id
stringlengths 1
6
| url
stringlengths 31
789
| title
stringlengths 1
93
| text
stringlengths 9
259k
|
---|---|---|---|
592138
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF%20%28%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%29
|
ஏகாதசி (பாடலாசிரியர்)
|
ஏகாதசி (பிறப்பு:5 மே 1976) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், திரைப்பட இயக்குநரும், நாவலாசிரியரும், சிறுகதையாளரும், கட்டுரையாளரும் ஆவார். இவரது எழுத்துப் பணி 10 வயதில் கவிதை எழுதுவதில் இருந்து தொடங்கியது.
2023 சூலை மாதம் வரை, 300 இற்கும் மேற்பட்ட தனியிசை பாடல்களும், 300 இற்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களும் எழுதியுள்ளார். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் மாநில துணைச் செயலாளர் பொறுப்பில் உள்ளார்.
இவரது தனியிசை பாடல்களான ‘ஆத்தா உன் சேலை’ , ‘அப்பா கைய புடுச்சி நடந்தா’ ஆகியவை உலக புகழ்பெற்றவை. Oru Cup Tea, Oru Cup Tea Music, Cuckoo போன்ற YouTube Channel மற்றும் "சமம்" வெளியீடு பதிப்பகம், "சமம் திரை" தயாரிப்பு நிறுவனம் போன்றவற்றை நடத்திவருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
இவர் பிறந்தது மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகேயுள்ள பணியான் கிராமம். கழுவத்தேவர் - பூவாயி அம்மாள் ஆகியோருக்கு மகனாக, கூலி விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் மனைவியின் பெயர் சலோமி, மகன் பெயர் கவிராஜன். 1999இல் இருந்து திரைத்துரையில் இயங்கி வருகிறார். முதல் நூல் “முதல் தூரல்” (கவிதை, 1994) , முதல் பாடல் ‘ஆயுள் ரேகை’ (2004) படத்தில் ”கொலகாரி வாரா”, இயக்கிய முதல் திரைப்படம் ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’(2011).
படைப்புகள்
கவிதைத் தொகுப்புகள்
முதல் தூரல் (1994)
பூவும் தீயும் - ஹைக்கூ (1996)
மீறல் (1997)
ஹைக்கூ தொகுப்பு (2012)
இருள் எனப்படுவது யாதெனில் (2020)
செவலை நாயின் முதுகில் வெயிலின் மச்சம் (2022)
நிலவை பருகும் குளம் (2022)
ஊரடங்கு உயிரடங்கு (2022)
அவளுக்கும் நிலாவுக்கும் ஆறு வித்தியாசங்கள் (2022)
தனியிசைப் பாடல்கள்
ஏகாதசி பாடல்கள் - தொகுதி 1 (2015)
ஏகாதசி பாடல்கள் - தொகுதி 2 (2018)
ஏகாதசி பாடல்கள் - தொகுதி 3 (2022)
சிறுகதைத் தொகுப்பு
மஞ்சள் நிற ரிப்பன் (2015)
புதினம்
சைக்கிள் (2023)
இயக்கிய திரைப்படங்கள்
எருக்கம் பூ (2010)
கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை (2011)
அருவா (2021)
சிறப்புகள்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளராக உள்ளார்.
விருதுகள்
த.மு.எ.க.ச. விருது (2011)
கு.சி.பா அறக்கட்டளை விருது (2012)
புரட்சிக் கவிஞர் விருது
வி4 விருது (2018)
கவிப்பித்தன் விருது (2019)
பெர்லின் விருது (2021) போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.
முக்கிய தனியிசை பாடல்கள்
1) ஆத்தா ஓஞ்சேல
2) அப்பா கையைப் புடிச்சு நடந்தா
3) தொண்டக்குழிக்கு தண்ணி கேட்டோம்
4) ஏலே கிறுக்குப் பயலே
5) ஒரு ஊருல ஒரே ஒரு கிழவி
6) மல்லிக்கொடியே
7) எனக்கும் கூட எத்தனையோ
8) மரங்களைப் பாட
9) வாக்கப்பட ஆச
10) ஓல குடிச கட்டி
11) சாராயம் வித்த காசுல
12) தேவதையுமில்ல தெய்வமுமில்ல
13) ரெட்ட ஜடை போல
14) முக்கா கையி சட்ட
15) உசுர அறுத்துப் போட்டு
16) உலகம் ரொம்ப சிறுசுடா
17) சார மேல காத்து
18) ஃபீல் ஆவுடா மச்சான்
19) ஐ மிஸ் யூ செல்லம்
20) செங்குத்தாய் நகரும் மழையே
முக்கிய திரைப்படப் பாடல்கள்
1) அவள் பெயர் தமிழரசி
- நீ ஒத்த சொல்லு சொல்லு
- குஜு குஜு கூட்ஸ் வண்டி
- வடக்கா தெக்கா
2) குட்டிப்புலி
- ஆத்தா ஓஞ்சேல
3) ஆடுகளம்
- ஒத்த சொல்லால
4) திட்டக்குடி
- ஒத்த உசுருக்குள்ள
- காத்துக்கிங்கே கதவுகளும்
5) மழைக்காலம்
- தேவதை நீ தான்
- கோடி மின்னல்
6) மதயானைக் கூட்டம்
- கோணக் கொண்டக்காரி
- உன்னை வணங்காத
- எங்கப்போற மகனே
- முக்குலத்து வீரரையா
- கொம்பூதி கொட்டடிச்சி
7) வில் அம்பு
- ஆள சாச்சுப்புட்டா கண்ணால
8) ஈட்டி
- நாம்புடிச்ச மொசக்குட்டியே
- பஞ்சுமிட்டாய் மேல தீயே
9) செம - உருட்டுக் கண்ணால
10) அம்மாவின் கைப்பேசி
- அம்மா என்றால்
11) கொடிவீரன்
- அன்னமே ஏ அன்னமே
- கொலவாள எடுங்கடா
12) அஞ்சல
- கொள்ளங்குடி கருப்பா
13) மெஹந்தி சர்க்கஸ்
- மயில் போல இளவரசி
14) எனக்கு இன்னோர் பேரிருக்கு
- டான்ஸ் வித் மி நிலவே
15) சண்டக்கோழி 2
- கம்பத்துப் பொண்ணு
16) அசுரன்
- கத்தரிப் பூவழகி
17) சூரரைப் போற்று
- மண்ணுருண்ட மேல
18) வீரபாண்டியபுரம்
- அடி அவர
19) யானை
- என்ன ஒத்தையில
20) அழகிய கண்ணே
- வச்சித்தான் செய்யுறாங்க
21) அருவா
- காசு பணமெல்லாம் சும்மா
22) சர்தார்
- சொர்க்கா பூவே ஒன்ன
23) இராவண கோட்டம்
- ராவண கோட்டத்துல
- It-அது But-ஆனால்
- தல சாஞ்சுருச்சே
- மாயம்மா
24) கள்வன்
- கட்டழகு கருவாச்சி
25) தண்டட்டி
- தலையாட்டி பேசுறப்போ
26) கக்கன்
- கக்கன் எனும் மாமனிதன்
- ஒரு ஏழை தெய்வம்
27) அநீதி
- பூ நாழி பொன் நாழி
மேற்கோள்கள்
https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/971732-it-s-a-reality-that-songs-are-lacking-in-films-lyricist-ekadasi-interview.html
https://cinema.vikatan.com/kollywood/lyricist-ekadasi-interview-about-his-film-career
https://www.puthiyathalaimurai.com/features/lyricist-ekadasi-interview
1976 பிறப்புகள்
மதுரை மாவட்ட நபர்கள்
தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள்
|
592144
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88
|
பழுப்பு நிறக் காட்டு ஆந்தை
|
பழுப்பு நிறக் காட்டு ஆந்தை (Brown wood owl, உயிரியல் பெயர்: Strix leptogrammica ) என்பது இந்தியா, வங்காளதேசம், இலங்கை, இந்தோனேசியா, தைவான், தெற்கு சீனாவில் காணப்படும் ஒரு ஆந்தை இனமாகும். பழுப்பு நிற காட்டு ஆந்தை தெற்காசியாவில் இனப்பெருக்கம் செய்து வசிப்பவை ஆகும். இந்த இனம் உண்மையான ஆந்தை (ஸ்ட்ரிகிடே) குடும்பத்தின் ஒரு பகுதியாகும். இந்தக் குடும்பத்தில் பெரும்பாலான ஆந்தைகள் உள்ளன. இது காது கொம்புகளற்ற ஆந்தை வகையைச் சேர்ந்தது. இது ஸ்ட்ரிக்ஸ் பேரினத்தைச் சேர்ந்தது.
பழுப்பு நிற காட்டு ஆந்தை நடுத்தர அளவிலான பெரிய பறவை (45-57 செமீ நீளம்) ஆகும். உடலின் மேல்பகுதி ஒரே மாதிரியாக அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். தோள்பட்டை இறக்கைகளில் மங்கலான வெள்ளைப் புள்ளிகளைக் காணலாம். அடிப்பகுதி பழுப்பு நிற கோடுகளுடன் கூடியது. முக வட்டம் பழுப்பு அல்லது செம்பழுப்பு நிறத்திலும், வெள்ளை நிற விளிம்புகளுடன் இருக்கும். கண்கள் அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். தொண்டையில் தூய வெள்ளை நிறப் பட்டையைக் காணலாம். பாலினங்களிடையே தோற்ற வேறுபாடு குறிப்பிடத்தக்க அளவு இல்லை.
இவை (ஹூ) ஹூ ஹூ ஹூ, அல்லது ஆழ்ந்த கோகே-கோகே-கா-லூஓ அல்லது உரத்த அலறலை வெளிப்படுத்தும். இவற்றின் எச்சரிக்கைக் குரல் பார்க்ட, வாவ்-வாவ் என்றிருக்கும். சில கிளையினங்கள் தனித்தனி குரல்களைக் கொண்டுள்ளதாக அறியப்படுகின்றன; அவை தோற்றத்திலும் இணைவாழிடச் சிறப்பினத்திலும் வேறுபட்டவை, மேலும் அவை வேறுபட்ட இனங்களாக இருக்கலாம்.
இந்த இனம் ஒரு இரவாடியாகும். பொதுவாக இது அடர்ந்த காடுகளில் காணப்படுகிறது. பழுப்பு நிறக் காட்டு ஆந்தையின் உணவில் முக்கியமாக சிறிய பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன போன்றவை உள்ளன.
துணை இனங்கள்
இதில் 14 கிளையினங்கள் உள்ளன.
இசு. லெப்டோகிராமிகா பார்டெல்சி - பார்டெலின் காட்டு ஆந்தை அல்லது ஜாவன் பழுப்பு நிறக் காட்டு ஆந்தை
இசு. லெப்டோகிராமிகா காலிகேடா- பார்மோசன் பழுப்பு நிறக் காட்டு ஆந்தை
இசு. லெப்டோகிராமிகா சாசீனி
இசு. லெப்டோகிராமிகா இந்திராணீ
இசு. லெப்டோகிராமிகா லாவோடியானா
இசு. லெப்டோகிராமிகா லெப்டோகிராமிகா
இசு. லெப்டோகிராமிகா மைங்காய்
இசு. லெப்டோகிராமிகா மிர்தா
இசு. லெப்டோகிராமிகா நியூஅரென்சிசு- இமயமலைக் காட்டு ஆந்தை
இசு. லெப்டோகிராமிகா நியாசென்சிசு
இசு. லெப்டோகிராமிகா நிக்டிபாசுமா
இசு. லெப்டோகிராமிகா ஓக்ரோஜெனிசு- இலங்கைக் காட்டு ஆந்தை
இசு. லெப்டோகிராமிகா தைசெகுசுட்டி
இசு. லெப்டோகிராமிகா வேகா
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ஆசிய ஆந்தைகள்
தென்கிழக்காசியப் பறவைகள்
வங்காளதேசப் பறவைகள்
தெற்காசியப் பறவைகள்
தென் சீனப் பறவைகள்
|
592145
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF
|
சிர்னாபள்ளி அருவி
|
சிர்னபள்ளி அருவி (Sirnapally Waterfalls), ஜானகி பாய் அருவி அல்லது தெலங்காணா நயாகரா அருவி என்பது தெலங்காணா மாநிலம் இந்தல்வாய் மண்டலத்தில் உள்ள சிர்னபள்ளி கிராமத்தில் அமைந்துள்ள அருவியாகும். இது நிஜாமாபாத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
வரலாறு
சீரானப்பள்ளி ராணி அல்லது சீலம் ஜானகி பாய் சிரானப்பள்ளி வம்சத்தைச் சேர்ந்த ஒரு நிலப்பிரபுக் குடும்பம் மற்றும் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களை வைத்திருந்தார். ராமடுகு திட்டத்தில் பாயும் குளத்தை சீலம் ஜானகி கட்டினார். குடிநீருக்காக மஞ்சிப்பா செருவு (குளம்) உட்படப் பல குளங்களை இவர் தோற்றுவித்தார்.
மேற்கோள்கள்
நிசாமாபாத் மாவட்டம்
தெலங்காணாவில் உள்ள அருவிகள்
|
592146
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF
|
ஆனையடிகுத்து அருவி
|
ஆனையடிகுத்து அருவி (Anayadikuthu Waterfalls) என்பது ஆனைச்சாடி குத்து அருவி என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தென்மாநிலமான கேரளத்தில் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது தொம்மன்குத்து சுற்றுச்சூழல் சுற்றுலா முனைக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது. பருவமழையின் போது, அருவி உயர்ந்து அதிகபட்சமாக நீருடன் பாய்கிறது. ஆனையடிகுத்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது ஒரு பிரபலமான குடும்பச் சுற்றுலா இடமாக உள்ளது. கட்டாடிக்கடவு ஆனையடிகுத்து அருவிக்கு அருகில் அமைந்துள்ளது.
தொம்மன்குத்து அருவியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் கரிமண்ணூர் மற்றும் வண்ணாபுரம் ஊராட்சிகளின் எல்லையில் ஆனையடிகுத்து அருவி அமைந்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன், கோடை காலத்தில், உள்காடுகளிலிருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக, இந்த அருவிக்கு மேலே உள்ள சமதளமான பாறைக்குத் தண்ணீர் குடித்து வந்ததாக, முன்னோர்கள் கூறுகின்றனர். இரண்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் யானையடிகுத்து என்ற பெயர் வந்ததாகவும், அதில் ஒன்று நீர்வீழ்ச்சியில் விழுந்து இறந்ததாகவும் கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. கம்பகக்காணம் மற்றும் நெய்குத்தனல் வழியாகப் பாயும் ஓடையின் அடிப்பகுதியில் இந்த அருவி அமைந்துள்ளது. அருவியின் மேல் மக்கள் நடந்து செல்ல பைஞ்சுதை பாலம் உள்ளது. அருவிக்கு அருகில் குரங்குகள் மற்றும் பல வகையான பறவைகள் காணப்படும்.
மேற்கோள்கள்
இடுக்கி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள்
கேரள அருவிகள்
இடுக்கி மாவட்டத்திலுள்ள அருவிகள்
|
592147
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF
|
அரிக்கல் அருவி
|
அரிக்கல் அருவி (Areekkal Waterfalls) என்பது கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் தொடுபுழா - எர்ணாகுளம் சாலையில் எர்ணாகுளம் நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் பாம்பாக்குடாவில் அமைந்துள்ளது.
கண்ணோட்டம்
எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பாம்பக்குடா பஞ்சாயத்தில் அமைந்துள்ள அரிக்கால் அருவி முன்பு வரை சுற்றுலாப் பயணிகளால் அதிகம் அறியப்படவில்லை. 2014ஆம் ஆண்டில் கேரள அரசு அரிக்கல் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கிய பிறகு மக்கள் ஈர்ப்பை இந்த அருவி பெற்றது. இது பிரமடம்-வெட்டிமுடு வழித்தடத்தில் அமைந்துள்ளது. பின்னணியில் காடு மற்றும் ரப்பர் தோட்டங்களுடன் இந்த அருவி சுமார் 100 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது பாம்பகுடாவில் உள்ள முக்கிய உள்நாட்டுச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்த அருவி திருமாரடி ஊராட்சியில் உள்ள மண்ணத்தூர் மலையிலிருந்து உருவாகிறது. இது 70 அடிக்கு மேல் பாறைகளுக்கு மேல் இருந்து கீழே வருகிறது. இந்த அருவியில் நீர் மூன்று நிலைகளாக விழுகிறது. பயணிகள் அணுகுவதற்கு மூன்றாம் நிலைக்குக் கீழே ஒரு தடுப்புப் பகுதி கட்டப்பட்டுள்ளது. அரிக்கல் அருவிக்கு அருகிலுள்ள மற்ற குறிப்பிடத்தக்க இடங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் கொச்சரீக்கல் குகைகள், மண்டலம் மலை, மயிலாடம் பாறை, சூலம் அருவி, பழூர் படிபுரா, பழூர் பெரும் திருக்கோவில் கோயில் மற்றும் பிறவம் வலியப் பள்ளி உள்ளன.
மேற்கோள்கள்
எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள்
கேரள அருவிகள்
|
592148
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF
|
அய்யப்பனோவ் அருவி
|
அய்யப்பனோவ் அருவி (ஆங்கிலம்: Ayyapanov Waterfalls; மலையாளம்: അയ്യപ്പനോവ് വെള്ളച്ചാട്ടം) என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள திரூர் வட்டத்தின் ஆதவநாடு கிராமத்தில் உள்ள ஆதவநாடு நீர்வீழ்ச்சி ஆகும். இது புத்தனாத்தனி நகரத்திலிருந்து தொலைவில் அமைந்துள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இது ஒரு பருவகால நீர்வீழ்ச்சி. கோடைக் காலத்தில் அருவியில் தண்ணீர் வரத்துக் குறைவாக இருக்கும்.
மேற்கோள்கள்
அய்யப்பனோவ் அருவியில் இளைஞர் பலி | கோழிக்கோடு செய்திகள் - டைம்ஸ் ஆஃப் இந்தியா
ஐயப்பனோவ் வெள்ளச்சட்டம் பார்க்க வருபவர் விபத்துக்கு அழைப்பு விடுத்தார்
கரிம்பாய்க்கோட்டை, பந்தீராய்ரம் ஏக்கர் வனம், நாடுகாணி சுரம்: காட்சிகளால் வளமான மாவட்டம்
வெளி இணைப்புகள்
IAPA நீர்வீழ்ச்சிகள்
அய்யப்பனோவ் நீர்வீழ்ச்சி
விக்கிமேபியா - உலகம் முழுவதையும் விவரிப்போம்!
ஐயப்பனோவ் வெள்ளச்சாட்டம்: இயற்கைபங்கியை அனுபவிக்க சந்த்கசகப்ரவாம் • சுப்ரபாதம்
சிராஜ் நாளிதழ் | 1984 முதல் சர்வதேச மலையாள செய்தித்தாள்
கேரள அருவிகள்
|
592150
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
|
கராச்சி ஒப்பந்தம்
|
கராச்சி ஒப்பந்தம் (Karachi Agreement) என்பது 1947 ஆம் ஆண்டு நடந்த இந்தியா-பாக்கித்தான் போரைத் தொடர்ந்து காஷ்மீரில் போர் நிறுத்தக் கோட்டை ஏற்படுத்துவதற்காக இந்தியா மற்றும் பாக்கித்தானுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் மேற்பார்வையில் இந்தியா மற்றும் பாக்கித்தானின் இராணுவப் பிரதிநிதிகளால் கையொப்பமிடப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் ஒரு போர்நிறுத்தக் கோட்டை நிறுவியது. அன்றிலிருந்து ஐக்கிய நாடுகளின் ஐக்கிய நாடுகளின் ஆணையப் பார்வையாளர்களால் இந்த எல்லைக்கோடு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பின்னணி
ஏப்ரல் 1948 இன் பாதுகாப்பு அவைத் தீர்மானம் 39, காஷ்மீரில் சண்டையை நிறுத்துவதற்கும், ஒரு பிரபலமான பொது வாக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்வதற்கும் இந்தியாவிற்கும் பாக்கித்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய ஐ.நா ஆணையத்தை ( இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையம் ) நிறுவியது. இரு தரப்புடனும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஆணையம் ஆகஸ்ட் 1948 இல் மூன்று பகுதிகள் கொண்ட ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. பின்னர் அதில் மேலும் ஒரு 'துணைத் தீர்மானம்' சேர்க்கப்பட்டது. போர்நிறுத்தம், போர்நிறுத்தத்திற்கான விதிமுறைகள் மற்றும் வாக்கெடுப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கான நடைமுறைகள் ஆகிய மூன்று பகுதிகளும் இதில் கையாளப்பட்டன. இரு நாடுகளும் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது. 1948 டிசம்பர் 31 அன்று போர் நிறுத்தம் எட்டப்பட்டது.
இதனையும் பார்க்கவும்
என்ஜெ9842
சிம்லா ஒப்பந்தம்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Complete text of the agreement
Text of Agreement
Full text of the Karachi Agreement, UN Peacemaker
UN Map showing CFL as per Karachi Agreement - UN document number S/1430/Add.2, Dag Digital Library - the United Nations
UN Commission for India and Pakistan: annexes to the interim report, Annex 26
All peace agreement for India, UN Peacemaker
All peace agreements for Pakistan, UN Peacemaker
Karachi Agreement, United Nations Peacemaker website.
உசாத்துணை
John Cherian, Spotlight on Siachen, Frontline, 17 July 1999
இந்தியாவின் ஒப்பந்தங்கள்
பாக்கித்தானின் ஒப்பந்தங்கள்
|
592151
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88
|
தென்னிந்திய பழுப்பு நிறக் காட்டு ஆந்தை
|
தென்னிந்திய பழுப்பு நிறக் காட்டு ஆந்தை (அறிவியல் பெயர்: Strix leptogrammica indranee) என்பது பழுப்பு நிறக் காட்டு ஆந்தையின் துணை இனமாகும். இது தென்னிந்தியாவில், கிழக்கு, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள காடுகளில் காணப்படுகிறது.
விளக்கம்
தென்னிந்திய பழுப்பு நிறக் காட்டு ஆந்தை நடுத்தர அளவில் சற்று பெரிய ஆந்தை ஆகும். இது சுமார் 47 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகு நீலம் தோய்ந்த கொம்பு நிறத்திலும், விழிப்படலம் ஆழ்ந்த பழுப்பு நிறத்திலும், கால்கள் நீலந்தோய்ந்த வெளிர் சிவப்பு நிறத்திலும் இருக்கும். இதன் உடலின் மேற்பகுதி சாக்லெட் பழுப்பு நிறத்தில் இருக்கும். தோள் பட்டை இறக்கைகள், வால்மேல் இறகுகள் ஆகியவற்றில் வெள்ளைப் பட்டைகளைக் காண இயலும். வால் பழுப்பு நிறமாக மஞ்சள் கலந்த சிவப்பு நிறப் பட்டைகளோடும், வெள்ளை விளிம்போடும் காட்சியளிக்கும். மோவாய் சாக்லெட் நிறமும் வெண்மை நிறமும் கலந்து காட்சிதரும். தொண்டையில் தூய வெண்மை நிறக் கறை காணப்படும். உடலின் மற்ற கீழ்ப்பகுதிகள் வெண்மை தோய்ந்த வெளிர் மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும், மார்பில் மட்டும் பழுப்பு சாயல் தென்படும். மார்பு முழுவதும் நல்ல பழுப்பு நிறப் பட்டைகள் நிறைந்து இருக்கும்.
வாழிடம்
தென்னிந்திய பழுப்பு நிறக் காட்டு ஆந்தை தென்னிந்தியாவில், கிழக்கு, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அடர்ந்த மாறா பசுமைக் காடுகளிலும், நீர்வளம் மிக்க இலையுதிர் காடுகளிலும் காணப்படுகிறது.
நடத்தை
தென்னிந்திய பழுப்பு நிறக் காட்டு ஆந்தை ஒரு இரவாடி ஆகும். இது பகலில் மரங்களில் இணையாக மறைவிடங்களில் அமர்ந்திருக்கும். சிறு காலடி ஓசை கேட்டாலும் ஒலி எழுப்பாமல் விரைந்து மறையும். சிறு பறவைகள், பாம்பு, ஓணான், எலி முதலியவற்றை வேட்டையாடி உண்ணும். 'டொக் டூ டொக்' என மென்மையான குரலில் சில நொடிகளுக்கு ஒருமுறை கத்தும்.
இந்த ஆந்தைகள் சனவரி முதல் மார்ச் வரை இனப்பெருக்கம் செய்யும். மரக்கிளை பிரியும் கவைக் குழுவிலும், பாறை இடுக்குகளிலும், பாறை ஓரமாக தரையிலும் முட்டை இடும். பொதுவாக இரண்டு முட்டைகளை இடும் சிலசமயங்களில் ஒரு முட்டையை மட்டுமே இடுவதும் உண்டு. முட்டைகள் வெண்மை நிறத்தில் இருக்கும்.
மேற்கோள்கள்
தென்னிந்தியப் பறவைகள்
ஆந்தைகள்
|
592158
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE
|
தாவா
|
தாவா ( ) அல்லது ஏக இறைவனை வணங்க அழைக்கவும், என்பது இஸ்லாத்தின் நம்பிக்கைகள் மற்றும் போதனைகளைப் பற்றி அறிந்துகொள்ளவும், தழுவிக்கொள்ளவும் மற்றவர்களை பகிர்ந்துகொள்ளும் செயலைக் குறிக்கிறது. இது இஸ்லாத்தின் செய்தியை முஸ்லிமல்லாதவர்களுக்கு தெரிவிப்பதும் அதன் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை கருத்தில் கொள்ள அவர்களை ஊக்குவிப்பதும் அடங்கும். தவாவின் நோக்கம், தகவல்களை வழங்குவதும், கேள்விகளுக்குப் பதிலளிப்பதும், உரையாடல்களில் ஈடுபடுவதும் இஸ்லாமிய நம்பிக்கையைப் பற்றி மக்கள் நன்கு புரிந்துகொள்ள உதவுவதாகும். வெவ்வேறு மதப் பின்னணியில் உள்ள மக்களிடையே புரிதலை வளர்ப்பதற்கும் உரையாடலை மேம்படுத்துவதற்கும் இது பெரும்பாலும் ஒரு வழியாகக் காணப்படுகிறது.
இஸ்லாமிய நம்பிக்கையின்படி, கடவுள் மனிதனுக்கு வழங்கிய இஸ்லாத்தின் உண்மையான பாதையைப் பற்றி அனைவருக்கும் தெரிவிப்பது விசுவாசிகளின் பொறுப்பாகக் கருதப்படுகிறது.
சகிப்புத் தன்மையுடன் கூடிய அழைப்பும், தேசத் தலைவர்களுக்கு செய்தி அனுப்புவதற்கான அழைப்பும் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையின் அடிப்படையில் பிரசங்க முறைகளாகக் கருதப்படுகிறது.
அல்லாஹு ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒவ்வொரு நபிமார்களையும் அனுப்பி, இவ்வளவு மதஸ்தாரே இஸ்லாமுக்கு அழைக்க வேண்டும் என்பது தான் அல்லாஹு அவர்களின் புனித குர்ஆனினால் கூறப்படும். "உங்கள் தந்திரம் கொண்டும் மௌஇளத் கொண்டும் இஸ்லாமுக்கு அழைக்கவும்."
இசுலாம்
ஆன்மீகக் கொள்கை
ஆன்மிகம்
ஆரம்பகால இஸ்லாம்
குர்ஆனில் தவா என்ற வார்த்தைக்கு வேறு அர்த்தங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, சூரா (அத்தியாயம்) 30:25 இல், இது நியாயத்தீர்ப்பு நாளில் இறந்தவர்களை எழுப்புவதற்கான அழைப்பைக் குறிக்கிறது. குர்ஆனில் பயன்படுத்தப்படும் போது, அது பொதுவாக அல்லாஹ்வின் விருப்பப்படி வாழ்வதற்கான அழைப்பைக் குறிக்கிறது. எனவே, இஸ்லாத்தின் முதல் நூற்றாண்டுகளில் பயன்படுத்தப்படும் போது, அது வழக்கமாக அந்த செய்தியைக் குறிப்பிடுகிறது மற்றும் சில சமயங்களில் ஷரியா மற்றும் தீன் ஆகியவற்றுடன் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்பட்டது.
"சக முஸ்லீம்களை அவர்களின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் அதிக பக்தியுடன் தொடர ஊக்குவிப்பது" என்ற கடமையாகவும் தாவா விவரிக்கப்படுகிறது, இது சமகால இஸ்லாமிய சிந்தனையின் மையமாக மாறியுள்ளது.
முகமதுவின் காலத்தில்
625 இல் அல் ராஜியின் பயணத்தின் போது, முஹம்மது சில ஆட்களை பல்வேறு பழங்குடியினருக்கு மிஷனரிகளாக அனுப்பினார். சில மனிதர்கள் முஹம்மதுவிடம் வந்து, முஹம்மது அவர்களுக்கு இஸ்லாம் கற்பிக்க பயிற்றுவிப்பாளர்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர், ஆனால், காலித் பின் சுஃப்யான் ( பனு லஹ்யான் கோத்திரத்தின் தலைவர்) படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்க விரும்பும் குஸைமாவின் இரண்டு பழங்குடியினரால் ஆட்கள் லஞ்சம் பெற்றனர். முகமதுவின் சீடர்கள். இந்த பயணத்தில் பல மிஷனரிகள் கொல்லப்பட்டனர், எட்டு அல்லது, மற்றொரு கணக்கின்படி, பத்து.
பின்னர் ஜூலை 625 இல் பிர் மாவோனாவின் பயணத்தின் போது பனு அமீர் பழங்குடியினரைச் சேர்ந்த சிலரின் வேண்டுகோளின் பேரில் முஹம்மது சில மிஷனரிகளை அனுப்பினார், ஆனால் முஹம்மதுவின் சீடர்களால் காலித் பின் சுஃப்யானை படுகொலை செய்ததற்கு பழிவாங்கும் வகையில் முஸ்லிம்கள் மீண்டும் கொல்லப்பட்டனர். . இந்தப் பயணத்தின் போது 70 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
ஜனவரி 630 இல் காலித் இபின் அல்-வலித் (பனு ஜாதிமா) பயணத்தின் போது, பனு ஜாதிமா பழங்குடியினரை இஸ்லாத்திற்கு அழைக்க காலித் இப்னு வாலித்தை அனுப்பினார். இது சுன்னி ஹதீஸ் குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்அப் இப்னு உமைர் செப்டம்பர் 621 இல் முதல் முஸ்லீம் தூதர் ஆவார். மக்களுக்கு இஸ்லாத்தின் கோட்பாடுகளை கற்பிக்கவும் அவர்களுக்கு வழிகாட்டவும் அவர் யாத்ரிப் (தற்போது மதீனா ) க்கு அனுப்பப்பட்டார்.
பிந்தைய முஹம்மது
632 இல் முஹம்மதுவின் மரணத்திற்குப் பிறகு, கிடைக்கப்பெற்ற வரலாற்றுச் சான்றுகளின்படி, முஹம்மதுவின் மரணத்திற்குப் பிறகு, முஹம்மதுவின் மரணத்திற்குப் பிறகு, முஸ்லீம்கள் உடனடியாக தவாச் செயல்களில் ஈடுபடவில்லை என்று தோன்றுகிறது - பைசண்டைன் மற்றும் பாரசீக நாடுகளின் விரைவான வெற்றிகளின் போதும், உள்ளூர் மக்களுக்கும் போதிக்க அவர்கள் சிறிதும் துணியவில்லை. முஸ்லிம் அல்லாதவர்கள். முஹம்மது இறந்து கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, 720 களில் அப்போதைய ஆட்சியில் இருந்த உமையாத் குலத்திற்கு எதிரான அப்பாஸிட் பிரச்சாரத்தின் பின்னணியில், தாவா பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், 'அப்பாஸிட்கள் ஆட்சியில் இருந்தவுடன் அப்பாஸித் தவா' நிறுத்தப்பட்டது - இது அதன் அரசியல் தன்மையை உறுதிப்படுத்துகிறது. தவாஹ் ஒரு உண்மையான மிஷனரி நடவடிக்கையாக, இன்னும் முஸ்லீம் உம்மாவிற்குள் இருந்தாலும், 9 முதல் 13 ஆம் நூற்றாண்டுகளில் இஸ்மாயிலி தவா வடிவத்தில் தோன்றியது. இஸ்மாயிலிஸ், பல வழிகளில், ஒழுங்கமைக்கப்பட்ட முஸ்லீம் மிஷனரி நடவடிக்கைகளின் முன்னோடியாகக் காணப்படுகிறார்: அவர்களின் மிகவும் நிறுவனமயமாக்கப்பட்ட மற்றும் அதிநவீன தாவா அமைப்பு இன்று வரை மீண்டும் மீண்டும் செய்யப்படவில்லை. மேலும், இஸ்மாயிலிகளுக்கு, தாவா மாநில முன்னுரிமையாக இருந்தது. இஸ்மாயிலி தாவா கூடுதல் மற்றும் உள்-உம்மடிக் வடிவங்களை உள்ளடக்கியது மற்றும் இறையியல் மற்றும் அரசியல் இரண்டையும் கலந்தது.
நோக்கம்
இஸ்லாமிய இறையியலில், தவாவின் நோக்கம், குர்ஆன் மற்றும் முஹம்மதுவின் சுன்னாவில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கடவுளின் வழிபாட்டைப் புரிந்துகொள்வதற்கும், முஹம்மதுவைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிப்பதற்கும் மக்களை, முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களை அழைப்பதாகும்.
"கடவுளை நோக்கிய அழைப்பு" எனப்படும் தாவா என்பது குர்ஆனின் செய்தியை மனிதகுலத்திற்கு முஹம்மது பரப்பத் தொடங்கிய வழிமுறையாகும். முஹம்மதுவுக்குப் பிறகு, அவரைப் பின்பற்றுபவர்களும் உம்மாவும் (முஸ்லிம் சமூகம்) அதற்குப் பொறுப்பேற்றனர். குர்ஆன் ஏன், எப்படி ஏகத்துவத்தை போதிக்கிறது என்ற தகவல்களை வழங்கி குர்ஆனின் செய்தியை தெரிவிக்கின்றனர் . முஹம்மது இஸ்லாத்தை அனைத்து முந்தைய தீர்க்கதரிசிகளின் உண்மையான மதமாகவும் பணியாகவும் பார்த்தார். அவர்களின் அழைப்பு அவர்களின் சொந்த மக்களுக்கு மட்டுமே என்று அவர் நம்பினார், ஆனால் அது உலகளாவியது. இறுதி தீர்க்கதரிசியாக அவரது பணி இந்த அழைப்பையும் இஸ்லாத்திற்கான அழைப்பையும் ( தாவா ) முழு உலகிற்கும் திரும்பத் திரும்பச் செய்வதாகும். முஹம்மது பல்வேறு முஸ்லிம் அல்லாத ஆட்சியாளர்களுக்கு கடிதம் எழுதி, அவர்களை மதம் மாற அழைத்தார்.
முறைகள்
மென்மை
இஸ்லாத்தைப் பிரசங்கிப்பதில் முஹம்மதுவின் சாந்த குணம் குறித்து குரான் கூறுகிறது:
மேலும் அல்லாஹ்வின் கருணையால் நீங்கள் அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடுமையாகவும், கடின உள்ளத்துடனும் இருந்திருந்தால், அவர்கள் உங்களைச் சுற்றி இருந்து ஓடியிருப்பார்கள். ( ).
கடவுளின் உரிமையாளரான பார்வோனுக்குப் பிரசங்கித்த மோசே மற்றும் ஆரோனைப் பற்றி குர்ஆன் கூறுகிறது:
ஆகவே, நீங்கள் இருவரும் அவரிடம் மென்மையாகப் பேசுங்கள், அவர் கடவுளைப் பிரதிபலிக்க அல்லது பயப்படுவார். ( ).
முஹம்மதுவின் மனைவி ஆயிஷா, "ஒரு காரியத்தில் மென்மை இருக்கும்போதெல்லாம், அது அதை அழகுபடுத்துகிறது, எப்பொழுது எதையாவது விலக்கினால், அது சிதைக்கிறது" என்று கூறியதாக முஹம்மது கூறினார்.
முஹம்மது ஜரீரால் மேற்கோள் காட்டப்பட்டார், "மென்மையை இழந்தவர் அனைத்து நன்மைகளையும் இழக்கிறார்."
அரசியலில் செல்வாக்கு
முஸ்லீம்கள் அதை தங்கள் அரசியல் கோட்பாட்டின் ஒரு பகுதியாக ஆக்கினர் ( தவாவை ஜிஹாத்துடன் தொடர்புபடுத்துவதன் மூலம்) மற்றும் வாழ்க்கை (தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் தவாவின் கருத்தைப் பயன்படுத்தி). பொதுவாக எடுத்துக் கொண்டால், தஃவாவும் அரசியலும் பின்னிப் பிணைந்திருப்பது, முஸ்லிம் வரலாறு முழுவதிலும் ஒரு அம்சமாக இருந்து வருகிறது, இருப்பினும் இதன் நடைமுறைத் தாக்கங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வேறுபட்டவை.
ஞானம்
"ஞானத்துடனும், நல்ல போதனையுடனும் உங்கள் இறைவனின் பாதைக்கு அழையுங்கள், மேலும் அவர்களுடன் சிறந்த முறையில் தர்க்கம் செய்யுங்கள். நிச்சயமாக, உங்கள் இறைவன் தன் வழியை விட்டு விலகியவர் யார் என்பதை நன்கறிந்தவனாக இருக்கின்றான், மேலும் அவர் நேர்வழியில் சென்றவர் யார் என்பதை நன்கு அறிந்தவர்...". ( ).
இரண்டு கைதிகள் தங்களுடைய கனவுகளை விளக்குமாறு அவரிடம் கேட்டபோது, சிறையில் இருக்கும் யூசுப்பின் விஷயத்தில், தாவாவில் திசைதிருப்பப்படுவதற்கான ஒரு உன்னதமான உதாரணத்தைக் காணலாம். அவர்களில் ஒருவர் கூறினார்: "நான் மதுவை அழுத்துவதைப் பார்த்தேன்." மற்றவர் கூறினார்: "நான் என் தலையில் ரொட்டியைச் சுமந்துகொண்டிருந்தேன், பறவைகள் அதிலிருந்து சாப்பிடுவதைக் கண்டேன்." அவர்கள் கேட்டார்கள்: "இந்த விஷயங்களின் விளக்கத்தை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நிச்சயமாக நீங்கள் நல்லவர்களில் ஒருவர் என்று நாங்கள் நம்புகிறோம்." அவர் பதிலளித்தார்: "உங்கள் உணவாக உங்களுக்கு உணவு வரும்போதெல்லாம், அது வருவதற்கு முன்பே நான் அதை உங்களுக்கு அறிவித்தேன். என் இறைவன் எனக்குக் கற்றுத் தந்ததிலிருந்து இதுவேயாகும்.உங்களில் ஒருவனோ, தன் எஜமானுக்குக் குடிக்க மதுவை ஊற்றுவான், மற்றவன் சிலுவையில் அறையப்படுவான், அவனுடைய தலையிலிருந்து பறவைகள் சாப்பிடும். நீங்கள் இருவரும் விசாரிக்கும் வழக்கு இது." ( )
பொதுவான மொழி பேசுவது
"நான் எந்த தூதரையும் அனுப்பவில்லை, அவர் தனது மக்களுக்கு விளக்குவதற்காக அவர்களின் மொழியில் பேசினார்." ( )
இடம்
சரியான இடத்தில் தவாச் செய்வது. உதாரணமாக, முஹம்மதுவின் காலத்தில் மவுண்ட் சஃபா அறிவிப்புகளுக்காக பயன்படுத்தப்பட்டது. எனவே முகமது தனது கருத்தை தெரிவிக்க அங்கு சென்றார். அவர் இஸ்லாத்திற்கு அழைக்கும் நபர்களை அவர் அறிந்திருந்ததால் அவர் குறிப்பிட்ட இடத்தைத் தேர்ந்தெடுத்தார். அவர் அவர்களின் இயல்பு மற்றும் குணாதிசயங்களை அறிந்தார், எனவே அவர் சஃபா மலையைத் தேர்ந்தெடுத்தார். அவர் அதன் உச்சியில் ஏறி தனது மக்களிடம் கூறினார்: "ஓ குரைஷ் மக்களே, இந்த மலைக்குப் பின்னால் ஒரு இராணுவம் இருப்பதாக நான் உங்களுக்குச் சொன்னால் நீங்கள் சொல்வதைக் கேட்பீர்களா?"
தாவா பயிற்சி
பல்வேறு இஸ்லாமிய நிறுவனங்கள், வெற்றிகரமான தாவாவிற்கு அவர்களை தயார்படுத்துவதற்காக விரிவான கையேடுகள், பயிற்சிகள் மற்றும் பட்டறைகளை டாய்க்கு வழங்குகின்றன.
தாவா கையேடு
தாவா கையேடுகள், கையேடுகள் அல்லது வழிகாட்டிகள் என்பது முஸ்லீம் அல்லாதவர்களை இஸ்லாத்தை ஏற்று மதம் மாற்றுவதற்கு அதாய்க்கு ஒரு கட்டமைப்பையும் வழிமுறையையும் வழங்கும் பயிற்சிப் பொருளாகும். நாத்திகர்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் போன்ற சமூக-மதக் குழுக்கள் மற்றும் முஸ்லீம் அல்லாத தனிநபர்கள் அல்லது கூட்டுப் பார்வையாளர்களுக்கு, உரையாடல், பல்வேறு நுட்பங்கள் மற்றும் தாவாவை நடைமுறைப்படுத்துவதற்கான விரிவான வழிமுறைகள் பற்றிய விரிவான வழிகாட்டுதல்களை கையேடுகள் வழங்குகின்றன. ]
பயிற்சிகள் மற்றும் பட்டறைகள்
உடல் பயிற்சிகள் மற்றும் பயிற்சி அமர்வுகள் வடிவில் டாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் வீடியோ பாடங்கள், வெபினார்கள், ஆன்லைன் கலந்துரையாடல் மன்றங்கள், கையேடுகள் மற்றும் வினாடி வினாக்கள் போன்ற வடிவங்களிலும் Daʿwah பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இயக்கங்கள்
நவீன தாவா இயக்கங்கள் அவற்றின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகளில் வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
முஸ்லீம் சகோதரத்துவம் அடிமட்ட நிறுவனங்களை கட்டியெழுப்பும் மற்றும் நலன்புரி திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கான வழிமுறையில் கவனம் செலுத்துகிறது, இது பல மத்திய கிழக்கு நாடுகளில் பகைமை கொண்ட அரசாங்கங்களின் கீழ் பல தசாப்தங்களாக அடக்குமுறையில் இருந்து தப்பிக்க உதவியது, குழு மற்றும் அதன் பல கிளைகள் இன்னும் மக்கள் ஆதரவையும் அதிகாரத்தையும் அனுபவித்து வருகின்றன.
ஜமாஅத்தே இஸ்லாமி இஸ்லாத்தை ஒரு முழுமையான வாழ்க்கை நெறியாக முன்வைப்பதிலும், அடிமட்ட நிறுவனங்களை கட்டியெழுப்பும் வழிமுறைகளிலும், நலத்திட்டங்களுக்கு நிதியுதவி செய்வதிலும் கவனம் செலுத்துகிறது.
தப்லிகி ஜமாஅத் முஸ்லிம்களை மீண்டும் இஸ்லாத்தின் அடிப்படை நடைமுறைகளான வழிபாடுகளுக்கு கொண்டு வர முயற்சிக்கிறது; உறுப்பினர்கள் பேசுவதற்கு ஊக்குவிப்பதன் மூலமும், நல்ல செயல்களின் நற்பண்புகளை அவர்களுக்கு கற்பிப்பதன் மூலமும் அவர்கள் இதைச் செய்கிறார்கள். இந்த இயக்கம் 20 முதல் 80 மில்லியன் மக்களைப் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது, இது இந்தியாவில் தோன்றியிருந்தாலும், இப்போது உலகளாவிய பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது.
அஹ்மத் தீதாத் ஒரு குறிப்பிடத்தக்க விவாதக்காரர் ஆவார், அவர் கிறிஸ்தவ விவாதங்களை விவாதிப்பதில் தனது முயற்சிக்காக முஸ்லிம்கள் மத்தியில் ஒரு புரட்சிகர நபராக இருந்தார். பிரபலமான விவாதக்காரர்கள் முதல் அடிமட்ட தாவா பிரச்சாரகர்கள் வரை பல முஸ்லீம் விவாதக்காரர்கள் அவருடைய புத்தகங்களையும் வீடியோக்களையும் குறிப்புப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர்.
ஜாகிர் நாயக் அகமது தீதாத்தின் மாணவராக இருந்தார், மேலும் கிறிஸ்தவ விவாதங்கள் மற்றும் கிறிஸ்தவர்களுடன் கேள்வி பதில் அமர்வுகளை நடத்துவதன் மூலம் அவரது ஆசிரியரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினார். ஜாகிர் நாயக் தனது பிரபலமான சேனலான பீஸ் டிவி மூலம் கிறிஸ்தவ விவாதங்களை முஸ்லிம்களின் முக்கிய நீரோட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் குறிப்பாக குறிப்பிடத்தக்கவர்.
iERA என்பது லண்டனில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனம் ஆகும், இது முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத அறிவுஜீவிகளை விவாதிக்கவும், புதிய முஸ்லீம்களுக்கு உதவவும், பேச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் மற்றும் தஆப் பிரச்சினைகளில் கல்வி ஆராய்ச்சி கட்டுரைகளை தயாரிக்கவும் முயல்கிறது. iERA ஆனது அப்துர்ரஹீம் கிரீன் (அந்தோனி கிரீன்) மற்றும் யூசுப் சேம்பர்ஸ், பிரித்தானிய இஸ்லாத்திற்கு மாறியவர்களால் நிறுவப்பட்டது. இது தவாவுக்கான GORAP முறையை உருவாக்கியது: கடவுளின் ஒருமை, வெளிப்பாடு மற்றும் நபித்துவம். GORAP என்பது தாவா உரையாடல்களை நடத்துவதற்கும் இஸ்லாத்தின் செய்தியை நிலைகளில் தெரிவிப்பதற்கும் ஒரு கட்டமைப்பாகும்.
சிங்கப்பூரின் ஹிக்மா டைம்ஸ் இஸ்லாமிய தாவா இயக்கத்தின் குறிப்பிடத்தக்க தாக்கத்தை கொண்டுள்ளது. பல உள்ளூர்/சர்வதேச நிறுவனங்கள் உள்ளன (எ.கா ஹிக்மா டைம்ஸ்).
முராபிதுன் உலக இயக்கம் என்பது ஸ்பெயினில் உள்ள ஒரு இயக்கமாகும், இது ஒரு அமீருக்கு விசுவாசத்தை உறுதியளிக்கிறது மற்றும் ஜகாத்துக்கான நாணயமாக இஸ்லாமிய தங்க தினார் மறுமலர்ச்சியை ஆதரிக்கிறது.
டிஸ்கவர் இஸ்லாம் மையம் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் 2005 இல் கனடாவைச் சேர்ந்த டாக்டர் அப்துல்லா ஹக்கிம் குயிக் என்பவரால் நிறுவப்பட்டது. அனைத்து தரப்பு மக்களுக்கும் இஸ்லாத்தின் செய்தியை எடுத்துரைத்தல். அறிவின் மூலம் சமூகங்களில் பாலங்களை உருவாக்குதல், இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்களை உடைத்தல். இஸ்லாத்தின் அடிப்படைகளைப் பற்றி மேலும் அறிய முஸ்லிமல்லாதவர்களுக்கும் புதிய முஸ்லிம்களுக்கும் வகுப்புகளை வழங்குதல்.
அப்லிஃப்ட் தாவா என்பது சியாட்டில், வாஷிங்டனில் உள்ள சியாட்டில் மற்றும் ஆப்பிரிக்காவில் அத்தியாயங்களைக் கொண்ட ஒரு லாப நோக்கமற்ற தாவா ஆகும்.
வடமேற்கு தாவா அறக்கட்டளை தென்மேற்கு வாஷிங்டன் மற்றும் ஓரிகானில் செயல்பாடுகளைக் கொண்ட ஓரிகானின் போர்ட்லேண்டில் உள்ள ஒரு தாவா இலாப நோக்கற்றது.
அல் ஃபுர்கான் அறக்கட்டளை என்பது சிகாகோவை தளமாகக் கொண்ட ஒரு தாவா இலாப நோக்கற்ற அமைப்பாகும், இது அமெரிக்கா முழுவதும் உள்ள கூட்டாளர் தாவா அமைப்புகள் மூலம் குர்ஆனை விநியோகிப்பதில் கவனம் செலுத்துகிறது.
யூத் கிளப் ஒரு இலாப நோக்கற்ற, குறுங்குழுவாத, அரசியல் சார்பற்ற அமைப்பாகும், இது இளைஞர்களுக்கு ஒரு தனித்துவமான தளத்தை வழங்குகிறது மற்றும் இஸ்லாமிய விழுமியங்களுக்கு ஏற்ப அவர்களின் திறனை வழிநடத்த அவர்களுக்கு வழிகளை வழங்குகிறது. 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, யூத் கிளப் நன்கு சமநிலையான நபர்களை உருவாக்க உழைத்து வருகிறது, அவர்கள் அந்தந்த துறைகளில் திறமையானவர்கள் மட்டுமல்ல, அவர்களின் மதக் கடமைகளை அங்கீகரித்து நிறைவேற்றுகிறார்கள் மற்றும் அவர்களின் சமூகங்களில் தீவிரமாக பங்கேற்கிறார்கள்.
லத்தீன் அமெரிக்கன் தாவா அமைப்பு என்பது ஹிஸ்பானிக் அமெரிக்க சமூகத்திற்குள் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக 1997 இல் நிறுவப்பட்ட ஒரு அடிமட்ட அமைப்பாகும். லாடோ அவர்களின் படைப்புகளில் இஸ்லாமிய ஸ்பெயினின் வரலாற்றை அடிக்கடி குறிப்பிடுகிறார்.
முறைகள் குறிப்பிட்ட மதங்களைப் பொறுத்தும் இருக்கலாம். உதாரணமாக, இஸ்மாயிலிஸ் மத்தியில், அல்-நய்சபூரியின் நடத்தை விதிகள், முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தின் வார்த்தையை பரப்ப வேண்டிய மதிப்புகளை சித்தரிக்கிறது. இத்ரிஸ் இமாத் அல்-தினின் படைப்பு யமனில் உள்ள தாவாவின் மரபுகள் பற்றிய சுதேச கணக்கை நமக்கு அளிக்கிறது. நிஜாரி – முஸ்தாலி வாரிசு தகராறு பற்றிய அவரது கணக்கு தையிபிகளின் அதிகாரப்பூர்வ பார்வையை பிரதிபலிக்கிறது. இதேபோல், மேற்கத்திய உலகில் திறந்த வெளியில் பொதுப் பேச்சுக்காக நியமிக்கப்பட்ட நவீன கால மேடைகளும் இஸ்லாத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு இடையே விவாதத்திற்கான தளங்களை வழங்குகின்றன, குரானிஸ்டுகள் மற்றும் மஹ்தியிஸ்ட் அடிப்படையிலான மஹ்தவியா போன்ற மக்கள்தொகைக்கு இடையேயான உரையாடல்களின் ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.
|
592159
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE
|
ஸ்ரீனிவாஸ் குமார் சின்ஹா
|
படைத்துறை தளபதி ஸ்ரீனிவாஸ் குமார் சின்ஹா, (Srinivas Kumar Sinha) (பரம் விசிட்ட சேவா பதக்கம்) (ஜனவரி 7, 1926 - நவம்பர் 17, 2016) ஒரு இந்திய இராணுவத் தளபதி ஆவார். இவர் இராணுவத் தளபதியின் துணைத் தலைவராக பணியாற்றினார். ஓய்வுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீர் மற்றும் அசாம் மாநிலங்களின் ஆளுநராகப் பணியாற்றினார்.
ஆரம்ப கால வாழ்க்கை
ஸ்ரீனிவாஸ் குமார் சின்ஹா 1926 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி பீகாரில் உள்ள பாட்னாவில் பிறந்தார். இவர் பீகார் மாநிலத்தின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் மிதிலேஷ் குமார் சின்ஹாவின் மகனும், பிரித்தானியப் பேரரசின் முதல் இந்திய காவல்துறாஇத் தலைவருமான அலக் குமார் சின்ஹாவின் பேரனும் ஆவார். 1943 ஆம் ஆண்டு தனது 17வது வயதில் பாட்னா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், பிறகு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். பெல்ஜியத்தில் உள்ள அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியின் சிறந்த பயிற்சியாளராக அங்கீகரிக்கப்பட்டார். பிறகு இவர் ஜாட் படைப்பிரிவில் நியமிக்கப்பட்டார். பின்னர், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, 5 வது கூர்க்கா படைப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். இரண்டாம் உலகப் போரின் போது பர்மா மற்றும் இந்தோனேசியாவிலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காஷ்மீரிலும் போரில் ஈடுபட்டார். நாகாலாந்து மற்றும் மணிப்பூரில் இரண்டு முறை பதவிகளை வகித்தார், அங்கு இவர் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கேற்றார்.
முன்னாள் தூதரக அதிகாரியும், தற்போதைய தலைமை தகவல் ஆணையராக பணியாற்றிவரும் யஷ்வர்தன் குமார் சின்ஹா இவரது மகனாவார்.
அசாம் ஆளுநர்
1997 இல், கிளர்ச்சி உச்சத்தில் இருந்த நேரத்தில் அசாமின் ஆளுநராக சின்ஹா நியமிக்கப்பட்டார். ஒருங்கிணைந்த கட்டளை, பொருளாதார மேம்பாடு மற்றும் உளவியல் முன்முயற்சிகள் என்ற மூன்று முனை மூலோபாயத்தை வடிவமைத்தார். ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் தீவிரப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மூலம் போராளிகள் மீது கடும் நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் 100,000 ஆழமற்ற குழாய் கிணறுகளை நிறுவுவதில் இவர் முயற்சி செய்தார். அசாமை அரிசி பற்றாக்குறை மாநிலத்திலிருந்து அரிசி உபரி மாநிலமாக மாற்றினார். இவரது உளவியல் முன்முயற்சிகள் ஒரு பெரிய உணர்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஜம்மு காஷ்மீர் ஆளுநர்
ஜூன் 4, 2003 அன்று, தளபதி சின்ஹா ஜம்மு காஷ்மீர் ஆளுநரானார். 2003 ஆம் ஆண்டு, அவர் ஜம்மு காஷ்மீர் ஆளுநராகப் பொறுப்பேற்றபோது, சராசரியாக ஒவ்வொரு நாளும் பத்து பேர் கொல்லப்பட்டனர். மேலும், சுற்றுலாப் பயணிகளின் ஆண்டு வருகை வெறும் 28,000 ஆக இருந்தது. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தினசரி கொலை விகிதத்தை பத்தில் இருந்து ஒன்றாகக் குறைத்தது. மேம்பட்ட பாதுகாப்பு சூழ்நிலையுடன், ஆளுநர் நியமனத்தை இவர் கைவிட்டபோது, 2008 ஆம் ஆண்டளவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆண்டுக்கு 28,000 இலிருந்து 600,000 ஆக அதிகரித்தது. மாநிலம் மலைகளில் 1000 நீர்மின்த் திட்டங்களை நிறுவத் தொடங்கியது.
காஷ்மீரின் தாராளவாத இஸ்லாமிய மரபுகளை புதுப்பிக்கும் முயற்சிகளுடன் குடிமை நடவடிக்கையை இவர் ஊக்குவித்தார். பாக்கித்தான் மற்றும் பல மத்திய ஆசிய மாநிலங்களிலிருந்து வந்த அறிஞர்களுடன் காஷ்மீர் பற்றிய கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளை ஸ்ரீநகரில் தொடங்கி வைத்தார்.
காஷ்மீர் ஆளுநராக இருந்த இவரது பதவிக்காலம் 25 ஜூன் 2008 அன்று முடிவடைந்தது.
இறப்பு
தனது 90 வயதில் 17 நவம்பர் 2016 அன்று இறந்தார். இவருக்கு பிரேமினி சின்ஹா என்ற மனைவியும், யஷ்வர்தன் குமார் சின்ஹா என்றா ஒரு மகனும், மீனாட்சி, மிருணாளினி மற்றும் மனிஷா ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர்.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
அசாம் ஆளுநர்கள்
அருணாச்சலப் பிரதேச ஆளுநர்கள்
2016 இறப்புகள்
1926 பிறப்புகள்
|
592161
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
|
பேட்ரோனைட்டு
|
பேட்ரோனைட்டு (Patrónite) என்பது VS4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். வனேடியத்தின் சல்பைடு கனிமமான இது பொதுவாக V4+(S22−)2 என்ற அயனிகளின் சேர்க்கையாக விவரிக்கப்படுகிறது. கட்டமைப்பு ரீதியாக இக்கனிமம் வனேடியம் மையங்களுக்கு இடையே மாற்று பிணைப்பு மற்றும் பிணைப்பு இல்லாத தொடர்புகளைக் கொண்ட ஒரு "நேரியல்-சங்கிலி" சேர்மமாகும். வனேடியம் எண்முக-ஒருங்கிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ளது. இது இந்த உலோகத்திற்கான ஒரு அசாதாரண வடிவவியலாகும்.
பேட்ரோனைட்டு கனிமம் முதன்முதலில் 1906 ஆம் ஆண்டில் பெரு நாட்டின் செரோ டி பாசுகோ மண்டலத்தில் இயூனின் நகருக்கு அருகே உள்ள மினாசு ராக்ரா வனேடியம் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பெருவியன் நாட்டின் உலோகவியலாளரான ஆண்டெனார் ரிசோ பேட்ரன் (1866-1948) நினைவாக கனிமத்திற்கு பேட்ரோனைட்டு என்று பெயரிடப்பட்டது. இந்த கனிமப் படிவுகளை இவரே கண்டுபிடித்தார். பெருவில் காணப்பட்ட நிலக்கீல் எண்ணெய் படிவுகளின் பிளவுகளில் அசுபால்ட்டு என்ற பாறை எண்ணெயின் வழிப்பெறுதி போல பேட்ரோனைட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனுடன் தொடர்புடைய தாதுக்களாக கந்தகம், பிராவோயிட்டு, பைரைட்டு, மினாசுராக்ரைட்டு, இசுடான்லைட்டு, தவோர்னிகைட்டு, குவார்ட்சு மற்றும் வனேடியத்தைக் கொண்டுள்ள பழுப்பு நிலக்கரி ஆகியவை அறியப்படுகின்றன. உருசியாவின் யூரல் மலைத்தொடரின் துருவப்பகுதியிலுள்ள பைகோய் மலைத்தொடரில் பாயும் மத்திய சிலோவா-யாக்கா நதியின் யுசுகினைட்டு பள்ளத்தாக்கு மற்றும் நமீபியாவில் உள்ள சுமேப் சுரங்கத்தில் இருந்தும் பேட்ரோனைட்டு கிடைக்கிறது.
மேற்கோள்கள்
வனேடியம் கனிமங்கள்
சல்பைடு கனிமங்கள்
ஒற்றைச்சரிவச்சுக் கனிமங்கள்
டைசல்பைடுகள்
|
592176
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87.%20%E0%AE%9A%E0%AE%BF.%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81
|
கே. சி. சுரேந்திர பாபு
|
கே.சி.சுரேந்திர பாபு (K. C. Surendra Babu) இந்தியாவின் பீகார் மாநிலத்தில் 2005 ஆம் ஆண்டு மாவோயிசுட்டுகளால் கொல்லப்பட்ட இந்திய காவல்துறை அதிகாரி ஆவார். கொல்லப்பட்டபோது இவர் முங்கேர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக இருந்தார். பீம் பந்து வனவிலங்கு சரணாலயத்திற்குள் 2005 ஆம் ஆண்டு சனவரி மாதம் 5 ஆம் தேதியன்று மாவோயிசுட்டுகளால் வைக்கப்பட்ட கண்ணிவெடி வெடிப்பில் கே.சி.சுரேந்திர பாபுவும் அவரது ஐந்து மெய்க்காவலர்களும் கொல்லப்பட்டனர். இவர் 1997 ஆம் ஆண்டு தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியக் காவல் பணி அலுவலர் ஆவார். இவருடைய சொந்த மாநிலம் ஆந்திரப்பிரதேசமாகும். இவருடைய மனைவி லட்சுமி தேவி பீகாரில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றினார். இத்தம்பதியருக்கு கே சுசுமிதா என்ற நான்கு வயது மகள் இருந்தார்.
மேற்கோள்கள்
2005 இறப்புகள்
இந்திய காவல் பணி அதிகாரிகள்
பீகார்
|
592179
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
|
பெரசு டார்ட்டரேட்டு
|
பெரசு டார்ட்டரேட்டு (Ferrous tartrate) என்பது C4H4FeO6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டார்ட்டாரிக் அமிலத்தின் இரும்பு உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது.
பயன்
இரும்பு டார்ட்ரேட்டு ஓர் எஃகு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மனச்சோர்வு, பீதி நோய் போன்ற பதட்டம் தொடர்பான நிலைமைகளுக்கு எஃகு மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாக 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இம்மருந்து பரிந்துரைக்கப்பட்டது. பலவகையான தானியங்களிலிருந்து பெறப்பட்ட செறிவூட்டப்பட்ட ஒயின் எனப்படும் மதுவுடன் டார்ட்டாரிக் அமிலத்தைச் சேர்த்து 30 நாட்களுக்கு வினைபுரியச் செய்து வைத்து பெரசு டார்ட்டரேட்டு தயாரிக்கப்படுகிறது. இதைத் தயாரிப்பதும் கடினமாகும்.
வரலாற்று ரீதியாக, பெரசு டார்ட்டரேட்டடை 2 தேக்கரண்டி அளவுகளில் வயிற்றுக்கு சத்து மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்பட்டது.
மேற்கோள்கள்
இரும்பு(II) சேர்மங்கள்
டார்ட்டரேட்டுகள்
மருந்துகள்
|
592186
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
|
பீகார் மாநில மகாதலித் ஆணையம்
|
பீகார் மாநில மகாதலித் ஆணையம் (State Mahadalit Commission, Bihar) என்பது பீகார் அரசால் உருவாக்கப்பட்ட ஓர் அரசு அமைப்பாகும். வளர்ச்சிச் செயல்பாட்டில் பின்தங்கிய பட்டியல் சாதியினருக்குள் உள்ள சாதிகளைக் கண்டறிந்து, அவர்களின் கல்வி மற்றும் சமூக நிலையை ஆராய்ந்து மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக இந்த ஆணையம் 2007 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. ஆணையம் இரண்டு இடைக்கால அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது. 18 சாதிகளை மிகவும் பின்தங்கிய சாதிகளாக பட்டியல் இன சாதிகள் பட்டியலில் சேர்க்க ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பின்னர் ‘சமர்’ சாதியையும் மகாதலித் பிரிவில் சேர்க்க பரிந்துரைத்தது.
மேற்கோள்கள்
பீகார்
இந்தியாவில் இட ஒதுக்கீடு
|
592194
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D
|
மகாதலித்
|
மகாதலித் (Mahadalit) என்ற் சொல் 2007 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள பீகார் அரசாங்கத்தால் தலித்துகளுக்குள் உள்ள ஏழை சமூகக் குழுக்களுக்காக உருவாக்கப்பட்டது. இருப்பினும், "மகாதலித்" என்ற சொல் இந்திய அரசியலமைப்புச் சொற்களின் ஒரு பகுதியாக இல்லை.
கலவை
பீகாரில் நித்திசு குமார் தலைமையிலான தேசிய சனநாயக கூட்டணி அரசாங்கம் 2007 ஆம் ஆண்டு மாநில மகாதலித் ஆணையத்தை அமைத்தது. இது மிகவும் நலிவடைந்த சாதியினரை மகாதலித் பிரிவில் சேர்க்க பரிந்துரைத்தது. பீகாரில் மொத்தமுள்ள 22 பட்டியல் சாதியினரில் 21 சாதியினரை மகாதலித்துகளாக ஆணையம் அங்கீகரித்துள்ளது.
மக்கள்தொகை மற்றும் தொழில்
பீகார் மக்கள்தொகையில் தலித்துகள் 15 சதவீதத்திற்கு மேல் உள்ளனர், மகாதலித்துகள் மாநிலத்தின் மக்கள் தொகையில் சுமார் 10% உள்ளனர். மித்திலேசு குமாரின் கூற்றுப்படி, மகாதலித்துகளுக்கு மாநிலத்தில் சொந்தமாக நிலம் இல்லை மற்றும் யாதவர்களின் பண்ணைகளில் அவர்கள் பங்குதாரர்களாக வேலை செய்கிறார்கள்.
அரசியல்
2010 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டில், மகாதலித் வாக்காளர்களை கவருவதற்காக நித்திசு குமார் பல அரசு திட்டங்களைத் தொடங்கினார். "சில சாதியினரின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சியைப் பார்ப்பதே எனது நோக்கம், அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு சிறப்பு பிரச்சாரம் தேவை. என்றும் நித்திசு குமார் கூறினார். மகாதலித் என்பதற்கான தகுதி உள்ளவர்களுக்கு நிலமற்றவர்களுக்கு இலவச நிலம் உட்பட சில அரசாங்க நலத்திட்டங்களின் பலன்கள் கிடைக்கும்.
மேற்கோள்கள்
இந்தியாவில் இட ஒதுக்கீடு
பீகார் அரசியல்
தலித்தியல்
|
592214
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-1
|
ககன்யான்-1
|
ககன்யான் - 1 (Gaganyaan-1)ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா வெள்ளோட்ட விண்கலமாகும். இது 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னணி
இந்த ஏவுதல் முதலில் 2020, திசம்பரில் திட்டமிடப்பட்டது , பின்னர் 2021 திசம்பருக்கு மாற்றப்பட்டது. ஆனால் கோவிட் - 19 தொற்றுநோய் காரணமாக இது மேலும் தாமதமானது.
திட்டத்தின் நோக்கங்கள்
ககன்யான் விண்கலம் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து மனித மதிப்பிடப்பட்ட எல்விஎம் 3 மூலம் ஏவப்பட்டு 170 x 408 கிமீ வட்டணையில் நிலைநிறுத்தப்படும். வட்டணையின் வட்ட வடிவமாக்கல் மூன்றாவது சுற்றில் செய்யப்படும். தரையிறக்கம் TV - D1 போன்ற அதே பாணியைப் பின்பற்ற வேண்டும்
இந்த பயணத்திற்குப் பிறகு , மனித எந்திரியான வயோமித்ராவை சுமந்து செல்லும் ககன்யான் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு முன்பு இசுரோ மேலும் நான்கு இடைநிறுத்தச் செய்முறைகளை மேற்கொள்ளும்.
மேலும் காண்க=
ககன்யான்
மேற்கோள்கள்
நூல்தொகை
இந்திய விண்வெளித் திட்டங்கள்
விண்வெளித் திட்டங்கள்
|
592217
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
அசுதவான்
|
அசுதவான் (Asthawan) இந்தியாவின் பீகார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டத்தில் அமைந்துள்ள 20 தொகுதிகளில் ஒன்றாகும். நிர்வாகப் பதிவேட்டின்படி, அசுதவானின் தொகுதிக் குறியீடு 373 என குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாறு
2020 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் பீகார் அரசாங்கத்தால் அசுதவான் நகரப் பஞ்சாயத்தாக அங்கீகரிக்கப்பட்டது
மக்கள் தொகை
2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு மக்கள் தொகை சுமார் 14 ஆயிரம். ஆகும். தற்போது அசுதவான் நகரப் பஞ்சாயத்தில் மக்கள் தொகை 17 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. அசுதவான், அக்பர்பூர், சோய்வபர், சிறீசந்த்பூர், அமீர் பிகா, கஃபூர் பிகா, தார் பிகா மற்றும் நங்கூ பிகா கிராமங்கள் இந்த நகரப் பஞ்சாயத்தில் இடம்பெற்றுள்ளன.
மொழி
இந்தி மற்றும் உருது இங்கு பேசப்படும் மொழிகளாகும்.
கல்வி
பின்வரும் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இங்கு அமைந்துள்ளன
அரசு பல்தொழில்நுட்ப நிறுவனம்,, நாளந்தா
நாளந்தா தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனம்
மேற்கோள்கள்
நாளந்தா மாவட்டம்
பீகார்
|
592229
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
|
பாகல்புரி பட்டு
|
பாகல்புரி பட்டு (Bhagalpuri silk) என்பது பட்டுப் புடவைகளின் பாரம்பரிய பாணியாகும். இதை துசார் பட்டு என்ற பெயராலும் அழைப்பர்.
இந்த பாணி பாகல்புரி புடவை என்று பெயரிடப்பட்ட புடவைகள் செய்ய பயன்படுத்தப்படுகிறது. பாகல்பூர் இந்தியாவின் "பட்டு நகரம்" என்றும் அழைக்கப்படுகிறது. பாகல்புரி பட்டு அந்தெரியா பாபியா பட்டுப்புழுக்களின் கூடுகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. வான்யா பட்டுப்புழு என்றும் அழைக்கப்படும் இந்த இனம் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டதாகும். இந்த பட்டுப்புழுக்கள் காடுகளில் டெர்மினாலியா இனத்தைச் சேர்ந்த மரங்களில் வாழ்கின்றன. நாத்நகர் என்ற நகரம் பாகல்புரி பட்டு பதப்படுத்தப்படும் முக்கியமான இடமாகும். புடவையைத் தவிர, சால்வைகள், குர்திகள் மற்றும் பிற ஆடைகளும் பாகல்புரி பட்டில் இருந்து தயாரிக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
பீகாரின் பண்பாடு
இந்தியப் பண்பாடு
பாகல்பூர் மாவட்டம்
|
592231
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%20%28%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%29
|
திசைமாற்றம் (விண்கலம்)
|
ஒரு விண்கலத்தின் திசைவைப்பு என்பது ஒரு தளம் அல்லது புவி , சூரியன், அல்லது ஒரு வான்பொருள் அல்லது விண்வெளியில் உள்ள பிற புள்ளியில் இருந்துள்ள திசைநிலையைக் குறிக்கும். ஒரு விண்கலம் குறிப்பிட்ட அந்தத் திசைவைப்புக்கு மாறும்போது அது திசைமாறுகிறது என்பர்.
விண்வெளிப் பயணத்தின் போது , ஒரு விண்கலத்தின் நோக்கத்தைப் பொறுத்து சில காரணங்களுக்காக, அந்த விண்கலத்தின் திசைவைப்பைக் கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஒரு விண்கலத்தின் சரியான திசைவைப்பு புவியை நோக்கி இருத்தலை உறுதி செய்வது, அதன் உணர்சட்டத் தரவையும் கட்டளைகளையும் அனுப்புவதற்கும் பெறுவதற்கும் இன்றியமையாதது ஆகும். கூடுதலாக , பல விண்கலத் திசைவைப்பில் தங்கள் சூரியப் பலக அணிகளை சூரியனை நோக்கி உகந்த கோணத்தில் வைத்திருப்பது அவற்றின் ஆற்றல் உறிஞ்சுதலை மேம்படுத்தி, விண்கலம் அகமின் வழங்கல் அமைப்புகளினை நம்பி இருத்தலை குறைக்கிறது. ஒரு விண்கலத்தையும் அதன் துணை அமைப்புகளையும் வெப்பமாக்கல், குளிரூட்டல் நிகழ்வை கலத்தின் திசைவைப்பை மாற்றிக் கட்டுப்படுத்தலாம்.விண்கலத்தின் மீது ஓர் இருப்பில் பொருத்தப்பட்டிருக்கும் ஒளிப்பட, உணர்திறன் கருவிகளுக்குக் கலத்தின் திசைவைப்பை மாற்றுவது தேவைப்படும். விண்கலத்தின் சரியான திசைவைப்பைப் பேண, ஒரு விண்கலத்தை சுழற்சி முறையால் நிலைப்படுத்தலாம் அல்லது மூவச்சு முறையால் நிலைப்படுத்தலாம்.
சுழற்சி நிலைப்படுத்தப்பட்ட விண்கலத்திற்கு , அதன் சுழற்சி வீதத்தைச் சரிசெய்ய, அதன் சுழற்சிக்கு ஒத்த திசையில் அல்லது எதிர்திசையில் ஒரு உந்துபொறியை இயக்கி, விண்கலத்திற்கு ஒரு கணிசமான திருக்கத்தைத்( torque) தந்து திசைவைப்பு மாற்றப்படுகிறது. இது ஒரு முன்கூட்டிய திசைமாற்றத்திற்கு வழிவகுக்கிறது , எனவே இந்த வகையான விண்கலத்திற்கான திசை மாற்றங்கள் " முன்கூட்டிய திசைமாற்ற நடவடிக்கை " எனப்படுகின்றன.
மூவச்சு நிலைப்படுத்தப்பட்ட விண்கலத்தின் திசைமாற்றம் ஒரு மூடிய கண்ணிமுறையில் அமைகிறது. பொதுவாக உணரி அளவீடுகளின் அடிப்படையில் விண்கலத்தின் திசைவைப்பைப் பேணும் அல்லது மாற்றும் மூடிய கண்ணிக் கட்டுப்பாடு உந்துபொறிகளால் அல்லது மின்னியக்க எதிர்வினை சக்கரங்களால் நிகழ்த்தப்படுகிறது. பொதுவான ஒரு எடுத்துகாட்டக விண்வெளி தொலைநோக்கியைக் கூறலாம் , இது ஒரு புதிய வான்பொருளை நோக்கீடு செய்ய திசைதிருப்பப்பட வேண்டும். ஆனால் மூவச்சு நிலைப்படுத்தப்பட்ட விண்கலத்தின், இயல்பான திசைவைப்பு நிலையான முறையில் சரி செய்யப்படாத நிலையில், அது வேறொரு வழியில் மாற்றப்பட்டாலும் விண்கலம் ஒரு திசைமாற்றத்தைஆடையும். இந்தத் திசைமாற்றம், அடிப்படை திசைவைப்புக் கட்டுப்பாட்டு பயன்முறையில் உள்ள விகித்தத்தை விட வேறொரு விகிதத்தில் அமையும். இதற்கு நல்ல எடுத்துகாட்டு மாகெல்லன் வெள்ளி ஆய்கலனாகும். மாகெல்லன் ஆய்கலம் ஒவ்வொரு வட்டணைக்கும் ஒருமுறை வெள்ளி மேற்பரப்பின் அலகீட்டைக் குறுக்கிட்டு, ஒரு பெரிய திசைதிருப்பத்தை உருவாக்கி, அதன் உயர் ஈட்ட உணர்சட்டத்தின் தரவு பரிமாற்றந்தைப் புவிக்கு அனுப்பியது.
மேலும் காண்க
திசைவைப்புக் கட்டுபாடு(விண்கலம்)
பறப்பு இயங்கியல் (விண்கலம்)
எதிர்வினைக் கட்டுப்பாட்டு அமைப்பு
மேற்கோள்கள்
விண்வெளி தொழில்நுட்பம்
விண்கல இயக்கம்
|
592232
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
|
விண்கலத் திசைவைப்புக் கட்டுப்பாடு
|
விண்கலத் திசைவைப்புக் கட்டுப்பாடு (Spacecraft attitude control) என்பது ஒரு விண்கலத்தின் ( ஊர்தியின் அல்லது செயற்கைக்கோளின்) ஓர் உறழ்வுச் சட்டகத்த்தை அல்லது வான கோளம் அல்லது சில புலங்கள் அல்லது அண்மைப் பொருள் போன்ற ஓர் உறுப்படியைச் சார்ந்த திசைவைப்பைக் கட்டுப்படுத்தும் செயல்முறையாகும்.
ஊர்தியின் திசைவைப்பைக் கட்டுப்படுதலுக்கு, ஊர்தியின் திசைநிலையை அளவிடுவதற்கு உணரிகள் தேவைப்படுகின்றன; தேவப்படும் திசைவைப்புக்கு ஊர்தியைத் திருப்பும் திருக்கத்தை அளிக்கவல்ல செயற்படுத்திகள் தேவைப்படுகிறன. மேலும், தற்போதைய திசைநிலையின் உணரி அளவீடுகள், தேவைப்படும் திசைநிலையின் விவரம் ஆகியவற்றின் அடிப்படையில் செயற்படுத்திகளுக்கு கட்டளையிட கணினி வழிநிரல்கள் தேவைப்படுகின்றன. இந்தவகை உணரிகள்,செயற்படுத்திகள், வழிநிரல்கள் ஆகியவற்றைப் படிக்கும் ஒருங்கிணைந்த புலமே வழிகாட்டுதல், கலஞ்செலுத்தல், கட்டுப்பாட்டுப் புலம் எனப்படுகிறது.
மேலும் காண்க
நெடுக்குவாட்ட நிலையியல் நிலைப்பு
திசை நிலைப்பு
எதிர்வினைக் கட்டுப்பாட்டு அமைப்பு
திசைமாற்றம் (விண்கலம்)
மேற்கோள்கள்
இயங்கியல்
பொறியியல் வழிமுறை
வான், விண்வெளிப் பொறியியல்
திசைவைப்புக் கட்டுபாடு
|
592242
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF
|
பிந்திமேடு அருவி
|
பிந்திமேடு அருவி (Pindimedu Waterfalls) என்பது கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கோதமங்கலம் நகரத்திலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவில் குட்டம்புழா கிராம ஊராட்சியில் அமைந்துள்ள அருவியாகும். இது பூயம்குட்டி நகரத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. கேரளாவின் மிக உயரமான அருவி இதுவாகும். இது பெரியாற்றின் கிளை நதியான கரிந்திரி ஆற்றில் உள்ளது. 1981ஆம் ஆண்டில், கேரள மாநில மின்சார வாரியம் இடுக்கி அணைக்கு நிகரான 1000 மெகாவாட் திறன் கொண்ட நீர் மின் நிலையத்தை உருவாக்க ரூ.250 கோடி திட்டத்தை வடிவமைத்தது. பின்னர் முதல்வர் அ. கு. அந்தோணி 2001-ம் ஆண்டு புதிய வடிவமைப்பை 210 மெகாவாட்ற் திறனாக மாற்றியமைத்துத் திட்டத்தைத் செயல்படுத்த முயன்றார். ஆனால் சுற்றுச்சூழல் பொருளாதார பிரச்சனைகளால் இந்திய அரசுத் திட்டத்தைத் கைவிட்டது. இந்த அருவியில் திரைப்படமாக்கப்பட்ட மோகன்லால் நடித்த புலிமுருகன் படத்தின் மூலம் கேரளா முழுவதும் இந்த அணைப் புகழ் பெற்றது.
மேற்கோள்கள்
எர்ணாகுளம் மாவட்டம்
கேரள அருவிகள்
|
592243
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF
|
கேரளம்குண்டு அருவி
|
கேரளம்குண்டு அருவி கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தின் வடகிழக்கு எல்லையில் அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவிற்கு அருகில் கருவரக்குண்டில் கும்பன் மலையில் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது மலப்புரத்தில் உள்ள முக்கிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். 2016-ல் தேசிய சாகச சுற்றுலா வரைபடத்தில் இந்த அருவிச் சேர்க்கப்பட்டது.
கண்ணோட்டம்
மலப்புரம் மாவட்டத்தில் தேசிய சாகச சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்ற முதல் சுற்றுலா மையம் கேரளாம்குண்டு அருவி ஆகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 1350 அடி உயரத்தில் கும்பன்மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மலையின் பல்வேறு கிளை நதிகள் வழியாக ஓடும் நீரோடைகளின் சங்கமத்தால் இந்த நீர்வீழ்ச்சி உருவாகிறது. இங்கு நிலவும் தட்பவெப்பம் குளிர்ச்சியாகவும், அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் தாயகமாகவும் உள்ளது. மேலும் சிலரின் உயிரிழப்புக்கு வழிவகுத்துள்ளதால் அப்பகுதி ஆபத்தான பகுதியாகவும் கருதப்படுகிறது. நாட்முக்குப் பள்ளத்தாக்கு இங்கிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஆமணக்கு தோட்டங்களுடன் அமைந்துள்ளது. கருவரகுண்டு, பொழுதுபோக்கு பகுதிகள் இங்கிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது இளைஞர்களின் முக்கிய மையமாக உள்ளது. செரும்ப் சுற்றுச்சூழல் கிராமம் கேரளாம்குண்டு நீர்வீழ்ச்சிக்கு அருகில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
மலப்புறம் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள்
கேரள அருவிகள்
|
592244
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
சதுர்புச்சு இசுதான்
|
சதுர்புச்சு இசுதான் (Chaturbhuj Sthan) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூரில் அமைந்துள்ள ஒரு சிவப்பு விளக்கு மாவட்டமாகும். இப்பகுதி முகலாயர் காலத்திலிருந்தே இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் 3,500 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இப்பகுதி-கடந்த நூற்றாண்டின் பெரும்பகுதியில் பிரபலமடைந்தது. அல்லது இதன் குடியிருப்பாளர்கள் பெரும்பாலும் அதிகார வர்க்கத்தினரால் ஒதுக்கப்பட்டு வாழ்ந்தனர். அங்கு அமைந்துள்ள சதுர்புச்சு இசுதான் கோவிலில் இருந்து இப்பகுதிக்கு அப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சதுர்புச்சு இசுதான் பகுதியில் பாலியல் தடுப்பு நடவடிக்கைகளில் சிக்கல் உள்ளது. ஏனெனில் இப்பகுதி ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள பாதையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அங்கு பெண் பாலியல் தொழிலாளர்கள் முச்ரா நடனத்தை வாடிக்கையாளர்களுக்காக ஆடுகின்றனர்.
மேற்கோள்கள்
முசாபர்பூர் மாவட்டம்
பீகார்
பால்வினைத் தொழில்
|
592245
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF
|
கோழிப்பாறை அருவி
|
கக்கடம்பொழில் அருவி (Kozhippara Waterfalls) என்று அழைக்கப்படும் கோழிப்பாறை அருவி இந்தியாவின் கேரளாவில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அருவியாகும். இது மலப்புரம் மாவட்டத்தின் வடகிழக்கு எல்லையில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவிற்கு அருகில் கக்கடம்பொழிலில் அமைந்துள்ளது. எடவண்ணா வன எல்லைக்குள் வரும் இந்த அருவியினை கேரள வனத்துறையினர் கண்காணிப்பில் உள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மலப்புறம் மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள்
கேரள அருவிகள்
|
592246
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF
|
நஞ்சிருக்கி அருவி
|
நஞ்சிருக்கி அருவி (Njandirukky Waterfalls) இந்தியாவின் கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அருவி தொடுபுழாவிலிருந்து 19 கி.மீ. தொலைவில் பூமலைக்கு நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது. இடுக்கியில் உள்ள மூலமட்டம் மின் உற்பத்தி நிலையம் மற்றும் தொம்மன்குத்து அருவியைப் பார்வையிடும், சுற்றுலாப் பயணிகளால் இது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
மேற்கோள்கள்
இடுக்கி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள்
கேரள அருவிகள்
|
592250
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF
|
நிக்கோபார் பச்சைப்பல்லி
|
புரோன்கோசெலா சையனோபாபெப்ரா (Bronchocela cyanopalpebra) என்பது பல்லியின் ஒரு வகை. இது நிக்கோபார் தீவுகளில் இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. மரங்களில் வாழக்கூடிய இந்த பல்லி பகல் நேர இரைதேடும் பழக்கமுடையன. இவை பசுமையான காடுகள் மற்றும் தோட்டங்களில் காணப்படும் மிகவும் பொதுவான சிற்றினமாகும்.
சொற்பிறப்பியல்
இந்த சிற்றினத்தின் பெயரான சயனோபாபெப்ரா என்ற குறிப்பிட்ட அடைமொழியானது பிரகாசமான நீல (=சியான்) நிற கண் இமை (=பால்பெப்ரா), இந்த சிற்றினத்தினை அடையாளம் காணும் பெயர்ச்சொல் ஆகும்.
மேற்கோள்கள்
இந்திய ஊர்வன
நிக்கோபர் அகணிய உயிரிகள்
|
592256
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF
|
டேவிட் பிங்கிரி
|
டேவிட் எட்வின் பிங்கிரி (David Edwin Pingree (பிறப்பு:2 சனவரி 1933-இறப்பு:11 நவம்பர் 2005), பண்டைய உலகின் கணிதவியல் வரலாற்று அறிஞர் ஆவார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் பிரௌன் பல்கலைழக்க்கழகத்தில் பண்டைய உலகின் கணிதவியல் மற்றும் வானியல் வரலாற்றுப் பேரராசிரியாக பணியாற்றியவர்.
பண்டைய கிரேக்க வானியல் நூலின் சமசுகிருத வடிவமான யவன ஜாதகம் எனும் சோதிட நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததற்கு மிகவும் அறியப்பட்டவர்
வாழ்க்கை
1960ம் ஆண்டில் டேவிட் பிங்கிரி, ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் எலனியக் கால கிரேக்க சோதிடம் இந்தியாவில் அறிமுகப்பட்டது என்ற ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் கீழை நாடுகளின் படிப்பிற்காக சிக்காகோ பல்கலைக்கழகத்தில் இணை ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். டேவிட் எட்வின் பிங்கிரி 1971ல் பிரௌன் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் வரலாற்றுப் பேரராசிரியாக இறக்கும் வரை பணியில் இருந்தார்.
எழுதிய குறிப்பிடத்தக்க நூல்கள்
1970: Census of the Exact Sciences in Sanskrit
1976: Dorothei Sidonii carmen astrologicum
1978: The Yavanajātaka of Sphujidhvaja (2 volumes)
1986:Vettii Valentis Antiocheni Anthologiarum Libri Novem (Teubner, Leipzig).
1997: (edited with Charles Burnett) The Liber Aristotilis of Hugo of Santalla, Warburg Institute Surveys and Texts 26, London
2002: (with Takanori Kusuba) Arabic Astronomy in Sanskrit: Al-Birjandī on Tadhkira II, Chapter 11 and its Sanskrit Translation, Brill, Leiden
2005: (with Erica Reiner) Babylonian Planetary Omens, Brill, Leiden
மேற்கோள்கள்
வெள் இணைப்புகள்
Memorial by Kim Plofker and Bernard R. Goldstein in Aestimatio (http://www.ircps.org/aestimatio/2/70-71)
Memorial by Toke Lindegaard Knudsen in the Bulletin of the Canadian Society for History and Philosophy of Mathematics https://web.archive.org/web/20070927032441/http://faculty.umf.maine.edu/~molinsky/cshpm/Bulletin/38-2006.pdf (pp. 5–6)
Death notice in the Brown Daily Herald https://web.archive.org/web/20070929104430/http://www.browndailyherald.com/home/index.cfm?event=displayArticle&uStory_id=47d666ba-15db-402b-bd71-a539c61b03c5
"An Indiana Jones of Mathematics" in the George Street Journal https://web.archive.org/web/20080516054525/http://www.brown.edu/Administration/George_Street_Journal/Pingree.html
A collection of PDFs of some texts used by Dr. Pingree and his students, including a copy of a Heiberg edition of the Almagest used by Dr. Pingree himself: http://www.wilbourhall.org
1933 பிறப்புகள்
2005 இறப்புகள்
அமெரிக்க அறிவியல் எழுத்தாளர்கள்
|
592257
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE
|
நோக்சா
|
நோக்சா (Nohsa) என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் உள்ள புல்வாரி செரீப்பில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம் மற்றும் கிராம பஞ்சாயத்து ஆகும். இது பாட்னா நகர்ப்புற ஒருங்கிணைப்பின் ஒரு பகுதியாகும். புல்வாரி சட்டமன்றத் தொகுதி மற்றும் பாட்லிபுத்ரா நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் இந்நகரம் வருகிறது.
புல்வாரி செரீப்பு வட்டாரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. பாட்னாவிலிருந்து சுமார் 10 கிமீ தூரத்திலும் மற்றும் பாட்னா அனைத்திந்திய மருத்துவக் கல்வி நிறுவனத்திலிருந்து சுமார் 2 கிமீ தொலைவிலும் உள்ளது.
போக்குவரத்து
புல்வாரி செரீப்பு தொடருந்து நிலையம் மற்றும் தானாபூர் ரயில் நிலையம் ஆகியவை இந்நகருக்கு அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள் ஆகும். அவுரா-தில்லி முக்கியப் பாதையின் மூலம் இந்தியாவின் பல பெருநகரங்களை இந்நகரம் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 139 வழியாகவும் இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அருகிலுள்ள விமான நிலையமான செய் பிரகாசு நாராயண் விமான நிலையம் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
Coordinates on Wikidata
பீகார்
பட்னா மாவட்டம்
|
592262
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%20%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
|
யவன ஜாதகம்
|
யவன ஜாதகம் பண்டைய கிரேக்க வானியலைப் பின்பற்றி எலனியக் காலத்தில் பண்டைய எகிப்தின் அலெக்சாந்திரியா நகரத்தில் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட சோதிடம் மற்றும் வானியல் நூல் ஆகும். இதனை ஸ்புஜித்வாஜா என்பவர் சமசுகிருதத்தில் மொழிபெயர்த்தார். இதன் அசல் நூல் தொலைந்து போனதால், இந்தியாவை ஆண்ட மேற்கு சத்திரபதி மன்னர் முதலாம் ருத்திரதாமன் (ஆட்சிக் காலம்:130–150) காலத்தில் ஸ்பூஜித்வாஜா என்பவர் பண்டைய கிரேக்க வானியல் மற்றும் சோதிட நூலை யவன ஜாதகம் எனும் பெயரில் சமகிருத்தத்தில் மொழிபெயர்த்தார். இதனை தற்காலத்தில் டேவிட் பிங்கிரி என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இது 1978ம் ஆண்டு ஹார்வர்ட் ஓரியண்டல் தொடரின் தொகுதி 48 ஆக வெளியிடப்பட்டது.
யவனஜாதகம் என்பது மேற்கத்திய ஜாதகத்தைக் குறிப்பிடும் ஆரம்பகால சமஸ்கிருதப் படைப்புகளில் ஒன்றாகும். [4] இதைத் தொடர்ந்து மேற்குலகின் பிற படைப்புகளான ரோமகா சித்தாந்தம் ("ரோமானியர்களின் கோட்பாடு") இந்திய ஜோதிடத்தை பெரிதும் பாதித்தன.
இருப்பினும் சில இந்திய ஆசிரியர்கள் ஜாதகம் பற்றிய ஆரம்பகால சமஸ்கிருதப் படைப்பான வேதாங்கத்தின் ஒரு பிரிவாக சோதிடம் இருந்தது.
யவனஜாதகத்தில் ஒருவர் பிறந்த நேரம் மற்றும் இடம் ஆகியவற்றிலிருந்து ஜோதிட விளக்கப்படங்களை (ஜாதகங்கள்) கணக்கிடுவதற்கான வழிமுறைகள் உள்ளது. எலனிய கிரேக்க உலகில் ஹெலனிஸ்டிக் உலகில், குறிப்பாக அலெக்சாந்திரியாவில் ஜோதிடம் செழித்தது மற்றும் யவன ஜாதகம் கிரேக்க மொழி பேசும் உலகில் உருவாக்கப்பட்ட ஜோதிட நுட்பங்களைப் பிரதிபலிக்கிறது. ஜோதிட சேவையில் 'ஹோரோஸ்கோபோஸ்' (கிழக்கு அடிவானத்தில் உள்ள இராசி அடையாளம்) கணக்கீடு போன்ற வானியல் கணித முறைகள் பயன்படுத்தப்பட்டன.
இதனையும் காண்க
இந்தோ கிரேக்க நாடு
டேவிட் பிங்கிரி
உசாத்துணை
மேற்கோள்கள்
Thomas McEvilley (2002) The Shape of Ancient Thought, Allworth Press,
David Pingree (1981) "Jyotiḥśāstra", Jan Gonda (ed) A History of Indian Literature, Vol, VI Fasc. 4, Otto Harrassowitz — Wiesbaden
K. V. Sarma (1997), "Sphujidhvaja", Encyclopaedia of the History of Science, Technology, and Medicine in Non-Western Cultures edited by Helaine Selin, Springer,
Bill M. Mak (2014) The ‘Oldest Indo-Greek Text in Sanskrit’ Revisited: Additional Readings from the Newly Discovered Manuscript of the Yavanajātaka, Journal of Indian and Buddhist Studies 62(3): 1101-1105
Bill M. Mak (2013) The Last Chapter of Sphujidhvaja's Yavanajātaka critically edited with notes, SCIAMVS 14, pp. 59-148
Bill M. Mak (2013) The Date and Nature of Sphujidhvaja’s Yavanajātaka reconsidered in the light of some newly discovered materials, History of Science in South Asia 1: pp. 1-20
பண்டைய நூல்கள்
கிரேக்க நூல்கள்
சோதிட நூல்கள்
இந்திய இலக்கியம்
|
592266
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
|
சிவாஜிநகரா சட்டமன்றத் தொகுதி
|
சிவாஜிநகரா சட்டமன்றத் தொகுதி (Shivajinagar Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெங்களூரு நகர மாவட்டத்தில் உள்ளது. பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 162 ஆகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
குறிப்பு
மேற்கோள்கள்
கர்நாடக சட்டமன்றத் தொகுதிகள்
பெங்களூர் நகர மாவட்டம்
|
592269
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
|
எதிர்வினைக் கட்டுப்பாட்டு அமைப்பு
|
எதிர்வினை கட்டுப்பாட்டு அமைப்பு (reaction control system) (RCS) என்பது திசைவைப்புக் கட்டுப்பாட்டையும் நேரியக்கத்தையும் வழங்க உந்துபொறிகளைப் பயன்படுத்தும் ஒரு விண்கல அமைப்பு ஆகும். மாற்றாக , எதிர்வினை சக்கரங்களும் திசைவைப்புக் கட்டுப்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆரியர் குதிப்புத் தாரைக்கலம் போன்ற வழக்கமான இறக்கைகள் கொண்ட விமான வேகத்திற்கு கீழே ஒரு குறுகிய அல்லது செங்குத்துப் புறப்பாட்டுக்கும் தரையிறங்கலுகும் விமானத்தின் நிலைப்புறு திசைவைப்பைக் கட்டுப்படுத்த திசை திருப்பப்பட்ட பொறி உந்துதலைப் பயன்படுத்துவதும் எதிர்வினை கட்டுப்பாட்டு அமைப்பு எனக் குறிப்பிடப்படலாம்.
எதிர்வினை கட்டுப்பாட்டு அமைப்புகள் தேவைப்படும் எந்த திசையிலும் அல்லது திசைகளின் சேர்மானத்திலும் சிறிய அளவிலான உந்துதலை வழங்கும் திறன் கொண்டவை. ஓர் எதிர்வினை கட்டுப்பாட்டு அமைப்பு சுழற்சியைக் கட்டுப்படுத்த திருக்கத்தை வழங்கும் திறன் கொண்டது.
எதிர்வினை கட்டுப்பாட்டு அமைப்புகள் பெரும்பாலும் வெவ்வேறு அளவிலான துலங்கல்களை அனுமதிக்க பெரிய மற்றும் சிறிய (வெர்னியர் உந்துபொறிகளின்) கூட்டமைப்புகளைப் பயன்படுத்துகின்றன.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
NASA.gov
Space Shuttle RCS
விண்வெளித் தொழில்நுட்பம்
விண்வெளி
விண்கலம்
|
592276
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
|
ஆனந்த மோகன் சக்ரபர்த்தி
|
ஆனந்த மோகன் சக்ரபர்த்தி (Ananda Mohan Chakrabarty)()(4 ஏப்ரல் 1938 - 10 சூலை 2020) என்பவர் இந்திய அமெரிக்க நுண்ணுயிரியலாளர், அறிவியலாளர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் இயக்கிய பரிணாம வளர்ச்சி மற்றும் ஜெனரல் எல்க்ட்ரிக்கில் பணிபுரியும் போது கணிமி பரிமாற்றத்தைப் பயன்படுத்தி மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட உயிரினத்தை வளர்ப்பதில் இவரது பங்கிற்காக மிகவும் குறிப்பிடத்தக்கவர். இதற்கான காப்புரிமைக்காக டயமண்ட் v. சக்கரபர்தி என்ற முக்கிய உச்ச நீதிமன்ற வழக்குக்கு வழிவகுத்தது, .
ஆரம்ப கால வாழ்க்கை
ஆனந்த் (பொதுவாக அறிவியலாளர்கள் "அல்" என்று அழைக்கின்றனர்) சக்ரபர்த்தி 4 ஏப்ரல் 1938-ல் சைந்தியாவில் பிறந்தார். இவர் தனது இளங்கலைக் கல்வியின் போது சைந்தியா உயர்நிலைப் பள்ளி, இராமகிருஷ்ணா ம்டத்தின் வித்யாமந்திர் மற்றும் கல்கத்தா தூய சவேரியார் கல்லூரியில் பயின்றார். சக்ரபர்த்தி தனது முனைவர் பட்டத்தினை 1965-ல் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆய்வின் மூலம் பெற்றார்.
அறிவியல் பணி
பேராசிரியர் சக்கரபர்த்தி 1971ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள ஷெனெக்டாடியில் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் பணிபுரியும் போது, ஒரு புதிய வகை சூடோமோனாசு பாக்டீரியாவை (" எண்ணெய் உண்ணும் பாக்டீரியா") உருவாக்கினார்.
இக்காலத்தில் நான்கு வகையான எண்ணெய்-வளர்சிதை மாற்றப் பாக்டீரியாக்கள் இருப்பதாக அறியப்பட்டது. ஆனால் இவற்றை எண்ணெய் கசிவுக்குள் அறிமுகப்படும்போது, இவை ஒன்றுக்கொன்று போட்டியிட்டு, இவை சிதைக்கும் கச்சா எண்ணெய்யின் அளவைக் கட்டுப்படுத்தின. எண்ணெய்யைச் சிதைப்பதற்குத் தேவையான மரபணுக்கள் கணிமியில் இருப்பதும் இவை பாக்டீரியாக்கள் மத்தியில் மாற்றப்படலாம். கணிமி பரிமாற்றத்திற்குப் பிறகு புற ஊதாக் கதிர் ஒளியுடன் மாற்றப்பட்ட உயிரினத்தைக் கதிர்வீச்சு செய்வதன் மூலம், சக்கரபர்த்தி எண்ணெய்யினை உண்ணும் நான்கு பாக்டீரிய கணிமியின் மரபணுக்களையும் நிலைநிறுத்தி, புதிய, நிலையான, பாக்டீரியா இனத்தை (இப்போது சூடோமோனாஸ் புடிடா என்று அழைக்கிறார்கள்) மரபணு குறுக்கு இணைப்பிற்கான ஒரு முறையின் மூலம் இதனைச் சக்ரபார்த்தி தோற்றுவித்தார். இது முந்தைய நான்கு எண்ணெய் உண்ணும் பாக்டீரியாக்களை விட ஒன்று அல்லது இரண்டு மடங்கு வேகத்தில் எண்ணெய்யை உட்கொள்ளும் திறன் கொண்டது. சக்ரபார்த்தி உருவாக்கிய இந்த "பல கணிமி நீரகக்கரிமம்-சிதைவு சூடோமோனாசு " நுண்ணுயிர், வழக்கமான எண்ணெய் கசிவில் காணப்படும் கைட்ரோகார்பன்களில் மூன்றில் இரண்டு பங்கினை உண்ண முடியும்.
சக்ரபர்த்தி காப்புரிமைக்கு விண்ணப்பித்தபோது இந்தப் பாக்டீரியா சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இது மரபணு மாற்றப்பட்ட உயிரினத்திற்கான முதல் அமெரிக்கக் காப்புரிமை ஆகும். (லூயிசு பாஸ்டரால் காப்புரிமை பெற்ற இரண்டு தூய பாக்டீரிய வளர்ப்பு உட்பட, முன்னர் வாழும் உயிரினங்களுக்கு அமெரிக்கப் பயன்பாட்டுக் காப்புரிமைகள் வழங்கப்பட்டன. சக்ரபர்த்தியின் மரபணு மாற்றியமைக்கப்பட்ட பாக்டீரியத்திற்கு அமெரிக்கக் காப்புரிமை வருவதற்கு முன்பு இங்கிலாந்தில் காப்புரிமை வழங்கப்பட்டது). இவரது காப்புரிமை விண்ணப்பம் காப்புரிமை அலுவலகத்தால் ஏற்றுக்கொள்ள மறுக்கப்பட்டது. ஏனெனில் காப்புரிமை குறியீடு உயிரினங்களின் காப்புரிமைகளைத் தடுக்கும் என்று கருதப்பட்டது. ஐக்கிய நாடுகளின் சுங்கம் மற்றும் காப்புரிமை நீதிமன்றத்தில் சக்கரபர்த்தியின் மேல்முறையீட்டிற்கு ஆதரவான முடிவு கிடைத்தது. இதில்:
சிட்னி ஏ. டயமண்ட், காப்புரிமைகள் மற்றும் வர்த்தக முத்திரைகள் ஆணையர், பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்ற வழக்கு 17 மார்ச் 1980-ல் வாதிடப்பட்டு 16 சூன் 1980 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த காப்புரிமை அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது (டயமண்ட் எதிர் சக்ரபர்த்தி), 5-4 முடிவில், இது தீர்மானித்தபோது:
பேராசிரியர் சக்ரபர்த்தியின் முக்கிய ஆராய்ச்சியானது மரபணு மாற்றப்பட்ட நுண்ணுயிரிகள் மற்றும் பிற உயிர் வடிவங்கள் மீதான பல காப்புரிமைகளுக்கு வழி வகுத்தது, மேலும் இவரைச் சர்வதேச கவனத்திற்குக் கொண்டு வந்தது.
இறுதி பணி
புற்றுநோய் பின்னடைவில் பாக்டீரியா குப்ரெடாநச்சு மற்றும் சைட்டோக்ரோம்களின் பங்கைத் தெளிவுபடுத்துவது மற்றும் கல வட்டம் முன்னேற்றத்தைத் தடுப்பதில் இவரது ஆய்வகம் ஆய்வு செய்தது. புரதங்கள் முன்பு பாக்டீரியா எலக்ட்ரான் போக்குவரத்தில் ஈடுபடுவதாக அறியப்பட்டது. பாக்டீரியா புரதம், அசுரின், சாத்தியமான வேதிச்சிகிச்சை பண்புகளைத் தனிமைப்படுத்தினார். நெய்சீரியா, பிளாஸ்மோடியா மற்றும் அசிடிதியோபாகிலசு பெரோஆக்சிடன்சு உள்ளிட்ட பல நுண்ணுயிரியல் இனங்களை உள்ளடக்குவதற்காக இவர் தனது ஆய்வகத்தின் பணியை விரிவுபடுத்தினார். 2001-ல், பேராசிரியர். சிகாகோவில் உள்ள இல்லினாய்சு பல்கலைக்கழகத்தில் தனது பணியால் உருவாக்கப்பட்ட ஐந்து காப்புரிமைகள் தொடர்பான தனியுரிமை தகவல்களை வைத்திருக்கும் சிடிஜி தெரபியூட்டிக்ஸ் (டெலாவேரில் இணைக்கப்பட்டது) என்ற நிறுவனத்தை சக்ரபார்த்தி நிறுவினார். காப்புரிமைகளுக்கான உரிமைகளை இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் கொண்டுள்ளது. ஆனால் சிடிஜி சிகிச்சைக்கான பிரத்தியேக உரிமங்களை வழங்கியுள்ளது.
2008-ல், பேராசிரியர் சக்ரபர்த்தி, குசராத்தின் அகமதாபாத்தில் பதிவுசெய்யப்பட்ட இரண்டாவது உயிரி மருந்து கண்டுபிடிப்பு நிறுவனமான அமிர்தா தெரப்யூட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தை இணைந்து நிறுவினார். இது புற்றுநோய்கள் மற்றும்/அல்லது மனித உடலில் காணப்படும் பாக்டீரியா தயாரிப்புகளிலிருந்து பெறப்பட்ட பிற முக்கிய பொதுச் சுகாதார அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் பயனுள்ள சிகிச்சைகள், தடுப்பூசிகள் மற்றும் நோயறிதல்களை உருவாக்குகிறது. அம்ரிதா தெரபியூட்டிக்ஸ் லிமிடெட் 2008ஆம் ஆண்டின் பிற்பகுதியில் குசராத்து வென்ச்சர் நிதி நிறுவனத்திடமிருந்து ஆரம்ப நிதியுதவியைப் பெற்றது. பின்னர் 2010ஆம் ஆண்டில் உயிர்த்தொழில்நுட்ப தொழிலக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்திய அரசின் உயிர்த்தொழில்நுட்ப துறையிலிருந்து இரண்டு ஆண்டு ஆராய்ச்சி திட்டத்திற்கான மானியத்தைப் பெற்றது.
கல்வி வாழ்க்கை
சக்ரபர்த்தி சிகாகோ மருத்துவக் கல்லூரியில் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் மற்றும் நோயெதிர்ப்புத் துறையில் புகழ்பெற்ற பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்தார். ஆனந்த சக்ரபர்த்தி நீதிபதிகள், அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் ஆலோசகராக இருந்துள்ளார். மரபணு பொறியியல் மற்றும் உயிர்தொழில்நுட்பவியல் பன்னாட்டு மையத்தை நிறுவ முன்மொழிந்த ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு நிறுவனக் குழுவின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக, இவர் அதன் அறிவியல் ஆலோசகர்கள் குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் தேசிய நலக் கழக ஆய்வுப் பிரிவுகளின் உறுப்பினராகவும், தேசிய அறிவியல் கழகத்தின் உயிரியல் வாரியத்தின் உறுப்பினராகவும், தேசிய ஆராய்ச்சி குழுவின் உயிர்த்தொழில்நுட்பவியல் குழுவின் உறுப்பினராகவும் அமெரிக்க அரசாங்கத்திற்காகப் பணியாற்றியுள்ளார்.
சுவீடனின் ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். மிச்சிகன் உயிர்த்தொழில்நுட்ப்பவியல் நிறுவனம், மொன்டானா மாநிலப் பல்கலைக்கழகம், உயிர்ப்படலப் பொறியியல் மையம், மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழக நுண்ணுயிர் சூழலியல் மையம் மற்றும் கனடாவில் உள்ள ஆல்பர்ட்டாவின் கால்கேரியில் உள்ள கனேடிய பாக்டீரியல் நோய்கள் கூட்டமைப்பு போன்ற பல கல்வி நிறுவனங்களின் அறிவியல் ஆலோசனைக் குழுவில் இவர் பணியாற்றியுள்ளார்..சக்ரபர்த்தி பெல்ஜியத்தின் பிரசெல்சில் உள்ள வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பின் தொழில்துறை ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஐன்ஸ்டீன் அறிவியல் நிறுவனம், சுகாதாரம் மற்றும் நீதிமன்றங்களின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். இங்கு இவர் நீதித்துறை கல்வியில் பங்கேற்றார்.
விருது
மரபணு பொறியியல் தொழினுட்பத்தில் இவர் ஆற்றிய பணிக்காக, 2007-ல் இந்திய அரசால் இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
இந்திய அறிஞர்கள்
பத்மசிறீ விருது பெற்ற அறிவியலாளர்கள்
மேற்கு வங்காள அறிவியலாளர்கள்
இந்திய நுண்ணுயிரியலாளர்கள்
வங்காள அறிவியலாளர்கள்
2020 இறப்புகள்
1938 பிறப்புகள்
|
592280
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
|
சுபோத்து ராய்
|
சுபோத்து ராய் (Subodh Roy) இந்தியாவைச் சேர்ந்த புரட்சிகர சமதர்மவாதியாவார். 1915 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். சூங்குராய் என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். இந்திய சுதந்திர இயக்கத்தில் செல்வாக்கு பெற்றவராகவும் ஓர் அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். .
வாழ்க்கைக் குறிப்பு
சுபோத்து ராய் 1915 ஆம் ஆண்டு பிரிக்கப்படாத வங்காளத்தில் உள்ள சிட்டகாங்கில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார். 14 வயதில், புரட்சித் தலைவர் சூர்யா சென் (மாசுடர்டா) தலைமையில் 1930-31 ஆம் ஆண்டில் சிட்டகாங் ஆயுதக் களஞ்சியத் தாக்குதலில் பங்கேற்ற இளையவர் என்ற சிற்ப்புக்குரியவராகவும். தண்டனை விதிக்கப்பட்ட முதல் தொகுதியில் இடம்பெற்றவராகவும் சுபோத்து ராய் இருந்தார்.
விசாரணைக்குப் பிறகு, சுபோத்து ராய் 1934 ஆம் ஆண்டு போர்ட் பிளேயரில் உள்ள செல்லுலார் சிறைக்கு நாடு கடத்தப்பட்டார்
1940 ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலையான பிறகு, அவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சி அரசியலில் சேர்ந்தார். இந்திய பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினராகவும் சேர்ந்தார். சுதந்திரத்திற்குப் பிறகு, இவர் கல்கத்தாவுக்கு மாறினார். கட்சியின் மாகாண மையத்தில் முழுநேர ஊழியராக சேர்ந்தார். 1964 ஆம் ஆண்டில் இந்திய பொதுவுடமைக் கட்சி பிளவுபட்ட பிறகு, சுபோத்து ராய் இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சியம்) கட்சியுடன் இணைந்தார். இக்கட்சியின் மேற்கு வங்க மாநிலக் குழுவில் நீண்டகாலமாக உறுப்பினராக இருந்தார்.
சுபோத் ராய் பொதுவுடமை கட்சி இயக்கத்தின் வரலாற்றில் ஒரு பெரிய அறிவார்ந்த பங்களிப்பைச் செய்தார். தேசிய ஆவணக் காப்பகத்தில் ஆராய்ச்சிக்குப் பிறகு, "இந்தியாவில் கம்யூனிசம்: வெளியிடப்படாத ஆவணங்கள்" என்ற புத்தகத்தைத் திருத்தினார்.
தெல்சாத்து இல்வாடே இளம் வயது சுபோத்து ராய் (சூங்கு) வேடத்தில் நடித்தார். அதே சமயம் விஜய் வர்மா பெதபிரதா பெயின் திரைப்படமான சிட்டகாங்கில் இவரது வயதானவர் வேடத்தில் நடித்தார்.
2006 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 26 ஆம் தேதியன்று சுபோத் ராய் காலமானார்.
மேற்கோள்கள்
2006 இறப்புகள்
1915 பிறப்புகள்
இந்தியப் புரட்சியாளர்கள்
|
592281
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE
|
யஷ்வர்தன் குமார் சின்ஹா
|
யஷ்வர்தன் குமார் சின்ஹா (Yashvardhan Kumar Sinha) (அக்டோபர் 4, 1958 ) இந்திய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த ஒரு இந்தியத் தூதர் ஆவார். இவர் ஐக்கிய இராச்சியத்திற்கான முன்னாள் இந்திய உயர் ஆணையராக இருந்தார். ஜனவரி 1, 2019 அன்று மத்திய தகவல் ஆணையராக பதவியேற்றார். மேலும், 3 அக்டோபர் 2023 வரை பணியாற்றினார்.
சொந்த வாழ்க்கை
யஷ்வர்தன் குமார் சின்ஹா பீகாரைச் சேர்ந்தவர். பாட்னாவின் காயஸ்தர் குடும்பத்தில் பிறந்த இவர், சேஷாமிலும், பாட்னாவிலுள்ள புனித மைக்கேல் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். தில்லியில் உள்ள புனித இசுடீபன் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலை பட்டமும், தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். கெய்ரோவில் உள்ள அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் அரபியில் மேம்பட்ட சான்றிதழ் பட்டமும் பெற்றுள்ளார். இவர் கிரிஜா என்பவரை மணந்தார், இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பரம் விசிட்ட சேவா பதக்கம் பெற்றவரும் இந்திய இராணுவத்தின் முன்னாள் துணைத் தளபதியும், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் அசாமின் முன்னாள் ஆளுநராகவும் நேபாளத்திற்கான முன்னாள் இந்திய தூதராக இருந்த ஸ்ரீனிவாஸ் குமார் சின்ஹா என்பவரின் மகனாவார்.
தொழில்
இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியாக பணியில் சேர்ந்து பணியாற்றினார். பின்னர், 1 ஜனவரி 2019 அன்று மத்திய தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். பின்னர் 7 நவம்பர் 2020 அன்று இந்தியாவின் தலைமை தகவல் ஆணையராக பதவியேற்றார். மேலும், அக்டோபர் 3, 2023 வரை அங்கு பணியாற்றினார்
சான்றுகள்
வாழும் நபர்கள்
1958 பிறப்புகள்
இந்தியத் தூதர்கள்
|
592282
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE
|
இயோகேந்திர சர்மா
|
இயோகேந்திர சர்மா (Yogendra Sharma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவர். 1915 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 20 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான இராச்யசபாவில் பீகாரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையில் பேகூசராய் மக்களவைத் தொகுதியையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்திய பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினராகவும் அகில இந்திய கிசான் சபையின் தலைவராகவும் கிசான் இயக்கத்தை வழிநடத்தினார். 1962 ஆம் ஆண்டு முதல் நிலச் சீர்திருத்தங்களுக்கான கிசான் இயக்கங்கள், பஞ்ச நிவாரணப் பணிகள், பதுக்கல் எதிர்ப்பு பிரச்சாரங்கள் மற்றும் விலைவாசி உயர்வு மற்றும் வரிச்சுமைக்கு எதிரான சத்தியாகிரகம் ஆகிய -சமூக நடவடிக்கைகளில் பங்கேற்றார். 1990 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் தேதியன்று இயோகேந்திர சர்மா காலமானார்.
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Official biographical sketch on the Parliament of India website
1915 பிறப்புகள்
1990 இறப்புகள்
பீகார் அரசியல்வாதிகள்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள்
|
592283
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D
|
சஞ்சய் குமார் சிங்
|
சஞ்சய் குமார் சிங் (Sanjay Kumar Singh (CPI politician)) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பீகாரைச் சேர்ந்த இந்திய பொதுவுடமைக் கட்சியின் தலைவரும் ஆவார். ஆசிரியர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பீகார் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
சஞ்சய் குமார் சிங் 40 ஆண்டுகளுக்கும் மேலாக உளவியல் பேராசிரியராக பணியாற்றினார். முதன் முதலில் 2014 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 2020 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992 ஆம் ஆண்டு முதல் பீகார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் 2006 ஆம் ஆண்டு முதல் பீகார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இயங்கினார். அனைத்து இந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் தேசிய செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். மாணவப் பருவத்திலிருந்தே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்த இவர், பீகார் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தலைவராகப் பணியாற்றினார். பீகார் பல்கலைக்கழகத்தின் ஆலோசனைக்குழு மற்றும் அதிகாரிகளின் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் இருந்தார்.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
பீகார் அரசியல்வாதிகள்
பொதுவுடமைவாதிகள்
|
592284
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE
|
சிறீகாந்து நிராலா
|
சிறீகாந்து நிராலா (Srikant Nirala) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.
1990 முதல் 1995, 1995-2000, மற்றும் 2005-2010 வரை பீகார் சட்டமன்ற உறுப்பினராக இராசுட்ரிய சனதா தளம் கட்சியின் உறுப்பினராக மேனர் (சட்டமன்ற தொகுதி) தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறீகாந்து நிராலா 2010 ஆம் ஆண்டில் இராசுட்ரிய சனதா தளம் கட்சியிலிருந்து விலகி ஐக்கிய சனதாதளம் கட்சியில் சேர்ந்தார். இவரது தந்தை ராம் நகினா சிங் பீகார் சட்டமன்ற உறுப்பினராகவும், பீகாரின் முன்னாள் அமைச்சராகவும் மூன்று முறை இந்தத் தொகுதியில் பணியாற்றியுள்ளார். மேலும் இவரது தாயார் ராஜ்மதி தேவியும் பீகார் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை இந்தத் தொகுதியில் பணியாற்றினார். 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய சனதா தள்ம் கட்சியில் இருந்து விலகி பாரதிய சனதா கட்சியில் சிறீகாந்து சேர்ந்தார். தற்போது இவர் ஒரு சுயேட்ச்சை வேட்பாளராக உள்ளார்.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
பீகார் அரசியல்வாதிகள்
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
|
592296
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE
|
ஜெய வர்மா சின்கா
|
ஜெய வர்மா சின்கா (Jaya Varma Sinha) நியமனத்திற்கான அமைச்சரவைக் குழுவின் பரிந்துரையின்படி, 1 செப்டம்பர் 2023 முதல் இந்திய இரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலராக பணியேற்றார்.
வரலாற்றில் இவரே இந்திய இரயில்வே வாரியத்தின் முதல் தலைவர் ஆவார்.
கல்வி & பணி
அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஜெய வர்மா சின்கா, 1988ல் இந்திய இரயில்வேயின் போக்குவரத்துச் சேவையில் (Indian Railway Traffic Service) அதிகாரியாகச் சேர்ந்தார்.
இந்தியாவின் கொல்கத்தா நகரத்தையும், வங்காளதேசத்தின் டாக்கா நகரத்தையும் இணைக்கும் 375 கிலோ மீட்டர் நீள மைத்திரீ விரைவுவண்டிக்கான திட்டத்தை நிறைவேற்றியதில் ஜெய வர்மா சின்கா முக்கியப் பங்கு வகித்தார்.
பிப்ரவரி 2022ல் ஜெய வர்மா சின்கா இரயில்வே வாரியத்தின் (செயல்பாடுகள் & வணிக மேம்பாடு) உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் கூடுதல் உறுப்பினராக (போக்குவரத்து) செயல்பட்டார்.
2023 ஒடிசா தொடருந்து விபத்து
2023 ஒடிசா தொடருந்து விபத்தின் போதுஇரயில்வே வாரிய உறுப்பினராக இருந்த ஜெய வர்மா சின்கா விபத்துகளுக்கான காரணங்களை விளக்கினார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Indian Railways
வாழும் நபர்கள்
இந்திய இரயில்வே
|
592297
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
|
சங்கர வாரியார்
|
சங்கர வாரியார் (Shankara Variyar) (பிறப்பு:1500-இறப்பு:1560) கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளியின் வானியல் மற்றும் கணிதவியல் அறிஞர் ஆவார். இவரது குடும்பத்தினர் தற்கால பாலக்காடு மாவட்டம், ஒற்றப்பாலம் அருகே உள்ள கோயிலுக்கு உதவியாளராக பணி செய்தவர்கள்.
கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளி பரம்பரை
கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளியில் குருகுலம் முறையில் பயின்ற சங்கர வாரியாருக்கு நீலகண்ட சோமயாஜி (1444–1544) மற்றும் ஜேஷ்டதேவர் (1500–1575) கல்வி கற்றுக்கொடுத்தனர்.
படைப்புகள்
யுக்தி-தீபிகா - தந்திரசம்காரம் குறித்த விளக்க உரை
லகு-விருத்தி - தந்திரசம்காரம் குறித்த உரைநடையில் விளக்க உரை.
கிரியாகிரமகாரி - இரண்டாம் பாஸ்கரர் இயற்றிய லீலாவதி எனும் நூலுக்கு நீண்ட உரைநடை விளக்கம்
வானவியல் விளக்கம், கிபி 1529
வானவியல் கையேடு, 1554
மேற்கோள்கள்
K. V. Sarma (1997), "Sankara Variar", Encyclopaedia of the History of Science, Technology, and Medicine in Non-Western Cultures edited by Helaine Selin, Springer, </ref>
இந்தியக் கணிதவியலாளர்கள்
இந்திய வானியலாளர்கள்
மலையாளி மக்கள்
பாலக்காடு மாவட்ட நபர்கள்
|
592301
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF
|
அச்யுத பிஷாரதி
|
அச்யுத பிஷாரோதி (Achyuta Pisharodi இந்தியாவின் கேரளா மாநிலத்தின் மலப்புறம் மாவட்டம், திரூர் நகரம் அருகே திருக்கண்டியூர் என்ற கிராமத்தில் 7 சூலை 1621 அன்று பிறந்தவர். இவர் சமசுகிருத இலக்கணம், சோதிடம் மற்றும் வானியல் அறிஞர். கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளியில் குருகுலம் முறையில் ஆசிரியர் ஜேஷ்டதேவரிடம் பயின்றவர். நாராயணீயம் இயற்றிய மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி இவரது மாணவர்களில் புகழ்பெற்றவர்.
முக்கிய படைப்புகள்
கோலதீபிகா (ஒரு உண்மையான கணிதக் கட்டுரை),
உபரகக்ரியாக்ரமா (கிரக அட்டவணை மற்றும் கிரகணங்களைக் கையாளும் ஒரு ஜோதிடக் கட்டுரை),
கரனோத்தம் (திரிகாசம்பிரதாயத்தில் உள்ள ஒரு நூல்),
ஜாதகபரணம் (வரஹமிஹிரரின் ஹோரா அடிப்படையிலான படைப்பு),
ஹொரசரோசயம் (ஸ்ரீபதி திட்டத் திட்டம்),
ஹொரசரோச்சயா மொழிபெயர்ப்பு,
வெண்வரோஹ பரிபாசா (வெண்வரோஹம் என்பதன் மொழியாக்கம் இரினியாடப்பள்ளி மாதவன் நம்பூதிரியின் வினைச்சொல் காலத்தை விவரிக்கிறது. அர்வாஞ்சேரிதம்பிராவின் வேண்டுகோளின்படி தொகுக்கப்பட்டது),
பிரவேசகம் (இலக்கணம் படிக்க விரும்புபவர்களுக்காக எழுதப்பட்ட நூல்) முக்கியப் படைப்புகள்.
மேற்கோள்கள்
David Pingree. "Acyuta Piṣāraṭi". Dictionary of Scientific Biography.
S. Venkitasubramonia Iyer. "Acyuta Piṣāroṭi; His Date and Works" in JOR Madras''', 22 (1952–1953), 40–46.
K. V. Sarma (2008), "Acyuta Pisarati", Encyclopaedia of the History of Science, Technology, and Medicine in Non-Western Cultures (2nd edition) edited by Helaine Selin, p. 19, Springer, .
K. Kunjunni Raja. The Contribution of Kerala to Sanskrit Literature (Madras, 1958), pp. 122–125.
"Astronomy and Mathematics in Kerala" in Brahmavidyā'', 27 (1963), 158–162.
1550 பிறப்புகள்
1621 இறப்புகள்
சமசுகிருத அறிஞர்கள்
மலப்புறம் மாவட்ட நபர்கள்
இந்தியக் கணிதவியலாளர்கள்
|
592309
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
|
கலாசிபாளையம்
|
கலாசிபாளையம் (Kalasipalyam) என்பது இந்தியாவின் பெங்களூர் நகரின் மத்திய பகுதியில் உள்ள ஒரு பகுதி, மேலும் நகரத்தின் பழமையான மற்றும் மிகவும் நெரிசலான இடங்களில் ஒன்றாகும்.
போக்குவரத்து
பெங்களூர் கோட்டை மற்றும் திப்பு சுல்தானின் கோடைக்கால அரண்மனை போன்ற முக்கிய இடங்கள் இப்பகுதியில் உள்ளன. இப்பகுதி அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைகளின் சுகாதாரமற்ற நிலைமைகளுக்கு உட்பட்டது.
கலாசிபாளையத்தில் பெரிய காய்கறி மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையம் உள்ளது. ஆம்னி பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், நகர பேருந்து நிலையம், தமிழ்நாடு மற்றும் கேரளா செல்லும் பேருந்துகள் இந்த நிலையத்திலிருந்து தொடங்குகின்றன. இந்த இடம் மெட்ரோ ரயில் மூலமாகவும் இணைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
பெங்களூரின் சுற்றுப்புறங்கள்
|
592311
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE
|
பிரஜ்வல் ரேவண்ணா
|
பிரஜ்வல் ரேவண்ணா (Prajwal Revanna) (பிறப்பு:5 ஆகஸ்டு 1990) சமயச் சார்பற்ற ஜனதா தளத்தின் அரசியல்வாதியும், முன்னாள் இந்தியப் பிரதமர் தேவ கௌடாவின் பேரனும், முன்னாள் கர்நாடாக அமைச்சர் எச். டி. ரேவண்ணாவின் மகனும் ஆவார். 2019 மக்களவை தேர்தலில் இவர் ஹாசன் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களவையின் மூன்றாவது இளம் உறுப்பினர் ஆவார்.
நீதிமன்றத்தால் தகுதி நீக்கம்
கர்நாடகா மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மக்களவை உறுப்பினரான பிரஜ்வல் ரேவண்ணா, 2019ம் மக்களவைத் தேர்தலின் போது, தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தவறான சொத்து விவரங்களை அளித்ததற்காக தொடரப்பட்ட வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் 1 செப்டம்பர் 2023 அன்று பிரஜ்வல் ரேவண்ணாவை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து தீர்ப்பு வழங்கியது.
தேவ கவுடா குடும்பம்
தேவ கௌடா - சென்னம்மா (தம்பதியர்)
எச். டி. ரேவண்ணா (மூத்த மகன்)
எச். டி. குமாரசாமி (இளைய மகன்)
அனிதா குமாரசாமி (குமாரசாமியின் மூத்த மனைவி)
ராதிகா குமாரசாமி (குமாரசாமியின் இளைய மனைவி)
நடிகர் நிகில் குமார் (குமாரசாமியின் மகன்)
பிரஜ்வல் ரேவண்ணா (எச்.டி. ரேவண்ணாவின் மகன்)
இதனையும் காண்க
தகுதி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பட்டியல் (இந்தியா)
மேற்கோள்கள்
வெள் இணைப்புகள்
Official biographical sketch in Parliament of India website
மக்களவை உறுப்பினர்கள்
கர்நாடக அரசியல்வாதிகள்
வாழும் நபர்கள்
1990 பிறப்புகள்
ஹாசன் மாவட்ட நபர்கள்
தகுதி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்
|
592324
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF
|
பளிங்கு முகடு பல்லி
|
பளிங்கு முகடு பல்லி (புரோன்கோசெலா மார்மோராடா-Bronchocela marmorata), பளிங்கு இரத்தம் உறிஞ்சி அல்லது பளிங்கு அகாமிடு பல்லி என்பது பல்லி சிற்றினம் ஆகும். இது பிலிப்பீன்சில் மட்டுமே காணக்கூடிய அகணிய உயிரி ஆகும். இது சராசரியாகக் கடல் மட்டத்திலிருந்து 400 முதல் 800 மீ உயரத்தில் தாழ் நில திப்டெரோகார்ப் மற்றும் மலைக்காடுகளில் வாழ்கிறது. இது பொதுவாக மரங்களின் கிளைகளிலும் இலைகளிலும் காணப்படும். இது பூச்சிகளை உணவாக உண்ணுகிறது. இது மரங்களின் அடிப்பகுதியில் முட்டைகளை இடுவதற்கு மண்ணை தோண்டி குழி எடுக்கிறது.
மேற்கோள்கள்
அகணிய உயிரிகள்
|
592327
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D
|
குந்தலா ஜெயராமன்
|
குந்தலா ஜெயராமன்(Kunthala Jayaraman) என்பவர்இந்திய உயிரி தொழில்நுட்பவியலாளர். இவர் 'தொழில்துறை உலகில் உயிரி தொழில்நுட்பக் கல்வியின் தாய்' என்று கருதப்படுகிறார். முனைவர் கே.ஜே. என்று அடிக்கடி அழைக்கப்படும் ஜெயராமன், அண்ணா பல்கலைக்கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத் துறையில் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு இடையே இணக்கமான சமநிலையை ஏற்படுத்திய பெருமைக்குரியவர். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் உயிர்வேதியியலில் பட்டம் பெற்றார். இவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் பள்ளியில் புகழ்பெற்ற பேராசிரியராகவும் இருந்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது உலக சுகாதார அமைப்பின் மாநாடு மற்றும் பன்னாட்டுப் பயிற்சித் திட்டத்தை நடத்துவதற்கு இவர் முக்கியமானவராக இருந்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எசு. இராமச்சந்திரன், குப்பமுத்து தர்மலிங்கம் ஆகியோருடன் இணைந்து உயிரித் தொழில்நுட்ப பாடப் புத்தகங்களை எழுத இவர் வழிகாட்டியாகச் செயல்பட்டார் 2022ஆம் ஆண்டில், குந்தலா ஜெயராமனின் நினைவாக, சென்னையின் அறிவியல் அகாதமி "உயர்கல்வி மற்றும் மொழிபெயர்ப்பு ஆராய்ச்சியில் சீர்குலைக்கும் சீர்திருத்தம்" என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரையை நடத்தியது. இதனை அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகம், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் பி. காளிராஜ் நிகழ்த்தினார்.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
தமிழக அறிவியலாளர்கள்
பெண் அறிவியலாளர்கள்
|
592329
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
|
சாரணியச் சட்டம்
|
சாரணியச் சட்டம் (Scout Law) என்பது சாரணர் இயக்கத்தில் உள்ள குறியீடுகளின் தொகுப்பாகும். 1908 ஆம் ஆண்டில் சிறுவர்களுக்கான சாரணர்கள் வெளியிடப்பட்டதிலிருந்து, உலகெங்கிலும் உள்ள அனைத்து சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகளும் இயக்கத்தின் கொள்கைகளைக் கடைபிடிப்பதாக சாரணர் உறுதிமொழியை எடுத்து இயக்கத்தில் சேர்ந்துள்ளனர்.
வரலாறு
சாரணர் சட்டமானது வட அமெரிக்க மற்றும் பிரித்தானிய இளைஞர்களின் வெளிப்புற நிகழ்ச்சிகளின் வளர்ச்சியிலிருந்து பெறப்பட்டது.பேடன்-பவல் இசுக்கவுட்டிங் ஃபார் பாய்சினை எழுதுவதற்காக 1902 இல் கனடாவிலும் அமெரிக்காவிலும் உட்கிராஃப்ட் இண்டியன்சை நிறுவிய எர்னஸ்ட் தாம்சன் செட்டனின் பணியிலிருந்து ஊக்கம் பெற்றார்.
சட்டம்
Articles with hAudio microformats
அசல் சாரணர் சட்டம் 1908 ஆம் ஆண்டில் சிறுவர்களுக்கான சாரணர்களின் வெளியீட்டில் தோன்றியது. பாரத சாரண சாரணியர்களுக்கான சட்டம் பின்வருமாறு
ஒரு சாரணர், நம்பிக்கைக்குரியவர்.
விசுவாசமானவர்
ஒரு சாரணர்,அனைவருக்கும் நண்பர் மற்றும் சக சாரணருக்கு சகோதரர் ஆவார்.
ஒரு சாரணர், மரியாதைக்குரியவர்.
ஒரு சாரணர், இயற்கையினை நேசிப்பவராகவும் விலங்குகளிடம் அன்பு செலுத்துபவருமாவார்.
ஒரு சாரணர், ஒழுக்கமானவரும் பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பவருமாவார்.
ஒரு சாரணர், தைரியமானவர்.
ஒரு சாரணர் ,சிக்கனமானவர்.
ஒரு சாரணர், சிந்தனை , சொல் மற்றும் செயலில் தூய்மையானவர்.
சான்றுகள்
சாரணியக் குறிக்கோள்கள்
|
592331
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
|
இந்திய உழவாரன்
|
{{Taxobox
| color = yellow
| name = இந்திய உழவாரன்
| image = CollocaliaUnicolor.svg
| status = LC | status_system = IUCN3.1
| status_ref =
| domain = மெய்க்கருவுயிரி
| regnum = விலங்கு
| divisio = முதுகெலும்பி
| classis = பறவை
| ordo = அபோடிபார்மிசு
| familia = அபோடிடே
| genus = ஏரோதிராமசு
| genus_authority =
| species = ஏ. யுனிகலர்
| binomial = ஏரோதிராமசு யுனிகலர்
| binomial_authority = (ஜெர்டன், 1840)
| synonyms = *'கோலோகாலியா யுனிகலர் (ஜெர்டன், 1840)கிருண்டோHirundo யுனிகலர் ஜெர்டன், 1840
| synonyms_ref =
}}
இந்திய உழவாரன் அல்லது இந்திய உண்ண ஏற்ற கூடு உழவாரன் (Aerodramus unicolor) என்பது ஒரு சிறிய உழவாரன் ஆகும். இது இலங்கை மற்றும் தென்மேற்கு இந்தியாவின் மலைப்பகுதிகளில் கூட்டமாக இனப்பெருக்கம் செய்து வாழ்கிறது.
விளக்கம்
இந்திய உழவாரன் பறவை ஊர்க்குருவியை விட அளவில் சிறியதாக சுமார் 12 செமீ நீளமுள்ளது. இதன் அலகு சிறியதாக வலுவின்றிக் கருப்பு நிறமாக இருக்கும். விழிப்படலம் பழுப்பு நிறத்திலும், கால்கள் வெளிர் சிவப்பு தோய்ந்த சாம்பல் நிறத்தில் இருக்கும். உடலின் மேற்பகுதி அடர் பழுப்பாகவும், கீழே வெளிர் பழுப்பு நிறத்திலும் இருக்கும். இறக்கைகள் நீலம் தோய்ந்திருக்கும். மார்பும் வயிறும் சாம்பல் நிறமாக இருக்கும். இது பிறை அல்லது பூமராங்கை ஒத்த பின் இறக்கைகளைக் கொண்டுள்ளது. இதன் உடல் மெல்லியதாகவும், வால் குறுகியதாகவும், சற்று உள்தள்ளியதாக இருக்கும்.
இரு பாலினத்தவையும், இளம் பறவைகளும் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருக்கும். இந்திய உழவாரன் மிகவும் குறுகிய கால்களைக் கொண்டுள்ளது. அது குகையின் செங்குத்து மேற்பரப்புகளில் ஒட்டிக்கொள்ள மட்டுமே பயன்படுத்துகிறது. ஏனெனில் உழவாரன்கள் எப்போதும் தரையில் தானாக முன்வந்து அமர்வதில்லை.
இந்த உழவாரன்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை பறந்தே கழிக்கின்றன. இவை தங்கள் அலகால் பறக்கும் பூச்சிகளை பிடித்து உண்டு வாழ்கின்றன.
நடத்தை
இவை மலைகளில் பெரும் பாறைகளையும் குகைகளையும் சார்ந்து பெருங் கூட்டமாகத் திரியும். மாலை நேரத்தில் பெரும் கூட்டமாக மலைக் குகைகளுக்கு இவை திரும்புவதைக் காண இயலும். அக்காட்சி பழுத்த இலைகள் காற்றில் உதிர்வது போல இருக்கும். அப்போது அதே குகைகளில் இருந்து வௌவால்கள் இரைதேட வெளியே புறப்படும். பொதுவாக குகைகளிலும் பாறை இடுக்குகளிலும் உமிழ் நீரைப் பயன்படுத்தி வெண்மை நிறத்தில் கூடு அமைக்கும். கூடுகள் ஒழுங்கின்றி நெருக்கமாகக் கட்டபட்டிருப்பதைக் காண இயலும். கூட்டை ஆண் உழவாரன்கள் அமைக்கின்றன. அதில் பெண் பறவை இரண்டு முட்டைகளை இடும்.
சிட், சிட், சிட் என சிறு குரலில் கத்தியபடி பறக்கும்.
ஒப்பீட்டளவில் சுவையற்ற இதன் கூடுகளை அறுவடை செய்து, கோழிக் கறி, மசாலா மற்றும் பிற சுவையான பொருட்கள் சேர்க்ககபட்டு பறவையின் கூடு சூப்பாக செய்யும் பழக்கம் சில நாடுகளில் உள்ளது. இது பாலுணர்வைத் தூண்டுவதாக கூறப்படுகிறது.
மேற்கோள்கள்
குறிப்புதவி நூல்கள்
Grimmett, Inskipp and Inskipp, Birds of India
Chantler, Paul and Driessens, Gerald, Swifts''
இலங்கைப் பறவைகள்
இந்தியப் பறவைகள்
உழவாரன்கள்
|
592335
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D
|
சாரணர் கைகுலுக்கல்
|
சாரணர் கைகுலுக்கல் (Scout handshake) என்பது சக சாரணர்களை வாழ்த்துவதற்கான ஒரு முறையான வழியாகும்.மேலும், உலகெங்கிலும் உள்ள சாரணர் மற்றும் வழிகாட்டி அமைப்புகளின் உறுப்பினர்களால் பயன்படுத்தப்படுகிறது. கைகுலுக்கல் இதயத்திற்கு அருகில் உள்ள கையால் செய்யப்படுகிறது மற்றும் நட்பின் அடையாளமாக வழங்கப்படுகிறது. பெரும்பாலான சூழ்நிலைகளில், கைகுலுக்கல் விரல்களை இணைக்காமல் உறுதியாக செய்யப்படுகிறது, மேலும் இருவரும் சீருடையில் இருக்கும்போது மட்டுமே இந்த கைகுலுக்கல் முறையினைப் பயன்படுத்துகின்றனர். தேசிய சாரணர் அமைப்புகள் சில பிரிவுகளுக்கு இடையே கைகுலுக்கலில் சில வேறுபாடுகள் உள்ளன.
1935 சாரணர் கையேடு பின்வருமாறு கூறுகிறது, "உலகம் முழுவதிலும் உள்ள சாரண தலைவர்களின் உடன்படிக்கையின்படி, சாரணர்கள் சக சாரணர்களை இடது கை கைகுலுக்கலுடன் வரவேற்கிறார்கள்."
அணைத்துலக பெண் வழிகாட்டி , சாரண சங்க உறுப்பினர்களும் இடது கைகுலுக்கலைப் பகிர்ந்து கொள்கிறார்கள், மற்ற பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணர்களை சந்திக்கும் போது, வலது கையால் செய்யப்பட்ட சாரணிய அடையாளத்துடன் இது பயன்படுத்தப்படலாம்.
விளக்கம்
அசாந்தி வீரர் ஒருவர் பேடன் பவுலின் வீரம் குறித்து அறிந்திருந்தபடியால் அவரிடம் இடதுகையினை கைகுலுக்க முன்வந்தார் ஏனெனில் அவ்வாறு செய்ய நாம் நமது கேடயங்களையும் நமது பாதுகாப்பையும் கைவிட்டு அவர்களது மேல் நம்பிக்கை வைத்து கொடுக்கப்படுகிறது. துணிச்சலானவர்களிடம் இடதுகை குலுக்குவது முறை எனக் கருதப்படுகிறது.
இடது கை இதயத்திற்கு நெருக்கமாக உள்ளது அந்த அடையாளத்திற்காகவும் கொடுக்கப்படுவதாக கருத்து உள்ளது.
சான்றுகள்
வெளியிணைப்புகள்
சாரணியக் குறிக்கோள்கள்
|
592336
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%20%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D
|
எஸ். எம். ஸ்ரீநாகேஷ்
|
இராணுவத் தளபதி சத்யவந்த் மல்லன்னா ஸ்ரீநாகேஷ் (Satyawant Mallanna Shrinagesh) (சத்யவந்த் ஸ்ரீநாகுலே மல்லன்னா என்றும் அழைக்கப்படுகிறார்) (11 மே 1903 - 27 டிசம்பர் 1977) ஒரு இந்திய இராணுவ அதிகாரி ஆவார். இவர் 14 மே 1955 முதல் 7 மே 1957 வரை இந்தியத் தரைப்படையில் 3 வது இராணுவத் தளபதியாக பணியாற்றினார். ஓய்வுக்குப் பிறகு இவர் 14 அக்டோபர் 1959 முதல் 12 நவம்பர் 1960 வரையிலும், மீண்டும் 13 ஜனவரி 1961 முதல் 7 செப்டம்பர் 1962 வரையிலும் அசாம் ஆளுநராகப் பணியாற்றினார். 8 செப்டம்பர் 1962 முதல் 4 மே 1964 வரை ஆந்திரப் பிரதேச ஆளுநராகவும், 4 மே 1964 முதல் ஏப்ரல் 2, 1965 வரை மைசூர் ஆளுநராகவும் இருந்தார். 1957 முதல் 1959 வரை ஐதராபாத் இராச்சியத்தில் ஐதராபாத்தில் இந்திய நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார்.
சொந்த வாழ்க்கை
1934 இல், ஸ்ரீநாகேஷ், ராஜ்குமாரி கோச்சார் என்பவரை மணந்தார் . இவர்களுக்கு மூன்று மகன்களும், இரண்டு மகள்களும் இருந்தனர். சதீஷ் என்ற இவரது ஒரு மகன் இந்திய ராணுவத்தில் சேர்ந்து மேஜராக ஓய்வு பெற்றார்.
இறப்பு
1950 களின் பிற்பகுதியில் நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஸ்ரீநாகேஷ் 27 டிசம்பர் 1977 அன்று காலை ராணுவ மருத்துவமனையில் இறந்தார்.
மேலும் படிக்க
Issar, Satish K. (2009). General S. M. Srinagesh, New Delhi: Vision Books,
சான்றுகள்
வெளி இணைப்புகள்
at bharat-rakshak.com
குறிப்புகள்
கர்நாடக ஆளுநர்கள்
ஆந்திரப் பிரதேச ஆளுநர்கள்
அசாம் ஆளுநர்கள்
1977 இறப்புகள்
1903 பிறப்புகள்
|
592337
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D.%20%E0%AE%9F%E0%AE%BF.%20%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE
|
எச். டி. ரேவண்ணா
|
ஹர்தனஹள்ளி தேவகவுடா ரேவண்ணா (Hardanahalli Devegowda Revanna) (பிறப்பு: 17 டிசம்பர் 1957) சமயச் சார்பற்ற ஜனதா தள கட்சியின் கர்நாடக சட்டமன்ற உறுப்பினரும்; முன்னாள் இந்தியப் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகனும்; முன்னாள் கர்நாடகா முதலமைச்சர் எச். டி. குமாரசாமியின் அண்ணனும்; நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையும் ஆவார்.
இவர் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹோலேநரசிப்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து கர்நாடக சட்டமன்றத்திற்கு 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
தேவகவுடா குடும்பம்
தேவ கௌடா - சென்னம்மா (தம்பதியர்)
எச். டி. ரேவண்ணா (மூத்த மகன்)
எச். டி. குமாரசாமி (இளைய மகன்)
அனிதா குமாரசாமி (குமாரசாமியின் மூத்த மனைவி)
ராதிகா குமாரசாமி (குமாரசாமியின் இளைய மனைவி)
நடிகர் நிகில் குமார் (குமாரசாமியின் மகன்)
பிரஜ்வல் ரேவண்ணா (எச்.டி. ரேவண்ணாவின் மகன்)
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
1957 பிறப்புகள்
ஹாசன் மாவட்ட நபர்கள்
கர்நாடக அரசியல்வாதிகள்
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள்
|
592338
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D
|
ஜங்லதேசம்
|
ஜங்லதேசம் (Jangladesh) என்பது வட இந்தியாவில் வடக்கு, வடமேற்கு மற்றும் வடகிழக்கு இராசத்தான் மாநிலத்தில் உள்ள ஒரு வரலாற்றுப் பகுதியாகும். இது இன்றைய மாவட்டங்களான பிகானேர், சூரு, கங்காநகர் மற்றும் அனுமான்காட் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது தெற்கில் மார்வார் மற்றும் ஜெய்சல்மேர் பகுதிகளாலும், கிழக்கில் அஜ்மீர்-மேர்வாரா பகுதியாலும் எல்லையாக இருந்தது.
வரலாறு
இராசத்தானின் வடகிழக்கு மற்றும் வடமேற்கு பகுதி, பழங்காலத்தில் ஜங்லதேசம் என்ற பெயரில் அறியப்பட்டது. ஜங்லதேசத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகள் பதிகளால் ஆளப்பட்டது. வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு ஜாட் குடியிருப்புகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. பட்னர் பகுதி முஸ்லீம் பாட்டிகள் மற்றும் ஜோகியாக்களின் கீழ் இருந்தது.
ஜங்லதேசத்தில் ராவ் பிகாவின் படையெடுப்பின் காரணமாக அங்கிருந்த பெரும்பாலான ஜாட் குலங்கள் ரத்தோர் மேலாதிக்கத்தை ஏற்க வேண்டியிருந்தது. பிகா 300 ராஜ்புத் வீரர்களைக் கொண்ட இராணுவத்திற்கு தலைமை தாங்கினார். மேலும், வடக்கு இராஜஸ்தானின் அனைத்து ஜாட் குலங்களையும் அடிபணியச் செய்தார். பிகாவும் ஜாட்களை பதி இராஜபுத்திரர்களிடமிருந்து காப்பாற்றினார். கோதாரா ஜாட்கள், சேவாத் ராஜ்புரோஹிட்டுகள் மற்றும் சரண்கள் பிகாவின் விசுவாசமான ஆதரவாளர்களாக இருந்தனர். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதியின் மக்கள் தொகை 8,147,344 ஆகும்.
சான்றுகள்
இராஜஸ்தான் வரலாறு
|
592340
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE
|
அஜ்மீர்-மேர்வாரா
|
அஜ்மீர்-மேர்வாரா (Ajmer-Merwara) ( அஜ்மீர் மாகாணம், மற்றும் அஜ்மீர்-மேர்வாரா-கெக்ரி என்றும் அழைக்கப்படுகிறது) வரலாற்று அஜ்மீர் பகுதியில் உள்ள பிரித்தானிய இந்தியாவின் முன்னாள் மாகாணமாகும். 1818 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி ஒப்பந்தத்தின் மூலம் தௌலத்ராவ் சிந்தியாவால் இப்பகுதி ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 1836 ஆம் ஆண்டு வடமேற்கு மாகாணங்களின் ஒரு பகுதியாக மாறும் வரை இது வங்காள மாகாணத்தின் கீழ் இருந்தது. இறுதியாக ஏப்ரல் 1, 1871 அன்று அஜ்மீர்-மேர்வாரா-கெக்ரி என தனி மாகாணமாக மாறியது. 1947 ஆகஸ்ட் 15 அன்று ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியபோது இது சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியாக மாறியது.
இந்த மாகாணம் அஜ்மீர் மற்றும் மேவார் மாவட்டங்களைக் கொண்டிருந்தது. அவை பிரித்தானிய இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து பிரிக்கப்பட்டு இராஜபுதனத்தின் பல சமஸ்தானங்களுக்கு மத்தியில் ஒரு சிறிய பிரதேசத்தை உருவாக்கியது. பிரிட்டிஷ் மேலாதிக்கத்தை ஒப்புக்கொண்ட உள்ளூர் பிரபுக்களால் ஆளப்பட்ட இந்த மாநிலங்களைப் போலல்லாமல், அஜ்மீர்-மேவாரா ஆங்கிலேயர்களால் நேரடியாக நிர்வகிக்கப்பட்டது.
1842 இல், இரண்டு மாவட்டங்களும் ஒரே ஆணையரின் கீழ் இருந்தன. பின்னர் அவை 1856 இல் பிரிக்கப்பட்டு கிழக்கிந்திய நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டன. இறுதியாக, 1858க்குப் பிறகு, இராஜபுதனம் முகமைக்கான இந்திய தலைமை ஆளுநரின் முகவருக்குக் கீழ்ப்பட்ட ஒரு தலைமை ஆணையரின் கீழ் கொண்டு வரப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பின்
1947 இல் இந்தியப் பிரிப்பு மற்றும் சுதந்திரம் பெற்ற தேதியிலிருந்து 1950 வரை, அஜ்மீர்-மேர்வாரா இந்தியாவின் ஒரு மாகாணமாக இருந்தது. 1950 ஆம் ஆண்டில் இது அஜ்மீர் மாநிலமாக மாறியது. இது நவம்பர் 1, 1956 அன்று இராசத்தான் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
சான்றுகள்
அஜ்மேர் மாவட்டம்
இராஜஸ்தான் வரலாறு
|
592341
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
|
யமுனா பிரசாத் மண்டல்
|
யமுனா பிரசாத் மண்டல் (Yamuna Prasad Mandal) பீகாரின் யாதவர் குடும்பத்தில் பிறந்தவர். இவர் இந்தியத் தேசிய காங்கிரசைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1962-ல் ஜெய்நகரிலிருந்து (பீகார் மாநிலம்) இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் 1967 மற்றும் 1971ல் பீகாரில் உள்ள சமஸ்தீபூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இந்திய நாடாளுமன்ற இணையதளத்தில் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறு
இறந்த ஆண்டு குறிப்பிடப்படவில்லை
1910 பிறப்புகள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
5வது மக்களவை உறுப்பினர்கள்
4வது மக்களவை உறுப்பினர்கள்
3வது மக்களவை உறுப்பினர்கள்
பீகார் அரசியல்வாதிகள்
|
592342
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
|
ஜெய் கிருஷ்ணா மண்டல்
|
ஜெய் கிருஷ்ணா மண்டல் (Jai Krishna Mandal) பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1998 முதல் 1999 வரை இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையில் பூர்ணியா மக்களவைத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1990-ல் நடைபெற்ற தேர்தலில் பப்பு யாதவிடம் தோல்வியடைந்தார்.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
1950 பிறப்புகள்
12வது மக்களவை உறுப்பினர்கள்
பீகார் அரசியல்வாதிகள்
பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்
|
592343
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D
|
இரவீந்திரா யாதவ்
|
இரவீந்திர யாதவ் (Ravindra Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஜாஜா சட்டமன்றத் தொகுலிருந்து பீகார் சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பிகார் சட்டமன்ற உறுப்பினராகப் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக உள்ளார். இவரது தந்தை சிவ் நந்தன் பிரசாத் யாதவும் இறக்கும் வரை ஜாஜாவிலிருந்து பீகார் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
1955 பிறப்புகள்
பீகார் சட்டமன்ற உறுப்பினர்கள்
|
592354
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF
|
தோமணம் அருவி
|
தோமணம் அருவி (Thoomanam Waterfalls) என்பது இந்தியாவின் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் அருவி ஆகும். இந்த அருவி வடக்கஞ்சேரி பேரூராட்சியில் செப்பேலக்கோடு வன எல்லைக்கு அருகில் உள்ளது. இந்த சிறிய அருவியின் அருகே கீழே நெல் வயலும் மேலே பெரிய பாறைகளும் அமைந்துள்ளன. இந்த அருவி திருச்சூர் மாவட்டத்தில் வெளியில் அதிகம் அறியப்படா இடங்களில் ஒன்றாகும். நெல் வயல்கள், தென்னந்தோப்பு கொண்ட இயற்கை மற்றும் கிராமப்புற நிலப்பரப்பு கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வடக்கஞ்சேரியில் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
பாலக்காடு மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள்
கேரள அருவிகள்
|
592355
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF.%20%E0%AE%B5%E0%AF%86.%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D
|
தி. வெ. இராமகிருஷ்ணன்
|
திருப்பத்தூர் வெங்கடாசலமூர்த்தி இராமகிருஷ்ணன் (T. V. Ramakrishnan)(பிறப்பு: ஆகத்து 14, 1941) என்பவர் இந்திய கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். இவர் தற்போது அணு சக்தித்துறை ஓமி பாபா பேராசிரியராக பனாரசு இந்து பல்கலைக்கழகத்திலும் திரிபுரா பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் உள்ளார்.
வாழ்க்கை
கல்வி
திருப்பத்தூர் வெங்கடாசலமூர்த்தி இராமகிருஷ்ணன் 1941 ஆம் ஆண்டு ஆகத்து 14ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் பிறந்தார். இவர் 1959 மற்றும் 1961-ல் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளம் அறிவியல் மற்றும் முதுநிலை அறிவியல் பட்டமும் முடித்தார். பின்னர் 1961 முதல் 1962 வரை பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்ற ஆய்வாளராக பணியாற்றினார். பின்னர் முனைவர் பட்டத்தினை 1966-ல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முடித்தார்.
ஆய்வுப் பணி
கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் விரிவுரையாளராக தனது கல்வி மற்றும் ஆய்வுப் பணியினைத் தொடங்கினார். இவர் 1986-ல் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இங்கு இவர் 2003 வரை தொடர்ந்தார். 2010 முதல் 2013 வரை இன்போசிஸ் பரிசுக்கான இயற்பியல் அறிவியல் நடுவர் குழுவிலும் பணியாற்றினார்.
எலக்ட்ரான் மயமாக்கலின் அளவிடுதல் கோட்பாட்டிற்கு இராமகிருஷ்ணன் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார். திரவம் மற்றும் திட நிலை மாற்றத்திற்கான கோட்பாடு மற்றும் கலப்பு இணைதிறன் அமைப்புகளுக்கு இவர் பங்களிப்பு செய்துள்ளார்.
விருதுகளும் கௌரவங்களும்
இராமகிருஷ்ணனுக்கு 1983-ல் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதும், 1990-ல் மூன்றாவது நாடுகளுக்கான அறிவியல் அமைப்பின் பரிசும் 2001-ல் பத்மசிறீ விருதும் வழங்கப்பட்டது. 1987ஆம் ஆண்டில் இவர் அமெரிக்க இயற்பியல் கழக ஆய்வுறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். "சீர்குலைந்த அமைப்புகளின் பல-உடல் கோட்பாட்டிற்கான இவரது பங்களிப்புகளுக்காக, குறிப்பாக இடமயமாக்கலின் அளவிடுதல் கோட்பாடு மற்றும் கலப்பு-வேலண்ட் அசுத்தங்களின் கோட்பாடு" [4
இராமகிருஷ்ணன் 2000-ல் அரச கழகத்தின் ஆய்வு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தேர்தல் சான்றிதழில் கூறப்பட்டுள்ளதாவது:
மேற்கோள்கள்
பத்மசிறீ விருது பெற்ற அறிவியலாளர்கள்
வாழும் நபர்கள்
1941 பிறப்புகள்
|
592357
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D
|
தசிகா துர்கா பிரசாத ராவ்
|
Articles with hCards
தசிகா துர்கா பிரசாத ராவ் (Dasika Durga Prasada Rao) என்பவர் இந்தியப் புவி அறிவியலாளர் மற்றும் தேசிய தொலையுணர்வு மைய முன்னாள் இயக்குநர் ஆவார். குண்டூர்-விஜயவாடா பகுதியைச் சேர்ந்த குடும்பத்தில் 1939-ல் பிறந்தார். 1998 முதல் ராவ் இந்தியாவின் தேசிய அறிவியல் அகாதமியின் சகாவாக ஆனார். 2001-ல் இந்திய அரசால் நான்காவது உயரிய இந்தியக் குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி ராவ் கௌரவிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2003-ல், இந்தியன் தொலையுணர்வு சங்க விருதையும் பெற்றார்.
மேலும் பார்க்கவும்
தேசிய தொலையுணர்வு மையம்
தேசிய அறிவியல் கழகம், இந்தியா
மேற்கோள்கள்
இந்திய நிலவியலாளர்கள்
தெலுங்கு மக்கள்
வாழும் நபர்கள்
1939 பிறப்புகள்
பத்மசிறீ விருது பெற்ற அறிவியலாளர்கள்
|
592358
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF
|
துவாரகா நாத் திவாரி
|
துவாரகா நாத் திவாரி (Dwarka Nath Tiwary)(பிறப்பு 1901) என்பவர் பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மக்களவைத் தொகுதியிலிருந்து நான்கு முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறையில் அடைக்கப்பட்டவர் இவர்.
மேற்கோள்கள்
இறந்த ஆண்டு குறிப்பிடப்படவில்லை
6வது மக்களவை உறுப்பினர்கள்
5வது மக்களவை உறுப்பினர்கள்
4வது மக்களவை உறுப்பினர்கள்
3வது மக்களவை உறுப்பினர்கள்
2ஆவது மக்களவை உறுப்பினர்கள்
1ஆவது மக்களவை உறுப்பினர்கள்
1901 பிறப்புகள்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்
|
592359
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE
|
கைலாசுபதி மிசுரா
|
கைலாசுபதி மிசுரா (Kailashpati Mishra)(5 அக்டோபர் 1923 - 3 நவம்பர் 2012) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பாரதீய ஜனசங்கத்தின் தலைவராகவும், பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் இருந்தவர் ஆவார். இவர் 1977ல் பீகார் நிதி அமைச்சராகவும் மே 2003 முதல் சூலை 2004 வரை குசராத்து ஆளுநராகவும் இருந்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
கைலாசுபதி மிசுரா 1923ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி பீகார் மாநிலம் பக்சரில் உள்ள துதர்சாக்கில் பூமிகார் குடும்பத்தில் பிறந்தார். 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று, கைது செய்யப்பட்டார். இவர் 1943 முதல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினராக இருந்தார். மேலும் மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகும் சிறையில் அடைக்கப்பட்டார். பத்தாம் வகுப்பில் படிக்கும் போது, மிசுரா 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு ஆதரவாக பக்சரில் உள்ள தனது பள்ளியின் பிரதான வாயிலில் மறியலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டார்.
அரசியல் வாழ்க்கை
கைலாசுபதி மிசுரா 1971 மக்களவைத் தேர்தலில் ஜனசங்கத்தின் சார்பில் பட்னாவில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இவர் 1977-ல் பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிக்ரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் கர்ப்பூரி தாக்கூரின் ஜனதா கட்சி அரசாங்கத்தில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1980ஆம் ஆண்டில், கட்சி நிறுவப்பட்டபோது இவர் முதல் பாஜக பீகார் தலைவராக ஆனார். 1995 முதல் 2003 வரை பாஜக தேசிய துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
ஆளுநர் பணி
கைலாசபதி மிசுரா 2003-ல் குசராத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேலும் அப்போதைய ஆளுநராக இருந்த நிர்மல் சந்திர ஜெயின் காலமானதைத் தொடர்ந்து சிறிது காலம் இராஜஸ்தானின் ஆளுநராகத் தற்காலிகமாகப் பணி வகித்தார். 2004 தேர்தலில் பாஜக அரசின் தோல்விக்குப் பிறகு, காங்கிரசு அரசால் ஆளுநர் பதவியிலிருந்து மிசுரா நீக்கப்பட்டார்.
பீகாரில் பாரதிய ஜனதா கட்சியின் பீஷ்ம பிதாமஹா என்று அழைக்கப்படும் மிசுரா, முதுமையின் காரணமாகத் தனது வாழ்நாளின் கடைசி இரண்டு ஆண்டுகளாக நேரடி அரசியல் நடவடிக்கைகளிலிருந்து விலகி இருந்தார். ஆனால் கட்சிக்கு உத்வேகமாக இருந்தார். 1974ஆம் ஆண்டு ஜேபியின் காங்கிரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதன் காரணமாக இவர் சமூகவாதிகளால் விரும்பப்பட்டார்.
பிறப்பும் இறப்பும்
1923ஆம் ஆண்டு பீகாரில் உள்ள பக்சரில் பிறந்த மிசுரா வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தார்.
2012ஆம் ஆண்டு தனது 89வது வயதில் இவர் இறந்தபோது, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை மற்றும் மூத்த பீகார் பாஜக தலைவர் சுஷில் குமார் மோடி ஆகியோர் இவரது இல்லத்துக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர். இந்திய அரசாங்கம் 2016ஆம் ஆண்டு இவரது நினைவாகத் தபால் தலையை வெளியிட்டது.
மேற்கோள்கள்
குசராத்து ஆளுநர்கள்
2012 இறப்புகள்
1923 பிறப்புகள்
|
592362
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D
|
நவாபாக்கு காந்தர்பல்
|
நவாபாக்கு (Nawabagh Ganderbal) என்பது இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றான காந்தர்பல் மாவட்டத்தில் உள்ள ஓர் அறிவிக்கப்பட்ட பகுதியும் கிராமமும் ஆகும். இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் ஆப்பிள், செர்ரி, பீச், ஆப்ரிகாட், அக்ரூட் பருப்புகள் மற்றும் பேரிக்காய் ஆகியவற்றின் உற்பத்திக்கு நவாபாக்கு பிரபலமான இடமாகும். அமெரிக்க ஆப்பிள், சுவையான ஆப்பிள், கோல்டன் ஆப்பிள், குலு சுவை ஆப்பிள், அமுர், ரெட் கோல்டு, இரசாக்கு வாரி மற்றும் மகாராசி போன்ற பல ஆப்பிள் வகைகள் இப்பகுதியில் விளைகின்றன. இப்பகுதியின் அஞ்சல் குறியீடு 193501.
நிலவியல்
மும்பையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1619 மீ உயரத்தில் நவாபாக்கு அமைந்துள்ளது. வகுரா, பட்வினா, இயசுனா, பாதாம்போரா, கான்புரா, மனசுபல், வசுகுரா, அகான், கர்பாக் மற்றும் கசூமா ஆகிய கிராமங்கள் நவாபாக்கு பகுதிக்கு அருகிலுள்ள கிராமங்களாகும்.
மக்கள்தொகையியல்
இக்கிராமத்தில் சுமார் 800 எண்னிக்கைக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 85 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் வசிக்கும் மக்களின் தாய் மொழி காசுமீரியாகும். மக்கள் இந்தி/உருது மற்றும் ஆங்கிலத்தையும் பயன்படுத்துகின்றனர்.
கல்வி
சேக்கு உல் ஆலம் பப்ளிக் பள்ளி (செயல்படாதது)
அரசு நடுநிலைப்பள்ளி, நவாபாக்கு
அரசு யுனானி மருத்துவக் கல்லூரி (இப்போது செயல்படும் - டாக்டர் சூனைத் நசீர் தாண்ட்ரூ உதவி பேராசிரியர் உடற்கூறியல் மூலம் திருத்தப்பட்டது)
மேலும் பார்க்க
கங்கன்
மேற்கோள்கள்
காசுமீர்
காந்தர்பல் மாவட்டம்
|
592363
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
|
மாமலேசுவர் கோவில்
|
மாமலேசுவர் கோயில் (Mamaleshwar Temple) இந்தியாவின் காசுமீர் பள்ளத்தாக்கில் உள்ள பகல்காம் நகரில் அமைந்துள்ள ஓர் இந்து கோயிலாகும். மாமல் கோயில் என்ற பெயராலும் இக் கோயில் அழைக்கப்படுகிறது. இலித்தர் ஆற்றின் கரையில் உயரத்தில் அமைந்துள்ளது. . புராணக்கதையின் படி, பார்வதியின் அனுமதியின்றி யாரையும் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்காமல், விநாயகரை வாசல் காவலராக வைத்த கோயில் இதுவாகும். சிவன் விநாயகரின் தலையை வெட்டி யானைத்தலை கொடுத்த தலமும் இதுவென்று கூறப்படுகிறது. மம் மால் என்றால் போகாதே என்பது பொருளாகும். எனவே இது மம்மால் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
வரலாறு
இந்த கோயில் கி.பி 400 (1,600 ஆண்டுகளுக்கு முன்பு) கட்டப்பட்டது மற்றும் இடைக்காலத்தில் புனரமைக்கப்பட்டு வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. இராசதரங்கிணி என்ற கல்கனரின் கவிதை நூலில் மம்மேசுவரர் என்றழைக்கப்படும் கோயிலைப் பற்றி குறிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் உச்சியில் தங்க கலசத்தால் அலங்கரிக்கப்பட்டதை மன்னன் செயசிம்மன் பதிவு செய்துள்ளார்.
புராணம்
பார்வதியின் அனுமதியின்றி யாரையும் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்காமல், விநாயகரை வாசல் காவலராக வைத்ததாகக் கூறப்படும் புராணக் கோயில் இதுவாகும். சிவன் விநாயகரின் தலையை வெட்டி யானைத் தலையைக் கொடுத்த தலமும் இதுவாகும். மம் மால் என்றால் போகாதே என்று அர்த்தம், எனவே இது ம் மம்மால் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
இந்துக் கோயில்கள்
காசுமீர்
Coordinates on Wikidata
|
592364
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
|
சின்ஹகட் யுத்தம்
|
சின்ஹகட் யுத்தம் (Battle of Sinhagad) என்பது 4 பெப்ரவரி 1670 அன்று இரவின் போது முகலாயப் பேரரசின் சின்ஹகட் (அப்போது கொந்தனா என்று அழைக்கப்பட்டது) கோட்டையில் மராத்தியப் பேரரசின் படைகள் நடத்திய ஒரு தாக்குதல் ஆகும். இந்த தாக்குதலில் மராத்தியர்கள் கோட்டையை கைப்பற்றினர். இது கொந்தனா யுத்தம் என்றும் அறியப்படுகிறது.
மேற்கோள்கள்
மகாராட்டிர வரலாறு
|
592365
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
|
இராச்பரியன் வனவிலங்கு சரணாலயம்
|
இராச்பரியன் வனவிலங்கு சரணாலயம் (Rajparian Wildlife Sanctuary) இந்தியாவின் சம்மு மற்றும் காசுமீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அனந்த்நாக்கு நகருக்கு அருகில் உள்ள வனத் தொகுதியின் தக்சும் பகுதியில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும் . இது மாவட்டத் தலைமையகமான அனந்த்நாக் நகரத்திலிருந்து 42 கிமீ தொலைவிலும் சிறீநகருக்கு தெற்கில் தொலைவிலும் உள்ளது. சரணாலயம் அளவுக்கு பரந்து விரிந்துள்ளது. இந்த பகுதி 1948 ஆம் ஆண்டுக்கு முன் மகாராசா காலத்தில் அருகிய மான் இனமான அங்குல் மான் காப்பகமாக பாதுகாக்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டில்தான் இது இராச்பரியன் வனவிலங்கு சரணாலயமாக மேம்படுத்தப்பட்டது.
தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்
இராச்பரியன் வனவிலங்கு சரணாலயத்தில் இருக்கும் தாவர வகைகளில் அடர்ந்த ஊசியிலையுள்ள காடுகள் மற்றும் துணை-அல்பைன் மேய்ச்சல் நிலங்களும் அடங்கும். அடர்ந்த ஊசியிலையுள்ள காடுகளில், கெய்ல் பைன், தளிர், ஃபிர், பிர்ச், தேவதாரு மற்றும் சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக உள்ளன.
இராச்பரியன் வனவிலங்கு சரணாலயத்தில் இமயமலைக் கருங்கரடி, அங்குல். மற்றும் கத்தூரி மான் உள்ளிட்ட பல வகையான விலங்குகள் உள்ளன. சரணாலயத்தில் பல வகையான காட்டுப் பறவைகளும் காணப்படுகின்றன.
இடர்
1970 ஆம் ஆண்டில், காசுமீர் அரசாங்கம் தற்போது ஆபத்தான நிலையில் உள்ள அங்குல் மானின் 1300 எக்டேர் பிரதம குளிர்காலப் பகுதியில் செம்மறி ஆடு வளர்ப்புப் பண்ணையை உருவாக்கியது. இந்த செம்மறி ஆடு வளர்ப்பு பண்ணை இந்த பகுதியில் அங்குல் மான்களின் இயக்கத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது. தவிர, உள்ளூர் அல்லாத பக்கர்வால் இன மக்களின் கால்நடைகளின் அதிகப்படியான மேய்ச்சல் காரணமாக சரணாலயம் இடர்பாட்டுக்கு உள்ளாகியுள்ளது.
மேற்கோள்கள்
காசுமீர்
இந்திய வனவிலங்கு பாதுகாப்பு வலயங்கள்
இந்திய தேசியப் பூங்காக்கள்
|
592366
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D
|
அம்பாங்
|
அம்பாங் அல்லது அம்பாங் இலீர் (ஆங்கிலம்: Ampang அல்லது Ampang Hilir; மலாய்: Ampang Hilir) என்பது மலேசியா, கோலாலம்பூர், அம்பாங் மாவட்டத்தில் (Ampang District) அமைந்துள்ள ஒரு மாநகர்ப்பகுதி ஆகும். தித்திவாங்சா மக்களவை தொகுதியின் கீழ் ஒரு பகுதியாக உள்ளது.
கோலாலம்பூரில் உள்ள அம்பாங் சாலை மற்றும் அம்பாங் இலீர் ஆகியவற்றில் அம்பாங் எனும் பெயர் இருப்பதை அதன் அடையாளமாகக் காணலாம்.
வரலாறு
அம்பாங்கின் வரலாறு கோலாலம்பூரின் வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடையது. 1857-இல், சிலாங்கூர் சுல்தானகத்தின் அப்போதைய பிரதிநிதியான ராஜா அப்துல்லா, கிள்ளான் பள்ளத்தாக்கை ஈயச் சுரங்கத் தொழில்களுக்காக திறந்து விட்டார்.
நெகிரி செம்பிலான் லுக்குட் பகுதியில் இருந்து 87 சீனச் சுரங்கத் தொழிலாளர்கள் கிள்ளான் ஆறு வழியாகச் சென்று கோலாலம்பூரில் தரை இறங்கினர். பின்னர் அம்பாங்கிற்கு ஒரு காட்டுப் பாதை வழியாக சில மைல்கள் நடந்து சென்றனர். அம்பாங் பகுதியில் ஈயக் கனிமத்தைத் தேடத் தொடங்கினர்.
மலேரியா காய்ச்சல்
இருப்பினும், அங்கு சென்ற 87 சுரங்கத் தொழிலாளர்களில் 69 பேர்; ஒரு மாதத்திற்குள் மலேரியா காய்ச்சலினால் இறந்தனர். அதன் பின்னர் ராஜா அப்துல்லா மேலும் 150 பேரை ஈயக் கனிம தேடல் பணியைத் தொடர அங்கு அனுப்பினார். முதல் ஈயச்சுரங்கம் 1859-இல் தோற்றுவிக்கப்பட்டது.
அம்பாங்கில் ஈயச் சுரங்கங்களின் தோற்றம்; கோலாலம்பூரின் துரித வளர்ச்சிக்கு வழிவகுத்தது. ’அம்பாங்’ ("Ampang") என்ற பெயர் மலாய் மொழியில் ’அணை’ என்று பொருள்படும்; மற்றும் இந்த இடம் சுரங்கத் தொழிலாளர்கள் உருவாக்கிய அணைகளைக் குறிக்கும் வகையில் பெயரிடப்பட்டது.
கிள்ளான் கோம்பாக் ஆறு
வரலாற்றின் படி, 1857-ஆம் ஆண்டில், லும்பூர் ஆறு மற்றும் கிள்ளான் ஆறு சங்கமத்தில் அம்பாங் நகரம் நிறுவப்பட்டது. லும்பூர் ஆறு இப்போது கோம்பாக் ஆறு என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் அம்பாங் உருவான இடத்தில் இப்போது கோலாலம்பூர் ஜமேக் பள்ளிவாசல் (Kuala Lumpur Jamek Mosque) உள்ளது.
ஈயச் சுரங்கங்களில் வேலை செய்வதற்காகச் சீனர்கள் வருவதற்கு முன்னர், கோலாலம்பூர் நகரம் சில கடைகள் மற்றும் சில வீடுகளைக் கொண்ட ஒரு சிறிய குக்கிராமமாக இருந்தது. அம்பாங்கை கோலாலம்பூருடன் இணைக்க ஒரு சாலை அமைக்கப்பட்டது. அந்தச் சாலைதான் இன்றைய அம்பாங் சாலையாகும் (Jalan Ampang').
ராஜா அப்துல்லா
1857-ஆம் ஆண்டில், அப்போதைய கிள்ளான் சுல்தானின் பிரதிநிதியான ராஜா அப்துல்லா, அம்பாங்கில் ஈயச் சுரங்கங்களைத் திறப்பதற்காக நெகிரி செம்பிலான் லுக்குட் பகுதியில் இருந்து 87 சீன சுரங்கத் தொழிலாளர்களை அனுப்பினர். இதன் பின்னர்தான் கோலாலம்பூர் வளர்ச்சி அடையத் தொடங்கியது.
கிள்ளான் பள்ளத்தாக்கின் தொடக்கக் காலத்தில், ஈயச் சுரங்கங்கள் திறக்கப்பட்ட முக்கியமான இடங்களில் அம்பாங் ஒன்றாகும். "அம்பாங்" என்ற பெயர் மலாய் சொல்லான எம்பாங்கான் (அல்லது அம்பாங்கன்) எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டது. எம்பாங்கான் (Empangan'') என்றால் அணை என்று பொருள்படும்.
காட்சியகம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மலேசிய நகரங்கள்
சிலாங்கூர் நகரங்கள்
சிலாங்கூர்
|
592369
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
|
அஜ்மீர் மாநிலம்
|
அஜ்மீர் மாநிலம் (Ajmer State)1950 முதல் 1956 வரை அஜ்மீரை தலைநகராகக் கொண்டு இந்தியாவிற்குள் ஒரு தனி மாநிலமாக இருந்தது. அஜ்மீர் மாநிலம் 1950 ஆம் ஆண்டில் முன்னாள் மாகாணமான அஜ்மீர்-மேர்வாராவிலிருந்து உருவாக்கப்பட்டது. இது ஆகஸ்ட் 15, 1947 இல் இந்திய ஒன்றியத்தின் ஒரு மாகாணமாக மாறியது. இது இராசத்தான் மாநிலத்திற்குள் ஒரு நிலப்பகுதியை உருவாக்கியது. 1956 இல் மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தைத் தொடர்ந்து அது இராசத்தானுடன் இணைக்கப்பட்டது.
வரலாறு
அஜ்மீர் மாநிலம் அஜ்மீர்-மேர்வாரா பகுதியிலிருந்து உருவாக்கப்பட்டது.இது பிரித்தானிய இந்தியாவின் காலத்தில் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த மாகாணமாக இருந்தது. அஜ்மீர்-மேர்வாரா பகுதி 1818 இல் மராத்தியர்களிடமிருந்து ஆங்கிலேயர்களால் வாங்கப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, அஜ்மீர்-மேர்வாரா இந்திய ஒன்றியத்தின் ஒரு மாகாணமாக மாறியது.
1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்தியக் குடியரசிற்குள் அஜ்மீர் மாநிலம் என்று பெயரிடப்பட்ட "சி" மாநிலமாக நிறுவப்படும் வரை இது ஒரு மாகாணமாக இருந்தது. "சி" வகுப்பு மாநிலங்கள் மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்தன.
கலைப்பு
1956 இல், இந்தியாவின் மாநில எல்லைகள் மறுசீரமைக்கப்பட்டபோது, அது அப்போதைய இராசத்தான் மாநிலத்தின் ஒரு மாவட்டமாக மாறியது. அஜ்மீர் மாநிலம் 1 நவம்பர் 1956 அன்று இராசத்தான் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. முந்தைய செய்ப்பூர் மாவட்டத்தின் கிசன்கர் துணைப்பிரிவு அஜ்மீர் மாவட்டத்தை உருவாக்க அதனுடன் சேர்க்கப்பட்டது.
சான்றுகள்
இந்தியாவின் முன்னாள் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகள்
|
592381
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE
|
ஹரிபாவ் உபாத்யாயா
|
பண்டிட் ஹரிபாவ் உபாத்யாயா (Haribhau Upadhyaya) ஒரு இந்திய அரசியல்வாதியும் இந்திய சுதந்திர ஆர்வலரும் ஆவார். 1952 முதல் 1956 வரை அஜ்மீர் மாநிலத்தின் முதல்வராக இருந்தார்.
வாழ்க்கை
இவர் 1892 இல் மத்திய பிரதேசத்தின் இன்றைய தேவாஸில் உள்ள பௌராசா கிராமத்தில் பிறந்தார். 1952 இல், ஸ்ரீநகர் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக அஜ்மீர் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 24 மார்ச் 1952 முதல் 31 அக்டோபர் 1956 வரை அஜ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். 1957 இல் இராசத்தான் சட்டப் பேரவைக்கு கெக்ரி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 முதல் 1962 வரை இராசத்தான் அரசாங்கத்தில் நிதி அமைச்சராக பணியாற்றினார். அதே தொகுதியிலிருந்து இராசத்தான் சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 முதல் 1967 வரை இராசத்தான் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக பணியாற்றினார். 1966 இல் இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது
இறப்பு
இவர் ஆகஸ்ட் 25, 1972 இல் இறந்தார்
சான்றுகள்
1972 இறப்புகள்
1892 பிறப்புகள்
|
592388
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81
|
அஜ்மீரின் வரலாறு
|
அஜ்மீர் (Ajmer) என்பது மத்திய இராசத்தானிலுள்ள ஒரு வரலாற்றுப் பகுதியாகும் இது 11-12 ஆம் நூற்றாண்டுகளில் பிருத்விராஜ் சௌகானின் ஆட்சியின் போது சாகாம்பரி சௌகான்களின் இராச்சியத்தின் மையப் பகுதியாக இருந்தது..
இப்பகுதி இன்றைய அஜ்மீர் மாவட்டத்தை உள்ளடக்கியுள்ளது. மேற்கில் மார்வார், வடகிழக்கில் துந்தர், தென்கிழக்கில் அதோதி மற்றும் தெற்கில் மேவார் பகுதிகளால் எல்லைகளாக உள்ளது.
அஜ்மீர் மாகாணம்
முகலாய ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ், அஜ்மீர் ஒரு மத்திய சுபா (உயர்மட்ட மாகாணம்), தோராயமாக தற்போதைய இராசத்தானின் பெரும்பகுதி, அக்பரால் உருவாக்கப்பட்ட பன்னிரண்டு அசல் மாகாணங்களில் ஒன்றாகும். ( தில்லி (பின்னர் ஷாஜஹான்பாத்), ஆக்ரா (பின்னர் அக்பராபாத்), மால்வா, குசராத்து (சிந்து) மற்றும் முல்தான் சுபாக்கள்).
1818 ஆம் ஆண்டில், குவாலியர் மாநிலத்தின் மகாராஜாவான தௌலத்ராவ் சிந்தியா, அஜ்மீரை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார். மேலும் அது வடமேற்கு மாகாணங்களுக்கு மாற்றப்படும் வரை 1836 வரை பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1 ஏப்ரல் 1871 அன்று புதிய அஜ்மீர்-மேர்வாரா மாகாணம் (அஜ்மீர்-மேர்வாரா-கெக்ரி என்றும் அழைக்கப்படுகிறது) உருவாக்கப்பட்டது. இந்நிலை 15 ஆகஸ்ட் 1947 வரை தொடர்ந்தது. இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இங்கிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறினர். மேலும் அஜ்மீர்-மேர்வாரா இந்திய மேலாட்சி அரசுக்கு வழங்கப்பட்டது.
அஜ்மீர் மாநிலம்
1950 ஆம் ஆண்டில், அஜ்மீர் மாநிலம் "பகுதி சி" மாநிலமாக மாறியது. இது இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட தலைமை ஆணையரால் நிர்வகிக்கப்பட்டது. ஒரு குறிப்பிடத்தக்க காங்கிரசு தலைவரான ஹரிபாவ் உபாத்யாயா அஜ்மீர் மாநிலத்தின் முதல்வராக 24 மார்ச் 1952 முதல் 31 அக்டோபர் 1956 வரை இருந்தார்.
அஜ்மீர் மாநிலம் 1 நவம்பர் 1956 அன்று மாநில மறுசீரமைப்புச் சட்டம் (1956) ஃபாசல் அலி ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இராசத்தான் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. முந்தைய ஜெய்ப்பூர் மாவட்டத்தின் கிஷன்கர் துணைப்பிரிவு அஜ்மீர் மாவட்டத்தை உருவாக்க அதனுடன் சேர்க்கப்பட்டது.
இதனையும் காண்க
பிருத்திவிராச் சௌகான்
கோரின் முகம்மது
குறிப்புகள்
இராஜஸ்தான் வரலாறு
|
592407
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
|
ஆசிய பசிபிக் தென்னை சமூகம்
|
ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் சமூகம் (Asian and Pacific Coconut Community) என்பது தேங்காய் உற்பத்தி செய்யும் ஆசியா பசிபிக் நாடுகளில் உள்ள அரசுகளுக்கு இடையேயான சர்வதேச நிறுவனமாகும். ஆசிய பசிபிக் தென்னை சமூகம் நோக்கம் "தென்னை மரத் தொழில்துறையின் அனைத்து செயல்பாடுகளையும் மேம்படுத்துதல், ஒருங்கிணைத்தல் மற்றும் ஒத்திசைத்தல்" ஆகும்.
1968ஆம் ஆண்டு திசம்பர் 12ஆம் தேதி பேங்காக்கில், ஆசியத் தென்னை சமூகத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தம் இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பீன்சு ஆகிய நாடுகளால் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் இந்த நாடுகளினால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, ஆசியத் தென்னை சமூகம் 9 செப்டம்பர் 1969 அன்று ஜகார்த்தாவை தலைமையிடமாகக் கொண்டு நடைமுறைக்கு வந்தது. ஆசியாவிற்கு வெளியே உள்ள நாடுகள் இந்த அமைப்பில் சேர்ந்த போது, இதன் பெயர் "ஆசிய பசிபிக் தென்னை சமூகம்" என மாற்றப்பட்டது.
ஆசிய பசிபிக் தென்னை சமூகத்தின் உறுப்பு நாடுகள் உலகின் தேங்காய் உற்பத்தி மற்றும் தேங்காய் ஏற்றுமதியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளன. ஆசிய பசிபிக் தென்னை சமூகத்தின் உறுப்பு நாடுகள் மற்றும் இணைந்த தேதிகள் பின்வருமாறு (நட்சத்திரம் அடையாளம் 1968 ஒப்பந்தத்தை அங்கீகரித்தது என்பதைக் குறிக்கிறது):
நிர்வாக இயக்குநர்கள்
திரு. ஜி. பி. ரேயசு (1969–85)
திரு. பி. ஜி. புஞ்சிகோவா (1985–2000)
திரு. நோர்பெர்டோ போசெட்டா (2000–01)
முனைவர் பி. ரெத்தினம் (2002–05)
திரு. ரோமுலோ என். அரன்கான், இளையோர் (2006–13)
திரு. உரோன் என். சாலும் (2013–)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
ஆசிய மற்றும் பசிபிக் தேங்காய் சமூகம் : அதிகாரப்பூர்வ இணையதளம்.
1968 ஒப்பந்தத்தின் ஒப்புதல்கள் .
தென்னை
பன்னாட்டு அமைப்புகள்
|
592408
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
|
அப்சரித்து ஈரான்
|
அப்சரித்து ஈரான் (Afsharid Iran) அல்லது அப்சரித்து பேரரசு என்பது ஓர் ