரி அரசவால் ஈப்பிடிப்பான் சுமார் 16 செ.மீ நீளம் கொண்டது. வெண்மையான கீழ் வயிற்றைத் தவிர இதன் உடல் முதன்மையாக வெளிர் நீல நிறத்தில் இருக்கும். இதன் பிடரியில் பெரிய கரும்பட்டைக் காணப்படும். கழுத்தின் கீழ்பகுதியில் முன் பக்கம் ஒரு கருப்புக் கோடு காணப்படும். பெண் பறவை மங்கிய நிறம் கொண்டதாகவும், கருப்புக் கோடுகள், பட்டைகள் இன்றியும் இருக்கும். இதன் இறக்கைகளும் பின்புறமும் சாம்பல்-பழுப்பு நிறத்தில் இருக்கும். இருப்பினும், புவியியல் ரீதியாக இப்பறவைகளின் உடல் நிறத்தில் சிற்சில மாறுபாடுகள் காணப்படுகின்றன.
பரவலும் வாழ்விடமும்
ஈரான் மற்றும் இலங்கையின் கிழக்கில் இருந்து இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் வரை வெப்பமண்டல தெற்காசியா முழுவதும் நீலநிறக் கரும்பிடரி அரசவால் ஈப்பிடிப்பான் இனப்பெருக்கம் செய்து வாழ்ந்துவருகிறது. இந்த இனம் பொதுவாக அடர்ந்த காடுகள் மற்றும் மரங்கள் நிறைந்த வாழ்விடங்களில் காணப்படுகிறது.
இது ஸ்வீச்-விச் என்றோ ச்சீ-ச்சீ என்றோ உரத்தக் குரலில் கத்தியபடி கிளைக்கு கிளை சுறுசுறுப்பாகத் தாவி பறக்கக் காணலாம். இந்தியாவில் மே முதல் ஜூலை வரையிலான கோடைக்காலத்தில் முதன்மையாக இவை இனப்பெருக்கம் செய்கின்றன. புல், பாசி, சிலந்தி நூல் ஆகியன கொண்டு மரக்கிளைகளிடையே கோப்பை வடிவில் கூடு அமைக்கின்றன. கூட்டில் இரண்டு மூன்று முட்டைகளை இடுகின்றன.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Photos and videos
Hua-Hsiang Chen (2009). "A Preliminary Study on Nest Site Selection and Nest Success of the Black-naped Blue Monarch (Hypothymis azurea) in Linnei Township and Douliu hilly area, Yunlin County". Thesis. Taiwan.
தென்கிழக்காசியப் பறவைகள்
தெற்காசியப் பறவைகள்
ஈ-பிடிப்பான்கள்
|
597545
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%A9%20%E0%AE%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
பாங்காய் வன ஈப்பிடிப்பான்
|
பாங்காய் வன ஈப்பிடிப்பான் (Banggai jungle flycatcher)(சைனோரிசு பெலிங்கென்சிசு) என்பது பழைய உலகப் பறக்கும் பறவை குடும்பமான மியூசிகாபிடேயில் உள்ள ஒரு வகை குருவி சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவில் உள்ள பெலெங்கில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. இங்கு இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகளாகும்.
மேற்கோள்கள்
இந்தோனேசியப் பறவைகள்
ஈ-பிடிப்பான்கள்
அகணிய உயிரிகள்
|
597546
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF
|
நாகுடி
|
நாகுடி என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வருவாய்த் தொகுதியில் உள்ள ஒரு கிராமம்.
மக்கள்தொகை
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நாகுடியில் 211 ஆண்கள் மற்றும் 219 பெண்கள் என மொத்தம் 430 பேர் இருந்தனர். மொத்த மக்கள் தொகையில் 254 பேர் கல்வியறிவு பெற்றவர்கள்.
மேற்கோள்கள்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
|
597547
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%28%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%29
|
இடையர் (புதுக்கோட்டை)
|
இடையர் (Edaiyar) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் புதுக்கோட்டை மாவட்டத்தின், அறந்தாங்கி வருவாய்த் தொகுதியில் உள்ள ஒரு கிராமம்.
மக்கள்தொகை
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இடையார் கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 572 ஆகும். இதில் 269 ஆண்கள் மற்றும் 303 பெண்கள் ஆவர். மொத்த மக்கள்தொகையில் 78.63 சதவிகித மக்கள் பேர் கல்வியறிவு பெற்றவர்கள்.
