id
stringlengths
1
6
url
stringlengths
31
789
title
stringlengths
1
93
text
stringlengths
9
259k
595923
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
கூட்ட அறிக்கை
கூட்ட அறிக்கை (Minutes), கூட்ட அறிக்கை என்பது ஒரு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விபரங்களின் குறிப்பு ஆகும். பொதுவாக இவை கூட்டத்தின் நிகழ்வுகளை விவரிக்கின்றன மற்றும் பங்கேற்பாளர்களின் பட்டியல், பங்கேற்பாளர்களால் விவாதிக்கப்பட்ட செயல்பாடுகளின் அறிக்கை மற்றும் தொடர்புடைய பதில்கள் அல்லது நடவடிக்கைகளுக்கான முடிவுகள் ஆகியவை அடங்கும். சொற்பிறப்பியல் "மினிட்ஸ்" என்ற சொல் லத்தீன் சொற்றொடரான மினுடா ஸ்கிரிப்டுரா (அதாவது "சிறிய எழுத்து") "தோராயமான குறிப்புகள்" என்று பொருள்படும் சொல்லில் இருந்து பெறப்பட்டிருக்கலாம். உருவாக்கம் கூட்டத்தின் முடிவில் தட்டச்சு செய்பவர் அல்லது நீதிமன்றத்தில் குறிப்பு எடுப்பவர் மூலம் கூட்ட அறிக்கைகள் உருவாக்கப்படலாம், அவர் சுருக்கெழுத்து குறியீட்டைப் பயன்படுத்தி கூட்ட அறிக்கையைத் தயாரித்து பங்கேற்பாளர்களுக்கு வழங்கலாம். மாற்றாக, கூட்டத்தை குறல் பதிவு அல்லது காட்சிப் பதிவு செய்யலாம். மேலும் குழுவின் நியமிக்கப்பட்ட அல்லது முறைசாரா முறையில் நியமிக்கப்பட்ட செயலர் குறிப்பு எடுத்து பின்னர் கூட்ட அறிக்கை தயாரிக்கலாம். அதிகமான அரசு நிறுவனங்கள் நிகழ்நேரத்தில் கூட்ட அறிக்கையைத் பதிவுசெய்து தயார் செய்ய கூட்ட அறிக்கைப் பதிவு மென்பொருளைப் பயன்படுத்துகின்றன.
595926
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
தரவகம்
தரவு மையம் என்பது தரவு பரிமாற்றத்தின் மையமாகும். இது தரவு அறிவியல், தரவு பொறியியல், தரவு கிடங்கு தொழில்நுட்பங்களால் வழிபடுத்தப்படுகிறது , இது பயன்பாடுகள், வழிமுறைகள் போன்ற இறுதிப் புள்ளிகளுடன் தொடர்பு கொள்கிறது. கூறுபாடுகள் ஒரு தரவு மையம் ஒரு தரவுக் கிடங்கிலிருந்து வேறுபடுகிறது. ஏனெனில் அது பொதுவாக ஒருங்கிணைக்கப்படாததும் பெரும்பாலும் வெவ்வேறு வகைகளில் இருக்கும். தரவுக் கிடங்கு வகைகளும் ஆகும். இது ஒரு செயல்பாட்டு தரவுக் கிடங்கிலிருந்து வேறுபடுகிறது , ஏனெனில் ஒரு தரவு மையம் செயல்பாட்டுத் தரவுகளுக்கு மட்டும் வரம்புப்படுத்தப்பட வேண்டியதில்லை. ஒரு தரவு மையம் தரவை ஒரே இடத்தில் தேக்குவதற்குப் பதிலாக , பல விரும்பத்தக்க படிவங்களில் தரவை வழங்குகிறது. மேலும் இது தரவுகளுக்கு நகலெடுத்தலைத் தவிர்த்தல், தரத்தையும் பாதுகாப்பையும் வழங்கல், இன்னும் வினவுவதற்கான செந்தர முறைகளையும் சேர்ப்பதால் தரவு ஏரியிலிருந்து வேறுபடுகிறது. தரவு ஏரி தரவை ஒரே இடத்தில் தேக்கி வைப்பதற்கும் , தரவை செயலாக்க அல்லது அதற்கு மதிப்பைச் சேர்க்க நுகர்வோரை விடுவதற்கும் மட்டும் உதவுகிறது. தரவு மையங்கள் ஒரு நிறுவனத்திற்குள் சரியான தரவுகளுக்குச் செல்ல சிறந்த இடமாகும். இதனால் அழைப்பாளர்களுக்கும் தரவு வழங்குபவர்களுக்கும் இடையிலான பல புள்ளி க்கு - புள்ளி இணைப்புகள் செய்யப்பட வேண்டியதில்லை. இதனால் தரவு மைய அமைப்பு வழங்கல்கள், அட்டவணைகளுக்காக பல்வேறு தரவக அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும். பல்வேறு தரவக அணிகள் பலவற்றிலிருந்து புதிய சேவைகள், கூறுபாடுகளைப் பெற முயலும்போது, அவையும் பல்வேறு அணிகளில் இருந்து அவற்றைப்பெறுவதால், அனைவருக்கும் வழங்கும் ஒரு இலவசமான நிறுவனமாக அமைய முடியாது. மேற்கோள்கள் தரவு மேலாண்மை தரவுக் கட்டமைப்புக்கள்
595931
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF
பகத் பூல் சிங் அரசு மகளிர் மருத்துவக் கல்லூரி
பகத் பூல் சிங் அரசு மகளிர் மருத்துவக் கல்லூரி, இந்தியாவின் அரியானாவின் சோனேபட் மாவட்டத்தில் கோகானாவில் கான்பூர் கலனில் உள்ள ஒரு பொது மகளிர் மருத்துவக் கல்லூரி ஆகும். இது சுதந்திர இந்தியாவின் முதல் மகளிர் அரசு மருத்துவக் கல்லூரி. இக்கல்லூரி 1914-ல் நிறுவப்பட்ட தில்லியின் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரிக்குப் பிறகு வட இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் நிறுவனம் ஆகும். 2013ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் நாளன்று, இந்தியத் தேசிய காங்கிரசு கட்சித் தலைவர் சோனியா காந்தியால் இந்தக் கல்லூரி திறந்து வைக்கப்பட்டது. வரலாறு 2008ஆம் ஆண்டில், அரியானா முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா, கான்பூர் கலானில் உள்ள பகத் பூல் சிங் மகளிர் பல்கலைக்கழகத்தின் கீழ் மகளிர் மருத்துவக் கல்லூரியை நிறுவுவதற்கான திட்டத்தை முதலில் அறிவித்தார். 2009ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி சோனியா காந்தி இந்தக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். இந்தக் கல்லூரியின் தொடர்புடைய மருத்துவமனை 100 படுக்கைகள் மற்றும் 21 மருத்துவர்களைக் கொண்ட குழுவுடன் 2011ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கியது. இந்த எண்ணிக்கை மார்ச் 2013 நிலவரப்படி 450 படுக்கைகள் மற்றும் 211 மருத்துவர்களுடன் தரம் உயர்த்தப்பட்டது. வளாகம் இந்த கல்லூரி 88 ஏக்கர் நிலப்பரப்பில் 700 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. படிப்புகள் மற்றும் இணைப்பு பகத் பூல் சிங் பெண்களுக்கான அரசு மருத்துவக் கல்லூரி இளநிலை மருத்துவம் படிப்புகளில் மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சியை வழங்குகிறது. இக்கல்லூரி தேசிய மருத்துவ ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு பண்டிட் பகவத் தயாள் சர்மா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பிற இந்திய மருத்துவக் கல்லூரிகளைப் போலவே, இந்தக் கல்லூரியிலும் மாணவர் சேர்க்கை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் தகுதியின் அடிப்படையில் நடைபெறுகிறது. குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் மானுஷி சில்லர் - உலக அழகி 2017 போட்டியின் வெற்றியாளர் மற்றும் நடிகை. மேலும் பார்க்கவும் அரியானாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளம் சோனிபத் மாவட்டம் மருத்துவக் கல்லூரிகள்
595934
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%28%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%29
ரத்தம் (திரைப்படம்)
ரத்தம் இன்பினிட்டி பிலிம் வென்சர்சு தயாரிப்பில் சிஎஸ் அமுதன் இயக்கியிருக்கும் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படம் 2023ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்திற்கு கண்ணன் நாராயணன் இசை அமைத்திருக்கின்றார். கதாநாயகனாக விஜய் ஆண்டனி நடித்திருக்கின்றார். மேலும் நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார் போன்றோர் இத் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்கள். முதல் முறையாக தொழில்நுட்பத்தை கொண்டு கொலைகளைச் செய்யும் ஒரு கூலிப்படையை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றார் இயக்குனர். கதை புகழ்பெற்ற புலனாய்வுப் இதழியலாளர் விஜய் ஆண்டனி, மனைவி பிரசவ நேரத்தில் இறந்துவிட அதற்கு தனது வேலையும் ஒரு காரணம் என எண்ணி தனது வேலையைத் துறந்து தனது மகளுடன் கோல்கட்டவாவில் வசிக்கின்றார். கவலையை மறக்க குடிக்கு அடிமையான விஜய் ஆண்டனியை அவரை தனது மகன் போல வளர்த்த பத்திரிக்கை நடத்தும் நிழல்கள் ரவி ஒரு நாள் சந்தித்து தனது மகன் அலுவலகத்திலேயே கொடுரமாக கொலை செய்யப்பட்டதை தெரிவிக்கின்றார். விஜய் ஆண்டனியும் சென்னைக்கு வந்து பத்திரிக்கை அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்து தனக்கு கிடைக்கும் தகவல்களைக் கொண்டு குற்றவாளியை எவ்வாறு கண்டுபிடிக்கின்றார் என்பதே மீதிக்கதை. மேற்கோள்கள் 2023 தமிழ்த் திரைப்படங்கள் இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படங்கள்
595937
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
செந்தலை வாத்து
செந்தலை வாத்து ( pink-headed duck, (Rhodonessa caryophyllacea ) என்பது ஒரு பெரிய முக்குளி வாத்து ஆகும். இது ஒரு காலத்தில் இந்தியாவின் கங்கை சமவெளிகளிலும், மகாராட்டிரம், வங்காளதேசத்தின் சில பகுதிகளிலும், மியான்மரின் ஆற்றுச் சதுப்பு நிலங்களிலும் காணப்பட்டது. ஆனால் 1950 களில் அற்றுவிட்டதோ என்று அஞ்சப்பட்டது. பல தேடல்களைத் தொடர்ந்து இவை இருப்பதற்கான எந்த சான்றும் கிடைக்கவில்லை. வடக்கு மியான்மரின் அணுக முடியாத சதுப்பு நிலப் பகுதிகளில் இது இருக்கலாம் என்றும், அந்த பகுதியில் இருந்து வந்த சில பறவை நோக்கர்களின் அறிக்கைகள் இதன் நிலையை "மிக அருகிய இனம்" என்று அறிவிக்க வழிவகுத்தது. இந்த இனம் எந்த பேரினத்தில் உள்ளது என்பது சர்ச்சைக்கு உரியதாக உள்ளது. மேலும் சிலர் இது செங்களியனுடன் ( நெட்டா ருஃபினா ) நெருங்கியதாக இருப்பதாக பரிந்துரைத்தாலும், மற்றவர்கள் இதை தனி இனத்தில் வைத்துள்ளனர். கருமையான உடலுடன் இளஞ்சிவப்பு தலை கொண்ட இது தனித்துவமான தோறம் கொண்டது. இதன் இறக்கையில் உள்ள நிறத் திட்டு மற்றும் நீண்ட மெல்லிய கழுத்து ஆகியவை பொதுவாக புள்ளி மூக்கு வாத்துகளுடன் பகிர்ந்து கொள்ளும் பொதுவான அம்சங்களாகும். இதன் முட்டைகள் ஏறக்குறைய கோளமாக இருப்பது ஒரு விசேசமாக பார்க்கப்படுகிறது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் BirdLife International Species Factsheet வங்காளதேசப் பறவைகள் மியான்மர் பறவைகள் இந்தியப் பறவைகள் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - மிக அருகிய இனம் வாத்துகள்
595939
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF.%20%E0%AE%9A%E0%AE%BF.%20%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
தி. சி. கௌரி சங்கர்
தி. சி. கௌரி சங்கர் (D. C. Gowri Shankar) ஒரு இந்திய அரசியல்வாதியும் கருநாடகா முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஜனதா தளம் (மதச்சார்பற்ற) உறுப்பினராக மதுகிரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து கருநாடக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013 சட்டமன்றத் தேர்தலில் பிறகு துமக்கூரூ ஊரக சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 1500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். பின்னர் மீண்டும் 2018 தேர்தலில் போட்டியிட்டு 5640 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று இரண்டாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். ஜனதா தளம் மற்றும் காங்கிரசு கூட்டணி ஆட்சியில் 6 மாதங்கள் எம்எஸ்ஐஎல் அறக்கட்டளையின் தலைவராக இருந்தார். மார்ச் 2023-ல், துமக்கூர் கிராமப்புற சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கவுரி சங்கரைக் கருநாடக உயர்நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது. நீதிபதி எஸ். சுனில் தத் யாதவ், கவுரி சங்கர் 2018-ல் தனது தேர்தல் பிரச்சாரத்தில் அங்கீகரிக்கப்படாத வழிகளைப் பயன்படுத்தியதாகத் தீர்ப்பளித்தார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ஜே நரசிம்மசுவாமி தொட்டபல்லாபூர் 21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் வாழும் நபர்கள் கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் கர்நாடக அரசியல்வாதிகள்
595940
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D
ஆசர் பேயர்
ஆசர் பேயர் (Asher Baer; ; 19 ஆம் நூற்றாண்டின் முதற் பகுதி, செயினி – 1897, எருசலேம்) என்பவர் உருசிய-யூதக் கணிதவியலாளரும், கைவினைஞருமாவார். இவர்  கணிதத்திலும், சிறப்பாக இயக்கவியலிலும் பல முக்கியமான கண்டுபிடிப்புகளைச் செய்தார். ஒரே விசையைக் கொண்டு, இரண்டு சம பற்சக்கரங்கள் ஒன்றுடன் ஒன்று இறுக நன்றாகப் பொருந்தி இரண்டு வெவ்வேறு இயக்கங்களை ஏற்படுத்தும் முறையைக் கண்டுபிடித்தார். 1858 ஆம் ஆண்டில் கோனிங்ஸ்பெர்க் கண்காட்சியில் இவரால் செதுக்கப்பட்ட மரத்திற்கு பரிசளிக்கப்பட்டது. அக் காலகட்டத்தில் இவருடைய பல‌ மதிப்பு மிக்க கண்டுபிடிப்புகளை செருமானிய இதழ்கள் கட்டுரைகளாக வெளியிட்டன. ஓசிப் ராபினோவிச், ஓ வோல் போன்றோர் உருசிய-யூத வார இதழ்களான ராத்சுவியத், ஹ கார்மெல் ஆகியவற்றில் இவரது சிறந்த திறமைகளை வெளியிட்டனர். 1860 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இவர் எருசலேம் சென்றார். அங்கு ஹா மேகிட் போன்ற சில எபிரேய இதழ்களுக்கு பல ஆண்டுகளாக எழுதியுள்ளார். மேற்கோள்கள் 1897 இறப்புகள் உருசியக் கணிதவியலாளர்கள் உருசிய ஊடகவியலாளர்கள் உருசிய இயற்பியலாளர்கள்
595950
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9C%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AE%BE
மனோஜ் குமார் ஜா
மனோஜ் குமார் ஜா ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராகவும், இராச்ட்டிரிய ஜனதா தளத்தின் உறுப்பினராகவும் உள்ளார். தற்போது இராச்ட்டிரிய ஜனதா தளத்தின் தேசிய செய்தி தொடர்பாளராகவும் பணியாற்றி வருகிறார். 15 மார்ச் 2018 அன்று, இவர் பீகார் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜா 1992-ல் தில்லி பல்கலைக்கழகத்தில் சமூகப் பணித் துறையில் முதுகலைப் பட்டத்தையும், 2000-ல் முனைவர் பட்டத்தையும் முடித்தார். இவர் தில்லி சமூகப் பணித் துறையில் பேராசிரியராகவும், 2014 மற்றும் 2017க்கு இடையில் இதன் தலைவராகவும் இருந்துள்ளார். தொழில் தில்லி சமூகப் பணி பள்ளியில் சேருவதற்கு முன்பு 1994 முதல் 2002 வரை ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் சமூகப் பணித் துறையில் விரிவுரையாளராக இருந்தார். தில்லியில் உள்ள திட்டம் மற்றும் கட்டிடக்கலை பள்ளியில் வருகை தரும் ஆசிரியராகவும் இருந்தார். அரசியல் பொருளாதாரம் மற்றும் நிர்வாகம், சமூக நடவடிக்கை மற்றும் சமூக இயக்கங்கள், பெரும்பான்மை சிறுபான்மை உறவுகள் மற்றும் அமைதி மற்றும் மோதல் ஆய்வுகள் ஆகியவை இவரது ஆராய்ச்சி முக்கியத்துவத்தில் அடங்கும். அக்டோபர் 2020-ல், இவர் தேஜஸ்வி யாதவின் முதன்மை அரசியல் ஆலோசகராக ஆனார் என்று தெரிவிக்கப்பட்டது. சூலை 2021 மாநிலங்களவை அமர்வின் போது இவர் ஆற்றிய உரைக்குப் பிறகு மக்கள் மத்தியில் இவரது புகழ் அதிகரித்தது. 4 பிப்ரவரி 2022 அன்று, மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரையை ஜா கடுமையாக விமர்சித்தார். மேலும் அனைத்து குடிமக்களின் கவலைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் "பாகுபாடற்ற" உரைக்கு அழைப்பு விடுத்தார். ஜா தி இந்து மற்றும் தி இந்தியன் எக்சுபிரசு செய்தித் தாள்களில் சமூக-அரசியல் விவகாரங்கள் தொடர்பாகக் கட்டுரைகளை எழுதி வருகிறார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் https://web.archive.org/web/20180614124753/http://www.merinews.com/article/interview-dr-manoj-kumar-jha---the-troubleshooter-for-lalu-prasad-yadav- -the-rjd/15928188.shtml 1967 பிறப்புகள் வாழும் நபர்கள்
595952
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D
சார்லஸ் எம். இலிஸ்
சார்லஸ் மெக்ஃபர்லேன் இங்லிஸ் (Charles McFarlane Inglis, 8 நவம்பர் 1870–13 பெப்ரவரி 1954) என்பவர் ஒரு இயற்கையியலாளர் ஆவார். இவர் 1923 முதல் 1948 வரை இந்தியாவில் உள்ள டார்ஜீலிங் அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராக இருந்தார். <ref name=":0">)</re>Warr, F. E. 1996. Manuscripts and Drawings in the ornithology and Rothschild libraries of The Natural History Museum at Tring. BOC.</ref> இந்த அருங்காட்சியகம் வங்காள இயற்கை வரலாற்றுச் சங்கத்தால் நடத்தப்பட்டது. இவர் தொடங்கி ஆசிரியராக இருந்த அந்த சங்கத்தின் இதழில் இவரது பல எழுத்தாக்கங்ள் வெளியிடப்பட்டன. இங்லிஸ் ஸ்காட்லாந்தில் உள்ள எல்ஜினில் பிறந்தார். ஓய்வு பெற்ற இண்டிகோ தோட்டக்காரரான ஆர்க்கிபால்ட் இங்லிஸின் மகனாக இவர் 18 வயதில் இந்தியா வந்தார். இங்லிசின் ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை, ஆனால் இவர் இன்வெர்னசில் இருந்த அலுவலக வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்குச் சென்றார். இந்தியாவில் இவர் முதலில் ஐலேகண்டியில் உள்ள ரூபச்சேரா தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்தார். ஆலன் ஆக்டேவியன் ஹியூமிடம் பணிபுரிந்த ஒரு சேகரிப்பாளர் ஒரு மாங்குயிலின் மாதிரியைக் காட்டிய பிறகு இவருக்கு பறவைகள் மீது ஆர்வம் ஏற்பட்டது. இதன் பின்னர் இவர் பறவையியலாளரான இசி ஸ்டூவர்ட் பேக்கரைத் தொடர்பு கொண்டார். 1898 இல் இவர் பாகோவ்னியில் இண்டிகோ தோட்டக்காரர் ஆனார். இந்த நேரத்தில் இவர் பறவைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, பட்டாம்பூச்சிகள் மற்றும் தும்பிகளின் பல மாதிரிகளை சேகரித்தார். 1923 இல் இவர் டார்ஜிலிங் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றார். ஓய்வு பெற்றவுடன் குன்னூருக்கு குடிபெயர்ந்தார். அங்கு இவர் 1954 இல் இறந்தார். பறவைகளை வரைவதிலும் விளக்குவதிலும் இவர் திறமையுடையவராக இருந்ததால் இந்தியாவில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த பறவைகள் பற்றிய தொடர் கட்டுரைகளை உருவாக்க தாமஸ் பெயின்பிரிக் ஃப்ளெட்சரால் அழைக்கபட்டார். அக் கட்டுரைகள் அக்ரிகல்சுரல் ஜர்னல் ஆஃப் இந்தியாவில் வெளியிடப்பட்டன. பின்னர் அவை தொகுக்கப்பட்டு 1924 இல் பேர்ட்ஸ் ஆப் அன் இண்டியன் கார்டன் என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இங்லிஸ் 1903 ஆம் ஆண்டு பிகாரில் செந்ததலை வாத்தின் எட்டு மாதிரிகளை சேகரித்தார். இதில் கடைசியாக அறியப்பட்ட மாதிரி 1935 சூனில் பகோவ்னியில் இருந்து சேகரிக்கப்பட்டது. இவர் இறந்த பிறகு இவரின் மனைவி சிபில் டோரத்தி ஹண்ட், இவரது சேகரிப்பில் இருந்த இரண்டு பாடம் செய்யப்பட்ட செந்தலை வாத்துகள் உட்பட இவரது சேகரிப்புகளை சென்னை அருங்காட்சியகத்துக்கு வழங்கினார். வெளியீடுகள் Baker, H. R. & C. M. Inglis. The Birds of Southern India including Madras, Malabar, Travancore, Cochin, Coorg and Mysore. Government Press, Madras (1930) Fletcher, T. B. and C. M. Inglis Birds of an Indian Garden. Calcutta & Simla: Thacker, Spink & Co. (1924) Inglis C. M. The leaf insect – Phyllium scythe Gr. J. Darjeeling Nat Hist. Soc. 5 : 32–33 (1930) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மேற்கு வங்காள அறிவியலாளர்கள் 1954 இறப்புகள் 1870 பிறப்புகள் இந்திய இயற்கை ஆர்வலர்கள்
595966
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF
முந்தியாசினி
முந்தியாசினி (Muntiacini) என்பது மான்களின் இனக்குழு ஆகும். இதில் இரண்டு பேரினங்கள் உள்ளன: எலாபோடசு (சிண்டு மான்) முந்தியாகசு (கேளையாடு) முந்தியாசினி முந்தியாசினே என்ற துணைக் குடும்பமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது செர்வினே இனக்குழுவாகக் கருதப்படுகிறது. மேற்கோள்கள் மான்கள்
595968
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9
தருசி கருணாரத்ன
திசாநாயக்க முதியன்சேலாகே தருசி தில்சரா கருணாரத்ன (பிறப்பு: 18 நவம்பர் 2004) ஒரு இலங்கைத் தடகள வீராங்கனையாவார். அவர் முக்கியமாக 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்கிறார். 2023 ஆம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய தடகள வாகைப் போட்டியில் 400 மீட்டர் பெண்கள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் இந்த நிகழ்வில் 25 ஆண்டுகள் பழமையான ஆசிய சாதனையை முறியடித்தார். அக்டோபர் 2023 இல், அவர் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று 19 வயதில் பெண்களுக்கான 800 மீட்டர் இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். சுசந்திகா ஜெயசிங்கவிற்குப் பிறகு இலங்கைக்காக ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றார். தருசியின் முதல் பயிற்சியாளர் புஷ்பா குமுதினி அவரது திறமையைக் கவனித்த பிறகு, தனது கிராமப்புற பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியில் 100 மீ மற்றும் 200 மீ போட்டிகளில் போட்டியிட்டார். விளையாட்டு புலமைப்பரிசில் கிடைக்கபெற்று வளலவில் உள்ள ஏ. ரத்னாயக்கா மத்திய கல்லூரிக்கு வந்த தருசி 2018 இல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டியில் சாதனை நேரத்தில் ஓடி வெற்றி பெற்ற அஞ்சலோட்டக் குழுவில் உறுப்பினராக இருந்தார். அந்த ஆண்டு இளையோர் தேசியப் போட்டிய்ல் 800 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றது அவரது முதல் குறிப்பிடத்தக்க தனிப்பட்ட சாதனையாகும். 2020ஆம் ஆண்டு அகில இலங்கைப் பாடசாலை விளையாட்டுப் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 15 வயதான தருசி 400 மீ மற்றும் 800 மீ ஓட்டப் பந்தயங்களில் புதிய சாதனைகளைப் படைத்து வெற்றி பெற்றார். அவர் 400 மீ ஓட்டத்தில் 56.54 வினாடிகள் மற்றும் 800 மீ ஓட்டத்தில் 2 நிமிடம் 14.00 வினாடிகளில் ஓடி சாதனை படைத்தார். 2019ஆம் ஆண்டில், அவர் சர் ஜோன் தர்பத் போட்டிகளில் 2:17.00 என்ற புதிய 800 மீ சாதனையையும் படைத்தார். ஜூன் 2023 இல், தென் கொரியாவின் யெச்சியோனில் நடந்த 20 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் தடகள வாகைப் போட்டிகளில் 800 மீட்டர் பெண்கள் பந்தயத்தில் தங்கம் வென்றார். 400 மீ ஓட்டத்தில் வெள்ளியும், கலப்பு அஞ்சலோட்டத்தில் வெண்கலமும் வென்றார். 2023 ஆசிய தடகள வாகைப் போட்டியில், பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தருசி 2:00:06 நேரத்தைப் பதிவுசெய்து தங்கம் வென்று புதிய ஆசிய சாதனையையும் படைத்தார். அவர் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையப் பிரதிநிதித்துவப்படுத்தித் தனது ஆசிய விளையாட்டுப் போட்டியில் அறிமுகமானார். பெண்களுக்கான 800 மீ. இறுதியில் அவர் 2:03.20 நிமிடங்களில் தனது ஓட்டத்தை முடித்துத் தங்கப் பதக்கம் வென்றார். 2002 இற்குப் பிறகு (21 ஆண்டுகளுக்குப் பிறகு) ஆசிய விளையாட்டு தடகளப் போட்டியில் இலங்கை தங்கப் பதக்கம் வென்ற முதல் நிகழ்வாக இது அமைந்தது. இந்த வெற்றியின் போது பெண்களுக்கான 800 மீ ஓட்டத்தில் அவர் ஒரு புதிய தேசிய சாதனையையும் படைத்தார். 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4 × 400 மீட்டர் போட்டியில் 3:30.88 நிமிடங்களில் முடித்து வெண்கலப் பதக்கத்தை வென்ற பெண்களுக்கான 400 மீட்டர் அஞ்சலோட்டக் குழுவிலும் அவர் இடம்பெற்றார். மேற்கோள்கள் 2004 பிறப்புகள் வாழும் நபர்கள் இலங்கை விளையாட்டு வீரர்கள்
595970
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
முறைமையற்ற புலன் உணர்தல்
முறைமையற்ற புலன் உணர்தல் (Amodal perception) என்பது ஒரு உடல் அமைப்பு முழுவதையும் அதன் சில பகுதிகள் மட்டுமே உணர்ச்சி ஏற்பிகளை தாக்கும் போது ஏற்படும் புலன் உணர்தல் ஆகும். எடுத்துக்காட்டாக , முறைமையற்ற புலன் உணர்தல் ஒரு அட்டவணை ஒரு முழுமையான அளவீட்டு கட்டமைப்பாகக் கருதப்படும் , அதன் ஒரு பகுதி மட்டுமே - எதிர்கொள்ளும் மேற்பரப்பு - விழித்திரைக்குத் திட்டமிட்டு , அருகிலுள்ள மேற்பரப்புகள் மட்டுமே பார்வைக்கு வெளிப்பட்ட போதிலும் , அது உள் அளவு மற்றும் மறைக்கப்பட்ட பின்புற மேற்பரப்புகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. இதேபோல் , நம்மைச் சுற்றியுள்ள உலகம் எந்த நேரத்திலும் அதன் ஒரு பகுதி மட்டுமே பார்வையில் இருந்தாலும் அதைச் சுற்றியுள்ள ஒரு முழு உலகமாக கருதப்படுகிறது. மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட மற்றொரு எடுத்துகாட்டு , " ஒரு முற்றுகை வேலிக்கு பின்னால் உள்ள நாய் , அதில் ஒரு நீண்ட குறுகிய பொருள் (நாய்) அதன் முன் வேலியால் ஓரளவு மூடப்பட்டிருக்கும். இருப்பினும் அது ஒரு தொடர்ச்சியான பொருளாக கருதப்படுகிறது. ஆல்பர்ட்டு பிரெக்மேன் இந்த நிகழ்வின் மற்றொரு செவிசார் ஒப்புமையைக் குறிப்பிட்டார். வெள்ளை இரைச்சல் வெடிப்பதால் ஒரு மெல்லிசை குறுக்கிடப்படும்போது , அது இரைச்சல் வெடிப்புகளுக்கு பின்னால் தொடரும் ஒற்றை மெல்லிசையாக கேட்கப்படுகிறது. இந்தக் கோட்பாட்டை உருவாக்கிய பெருமை பெல்ஜிய உளவியலாளர் ஆல்பர்ட்டு மைக்கோட்டே, இத்தாலிய உளவியலாளர் பேபியோ மெட்டெல்லி ஆகியோருக்கு அண்மைய ஆண்டுகளில் ஈ. எசு. ரீடும் கெஸ்டால்டிஸ்டுகளும் உருவாக்கிய பணியின் மூலம் கிடைத்துள்ளது. முறைமை நிறைவிப்பு என்பது ஒரு போலி நிகழ்வாகும். இந்நிலையில் வடிவம் வரையப்படாதபோது கூட ஒரு வடிவம் மற்ற வடிவங்களைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. மூன்று வட்டுகளை மறைப்பதாகத் தோன்றும் முக்கோணங்கள், கனிசா முக்கோணத்தில் முக்கோண உருவரை, கோஃப்கா குறுக்கு வெட்டுகளில் வெவ்வேறு உருவெளிகளில் தோன்றும் வட்டங்களும் சதுரங்களும் ஆகியவை சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். மேலும் காண்க வளர்ச்சி உளவியல் பொய்த்தோற்ற உருவெளிகள் இடைமுறைமைக் கருத்து உளவியல் மனித வளர்ச்சியியல் அறிவாற்றல்
