id
stringlengths
1
6
url
stringlengths
31
789
title
stringlengths
1
93
text
stringlengths
9
259k
595433
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE
உலோகேநாத்து மிசுரா
உலோகேநாத்து மிசுரா (Lokenath Mishra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் (1905-1975) அரசியல்வாதியாவார். 1905 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதியன்று இயாம்சிவு மிசுரா பார்வதிதேவி தம்பதியருக்கு மகனாக இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக இவர் ஒடிசாவிலிருந்து இந்திய அரசியலமைப்புச் சபையின் உறுப்பினராகவும் இருந்தார். சுதந்திரத்திற்கு முன்பு ஒருமுறை ஒடிசா சட்டமன்றத்தில் உறுப்பினராகவும், சுதந்திரத்திற்குப் பிறகு ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். சுதந்திரத்திற்கு முன்பு 1946 ஆம் ஆண்டில் தெற்கு பூரி சதர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2ஆவது சுதந்திரத்திற்கு முந்தைய ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு, 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் செபுரி மக்களவைத் தொகுதியிலிருந்து 1ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலோகேநாத்து மிசுரா 1975 ஆம் ஆண்டில் இறந்தார். மேற்கோள்கள் புற இணைப்புகள் Official biographical sketch in Parliament of India website 1905 பிறப்புகள் 1975 இறப்புகள் ஒடிசா அரசியல்வாதிகள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
595436
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87.%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D
கே. சந்தீப்
கே.சந்தீப் (K. Sandeep, பிறப்பு: 3 ஏப்ரல் 1973) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கணிதவியலாளர் ஆவார். நீள்வட்டப்பகுதி வகைக்கெழு சமன்பாடுகளில் இவர் நிபுணத்துவம் பெற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டுக்கான கணித அறிவியல் பிரிவில் இந்தியாவின் மிக உயரிய அறிவியல் விருதான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது கே. சந்தீப்புக்கு வழங்கப்பட்டது. தற்பொழுது பெங்களூரில் உள்ள டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து செயல்படுகிறார். மேற்கோள்கள் 1973 பிறப்புகள் வாழும் நபர்கள் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றவர்கள் இந்தியக் கணிதவியலாளர்கள்
595439
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
பகவத் பிரசாத் மொகந்தி
பகவத் பிரசாத் மொகந்தி (Bhagabat Prasad Mohanty) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1929 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் ஒரு வழக்கறிஞரும் ஆவார். ஒடிசா சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒடிசா அரசின் உயர்கல்வி அமைச்சராகவும் பணியாற்றினார். வாழ்க்கைக் குறிப்பு பகவத் பிரசாத்து மொகந்தி 1929 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று பிறந்தார் 1971 ஆம் ஆண்டில் பிரயா சோசலிசுட்டு கட்சி வேட்பாளராக கேந்திரபாராவிலிருந்து ஒடிசா சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். 1985 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக ஒடிசா சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மொகந்தி 8 டிசம்பர் 2019 அன்று தனது 90 ஆவது வயதில் காலமானார் மேற்கோள்கள் 2019 இறப்புகள் 1929 பிறப்புகள் ஒடிசா அரசியல்வாதிகள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
595442
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE
பிபுதேந்திர மிசுரா
பிபுதேந்திர மிசுரா (Bibudhendra Mishra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1920 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், முன்னாள் மத்திய அமைச்சர், வழக்கறிஞர், விளையாட்டு அமைப்பாளர், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் என ஒரு பன்முக ஆளுமையாக அறியப்படுகிறார். ஒடிசாவின் பூரியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக ஒடிசாவை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையிலும் ஓர் உறுப்பினராக இருந்தார். பிபுதேந்திர மிசுரா ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள சசிகோபாலில் குந்தெய்பெண்ட்டு சாகியில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் கோபிநாத் மிசுரா மற்றும் தாயார் பெயர் ராச்யபாலா தேவி என்றும் அறியப்படுகிறது. 1936 ஆம் ஆண்டில் பூரி மாவட்டப் பள்ளியில் மெட்ரிகுலேசன் படிப்பும் பிறகு, 1941 ஆம் ஆண்டில் இரவென்சா கல்லூரியில் பட்டமும் பெற்றார். 1949 ஆம் ஆண்டில் பாட்னா சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். ஒடிசா தடகள சங்கத்தின் தலைவர், சன்சைன் கால்பந்து கழகத்தின் தலைவர், ஒடிசா துடுப்பாட்ட சங்கத்தின் நிறுவனர் உறுப்பினர், கட்டாக் கால்பந்து கழகத்தின் நிறுவனர் உறுப்பினர், உட்டா இசை சங்கத்தின் தலைவர் என பல பொறுப்புகளையும் பிபுதேந்திர மிசுரா வகித்துள்ளார். 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதியன்று பிபுதேந்திர மிசுரா இறந்தார். மேற்கோள்கள் புற இணைப்புகள் Official biographical sketch in Parliament of India website "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" 1920 பிறப்புகள் 2012 இறப்புகள் ஒடிசா அரசியல்வாதிகள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
595443
https://ta.wikipedia.org/wiki/2023%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D
2023 நாக்பூர் வெள்ளம்
2023 நாக்பூர் வெள்ளம் (2023 Nagpur Flood) என்பது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 அன்று இந்திய மாநிலமான மகாராட்டிராவில் உள்ள நாக்பூர் நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிகழ்வாகும். இந்த வெள்ளம் நகரின் பல்வேறு பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான மக்களை வெளியேற்றியதோடு இறப்புகளையும் பொருளாதார அழிவையும் ஏற்படுத்தியது. காரணம் நாக்பூர் நகரில் 109 மி.மீ கனமழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது, இதனால் நாக் நதி அருகிலுள்ள பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடியது, வீடுகள், பள்ளிகள் வணிக பகுதிகள் மற்றும் மருத்துவமனைகள் வெள்ளத்தில் மூழ்கின. தவறான திட்டமிடப்பட்ட மழைநீர் வடிகால் அமைப்பு மற்றும் நாக் ஆற்றின் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் ஆற்றின் ஓட்டம் தடைபடுகிறது. கூடுதலாக, அம்பாசாரி ஏரியில் உள்ள ஐகோர்னியா எனப்படும் ஆகாயத் தாமரை வகை களைச் செடியின் வளர்ச்சி நாக் ஆற்றின் குறுக்கே பெரிய வெளியேற்ற புள்ளிகளை தடுப்பதால் வெள்ளத்திற்கு மேலும் பங்களித்தது. பின்விளைவு நான்கு பதிவு செய்யப்பட்ட இறப்புகள் மற்றும் 400 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர் தேசிய பேரிடர் பதில் படை மற்றும் மாநில பேரிடர் பதில் படை உட்பட மீட்பு மற்றும் நிவாரண குழுக்கள் 10000 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ₹10,000 நிவாரண நிதியும், பாதிக்கப்பட்ட வணிக உரிமையாளர்களுக்கு ₹5,00,0000 நிதியும் அறிவிக்கப்பட்டது. நாக் ஆற்றின் மீது ஒரு பாலம் இடிந்து, நகரின் முக்கிய நெடுஞ்சாலையைத் தடுக்கிறது. நாக் ஆற்றின் தடுப்புச்சுவர் பல்வேறு இடங்களில் இடிந்து விழுந்தது. மேற்கோள்கள் 2023 நிகழ்வுகள் வெள்ளப்பெருக்கு மகாராட்டிரம்
595451
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
நோபல் பரிசு பெற்ற இணையர்களின் பட்டியல்
நோபல் பரிசு பெற்ற இணையர்களின் பட்டியல் (List of couples awarded the Nobel Prize) என்பது நோபல் பரிசு பெற்ற மற்றும் பரிந்துரைக்கப்பட்ட கணவன் மனைவி பட்டியல் ஆகும். பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு பெற்ற அபிஜித் பேனர்ஜி மற்றும் எஸ்தர் டுப்லோ ஆகியோர் சமீபத்திய நோபல் பரிசுப் பெற்ற இணையர் ஆவர். பரிசு பெற்றவர்கள் பரிந்துரைகள் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இணையர் அமெரிக்க சமாதானவாதிகளான எட்வின் மீட் (1849-1937) மற்றும் லூசியா அமெசு மீட் (1856-1936) ஆவர். சாமுவேல் ட்ரெயின் டட்டனால் (1849-1919) சமாதானத்தை மேம்படுத்துவதில் செய்த பல பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்டனர். மற்ற இணையர்கள் அவரவர் தம் துறைகளில் கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ மதிப்புமிக்க சுவீடன் நாட்டு நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டனர். நோபல் குழுவின் சரிபார்க்கப்பட்ட பரிந்துரையின் பேரில் பின்வரும் இணையர்களைத் தவிர, மற்ற இணையர்களும் அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர்களில் உகுர் சாகின் மற்றும் ஓசுலெம் டுரெசி-சாகின் ஆகியோரும் அடங்குவர். ஜான் கியூ. ட்ரோஜனோவ்ஸ்கி மற்றும் வர்ஜீனியா மேன்-யீ லீ (மருத்துவத்திற்காக), பேட்ரிக் எஸ். மூர் மற்றும் யுவான் சாங்-மூர் (மருத்துவத்திற்காக), ஜான் கப்ளர் மற்றும் பிலிப்பா மராக்-கப்லர் (மருத்துவத்திற்காக), ஜெரோம் கார்லே மற்றும் இசபெல்லா லுகோஸ்கி கார்லே (வேதியியல்), ரிச்சர்ட் பெவர் மற்றும் லாரிசா வோலோகோன்ஸ்கி-பெவர் (இலக்கியத்திற்காக), பால் ஆசுடர் மற்றும் சிரி ஹஸ்ட்வெட் இலக்கியம்), பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் (அமைதிக்காக), அமோரி லோவின்ஸ் மற்றும் ஹண்டர் ஷெல்டன்-லோவின்ஸ் (அமைதிக்காக), இவான் சுவன்ஜீஃப் மற்றும் டான் எங்கிள்-சுவன்ஜீஃப் (அமைதிக்காக), மற்றும் சோரன் ஜோகான்சன் மற்றும் கத்தரினா ஜூசிலியஸ் -ஜோஹன்சன் (பொருளாதாரத்திற்காக) பரிந்துரைக்கப்பட்ட இணையர்கள் ஆவர். பரிந்துரைக்கப்பட்டவர்கள் குறிப்புகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள்   நோபல் பரிசு
595454
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
கருஞ்சாம்பல் கரிச்சான்
கருஞ்சாம்பல் கரிச்சான் (ashy drongo, Dicrurus leucophaeus ) என்பது டிக்ரூரிடே என்ற ட்ரோங்கோ குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை இனமாகும். இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. இவற்றின் உடலின் சாம்பல் நிற நிறக்கூறு, இடம்பெயர்வு முறைகள், கண்ணைச் சுற்றியுள்ள வெள்ளைத் திட்டுகளின் அளவு ஆகியவற்றில் வேறுபாடுக்களைக் கொண்டுள்ளன. விளக்கம் வயது முதிர்ந்த கருஞ்சாம்பல் கரிச்சானின் உடல் முதன்மையாக அடர் சாம்பல் நிறமாகவும், வால் நீளமாகவும் ஆழமாக பிளவு பட்டதாகவும் இருக்கும், சாம்பல் நிற இறகுகளின் நிறக்கூறில் பல துணையினங்கள் வேறுபடுகின்றன. சில துணையினங்களின் தலையில் வெள்ளைத் திட்டுகள் உள்ளன. இளம் பறவைகள் மங்கிய பழுப்பு சாம்பல் நிறத்தில் இருக்கும். இந்தியாவில் காணப்படும் துணையினமான இந்தியக் கருஞ்சாம்பல் கரிச்சான் (லாங்கிகாடாடஸ்) மிகவும் கருமையாக கிட்டத்தட்ட கருங்குரிச்சானைப் போன்று இருக்கும். இது அதிக உயரமான வன வாழ்விடங்களில் காணப்படுகிறது. கருங்கரிச்சானின் பளபளப்பு இல்லாத அடர் சாம்பல் நிறத்தில் இதன் அடிப்பகுதி உள்ளது. இதன் கருவிழி கருஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. லுகோஜெனிஸ் மற்றும் சலாங்கென்சிஸ் ஆகிய துணையினங்கள் வெள்ளை நிற கண்-திட்டுகளைக் கொண்டுள்ளன. அழைப்புகள் கருங்கரிச்சானை விட சற்று மூக்கொலி, நாண் ஒலி ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளது. பரவல் கருஞ்சாம்பல் கரிச்சான்கள் கிழக்கு ஆப்கானித்தானிலிருந்து கிழக்கே தெற்கு சீனா வரையிலான வெப்பமண்டல தெற்கு ஆசியாவின் மலைப்பகுதிகளிலும், தெற்கு யப்பானில் உள்ள இரியூக்கியூ தீவுகளிலும் (குறிப்பாக ஒகினாவா ) இந்தோனேசியாவிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. இதன் வாழிட எல்லையின் வடக்குப் பகுதியில் உள்ள பல பறவைகள் வலசை போகுபவை. நடத்தையும், சூழலியலும் கருஞ்சாம்பல் கரிச்சான் குட்டையான கால்களைக் கொண்டது. இது மரங்களின் உச்சியில் அமர்ந்து பறந்து பறந்து பூச்சிகளை பிடித்து உண்ணும். ஆனால் சில சமயங்களில் மரத்தின் தடித்த கிளைகளில் இருந்தும் உணவு சேகரிக்கிறது. இது தனித்தனியாகவோ, இணையாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ காணப்படும். இடம்பெயர்வின் போது இவை சிறிய கூட்டமாக பறக்கின்றன. இவற்றின் இனப்பெருக்க காலம் மே முதல் சூன் வரை ஆகும். இவை மரத்தில் குழிவான கூட்டை அமைத்து அதில் மூன்று அல்லது நான்கு சிவப்பு அல்லது பழுப்பு நிற முட்டைகளை இடும். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இணைய பறவைகள் சேகரிப்பில் Ashy drongo காணொளிகள், ஒளிப்படங்கள் & ஒலிகள் தெற்காசியப் பறவைகள் தென்கிழக்காசியப் பறவைகள் சீனப் பறவைகள் இமயமலைப் பறவைகள் கரிச்சான்கள்
595455
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
மாலிப்டினம் ஆக்சிடெட்ராகுளோரைடு
மாலிப்டினம் ஆக்சிடெட்ராகுளோரைடு (Molybdenum oxytetrachloride) என்பது MoOCl4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். வெப்பவியல் தரவுகளின்படி இது நிலைப்புத்தன்மையற்ற ஒரு சேர்மமாகும். அடர் பச்சை நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் மாலிப்டினத்தின் இதர ஒருங்கிணைவுச் சேர்மங்களை தயாரிக்கப் பயன்படுகிறது. C4v என்ற சமச்சீருடன் சதுத்தளப் பட்டக அமைப்பை மாலிப்டினம் ஆக்சிடெட்ராகுளோரைடு ஏற்றுக்கொள்கிறது. பிற Mo(VI) சேர்மங்களைப் பொறுத்தவரை, அவை டையா காந்தப் பண்பை கொண்டவையாக உள்ளன. வெப்பப்படுத்தினால் இது MoOCl3 ஆக் சிதைவடைகிறது. தயாரிப்பு மாலிப்டினம் பெண்டாகுளோரைடை காற்றில் எரியச் செய்தால் மாலிப்டினம் ஆக்சிடெட்ராகுளோரைடு உருவாகும். It also arises by chlorination of molybdenum trioxide: MoO3 + 2 SOCl2 → MoOCl4 + 2 SO2 மேற்கோள்கள் ஆக்சி குளோரைடுகள் மாலிப்டினம்(VI) சேர்மங்கள்
595457
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF
பியேர் அகோத்தினி
பியேர் அகோத்தினி (Pierre Agostini, பிறப்பு: 23 சூலை 1941) ஒரு பிரான்சிய செய்முக இயற்பியலாளரும் மற்றும் ஓகைய்யோ மாநில பல்கலைக்கழகத்தில் தகைசால் பேராசிரியரும் ஆவார். இவர் வலுவான-புல சீரொளி இயற்பியல் மற்றும் அட்டோநொடி அறிவியலில் முன்னோடியாக அறியப்பட்டவர் ஆவார். இவர் குறிப்பாக பயன்தொடக்க அயனியாக்க ஆற்றலுக்கு மேலான ஆற்றல் மற்றும் அட்டோநொடி ஒளித்துடிப்புகளின் சிறப்பியல்புப் பண்புகளை இரு-ஒளியன் நிலைத்திரிபு (RABBITT) நுட்பத்தின் குறுக்கீடு மூலம் அட்டோநொடி அடித்தல் புனரமைப்பு கண்டுபிடித்தமை ஆகியவற்றிற்காக அறியப்படுகிறார். இவருக்கு 2023 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டது. கல்வியும் தொழிலும் பியேர் அகோஸ்தினி 1941 ஆம் ஆண்டு பிரெஞ்சின் பாதுகாப்பில் உள்ள துனிசியாவின் தூனிஸில் பிறந்தார். இவர் தனது இளங்கலைப் பட்டத்தை 1959-ஆம் ஆண்டில் பிரான்சின் லா பிளெச்சில் உள்ள பிரிட்டானி தேசிய இராணுவப் பள்ளியில் பெற்றார். அகோஸ்டினி ஐக்சு-மார்செய்ல் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயின்றார், அங்கு இவர் இளங்கலை கல்வியியல் பட்டத்தை 1961-ஆம் ஆண்டில் பட்டம், 1962- ஆம் ஆண்டில் MAS பட்டம் மற்றும் 1968-ஆம் ஆண்டில் ஒளியியலில் முனைவர் பட்டத்தையும் முனைவர் பட்டத்திற்குப் பிறகு, அவர் 1969 இல் சிஇஏ சாக்லேயில் ஆராய்ச்சியாளராக ஆனார். 2002 வரை அங்கேயே இருந்தார். இந்த நேரத்தில், அகோஸ்டினி ஜெரார்டு மைன்ஃப்ரே மற்றும் கிளாட் மனுசு ஆகியோரின் ஆய்வகத்தில் சக்திவாய்ந்த சீரொளிக்கற்றைகள் பொருத்தப்பட்டிருந்த சூழலில் வேலை செய்தார். வாயுவில் 1979 ஆம் ஆண்டில் செனான் வாயுவின் மேலே உள்ள அயனியாக்கத்தை அவர்கள் முதலில் ஆய்வு செய்தார்கள். 2001 ஆம் ஆண்டில், சிஈஏ சாக்லேயில் உள்ள அகோஸ்டினி மற்றும் அவரது குழுவினர், ஹார்ம் கீர்ட் முல்லருடன் சேர்ந்து, பருப்பொருள்கள் குறித்த அடிப்படை ஆய்விற்கான டச்சு ஃபவுண்டேஷன் (FOM) அமைப்பில் ஒவ்வொரு 250 அட்டோநொடிகளிலும் ஒளித்துடிப்புகளின் தொடரை உருவாக்க முடிந்தது. மீப்புறப் புற ஊதா ஒளித்துடிப்புகளை அசல் அகச்சிவப்பு ஒளியுடன் மீண்டும் இணைப்பதன் மூலம் அவை குறுக்கீடு விளைவை உருவாக்கியது, அது ஒளித்துடிப்புகளின் நீளம் மற்றும் மறுநிகழ்வு விகிதத்தை வகைப்படுத்த அனுமதிக்கிறது. அகோஸ்டினி 2002 மற்றும் 2004 க்கு இடையில் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள புரூக்ஹேவன் தேசிய ஆய்வகத்தில் வருகை தரும் அறிவியலாளராக இருந்தார். அங்கு இவர் லூயிசு எஃப். டிமவுரோவின் குழுவில் பணியாற்றினார். இவர் 2005 ஆம் ஆண்டில் ஓகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியரானார். லூயிசு எஃப். டிமவுரோவுடன் இணைந்து இப்பல்கலைக்கு ஒரு வருடம் முன்பு சென்றார். அகோஸ்டினி 2018-ஆம் ஆண்டில் இதே பல்கலைக்கழகத்தில் தகைசால் பேராசிரியரானார். கௌரவங்களும் விருதுகளும் அகோஸ்டினி 1995 ஆம் ஆண்டில் பிரெஞ்சு அகாடமி ஆஃப் சயின்ஸிடமிருந்து குஸ்டாவ் ரிபாட் பரிசைப் பெற்றார். 2003 ஆம் ஆண்டில், இவர் கே-லுசாக்-ஹம்போல்ட் பரிசு மற்றும் பருப்பொருள்கள் குறித்த அடிப்படை ஆய்விற்கான டச்சு ஃபவுண்டேஷன் (FOM) அமைப்பிடமிருந்து ஜூப் லாஸ் பெல்லோஷிப்பைப் பெற்றார். ஆப்டிகல் சொசைட்டி ஆஃப் அமெரிக்கா (OSA) நிறுவனத்திடமிருந்து நிறமாலையியலில் வில்லியம் எஃப். மெக்கர்சு விருதினையும் மற்றும் அலெக்சாண்டர் வான் கூம்போல்ட் அறக்கட்டளையின் பரிசினையும் பெற்றார். அவர் 2008-ஆம் ஆண்டில் ”வலுவான அகச்சிவப்பு சீரொளி ஒளித்துடிப்புகளுக்கு ஒப்புவிக்கப்பட்ட அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளின் நேரியல் அல்லாத துலங்கலின் இயக்கவியல் பற்றிய முக்கிய நுண்ணறிவுகளை வழங்கும் புதுமையான சோதனைகளின் வளர்ச்சியில் தலைமைத்துவத்திற்காக” இவர் ஓகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2023 ஆம் ஆண்டில், "பொருளில் எலக்ட்ரான் இயக்கவியல் பற்றிய ஆய்வுக்காக ஒளியின் அட்டோநொடி ஒளித்துடிப்புகளை உருவாக்கும் சோதனை முறைகளுக்காக" இயற்பியலுக்கான நோபல் பரிசை அன்னே எல்'ஹுய்லியர் மற்றும் பெரெங்கு கிராவ்சுடன் இணைந்து பெற்றார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Homepage at The Ohio State University 1941 பிறப்புகள் வாழும் நபர்கள் நோபல் இயற்பியற் பரிசு பெற்றவர்கள் பிரெஞ்சு இயற்பியலாளர்கள் நோபல் பரிசு பெற்ற பிரான்சியர்கள்
595471
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
மாலிப்டினம் ஆக்சிடெட்ராபுளோரைடு
மாலிப்டினம் ஆக்சிடெட்ராபுளோரைடு (Molybdenum oxytetrafluoride) என்பது MoOF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். வெண்மை நிறத்தோடு டையா காந்தப்பண்பு கொண்ட திண்மமாக மாலிப்டினம் ஆக்சிடெட்ராபுளோரைடு காணப்படுகிறது. எக்சுகதிர் படிகவியல் ஆய்வின்படி, இது மாலிப்டினம் அணுக்களும் புளோரின் அணுக்களும் அடுத்தடுத்து மாறிமாறி இடம்பெற்றுள்ள நேரியல் சங்கிலியைக் கொண்ட ஒரு ஒருங்கிணைப்பு பலபடியாகும். ஒவ்வொரு மாலிப்டினம் மையமும் எண்முகத்துடன் காணப்படுகின்றன. ஆக்சைடு, மூன்று விளிம்புநிலை புளோரைடுகள் மற்றும் பாலம் அமைட்த்துள்ள புளோரைடுகள் ஆகியவற்றால் ஒருங்கிணைப்பு கோளம் வரையறுக்கப்படுகிறது. இந்த மையக்கருத்திற்கு மாறாக, தங்குதன் ஆக்சிடெட்ராபுளோரைடு ஒரு நாற்படியாக படிகமாக்குகிறது. இங்கு மீண்டும் புளொரைடு ஈந்தணைவிகள் பாலம் அமைக்கின்றன. தயாரிப்பு மாலிப்டினம் ஆக்சிடெட்ராபுளோரைடின் அசிட்டோ நைட்ரைல் கூட்டு விளைபொருளானது மாலிப்டினம் அறுபுளோரைடை அசிட்டோ நைட்ரைலிலுள்ள அறுமெத்தில் இருசிலாக்சேனுடன் சேர்த்து சூடுபடுத்தினால் தயாரிக்க இயலும்.: மாலிப்டினம் ஆக்சிடெட்ராபுளோரைடு நீராற்பகுத்தலுக்கு உட்பட்டு மாலிப்டினம் இருபுளோரைடு ஈராக்சைடைக் கொடுக்கிறது. மேற்கோள்கள் மாலிப்டினச் சேர்மங்கள் ஆக்சிபுளோரைடுகள் உலோக ஆலைடுகள்
595488
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%28%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%29
காம்ப்டன் (குழிப்பள்ளம்)
காம்ப்டன் என்பது நிலாவினனப்பாற் பக்கத்தில் வடக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள ஒரு முதன்மை நிலாத் தாக்கக் குழிப்பள்ளம் ஆகும். காம்ப்டன் குழிப்பள்ளம் தொலைதூர நிலவு இது அம்போல்டியனம் மரியாவுக்குக் கிழக்கேயும் , சுவர் சமவெளியான ச்வார்சுசைல்டு மரியாவுக்குத் தென்மேற்கிலும் அமைந்துள்ளது. அம்போல்டியனம், சுவார்சுசைல்டு, காம்ப்டன் ஆகியவர்ருக்குத் தென்கிழக்கில் பெரிதும் அரிக்கப்பட்ட சுவான் குழிப்பள்ளம் உள்ளது. இந்த உருவாக்கம் தோராயமாக வட்ட வடிவத்தில் அகலத்தில் கணிசமாக வேறுபடும் ஒரு பரந்த ஒழுங்கற்ற வெளிப்புற விளிம்புடன் உள்ளது. உட்புறச் சுவரின் சில பகுதிகள் விளிம்பில் பரந்த அலமாரிகளை உருவாக்கும் படியடுக்குகளைக் கொண்டுள்ளன. மாடி சுவருக்குள் ஒரு தரை உள்ளது. இது சில காலத்திற்கு முன்பு அனற்குழம்புப் பாய்வுகளால் மீண்டும் தோன்றியவை. அனற்குழம்புஇந்த மேற்பரப்பு சுற்றுப்புறத்தை விட குறைந்த வெளிர்வைக் கொண்டுள்ளது , இது சற்று இருண்ட நிறத்தை அளிக்கிறது. தரையின் நடுப்பகுதியில் மையக் கொடுமுடியுள்ள மலைகளின் உருவாக்கம் உள்ளது. இக்கொடுமுடியைச் சுற்றி அரை வட்ட மலை வலயம் உள்ளது. இது பள்ளத்தின் மேற்குப் பகுதியில் விளிம்பின் உள் விளிம்பில் பாதி ஆரத்தில் உள்ளது. இந்த ஏற்றங்கள் அனற்குழம்பு மூடிய மேற்பரப்பு வழியாக கூழாங்கற்கள் கொண்ட உயர்வுகள் ஆகும். இவை ஒன்றுக்கொன்று ஒழுங்கற்ற இடைவெளியில் உள்ளன. உட்புறத்தில் மலை வலயத்திற்குள் மெல்லிய பள்ளத்தாக்குகளின் தொகுப்பும் உள்ளது , இது முதன்மையாக பள்ளத் தரையின் வடமேற்குப் பகுதியில் உள்ளது. கிழக்கு விளிம்பிற்கு அருகே ஒரு சிறிய கிண்ண வடிவ பள்ளத்தைத் தவிர , தரையில் சில சிறிய பள்ளங்கள் மட்டுமே உள்ளன. காம்ப்டன் கீழ் (தொடக்க கால) இம்பிரியன் காலத்தின் மிகப்பெரிய குழிப்பள்ளங்களில் ஒன்றாகும். செயற்கைக்கோள் குழிப்பள்ளங்கள் மரபாக, இந்தக் கூறுகள் சந்திர வரைபடங்களில் காம்ப்டனுக்கு மிக அருகில் உள்ள பள்ளத்தின் நடுப்புள்ளியின் பக்கத்தில் எழுத்திட்டு அடையாளம் காணப்படுகின்றன. மேற்கோள்கள் விக்கித் தரவு ஆயத்தொலைவுகள் நிலா நிலாக் குழிப்பள்ளங்கள்
595534
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
இந்தியக் கருஞ்சாம்பல் கரிச்சான்
இந்தியக் கருஞ்சாம்பல் கரிச்சான் (அறிவியல் பெயர்: Dicrurus leucophaeus longicaudatus) என்பது கருஞ்சாம்பல் கரிச்சானின் துணையினம் ஆகும். விளக்கம் இந்தியக் கருஞ்சாம்பல் கரிச்சானானது கருங்குரிச்சான் அளவில் இருக்கும். இது நீண்ட வால் கொண்டது. இதன் மேல் தோற்றம் பளபளப்பான சிலேட் கருப்பாக இருக்கும். உடலின் அடிப்பகுதி சற்று மங்கிப் பளபளப்பின்றி இருக்கும். விழிப்படலம் ஆழ்ந்த சிவப்பாகவும், கால்களும் அலகும் கொம்பு நிறமான கறுப்பாக இருக்கும். பரவலும் வாழிடமும் இந்தியக் கருஞ்சாம்பல் கரிச்சான் இமயமலைப் பகுதியில் இருந்து குளிர்காலத்தில் தென்னிந்தியாவுக்கு வலசை வருகிறது. வலசை வரும் இது பசுங்காடுகளிலும், இலையுதிர் காடுகளிலும் காணப்படும். இது மரங்களடர்ந்த காடுகளில் திரியக்கூடியது. காபி, தேயிலைத் தோட்டங்களிலும் காணப்படும். மலைகளில் 1500 மீட்டர் உயரம் வரைக் காணப்படும். நடத்தை இந்தியக் கருஞ்சாம்பல் கரிச்சான் மலை நேரங்களில் மரங்களின் உச்சியில் அமர்ந்து பாய்ந்து பறந்து ஈப்பிடிப்பானைப் போலப் பறக்கும் பூச்சிகளைப் பிடித்து உண்ணும். கரையான் புற்றுகளில் ஈசல்கள் வெளிவரும்போது இருபது பறவைகள் வரை கூட்டமாக திரளும். காப்பி தோட்டங்களில் முள்முருக்கு மலரும்போது அதில் வந்து தேனினை உண்ணும். வைவது போல கத்தினாலும் கிலி...லீ- லீ- லீ என அணில் போலக் குரல் கொடுப்பதையும் கேட்க இயலும். மேற்கோள்கள் கரிச்சான்கள் தென்னிந்தியப் பறவைகள்
595556
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
ஒழுங்கற்ற மரியாத் திட்டு
ஒழுங்கற்ற மரியாத் திட்டு (irregular mare patch) (IMP) என்பது வழ்க்கமாக நிலாவின் மரியாப் பகுதியில் உருவாகும் ஒரு வழவழப்பான, வட்டமான, சற்று குன்றுபோன்ற கிட்டதட்ட 500 மீட்டர் அகலம் உள்ள பகுதியாகும். கண்டுபிடிப்பு இவற்றின் சிறிய அளவாலும் புவியிலிருந்தான நோக்கீட்டு வானியல் சார்ந்த சிக்கல் காரணமாகவும் , இனா எனும் முதல் ஒழுங்கற்ற மரியாத் திட்டு 1971 ஆம் ஆண்டில் அப்பல்லோ 15 எடுத்த புகைப்படங்களைப் பகுப்பாய்வு செய்த பிறகு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட அப்பல்லோ 15 இன் நிலாப் புலனாய்வு சுற்றுகலன் மேலும் 70 நிலா மரியாத் திட்டுகளைக் கண்டுபிடித்தது. தோற்றம் ஒழுங்கற்ற மரியாத் திட்டுகளின் தோற்றம் உறுதியற்றது. ஒரு பகுதியின்அகவை அதன் மீது உள்ள பள்ளங்களின் எண்ணிக்கையால் அறுதியிடப்படுவதால், இந்தப் பகுதி குழிப்பள்ளங்கள் எண்ணிக்கையை வைத்து இந்த பகுதிகள் சில பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்பதை அறியலாம். குழிப்பள்ளங்களின் எண்ணிக்கை பிற அனற்குழம்புப் பாய்வுகளுடன் அவற்றின் நிறமாலை ஒற்றுமை காரணமாக அவை சிறிய எரிமலை அனற்குழம்புப் பாய்வுகள் என்று நிலாப் புலனாய்வு சுற்றுகலன் குழுவால் கருதப்பட்டுள்ளது. இருப்பினும் , மற்ற ஆய்வாளர்கள் இதை மறுக்கின்றனர் , ஒரு பெரிய திட்டுக்குப் பதிலாக பல தனித்தனி திட்டுகள் உள்ளன என்று குறிப்பிடுகின்றனர். இதற்கு ஏராளமான சிறிய அளவிலானெரிமலை உமிழ்வுகள் தேவைப்படும். நிலாவில் ஏற்படும் பிற உமிழ்வுகளில் அனற்குழம்பு பாய்வதற்கான அறிகுறியும் இல்லை. இன்னும் முதன்மையான தகவல் என்னவென்றால் , எரிமலலுமிழ்வு நடவடிக்கை பற்றிய கருதுகோள் , நிலாப் புவியியலின் தற்போதைய கோட்பாட்டுடன் முரண்படுகிறது , இது நிலா சுமார் 1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு குளிர்ந்து திண்மப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது. புவியியல் தாக்கங்கள் ஒழுங்கற்ற மரியாத் திட்டுகளைப் புரிந்துகொள்வதற்கு புதிய புவியியல் கோட்பாடுகள் சரியாக விளக்கப்பட வேண்டும்.தற்போதைய அறிவியல் கோட்பாடுகளின்படி , நிலாவின் சிறிய அளவு என்பது அதன் கவசம் சுமார் 1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முழுமையாக திண்மப்ப்பட்டிருக்க வேண்டும் என்பதாகும். இந்தப் புறணி நிலா உட்புறத்தின் மீதும் புவியியல் நடவடிக்கையைத் தடுக்கும். அண்மைய (புவியியல் அடிப்படையில்) உமிழ்வு , நிலாவில் உள்ள கதிரியக்க ஓரகத்திகளின் கதிரியக்க சிதைவிலிருந்து வெளியிடப்பட்ட வெப்பம் காரணமாக இருக்கலாம் என்பதையும் நினைத்ததை விட நிலா மிகவும் மெதுவாக குளிர்ந்துள்ளது என்பதையும் குறிக்கிறது. மேலும் காண்க நிலா நிலவியல் இனா (குழிப்பள்ளம்) நிலா மரியா நிலா. நூல்தொகை John Moore: Irregular Mare Patches on the Moon (2019). மேற்கோள்கள் நிலா நிலா நோக்கீடுகள் நிலாக் குழிப்பள்ளங்கள்