மேற்கோள்கள்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
|
597548
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE
|
மக்மூத் பெகடா
|
சுல்தான் மக்மூத் பெகடா அல்லது முதலாம் மக்மூத் ஷா (Mahmud Begada or Mahmud Shah I) ( ஆட்சி. 25 மே 1458 – 23 நவம்பர் 1511 ) குஜராத் சுல்தானகத்தின் மிக முக்கியமான சுல்தான் ஆவார். இளம் வயதிலேயே அரியணையில் அமர்ந்த இவர், பாவாகத் மற்றும் ஜூனாகத் கோட்டைகளை வெற்றிகரமாக போர்களில் கைப்பற்றினார். இது அவருக்கு பெகடா என்ற பெயரைக் கொடுத்தது. சம்பானேரை தலைநகராக நிறுவினார்.
இரண்டாம் குத்புத்தீன் அகமத் ஷாவின் மரணத்திற்குப் பிறகு, பிரபுக்கள் முதலாம் அகமத் ஷாவின் மகனான அவரது மாமா தாவூத் கானை அரியணையில் அமர்த்தினர். ஆனால் அரச குலத்தில் பிறக்காததால் உயர் பதவிகளுக்கு நியமித்து முறையற்ற செயலாகக் கருதப்பட்டது. ஏழு அல்லது இருபத்தேழு நாட்களுக்குள், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் 1459 இல் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் பதே கான், முதலாம் மக்மூத் ஷா என்ற பட்டத்துடன் பதின்மூன்று வயதில் அரியணையில் அமர்ந்தார்.
மேற்கோள்கள்
1445 பிறப்புகள்
குசராத் வரலாறு
|
597549
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88
|
அஜிங்கியதாரா கோட்டை
|
அஜிங்கியதாரா கோட்டை (''Ajinkyatara Fort" ) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தின் தலைமையிடமான சதாரா நகரத்தைச் சுற்றியுள்ள 7 மலைகளில் ஒன்றான அஜியங்கியதாரா மலையில் 3,300 அடி உயரத்தில் அமைந்த மலைக்கோட்டை ஆகும்.
வரலாறு
சிலாஹர வம்ச மன்னர் போஜ ராஜன் 16ம் நூற்றாண்டில் அஜிங்கியதாரா கோட்டையை நிறுவினார். பின்னர் இக்கோட்டையை பிஜப்பூர் சுல்தானிடமிருந்து மராட்டியப் பேரரசர் சத்திரபதி சிவாஜி கைப்பற்றினார். பின்னர் இக்கோட்டை 1780ல் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் வசம் சென்றது. பின்னர் மராட்டிய சத்திரபதி சாகுஜி காலத்தில் இக்கோட்டையைக் கைப்பற்றினார். மூன்றாம் ஆங்கிலேய-மராட்டியப் போரின் முடிவில் 1818ல் இக்கோட்டை பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழ் சென்றது. இந்தியப் பிரிவினை]]க்கு பின்னர் இக்கோட்டை பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.
இதனையும் காண்க
இந்தியாவில் உள்ள கோட்டைகளின் பட்டியல்
வெளி இணைப்புகள்
Ajinkyatara Fort Satara
மேற்கோள்கள்
இந்தியாவிலுள்ள கோட்டைகள்
மகாராட்டிர கோட்டைகள்
சாத்தாரா மாவட்டம்
|
597550
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D
|
அசிநாப்தோகுயினோன்
|
அசிநாப்தோகுயினோன் (Acenaphthoquinone) என்பது C12H6O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். பல்வளைய அரோமாட்டிக் ஐதரோகார்பனான அசிநாப்தீனின் குயினோன் வழிப்பெறுதியாக இச்சேர்மம் கருதப்படுகிறது. அசிநாப்தோகுயினோன் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. தண்ணீரில் இது கரையாது. சில வேளாண் வேதிப்பொருள்களையும் சில சாயங்களையும் தயாரிப்பதற்கான முன்னோடி சேர்மமாக அசிநாப்தோகுயினோன் பயன்படுகிறது.