595971
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF
செர்வினி
செர்வினி (Cervini) என்பது மான்களின் இனக்குழு ஆகும். இக்குழுவில் தற்போதுள்ள ஏழு பேரினங்களும் சில அழிந்துபோன இனங்களும் அடங்கும். இன்றுள்ள செர்வினி இனக்குழுவுக்கு அண்மையில் முன்வாழ்ந்த இதன் முன்னினத்துக்கு மூன்று கூரிய கிளைகள் கொண்ட கவைக்கொம்பு (branched antler) இருந்தது. இவை அடிக்கொம்பு (beam), முதற்கிளை (brow tine), மூன்றாம் கிளைக்கவை (trez tine). தொகுதிவரலாறு கில்பர்த்து மேலும் பலர் (2006) வகுத்த தொகுதிவரலாறு பின்வருமாறு: மேற்கோள்கள் பாலூட்டிகள்
595974
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81
எலாப்புரசு
Articles with 'species' microformats பாலூட்டிப் பேரினங்கள் எலாப்புரசு (Elaphurus) என்பது மான் பேரினங்களுள் ஒன்று. இதில் பிரிடேவிட் மான், எ. டேவிடியானசு மட்டுமே தற்போதுள்ள சிற்றினமாக உள்ளது. பல புதை படிவச் சிற்றினங்கள் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. சிற்றினங்கள் சிற்றினங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எலாப்புரசு மில்னே-எட்வர்ட்சு, 1872. எலாப்புரசு டேவிடியனசு மில்னே-எட்வர்ட்சு, 1866. - பிரிடேவிட் மான் † எலாப்புர்சு பைபர்க டீல்ஹார்ட் டி சார்டின் மற்றும் பிவெட்டோ, 1930. † எலாப்புரசு பைபுர்காடசு சிகாமாய் ஒட்சுகா, 1968 † எலாப்புரசு எலியோனோரே விசுலோபோகோவா, 1988. † எலாப்புரசு சின்னனியென்சிசு சியா எட் வாங், 1978. † எலாப்புரசு பார்மோசனசு சிகாமா, 1937. மேற்கோள்கள்
595977
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பொய்த்தோற்ற உருவெளிகள்
மாய உருவெளிகள் அல்லது அகநிலை உருவெளிகள் என்பது ஒரு விளிம்பின் ஒளிரும் அல்லது அந்த விளிம்பில் நிற மாற்றம் இல்லாமல் ஒரு விளிம்பைப் பற்றிய உணர்வைத் தூண்டும் காட்சி மாயைகள் ஆகும். காட்சி மாயைகள் பொய்த்தோற்ற ஒளிர்வும் ஆழமான ஒழுங்கமைவும் பெரும்பாலும் பொய்த்தோற்ற உருவெளிகளுடன் சேர்ந்து வருகின்றன. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாயையாமுருவெளிகளைக் கண்டுபிடித்த பெருமை பிரெட்ரிக் சூமானுக்கு உண்டு. ஆனால் அவை இடைக்காலக் கலைகளில் உள்ளன. பொய்த்தோற்ற உருவெளிகளை உருவாக்குகின்றன. கெய்டானோ கனிழ்சாவின் 1976 ஆம் ஆண்டு அறிவியல் அமெரிக்கன் இதழ் ஆய்வுக் கட்டுரை பார்வையியலாளர்களுக்கு மாய உருவெளிகளில் ஆர்வம் மீண்டும் எழுந்தது. பொய்த்தோற்ற உருவெளியின் பொதுவகைகள் கனிழ்சா உருவங்கள் ஒருவேளை ஒரு மாய உருவெளியின் மிகவும் பரவலான எடுத்துக்காட்டு கெய்டானோ கனிழ்சாவால் பரப்பப்பட்ட பாக் - மேன் உருவமைப்பு ஆகும். கனிழ்சா உருவங்கள் காட்சிப் புலத்தில் பாக் - மேன் வடிவத் தூண்டிகளை சீரமைப்பதால் ஒரு மாய விளிம்பின் உணர்வைத் தூண்டுகின்றன. இதனால் விளிம்புகள் ஒரு வடிவத்தை உருவாக்குகின்றன. கனிழ்சா உருவங்கள் உருவத்தின் ஒரு பகுதி வெளிப்படையாக இல்லாவிட்டாலும் , கூர்மையான மாய விளிம்பால் வரையறுக்கப்பட்ட ஒரு வடிவத்தின் உணர்வைத் தூண்டுகின்றன. ஒளிர்மை உண்மையில் ஒருபடித்தாக இருந்தாலும் பொதுவாக வடிவம் பின்னணியை விட பொலிவாகத் தெரிகிறது. கூடுதலாக , மாய வடிவம் தூண்டுபவர்களை விட பார்வையாளருக்கு நெருக்கமாக இருப்பதாகத் தெரிகிறது. கனிழ்சா உருவங்களின் மாய வடிவத்தின் முறைமையான நிறைவு, மாய வடிவம், தூண்டிகளின் முறைமையற்ற நிறைவு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. எகிரென்சுட்டைன் பொய்த்தோற்றம் கனிசா உருவங்களுடன் நெருக்கமாக தொடர்புடையது எஹ்ரென்ஸ்டீன் மாயை. எஹ்ரென்ஸ்டீன் மாயை பாக் - மேன் தூண்டிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக எஹ்ரென்ஸ்டீன் மாயை ரேடியல் கோடு பிரிவுகள் வழியாக ஒரு மாயையான விளிம்பு உணர்வைத் தூண்டுகிறது. எஹ்ரென்ஸ்டீனின் கண்டுபிடிப்பு முதலில் ஹெர்மன் கட்டத்தின் மாற்றமாக சூழல் ரீதியாக மாற்றப்பட்டது. வரிக் கீற்றுகளைத் தவிர்த்தல் தவறாக வடிவமைக்கப்பட்ட இரண்டு வரிக்கீற்றுகளுக்கு இடையிலான எல்லையில் மாய உருவெளிகள் உருவாக்கப்படுகின்றன. இவை தவிர்ப்பு வரிக்கீற்றுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் மாய விளிம்பு தூண்டுதல் கூறுகளுக்குச் செங்குத்தாக உள்ளது. கலை, வரைவியல் வடிவமைப்பு 1972 முதல் 1984 வரை 1988 மற்றும் 1994 வரை ஒலிம்பிக் குறியுருக்கள் அனைத்தும் எல்ஸ்வொர்த் கெல்லியின் 1950 களின் தொடரைப் போலவே மாய உருவெளிகளைக் கொண்டுள்ளன. ஜேக்கப் கெசுட்டுமன் ஜெராட்சு தனது படைப்பான வாய்பாடு 1 (1991) இல் தனது பட்டுத்திரை அச்சுகளில் கனிழ்சா மாயையைப் பயன்படுத்தினார். மூளைப்புறணித் துலங்கல்கள் காட்சி அமைப்பில் உள்ள V1 V2 போன்ற தொடக்க காலக் காட்சி மூளைப் புறணிப் பகுதிகளின் பொய்த்தோர்றமான உருவெளிகளை உருவாக்குவதற்கு காரணமாகின்றன என்று கருதப்படுகிறது. மனித நரம்பியல் படிம நுட்பங்களைப் பயன்படுத்தும் ஆய்வுகள், பொய்த்தோற்ற உருவெளிகள் முதன்மைக் காட்சி புறணி ஆழமான அடுக்குகளில் செயல்பாட்டுடன் தொடர்புடையவை என்பதைக் கண்டறிந்துள்ளன. தொடர்புடைய காட்சி நிகழ்வுகள் காட்சிப் புலனின் நரம்பியல் அடிப்படையைப் படிப்பதற்கு, காட்சிப் பொய்த்தோற்றங்கள் பயனுள்ள தூண்டுதல்களாகும் , ஏனெனில் அவை இயல்பு நிலைமைகளின் கீழ் காட்சி உலகத்தை விளக்கும் காட்சி அமைப்பின் உள்ளார்ந்த வழிமுறைகளை கடத்திவிடுகின்றன. எடுத்துக்காட்டாக , இயற்கை உலகில் உள்ள பொருள்கள் பெரும்பாலும் ஓரளவு மட்டுமே தெரியும். மேற்பரப்பின் விளிம்பின் பகுதிகள் புலப்படாமல் இருக்கும்போது காட்சி அமைப்பு மேற்பரப்புகளை எவ்வாறு உருவாக்குகிறது என்பதற்கான தடயங்களை பொய்த்தோற்ற உருவெளிகள்கள் வழங்குகின்றன. மேற்பரப்புகளின் குறிமுறையாக்கம் காட்சி புலனுணர்வின் இன்றியமையாத பகுதியாக கருதப்படுகிறது , இது காட்சிக் கூறுகளின் தொடக்கநிலைப் பகுப்பாய்வு, முகங்கள், காட்சிகள் போன்ற சிக்கலான தூண்டுதல்களை அடையாளம் காணும் திறனுக்கு இடையில் காட்சிச் செயலாக்கத்தின் ஒரு முதன்மையான இடைநிலைக் கட்டத்தை உருவாக்குகிறது. முறைமையற்ற புலன் உணர்தல் தன்பருவெளியுரு நிரப்புதல் கெஸ்டால்ட் உளவியல் எதிர்மறை வெளி மெய்நிகர் உருவெளி புறவயமாக்கம் மேற்கோள்கள் மேலும் படிக்க வெளி இணைப்புகள் Illusory contours figures Many unpublished drawings (fr) முக்கோணங்கள் ஒளியியற் கண்மாயம்
595993
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87.%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D
ஜே. கில்லிசு மில்லர்
ஜே. கில்லிசு மில்லர் என்பவர் இளையவர் ஜோசப் கில்லிஸ் மில்லர் (Joseph Hillis Miller Jr) (மார்ச் 5, 1928-பிப்ரவரி 7, 2021) என்றும் அழைக்கப்படுபவர், ஓர் அமெரிக்க இலக்கிய விமர்சகர் மற்றும் அறிஞரும் ஆவார். இவர் கட்டுடைப்புக் கோட்பாடுகளை மேம்படுத்தினார். இவர் பால் டி மேன், ஜாக் டெரிடா மற்றும் ஜெஃப்ரி ஹார்ட்மேன் உள்ளிட்ட அறிஞர்களுடன் யேல் பள்ளியைச் சார்ந்தவர். இவர் இலக்கியத்தின் உரைக்கும் அதனுடன் தொடர்புடைய பொருளுக்கும் இடையிலான உறவைப் பகுப்பாய்வு செய்யும் பகுப்பாய்வு வழிமுறையாக கட்டுடைப்பை வாதிட்டார். மில்லர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகம், இர்வின் ஆகியவற்றுடன் தொடர்புடையவர். இவர் 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். மேற்கோள்கள் ஆர்வர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் 2021 இறப்புகள் 1928 பிறப்புகள்
595994
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
பயிற்சிப் புத்தகம்
ஒரு பயிற்சிப் புத்தகம் (exercise book) என்பது பள்ளிகளில் பள்ளி வேலைகள் மற்றும் குறிப்புகளை நகலெடுக்கப் பயன்படுத்தப்படும் குறிப்பேடு ஆகும். ஒரு மாணவர் பொதுவாக ஒவ்வொரு பாடத்திற்கும் வெவேறு பயிற்சிப் புத்தகத்தை வைத்திருப்பார்கள். பாடங்களைப் பொறுத்து பயிற்சிப் புத்தகம் மாறுபடலாம்.பெரும்பாலான பாடங்களுக்கு, பயிற்சி புத்தகத்தில் ஓரம் கொண்ட வரிசைக் காகிதம் இருக்கும், ஆனால் கணிதம் போன்ற மற்ற பாடங்களுக்கு, அட்டவணைகள் அல்லது பிற வரைபடங்கள், கோட்டுரு வரைபடங்களை வரைவதற்கு உதவுவதற்காக, பயிற்சிப் புத்தகத்தில் சதுர காகிதம் இருக்கும், . மாணவர்களின் கற்றல் முயற்சிகளின் முதன்மைப் பதிவேடாக பயிற்சிப் புத்தகங்கள் செயல்படலாம். மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் மதிப்பாய்வு, மதிப்பெண்கள் வழங்குவதற்காக அல்லது தரவரிசைப்படுத்துவதற்காக பயிற்சிப் புத்தகங்கள் பெரும்பாலும் சேகரிக்கப்படுகின்றன. தனித்த பணித்தாள்கள் இவ்வகையான புத்தகத்தில் ஒட்டப்பட்டு மற்ற வேலைகளுடன் பிணைக்கப்படும். பயிற்சிப் புத்தகம் வரலாற்று ரீதியாக பதிப்புப் புத்தகம் என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இது இந்தியாவில் கட்டா என்றும், கனடாவில் இசுகிரிப்ளர் (எழுதுபவர்) என்றும், இசுக்கொட்லாந்தில் ஜோட்டர் என்றும், அயர்லாந்தில் நகல் புத்தகம் என்றும் அழைக்கப்படுகிறது.[ மேற்கோள் தேவை ] சான்றுகள் பள்ளி சொல்லியல்
595997
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
பணிப்புத்தகம்
பணிப்புத்தகங்கள் (workbook) அல்லது பேரேடுகள் என்பது மாணவர்களுக்கு வழங்கப்படும் மென்னட்டைப் பாடநூலாகும் . பணிப்புத்தகங்களில் பொதுவாக செய்முறைப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டிருக்கும் விடைகள் அந்தப் பக்கத்திலேயே எழுதப்படும் வகையில் காலி இடங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அண்மையில், மின்னணுப் பணிப்புத்தகங்கள் ஊடாடும் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கற்றலை அனுமதிக்கின்றன. இத்தகைய பணிப்புத்தகங்கள் கணினிகள், மடிக்கணினிகள், பிடிஏக்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படலாம் மற்றும் இணைய அடிப்படையிலானதாக இருக்கலாம். சான்றுகள் பள்ளி சொல்லியல்
595998
https://ta.wikipedia.org/wiki/2023%20%E0%AE%8E%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
2023 எறாத்து நிலநடுக்கம்
2023 எறாத்து நிலநடுக்கம் (2023 Herat earthquakes) என்பது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று ஆப்கானிஸ்தானின் எறாத்து மாகாணத்தில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இரண்டு நில நடுக்கங்களைக் குறிப்பிடுகிறது. முதல் நிலநடுக்கம் அக்டோபர் 7 ஆம் நாள் ஆப்கானித்தான் திட்ட நேரம் 11:11 க்கு ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து 31 நிமிடங்களுக்குப் பிறகு இரண்டாவது அதிர்ச்சி ஏற்பட்டது. அக்டோபர் 11 ஆம் நாள் 6.3 ரிக்டர் அளவுள்ள மற்றொரு நிலநடுக்கம் இதே பகுதியை மீண்டும் தாக்கியது.இந்த நிலநடுக்கங்களில் 1,000 முதல் 1,294 பேர் வரை உயிரிழந்தனர். 1,688 முதல் 2,400 பேர் வரை காயமடைந்தனர். உயிரிழப்பு, காயமுற்றோர் குறித்த மிகச் சரியான எண்ணிக்கை விவரங்கள் கிடைக்கவில்லை. ஈரானிலும் சிறிதளவு காயங்கள் மற்றும் சிறிய சேதம் ஏற்பட்டது. 1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும். அக்டோபர் 11 ஆம் நாள் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக குறைந்தபட்சம் 1 இறப்பும் 153 பேருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளன. கண்டத்தட்டியக்க அமைப்பு ஆப்கானித்தான் நாடானது அரேபிய தட்டு, இந்திய தட்டு மற்றும் யூரேசிய தட்டு ஆகியவற்றுக்கு இடையேயான மோதலின் பரந்த மற்றும் சிக்கலான மண்டலத்திற்குள் அமைந்துள்ளது. நாட்டின் மேற்குப் பகுதியானது வடக்கே வடக்கு ஆப்கானித்தான் மேசை மற்றும் தெற்கில் தொடர்ச்சியான நிலப்பரப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஆப்கானித்தான் தளமானது வாரிஸ்கன் ஓரோஜெனி காலத்திலிருந்து மெல்ல நகரும் தொல்லூழிக் காலத்தில் அது யூரேசியாவின் ஒரு அங்கமாக மாறியது முதல் நிலவியல்ரீதியாக நிலையானதாக இருந்து வந்தது. தெற்கில் கண்டத்துண்டுகள் மற்றும் மாக்மாடிக் வளைவுகளின் ஒரு தொகுப்பு உள்ளது, அவை குறிப்பாக இடையூழிக் காலத்தில் படிப்படியாக திரட்டப்பட்டவை ஆகும். இந்த இரண்டு மேலோடு பகுதிகளுக்கு இடையேயான எல்லையானது முக்கிய வலது-பக்க திருப்பு பிளவுப் பெயர்ச்சி(ஹெராட்) ஆகும். இது நாட்டின் கிழக்கே செல்லும் சாமன் பிளவு பாறை மண்டலத்தை விட மிகக் குறைவான நில அதிர்வுத் தன்மை கொண்டது. எறாத்து பிளவு பாறை மண்டலத்தின் வடக்கே, அருகிலுள்ள இணையான பேண்ட்-இ துர்கெஸ்தான் பிளவு பாறை மண்டலமானது, வலது பக்கவாட்டுப் பார்வையிலும் சமீபத்திய செயல்பாட்டின் அறிகுறிகளைக் காட்டுகிறது. நிலநடுக்கம் முதல் நிகழ்வு, 6.3 ரிக்டர் அளவுடன், ஆப்கானித்தான் திட்ட நேரம் 11:11 (06:41 ஒ.பொ. நே) மணிக்குத் தாக்கியது. எட்டு நிமிடங்களுக்குப் பிறகு 5.5 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. மற்றொரு 6.3 ரிக்டர் அளவு நிகழ்வு ஆப்கானித்தான் திட்ட நேரம் 11:42 (07:12 ஒ.பொ. நே) மணியளவில் தாக்கியது, அதைத் தொடர்ந்து மற்றொரு 5.9 ரிக்டர் அளவிலான பின்னதிர்வு ஏற்பட்டது. இரண்டு நிகழ்வுகளும் மற்றும் 5.9 ரிக்டர் அளவிலான பிந்தைய அதிர்வு VIII ( கடுமையானது ) இன் மாற்றியமைக்கப்பட்ட மெர்கல்லி தீவிரத்தைக் கொண்டிருந்தது. அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம், இந்த நிலநடுக்கங்கள் ஆழமற்ற உந்துதல் பிழையின் விளைவாக ஏற்பட்டதாகக் கூறியது. பிளவு பாறை மண்டல விமானத் தீர்வு வடக்கு அல்லது தெற்கு சாய்வுடன் கிழக்கு-மேற்கில் தாக்கும் ஒரு சிதைவு மூலத்தைக் குறிக்கிறது. தாக்கம் தலிபான் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 2,530 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். ஆப்கான் செம்பிறை சங்கம் குறைந்தது 500 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. 9,240 பேர் காயமடைந்துள்ளனர். 1,329 வீடுகள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி ஒருவர், 1,000 மக்கள்தொகை கொண்ட பல கிராமங்களில், 300 வீடுகள் இருக்கலாம் என்றும், 100 வீடுகள் மட்டுமே அப்படியே இருப்பதாகவும் கூறினார். மொத்தத்தில், ஜிந்தா ஜன் மாவட்டத்தில் நான்கு கிராமங்கள் உட்பட, நிலநடுக்கத்தின் மையத்திற்கு அருகிலுள்ள 12 கிராமங்கள் அழிக்கப்பட்டன. தொலைபேசித் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. 30 உறுப்பினர்களைக் கொண்ட சில குடும்பங்கள் உட்பட முழுக் குடும்பங்களும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பக்கத்து மாகாணங்களான பட்கிஸ் மற்றும் பராவிலும் இடிந்து விழுந்த வீடுகள் மற்றும் காயங்கள் பதிவாகியுள்ளன. நிலச்சரிவும் ஏற்பட்டது. ஈரானில், டோர்பாட்-இ ஜாமில் ஒருவர் காயமடைந்தார் மற்றும் தைபாத்தில் வீடுகளுக்கு சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டது. அக்டோபர் 11 ஆம் நாள் ஏற்பட்ட நிலநடுக்கத்தல் குறைந்தபட்சம் ஒரு இறப்பு ஏற்பட்டதோடு 153 பேர் காயமடைந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. முதல் இரண்டு நிலநடுக்கங்களால் வீடுகள் சேதமடைந்ததால் மக்களில் பெரும்பாலானோர் திறந்த வெளியில் வசித்து வந்த நிலையில் விடியற்பொழுதில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எறாத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தின் கூற்றுப்படி பல்வேறு அண்டை மாவட்டங்கள் முதல் இரண்டு நிலநடுக்கங்களால் கடுமையான சேதமடைந்திருந்த நிலையில் அக்டோபர் 11 ஆம் நாள் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக மிகப்பெரிய இழப்பை அனுபவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சஹாக் என்ற கிராமத்தில் இந்த நிலநடுக்கம் 700 வீடுகளை அழித்துள்ளது. எறாத்து-தோர்குன்டி நெடுஞ்சாலையானது ஒரு நிலச்சரிவின் காரணமாக முற்றிலுமாகப் போக்குவரத்திற்கு பயன்படா நிலையில் உள்ளது. எறாத்தில் இந்த முறை சேதங்கள் குறைவு தான். அக்தாருதீன் கோட்டையின் செங்கற்கள் சீர்குலைந்துள்ளன. பகுதியளவு சுவர்கள் சேதமடைந்துளள்ன. பல பள்ளிவாசல் கோபுரங்கள் சிதைந்துள்ளன. பின்விளைவு நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் கட்டிடங்களைக் காலி செய்தனர். உலக சுகாதார நிறுவனம் 12 அவசர மருத்துவ உதவி வாகனங்களை ஜிந்தா ஜன் மாவட்டத்திற்கு அனுப்பி, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பியது. தலிபான்களின் பொருளாதார விவகாரங்களுக்கான துணைப் பிரதமர் அப்துல் கனி பரதார், நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தலிபான்களும் உதவி கோரி வேண்டுகோள் விடுத்தனர். மேலும் காண்க ஜனவரி 2022 ஆப்கானிஸ்தான் பூகம்பம் மேற்கோள்கள் ஆப்கானித்தானில் நிலநடுக்கங்கள் 2023 நிலநடுக்கங்கள் Coordinates not on Wikidata
596010
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF
அல்செனி
அல்செனி (Alceini) என்பது மான்களின் ஒரு இனக்குழு ஆகும். இதில் தற்போதுள்ள அல்செசு பேரினம் மற்றும் அழிந்துபோன செர்வல்செசு மற்றும் லிப்ரல்செசு பேரினங்கள் உள்ளன. பேரினங்கள் தற்போதுள்ள பேரினங்கள் அல்செசு அழிந்துபோன பேரினங்கள் † செர்வல்செசு † லிப்ரல்செசு மேற்கோள்கள் பாலூட்டிகள்
596012
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF
கேப்ரியோலினி
கேப்ரியோலினி (Capreolini) என்பது மான்களின் இனக்குழு ஆகும். இதில் தற்போதுள்ள இரண்டு பேரினங்களும் அழிந்துபோன பேரினம் ஒன்றும் உள்ளது. பேரினம் தற்போதுள்ள பேரினங்கள் கேப்ரியோலசு கைட்ரோபோடெசு அழிந்துபோன பேரினம் † புரோகேப்ரியோலசு - மியோசீன் / பிளியோசீன் காலத்தில் மேற்கோள்கள் மான்கள்
596015
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%2C%20%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE
உதயகிரி, ஒடிசா
உதயகிரி ( Udayagiri ) என்பது இந்திய மாநிலமான ஒடிசாவில் உள்ள மிகப்பெரிய பௌத்த வளாகமாகும். இது பெரிய தாது கோபுரம் மற்றும் விகாரங்களால் ஆனது. அருகிலுள்ள இலலித்கிரி மற்றும் இரத்னகிரி வளாகங்களுடன், இது "இரத்னகிரி-உதயகிரி-இலலித்கிரி" வளாகத்தின் "வைர முக்கோணத்தின்" ஒரு பகுதியாகும். பழங்கால பதிவுகளிலிருந்து அறியப்பட்ட புஷ்பகிரி விகாரம் இவற்றில் ஒன்று அல்லது அனைத்தும் புஷ்பகிரி விகாரம் என்று கருதப்பட்டது. ஆனால் இது இப்போது வேறு இடத்தில் இருக்கிறது. இந்த இடத்தில் கிடைத்த கல்வெட்டுகளின் படி, உதயகிரியின் வரலாற்று பெயர் "மாதவபுர மகாவிகரம்" என்பதாகும். இந்த பௌத்த வளாகம், இரத்னகிரி மற்றும் இலலித்கிரி தளங்களுக்கு முன்னதாக, அவற்றின் மடாலயங்களுடன், 7 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் செயல்பட்டதாக நம்பப்படுகிறது. அமைவிடம் உதயகிரி புவனேசுவரத்திலிருந்து வடகிழக்கில் 90 கிலோமீட்டர்களிலும் (56 மை) ஜாஜ்பூர் மாவட்டத்தின் கட்டக்கின் வடகிழக்கே 70 கிலோமீட்டர்கள் தொலைவில் (43 மை) ஒரு மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. காகம் பறப்பதால், இரத்னகிரி மற்றும் உதயகிரி இடையே சுமார் 11 கிமீ தொலைவிலும், இரண்டும் இலலித்கிரியில் இருந்து 7 கிமீ தொலைவிலும் உள்ளன. இப்போது புஷ்பகிரி என்று அங்கீகரிக்கப்பட்ட தளம் உதயகிரியில் இருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது. இது "முக்கோண" தளங்களுக்கு மிக அருகில் உள்ளது. கண்டுபிடிப்புகள் 1958 முதல் உதயகிரியில் இந்தியத் தொல்லியல் துறையின் எண்ணற்ற அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. தோண்டப்பட்ட முதல் தளமான உதயகிரி தளம் 1, இரண்டு பள்ளத்தாக்குகளுக்கு இடையில் பள்ளத்தில் உள்ளது. உதயகிரி தளம் 2 இல் 1985-86 மற்றும் 1989-90 க்கு இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், தாது கோபுரம் உட்பட ஒரு வளாகச் சுவருக்குள் மூடப்பட்டிருந்த பௌத்த மடாலய வளாகம் வெளிப்படுத்தப்பட்டது. தியானி புத்தர்களின் நான்கு படங்களுடன் உயரம் அதன் நான்கு முக்கியப் புள்ளிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் இந்த இடம் "மாதவபுர மகாகாரம்" என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் ஊகித்துள்ளனர். 1997 முதல் 2000 வரையில் நடைபெற்ற பெரிய அளவிலான அகழ்வாராய்ச்சியின் போது, உதயகிரி-2 இன் இரண்டாம் பகுதி கூடுதல் தாது கோபுரங்களும் மடாலயங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொல்பொருட்கள் எட்டாம் நூற்றாண்டின் இரண்டு மடாலய வளாகங்கள், கௌதம புத்தர் சிலைகள், தாரா, மஞ்சுசிறீ, அவலோகிதர், ஜடமுகுட லோகேஸ்வரர் மற்றும் பல சுடுமண் பாண்ட முத்திரைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கல்வெட்டுகளுடன் கூடிய படிக்கட்டுக் கிணறும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தளத்தில் உள்ள நுழைவு வாயில் ஒன்றின் அருகே ஒரு மனித உருவம் ஒரு கயிற்றில் ஊசலாடுகிறது. கண்களை மூடிக்கொண்டு, முழுமையான மகிழ்ச்சியுடன் உள்ளது. 2001 மற்றும் 2004 க்கு இடையில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகளின் போது, அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட மடத்தின் முன்புறத்தில் ஒரு கல் பூச்சு தரையையும், வடக்கு நோக்கி வெளியேறும் மடத்தின் பிரதான வடிகால், 14.05 க்கு 13.35 மீட்டர் (46.1 அடி × 46.1 அடி ×) அளவுள்ள ஒரு பெரிய கல் எழுப்பப்பட்ட மேடை, ஏழு அடுக்குகளில் கட்டப்பட்டு, தொடர்ச்சியான படிகள் வழியாக அணுகலை வழங்கி, அதன் வடக்கு முனையில் சந்திரசிலா (சந்திரன் பாறை) மூலம் குறிக்கப்பட்டுள்ளது. மேலும், அதன் சைத்தியம் கிழக்கு நோக்கிய ஒரு தாது கோபுரத்துடன் கல் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. குதிரை-காலணி வளைவுகள் என அனுமானிக்கப்படும் மூன்று கொக்கிகள் கொண்ட பாம்பின் கருப்பொருளுடன் அலங்கரிக்கப்பட்ட கல் ஜாலியின் எச்சங்களும் காணப்பட்டது. தாரா குருகுல்லா அல்லது குருகுல்லா தாரா வடிவத்தில் தாராவின் படங்கள் உதயகிரியில் இருந்தும், இலலித்கிரி மற்றும் இரத்னகிரியிலிருந்தும் கிடைத்துள்ளன; இவை இலலிதாசன தோரணையில் அமர்ந்திருக்கும் அமிதாப புத்தரின் வெளிப்படும் வடிவம்.உதயகிரியிலும், இலலித்கிரி மற்றும் ரத்னகிரியிலும் ஹாரிதியின் உருவங்களும் கிடைத்துள்ளன. இது, அமர்ந்த நிலையில் ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது போன்று சித்தரிக்கிறது. ஹாரிதி ஒரு காலத்தில் குழந்தை கடத்தல்காரராக இருந்தார். ஆனால் புத்தர் குழந்தைகளின் பாதுகாவலராக இருக்க அவளை வற்புறுத்தினார். புகைப்படங்கள் சான்றுகள் உசாத்துணை மேலும் படிக்க Donaldson, Thomas Eugene, Iconography of the Buddhist Sculpture of Odisha, 2001, Abhinav Publications, , Volume 1 is the text, given page references, and 2 the plates, given figure numbers. வெளி இணைப்புகள் Flickr.com: Photos of Udayagiri Complex ஒடிசாவின் வரலாறு ஒடிசாவில் கல்வி Coordinates on Wikidata பௌத்த கட்டிடங்கள்
596018
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D
ஜோகான் ஆண்ட்ரியாசு வாக்னர்
ஜோகான் ஆண்ட்ரியாசு வாக்னர் (21 மார்ச் 1797 – 17 திசம்பர் 1861) என்பவர் செருமனிய தொல்லுயிரியல், விலங்கியல் மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் பழங்காலவியல் பற்றிய பல முக்கியமான படைப்புகளை எழுதினார். பணி வாக்னர் மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் முனிச் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், விலங்கியல் ஸ்டாட்ஸ்சம்லுங் (மாநில விலங்கியல் சேகரிப்பு) காப்பாளராகவும் இருந்தார். இவர் பாலூட்டிகளின் புவியியல் பரவல் (Die Geographische Verbreitung der Säugethiere Dargestellt) (1844-46) என்ற நூலின் ஆசிரியர் ஆவார். வாக்னர் ஒரு கிறித்தவ படைப்பாளி. பிகர்மி பிகெர்மியின் புதைபடிவப் படுக்கைகளுக்கு வாக்னர் பயணம் செய்து, மாசுடோடன், டைனோதெரியம், இப்பாரியன், இரண்டு வகையான ஒட்டகச் சிவிங்கிகள், மான் மற்றும் பிறவற்றின் புதைபடிவ எச்சங்களைக் கண்டுபிடித்து விவரித்தார். இந்த புதைபடிமங்களில் ஜோகன்னசு ரோத்துடன் இவர் இணைந்து எழுதிய தொல்லியல் நூல், "ரோத் & வாக்னர்" என்று அழைக்கப்படும் பழங்காலவியலில் ஒரு முக்கிய பாடப்புத்தகமாக மாறியது. இதில் "மிகவும் உடைந்த எலும்புகள், அனைத்து பகுதிகளையும் ஒன்றிணைத்து முழுமையான எலும்புக்கூடு எதுவும் காணப்படவில்லை". பெருமை வாக்னர், தென் அமெரிக்கப் பாம்பு வகையான தயபோரோலெபிசு வாக்னேரியின் அறிவியல் பெயரில் நினைவுகூரப்படுகிறது. நூல் பட்டியல் 1844-1846. Die Geographische Verbreitung der Säugethiere Dargestellt. Johann Andreas Wagner 1897. Monographie der gattung Pomatias Studer. மேற்கோள்கள் சில உயிர் புவியியலாளர்கள், பரிணாமவாதிகள் மற்றும் சூழலியல் வல்லுநர்கள்: க்ரோனோ-பயோகிராஃபிக்கல் ஸ்கெட்ச்கள் 1861 இறப்புகள் 1797 பிறப்புகள் செருமனியர்
596019
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%28%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%29
சமூக இயல்பு (புவியியல்)
2001 ஆம் ஆண்டில் நோயல் காசுட்ரீ மற்றும் புரூசு பிரவுன் ஆகியோரால் வெளியிடப்பட்ட “சமூக இயல்பு: கோட்பாடு, நடைமுறை மற்றும் அரசியல்” என்ற தலைப்பில் இயற்கையின் சமூக கட்டுமானம் பற்றிய புவியியல் சார்ந்த பணியின் முக்கிய கருத்து சமூக இயல்பு (Social nature) ஆகும். சமூக இயல்பு கருத்து விமர்சன புவியியலாளர்களால் உருவாக்கப்பட்டது மற்றும் சமூகமயமாக்கப்பட்ட இயற்கையின் கருத்தைத் தழுவுகிறது என்று அது கூறுகிறது. டேவிட் ஹார்வி மற்றும் நீல் ஸ்மித் போன்ற விமர்சன புவியியலாளர்கள் "இயற்கை மூன்று தொடர்புடைய வழிகளில் சமூகமானது என்று வலியுறுத்தினார்கள்": "இயற்கையின் அறிவு" அறிந்தவர்களின் சார்புகளுடன் மாறாமல் ஊடுருவுகிறது, "இயற்கையைப் பற்றிய அறிவு சமூகமாக இருந்தாலும், இயற்கையின் சமூகப் பரிமாணங்கள் அறிவாக மட்டும் குறைக்கப்படுவதில்லை", சமூகங்கள் இயற்கையை சமூக செயல்முறைகளாக உள்வாங்கும் அளவிற்கு "இயற்கையை வேண்டுமென்றே உள்நோக்கத்துடனோ மற்றும் உள்நோக்கமின்றியோ மறுசீரமைக்கின்றன ", (குறிப்பாக மேம்பட்ட மேற்கத்திய சமூகங்களில்). மேற்கோள்கள் மனித புவியியல்
596028
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF
கோந்தாலி
கோந்தாலி (Gondhali) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள ஓர் இந்து சமூகமாகும். . மகாராட்டிர தெய்வங்களின் பாடல்களைப் பாடுவது இவர்களின் தொழிலாகும். பாடல்களில் பொதுவாக இவர்கள் கடவுள்களின் புராணக் கதைகள் இடம் பெறுகின்றன. கடவுளுக்கு முன்பாகப் பாடுவதும் நடனமாடுவதும் கோந்தல் என்றும், கோந்தலை நிகழ்த்தும் சமூகம் கோந்தாலி என்றும் அழைக்கப்படுகிறது. மனித ஆன்மாவை அனைத்து ஊழல் மற்றும் அநீதியிலிருந்தும் விடுவிப்பதற்காக, தெய்வீக சக்தியை பூமியில் இறங்க அனுமதிப்பதே கோந்தலின் நோக்கமாகும். இவர்கள் தங்கள் பாடல்களுக்கு தாளத்தைக் கொண்டு வர கழுத்தில் கட்டப்பட்ட மேளத் தொகுப்பைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் சுமார் 58,000 கோந்தல்கள் வாழ்கின்றனர். தெற்காசிய இந்துக்களின் ஒரு பகுதியாகக் கருதப்படும் இந்த மக்கள் குழு இந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது. இவர்களின் முதன்மை மொழி மராத்தியாகும். கோந்தாலிகளால் பின்பற்றப்படும் முதன்மை மதம் இந்து மதம் என்றும் இந்திய துணைக்கண்டத்தின் முக்கிய மத பாரம்பரியம் கொண்ட இனம் என்றும் கருதப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு, கோந்தாலிகள் மிகவும் மரியாதைக்குரிய குழுவாக இருந்தனர், அவர்களை ஆட்சியாளர்களே தங்கள் செயல்பாடுகளுக்கு அழைத்தனர். அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றி அறிந்தவர்கள் மற்றும் பெரும்பாலும் சமூக அக்கறைகள் பற்றிய பாடல்களை இயற்றினர். பெரியவர்களை மதிக்க வேண்டும், ஒவ்வொருவரும் தன் குடும்ப நலனுக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்பது போன்ற சமூக செய்திகளை இவர்களின் பாடல்கள் பரப்புகின்றன. மேற்கோள்கள் இந்தியப் பண்பாடு மகாராட்டிர மக்கள் இந்திய இனக்குழுக்கள்
596032
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D
அசாமின் பட்டியல் பழங்குடியினர்
அசாமின் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes of Assam) 2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அசாமின் மாநில மக்கள்தொகையில் 12.4 சதவீதம் பேர் பட்டியல் பழங்குடியினர் என அறியப்படுகிறது. அசாம் ட்ரிப்யூன் என்ற ஆங்கில தினசரி 2009 ஆம் ஆண்டில் அசாமின் பழங்குடி சமூகங்கள் மொத்த மக்கள்தொகையில் 15.64 சதவிகிதம் என்றும் தெரிவித்துள்ளது. இந்திய அரசியலமைப்பு அசாமின் பழங்குடியினரை இரண்டு குழுக்களாக வகைப்படுத்துகிறது: மலைப்பகுதி பட்டியல் பழங்குடியினர் மற்றும் சமவெளிப்பகுதி பட்டியல் பழங்குடியினர் என்பன இவ்விருவகை குழுக்களாகும். சமவெளிகளில் வாழும் மலைவாழ் பழங்குடியினரும், மலைகளில் அதிக எண்ணிக்கையில் வாழும் சமவெளிப் பழங்குடியினரும் அந்தந்த இடங்களில் அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினராக அங்கீகரிக்கப்படாததால், மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள் சரியான புள்ளிவிவரங்களைப் பிரதிபலிக்காமல் இருக்கலாம். அசாமிய மொழி கிட்டத்தட்ட அனைத்து பழங்குடியினராலும் ஓர் இணைப்புமொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. குழுக்கள் முக்கிய பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (சமவெளி) இனத்தில் போடோ, தியோரி, சோனோவால், மிசிங், மற்றும் அசோங்கு ஆகியவை அடங்கும். கர்பி மற்றும் திமாசா மக்கள் பட்டியல் பழங்குடியினர் (மலைகள்) இன தகுதியைப் பெற்றுள்ளனர். பழங்குடியினர் பட்டியல் கர்பி ஆங்லாங் மற்றும் வடக்கு கச்சார் மலைகளின் தன்னாட்சி மாவட்டங்களில் சக்மா திமாசா, கச்சாரி காரோ அசோங்கு இமார் காசி, செயந்தியா, சின்டெங், ப்னார், போர், போய், லிங்கங்காம் லக்கர் மனிதன் (தை பேசும்) கர்பி பாவி சிந்தெங் லாலுங் எந்த மிசோ (உலுசாய்) பழங்குடியினர் எந்த நாகா பழங்குடியினர் எந்த குக்கி பழங்குடியினர் அசாம் மாநிலத்தில் கர்பி ஆங்லாங் மற்றும் வடக்கு கச்சார் மலைகளைத் தவிர்த்து கச்சாரில் உள்ள பார்மன்சு போரோ, போரோகாச்சாரி தியோரி ஓசாய் கச்சாரி, சோன்வால் லாலுங் மெக் மிரி ரபா திமாசா அசோங்கு சிங்போ காம்ப்டி காரோ மேற்கோள்கள் அசாமிய நபர்கள் இந்தியப் பண்பாடு அசாம்
596033
https://ta.wikipedia.org/wiki/2018%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
2018 மேற்கு வங்க இடைத்தேர்தல்கள்
2018 மேற்கு வங்க இடைத்தேர்தல் (2018 West Bengal by-elections) இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் நோபரா சட்ட மன்றத் தொகுதியின் மதுசூதன் கோசு மற்றும் திரிணாமுல் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த உலுபெரியா மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுல்தான் அகமது ஆகியோரின் மரணத்தைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் 2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் 29 ஆம் தேதியன்று இரண்டு இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன. வெற்றியாளர்கள் இரண்டு இடங்களிலும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். நோபரா சட்டமன்றத் தொகுதியில் அர்ச்சூன் சிங்கின் மைத்துனரான சுனில் சிங் வெற்றி பெற்றார். மேலும் உலுபெரியா மக்களவை தொகுதியில் சுல்தான் அகமதுவின் (அரசியல்வாதி) விதவையான சச்சுதா அகமது வெற்றி பெற்றார். மேற்கோள்கள் மேற்கு வங்காள அரசியல் 2018 தேர்தல்கள்
596040
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF
சாக்சி குமாரி
சாக்சி குமாரி (Sakshi Kumari) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கபடி விளையாட்டு வீராங்கனையாவார். 2022 ஆம் ஆண்டு இவருக்கு அருச்சுனா விருது வழங்கப்பட்டது. அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் அரியானா மாநிலத்தில் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணிபுரிகிறார். தொழில் 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற கபடி அணியிலும், 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற அணியிலும் சாக்சி குமாரி ஓர் உறுப்பினராக இருந்தார். மேற்கோள்கள் அருச்சுனா விருது பெற்றவர்கள் இந்திய கபடி வீரர்கள் வாழும் நபர்கள்
596042
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
சுங்கைப் பட்டாணி மணிக்கூட்டுக் கோபுரம்
சுங்கை பட்டானி மணிக்கூட்டுக் கோபுரம் (Sungai Petani Clock Tower) மலேசியாவில் கெடா மாநிலத்திலுள்ள கோலா மூடா மாவட்டத்தின் சுங்கைப் பட்டாணி நகரில் அமைந்துள்ளது. வரலாறு அரியணையில் அமர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சி நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், ஐந்தாம் சியார்ச்சு மன்னரின் வெள்ளி விழாவின் நினைவாக இந்த மணிக்கூண்டு கட்டப்பட்டது. 1936 சூன் 4 அன்று இம்மணிக்கூண்டு திறக்கப்பட்டது. இலிம் லீன் டெங் என்ற ஒரு பணக்கார பினாங்கு தொழிலதிபர் நன்கொடை வழங்கினார். மணிக்கூண்டை கட்டிடக் கலைஞர் செவ் எங் என்பவர் வடிவமைத்தார். கட்டிடக் கலை செவ்வக வடிவிலான கடிகார கோபுரம் 60 அடி உயரம் கொண்டதாகும். கடிகாரம் தரையில் இருந்து 40 அடி உயரத்தில் உள்ளது. எழில்படுக் கலைப் பாணியில் கட்டப்பட்ட இம்மணிக்கூண்டு ஏற்கனவே உள்ள கடினமான அடித்தளத்தில் தங்கக் குவிமாடத்தால் மூடப்பட்டுள்ளது. வெண்கல நினைவுத் தகட்டில் இந்த கடிகார கோபுரம் சுங்கே பதானிக்கு திரு. லிம் லீன் டெங்கால் அவரது மாட்சிமை வாய்ந்த மன்னர் ஐந்தாம் சியார்ச்சு மன்னர் 1910 முதல் 1936 வரையிலான ஆட்சியின் நினைவாக வழங்கப்பட்டது என எழுதப்பட்டுள்ளது. மேற்கோள்கள் கோலா மூடா மாவட்டம் மலேசிய சுற்றுலாத் தலங்கள் மணிக்கூட்டுக் கோபுரங்கள்
596056
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE
தாமா
தாமா (Dama) என்பது செர்வினே என்ற துணைக்குடும்பத்தில் உள்ள மான் பேரினமாகும், இது பொதுவாகத் தரிசு மான் என்று குறிப்பிடப்படுகிறது. பெயர் தரிசு என்ற பெயர் மானின் வெளிர் பழுப்பு நிறத்தினை குறிக்கின்றது. தாமா அல்லது தம்மா எனப்படும் இலத்தீன் வார்த்தைகள் ரோ மான், சிறுமானகள் மற்றும் மறிமான்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் நவீன விலங்கியல் பெயரின் மூலத்தில் உள்ளது போல் செருமன் தாம்ஹிர்ஷ், பிரெஞ்சு டெய்ம், இடச்சு டம்ஹர்ட் மற்றும் இத்தாலி டைனோ சொற்களிலும் உள்ளது. செர்போ-குரோஷிய மொழியில், தரிசு மான்களின் பெயர் ஜெலன் லோபடார் ("திணி மான்"), இதன் கொம்புகளின் வடிவம் காரணமாகும் இவ்வாறு கூறப்படுகிறது. தரிசு மானின் நவீன ஹீப்ரு பெயர் யாச்மூர் (יחמור). வகைபிரித்தல் மற்றும் பரிணாமம் இந்த பேரினத்தில் தற்போதுள்ள இரண்டு சிற்றினங்கள் உள்ளன: பரவியுள்ள இனங்கள் சில வகைப்பாட்டியல் வல்லுநர்கள் பாரசீக தரிசு மான்களை ஒரு துணையினம் வகைப்படுத்துகின்றனர் (தா. தா. மெசபோடோமிகா), மற்றவர்கள், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினர் இதை ஒரு தனி இனமாகக் கருதுகின்றனர் (தா. மெசபோடோமிகா). மேற்கோள்கள் பாலூட்டிகள் பாலூட்டிப் பேரினங்கள்
596058
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
அர்சில்
அர்சில் என்பது இமயமலையில் உள்ள ஒரு மலை வாழிடம். இக்கிராமம் பாகிரதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள இந்துப் புனிதத் தலமான கங்கோத்ரி செல்லும் வழியில் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்கு ஒரு இராணுவத் தளமும் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 9005 அடி உயரத்தில் உள்ள இந்த ஊர் இதன் இயற்கைச் சூழலுக்காகவும் ஆப்பிள் உற்பத்திக்காகவும் பெயர் பெற்றது. கங்கோத்ரி தேசியப் பூங்கா இங்கிருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூர் இந்தியாவுக்கும் திபெத்திற்கும் இடையேயுள்ள பண்டைய பட்டுப் பாதையில் அமைந்துள்ளது. உத்தராகண்டம்
596061
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
பள்ளி கொடுமைப்படுத்துதல்
பள்ளி கொடுமைப்படுத்துதல் (School bullying) அல்லது பள்ளி ஒடுக்குதல் என்பது பள்ளிச் சூழலுக்கு வெளியே மாணவர்களைக் கொடுமைப்படுத்துதல் போன்றது, பாதிக்கப்பட்ட மாணவரை விட உடல் அல்லது சமூக காரணிகள் அதிகம் கொண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்கள் பிறரைத் தாக்குவதனைக் குறிக்கிறது. கொடுமைப்படுத்துதல் வாய்மொழியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ நடைபெறலாம். உடல், உணர்ச்சி மற்றும்/அல்லது வாய்மொழி ரீதியாகவோ ஒடுக்குமுறை நடைபெறலாம். பள்ளி வன்முறை பரவலாக பல நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் பல கல்வித் தலைவர்கள் தங்களது செயல்பாடுகள் மூலமாக பள்ளிக் கொடுமைப்படுத்துதலைக் குறைப்பதில் வெற்றி கண்டுள்ளனர்.பள்ளிக் கொடுமைப்படுத்துதலைக் குறைக்க அல்லது தடுக்கப் பயன்படுத்தப்படும் சில உத்திகளில் மாணவர்களை கொடுமைப்படுத்துதல் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வகுப்பறையில் பதிவு செய்யும் சாதனங்களை வைத்தல், பாதுகாப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் பள்ளி பாதுகாப்பு அதிகாரிகளை பணியமர்த்துதல் ஆகியவை அடங்கும். இருப்பினும், கொடுமைப்படுத்துதலுக்கு பள்ளிகள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பது பரவலாக வேறுபடுகிறது. பள்ளி கொடுமைப்படுத்துதலால் பாதிக்கப்பட்டவர்கள் மீதான விளைவுகளில் மனச்சோர்வு, பதட்டம், கோபம், மன அழுத்தம், உதவியின்மை மற்றும் பள்ளி செயல்திறன் குறைதல் ஆகியவை அடங்கும் அளவுகோல்கள் கொடுமைப்படுத்துதல் என்பது ஆக்கிரமிப்பு நடத்தையின் ஒரு துணைப்பிரிவாகும், இது விரோத மனப்பான்மை, மாணவர்களின் ஆற்றல் சமநிலையின்மை மற்றும் காலம் ஆகியவற்றினால் வகைப்படுத்தப்படுகிறது. அன்றாடம் நடைபெறும் மாணவர்-மாணவர் மோதல்கள் மாணவர்களின் அதிகார சமநிலையின்மையுடன் தொடர்புடையவை அல்ல.சாதாரண மோதல்களைப் போல் அல்லாது, பள்ளிக் கொடுமைப்படுத்துதல் என்பவை பாதிக்கப்பட்ட மாணவர்களை கடுமையாகப் பாதிக்கலாம். அதிகார ஏற்றத்தாழ்வு கொடுமைப்படுத்துதல் என்பது அதிகார சமநிலையின்மையை உள்ளடக்கியதாகும். அளவு, பாலினம், வயது, சகாக்களின் கூட்டு மற்றும்/அல்லது பிற மாணவர்களின் உதவி போன்ற காரணங்களால் ஒரு கொடுமைப்படுத்துபவர் மற்றொரு மாணவர் மீது அதிகாரம் செலுத்துகிறார். எச்சரிக்கை அடையாளங்கள் ஒரு குழந்தை கொடுமைப்படுத்தப்படுவதைக் குறிக்கும் அறிகுறிகள் பின்வருமாறு: விவரிக்க முடியாத காயங்கள், கவலை மற்றும் அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு அறிகுறிகள், இழந்த அல்லது கிழிந்த ஆடை, உணவுப் பழக்கத்தில் மாற்றங்கள், மதிப்பெண்கள் குறைவது, தொடர்ந்து பள்ளி வர இயலாமை, , தற்கொலை எண்ணங்கள், மற்றும் அதிகமாக மன்னிப்பு கேட்கும் தன்மை உடையவராக மாறுதல். சான்றுகள் பள்ளி சொல்லியல்
596062
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
இட்டிரியலைட்டு
இட்ரியலைட்டு (Yttrialite) என்பது (Y,Th)2Si2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இட்ரியலைட்டு-(Y) என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. இட்ரியம் தோரியம் சோரோசிலிக்கேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. பச்சை நிறத்தில் இருந்து ஆரஞ்சு மஞ்சள் நிறத்த்தில் சங்குப்புரி பிளவுடன் உருவாகிறது. இட்ரியலைட்டு கனிமம் ஒற்றைச்சரிவச்சு பட்டகப் படிக அமைப்பில் படிகமாகிறது. இதன் ஒப்படர்த்தி அளவு 4.58 என்றும் மோவின் கடினத்தன்மை அளவுகோலின் படி இதன் கடினத்தன்மை அளவு 5 முதல் 5.5 எனவும் அளவிடப்பட்டுள்ளது. தோரியம் உள்ளடக்கம் காரணமாக இட்ரியலைட்டு அதிக கதிரியக்கத்தன்மை கொண்டுள்ளது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் Ytt-Y என்ற குறியீட்டால் இட்ரியலைட்டை அடையாளப்படுத்துகிறது. கடோலினைட்டு கனிமத்துடன் சேர்ந்து இக்கனிமம் தோன்றுகிறது. முதன்முதலில் 1889 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் டெக்சாசு மாநிலத்திலுள்ள் இலானோ மாகாணத்தின் பேரிங்கர் மலையில் உள்ள ரோட் ராஞ்ச்சு தீப்பாறைகளில் இது கண்டறியப்பட்டது. சப்பான் நாட்டின் மிகப்பெரிய தீவான ஒன்சூ தீவிலும், நார்வே மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளிலும் இட்ரியலைட்டு காணப்படுகிறது. மேற்கோள்கள் இட்ரியம் கனிமங்கள் தோரியம் கனிமங்கள் ஒற்றைச்சரிவச்சுக் கனிமங்கள் சிலிக்கேட்டு கனிமங்கள்
596070
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
வீட்டுக் காகம்
வீட்டுக் காகம் ( house crow ), இலங்கை அல்லது கொழும்பு காகம் என்றும் அழைக்கப்படுவது காக்கைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பொதுவான பறவையாகும். இது ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டது. ஆனால் கப்பல்கள் வழியாக உலகின் பல பகுதிகளுக்குச் சென்றடைந்ததால், உலகின் பல பகுதிகளில் காணப்படுகிறது. இது அளவில் ஜாக்டாவிற்கும் கரியன் காகத்திற்கும் இடையிலான அளவில் ( நீளம்) உள்ளது என்றாலும் அவை இரண்டையும் விட மெலிதானதாக இருக்கும். இதன் நெற்றி, உச்சி, தொண்டை, மார்பகத்தின் மேல் பகுதிகள் அதிக பளபளப்பான கருப்பு நிறத்திலும், கழுத்து மற்றும் மார்பகம் வெளிர் சாம்பல்-பழுப்பு நிறத்திலும் இருக்கும். இறக்கைகள், வால், கால்கள் போன்றவை கருப்பு. அலகின் தடிமன் மற்றும் இறகுகளின் வண்ணத்தில் பிராந்திய ரீதியாக வேறுபாடுகள் உள்ளன. வகைப்பாடு இதில் பரிந்துரைக்கப்பட்ட இனமான C. s. splendens பாக்கித்தான், இந்தியா, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. அது சாம்பல் கழுத்துப் பட்டையைக் கொண்டுள்ளது. இதன் கிளையினமான C. s. zugmayeri தெற்காசியா மற்றும் ஈரானின் வறண்ட பகுதிகளில் காணப்படுகிறது. அது மிகவும் வெளிர் கழுத்துப் பட்டையைக் கொண்டுள்ளது. மற்றொரு கிளையினமான C. s. protegatus தென்னிந்தியா, மாலத்தீவுகள் (சில சமயங்களில் மலேடிவிகஸ் எனப் பிரித்து அறியப்படுகிறது), இலங்கை போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. அது அடர் சாம்பல் நிறத்தில் உள்ளது. C. s insolens துணையினம் மியான்மரில் காணப்படுகிறது, இருண்ட வடிவத்தில் சாம்பல் கழுத்துப் பட்டை அற்று இருக்கும். பரவலும் வாழ்விடமும் நேபாளம், வங்காளதேசம், இந்தியா, பாக்கித்தான், இலங்கை, மாலைத்தீவுகள், லாக்காடிவ் தீவுகள், தெற்கு மியான்மர், தெற்கு தாய்லாந்து மற்றும் கடலோர தெற்கு ஈரான் ஆகியவற்றை தாயகமாகக் கொண்ட இது தெற்காசியாவில் பரவலாக உள்ளது. இது கிழக்கு ஆபிரிக்காவில் சான்சிபார் (சுமார் 1897) மற்றும் போர்ட் சூடானைச் சுற்றி அறிமுகப்படுத்தப்பட்டது. இது கப்பல் மூலம் ஆத்திரேலியாவுக்கு வந்தது, ஆனால் தற்போது அழிந்துவிட்டது. அண்மையில், இது ஐரோப்பாவிற்கு வந்தது. மேலும் 1998 முதல் ஹாலந்தின் ஹூக் என்ற டச்சு துறைமுக நகரத்தில் இனப்பெருக்கம் செய்து வருகிறது. சம் சுயி போ, நியூ கவுலூன், ஆங்காங், குறிப்பாக லாய் கோக் எஸ்டேட் மற்றும் ஷாம் ஷுய் போ பார்க் மற்றும் கவுலூன் சாய்வில் உள்ள கவுலூன் சாய் பூங்காவில் 200 முதல் 400 பறவைகள் உள்ளன. 2010 செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து அயர்லாந்தின் தெற்கு கடற்கரையில் உள்ள கார்க் துறைமுகத்தில் ஒரு பறவை உள்ளது. புதிய உலகில், புளோரிடாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கைச் சுற்றியுள்ள பகுதியில் வீட்டுக் காகங்களின் சிறிய அளவில் வசிக்கின்றன. 2009 ஏப்ரல் நிலவரப்படி, யெமனில் உள்ள சுகுத்திரா தீவில் அறிமுகப்படுத்தப்பட்ட வீட்டுக் காகங்களால், சுகுத்திரா தீவில் உள்ள உள்ளூர் பறவை இனங்களுக்கு எதிர்மறையான சுற்றுச்சூழல் விளைவுகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக அழிக்கப்பட்டன. இது சிறிய கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை இதன் வாழிட எல்லை முழுவதும் மனித குடியிருப்புகளுடன் தொடர்புடையது. சிங்கப்பூரில், 2001 இல் 190 பறவைகள்/கிமீ 2 என்ற விகிதார்ச்சாரத்தில் அடர்த்தி இருந்தது, திட்டமிடலில் இதன் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது வாழும் பகுதிகளில் மனித மக்கள்தொகைப் பெருக்கத்தின் காரணமாக, இந்த இனமும் விகிதாச்சார அளவில் பெருகியுள்ளது. இது ஒரு சர்வவல்லமையுள்ள தோட்டி விலங்காக இருப்பதால் அது போன்ற சூழ்நிலைகளில் இது செழித்து பெருகுகிறது. நடத்தை உணவுமுறை வீட்டுக் காகங்கள் மனித வாழ்விடங்களைச் சுற்றியுள்ள குப்பைகள், சிறிய ஊர்வன, பாலூட்டிகள், பூச்சிகள் மற்றும் பிற சிறிய முதுகெலும்பில்லாத உயிரினங்கள், முட்டைகள், குஞ்சுகள், தானியங்கள், பழங்கள் போன்றவற்றை அதிகம் உண்கின்றன. வீட்டுக் காகங்கள் பறந்து வந்து கீழே பாய்ந்து அணிற்பிள்ளைகளைக் கவர்வதையும் அவதானிக்க முடிந்தது. இவை தங்களுக்குத் தேவைப்படும் பெரும்பாலான உணவை தரையில் இருந்து சேகரிக்கிறன. ஆனால் வாய்ப்பு கிடைக்கும்போது மரங்களிலிருந்தும் எடுக்கின்றன. இவை சந்தர்ப்பவசத்திற்கு ஏறப்ப வாழக்கூடியன. இவை எல்லாவற்றையும் உண்டு உயிர்வாழக் கூடியன. இந்தப் பறவைகள் சந்தைகள் மற்றும் குப்பைக் கிடங்குகளுக்கு அருகிலும், குப்பைகளைத் தேடிச் செல்வதையும் காணலாம். இறந்த உயிர்களை உணவாக உட்கொண்ட பின்னர் அவை மணலை உண்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. கூடு கட்டுதல் வீட்டுக் காகங்கள் எப்போதாவது தொலைபேசி கோபுரங்களில் கூடு கட்டினாலும், உள்ளூர் சூழலில் வெற்றிகரமான இனப்பெருக்கத்திற்கு சில மரங்களாவது அவசியமாகத் தோன்றுகிறது. இது வழக்கமாக குச்சிகளால் அமைக்கபட்டக் கூட்டில் 3-5 முட்டைகளை இடும். தெற்காசியாவில் இவற்றின் கூட்டில் ஆசியக் குயிலால் இடப்படும் முட்டைகளை தன் முட்டையாக எண்ணி அடைகாப்பவையாக உள்ளன. இந்தியாவிலும், தீபகற்ப மலேசியாவிலும் ஏப்ரல் முதல் சூலை வரையிலான காலத்தில் இனப்பெருக்கம் உச்சமாக காணப்படுகிறது. உச்சி அகன்ற பெரிய மரங்கள் கூடு கட்ட இவை விரும்புகின்றன. மனிதர்களுடனான உறவு வெள்ளூக்கழிசல் நோயை உண்டாக்கும் பிஎம்வி 1 போன்ற paramyxoviruses வைரசுகள் வீட்டுக் காகத்தின் மூலம் பரவக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தியாவில் நியூகேசில் நோயின் வெடிப்பு பெரும்பாலும் காகங்களின் இறப்புக்கு முன்னதாகவே இருந்தன. அவை கிரிப்டோகாக்கஸ் நியோஃபார்மன்களை கொண்டு செல்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது, இது மனிதர்களுக்கு கிரிப்டோகோகோசிசு பூஞ்சைத் தொற்றை ஏற்படுத்தும். காட்சியகம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் House Crow Monitor Bibliography from Corvids Literature Database House Crow Species text in The Atlas of Southern African Birds Corvus splendens at Global Invasive Species Database தெற்காசியப் பறவைகள் காக்கைகள்
596071
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
கெல்வின் கிப்டம்
கெல்வின் கிப்டம் செருயோட் (Kelvin Kiptum Cheruiyot) (பிறப்பு: டிசம்பர் 2, 1999) கென்யாவின் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் மற்றும் மராத்தான் உலக சாதனை படைத்தவர் (2:00:35), சாதனைக்குத்தகுதியான பந்தயத்தில் வரலாற்றில் 2:01:00-க்கு கீழ் மராத்தான் ஓடிய ஒரே நபர் இவராவார். இதுவரை ஓடிய முதல் ஆறு வேகமான மராத்தான்களில் மூன்றை கிப்டம் பெற்றுள்ளார். இவர் 2022 ஆம் ஆண்டில் அறிமுகமான வாலென்சியா மராத்தானில் இதுவரை இல்லாத வேகமான மராத்தான் ஓட்டக்காரரானார். வரலாற்றில் இரண்டு மணி நேரம் இரண்டு நிமிடங்கள் என்ற சாதனையை உடைத்த மூன்றாவது மனிதர் ஆனார். உலக மராத்தான் மேஜரில் கிப்டம் அறிமுகமாகி, 2023 லண்டன் மராத்தானை வென்றார், இது அப்போதைய உலக சாதனைக்கு வெளியே 2:01:25, 16 வினாடிகள் வரலாற்றில் இரண்டாவது வேகமான நேரமாக இருந்தது. 2023 சிகாகோ மராத்தான் 8 அக்டோபர் 2023 இல், கிப்டம் 2:00:35 நேரத்துடன் ஒரு புதிய மராத்தான் உலக சாதனையைப் படைத்தார், இது உலக தடகளத்தின் அங்கீகாரத்திற்கு உட்பட்டது. தொழில் 18 வயதில், அக்டோபர் 2018 இல், கெல்வின் கிப்டம் கென்யாவில் நடந்த எல்டோரெட் ஹாஃப் மராத்தான் போட்டியில் 1:02:01 என்ற நேரத்தில் வெற்றி பெற்றார். பின்னர் இவர் மார்ச் 2019 இல் லிஸ்பன் ஹாஃப் மாரத்தானில் சர்வதேச அளவில் அறிமுகமானார், புதிய தனிப்பட்ட சிறந்த சாதனையான 59:54 நேரத்தினைக் கொண்டு ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். டிசம்பர் 2020 இல், வலென்சியா ஹாஃப் மராத்தானில் 58:42 நேரத்துடன் ஆறாவது இடத்தைப் பிடித்து, இவர் குறிப்பிடத்தக்க தொடர்ச்சியான சிறந்த சாதனையைப் படைத்தார். 2021 இல், இவர் லான்சு, பிரான்ஸ் (முதல்), மற்றும் வலென்சியா (எட்டாவது) ஆகிய இடங்களில் முறையே 59:35 மற்றும் 59:02 என்ற கால அளவுகளில் அரை மராத்தானை ஓடி நிறைவு செய்தார். 2022 கிப்டம் 4 டிசம்பர் 2022 அன்று இசுபெயினின் வலென்சியாவில் தனது முதல் மாரத்தான் ஓட்டத்தை நடத்தினார். அப்போதைய மிக விரைவான இறுதிப் பாதியில் (60:15), தற்போதைய சாதனை நேரமான 2:01:53 உடன் அவர் முதல் இடத்தைப் பிடித்தார், வரலாற்றில் 2:02 ஐ முறியடித்த மூன்றாவது மனிதர் ஆனார். மற்ற முன்னாள் உலக சாதனை படைத்தவர்கள் எலியட் கிப்சோகே ( 2:01:09 மற்றும் 2:01:39 ) மற்றும் கெனெனிசா பெகேலே ( 2:01:41) ஆகியோர் ஆவர். அப்போதைய 23 வயதான கிப்டும் வரலாற்றில் மிக வேகமாக அறிமுக மராத்தான் வீரராகவும் ஆனார். கிப்டம் வெற்றி பெற்ற நேரம் இதுவரை இல்லாத வேகமான மராத்தான் அறிமுகமாகும், இது ஒரு நிமிடத்திற்கும் மேலாக இவ்வகை ஓட்டத்தின் சாதனையை முறியடித்தது. இவர் பந்தயத்திற்கு முந்தைய இவரது விருப்ப வீரரான 2022 உலக மாரத்தான் சாம்பியனான தமிரத் தோலாவை வென்றார். 2023 இவரது பின்வரும் பந்தயத்தில், 23 ஏப்ரல் 2023 அன்று உலக மராத்தான் மேஜரில் அறிமுகமானார், கிப்டம் லண்டன் மராத்தானில் தீர்க்கமாக வெற்றி பெற்றார். உலக சாதனையை விட 16 வினாடிகள் குறைவாக ஓடி, கிப்டம் 2:01:25 நேரத்துடன் வரலாற்றில் இரண்டாவது வேகமான ஒரு இலக்கை அமைத்தார். இந்த பந்தயத்தில், கிப்சோஜ் 2:02:37 மணிக்கு லண்டன் மாரத்தான் சாதனையை நிகழ்த்தினார். கிப்டம் 2:01:25 என்ற வெற்றி நேரத்தைத் தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கு மேல் சாதனை நிகழ்வை மேம்படுத்தினார். கூடுதலாக, 59:45 நேர அளவிலான இறுதிப் பாதியுடன், கிப்டம் வலென்சியாவிலிருந்து வேகமாக நிறைவுற்ற பாதியின் தனது சொந்த சாதனையை மேம்படுத்தினார். அக்டோபர் 8 ஆம் தேதி, சிகாகோ மராத்தானில், கிப்டம் 2:00:35 என்ற புதிய உலக சாதனையைப் படைத்தார், இதற்கான ஒப்புதல் நிலுவையில் உள்ளது. இது 2022 பெர்லின் மராத்தானில் எலியுட் கிப்சோஜின் சாதனை நேரமான 2:01:09 என்ற முந்தைய சாதனையை முறியடித்தது. சாதனைகள் தனிப்பட்ட சிறந்தவை 10,000 மீட்டர் - 28:27.87 ( ஸ்டாக்ஹோம் 2021) சாலை 10 கிலோமீட்டர் - 28:17 ( Utrecht 2019) அரை மாரத்தான் – 58:42 ( வலென்சியா 2020) மராத்தான் - 2:01:25 ( லண்டன் 2023), எல்லா நேரத்திலும் மூன்றாவது வேகமானது மராத்தான் - 2:00:35 ( சிகாகோ 2023), உலக சாதனை மாரத்தான் போட்டி சாதனை மேற்கோள்கள் வாழும் நபர்கள் 1999 பிறப்புகள்
596072
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE
சியாம் சுந்தர் மகாபத்ரா
சியாம் சுந்தர் மகாபத்ரா (Shyam Sunder Mahapatra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1929 ஆம் ஆண்டு சனவரி மாதம் 25 ஆம் தேதியன்று இணைக்கப்படாத பால்டிமோர் மாவட்டத்தில் நரேந்திர நாத்து மகாபத்ராவுக்கு மகனாக இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971 ஆம் ஆண்டு ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு ரூர்கேலா சட்டமன்றத் தொகுதியிலிருந்து 5ஆவது ஒடிசா சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர்தான் பாலசோர் மக்களவைத் தொகுதியிலிருந்து 5ஆவது மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சியாம் சுந்தர் மகாபத்ரா 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதியன்று புதுதில்லியில் காலமானார். மேற்கோள்கள் 1929 பிறப்புகள் 2006 இறப்புகள் ஒடிசா அரசியல்வாதிகள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
596073
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF
ஓடோகோயிலினி
ஓடோகோயிலினி (Odocoileini) என்பது மான்களின் ஒரு இனக்குழு ஆகும். இதில் தற்போதுள்ள ஏழு பேரினங்கள் மற்றும் பல அழிந்து போன பேரினங்களும் உள்ளன. இந்த இனக்குழுவின் பொதுவான தன்மை வோமரின் தடுப்பு ஆகும். இது பின்னாசியினை முற்றிலும் பிரிக்கிறது. தொகுதிபிறப்பு வரலாறு கில்பர்ட் மற்றும் பலர் 2006 மற்றும் துவார்டே மற்றும் பலர். 2008 மஜாமாவை பலதொகுதிமரபு உயிர்னத் தோற்றம் கொண்டதாக விளக்கினர். மேற்கோள்கள் பாலூட்டிகள்
596074
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
கோகுலானந்த மொகந்தி
கோகுலானந்த மொகந்தி (Gokulananda Mohanty) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1899 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் முதல் தேதியன்று உதயநாத் மொகந்தி மற்றும் கனக் தேவி தம்பதியருக்கு மகனாக இவர் பிறந்தார். கோகுலானந்த மொகந்தி இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக ஒடிசா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். ஒடிசா சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும், இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு 1 ஆவது ஒடிசா சட்டமன்றத்திற்கு பந்த் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், பின்னர் 3 ஆவது மக்களவைக்கு பாலசோர் மக்களவைத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கோள்கள் புற இணைப்புகள் Official biographical sketch in Parliament of India website 1899 பிறப்புகள் 1974 இறப்புகள் ஒடிசா அரசியல்வாதிகள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
596075
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D
விஜய் கார்த்திக் கண்ணன்
Articles with hCards விஜய் கார்த்திக் கண்ணன் முக்கியமாக தமிழ் திரையுலகில் பணியாற்றும் ஒரு இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார். தனிப்பட்ட வாழ்க்கை விஜய், சக ஒளிப்பதிவாளர் யாமினி யக்ஞமூர்த்தியை தொழில் ரீதியான உறவினால் ஈர்க்கப்பட்டு 16 மார்ச் 2022 அன்று மணந்தார். தொழில் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் தனது வாழ்க்கையை தமிழ் திகில் படமான டார்லிங் 2 (2016) மூலம் தொடங்கினார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, 2018ஆம் ஆண்டில், சிவகார்த்திகேயன் தனது முதல் தயாரிப்பு முயற்சியான கனாவுக்கு (2018) ஒளிப்பதிவாளராக பணியாற்ற அவருக்கு அழைப்பு விடுத்தார். குறிப்பிட்ட நேரத்தில் படத்தை முடிப்பதில் நம்பிக்கை இல்லாததால், அவர் வாய்ப்பை நிராகரிக்க வேண்டியதாயிற்று. பின்னர், நெல்சன் இயக்கிய சிவகார்த்திகேயனின் (2021) படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். விஜய் கார்த்திக் கண்ணன் 13 ஆண்டுகளுக்கும் மேலாக தெரியும் தனது நீண்டகால நண்பரான ரத்ன குமார் இயக்கிய ஆடை (2019) படத்தில் பணியாற்றினார். அதே ஆண்டு விஜய் சேதுபதியின் சிந்துபாத் (2019) படத்திலும் பணியாற்றினார். சில்லு கருப்பட்டி (2019), காத்துவாக்குல ரெண்டு காதல் (2022), ராவணாசுரா (2023) ஆகிய படங்களில் பணியாற்றியதற்காகவும் அறியப்பட்டவர். சமீபத்தில் ஜெயிலர் (2023) படத்தில் அவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். திரைப்படவியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் IMDbயில் விஜய் கார்த்திக் கண்ணன் https://www.dopvijay.com/movies| ஒளிப்பதிவாளர் இணையதளம் தமிழ்நாட்டுத் திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் இந்தியத் தமிழர் தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் வாழும் நபர்கள்
596078
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF.%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
கி. வினோத் சந்திரன்
கிருஷ்ணன் வினோத் சந்திரன் (K. Vinod Chandran) என்பவர் இந்திய நீதிபதியும் தற்போதைய, பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும் ஆவார். இவர் கேரள உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார். பணி நீதிபதி வினோத் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள சட்ட அகாதமியின் சட்டக் கல்லூரியில் சட்டத்தில் பட்டம் பெற்றார். பின்னர் 1991ஆம் ஆண்டு பரவூரில் தனது சட்டப் பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குரையாடினார். இவரது பயிற்சியின் போது இவர் 2007 முதல் 2011 வரை கேரள அரசின் சிறப்பு அரசு வழக்கறிஞராக (வரிகள்) பணியாற்றினார். இவர் 8 நவம்பர் 2011 அன்று கேரள உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு 24 சூன் 2013 அன்று நிரந்தர நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். இவர் 29 மார்ச் 2023 அன்று பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1 ஆகத்து 2023 அன்று, பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே. வினோத் சந்திரன் மற்றும் நீதிபதி பார்த்த சாரதி ஆகியோர் அடங்கிய அமர்வில் பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது செல்லுபடியாகும் என்றும் இது சட்டப்பூர்வமானது என்று தீர்ப்பளித்தார். இந்த நீதி அமர்வு தனது 101 பக்க தீர்ப்பில் இந்த உத்தரவை வழங்கியது. அதே நேரத்தில் கணக்கெடுப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கேரள உயர் நீதிமன்றம் எர்ணாகுளம் மாவட்ட நபர்கள் 1963 பிறப்புகள் வாழும் நபர்கள் நீதிபதிகள் கேரள நபர்கள்
596080
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D
பிஜய குமார் நாயக்
பிஜய குமார் நாயக் (Bijaya Kumar Nayak) (4 ஆகத்து 1951 - 26 பெப்ரவரி 2020) இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த ஒடிசாவைச் சேர்ந்த ஒரு இந்திய வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் ஒடிசா சட்டப் பேரவையின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். வாழ்க்கை வரலாறு நாயக் 1951-ஆம் ஆண்டு ஆகத்து 4-ஆம் நாள் பிறந்தார் இவர் 1995-ஆம் ஆண்டில் எர்சாமாவிலிருந்து ஒடிசா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் நாயக் 26 பிப்ரவரி 2020 அன்று 68 வயதில் இறந்தார் மேற்கோள்கள் இந்திய வழக்கறிஞர்கள் 2020 இறப்புகள் 1951 பிறப்புகள்
596082
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
குனாசு ஆறு
குனாசு ஆறு (Cunas River) மத்திய பெருவில் உள்ள ஜூனின் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஆறு ஆகும். இந்த ஆறு கடல் மட்டத்திலிருந்து 5,180 மீட்டர் உயரத்தில் கார்டில்லெரா ஆக்சிடென்டலில் உருவாகிறது. இந்த ஆறு ஜூனின் பிராந்தியத்தில் சுபாகா மாகாணம், கான்செப்சியன் மாகாணம் மற்றும் ஹுவான்காயோ மாகாணம் ஆகிய 3 மாகாணங்களில் பாய்ந்து ஓடுகிறது. பாய்ந்தோடும் வழி குனாசு தென்மேற்கிலிருந்து வடகிழக்கில் பயணித்து மந்தாரோ பள்ளத்தாக்கில் நுழைகிறது. இந்த நதி மந்தாரோ ஆற்றின் ஆற்றுப் படுகையைச் சேர்ந்தது. பொருளாதாரம் லிமா நகரின் முக்கிய வழங்குநர்களில் ஒன்றான மந்தாரோ பள்ளத்தாக்கு வழியாக இந்த ஆறு செல்கிறது. சுபாகா நகரம் அதன் பாதையில் உள்ள முக்கிய நகரமாகும். மேற்கோள்கள் பெரு
596083
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D
கிளாடியா கோல்டின்
கிளாடியா டேல் கோல்டின் (Claudia Dale Goldin, பிறப்பு: 14 மே 1946) ஒரு அமெரிக்க பொருளாதார வரலாற்றாசிரியர் மற்றும் தொழிலாளர் சார்ந்த பொருளாதார நிபுணர் ஆவார். இவர் தற்போது ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் என்றி லீ பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார். அக்டோபர் 2023 இல், "பெண்களின் தொழிலாளர் சந்தை விளைவுகளைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தியதற்காக" பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவு பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. தனியாக அந்த விருதை வென்ற முதல் பெண்மணி இவர் ஆவார். ஆய்வுப்பணி இவர் “200 ஆண்டுகளாகப் பணியிடத்தில் பெண்களின் பங்கேற்பைப் பற்றி” ஆராய்ந்து படித்தார், தொடர்ந்து பொருளாதார வளர்ச்சி இருந்தபோதிலும், பெண்களின் ஊதியம் தொடர்ந்து ஆண்களுக்கு ஈடாகவில்லை மேலும், ஆண்களை விட பெண்கள் உயர் கல்வியைப் பெற்றாலும் ஒரு பிளவு இன்னும் உள்ளது என்பதைக் காட்டுகிறது.தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கேற்பு இந்த முழு காலகட்டத்திலும் மேல்நோக்கிய போக்கைக் கொண்டிருக்கவில்லை, மாறாக U- வடிவ வளைவை உருவாக்குகிறது என்று கோல்டின் காட்டினார். திருமணமான பெண்களின் பங்கேற்பு பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் விவசாய சமூகத்திலிருந்து தொழில்துறை சமூகமாக மாறியதுடன் குறைந்தது, ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சேவைத் துறையின் வளர்ச்சியுடன் அதிகரிக்கத் தொடங்கியது. வீடு மற்றும் குடும்பத்திற்கான பெண்களின் பொறுப்புகள் தொடர்பான கட்டமைப்பு மாற்றம் மற்றும் வளரும் சமூக விதிமுறைகளின் விளைவாக கோல்டின் இந்த முறையை விளக்கினார். இருபதாம் நூற்றாண்டின் காலகட்டத்தில், பெண்களின் கல்வி நிலைகள் தொடர்ந்து அதிகரித்தன, மேலும் பெரும்பாலான உயர் வருமான நாடுகளில் அவர்கள் இப்போது ஆண்களை விட கணிசமாக உயர்ந்துள்ளனர். தொழில் திட்டமிடலுக்கான புதிய வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இந்த புரட்சிகர மாற்றத்தை விரைவுபடுத்துவதில் கருத்தடை மாத்திரைக்கான அணுகல் முக்கிய பங்கு வகித்தது என்பதை கோல்டின் நிரூபித்தார். இருபதாம் நூற்றாண்டில் நவீனமயமாக்கல், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களின் விகிதாச்சாரங்கள் அதிகரித்த போதிலும், நீண்ட காலமாக பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையிலான வருவாய் இடைவெளி நிரப்பப்படவில்லை. கோல்டினின் கூற்றுப்படி, விளக்கம் பின்வருமாறு தரப்பட்டுள்ளது. அதாவது, வாழ்நாள் முழுவதும் தொழில் வாய்ப்புகளை பாதிக்கும் கல்வி முடிவுகள் ஒப்பீட்டளவில் இளம் வயதிலேயே எடுக்கப்படுகின்றன. இளம் பெண்களின் எதிர்பார்ப்புகள் முந்தைய தலைமுறையினரின் (உதாரணமாக, குழந்தைகள் வளரும் வரை வேலைக்குச் செல்லாத அவர்களின் தாய்மார்கள்) அனுபவங்களால் உருவாக்கப்படும் நேர்வில் அவர்களின் வளர்ச்சி மெதுவாக இருக்கும். வரலாற்று ரீதியாக, வருவாயில் உள்ள பாலின இடைவெளியின் பெரும்பகுதி கல்வி மற்றும் தொழில் தேர்வுகளில் உள்ள வேறுபாடுகளால் விளக்கப்படலாம். இருப்பினும், கோல்டின் இந்த வருவாய் வேறுபாட்டின் பெரும்பகுதி இப்போது அதே தொழிலில் உள்ள பெண்களுக்குள் காணப்படுகிறதென்றும், இந்த வேறுபாடு பெரும்பாலும் முதல் குழந்தையின் பிறப்புடன் எழுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Scientifc Background to the Nobel prize in Economics (PDF) Scientifc Background to the Nobel prize in Economics (popular version) (PDF) Claudia Goldin Curriculum vitae (PDF) The Economist as Detective, a brief autobiographical essay by Claudia Goldin. In: M. Szenberg (ed.). Passion and Craft: Economists at Work. Ann Arbor: University of Michigan Press, 1998, . Academic Papers by Claudia Goldin. Interview with Goldin by The Region of the Minneapolis Fed 1946 பிறப்புகள் அமெரிக்கப் பொருளியலாளர்கள் அமெரிக்க வரலாற்றாளர்கள் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள் வாழும் நபர்கள் நோபல் பொருளியற் பரிசு பெற்றவர்கள் சிக்காகோ பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் நோபல் பரிசு பெற்ற பெண்கள்
596085
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
யாமினி யக்ஞமூர்த்தி
Articles with hCards யாமினி யக்ஞமூர்த்தி முக்கியமாக தமிழ் திரையுலகில் பணியாற்றும் இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார். தனிப்பட்ட வாழ்க்கை யாமினி, சக ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனை தொழில் ரீதியான உறவினால் ஈர்க்கப்பட்டு 16 மார்ச் 2022 அன்று மணந்தார். தொழில் யாமினி தனிப்பட்ட முறையில் தனது ஒளிப்பதிவு தொழிலை துவங்கும் முன் பிரபல ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராமிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். 2019ஆம் ஆண்டு வெளிவந்த சில்லுக்கருப்பட்டி என்ற திரைப்படத்தில் இவர் விஜய் கார்த்திக் கண்ணனுடன் சக ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். இப்படம் இவருக்கு தொழில்ரீதியாக நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தது. பின்னர் 2022இல் வெளிவந்த சாணிக் காயிதம் என்ற திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்த இவர் வெகுவாக பாராட்டப்பட்டார். இவ்வாண்டு வெளிவர இருக்கும் ரகுத்தாத்தா என்ற திரைப்படத்தில் இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். திரைப்படவியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் யாமினியின் தனிப்பட்ட இணையதளம்
596089
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF
கோபிநாத் கசபதி
கோபிநாத் கசபதி (Gopinath Gajapati) (6 மார்ச் 1943 - 10 ஜனவரி 2020) இந்தியாவின் 9வது மற்றும் 10வது மக்களவையில் உறுப்பினராக இருந்தவர் ஆவார். இவர் ஒடிசாவின் பெர்காம்பூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தவர். பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். 2009ஆம் ஆண்டு பிசூ சனதா தளம் கட்சிக்கு மாறினார். 2020 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10ஆம் தேதி அன்று, ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனது 76 ஆவது வயதில் இறந்தார். மேற்கோள்கள் 10வது மக்களவை உறுப்பினர்கள் 9வது மக்களவை உறுப்பினர்கள் 2020 இறப்புகள் 1943 பிறப்புகள்
596090
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%87
இராணி சித்ரலேகா போன்சுலே
இராணி சித்ரலேகா போன்சுலே (Rani Chitralekha Bhonsle) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1941 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சமூக சேவகரான இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக இந்திய மாநிலமான மகாராட்டிராவில் உள்ள ராம்டெக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்ப கால வாழ்க்கை போன்சுலே 1941 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள பரோடாவில் பிறந்தார். அவர் 25 டிசம்பர் 1959 ஆம் ஆண்டு திசம்பர் 25 ஆம் தேதியன்று தேச்சிங்ராவு போன்சுலேவை மணந்து கொண்டார். இத்தம்பதியருக்கு இலட்சுமன்சிங் மற்றும் மான்சிங் ஆகிய இரு மகன்களும், இலலிதராச்சே, மென்கராச்சே மற்றும் கேட்கிராச்சே ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர். கல்வி மற்றும் ஆர்வங்கள் இராணி தனது இளங்கலை படிப்பை குசராத்து மாநிலம் பரோடாவில் உள்ள எம்.எசு. பல்கலைக்கழகம் சகாச்சிராவ் கெய்க்வாட் கல்லூரியில், முடித்தார். இவரது ஆர்வங்களில் ஓவியம் மற்றும் வாசிப்பு ஆகியவை அடங்கும். நாக்பூரில் உள்ள மாவட்ட கைப்பந்து சங்கத்தின் தலைவராகவும் இவர் உள்ளார். தொழில் இராணி போன்சுலே 1998 ஆம் ஆண்டில் 12ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998-99 காலகட்டத்தில், நிலக்கரி அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தார். மேற்கோள்கள் இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் நாக்பூர் மாவட்ட நபர்கள் 12வது மக்களவை உறுப்பினர்கள் 2015 இறப்புகள் 1941 பிறப்புகள்
596093
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
மதுகர்ராவ் சவான்
மதுகர்ராவ் சவான் (Madhukarrao Chavan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 5ஆவது முறையாக இவர் மகாராட்டிரா மாநிலத்தின் சட்டப் பேரவையில் சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார். மகாராட்டிர அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறையின் அமைச்சராக இருந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவரான இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராட்டிர மாநில பொதுத் தேர்தல்களில் ஒசுமானாபாத் மாவட்டத்தில் உள்ள துல்சாப்பூர் விதான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். துல்சாப்பூர் தாலுகாவின் ஆந்தூரில் மதுகர்ராவ் சவான் வசித்தார். பல கூட்டுறவு, கல்வி நிறுவனங்களின் தலைவராகச் செயல்பட்டார். 1985 ஆம் ஆண்டிலிருந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். 1985 ஆம் ஆண்டில் பத்மசிங் பாட்டீலிடம் உசுமானாபாத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனால் 1990 ஆம் ஆண்டில் துல்சாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் 1995 ஆம் ஆண்டில் மாணிக்ராவ் கபாலிடம் தோற்றார். 1999 ஆம் ஆண்டு முதல், துல்சாப்பூர் தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை 1999, 2004, 2009, 2014 ஆம் ஆண்டுகளில் இவர் வெற்றி பெற்றுள்ளார். மேற்கோள்கள் மகாராட்டிர அரசியல்வாதிகள் வாழும் நபர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
596094
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
தௌலத்ராவ் அகர்
டாக்டர். தௌலத்ராவ் அகர் (Dr. Daulatrao Aher) (1 நவம்பர் 1943-19 சனவரி 2016) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 9வது மக்களவையில் இவர் உறுப்பினராக இருந்தார். மகாராட்டிராவின் நாசிக் மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். மேற்கோள்கள் புற இணைப்புகள் 2016 இறப்புகள் 1943 பிறப்புகள் 9வது மக்களவை உறுப்பினர்கள் மகாராட்டிர அரசியல்வாதிகள்
596102
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
மெகரம் நகர்
மெகரம் நகர் (Mehram Nagar), 17 ஆம் நூற்றாண்டு கிராமம், இந்தியாவின் டெல்லி மாநிலத்தில் இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் முனையம்-1 -இற்கு வடகிழக்கே அமைந்துள்ளது. வரலாறு மெகரம் நகர் கிராமம், மெகரம் பஜார் மற்றும் மெகரம் செராய் ஆகியவை 1639 இல் ஷாஜகானின் ஆட்சியின் போது முகலாய அரண்மனைக்கு பொறுப்பாக இருந்த மெஹ்ரம் கானால் நிறுவப்பட்டது. 1660 பொல் மெகரம் கான் (ஜஹாங்கிரின் ஹரேம் காவலர்), ஷாஜஹான் மற்றும் அவரது மகன் ஔரங்கசீப் போன்ற முகலாயர்களால் கட்டப்பட்ட பழைய தர்வாசா (வாயில்), மசூதி மற்றும் செராய் உள்ளிட்ட பல நினைவுச்சின்னங்கள் கிராமத்தில் உள்ளதாக இந்தியத் தொல்லியல் ஆய்வகம் குறிப்பிடுகிறது. வெளி இணைப்புகள் மெஹ்ராம் நகர் மற்றும் செராய் பற்றிய நவம்பர் 2017 அறிக்கை மேலும் காண்க டெல்லி சுல்தானகம் டெல்லியின் வரலாறு மேற்கோள்கள் Coordinates on Wikidata தில்லி சுற்றுப் பகுதிகள்
596103
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இமாச்சலப் பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பு (Animal husbandry in Himachal Pradesh) இந்தியாவிலுள்ள இமாச்சலப் பிரதேசத்தின் விவசாயத் துறை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டுப் பசுக்கள், எருமைகள் மற்றும் செம்மறி ஆடுகள் மிகவும் தரம் குறைந்தவை. கால்நடை மேம்பாடு, கால்நடைகளின் ஆரோக்கியம் மற்றும் மர உற்பத்தியில் நோய் எதிர்ப்புத் திட்டங்கள், கோழி மேம்பாடு, தீவனம் மற்றும் தீவன மேம்பாடு, பால்வள மேம்பாடு, பால் விநியோகத் திட்டங்கள் மற்றும் கால்நடைக் கல்வி ஆகியவற்றில் மாநிலத்தில் கால்நடைகளை மேம்படுத்தும் வகையில் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கால்நடை மருத்துவ உதவிகளை வழங்கவும், பல்வேறு தொற்று நோய்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் மாநிலத்தில் பல கால்நடை மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் வெளியூர் மருந்தகங்கள் உள்ளன. பல நடமாடும் மருந்தகங்களும் இயங்கி வருகின்றன. மேற்கு செருமனி இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அங்கோரா முயல்கள் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. காங்க்ராவில் அவற்றின் இனப்பெருக்கத்திற்காக 7 அலகுகள் அமைக்கப்பட்டுள்ளன. பால் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. சுமார் 24 இடங்களில் சுமார் 55,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் குளிர்விக்கும் ஆலைகள் அமைக்கப்பட்டு 6 நகரங்களில் துறைசார்ந்த பால் விநியோகத் திட்டங்கள் செயல்படுகின்றன. மேற்கோள்கள் இமாச்சலப் பிரதேசம் இந்தியாவில் கால்நடை வளர்ப்பு
596104
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF
அல்லாடி குப்புசாமி
நீதிபதி அல்லாடி குப்புசாமி (Alladi Kuppu Swamy)(1920-2012) என்பவர் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் ஆவார். அல்லாடி கிருஷ்ணசசாமி ஐயரின் மகனான இவர் 23 மார்ச் 1920-ல் பிறந்தார். சென்னை இலயோலாக் கல்லூரியில் இளங்கலையும் சென்னை, சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டக் கல்வியும் பயின்றார். இவர் 1939-ல் முதல் வகுப்பில் இளநிலை கணிதப் பட்டம் பெற்றார். 1939-41-ல் சட்டம் பயின்றார். இவர் மறைந்த ஸ்ரீ வி. கோவிந்தராஜாச்சாரியிடம் வழக்கறிஞர் பயிற்சியினைப் பெற்றார். 1942-ல் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். இவர் ஆந்திரப் பிரதேச வழக்கறிஞர் கழக உறுப்பினராக 1961 முதல் 1967 வரை இருந்தார். குப்புசாமி, 12 மார்ச் 2012 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் ஐதராபாத்தில் மாரடைப்பால் இறந்தார். மேற்கோள்கள் 20 ஆம் நூற்றாண்டு இந்திய வழக்கறிஞர்கள் 2012 இறப்புகள் 1920 பிறப்புகள் இந்திய நீதிபதிகள்
596105
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86.%20%E0%AE%AA%E0%AF%86.%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
செ. பெ. கோத்வால்
சொகராப் பெசோதன் கோத்வால் (S. P. Kotval)(செப்டம்பர் 1910 - 6 மார்ச் 1987) பம்பாய் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆகத்து 1, 1966 முதல் 27 செப்டம்பர் 1972 வரை பணியாற்றியவர் ஆவார். இவர் தனது பள்ளிக் கல்வியை நாக்பூரில் உள்ள புனித வளனார் கன்னிமாடப் பள்ளியிலும், பின்னர் பஞ்ச்கனியில் உள்ள பில்லிமோரியா உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். இவர் மோரிசு கல்லூரியில் (தற்போது நாக்பூர் மகாவித்யாலயா என்று அழைக்கப்படுகிறது) கல்லூரிக் கல்வியினையும் நாக்பூரில் உள்ள பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில் இளநிலை சட்டமும் பயின்றார். இவர் 1932ஆம் ஆண்டு முதல் நாக்பூரில் உள்ள வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார். பின்னர் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் பயிற்சி செய்தார். 1956-ல் மாநிலங்களின் மறுசீரமைப்பு தொடர்பாக, இவர் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் இருக்கையில் நீதிபதியாகப் பதவி வகித்தார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் சுருக்கமான சுயசரிதை   1987 இறப்புகள் 1910 பிறப்புகள் மும்பாய் உயர் நீதிமன்ற நீதிபதிகள்
596106
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A.%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
ச. ஜெயச்சந்திரன்
சந்திரசேகரன் கர்த்தா ஜெயச்சந்திரன் (C. Jayachandran; ; 28 மே 1972 இல் பிறந்தவர்) ஓர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது கேரள உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பணியாற்றுகிறார். இந்திய மாநிலமான கேரளா மற்றும் இலட்சத்தீவு உச்ச நீதிமன்றத்தின் தலைமையகம் எர்ணாகுளத்தில், கொச்சியில் உள்ளது. ஜெயச்சந்திரன் 20 அக்டோபர் 2021 முதல் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் பிப்ரவரி 2011-ல் கூடுதல் மாவட்ட நீதிபதியாக நேரடியாக நீதித்துறை பணியில் சேர்ந்தார். மேலும் கொல்லம், திருவனந்தபுரம் மற்றும் கோட்டயத்தில் முதன்மை மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார். கேரள சட்ட அகாதமியின் சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டம் மற்றும் கேரளாவில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் முதுகலைச் சட்டக் கல்வியினை முடித்துள்ளார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கேரள உயர் நீதிமன்றம் 1972 பிறப்புகள் வாழும் நபர்கள் இந்திய நீதிபதிகள்
596108
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D
அசோக் மேனன்
அசோக் மேனன் (பிறப்பு 15 ஆகத்து 1959) கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ஆவார். கேரள உயர் நீதிமன்றம் இந்தியாவின் கேரள மாநிலம் மற்றும் லட்சத்தீவு ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள மிக உயர்ந்த நீதிமன்றமாகும். கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமையகம் எர்ணாகுளத்தில், கொச்சியில் அமைந்துள்ளது. இளமை அசோக் கேந்திரிய வித்யாலயாவில் பள்ளிப் படிப்பை முடித்தார். திருச்சூரில் உள்ள தூய தோமசு கல்லூரியில் பட்டம் பெற்றார். கோழிக்கோடு அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார். பணி அசோக் 1981ஆம் ஆண்டு திருச்சூர் மற்றும் வடக்காஞ்சேரி நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். இவர் 1988-ல் முன்சிப்-நீதிபதியாகப் பணியாற்றத் தொடங்கினார். இதன்பின் 1995ல் துணை நீதிபதியாகவும், 2002ல் மாவட்ட நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றார். அசோக் 2009-ல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் பதிவாளராக நியமிக்கப்பட்டார். 2010 முதல் 2013 வரை புது தில்லியின் போட்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் பதிவாளராகத் தொடர்ந்தார். இதன்பிறகு 2013 முதல் 2015 வரை கொல்லத்தில் முதன்மை மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார். 2015ல் கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 30, 2017 அன்று அசோக் கேரள உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பதவி உயர்த்தப்பட்டு, ஆகத்து 29, 2019 அன்று கேரள உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக ஆனார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கேரள உயர் நீதிமன்றம் 1959 பிறப்புகள் வாழும் நபர்கள் இந்திய நீதிபதிகள்
596109
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88
மேற்கு வங்க தீயணைப்பு சேவை
மேற்கு வங்க தீயணைப்பு சேவை (West Bengal Fire Service) என்பது கொல்கத்தா நகரம் உட்பட இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திற்கு தீயணைப்பு, மீட்பு மற்றும் அவசர மருத்துவ சேவைகளை வழங்கும் அரசுக்கு சொந்தமான சேவை அமைப்பாகும். இத்துறையிடம் 350 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட தீயணைப்பு சாதனங்கள் உள்ளன. மேற்கு வங்காளத்தில் உள்ள தீயணைப்புத் துறை சேவை நாட்டிலேயே பழமையான தீயணைப்பு சேவையாகும். 1950 ஆம் ஆண்டில் கல்கத்தா தீயணைப்புப் படை மற்றும் பெங்கால் தீயணைப்பு சேவை ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. தீயணைப்பு சேவை சட்டம் 1950 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. தீ தடுப்பு மற்றும் தீ பாதுகாப்பு விதிகளை உள்ளடக்கி 1996 ஆம் ஆண்டில் இச்சட்டம் திருத்தப்பட்டது. மேற்கு வங்கத்தில் 103 தீயணைப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. 350 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட தீயணைப்பு சாதனங்களுடன் சுமார் 8000 தீயணைப்பு வீரர்கள் சேவைப் பணியில் உள்ளனர். மேற்கோள்கள் புற இணைப்புகள் மேற்கு வங்க தீயணைப்பு சேவை, மேற்கு வங்க அரசு மேற்கு வங்காளம்
596110
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE
விவேகானந்தா மருத்துவ அறிவியல் நிறுவனம், கொல்கத்தா
விவேகானந்தா மருத்துவ அறிவியல் நிறுவனம் (Vivekananda Institute of Medical Sciences, Kolkata) இந்தியாவின் கொல்கத்தா சரத் போசு சாலையில் உள்ள ஒரு மருத்துவ நிறுவனம் மற்றும் மருத்துவமனை ஆகும். இது இராமகிருட்டிண மடம் மற்றும் ராமகிருட்டிணா அறக்கட்டளையின் கீழ் செயல்படுகிறது. சாரதா தேவியின் சீடரான சுவாமி தயானந்தால் 1932ஆம் ஆண்டு சூலை மாதம் சிசுமங்கல் பிரதிசுடானம், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையாக இது தொடங்கப்பட்டது. சுவாமி தயானந்தா (பிறப்பு விமல்) ராமகிருட்டிண மடம் மற்றும் ராமகிருட்டிணா அறக்கட்டளையின் (1962-1965) ஒன்பதாவது தலைவரான சுவாமி மாதவானந்தாவின் இளைய சகோதரர் ஆவார். 1956ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சிகிச்சையகம் தற்போதைய மருத்துவமனைக்கு வழி வகுத்தது. இன்று இந்நிறுவனம் 600 படுக்கைகள் கொண்ட பொது மருத்துவமனை, மா சாரதா செவிலியர் பள்ளி, விவேகானந்தா மருத்துவ அறிவியல் கழகம், கிராமப்புறங்களில் நடமாடும் சுகாதார அலகுகள் மற்றும் சமூக சுகாதார சேவைகள் என பல அமைப்புகளுடன் செயல்படுகிறது. மேற்கோள்கள் புற இணைப்புகள் ராமகிருஷ்ணா மிஷன் சேவா பிரதிஷ்தான், அதிகாரப்பூர்வ இணையதளம் Coordinates on Wikidata மேற்கு வங்காளத்திலுள்ள கல்வி நிறுவனங்கள் இந்திய மருத்துவமனைகள் கொல்கத்தா மேற்கு வங்காளத்தில் கல்வி
596111
https://ta.wikipedia.org/wiki/2023%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D
2023 இசுரேல்-ஹமாஸ் போர்
2023 இசுரேல்-ஹமாஸ் போர் என்பது இசுரேலுக்கும் ஹமாஸ் தலைமையின் கீழ் இயங்கும் பாலத்தீனிய போராளிக் குழுக்களுக்கும் இடையே தற்போது நடைபெற்றுவரும் மோதலைக் குறிக்கும். அரபு-இசுரேல் முரண்பாட்டின் ஒரு பகுதியாக இந்தப் போர் கருதப்படுகிறது. 7 அக்டோபர் 2023 அன்று ஆபரேசன் அல்-அக்ச ஸ்டோர்ம் எனும் பெயரில் போராளி இயக்கக் குழுக்கள் காசாக்கரையிலிருந்து இசுரேல் மீது தாக்குதலை நடத்தின. இசுரேல் எதிர்த்தாக்குதலை நடத்தியபோது தனது தாக்குதல் நடவடிக்கைகளுக்கு அயர்ன் சுவார்ட்ஸ் (இரும்பு வாட்கள்) என்பதாக பெயரிட்டது. காசா-இசுரேல் எல்லையில் இசுரேல் நாட்டில் அமைந்துள்ள வேலியை சேதப்படுத்தி உள்ளே நுழைந்த ஹமாஸ் இயக்கம், எல்லையை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளிலும், இராணுவ கட்டமைப்புகளிலும் ஊடுருவி தாக்குதல்களை நடத்தியது. 1948 ஆம் ஆண்டில் நடந்த அரபு-இசுரேல் போருக்குப் பிறகு இசுரேலின் எல்லைக்குட்பட்டப் பகுதியில் நடக்கும் முதலாவது நேரடித் தாக்குதல் இதுவாகும். காலை நேரத்தில் ஏவூர்தி மூலமாக தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு, இசுரேல் பகுதிக்குள் வாகனங்கள் ஊடுருவிச் சென்றன. இசுரேல் நாட்டுப் பொதுமக்கள் மீதும், இராணுவ கட்டமைப்புகள் மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்தன. இந்தத் தாக்குதலை மூன்றாவது பாலத்தீனியர்கள் கிளர்ச்சி என அரசியல் பார்வையாளர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர். யோம் கிப்பூர்ப் போருக்குப் பின்னர் சரியாக 50 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதைய மோதலை போர் என இசுரேல் அலுவல்முறையில் அறிவித்துள்ளது. இழப்பு விவரங்கள் வெளிநாட்டினர் மற்றும் இரட்டைக் குடியுரிமைப் பெற்றவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் அக்டோபர் 11 அன்றைய வாசிங்டன் போஸ்ட் செய்தியின்படி, 24 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணவில்லை. இதழியலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் காசாவில் பணியாற்றும் 6 பாலத்தீனிய இதழியலாளர்கள் பணியிலிருக்கும்போது கொல்லப்பட்டனர். இதைத்தவிர, 2 இதழியலாளர்களை காணவில்லை. ஒருவர் காயமுற்றார். 2 இதழியலாளர்களின் வீடுகளும், 4 ஊடகக் கட்டிடங்களும் வான்தாக்குதல்களால் தகர்க்கப்பட்டன. இசுரேல்-லெபனான் எல்லையில், அக்டோபர் 13 அன்று இசுரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் இராய்ட்டர்சு செய்தி நிறுவனத்தின் காணொலிப் பதிவாளர் கொல்லப்பட்டார். இராய்ட்டர்சு, ஏபி செய்தி நிறுவனங்கள், அல் ஜசீரா தொலைக்காட்சி ஆகியவற்றின் 6 இதழியலாளர்கள் காயமுற்றனர். இசுரேலில் ஒளிப்படப் பதிவாளர் ஒருவரைக் காணவில்லை. அவரின் 3 வயது குழந்தை கடத்தப்பட்டுள்ளது; மனைவி கொல்லப்பட்டார். ஸ்கை நியூசு அரபியா தொலைக்காட்சியின் செய்தியாளர்கள் குழுவினை இசுரேல் காவற்துறை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. செய்தியாளரின் தலையை நோக்கி துப்பாக்கியைக் காட்டியதாகவும், வலுக்கட்டாயமாக உடையை கழற்றவைத்ததாகவும், அவ்விடத்தை விட்டு வெளியேற்றியதாகவும், நகர்பேசிகளை எடுத்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அக்டோபர் 13-14 இரவில், பிபிசி அரபிக் செய்தியாளர்கள் குழுவினை இசுரேலிய காவற்துறை தடுத்து நிறுத்தியதாகவும், துப்பாக்கி முனையில் மிரட்டி தாக்கப்பட்டதாகவும் பிபிசி குற்றஞ்சாட்டியது. உலக நாடுகளின் நிலைப்பாடு பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் ஹமாஸ் இயக்கத்திற்கு தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இவ்வியக்கத்தின் செயல்பாடுகளை தீவிரவாதம் என குற்றஞ்சாட்டியுள்ளன. பாலத்தீனியப் பகுதிகளில் இசுரேலின் ஆக்கிரமிப்புச் செயல்பாடுகளாலேயே இத்தகையப் பிரச்சினை உருவெடுத்ததாக இசுலாமிய நாடுகள் கருத்துகளை வெளியிட்டுள்ளன. ஹமாஸ் இயக்கமும், இசுரேலும் போர்க்குற்றங்களைச் செய்வதாக பன்னாட்டு மன்னிப்பு அவை குற்றஞ்சாட்டியுள்ளது. இசுரேலுக்கு இராணுவ உதவி வழங்கவிருப்பதாக ஐக்கிய அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. போர்க் குற்றங்கள் பாலத்தீனில் ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணை இப்போதைய மோதலுக்கும் நீட்டிக்கப்படுவதாக அக்டோபர் 10 அன்று அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அறிவித்தது. ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கைகள் போரில் ஈடுபட்டுள்ள இருதரப்பும் செய்துவரும் போர்க்குற்றங்களுக்கு ஆதாரங்கள் இருப்பதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்தது. இசுரேலிலும் காசாவிலும் ஏற்படுத்தப்பட்ட வன்முறைகளின்போது, போர்க் குற்றங்கள் நடந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் இருப்பதாக அக்டோபர் 10 அன்று இசுரேல்-பாலத்தீனிய பிரச்சனைகளுக்கான ஐக்கிய நாடுகள் அவை உண்மையறியும் இயக்கம் கூறியது. பன்னாட்டுச் சட்டத்தை மீறியவர்களும், பொதுமக்களைத் தாக்கியவர்களும் இக்குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டுமென இவ்வியக்கம் கூறியது. ஹமாஸ் போராளிகள் பயங்கரமான குற்றங்களை நிகழ்த்தியதாக தனித்தியங்கும் ஐக்கிய நாடுகள் அவை வல்லுனர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஏற்கனவே பெருமளவு பாதிக்கப்பட்டு அல்லலுற்று வரும் காசா மக்கள் மீது இசுரேல் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியதாகவும் இவ்வல்லுனர்கள் அக்டோபர் 10 அன்று கண்டனம் தெரிவித்தனர். "இதுவொரு கூட்டாக அளிக்கப்படும் தண்டனையாகும். அப்பாவிப் பொதுமக்களை குறிவைத்துத் தாக்கும் இந்த வன்முறைகளுக்கு எவ்வித நியாயப்படுத்துதலும் ஏற்கத்தக்கதன்று. அனைத்துலகச் சட்டத்தின்படி, இவ்வன்முறைகள் போர்க் குற்றங்களாகக் கருதப்படும்" என இந்த வல்லுனர்கள் தெரிவித்தனர். பாலத்தீனிய போராளிக் குழுக்களால் செய்யப்பட்ட போர்க்குற்றங்கள் ஹமாஸ் போராளிக் குழுவும் இதர பாலத்தீனிய படைக்கலன் தாங்கிய குழுக்களும் இசுரேல் நாட்டிலுள்ள பொதுமக்களின் வீடுகளுக்குள் ஊடுருவிச் சென்று, திரளாகக் கொன்றதாகவும் அம்மக்களில் சிலரை காசாவிற்குள் பிணயக் கைதிகளாக கடத்திச் சென்றதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்தது. பொதுமக்களை குறிவைத்துத் தாக்குதல், கண்மூடித்தான கோரத் தாக்குதல்கள், பொதுமக்களை பிணையாளிகளாக கடத்திச் செல்லுதல் ஆகியன அனைத்துலக மனிதநேய சட்டத்தின்படி, போர்க் குற்றங்களாக கருதப்படுமென இந்த கண்காணிப்பகம் அறிவித்தது. இசுரேல் நாட்டின் பொதுமக்களை பாலத்தீனியப் போராளிகள் குறிவைத்துத் தாக்கியதாக மனித உரிமைகள் கண்காணிப்பகமும் பன்னாட்டு மன்னிப்பு அவையும் கூறின. இத்தகைய வன்முறைச் செயல்கள் போர்க் குற்றங்களாக கருதப்படும் என்றும், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என்றும் சட்ட வல்லுனர்கள் விளக்கினர். பாலத்தீனியக் குழுக்கள் நடத்திய தாக்குதல்களை போர்க் குற்றங்கள் என்பதாக இசுரேலுக்கான ஐக்கிய நாடுகள் அவை தூதர் வகைப்படுத்தினார். ஹமாஸ் நடத்திய தாக்குதல்கள் போர்க் குற்றங்களென இசுரேலைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பாகிய B'Tselem குறிப்பிட்டது. இசுரேலிய அரசால் செய்யப்பட்ட போர்க் குற்றங்கள் காசாக் கரையை முழுமையாக முற்றுகையிடுமாறு தான் ஆணையிட்டுள்ளதாக இசுரேலின் பாதுகாப்பு அமைச்சர் அக்டோபர் 9 அன்று தெரிவித்தார். அதன்படி மின்சாரம், உணவு, எரிபொருள், நீர் ஆகியன துண்டிக்கப்படுமென அறிவித்தார். காசா மீது நிகழ்த்தப்படும் சரமாரிக் குண்டுவீச்சுத் தாக்குதல்களும், முற்றுகையும் போர்க் குற்றங்களென ஐக்கிய நாடுகள் அவைக்கான பாலத்தீனிய தூதர் அக்டோபர் 9 அன்று கூறினார். காசாவுக்கு மின்சாரம் தரக்கூடிய இசுரேலின் மின் நிலையத்தின் இயக்கமானது அக்டோபர் 11 அன்று நிறுத்தப்பட்டது. வெள்ளைப் பாஸ்பரசைப் பயன்படுத்தும் படைக்கலங்களை இசுரேலிய இராணுவம் பயன்படுத்துவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் உறுதிப்படுத்தியது. பொதுமக்களை தேவையற்ற வகையில் வதைப்பதன் மூலமாக அனைத்துலக மனிதநேய சட்டத்தை மீறுவதாக இந்தக் கண்காணிப்பகம் கூறியுள்ளது. பன்னாட்டு மன்னிப்பு அவையின் இடர்ப்பாடு தடய ஆய்வகம் வெள்ளைப் பாஸ்பரசைப் இசுரேலிய இராணுவம் பயன்படுத்துவதை உறுதி செய்துள்ளது. இதனை இசுரேலிய இராணுவம் மறுத்துள்ளது. பரவலான போர்க் குற்றங்களை இசுரேல் நிகழ்த்தியுள்ளதாக ஐரோப்பிய-நடுநிலக் கடல் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டது. பொதுமக்கள் புழங்கும் இடங்களான பல்கலைக்கழகங்கள், மசூதி, சந்தைகள், வங்கிகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வீட்டுக் கட்டிடங்கள் ஆகியன நேரடித் தாக்குதலுக்கு உள்ளானதை இவ்வறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது. இதழியலாளர்கள் கொல்லப்படுவதையும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வடக்கு காசாவில் வாழும் பாலத்தீனியர்கள் 24 மணிநேரத்தில் இடம்பெயர்ந்து செல்லவேண்டும் என இசுரேல் ஆணையிட்டது. இச்செயலை மானுடத்திற்கு எதிரானது என்றும் அனைத்துலக மனிதநேய சட்டத்தை மீறுதல் என்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர்க்கான மனித உரிமைகள் அமைப்பின் சிறப்பு அலுவலர் பவுலா கவிரியா பெடன்குர் குற்றஞ்சாட்டினார். குறிப்புகள் மேற்கோள்கள் வெளியிணைப்புகள் OCHA: Hostilities in Gaza and Israel, Flash Updates: #1, #2, #3, #4, #5, #6, #7, #8, #9, #10, #11, #12, #13, #14, #15, #16, #17, #18, #19, #20 UNRWA: Gaza Situation Reports: #1, #2, #3, #4 (11 Oct.), #5 (12 Oct.), #6 (15 Oct.), #7 (16 Oct.), #8 (18 Oct.), #9 (19 Oct.) 2023 நிகழ்வுகள் இசுரேலியப் போர்கள் மற்றும் முரண்பாடுகள் காசாக்கரை பாலஸ்தீனம்
596116
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
துத்தநாக பைரோபாசுபேட்டு
துத்தநாக பைரோபாசுபேட்டு (Zinc pyrophosphate) என்பது Zn2P2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். Zn2+ நேர்மின் அயனியும் பைரோபாசுபேட்டு எதிர்மின் அயனியும் சேர்ந்து இந்த சேர்மம் உருவாகிறது. தயாரிப்பு துத்தநாக அமோனியம் பாசுபேட்டு வெப்பத்தால் சிதவைடையும் போது துத்தநாக பைரோபாசுபேட்டு உருவாகிறது. 2 ZnNH4PO4 → Zn2P2O7 + 2 NH3 + H2O சோடியம் கார்பனேட்டு, துத்தநாக ஆக்சைடு, அமோனியம் ஈரைதரசன் பாசுபேட்டு ஆகிய சேர்மங்கள் ஒன்றாகச் சேர்ந்து வினைபுரிந்தாலும் துத்தநாக பைரோபாசுபேட்டு உருவாகிறது. Na2CO3 + 2 ZnO + 2 (NH4)H2PO4 → Zn2P2O7 + 2 NaOH + 2 NH3 + 2 H2O + CO2 துத்தநாக சல்பேட்டின் வலிமையான அமிலக் கரைசலுடன் சோடியம் பைரோபாசுபேட்டைச் சேர்த்து சூடுபடுத்தினால் துத்தநாக பைரோபாசுபேட்டு உருவாகிறது. 2 ZnSO4 + Na4P2O7 → Zn2P2O7 + 2 Na2SO4 பண்புகள் துத்தநாக பைரோபாசுபேட்டு வெண்மை நிறத்தில் படிகங்களாகக் காணப்படுகிறது. தண்ணீரில் இது கரையாது. தண்ணீர் சேர்த்து சூடாக்கும்போது, துத்தநாக பைரோபாசுபேட்டு சிதைந்து Zn3(PO4)2 மற்றும் ZnHPO4 ஆகிய சேர்மங்களாக மாறுகிறது. ஒற்றைச் சரிவச்சு படிக அமைப்பில் இது படிகமாகிறது. α-வடிவம் குறைந்த வெப்பநிலையிலும் β-வடிவம் அதிக வெப்பநிலையிலும் படிகமாகின்றன. பயன்கள் துத்தநாக பைரோபாசுபேட்டு ஒரு நிறமியாகப் பயன்படுத்தப்படுகிறது. துத்தநாகத்தின் எடையறி பகுப்பாய்வில் இது பயனுள்ளதாக இருக்கும். மேற்கோள்கள் துத்தநாக சேர்மங்கள் பைரோபாசுபேட்டுகள்
596117
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D
இராவ் தன் சிங்
தன் சிங் யாதவ் (Dan Singh Yadav) (பிறப்பு 9 மே 1959) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் மகேந்திரகர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். தன் சிங் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். ஜெய்ப்பூரில் உள்ள எல்பிஎஸ் கல்லூரியின் தலைவராகவும், அரியானா பிரதேச இளைஞர் காங்கிரசின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். இவர் 2000, 2005, 2009 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தனிப்பட்ட வாழ்க்கை சிங் 1959 இல் பஹ்லாத் காரில் பிறந்தார். இவர் சண்டிகர் மற்றும் ஜெய்ப்பூரில் கல்வி கற்றார். இவர் முதுகலைப்பட்டம், முதுகலை நிர்வாகவியல் பட்டம் மற்றும் சட்ட மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார், சட்டத்தில் இளங்கலைப்பட்டம் அத்துடன் தொழிலாளர் சட்டத்தில் பட்டயப்படிப்பு ஆகியவற்றை முடித்தார். இவர் சந்தியா சிங்கை மணந்தார், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது மகன், அக்சஷத் சிங் யாதவ், அரியானா அரசாங்கத்தின் கேபினட் அமைச்சர், ராவ் நர்பீர் சிங்கின் மகளை மணந்தார். அரசியல் வாழ்வின் வரைபடம் 2000 – ச.ம.உ (மகேந்திரகர் தொகுதி) 2005 – ச.ம.உ (மகேந்திரகர் தொகுதி) 2009 – ச.ம.உ (மகேந்திரகர் தொகுதி) 2012 முதல் - தலைவர், அரியானா கால்பந்து சங்கம் 2019 - ச.ம.உ (மகேந்திரகர் தொகுதி) 2012 முதல் - துணைத் தலைவர், அரியானா ஒலிம்பிக் சங்கம் மேற்கோள்கள் புற இணைப்புகள் Official Website Rao Dan Singh on Facebook 1959 பிறப்புகள் வாழும் நபர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் அரியானா அரசியல்வாதிகள்
596123
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D
ஜிஷ்ணு ராகவன்