595575
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D
சராய் ஆலம்கிர்
சராய் ஆலம்கிர் (Sarai Alamgir) பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தின் வடக்கே குசராத்து மாவட்டத்தில் அமைந்துள்ள சராய் ஆலம்கிர் வட்டத்திலுள்ள முக்கிய நகரமாகும். சராய் ஆலம்கிர் குசராத்து மாவட்டத்தின் நான்கு வட்டங்களில் ஒன்றாகும். சாராய் ஆலம்கிர் ஜீலம் ஆற்றின் கிழக்குக் கரையில் 575 கிமீ2 (222 சது மை) பரப்பளவில், பெரிய நகரமான ஜீலத்தின் குறுக்கே அமைந்துள்ளது. ஊருக்கு கிழக்கே மேல் ஜீலம் கால்வாய் உள்ளது. சாராய் ஆலம்கிர் 1976 இல் நகராட்சி நிலைக்கு உயர்த்தப்பட்டது. 2001 இல் மாநகராட்சி தகுதி வழங்கப்பட்டது. புவியியல் சாராய் 32°54′00″ வடக்கிலும் 73°45′00″கிழக்கிலும் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 232 மீ (761 அடி) உயரத்தில் உள்ளது. கோடை காலத்தில், வெப்பநிலை சிறுது காலத்திற்கு 45 °C (113 °F) ஐ எட்டும். குளிர்காலங்களில் மிதமானதாகவே இருக்கும். ப்போஓட்ஃஊ வெப்பநிலை அரிதாக 1 °C (34 °F)க்கு கீழே குறையும். சராய் ஆலம்கிர் ஜீலம் நகரின் தெற்கே அமைந்துள்ளது. இது ஜீலம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. சராய்க்கு வடக்கே மிர்புரே, பிம்பர் நகரங்கள் உள்ளன. மண்டி பகாவுதீன் மற்றும் ரசூல் ஆகியவை சராய் ஆலம்கிரின் தெற்கே அமைந்துள்ளன வரலாறு பண்டைய வரலாற்றில், இப்பகுதி சிந்து சமவெளி நாகரிகத்திலும், காந்தார நாகரிகத்திலும் பங்கேற்றது. பிந்தைய தேதியில், [[பேரரசர் அலெக்சாந்தர் மற்றும் போரஸின் படைகளுக்கு இடையில் செலம் போர் நடந்தது. கடந்த காலங்களில், செல்வாக்கு உள்ளவர்கள் ஒரு கேரவன்செராயைக் கட்டுவார்கள். அது பயணிகளுக்கான ஓய்வு இல்லங்களாக இருந்தது. ஒரு பொதுவான சராய் ஒரு குடிநீர் கிணறு, ஒரு பிரார்த்தனை பகுதி மற்றும் மக்கள் ஓய்வெடுக்கும் இடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். சராய் ஆலம்கிரில் உள்ள 'சராய்' (ஓய்வு பகுதி) முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பால் நிறுவப்பட்டது. ஏனெனில் அதன் மூலோபாய இடம் பெரும் தலைநெடுஞ்சாலை மற்றும் ஜீலம் ஆறு மற்றும் காஷ்மீருக்கு அருகாமையில் உள்ளது. காலப்போக்கில், சராய் ஆலம்கிர் அருகிலுள்ள கிராம மக்களுக்கான மைய நகரமாக வளர்ந்தது. 3 மார்ச் 1922 இல் ஐந்தாம் ஜார்ஜ் அரச கழக இந்திய இராணுவப் பள்ளி நிறுவப்பட்டபோது சராய் ஆலம்கிர் முக்கியத்துவம் பெற்றது. அரச கழக இந்திய இராணுவத்தின் உறுப்பினர்களின் மகன்களுக்குப் பயனளிக்கும் வகையில் பிரித்தானிய இந்தியாவில் உள்ள நான்கு இராணுவப் பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும். இந்தக் கல்லூரி இப்போது ஜீலம் இராணுவக் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது பாக்கித்தானின் பழமையான நிறுவனங்களில் ஒன்றாகும். சுற்றியுள்ள முக்கியமான இடங்கள் சராய் ஆலம்கிர் என்பது பழங்கால பெரும் தலைநெடுஞ்சாலைக்கும்]] ஜீலம் ஆற்றுக்கும் இடையே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க குறுக்கு சாலையாகும். செலம் போரின் தளங்கள், வரலாற்று மற்றும் பழமையான அலெக்சாந்திரியா நகரமான புசெபெலஸ் (அல்லது புசெபாலா) மற்றும் மிகப்பெரிய ரோடாசு கோட்டை ஆகியவை அருகிலேயே உள்ளன. சான்றுகள் Coordinates on Wikidata பாகிஸ்தான் நகரங்கள் பஞ்சாப் (பாகிஸ்தான்)
595612
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87
ஆன் லியூலியே
ஆன் யெனிவீவ் லியூலியே (Anne Geneviève L'Huillier; பிறப்பு: 16 ஆகத்து 1958) ஒரு பிரான்சிய-சுவீடிய இயற்பியலாளரும், சுவீடனில் உள்ள லுண்ட் பல்கலைக்கழகத்தில் அணு இயற்பியல் பேராசிரியரும் ஆவார். இவர் ஒரு அட்டோநொடி இயற்பியல் குழுவை வழிநடத்துகிறார், இது நிகழ்நேரத்தில் எலக்ட்ரான்களின் இயக்கங்களை ஆய்வு செய்கிறது, இது அணு மட்டத்தில் வேதிவினைகளைப் புரிந்து கொள்ள பயன்படுகிறது. 2003-ஆம் ஆண்டில், இவரும் இவரது குழுவும் 170 அட்டோநொடிகள் கொண்ட மிகச்சிறிய சீரொளி ஒளித்துடிப்புடன் உலக சாதனையை முறியடித்தனர். 2022-ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான வுல்ஃப் பரிசு 2023-ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு உட்பட பல்வேறு மதிப்புமிக்க இயற்பியல் விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. வாழ்க்கை இவர் 1958-ஆம் ஆண்டில் பாரிசில் பிறந்தார். இவர் கோட்பாட்டு இயற்பியல் மற்றும் கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆனால், சாக்லே தளத்தில் உள்ள அணு ஆற்றல் மற்றும் மாற்று ஆற்றல் ஆணையத்தில் (CEA) முனைவர் பட்ட ஆய்வின் போது இயற்பியலுக்கு மாறினார். அதிக தீவிரம் கொண்ட சீரொளிப்புலங்களில் பல அயனியாக்கம் பற்றி இவரது ஆய்வுக் கட்டுரை இருந்தது. முனைவர் பட்டத்திற்குப் பிறகான ஆய்வு மாணவியாக, இவர் கோதன்பர்க், சுவீடன் மற்றும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களில் இருந்தார். 1986-ஆம் ஆண்டு முதல், இவர் நிரந்தரமாக பாரீசு சாக்லே பல்கலைக்கழகத்தின் அணு ஆற்றல் மற்றும் மாற்று ஆற்றல் ஆணையத்தில் பணியாற்றினார். 1992- ஆம் ஆண்டில், இவர் லுண்டில் ஒரு பரிசோதனையில் பங்கேற்றார், அங்கு ஐரோப்பாவில் ஃபெம்டோநொடி ஒளித்துடிப்புகளுக்கான முதல் தைட்டானியம் - நீலுக்கல் திட-நிலை சீரொளி அமைப்புகளில் ஒன்று நிறுவப்பட்டது. 1994-ஆம் ஆண்டில் இவர் சுவீடனுக்குச் சென்றார், அங்கு இவர் லுண்ட் பல்கலைக்கழகத்தில் 1995- ஆம் ஆண்டில் விரிவுரையாளராகவும், 1997- ஆம் ஆண்டில் பேராசிரியராகவும் பணியாற்றினார். கௌரவங்களும் விருதுகளும் இவர் 2007 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இயற்பியலுக்கான நோபல் குழுவில் இடம் பெற்றிருந்தார், மற்றும் முதல் சுவீடிய அறிவியல் அகாதெமியின் உறுப்பினராகவும் இருந்தார். 2003- ஆம் ஆண்டில், இவர் யூலியசு இசுபிரிங்கர் பரிசினைப் பெற்றார். 2011- ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் லோரியல் விருதைப் பெற்றார். 2013-ஆம் ஆண்டில், இவருக்கு கார்ல் செயிசு ஆராய்ச்சி விருது வழங்கப்பட்டது. பிளேய்சு பாசுகல் பதக்கம் மற்றும் பாரிசில் உள்ள பியரி மற்றும் மேரி கியூரி பல்கலைக்கழகம் (யுபிஎம்சி), பாரிசில் கெளரவப் பட்டம் ஆகியவற்றை இவர் பெற்றுள்ளார். இவர் 2018- ஆம் ஆண்டில் தேசிய அறிவியல் அகாதெமியின் வெளிநாட்டு கூட்டாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு வருடம் கழித்து, 2019- ஆம் ஆண்டில், ஐரோப்பிய இயற்பியல் சங்கத்தால் அறிவிக்கப்பட்ட குவாண்டம் மின்னணுவியல் மற்றும் ஒளியியலின் அடிப்படை அம்சங்களுக்கான பரிசுடன் இவர் அங்கீகரிக்கப்பட்டார். அன்னா லூயிலியே அமெரிக்க இயற்பியல் கழகம் மற்றும் ஆப்டிகாவின் சக உறுப்பினரும் ஆவார். 2021 ஆம் ஆண்டில், இவருக்கு அமெரிக்க ஒளியியல் கழகத்தால் "அதிவிரைவு சீரொளி அறிவியல் மற்றும் அட்டோநொடி இயற்பியலில் முன்னோடியாகப் பணியாற்றி, உயர் சீரிசையலைத் தலைமுறையை உணர்ந்து புரிந்துகொண்டு, அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளில் எலக்ட்ரான் இயக்கத்தின் நேர-தீர்மான பிம்பமாகலில் அதைப் பயன்படுத்துதல்" என்ற பணிக்காக மேக்ஸ் பார்ன் விருது வழங்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டில், "அதிவிரைவு சீரொளி அறிவியல் மற்றும் அட்டோநொடி இயற்பியலுக்கான முன்னோடிப் பங்களிப்புகளுக்காக" பெரென்சு கிரௌசு மற்றும் பால் கார்கம் ஆகியோருடன் இணைந்து இயற்பியலுக்கான வுல்ஃப் பரிசைப் பெற்றார். மேலும் 2022 ஆம் ஆண்டில், மூவருக்கும் அடிப்படை அறிவியலில் பிபிவிஏ அறக்கட்டளையின் ஃப்ரண்டியர் அறிவு விருது வழங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டில், "பொருளின் எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக ஒளியின் அட்டோநொடி ஒளித்துடிப்புகளை உருவாக்கும் சோதனை முறைகளுக்காக" பெரென்சு கிரௌசு, பியேர் அகோத்தினி ஆகியோருடன் இணைந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். பணிகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் 1958 பிறப்புகள் நோபல் பரிசு பெற்ற பிரான்சியர்கள் பிரெஞ்சு இயற்பியலாளர்கள் வாழும் நபர்கள் நோபல் இயற்பியற் பரிசு பெற்றவர்கள் நோபல் பரிசு பெற்ற சுவீடியர்கள் சுவீடிய இயற்பியலாளர்கள் நோபல் பரிசு பெற்ற பெண்கள்
595614
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE
சித்தா
சித்தா (திரைப்படம்)(Chithha) என்ற தலைப்பு சித்தப்பா என்பதன் சுருக்கம். இத்திரைப்படத்தினை இயக்கியவர் அருண்குமார் ஆவார். அப்பாவின் தம்பியே சித்தப்பா. சித்தப்பாவின் உணர்வுபூர்வமான பாசத்தை இந்தத் திரைப்படம் பேசுகின்றது. இந்தத் திரைப்படம் 2023 ஆம் அண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. விமர்சகர்களிடமிருந்து பரவலாகப் பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றது இத் திரைப்படம். பழனியைச் சேர்ந்த அரசு ஊழியரான ஈசுவரன் தனது மூத்த சகோதரர் இறந்த பிறகு அவருடைய மகள் சுந்தரி தாயார், அண்ணியுடன் வசித்து வருகிறார். அவர் தனது சகோதரரின் குடும்பத்தினருடம் மிகுந்த பாசத்துடனும் தேவைப்படும் நேரங்களில் அவர்களுக்கான உதவிகளையும் செய்து வருகின்றார். குறிப்பாக சுந்தரி மீது அதிக அன்பு செலுத்துகிறார், எப்போதும் அவளைப் பாதுகாத்து வருகிறார். ஒரு நாள் திடீரென சுந்தரி ஒரு மோசமான சிறார் மீதான பாலுணர்வு நாட்டம் மற்றும் பலாத்காரத்தில் மிகுந்த நாட்டம் உள்ளவர்களால் கடத்தப்படும்போது, இவரது வாழ்க்கை மாறுகிறது, இறுதியில், பழி அவர் மீதே விழுகிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை. நடிகர்கள் ஈசுவரன் ஆக சித்தார்த், சுந்தரியின் சித்தப்பா (சித்தா) சக்தியாக ஈஸ்வரனின் காதலியாக நிமிஷா சஜயன், ஈஸ்வரனின் மருமகள் சுந்தரி "சேட்டை"யாக சஹஸ்ர ஸ்ரீ சுந்தரியின் அம்மாவாக ஈஸ்வரியின் அண்ணியாக அஞ்சலி நாயர் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இந்திய நாடகத் திரைப்படங்கள் 2023 திரைப்படங்கள்
595617
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D
அனா மரியா பாட்ரிசியா பௌரிங்
அனா மரியா பாட்ரிசியா பௌரிங் (Ana María Patricia Fauring) அர்கெந்தீனாவைச் சேர்ந்த ஒரு கணிதவியலாளர் ஆவார். சர்வதேசக் கணித ஒலிம்பியாட் மற்றும் பிற சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்கின்ற அர்கெந்தீனா அணிகளுக்கு பயிற்சி அளிப்பதில் ஈடுபட்டுள்ள முதன்மைக் கணிதவியலாளர் என்பதற்காக பால் எர்டோசு விருதை வென்றார். 1982 ஆம் ஆண்டில் புவனெசு ஐரிசு பல்கலைக்கழகத்தில் ஏஞ்சல் ரபேல் லாரட்டோனோ'' என்பவரின் மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றார். இவருடைய ஆய்வறிக்கையின் தலைப்பு "கலப்பு திசையன் புலங்களில் நிலைத்தன்மைகளின் கருத்துக்கள்" என்பதாகும். மேற்கோள்கள் வாழும் நபர்கள் கணிதவியலாளர்கள் அர்ஜென்டீன அறிவியலாளர்கள்
595621
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
தென்னிந்திய வெண்வயிற்றுக் கரிச்சான்
தென்னிந்திய வெண்வயிற்றுக் கரிச்சான் (அறிவியல் பெயர்: Dicrurus caerulescens caerulescens) என்பது வெண்வயிற்றுக் கரிச்சானின் துணையினம் ஆகும். தெற்கு நேபாளத்தில் இருந்து மேற்கு தென்னிந்தியாவரை காணப்படுகிறது. விளக்கம் தென்னிந்திய வெண்வயிற்றுக் கரிச்சானானது கருங்கரிச்சான் அளவில் சுமார் 24 செ.மீ. நீளம் கொண்டதாக இருக்கும். இதன் விழிப்படலம் செம்பழுப்பான சிவப்பு நிறத்திலும், கால்கள் கறுப்பான பழுப்பு நிறத்தில் இருக்கும். இதன் வால் நீண்ட பிளவுற்றதாக இருக்கும். உடலின் மேற்பகுதி பளபளப்பான கறுப்பு நிறத்தில் இருக்கும். தொண்டையும், நெஞ்சும் பழுப்புத் தோய்ந்த கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கும். வயிறும், வாலடியும் வெண்மையாக இருக்கும். பரவலும் வாழிடமும் இப்பறவை தெற்கு நேபாளத்தில் இருந்து தென்னிந்தியாவரை காணப்படுகின்றது. தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த இலையுதிர் காடுகளிலும் சமவெளிகளிலும் காணப்படுகிறது. மலைகளில் 1000 மீட்டர் உயரம் வரை காணப்படுகிறது. இவை பொதுவாக நடுக்காடுகளில் இல்லாமல் காட்டுப் பாதைகள் சார்ந்த பகுதிகளில் திரியக் காணலாம். நடத்தை தென்னிந்திய வெண்வயிற்றுக் கரிச்சான் தனித்து மரங்களில் உயரே வீற்றிருக்கும். இரை தேடக்கூடிய பிற பறவைக் கூட்டங்களோடு சேர்ந்து பூச்சிகளை வேட்டையாடித் திரியும். மரங்களில் பூக்கள் பூக்கும் காலங்களில் பூக்களில் தேன் உண்பது உண்டு. இப்பறவை சற்று இனியக் குரலில் ஒலி எழுப்பும். பிற பறவைகளைப் போலப் போலியாக குரல் எழுப்புவதும் உண்டு. தென்னிந்திய வெண்வயிற்றுக் கரிச்சான் மார்ச் முதல் சூன் வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றது. இப்பறவை இலையுதிர் காடுகளிலோ மூங்கில் காடுகளிலோ கூடு அமைக்கும். கூட்டில் இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இடும். இதன் முட்டைகள் கருங்கரிச்சானின் முட்டைகளைப் போன்றே இருக்கும். மேற்கோள்கள் கரிச்சான்கள் தென்னிந்தியப் பறவைகள்
595625
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%28%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29
தி அல்கமிஸ்ட் (நாடகம்)
தி அல்கெமிஸ்ட் (The Alchemist) என்பது ஆங்கில நாடக ஆசிரியர் பென் ஜான்சனின் நகைச்சுவை நாடகம் ஆகும். 1610ஆம் ஆண்டில் கிங்சு மென் என்பவரால் முதன்முதலில் நாடகம் அரங்கேற்றப்பட்டது. இந்த நாடகம் பொதுவாக ஜான்சனின் சிறந்த மற்றும் சிறப்பியல்பு கொண்ட நகைச்சுவை நாடகமாகக் கருதப்படுகிறது; சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ் இது இலக்கியத்தில் மிகச் சரியான மூன்று கதைக்களங்களில் ஒன்று என்று நம்பினார். நாடகத்தின் உன்னதமான ஒற்றுமைகள் மற்றும் மனித முட்டாள்தனத்தின் தெளிவான சித்தரிப்பு ஆகியவை விக்டோரியன் காலத்தில் புறக்கணிக்கப்பட்ட காலத்தைத் தவிர்த்து, மேடையில் தொடர்ச்சியான வாழ்க்கையுடன் கூடிய சில மறுமலர்ச்சி நாடகங்களில் ஒன்றாக (சேக்சுபியரின் படைப்புகளைத் தவிர) இது இருக்கின்றது. மேற்கோள்கள் அமெரிக்க இலக்கியம்
595628
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF
இரவி நாராயண் பானி
இரவி நாராயண் பானி (Ravi Narayan Pani) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சனதா தளம் கட்சியின் உறுப்பினராக ஒடிசாவின் தியோகர் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது ஒடிசா அரசியலில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். இரவி நாராயண் பானி ஒடிசா சட்டமன்றத்தில் ஒருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். மேற்கோள்கள் புற இணைப்புகள் Official Biographical Sketch in Lok Sabha Website 1950 பிறப்புகள் வாழும் நபர்கள் ஒடிசா அரசியல்வாதிகள்
595638
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81
நிர்மல் பிசுவாசு
நிர்மல் பிசுவாசு (Nirmal Biswas) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் திரிபுரா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கோவாய் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2018 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்தவர். மேலும் பார்க்கவும் 2018 திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தல் 2023 திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தல் மேற்கோள்கள் வாழும் நபர்கள் திரிபுரா அரசியல்வாதிகள் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி அரசியல்வாதிகள்
595639
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%28II%29%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
இண்டியம்(II) குளோரைடு
இண்டியம்(II) குளோரைடு (Indium(II) chloride) என்பது InCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இண்டியம் உப்பும் ஐதரோகுளோரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் இச்சேர்மம் உருவாகும். இண்டியம்(II) குளோரைடு நிறமற்ற படிகங்களாக உருவாகிறது. தண்ணீருடன் வினைபுரிகிறது. அறியப்பட்ட மூன்று இண்டியம் குளோரைடுகளில் இதுவும் ஒன்றாகும். தயாரிப்பு 2000 பாகை செல்சியசு வெப்பநிலையில் இண்டியம் உப்பும் ஐதரோகுளோரிக் அமிலத்தையும் சேர்ந்து வினைபுரியச் செய்தால் இண்டியம்(II) குளோரைடு உருவாகிறது. இயற்பியல் பண்புகள் இண்டியம்(II) குளோரைடு a = 0.964 நானோமீட்டர், b = 1.054 நானோமீட்டர், c = 0.685 நானோமீட்டர், Z = 8. என்ற அளவுருக்களுடன் சாய்சதுர வடிவத்தில் நிறமற்ற படிகங்களாக உருவாகிறது. மூலக்கூறுகள் இருபடிகளாகவும் [InCl4] கட்டமைப்பையும் கொண்டுள்ளன. வேதிப் பண்புகள் இண்டியம்(II) குளோரைடு தண்ணீருடன் வினைபுரிகிறது. தண்ணீர் விகிகதச்சமமற்ற வினையை ஊக்குவிக்கிறது: இண்டியம்(II) குளோரைடு சூடுபடுத்தினால் ஆக்சிசனுடன் வினைபுரிகிறது: மேற்கோள்கள் இண்டியம் சேர்மங்கள் குளோரைடுகள்
595640
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE
பிசுவஜித் தத்தா
பிசுவஜித் தத்தா (Biswajit Datta) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் திரிபுரா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கோவாய் சட்டமன்றத் தொகுதிக்கு 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்தவர். மேலும் பார்க்கவும் 2018 திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தல் 2023 திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தல் மேற்கோள்கள் . வாழும் நபர்கள் திரிபுரா அரசியல்வாதிகள்
595641
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
கல்யாண்பூர்-பிரமோதேநகர் சட்டமன்றத் தொகுதி
கல்யாண்பூர்-பிரமோதேநகர் சட்டமன்றத் தொகுதி (Kalyanpur–Pramodenagar Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது கோவாய் மாவட்டத்தில் உள்ளது. இந்த சட்டமன்றத் தொகுதி கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2018 மேலும் பார்க்கவும் திரிபுரா சட்டப் பேரவையின் தொகுதிகளின் பட்டியல் கோவாய் மாவட்டம் திரிபுரா கிழக்கு (மக்களவைத் தொகுதி) மேற்கோள்கள் திரிபுரா சட்டமன்றத் தொகுதிகள் கோவாய் மாவட்டம்
595642
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF
பினாகி தாசு சவுத்ரி
பினாகி தாசு சவுத்ரி (Pinaki Das Chowdhury) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் திரிபுரா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கல்யாண்பூர்-பிரமோதேநகர் சட்டமன்றத் தொகுதிக்கு 2018 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். மேலும் பார்க்கவும் 2018 திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தல் 2023 திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தல் மேற்கோள்கள் . வாழும் நபர்கள் திரிபுரா அரசியல்வாதிகள்
595645
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE
வேமுரி கக்கையா
வெமுரி கக்கையா (Vemuri Gaggayya) (1895-1955) ஒரு இந்திய நடிகரும் பாடகரும் ஆவார். இவர் தெலுங்குத் திரைப்படங்கள் மற்றும் தெலுங்கு நாடகங்களில் தனது படைப்புகளுக்காக அறியப்பட்டவர். கக்கையா 1913-28 காலகட்டத்தில் கிருஷ்ணா மாவட்டம் மைலவரத்தில் "மைலவரமா பால பாரதி நாடக சமாஜத்தின்" முக்கிய உறுப்பினராக இருந்தார். "மைலாவரம் தியேட்டர்" மூலம், கக்கையா புராண பாத்திரங்களுக்கு பெயர் பெற்றவர். இவரது நாடக நிகழ்ச்சிகளைக் கண்ட சி. புல்லையா திரைப்படத் துறைக்கு இவரை அழைத்து வந்தார். 1933ல் புல்லையா இயக்கிய சதி சாவித்திரி படத்தில் யமனாக நடித்தார். இப்படம் 2வது வெனிஸ் திரைப்பட விழாவில் கௌரவ பட்டயத்தைப் பெற்றது. ஸ்ரீ கிருஷ்ண லீலாலு (1935), ஜலந்திராவின் சதி துளசி (1936), சண்டிகா ( 1940), மற்றும் பக்த பிரகலாதா (1942) (இரணியகசிபு ) போன்றவை இவரது மற்ற முக்கிய பாத்திரங்கள். இவர் "போ பாலா பொம்மிக்கன்" மற்றும் "திக்கரமுலு சைதுனா" போன்ற பிரபலாமான பாடல்களை பாடியுள்ளார். ஆரம்ப கால வாழ்க்கை கக்கையா 1895 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெமுருவில் பிறந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்த இவருக்கு இவரது மூத்த சகோதரர் இவருக்கு கல்வி கற்பிக்க முயன்றார். ஆனால் தனது முயற்சியில் தோல்வியடைந்தார். 1913 இல் இராமலட்சுமி என்பவரை மணந்தார். அந்த நாட்களில், சுரபி நாடக நிறுவனம் ஆந்திர பிரதேசம் முழுவதும் நாடகங்கள நடத்தி பெரும் கூட்டத்தை ஈர்த்து வந்தது. இதன் தாக்கத்தால் இசையும் பாடலும் கற்றுக்கொண்டார். அதே குழுவில் சேர்ந்து அவர்களுடன் சுற்றுப்பயணம் செய்து பல நாடகங்களில் நடித்தார். இவரது மகன் வேமுரி ராமையாவும் மேடை நடிகராக இருந்தவர். இறப்பு வேமுரி கக்கையா 1955 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி தனது சொந்த கிராமமான வேமுருவில் இறந்தார். சான்றுகள் வெளி இணைப்புகள் குண்டூர் மாவட்ட நபர்கள் 1955 இறப்புகள் 1895 பிறப்புகள்
595648
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
கமால்பூர் சட்டமன்றத் தொகுதி
கமல்பூர் சட்டமன்றத் தொகுதி (Kamalpur, Tripura Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது தலாய் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். சட்டப் பேரவை உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2018 மேலும் பார்க்கவும் திரிபுரா சட்டப் பேரவையின் தொகுதிகளின் பட்டியல் தலாய் மாவட்டம் மேற்கோள்கள் திரிபுரா சட்டமன்றத் தொகுதிகள் தலாய் மாவட்டம்
595652
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
சனாதன் மகாகுத்து
சனாதன் மகாகுத்து (Sanatan Mahakud) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். ஒடிசாவைச் சேர்ந்த இவர் 2014 ஆம் ஆண்டு முதல் ஒடிசாவிலுள்ள சம்புவா சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதியன்று, கியோஞ்சர் மாவட்ட அதிகாரிகள் சனாதன் மகாகுத்துவின் வீட்டை இடிப்பதாக அறிவித்தனர், ஏனெனில் அது முதலில் எசல் சுரங்க நிறுவனம் & தொழிற்சாலைகள் நிறுவனம் என்ற சுரங்க நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் பின்னர் சனாதன் மகாகுத்து ஒடிசா உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவைப் பெற்றார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில், சம்புவா சட்டப் பேரவைத் தொகுதியில் சுயேட்ச்சை வேட்பாளராக சனாதன் போட்டியிட்டார். இத்தேர்தலில் இவர் மொத்தம் 69,635 வாக்குகள் பெற்று 15 ஆவது ஒடிசா சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்ப வாழ்க்கை சனாதன் மகாகுத்து 1958 ஆம் ஆண்டு ஒடிசாவில் உள்ள கெந்துசார் மாவட்டத்தின் நம்பிரா கிராமத்தில் ஓர் இந்து கோபால் (யாதவ்) குடும்பத்தில் செமா மகாகுத்து என்பவருக்கு பிறந்தார். மேற்கோள்கள் வாழும் நபர்கள் 1958 பிறப்புகள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் ஒடிசா அரசியல்வாதிகள்
595653
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81
பனமாலி பாபு
பனமாலி பாபு (Banamali Babu) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கோகுல் சந்திர பாபு சரோச்சு குமாரி தம்பதியருக்க்கு மகனாக 1918 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த சேர்ந்த இவர் ஒடிசாவின் சம்பல்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 5 ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961 ஆம் ஆண்டில் பனமாலி பாபு 3 ஆவது ஒடிசா சட்டமன்றத்திற்கும், 4 ஆவது ஒடிசா சட்டமன்றத்திற்கும் சம்பல்பூர் தொகுதியிலிருந்து காங்கிரசு கட்சியின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். பனமாலி பாபு 1998 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதியன்று தனது 80 ஆவது வயதில் இறந்தார். மேற்கோள்கள் புற இணைப்புகள் Official biographical sketch in Parliament of India website 1918 பிறப்புகள் 1998 இறப்புகள் ஒடிசா அரசியல்வாதிகள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
595656
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D
பாகே கோவர்தன்
பாகே கோவர்தன் (Bhagey Gobardhan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியலாளர் 1934 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சனதா தளம் கட்சியின் வேட்பாளராகவும், 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராகவும் ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சந்திரசேகர் ஆட்சியில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்தார். பின்னர் இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்து 1991 ஆம் ஆண்டு மீண்டும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1993 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் தேதியன்று பாகே கோவர்தன் காலமானார். மேற்கோள்கள் புற இணைப்புகள் Official biographical sketch in Parliament of India website 1934 பிறப்புகள் 1993 இறப்புகள் ஒடிசா அரசியல்வாதிகள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