தயாரிப்பு
பொட்டாசியம் இருகுரோமேட்டுடன் அசிநாப்தீனைச் சேர்த்து ஆக்சிசனேற்ற வினைக்கு உட்படுத்தினால் ஆய்வகத்தில் அசிநாப்தோகுயினோனை தயாரிக்கலாம். வணிக ரீதியான தயாரிப்பில் பெராக்சைடு சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்யப்படுகிறது. அதிகப்படியான ஆக்சிசனேற்றம் நாப்தலீன் இருகார்பாக்சிலிக் நீரிலியை அளிக்கிறது.
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
National Pollutant Inventory - Polycyclic Aromatic Hydrocarbon Fact Sheet
PAHs - including structural diagrams
Entry at ChemicalLand21.com
குயினோன்கள்
ஈனோன்கள்
அரோமாட்டிக் சேர்மங்கள்
பல்வளைய அரோமாட்டிக் சேர்மங்கள்
|
597551
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
|
சுல்யா சட்டமன்றத் தொகுதி
|
சுல்யா சட்டமன்றத் தொகுதி (, ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். தட்சிண கன்னட மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 207 ஆகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
கர்நாடக சட்டமன்றத் தொகுதிகள்
தட்சிண கன்னட மாவட்டம்
|
597554
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
|
இந்திய இராணுவ விவகாரங்கள் துறை
|
இராணுவ விவகாரங்கள் துறை (Department of Military Affairs) (சுருக்கமாக:DMA), இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு துறை ஆகும். இத்துறையின் அலுவல்-சாரா செயலாளராக பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவர் செயல்படுவர். இராணுவ விவகாரங்கள் துறையானது இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கும் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இடையே பாலமாக செயல்படும்.
செயல்பாடு
இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளைக் கொண்ட இராணுவ விவகாரங்கள் துறையானது ஆயுதக் கொள்முதல், பயிற்சி மற்றும் பணியாளர்கள் போன்ற பல்வேறு துறைகளில் கூட்டுத் தன்மையை ஊக்குவிக்கும். இராணுவ விவகாரங்கள் துறையானது ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணியாளர்களின் தலைமையகம், தரைப்படை, வான்படை மற்றும் கடற்படைகளின் தலைமையகத்துடன் தொடர்புடன் இருக்கும். மேலும் முப்படைகளின். கூட்டுத் திட்டமிடல் மூலம் கூட்டுத் தன்மையை மேம்படுத்துதல், வளங்களின் உகந்த பயன்பாட்டிற்கான மறுசீரமைப்பை எளிதாக்குதல் மற்றும் சேவைகளால் உள்நாட்டு தளவாடங்களை பயன்படுத்துவதை மேம்படுத்துதல் ஆகியவற்றை கையாளும்.
அமைப்பு
இந்தத் துறையானது இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவரின் தலைமையில் செயல்படுகிறது. இவரே இத்துறையின் அலுவல்-சாரா அரசுச் செயலராக செயல்படுவர். அரசு செயலரின் கீழ் ஒரு கூடுதல் செயலாளர், ஐந்து இணை செயலர்கள், 13 துணைச் செயலாளர்கள் மற்றும் இருபத்தைந்து சார்புச் செயலாளர்கள் செயல்படுவர்.
மேற்கோள்கள்
இந்திய பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய படைத்துறை
|
597559
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
|
காசாக்கரையிலுள்ள நகரங்களின் பட்டியல்
|
காசாவிலுள்ள ஹமாஸ் அரசாங்கத்தின் ஆளுகைக்குட்பட்ட 5 ஆளுநரகங்களில் அடங்கும் நகரங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
வரலாறு
மேற்குக் கரை, காசாக்கரை ஆகியவை குறித்த 1995 ஆம் ஆண்டு இடைக்கால ஒப்பந்தங்களின் அடிப்படையில், பாலத்தீனியர்கள் அதிகம் வாழுமிடங்களுக்கான (நிலப்பரப்பு A மற்றும் B) பொதுமக்கள் விவகாரங்களை பலத்தீன தேசிய ஆணையம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. (கிழக்கு ஜெருசலத்தின் நகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் இங்கு விதிவிலக்கு ஆகும்) நிலப்பரப்பு Bக்கு உரிய பாதுகாப்பு விவகாரங்களுக்கு இசுரேல் பொறுப்பேற்றுக்கொண்டது.
பாலத்தீனிய புள்ளியியல் நடுவண் செயலகம் தனது அலுவல்முறை மக்கட்தொகை கணக்கெடுப்பினை 1997 ஆம் ஆண்டில் முதன்முதலாக செய்தது. அதன் பிறகு உத்தேசமான கணக்கீட்டின் அடிப்படையிலேயே மக்கட்தொகை குறித்த தரவு அறிவிக்கப்படுகிறது. கடைசியாக 2006 ஆம் ஆண்டில் மக்கட்தொகை குறித்த தரவு வெளியிடப்பட்டது. 2007 ஆம் ஆண்டு நடந்த 'காசாவிற்கான போராட்டம்' நிகழ்விற்குப் பிறகு, ஹமாஸ் குழுவால் காசாக்கரை நிர்வகிக்கப்படுகிறது.
நகரங்களின் பட்டியல்
மேற்கோள்கள்
|
597566
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
|
நூக்கலா நரோதம் ரெட்டி
|
நூக்கலா நரோதம் ரெட்டி, (Nookala Narotham Reddy) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சுருக்கமாக நூ. நரோத்தம் ரெட்டி என்று அழைக்கப்படுகிறார். உசுமானியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.
சிறீ ரங்கா ரெட்டியின் மகனாக வாரங்கல் மாவட்டத்தில் உள்ள மனுகொண்டாவில் 1921 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சுலோச்சனா தேவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 மகன்கள் இருந்தனர். முதுகலை பட்டம் பெற்ற இவர், கோலகொண்டா பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். 1956 ஆம் ஆண்டில் ஐதராபாத்து பிரதேச காங்கிரசு கமிட்டி மற்றும் 1960 இல் ஆந்திர பிரதேச மாநில காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்தார்.
1956 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி முதல் 1960 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் தேதி வரையிலும், மீண்டும் ஏப்ரல் 3, 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி முதல் 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வரையிலும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.
சுமார் இரண்டு தசாப்தங்களாக உசுமானியா பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் கூட்டமைப்பு உறுப்பினராக இருந்தார். 1972 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஆந்திர பிரதேச லலித் கலா அகாடமியின் தலைவராகவும் தேசிய லலித் கலா அகாடமியின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
ரெட்டி 1984 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதியன்று இறந்தார்.
மேற்கோள்கள்
வாரங்கல் மாவட்ட நபர்கள்
1984 இறப்புகள்
1921 பிறப்புகள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
ஆந்திரப் பிரதேச அரசியல்வாதிகள்
|
597568
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
|
மகுண்ட சுப்பராம ரெட்டி
|
மகுண்ட சுப்பராம ரெட்டி (Magunta Subbarama Reddy) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று நெல்லூர் மாவட்டத்தில் மகுண்ட ராகவ ரெட்டிக்கு மகனாக இவர் பிறந்தார். 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஓங்கோல் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் (ஐ) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991 முதல் 1996 வரை மக்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
வாழ்க்கைக் குறிப்பு
மகுண்ட சுப்பராம ரெட்டி கர்நாடகா மாநிலம் தும்கூரில் பொறியியல் படித்துவிட்டு படிப்பை இடையில் நிறுத்திக் கொண்டார். 1967 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பார்வதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 1 மகள் உள்ளனர்.
பாலாச்சி குழுமத்தின் நிறுவனராக மகுண்ட சுப்பராம ரெட்டி அறியப்படுகிறார். மகுண்டா சுப்பராமிரெட்டி அறக்கட்டளை மூலம் இலவச குடிநீர் விநியோகம் செய்து சமூகப்பணியாற்றினார். நெல்லையில் உள்ள ரங்கநாதசுவாமி கோவிலின் அறங்காவலராக இருந்தார். சென்னை கலாசாகர் கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். ஏழைகளுக்கு இலவச குடிநீர் விநியோகம், கோயில்கள் கட்டுதல், சமுதாயக் கூடங்கள், நலிந்த பிரிவினருக்கு திருமண மண்டபங்கள் கட்டுதல் போன்ற சேவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Official biographical sketch in Parliament of India website
1947 பிறப்புகள்
1995 இறப்புகள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
ஆந்திரப் பிரதேச அரசியல்வாதிகள்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள்
|
597569
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%A9%20%E0%AE%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
குரோக்கர் வன ஈப்பிடிப்பான்
|
குரோக்கர் வன ஈப்பிடிப்பான் (Crocker jungle flycatcher)(சைனோரிசு ருபிகிரிசா) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பமான மியூசிகாபிடேயில் உள்ள ஒரு பாசரின் பறவை சிற்றினம் ஆகும். இது போர்னியோவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
குரோக்கர் வன ஈப்பிடிப்பான் 2021-ல் பன்னாட்டு பறவையிலாளர்கள் சங்கத்தினால் செம்பழுப்பு வால் வன ஈப்பிடிப்பானிலிருந்து (சைனோரிசு ரூபோகாடேடா) தனித்தனி சிற்றினமாகப் பிரிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
ஈ-பிடிப்பான்கள்
அகணிய உயிரிகள்
|
597570
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D
|
ஆலத்தியூர்
|
ஆலத்தியூர் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
மக்கள்தொகை
மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஆலத்தியூர் கிராமத்தில் 2,199 ஆண்கள் 1,813 பெண்கள் மொத்தம் 4012 பேர் இருந்தனர்.
