id
stringlengths
1
6
url
stringlengths
31
789
title
stringlengths
1
93
text
stringlengths
9
259k
598466
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
தாஸ்யம் பிரணாய் பாஸ்கர்
தாஸ்யம் பிரனய் பாஸ்கர் (Dasyam Pranay Bhasker) (பிறப்பு 6 ஜூலை 1956) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தார். கனம்கொண்டா சட்டமன்றத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார். ஆரம்ப கால வாழ்க்கை தாஸ்யம் பிரனாய் பாஸ்கர் 1956 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி வாரங்கல் மாவட்டத்திலுள்ள பார்க்கலில் பிறந்தார். அரசியல் வாழ்க்கை 1989 ஆம் ஆண்டு ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் கனம்கொண்டா சட்டமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பி. வி. ரங்காராவிடம் தோல்வியடைந்தார். ஆனால் 1994 சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு பி. வி. ரங்காராவைத் தோற்கடித்தார். மேலும் என். டி. ராமராவ் அமைச்சரவையில் விளையாட்டு, இளைஞர் சேவைகள், இளைஞர் நலன், என்சிசி சுயவேலைவாய்ப்பு துறை அமைச்சராகவும் பணியாற்றினார். தெலுங்கானா இயக்கம் தாஸ்யம் பிரனாய் பாஸ்கர் அப்போதைய தனி தெலுங்கானா இயக்கத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தார். மேற்கோள்கள் 1999 இறப்புகள் தெலுங்கு தேசம் கட்சி அரசியல்வாதிகள் தெலங்காணா நபர்கள் 1956 பிறப்புகள்
598469
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%20%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
நேர்ம மெய்யெண்கள்
கணிதத்தில் நேர்ம மெய்யெண்கள் (positive real numbers) கணம் என்பது, பூச்சியத்தைவிடப் பெரிய மெய்யெண்களடங்கிய கணமாகும். இது மெய்யெண்கள் கணத்தின் உட்கணம் ஆகும். இயல் எண்கள், நேர்ம முழு எண்கள், நேர்ம விகிதமுறு எண்கள், நேர்மவிகிதமுறா எண்கள் ஆகிய அனைத்தும் நேர்ம மெய்யெண்களில் அடங்கும். விகிதமுறா எண் வகையைச் சேர்ந்த விஞ்சிய எண்கள், மற்றும் (3.14159265...) ஆகியவையும் நேர்ம மெய்யெண்களே. நேர்ம மெய்யெண்களுக்குச் சில எடுத்துக்காட்டுகள்: 5, 4/3, 8.6, √2, π(3.1415926535...) "எதிர்மமில்லா மெய்யெண்கள் கணம்" (non-negative real numbers) என்பது நேர்ம மெய்யெண்களோடு சேர்த்து பூச்சியத்தையும் உள்ளடக்கியது: ஆகிய இரு குறியீடுகளும் மேலே தரப்பட்ட இரு கணங்களையும் குறிப்பதற்குக் குழப்பமாகப் பயன்படுத்தப்பட்டாலும், அல்லது என்ற குறியீடு கணத்தையும் அல்லது என்பது என்ற கணத்தையும் குறிப்பதற்குப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது இயற்கணிதத்தில் பூச்சியத்தை விட்டுவிட்டு எழுதுவதற்கு விண்மீன் குறியீட்டைப் பயன்படுத்தும் வழக்கத்துடன் ஒத்திருப்பதால் வேறுபாட்டைப் புரிந்துகொள்ள உதவுகிறது. சிக்கலெண் தளத்தில் கணமானது நேர்ம மெய்யச்சினைக் குறிக்கிறது; ஒரு நேர் கிடைக்கதிராக வரையப்படுகிறது. சிக்கலெண்ணின் போலார் வடிவ உருவகிப்பிற்கு இக்கதிர் ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. நேர்ம மெய்யெச்சானது () என்ற சிக்கலெண்களைக் குறிக்கிறது. பண்புகள் நேர்ம மெய்யெண்களின் கணம் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படை கணிதச் செயலிகளைப் பொறுத்து அடைவுப் பண்பு பெற்றுள்ளது. தரப்பட்டதொரு நேர்ம மெய்யெண் எனில் அதன் முழுஎண் அடுக்குகளாலான தொடர்வரிசை கீழ்க்கண்ட மூன்று விதங்களில் இருக்கும்: எனில் தொடர்வரிசையின் எல்லை பூச்சியமாகும். எனில் தொடர்வரிசை மாறிலியாக இருக்கும். எனில் தொடர்வரிசை வரம்பற்றதாக இருக்கும். குறியிடப்பட்ட எண்கள் நேர்ம எண்கள், பூச்சியத்தை விடப் பெரியவை; எதிர்ம எண்கள் பூச்சியத்தை விடச் சிறிய எண்கள். எனவே பூச்சியத்தைத் தவிர மற்ற மெய்யெண்கள் எல்லாம், ஒன்று நேர்ம எண்ணாகவோ அல்லது எதிர்ம எண்ணாகவோ இருக்க வேண்டும். நேர்ம எண்கள் என்பதைக் காட்ட அந்த எண்களுக்கு முன் கூட்டல் குறியும் (), எதிர்மம் என்பதைக் காட்ட அந்தந்த எண்களுக்கு முன் கழித்தல் குறியும் () இடப்படுகின்றன. பொதுவாக, நேர்ம எண்களை அவற்றுக்கு முன் கூட்டல் குறியின்றி எழுதுவது கணித வழமையாகும். பூச்சியத்திற்கு குறி இல்லை. பூச்சியமானது, நேர்ம எண்ணோ அல்லது எதிர்ம எண்ணோ இல்லையென்பதால், ஒரு எண் பூச்சியமாகவோ அல்லது நேர்ம எண்ணாகவோ இருக்கும் என்பதைக் காட்டுவதற்கு, அந்த எண் ”எதிர்மமற்ற எண்” என்று குறிப்பிடப்படும். அதேபோல, ஒரு எண் பூச்சியமாகவோ அல்லது எதிர்ம எண்ணாகவோ இருக்கும் என்பதைக் காட்டுவதற்கு, அந்த எண் ”நேர்மமற்ற எண்” என்று குறிப்பிடப்படும். எண் கோடு நேர்ம எண்கள், எதிர்ம எண்கள், பூச்சியம் ஆகிய மூன்றுக்கும் இடையேயுள்ள தொடர்பு, ஒரு எண் கோட்டின் மூலம் காட்டப்படுகிறது. எண்கோட்டின் மீதமையும் ஒவ்வொரு புள்ளிக்கும் ஒத்ததொரு மெய்யெண் உண்டு. இக்கோட்டின் மீதுள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒரு மெய்யெண்ணைக் குறிக்கும். எண்கோட்டிற்கும் மெய்யெண் கணத்திற்குமிடையே ஒன்றுக்கு-ஒன்று தொடர்புள்ளது. எண் கோட்டின் நடுவில் பூச்சியமும், அதற்கு வலப்புறக் கதிரில் நேர்ம மெய்யெண்களும், இடப்புறக் கதிரில் எதிர்ம மெய்யெண்களும் இடம்பெறுகின்றன. மேலே தரப்பட்டுள்ள எண்கோட்டின் வரைபடத்தில் -9 முதல் 9 வரையிலான முழுஎண்களுக்கான புள்ளிகள் மட்டுமே காணப்பட்டாலும் இக் கோடு முடிவில்லாமல் இருபுறமும் நீண்டு அனைத்து மெய்யெண்களையும் குறிக்கும். எண்கோடு இரு சமச்சீரான இரு அரைப்பகுதிகளாக எண் சுழியால் பிரிக்கப்படுகிறது. சுழிக்கு இடப்புறமுள்ள பகுதி எதிர் எண்களையும், வலப்புறமுள்ள பகுதி நேர் எண்களையும் குறிக்கின்றன. எந்தவொரு நேர்ம மெய்யெண்ணும் எந்தவொரு எதிர்ம மெய்யெண்ணையும்விடப் பெரியதாகும். மேற்கோள்கள் நூலாதாரம் மெய்யெண்கள்
598470
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D
பவன் சிங்
பவன் சிங் (Bawan Singh) ஓர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். சிங், கோண்டா மாவட்டத்தில் உள்ள கத்ரா பஜாரில் (சட்டமன்றத் தொகுதி) உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் 5 முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர் ஆவார். இவர் தனது தந்தை சிறீராம் சிங்கிற்குப் பின்னர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார். மேற்கோள்கள் வாழும் நபர்கள் கோண்டா மாவட்ட நபர்கள் உத்தரப் பிரதேச அரசியல்வாதிகள் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள்
598471
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF.%20%E0%AE%B5%E0%AE%BF.%20%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D
பி. வி. ரங்காராவ்
பாமுலபர்த்தி வெங்கட ரங்காராவ் (Pamulaparthi Venkata Ranga Rao) (1940 - 1 ஆகஸ்ட் 2013) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவின் மகன் ஆவார் ஆரம்ப கால வாழ்க்கை ரங்காராவ், ஐதராபாத் இராச்சியம், கரீம்நகர் மாவட்டத்திலுள்ள வங்காரா என்ற கிராமத்தில் பி. வி. நரசிம்ம ராவ் மற்றும் அவரது மனைவி சத்யம்மா ஆகியோருக்குப் பிறந்தார். இவர் உசுமானியா பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். இவருக்கு, பி.வி.ராஜேஸ்வர் ராவ் மற்றும் பி. வி. பிரபாகர் ராவ் என்ற இரு இளைய சகோதர்கள் உட்பட ஐந்து சகோதரிகளும் இருந்தனர். இவர் தனது வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருந்தார். தொழில் ராவ் வாரங்கல் மாவட்டத்திலுள்ள அனம்கொண்டா சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார். கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி அமைச்சரவையில் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். ஆகஸ்ட் 1, 2013 அன்று இறந்தார். மேற்கோள்கள் 2013 இறப்புகள் 1940 பிறப்புகள் தெலங்காணா அரசியல்வாதிகள்
598472
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF.%20%E0%AE%B5%E0%AE%BF.%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D
பி. வி. ராஜேஸ்வர் ராவ்
பாமுலபர்த்தி வெங்கட ராஜேசுவர் ராவ் (Pamulaparthi Venkata Rajeshwar Rao) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் மற்றும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக மக்களவையில் ஆந்திர பிரதேசத்தின் செகந்திராபாத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் இந்தியாவின் முன்னாள் இந்தியப் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவின் மகன் ஆவார். தனிப்பட்ட வாழ்க்கை இவர், ஐதராபாத் இராச்சியம், கரீம்நகர் மாவட்டத்திலுள்ள வங்காரா கிராமத்தில் பி. வி. நரசிம்ம ராவ் மற்றும் அவரது மனைவி சத்யம்மா ஆகியோருக்குப் பிறந்தார். இவர் உசுமானியா பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். இவருக்கு பி. வி. ரங்காராவ் மற்றும் பி.வி.பிரபாகர் ராவ் என்ற இரு சகோதரர்கள் இருந்தனர். மேற்கோள்கள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் 2016 இறப்புகள் 1946 பிறப்புகள்
598473
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF
ஆதிரெட்டி பவானி
ஆதிரெட்டி பவானி (Adireddy Bhavani) (பிறப்பு 1984 அல்லது 1985 ) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு முதல் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக ராஜமன்றி நகர்ப்புற சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஆரம்ப கால வாழ்க்கை ஆதிரெட்டி பவானி முன்னாள் மத்திய அமைச்சர் கிஞ்சராபு எர்ரான் நாயுடுவின் மகளும் ராம் மோகன் நாயுடுவின் சகோதரியும் ஆவார். ஐஐஎல்எம் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். சட்ட மேலவை உறுப்பினரான ஆதிரெட்டி அப்பா ராவின் மகன் ஆதிரெட்டி சிறீநிவாசை மணந்தார். அரசியல் வாழ்க்கை ஆதிரெட்டி பவானி 2019 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ராஜமன்றி நகர்ப்புற சட்டப்பேரவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். மேற்கோள்கள் ஆந்திரப் பிரதேச அரசியல்வாதிகள் தெலுங்கு மக்கள் தெலுங்கு தேசம் கட்சி அரசியல்வாதிகள் வாழும் நபர்கள் 1980கள் பிறப்புகள்