595663
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
மௌங்கி பவெண்டி
மௌங்கி காப்ரியேல் பவெண்டி (Moungi Gabriel Bawendi, ; பிறப்பு: 15 மார்ச் 1961) ஒரு அமெரிக்க-துனிசிய-பிரான்சிய வேதியியலாளர் ஆவார். இவர் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் லெஸ்டர் வுல்ஃப் பேராசிரியராக உள்ளார். பவெண்டி உயர்தர குவாண்டம் புள்ளிகளின் வேதி உற்பத்தியில் மேற்கொண்ட முன்னோடி முயற்சிகளுக்காக அறியப்படுகிறார். 2023- ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார். வாழ்க்கை வரலாறு மௌங்கி பவெண்டி, பிரான்சின் பாரிசில், துனிசியக் கணிதவியலாளரான முகமது சலா பௌண்டியின் மகனாகப் பிறந்தார். பிரான்சு மற்றும் துனிசியாவில் வாழ்ந்த காலங்களுக்குப் பிறகு, பவெண்டி குழந்தையாக இருந்தபோதே அவரது குடும்பத்தினர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். சலா பௌண்டி பர்டூ பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையில் பணிபுரிந்ததால், அவர்கள் இந்தியானாவின் வெஸ்ட் லஃபாயெட்டில் வசித்து வந்தனர். 1978-ஆம் ஆண்டில் வெஸ்ட் லஃபாயெட் ஜூனியர்-சீனியர் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். கூழ்ம குவாண்டம் புள்ளிகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் பவெண்டி ஒரு முன்னணி நபர் ஆவார். மேலும், 2000-2010 வரையிலான பத்தாண்டுகளில் மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட வேதியியலாளர்களில் இவரும் ஒருவர். 1982 ஆம் ஆண்டு ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில், இளங்கலைப் பட்டம் பெற்றார். 1988-ஆம் ஆண்டில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் கார்ல் பிரீடு மற்றும் தாகேஷி ஓகா ஆகியோரின் மேற்பார்வையில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். பிரீடுடன் இவர் பலபடி இயற்பியலில் பணிபுரிந்தார். மற்றும் ஓகாவுடன், பவெண்டி H3+ அயனியின் வெப்பப்பட்டைகளின் சோதனைகளில் பணியாற்றினார். இது 1989-ஆம் ஆண்டில் கவனிக்கப்பட்ட வியாழனின் உமிழ்வு நிறமாலையைப் புரிந்துகொள்வதில் பங்கு வகித்தது. தனது பட்டப்படிப்பின் போது, ஓகா பெல் ஆய்வுக்கூடங்களில் கோடைகால திட்டத்திற்கு பாவெண்டியை பரிந்துரைத்தார், அங்கு லூயிசு இ. புரூசு குவாண்டம் புள்ளிகள் பற்றிய ஆராய்ச்சிக்கு பாவெண்டியை அறிமுகப்படுத்தினார். பட்டப்படிப்பு முடிந்ததும், பவெண்டி புரூசுடன் பெல் ஆய்வுக்கூடத்தில் முதுகலை ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்தார். பவெண்டி 1990 இல் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் (MIT) சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டில் பேராசிரியரானார். விருதுகளும் கௌரவங்களும் பவெண்டிக்கு 1994- ஆம் ஆண்டில் ஸ்லோன் ரிசர்ச் பெல்லோஷிப் வழங்கப்பட்டது. அமெரிக்க வேதியியல் குமுகத்தின் (ACS) வேதியியலில் பட்டதாரி கல்விக்கான 1997-ஆம் ஆண்டிற்கான நோபல் கையொப்ப விருதை வென்றார். 2001 ஆம் ஆண்டில், மேம்பட்ட பொருட்களின் (மீநுண் பொருள்கள், உயிரிய பொருள்கள் மற்றும் ஆற்றல் பொருள்கள்) இயற்பிய வேதியியலில் சாக்லர் பரிசைப் பெற்றார். 2006-ஆம் ஆண்டில், இவருக்கு எர்னஸ்ட் ஆர்லாண்டோ லாரன்ஸ் விருது வழங்கப்பட்டது. இவர் 2003- ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்க சங்கத்தின் உறுப்பினராகவும், 2004-ஆம் ஆண்டில் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாதமியின் உறுப்பினராகவும் மற்றும் 2004-ஆம் ஆண்டில் தேசிய அறிவியல் அகாதெமியின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்ச் 23, 2010 அன்று நடந்த அமெரிக்க வேதியியல் குமுகத்தின் (ACS) தேசியக் கூட்டத்தின் போது, கூழ்மம் மற்றும் மேற்பரப்பு வேதியியலில் இந்த அமைப்பின் விருதை பவெண்டி பெற்றார். "உடல், உயிரியல் மற்றும் மருத்துவ முறைகளில் பரவலான பயன்பாடுகளுக்கான துல்லியமான பண்புகளுடன் கூடிய மீநுண் படிகங்களின் (nanocrystals) தொகுப்புக்காக" கிறிஸ்டோபர் பி. முர்ரே மற்றும் ஐயோன் டேக்வானுடன் இணைந்து 2020 ஆம் ஆண்டில் வேதியியலில் கிளாரிவேட் தகுதியுரை பரிசு பெற்றவராக பவேண்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2023 ஆம் ஆண்டில், பவெண்டிக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு புரூஸ் மற்றும் அலெக்சி எகிமோவு ஆகியோருடன் இணைந்து "குவாண்டம் புள்ளிகளைக் கண்டுபிடிபபிற்காகவும் தொகுப்பு முறைக்காகவும்" வழங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் என பவெண்டி, புரூஸ் மற்றும் எகிமோவ் ஆகியோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு சற்று முன்பு இச்செய்தி கசிந்தது. சுவீடிய அகாதமியின் வேதியியலுக்கான நோபல் கமிட்டியின் தலைவர், "... இராயல் சுவீடிய அறிவியல் அகாதெமி செய்த தவறு காரணமாக... இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை" என்று கூறினார். இஸ்டாக்ஹோம் நேரப்படி மு.ப 11:52 வரை, வெற்றியாளர்கள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட பெறுநர்களைப் போலவே உறுதிசெய்யப்பட்டுள்ளனர். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் 1961 பிறப்புகள் அமெரிக்க வேதியியலாளர்கள் துனீசிய அறிவியலாளர்கள் பிரான்சிய வேதியியலாளர்கள் ஆர்வர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் வாழும் நபர்கள் நோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள் சிக்காகோ பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் [[பகுப்பு:நானோ தொழில்நுட்பவியலாளர்கள் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள் நோபல் பரிசு பெற்ற துனீசியர்கள் நோபல் பரிசு பெற்ற பிரான்சியர்கள்
595672
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D
அலெக்சி எக்கிமோவ்
அலெக்சி இவானொவிச் எக்கிமோவ் (Alexey Ivanovich Ekimov, , பிறப்பு: 28 பிப்ரவரி 1945) ஒரு உருசிய-சோவியத் திட நிலை இயற்பியலாளர் ஆவார், இவர் வாவிலோவ் அரசு ஒளியியல் நிறுவனத்தில் பணிபுரியும் போது குவாண்டம் புள்ளிகள் எனப்படும் குறைக்கடத்தி மீநுண்படிகங்களைக் கண்டுபிடித்தார். 1967- ஆம் ஆண்டில், இவர் லெனின்கிராட் மாநில பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பீடத்தில் பட்டம் பெற்றார். குறைக்கடத்திகளில் எலக்ட்ரான் சுழல் மின்னணுவியல் நோக்குநிலை குறித்த பணிக்காக அவருக்கு 1975 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் அறிவியல் மற்றும் பொறியியலுக்கான மாநிலப் பரிசு வழங்கப்பட்டது. அலெக்சாந்தர் எஃப்ரோசு, லூயிசு யூஜின் புரூசு ஆகியோருடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட "மீநுண்படிக குவாண்டம் புள்ளிகள் அவற்றின் மின்னணு மற்றும் ஒளியியல் பண்புகளின் முன்னோடி ஆய்வுகள்" குறித்த பணிகளுக்காக அமெரிக்காவின் ஒளியியல் குமுகத்தின் 2006 இல் ஆர். டபிள்யூ. உட் பரிசினைப் பெற்றவர். 1999 ஆம் ஆண்டு முதல் எகிமோவ் நியூயார்க் மாநிலத்தில் உள்ள நானோகிரிஸ்டல்ஸ் டெக்னாலஜி என்ற நிறுவனத்தில் அறிவியலாளராகப் பணியாற்றி வரும் இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். எக்கிமொவ், புருசு, மௌங்கி பவெண்டி, ஆகியோர் "குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக" வேதியியலுக்கான 2023 நோபல் பரிசு பெற்றனர். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் 1945 பிறப்புகள் வாழும் நபர்கள் நோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள் இயற்பிய வேதியியலாளர்கள் உருசிய இயற்பியலாளர்கள் சோவியத் இயற்பியலாளர்கள் நோபல் பரிசு பெற்ற உருசியர்கள் நோபல் பரிசு பெற்ற சோவியத் நபர்கள்
595673
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D
முகமது மொகிம்
முகமது மொகிம் (Mohammed Moquim) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1965 ஆம் ஆண்டு சூலை மாதம் 3 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒடிசா அரசியலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியாக பணியாற்றிய இவர் 2019 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் கட்டாக் மாவட்டம் பாராபதி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஒடிசா சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பிர்தௌசியா பானோவை மணந்து கொண்டார். இத்தம்பதியருக்கு சோபியா பிர்தௌசு மற்றும் நைமா தாச்சின் என்ற 2 மகள்கள் உள்ளனர்- முகமது மொகிம் கட்டாக் மாவட்டம் லால்பாக் பகுதியை சேர்ந்தவராவார். இவரது தந்தை பெயர் முகமது நயீம் என்பதாகும். 1990 ஆம் ஆண்டில் ஒரிசா பொறியியல் கல்லூரியில் பொறியியலில் தேர்ச்சி பெற்றார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில் பாராபதி-கட்டாக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேற்கோள்கள் 1965 பிறப்புகள் வாழும் நபர்கள் ஒடிசா அரசியல்வாதிகள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
595685
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%87
யூன் பொசே
யூன் ஓலாவ் பொசே (Jon Olav Fosse; பிறப்பு: 29 செப்டம்பர் 1959) ஓர் நோர்வேய எழுத்தாளரும் நாடகப் படைப்பாளியும் ஆவார். இவர் 2023 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார். இவருடைய "சொல்லமுடியாதவற்றுக்குக் குரல் கொடுக்கும் புதுமையான நாடகங்களுக்கும் உரைநடை எழுத்துக்கும்" என்று நோபல் குழுவினர் குறித்துள்ளனர். என்றிக்கு இபுசெனுக்கு அடுத்ததாக இவருடைய நாடகங்களே அதிகமாக நடைபெறுகின்றன. இவரை புதிய இபுசென் என்று அடிக்கடி கூறுவதுண்டு. பொசேயின் படைப்புகள் 19 ஆம் நூற்றாண்டில் அமைந்த நாடக மரபின் தொடர்ச்சியாகக் கருதப்பட்டது. வாழ்க்கைக் குறிப்பு யூன் பொசே நோர்வேயில் யோகேசுன் என்னும் இடத்தில் பிறந்தார். இவருக்கு அகவை 7 இருக்கும்பொழுது ஒரு தீநேர்ச்சி ஏற்பட்டு அவர் இறப்பின் வாயில் இருந்து மீண்டார். இந்நிகழ்ச்சி அவர் ஆளான காலத்தில் எழுத்தாளராக உருவெடுக்கக் காரணமாக அமைந்தது. இவர் பெர்கன் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து ஒப்பீட்டு இலக்கியம் படித்தார், பிறகு இதே துறையில் நைனோர்சுக்கு (Nynorsk) என்னும் நோர்வேயின் மற்றொரு எழுத்துப்பணி தொடங்கினார். இவருடைய முதல் புதினம் "சிவப்பு, கறுப்பு" (Raudt, svart) 1983 இல் வெளியிடப்பட்டது. இவருடைய முதல் நாடகம் "நாம் எப்பொழுதும் பிரிக்கப்படமாட்டோம்" (Og aldri skal vi skiljast )1994 இல் எழுதி மேடை ஏறியது. பொசே புதினங்களும், சிறுகதைகளும் கவிதைகளும் குழந்தைகளுக்கான படைப்புகளையும், கட்டுரைகளையும் நாடங்களையும் படைத்துள்ளார். இவருடைய படைப்புகள் 40 மொழிகளிலே மொழிபெயர்க்கப்பட்டுல்ளன. இவர் வயலின் வாசிக்கவும் செய்வார்.. இவருடைய பதின்ம அகவை எழுத்துகள் இவர் படைத்த பாடல்களௌம் இசையமைப்புகளும் கொண்டிருந்தன. மதிப்பீடு என்றிக்கு இபுசெனுக்கு அடுத்து அதிக அளவில் மேடையேறிய நாடக எழுத்தாளர் பொசேதான். He has often been referred to as the "new Henrik Ibsen," என்றும் இவருடைய படைப்புகள் என்றிக்கு இபுசென் தொடங்கி வைத்த 19 ஆம் நூற்றாண்டின் மரபின் தொடர்ச்சி என்றும் கூறப்படுகின்றது பொசே பிரான்சின் செவாலியே விருதினை 2003 இல் வென்றார். வாழும் நூறு வியப்புறு அறிவாளிகளில் 83 ஆவதாக த டெயிலி டெலிகிராப் அறிவித்தது. 2011 முதல் பொசேவுக்கு கிரோட்டென் என்னும் நோர்வேயின் அரசின் இல்லத்தில் வாழ்நாள் முழுவதும் வாழ ஒரு பெருமையாக இடமளித்துள்ளனர். இது நோர்வேயின் அரச வளாகத்துக்குள் ஓசுலோ நகரத்தின் நடுவே அமைந்த ஒரு இல்லம். நோர்வேயின் கலை பண்பாட்டுக்கு ஆக்கம் அளிப்பவர்களுக்காக நோர்வேயின் அரசரால் பெருமைய செய்கையாக இவ்வில்லம் அளிக்கப்படுகின்றது. பைபிள் (விவிலியம்) மொழிபெயர்ப்பின் அறிவுரையாளர்களுள் ஒருவர் பொசே. 2011 இல் நோர்வே பைபிளை மொழிபெயர்த்துள்ளது. and hospitalized himself to rehabilitate his long-term alcohol consumption. 2015 இல் பொசேயின் முப்படைப்பாகிய விழிப்பு (அந்துவாக்கே, Andvake), ஓலாவின் கனவு ('Olavs draumar), களைப்பு (Kveldsvævd) ஆகியவற்றுக்கு நோர்திக்கு இலக்கிய மன்றத்தின் பரிசு வழங்கப்பெற்றது. மிகப்பல பொசேவின் படைப்புகள்பாரசீக மொழியில் முகம்மது அமீதால் மொழிபெயர்க்கப்பட்டு தெகுரானில் நாடங்கங்களாக நிகழ்த்தப்பட்டுள்ளன. ஏப்பிரல் 2022 இல், "ஒரு புதிய பெயர்: எழுபடைப்பில் VI-VII" என்னும் இவருடைய படைப்பு தாமியோன் சியரல்சு என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அது அனைத்துலக புக்கர் பரிசுக்கான குறும்பட்டியலில் இடம் பிடித்தது. The book was named a finalist for the 2023 National Book Critics Circle Award in Fiction. அக்டோபர் 2023 இல் பொசேவுக்கு இலக்கியத்துகான நோபல் பரிசு அறிவிக்கப்பெற்றது. தனிவாழ்க்கை இவர் சுலோவாக்கிய நாட்டைச் சேர்ந்த தன் இரண்டாம் மனைவியுடன் பகுதிநேரம் ஆத்திரியாவில் வாழ்கின்றார். இது தவிர இவருக்கு பெர்கன் நகரிலும் மேற்கு நோர்வேயிலும் வீடுகள் உள்ளன. முதலிலில் இவர் நோர்வே கிறித்துவத் திருச்சபையின் உறுப்பினராக இருந்தார். (2012-இற்கு முன்பு இவர் தன்னை இறைமறுப்பாளர் என்று கூறி வந்துள்ளார்) அதன் பின் 2012-2013 இல கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்ந்தார். இவர் தன்னுடைய கள்சாராயக்குடிக்கு வயப்பட்டிருப்பதில் இருந்து மீள மருத்துவ மனையில் இருந்தார். படைப்புகள் உரைநடை Raudt, svart (1983). "சிவப்பு, கறுப்பு Stengd gitar (1985). மூடிய கித்தார் Blod. Steinen er (1987). குருதி. கல் உள்ளது Naustet (1989). ஓடவேடு (Boathouse, மொழிபெயர்ப்பு May-Brit Akerholt (Dalkey Archive, 2017). Flaskesamlaren (1991)." புட்டி திரட்டி (The Bottle-Collector) Bly og vatn (1992). ஈயமும் நீரும் (Lead and Water) To forteljingar (1993). இரு கதைகள் (Two Stories) Prosa frå ein oppvekst (1994). குழந்தைப் பருவத்திலிருந்து உரைநடை எழுத்து (Prose from a Childhood) Melancholia I (1995). உளத்துயரம் (Melancholy, மொழிபெயர்ப்பு. Grethe Kvernes and Damion Searls (Dalkey Archive, 2006). Melancholy II (1996). உளத்துயரம் II, மொழிபெயர்ப்பு. Eric Dickens (Dalkey Archive, 2014). Eldre kortare prosa med 7 bilete av Camilla Wærenskjold (1998). Older Shorter Prose with 7 Pictures of Camilla Wærenskjold Morgon og kveld (2000). காலையும் மாலையும், மொழிபெயர்ப்பு. Damion Searls (Dalkey Archive, 2015). Det er Ales (2004). தீக்காயலில் ஆலிசு, மொழிபெயர்ப்பு. Damion Searls (Dalkey Archive, 2010). Andvake (2007). விழிப்புநிலை Kortare prosa (2011). குறும் உரைநடை எழுத்து Olavs draumar (2012). ஓலாவின் கனவுகள் Kveldsvævd (2014). களைப்பு Trilogien (2014). முப்படைப்பு, மொழிபெயர்ப்பு. May-Brit Akerholt (Dalkey Archive, 2016). Compiles three novellas: Wakefulness, Olav's Dreams and Weariness. Det andre namnet – Septologien I-II (2019). மற்றொரு பெயர்: எழுபடைப்பு I-II, மொழிபெயர்ப்பு Damion Searls (Fitzcarraldo Editions, 2019). Eg er ein annan – Septologien III-V (2020). நான் இன்னொன்று எழுபடைப்பு III-V, மொழிபெயர்ப்பு. Damion Searls (Fitzcarraldo Editions, 2020). Eit nytt namn – Septologien VI-VII (2021). ஒரு புதிய பெயர் எழுபடைப்பு VI-VII, மொழிபெயர்ப்பு. Damion Searls (Fitzcarraldo Editions, 2021). ஆங்கிலத்தில் தொகுப்புகள் Scenes from a Childhood, trans. Damion Searls (Fitzcarraldo Editions, 2018). Collects texts from various sources. Melancholy I-II, trans. Damion Searls and Grethe Kvernes (Fitzcarraldo Editions, 2023) நாடகங்கள் Nokon kjem til å komme (written in 1992–93; first produced in 1996). Someone Is Going to Come Home Og aldri skal vi skiljast (1994). And We'll Never Be Parted Namnet (1995). The Name Barnet (1996). The Child Mor og barn (1997). Mother and Child Sonen (1997). The Son Natta syng sine songar (1997). Nightsongs, trans. Gregory Motton (2002). Gitarmannen (1999). The Guitar Man Ein sommars dag (1999). A Summer's Day Draum om hausten (1999). Dream of Autumn Sov du vesle barnet mitt (2000). Sleep My Baby Sleep Besøk (2000). Visits Vinter (2000). Winter Ettermiddag (2000). Afternoon Vakkert (2001). Beautiful Dødsvariasjonar (2001). Death Variations Jenta i sofaen (2002). The Girl on the Sofa, trans. David Harrower (2002). Lilla (2003). Lilac Suzannah (2004) Dei døde hundane (2004). The Dead Dogs, trans. May-Brit Akerholt (2014). Sa ka la (2004) Varmt (2005). Warm Svevn (2005). Sleep Rambuku (2006) Skuggar (2006). Shadows Eg er vinden (2007). I Am the Wind, trans. Simon Stephens (2012). Desse auga (2009). These Eyes ஆங்கிலத்தில் தொகுப்புகள் Plays One (2002). Someone Is Going to Come Home; The Name; The Guitar Man; The Child Plays Two (2004). A Summer's Day; Dream of Autumn; Winter Plays Three (2004). Mother and Child; Sleep My Baby Sleep; Afternoon; Beautiful; Death Variations Plays Four (2005). And We'll Never Be Parted; The Son; Visits; Meanwhile the lights go down and everything becomes black Plays Five (2011). Suzannah; Living Secretly; The Dead Dogs; A Red Butterfly's Wings; Warm; Telemakos; Sleep Plays Six (2014). Rambuku; Freedom; Over There; These Eyes; Girl in Yellow Raincoat; Christmas Tree Song; Sea பாக்கள்-கவிதைகள் Engel med vatn i augene (1986) Hundens bevegelsar (1990) Hund og engel (1992) Dikt 1986–1992 (1995). Revidert samleutgåve Nye dikt 1991–1994 (1997) Dikt 1986–2001 (2001). Samla dikt. Lyrikklubben Auge i vind (2003) Stein til stein (2013) ஆங்கிலத்தில் தொகுப்புகள் பாக்கள் (Shift Fox Press, 2014). மேரி பிரித்து ஆக்ரோலட்டு ( May-Brit Akerholt.) மொழிபெயர்ப்புகள் கட்டுரைகள் Frå telling via showing til writing (1989) Gnostiske essay (1999) An Angel Walks Through the Stage and Other Essays, trans. May-Brit Akerholt (Dalkey Archive, 2015). அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் வெளி இணைப்புகள் Jon Fosse at Doollee.com Vincent Rafis, Mémoire et voix des morts dans le théâtre de Jon Fosse, Les presses du réel, Dijon, 2009. Andrew Dickson: "Jon Fosse: 'The idea of writing another play doesn't give me pleasure'", தி கார்டியன், 12 March 2014. Retrieved 22 August 2014. 1959 பிறப்புகள் வாழும் நபர்கள் நோர்வே எழுத்தாளர்கள் நோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள் நோபல் பரிசு பெற்ற நோர்வேயர்கள்
595686
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%2C%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D
பாலா கிசார், காபூல்
பாலா கோட்டை அல்லது பாலா கிசார் அல்லது காபுல் கோட்டை (Bala Hissar) என்பது ஆப்கானித்தானின் பழைய நகரமான காபுலின் தெற்கில் அமைந்துள்ள ஒரு பழமையான கோட்டையாகும். இதன் கட்டுமானம் கி.பி 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கோட்டையானது நவீன நகர மையத்தின் தெற்கே குக்-இ-சேர் தர்வாசா மலையின் முனையில் அமர்ந்துள்ளது. கோட்டையின் சுவர்கள், 20 அடி (6.1 மீ) உயரமும், 12 அடி (3.7 மீ) தடிமனும் கொண்டவை. கோட்டையிலிருந்து தொடங்கி, மலை முகடுகளைப் பின்தொடர்ந்து ஒரு பெரிய வளைவில் ஆற்றின் கீழே செல்கிறது. இது கோட்டையை அணுகுவதற்கான வாயில்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது. குக்-இ சேர் தர்வாசா (சிங்கக் கதவு) மலை கோட்டைக்கு பின்னால் உள்ளது. பாலா கிசார் முதலில் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. தொழுவங்கள், முகாம்கள் மற்றும் மூன்று அரச அரண்மனைகளைக் கொண்ட கீழ் கோட்டை மற்றும் மேல் கோட்டை (உண்மையான பாலா கிசார் என்ற பெயர் கொண்ட கோட்டை) ஆயுதக் களஞ்சியம் மற்றும் நிலவறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வரலாறு பாலா கிசார் கோட்டையின் தோற்றம் தெளிவற்றது. குசானர்களுக்கு முந்தைய மட்பாண்டங்கள் மற்றும் இந்தோ-கிரேக்க மற்றும் அகாமனிசிய நாணயங்கள் இதன் அருகாமையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறைந்தது கிபி 6 ஆம் நூற்றாண்டிலிருந்து இப்பகுதியில் குடியேற்றங்களைக் குறிக்கிறது. ஒரு கோட்டையாக தளத்தின் பயன்பாடு 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தேதியிடப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் துல்லியமான வரலாறு குறித்து குறைந்தபட்ச ஆதாரங்களே உள்ளன. தளத்தில் குறிப்பிடத்தக்க செயல்பாடுகளின் சான்றுகள் முகலாயர்களுடன் தொடங்குகிறது. 1504 இல் முகலாயப் பேரரசின் நிறுவனர் பாபரால் கோட்டை முற்றுகையிடப்பட்டு கைப்பற்றப்பட்டது. அக்பர் தனது தந்தைக்குப் பிறகு காபூலில் தனது ஆட்சியை உறுதிப்படுத்திய பிறகு, பாலா கிசார் காபூல் சுபாவின் சுபாதாரின் (ஆளுநர்) முதன்மை இல்லமாக மாறியது. முகலாயர்களின் கீழ், இந்த தளம் ஒரு குறிப்பிடத்தக்க அரண்மனை-கோட்டையாக வளர்ந்தது. இது முகலாய தலைநகரங்களான ஆக்ரா கோட்டை மற்றும் இலாகூர் கோட்டை ஆகியவற்றுடன் ஒப்பிடத்தக்கது. கோட்டையின் வெளிப்புறச் சுவர்கள் பலப்படுத்தப்பட்டு தளத்தின் பரப்பளவு விரிவடைந்தது. பேரரசர் ஜஹாங்கீர் கோட்டைக்குள் இருந்த பல கட்டிடங்களை இடித்து புதிய அரண்மனைகள், பார்வையாளர்கள் அரங்குகள் மற்றும் ஒரு பூங்கா ஆகியவற்றைக் கட்டினார். அவரது மகனும் வாரிசுமான ஷாஜகான், பதவியேற்பதற்கு முன்பு, ஜஹாங்கீரின் புகழைப் பெற்ற கோட்டைக்குள் தாஅனும் ஒரு கட்டிடத்தைக் கட்டினார். பேரரசராக, ஷாஜஹான் பின்னர் மத்திய ஆசியாவில் தனது போர்களின் போது இங்கு வசித்து வந்தார். ஷாஜகானின் வாரிசான ஔரங்கசீப், கோட்டைக்குள் ஒரு மசூதியைக் கட்டினார். முகலாயர்கள் காபூலை இழந்த பிறகு, கோட்டை புறக்கணிக்கப்பட்டது. 1773 இல் திமூர் ஷா துராணி ஆட்சிக்கு வரும் வரை, பாரசீகர்கள் மற்றும் துராணிகளின் கைகளுக்குச் சென்றது. துராணியின் தலைநகரை காபூலுக்கு மாற்றியதும், தைமூர் கோட்டையை ஆக்கிரமித்து உள்ளே ஒரு அரண்மனையை மீண்டும் கட்டினார். மேலும் கோட்டையின் மேல் பகுதியை அரசு சிறைச்சாலையாகவும் ஆயுதக் கிடங்காகவும் பயன்படுத்தினார். அவரது வாரிசான ஷா ஷுஜா துராணி கோட்டையை மேலும் மேம்படுத்தினார். துராணிகளால் கட்டப்பட்ட கட்டமைப்புகள் பல முந்தைய முகலாய கட்டுமானங்களை மாற்றின. காபூலின் முக்கிய கோட்டையாக, பாலா கிசார் முதலாம் ஆங்கிலேய-ஆப்கானியப் போர் (1838-1842) மற்றும் இரண்டாம் ஆங்கிலேய ஆப்கானியப் போர் (1878-1880) ஆகிய இரண்டிலும் பல முக்கிய நிகழ்வுகளுக்கு மேடையாக இருந்தது. காபூலுக்கான பிரித்தானிய தூதர் சர் பியர் லூயிஸ் நெப்போலியன் கவாக்னாரி செப்டம்பர் 1879 இல் கோட்டைக்குள் கொல்லப்பட்டார். இது ஒரு பொது எழுச்சியையும் இரண்டாம் ஆங்கிலேய-ஆப்கான் போரின் இரண்டாம் கட்டத்தையும் தூண்டியது. இது இரண்டாம் ஆங்கிலேய-ஆப்கான் போரின்போது பிரித்தானிய ஆட்சியாளர் எரிக்கப்பட்டபோது சேதமடைந்தது. பின்னர் ஆயுதக் களஞ்சியம் வெடித்தபோது. பிரித்தானிய இராணுவ அதிகாரி பிரடெரிக் ராபர்ட்ஸ் கோட்டையை முற்றிலுமாக தகர்க்க விரும்பினார். ஆனால் இறுதியில் 1880 வசந்த காலத்தில் ஆங்கிலேயர்கள் ஆப்கானித்தானை விட்டு வெளியேறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு இது பலப்படுத்தப்பட்டது. இராபர்ட்ஸ் பல முகலாய மற்றும் துராணி கால கட்டங்களை தரைமட்டமாக்க உத்தரவிட்டார். இதன் விளைவாக அவர்களின் கட்டிடக்கலை பங்களிப்புகளில் மிகக் குறைவாகவே உள்ளது. 1890 களில் கோட்டை முற்றிலுமாக கைவிடப்பட்டபோது ஏகாதிபத்திய செயல்பாடுகளுக்கு சேவை செய்வதை நிறுத்தியது. 20 ஆம் நூற்றாண்டு ஆகஸ்ட் 5, 1979 இல், பாலா கிசார் எழுச்சி அரசாங்க எதிர்ப்பு குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அது ஒடுக்கப்பட்டது. மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டு ஆட்சியாளர்களால் தூக்கிலிடப்பட்டனர். 1994 இல் ஆப்கானிய உள்நாட்டுப் போரின் போது, அகமது ஷா மசூதின் மற்றும் எக்மத்யாரின் படைகளுக்கு இடையேயான பிரிவினருக்கு இடையேயான மோதலின் மையப் புள்ளியாக பாலா கிசார் மீண்டும் ஒருமுறை ஆனது. இதனால் கோட்டையின் பெரும்பகுதி சேதமடைந்தது. தலிபான்கள் கையகப்படுத்தப்படுவதற்கு முன்பு, அது ஆப்கானித்தான் தேசிய இராணுவத்தின் 55 வது பிரிவினரால் நிர்வகிக்கப்பட்டது. மேலும் காபூலைக் கண்டும் காணாத வகையில் கோட்டையில் நிலைநிறுத்தப்பட்ட டாங்கிகள் மற்றும் கனரக ஆயுதங்களின் எச்சங்களை இன்றும் ஒருவர் காணலாம். இன்றைய பாலா கிசார் பிரதான கோட்டையின் வெளிப்புறச் சுவரைப் பார்க்கும்போது, பல ஆண்டுகளாக அழிந்து, மீண்டும் பலப்படுத்தப்பட்ட கட்டிடப் பொருட்களின் அடுக்குகளைக் காணலாம். கடந்த 30 ஆண்டுகளில் இருந்த டாங்கிகள் மற்றும் பிற போர் சிதைவுகள் மலையின் உச்சியில் சிதறிக்கிடக்கின்றன. மலைப்பகுதியின் பெரும்பகுதி சுரங்கங்கள் மற்றும் நிலத்தடி சேமிப்பகத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. முந்தைய அகழிப் போரில் இருந்து அகழிகள் இருந்ததற்கான சான்றுகள், ஆப்கானியக் கொடியால் அலங்கரிக்கப்பட்ட மலையுச்சியின் மேல் மட்டத்தைச் சுற்றி வளைத்துள்ளன. காட்டு நாய்கள் மலைப்பகுதி முழுவதும் சுற்றித் திரிகின்றன. ஆப்கானித்தான் இராணுவத்தின் ஒரு நிறுவனம் அந்த இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தின் மீதான அமெரிக்க ராணுவத்தின் போரின் போது (2001-2021) இராணுவமும் பொதுமக்களும் கோட்டைக்கு கீழே ஒரு இடத்தை ஆக்கிரமித்திருந்தனர். கோட்டைக்கு செல்லும் போது, சோவியத் ஆக்கிரமிப்பின் போது போடப்பட்ட கண்ணிவெடிகளைத் தவிர்ப்பதற்காக, பெரிதும் பயன்படுத்தப்பட்ட பாதைகளிலேயே செல்லும்படி குடியிருப்பாளர்கள் எச்சரிக்கப்பட்டனர். 2 பிப்ரவரி 2021 அன்று, ஆப்கானித்தானின் தகவல் மற்றும் கலாச்சார அமைச்சர் முகமது தாஹிர் ஜுஹைர், சுவர்களை புனரமைத்தல் மற்றும் கட்டமைப்பை ஒருங்கிணைப்பது குறித்து கலாச்சாரத்திற்கான ஆகா கான் அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அத்துடன் அந்த இடத்தில் தொல்லியல் பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்திற்கு இந்தியா சுமார் $1 மில்லியன் வழங்க உறுதியளித்துள்ளது. சான்றுகள் வெளி இணைப்புகள் ஆப்கானித்தான் கோட்டைகள்
595687
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
சாந்திப்பூர் சட்டமன்றத் தொகுதி
சாந்திப்பூர் சட்டமன்றத் தொகுதி (Chandipur, Tripura Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது உனகோடி மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். சட்டப் பேரவை உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2018 மேலும் பார்க்கவும் திரிபுரா சட்டப் பேரவையின் தொகுதிகளின் பட்டியல் உனகோடி மாவட்டம் மேற்கோள்கள் திரிபுரா சட்டமன்றத் தொகுதிகள் உனகோடி மாவட்டம்
595689
https://ta.wikipedia.org/wiki/13-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
பதின்மூன்றாவது திரிபுரா சட்டமன்றம் (13th Tripura Assembly) என்பது 2023 திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு உருவாக்கப்பட்டது. பிப்ரவரி 16, 2023 அன்று 60 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் 2 மார்ச் 2023 அன்று எண்ணப்பட்டன வரலாறு பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி 33 (பாஜக 32 + ஐபிஎஃப்டி 1) இடங்களுடன் தேர்தலில் வெற்றி பெற்றது, புதிய திப்ரா மோதா கட்சி 13 இடங்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக மாறியது. இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் 14 (11 + 3 இந்திய தேசிய காங்கிரசு) வெற்றி பெற்றன. குறிப்பிடத்தக்க பதவிகள் கட்சி வாரியாக விநியோகம் சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கோள்கள் திரிபுரா மக்களவை தேர்தல் முடிவு இணையதளம் திரிபுராவின் அதிகாரப்பூர்வ அரசு இணையதளம் திரிபுராவின் சட்டமன்றம்
595693
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
வளைந்தவால் கொண்டைக் கரிச்சான்
வளைந்தவால் கொண்டைக் கரிச்சான் (hair-crested drongo), (Dicrurus hottentottus) என்பது டிக்ரூரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆசியப் பறவை ஆகும். இந்த இனம் முன்பு வளைந்தவால் கரிச்சான் (Dicrurus bracteatus) இனத்தைச் சேர்ந்தது என்று கருதப்பட்டது. முன்பு இப்பறவையும் வளைந்த வால் கரிச்சானும் "spangled drongo" என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இப்போது தனி இனமாக கருதப்படுகிறது. சில பறவையியலாளர்கள் சுமத்ரா கரிச்சானை ( டி. சுமட்ரானஸ் ) வளைந்தவால் கொண்டை கரிச்சானின் (டி. ஹாட்டெண்டோட்டஸ்) துணை இனமாக கருதுகின்றனர். இது வங்காளதேசம், இந்தியா, பூட்டானில் இருந்து இந்தோசீனா வழியாக சீனா, இந்தோனேசியா மற்றும் புரூணை ஆகிய நாடுகள் வரை உள்ளது. வளைந்த வால் கொண்டை கரிச்சான்கள் சிறிய கூட்டங்களாக மிகுந்த ஒலி எழுப்பியபடி செல்லும். வகைபிரித்தல் இதில் பன்னிரண்டு துணையினங்கள் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளன, இருப்பினும் சில தனித்தனி இனங்களாக அறிவிக்க முன்மொழியப்பட்டுள்ளன: ஆட்டெண்டோட்டசு வளைந்தவால் கொண்டைக் கரிச்சான் D. h. hottentottus – இந்தியா, நடு மியான்மர் மற்றும் தெற்கு இந்தோசீனா D. h. brevirostris – மத்திய மற்றும் தெற்கு சீனம், வடக்கு மியான்மர் மற்றும் வடக்கு இந்தோசீனா D. h. borneensis (போர்னியன் ஸ்பாங்கல்ட் ட்ரோங்கோ) – போர்னியோ மற்றும் மராட்டுவா தீவு D. h. guillemardi (ஓபி ஸ்பாங்கல்ட் ட்ரோங்கோ) – ஓபி தீவுகள், வடக்கு மலுகு D. h. pectoralis (சுலா ஸ்பாங்கிள்ட் ட்ரோங்கோ) – சுலா தீவு, பிலிப்பைன்ஸ் D. h. suluensis (Sulu spangled drongo) – சூலு தீவுக்கூட்டம், தென்மேற்கு பிலிப்பைன்ஸ் D. h. viridinitens (மென்டவாய் ஸ்பாங்கிள்ட் ட்ரோங்கோ) – மெந்தாவாய் தீவுகள், மேற்கு சுமத்ரா; D. h. banggaiensis – பாங்காய் தீவுகள், கிழக்கு சுலவேசி; D. h. leucops – சுலாவெசி மற்றும் அருகிலுள்ள தீவுகள்; D. h. faberi – மேற்கு சாவகத்தில் உள்ள பனைட்டன் தீவு D. h. jentincki – பாலி, கிழக்கு சாவகம் மற்றும் சாவகக் கடலில் உள்ள சில தீவுகள் D. h. termeuleni – ஆயிரம் தீவுகள் மற்றும் ஜகார்த்தா விரிகுடாவில் உள்ள தீவுகள், வடக்கு சாவகம் குறிப்புகள் முன்பு துணையினங்களாக கருதப்படவற்றில் பல இப்போது தனி இனங்கள் அல்லது பிற இனங்களின் துணையினங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன, தப்லாஸ் கரிச்சான் (டிக்ரூரஸ் மெனகேய்) மற்றும் பலவான் கரிச்சான் (டிக்ரூரஸ் பலவானென்சிஸ், குயென்சிஸ் துணையினங்கள் உட்பட). மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தென்கிழக்காசியப் பறவைகள் தெற்காசியப் பறவைகள் சீனப் பறவைகள் கரிச்சான்கள்
595696
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%2C%202023
மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு, 2023
{{Infobox award|name= மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசுThe 2023 Nobel Prize in Physiology or Medicine|awarded_for=|presenter=கரோலின்சுகா நிறுவன நோபல் பேரவை|year=1901|website=|image=|caption= கரிக்கோ (இடது) மற்றும் வைசுமேன் (வலது) "கோவிட்-19 க்கு எதிராக பயனுள்ள தூதாறனை தடுப்பூசிகளை உருவாக்க உதவிய நியூக்ளியோசைட் அடிப்படை மாற்றங்கள் தொடர்பான இவர்களின் கண்டுபிடிப்புகளுக்காக"|host=தாமசு பெர்ல்மேன்|date=|location=ஸ்டாக்ஹோம்|country=சுவீடன்|reward=11 மில்லியன் சுவீடிய குரோனா (2023)|year2=|network=|runtime=|ratings=|previous=2022|main=மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|next=2024}} Articles with short description Short description with empty Wikidata descriptionஉடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு, 2023 (2023 Nobel Prize in Physiology or Medicine) கோவிட்-19 தொற்றுக்கு எதிராகப் பயனுள்ள தூதாறனை தடுப்பூசிகளை உருவாக்க உதவும் நியூக்ளியோசைடு அடிப்படை மாற்றங்கள் தொடர்பான கதலின் கரிக்கோ(பிறப்பு 1955) மற்றும் துரூ வைச்சுமேன் (பிறப்பு 1959) ஆகியோருக்கு வழங்கப்பட்டது. பரிசு பெற்றவர்கள் கதலின் கரிக்கோ கதலின் கரிக்கோ சனவரி 17, 1955 அன்று அங்கேரியின் சோல்னோக்கில் பிறந்தார். சஜெட் பல்கலைக்கழகத்தில் கரிக்கோ உயிர்வேதியியலில் 1982ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். 2013 முதல் 2022 வரை, இவர் பயோஎண்டெக் ஆர்.என்.ஏ. மருந்துகள் நிறுவனத்துடன் தொடர்புடையவராக இருந்தார். இந்நிறுவனத்தில், முதலில் துணைத் தலைவராகவும், 2019-ல் மூத்த துணைத் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றார். இந்த நிறுவனம் உலக அளவில் தூதாறனை தடுப்பூசிகளை வணிகமயமாக்கியது. துரூ வைசுமேன் துரூ வைசுமேன் செப்டம்பர் 7, 1959-ல் மாசசூசெட்ஸில் உள்ள லெக்சிங்டனில் பிறந்தார் 1987ஆம் ஆண்டு முனைவர் பட்டத்தினைப் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பெற்றார். முக்கிய வெளியீடுகள் கரோலின்ஸ்கா மையத்தின் நோபல் பேரவை கரிக்கோ மற்றும் வைசுமேன் ஆகியோருக்கு 2023 பரிசை வழங்குவதற்கு பின்வரும் ஆய்வு வெளியீடுகள் அடிப்படை காரணங்களாகும். Karikó, K., Buckstein, M., Ni, H. and Weissman, D. Suppression of RNA Recognition by Toll-like Receptors: The impact of nucleoside modification and the evolutionary origin of RNA. Immunity 23, 165–175 (2005). Karikó, K., Muramatsu, H., Welsh, F.A., Ludwig, J., Kato, H., Akira, S. and Weissman, D. Incorporation of pseudouridine into mRNA yields superior nonimmunogenic vector with increased translational capacity and biological stability. Mol Ther 16, 1833–1840 (2008). Anderson, B.R., Muramatsu, H., Nallagatla, S.R., Bevilacqua, P.C., Sansing, L.H., Weissman, D. and Karikó, K. Incorporation of pseudouridine into mRNA enhances translation by diminishing PKR activation. Nucleic Acids Res. 38''', 5884–5892 (2010). மேற்கோள்கள் வெளி இணைப்புகள் நோபல் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையதளம்
595699
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81
லூயிசு யூஜின் புரூசு
லூயிசு யூஜின் புரூசு (Louis Eugene Brus, பிறப்பு: 10 ஆகத்து 1943) எஸ்.எல் மிட்செல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக உள்ளார். இவர் குவாண்டம் புள்ளிகள் எனப்படும் கூழ்ம அரைக்கடத்தி மீநுண்படிகங்களின் இணை கண்டுபிடிப்பாளர் ஆவார். 2023 இல், அவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வாழ்க்கை லூயிசு யூஜின் புரூசு 1943 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓகையோவில் உள்ள கிளீவ்லாந்தில் பிறந்தார். கன்சாஸின் ரோலண்ட் பூங்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பயின்ற போது, இவர் வேதியியல் மற்றும் இயற்பியலில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். இவர் ரைஸ் பல்கலைக்கழகத்தில் கடற்படை சேமக்காவல் அதிகாரி பயிற்சி படைப்பிரிவு (என்ஆர்ஓடிசி) கல்லூரி உதவித்தொகையுடன் 1961-ஆம் ஆண்டில் நுழைந்தார், இதன் மூலம் இவர் கடலில் இப்பயிற்சிப்படையின் நடவடிக்கைகளில் கல நடுத்தரப் பணியாளராகப் பங்கேற்க வேண்டியிருந்தது. இவர் 1965-ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார் . இவரது முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு சென்றார். இவரது ஆய்வுக் கட்டுரைக்காக, ரிச்சரிட் பெர்சோனின் மேற்பார்வையின் கீழ் சோடியம் அயோடைடு ஆவியின் ஒளியின் வழிச்சிதைவு வினையின் ஆய்வில் பணியாற்றினார். 1969- ஆம் ஆண்டில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்ற பிறகு, புரூசு கடற்படைக்கு ஒரு துணைப்படைத் தலைவராகத் திரும்பினார். மேலும், இவர் லின் மிங்-சாங்குடன் இணைந்து வாஷிங்டன், டி. சி இல் உள்ள அமெரிக்க கடற்படை ஆராய்ச்சி ஆய்வகத்தில் அறிவியல் பணியாளர் அதிகாரியாக பணியாற்றினார் பெர்சோனின் பரிந்துரையின் கீழ், புரூசு கடற்படையை நிரந்தரமாக விட்டுவிட்டு 1973- ஆம் ஆண்டில் ஏடி&டி பெல் ஆய்வகங்களில் சேர்ந்தார், அங்கு இவர் குவாண்டம் புள்ளிகளைக் கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்த பணியினைச் செய்தார். 1996-ஆம் ஆண்டில், புரூசு பெல் ஆய்வகத்தை விட்டு வெளியேறி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் ஆசிரியப் பணியில் சேர்ந்தார். விருதுகளும் கௌரவங்களும் இவர் 1998-ஆம் ஆண்டில் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாதமியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004-ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தேசிய அறிவியல் அகாதெமியின் உறுப்பினராகவும் மற்றும் நோர்வே அறிவியல் மற்றும் கடிதங்கள் அகாதமியின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2010-ஆம் ஆண்டில் ரைஸ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் புகழ்பெற்ற முன்னாள் மாணவர் விருதைப் பெற்றார். அலெக்சாண்டர் எஃப்ரோஸ் மற்றும் அலெக்ஸி எகிமோவ் ஆகியோருடன் இணைந்து "மீநுண் படிக குவாண்டம் புள்ளிகள் மற்றும் அவற்றின் மின்னணுவியல் மற்றும் ஒளியியல் பண்புகளின் முன்னோடி ஆய்வுகளில்" ஈடுபட்டதற்காக அமெரிக்காவின் ஒளியியல் கழகத்தின் 2006 ஆம் ஆண்டிற்கான உட் பரிசைப் பிறருடன் இணைந்து பெற்றவர் ஆவார். இவர் 2008-ஆம் ஆண்டில் சுமியோ ஐஜிமாவுடன் இணைந்து "இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில் சுழியத்தின் நானோ அறிவியல் துறை மற்றும் ஒரு பரிமாண நானோ கட்டமைப்புகளின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக" நானோ அறிவியலுக்கான முதல் காவ்லி பரிசையும் பெற்றார். வேதி அறிவியலுக்கான 2010 தேசிய அறிவியல் அகாதமி விருதுக்கு புரூசு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012- ஆம் ஆண்டில் இவர் ஃபிராங்க்ளின் இன்ஸ்டிட்யூட்டின் போவர் விருது மற்றும் அறிவியலில் சாதனைக்கான பரிசைப் பெற்றார், மேலும் வேதியியலில் "கூழ்மநிலை குறைக்கடத்தி நானோகிரிஸ்டல்களைக் (குவாண்டம் புள்ளிகள்)" கண்டுபிடித்ததற்காக கிளாரிவேட் தகுதியுரை பரிசு பெற்றவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2023 ஆம் ஆண்டில், புரூசுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அலெக்சி எகிமோவு மற்றும் மௌங்கி பவெண்டி ஆகியோருடன் இணைந்து "குவாண்டம் புள்ளிகளைக் கண்டுபிடித்தமைக்காகவும் தொகுப்பு முறையில் தயாரித்தமைக்காகவும்" வழங்கப்பட்டது. பவெண்டி இவர்கள் பெல் ஆய்வகத்தில் இருந்தபோது, புரூசுடன் முனைவர் பட்டதிற்குப் பிந்தைய ஆராய்ச்சியில் இணை ஆய்வாளராகப் பணிபுரிந்தார். மேற்கோள்கள் 1943 பிறப்புகள் கொலம்பியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் வாழும் நபர்கள் நோபல் வேதியியற் பரிசு பெற்றவர்கள் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள் அமெரிக்க வேதியியலாளர்கள்
595701
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D
கிறிசு பிரவுண்
கிரிசு பிரவுண் என்று பொதுவாக அறியப்படும் கிறித்தோபர் மார்க் பிரவுண் (பிறப்பு 27 மார்ச் 1973), குக் தீவுகளின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் முன்பு நியூசிலாந்து உள்நாட்டு போட்டிகளில் ஆக்லாந்திற்காக விளையாடினார். ரரோடோங்காவில் பிறந்த பிரவுணின் சிறு வயதில் ஆக்லாந்து இள வயதுக்குட்பட்ட அணிகளுக்காக விளையாடினார். மேலும் அவர் வலது கை வேகப்பந்து வீச்சாளராக பல போட்டிகளில் நியூசிலாந்து தேசிய 19 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடினார். ஷெல் கோப்பை போட்டிகளின் 1993-94 பருவ காலத்தில் தனது முதல் தர அரங்கில் அறிமுகமானார். அவர் தனது முதல் போட்டியில் பத்து இலக்குகளை எடுத்தார். பின்னர் இரண்டு பருவகாலங்களில் நியூசிலாந்து துடுப்பாட்ட அகாடமியை பிரதிநிதித்துவப்படுத்தினார். பிரவுண் 1990களின் நடுப்பகுதியில் முதல்தர மற்றும் வரையறுக்கப்பட்ட நிறைவுகள் போட்டி ஆகிய இரண்டு வகைப் போட்டிகளிலும் ஆக்லாந்திற்காக தொடர்ந்து விளையாடினார். இருப்பினும், 1997-98 பருவகாலத்திற்குப் பிறகு, அவர் ஆக்லாந்திற்காக விளையாடுவதை நிறுத்தினார். பிரவுன் 2000 களின் முற்பகுதியில் குக் தீவுகளின் தேசிய துடுப்பாட்ட அணிக்காக விளையாடத் தொடங்கினார். பிராந்தியப் போட்டிகளில் கிழக்கு ஆசியா-பசிபிக் அணிக்காக விளையாடினார். அடுத்த பத்தாண்டுகளுக்கு அவர் பிறந்த நாட்டிற்கு தொடர்ந்து அணித்தலைவராக இருந்தார். அவர் குக் தீவுகளுக்காக விளையாடிய முதல்தர வீரர்களில் ஒருவராக ஆனார். விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பிரவுண் நடுவராகப் பொறுப்பேற்றார். தற்போது நியூசிலாந்து துடுப்பாட்ட நடுவர் "ஏ" குழுவில் உறுப்பினராக உள்ளார். நடுவர் தொழில் ஆகத்து 2011 இல், பிரவுண் 2011-12 பருவகாலத்துக்கான நியூசிலாந்து துடுப்பாட்டத்தின் நடுவர் "A" குழுவிற்கு உயர்த்தப்பட்டதன் மூலம் நியூசிலாந்து நடுவர்களின் முதல் 20 பேருள் ஒருவரானார். அவரது நியமனத்திற்கு முன்பு இரண்டு பருவகாலங்களுக்கு நடுவராக இருந்த அவர், 2012-13 பருவகாலத்திலும் "A" குழுவில் இருந்தார். 2012-13 பருவத்தில் நியூசிலாந்தின் முதல் தர மற்றும் ஒரு நாள் போட்டிகளில் பிரவுண் தனது முதல் போட்டிகளுக்கு நடுவராக இருந்தார். அதுவரை முக்கியமாக பெண்கள் போட்டிகள் மற்றும் தேசிய வயதுக்குட்பட்ட போட்டிகளுக்கு நடுவராக இருந்தார். சூன் 2016 இல் அவர் பன்னாட்டு நடுவர்கள் மற்றும் முறையீடு நடுவர்கள் குழுவில் சேர்க்கப்பட்டார். 29 டிசம்பர் 2016 அன்று, நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் இடையேயான தனது முதல் ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் கடமையாற்றினார். 6 சனவரி 2017 அன்று, நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் இடையேயான தனது முதல் பன்னாட்டு இருபது20 போட்டியில் அவர் நின்றார். அக்டோபர் 2019 இல், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2019 ஐசிசி இருபது20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் நடுவராகப் பணியாற்றும் பன்னிரண்டு நடுவர்களில் ஒருவராக அவர் நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 2020 இல், ஆஸ்திரேலியாவில் 2020 ஐசிசி மகளிர் இருபது20 உலகக் கோப்பையின் போது போட்டிகளில் நடுவராகச் செயல்படும் நடுவர்களில் ஒருவராக ஐசிசியால் தெரிவுசெய்யப்பட்டார். 11 டிசம்பர் 2020 அன்று நியூசிலாந்துக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும் இடையிலான போட்டியில் அவர் தனது முதல் தேர்வுப் போட்டியில் கடமையாற்றினார். மேற்கோள்கள் நியூசிலாந்தின் துடுப்பாட்ட நடுவர்கள் வாழும் நபர்கள் 1973 பிறப்புகள்
595702
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
ஆட்டெண்டோட்டசு வளைந்தவால் கொண்டைக் கரிச்சான்
ஆட்டெண்டோட்டசு வளைந்தவால் கொண்டைக் கரிச்சான் (அறிவியல் பெயர்: Dicrurus hottentottus hottentottus) என்பது வளைந்தவால் கொண்டைக் கரிச்சானின் துணையினமாகும். இது இந்தியா, மத்திய மற்றும் தெற்கு சீனம், வடக்கு மியான்மர் மற்றும் வடக்கு இந்தோசீனா ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. விளக்கம் ஆட்டெண்டோட்டசு வளைந்தவால் கொண்டைக் கரிச்சான் பறவையானது மைனா அளவில் சுமார் 25 செ. மீ. நீளம் இருக்கும். இதன் அலகும் கால்களும் கறுப்பாகவும், விழிப்படலம் செம்பழுப்பு நிறத்திலும் இருக்கும். இப்பறவையின் அலகு நீண்டு கூர்மையாகச் சற்று கீழ் நோக்கி வளைந்திருக்கும். உடலின் மேற்பகுதி பளபளப்பான கறுப்பு நிறத்தில் இருக்கும். இதன் உச்சந்தலையில் சுமார் ஐந்து செ. மீ. நீளமுள்ள மயிரை ஒத்த சில தூவிகள் பின்னோக்கி வளைந்ததாக காணப்படும். வால் பிளவு படாமல் சதுரமாக இருக்கும் என்றாலும் வாலின் புற இறகுகள் மேல் நோக்கி வளைந்து திருகிக் கொண்டிருக்கும். ஆண் பெண் பறவைகளுக்கு இடையில் பால் ஈருருமை இல்லை. பரவலும் வாழிடமும் ஆட்டெண்டோட்டசு வளைந்தவால் கொண்டைக் கரிச்சான் இந்தியா மத்திய மற்றும் தெற்கு சீனம், வடக்கு மியான்மர் மற்றும் வடக்கு இந்தோசீனா ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைசார்ந்த மகுதிகளில் பசுங்காடுகளைச் சார்ந்து ஆங்காங்கே சமவெளிகளிலும் மலைகளில் 900 மீட்டர் உயரம் வரையும் காண இயலும். நடத்தை இது தனித்தோ, இணையாகவோ, சிறு கூட்டமாகவோ காடுகளில் உள்ள மரங்களின் மேல் திரியும் இயல்புடையது. பறக்கும் பூச்சிகளைப் பிடித்து உண்ணக்கூடிய இது மலர்களில் உள்ள தேனை விரும்பி உண்ணக்கூடியது. குறிப்பாக முள்முருக்கு, தைல மரம் போன்ற மரங்களில் கூட்டமாக காணலாம். மரங்களில் தேனை உண்ண வரும் பிற பறவைகளை இவை எட்டு முதல் பத்து வரையிலான கூட்டமாக சேர்ந்து விரட்டி அடிக்கும். இவை வைவது போல உரக்கக் குரல் எழுப்பும். இவை பெப்ரவரி முதல் சூன் முடிய இனப்பெருக்கத்தில் ஈடுபடும். இவைகருங்கரிச்சானின் கூட்டைவிட சற்று பெரியதாக் கோப்பை வடிவில் மரக்கிளைகளின் புறவெளி நுனியில் அமைக்கும். இவற்றின் கூடுகளை காடுகளில் உள்ள மரங்களிலேயே காண இயலும். இவை மூன்று அல்லது நான்கு முட்டைகளை இடும். முட்டைகள் வெளிர் பாலேடு நிறத்தில் சிவப்புக் கோடுகளோடு காணப்படும். ஆண் பெண் என இரு பறவைகளும் கூடு கட்டுதல், அடைக்காத்து இனப்பெருக்கம் செய்தல் போன்வற்றில் சேர்ந்து ஈடுபடும். மேற்கோள்கள் கரிச்சான்கள் இந்தியப் பறவைகள்
595707
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
சமாரியம் அசிட்டைலசிட்டோனேட்டு
சமாரியம் அசிட்டைலசிட்டோனேட்டு (Samarium acetylacetonate) என்பது Sm(C5H7O2)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓர் ஒருங்கிணைவுச் சேர்மமான இதை சுருக்கமாக Sm(acac)3 என்ற வாய்ப்பாட்டாலும் குறிப்பிடுவர். குளோரோஃபார்மில் உள்ள என்-புரோமோசக்சினிமைடுடன் வினைபுரிந்து வெளிர் மஞ்சள் நிற Sm(Br-acac)3 சேர்மத்தை கொடுக்கிறது. (இங்குள்ள Br-acac என்பது 3-புரோமோ-2,4-பெண்டேன் டையோன் ஈந்தணைவியாகும்). டைமெத்தில்சல்பாக்சைடில் உள்ள இதன் நீரேற்றை மீள்படிகமாக்கம் செய்து Sm(acac)3·2DMSO·H2O என்ற நீரேற்றைப் பெறலாம். இது டைகோபால்ட் ஆக்டாகார்பனைலுடன் வினைபுரிந்து SmCo5 சேர்மத்தை தயாரிக்கப் பயன்படுகிறது. மேற்கோள்கள் சமாரியம் சேர்மங்கள் அசிட்டைலசிட்டோனேட்டு அணைவுகள்
595709
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81
பெடிசு சியாமென்சிசு
பெடிசு சியாமென்சிசு (Badis siamensis) என்பது தாய்லாந்தில் மட்டுமே காணப்படும் நடுமுள் துடுப்புடைய மீன் குடும்பத்தைச் சேர்ந்த நன்னீர் மீன் சிற்றினமாகும். இந்த சிற்றினம் 3.9 செ.மீ. (1.5 அங்குலம்) நீளம் வரை வளரும்.இது ஒரு அகணிய உயிரி. மேற்கோள்கள் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - தகவல் இல்லா இனங்கள் அகணிய உயிரிகள்
595711
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE
ஜக்கன்னா
பேரம் ராஜு ஜக்கன்னா (Peram Raju Jakkana) 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் (1450) வாழ்ந்த புகழ்பெற்ற தெலுங்குக் கவிஞர் ஆவார். இவர் நியோகி பிராமணக் குடும்பத்தில் அக்கமாம்பா மற்றும் அன்னையாமத்யுலு ஆகியோருக்கு பிறந்தார். விஜயநகரப் பேரரசின் ஆட்சியாளரான பிரௌத தேவராயலுவின் அவையில் கவிஞராகப் பணியாற்றினார். அரசவையில் கருவூல அமைச்சராக இருந்த வெண்ணெலகண்டி சித்தன்னனாமத்யாவுக்கு இவர் அர்ப்பணித்த விக்ரமார்க்க சரித்திரமு என்பது இவரது புகழ்பெற்ற படைப்பாகும். இந்த படைப்பு உஜ்ஜைனியின் அரசன் விக்ரமாதித்தியனின் கதையை விவரிக்கிறது. ஜக்கனா சிறீநாதருக்கும் போத்தன்னாவுக்கும் சமகாலத்தவர். இவரது படைப்பான விக்ரமார்க்க சரித்திரமு 1913 இல் சென்னையின் வாவில்லா அச்சகம் மூலம் வெளியிடப்பட்டது. ஐதராபாத்தின் ஆந்திர பிரதேச சாகித்ய அகாதமி மூலம் 1968 ஆம் ஆண்டு மீண்டும் வெளியிடப்பட்டது. சான்றுகள் தெலுங்கு கவிஞர்கள்
595712
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
லாத்விய கணிதவியல் சங்கம்
லாத்விய கணிதவியல் சங்கம் (Latvian Mathematical Society) என்பது லாத்வியாவிலுள்ள கற்றறிந்த கணிதவியலாளர்களின் சமூகமாகும். இச்சங்கம் பன்னாட்டு கணித சங்கத்தால் லாத்வியா நாட்டிற்கான ஒரு தேசிய கணித அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. லாத்வியாவில் கணித செயல்பாட்டைத் தூண்டுவது மட்டுமின்றி, முந்தைய சாதனைகளை ஒருங்கிணைத்து, பன்னாட்டு அளவில் லாத்விய கணிதவியலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்பையும் இச்சங்கம் தன் நோக்கமாகக் கொண்டுள்ளது. லாத்விய கணிதவியல் சங்கம் 1993 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. லாத்வியா நாட்டிலுள்ள ரிகா நகரத்தின் லாத்வியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரேச்சு ரெய்ன்ஃபெல்ட்சு தற்போது இச்சங்கத்தின் தலைவராக உள்ளார். மேற்கோள்கள் புற இணைப்புகள் லாத்வியா
595726
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
தெலியமுரா சட்டமன்றத் தொகுதி
தெலியமுரா சட்டமன்றத் தொகுதி (Teliamura Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது கோவாய் மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதி பட்டியல் சாதியினரும் பழங்குடியினருக்குமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இது கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகள் 2018 தேர்தல் மேலும் பார்க்கவும் திரிபுரா சட்டப் பேரவையின் தொகுதிகளின் பட்டியல் கோவாய் மாவட்டம் தெலியமுரா திரிபுரா கிழக்கு (மக்களவைத் தொகுதி) மேற்கோள்கள் திரிபுரா சட்டமன்றத் தொகுதிகள் கோவாய் மாவட்டம்
595727
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88
வரிப் பாரை
வரிப் பாரை (உரப்சிசு உரப்சிசு-Uraspis uraspis) என்பது பாரை மீன் குடும்பத்தில் உள்ள சிற்றினமாகும். இது இந்தோ-பசிபிக் பகுதியில் காணப்படுகிறது. பரவலும் வாழ்விடமும் வரிப்பாரை எனப்படும் இந்த மீன் இந்தோ-பசிபிக் பகுதியில் காணப்படுகிறது. இதன் பரவல் செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடாவிலிருந்து இந்தியப் பெருங்கடலில் இலங்கை வரையிலும், பிலிப்பீன்சிலிருந்து சப்பானில் உள்ள இரியுக்கியூ தீவுகள் வரையிலும் கிழக்கே ஹவாய் வரையிலும் பரவியுள்ளது. விளக்கம் முதிர்ச்சியடைந்த மீன் நீளம் வரை வளரக்கூடியது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Smith, J.L.B. 1962. Ichthyological Bulletin; No. 26: The rare "Furred-Tongue" Uraspis uraspis (Gunther) from South Africa, and other new records from there. Grahamstown: Department of Ichthyology, Rhodes University.
595728
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
சமாரியம் ஆக்சியயோடைடு
சமாரியம் ஆக்சியயோடைடு (Samarium oxyiodide) என்பது SmOI என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியம்(II) அயோடைடுடன் உலர் ஆக்சிசனைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் சமாரியம் ஆக்சியயோடைடு சேர்மத்தைப் பெறலாம். காற்றில் 335 °செல்சியசு வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தினால் இது ஆக்சிசனேற்றம் அடைகிறது. மேலும் 460 °செல்சியசு, 560 °செல்சியசு மற்றும் 640 °செல்சியசு வெப்பநிலைகளுக்கு சூடுபடுத்தப்பட்டால் nSmOI·Sm2O3 சேர்மங்கள் உருவாகின்றன. வாய்ப்பாட்டிலுள்ள n என்பது முறையே 7, 4, 2 என்ற எண்களைக் குறிக்கிறது. மேலும் 885 °செல்சியசு வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தினால் முழுமையாக சமாரியம் ஆக்சைடாக மாறுகிறது. சமாரியம் ஆக்சியயோடைடு புரோப்பைலீன் ஆக்சைடு வழிப்பெறுதிகளை மெத்தில் கீட்டோன்களாக மறுசீரமைக்க உதவுகிறது. சமாரியம்(III) அயோடைடு, சோடியம் அயோடைடு மற்றும் சோடியம் ஆகியவற்றுடன் 903 கெல்வின் வெப்பநிலையில் தாண்டலம் கொள்கலனில் வினைபுரிந்து கருப்பு நிறத்திலான Sm4OI6 சேர்மத்தைக் கொடுக்கிறது. மேற்கோள்கள் புற இணைப்புகள் சமாரியம் சேர்மங்கள் ஆக்சியயோடைடுகள்
595730
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88
கார்பன் பசை மின்முனை
ஒரு கார்பன்-பசை எலக்ட்ரோடு (Carbon-paste electrode) கடத்தும் தன்மையுடைய கிராபைட்டுத்தூள் மற்றும் ஒட்டும் திரவத்தின் கலவையிலிருந்து தயாரிக்கப்படும் மின்முனை ஆகும். இந்த மின்முனைகளை உருவாக்குவதற்கு எளிதானதாகவும் எலக்ட்ரான் பரிமாற்றத்திற்கு எளிதில் புதுப்பிக்கக்கூடிய மேற்பரப்பை வழங்குவதாகவும் உள்ளது. கார்பன் பசை மின்முனைகள் பன்முகக் கார்பன் மின்முனைகளின் சிறப்புக் குழுவைச் சேர்ந்தவை. இந்த மின்முனைகள் முக்கியமாக வோல்டாஅளவியல் அளவீடுகளுக்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன; இருப்பினும், கார்பன் பசை அடிப்படையிலான உணரிகள் கூலோஅளவியலிலும் பொருந்தும். நன்மைகள் கார்பன் பசை மிகக் குறைந்த செலவில் எளிதாகப் பெறக்கூடியவையாக இருப்பதாலும் பிற சேர்மங்களின் கலவையுடன் மாற்றியமைக்கப்பட்ட மின்முனைப் பொருளைத் தயாரிப்பதற்கு ஏற்றதாகவும் இருப்பதால் இவ்வகை மின்முனைகள் மிகவும் பிரபலமானவையாக உள்ளன. மின்முனைக்கென இருக்க வேண்டிய சில முன் தீர்மானிக்கப்பட்ட பண்புகளை இவ்வகை மின்முனைகள் அளிக்கின்றன. இந்த வழியில் செய்யப்பட்ட மின்முனைகள் கனிம மற்றும் கரிம மின் வேதியியல் இரண்டிற்கும் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட உணரிகளாகவும் விளங்குகின்றன. கார்பன் பசை, கண்ணாடி கார்பன் பசை, கண்ணாடி கார்பன் போன்றவை மாற்றியமைக்கப்படும் மின்முனைகள் வேதியியல்ரீதியாக மாற்றியமைக்கப்பட்ட மின்முனைகள் என்று அழைக்கப்படுகின்றன. வேதியியல்ரீதியாக மாற்றப்பட்ட மின்முனைகள் கனிம மற்றும் கரிம இனங்களின் பகுப்பாய்விற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. குறைபாடுகள் கார்பன் பசை மின்முனைகளின் மிகப்பெரிய குறைபாடு, நடைமுறைப் பகுப்பாய்வில் அவற்றின் பொருந்தக்கூடிய தன்மையைக் கட்டுப்படுத்துகிறது. கார்பன் பசை அடிப்படையிலான மின்முனைகளுடன் வேலை செய்வதில் வெற்றி என்பது பயனரின் அனுபவத்தைப் பொறுத்தது. எந்த வகையான திட மின்முனைகளுக்கும் இது உண்மையாக இருந்தாலும், கார்பன் பசை மின்முனைகள் ஒரு விதிவிலக்கான வழக்காக இருக்கிறது. வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய திட மின்முனைகளுக்கு மாறாக, ஒவ்வொரு உற்பத்தியாளரிடமிருந்தும் கிடைக்கக்கூடிய அனைத்து தயாரிப்புகளுக்கும் அடிப்படை மின்வேதியியல் பண்புகள் ஒப்பிடக்கூடியனவாக இருந்தாலும் ஒவ்வொரு கார்பன் பசை மின்முனை அலகும் தனித்த ஒன்றாகும். இவற்றின் இயற்பியல், வேதியியல் மற்றும் மின்வேதியியல் பண்புகள் ஒரு தயாரிப்பில் இருந்து மற்றொன்றுக்கு வேறுபடலாம். இந்த காரணத்திற்காக ஒவ்வொரு தனித்த மின்முனையும் தனித்தனியாக அளவீடு செய்யப்பட வேண்டும். ஆராய்ச்சி சூழலில் இது ஒரு பிரச்சினையாக இல்லாவிட்டாலும் கூட, உற்பத்தி சேவையில் இவ்வாறு செய்வது கணிசமான சுமையாக இருக்கும். மேற்கோள்கள் மின்முனைகள்
595731
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D
மஞ்சுளா சுவைன்
மஞ்சுளா சுவைன் (Manjula Swain) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஒடிசா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பிஜு ஜனதா தளம் கட்சியினைச் சார்ந்தவர். சுவைன் ஒடிசா சட்டமன்றத்திற்கு 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அசுகா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கோள்கள் வாழும் நபர்கள் ஒடிசா அரசியல்வாதிகள்
595733
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D
சமதா கிராந்தி தளம்
சமதா கிராந்தி தளம் (Samata Kranti Dal) என்பது பிரஜா கிஷோர் திரிபாதி தலைமையிலான இந்தியாவில் ஒடிசாவின் மாநில அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சி மே 2013-ல் நிறுவப்பட்டது. இந்தியத் தேர்தல் ஆணையத்தால் சமதா கிராந்தி தளத்திற்கு 'கத்தரிக்கோல்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2014 தேர்தலுக்கு முன்னதாக பா.ஜா.கா. கூட்டணியுடன் ச.கி.த. தேர்தல் உடன்பாட்டை எட்ட முயன்றது. பாரதிய ஜனதா கட்சியின் அருண் ஜெட்லி திரிபாதியுடன் உரையாடினார். இருப்பினும் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் சமதா கிராந்தி தளம் மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டது. 2014ஆம் ஆண்டு ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி பிரமித்ராபூர் என்ற தனி தொகுதியில் வென்றது. மேலும் பார்க்கவும் உதய் மண்டல் தலைமையிலான சமதா கட்சி. மேற்கோள்கள் ஒடிசா அரசியல் கட்சிகள்
595734
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BE
நாக லக்சுமயா
நாக லக்சுமயா (Naka Laxmaya) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1950 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 2 ஆம் தேதியன்று இவர் நாகா கோயாவுக்கு மகனாகப் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் ஒடிசா சட்டப் பேரவையின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1980 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மால்காங்கிரி சட்டமன்றத் தொகுதியின் பிரதிநிதியாக ஒடிசா சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1975 ஆம் ஆண்டில் அரசு வேலையை விட்டுவிட்டு பொதுச் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர் பின்னர் காங்கிரசு கட்சியில் சேர்ந்து நேரடி அரசியலில் ஈடுபட்டார். 1977 ஆம் ஆண்டு ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலில், மால்காங்கிரி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரசு சார்பில் போட்டியிட்டார், ஆனால் அப்போது தோல்வியடைந்தார். நாகா லக்சுமயா 2020 ஆம் ஆண்டு சனவரி மாதம் 16 அன்று தனது 69 ஆவது வயதில் இறந்தார். மேற்கோள்கள் 1950 பிறப்புகள் 2020 இறப்புகள் ஒடிசா அரசியல்வாதிகள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
595761
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D
நயன் தாரா தாஸ்
நயன் தாரா தாஸ் (பிறப்பு 1 சனவரி 1915) பீகாரில் உள்ள ஜமுய் தொகுதியில் முதல் மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் முங்கீரின் பூரணிகஞ்சில் பிறந்தார். இவர் முங்கேரிலிருந்து 2வது முறையாகவும், ஜமுய்யிலிருந்து 3வது மற்றும் 4வது முறையாகவும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சான்றுகள் பீகார் அரசியல்வாதிகள் 4வது மக்களவை உறுப்பினர்கள் 3வது மக்களவை உறுப்பினர்கள் 2ஆவது மக்களவை உறுப்பினர்கள் 1ஆவது மக்களவை உறுப்பினர்கள் இறந்த ஆண்டு குறிப்பிடப்படவில்லை 1915 பிறப்புகள்
595768
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
மணிப்பூர் மக்கள் கட்சி
Political party in India மணிப்பூர் மக்கள் கட்சி (Manipur Peoples Party) என்பது இந்திய மாநிலமான மணிப்பூரில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும். மணிப்பூர் மக்கள் கட்சி 26 திசம்பர் 1968-ல் இந்திய தேசிய காங்கிரசின் அதிருப்தியாளர்களால் நிறுவப்பட்டது. பிப்ரவரி 2007 மணிப்பூர் மாநிலத் தேர்தலில், இக்கட்சி 60 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களைப் பெற்றது. தற்போது இது தேசிய ஜனநாயகக் கூட்டணியை (இந்தியா) ஆதரித்த வடகிழக்கு அரசியல் கட்சிகளைக் கொண்ட வடகிழக்கு பிராந்திய அரசியல் முன்னணியின் ஒரு பகுதியாகும். முதல்வர்கள் பட்டியல் மேலும் பார்க்கவும் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்த கட்சிகள் ஓ. ஜாய் சிங் குறிப்பு மேற்கோள்கள் இந்திய அரசியல் கட்சிகள் Short description is different from Wikidata
595771
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
நருகீசு முகம்மதி
நருகீசு சாபி முகம்மதி (Narges Mohammadi, ; பிறப்பு: 21 ஏப்பிரல் 1972) ஒரு ஈரானிய மாந்த உரிமை ஆர்வலரும், அறிவியலாளரும், மாந்த உரிமைகள் பாதுகாவலர் நடுவத்தின் துணைத் தலைவரும் ஆவார். இவ்வமைப்பு நோபல் அமைதி பரிசு பெற்ற சிரின் எபாடியின் தலைமையில் உள்ளது. மே 2016 இல், "மரண தண்டனையை ஒழிப்பதற்காக பரப்புரை செய்யும் மாந்த உரிமைகள் இயக்கத்தை" நிறுவி நடத்தி வந்ததற்காக தெகரானில் இவருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அக்டோபர் 2023 இல், சிறையில் இருந்தபோது, இவருக்கு "ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிரான அவரது போராட்டத்திற்காகவும் மாந்த உரிமைகளையும் அனைவருக்குமான சுதந்திரத்தையும் முற்செலுத்தும் அவரது போராட்டத்திற்காகவும்" 2023 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வாழ்க்கைக் குறிப்பு முகம்மதி ஈரானின் சாஞ்சானில் பிறந்தார். பிறகு கோர்வே, கராச்சு , ஓசுநனாவியே ஆகிய இடங்களில் வளர்ந்தார். அவர் இமாம் கொமேனி பன்னாட்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார், இயற்பியலில் பட்டம் பெற்றார், பின்னர் ஒரு தொழில்முறை பொறியியலாளர் ஆனார். அவரது பல்கலைக்கழக வாழ்க்கையில், அவர் மாணவர் செய்தித்தாளில் பெண்களின் உரிமைகளை ஆதரிக்கும் கட்டுரைகளை எழுதினார். அது தவிர அரசியல் மாணவர் குழுவான தடாக்கோல் தானேசுச்சுயி உரோடங்கரானின் ("அறிவொளி பெற்ற மாணவர் குழு") இரண்டு கூட்டங்களில் கைது செய்யப்பட்டார். இவர் மலையேறும் ஒரு குழுவிலும் தீவிரமாக இருந்தார். ஆனால் இவரது அரசியல் நடவடிக்கைகள் காரணமாக, பின்னர் மலையேறுவதில் சேர தடை விதிக்கப்பட்டது. இவர் பல சீர்திருத்த செய்தித்தாள்களில் பத்திரிகையாளராகப் பணியாற்றினார், மேலும் சீர்திருத்தங்கள் - வியூகமும் தந்திரோபாயங்களும் என்ற தலைப்பில் அரசியல் கட்டுரைகளடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். 2003 இல், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சிரின் எபாடி தலைமையிலான மனித உரிமைகளின் பாதுகாவலர் மையத்தில் சேர்ந்தார்; பின்னர் அவர் அமைப்பின் துணைத் தலைவரானார். 1999 இல், அவர் சீர்திருத்த ஆதரவு பத்திரிகையாளரான தாகி இரகுமானியை மணந்தார், அவர் நீண்ட காலத்திற்குப் பிறகு முதல் முறையாக கைது செய்யப்பட்டார். இரகுமானி மொத்தம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு 2012 இல் பிரான்சுக்குக் குடிபெயர்ந்தார், ஆனால் முகம்மதி தனது மனித உரிமைப் பணிகளைத் தொடர்ந்தார். முகமதிக்கும் இரகுமானிக்கும் இரட்டை குழந்தைகள் உள்ளனர். ஈரானிய அரசாங்கத்தை விமர்சித்ததற்காக 1998 ஆம் ஆண்டு முதன்முதலில் முகம்மதி கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார். ஏப்பிரல் 2010 இல், DHRC இல் உறுப்பினராக இருந்ததற்காக இசுலாமிய புரட்சிகர நீதிமன்றத்திற்கு அவர் அழைக்கப்பட்டார். அவர் சுருக்கமாக $50,000 சாமீனில் விடுவிக்கப்பட்டார், ஆனால், பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டு எவின் சிறையில் அடைக்கப்பட்டார். காவலில் இருந்தபோது முகம்மதியின் உடல்நிலை சரியில்லாமல் போனது, மேலும் அவருக்குக் கால்-கை வலிப்பு போன்ற நோய் ஏற்பட்டது, இதனால் அவள் அவ்வப்போது தசைக் கட்டுப்பாட்டை இழக்கிறார். ஒரு மாதத்திற்குப் பிறகு, அவர் விடுவிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டாள். சூலை 2011 இல், முகம்மதி மீது மீண்டும் வழக்கு தொடரப்பட்டது, மேலும் "தேசிய பாதுகாப்பிற்கு எதிராக செயல்பட்டது, DHRC உறுப்பினர் மற்றும் ஆட்சிக்கு எதிரான பிரச்சாரம்" ஆகியவற்றிற்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. செப்டம்பரில், அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தனது வழக்கறிஞர்கள் மூலம் தான் தீர்ப்பை அறிந்து கொண்டதாகவும், "நீதிமன்றம் வழங்கிய முன்னோடியில்லாத வகையில் 23 பக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் எனது மனித உரிமை நடவடிக்கைகளை ஆட்சியை கவிழ்க்கும் முயற்சிக்கு பலமுறை ஒப்பிட்டுள்ளதாகவும் முகம்மதி கூறினார். மார்ச்சு 2012 இல், தண்டனை ஆறு ஆண்டுகளாக குறைக்கப்பட்டாலும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. ஏப்பிரல் 26 அன்று, அவர் தண்டனையைத் தொடங்குவதற்காக கைது செய்யப்பட்டார். இந்த தண்டனையை பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் எதிர்த்தது, இது "ஈரான் அதிகாரிகளின் துணிச்சலான மனித உரிமை பாதுகாவலர்களை அமைதிப்படுத்த முயற்சிக்கும் மற்றொரு சோகமான எடுத்துக்காட்டு" என்று கூறியது. அம்னெசிட்டி இன்டர்நேசனல் அவரை மனசாட்சியின் கைதியாக நியமித்தது மற்றும் அவரை உடனடியாக விடுவிக்க அழைப்பு விடுத்தது. எல்லைகளற்ற நிருபர்கள் முகம்மதியின் சார்பாக எவின் சிறைச்சாலையில் புகைப்படக் கலைஞரின் சாகரா காசமி மரணமடைந்த ஒன்பதாவது ஆண்டு நினைவு நாளில் முகமதியின் சார்பாக ஒரு முறையீடு ஒன்றை வெளியிட்டனர். சூலை 2012 இல், அமெரிக்க மேலவை உறுப்பினர் மார்க்கு கிர்க்கு, முன்னாள் கனேடிய அட்டர்னி செனரல் இருவின் கோட்டலர், யஐக்கிய இராச்சிய நாடாளுமன்ற உறுப்பினர் தென்னிசு மெக்குசேன், ஆத்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேல் தான்பி, இத்தாலிய எம்பி ஃபியம்மா நிரன்ஸ்டீன் மற்றும் லிதுவேனியன் நாடாளுமன்ற உறுப்பினர் சிருயிங்கு இமானுயெலிசு உள்ளிட்ட பன்னாட்டு சட்டமியற்றுபவர்கள் அவரை விடுவிக்க அழைப்பு விடுத்தனர். . அக்டோபர் 31, 2014 அன்று, சத்தர் பெகெட்டியின் கல்லறையில் முகமதி ஒரு நெகிழ்ச்சியான உரையை நிகழ்த்தினார், "பாராளுமன்ற உறுப்பினர்கள் நல்லொழுக்கத்தை மேம்படுத்துவதற்கும், தீமைகளைத் தடுப்பதற்கும் ஒரு திட்டத்தை பரிந்துரைக்கிறார்கள், ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யாரும் பேசவில்லை. சத்தர் பெகெட்டி என்ற ஒரு குற்றமற்ற மனிதர் அவரை விசாரித்தவரின் கைகளில் சித்திரவதைக்கு உள்ளாகி இறந்தார்?" 2012 இல் பன்னாட்டு சலசலப்பை சந்தித்த பெகெட்டிக்கு எதிரான தீவிர வன்முறை செயல் இருந்தபோதிலும், அவரது வழக்கு இன்னும் கேள்விகளை எழுப்புகிறது மற்றும் எவின் சிறைச்சாலை இன்று வரை மனித உரிமை பாதுகாவலர்களின் சித்திரவதை மற்றும் நியாயமற்ற கைதுகளுக்கு சாட்சியாக உள்ளது. முகம்மதியின் அக்டோபர் 31 உரையின் வீடியோ சமூக ஊடக வலைப்பின்னல்களில் விரைவாக வைரலானது, இதன் விளைவாக அவர் எவின் சிறை நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டார். "நவம்பர் 5, 2014 அன்று நான் பெற்ற சம்மனில், நான் 'குற்றச்சாட்டுகளுக்கு' என்னைத் திருப்பிக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது, ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி மேலும் விளக்கம் இல்லை," என்று அவர் கூறினார். மே 5, 2015 அன்று, புதிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முகமதி மீண்டும் கைது செய்யப்பட்டார். புரட்சிகர நீதிமன்றத்தின் கிளை 15, இலெகாமுக்கு "சட்டவிரோத குழுவை நிறுவியது" (மரண தண்டனை பிரச்சாரத்தை நிறுத்துவதற்கான படிப்படியான நடவடிக்கை), "தேசிய பாதுகாப்பிற்கு எதிராக ஒன்றுகூடியதற்காக மற்றும் கூட்டுக்கு" ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. பன்னாட்டு ஊடகங்களுடனான அவரது நேர்காணல்களுக்காக "அமைப்புக்கு எதிரான பிரச்சாரத்திற்காக" ஓராண்டு மற்றும் மார்ச்சு 2014 இல் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி கேத்தரின் ஆசுட்டனுடன் அவர் சந்தித்தார். சனவரி 2019 இல், தெகரானின் எவின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தாநிய-ஈரானிய குடிமகன் Nazanin Zaghari-Ratcliffe உடன் சேர்ந்து, முகம்மதி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. சூலை 2020 இல், அவர் கோவிட்-19 நோய்த்தொற்றின் அறிகுறிகளைக் காட்டினார், அதில் இருந்து அவர் ஆகத்து மாதத்திற்குள் குணமடைந்ததாகத் தோன்றியது. 27 பிப்ரவரி 2021 அன்று, அவர் சிறையில் இருந்தபோது தனக்கு எதிராக திறக்கப்பட்ட வழக்குக்காக, திசம்பரில் இரண்டு முறை நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டதாக விளக்கி சமூக ஊடகங்கள் வழியாக ஒரு காணொலியை வெளியிட்டார். தான் நீதிமன்றத்தில் நேரில் வர மறுப்பதாகவும், எந்த தீர்ப்புக்கும் கீழ்ப்படியாமல் போவதாகவும் முகம்மதி கூறினார். அந்தக் காணொலியில், தானும் மற்ற பெண்களும் சிறைகளில் அனுபவித்த பாலியல் வரம்புமீறலையும் மோசமான நடத்தைகளை விவரிக்கிறார், மேலும் இது தொடர்பாக திசம்பர் 24 அன்று அவர் அளித்த புகாருக்கு அதிகாரிகள் இன்னும் பதிலளிக்கவில்லை என்று கூறுகிறார். நவம்பர் 2019 இல் பாதுகாப்புப் படையினரால் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதற்கும் கைது செய்யப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து, எவின் சிறைச்சாலையில் பெண் அரசியல் கைதிகள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தில் அவருக்கு எதிராக புதிய வழக்கு திறக்கப்பட்டது மார்ச்சு 2021 இல், ஈரானில் மரண தண்டனை குறித்த ஈரான் மனித உரிமைகள் ஆண்டு அறிக்கைக்கு முகம்மதி முன்னுரை எழுதினார். அவர் எழுதினார்: "கடந்த ஆண்டில் நவித் அபுக்காரி மற்றும் உரோல்லா சாம் போன்றவர்களின் மரணதண்டனை ஈரானில் மிகவும் தெளிவற்ற மரணதண்டனையாகும். அஹ்மத்ரேசா சலாலிக்கு மரண தண்டனை வழங்குவது மிகவும் தவறான தண்டனைகளில் ஒன்றாகும். மரண தண்டனைகளை கவனமாக ஆராய வேண்டும்.இவர்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு கொடூரமான உளவியல் மற்றும் உளத்தியலான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர், அதனால்தான் நீதித்துறையை நியாயமானதாகவோ அல்லது நியாயமானதாகவோ நான் கருதவில்லை; பிரதிவாதிகளை வைத்திருப்பதை நான் காண்கிறேன். தனிமைச் சிறையில், இந்த தண்டனைகளை வழங்குவதில் முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்தப்படும் பொய்யான மற்றும் பொய்யான வாக்குமூலங்களைச் செய்யும்படி அவர்களை வற்புறுத்துகிறது.அதனால்தான் நான் குறிப்பாக சிசுத்தாநிலும் பலுச்சிசுத்தானிலும் குருதித்தானிலும் சஅண்மையில் தளையிடப்பட்டதைக் குறித்து கவலைப்படுகிறேன், மேலும் மரண தண்டனைக்கு எதிரான அமைப்புகள் கைதிகள் மீது சிறப்பு கவனம் செலுத்துவோம், ஏனெனில் வரும் ஆண்டில் மற்றொரு மரணதண்டனையை நாங்கள் சந்திக்க நேரிடும் என்று நான் அஞ்சுகிறேன்." மே மாதம், தெகரானில் உள்ள குற்றவழக்குகளுக்கான அறமன்றம் இரண்டின் கிளை 1188 முகம்மதிக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை, 80 கசையடிகள் மற்றும் இரண்டு தனித்தனியாக அபராதம் விதித்தது "அமைப்புக்கு எதிராக பரப்புரை செய்தது" உட்பட நான்கு மாதங்களுக்குப் பிறகு, இந்த தண்டனையை அனுபவிக்க அவருக்கு நேர்வர வந்தது, ஆனால் அவர் அந்த தண்டனையை நியாயமற்றதாகக் கருதியதால் அவள் பதிலளிக்கவில்லை. நவம்பர் 16, 2021 அன்று, நவம்பர் 2019 இல் நாடு தழுவிய போராட்டங்களின் போது ஈரானிய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட இபரகிம் கெட்டப்தாரின் நினைவிடத்தில் கலந்துகொண்டபோது, அல்போரசு மாகாணத்தின் கராச்சு என்ற இடத்தில் தன்னிச்சையாக தளையிடப்பட்டார். 2022 திசம்பரில், மகசா அமினி காவலில் வைக்கப்பட்டிருந்தபோது நிகழ்ந்த ரணத்தால் தூண்டப்பட்ட போராட்டங்களின் போது, நர்கசு முகம்மதி, பிபிசி வெளியிட்ட ஒரு அறிக்கையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களின் பாலியல் பற்றியும் உடல் உடலளிவ்லான வரம்புமீறியமை பற்றியும் குறித்து விவரித்தார். சனவரி 2023 இல், அவர் சிறையில் இருந்து அதிர்ச்சியூட்டும் அறிக்கையை அளித்தார், அதில் 58 கைதிகளின் பட்டியல் மற்றும் அவர்கள் அனுபவித்த விசாரணை மற்றும் சித்திரவதைகள் உட்பட எவின் சிறையில் உள்ள பெண்களின் நிலை விவரிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 57 பெண்கள் மொத்தம் 8350 நாட்களை தனிமைச் சிறையில் கழித்துள்ளனர். இவர்களில் 56 பெண்களுக்கு மொத்தம் 3300 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முகமதி பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்: 2009 அலெக்சாண்டர் லாங்கர் விருது, அமைதி ஆர்வலர் அலெக்சாண்டர் லாங்கருக்கு பெயரிடப்பட்டது. இந்த விருது 10,000 யூரோ கவுரவத் தொகையாக இருந்தது. 2011 Per Anger Prize, மனித உரிமைகளுக்கான ஸ்வீடன் அரசாங்கத்தின் சர்வதேச விருது 2016 வீமர் மனித உரிமைகள் விருது அமெரிக்கன் பிசிகல் சொசைட்டியின் 2018 ஆண்ட்ரி சகாரோவ் பரிசு 2022 பிபிசியின் 100 ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக அங்கீகாரம் 2023 : ஸ்வீடிஷ் ஓலோஃப் பால்மே அறக்கட்டளையின் ஓலோஃப் பால்மே பரிசு, மார்டா சுமலோ மற்றும் எரன் கெஸ்கின் உடன் இணைந்து 2023 UNESCO/Guillermo Cano World Press Freedom Prize, Elaheh Mohammadi மற்றும் Niloofar Hamedi ஆகியோருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. 2023 அமைதிக்கான நோபல் பரிசு "ஈரானில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான அவரது போராட்டம் மற்றும் மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான அவரது போராட்டத்திற்காக" 2010 இல், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாடி பெலிக்ஸ் எர்மகோரா மனித உரிமைகள் விருதை வென்றபோது, அதை முகமதிக்கு அர்ப்பணித்தார். "என்னை விட இந்த தைரியமான பெண் இந்த விருதுக்கு தகுதியானவள்" என்று ஏபாடி கூறினார். வெள்ளை சித்திரவதை: பெண்களுக்கு ஈரானின் சிறைகளுக்குள். ஒன்வேர்ல்ட் பப்ளிகேஷன்ஸ், 2022. ஐஎஸ்பிஎன் 9780861545506 மேற்கோள்கள் 1972 பிறப்புகள் வாழும் நபர்கள் நோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள் ஈரானிய மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் நோபல் பரிசு பெற்ற பெண்கள் நோபல் பரிசு பெற்ற ஈரானியர்கள்
595776
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
பாரடைசியஸ் துடுப்பு வால் கரிச்சான்
பாரடைசியஸ் துடுப்பு வால் கரிச்சான் (அறிவியல் பெயர்: Dicrurus paradiseus paradiseus) என்பது துடுப்பு வால் கரிச்சானின் துணையினம் ஆகும். இது தென்னிந்தியாவிலிருந்து தெற்கு தாய்லாந்து, வடக்கு மலாய் தீபகற்பம் மற்றும் தெற்கு இந்தோசீனா வரை காணப்படுகிறது. விளக்கம் பாரடைசியஸ் துடுப்பு வால் கரிச்சான் மைனா அளவில், நீண்ட துடுப்பு வாலுசன் சுமார் 60 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகும் கால்களும் கறுப்பாகவும், விழிப்படலம் செம்பழுப்பாகவும் இருக்கும். இதன் உடல் பளபளப்பான கறுப்பு நிறத் தோற்றம் கொண்டது. இதன் தலையில் சிறிய பின் வளைந்த கொண்டை காணப்படும். வாலின் புற இறகுகள் இரண்டும் மெல்லிய கம்பி போல நீண்டு முடிவில் துடுப்புப் போல் அகன்று திருகிக்கொண்டு முடிந்திருக்கக் காண இயலும். பரவலும் வாழிடமும் பாரடைசியஸ் துடுப்பு வால் கரிச்சான் தென்னிந்தியாவிலிருந்து தெற்கு தாய்லாந்து, வடக்கு மலாய் தீபகற்பம் மற்றும் தெற்கு இந்தோசீனா வரை காணப்படுகிறது. தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகளில் உள்ள பசுங்காடுகளிலும், இலையுதிர் காடுகளிலும், சமவெளிகளிலும், மலைகளில் சுமார் 1200 மீட்டர் உயரம் வரையிலும் காணப்படுகிறது. மூங்கில் காடுகள், இரப்பர் தோட்டங்களிலும் காண இயலும். நடத்தை இது வால்காக்கை, மரங்கொத்தி, ஈப்பிடிப்பான் முதலிய பறவைகளோடு சேர்ந்து இரைதேடி அலையும் பழக்கம் கொண்டது. இப்பறவை பலவகைப் பறவைகளைப் போல குரல் எழுப்பும் திறமை கொண்டது. இனப்பெருக்க காலத்தில் புலர்வதற்கு நெடு நேரம் முன்னதாகவே ஓயாது தொடர்ந்து டுங், டுங், டுங் எனக் கணீர் என்ற குரலில் கத்தியபடி இருக்கும். பூச்சிகள், சிறு வண்ணத்துப் பூச்சிகள், மலர்களில் உள்ள தேன் ஆகியவற்றை உணவாகக் கொள்ளும். இப்பறவை பெப்ரவரி முதல் மே முடிய இனப்பெருக்கம் செய்யும். குச்சிகள், வேர், நார் ஆகியவற்றைக் கொண்டு மரங்களின் பறங்களில் தொங்கும் கிளைகளில் சிலந்தி நூல் கொண்டு கூடு கட்டும். கூடுகளை தரையில் இருந்து ஊந்து முதல் 15 மீட்டர் உயரத்தில் காண இயலும். பாலேட்டு வெண்மையான செம்பழுப்புக் கறைகள் கொண்ட மூன்று முட்டைகளை இடும். மேற்கோள்கள் தென்னிந்தியப் பறவைகள் கரிச்சான்கள்
595778
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%87%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81
ஆந்தரே சாக்கரோவ் பரிசு
ஆந்தரே சாகரோவ் பரிசு (Andrei Sakharov Prize) என்பது 2006 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க இயற்பியல் மன்றத்தால் இரண்டாண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் ஒரு பரிசு ஆகும். பெறுநர்கள் " ஒப்பரிய தலைமைக்கும் அல்லது மாந்தஉரிமைகளை நிலைநாட்டுவதில் அறிவியலாளர்களின் அருஞ்செயல்களுக்காக "த் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். சோவியத்து ஒன்றியத்தின் அணு இயற்பியலாளரும் மாறுபட்டு விலகியவரும் மாந்த உரிமை ஆர்வலருமான ஆந்தரே கசாக்கரோவ் (1921-1989) என்பவரின் பெயரால் இந்தப் பரிசு வழங்கப்படுகின்றது; 2007 ஆம் ஆண்டில் இதன் மதிப்பு $10,000 ஆக இருந்தது. பரிசு பெற்றவர்கள் 2006 யூரி ஓருலோவ் (காருணெல் பல்கலைக்கழகம்) 2008 இலியாங்கிங்கு சூ (சீன அறிவியல் அகாடமி) 2010 எருமன் வினிக்கு (இசுடான்போர்த நேர்கோட்டு முடுக்கக மையம்), சோசப்பு பிருமன் (நியூயார்க்கு நகரப் பல்கலைக்கழகம்), மோரிசு (மொயிசே) பிரிப்புத்தீன் (தேசிய அறிவியல் அறக்கட்டளை) 2012 முலுகெட்டா பெக்கலி (அடிசு அபாபா பல்கலைக்கழகம்), இரிச்சாடு வில்சன் (ஆவேடு (Harvard) பல்கலைக்கழகம்) 2014 போரிசு அலட்டுசூலர் (PN இலெபதேவ் இயற்பியல் கழகம்) மற்றும் ஓமிது கோக்கபி (ஆசுட்டினில் உள்ள தெக்குசாசு பல்கலைக்கழகம்) 2016 சாபரா எம். இலெருமன் (மாலட்டா மாநாட்டு அறக்கட்டளை) 2018 இரவி குச்சிமஞ்சி ( இந்திய வளர்ச்சிக்கான மன்றம் ) மற்றும் நருகீசு முகம்மதி (ஈரான் பொறியியல் சரிபார்ப்பு நிறுவனம்) ஐசே எருசான் (இசுத்தான்பூல்l தொழினுத்பப் பல்கலைக்கழகம் மற்றும் சியாவோசிங்கு சி(தெம்பிள் பல்கலைக்கழகம் ) 2022 சான் சி. பொலானி (தொராண்டோ பல்கலைக்கழகம்) இவற்றையும் பார்க்கவும் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ஆந்தரே சாகரோவ் பரிசு, அமெரிக்கன் பிசிகல் சொசைட்டி மனித உரிமை பரிசுகள்
595782
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%28%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%29
இந்தியத் தேசிய காங்கிரசு (செகசீவன்ராம்)
இந்தியத் தேசிய காங்கிரசு (செகசீவன்ராம்)(Indian National Congress (Jagjivan)) என்பது இந்தியாவில் உள்ள ஒருஅரசியல் கட்சி ஆகும். ஜெகசீவன்ராம் இந்தியத் தேசிய காங்கிரசிலிருந்து ராஜினாமா செய்த பிறகு, ஆகத்து 1981-ல் இக்கட்சி உருவாக்கப்பட்டது. கட்சித் தலைவர் தேவராஜா உர்சை கட்சியிலிருந்து நீக்கி, அகில இந்தியத் காங்கிரசு கட்சி கூட்டத்தை ஜெகசீவன்ராம் நடத்தினார். இதன் காரணமாகக் காங்கிரசிலிருந்து ராம் வெளியேற்றப்பட்டார். இக்கட்சி இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு சில உறுப்பினர்களுடன் செயல்பட்டது. ஆனால் 1986-ல் ஜெகசீவன்ராமின் மரணத்திற்குப் பிறகு கலைக்கப்பட்டது. மேற்கோள்கள் இந்திய அரசியல் கட்சிகள்
595783
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF-23%20%28%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%29
ஜி-23 (அரசியல் குழு)
ஜி-23 (G-23) என்பது இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உள்ள 23 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவாகும். இவர்கள் வலுவான தலைமையைக் கேட்டு கடிதம் எழுதினர். ஜி-23 உறுப்பினர்களின் பட்டியல் மேற்கோள்கள் மக்களவை உறுப்பினர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
595786
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF
கருநாடக புரட்சிகர முன்னணி
கருநாடக புரட்சிகர முன்னணி (Karnataka Kranti Ranga) என்பது கர்நாடகா கிராந்தி ரங்கா என்றும் கன்னட கிராந்தி ரங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் கர்நாடகத்தின் உள்ள ஒரு பிராந்திய அரசியல் கட்சியாகும். இந்தியத் தேசிய காங்கிரசிலிருந்து 1979-ல் தேவராஜா அரசு பிரிந்து இக்கட்சியினை உருவாக்கினார். இது பின்னர் இந்தியத் தேசிய காங்கிரசு (அ) என்று அழைக்கப்பட்டது. பின்னர் இக்கட்சி ஜனதா கட்சியுடன் இணைந்தது. மீண்டும் 1983-ல்,கருநாடக புரட்சிகர முன்னணி சாரெகொப்பா பங்காரப்பாவால் "துவக்கப்பட்டு", 1989 கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு காங்கிரசுடன் இணைக்கப்பட்டது. மேற்கோள்கள் 1979இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்
595788
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%28%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%29
அருணாச்சல காங்கிரசு (மித்தி)
அருணாச்சல காங்கிரசு (மித்தி) (Arunachal Congress (Mithi)), என்பது அருணாச்சல காங்கிரசிலிருந்து பிரிந்த குழுவாகும். அருணாச்சல காங்கிரசு தலைவர் கேகோங்க் அபாங்கிற்கு எதிராக முகுத் மித்தி ஒரு கிளர்ச்சியை வழிநடத்தியபோது 1998-ல் அருணாச்சல காங்கிரசு (மித்தி) உருவாக்கப்பட்டது. அருணாச்சல காங்கிரசு மித்திஅருணாச்சலப் பிரதேசத்தின் 40 (60 பேரில்) சட்டமன்ற உறுப்பினர்களையும், மக்களவையின் உறுப்பினர்களில் ஒருவராக வாங்சா ராஜ்குமாரையும் வெற்றிபெறச் செய்தது. இக்கட்சி புதிய மாநில அரசாங்கத்தை உருவாக்கியது, மித்தி முதல்வராக இருந்தார். 1999-ல் அருணாச்சல காங்கிரசு (மித்தி) இந்தியத் தேசிய காங்கிரசுடன் இணைந்தது. 2003 வரை ஆட்சியிலிருந்தது. மேலும் பார்க்கவும் இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து பிரிந்த கட்சிகள் 1998இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள் இந்திய தேசிய காங்கிரஸ்
595790
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE
மலபாரிக்கா சாம்பல் தலை மைனா
மலபாரிக்கா சாம்பல் தலை மைனா (அறிவியல் பெயர்: Sturnia malabarica malabarica) என்பது சாம்பல் தலை மைனாவின் துணையினம் ஆகும். இப்பறவை இந்தியா (தென்மேற்கு, வடகிழக்கு தவிர), தெற்கு நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. விளக்கம் மலபாரிக்கா சாம்பல் தலை மைனா மைனாவைவிடச் சற்று சிறியதாகவும், மெலிந்தும் சுமார் 20 செ. மீ. நீளமுள்ளதாக இருக்கும். இப்பறவையின் அலகின் அடிப்பகுதி நீலமாகவும் நடுப்பகுதி பச்சையாகவும் முனை மஞ்சளாகவும் இருக்கும். விழிப்படலம் வெளிர் நீலநிறத்திலும், கால்கள் பழுப்புத் தோய்ந்த மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இதன் நெற்றியும் தொண்டையும் வெண்மையாக இருக்கும். உடலின் மேற்பகுதி சாம்பல் நிறமாகவும், தலை, கழுத்து, தோள்பட்டை ஆகியவற்றில் வெண்மையான கோடுகள் காணப்படும். இறக்கைகள் கறுப்புத் தோய்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். வால் கறுப்பாகச் செம்பழுப்பு முனையோடு இருக்கும். உடலின் அடிப்பகுதி சிவப்புத் தோய்ந்த மஞ்சள் பழுப்பாக இருக்கும். வயதான பறவைகளின் நிறம் சற்று வேறுபட்டுக் காணப்படும். பால் ஈருருமை இல்லை. பரவலும் வாழிடமும் இப்பறவைத் துணையினம் குஜராத்தின் பூஜ்ஜிலிருந்து வட கிழக்காக சண்டிகருக்குத் தெற்கேயுள்ள இந்தியாவின் பெரும்பகுதி, இமாச்சலப் பிரதேசத்திலிருந்து கிழக்காக நேப்பாளம் வழியாக பூட்டான், வடகிழக்கு அருணாச்சலப் பிரதேசத்தின் மிசுமி மலைகள், வடக்கு அசாம் வரை, தெற்கே ஒடிசா வரை காணப்படுகின்றது. குளிர் காலத்தில் தென்னிந்தியாவுக்கு வலசை வருகின்றன. குளிர் காலத்தில் தென்னிந்தியா முழுவதும் ஆங்காங்கே காணப்பட்டாலும் குறிப்பாக கேரளத்தில் காணப்படுகிறது. நடத்தை இப்பறவை ஐந்து முதல் இருபது வரையிலான சிறு கூட்டமாக பிற மைனாக்களோடு பெரும்பாலும் மரங்களில் உயரவே திரியக் காணலாம். இவை மைனாவைப் போல தரையில் மேய்வது இல்லை. இலந்தை லாண்டனா ஆகியவற்றின் பழங்களும் மலர்த் தேனும் இதன் முதன்மை உணவாகும். இவை வட இந்தியாவில் இனப்பெருக்கம் செய்கின்றன. மேற்கோள்கள் மைனா இந்தியப் பறவைகள்
595794
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88
வடிகால் புழை
வடிகால் புழை அல்லது ஆசுகுலம் (Osculum)(பன்மை "ஆசுகுலா") என்பது பஞ்சுயிரிகளில் உள்ள நீர் வெளியேற்ற அமைப்பாகும். இது வெளியில் ஒரு பெரிய திறப்பு போன்று காணப்படும். இதன் மூலம் நீரானது புழையுடலி குழியிலிருந்து வெளியேறுகிறது. புழையுடலியின் கழிவுகள் வெளியேறும் தண்ணீர் மூலம் அகற்றப்படுகிறது. பஞ்சுயிரியின் கழிவுகள் ஆசுகுலம் வழியாக வெளியேறும் நீரில் அனுப்பப்படுகிறது. பஞ்சுயிரிகள் அதிக அளவு தண்ணீரை வெளியேற்றுகின்றன. பொதுவாக பஞ்சுயிரியின் உடல் அளவிற்குச் சமமான நீர் அளவு ஒவ்வொரு ஐந்து வினாடிக்கும் வெளியேற்றப்படுகிறது. சவ்வூடுகளின் அளவு சுருங்கும் மயோசைட்டுகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் அளவு, பஞ்சுயிரி வழியாகச் செல்லும் நீரின் அளவை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாகும். தண்ணீரில் அதிகப்படியான வண்டல் காணப்பட்டால் வடிகால் புழை முழுமையாக மூடப்படும். மேற்கோள்கள் பஞ்சுயிரி உடற்கூறியல்
595795
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
வீரன் அம்பலம்
வீரன் அம்பலம் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் மேலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முக்கிய பிரமுகராக முந்தைய காலகட்டத்தில் அறியப்பட்டவர். வீரன் அம்பலம் 1980, 1984 சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரசு கட்சியில் இருந்து தொடர்ந்து இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரின் தந்தை பெயர் வெள்ளாண்டி அம்பலம் (நிலக்கிழார்). சொந்த ஊர் கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரம் ஆகும். முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர். இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
595796
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%87
ஜியோடிடே
ஜியோடிடே (Geodiidae) என்பது பஞ்சுயிரிகளின் குடும்பங்களுள் ஒன்றாகும். பேரினம் கமினெல்லா லெண்டன்பெல்ட், 1894 காமினசு ஷ்மிட், 1862 டிப்ரெசியோஜியோடியா கார்டெனாசு, ராப், சாண்டர் & தெண்டல், 2010 (தற்காலிக பெயர்) எரிலசு கிரே, 1867 ஜியோடியா லாமார்க், 1815 மெலோப்லசு தீலே, 1899 பேச்சிமாடிசுமா போவர்பேங்க், 1864 பெனாரசு கிரே, 1867 மேற்கோள்கள் புழையுடலிகள்
595805
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D
ஏர்டெல் பேமெண்ட்ஸ் பேங்க்
ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி என்பது புது தில்லியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பேமெண்ட் வங்கி ஆகும். இந்நிறுவனம் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். 5 ஜனவரி 2022 அன்று, RBI சட்டம், 1934 இன் இரண்டாவது அட்டவணையின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியால் திட்டமிடப்பட்ட வங்கி அந்தஸ்து வழங்கப்பட்டது. மேற்கோள்கள் நிதிச் சேவைகள்
595813
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%28III%29%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
சமாரியம்(III) பாசுபேட்டு
சமாரியம்(III) பாசுபேட்டு (Samarium(III) phosphate) என்பது SmPO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியத்தின் அறியப்பட்ட பாசுபேட்டுகளில் இதுவும் ஒன்றாகும். தயாரிப்பு ஏதாவதொரு கரையக்கூடிய சமாரியம்(III) உப்புடன் சோடியம் மெட்டாபசுபேட்டைச் சேர்த்து வினை புரியச் செய்தால் சமாரியம்(III) பாசுபேட்டு உருவாகிறது: பாசுபாரிக் அமிலத்துடன் சமாரியம்(III) குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் சமாரியம்(III) பாசுபேட்டைத் தயாரிக்கலாம். பண்புகள் சமாரியம்(III) பாசுபேட்டு 750 ° செல்சியசு வெப்பநிலையில் சோடியம் புளோரைடுடன் வினைபுரிந்து Na2SmF2PO4 சேர்மத்தை உருவாக்குகிறது. P21/n என்ற இடக்குழுவுடன் a = 0.6669 நானோமீட்டர், b = 0.6868 நானோமீட்டர், c = 0.6351 நானோமீட்டர், β = 103.92 °, Z = 4 என்ற அளவுருக்களுடன் சமாரியம்(III) பாசுபேட்டு ஒற்றைச்சரிவச்சு படிகங்களாக உருவாகிறது. மேற்கோள்கள் சமாரியம் சேர்மங்கள் பாசுபேட்டுகள்
595814
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%28III%29%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
சமாரியம்(III) பெர்குளோரேட்டு
சமாரியம்(III) பெர்குளோரேட்டு (Samarium(III) perchlorate) என்பது Sm(ClO4)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தயாரிப்பு சமாரியம்(III) ஆக்சைடுடன் பெர்குளோரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் சமாரியம்(III) பெர்குளோரேட்டு கிடைக்கிறது. வீழ்படிவாகக் கிடைக்கும் நீரேற்றை இருகுளோரின் ஆறாக்சைடுடன் சேர்த்து நீர்நீக்க வினைக்கு உட்படுத்தினால் நீரிலி வடிவ சமாரியம்(III) பெர்குளோரேட்டு கிடைக்கும். பண்புகள் P63/m என்ற இடக்குழுவுடன் a=9.259 Å, c=5.746 Å, Z=2 என்ற அலகுசெல் அளவுருக்களுடன் நீரற்ற சமாரியம்(III) பெர்குளோரேட்டு அறுகோணப் படிகங்களாக உருவாகிறது. அம்மோனியம் தயோசயனேட்டு மற்றும் 1-பியூட்டைல்-3-மெத்தில் இமிடாசோலியம் தயோசயனேட்டு ([BMIM]SCN) உடன் முழுமையான எத்தனாலில் வினைபுரிந்து அயனி திரவத்தை [BMIM]4[Sm(NCS)7(H2O)] கொடுக்கிறது. மேற்கோள்கள் சமாரியம் சேர்மங்கள் பெர்குளோரேட்டுகள்
595815
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D
வினய் யாதவ்
வினய் யாதவ் (Vinay Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2020-ல் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் குருவா சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராக இராச்டிரிய ஜனதா தளத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாஜகவின் ராஜீவ் நந்தனைத் தோற்கடித்தார். மேலும் பார்க்கவும் குருவா சட்டமன்றத் தொகுதி மேற்கோள்கள் 1982 பிறப்புகள் பீகார் அரசியல்வாதிகள் வாழும் நபர்கள் கயா மாவட்ட நபர்கள் பீகார் சட்டமன்ற உறுப்பினர்கள்
595818
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87
இராம் சந்திர பூர்வே
இராம் சந்திர பூர்வே (Ram Chandra Purve) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்ட மேலவை உறுப்பினரும் ஆவார். இவர் மார்ச் 23 அன்று நடந்த தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர் 11 பேரில் ஒருவர் ஆவார். பூர்வே இராட்டிரிய ஜனதா தள பீகாரின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆவார். மேற்கோள்கள் வாழும் நபர்கள் பீகார் அரசியல்வாதிகள்
595822
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81
இசுக்காண்டியம் நைட்ரைடு
இசுக்காண்டியம் நைட்ரைடு (Scandium nitride) என்பது ScN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இசுக்காண்டியம் நேர்மின் அயனியும் நைட்ரைடு எதிர்மின் அயனியும் சேர்ந்து உருவாகும் இந்த இருமச் சேர்மம் III-V மறைமுக ஆற்றல் இடைவெளி குறைக்கடத்தியாக வகைப்படுத்தப்படுகிறது. தங்குதன் படலத்தின் மீது பதங்கமாதல் மற்றும் மறு ஒடுக்கம் மூலம் இசுக்காண்டியம் நைட்ரைடு படிகங்களாக வளர்கிறது. 0.451 நானோமீட்டரின் அடுக்கு குணக மாறிலியுடன் 0.9 எலக்ட்ரான் வோல்ட்டு மறைமுக ஆற்றல் இடைவெளியும் 2 முதல் 2.4 எலக்ட்ரான் வோல்ட்டு வரையான நேரடி ஆற்றல் இடைவெளியும் கொண்ட ஒரு பாறை-உப்பு படிக அமைப்பை இசுக்காண்டியம் நைட்ரைடு கொண்டுள்ளது. நைட்ரசன் வாயுவை இண்டியம்-இசுக்காண்டியம் உருகல் மூலம் கரைத்து இந்த படிகங்களை தயாரிக்க முடியும். மேக்னட்ரான் தெறிப்புப்பூச்சு போன்ற பிற படிவு முறைகளிலும் இப்படிகங்களை தயாரிக்க முடியும். சிலிக்கான் டை ஆக்சைடு (SiO2) அல்லது ஆபினியம் டை ஆக்சைடு (HfO2) அடி மூலக்கூறில் உள்ள குறைக்கடத்திகளுக்கு இசுக்காண்டியம் நைட்ரைடு ஒரு பயனுள்ள நுழைவாயிலாகும். மேற்கோள்கள் இசுக்காண்டியம் சேர்மங்கள் நைட்ரைடுகள்
595823
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE
பாய் வீரேந்திரா
பாய் வீரேந்திரா (Bhai Virendra) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் பீகார் மாநில மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இராட்டிரிய ஜனதா தளத்தின் உறுப்பினராக 2010 பீகார் சட்டமன்றத் தேர்தலில் மனேர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது பீகார் ஆர்ஜேடி கட்சியின் முக்கிய செய்தி தொடர்பாளராக பணியாற்றி வருகிறார். வீரேந்திரா 2019 மக்களவைத் தேர்தலில் பாடலிபுத்ரா மக்களவைத் தொகுதியில் போட்டியிட ஆர்வமாக இருந்தா. ஆனால் இவரை தேஜ் பிரதாப் யாதவ் எதிர்த்தார், ஏனெனில் பிந்தியவரின் மூத்த சகோதரி மிசா பார்தி 2019-ல் அந்தத் தொகுதியில் போட்டியிட்டார். வெளி இணைப்புகள் மேற்கோள்கள் 1961 பிறப்புகள் வாழும் நபர்கள் பீகார் அரசியல்வாதிகள்
595828
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%28II%29%20%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88
தாமிரம்-தாமிர(II) சல்பேட்டு மின்முனை
தாமிரம்-தாமிரம்(II) சல்பேட்டு மின்முனையானது (copper–copper(II) sulfate electrode) உலோகம் ( தாமிரம் ) மற்றும் அதன் உப்பு, தாமிரம்(II) சல்பேட்டு ஆகியவற்றின் பங்கேற்புடன் கூடிய ஒடுக்க-ஏற்ற வேதிவினையின் அடிப்படையிலான, முதல் வகையான ஒரு நோக்கீட்டு மின்முனையாகும் . இது மின்முனைத் திறனை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் எதிர்முனைப் பாதுகாப்பு அரிப்புக் கட்டுப்பாட்டு அமைப்புகளைச் சோதிக்க பொதுவாகப் பயன்படுத்தப்படும் நோக்கீட்டு மின்முனையாகும். தொடர்புடைய சமன்பாட்டை பின்வருமாறு வழங்கலாம்: Cu 2+ + 2e − → Cu 0 (உலோகம்) இந்த வேதிவினை மீளக்கூடிய மற்றும் வேகமான மின்முனை இயக்கவியலால் வகைப்படுத்தப்படுகிறது, இதன் பொருள்ஒடுக்க-ஏற்ற வினையின் 100% செயல்திறனுடன் (உலோகத்தின் கரைப்பு அல்லது தாமிர-அயனிகளின் எதிர்முனைப் படிவு) போதுமான உயர் மின்னோட்டத்தை மின்முனையின் வழியாக அனுப்ப முடியும் என்பதாகும். கீழே உள்ள நெர்ன்ஸ்ட் சமன்பாடு, தாமிரம்-தாமிர(II) சல்பேட்டு மின்முனையின் செயல்பாட்டின் மீது அல்லது தாமிர-அயனிகளின் செறிவின் ஆற்றலின் சார்புநிலையைக் காட்டுகிறது: வணிகரீதியான நோக்கீட்டு மின்முனைகள் தாமிரக்கம்பியை வைத்திருக்கும் நெகிழிக் குழாய் மற்றும் தாமிர சல்பேட்டின் நிறைவுற்ற கரைசலைக் கொண்டிருக்கும். ஒரு முனையில் உள்ள நுண்துளை செருகி தாமிர சல்பேட் மின்பகுபொருளுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது. தாமிரக்கம்பி குழாயின் வெளியே நீண்டுள்ளது. ஒரு மின்னழுத்தமானியின் எதிர்முனை தாமிரக் கம்பியுடன் இணைக்கப்பட்டுள்ளது. தாமிரம்-தாமிர(II) சல்பேட் மின்முனையானது கால்வனிக் டேனியல்-மின்கலத்தில் உள்ள அரைக்கலங்களில் ஒன்றாகவும் பயன்படுத்தப்படுகிறது. பயன்பாடுகள் தாமிர வோல்டாமானி குறிப்புகள் மேற்கோள்கள் ஈ. ப்ரோடோபோபாஃப் மற்றும் பி. மார்கஸ், குறிப்பு மின்முனைகளுடன் கூடிய சாத்தியக்கூறுகள், அரிப்பு: அடிப்படைகள், சோதனை மற்றும் பாதுகாப்பு, தொகுதி 13A, ASM கையேடு, ASM இன்டர்நேஷனல், 2003, ப 13-16 AW பீபாடி, பீபோடியின் பைப்லைன் அரிப்பைக் கட்டுப்படுத்துதல், 2வது பதிப்பு. , 2001, NACE இன்டர்நேஷனல். ஐஎஸ்பிஎன் 1-57590-092-0 மின்முனைகள்
595829
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
முற்கால கனிகத்தாவரம்
முற்கால கனிகத்தாவரம் (Archaeplastida) என்ற வகைப்படுத்தப்படாத உயிரின பெருந்தொகுதி, பெருமளவு மெய்க்கருவுயிரிகளைக் கொண்டுள்ளது. இதனுள் தன்னூட்ட உயிரிகளான (photoautotrophic) தாவர திணை அடங்கியுள்ளது. இத்திணையில் சிவப்புப் பாசி (Rhodophyta), பச்சை பாசிகள், எம்பிரியோபைட் போன்ற பல தாவரத்தொகுதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பூமியின் தொடக்க கால உயிரினங்கள் தோன்றிய பொழுது உருவான இவற்றின் கனிகங்கள் இரு வகைப்படும். பசுங்கனிகம், வேதிச்சேர்க்கை ஆகிய இருவகை கனிகங்களால் தனக்குத் தேவையான உணவினை உற்பத்தி செய்து கொள்கின்றன. மேற்கோள்கள் தாவர வகைப்பாட்டியல்
595830
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88
பல்லேடியம்-ஐதரசன் மின்முனை
பல்லேடியம்-ஐதரசன் மின்முனை (Palladium-hydrogen electrode) என்பது மின்வேதியியல் ஆய்வில் பயன்படுத்தப்படும் பொதுவான நோக்கீட்டு மின்முனைகளில் ஒன்றாகும். இதன் பெரும்பாலான பண்புகள் நிலையான ஐதரசன் மின்முனையை ( பிளாட்டினத்துடன் ) ஒத்திருக்கும். ஆனால், பல்லேடியம் மூலக்கூறு ஐதரசனை உறிஞ்சும் (தன்னுள்ளே கரையச்செய்யும்) திறன் என்ற ஒரு குறிப்பிடத்தக்க அம்சத்தைக் கொண்டுள்ளது-. மின்முனை செயல்பாடு ஐதரசன் உறிஞ்சப்படும் போது பல்லேடியத்தில் இரண்டு நிலைகள் இணைந்து இருக்கலாம்: பல்லேடியத்தின் ஒரு அணுவிற்கு 0.025 அணுக்களுக்கும் குறைவான ஐதரசன் செறிவினைக் கொண்ட ஆல்பா-நிலை விகிதவியல் ஒவ்வா வாய்பாடான PdH 0.6 உடன் தொடர்புடைய ஐதரசன் செறிவினைக் கொண்ட பீட்டா நிலை கரைசலில் H 3 O + அயனிகளுடன் சமநிலையில் உள்ள பல்லேடியம் மின்முனையின் மின்வேதியியல் நடத்தையானது மூலக்கூறு ஐதரசனுடன் பல்லேடியத்தின் நடத்தைக்கு இணையாக உள்ளது. இவ்வாறு சமநிலையானது ஒரு சந்தர்ப்பத்தில் மூலக்கூறு ஐதரசனின் பகுதியளவு அழுத்தம் அல்லது வளிம விரிதன்மையாலும் மற்ற சந்தர்ப்பங்களில் - கரைசலில் H + -அயனிகளின் செயல்பாட்டின் மூலமும் கட்டுப்படுத்தப்படுகிறது, பல்லேடியம் ஐதரசனால் மின்வேதியியல் ரீதியாக மின்னேற்றம் செய்யப்படும்போது, மீளக்கூடிய ஐதரசன் மின்முனையுடன் ஒப்பிடும்போது இரண்டு கட்டங்களின் இருப்பு தோராயமாக +50 mV நிலையான ஆற்றலால் வெளிப்படுகிறது. இந்த ஆற்றல் பரந்த அளவில் உறிஞ்சப்படும் ஐதரசனின் அளவிலிருந்து பாதிக்கப்படாததாக உள்ளது. இந்தப் பண்பு பல்லேடியம்/ஐதரசன் நோக்கீட்டு மின்முனையின் உருவாக்கத்தில் பயன்படுத்தப்பட்டது. இத்தகைய மின்முனையின் முக்கிய அம்சமானது, கரைசல் வழியாக மூலக்கூறு ஐதரசனனின் இடைவிடாத குமிழியிடல் இல்லாமலிருப்பது நிலையான ஐதரசன் மின்முனைக்கு முற்றிலும் அவசியம் என்பதாகும். மேற்கோள்கள் பலேடியம் மின்முனைகள்
595833
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE
பெர்சிஸ் கம்பட்டா
பெர்சிஸ் கம்பட்டா (Persis Khambatta) (2 அக்டோபர் 1948 – 18 ஆகஸ்ட் 1998) ஒரு இந்திய வடிவழகியும் நடிகையுமாவார். இவர் ஸ்டார் ட்ரெக்: தி மோஷன் பிக்சர் (1979) என்ற திரைப்படத்தில் இலியா என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக சிறப்பாக நினைவுகூரப்படுகிறார். ஆரம்ப வாழ்க்கையும் குடும்பமும் பெர்சிஸ் கம்பட்டா மும்பையில் ஒரு நடுத்தர வர்க்க பார்சி குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது இவருடைய தந்தை தனது குடும்பத்தை விட்டு வெளியேறினார். மும்பையைச் சேர்ந்த ஒரு பிரபல புகைப்படக் கலைஞரால் புகைப்படம் எடுக்கப்பட்ட போது புகழ் பெற்றார். இந்தப் புகைப்படம் ஒரு பிரபலமான சவர்க்கார நிறுவனத்தின் விளம்பத்திற்கு பயன்படுத்தப்பட்டது. இது இறுதியில் இவரை ஒரு வடிவழகியாக மாற வழிவகுத்தது. இவர் 1965 இல் பெமினா மிஸ் இந்தியா போட்டியில் நுழைந்து பட்டம் வென்றார். இப்போட்டியில் வென்ற இந்தியாவின் இரண்டாவது வெற்றியாளரும், பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்ற மூன்றாவது இந்தியப் பெண்ணும் ஆவார். பெமினா மிஸ் இந்தியா போட்டியில், இவர் மிஸ் போட்டோஜெனிக் விருதையும் வென்றார். நடிப்பு வாழ்க்கை கம்பட்டாவின் 13 வயதில் ரெக்ஸோனா விளம்பரங்களில் முதன்முதலில் தோன்றியதால், இவர் பிரபலமாக மாறினார். 16 வயதில், பெமினா மிஸ் இந்தியாவான்கம்பட்டா அந்த ஆண்டு ஜூலை மாதம் மிஸ் யுனிவர்ஸ் 1965 இல் நுழைந்தார். பின்னர், ஏர் இந்தியா, ரெவ்லான், கார்டன் வரேலி போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்றினார் . இயக்குனர் கே.ஏ.அப்பாசின் பம்பாய் ராத் கி பஹோன் மெய்ன் (1968), என்ற திரைப்படத்தின் தலைப்புப் பாடலில் காபரே பாடகி லில்லியாக நடித்ததன் மூலம் கம்பட்டா பாலிவுட்டில் அறிமுகமானார். கன்டாக்ட் அன்பெகமிங் மற்றும் தி வில்பி கான்ஸ்பிரசி (இரண்டும் 1975) ஆகிய படங்களில் ஒரு சிறிய பாத்திரத்தில் தோன்றினார். ஸ்டார் ட்ரெக்: தி மோஷன் பிக்சர் (1979) படத்தில் வழுக்கை தலையுடன் கூடிய டெல்டான் நேவிகேட்டர் லெப்டினன்ட் இலியா என்ற பாத்திரத்திற்காக இவர் மிகவும் அங்கீகரிக்கப்பட்டார். பாத்திரத்திற்காக தலையை மொட்டையடித்தார். 1980 இல் அகாதமி விருதை வழங்கிய முதல் இந்தியரானார். ஸ்டார் ட்ரெக்கில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான சனி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். ஆக்டோபஸ்ஸி (1983) என்ற ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் பிரதான பாத்திரத்தில் நடிக்க பரிசீலிக்கப்பட்டார். ஆனால் மவுட் ஆடம்ஸ் என்பவர் அதில் நடித்தார். 1980 ஆம் ஆண்டில், மேற்கு செருமனியில் நடந்த ஒரு வாகன விபத்தில் இவர் பலத்த காயமடைந்தார். அது இவரது தலையில் ஒரு பெரிய வடுவை ஏற்படுத்தியது. 1983 இல், இவர் கரோனரி தமனி அறுவை சிகிச்சைக்கு மும்பைக்குத் திரும்பினார். 1986 ஆம் ஆண்டு வெளியான ஷிங்கோரா என்ற இந்தித் திரைபடத்தில் ஆதித்யா பஞ்சோலி மற்றும் மார்க் ஜூபர் ஆகியோருக்கு இணையாக நடித்தார். பின்னர், கம்பட்டா ஹாலிவுட் திரும்பினார். அங்கு மைக் ஹேமர் மற்றும் மேக் கைவர் போன்ற பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் சிறப்பு வேடங்களில் நடித்தார். 1997 இல், இவர் ஒரு காபி டேபிள் புக், பிரைட் ஆஃப் இந்தியா என்ற நூலை எழுதி வெளியிட்டார். அதில் பல முன்னாள் மிஸ் இந்தியா வெற்றியாளர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த புத்தகம் அன்னை தெரேசாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மேலும் பங்குவீதத் தொகையின் ஒரு பகுதி பிறரன்பின் பணியாளர்கள் சபைக்கு வழங்கப்பட்டது. தனிப்பட்ட வாழ்க்கையும் இறப்பும் கம்பட்டா முதலில் நடிகர் கிளிஃப் டெய்லர் என்பவரை மணந்தார். மே 1989 இல் இவர் 1972இல் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கில் ஐக்கிய இராச்சியத்தின் தேசிய வளைதடிப் பந்தாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் வளைதடிப் பந்தாட்ட வீரரான ரூய் சல்தான்ஹா என்பவரை மணந்தார். நியூயார்க் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பிரதிநிதியாக சல்தான்ஹா பணியாற்றிய அயோவா மாநிலத் தலைநகர் டி மொயினில் இந்த விழா நடந்தது. கம்பட்டா, தொடர்ச்சியாக புகைப்பிடிப்பவராக இருந்தார். இதனால் 18 ஆகஸ்ட் 1998 அன்று தனது 49 வயதில் மாரடைப்பால் இறந்தார் மறுநாள் மும்பையில் இவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. சான்றுகள் குறிப்புகள் The Globe: 10 November 1998 Beverly Hills [213] magazine: November 1998 New York Post: 20 October 1998 வெளி இணைப்புகள் 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் இந்திய தொலைக்காட்சி நடிகைகள் இந்தியத் திரைப்பட நடிகைகள் பார்சி மக்கள் 1998 இறப்புகள் 1948 பிறப்புகள்
595840
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
சுவதேசுப் பட்டியல்
சுவதேசுப் பட்டியல் (ˈswɑːdɛʃ ) என்பது மொழியியல் நோக்கில் மொழிகளின் உறவுகளை ஒப்பிடுவதற்காக ஒரு மொழியிலுள்ள அடிப்படைச் சொற்களாகக் கருதத்தக்கவற்றின் ஒரு பட்டியல். சுவதேசுப் பட்டியலை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பது, அம்மொழிகள் ஒன்றோடொன்று எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது என்பதைக் கணக்கிட ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகின்றது. சுவதேசுப் பட்டியல் என்பது மொழியியலாளர் மோரிசு சசுவதேசு என்பவரின் பெயரால் பெயரிடப்பட்டது. இது மொழிகளுக்கிடையே அவற்றின் தொடர்புகளை ஒப்பீடு செய்வதற்காக உள்ள சொல்லொப்பீட்டளவியல் (lexicostatistics) என்னும் துறையிலும் தொண்டையொலிவழிக் காலவரைவியல் (glottochronology) என்னும் துறையிலும் பயன்படுத்தப்படுகின்றது. இது மொழிகளுக்கு இடையே மொழிச்சொற்கள் வேறுபடுவதைக் கொண்டு மொழிவ்ரலாற்றை, மொழிகள் கிளைக்கும் வரலாற்றைக் கணிக்கப் பயன்படுவதாகும். பல்வேறு பட்டியல்கள் இருப்பதால், சில ஆசிரியர்கள் "சுவதேசுப் பட்டியல்கள்" என்றும் குறிப்பிடுகின்றனர். மோரிசு சுவதேசு தனது பட்டியலின் பல பதிப்புகளை உருவாக்கினார். அவர் 215 சொற்பொருள் பட்டியலுடன் தொடங்கினார் (எழுத்துப்பிழை காரணமாக காகிதத்தில் 225 சொற்பொருள்களின் பட்டியல் என்று தவறாக அறிமுகப்படுத்தப்பட்டது ), அதை அவர் சாலிசு-சுபோக்கன்-கலிசுப்பெல் மொழிக்கான 165 சொற்களாகக் குறைத்தார். 1952 ஆம் ஆண்டில், அவர் 215 அசொற்பொருள்களின் பட்டியலை வெளியிட்டார், அதில் 16 சொற்கள் தெளிவற்ற அல்லது உலகறிந்ததாக இல்லாத காரணத்தால் நீக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார், ஒன்று 200 சொற்களுக்கு வருமாறு சேர்க்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டில், அவர் "தரமும் குறைந்தபட்சம் அளவைப் போலவே முக்கியமானது என்பதை உணர்ந்ததில், பட்டியலில் இருந்து கடுமையான களையெடுப்பது மட்டுமே ஒரே தீர்வு. புதிய பட்டியலில் கூட குறைபாடுகள் உள்ளன, ஆனால் அவை ஒப்பீட்டளவில் மெலிதான சிகல் உடையதும் எண்ணிக்கையில் குறைவானதும்." என்று எழுதினார். சிறிய திருத்தங்களுக்குப் பிறகு, இறுதியாக 100-சொற்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை 1971 -இலும், 1972 -இலும் அவர் இறப்புக்குப் பின் வெளியிடப்பட்டது. லெக்சிகோஸ்டாடிஸ்டிகல் சோதனை பட்டியல்களின் பிற பதிப்புகள் வெளியிடப்பட்டன எ.கா. இராபர்த்து இலீசு (1953), சான் ஏ. இரியா (1958:145f), தெல் ஐமசு (1960:6), இ. கிராசு (1964 உடன் 241 கருத்துகள்), தபிள்யூ.சே. சமரின் (1967:220f ), தி. வில்சன் (57 சொற்பொருள்களுடன் 1969), இலியோனல் பெண்டர் (1969), ஆர்.எல். ஓசுவாலட்டு (1971), வின்பிரெடு பி. இலேமன் (1984:35f), தி. இரிங்கு (1992, பாசிம், வெவ்வேறு பதிப்புகள்), செருகை தாரோசுட்டின் (1984), passim, வெவ்வேறு பதிப்புகள்), வில்லியம் எசு.ஒய். வாங்கு (1994), எம். உலோர் (2000, 18 மொழிகளில் 128 சொற்பொருள்கள்). பி. கெசுலர் (2002), மேலும் பலர். கான்செப்டிகான், கிராசு-இலிங்குவிசிடிக்கு இலிங்கிடு தேட்டா (Cross-Linguistic Linked Data CLLD) திட்டத்தில் தொகுக்கப்பட்ட ஒரு திட்டமானது, பல்வேறு காலங்களில் பல்வேறு கருத்துப் பட்டியல்களை (சீர்மரபு சுவதேசுப் பட்டியல்கள் உட்பட) சேகரிக்கிறது, தற்போது 240 வெவ்வேறு கருத்துப் பட்டியல்களை பட்டியலிடுகிறது. அடிக்கடி பயன்படுத்தப்படுவதும் இணையத்தில் பரவலாகக் கிடைக்க்கப்டும் பட்டியல், இசிதோர் தையென் (Isidore Dyen) என்பாரின் பதிப்பாகும் (1992, 95 மொழி வகைகளின் 200 சொற்பொருள்கள்). 2010 முதல், மைக்கேல் தன் என்பாருடன் இயங்கும் ற குழு அந்தப் பட்டியலைப் புதுப்பிக்கவும் மேம்படுத்தவும் முயன்றுள்ளது. தொடக்கத்தில், சுவதேசுப் பட்டியலில் உள்ள சொற்கள் அவற்றின் "நிலைத்தன்மை" எதுவாக இருந்தாலும், முடிந்தவரை பல மொழிகளிலும் இயல்பாக பொது பண்பாட்டுத் தன்மையுடன் எளிதாகக் கிடைக்கும் தன்மைக்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆயினும்கூட, மொழிகளின் மாற்றத்திநை அறிவதற்காக என்று உருவாக்கப்பட்ட "உலகளாவிய" சொற்றொகையின் நிலைத்தன்மையையும் தொண்டையொலிவழிக்காலவரைவியல் (glottochronology) நோக்கங்களுக்காக இவற்றைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புக்கூறுகள் பற்றியும் மரிசா உலோர் 1999, 2000 உட்பட பல எழுத்தாளர்கள் பகுப்பாய்வு செய்தனர் சுவதேசுப் பட்டியல் மோரிசு சுவதேசால் அவரது உள்ளுணர்வின் அடிப்படையில் ஒன்றாக உருவாக்கப்பட்டது. ஆனால் தோல்கோபோலசுக்கி பட்டியல் (1964) அல்லது இலீப்புசிகு-சகார்த்தா பட்டியல் (2009) போன்ற அண்மைய பட்டியல்கள் பல்வேறு மொழிகளில் இருந்து முறையான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவானவை. சொல்லொப்பீட்டளவியல் மற்றும் தொண்டையொலிவழிக்காலவரைவியல் ஆகியவற்றின் பயன்பாடு சொல்லொப்பீட்டளவியல் சோதனைப் பட்டியல்களானவை மொழிகளின் துணைக்குழுக்களை வரையறுக்க சொல்லொப்பீட்டளவியலில் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் தொண்டையொலிவழிக்காலவரைவியலலில் "மரத்தில் கிளைக்கும் புள்ளிகளுக்கான காலத்தை வழங்க" பயன்படுத்தப்படுகிறது. பட்டியலில் உள்ள இணைச்சொற்களை வரையறுக்கும் (மற்றும் எண்ணும்) பணி அற்பமானதல்ல, மேலும் பெரும்பாலும் சர்ச்சைக்கு உட்பட்டது, ஏனெனில் இனமான சொற்கள் ஒத்த ஒலிப்புடையதாக இருக்கத் தேவையில்லை. மேலும் இனச்சொற்கள் என்று உணர்ந்து ஏற்பதே அந்தந்த மொழிகளின் ஒலி விதிகளின் அறிவை முன்னிறுத்துவதாகின்றது. . 1971 இல் வெளியிடப்பட்ட சுவதேசின் இறுதிப் பட்டியல், 100 சொற்களைக் கொண்டுள்ளது. விதிமுறைகளின் விளக்கங்களை சுவதேசு 1952 இல் காணலாம் அல்லது ஒரு குத்துவால் ( † ) குறியுடன் சுவதேசு 1955 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூல வரிசை மட்டுமே பொருளைத் தெளிவுபடுத்துகிறது, ஆனால் இது அகர வரிசைப்படி பட்டியலிடும்பொழுது இஅழ்க்கின்றது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். "Claw" என்னும் சொல் 1955 சேர்க்கப்பட்டது, ஆனால் ப்ல அறிஞர்களால் அது (finger)nail, என்று மாற்றப்பட்டது/ ஏநெனில் claw என்பதற்கான சொல் பல பழைய அல்லது இறந்துபோன மொழிகளில் அல்லது அதிகம் அறியப்படாத மொழிகளில் கிடைப்பதில்லை. 110-உருப்படியுள்ள உலக சொல்லொப்பீட்டளவியல் தரவுத்தளப் பட்டியலானது, சுவதேசு-யக்கோந்தோவ் பட்டியலில் இருந்து 10 சொற்களைத் தவிர மற்றவை மூலத்தில் உள்ள 100-உருப்படி கொண்ட சுவதேசுப் பட்டியலைப் பயன்படுத்துகிறது. "சுவதேசு 1952" இல் இருந்து தழுவி எடுக்கப்பட்ட சுவதேசு 207-சொற்பட்டியல் தற்போது அதிகம் பயன்படுத்தப்படுகிறது விக்சனரியில் (" சுவதேசு பட்டியல்கள் மொழிவாரியாக "), பான்லெக்கசு பாலித்தோவின் "இந்திய-ஐரோப்பிய மொழிகளின் சுவதேசு சொற்பட்டியல்", ஆகியவற்றில் நூற்றுக்கணக்கான சுவதேச பட்டியல்களை இந்த வடிவத்தில் காணலாம். சுவதேசு-யக்கோந்தோவ் பட்டியல் என்பது 1960களில் உருய மொழியியலாளர் செருகி யாக்கோந்தோவ் அவர்களால் முன்மொழியப்பட்ட, குறிப்பாக நிலையானதாகக் கருதப்படும் சுவதேசுப் பட்டியலின் 35-சொல் துணைக்குழுவாகும், இருப்பினும் பட்டியல் ஏற்புப்பெற்ற வடிவில் 1991 இல் மட்டுமே வெளியிடப்பட்டது இது செருகி தாரோத்தின் (Sergei Starosti) போன்ற மொழியியலாளர்களால் சொல்லொப்பீட்டளவியல் பயன்படுத்தப்பட்டது. அவர்களின் சுவதேச எண்களுடன், அவை: ஓல்மன் அவருடன் பலர். (2008) சீன பேச்சுவழக்குகளுக்கு இடையிலான உறவுகளை அடையாளம் காண்பதில், சுவதேசு-யக்கோந்தோவ் பட்டியல் மூல சுவதேசு-100 பட்டியலை விட குறைவான துல்லியமானது என்று கண்டறியப்பட்டது. மேலும் அவர்கள் வேறு (40-சொல்) பட்டியல் ( ASJP பட்டியல் என்றும் அழைக்கப்படுகிறது) சுவதேசு-100 பட்டியலைப் போலவே துல்லியமாக இருப்பதைக் கண்டறிந்தனர். இருப்பினும், நிறுவப்பட்ட மொழிக் குடும்பங்களில் உள்ள மொழிகளுக்கு இடையே உள்ள தக்கவைப்புகளை ஒப்பிடுவதன் மூலம் சொற்களின் ஒப்பீட்டு நிலைத்தன்மையைக் கணக்கிட்டனர். பழைய மற்றும் புதிய உலகத்தின் குடும்பங்களில் உள்ள தொடர்புகளில் புள்ளிவிவர நோக்கில் குறிப்பிடத்தக்க வேறுபாட்டை அவர்கள் காணவில்லை. சுவதேசு எண்கள் மற்றும் தொடர்புடைய நிலைத்தன்மையுடன் தரவரிசைப்படுத்தப்பட்ட சுவதேசு-100 பட்டியல் பின்வருமாறு (ஓல்மன் அவருடன் பலர், பின் இணைப்பு. 40-சொல் பட்டியலில் நட்சத்திரக் குறியிடப்பட்ட சொற்கள் தோன்றும்): வியத்துநாம் மற்றும் தாய்லாந்தின் சைகை மொழிகளைப் படித்ததில், மொழியியலாளர் சேம்சு உடுவார்து, பேசும் மொழிகளுக்குப் பயன்படுத்தப்படும் மரபான சுவதேசுப் பட்டியல் சைகை மொழிகளுக்குப் பொருத்தமற்றது என்று குறிப்பிட்டார். சுவதேசுப் பட்டியல் சைகை மொழிகளுக்கிடையேயான உறவுகளை மிகையாக மதிப்பிடுகிறது, அதாவது பிரதிபெயர்கள் மற்றும் உடலின் பாகங்கள் போன்ற குறியீட்டு அறிகுறிகள். மாற்றியமைக்கப்பட்ட பட்டியல் பின்வருமாறு, பெரும்பாலும் அகரவரிசையில் உள்ளது: வரலாற்று மொழியியல்
595841
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D
போலா யாதவ்
போலா யாதவ் (பிறப்பு 18 செப்டம்பர் 1962) பீகாரைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பீகாரின் 16வது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் பீகாரின் பகதுர்பூர் சட்டமன்றத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். போலா யாதவ் இராட்டிரிய ஜனதா தளம் அரசியல் கட்சியின் உறுப்பினராக உள்ளார். இவர் 2015 பீகார் சட்டமன்றத் தேர்தலில் பகதூர்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது ஆர்ஜேடி கட்சியின் தேசிய பொதுச் செயலாளராகவும் உள்ளார். இந்திய அரசியல்வாதி லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவர் இவர். பீகார் அரசியல் சூழ்நிலையில் ஆர்ஜேடி குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர். வாழ்க்கை போலா யாதவ் பீகாரில் உள்ள தர்பங்கா மாவட்டத்தில் உள்ள கப்சாகி கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் சிறீ இராம் பிரகாசு யாதவ் மற்றும் இவரது தாயார் பெயர் இலக்பதி தேவி. மகத் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் முதுகலைப் பட்டதாரியான இவர், பாட்னாவுக்கு அருகிலுள்ள பதுஹாவில் உள்ள கல்லூரியில் கவுரவ ஆசிரியராக இருந்தார். ஆஷா யாதவை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். அரசியல் பதவிகள் 2014–2015 - உறுப்பினர், பீகார் சட்ட மேலவை 2015–2020 - உறுப்பினர், பீகார் சட்டமன்றம் (பகததுர்பூர் தொகுதி) மேற்கோள்கள் https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/Meet-Lalu-Prasad-Yadavs-maithili-speaking-negotiator-Bhola-Yadav/articleshow/49145489.cms http://vidhansabha.bih.nic.in/index.html http://vidhansabha.bih.nic.in/pdf/member_profile/85.pdf https://aajtak.intoday.in/story/bhola-yadav-profile-1-837590.html https://www.jagran.com/bihar/patna-city-bhola-yadav-known-as-shadows-of-lalu-people-say-hanuman-of-rjd-supremo-17742776.html https://m.dailyhunt.in/news/india/hindi/live+bihar-epaper-livbihar/lalu+ke+hanuman+Bhola+yadav+Phale+the+niji+sahayak+jadayu+ki+madad+se+ bane+the+mlc+aur+mla-newsid-79438246 வெளி இணைப்புகள் பீகார் சட்டப் பேரவையின் முகப்புப் பக்கம் Facebook இல் fb.com/bholayadavmla ட்விட்டரில் twitter.com/bholayadavmla Instagram இல் instagram.com/bholayadavmla பகதூர்பூர் தொகுதி வாழும் நபர்கள் 1962 பிறப்புகள் பீகார் அரசியல்வாதிகள் பீகார் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்கள்
595842
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D
சக்தி சிங் யாதவ்
சக்தி சிங் யாதவ் (பிறப்பு 1 ஜனவரி 1973) ஒரு இந்திய அரசியல்வாதியும் பீகார் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2015 பீகார் சட்டமன்றத் தேர்தலில் இராட்டிடிரிய ஜனதா தளத்தின் உறுப்பினராக ஹில்சா சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர் இராட்டிரிய ஜனதா தளத்தின் செய்தி தொடர்பாளராக உள்ளார். மேற்கோள்கள் வாழும் நபர்கள் 1973 பிறப்புகள் பீகார் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பீகார் அரசியல்வாதிகள்
595843
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE
பாகீரதி மகாபத்ரா
பாகீரதி மகாபத்ரா (Bhagirathi Mahapatra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1945-1947 ஆம் ஆண்டு காலத்தில் மத்திய சட்டமன்ற உறுப்பினராக இவர் இருந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையில் ஒடிசாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பாகீரதி மகாபத்ரா உத்கல் பிரதேச காங்கிரசு ஆலோசனைக் குழுவின் செயலாளராக (1921-1937) இருந்தார். உத்கலாமணி பண்டிட் கோபபந்து தாசு நிறுவனர் தலைவராக இருந்தார். ஒடிசாவின் சுவராச்சு ஆசிரமத்தின் முக்கிய அறங்காவலர்களில் ஒருவராகவும் பாகீரதி மகாபத்ரா இருந்தார். மேற்கோள்கள் 1892 பிறப்புகள் ஒடிசா அரசியல்வாதிகள் இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் மாநிலங்களவை உறுப்பினர்கள்
595848
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
இந்தியத் தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்த கட்சிகளின் பட்டியல்
இந்தியத் தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்த கட்சிகளின் பட்டியல் (List of Indian National Congress breakaway parties) என்பது 1947-ல் இந்தியா விடுதலைப் பெற்றதிலிருந்து, இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியில் தொடர்ந்து பிளவுகள் மற்றும் பிரிந்து செல்லும் நிகழ்வுகளினால் உருவான பல்வேறு கட்சிகளின் பட்டியல் ஆகும். பிரிந்து சென்ற சில அமைப்புகள் சுயேச்சைக் கட்சிகளாக வளர்ந்துள்ளன. சில செயலிழந்துவிட்டன மற்றவை தாய்க் கட்சி அல்லது பிற அரசியல் கட்சிகளுடன் இணைந்துள்ளன. பிரிந்த கட்சிகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Official All India Congress Committee website Official Indian National Congress website இந்திய தேசிய காங்கிரஸ்
595851
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D
மின் வேதியியல் இரைச்சல்
மின் வேதியியல் இரைச்சல் (Electrochemical noise - ECN) என்பது மின்னோட்டம் மற்றும் மின்னழுத்தத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு வழங்கப்படும் பொதுவான சொல் ஆகும். அரிமானத்துடன் தொடர்புடையதாக இருக்கும் போது, இது திடீர் படலத்தின் சிதைவு, விரிசல் பரவுதல், உலோகக் கரைப்பு மற்றும் வாயு குமிழி உருவாக்கம் மற்றும் பற்றின்மையுடன் ஐதரசன் வெளியேற்றம் சம்பந்தப்பட்ட தனித்தனி நிகழ்வுகள் ஆகியவற்றால் உருவாகும் மின்னோட்டத்தின் சீரற்ற துடிப்புகளின் விளைவாகும். மின்வேதியியல் இரைச்சலை அளவிடும் நுட்பம், சோதனைத் தரவைச் சேகரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வெளிப்புற சமிக்ஞையைப் பயன்படுத்துவதில்லை. இந்த நுட்பமானது, பெயரளவிற்கு ஒரே மாதிரியான இரண்டு மின்முனைகளுக்கு இடையே அரிமானத் திறனின் குறைந்த அளவிலான ஏற்ற இறக்கங்கள் ஆகும், அவை அரிமான வகை மற்றும் அரிமான வேகத்தின் எந்திரத்தனமான நிர்ணயத்தில் பயன்படுத்தப்படலாம். ஏற்ற இறக்கங்கள் பொதுவாக குறைந்த வீச்சான, 1 மில்லி வோல்ட்டிற்கும் குறைவாக இருக்கும். ஏற்ற இறக்கங்கள் குறைந்த அதிர்வெண் பட்டை வடிப்பியால் வடிகட்டப்பட்ட RMS மதிப்பு (DC மற்றும் உயர் அதிர்வெண் AC கூறுகள் அகற்றப்பட்டது). குறைந்த அளவிலான அதிர்வெண் இரைச்சல் (ZRA இன் வேறுபாடு) சமிக்ஞையுடன் இந்த இரைச்சல் ஒத்துள்ளது. பொது அரிமானத்தில் ஈடுபடுத்தும் போது சத்தம் மிகக் குறைந்த வீச்சுடன் இருக்கும். இரைச்சலின் முக்கிய ஆதாரமாக கண்ணுக்குப் புலனாகின்ற சமவாய்ப்பு-வாய்ப்பியல் நிகழ்வுகளைக் காரணமாக குறிப்பிடலாம். இவை பகுதி ஃபாரடாயிக் நீரோட்டங்கள் உறிஞ்சுதல் / சிதைவு, மேற்பரப்பு பரவல், அரிமான விரிசல் மற்றும் இயந்திர அரிமான செயல்முறைகள் ஆகியவை அடங்கும். இந்த 1/f பாய்சன் நிறமாலையின் பொதுவான அம்சம் என்னவென்றால், இது "வெள்ளை" காஸியன் இரைச்சலிலிருந்து வேறுபடுகிறது, இதில் துல்லிய அளவீட்டு நேரத்தின் வர்க்க மூலமாக அதிகரிக்கிறது. இந்த நுட்பம் உலோகம்-கரைசல் இடைமுகத்தில் நிகழும் வேதிவினைகளைக் கருத்தில் கொள்கிறது மற்றும் நேர்மின்முனை மற்றும் எதிர்மின்முனை வேதிவினைகளின் விளைவாக ஒவ்வொரு மின்முனையிலும் இரண்டு விதமான மின்னோட்டம் பாயும் என்று பரிந்துரைக்கிறது. ஒருநேரத்தில் சார்பு மற்றும் பிழையின் ஆதாரமாகக் கருதப்பட்ட இந்த முறை, அது மின்வேதியியல் அளவீடுகளை சமரசம் செய்தது, இப்போது தகவல்களின் வளமான ஆதாரமாகக் கருதப்படுகிறது. இந்த நுட்பம் அரிமான பொறியியல் உலகில் ஒரு பயனுள்ள அரிமான கண்காணிப்பு நுட்பமாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்நிகழ்வு, நிகழ்தகவு அடர்த்தி செயல்பாடு சமன்பாடுகள் அல்லது புள்ளியியல் அடிப்படையில் விவரிக்கப்படும் சீரற்ற குறைந்த அதிர்வெண் சீரற்ற செயல்முறைகளின் பொதுவான வகையைச் சேர்ந்தது. இந்த சீரற்ற செயல்முறைகள் நிலையானவை அல்லது நிலையானவை அல்ல. ஒரு நிலையான செயல்முறையின் முதல் தருணங்கள் நேரத்துடன் மாறாதவை. மேற்கோள்கள் மின்வேதியியல்
595852
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE
இந்திய மைனா
இந்திய மைனா (அறிவியல் பெயர்: Acridotheres tristis tristis) என்பது சாதாரண மைனாவின் துணையினம் ஆகும். விளக்கம் இந்திய மைனாவானது கொண்டைக்குருவிக்கும் புறாவுக்கும் இடையிலான அளவில் சுமார் 23 செ. மீ. நீளம் இருக்கும். இதன் அலகு, கால்கள் போன்றவை மஞ்சளாகவும், விழிப்படலம் பழுப்பாகவும் இருக்கும். தலை, கழுத்து, மார்பு ஆகியன பளபளக்கும் கறுப்பு நிறத்திலும், உடலின் மேற்பகுதி கறும்பழுப்பு நிறத்திலும் இருக்கும். இதன் இறக்கைகளில் வெள்ளை வட்டம் காணப்படும். பறக்கும்போது தெளிவாகத் தெரியும். இதன் வயிறும் வாலடியும் அழுக்கு வெள்ளையாக இருக்கும். வாலடிப் போர்வை இறகுகள் வெண்மையாகவும், கண்ணைச் சுற்றிலும் தூவியற்ற பகுதி மஞ்சளாக இருக்கும். பரவலும் வாழிடமும் இது தெற்கு கசக்கஸ்தான், துருக்மெனிஸ்தான் கிழக்கு ஈரானில் இருந்து தெற்கு சீனா, இந்தோசீனா, மலாய் தீபகற்பம், தென்னிந்தியா வரை காணப்படுகிறது. இது ஹவாய் மற்றும் வட அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. நடத்தை இந்திய மைனா இணையாகவும் சிறு கூட்டமாகவும் காணப்படும். இது தன் வாழிடங்களில் மனிதர்களைச் சார்ந்து வாழும் திறண் கொண்டது. புழு, பூச்சி, தானியம், சமையலறை கழிவுப் பொருட்கள், பழங்கள் போன்ற பல்வேறு உணவுப் பொருட்களை உணவாகக் கொள்ளும். மலர்த் தேனை விரும்பிக் குடிக்கும். மனிதர்களிடம் எளிதாக பழகும் தன்மை கொண்டது. பலவகையான உரையாடும் குரலில் கத்தும். குஞ்சாக இருக்கும்போதே இதை சிலர் எடுத்து வளர்த்து பேசப் பழக்குவர். என்றாலும் காட்டு மைனாவைப்போலப் பேசும் திறண் இதற்கு இல்லை. இது பெப்ரவரி முதல் ஆகத்து வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது. குச்சி, வேர், குப்பைகள், காகிதம் ஆகியவற்றைக் கொண்டு சுவர், மரப் பொந்துகளில் கூடு கட்டும். அதில் நான்கு அல்லது ஐந்து முட்டைகளை இடும். முட்டைகள் பசுமை தோய்ந்த பளபளக்கும் நீலநிறத்தில் இருக்கும். ஓரே ஆண்டில் இருமுறை முட்டையிட்டு குஞ்சு பொரிப்பது உண்டு. மேற்கோள்கள் மைனா இந்தியப் பறவைகள்
595858
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%20%28%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%29
சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி கட்சி)
சஞ்சய் சிங் (Sanjay Singh) (பிறப்பு: 22 மார்ச் 1972) இந்திய மாநிலங்களவை உறுப்பினரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், உத்தரப் பிரதேசம், ஒடிசா, இராஜஸ்தான் மாநில ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளரும் ஆவார். இவர் 2007 முடிய சமாஜ்வாதி கட்சியில் இருந்தார். பின்னர் நவம்பர் 2012ல் ஆம் ஆத்மி கட்சி துவக்கும் போது அதன் கொள்கை முடிவு எடுக்கும் அரசியல் குழுவில் இருந்தார். கைது தில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சஞ்சய் சிங் வீட்டை அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் 4 அக்டோபர் 2023 அன்று சோதனையிட்டனர். 6 அக்டோபர் 2023 அன்று சஞ்சய் சிங்கை அமலாக்க அதிகாரிகள் கைது செய்தனர். மேற்கோள்கள் 1972 பிறப்புகள் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாழும் நபர்கள் உத்தரப் பிரதேச நபர்கள் ஆம் ஆத்மி கட்சி அரசியல்வாதிகள்
595862
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
அறிவிக்கப்படவேண்டும்
அறிவிக்கப்பட வேண்டும் (To be announced) (TBA), திட்டமிட்ட ஒரு குறிப்பிட்ட நிகழ்வுகளில் அல்லது போட்டிகளில் கலந்து கொள்பவர் பெயர், இடம், நாள் போன்ற விவரங்களை முடிவு செய்யப்படாத போது, பட்டியலில் TBA என குறிப்பர். மேலும் உறுதி செய்யப்படாத நபர், இடம், நாள் குறித்து குறிப்பிடும் போது பட்டியலில் உறுதி செய்யப்படவேண்டும் (to be confirmed (TBC) அல்லது தீர்மானிக்கப்பட வேண்டும் (to be determined, decided or declared (TBD) எனக்குறிப்பர். அறிவிக்கப்பட வேண்டும் (TBA), உறுதி செய்யப்படவேண்டும் (TBC), தீர்மானிக்கப்பட வேண்டும் (TBD) இந்த சொற்றொடர்கள் ஒரே மாதிரியானவை, ஆனால் வெவ்வேறு அளவு உறுதியற்ற தன்மைக்கு பயன்படுத்தப்படலாம்:அறிவிக்கப்பட வேண்டும் (டிபிஏ) அல்லது தீர்மானிக்கப்பட வேண்டும் (டிபிடி) - விவரங்கள் தீர்மானிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் இன்னும் தயாராக இல்லை அரசு அறிவித்தது.உறுதிப்படுத்தப்பட வேண்டும் (டிபிசி), தீர்க்கப்பட வேண்டும் (டிபிஆர்), அல்லது வழங்கப்பட வேண்டும் (TBP) – விவரங்கள் தீர்மானிக்கப்பட்டிருக்கலாம் மற்றும் அறிவிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் இறுதி செய்யப்படுவதற்கு முன்பே அவை மாற்றத்திற்கு உட்பட்டவை. 'ஏற்பாடு செய்யப்பட வேண்டும், ஒப்புக்கொள்ளப்பட வேண்டும் (டிபிஏ), தீர்மானிக்கப்பட வேண்டும் (டிபிடி') அல்லது முடிவெடுக்கப்பட வேண்டும்'' – கொடுக்கப்பட்ட நிகழ்வின் பொருத்தம், சாத்தியம், இடம் போன்றவை முடிவு செய்யப்படவில்லை. மேற்கோள்கள் ஆங்கிலச் சொற்றொடர்கள்
595871
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
ஐதராபாத்து மாநில பிரஜா கட்சி
ஐதராபாத் மாநில பிரஜா கட்சி (Hyderabad State Praja Party), ஐதராபாத் மாநிலத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சி. 1951-ல் த. பிரகாசம் மற்றும் ஆச்சார்யா கொ. ர. நாயுகுலு இந்தியத் தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்தபோது ஐதராபாத் மாநில பிரஜா கட்சியினை தோற்றுவித்தனர். ஏப்ரல் 1951-ல் ரங்கா இக்கட்சியிலிருந்து பிரிந்து கிரிசிகர் லோக் கட்சியை உருவாக்கினார். இதே ஆண்டு சூன் மாதம் பிரகாசம் கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியுடன் இக்கட்சியினை இணைத்தார். மேலும் பார்க்கவும் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து பிரிந்த கட்சிகள் மேற்கோள்கள் 1951இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்
595872
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
விசால் அரியானா கட்சி
விசால் அரியானா கட்சி (Vishal Haryana Party) என்பது இந்தியாவின் அரியானா மாநிலத்தில் ராவ் பிரேந்தர் சிங் தலைமையிலான ஒரு அரசியல் கட்சியாகும். இது 23 செப்டம்பர் 1978-ல் இந்தியத் தேசிய காங்கிரசுடன் இணைந்தது. இது அரியானாவின் முதல் மாநிலக் கட்சி ஆகும். இக்கட்சி 1967-ல் அரியானா மாநிலம் உருவாக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. மேற்கோள்கள் 1966இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்
595874
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE
காட்டு மைனா
காட்டு மைனா ( jungle myna, (Acridotheres fuscus ) என்பது ஸ்டார்லிங் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மைனா ஆகும். இது இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பகுதி முழுவதும் பரவலாக காணப்படுகிறது. என்றாலும் இது இந்தியாவின் வறண்ட பகுதிகளில் இல்லை. இதன் நெற்றியின் முன் செங்குத்தாக உள்ள கறுப்புத் தூவிகளால் இதை எளிதில் அடையாளம் காண இயலும். இது ஜாவன் மைனா மற்றும் வெளிர்-வயிற்று மைனாக்கள் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது. அவை கடந்த காலத்தில் இதன் துணையினமாக கருதப்பட்டன. இதன் துணையினங்களைப் பொறுத்து இதன் விழிப்படலம் வெண்மை, மஞ்சள், நீல நிறங்களில் காணப்படும். ஆரஞ்சு-மஞ்சள் அலகின் அடிப்பகுதி கருமையாக இருக்கும். பிஜி, தைவான், அந்தமான் தீவுகள், யப்பானின் சில பகுதிகள் உட்பட உலகின் பல பகுதிகளிலும் இது வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ அறிமுகப்படுத்தப்பட்டது. பசிபிக் பெருங்கடலில் உள்ள சில தீவுகளுக்கும் இந்த இனம் பரவியுள்ளது. விளக்கம் காட்டு மைனா சுமார் நீளம் கொண்டது. இதன் இறகுகள் சாம்பல் நிறத்திலும், தலையும், இறக்கைகளில் கருமையாக இருக்கும். இறகுகளைக் கொண்டு பாலினங்களிடையே வேறுபாடு அறியமுடியாது. இறக்கைளின் அடிப்பகுதியில் பெரிய வெள்ளைத் திட்டு காணப்படும். அந்த திட்டானது இப்பறவை பறக்கும்போது தெளிவாகத் தெரியும், மேலும் வால் இறகுகளின் முனைகள் வெள்ளை நிறத்தில் அமைந்துள்ளன. அலகடியில் நெற்றியின் முன் சில கறுப்புத் தூவிகள் செங்குத்தாக நிற்கும். அலகும், கால்களும் பிரகாசமான மஞ்சள் நிறத்தில் இருக்கும். மேலும் சாதாரண மைனா மற்றும் பேங்க் மைனாவைப் போல கண்ணைச் சுற்றித் தூவியற்ற மஞ்சள் பகுதி இல்லை. தென்னிந்தியாவில் காணப்படும் துணையினத்தின் விழிப்படலம் நீலங் கலந்த வெண்மையாக இருக்கும். வடகிழக்கு இந்தியாவில் காணப்படும் துணையினத்தின் வாலடியும், வயிறும் புகைக் கருமையாக இருக்கும். முதிர்ச்சியடையாத பறவைகளின் தொண்டை வெளிரியதாகவும், அடிப்பகுதியின் நடுப்பகுதியானது பழுப்பு நிறமாகவும் இருக்கும். அசாதாரணமாக சில பறவைகளின் இறகுகள் லூசிஸ்டிக் என்னும் நிறமி இழப்பு குறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பரவலும் வாழ்விடமும் காட்டு மைனா நேபாளம், வங்காளதேசம், இந்தியாவிலிருந்து வெப்பமண்டல தெற்கு ஆசியாவில் பொதுவாக வசிக்கின்றது. இதன் துணை இனமான ஃபஸ்கஸ் வட இந்தியா முழுவதும் மேற்கு அபு மலையிலிருந்து கிழக்கே ஒடிசாவில் புரி வரை காணப்படுகிறது. இது அந்தமான் தீவுகள் மற்றும் பிஜியில் கரும்புத் தோட்டங்களில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த 1890 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இவை நியுவாஃபோ போன்ற சில பசிபிக் தீவுகளில் தாங்களாகவே பரவின அங்கு இவை லோரி ( வினி ) போன்ற பூர்வீக பறவை இனங்களுக்கு அச்சுறுத்தலாக மாறி, குறிப்பாக மரப் பொந்துகளுக்காக பூர்வீகப் பறவைகளுடன் போட்டியிடுகின்றன. ஆசியாவின் பல பகுதிகளில், இவை செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. மேலும் தைவான் போன்ற பல இடங்களில் காட்டுப் பறவைகளாகவும் மாறியுள்ளன. யப்பான் மற்றும் மேற்கு சமோவாவில் இப்பறவைகள் இனப்பெருக்கம் செய்பவையாக மாறியுள்ளன. இந்த சாதாரணக் பாசரைன் பொதுவாக விளைநிலங்களைச் சார்ந்த காட்டுப் பகுதியில் காணப்படுகிறது. பெரும்பாலும் திறந்த நீர்நிலைக்கு அருகில் காணப்படுகிறது. குறிப்பாக இனப்பெருக்க காலத்திற்குப் பிறகு இவை தன் வாழிட எல்லைக்கு வெளியே செல்லக்கூடும். நடத்தையும் சூழலியலும் காட்டு மைனாக்கள் முக்கியமாக பூச்சிகள், பழங்கள், விதைகளை உண்பவையாகும். இதற்காக இவை முக்கியமாக மற்ற மைனா இனங்களுடன் சேர்ந்து நிலத்தில் உணவு தேடுகின்றன. இவை உண்ணிச்செடி போன்ற உயரம் குறைந்த புதர்களின் பழங்களை உணவாகக் கொள்கின்றன. மேலும் எரித்ரினா போன்ற பெரிய பூக்களில் இருந்து தேன் எடுக்கிறன (அலகடியிலும், நெற்றியிலும் தூரிகைகள் போலக் காணப்படும் தூவிகள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவக்கூடும்) மற்றும் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்பதோடியா காம்பானுலாட்டா போன்ற மரங்களின் பூக்களில் சேகரிக்கப்பட்ட நீரையும் உண்கின்றன. இவை பெரிய மேய்ச்சல் பாலூட்டிகளின் மீது அமர்ந்து, அவற்றின் உடலில் உள்ள புற ஒட்டுண்ணிகளை எடுக்கின்றன, மேலும் மேய்ச்சல் விலங்கு நடக்கும்போது தாவரங்களில் இருந்து பறக்கும் பூச்சிகளைப் பிடிக்கின்றன. வயல்களில் உழவில் ஈடுபடும் விவசாயியை இப்பறவைகள் பின்தொடரும். நகர்ப்புறங்களில் உள்ள சமையலறைக் கழிவுகளையும் இவை உணவாகத் தேடி வருகின்றன. இவை தங்கள் குஞ்சுகளுக்கு உணவளிக்க சிறிய எலிகள் உட்பட பெரிய இரையைக் எடுக்கலாம். தென்னிந்தியாவில் (தெற்கத்தியக் காட்டு மைனா) பெப்ரவரி முதல் மே வரையிலும், வட இந்தியாவில் ஏப்ரல் முதல் சூலை வரையிலும் கோடைக்கும் மழைக்கு முன் பருவத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை மரங்களில் உள்ள பழைய பொந்துகளிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டுமானங்களில், தரையில் இருந்து இரண்டு முதல் ஆறு மீட்டர் உயரம் வரை உள்ள துளைகளையும் கூடாக பயன்படுத்துகின்றன. மரங்களில் உள்ள பழை பொந்துகளுக்காக, இவை மற்ற பறவைகளுடன் போட்டியிடுகின்றன. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Oriental Bird Club images மியான்மர் பறவைகள் வங்காளதேசப் பறவைகள் தெற்காசியப் பறவைகள்
595875
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF
கெல்லரின் வினைக்காரணி
கெல்லரின் வினைக்காரணி (Keller's reagent) அமிலங்களின் இரண்டு வெவ்வேறு கலவைகளில் ஒன்றைக் குறிக்கலாம். உலோகவியலில், கெல்லரின் காரணியானது நைட்ரிக் அமிலம், ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் ஹைட்ரோபுளோரிக் அமிலம் ஆகியவற்றின் கலவையாகும். இது அலுமினிய உலோகக்கலவைகளை அவற்றின் பரலிடை எல்லைகள் மற்றும் நோக்குநிலைகளை வெளிப்படுத்த பயன்படுகிறது. 1920 களின் பிற்பகுதியிலும் 1930 களின் முற்பகுதியிலும் இந்த நுட்பத்தைப் பயன்படுத்த முன்னோடியாக இருந்த அமெரிக்காவின் அலுமினியம் கார்ப்பரேஷனின் ஈ. எச். டிக்ஸ், ஜூனியர் மற்றும் ஃபிரெட் கெல்லருக்குப் பிறகு இது சில நேரங்களில் டிக்ஸ்-கெல்லர் வினைக்காரணி என்றும் அழைக்கப்படுகிறது. கரிம வேதியியலில், கெல்லரின் காரணியானது நீரற்ற (பனிப்பாறை) அசிட்டிக் அமிலம், செறிவூட்டப்பட்ட சல்பூரிக் அமிலம் மற்றும் சிறிய அளவிலான ஃபெரிக் குளோரைடு ஆகியவற்றின் கலவையாகும், இது ஆல்கலாய்டுகளைக் கண்டறியப் பயன்படுகிறது. கெல்லரின் காரணியானது பிற வகையான ஆல்கலாய்டுகளை வேதிவினைகள் மூலம் கண்டறியவும் பயன்படுத்தப்படலாம். அதில் இது பரந்த அளவிலான வண்ணங்களைக் கொண்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது. டிஜிட்டலிசின் முக்கிய கூறுகளைக் கண்டறிய அதன் பயன்பாட்டை கோன் விவரிக்கிறார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டிஜிட்டலிசு படிக்க இதைப் பயன்படுத்திய சிசி கெல்லர் மற்றும் எச்.கிலியானி ஆகியோருக்குப் பிறகு, இந்தக் காரணியுடன் வேதிவினை கெல்லர்-கிலியானி வேதிவினை என்றும் அழைக்கப்படுகிறது. மேற்கோள்கள் கரிம வேதியியல் வினையாக்கிகள்
595876
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE
தெற்கத்தியக் காட்டு மைனா
தென்னிந்தியக் காட்டு மைனா (அறிவியல் பெயர்: Acridotheres fuscus mahrattensis) என்பது காட்டு மைனாவின் துணையினம் ஆகும். விளக்கம் தென்னிந்தியக் காட்டு மைனா பறவையானது மைனா அளவில் சுமார் 23 செ.மீ. நீளத்தில் இருக்கும். இதன் அலகு ஆரஞ்சு மஞ்சள் நிறத்திலும், விழிப்படலம் நீலங் கலந்த வெண்மையாகவும், கால்கள் மஞ்சளாகவும் இருக்கும். இது தோற்றத்தில் சாதாரண மைனாவை ஒத்தது. இதற்கு சில மைனாக்களுக்கு இருப்பதுபோன்று கண்களைச் சுற்றித் தூவிகளற்ற மஞ்சள் பகுதி இல்லை. அலகடியிலும் நெற்றியின் முன் பகுதியிலும் சில கறுப்புத் தூவிகள் செங்குத்தாக நிற்கும். உடலின் பழுப்பு நிறம் சற்று சாம்பல் நிறம் தோய்ந்து காணப்படும். பரவலும் வாழிடமும் தென்னிந்தியக் காட்டு மைனா மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகளில் விளை நிலங்களைச் சார்ந்த காட்டுப் பகுதிகளிலும் ஊர்ப்புறங்களிலும் காணலாம். மலைகளில் சுமார் 1500 மீட்டர் உயரம் வரை காணப்படும். நடத்தை இந்தக் காட்டு மைனா இணையாகவும் சிறு கூட்டமாகவும் கருந்தலை மைனா போன்றவற்றுடன் கலந்து திரியும். மேய்ச்சல் நிலத்தில் ஆடு மாடுகள் போன்ற பாலூட்டிகள் மீதும் அவற்றின் காலடியிலும் அமர்ந்திருந்து அவறின் அசைவினால் புற்களில் இருந்து எழும் பூச்சிகளைப் பிடித்து உண்ணும். சிறு பழங்களையும் ,மலர்த் தேனையும் உணவாக கொள்ளும். இதன் குரல் மைனாவைப் போன்று இருக்கும். இவை பெபுரவரி முதல் மே முடிய இனப்பெருக்கம் செய்கின்றன. மரங்கொத்தி, குக்குறுவான் போன்றவை மரங்களில் அமைத்த பழைய பொந்தில் குச்சி, புல், வேர் ஆகியன கொண்டு கூடு அமைத்து மூன்று அல்லது நான்கு முட்டைகளை இடும். இதன் முட்டைகள் பசுநீலமாக இருக்கும். மேற்கோள்கள் மைனா இந்தியப் பறவைகள்
595878
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
அலைகோர்த்தல் சமன்பாடு
அலைகோர்த்தல் சமன்பாடு (Wave maps equation) என்பது கணித இயற்பியலில் என்னும் சமன்பாட்டைத் தீர்க்கும் வரைவிய அலைச் சமன்பாடு ஆகும் இச்சமன்பாட்டிலுள்ள என்பது ஒரு கணித இணைப்பாகும். இதனை ரீமானிய பன்மடிக்கான அலைச் சமன்பாட்டின் நீட்சியாகக் கருதலாம். மேற்கோள்கள் சமன்பாடுகள்
595879
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
பாரத் மண்டபம்
பாரத் மண்டபம் (Bharat Mandapam), இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உள்ளது. இந்திய அரசின் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், வர்த்தக மேம்பாட்டு அமைப்பு சார்பில் 150 ஏக்கர் பரப்பளவில் ஓவல் வடிவில் நிறுவப்பட்ட பாரத் மண்டப வளாகம், பன்னாட்டு வர்த்தக கண்காட்சிகள் மற்றும் பன்னாட்டு வர்த்தக மாநாடுகள் நடத்துவதற்கு கட்டப்பட்டது. ஐந்து நிரந்தர கண்காட்சி அரங்குகள் மற்றும் எந்த வகையான கண்காட்சிக்கும் ஏற்ற கட்டிடங்கள் உள்ளன. நேரு பெவிலியன், அணுசக்தி பெவிலியன் மற்றும் பாதுகாப்பு பெவிலியன் ஆகியவை இங்கு நிரந்தரமாக அமைந்துள்ள அரங்குகளில் அடங்கும். பாரத் மண்டப வளாகத்தில் 4.2 மில்லியன் சதுர அடி பரப்பில் உலகத் தாரம் வாய்ந்த மாநாட்டு மையத்தில் 7,000 பேர் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ளது. மேலும் 1.5 இலட்சம் சதுர அடியில் 6 கண்காட்சி மண்டபங்கள், கீழ் தளங்களில் வாகனங்கள் நிறுத்தங்களுடன் கட்டப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டுக்கான ஜி20 உச்சிமாநாடு 9-10 செப்டம்பர் 2023 நாட்களில் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற முதல் பன்னாட்டு நிகழ்ச்சி ஆகும். போக்குவரத்து வசதிகள் பாரத் மண்டபம் ஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையம் அருகே 3 கிலோ மீட்டர் தொலைவில் பாரத் மண்டபம் உள்ளது. தில்லி மெட்ரோ மூலம் உச்ச நீதிமன்ற மெட்ரோ நிலையத்தில் இறங்கி, அதனருகே உள்ள பாரத் மண்டபத்தின் வாயில் எண் 10ஐ அடையலாம். இதனையும் காண்க மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Pragati Maidan Events Information Indian Trade Promotion Organisation (ITPO), website Indian Trade Promotion Organisation (ITPO) Official Video Channel On Veblr CII India Trade Fair தில்லியில் உள்ள கட்டிடங்கள்
595880
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B2
வளல
வளல இலங்கையின் மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மடவலைக்கும் ரஜவெல்லைக்கும் இடையில் அமைந்துள்ளது. மடவலையிலிர்ந்து 2.6 கிலோமீட்டர் தூரத்திலும் ரஜவெல்லையிலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ள இக்கிராமத்தில் வளல தம்பிட்ட விகாரை அமைந்துள்ளது. இது பாத்ததும்பறை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. மேற்கோள்கள் கண்டி மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்
595881
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81
டென்னிசு பிரான்சிசு
டென்னிசு பிரான்சிசு (Dennis Francis) (பிறப்பு: நவம்பர் 27, 1956) டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த ஒரு தூதர் ஆவார். அவர் 2021 முதல் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு தனது நாட்டின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார் 1 ஜூன் 2023 அன்று , ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் எழுபத்தி எட்டாவது அமர்வில், 2023 செப்டம்பர் 5 ஆம் நாள் தொடங்கி அதன் தலைவராக பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்வி பிரான்சிசு ஜமைக்காவின் மோனாவில் உள்ள மேற்கிந்திய தீவுகள் பல்கலைக்கழகத்தில் புவியியலையும், அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள பால் எச். நிட்ஸே ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸில் சர்வதேசத் தொடர்புகளைக் குறித்துப் படித்தார். தொழில் ஃபிரான்சிசு 1996- ஆம் ஆண்டில் டிரினிடாட் மற்றும் டொபாகோ வெளியுறவு அமைச்சகத்தில் சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளின் துணை இயக்குநராகவும், ஐரோப்பிய இயக்குநராகவும் ஆவதற்கு முன்பு, 1988 முதல் 1996 வரை கனடாவின் டொராண்டோவில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாகோ துணைத் தூதரகத்தில் பணிபுரிந்தார். 1997-ஆம் ஆண்டில் அமைச்சின் விவகாரப் பிரிவு 1999 ஆம் ஆண்டில் அவர் கியூபா, டொமினிகன் குடியரசு மற்றும் எயிட்டி மற்றும் ஜமைக்காவின் உயர் ஆணையராக நியமிக்கப்பட்டார். 2004 முதல் 2006 வரை அவர் டொமினிகன் குடியரசின் தூதராகப் பணியாற்றினார், அதற்கு முன்பு ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கு டிரினிடாட் மற்றும் டொபாகோவின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். 2006 மற்றும் 2011 க்கு இடையில் அவர் ஜெனீவா மற்றும் வியன்னாவில் உள்ள பிற சர்வதேச அமைப்புகளிலும் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும், ஆஸ்திரியா மற்றும் இத்தாலிக்கான குடியுரிமையற்ற தூதராக இருந்தார். 2012 முதல் 2016 இல் ஓய்வு பெறும் வரை, டிரினிடாட் மற்றும் டொபாகோ வெளியுறவு அமைச்சகத்தில் பலதரப்பு உறவுகளுக்கான இயக்குநரகத்தை வழிநடத்தினார். 2021 இல், பிரான்சிசு ஓய்வு பெற்று வெளியே வந்து நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கு டிரினிடாட் மற்றும் டொபாகோவின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். ஜூன் 1, 2023 அன்று , ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் எழுபத்தி எட்டாவது அமர்வில், 5 செப்டம்பர் 2023 அன்று ஹங்கேரியின் சபா கொரோசிக்குப் பிறகு தலைவராக பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடும்பம் பிரான்சிசு ஜாய் தாமஸ்-பிரான்சிஸை மணந்தார், அவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மேற்கோள்கள் வாழும் நபர்கள் 1956 பிறப்புகள் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர்கள்
595883
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
தரவுச் செயல்முறை
தரவு செயல்முறை (Data processing )என்பது அர்த்தமுள்ள தகவல்களை உருவாக்க இலக்கவியல் தரவைத் திரட்டலும் கையாளுதலும் ஆகும். தரவு செயல்முறை என்பது ஒரு பார்வையாளரால் எளிதாகக் கண்டறியக்கூடிய வகையிலும் தகவல்களை மாற்றியமைக்கும் ஒரு தகவல் செயலாக்க வடிவமாகும். தரவுச் செயலாக்க நிரல்களின் செயல்பாட்டிற்கு பொறுப்பான ஒரு நிறுவனத்திற்குள் ஒரு துறையைக் குறிக்க " தரவு செயல்முறை " அல்லது " தரவுக் கையாளுதல் " என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. தரவுச் செயல்முறையின் உட்கூறுகள் தரவுக் கையாளுதல் பல்வேறு உட்கூறுகளை உள்ளடக்கியிருக்கலாம்: சரிபார்ப்பு - வழங்கப்பட்ட தரவு சரியானதா, பொருத்தமானதா என்பதை உறுதிசெய்வதே. சரிபார்ப்பு ஆகும். வரிசைப்படுத்துதல் - இது உருப்படிகளை சில வரிசைகளில் மற்றும் / அல்லது வெவ்வேறு தொகுப்புகளில் வரிசைப்படுத்தல் ஆகும். சுருக்கம் (புள்ளியியல் அல்லது (தானியங்கி) - விரிவான தரவை அதன் முதன்மை புள்ளிகளுக்கு குறைத்தல். சுருக்கம் ஆகும். ஒருங்குதிரட்டல் - பல தரவுகளை இணைத்தல்.ஒருங்குதிரட்டல் ஆகும். பகுப்பாய்வு - " திரட்டல், ஒழுங்கமைத்தல், பகுப்பாய்வு, தரவு விளக்கம், தரவு வழங்கல் ஆமாகியன தரவுப் பகுப்பாய்வின் கூறுகள் ஆகும். அறிக்கையிடல் - விவரம் அல்லது சுருக்க தரவு அல்லது கணக்கிடப்பட்ட தகவல்களை பட்டியலிடுதல் அறிக்கை ஆகும் வகைப்பாடு - தரவை பல்வேறு பிரிவுகளாகப் பிரிப்பது. வகைப்பாடு ஆகும் வரலாறு. அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகத்தின் வரலாறு கையேட்டு முறையில் இருந்து மின்னனியல் முறைக்குத் தரவுக் கையாளுதல் படிமலர்ந்ததை விளக்குகிறது. தானியங்கித் தரவுச் செயலாக்கம் தரவுக் கையாளல் 1950 களில் இருந்தே பரவலாகப் பயன்பட்டாலும் , தரவு செயலாக்கச் செயல்பாடுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கைம்முறையாக செய்யப்பட்டன. தரவு செயலாக்கம் எடுத்துக்காட்டாக , கணக்காயல் என்பது பரிமாற்றங்களை இடுகையிடுவது, இருப்புநிலை, பணப்புழக்க அறிக்கை போன்ற அறிக்கைகளை தயாரிப்பது போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கியதாகும்.. கணக்கியல் இருப்புநிலைக் குறிப்பு பணப்புழக்க அறிக்கை எந்திர அல்லது மின்னனியல் கணிக்கும் கருவிகளைப் பயன்படுத்தி பேரளவில் கையேட்டு முறைகள் அதிகரிக்கப்பட்டன. கணக்கீடுகளை கைம்முறையாகவோ அல்லது எந்திரக் கருவிகளாலோ செய்வதே ஒரு நபரின் பணியாக இருந்ததால் அவர் " கணினி " என்று அழைக்கப்பட்டதும் உண்டு. 1890 அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு அட்டவணை முதன்முதலில் குடும்பத்தை விட தனிநபரை வைத்து தரவுகளைத் திரட்டியது. 1890 ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு படிவத்தில் பொருத்தமான பெட்டியில் இடுவதன் மூலம் பல கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும். 1850 முதல் 1880 வரை மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் " ஒரு கணிப்பு முறையைப் பயன்படுத்தியது. இது தேவைப்பட்ட வகைப்பாடுகளின் சேர்க்கைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பெருகிய முறையில் சிக்கலானது. ஒரு எண்ணிக்கையிலான சேர்க்கைகளை மட்டுமே ஒரு பட்டியலில் பதிவு செய்ய முடிந்தது. எனவே பல தற்சார்பு எண்ணிக்கைகளுக்கு அட்டவணைகளை 5 அல்லது 6 முறை கையாள வேண்டியது கட்டாயமாகிறது. மின்னனியல் தரவுச் செயலாக்கம் தானியங்கித் தரவுச் செயலாக்கம் என்ற சொல் 1890 அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு எர்மன் ஓலெரித் துளையட்டைக் கருவிகளைப் பயன்படுத்தியது போன்ற அலகு பதிவு கருவிகளால் நிகழ்த்தப்பட்டது. தானியங்கித் தரவுச் செயலாக்க அலகு பதிவு கருவிகள் எர்மன் ஓலெரித் 1890 அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு அட்டையைத் துளையிட்டது. ஓலெரித்தின் துளையட்டைக் கருவிகளைப் பயன்படுத்தி , மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம் 1890 மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகளை 1880 களின் மக்கள்தொகை கணக்கெடுப்பில் 7 முதல் 8 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2 முதல் 3 ஆண்டுகளில் அட்டவணைப்படுத்த முடிந்தது. ஓலெரித்தின் முறையைப் பயன்படுத்துவது 1890 டாலர்களில் சுமார் 5 மில்லியன் டாலர்களை செயலாக்கச் செலவில் மிச்சப்படுத்தியதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கையேடு தரவு செயலாக்கம் கணினிமயத் தரவுச் செயலாக்கம் அல்லது மின்னனியல் தரவுச் செயலாக்கம் பல தர்சார்புக் கருவிகளுக்குப் பதிலாகபயன்படுத்தப்படும் பிற்காலக் கணினி வளர்ச்சியைக் குறிக்கிறது. மின்னனியல் தரவுச் செயலாக்கம் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் முதன்முதலில் 1950 அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு 1952 இல் வழங்கப்பட்ட யுனிவாக் I அமைப்பைப் பயன்படுத்தி மின்னனியல் கணினிகளைக் குறைந்த அளவில் பயன்படுத்தியது. பிற முன்னேற்றங்கள் தரவு செயலாக்கம் என்ற சொல் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பம் என்ற பொதுவான சொல்லால் இணைக்கப்பட்டுள்ளது. தரவு செயலாக்கத் தகவல் தொழில்நுட்பம் பழைய சொல். " தரவுச் செயலாக்கம் " பழைய தொழில்நுட்பங்களை பரிந்துரைக்கிறது. எடுத்துக்காட்டாக , 1996 ஆம் ஆண்டில் தரவுச் செயலாக்க மேலாண்மைக் கழகம் அதன் பெயரைத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் தரவுச் செயலாக்க மேலாண்மைக் கழகம் என்று மாற்றியது. . பயன்பாடுகள் வணிகத் தரவு செயலாக்கம் வணிகத் தரவுச் செயலாக்கம் என்பது பெரிய அளவிலான உள்ளீட்டு தரவு , ஒப்பீட்டளவில் சில கணக்கீட்டு செயல்பாடுகள், அதிக அளவு வெளியீட்டை உள்ளடக்கியது ஆகும். எடுத்துக்காட்டாக , ஒரு காப்பீட்டு நிறுவனம் பத்தாயிரக்கணக்கான காப்பீடுகள் குறித்த பதிவுகளை வைத்திருக்க வேண்டும். இவை அச்சிடுதல், அஞ்சல் சாற்றுகள், பணம் பெறுதல், பணம்அனுப்புதல் ஆகிய பதிவுகள் இவற்றில் அடங்கும். தரவுப் பகுப்பாய்வு அறிவியலிலும் பொறியியலிலும் தரவுச் செயலாக்கமும் தகவல் அமைப்புகளும் என்ற சொற்கள் மிகவும் பரந்ததாகக் காணப்படுகின்றன , மேலும் தரவுச் செயலாக்கச் சொல் பொதுவாக தொடக்கநிலைக் கட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது , அதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த தரவு கையாளுதலின் இரண்டாவது கட்டத்தில் தரவுப் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. தரவு பகுப்பாய்வு சிறப்பு வழிமுறைகளையும் புள்ளியியல் கணக்கீடுகளையும் பயன்படுத்துகிறது. இவை ஒரு பொதுவான பொது வணிகச் சூழலில் குறைவாகவே காணப்படுகின்றன. புள்ளியியல் வழிமுறைகள் தரவுப் பகுப்பாய்விற்கு SPSS அல்லது SAS அல்லது DAP ′gretl அல்லது PSPP போன்றனவும் அல்லது அவற்றின் இலவச உருப்படிகள் போன்ற மென்பொருள் தொகுப்புகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. தரவு அமைப்புகள் தரவுச் செயலாக்க அமைப்பு என்பது எந்திரங்கள் செயல்முறைகளின் கலவையாகும். இது ஒரு தொகுப்பு உள்ளீடுகளுக்கு வரையறுக்கப்பட்ட வெளியீடுகளை உருவாக்குகிறது. கணினியுடன் மொழிபெயர்ப்பாளரின் உறவைப் பொறுத்து தரவு உண்மைகள், தகவல் போன்றவையாக விளக்கப்படுகின்றன. பொதுவாக தரவு என்பது தேக்ககத்துடன் ஒத்ததாக பயன்படுத்தப்படும் மற்றொரு சொல் தகவல் அமைப்பு ஆகும். குறிப்பாக மின்னனியல் தரவுச் செயலாக்கத்தைப் பொறுத்தவரை , தொடர்புடைய கருத்து மின்னனியல் தரவு செயலாக்க அமைப்பு என்று குறிப்பிடப்படுகிறது. எளிய எடுத்துகாட்டு தரவுச் செயலாக்க முறைக்கு மிகவும் எளிமையான எடுத்துக்காட்டு ஒரு காசோலை பதிவேட்டைப் பேணும் செயல்முறையாகும். பரிமாற்றங்கள், காசோலைகள், வைப்புத்தொகை, ஆகியன நிகழும்போது பதிவு செய்யப்படுகின்றன , மேலும் தற்போதைய இருப்பைத் தீர்மானிக்க பரிமாற்றங்கள் சுருக்கமாக உள்ளன. மாதந்தோறும் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட தரவு வங்கியால் செயலாக்கப்பட்ட பரிமாற்றங்களின் நம்பிக்கைக்குரிய ஒத்த பட்டியலுடன் சரிபார்க்க்கப்படுகிறது. மேலும் அதிநவீனப் பதிவு பேணல் முறை பரிமாற்ற்றங்களை அடையாளம் காணக்கூடும் - எடுத்துக்காட்டாக , வாயில்வழி வைப்புத்தொகை அல்லது தொண்டு பங்களிப்புகள் போன்ற வகைக் காசோலைகள் என்று இந்த ஆண்டு அனைத்து பங்களிப்புகளின் மொத்தத்தைப் போன்ற தகவல்களைப் பெற இந்தத் தகவல் அமைப்பைப் பயன்படுத்தப்படலாம். இந்த எடுத்துகாட்டின் முதன்மை பொருண்மை என்னவென்றால் , இது ஒரு அமைப்பாகும் என்பதே. இதில் அனைத்து பரிமாற்றங்களும் தொடர்ந்து பதிவு செய்யப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு முறையும் வங்கி நல்லிணக்கத்தின் ஒரே வழிமுறை பயன்படுத்தப்படுகிறது.. இயல் உலக எடுத்துகாட்டு இது கைம்முறை, கணினிமயச் செயலாக்கத்தை இணைத்து , பெறத்தக்க கணக்குகள், பெறக்கூடிய பொதுப் பேரேட்டுர் கணக்குகளைக் கையாளும் தரவு செயலாக்க அமைப்பின் ஒரு பாய்வுப் படமாகும். மேலும் காண்க அறிவியல் கணிப்புமுறை பெருந்தரவு கணிப்புமுறை முடிவெடுக்கும் மென்பொருள் தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பம் தகவல் தொழில்நுட்பம் கணினி அறிவியல் குறிப்புகள் வெளி இணைப்புகள் மேற்கோள்கள் மேலும் படிக்க Bourque, Linda B.; Clark, Virginia A. (1992) Processing Data: The Survey Example. (Quantitative Applications in the Social Sciences, no. 07-085). Sage Publications. Levy, Joseph (1967) Punched Card Data Processing. McGraw-Hill Book Company. கணினி அறிவியல் தரவு அறிவியல் தரவு மேலாண்மை
595911
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%20%28%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%29
அங்கதம் (தொல்காப்பியம்)
அங்கதம் என்னும் சொல் தொல்காப்பியத்தில் ஐந்து இடங்களில் குறிப்பிடப்பட்டு அங்கதச் செய்யுள் எப்படி இருக்கும் என்று விளக்கப்பட்டுள்ளது. அங்கதம் என்பது செய்யுள் வகைகளில் ஒன்று. செய்யுள் என்பது நூல்களில் கையாளப்படும் மொழிநடை. அறிவுரை கூறுதல் "செவியறிவுறூஉ" எனப்படும். இதற்கு மாறாகப் புகழ்ந்தோ, இகழ்ந்தோ பாடுதல் அங்கதம். வகை மொழிநடையைத் தொல்காப்பியர் யாப்பு என்று குறிப்பிடுகிறார். பாட்டு உரை நூல் (மொழியிலக்கணம்) வாய்மொழி (நீதி நூல்கள்) பிசி (விடுகதை) அங்கதம் (மொழி கரப்பு) முதுசொல் (முன்னோர் சொன்னவை) அங்கதப் பொருள் கொண்ட பாடல் வெண்பா யாப்பு. அங்கதம் 2 வகை புகழ் அங்கதம் அல்லது வசை அங்கதம் \ வெளிப்படையாகப் பழிப்பது பழி கரப்பு அங்கதம் \ மறைமுகச் சொற்களால் பழிப்பது அங்கதப் பாடல் ஆசிரியம், வெண்பா என்னும் இருவகையான பாடல்களாலும் அமையும். எந்தப் பாடலில் அங்கதப்பாடல் அமைகிறதோ அந்தப் பாடலின் அடி எல்லைக்கு உட்பட்டதாக அங்கதப் பாடல் இருக்கும். மேற்கோள் யாப்பிலக்கணம்
595915
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
சுருள் பாக்டீரியா
சுருள் பாக்டீரியா (Spiral bacteria) என்பது சுருள் வடிவத்தில் உள்ள பாக்டீரியா ஆகும். தடி, மற்றும் கோளவுயிரியுடன் சேர்ந்து நிலைக்கருவிலியின் பெரும் எண்ணிக்கையினை உருவாக்குகிறது. சுழல் பாக்டீரியாவை ஒரு உயிரணு ஒன்றில் சுருள்களின் எண்ணிக்கை, உயிரணு தடிமன், உயிரணு நெகிழ்வுத்தன்மை மற்றும் இயக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் மேலும் வகைப்படுத்தலாம். இரண்டு வகையான சுழல் உயிரணு, இசுபைரில்லம் மற்றும் இசுபைரோசீட் எனப் பிரிக்கப்படுகின்றன. இசுபைரில்லம் வெளிப்புற கடினமான கசையிழையுடனும், இசுபைரோசெட்டுகள் உட்புற கசையிழையுடன் உள்ளன. சுருளியுயிரி (இசுபைரில்லம்) சுருளியுயிரி என்பது சுழல் மாறுகளைத் தாங்க வல்ல பாக்டீரியமாகும். இது கிராம்-எதிர் பாக்டீரியா மற்றும் வெளிப்புற கசையிழையிழையினைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு: இசுபைரில்லம் இனத்தைச் சேர்ந்தவை கேம்பிலோபாக்டர் ஜெஜூனி போன்ற கேம்பிலோபாக்டர் சிற்றினங்கள், கேம்பிலோபாக்டீரியோசிஸை ஏற்படுத்தும் உணவில் பரவும் நோய்க்கிருமி ஹெலிகோபாக்டர் பைலோரி போன்ற ஹெலிகோபாக்டர் சிற்றினங்கள், வயிற்றுப் புண்களுக்குக் காரணமான பாக்டீரியாக்கள் இசுபைரோகீட்டுகள் சுருளிப்பாக்டீரியம் என்பது மிக மெல்லிய, நீளமான, நெகிழ்வான, சுருள் பாக்டீரியா ஆகும். இது வெளிப்புற சவ்வுக்குள் உள்ள பெரிப்ளாஸ்மிக் எனும் கசையிழைகள் மூலம் நகரும். இவை இசுபைரோகீட்சு என்ற தொகுதியை உள்ளடக்கியது. இவற்றின் உருவவியல் பண்புகள் காரணமாக, இசுபைரோகீட்டுகள் கிராம்-சாயமேற்றல் கடினமாக உள்ளது. இனால் இவற்றை இருண்ட புல நுண்ணோக்கி அல்லது வார்தின்-இசுடாரி சாயம் பயன்படுத்திக் காணலாம். இந்த வகைப் பாக்டீரியாக்களுக்கு உதாரணம்: லெப்டோசுபைரா சிற்றினங்கள், இது லெப்டோஸ்பிரோசிஸ் (மென்சுருளி நோய்) நோயினை ஏற்படுத்துகிறது. போரெலியா பர்க்டோர்பெரி போன்ற பொரெலியா சிற்றினங்கள், லைம் நோயை உண்டாக்கும் உண்ணியினால் பரவும் பாக்டீரியம் திரிப்போனீமா பாலிடம் போன்ற திரிப்போனீமா சிற்றினங்கள், சிபிலிசு உட்பட திரிப்ரெபோனேமாடோஸை ஏற்படுத்தும் துணையினங்கள் மேற்கோள்கள் பாக்டீரியாக்கள்
595916
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D
அப்துல் பாரி சித்திக்
அப்துல் பாரி சித்திக் (Abdul Bari Siddiqui) என்பவர் பீகாரின் நிதி அமைச்சராக இருந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பீகார் மாநிலம் தர்பங்கா, அலிநகரை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். சித்திக் இராச்டிரிய ஜனதா தளம் அரசியல் கட்சியின் உறுப்பினர். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் தர்பங்கா, அலிநகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இவர் தர்பங்காவில் போட்டியிட்டு 2,67,979 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் கோபால் ஜீ தாக்குரிடம் தோல்வியடைந்தார். முன்னதாக, 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப் பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு இடையே பிளவு, ஏற்பட்டு உத்தியோக பூர்வ எதிர்க்கட்சியாக மாறும் வரை சித்திக் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 2015ஆம் ஆண்டு செப்டம்பரில் பீகார் துடுப்பாட்ட சங்கத்தின் முன்னாள் தலைவர் வினோத் குமாரைத் தோற்கடித்து அதன் தலைவராக சித்திக் தேர்ந்தெடுக்கப்பட்டார். பீகார் மட்டைப்பந்து சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். இவர் லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது. 2009-ல், மதுபானி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இவர் மீண்டும் 2014-ல் மதுபானி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக மூத்த தலைவர் உக்கும்தேவ் நாராயண் யாதவிடம் தோல்வியுற்றார். இவர் 7வது முறையாகச் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னதாக பகோரா தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தொகுதியின் தேர்தல் முடிவுக்குப் பிறகு, அலிநகரில் போட்டியிட்டார். ஜனதா கட்சியினைப் பிரதிநிதித்துவப்படுத்திய அப்துல் பாரி சித்திக் 1977-ல் பகோராவிலிருந்து காங்கிரசின் அரிநாத் மிசுராவை தோற்கடித்தார். இது இவரின் முதல் சட்டமன்ற வெற்றி ஆகும். இதன் பின்னர் பீகார் சட்டப் பேரவை உறுப்பினராக 7 தேர்தல்களில் வெற்றி பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரது மகன், அனிசு பாரி தற்போது ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் எம்.சி/எம்.பி.ஏ. 2023 உறுப்பினராக உள்ளார், தில்லியில் எட்-டெக் ஆரம்ப தொழில் முனைவராக-நிறுவனத்தை நடத்தும் எழுத்தாளர் மற்றும் தொழில்முனைவோர் ஆவார். மேற்கோள்கள் 1960 பிறப்புகள் இந்திய முஸ்லிம்கள் வாழும் நபர்கள் பீகார் அரசியல்வாதிகள் பீகார் சட்டமன்ற உறுப்பினர்கள்
595917
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
வால் காக்கை
வால் காக்கை (treepies) என்பது கோர்விடே குடும்பத்தில் உள்ள நீண்ட வால் பாசரின் பறவைகளின் நான்கு நெருங்கிய தொடர்புடைய வகைகளை ( டென்ட்ரோசிட்டா, கிரிப்சிரினா, டெம்னுரஸ், பிளாட்டிஸ்முரஸ் ) உள்ளடக்கியது. வால் காக்கையில் 12 இனங்கள் உள்ளன. சில வால் காக்கைகள் மேக்பையைப் போலவே இருக்கும். பெரும்பாலான வால் காக்கைகள் கருப்பு, வெள்ளை, சாம்பல் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். இவை தென்கிழக்காசியாவில் காணப்படுகின்றன. இவை வெப்பமண்டலக் காடுகளில் வாழ்கின்றன. வால் காக்கைகள் பொதுவாக மரங்களில் வாழக்கூடியவை இவை அரிதாகவே தரையில் வந்து உணவு தேடுகின்றன. இனங்கள் எரிக்சன் மற்றும் பலவற்றைத் தொடர்ந்து. (2005), கருப்பு மாக்பீஸ் வால் காக்கைகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது: மேற்கோள்கள் Ericson, Per G. P.; Jansén, Anna-Lee; Johansson, Ulf S. & Ekman, Jan (2005): Inter-generic relationships of the crows, jays, magpies and allied groups (Aves: Corvidae) based on nucleotide sequence data. Journal of Avian Biology 36: 222–234. PDF fulltext வெளி இணைப்புகள் இணைய பறவை சேகரிப்பில் வால்காக்கை காணொளிகள் காக்கைகள்