மேற்கோள்கள்
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata
|
597571
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
|
ஆனிகுடிச்சான் வடக்கு
|
ஆனிகுடிச்சான் வடக்கு (Anikudichan North) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
மக்கள்தொகை
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அணைகுடிச்சான் (வடக்கு) கிராமத்தில் 796 ஆண்கள் மற்றும் 727 பெண்கள் என மொத்தம் 1523 பேர் இருந்தனர்.
மேற்கோள்கள்
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata
|
597572
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%20%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D
|
குவாதம் இ ரசூல்
|
குவாதம் இ ரசூல் (Qadam e Rasool) இந்தியாவின் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் அமைந்துள்ளது. இது ஒடிசாவில் உள்ள முகலாய கட்டிடக்கலையின் ஒரு புனிதத் தலமாகும். குவாதம் ரசூல் வளாகத்தில் ஏராளமான தர்காக்கள், மோட்டி, குவாதம் இ ரசூல் என்ற பெயர்களில் இரண்டு பள்ளிவாசல்கள் , பல கல்வெட்டுகள் உள்ளன.
ஆராய்ச்சியாளர் முகமது யாமின் கூறுகையில், "கட்டிடக்கலைப்படி இது முகலாய காலத்து அழகிய கோயில், ஆனால் ஒடியா பாணியில் கட்டப்பட்ட ஒரு கோயில் கட்டிடம் என்கிறார். எனவே, இதை ஒடிசாவில் உள்ள இந்து-முசுலிம் கட்டிடக்கலையின் கலவையாக கருதப்படுகிறது."
மயானம்
கோயிலின் உள்ளே, ஒரு பெரிய கல்லறை உள்ளது, இதில் சாகீத் பானி, அதாருதீன் முகமது, முகமது மொக்சின், முகம்மது தாகி கான், சயீத் முகமது, பேகம் பதார் உன் நிசா அக்தர், அப்சல்-உல் அமீன், சிக்கந்தர் ஆலம், உசைன் ராபி காந்தி ஆகியவர்களின் உடல்கள் . புதைக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் பல பாரசீக கல்வெட்டுகளும் உள்ளன.
மேற்கோள்கள்
முகலாயக் கட்டிடக்கலை
ஒடிசா
|
597573
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
|
ஆஃப்ரின் ஆறு
|
ஆஃப்ரின் ஆறு (Afrin River) ( நஹ்ர் இஃப்ரீன் ; Kurdish ; வடக்கு சிரிய மொழி : நஹர் ʻAfrīn ; ) துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள ஒரோண்டசு ஆற்றின் துணை ஆறாகும். இது துருக்கியின் காசியான்டெப் மாகாணத்தில் உள்ள கர்தால் மலைகளில் உயர்ந்து, சிரியாவின் ஆஃப்ரின் நகரத்தின் வழியாக தெற்கே பாய்ந்து, மீண்டும் துருக்கியில் நுழைகிறது. இது முன்னாள் அமிக் ஏரியின் இடத்தில் கராசுவுடன் இணைகிறது, மேலும் இதன் நீர் ஒரு கால்வாய் மூலம் ஒரோண்டேசுக்கு பாய்கிறது.