598474
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81
கிஞ்சராபு எர்ரான் நாயுடு
கிஞ்சராபு எர்ரான் நாயுடு (Kinjarapu Yerran Naidu) (23 பிப்ரவரி 1957 - 2 நவம்பர் 2012) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். ஆரம்ப கால வாழ்க்கை எர்ரான் நாயுடு, 23 பிப்ரவரி 1957 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள நிம்மடா என்ற தொலைதூர கிராமத்தில் கோபுல வெலமா குடும்பத்தில் பிறந்தார். இவரது சகோதரர் கிஞ்சராபு அச்சன்நாயுடுவும் மகன் ராம் மோகன் நாயுடுவும் அரசியல்வாதியாவார்கள். தொழில் நாயுடு விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். மேலும் 1982 இல் என். டி. ராமராவ் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். 1983 ஆம் ஆண்டில், நாயுடு தனது 25 வயதில் தனது சொந்த மாவட்டத்தில் உள்ள அரிச்சந்திரபுரத்தில் இருந்து மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டப் பேரவை உறுப்பினர்களி மிகவும் இளைய உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்.மீண்டும் 1985 இல் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989ல் தெலுங்கு தேசம் கட்சி இவருக்கு வாய்பளிக்காத காரணத்தால், சுயேட்சையாகப் போட்டியிட்டு மீண்டும் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மீண்டும் கட்சிக்கு திரும்பினார். பின்னர், 1994 இல் தொடர்ந்து நான்காவது முறையாக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1995 இல் என். டி. ராமராவுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியைத் தலைமை தாங்கிய சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைத்தபோது அவருக்கு ஆதரவளித்தார். 1995 முதல் 1996 வரை அரசு தலைமைக் கொறடாவாகவும் இருந்தார். தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்களில் எர்ரன்னா என்று பிரபலமாக அறியப்படும் நாயுடு, 1996 ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தலில் ஆந்திரப் பிரதேசத்தில் கட்சியால் நிறுத்தப்பட்டார். ஸ்ரீகாகுளம் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், தேசிய அரசியலில் தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய தலைவராக உருவெடுத்தார். ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் தெலுங்கு தேசம் கட்சி இணைந்தவுடன், நாயுடு மத்திய அமைச்சரானார், ஊரக வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறையை நிர்வகித்தார். 1998 மற்றும் 1999 தேர்தல்களில் மக்களவைத் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார். 2004 தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சிங்குபுரம் நகரில் இவரது வாகனத்தின் மீது வெடிகுண்டு வீச முயன்ற நக்சலைட்களின் ( மாவோயிஸ்ட் கம்யூனிஸ்டுகள்) கொலை முயற்சியில் இருந்து இவர் உயிர் தப்பினார். நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மக்களவையில் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். 2009 தேர்தலில், நாயுடு காங்கிரசு கட்சியின் கில்லி கிருபா ராணியால் தோற்கடிக்கப்பட்டார். இறப்பு எர்ரான் நாயுடு, 2 நவம்பர் 2012 அன்று விசாகப்பட்டினத்தில் ஒரு திருமண விழாவில் இருந்து திரும்பும் போது, தனது சொந்த மாவட்டமான ஸ்ரீகாகுளம் அருகே ஒரு வாகன விபத்தில் இறந்தார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Official biographical sketch in Parliament of India website 14வது மக்களவை உறுப்பினர்கள் 13வது மக்களவை உறுப்பினர்கள் தெலுங்கு தேசம் கட்சி அரசியல்வாதிகள் தெலுங்கு மக்கள் 2012 இறப்புகள் 1957 பிறப்புகள்
598475
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE
விஜயராஜமல்லிகா
தெய்வத்தின் மகள் என்று அழைக்கப்படும் விஜயராஜமல்லிகா (Vijayarajamallika) மலையாள இலக்கியத்தில் ஒரு திருநங்கைக் கவிஞராவார், இவர் ஒரு எழுத்தாளர், ஆசிரியர், சமூக சேவகர், ஊக்கமளிக்கும் பேச்சாளர் மற்றும் ஆர்வலர் ஆவார். ஆரம்ப வாழ்க்கை, குடும்பம் மற்றும் கல்வி விஜயராஜமல்லிகா, 1985 ஆம் ஆண்டு, கேரளா, திருச்சூர் மாவட்டம் , முதுவாராவில், கேரள மாநில மின்சார வாரியத்தின் (KSEB) ஓய்வுபெற்ற கண்காணிப்பாளரான கணியம்கோணத்து வீட்டில் ஒய். கிருஷ்ணன் மற்றும் ஆசிரியரான ஜெயா கிருஷ்ணனுக்கு மகனாகப் பிறந்தார். புறநாட்டுகர கேந்திரிய வித்யாலயாவில் தனது ஆரம்பக்கல்வியினைப் பயின்றார். ஆங்கில இலக்கியம் மற்றும் வரலாற்றில் இளங்கலைப் பட்டத்தை திருச்சூரில் உள்ள புனித தாமஸ் கல்லூரியில் 2005 இல் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் இரண்டாவது இடம் பெற்றார். 2009 இல் ராஜகிரி சமூக அறிவியல் கல்லூரியில் முதுகலை சமூகப்பணியில் (MSW) பட்டம் பெற்றார். தொழில் வாழ்க்கை தெய்வத்தின் மகள் ( கடவுளின் மகள் ) எனும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் மலையாளத் துறையின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.தெய்வத்தின் மகள் என்ற கவிதையிலிருந்து "மாறானந்தரம்" என்ற கவிதை கேரளாவின் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது மேலும் என். பி ஆசுலே என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆர்பர் காலின்சு எழுதிய தி வேர்ல்ட் தட் பிலோங்ஸ் டு அஸ் எனும் புத்தகத்தில் வெளியிடப்பட்டது. மேலும் "நீலாம்பரி" என்ற மற்றொரு கவிதை, ஸ்ரீ சங்கராச்சாரியார் சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. சான்றுகள் வெளி இணைப்புகள் Daily Hunt மல்லிகா வசந்தம்  21 ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள் இந்தியப் பெண் கவிஞர்கள் வாழும் நபர்கள் 1985 பிறப்புகள்
598476
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D
குர்கா ஜெய்பால் யாதவ்
குர்கா ஜெய்பால் யாதவ் (Gurka Jaipal Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தெலங்காண சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கல்வகுர்த்தி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 1999 முதல் 2004 வரையிலும், 2009 முதல் 2014 வரையிலும் பின்னர் 2018 முதல் தற்போது வரை பதவி வகித்துவருகின்றார். யாதவ் பாரத் இராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தெலுங்கு தேசம் கட்சி அரசியல்வாதிகள் வாழும் நபர்கள் தெலங்காணா சட்டப் பேரவை உறுப்பினர்கள்
598477
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE
கொப்புல வெலமா
கொப்புல வெலமா (Koppula Velama) அல்லது கொப்பு வெலமா என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் காணப்படும் ஒரு தெலுங்கு விவசாய சாதியாகும். இவர்கள் முதன்மையாக வடக்கு ஆந்திரா பகுதியிலும், மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் சிறிய மக்கள்தொகையுடன் காணப்படுகின்றனர். இவர்கள் ஆந்திரப் பிரதேச அரசால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வடக்கு ஆந்திரா பகுதியில் அரசியல் ரீதியாக நல்ல பிரதிநிதித்துவம் பெற்றுள்ளார்கள். இவர்கள் வெலமா சாதியிலிருந்து வேறுபட்டவர். பெயர்க்காரணம் தெலுங்கில் 'கொப்பு' என்று அழைக்கப்படும் முடிச்சு வடிவில் தலையில் முடியை வெட்டாமல் தலையில் கட்டும் பழக்கத்திலிருந்து சாதிப் பெயர் தோன்றியிருக்கலாம். எனவே, இவர்கள் கொப்பு வெலமா அல்லது கொப்புல வெலமா என்று அழைக்கப்படுகின்றனர். வரலாறு 1972 ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேச அரசு இச்சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்த்தது. ஆனால் சமூகத் தலைவர்கள் இப்பிரிவில் சேர்ப்பதில் அதிருப்தி அடைந்தனர். மேலும், பட்டியலில் புதிய சமூகங்களை சேர்ப்பதை நிறுத்துமாறு மாநில அரசைக் கோரினர். ஆந்திரப் பிரதேச அரசின் பிற்படுத்தப்பட்ட சாதிகள் பட்டியலில் கொப்புல வெலமா சமூகமும் தங்களைச் சேர்க்க முயல்கிறது. கொப்பு வெலமாவினர் பொலிநாட்டி வெலமா சாதியினரின் உறவினர் குழுவாகும். அவர்கள் வட ஆந்திரப் பிராந்தியத்திலும் உள்ளனர். இவர்கள் இருவரும் பத்மநாயக வெலமா சாதியிலிருந்து வேறுபட்டவர்கள் ( வெலமா தோரா என்றும் அழைக்கப்படுவார்கள்). கொப்புல வெலமாவினர் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் கவரா மற்றும் காப்பு சாதியினருடன் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். விசாகப்பட்டினம் மற்றும் அனகப்பள்ளி மாவட்டங்களில் இந்த மூன்று சாதியினரும் பொருளாதார ரீதியாகவும், எண்ணிக்கையிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். குறிப்பிடத்தக்க மக்கள் பூரி ஜெகன்நாத் கிஞ்சராபு எர்ரான் நாயுடு சிந்தகாயலா அய்யண்ணா பட்ருடு மேற்கோள்கள் தெலுங்குச் சமூகங்கள்
598480
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81
சிந்தகாயலா அய்யண்ணா பட்ருடு