ஜிஷ்ணு ராகவன் அலிங்கில் (23 ஏப்ரல் 1979 – 25 மார்ச் 2016),  ஜிஷ்ணு என்ற பெயரில் அறியப்படுபவர், முக்கியமாக மலையாளத் திரைப்படங்களில் தோன்றிய இந்திய நடிகர் ஆவார். இவர் நடிகர் இராகவனின் மகன். இவர் தனது முதல் படமான நம்மால் (2002) மூலம் பிரபலமானவர்,  இதற்காக சிறந்த நடிகருக்கான கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விருதையும் சிறந்த ஆண் அறிமுகத்திற்கான மாத்ருபூமி திரைப்பட விருது விருதையும் பெற்றார். இவரது கடைசி படம் டிராஃபிக் (2016). ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி ஜிஷ்ணு திரைப்பட நடிகரும் இயக்குனருமான ராகவன்  மற்றும் சோபாவின் மகன் ஆவார். தனது பள்ளிப் படிப்பை சென்னையிலும் பின்னர் திருவனந்தபுரத்தில் உள்ள பாரதிய வித்யா பவனிலும் முடித்தார். தேசிய தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றர். நடிப்பு வாழ்க்கை 1987; 2002–2006: அறிமுகம் மற்றும் முன்னேற்றம் ஜிஷ்ணு முதன்முதலில் 1987 ஆம் ஆண்டு தனது தந்தை இயக்கிய கிளிபாட்டு  திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றினார் , அது இந்திய பனோரமாவிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. கமல் இயக்கிய புதுமுக சித்தார்த் பரதன் , பாவனா மற்றும் ரேணுகா மேனன் நம்மால்  திரைப்படத்தில் கதாநாயகனாக இவர் மலையாளத் திரையில் அறிமுகமானார். இது வணிக ரீதியாக இவருக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. இப்படத்தில் இவரது நடிப்பு இவருக்கு கேரள திரைப்பட விமர்சகர்கள் விருதையும் சிறந்த அறிமுக நடிகருக்கான மாத்ருபூமி திரைப்பட விருதையும் வென்றது. வளத்தோட்டத் திரிஞ்சால் நலமாதே வீடு , சூண்டா , சுதந்திரம் , பராயம் , இரு சக்கர வாகனம் மற்றும் ஞானம் ஆகிய படங்களில் இவரது வாழ்க்கைத் தொடரானது . பின்னர் இவர் நேரரியன் சிபிஐ , பௌரன் , யுகபுருஷன் மற்றும் திலீபுடன் இணைந்து சக்கர முத்து  ஆகியவற்றில் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்தார் . 2012–2014: இடைவெளி மற்றும் மறுபிரவேசம் சில அங்கீகாரம் பெறாத படங்களுடன், கிராமப்புறங்களில் தகவல் தொழில்நுட்பத்தை வளர்ப்பதில் பணியாற்றுவதற்காக திரைப்படத் துறையில் இருந்து ஓய்வு எடுத்தார். பின்னர் இவர் திரைப்படத் துறைக்குத் திரும்பி, நித்ரா , ஆர்டினரி , பேங்கிங் ஹவர்ஸ் 10 முதல் 4  மற்றும் உஸ்தாத் ஹோட்டலில் கெஸ்ட் ரோலில் துணை வேடங்களில் நடித்தார். பிரபுவின்டே மக்கள் படத்தில் நடிக்க முன்வந்தார். 2013 இல், இவர் அன்னும் இன்றும் என்னும்  மற்றும் ரெபேக்கா ஊதுப் கிழக்கேமல ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். இவர் மும்பையில் உள்ள பேரி ஜான் தியேட்டர் ஸ்டுடியோவில் நடிப்பதிலும் பரிசோதனை செய்தார். அதே ஆண்டில், இவர் தனது தந்தை ராகவன் மற்றும் வினீத், சித்தார்த்த சிவா ஆகியோருடன் , இந்தியன் காபி ஹவுஸ், மிஸ்பிட்  மற்றும் ஐபோன் உடன் ஒப்பந்தம் செய்தார். ஆனால் இந்த படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்படவில்லை. அப்போது இவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. 2014. 2014–2016: உடல்நலக் கோளாறு மற்றும் இறுதிப் படம் புற்றுநோயுடன் இவரது முதல் போரில், இவரது நண்பர்கள் ஸ்பீச்லெஸ் என்ற குறும்படத்தை உருவாக்கினர். இது ஒரு கல்லூரி விரிவுரையாளரைப் பற்றியது, இவருடைய வாழ்க்கை புற்றுநோயால் கடுமையாக மாறிவிட்டது. இந்த குறும்படத்தில் ஜிஷ்ணுவின் நண்பரான திரைப்பட தயாரிப்பாளர் ஷஃபிர் சைத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது சிகிச்சை தொடரும் முன், இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான கள்ளப்படம் திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார் மற்றும் அது நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இவர் 2016 இல் வெளியான டிராஃபிக்  திரைப்படத்தில் எதிர்மறையான பாத்திரத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார் மற்றும் இது இவரது கடைசி படமாகும். இவர் ஆதர்ஷ் பாலகிருஷ்ணாவுடன் கர்மா கேம்ஸ்  என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார். இது 2013 இல் படமாக்கப்பட்டது. மேலும், 2017 இல் வெளியிடப்பட்டது. இதில் இயக்குனராக அறிமுகமானார். இந்த குறும்படத்தை வெளியிட்டு ஆதர்ஷ் பாலகிருஷ்ணா ஜிஷ்ணுவுக்கு அஞ்சலி செலுத்தினார். தனிப்பட்ட வாழ்க்கை கல்லூரியில் இவருடன் படித்த கட்டிடக் கலைஞர் தன்யா ராஜனை காதலித்து 2007 இல் திருமணம் செய்து கொண்டார்.'' இறப்பு ஜிஷ்ணுவுக்கு 2014 இல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. 2015 இல் தனது 36 வயதில் 2016 மார்ச் 25 அன்று கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். திரைப்படவியல் திரைப்படங்கள் குறும்படங்கள் விருதுகள் குறிப்புகள் வெளிப்புற இணைப்புகள் 1979 பிறப்புகள் 2016 இறப்புகள் மலையாளத் திரைப்பட நடிகர்கள் தமிழ்த் திரைப்பட நடிகர்கள் இந்தித் திரைப்பட நடிகர்கள் புற்றுநோயால் இறந்தவர்கள்
596135
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
ஈனாத்து பாலம்
ஈனாத்து பாலம் (Enathu Bridge) இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ளது. பிரதான மத்திய சாலையில் உள்ள முக்கிய பாலங்களில் இதுவும் ஒன்றாகும். கேரளாவின் ஈனாத்து கிராமத்தில் இந்த பாலம் அமைந்துள்ளது. கொல்லம் மாவட்டத்தை பத்தனம்திட்டா மாவட்டத்துடன் இப்பாலம் இணைக்கிறது. கல்லாடா ஆற்றின் மீது 2017 ஆம் ஆண்டில் ஈனாத்து பாலம் கட்டப்பட்டது. வரலாறு ஈனாத்து கிராமத்தில் முதல் பாலம் 1900 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.. 1990 ஆம் ஆண்டுகளில் இந்தப் பாலம் பழமையானதாகக் கண்டறியப்பட்டது மற்றும் 1998 ஆம் ஆண்டில் பி.ஜே. ஜோசப் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது மூன்றாம் நாயனார் காலத்தில் புதிய கற்காரை பாலம் கட்டப்பட்டது. 2017 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் இந்தப் பாலத்தில் விரிசல்கள் கண்டறியப்பட்டு, பராமரிப்புக்காக மூடப்பட்டது. 2017 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 31 ஆம் தேதியில் பாலம் பொது போக்குவரத்திற்காக மீண்டும் திறக்கப்பட்டது. பாலத்தின் மறு கட்டுமானத்தின் போது, அடூர் மற்றும் கொட்டாரக்கரை இடையே போக்குவரத்தை எளிதாக்க ஈனாத்துவில் தற்காலிக பெய்லி பாலத்தை இந்திய இராணுவம் அமைத்தது. மேலும் காண்க கோசுரி பாலங்கள் மேற்கோள்கள் கேரளத்தில் உள்ள பாலங்கள்
596139
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF
சகோதரிப் பள்ளி
ஒரு சகோதரிப் பள்ளி (sister school) அல்லது சகோதரப் பள்ளி என்பது பொதுவாக ஒரு ஜோடி பள்ளிகளாக இருக்கும். பொதுவாக ஒற்றைப் பாலின பள்ளியாக இருக்கும், அதில் ஒன்று பெண் மாணவர்களுடனும் மற்றொன்று ஆண் மாணவர்களுடனும் இருக்கும். இந்த முறையின் மூலம் இரண்டு பள்ளிகளும் பயனடைகிறது. உதாரணமாக, ஆர்வர்டு பல்கலைக்கழகம் ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியாக இருந்தபோது, ராட்கிளிஃப் பல்கலைக்கழகம் அதன் சகோதரப் பள்ளியாக இருந்தது. பாலியல் சார்பு மற்றும் பாகுபாடு பற்றிய விழிப்புணர்வு காரணமாக 1970 களில் தொடங்கி பல நிறுவனங்கள் இருபாலர் கல்வி சூழலை ஏற்றுக்கொண்டதால் ஒரு பாலினப பள்ளி என்ற சகோதரப் பள்ளி தொடர்பான கருத்து மாறத் தொடங்கியது. பின்னணி சகோதரிப் பள்ளி (அல்லது சகோதரர் பள்ளி ) என்ற சொல்லுக்கு பல மாற்று அர்த்தங்கள் உள்ளன: இரண்டு கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஒரு திட்டவட்டமான நிதி வர்த்தகத்தை உள்ளடக்கியிருக்கும் வலுவான வரலாற்று தொடர்பைக் கொண்ட இரண்டு பள்ளிகளாக இருக்கலாம். இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை உள்ளடக்கிய சமூக செயல்பாடுகளைக் கொண்ட இரண்டு பள்ளிகள். ஒரே நிர்வாகத்தின் கீழ் இரண்டு பள்ளிகள். ஒரே தளத் திட்டம்/தளவமைப்பைப் பயன்படுத்தி கட்டப்பட்ட இரண்டு பள்ளிகள். சான்றுகள் வெளி இணைப்புகள் Dictionary definition A collaborative international partnership பள்ளி சொல்லியல்
596142
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81
பெண்ணம்மா இயாக்கோபு
பென்னம்மா இயாக்கோபு (Pennamma Jacob) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1927 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1970 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை மூவாட்டுபுழா சட்டமன்றத் தொகுதியில் கேரள சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். இவர் ஒரு சுயேச்சை வேட்பாளராக இருந்தார். பென்னம்மா இயாக்கோபு தனது பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். 17 வயதில் பள்ளி ஆசிரியராக இருந்த பி.டி. இயாக்கோபை மணந்து கொண்டார். இவர் டி.எம். இயாக்கோப்பின் மாமியார் என்றும் அறியப்படுகிறார். 1998 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதியன்று பென்னம்மா இயாகோபு இறந்தார். மேற்கோள்கள் 1927 பிறப்புகள் 1998 இறப்புகள் கேரள அரசியல்வாதிகள் பெண் அரசியல்வாதிகள்
596144
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
கஜ்ரானா கணேஷ் கோயில்
கஜ்ரானா கணேஷ் கோயில் (Khajrana Ganesh Temple) என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசம் - இந்தூரில் கஜ்ரானா பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்து கோயில் ஆகும். இந்த கோயில் விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது ஹோல்கர் வம்சத்தின் மகாராணி அஹில்யாபாய் ஹோல்கரால் கட்டப்பட்டது. வரலாறு இந்த கோயில் 1735 ஆம் ஆண்டு ஹோல்கர் வம்சத்தின் மகாராணி அஹில்யாபாய் ஹோல்கரால் கட்டப்பட்டது, இவர் முகலாய ஆட்சியாளர் ஔரங்கசீப்பிடம் இருந்து பாதுகாக்க வேண்டி, கிணற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை மீட்டார் என்று இந்த கோயிலின் வரலாறு அறியப்படுகின்றது. இங்கு, பக்தர்கள் கோயிலை சுற்றி வந்து, விநாயகப் பெருமானிடம் தங்கள் பணியை வெற்றிகரமாக முடிப்பதற்காக ஒரு நூல் கட்டி பிரார்த்தனை செய்கிறார்கள். கோயிலில் உள்ள பழமையான சிலை உள்ளூர் பூசாரியான பண்டிதர் மங்கல் பட் என்பவரின் கனவில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயில் இன்றும் அவரின் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது. வளர்ச்சி ஒரு சிறிய குடிசையில் இருந்து ஒரு பெரிய வளாகமாக, இந்த கோயில் பல ஆண்டுகளாக நிறைய வளர்ந்துள்ளது. கோயிலுக்கு தொடர்ந்து பணம், தங்கம், வைரம் மற்றும் பிற விலையுயர்ந்த நகைகள் நன்கொடை வடிவில் பெறப்படுகின்றன. கர்ப்பகிரகத்தின் வாயில், வெளி மற்றும் மேல் சுவர்கள் வெள்ளியால் ஆனவை. மேலும், அதில் வெவ்வேறு மனநிலைகள் மற்றும் திருவிழாக்கள் குறித்த சிற்பங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் நன்கொடையாகக் கொடுத்த வைரங்களால் கடவுளின் கண்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த கோயில், இந்தூர் மாவட்ட அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் பூசாரிகள் மாத சம்பளத்தில் உள்ளனர். கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளும் எளிதில் செல்லக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பிள்ளையார் கோயில்கள்
596146
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
தட்சிணாமூர்த்தி தோத்திரம்
தட்சிணாமூர்த்தி தோத்திரம் ( Dakshinamurti Stotra ) என்பது ஆதி சங்கரரால் சிவனுக்கு அர்பணிக்கப்பட்ட ஒரு சமசுகிருத சமயப் பாடலாகும். இது அத்வைத வேதாந்தத்தின் அடிப்படையில் பிரபஞ்சத்தின் மனோதத்துவத்தை விளக்குகிறது. விளக்கம் இந்து புராணங்களில், தட்சிணாமூர்த்தி என்பது அறிவின் உயர்ந்த கடவுளான சிவனின் அவதாரம் எனப்படுகிறது. தட்சிணாமூர்த்தி என்பவர் அனைத்து வகையான அறிவின் குருவாகவும், ஞானத்தை அளிப்பவராகவும் இருக்கிறார். சிவனின் இந்த அம்சம் தான் உயர்ந்த அல்லது இறுதி விழிப்புணர்வு, புரிதல் மற்றும் அறிவு என அவரது உருவக அமைப்பு உள்ளது என்று கருதப்படுகிறது. இந்த வடிவம் யோகம், இசை மற்றும் ஞானத்தின் ஆசிரியராகவும், சாத்திரங்கள் பற்றிய விளக்கத்தை அளிப்பவராகவும் சிவனை அவரது அம்சத்தில் பிரதிபலிக்கிறது. இந்துக் கடவுள்களின் பெரும்பாலான பாடல்களைப் போலல்லாமல், இவை மானுட வடிவங்கள் அல்லது அந்தக் கடவுள்களின் புராணச் செயல்களின் விவரிப்பு வடிவத்தில் உள்ளன. இது கருத்தியல் மற்றும் தத்துவ அறிக்கைகளின் வடிவத்தை உரைக்கிறது. புலன்களின் பன்முகத்தன்மையின் நடுவில் உள்ள ஆன்மாவின் ஒருமைப்பாட்டின் விளக்கத்தை அதன் வசனங்கள் வழங்குகின்றன. இதனையும் காண்க சிவ மஹிம்னா ஸ்தோத்ரம் சிவ தாண்டவ ஸ்தோத்ரம் ஹயக்ரீவ ஸ்தோத்ரம் மேற்கோள்கள் அத்வைத வேதாந்த தத்துவம் சமசுகிருத நூல்கள்
596147
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2C%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
வேதநாராயண பெருமாள் கோயில், திருநாராயணபுரம்
வேதநாராயணப் பெருமாள் கோயில் (Vedanarayana perumal temple) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும், இது வேதநாராயணனாக - விஷ்ணுவிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு, மகாவிஷ்ணு நான்கு வேதங்களைத் தலையணையாகக் கொண்டு சாய்ந்த நிலையில் பிரம்மாவுக்கு வேதங்களைக் கற்பித்து அருள்பாலிக்கிறார். இந்த கட்டிடம் திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது, இது இடைக்கால சோழர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. தினசரி ஆறு சடங்குகள் மற்றும் 12 ஆண்டு விழாக்கள் இங்கு நடத்தப்படுகின்றன, இதில் தமிழ் மாதமான சித்திரையில் (மார்ச்-ஏப்ரல்) கொண்டாடப்படும் தேர் திருவிழா மிகவும் முக்கியமானது. கோவில் காலை 6 மணி முதல் இரவு 7:30 மணி வரை திறந்திருக்கும். இது தமிழ்நாடு அரசின் இந்து சமய மற்றும் அறநிலையத் துறையால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. புராணம் ஒருமுறை பிரம்மா உயிர்கள் எல்லாவற்றையும் படைத்ததால் அகங்காரம் கொண்டார். மஹா விஷ்ணு அவருக்கு பாடம் கற்பிக்க விரும்பினார், அதனால் அவர் விஸ்வகர்மாவின் உதவியுடன் ஒரு அபிமான சிலையை உருவாக்கினார், பிரம்மா, இந்த அற்புதமான சிலையை யாரால் உருவாக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டார். மகா விஷ்ணு பிரம்மாவை வேதங்களை மறக்கச் செய்தார். எனவே பிரம்மா விஷ்ணுவிடம் சென்று உதவிக்காக மன்றாடினார், பின்னர் மகா விஷ்ணு, பிரம்மாவின் அகங்காரத்தைப் போக்கி, நான்கு வேதங்களையும் தலையணையாக வைத்து பிரம்மாவிடம் விரிவாக விளக்கினார் என்று புராணம் தெரிவிக்கிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள் வைணவ தலங்கள்
596149
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
பிரிகையுறும் விகிதம்
வேதியியல், உயிர்வேதியியல் மற்றும் மருந்தியல் ஆகியவற்றில் பிரிகையுறும் விகிதம் (Dissociation rate) என்பது ஒரு புரதத்திலிருந்து ஒரு ஏற்பிணைப்பி பிரியும் விகிதம் அல்லது வேகம் ஆகும். இது ஒரு ஏற்பியில் உள்ள ஏற்பிணைப்பியின் பிணைப்பு தொடர்பு மற்றும் உள்ளார்ந்த செயல்திறன் ஆகியவற்றில் ஒரு முக்கியக் காரணியாகும்.ஒரு குறிப்பிட்ட வினை மூலக்கூறுக்கான பிரிகையுறும் வீதம் மைக்கேலிசு-மென்டென் மாதிரி உட்பட நொதி இயக்கவியலுக்குப் பயன்படுத்தப்படலாம். நொதியின் வேகம் எவ்வளவு பெரியதாக அல்லது சிறியதாக இருக்கும் என்பதற்கு வினைப்பொருள் மூலக்கூறு பிரிகையுறு விகிதம் பங்களிக்கிறது. மைக்கேலிசு-மென்டென் மாதிரியில், என்சைம் அடி மூலக்கூறுடன் பிணைந்து ஒரு நொதி அடி மூலக்கூறு அணைவுச் சேர்மத்தை அளிக்கிறது. இது பிரிகையுறுவதன் மூலம் பின்னோக்கிச் செல்லவோ அல்லது ஒரு விளைபொருளை உருவாக்குவதன் மூலம் முன்னோக்கிச் செல்லவோ செய்யலாம். பிரிகையுறுதல் விகிதம் மாறிலி K off ஐப் பயன்படுத்தி வரையறுக்கப்படுகிறது. மைக்கேலிசு-மென்டென் மாறிலி K m ஆல் குறிக்கப்படுகிறது. மேலும், K m என்பது சமன்பாடு K m = (K off + K cat )/ K on ஆல் தரப்பட்டுள்ளது. நொதி அடி மூலக்கூறிலிருந்து பிணைக்கும் மற்றும் பிரிக்கும் விகிதங்கள் முறையே K on மற்றும் K offஆகியவற்றால் குறிக்கப்படுகின்றன. K m என்பது அடி மூலக்கூறு செறிவு என வரையறுக்கப்படுகிறது, இதில் நொதியின் வேகம் அதன் அதிகபட்ச விகிதத்தில் பாதியை அடையும். ஒரு ஏற்பிணைப்பி ஒரு அடி மூலக்கூறுடன் எவ்வளவு இறுக்கமாக பிணைக்கப்படுகிறதோ, அவ்வளவு குறைவாக பிரிகையுறு விகிதம் இருக்கும். K m மற்றும் K off ஆகியவை நேர் விகிதத்தில் உள்ளன. இதனால் அதிக அளவிலான பிரிகையுறல்களில், மைக்கேலிசு-மென்டன் மாறிலி பெரியதாக இருக்கும். மேற்கோள்கள் சமநிலை வேதியியல்
596152
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%87
பிரகாசு தாககே
பிரகாசு தாககே (Prakash Dahake) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பிரகாசு உத்தம்ராவ் தாககே என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் மகாராட்டிரா சட்டமன்றத்தின் கரஞ்சா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் இராசேந்திர பட்னியை 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் பிரகாசு தாககே தோற்கடித்தார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், இராசேந்திர பட்னி 2004 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இவரை மீண்டும் தோற்கடித்தார். அப்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் தேசியவாத கட்சியில் போட்டியிட தொகுதியைக் கூட பிரகாசு தாககேவால் பெற முடியவில்லை. அதனால் 2014 ஆம் ஆண்டு தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு இவர் தள்ளப்பட்டார். பிரகாசு தாககே போட்டியிட்ட 5 சட்டமன்றத் தேர்தல்களில் 4 தேர்தல்களில் தோல்வியடைந்து ஒருமுறை மட்டுமே அவரால் வெற்றிபெற முடிந்தது. 2021 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதியன்று பிரகாசு தாககே இறந்தார். மேற்கோள்கள் வாழும் நபர்கள் மகாராட்டிர அரசியல்வாதிகள் 2021 இறப்புகள் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்கள்
596153
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D
சிந்துபாத்
Short description is different from Wikidata சிந்துபாத் 2019ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி காதல், அதிரடி, திகில் திரைப்படமாகும். இது எஸ் யூ அருண் குமார் இயக்கித்தில், எஸ் என் ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன், வான்சன் மூவிஸ் மற்றும் K புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவானது. இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லிங்கா, விவேக் பிரசன்னா மற்றும் சூரியா விஜய் சேதுபதி ஆகியோர் துணை வேடங்களில் தோன்றியுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்துக்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார். கதைச்சுருக்கம் காதுகேளாத சிறுநேர தில்லுமுல்லு பேர்வழியான திரு தனது எடுபிடி சூப்பர் என்பவனுடன் சேர்ந்து பலரிடமிருந்து பணம், மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை திருடுகிறான். திரு, வெண்பா என்ற கத்திப் பேசும் பெண்ணைச் சந்தித்து அவளைக் நேசிக்கிறான். ஆரம்பத்தில் தயங்கிய வெண்பா, தானும் அவனை நேசிக்கிறாள். வெண்பா வேலை நிமித்தமாக மலேசியா செல்வதற்கு முன்பு விமான நிலையத்திலேயே திரு அவளை மணந்து கொள்கிறான். வெண்பாவின் மாமா ஒரு பெரும் தொகை பெற்றுக்கொண்டு தன்னை தோல் வியாபாரத்திற்கு விற்றதை வெண்பாவிடமிருந்து வந்த அழைப்பின் மூலம் திரு அறிகிறான். தன்னைக் காப்பாற்ற தாய்லாந்துக்கு வருமாறு வெண்பா திருவைக் கேட்டுக்கொள்கிறாள். திரு தனக்கு ஹக்கீம் சிந்துபாத் என்ற பெயரிலும் சூப்பருக்கு மிலன் பார்தி என்ற பெயரிலும் இரண்டு பாஸ்போர்ட்டுகளைப் பெறுகிறான். தாய்லாந்து செல்லும் வழியில், தனது மகளைப் சந்திக்க அவர்கள் சென்ற அதே இடத்திற்கு செல்லும் மற்றொரு பயணியை சந்திக்கின்றனர். மலேசிய காவல்துறையுடன் பிரச்சினையில் சிக்குகிறான் திரு. வெண்பாவைக் காப்பாற்றுவதற்காக, மலேசிய குண்டன் சாங்கின் இரண்டாவது கை கைத்தடியான லிங்கின் வீட்டில் இருந்து சில கேடயங்களைத் திருட ஒப்புக்கொள்கிறான் திரு. ஆனால், திரு லிங்கிடம் சிக்கிக் கொள்ளவே அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியில் ஒரு குன்றிலிருந்து குதிக்கும் முன் திரு லிங்கைத் துப்புகிறான். தப்பிக்க முயலும் வெண்பா பிடிபட்டு லிங்கிடம் அனுப்பப்படுகிறாள். இது லிங்கிற்கு எதிரான ஆதாரங்களை சேகரிப்பதற்காக கேடயங்களைத் திருடியதன் பின்னணியைக் கூறும் காவல்துறை அதிகாரியால் திருவுக்குத் பின்னர் தெரியவந்தது. திரு, சாங்கை கொலை செய்து லிங்கின் வீட்டைத் தகர்த்து, அங்கு அடைபட்டிருந்த அனைத்து பெண்களையும் தோல் வர்த்தகத்திலிருந்து மீட்டு வெண்பாவுடன் வீடு திரும்புகிறான். நடிகர்கள் விஜய் சேதுபதி திருவாக (ஹக்கிம் சிந்துபாத்) வெண்பாவாக அஞ்சலி லிங்கமாக லிங்கம் பயணியாக விவேக் பிரசன்னா சூர்யா விஜய் சேதுபதி சூப்பராக (மிலன் பாரதி) ஆதரவு ராஜாவாக அருள்தாஸ் அரசியல்வாதியாக சௌந்தரராஜா திருவின் மாமாவாக ஜார்ஜ் மரியன் சாங் ஒரு மலேசிய டான் தயாரிப்பு விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் மற்றொரு திரைப்படத்தை எஸ் யூ அருண் குமார் இயக்க உள்ளார் என்பதை 2018 மார்ச்சில் வெளிப்படுத்தி, ஜூலை 2018இல் அதிகாரப்பூர்வமாக இந்த படம் தயாரிப்புக்கு தயாராக உள்ளது என்பதை விஜய் சேதுபதி மற்றும் நடிகை அஞ்சலி முன்னிலையில் உறுதிப்படுத்தப்பட்டது. இலங்கை பாடலாசிரியர் ராகுல்ராஜ் நடராஜாவின் பாடல் வரிகளையும் கொண்ட இப்படத்திற்கு இசையமைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா. பிரதான ஒளிப்பதிவு 25 மே 2018 அன்று தென்காசியில் 20 நாட்களுக்குத் தொடங்கி, பின்னர் தாய்லாந்தில் 32 நாள் நீண்ட அட்டவணையுடன் தொடர்ந்தது. வெளியீடு திரைப்படத்தின் முதல் பார்வை சுவரொட்டி 16 சனவரி 2019 அன்று சிந்துபாத் என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டது. படம் 27 சூன் 2019 அன்று வெளியிடப்பட்டது. படத்தின் செயற்கைக்கோள் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் ஜீ தமிழ் மற்றும் ஜீ5 நிறுவனங்களுக்கு விற்கப்பட்டது. ஒலிப்பதிவு யுவன் ஷங்கர் ராஜா ஒலிப்பதிவு செய்துள்ளார். இசை உரிமையை Muzik247 வாங்கியுள்ளது. வரவேற்பு விமர்சன மறுமொழி தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் எம். சுகந்த் 3/5 நட்சத்திரங்களைக் கொடுத்து, "சிந்துபாத் அருண் குமாரின் முந்தைய படங்களைப் போல திருப்தியளிப்பதாக இல்லை, இருப்பினும் அது முழுக்க முழுக்க மந்தமாகவும் இல்லை" என்று எழுதினார். இந்தியா டுடே 2.5/5 நட்சத்திரங்களைக் கொடுத்து, "இயக்குனர் எஸ்.யு. அருண்குமாரின் சித்துபாத் ஒரு திருப்திகரமான திகில்படமாக இருந்திருக்கலாம், ஆனால் அவர், படத்தில் பல யோசனைகளை வைத்துள்ளார். அருண்குமார் மட்டும் சில பக்கவாட்டுக் கதைகளை நீக்கி, சில தர்க்கரீதியான ஓட்டைகளைச் அடைத்தும் இருந்தால், சிந்துபாத் ஒரு சிறந்த திரைப்படமாக இருந்திருக்கும்." ஹிந்துஸ்தான் டைம்ஸின் கார்த்திக் குமார் 2/5 நட்சத்திரங்களை அளித்து எழுதினார் "தனது முந்தைய படங்களான பண்ணையாரும் பத்மினியும் மற்றும் சேதுபதி போன்றவை மூலம் இயக்குனர் அருண் குமார் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தவர். முழுமையான செயல் அல்லது நகைச்சுவை இல்லாத ஒரு திரைப்படத்தை, அதன் குறைபாடுகளை கண்காணிக்கும் அளவுக்கு நமக்கு கொடுக்க போராடுகிறார். முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் நடிப்பு இல்லையேல் சிந்துபாத் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருக்கும்." தி இந்துவின் பிரதீப் குமார் எழுதினார் " சிந்துபாத் ஒரு சாதாரண விஜய் சேதுபதியை, அவரது சூப்பர் டீலக்ஸ் சுரண்டல்களை புதிதாக திரையில் பிடிக்க விரும்பினால், சிந்துபாத்தை ஒரு முறை பார்க்க வேண்டும். ஆனால் இது உங்கள் திரையில் செல்லும் படம் அல்ல. சேதுபதியின் சிறந்த வசூல்." குறிப்புகள் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள திரைப்படங்கள் 2019 திரைப்படங்கள் 2019 தமிழ்த் திரைப்படங்கள்
596157
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D
சோயல் வில்சன்
சோயல் வில்சன் (ஜோயல் ஷெல்டன் வில்சன்) (பிறப்பு: டிசம்பர் 30, 1966) டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த ஒரு பன்னாட்டுத் துடுப்பாட்ட நடுவர் ஆவார். வில்சன் தற்போது மேற்கிந்திய தீவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்றட்டு நடுவர்களின் குழுவில் உறுப்பினராக உள்ளார். அவர் பனாட்டுத் துடுப்பாட்டத்தின் மூன்று வடிவங்களினான தேர்வுப் போட்டிகள், ஒரு நாள் பன்னாட்டுப் போட்டிகள் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய அனைத்துப் போட்டிகளிலும் நடுவராகக் கடமையாற்றுகிறார். நடுவர் தொழில் ஆத்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து நடாத்திய 2015 துடுப்பாட்ட உலகக் கோப்பையின் போது போட்டிகளில் நிற்க தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது நடுவர்களில் சோயல் வில்சன் ஒருவர் ஆவர். அந்தத் தொடரின் போது ஆத்திரேலியாவில் நடந்த மூன்று போட்டிகளில் கள நடுவராக வில்சன் பணியாற்றினார். சில மாதங்களுக்குப் பிறகு, வில்சன் தனது முதல் தேர்வுப் போட்டியில் 21-25 சூலை 2015 இல் சிட்டகாங்கில் வங்காளதேசத்துக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையேயான போட்டியில் நடுவராக நின்றார் ஏப்ரல் 2019 இல், 2019 துடுப்பாட்ட உலகக் கோப்பையின் போது போட்டிகளில் நிற்கும் பதினாறு நடுவர்களில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டார். ஜூலை 2019 இல், இயன் கோல்டின் ஓய்வு மற்றும் சுந்தரம் ரவி விலக்கப்பட்டதைத் தொடர்ந்து வில்சன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்றட்டு நடுவர் குழுவுக்கு உயர்த்தப்பட்டார். மேற்கோள்கள் வாழும் நபர்கள் 1966 பிறப்புகள் மேற்கிந்தியத் துடுப்பாட்ட நடுவர்கள்
596160
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
அனுமதிச் சீட்டு
அனுமதிச் சீட்டு (permission slip) என்பது ஒரு பள்ளி அல்லது பிற அமைப்பு ஒரு மாணவரிடம் களப்பயணம் செல்வதற்காக பெற்றோரிடம் அனுமதி பெறுவதற்காக வழங்கப்படும் படிவம் ஆகும். ஒரு அமைப்பு ஒரு மாணவரை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதற்கு, பல இடங்களில் சட்டப்படி அனுமதிச் சீட்டுகள் தேவைப்படுகின்றன. சிறுவர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களது பெற்றோர்களோ அல்லது சட்டரீதியிலான பாதுகாவலர்களோ இத்தகைய அனுமதியினை வழங்குவர். அனுமதி சீட்டில் காணக்கூடிய தகவலில் மாணவரின் பெயர், களப்பயணம் நிகழும் இடம் மற்றும் அவசரகாலத்திற்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண், முகவரி ஆகியவை அடங்கும். வயது வந்த மாணவர்களுக்கான விண்ணப்பம் சில பள்ளிகள் முதிர் அகவையர் மாணவர்களை தங்களது சொந்த அனுமதி சீட்டில் கையெழுத்திட அனுமதிக்கின்றன; மற்ற பள்ளிகள் மாணவரின் பெற்றோர் படிவத்தில் கையொப்பமிட வேண்டும் என்று கோருகின்றன. பல முதிர் அகவையர் மாணவர்கள் பெற்றோரின் கையொப்பத்திற்கான தேவையை எதிர்க்கிறார்கள், ஏனெனில் தாங்கள் தங்களுக்கு விருப்பமான நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு பெற்றோரிடம் சட்டரீதியாக எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை என கருதுகின்றனர். சான்றுகள் பள்ளி சொல்லியல்
596163
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
உத்தரப் பிரதேச சட்டமன்றம்
உத்தரப் பிரதேச சட்டமன்றம் என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் ஈரவை சட்டமன்றமாகும். இது ஆளுநர் மற்றும் மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளையும் கொண்டது. சட்டமன்றத்தின் தலைவராக ஆளுநர் தனது பங்கில் இருப்பதோடு, சட்டமன்றத்தை கூட்ட ஒத்திவைக்க அல்லது சட்டப் பேரவையை கலைக்க முழு அதிகாரம் கொண்டவர். முதலமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் மட்டுமே ஆளுநர் இந்த அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும். இலக்னோவில் உள்ள சட்டமன்ற கட்டிடத்தில் ஆண்டுக்கு 3 முறை சட்டமன்றம் கூடுகிறது. அமைப்பு உத்தரப் பிரதேச சட்டமன்றம், சட்டப் பேரவை மற்றும் சட்ட மேலவை ஆகிய இரண்டு அவைகளைக் கொண்டுள்ளது, அவைகளின் தலைவராக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநர் உத்தரப் பிரதேச ஆளுநர் சட்டமன்றத்தின் தலைவராக செயல்படுகிறார் மற்றும் மாநிலத்தின் அனைத்து செயலாட்சி, சட்டமன்ற மற்றும் விருப்ப அதிகாரங்களை அனுபவிக்கிறார். இந்திய மாநிலங்களின் ஆளுநர்கள் மத்திய அளவில் இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை மாநில அளவில் கொண்டுள்ளனர். 5 ஆண்டுகளுக்கு இந்தியக் குடியரசுத் தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுகிறார். சட்ட மேலவை சட்ட மேலவை அல்லது மேலவை கலைக்கப்பட முடியாத நிரந்தர அமைப்பாகும். உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒவ்வொரு இரண்டாவது ஆண்டும் ஓய்வு பெறுகிறார்கள் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் மாற்றப்படுகிறார்கள். சட்டப் பேரவை சட்டப் பேரவை அல்லது கீழவையில் 403 உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பொது வாக்குரிமையின் அடிப்படையில் மாநில குடிமக்களால் நேரடியாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பாலினம், சாதி, சமயம் அல்லது இனம் பாராமல், தகுதி நீக்கம் செய்யப்படாத, 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு இந்திய குடிமகனும், சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு வாக்களிக்கத் தகுதியுடையவர். இதற்கு ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. சட்டப் பேரவையில் உறுப்பினராகத் தகுதிபெற, ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும், மேலும் 25 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், மனநலம் நன்றாக இருக்க வேண்டும், திவாலாகி இருக்கக்கூடாது, குற்றவியல் தண்டனை பெற்றவராக இருக்கக்கூடாது. சட்டமன்றத்தின் அமர்வுகள் இரு அவைகளும் தங்கள் வேலையைச் செய்யச் சந்திக்கும் காலம் அமர்வு எனப்படும். இரண்டு அமர்வுகளுக்கும் இடையே ஆறு மாதங்களுக்கு மேல் இடைவெளி இருக்கக் கூடாது என்பதற்காக, ஒவ்வொரு அவையும் இவ்வளவு இடைவெளியில் கூட்டுவதற்கு ஆளுநருக்கு அஅரசியலமைப்பு அதிகாரம் அளிக்கிறது. எனவே சட்டமன்றம் ஆண்டுக்கு இரண்டு முறையாவது கூட்ட வேண்டும். இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்றமும் ஒவ்வொரு ஆண்டும் மூன்று அமர்வுகளை நடத்துகிறது: நிதியறிக்கை அமர்வு: சனவரி/பெப்ரவரி முதல் மே வரை பருவமழை அமர்வு: சூலை முதல் ஆகத்து/செப்டம்பர் வரை குளிர்காலம் அமர்வு: நவம்பர் முதல் திசெம்பர் வரை கூட்டம் நடைபெறும் இடம் மாநிலத்தின் தலைநகரான இலக்னோவில் உள்ள சட்டப் பேரவை பாதையில் அமைந்துள்ள சட்டமன்ற கட்டிடம் சட்டமன்றத்தின் இரு அவைகளின் இருக்கையாகவும் கூடும் இடமாகவும் செயல்படுகிறது. சட்ட மேலவையின் மூன்று கூட்டத்தொடர்களும் இங்கு மட்டுமே நடைபெறுகிறது. இந்த கட்டிடத்தை சாமுவேல் ஸ்விண்டன் ஜேக்கப் மற்றும் ஹீரா சிங் வடிவமைத்துள்ளனர்; சிங் கட்டிடத்தின் நீல அச்சுப்படியையும் வரைந்தார். இதையடுத்து கட்டிடம் கட்டுவதை பட்லர் கண்காணித்தார். ₹21 லட்ச (2020 இல் ₹36 கோடி அல்லது 4.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமம்) (1922 செலவு பணவீக்கத்திற்கு சரிசெய்யப்படவில்லை) செலவில் ஐந்து ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு மற்றும் 21 பிப்ரவரி 1928 அன்று திறக்கப்பட்டது. மேலும் பார்க்கவும் உத்தரப் பிரதேச சட்டப் பேரவை உத்தரப் பிரதேச சட்ட மேலவை யோகி ஆதித்தியநாத் இலக்னோ உத்தரப் பிரதேசம் மேற்கோள்கள் உத்தரப் பிரதேச அரசு இந்திய மாநிலங்களின் சட்டமன்றங்கள்
596166
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF
அமல் குமார் ராய்சவுதுரி
Articles with hCards அமல் குமார் ராய்சௌதுரி (Amal Kumar Raychaudhuri) (14 செப்டம்பர் 1923 - 18 ஜூன் 2005) ஒரு இந்திய இயற்பியலாளர் ஆவார், பொதுச் சார்புக் கோட்பாடு மற்றும் அண்டவியல் ஆராய்ச்சிக்காக அறியப்பட்டவர். இவரது மிக முக்கியமான பங்களிப்பானது, பெயரிடப்பட்ட ராய்சௌதுரி சமன்பாடு ஆகும், இது சார்பயன் ஒருமைப்புள்ளி தவிர்க்க முடியாமல் பொதுவான சார்பியலில் எழுகின்றன என்பதை நிரூபிக்கிறது மேலும், பென்ரோசு-ஆக்கிங் ஒருமைக் கோட்பாடுகளின் ஆதாரங்களில் இது ஒரு முக்கிய மூலப்பொருளாகும். கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் பணிபுரிந்த காலத்தில் ராய்சௌதுரி ஆசிரியராகவும் நன்கு மதிக்கப்பட்டவர் ஆவார். தொழில் ராய்சௌதுரி 1923 செப்டம்பர் 14 அன்று பரிசால் (தற்போது வங்காளதேசத்தில் ) இருந்து வந்த பைத்யா குடும்பத்தில் சுரபாலா மற்றும் சுரேஷ்சந்திர ராய்சௌதுரிக்கு பிறந்தார். இவரது குடும்பம் கொல்கத்தாவுக்கு குடிபெயர்ந்தபோது இவர் குழந்தையாக இருந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை தீர்த்தபதி நிறுவனத்தில் பெற்றார். பின்னர் கொல்கத்தாவில் உள்ள இந்து பள்ளியில் பத்தாம் வகுப்பை முடித்தார். 2005-ஆம் ஆண்டில் இவர் இறப்பதற்கு சற்று முன்பு எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தில், இவர் தனது பள்ளி நாட்களிலிருந்தே கணிதத்தில் மிகவும் ஆர்வமாக இருந்ததாகவும், பிரச்சனைகளைத் தீர்ப்பது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் என்றும் வெளிப்படுத்தியுள்ளார். கணிதப் பிரச்சினைக்கு எளிமையான தீர்வைக் கண்டுபிடித்ததற்காக 9 ஆம் வகுப்பு ஆசிரியர் தன்னை எவ்வாறு பாராட்டினார் என்பதை அவர் ஆவணப்படத்தில் நினைவு கூர்ந்துள்ளார். இவரது தந்தை ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக இருந்தார் என்பதும் இவருக்கு உத்வேகம் அளித்திருக்கலாம். அதே சமயம், இவரது தந்தை அவ்வளவு 'வெற்றி' பெறாததால், கல்லூரியில் தனது முதல் தேர்வான கணிதத்தை ஹானர்ஸ் பாடமாக எடுக்க மனம் துணியவில்லை. இவர் 1942-ஆம் ஆண்டில் பிரசிடென்சி கல்லூரியில் இருந்து இளங்கலை அறிவியல் பட்டத்தையும் மற்றும் 1944-ஆம் ஆண்டில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார். இவர் 1945-ஆம் ஆண்டில் இந்திய அறிவியல் வளர்ப்பு சங்கத்தில் (IACS) ஆராய்ச்சி அறிஞராக சேர்ந்தார். 1952 இல், இவர் இந்திய அறிவியல் வளர்ப்பு சங்கத்தில் (IACS) ஆராய்ச்சிப் பணியை மேற்கொண்டார், ஆனால் அவரது மன உளைச்சலின் காரணமாக பொது சார்பியலுக்குப் பதிலாக உலோகங்களின் பண்புகளில் பணியாற்ற வேண்டியிருந்தது. இந்த பாதகமான அழுத்தங்கள் இருந்தபோதிலும், சில ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இவரது பெயரிடப்பட்ட சமன்பாட்டை இவரால் பெறவும் வெளியிடவும் முடிந்தது. பென்ரோசு-ஆக்கிங் ஒருமைத் தேற்றங்களின் சான்றுகளில் ராய்சௌதுரி சமன்பாடு ஒரு முக்கிய அங்கமாகும். சில ஆண்டுகளுக்குப் பிறகு, பாஸ்குவல் ஜோர்டான் போன்ற குறிப்பிடத்தக்க இயற்பியலாளர்களால் அவரது 1955-ஆம் ஆண்டு கட்டுரை மிகவும் மதிக்கப்பட்டது என்பதை அறிந்த ராய்சௌதுரி ஒரு முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பிக்க போதுமான தைரியம் பெற்றார். மேலும், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் (ஆய்வாளர்களில் ஒருவருடன்) தனது அறிவியல் முனைவர் பட்டத்தைப் பெற்றார்., பேராசிரியர் ஜான் ஆர்க்கிபால்ட் வீலர் 1959-ஆம் ஆண்டில் செய்த பணிக்கான சிறப்புப் பாராட்டுகளைப் பதிவு செய்தார். 1961 ஆம் ஆண்டில், ராய்சௌதுரி தனது பழைய கல்லூரியான பிரசிடென்சி கல்லூரியின் ஆசிரியப் பணியில் சேர்ந்தார், பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்தார். மேலும், இவரது ஓய்வு பெறும் காலம் வரை அங்கேயே இருந்தார். இவர் 1970 களில் நன்கு அறியப்பட்ட அறிவியலாளராக ஆனார், மேலும், இவர் இறப்பதற்கு சற்று முன்பு முடிக்கப்பட்ட ஒரு குறும்பட ஆவணப்படத்தின் பொருளாக இருந்தார். மேற்கோள்கள் வங்காள இயற்பியலாளர்கள் 2005 இறப்புகள் 1923 பிறப்புகள்
596168
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87
வால்போனே
வால்போனே (Volpone) என்பது ஆங்கில நாடக ஆசிரியர் பென் ஜான்சனின் நகைச்சுவை நாடகமாகும். இது முதன்முதலில் 1605-1606-இல் எழுதப்பட்டது. இது நகர நகைச்சுவை மற்றும் விலங்குகளைக்கொண்டு எழுதப்படும் கட்டுக்கதையின் கூறுகளை விவரிக்கின்றது. பேராசை மற்றும் காமத்தை அதிகமாக நையாண்டி செய்யும் இந்த நாடகம் ஜான்சனின் மிகவும் அதிகமாக அரங்கேற்றப்பட்ட நாடகமாக உள்ளது. மேலும் ஜேகோபியன் கால நகைச்சுவை நாடகங்களில் இது ஒரு சிறந்த நகைச்சுவை நாடகமாக கருதப்படுகிறது. கதாபாத்திரங்கள் வால்போனே (தந்திரக்கார நரி) - ஒரு பேராசை கொண்ட மற்றும் பணக்கார குழந்தை இல்லாத வெனிஸ் நகரத்தை சேர்ந்த பெரிய மனிதர் மோஸ்கா (ஈ) - அவரது வேலைக்காரன் வோல்டோர் (கழுகு) - ஒரு வழக்கறிஞர் கார்பாசியோ (காக்கை) - ஒரு பேராசை கொண்ட பழைய கஞ்சன் பொனாரியோ - கோர்பாசியோவின் மகன் கோர்வினோ (கரியன் காகம்) - ஒரு வணிகர் செலியா - கோர்வினோவின் மனைவி சர் பொலிடிக் உட் பி - அபத்தமான ஆங்கிலேயர் லேடி உட்பி(கிளி) - ஆங்கில பெண்மணி மற்றும் சர் பொலிடிக் உட் பியின் மனைவி பெரெக்ரின் ("பில்கிரிம்") - மற்றொரு, மிகவும் நுட்பமான, ஆங்கிலப் பயணி நானோ - ஒரு குள்ளன், வால்போனின் துணை ஆண்ட்ரோஜினோ - ஒரு ஹெர்மாஃப்ரோடைட், வோல்போனின் துணை காஸ்ட்ரோன் - ஒரு திருநங்கை, வோல்போனின் துணை அவகேடோரி - வெனிஸின் நீதிபதிகள் மேற்கோள்கள் நாடகம் ஆங்கில நாடகங்கள் நகைச்சுவை நாடகம்
596169
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF
இருமுறைவேளைப் பள்ளி
இருமுறைவேளைப் பள்ளி (Double shift school) என்பது இரண்டு வேளைகளில் இயங்கும் ஒரு வகைப் பள்ளியாகும், ஒரு குழு மாணவர்கள் ஒரு நாளின் ஆரம்பத்திலும், இரண்டாவது குழு பிற்பகுதியிலும் கல்வி பயில்கின்றனர். கட்டிடங்கள் போதுமான அளவில் இல்லாத சமயத்திலும் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் சமயங்களில் கற்றலின் நேரத்தைக் குறைக்காமல் இருவேளைப் பள்ளி முறைகள் பின்பற்றப்படலாம். சான்றுகள் பள்ளி வகைகள்
596172
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF
மறைப்பணிப் பள்ளி
ஒரு மிஷன் பள்ளி அல்லது மறைப்பணிப் பள்ளி என்பது மறைப்பணியாளார்களால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் ஒரு மதப் பள்ளியாகும். மறைப்பணிப் பள்ளி பொதுவாக குடியேற்றவியக் காலத்தில் உள்ளூர் மக்களை மேலைமயமாக்கும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. இவை ஒருநாள் பள்ளிகளாகவோ அல்லது உறைவிடப் பள்ளிகளாகவோ இருக்கலாம் ( கனேடிய இந்திய குடியிருப்புப் பள்ளி அமைப்பில் உள்ளது போல). மறைப்பணிப் பள்ளிகள் 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவில் நிறுவப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை பல கண்டத்திலும் நீடித்தன. உள்ளூர் மக்களிடையே கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்கு புதிய ஆசிரியர்களையும் மதத் தலைவர்களையும் உருவாக்கும் நோக்கத்துடன் அதிகமான மத அணுகுமுறையைக் கொண்டிருந்தன. அவர்கள் கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சிகளை உள்ளூர் மக்களுக்கு வழங்கினர், மேலும் உள்ளூர் மக்களின் பாரம்பரிய நடைமுறைகளைப் பரவலாக ஊக்கப்படுத்தினர். சில சமயங்களில் இந்தப் பள்ளிகள் அரசாங்க நிதியுதவி பெற்றன, உதாரணமாக அமெரிக்காவில் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்க மக்களுக்குக் கல்வி கற்பிக்க அரசுப் பள்ளிகளை நிறுவுவதற்குத் தேவையான பெரும் தொகையை வழங்குவதற்கு காங்கிரசுக்கு நாட்டம் குறைவாக இருந்தபோது அரசு நிதியுதவி அளித்தது. சான்றுகள் பள்ளி வகைகள்
596173
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D
டேவிட் ஜான் ஆச்செசன்
டேவிட் ஜான் ஆச்செசன்(David John Acheson) ( பிறப்பு 1946) என்பவர் ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஜீசசு கல்லூரியில் பயன்பாடு கணிதவியலில் ஆய்வு செய்த பிரித்தானியக் கனிதவியலாளர் ஆவார். டேவிட் ஜான் ஆச்செசன் இலண்டனின் துணைநகரமான ஐகேட்டு நகரத்தில் பள்ளிப் படிப்பையும், இலண்டன் கிங்சு கல்லூரியில் கணிதம் மற்றும் இயற்பியல் பிரிவில் 1967 ஆம் ஆண்டில் இளநிலை பட்டமும் படித்தார். மேலும் கிழக்கு ஏஞ்சலியா பல்கலைக்கழகத்தில் 1971 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார்..1977 ஆம் ஆண்டு ஆக்சுபோர்டு ஜீசசுக் கல்லூரியில் கணித விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார் மற்றும் 2008 ஆம் ஆண்டில் கூட்டு முயற்சியில் பன்னாட்டு ஆசிரியராக ஆனார். இவர் கணிதக் கூட்டமைப்பின் தலைவராக 2010 முதல் 2011 வரை பணியாற்றினார்.இவருக்கு 2013 ஆம் ஆண்டில் கிழக்கு ஏஞ்சலியா பல்கலைக்கழகத்தில் கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் வேளாண்மை. புவியமைப்பியல், வான் இயற்பியலில் பாய்ம இயக்கவியல் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். இவரது ஆய்வு 1972 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காந்தப் புலத்தில் 'இயற்பியல் புலச் சரிவு' நிலையற்ற தன்மை சுழலும் திரவம் பற்றியதாகும். 1976 ஆம் ஆண்டில் நிலையான அமைப்பில் அலை மேல் பிரதிபலிப்பு (I.e பிரதிபலிப்பு குணகமானது ஒன்றை விட அதிகமாக இருக்கும்) என்பது இவரது கண்டுபிடிப்புகளில் முதல் உதாரணமாகும். மேற்கோள்கள் 1946 பிறப்புகள் வாழும் நபர்கள் பாய்ம இயக்கவியலாளர்கள்
596189
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
இண்டியம் பெர்குளோரேட்டு
இண்டியம் பெர்குளோரேட்டு (Indium perchlorate) என்பது In(ClO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெர்குளோரிக்கு அமிலத்தின் இண்டியம் உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது. தயாரிப்பு இண்டியம்(III) ஐதராக்சைடை பெர்குளோரிக்கு அமிலத்தில் கரைத்தால் இண்டியம் பெர்குளோரேட்டு உருவாகும். In(OH)3 + 3HClO4 -> In(ClO4)3 + 3H2O இயற்பியல் பண்புகள் இண்டியம்(III) பெர்குளோரேட்டு நிறமற்ற படிகங்களாக உருவாகிறது. இது தண்ணீர் மற்றும் எத்தனாலில் கரையும். இச்சேர்மம் In(ClO4)3•8H2O என்ற ஒரு படிக நீரேற்றை உருவாக்குகிறது. 80 °செல்சியசு வெப்பநிலையில் தன் சொந்த படிகமயமாக்கல் நீரில் இது உருகும். மேலும் இந்த எண்ணீரேற்று உப்பு எளிதில் எத்தனால் மற்றும் அசிட்டிக் அமிலத்தில் கரையும். மேற்கோள்கள் இண்டியம் சேர்மங்கள் பெர்குளோரேட்டுகள்
596190
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D
கோபால்தாசு சங்கர்லால் அகர்வால்
கோபால்தாசு சங்கர்லால் அகர்வால் (Gopaldas Shankarlal Agrawal) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 13 ஆவது மகாராட்டிர சட்டமன்றத்தில் இவர் உறுப்பினராக இருந்தார். கோந்தியா சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இவர் பாரதிய சனதா கட்சியில் சேர்ந்தார். மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 முதல் 20 வரை நாக்பூரில் நடைபெற்ற சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ஒரு கேள்வி கூட கேட்காதவர்களில் அகர்வாலும் ஒருவர் என்பது தகவல் அறியும் உரிமை சட்டக் கேள்வியில் தெரியவந்துள்ளது சொந்த அரசாங்கத்திற்கு எதிராக இவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கோந்தியாவில் மருத்துவக் கல்லூரி தொடங்குவது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக, 19 பிப்ரவரி 2014 வரையிலான காலக்கெடுவை அரசாங்கத்தால் சந்திக்க முடியவில்லை. இது இந்திய மருத்துவக் குழுவின் முன்மொழிவை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. மேற்கோள்கள் 1951 பிறப்புகள் வாழும் நபர்கள் மகாராட்டிர அரசியல்வாதிகள் மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்கள்
596196
https://ta.wikipedia.org/wiki/4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D
4-வினைல்வளையயெக்சீன்
4-வினைல்வளையயெக்சீன் (4-Vinylcyclohexene) என்பது C8H12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதன் கட்டமைப்பில் வளையயெக்சீன் வளையத்தின் 4-நிலையுடன் வினைல் குழு இணைக்கப்பட்டிருக்கும். இது நிறமற்ற ஒரு திரவமாகும். தோற்றுரு கவியா சமச்சீர் என்றாலும் இது முக்கியமாக நடுநிலைச் சேர்மமாகப் பயன்படுத்தப்படுகிறது. 4-வினைல்வளையயெக்சீன் சேர்மம், வினைல்வளையயெக்சீன் ஈராக்சைடு தயாரிப்பதற்கான ஒரு முன்னோடிச் சேர்மமாகும். தயாரிப்பு இது டையீல்சு-ஆல்டர் வினையில் பியூட்டா-1,3-டையீனின் இருபடியாதல் வினை மூலம் தயாரிக்கப்படுகிறது. 1.3 - 100 மெகாபாசுக்கல் அழுத்தத்தில் 110 - 425 ° செல்சியசு வெப்பநிலையில் ஒரு வினையூக்கியின் முன்னிலையில் இவ்வினை நடத்தப்படுகிறது. சிலிக்கான் கார்பைடு மற்றும் தாமிரம் அல்லது குரோமியம் உப்புகளின் கலவையானது இவ்வினையில் வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. 1,5-வளைய ஆக்டாடையீன் இங்கு ஒரு போட்டி தயாரிப்பாகும். பாதுகாப்பு மனிதர்களுக்கு புற்று நோயைக் கொடுக்கும் ஒரு வேதிச் சேர்மமாக இது வகைப்படுத்தப்படுகிறது. மேற்கோள்கள் வினைல் சேர்மங்கள் வளைய எக்சீன்கள்
596198
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
ஓரகத்தனிமப் பகுப்பு
ஓரகத்தனிமப் பகுப்பு (Isotope fractionation) என்பது ஓரகத்தனிமங்களில் ஒப்பீட்டளவில் மிகுதியான ஓரகத்தான்களை ஓரகத்தனிம புவி வேதியியல் மற்றும் பிற துறைகளில் சாதகமாகப் பயன்படுத்தப்படும் நிகழ்வுகளைக் கொண்டு பகுக்கும் செயல்முறைகளை விவரிக்கிறது. பொதுவாக, ஒரே தனிமத்தின் நிலையான ஓரிடத்தான்களில் கவனம் செலுத்தப்படுகிறது. ஐசோடோப்புகளின் விகிதங்களை அளவிடுவதற்கு ஓரிடத்தனிம-விகித பொருண்மை அலைமாலைமானி அல்லது கீழ் குவிவு வளைவு அலைமாலைமானியைப் பயன்படுத்தி ஓரிடத்தனிமப் பகுப்பை ஓரிடத்தனிமப் பகுப்பாய்வு மூலம் அளவிட முடியும், இது புவி வேதியியல் மற்றும் உயிரியல் அமைப்புகளைப் புரிந்துகொள்வதற்கான முக்கிய கருவியாகும். எடுத்துக்காட்டாக, உயிர்வேதியியல் செயல்முறைகள் உயிரியில் இணைக்கப்பட்ட நிலையான கார்பன் ஓரிடத்தனிமங்களின் விகிதங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. வரையறை A மற்றும் B ஆகிய இரண்டு பொருட்களுக்கு இடையேயான நிலையான ஓரிடத்தனிமங்கள் பகிர்வு ஓரிடத்தனிமப் பின்னக் காரணி (ஆல்ஃபா) மூலம் வெளிப்படுத்தப்படலாம்: இதில் R என்பது கனமான மற்றும் இலேசான ஓரிடத்தனிமங்களின் விகிதம் (எ.கா. 2H/ 1 H அல்லது 18O/16O). ஆல்பாவின் மதிப்புகள் 1 க்கு மிக அருகில் இருக்கும் வகைகள் நான்கு வகையான ஓரிடத்தனிம பின்னங்கள் உள்ளன (அவற்றில் முதல் இரண்டு பொதுவாக மிக முக்கியமானவை): சமநிலை பின்னம், இயக்கவியல் பின்னம், நிறை-தனித்த பின்னம் (பொருண்மை-சார்ந்ததல்லாத பின்னம்) மற்றும் நிலையற்ற இயக்க ஓரிடத்தனிம பின்னம் ஆகியவை ஆகும். உதாரணமாக ஓரிடத்தனிம பின்னம் ஒரு நிலை மாறுதலின் போது நிகழ்கிறது, சம்பந்தப்பட்ட மூலக்கூறுகளில் இலேசான மற்றும் கனமான ஓரிடத்தனிமங்களின் விகிதம் மாறும்போது. நீராவி ஒடுங்கும்போது (ஒரு சமநிலைப் பின்னம் ), கனமான நீர் ஓரிடத்தான்கள் ( 18O மற்றும் 2H) திரவ நிலையில் செறிவூட்டப்படுகின்றன, அதே நேரத்தில் இலகுவான ஓரிடத்தான்கள் ( 16O மற்றும் 1H) நீராவி நிலையை நோக்கிச் செல்கின்றன. மேலும் காண்க ஓரிடத்தான்களைப் பிரித்தெடுத்தல் மேற்கோள்கள் வேதியியல் ஓரிடத்தான்கள்
596200
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B
மேபல் ரெபெல்லோ
மேபல் ரெபெல்லோ (Mabel Rebello) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1950 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் சார்க்கண்டு மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேபல் ரெபெல்லோ இந்திய அரசின் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார். 2016 ஆம் ஆண்டில் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்தார். அரசியல் வாழ்க்கை காங்கிரசு கட்சியின் விவகாரங்களை இயக்கி, சோனியா காந்திக்கு பல துறைகளில் உதவிய பின்னணி மூளையாக மாபெல் இருந்தார். பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, சிறுபான்மையினராக இருக்கும் கிறித்தவர்கள் மீதான அட்டூழியங்களின் போது, பெரும்பான்மை இந்துக்கள் மதச்சார்பற்றும் பரந்த மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருப்பதால், விளிம்புநிலை குழுக்கள் பிரச்சினைகளை உருவாக்குகின்றன என்று மேபல் ரெபெல்லோ கூறினார். மேற்கோள்கள் புற இணைப்புகள் Profile on Rajya Sabha website 1950 பிறப்புகள் வாழும் நபர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் மத்தியப் பிரதேச அரசியல்வாதிகள்
596202
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
அவுந்த் மாநிலம்
அவுந்த் மாநிலம் (Aundh State) என்பது பிரித்தானியப் பேரரசு ஆட்சியின் போது பம்பாய் மாகாணத்தின் தக்காண முகமை பிரிவில், மராட்டிய சமஸ்தானமாக இருந்தது. அவுந்த் அதன் தலைநகரமாக இருந்தது. 1941 இல் 88,762 மக்கள்தொகையுடன் 1298 சதுர கிலோமீட்டர் பரப்பளவை அவுந்த் மாகாணம் உள்ளடக்கி இருந்தது வரலாறு அவுந்த் என்பது சத்திரபதி சம்பாஜி, சத்திரபதி இராஜாராம் ஆகியோரின் ஆட்சியின் போது மராட்டியப் பேரரசின் தளபதியாகவும், நிர்வாகியாகவும், பின்னர் பிரதிநிதியாகவும் இருந்த பரசுராம் பந்த் பிரதிநிதி என்பவருக்கு சத்ரபதி சாம்பாஜி வழங்கிய சாகிர் ஆகும். 1700-1705 காலகட்டத்தில் முகலாயர்களிடமிருந்து பன்காலா கோட்டை, அஜிங்க்யதாரா (சதாரா), பூபால்காட் கோட்டைகளை மீண்டும் கைப்பற்றுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். பேஷ்வா ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் 1820 இல் சதாரா மன்னரின் பெயரளவில் கீழ்படிந்த அனைத்து சாகிர்தார்களுடனும் தனித்தனி ஒப்பந்தங்களை மேற்கொண்டது. சதாரா மாநிலம் ஆங்கிலேயர்களால் அவகாசியிலிக் கொள்கைப்படி கீழ் ஒழிக்கப்பட்டபோது அவுந்த் ஒரு சமஸ்தானமாக மாறியது. ராஜா சிறீமந்த் பவன்ராவ் சிறீனிவாசராவ் பந்த் பிரதிநிதி ("பாலா சாஹிப்") அவுந்தின் கடைசி ஆட்சியாளாவார். இந்த மாநிலம் 8 மார்ச் 1948 இல் இந்திய ஒன்றியத்தில் இணைந்தது சான்றுகள் உசாத்துணை சாத்தாரா மாவட்டம்
596208
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
பூவரசங்குப்பம் இலட்சுமி நரசிம்மர் கோயில்
இலட்சுமி நரசிம்மர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் பூவரசங்குப்பம் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 47.53 மீட்டர் உயரத்தில், என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இக்கோயில் அமையப் பெற்றுள்ளது. தட்சிண அகோபிலம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மூலவர் இலட்சுமி நரசிம்மர் மற்றும் தாயார் அமிர்தவல்லி ஆவர். உற்சவர் பிரகலாத வரதன் ஆவார். இக்கோயிலின் தலவிருட்சம் நெல்லி மரம் ஆகும். தீர்த்தம் சக்கர தீர்த்தம் ஆகும். இக்கோயிலில் பஞ்சராத்ர முறைப்படி பூசைகள் செய்யப்படுகின்றன. வைகுண்ட ஏகாதசி, நரசிம்மர் ஜெயந்தி, வைகாசி விசாகம், தமிழ் வருடப் பிறப்பு, தை மாத தீர்த்தவாரி, புரட்டாசி சனிக்கிழமைகள் ஆகியவை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 2023ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் வாரத்தில், இக்கோயிலின் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்றது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் GeoHack - பூவரசங்குப்பம் இலட்சுமி நரசிம்மர் கோயில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்
596209
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
சாங்யெங்கைட்டு
சாங்யெங்கைட்டு (Zhanghengite) என்பது CuZn என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். 80% தாமிரம் மற்றும் துத்தநாகம், 10% இரும்பு மற்றும் 10% குரோமியம் மற்றும் அலுமினியம் என்ற அளவில் பிற தனிமங்கள் இக்கனிமத்தில் கலந்துள்ளன. சாங்யெங்கைட்டு கனிமம் தங்க மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. இது 1986 ஆம் ஆண்டில் போ சியன் விண்கல்லின் பகுப்பாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டது. பண்டைய சீன வானியலாளர் சாங் எங் நினைவாக கனிமத்திற்கு சாங்யெங்கைட்டு எனப் பெயரிடப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் Zhg என்ற குறியீட்டால் இதை அடையளப்படுத்துகிறது. மேற்கோள்கள் துத்தநாகக் கனிமங்கள் செப்புக் கனிமங்கள் கனசதுரக் கனிமங்கள்
596228
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
மோண்டு மோர்ட்டு
மோன்ட் மோர்ட் என்பது பென்னைன் ஆல்ப்சின் ஒரு மலையாகும், இது சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலியின் எல்லையில் அமைந்துள்ளது. இது கிரேட் செயின்ட் பெர்னார்ட் கணவாய்க்கு தென்கிழக்கே ஆல்ப்சின் பிரதானத் தொடரில் அமைந்துள்ளது. மலையின் மேற்குப் பகுதியில் பெட்டிட் மோன்ட் மோர்ட் (2,809 மீ) என பெயரிடப்பட்ட இரண்டாம் நிலை உச்சி உள்ளது. கிரேட் செயின்ட் பெர்னார்ட் சுரங்கப்பாதை அதன் கீழே செல்கிறது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ஹிக்ரில் மோண்ட் மோர்ட் மலைகள்
596231
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D
இரானேன் சென்
இரணேந்திரநாத் சென் (செப்டம்பர் 23, 1909 - நவம்பர் 13, 2003) ஒரு இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் தொழிற்சங்கவாதி ஆவார். 1973 முதல் 1976 வரை அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் தலைவராக இருந்தார் இவர் பாரசாத் தொகுதியிலிருந்து 3வது மக்களவை, 4வது மக்களவை மற்றும் 5வது மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் 1952 மற்றும் 1957- ஆம் ஆண்டுகளில் மணிக்தலா சட்டமன்றத் தொகுதியிலிருந்து மேற்கு வங்க சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்னர் பிரிக்கப்படாத வங்காள -ஜுகந்தர் கட்சியில் தேசிய புரட்சிகர இயக்கத்துடன் தொடர்புடையவர். வகித்த பதவிகள் மருத்துவ பீடத்தின் உரிமம், தேசிய மருத்துவ நிறுவனம், கல்கத்தா ; ஜனாதிபதி, வங்காள மாகாண தொழிற்சங்க காங்கிரசு; துணைத் தலைவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் மேற்கோள்கள் 5வது மக்களவை உறுப்பினர்கள் 4வது மக்களவை உறுப்பினர்கள் 3வது மக்களவை உறுப்பினர்கள்
596233
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
அமித் தாக்கர்
அமித் தாக்கர் (Amit Thaker) இந்தியாவில் ஒரு அரசியல் பிரமுகர் மற்றும் குஜராத் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் குஜராத் மாநிலத்தில் வெஜல்பூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து டிசம்பர் 2022-இல் நடந்த தேர்தலில் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச்(BJP) சேர்ந்தவர். 1997 முதல் 2004 வரை மற்றும் 2007 முதல் 2010 வரை இரண்டு முறை பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (BJYM) தலைவராக பணியாற்றிய தாக்கர் கட்சிக்குள் ஒரு தலைமைப் பதவியை வகித்துள்ளார். மேற்கோள்கள் வாழும் நபர்கள் குஜராத் அரசியல்வாதிகள் பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
596238
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%28III%29%20%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
இண்டியம்(III) நைட்ரேட்டு
இண்டியம்(III) நைட்ரேட்டு (Indium(III) nitrate) என்பது In(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இண்டியத்தின் நைட்ரேட்டு உப்பான இச்சேர்மம் பல்வேறு நீரேற்றுகளாக உருவாகிறது. இவற்றில் ஐந்துநீரேற்று மட்டுமே மட்டுமே படிகவியல் ரீதியாக சரிபார்க்கப்பட்டதாகும். மற்ற நீரேற்றுகளில் முந்நீரேற்று போன்றவை மட்டுமே நூல்களில் பதிவாகியுள்ளன. தயாரிப்பு மற்றும் வினைகள் இண்டியம்(III) நைட்ரேட்டு நீரேற்றை செறிவூட்டப்பட்ட நைட்ரிக் அமிலத்தில் இண்டியம் உலோகத்தைக் கரைத்து தொடர்ந்து கரைசலை ஆவியாக்குதல் மூலம் உற்பத்தி செய்யலாம். In + 4 HNO3 → In(NO3)3 + NO + 2 H2O நீரேற்று முதலில் அடிப்படை உப்பாகவும் பின்னர் 240 ° செல்சியசு வெப்பநிலையில் இண்டியம்(III) ஆக்சைடாகவும் சிதைகிறது. நீரற்ற இண்டியம்(III) நைட்ரேட்டு சேர்மமானது இண்டியம்(III) குளோரைடு மற்றும் இருநைட்ரசன் பெண்டாக்சைடு ஆகியவை வினைபுரிவதால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிகப்படியான நைட்ரேட்டு அயனிகளின் முன்னிலையில், இண்டியம்(III) நைட்ரேட்டு [In(NO3)4]- அயனியாக மாறுகிறது. இண்டியம்(III) நைட்ரேட்டு நீராற்பகுப்பு வினைக்கு உட்பட்டு இண்டியம்(III) ஐதராக்சைடை அளிக்கிறது. இது சோடியம் டங்சுடேட்டுடன் வினைபுரிந்து காரக்காடித்தன்மைக்கேற்ப In(OH)WO4, [In(OH)2]2WO4, NaInWO4 அல்லது In2(WO4)3 சேர்மமாக உருவாகிறது. கட்டமைப்பு இண்டியம்(III) நைட்ரேட்டின் ஐந்து நீரேற்று மட்டுமே கட்டமைப்பு ரீதியாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஐந்து நீரேற்றில் எண்முக [In(NO3)(H2O)5]2+ அயனிகளையும் இரண்டு நைட்ரேட்டுகளையும் கொண்டுள்ளது. ஒற்றைச் சரிவச்சுப் படிக அமைப்பில் இச்சேர்மம் படிகமாகிறது. மேற்கோள்கள் இண்டியம் சேர்மங்கள் நைட்ரேட்டுகள்
596247
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
பட்டைச்சிறகு வெள்ளைக் கீச்சான்
பட்டைச்சிறகு வெள்ளைக் கீச்சான் ( bar-winged flycatcher-shrike) (Hemipus picatus ) என்பது குருவி வரிசையைச் சேர்ந்த ஒரு சிறிய பறவையாகும். இது தெற்காசியாவின் இமயமலையிலும், தென்னிந்தியாவில் உள்ள மலைகள் முதல் இந்தோனேசியா வரையிலான வெப்பமண்டல தெற்கு ஆசியாவின் காடுகளில் காணப்படுகிறது. முக்கியமாக பூச்சிகளை உண்ணும் இது காடுகளின் நடுப்பகுதியில் வேட்டையாடுகிறது. இவை நிமிர்ந்து நிற்பவையாகவும், கருப்பு, வெள்ளை நிறத்தின் தனித்துவமான வடிவத்தைக் கொண்டுள்ளன, ஆண் பறவைகள் பெண் பறவைகளை விட பளபளப்பான கருப்பாக உள்ளன. சில பறவைகளின் முதுகின் நிறம் பழுப்பு நிறமாக இருக்கும், பல பறவைகளுக்கு அடிப்பகுதியில் கருஞ்சாயம் இருக்கும். துணையினங்கள் பட்டைச்சிறகு வெள்ளைக் கீச்சானில் நான்கு துணையினங்கள் பரிந்துரைக்கபட்டுள்ளன: கருந்தலை கருப்பு வெள்ளைக் கீச்சான் H. p. picatus (Sykes, 1832) H. p. capitalis (Horsfield, 1840) இலங்கை கருப்பு வெள்ளைக் கீச்சான் H. p. leggei Whistler, 1939 H. p. intermedius Salvadori, 1879 விளக்கம் பட்டைச்சிறகு வெள்ளைக் கீச்சானின் தலையின் மேல் பகுதியும் இறக்கைகளும் கருப்பு நிறத்தில் உள்ளன. இதன் உடல் வெள்ளை நிறத்தில் இருக்கும். இறக்கையின் குறுக்கே ஒரு வெள்ளைப் பட்டையும், வெள்ளை நிற பிட்டமும் இதை வித்தியாசப்படுத்துகின்றன. இவை கிளைகளில் நிமிர்ந்து உட்கார்ந்திருந்து, பூச்சிகளைப் பறந்து பிடிக்கின்றன. மூக்குத் துளைகள் முடிகளால் மறைக்கப்பட்டுள்ளன மேலும் மேல் அலகின் முனை வளைந்து கொக்கிபோல் காணப்படும். ஆண் பறவைகள் பளபளக்கும் கறுப்பாகவும், பெண் பறவைகள் சாம்பல் கலந்த பழுப்பு நிறமாகவும் இருக்கும். ஆனால் வாழிட எல்லை பொறுத்து இதன் நிறத்தில் சற்று மாறுபாடுகள் இருக்கும். இமயமலையில் காணப்படும் துணையினமான எச்.பி. கேபிடலிசில் ஆண் பெண் என இரு பறவைகளுக்கும் பழுப்பு நிற முது உள்ளது ஆனால் ஆண் பறவைகளுக்கு கருப்பு தலை உள்ளது. இலங்கையில் காணப்படும் பறவைகளின் இறகுகளில் பால் ஈருருமை இல்லை. எச். பி. இண்டர்மீடியஸ் துணையினத்தில் பழுப்பு நிற முதுகு பெண் பறவைகளுக்கு மட்டும் உள்ளது. வால் கருப்பு என்றாலும் வெளிப்புற வால் இறகுகள் வெண்மையாக இருக்கும். இது வ்வீரீரிரி, வ்வீரீரிரி, வ்வீரீரிரி என சிறு குரல் கொடுக்கும். இலங்கையின் லெகெய் என்ற துணை இனத்தின் ஆண்-பெண் இணைகள் துல்லியமாக டூயட் பாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் பறவைகள் சாம்பல் நிறத்தில் கல்பாசி தோற்றத்தைக் கொண்டுள்ளன. நடத்தையும் சூழலியலும் இந்தப் பறவை, இலைகளிடையே புழு, பூச்சிகளைத் தேடித் திரியக் காணலாம். கிளைகளில் அமர்ந்து பறந்து பூச்சிகளைப் பிடிப்பதும் உண்டு. மற்ற இரைதேடும் பறவைப் பட்டாளங்களுடன் கலந்தே பெரும்பாலும் இரைதேடும். இவை காடு வழியாக நகர்ந்தபடி இருக்கின்றன மேலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அரிதாகவே தங்குகின்றன. இலங்கையில் கூடு கட்டும் காலம் முக்கியமாக பெப்ரவரி முதல் ஆகத்து வரையிலும், இந்தியாவில் மார்ச் முதல் மே வரையிலும் இருக்கும். வேர், பாசி, சிறு துளிர்கள் ஆகியன கொண்டு குறுக்காக செல்லும் காய்ந்த அல்லது இலைகளற்ற மரக்கிளையில் கோப்பை வடிவில் கூடு கட்டும். கீழிருந்து பார்ப்பவர்களுக்கு இதன் கூடு மரக்கிளையில் புடைத்துக் கொண்டிருக்கும் முருடு போலவே தோன்றும். வழக்கமாக இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இடும். அவை பசுமை தோய்ந்த வெண்மை நிறத்திலும் கருப்பு மற்றும் சாம்பல் நிறத்திலும் இருக்கும். கூட்டில் அமர்ந்திருக்கும் பறவை சாதாரணமாக அமர்ந்திருப்பது போல் தோன்றும். ஆண் மற்றும் பெண் என இரு பறவைகளும் அடைகாக்கும். கூட்டில் இருக்கும் குஞ்சுகள் கண்களை மூடிக்கொண்டு அசையாமல், உடைந்த கிளையின் தோற்றத்தைக் கொடுப்பதாக இருக்கும். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகள் அழைப்புகள் நேபாளப் பறவைகள் தென்கிழக்காசியப் பறவைகள் தெற்காசியப் பறவைகள் கீச்சான்
596251
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
கருந்தலை கருப்பு வெள்ளைக் கீச்சான்
கருந்தலை கருப்பு வெள்ளைக் கீச்சான் (அறிவியல் பெயர்: Hemipus picatus picatus) என்பது பட்டைச்சிறகு வெள்ளைக் கீச்சானின் துணையினம் ஆகும். விளக்கம் கருந்தலை கருப்பு வெள்ளைக் கீச்சான் சிட்டுக்குருவி அளவில் சுமார் 14 செ.மீ. நீகம் இருக்கும். இதன் அலகு கறுப்பாகவும், விழிப்படலம் ஆரஞ்சு நிறத்திலும், கால்கள் கரும்பழுப்பாகவும் இருக்கும். தோற்றத்தில் ஈப்பிடிப்பானை ஒத்து இருக்கும். ஆண் பறவையின் தலையும் முதுகும் பளபளக்கும் கறுப்பாக இருக்கும். பின் கழுத்தில் ஒரு வெள்ளை பட்டைக் கோடு காணப்படும். பிட்டம் வெள்ளையாகவும், இறக்கைகள் கறுப்பும் வெள்ளையுமாகவும் இருக்கும். பெண் பறவைகளுக்கு கறுப்புப் பகுதகள் நிறம் மங்கி புகைக் கறுப்பாக காட்சியளிக்கும். பரவலும் வாழிடமும் கருந்தலை கருப்பு வெள்ளைக் கீச்சான்கள் கேரளம் நீங்கலான தென்னிந்தியா முழுவதும் பொதுவாக இலையுதிர் காடுகளிலும், மூங்கில் காடுகளிலும், காடுகளை அடுத்து உள்ள தோப்புகளிலும் காணப்படுகின்றன. நடத்தை இப்பறவைகள் இணையாகவோ சிறு கூட்டமாகவோ ஒன்றை ஒன்று தொடர்ந்து மரங்களில் இலைகளிடையே புழு, பூச்சிகளைத் தேடி அலையக்கூடியன. பொதுவாக மற்ற இரைதேடும் பறைவைகளின் கூட்டத்தோடு கலந்தே இரை தேடும். இவற்றின் பழக்க வழக்கங்கள் காட்டுக் கீச்சான், மின்சிட்டுக் குருவி ஆகியவற்றை ஒத்து இருக்கும். இது பூச்சிகளையே முதன்மை உணவாக கொள்கிறது. வ்வீரீரிரி, வ்வீரீரிரி, வ்வீரீரிரி எனச் சிறு குரல் கொடுக்கக் கூடியது. மார்ச் முதல் மே வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. வேர் பாசி, சிறு துளிர்கள் போன்றவற்றைக் கொண்டு குறுக்காகச் செல்லும் காய்ந்த அல்லது இலைகளற்ற மரக்கிளையில் கோப்பை வடிவில் சிலந்தி நூல்களைக் கொண்டு கட்டும். கீழிருந்து பார்ப்பவர்களுக்கு கூடுபோல் தெரியாமல் மரத்தில் புடைத்திருக்கும் ஒரு முருடு போலத்தால் தோன்றும். இரண்டு அல்லது மூன்று பசுமை தோய்ந்த வெண்மை நிற முட்டைகளை இருகின்றன. ஆணும் பெண்ணும் அடைகாக்கும் பொறுப்பை பகிர்ந்து கொள்கின்றன. மேற்கோள்கள் தென்னிந்தியப் பறவைகள் கீச்சான்
596252
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
வங்காள வியாபாரிகள் சங்கம்
வங்காள வியாபாரிகள் சங்கம் (Bengal Hawkers Association) என்பது இந்திய நாட்டின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள வியாபாரிகளின் தொழிற்சங்கமாகும் . இச்சங்கம் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 1950 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இச்சங்கம் மாநிலத்தின் பழமையான வியாபாரிகள் சங்கமாகும். கிழக்கு பாக்கித்தானில் இருந்து அகதிகள் மத்தியில் வலுவான பின்தொடர்பைப் பெற்றது. மேற்கோள்கள் இந்திய தொழிற்சங்கங்கள்
596253
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D
கல்பாத்தி பாலகிருட்டிணன்
கல்பாத்தி பாலகிருட்டிணன் (Kalpathy Balakrishnan) இந்திய நாட்டினைச் சேர்ந்த தாள இசைக்கருவி இசைக்கும் கலைஞர் ஆவார். இவர் கேரள மாநில பாரம்பரிய இசைக்கருவிகளான செண்டை, தயாம்பகா, பஞ்சரி மேளம் மற்றும் பஞ்சவாத்தியம் ஆகியவற்றை வாசிக்கிறார். கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கல்பாத்தி என்ற கிராமத்தில் பிறந்தார். 2009 ஆம் ஆண்டு சிறந்த தயாம்பகா கலைஞருக்கான கேரள சங்கீத நாடக அகாதமி விருதை வென்றார். மேற்கோள்கள் வாழும் நபர்கள் மலையாள நபர்கள் இசைக் கலைஞர்கள்
596255
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
எண்ணாயிரம் அழகிய நரசிங்க பெருமாள் கோயில்
அழகிய நரசிங்க பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் எண்ணாயிரம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். சுமார் ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான இக்கோயில் இராசராச சோழனால் கட்டப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 105 மீட்டர் உயரத்தில், என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு எண்ணாயிரம் அழகிய நரசிங்க பெருமாள் கோயில் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இக்கோயில் இயங்குகிறது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் GeoHack - எண்ணாயிரம் அழகிய நரசிங்க பெருமாள் கோயில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்
596260
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF
கிழக்கு ஆப்பிரிக்க பீடபூமி
கிழக்கு ஆப்பிரிக்க பீடபூமி (The East African Plateau) என்பது மத்திய ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உகாண்டா, கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள ஒரு பெரிய பீடபூமி ஆகும். இதன் உயரம் பெரும்பாலும் 1000 முதல் 1500 மீட்டர் வரை இருக்கும். இது வடக்கு மற்றும் தெற்கில் இயங்கும் பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது மற்றும் மலைத்தொடர்கள், மேட்டுச் சமவெளி நிலங்கள் மற்றும் பிளவுப் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிளவு பள்ளத்தாக்குகளின் இரண்டு பெரிய கோடுகள் இருப்பது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும், இது பூமியின் மேலோட்டத்தின் சில பகுதிகளின் வீழ்ச்சியால் ஏற்படுகிறது. இவற்றின் மிகத் தாழ்வான பகுதிகள் பரந்த ஏரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தெற்கே இரண்டு கோடுகளும் ஒன்றிணைந்து ஒரு பெரிய பள்ளத்தாக்கிற்கு (நியாசா ஏரி அல்லது மலாவி ஏரியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது), இதன் தெற்குப் பகுதியானது மற்ற பகுதிகளை விட பிளவு மற்றும் சரிவு காரணமாக குறைவாகவே வேறுபடுகிறது. மேற்கோள்கள் Coordinates on Wikidata பீடபூமிகள் ஆப்பிரிக்கப் புவியியல்
596261
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
இலங்கை கருப்பு வெள்ளைக் கீச்சான்
இலங்கை கருப்பு வெள்ளைக் கீச்சான் (அறிவியல் பெயர்: Hemipus picatus leggei) என்பது பட்டைச்சிறகு வெள்ளைக் கீச்சானின் துணையினம் ஆகும். இது இலங்கையின் மலைக்காடுகளில் காணப்படுகிறது. விளக்கம் இலங்கை கருப்பு வெள்ளைக் கீச்சான் தோற்றத்திலும் பழக்க வழக்கங்களிலும் பட்டைச்சிறகு வெள்ளைக் கீச்சானை ஒத்தே இருக்கும். ஆனால் இது பால் ஈருருமை இல்லாமல் ஆண் பெண் என இரு பறவைகளும் ஒன்றுபோலவே இருக்கும் (பட்டைச்சிறகு வெள்ளைக் கீச்சான் பறவையில் பெண் பறவையின் முதுகு ஆண் பறவையின் முதுகு போல கறுப்பாக இல்லாமல் புகை கறுப்பாக இருக்கும்). நடத்தை இப்பறவைகளில் ஆண் பறவையும் பெண் பறவையும் மாறி மாறி குரல் எழுப்பி டூயட் பாடுவதாக அறியவருகிறது. மேற்கோள்கள் இலங்கைப் பறவைகள் கீச்சான்
596264
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81
அலெக்சாந்தர் தாமசு
அலெக்சாந்தர் தாமசு (Alexander Thomas) என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றிய இந்திய நீதிபதி ஆவார். கேரளாவின் உயர்நீதிமன்றம் இந்திய மாநிலமான கேரளா மற்றும் லட்சத்தீவு ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள மிக உயர்ந்த நீதிமன்றமாகும். கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமையகம் எர்ணாகுளத்தில், கொச்சியில் உள்ளது. கல்வி மற்றும் தொழில் நீதிபதி தாமசு திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் பட்டம் பெற்றார். கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். தில்லி பல்கலைக்கழகத்தின் சட்ட புலத்தில் சட்டப் பட்டம் பெற்றார். இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் பயிற்சியினை 1988-இல் தொடங்கினார். இவர் 23 சனவரி 2014 அன்று கேரள உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு 10 மார்ச்சு 2016 முதல் நிரந்தர நீதிபதியாகப் பணியாற்றினார். இவர் 13 ஜூலை 2023 அன்று தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு 21 சூலை 2023 வரை தற்காலிக தலைமை நீதிபதியாக பணியாற்றினார். நீதிபதி தாமசு 03 செப்டம்பர் 2023 அன்று ஓய்வு பெற்றார். மேற்கோள்கள் 1961 பிறப்புகள் வாழும் நபர்கள் இந்திய நீதிபதிகள்
596265
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D
மாரிசு டாலன்
அருள்திரு தந்தை மௌரிசே எதோர்து டல்லோன் (Maurice Edouard Tallon) (22 அக்டோபர் 1906 - 21 சூலை 1982) பிரான்சு நாட்டினைச் சேர்ந்த இயேசு சபையின் தொல்லியல் ஆராய்ச்சியாளர் ஆவார். லெபனானின் தொல்பழங்கால வரலாற்றுப் பணிக்காக குறிப்பிடத்தக்கவர் ஆவார். பிரான்சு நாட்டின் மோர்னாண்டில் இவர் பிறந்தார். எதோர்து டல்லோனின் மகனாவார். மோங்ரே கல்லூரியில் (கிளெர்மான்ட் பெராண்ட்) பயின்றார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மாரிசு டாலனின் பரம்பரை விவரம் 1982 இறப்புகள் 1906 பிறப்புகள் பிரான்சியத் தொல்லியலாளர்கள் இயேசு சபையினர்
596266
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95.%20%E0%AE%B5%E0%AF%86.%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D
க. வெ. விசுவநாதன்
கல்பாத்தி வெங்கடராமன் விசுவநாதன் (பிறப்பு 26 மே 1966) இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். பணி விசுவநாதன் கோயம்புத்தூர் சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார். 1988ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்கறிஞர் கழகத்தில் பதிவு செய்தார். இளைய வழக்கறிஞர் விசுவநாதன் 1988 முதல் 1995 வரை மூத்த வழக்கறிஞர்கள் சி. எஸ். வைத்தியநாதன் மற்றும் கே. கே. வேணுகோபால் ஆகியோரின் கீழ் இளைய வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். மூத்த வழக்கறிஞர் ஏப்ரல் 28, 2009 அன்று உச்ச நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இவர் 26 ஆகத்து 2013 அன்று இந்தியாவின் கூடுதல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு மே 2014 வரை பதவியிலிருந்தார். மூத்த வழக்கறிஞராக, இவர் முக்கியமான அரசியல் சாசன இருக்கையில் வழக்குகளை வாதிட்டார். தனியுரிமைக்கான உரிமை, ஆதார் சட்டத்தின் செல்லுபடி மற்றும் திருமண சமத்துவம் ஆகிய வழக்குகளில் ஆஜராகியுள்ளார். வாட்சப்-முகநூல் தனியுரிமை வழக்கில் தலையீட்டாளரான இன்டர்நெட் ப்ரீடம் கூட்டமைப்பின் சார்பில் வாதிட்டார். மத்திய புலனாய்வு மற்றும் அமலாக்க இயக்குனரக இயக்குநர்களுக்கான பதவி நீட்டிப்பு செல்லுபடியாகும் வழக்கு மற்றும் கீழ் நீதிமன்றங்களில் நீதித்துறை நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் நீதிமன்ற நண்பராகப் பங்களித்தார். அமலாக்க இயக்குநரக இயக்குநருக்கான பதவி நீட்டிப்பு செல்லுபடியாகும் தன்மையைச் சவால் செய்யும் வழக்கில், "மக்களாட்சி நலன் கருதி" திருத்தம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று இவர் நீதிமன்றத்தில் கூறினார். அரசின் கொள்கைகளை விமர்சித்த ஓய்வுபெற்ற நீதிபதிகளை "இந்திய-எதிர்ப்பு கும்பல்" என்று சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு குறிப்பிட்டபோது, இது குறிப்பிடத்தக்கக் கவலையைத் தூண்டியது. ஒரு மூத்த வழக்கறிஞராக, இவர் நிலைமையின் தீவிரத்தை வலியுறுத்தினார். ஓய்வுபெற்ற நீதிபதிகளை விவரிக்க இந்தியாவின் சட்ட அமைச்சர் இத்தகைய வலுவான மொழியைப் பயன்படுத்துவது கவலை அளிக்கிறது என்று தெரிவித்தார். இந்திய உச்ச நீதிமன்றம் விசுவநாதன் 19 மே 2023 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் நியமனம் செய்யப்பட்ட நேரத்தில், பட்டியலிலிருந்து நேரடியாக உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட இரண்டாவது நீதிபதி ஆனார். முந்தைய அனைத்து நியமனங்களையும் கருத்தில் கொள்ளும்போது, உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நியமிக்கப்பட்ட பத்தாவது உறுப்பினர் இவர். இவர் ஆகத்து 12, 2030 முதல் மே 25, 2031 வரை இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருப்பார். இந்தியத் தலைமை நீதிபதி பதவியை ஏற்றுப் பட்டியலிலிருந்து நேரடியாக உயர்த்தப்பட்ட நான்காவது உறுப்பினர் ஆவதற்கான வழிமுறையில் இவர் உள்ளார். மேற்கோள்கள் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வாழும் நபர்கள் 1966 பிறப்புகள்
596267
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D
விர்சீனியா ராவ்
விர்சீனியா தே பிவார் ராபர்டீசு ராவ் (Virgínia de Bivar Robertes Rau) (4/9 டிசம்பர் 1907 - 2 நவம்பர் 1973) போர்த்துகீசிய நாட்டின் தொல்பொருள் ஆய்வாளர் மற்றும் வரலாற்று ஆசிரியர் ஆவார். இவர் போர்த்துகீசியம் மற்றும் போர்த்துகீசிய காலனித்துவ வரலாற்றில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். மேலும் பல வரலாற்று புத்தகங்களை எழுதியவர் ஆவார். இவர் செருமன் வம்சாவளியைச் சேர்ந்த இளையர் லூயிசு ராவ் (1865-1943) மற்றும் இசுப்பானிய வம்சாவளியைச் சேர்ந்த மாடில்டே டி பிவார் டி பவுலா ராபர்டெசு (1879-1961) ஆகியோரின் மகள் ஆவார். இவரது பெற்றோர் 1902 ஆம் ஆண்டு போர்த்துக்கல் நாட்டின் லிசுபனில் திருமணம் செய்து கொண்டனர். 1927 ஆம் ஆண்டு லிசுபன் பல்கலைக்கழகத்தின் கடிதங்கள் புலத்தில் சேர்ந்தார். அனால் அடுத்த ஆண்டு வெளிநாடு சென்று சென்று துலூசு பல்கலைக்கழகம் உட்படப் பல படிப்புகளில் பயின்றார். 1939 ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போரின் ஆரம்பம் காரணமாக, லிசுபனுக்குத் திரும்பினார். அங்கு கலைப் புலத்தின் வரலாறு மற்றும் தத்துவ அறிவியலில் சேர்ந்தார். போர்த்துகீசிய வரலாற்று அகாதமியின் ராவ் போர்த்துகீசியம் மற்றும் காலனித்துவ இடைக்காலம் மற்றும் நவீன வரலாறு பற்றிய பரந்த படைப்புகளின் தொகுப்பை வெளியிட்டார். 1969 ஆம் ஆண்டு சூலை மாதம் 2 ஆம் தேதி, போர்த்துகீசிய பொதுக்கல்வி ஆணையின் உயர் அதிகாரி பதவி இவருக்கு வழங்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட ஒரு படைப்பிற்குப் பிறகு போர்த்துகீசிய ஆய்வுகள் விமர்சனமானது, திமோர் ஆளுநரான அன்டோனியோ கோயல்கோ குரேரோவின் வரலாற்று ஆராய்ச்சியின் முன்னோடியாக இவரைக் குறிப்பிடுகிறது. பிரேசில் மற்றும் அங்கோலாவின் பொருளாதார வரலாறு குறித்தும் இவர் கருத்து தெரிவித்துள்ளார். மேற்கோள்கள் 1973 இறப்புகள் 1907 பிறப்புகள்