ஆற்றின் மொத்த நீளம் 131 கிலோமீட்டர்கள் (81 மைல்) ஆகும். இதில் 54 கிலோமீட்டர்கள் (34 மைல்கள்) சிரியாவில் உள்ளது. கத்தே மாகாணத்தில் இருந்து சுமார் 250,000,000 கன சதுர மீட்டர்கள் (8.8) கன சதுர அடி ஆண்டுதோறும் நீரோட்டம் பாய்கிறது. அதே சமயம் சுமார் 60,000,000 கன சதுர மீட்டர்கள் (2.1 ) கன சதுர அடி அளவிலான நீரோட்டம் சிரியாவில் இருந்து வருகிறது. இந்த ஆறு ஆஃப்ரின் நகரின் வடக்கே ஆஃப்ரின் அணையால் தடுக்கப்பட்டுள்ளது.
அசிரிய மக்களுக்கு ஆப்ரே என்றும் செலூசிட் சகாப்தத்தில் ஆய்னோபாராசு என்றும், ரோமானிய காலத்தில் உஃப்ரெனஸ் என்றும் அறியப்பட்டது. அபுல்-ஃபிதா இதை நஹ்ர் இஃப்ரின் என்று குறிப்பிடுகிறார்.
மேற்கோள்கள்
துருக்கிய ஆறுகள்
|
597574
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87
|
யூனஸ் எம்ரே
|
யூனஸ் எம்ரே ( Yunus Emre ) (1238-1328) டெர்விஸ் யூனஸ் என்றும் அழைக்கப்படும் இவர் துருக்கிய நாட்டுப்புறக் கவிஞரும் சூபி துருக்கிய கலாச்சாரத்தில் பெரிதும் தாக்கம் ஏற்படுத்தியவருமாவார். இரிசலேது’ன் நுஷியே என்ற கவிதை நூல் இவரது மிக முக்கியமான புத்தகமாகும். இவர் பழைய அனத்தோலியன் துருக்கிய மொழியில் எழுதினார். இவரது பெயர், யூனஸ் என்பது, ஜோனா என்ற ஆங்கிலப் பெயருக்கு இணையான அரபு மொழியாகும். யுனெஸ்கோ பொது மாநாடு 1991 ஆம் ஆண்டை கவிஞர் பிறந்த 750 வது ஆண்டு, சர்வதேச யூனஸ் எம்ரே ஆண்டாக அறிவிக்கும் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.
யூனஸ் எம்ரே புதிய உருவான துருக்கிய இலக்கியத்தின் மீது பெரும் செல்வாக்கு செலுத்தியுள்ளார். இது பாரசீக மற்றும் அரபு மொழிகளின் கலவையாக இருந்தது. அகமது யெசெவி மற்றும் சுல்தான் வாலாட் ஆகியோருக்குப் பிறகு, நன்கு அறியப்பட்ட கவிஞர்களில் ஒருவர். பாரசீக அல்லது அரபு மொழியில் மட்டும் அல்லாமல், இவரது பிராந்தியத்தில் பேசப்படும் பழைய அனத்தோலியன் துருக்கிய மொழியில் கவிதைகளை இயற்றினார். மத்திய மற்றும் மேற்கு அனத்தோலியாவில் உள்ள மக்களின் பிரபலமான பேச்சுக்கு மிக நெருக்கமாக இவரது எழுத்துகள் இருக்கிறது. இது பல அநாமதேய நாட்டுப்புறக் கவிஞர்கள், நாட்டுப்புறப் பாடல்கள், விசித்திரக் கதைகள், புதிர்கள் மற்றும் பழமொழிகளின் மொழியாகும்.
இதனையும் காண்க
சூபித்துவம்
சான்றுகள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Turkish television series (2015-), episode list at IMDb: Season 1, episodes 1-22 & Season 2, episodes 1-22, 23
Yunus Emre's Humanism
Yunus Emre & Humanism (short)
Mystical Poetry Of Yunus Emre
1321 இறப்புகள்
1238 பிறப்புகள்
அரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்
சூபி அறிஞர்கள்
|
597577
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
|
ஆனிகுடிச்சான் தெற்கு
|
ஆனிகுடிச்சான் தெற்கு என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
மக்கள்தொகை
2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அணைகுடிச்சான் (தெற்கு) கிராமத்தில் 1335 ஆண்கள் மற்றும் 1395 பெண்கள் என மொத்தம் 2730 பேர் இருந்தனர்.
மேற்கோள்கள்
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்
Coordinates on Wikidata
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.