சிந்தகாயலா அய்யன்னா பட்ருடு (Chintakayala Ayyanna Patrudu) (பிறப்பு 4 செப்டம்பர் 1957) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதியாவார். நர்சிப்பட்டினம் தொகுதியில் இருந்து ஆந்திர பிரதேச சட்டமன்றத்திற்கு பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்ப கால வாழ்க்கை ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நர்சிப்பட்டினத்தில் கொப்புல வெலமா குடும்பத்தில் பிறந்தார். 1978 இல் காக்கிநாடாவிலுள்ள அரசுக் கல்லூரியில் கலைப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அரசியல் வாழ்க்கை தெலுங்கு தேசம் கட்சியில் உறுப்பினராக இருந்து அரசியலை தொடங்கினார். பின்னர், விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நர்சிப்பட்டினம் தொகுதியில் கட்சியின் வேட்பாளராக நியமிக்கப்பட்டார். 1983-88, 1994-96, 1999-2009 மற்றும் 2014 ஆகிய ஆறு முறை தெலுங்கு தேசம் கட்சி சார்பில், அதே தொகுதியிலிருந்து ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996-98ல் அனகப்பள்ளி தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989-93, 2009 மற்றும் 2019 இல் அனகப்பள்ளி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார், மேலும் இவர் 2014-19 வரை ஆந்திர பிரதேச அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றினார். மேற்கோள்கள் தெலுங்கு தேசம் கட்சி அரசியல்வாதிகள் 1956 பிறப்புகள் வாழும் நபர்கள் 11வது மக்களவை உறுப்பினர்கள்
598507
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
பாக்பாசா சட்டமன்ற தொகுதி
பாக்பாசா சட்டமன்றத் தொகுதி (Bagbassa Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது வடக்கு திரிபுரா மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். சட்டப் பேரவை உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2018 மேலும் பார்க்கவும் திரிபுரா சட்டப் பேரவையின் தொகுதிகளின் பட்டியல் வடக்கு திரிபுரா மாவட்டம் மேற்கோள்கள் திரிபுரா சட்டமன்றத் தொகுதிகள் வடக்கு திரிப்புரா மாவட்டம்
598508
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
இராவ்சாகேப் அந்தபுர்கர்
இராவ்சாகேப் அந்தபுர்கர் (Raosaheb Antapurkar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1958 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 14ஆவது மகாராட்டிர சட்டமன்றத்தில் இவர் உறுப்பினராக இருந்தார். வாழ்க்கைக் குறிப்பு அந்தபுர்கர் மகாராட்டிர சட்டமன்றத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக தெக்லூரை பிரதிநிதித்துவப்படுத்தினார். இராவ்சாகேப் அந்தபுர்கர் கோவிட்-19 பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியன்று இரவு 11 மணிக்கு இறந்தார். மேற்கோள்கள் 2021 இறப்புகள் 1958 பிறப்புகள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் மகாராட்டிர அரசியல்வாதிகள் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்கள்
598509
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82
பால் தாங்சூ
பால் தாங்சூ (Paul Dangshu) திரிபுராவினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் திப்ரா மோதா கட்சியின் வேட்பாளராக கரம்செரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு திரிபுரா சட்டமன்ற உறுப்பினரானார். அரசியல் வாழ்க்கை ஆரம்ப ஆண்டுகளில் 2020-ல் திப்ரா மோதா கட்சி உருவாக்கப்பட்டதிலிருந்து கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்தவர் தாங்சூ. திரிபுரா சட்டசபை உறுப்பினராக 2023-ல், திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் பால் போட்டியிட்டார், இதன் இளம் முகங்களில் ஒருவராக திப்ரா இருந்தார். இவர் பாஜக வேட்பாளர் பிரஜலால் திரிபுராவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தாங்சூ இத்தேர்தலில் மொத்த வாக்குகளில் 52.73% வாக்குகளைப் பெற்றார். தேர்தல் முடிவுகள் மேற்கோள்கள் 1992 பிறப்புகள் வாழும் நபர்கள் திரிபுரா சட்டமன்ற உறுப்பினர்கள்
598510
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
கரம்சேரா சட்டமன்றத் தொகுதி
கரம்சேரா சட்டமன்றத் தொகுதி (Karamcherra Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது தலாய் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதி பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவை உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2023 2018 மேலும் பார்க்கவும் திரிபுரா சட்டப் பேரவையின் தொகுதிகளின் பட்டியல் தலாய் மாவட்டம் மேற்கோள்கள் திரிபுரா சட்டமன்றத் தொகுதிகள் தலாய் மாவட்டம்
598512
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE
வீரா ரெட்டி பிச்சிவெமுலா
பிச்சிவெமுலா வீரா ரெட்டி (Veera Reddy Bijivemula) கடப்பா மாவட்டம் பாத்வேலைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர், தெலுங்கு தேசம் கட்சியுடன் தொடர்புடையவர். மேலும், ஊராட்சித் தலைவர் முதல் அமைச்சர் வரை பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். 2000 ஆம் ஆண்டில் தான் இறக்கும் வரை கடப்பா மாவட்ட தெலுங்கு தேச கட்சியில் முக்கிய பங்கு வகித்தார். இவர் ஆந்திர பிரதேச சட்டப் பேரவையில் ஐந்து முறை உறுப்பினராக இருந்தார். மேற்கோள்கள் தெலுங்கு தேசம் கட்சி அரசியல்வாதிகள் 2000 இறப்புகள்
598513
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
தெலங்காணா சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்
தெலங்காணா சட்டமன்றத்  தொகுதிகளின் பட்டியல் (List of constituencies of the Telangana Legislative Assembly) என்பது தெலங்காணாவில், சாசன சபை அல்லது சட்டப் பேரவையின் 119 சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல் ஆகும். 119 தொகுதிகளுள், 18 தொகுதிகள் பட்டியல் சாதி வேட்பாளர்களுக்கும், 9 தொகுதிகள் பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தொகுதிகள் இருக்கும் மாவட்டம் மற்றும் மக்களவைத் தொகுதியுடன், தொகுதிகளின் பட்டியல் கீழே உள்ளது. தற்போதைய தொகுதிகளின் பட்டியல் தெலங்காணாவில் உள்ள தொகுதிகளின் பட்டியல் கீழே: முன்னாள் தொகுதிகளின் பட்டியஒருங்ல் முந்தைய ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் 2002ஆம் ஆண்டு வரையறுப்புச் சட்டத்தின் அடிப்படையில் 2008ஆம் ஆண்டு முதல் நீக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் பின்வருமாறு. பின்வரும் மாவட்ட வகைப்பாடு முந்தைய ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பழைய மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டது மேலும் பார்க்கவும் மக்களவைத் தொகுதிகளின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தெலங்காணா சட்டமன்றத் தொகுதிகள்
598514
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
மால்
மால் (Maal) என்பது 2023 இல் வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். தினேஷ் குமரன் இயக்கிய இப்படத்தில் அஸ்ரஃப், வி. ஜே பப்பு, கௌரி நந்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் 2023 செப்டம்பர் 22 அன்று வெளியிடப்பட்டது. நடிகர்கள் கதிர் வேடத்தில் அஸ்ரப் கௌதமாக விஜே பப்பு ஜெய் - ஜெய் கர்ணனாக சாய்கார்த்தி யாழினியாக கௌரி நந்தா பிலிப்சாக தினேஷ் குமரன் கஜராஜ் - கஜராஜ் தயாரிப்பு தொடக்கத்தில் ஹர ஹர மஹாதேவகி (2017), ஜகமே தந்திரம் (2021) ஆகிய படங்களில் பணியாற்றிய கஜராஜ், சாய்கார்த்தியைத் தவிர்த்து, மால் திரைப்படம் முக்கியப் புதுமுகங்களைக் கொண்டிருந்தது. அய்யப்பனும் கோசியும் (2020) படத்தில் நடித்ததற்காக அறியப்பட்ட நடிகை கௌரி நந்தா, மார்ச் 2021 இல் படத்திற்காக எடுக்கப்பட்டார் இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரிலும் தஞ்சாவூரிலும் நடைபெற்றது. செப்டம்பர் 2023 இல் ஓடிடி தளமான ஆஹா மால் திரைப்படத்தை செப்டம்பர் 22 அன்று திரையிடப்படும் என்று அறிவித்தது வரவேற்பு திரைப்படம் 2023 செப்டம்பர் 22 அன்று ஆஹா தளத்தில் வெளியிடப்பட்டது. ஒடிடிபிளேயின் ஒரு விமர்சகர், "புதுமுக இயக்குனர் தினேஷ் குமரனின் மால் ஒரு சிந்தனை காகிதத்தில் நன்றாக இருக்கிறது, ஆனால் அதை செயல்படுத்துவதில் முற்றிலும் தடுமாறுகிறது", எழுதினார். மேலும் படம் "பலவீனமான திரைக்கதை, சராசரி நடிப்பு, அமெச்சூர் திரைப்படத் தயாரிப்பால் கைவிடப்பட்டது" என்று கூறினார். தினத்தந்தியின் ஒரு விமர்சகர் படம் "சாத்தியக் குறைவு" ஆனால் சில "உயர்ந்த தருணங்கள்" என்று குறிப்பிட்டார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் 2023 தமிழ்த் திரைப்படங்கள் இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்
598516
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
படேட்டி புச்சி
படேட்டி கோட்டா ராம ராவ் (Badeti Kota Rama Rao) ( சுமார் 1964 – 26 டிசம்பர் 2019), படேட்டி புச்சி என்றும் அழைக்கப்படும் இவர், ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையில் உறுப்பினராக இருந்தார். சுயசரிதை தனது மேல்நிலைக் கல்விக்குப் பிறகு, புச்சி சர் சி. ஆர். ரெட்டி கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் தனது கல்லூரி படிப்பைத் தொடரவில்லை. 2009 இல் ஏலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பிரசா ராச்யம் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் அல்லா காளி கிருட்டிண சிறீநிவாசன்|அல்லா காளி கிருட்டிண சிறீநிவாசிடம் தோல்வியடைந்தார். 2014 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு ஏலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2019 இல் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக ஏலூரில் போட்டியிட்டார். ஆனால் மீண்டும் அல்லா காளி கிருட்டிண சிறீநிவாசிடம் தோற்றார். இறப்பு புச்சி 26 டிசம்பர் 2019 அன்று 55 வயதில் மாரடைப்பால் இறந்தார் மேற்கோள்கள் மேற்கு கோதாவரி மாவட்ட நபர்கள் தெலுங்கு தேசம் கட்சி அரசியல்வாதிகள் 2019 இறப்புகள்
598518
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம்
மலேசிய நாடாளுமன்றக் கட்டிடம் (Malaysian Houses of Parliament, ), என்பது மலேசிய நாடாளுமன்றம் கூடும் கட்டிட வளாகமாகும். இக்கட்டிடம் கோலாலம்பூர், பெர்தானா தாவரவியல் பூங்காவில், மலேசியத் தேசிய நினைவுச் சின்னத்திற்கு அருகில் அமைந்துள்ளது. கட்டுமானம் முதல் மலாயா பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான், 1959 டிசம்பரில் பார்லிமென்ட் வீடுகளை கட்ட பரிந்துரைத்தார்.கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு RM18 மில்லியன் செலவானது.செப்டம்பர் 1962 இல் கட்டுமானம் தொடங்கியது, புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் திறப்பு துவாங்கு சையத் புத்ரா இப்னி அல்மர்ஹூம் சையத் ஹசன் ஜமாலுல்லைல், மூன்றாவது யாங் டி-பெர்துவான் அகோங், 21 நவம்பர் 1963 அன்று நடைபெற்றது. மேற்கோள்கள் மலேசிய நாடாளுமன்றம் கோலாலம்பூர்
598519
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF
அல்லா நானி
அல்லா காளி கிருஷ்ண சிறீநிவாசன் (Alla Kali Krishna Srinivas) அல்லது அல்லா நானி என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர், ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சராக இருந்துள்ளார். அரசியல் வாழ்க்கை இந்திய தேசிய காங்கிரசு கட்சி உறுப்பினராக 2004 - 2013 க்கு இடையில் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு ஏலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். பின்னர் 2013 இல் காங்கிரசு கட்சியிலிருந்து வெளியேறி உறுப்பினர் பதவியை விட்டு விலகி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2014 தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2017 இல் சட்டப் பேரவை மேலவை உறுப்பினரானார். 2019 தேர்தலில் ஏலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு, மீண்டும் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இவர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆந்திர அமைச்சரவையில் துணை முதலமைச்சராகவும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், மருத்துவக் கல்வி அமைச்சராகவும் ஆனார். மேற்கோள்கள் 1969 பிறப்புகள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் வாழும் நபர்கள்
598520
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
முண்டையூர் மகாதேவர் கோயில்
முண்டையூர் மகாதேவர் கோயில் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் அஞ்சூரில் உள்ள, சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான இந்து கோயில் ஆகும். இக்கோயிலானது முண்டயூர் கிராமத்தில் மூலவர் சிவன் ஆவார். மூலவர் கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பரசுராம முனிவர் சிவபெருமானின் சிலையை நிறுவியதாக நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்றன. இது கேரளாவின் 108 சிவன் கோயில்கல் ஒன்றாகும். கோழிக்கோடு சாமோரின் படை போரில் ஈடுபட்டபோது முண்டயூர் சிவபெருமான் அவர்களைக் காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது. விழாக்கள் இக்கோயிலின் வருடாந்திர திருவிழா மார்ச்-ஏப்ரல் (மலையாள மாதம்: மீனம்) மாதத்தில் லட்சார்ச்சனைக்காக கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி-மார்ச் மாதத்தில் (மலையாள மாதம்: கும்பம்) கொண்டாடப்படுகின்ற மற்றொரு முக்கியமான திருவிழாவாகும். மேலும் பார்க்கவும் 108 சிவன் கோவில்கள் கேரளாவின் கோவில்கள் திருச்சூர் கிராமத்தில் உள்ள இந்து கோவில்கள் மேற்கோள்கள் கேரளத்திலுள்ள சிவன் கோயில்கள் Coordinates on Wikidata திருச்சூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்
598521
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
முத்துவாரா மகாதேவர் கோயில்
முத்துவாரா மகாதேவர் கோயில் என்பது இந்தியாவின் திருச்சூர் நகரத்தின் முதுவாரா என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் இங்குள்ள மூலவர் சிலையை நிறுவினார். இந்தச்சிலையானது ரௌத்திர கோலத்தில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் சிவனுக்கு ஒரு கோயிலும், விஷ்ணுவுக்கு ஒரு கோயிலும் உள்ளன. குறிப்புகள் கேரளத்திலுள்ள சிவன் கோயில்கள் Coordinates on Wikidata திருச்சூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்
598522
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
முட்டிச்சூர் கல்லட்டுப்புழா மகா சிவன் கோயில்
முட்டிச்சூர் கல்லட்டுப்புழா மகா சிவன் கோயில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அந்திகாட்டில் அமைந்துள்ளது . இந்தக்கோயில் கேரள கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். கல்லட்டுப்புழா கோயில் கருவண்ணூர் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் சிவன் ஆவார். மூலவர் சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சிலையை பரசுராமர் நிறுவியதாக நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்றன. கேரளாவில் உள்ள 108 பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். கோக சண்டேசம் சுமார் 2700 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்ற "கோக சண்டேசம்" என்ற கவிதையில் முட்டிச்சூர் மற்றும் சிவன் கோயில்லைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மேலும் பார்க்கவும் கேரளாவின் கோவில்கள் மேற்கோள்கள் கேரளத்திலுள்ள சிவன் கோயில்கள் Coordinates on Wikidata திருச்சூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்
598523
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95.%20%E0%AE%8E.%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
க. எ. கிருட்டிணமூர்த்தி
க. எ. கிருஷ்ணமூர்த்தி என்று அழைக்கப்படும் கம்பளபாடு எடிகா கிருஷ்ணமூர்த்தி (Kambalapadu Ediga Krishnamurthy) (பிறப்பு 2 அக்டோபர் 1938), தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் துணை முதல்வர் ஆவார். 2014-2019 ஆம் ஆண்டு தெலுங்கு தேச கட்சியின் அமைச்சரவையில் இவர் அமைச்சராக இருந்த காலத்தில் வருவாய், முத்திரைகள் மற்றும் பதிவுத் துறைகளை கவனித்து வந்தார். பட்டிகொண்டா சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். தங்குதரி அஞ்சையா அமைச்சரவையில் அமைச்சராகவும் பணியாற்றினார். கிருட்டிணமூர்த்தி கர்நூல் மாவட்டத்தின் தோன் சட்டமன்றத் தொகுதியை இந்திய தேசிய காங்கிரசு மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய இரு கட்சிகளிலிருந்தும் பிரதிநிதித்துவப்படுத்தி நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். சொந்த வாழ்க்கை கிருட்டிணமூர்த்தி 1938ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி கர்நூலில் க. எ. மாதன்னா மற்றும் மாதம்மாவுக்கு மகனாகப் பிறந்தார். சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தில் முதுகலையயும் மத்திய பிரதேசத்தில் உள்ள சாகர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டப் பட்டமும் பெற்றார். அரசியல் வாழ்க்கை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த தந்தையின் அடிச்சுவடுகளை பின்பற்றி, 1978ல் தந்தை அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, கிருட்டிணமூர்த்தி அரசியலுக்கு வந்தார். இவர் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு இடையே அடிக்கடி மாறினார். 1978 இல் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து தோன் சட்டமன்றத் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாக அறிமுகமானார். 1983 இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து அதே தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004ல் கர்நூல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது, இவர் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சராக உள்ளார். மேலும் இவர் வருவாய், முத்திரைகள் மற்றும் பதிவுத் துறைகள் அமைச்சராக இருந்தார். கட்சியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும் உள்ளார். மேற்கோள்கள் கர்நூல் மாவட்ட நபர்கள் 13வது மக்களவை உறுப்பினர்கள் வாழும் நபர்கள் 1938 பிறப்புகள் தெலுங்கு தேசம் கட்சி அரசியல்வாதிகள் மதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள்
598524
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
செம்பழுப்பு மார்புப் பசையெடுப்பான்
செம்பழுப்பு மார்புப் பசையெடுப்பான் ( Chestnut-bellied nuthatch ) என்பது சிட்டிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை இனமாகும். இது இந்திய துணைக்கண்டத்தில் இந்தியா, திபெத்து வங்காளதேசம், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இது துணை வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல காடுகளிலும், வறண்ட அல்லது ஈரப்பதமான காடுகளிலும், மலை மற்றும் தாழ்நில காடுகளிலும் காணப்படுகிறது. விளக்கம் இந்த இனம் பர்மிய பசையெடுப்பானை மிகவும் ஒத்திருக்கிறது, ஆனால் இது கனமான அலகைக் கொண்டுள்ளது. சிட்டுக்குருவியை விட சிறியதான இது சுமார் 15 செ.மீ. நீளம் இருக்கும். அலகு கொம்பு நிறமான கருப்பாகவும், விழிப்படலம் பழுப்பாகவும், கால்கள் ஈய நிறத்திலும் இருக்கும். உடலின் மேற்பகுதி நீலந்தோய்ந்த கருஞ்சாம்பல் நிறம். அலகடியிலிருந்து கண்கள் வழியாகப் பிடரிவரைக் கருங்கோடுகள் நீண்டிருக்கக் காணலாம். நடுவாலிறகுகள் இரண்டு நீலமாகவே காட்சியளிக்கும். கன்னங்களும் மோவாயும் வெண்மை. மார்பு, வயிறு, வாலடி ஆகியன நல்ல செம்பழுப்பாக இருக்கும். நடத்தை இவை தனித்தோ இணையாகவோ அடிமரங்களிலும், கிளைகளிலும் மரப்பட்டைகளிடையை காணப்படும் புழுபூச்சிகளை பிடித்து உண்ணும். பிற பறவைக் கூட்டங்களுடன் சேர்ந்து பூச்சிகளை வேட்டையாடுவதும் உண்டு. தென்னிந்தியாவில் இவை மார்ச் முதல் சூலை வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இலை, கம்பளிநூல், பாசி முதலியவற்றைக் கொண்டு மரப்பொந்தில் கூடு அமைக்கிறது. இரண்டு முதல் ஐந்து வரையிலான முட்டைகளை இடுகிறது. முட்டை வெண்மையாக சிவப்புப் புள்ளிகளோடு காட்சியளிக்கும். மேற்கோள்கள் மியான்மர் பறவைகள் நேபாளப் பறவைகள்
598526
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
நாதபுரம் இரிங்கண்ணூர் சிவன் கோயில்
நாதபுரம் இரிங்கண்ணூர் சிவன் கோயில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் இரிங்கண்ணூர் கிராமத்தில் (எடச்சேரி பஞ்சாயத்து ) அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான இந்து கோயில் ஆகும். இக்கோயிலில் தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கிய நிலையில் தனிச்சன்னதியில் உள்ளார். பரசுராமர் இக்கோயிலின் மூலவரை அமைத்ததாக நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்ற.ன கேரளாவில் உள்ள 108 புகழ்பெற்ற சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். 108 சிவன் கோயில்களில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று திருக்கபாலீஸ்வரம் கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். கோயில் கட்டிடக்கலை கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மிகப்பழமையான கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். நாதபுரத்தில் எடச்சேரி ஊராட்சியில் இக்கோயில் அமைந்துள்ளது. மிகவும் அழகாக உள்ள இந்தக்கோயில், மகா கோயில்களைப் போலக் கட்டப்பட்டுள்ளது. மூலவரின் கருவறையானது உரிய கட்டுமான விகிதத்தில் கம்பீரமாக கேரளக் கோயில் கட்டிடக்கலைப் பாணியில் உள்ளது. இரண்டு அடுக்குகள் கொண்ட மூலவர் சன்னதியானது செவ்வக வடிவக் கூரையுடன் உள்ளது. கருவறையின் நான்கு பக்கங்களிலும் கதவுகள் உள்ளன. இருப்பினும் கிழக்குப் பக்க கதவுகள் மட்டும் பயன்பாட்டில் உள்ளன. கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கில் ஒரு பெரிய கோபுரம் இருந்தது. கோயிலின் மூலவரான சிவன் சதாசிவன் வடிவில் உள்ளார். இங்குள்ள மூலவருக்கு (சிவலிங்கம்) இரண்டு கண்கள் மட்டுமே உள்ளன. கோயில் அமைந்துள்ள இரிங்கண்ணூர் என்ற இந்த கிராமத்தின் பெயரானது இரு (இரண்டு=ரண்டு) +கண்ணு (கண்கள்=கண்கள்) +ஓர் (இடம்=ஊர்) கிராமப் பெயர் ) உருவானது என்பதிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது; . வடகரா மாவட்டத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய பாரம்பரிய கட்டுமானத்தில் இந்தக் கோயிலும் ஒன்றாகும். கோயிலும், குளமும் அண்மையில் புதுப்பிக்கப்பட்டன. துணைத்தெய்வங்கள் கணபதி அய்யப்பன் பாம்பு தெய்வம் (நாகர்) கிருஷ்ணன் மேலும் பார்க்கவும் 108 சிவன் கோவில்கள் கேரளாவின் கோவில்கள் கடச்சிரா ஸ்ரீ திருக்கபாலம் சிவன் கோவில் நிரணம் திருக்கபாலீஸ்வரம் தட்சிணாமூர்த்தி கோவில் படத்தொகுப்பு குறிப்புகள் கேரளத்திலுள்ள சிவன் கோயில்கள் Coordinates on Wikidata கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்
598528
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
சோனுபாவு தகது பசுவந்து
சோனுபாவு தகது பசுவந்து (Sonubhau Dagadu Baswant) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். மகாராட்டிராவின் தானே தொகுதியில் இருந்து இந்தியாவின் 3 ஆவது மக்களவை உறுப்பினராகவும், 4ஆவது மக்களவை உறுப்பினராகவும் இந்திய தேசிய காங்கிரசு அரசியல் கட்சியின் உறுப்பினராகவும் இருந்தார். மகாராட்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள குட்காரில் பிறந்த இவர், பார்வதிபாய் என்பவரை மணந்து தானே மாவட்டத்தில் உள்ள சாபூரில் வசித்து வந்தார். ஒரு விவசாயியான இவர் 1952 முதல் 1959 வரை தானே மாவட்ட மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினராகவும், 1964 முதல் 1967 வரை அனைத்திந்திய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகவும், மகாராட்டிர மாநில வன மேம்பாட்டு வாரியம் மற்றும் மகாராட்டிர வளர்ச்சி கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். 1959 முதல் 1964 வரை தானே மாவட்ட காங்கிரசு குழுவின் தலைவராகவும், அம்பர்நாத் ஆயுதத் தொழிற்சாலை தேசிய ஊழியர் சங்கம், தானே மாவட்ட பொதுப்பணித் துறை மற்றும் 1964 முதல் சாலைப் பணியாளர் சங்கம் ஆகியவற்றின் தலைவராகவும் இருந்தார். 1963 முதல் சாகாப்பூர் தாலுகா கூட்டுறவு பால் உற்பத்தி ஒன்றியத்தின் தலைவராக இருந்து வருகிறார் மேற்கோள்கள் புற இணைப்புகள் இந்திய நாடாளுமன்ற இணையதளத்தில் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாற்று ஓவியம் 3வது மக்களவை உறுப்பினர்கள் 4வது மக்களவை உறுப்பினர்கள் 1987 இறப்புகள் 1915 பிறப்புகள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் மகாராட்டிர அரசியல்வாதிகள்
598529
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81
பில்லி சுபாசு சந்திர போசு
பில்லி சுபாசு சந்திர போசு (Pilli Subhash Chandra Bose) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக 2020 மாநிலங்களவைத் தேர்தலில் ஆந்திரப் பிரதேசத்திலிருந்துஇந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகவும்]] பதவி வகித்தார். மேலும், ஆந்திர பிரதேச சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். அரசியல் வாழ்க்கை ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ராமசந்திராபுரம் சட்டப் பேரவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். எ. சா. ராஜசேகர் ரெட்டியின் குடும்பத்திற்கு விசுவாசமாக இருந்தார். ராஜசேகர ரெட்டியின் அமைச்சரவையில் இரண்டு முறை அமைச்சராகவும், முன்னாள் முதல்வர் கொனியேட்டி ரோசையாவின் அமைச்சரவையில் ஒருமுறை அமைச்சராகவும் இருந்துள்ளார். ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர இவர் ராமச்சந்திரபுரத்தில் இருந்து உறுப்பினர் பதவியையும், அமைச்சரவையிலிருந்தும் வெளியேறினார். 2019 ஆம் ஆண்டில், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் ஆந்திரப் பிரதேசத்தின் ஐந்து துணை முதலமைச்சர்களில் ஒருவரானார். மேலும் இவருக்கு வருவாய், பதிவு மற்றும் முத்திரைத் துறை அமைச்சராகவும் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையை ரத்து செய்ய ஆந்திரப் பிரதேச அரசு முடிவெடுத்த பிறகு, ஆந்திரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக இருந்ததால் இவரை மாநிலங்களவைக்கு அனுப்ப கட்சி முடிவு செய்தது. மேற்கோள்கள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் 1955 பிறப்புகள் வாழும் நபர்கள்
598531
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87
சுல்பா சஞ்சய் கோத்கே
சுல்பா சஞ்சய் கோத்கே (Sulbha Sanjay Khodke) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மகாராட்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். அமராவதி சட்டப்பேரவை தொகுதியிலிருந்து மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விதர்பா நீர்ப்பாசன மேம்பாட்டுக் கழகத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார். இதற்கு முன்பு 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை பத்னேரா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். பல்வேறு அரசாங்கங்களில் இயக்குநராகவும் தலைவராகவும் இருந்தார். மகாராட்டிரா மாநில நுகர்வோர் கூட்டமைப்பு, மும்பை, மகாராட்டிர மாநில கூட்டுறவு வங்கிகள் கூட்டமைப்பு, அமராவதி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிறுவனம், அமராவதி சில்லா மத்திய வர்த்தி கூட்டுறவு வங்கி, , சித்திவினய் பச்சட்கட் மகாசங்கம் போன்ற நிறுவனங்களின் பொறுப்புகளிலும் சுல்பா சஞ்சய் கோத்கே பணிபுரிந்தார். மேற்கோள்கள் வாழும் நபர்கள் மகாராட்டிர அரசியல்வாதிகள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்கள்
598532
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81
எனமாலா ராம கிருஷ்ணுடு
எனமாலா ராம கிருஷ்ணுடு (Yanamala Rama Krishnudu) ஆந்திராவை சேர்ந்த மூத்த அரசியல்வாதி ஆவார். 1995 முதல் 1999 வரை ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் சபாநாயகராகப் பணியாற்றினார். இவர் பெரும்பாலும் ஒரு அறிவார்ந்த அரசியல்வாதியாகவும், தொழில்நுட்ப ரீதியாக சிறந்த தலைவராகவும் கருதப்படுகிறார். ஜூன் 2014 முதல் மே 2019 வரை நா. சந்திரபாபு நாயுடு அரசாங்கத்தில் நிதி மற்றும் திட்டமிடல், வணிக வரிகள், சட்டமன்ற விவகாரங்களுக்கான அமைச்சராகவும் பணியாற்றினார் மேற்கோள்கள் தெலுங்கு தேசம் கட்சி அரசியல்வாதிகள் வாழும் நபர்கள் 1951 பிறப்புகள்
598533
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
அனம் ராமநாராயண ரெட்டி
அனம் ராமநாராயண ரெட்டி (Anam Ramanarayana Reddy) (பிறப்பு 10 ஜூலை 1952) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். 2012 இல், நல்லாரி கிரண் குமார் ரெட்டி தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம் பெற்று, ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சராக இருந்தார். 2018 இல் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பின்னர், 2023 மார்ச் 24 அன்று கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் ஆரம்ப கால வாழ்க்கை ராமநாராயண ரெட்டி நெல்லூரில் வேங்கட ரெட்டி என்பவருக்கு பிறந்தார். இவர் ஒரு அரசியல்வாதியான அனம் விவேகானந்த ரெட்டியின் சகோதரர் ஆவார். தனது இடைநிலைக்கல்விக்குப் பிறகு ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிகவியல் மற்றும் இளங்கலைச் சட்டம் ஆகியப் பட்டங்களைப் பெற்றார். தொழில் ரெட்டி சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டத்திலுள்ள ராப்பூர் தொகுதியிலிருந்து ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். என். டி. ராமராவ் அமைச்சரவையில் சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறை அமைச்சராகப் பணியாற்றினார். இவர் 1991 இல் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். தொகுதி மறுநிர்ணயம் நடைமுறைக்கு வந்ததன் விளைவாக,  2009 மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக இவர் ஆத்மகூர் சட்டமன்றத் தொகுதிக்கு மாறி அங்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007 மற்றும் 2009 க்கு இடையில், எ. சா. ராஜசேகர் தலைமியிலான அரசாங்கத்தில் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறைக்கான மாநில அமைச்சராக ரெட்டி இருந்தார். ஜூலை 2009 இல் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கான மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2012 ஆம் ஆண்டு, கிரண் குமார் ரெட்டியின் அரசில் நிதி மற்றும் திட்டமிடல் துறை அமைச்சராவும். பின்னர் 2016 இல் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். 2018ல் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியில் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் இணைந்தார். 2023ல் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். மேற்கோள்கள் தெலுங்கு தேசம் கட்சி அரசியல்வாதிகள் வாழும் நபர்கள் 1952 பிறப்புகள்
598534
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF
மணாலி தக்சினி
மணாலி கிசோர் தக்சினி (Manali Dakshini) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஓரு துடுப்பாட்ட வீராங்கனையாவார். 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். வலது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளராகவும் வலது கை மட்டையாளராகவும் இவர் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார். ர் மும்பை மற்றும் மேற்கு மண்டல அணிகளுக்காக மணாலி தக்சினி துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுகிறார். 3 முதல்தரப் போட்டிகள், 11 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகள் மற்றும் 21 மகளிர் இருபது20 போட்டிகள் என இவர் துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார்.. ஜனவரி 2019 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் 2018–19 மூத்த மகளிர் போட்டி கோப்பைக்கான இந்தியா புளூ அணியில் இடம் பெற்றார். 2019 சனவரியில் நடைபெற்ற இப்போட்டியில் குறிப்பிடத்தக்க வகையில் விளையாடி சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்தார். 2020 மகளிர் டி20 சவாலுக்கான வெலாசிட்டி அணியில் மணாலி தக்சினி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கோள்கள் வாழும் நபர்கள் 1997 பிறப்புகள் மகாராட்டிர மக்கள் இந்திய விளையாட்டு வீரர்கள் துடுப்பாட்டக்காரர்கள்
598540
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE
தர்விந்தர் சிங் மார்வா
தர்விந்தர் சிங் மார்வா (Tarvinder Singh Marwah) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1959 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். தில்லியைச் சேர்ந்த இவர் மூன்று முறை இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது தில்லி சட்டமன்றத்தில் தில்லி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். தில்லியின் இயங்புரா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் 6 ஜூலை 2022 ஆம் ஆண்டு சூலை மாதம் 5 ஆம் தேதியன்று காங்கிரசு கட்சியிலிருந்து பாரதிய சனதா கட்சிக்கு இவர் மாறினார் தில்லி முதல்வரின் நாடாளுமன்ற செயலாளராகவும் தர்விந்தர் சிங் மார்வா பணியாற்றியுள்ளார். பதவிகள் மேற்கோள்கள் 1959 பிறப்புகள் இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் வாழும் நபர்கள் தில்லி அரசியல்வாதிகள்
598542
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
அனம் விவேகானந்த ரெட்டி
அனம் விவேகானந்த ரெட்டி (Anam Vivekananda Reddy) அனம் விவேகா என்றும் அழைக்கப்படும் இவர், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராக இருந்தார். பின்னர், 2016 இல் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். ஆரம்ப கால வாழ்க்கை இவர், அனம் வெங்கட ரெட்டி என்பவருக்கு மகனாக நெல்லூரில் பிறந்தார். இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலத்தில் ஆந்திர பிரதேசத்தின் அரசியல் தலைவரான மறைந்த அனம் செஞ்சு சுப்பா ரெட்டியின் மருமகன் ஆவார். அனம் ராமநாராயண ரெட்டி எ. சா. ராஜசேகர் மற்றும் கொனியேட்டி ரோசையா ஆகியோரின் அமைச்சரவையில் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சராகவும், கிரண் குமார் ரெட்டியின் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் இருந்த அனம் ராமநாராயண ரெட்டியின் சகோதரர் ஆவார். விவேகா நெல்லை விஆர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். தொழில் விவேகானந்த ரெட்டி ஆந்திர சட்டசபைக்கு மூன்று முறை சட்டப் பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நெல்லை மாவட்ட நில அடமான வங்கியின் தலைவராகவும் (1982), நெல்லூர் நகராட்சியின் துணைத் தலைவராகவும் (1982), நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் இருந்துள்ளார். இறப்பு அனம் விவேகானந்த ரெட்டி நீண்ட நாள் உடல்நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் 25 ஏப்ரல் 2018 அன்று காலமானார். மேற்கோள்கள் நெல்லூர் மாவட்ட நபர்கள் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் தெலுங்கு தேசம் கட்சி அரசியல்வாதிகள் 2018 இறப்புகள் 1950 பிறப்புகள்
598544
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D
புக்கனா ராஜேந்திரநாத்
புக்கனா ராஜேந்திரநாத் ரெட்டி (Buggana Rajendranath) (பிறப்பு 27 செப்டம்பர் 1970) இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆந்திரப் பிரதேச அரசாங்கத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் சட்டமன்ற விவகாரங்களுக்கான அமைச்சராக இருக்கிறார். 2019 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் மற்றும் 2014 சட்டப் பேரவைத் தேர்தல் ஆகிய இரண்டிலும் தோன் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 முதல் 2019 வரை ஆந்திரப் பிரதேசத்தின் பொதுக் கணக்குக் குழுத் தலைவராகவும் பணியாற்றினார். ஆரம்ப கால வாழ்க்கை புக்கனா ராஜேந்திரநாத் ரெட்டி ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தில் உள்ள பெத்தம்செர்லாவில் புக்கனா ராம்நாத் ரெட்டி மற்றும் புக்கனா பார்வதி தேவி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தாய்வழி தாத்தா, கதிரி வெங்கட ரெட்டி, ஒரு முக்கிய இந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். புக்கனா ராஜேந்திரநாத் தனது பள்ளிப்படிப்பை பேகம்பேட்டையில் உள்ள ஐதராபாத் பொதுப் பள்ளியில் பயின்றார். பிறகு சென்னையிலுள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தார். 1992 இல் பெல்லாரி விஜயநகர் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியலில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றார் மேற்கோள்கள் ஆந்திரப் பிரதேச அரசு இந்தியப் பொறியியலாளர்கள் 1970 பிறப்புகள் வாழும் நபர்கள்
598545
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
நல்பதனீசுவரம் மகாதேவர் கோயில்
நல்பதனீசுவரம் மகாதேவர் கோயில், கேரள மாநிலம் ஆலப்பி மாவட்டத்தில் செர்தலா வட்டம் பனவல்லி கிராமத்தில் நல்பததெனேசுவரத்தில் அமைந்துள்ள மகாதேவர் கோயிலாகும். இவ்விடம் சேர்த்தலாவிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் சேர்ந்தாலா -ஆறுக்குட்டி பேருந்து வழித்தடத்தில் உள்ளது. இங்கு சிவபெருமான் கிராத கோலத்தில் இருக்கிறார். அமைதியான, கிராமத்து சூழலில் கலை ரசனையுடன் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் கும்பம் (மாசி-மார்ச்) மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இவ்விழா ஏழு நாட்கள் நடைபெறும். அந்த அனைத்து நாள்களும் பாரம்பரிய முறைப்படி முக்கியமான நாள்களாகக் கருதப்படுகின்றன. (உத்சவபலி, கூடி எழுச்சி, பரணி, கார்த்திகா, ஆராட்டு). இக்கோயிலில் உள்ள மூலவரை மக்கள் "நல்பதனீசுவரத்தப்பன்" என்று அழைக்கின்றனர். இக்கோயிலில் உறைகின்ற மற்ற தெய்வங்கள், கணபதி, வராஹமூர்த்தி, துர்காதேவி, சொவ்வ பகவதி, நாகராஜர், நாகயட்சி, ஐயப்பன் போன்றவையாகும். இக்கோயிலின் வடமேற்கு பகுதியில் ஊரளி பரம்பத்து சாஸ்தா கோயில் என்று அழைக்கப்படுகின்ற ஒரு இணைக்கோயில் உள்ளது. சமீபத்தில் மறைந்த பழம்பெரும் சோரோடு நாராயணப்பணிக்கர் தலைமையில் அமைந்த குழுவினரின் தேவபிரசன்னத்தின்போது இக்கோயில் 1000 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த கோயில் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கோயில் கோழிச்சேரில், பாய்ப்பட்டு, முல்லக்கேரில் என்றழைக்கப்படுகின்ற மூன்று பண்டைய கைமால் குடும்பத்தாரின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இக்கோயில் தெய்வத்திற்கான முக்கியமான பிரசாதம் கதகளி ஆகும். இதனாலேயே இக்கோயில் கதகளிக்குப் பெயர் பெற்றதாகும். இக்கோயிலைப் பற்றி பல வரலாறுகள்ம கூறப்பட்டு வருகின்றன. இவ்விடம் பாண்டவர் வேலி என்றழைக்கப்பட்டதாகவும், பின்னர் பனவல்லி என்றதானதாகவும் அங்குள்ள மூத்த குடிமக்கள் கூறுகின்றனர். இக்கோயிலின் கிழக்கே 1 கி.மீ. தொலைவில் நான்கு பெரிய கற்கள் உள்ளன. பாண்டவர்களுடைய வனவாசத்தின்போது அந்தக் கற்கள் பாலைச் சூடாக்கப் பயன்படுத்தப்பட்டதாக மக்கள் நம்புகின்றனர். மேலும் பார்க்கவும் கேரளாவின் கோவில்கள் 108 சிவன் கோவில்கள் குறிப்புகள் வெளி இணைப்புகள் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் கேரளத்திலுள்ள சிவன் கோயில்கள் Coordinates on Wikidata
598547
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
கதிரி வெங்கட ரெட்டி
கதிரி வெங்கட ரெட்டி (Kadiri Venkata Reddy) கே. வி. ரெட்டி எனவும் அழைக்கப்படும் (ஜூலை 1, 1912 – 15 செப்டம்பர் 1972) இவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் முதன்மையாக தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றினார். தென்னிந்தியத் திரைப்படத் துறையில் செல்வாக்கு மிக்க இயக்குனராகக் கருதப்படுகிறார். இவர் 14 முழு நீளத் திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் மூன்று தேசிய திரைப்பட விருதுகள் மற்றும் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும் வென்றார். பணிகள் இவரது படஙகளில் மாயாபஜார் (1957), ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன யுத்தம் (1962), ஸ்ரீ கிருஷ்ண சத்யா (1972) போன்ற புராணத் திரைப்படங்கள் அடங்கும். மேலும், குணசுந்தரி கதா (1949), பாதாள பைரவி (1951), ஜகதேக வீருணி கதா (1961) போன்ற கற்பனைத் திரைப்படங்களும், பக்த போதனா (1942), யோகி வேமனா (1947), மற்றும் பெத்த மனுசுலு (1954), தொங்க ராமுடு (1955), பெல்லினாட்டி பிராமணலு (1959) போன்ற வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களும் அடங்கும். இவரது பாதாள பைரவி 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவின் முதல் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரே தென்னிந்திய திரைப்படம் ஆகும். தொங்க ராமுடு இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் பாடத்திட்டத்தில் காப்பகப்படுத்தப்பட்டுள்ளது. மாயாபஜார் தெலுங்குத் திரைப்பட வரலாற்றின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஏப்ரல் 2013 இல் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில், சிஎன்என்-ஐபிஎன் செய்தி நிறுவனம் "எல்லா காலத்திலும் 100 சிறந்த இந்திய திரைப்படங்கள்" என்ற தனது பட்டியலில் பாதாள பைரவி மற்றும் மாயாபஜாரை சேர்த்தது. பட்டியலில் உள்ள திரைப்படங்கள் இடம்பெற வேண்டிய படங்களுக்கான இணைய வாக்கெடுப்பில், மாயாபஜார் "எல்லா காலத்திலும் சிறந்த இந்திய திரைப்படம்" எனப் பொதுமக்களால் வாக்களிக்கப்பட்டது. விருதுகள் தேசிய திரைப்பட விருதுகள் தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது - பெத்த மனுசுலு (1955) தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது - பெல்லினாட்டி பிராமணலு (1958) கன்னடத்தில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது - சத்ய ஹரிச்சந்திரா (1966) தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிலிம்பேர் சிறந்த இயக்குனர் விருது (தெலுங்கு) - ஸ்ரீ கிருஷ்ண சத்யா (1972) பிரபலமான கலாச்சாரத்தில் நடிகையர் திலகம் (2018) மற்றும் என்டிஆர்: கதாநாயகுடு (2019) ஆகிய படங்களில் இயக்குனர் கிரிஷ் ஜாகர்லமுடியால் கே. வி. ரெட்டி சித்தரிக்கப்பட்டுள்ளார். குறிப்புகள் மேற்கோள்கள் உசாத்துணை வெளி இணைப்புகள் மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர்கள் அனந்தபூர் மாவட்ட நபர்கள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் தெலுங்குத் திரைப்பட இயக்குநர்கள் 1972 இறப்புகள் 1912 பிறப்புகள் மதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகளைக் கொண்ட பக்கங்கள்
598548
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
நிலாக்கல் மகாதேவர் கோயில்
நிலாக்கல் மகாதேவர் கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும் . இக்கோயிலானது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. சபரிமலை யாத்திரையின் போது கேரளா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர். அமைவிடம் சபரிமலை கோயிலுக்குச் செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் இருந்து 1 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. இந்தக்கோயிலைச் சுற்றி அடர்ந்த காடுகளும், ரப்பர் தோட்டங்களும் உள்ளன. வழிபாடு இக்கோயிலின் மூலவர் சிவபெருமான் ஆவார். மூலவர் இங்கு உக்ரமூர்த்தி (கடுமையானது) மற்றும் மங்கள பிரதாயகன் (மங்களகரமானது) என்ற இரு நிலைகளில் காணப்படுகிறார். எல்லாக் கோபத்தையும் தீய சக்திகளுக்கு எதிராகப் போரிடும் வகையில் சிவபெருமான் தன் மகன் ஐயப்பனுக்கு அருள்பாலிக்கிறார் என்று நம்புகினறனர். பிற சிவன் கோயில்களில் உள்ளதைப் போலவே, இக்கோயில் வளாகத்திலும் ஏராளமான காளைகள் பாதுகாக்கப்படுகின்றன. துணைத் தெய்வங்கள் இங்கு கன்னிமூல கணபதி மற்றும் நந்தி ஆகிய இரண்டு துணைதெய்வங்கள் உள்ளன. பூசைகள் இக்கோயிலில் தினமும் மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஞாயிறு, திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாள்களும் சிறப்பு நாள்களாகக் கொண்டாடப்படுகின்றன. விழாக்கள் இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் ' மகா சிவராத்திரி ' முக்கியமானதாகும். திரு உற்சவம் விழா இங்கு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து தம் நலன் வேண்டி சபரிமலை யாத்திரையின் போது செல்கின்ற பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். மேலும் பார்க்கவும் சபரிமலை கேரளாவில் உள்ள இந்து கோவில்களின் பட்டியல் குறிப்புகள் கேரளத்திலுள்ள சிவன் கோயில்கள் Coordinates on Wikidata பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்
598550
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE
சரோஜினி மேத்தா
சரோஜினி மேத்தா (Sarojini Mehta 1898-1977) இந்தியாவின் குசராத்தைச் சேர்ந்த ஒரு குசராத்தி சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் எழுத்தாளர்களான இராமன்பாய் நீலகாந்த் மற்றும் வித்யககௌரி நீலகாந்த் ஆகியோருக்கு 1898 இல் பிறந்தார். அவர் 1919 இல் பட்டம் பெற்றார் மற்றும் 1923 இல் இலண்டன் பொருளியல் பள்ளில் சமூகவியல் பயின்றார். அகமதாபாத்தில் உள்ள வனிதா விசுரமில் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். சுமந்த் மேத்தாவின் தம்பியான நானக் மேத்தாவை மணந்தார். ஏகாதசி (1935), சார் பதராணி மா (1953) மற்றும் வளதா பாணி (1962) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளை எழுதினார்.சமூகம், குடும்பம், குழந்தை திருமணம் மற்றும் சமூகத்தில் பெண்களின் நிலை ஆகிய கருப்பொருள் குறித்து எழுதினார். சான்றுகள் 20-ஆம் நூற்றாண்டு இந்தியப் பெண் எழுத்தாளர்கள் 1977 இறப்புகள் 1898 பிறப்புகள்
598554
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
நிரணம் திரிகபாலீசுவரம் தட்சிணாமூர்த்தி கோயில்
நிரணம் திரிகபாலீசுவரம் தட்சிணாமூர்த்தி கோயில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் நிரணம் என்ற இடத்தில் பம்பை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயிலாகும். இது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான இந்துக் கோயிலாகும் . திராவிடக் கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இது உள்ளது. இக்கோயிலின் மூலவர் சிவன் குருவின் அம்சமாக உள்ள தட்சிணாமூர்த்தி ஆவார். திரிகபாசுஸ்வரம் கோயிலின் மூலவர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பரசுராம முனிவர் சிலையை நிறுவியதாக நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்றன. கேரளாவில் உள்ள 108 பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் இந்தக் கோயிலும் ஒன்றாகும். 108 சிவன் கோவில்களில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று திரிகபாலீசுவரர் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். மற்றவை கண்ணூர் மாவட்டத்தில் பெரளச்சேரியில் உள்ள கடச்சிரா திருக்கபாலம் சிவன் கோயில் மற்றும் கோழிக்கோடு மாவட்டத்தில் நாதபுரத்தில் உள்ள நாதபுரம் இரிங்கண்ணூர் சிவன் கோயில் ஆகியவையாகும். சப்தமாதர்கள் இக்கோயிலில் தனி சன்னதியில் சப்தமாதர்களின் சிலைகள் உள்ளன. மற்ற கோயிலில் காணப்படாத சிறப்பாக இதனைக் கூறலாம். கோயிலின் தெற்குப் பகுதியில் உள்ள பெரிய சன்னதிகள் ஏழு பலிகல்லு வடிவில் உள்ளன. இவர்களுக்கு காலை, மதியம் மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு பிரசாதம் வழங்கப்படுகிறது. சப்த மாதாக்கள் ஆதி பராசக்தியின் வெவ்வேறு வடிவங்களாகக் கருதப்படுகின்றனர். பிராமணி, வைஷ்ணவி, மகேஸ்வரி, கௌமாரி, வாராஹி, இந்திராணி மற்றும் சாமுண்டி ஆகியோர் சப்தமாதர்கள் ஆவர். கோயில் வரலாறு இது ஒரு பழமையான கோயில் ஆகும். இக்கோயில் பம்பா நதிக்கும், மணிமாலா நதிக்கும் நடுவில் நீரணம் என்ற இடத்தில் அமைந்துள்ளது . இங்கு வித்யா தேவ தட்சிணாமூர்த்தியின் மனதில் திரிகபாலீசுவரன் இருப்பதாகக் கூறப்படுகிறது. நிரணம் கவிஞர்கள் காலத்தில் இக்கோயிலும் இது உள்ள இடமும் புகழ் பெற்றிருந்தது. காலவெள்ளத்தில் அது மறந்துபோனது. அண்மையில் பிரபல ஜோதிடரான காணிப்பையூர் சங்கரன் நம்பூதிரிபாட் கோயில் திருப்பணிக்காக, "தேவ பிரஷ்ணத்தை" நடத்தினார். இங்குள்ள முக்கிய அம்சங்களில் ஒன்றாகக் கருதப்படுவது இங்குள்ள சிவலிங்கம் ஆகும். இது சிறப்புத்தன்மை வாய்ந்த சிவலிங்கம் ஆகும். இந்த லிங்கத்திருமேனியாக உள்ள கல் இமயமலையில் மட்டுமே காணும் சிறப்புடையதாகும். கபாலீசுவரன் தட்சிணாமூர்த்தியைமூலவராகக் கொண்ட மூலவர் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நிரணம் கவிஞர்கள் கண்ணசான் கவிஞர்கள் என்று அழைக்கப்படும் நிரணம் கவிஞர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று கவிஞர்கள் ஆவர். அவர்கள் 'மாதவ பணிக்கர்', 'சங்கர பணிக்கர்,' மற்றும் 'ராம பணிக்கர்' ஆவர்.புகழ்பெற்ற கவிஞரும், அவர்கள் கோயிலுக்கு அருகில் வாழ்ந்த திரிகபாலீசுவரனின் (தட்சிணாமூர்த்தி) பக்தரும் ஆவார். நிரணத்தில் . அவர்களின் படைப்புகள் முக்கியமாக சமஸ்கிருத இதிகாசங்களின் தழுவல், மொழிபெயர்ப்பு மற்றும் புராணங்கள் ஆகும். அவர்கள் பொ.ஆ. 1350-பொ.ஆ.1450இல் வாழ்ந்தவர்கள். மேலும் பார்க்கவும் 108 சிவன் கோவில்கள் கேரளாவின் கோவில்கள் கடச்சிரா ஸ்ரீ திருக்கபாலம் சிவன் கோவில் நாதாபுரம் இரிங்கன்னூர் சிவன் கோவில் படத்தொகுப்பு குறிப்புகள் கேரளத்திலுள்ள சிவன் கோயில்கள் Coordinates on Wikidata பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்
598556
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
பாலையூர் மகாதேவர் கோயில்
பாலையூர் மகாதேவர் கோயில் பழங்கால கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் சாவக்காடு அருகில் பாலையூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு பழம்பெரும் வாய்ந்த கோயில் ஆகும்.  இக்கோயில் பரசுராமரால் நிறுவப்பட்ட 108 சிவன் கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அவர் இங்குள்ள மகாதேவா (சிவன்) சிலையை நிறுவியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. புராணங்கள் பாலையூர், பிராமணர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியாகும். மேலும் பார்க்கவும் 108 சிவன் கோவில்கள் கேரளாவின் கோவில்கள் குறிப்புகள் கேரளத்திலுள்ள சிவன் கோயில்கள் திருச்சூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்
598557
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
பனமுக்கும்பள்ளி சாஸ்தா கோயில்
பனமுக்கும்பள்ளி சாஸ்தா கோயில் இந்தியாவின் கேரளாவின் திருச்சூர் நகரில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயிலின் மூலவர் அய்யப்பன் ஆவார். இக்கோயிலில் ஆண்டுதோறும் திருச்சூர் பூரம் சிறப்பாக நடத்தப்பெறுகிறது. மூலவர் இக்கோயில் திருச்சூர் வடக்குமநாதன் கோயிலிருந்து கிழக்கில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் 2,500 ஆண்டு பழமையுடையவராகக் கருதப்படுகிறார். மூலவர் பத்மாசனத்தில் உள்ளார். சாஸ்தாவை இவ்வாறாக ஒரு வித்தியாசமான கோலத்தில் காண்பது மிகவும் அரிதாகும். இக்கோயிலில் சிவன், விநாயகர், துர்க்கை உள்ளிட்ட பிற தெய்வங்கள் உள்ளன. மிகுந்த ஈடுபாட்டுடன் மூலவரை தரிசித்தால் சகல நோய்களும் விலகும் என்று நம்புகின்றனர். குறிப்புகள் கேரளத்திலுள்ள சிவன் கோயில்கள் திருச்சூர் மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்
598558
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF
மூலா நாராயண சுவாமி
மூலா நாராயண சுவாமி (Moola Narayana Swamy) ( சுமார் 1912 – 20 ஆகஸ்ட் 1950) ஓர் இந்தியத் தொழிலதிபரும், தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். இராயலசீமை வங்கி வங்கி, இராயலசீமை டெக்ஸ்டைல்ஸ், கடப்பா செராமிக்ஸ், கடப்பா எலக்ட்ரிக் கம்பெனி, எண்ணெய் ஆலைகள், பால் கூட்டுறவுச் சங்கங்கள், சாராயம் ஒப்பந்தம், மார்க்கெட் யார்டுகள் போன்ற பல வணிகங்களை இவர் வைத்திருந்தார். இவர் "ஆந்திர பிர்லா" என்ற பெயராலும் அறியப்பட்டார். இவர், இந்தியத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான வாகினி ஸ்டுடியோவை நிறுவினார். இது அந்த நேரத்தில் ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட படபிடிப்பு அரங்கங்களில் ஒன்றாகும். பிற்காலத்தில், பொம்மிரெட்டி நாகிரெட்டி இந்த நிறுவனத்தினை வாங்கினார். பின்னர் இதை விஜயா வாகினி ஸ்டுடியோஸ் என பெயர் மாற்றம் செய்தார். மேற்கோள்கள் தெலுங்குத் திரைப்பட நடிகர்கள் அனந்தபூர் மாவட்ட நபர்கள் 1950 இறப்புகள்
598559
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
பனஞ்சேரி முடிக்கோடு சிவன் கோவில்
பனஞ்சேரி முடிக்கோடு சிவன் கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் பனஞ்சேரி என்னுமிடத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு பழமையான இந்து கோயிலாகும் . கோயிலின் மூலவரான சிவன், கருவறையில், மேற்கு நோக்கி உள்ளார். பரசுராமர், இங்குள்ள மூலவர் சிலையை நிறுவியதாக நாட்டுப்புற வழக்காறுகள் கூறுகின்றன. கேரளாவில் உள்ள 108 பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும். மேலும் பார்க்கவும் 108 சிவன் கோவில்கள் கேரளாவின் கோவில்கள் திருச்சூர் கிராமத்தில் உள்ள இந்து கோவில்கள் குறிப்புகள் கேரளத்திலுள்ள சிவன் கோயில்கள் திருச்சூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்
598560
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%20%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE
மூலா வெங்கட ரங்கய்யா
மூலா வெங்கட ரங்கய்யா (Moola Venkata Rangaiah) ஒரு இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் தனது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். தனது தந்தை மூலா நாராயண சுவாமியுடன் சேர்ந்து, வாகினி ஸ்டுடியோவின் இணை உரிமையாளராக இருந்தார். இது அந்த நேரத்தில் ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட படபிடிப்பு அரங்கங்களில் ஒன்றாகும். பின்னணி நாராயண சுவாமி 1950 இல் இறந்த பிறகு, 1961 ஆம் ஆண்டில், பொம்மிரெட்டி நாகிரெட்டி இந்த நிறுவனத்தினை வாங்கினார். பின்னர் இதை விஜயா வாகினி ஸ்டுடியோஸ் என பெயர் மாற்றம் செய்தார். மேற்கோள்கள் 2004 இறப்புகள் அனந்தபூர் மாவட்ட நபர்கள்
598561
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
திருவரங்கம் ஊராட்சி
திரவரங்கம் ஊராட்சி, ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, இவற்றில் இருந்து 6 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1200 ஆகும். இவர்களில் பெண்கள் 525 பேரும் ஆண்கள் 675 பேரும் உள்ளனர்.
598562
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
நஞ்சனகூடு சட்டமன்றத் தொகுதி
நஞ்சனகூடு சட்டமன்றத் தொகுதி (, ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மைசூரு மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். சாமராஜநகரா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 214 ஆகும். சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பு மேற்கோள்கள் கர்நாடக சட்டமன்றத் தொகுதிகள் மைசூர் மாவட்டம்
598563
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF
அம்சத் பாசா சேக் பேபரி
அம்சத் பாசா சேக் பேபரி (Amzath Basha Shaik Bepari) ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். கடப்பா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான இவர் ஆந்திரப் பிரதேசத்தின் தற்போதைய துணை முதல்வராக இருக்கிறார். 2009 ஆம் ஆண்டு எ. சா. ராஜசேகரின் கீழ் கடப்பா மாநகராட்சியிலிருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பின்னர் 2014 தேர்தலில் 30,000 க்கும் அதிகமான வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2019 தேர்தலிலும் 50,000 க்கும் அதிகமான வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஜெகன்மோகன் ரெட்டியுடனும் தனது விசுவாசத்தைத் தொடர்ந்தார். இவர் "ஹாரூன் சப்" குடும்பம் என்று அழைக்கப்படும் வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது பள்ளிக் கல்வியை நிர்மலா ஆங்கில வழிப் பள்ளியிலும், இடைநிலைப் படிப்பை புனித சூசையப்பர் கல்லூரியிலும் முடித்தார். கடப்பா அரசு கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பைப் படித்தார். 2019 ஆம் ஆண்டில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் ஆந்திரப் பிரதேசத்தின் ஐந்து துணை முதலமைச்சர்களில் இவரும் ஒருவரானார். மேலும் கூடுதலாக சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். மேற்கோள்கள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் வாழும் நபர்கள்
598564
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D
பாப்பலா சலபதிராவ்
பாப்பலா சலபதிராவ் (Pappala Chalapathirao) (பிறப்பு 1 ஜனவரி 1946) ஒரு இந்திய அரசியல்வாதியாவார். 1985 முதல் 2004 வரை ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார். 2004 இல், இவர் பதினான்காவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கோள்கள் 14வது மக்களவை உறுப்பினர்கள் தெலுங்கு தேசம் கட்சி அரசியல்வாதிகள் வாழும் நபர்கள் 1946 பிறப்புகள்
598566
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
நிமிசா சக்குங்கல்பரம்பில்
நிமிசா சுரேசு சக்குங்கல்பரம்பில் (Nimisha Suresh Chakkungalparambil) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த மாற்றுத்திறன் தடகள வீரர் ஆவார். இவர் பெண்களுக்கான டி47 வகை நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்கிறார். 2022 ஆம் ஆண்டு ஆங்சோவில் நடைபெற்ற ஆசிய இணை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணிக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 25 அக்டோபர் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதியில் நடைபெற்ற டி47 வகையினருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் நிமிசா தங்கப் பதக்கம் வென்றார் நிமிஷா குசராத்தின் காந்திநகரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் சிறப்பு மையத்தில் பயிற்சி பெற்றார். பிப்ரவரி 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துபாயில் நடந்த 2 ஆவது பாசா பன்னாட்டு உலக இணை தடகள கிராண்டு பிரிக்சு போட்டியில் நீளம் தாண்டுதல் எஃப் 46/47 வகையினர் பிரிவில் 5.25 மீ. தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். இப்போட்டி நிமிசாவின் முதல் பன்னாட்டு அளவு போட்டியாகும். மேற்கோள்கள் இந்தியப் பெண் விளையாட்டு வீரர்கள் வாழும் நபர்கள் கேரள நபர்கள்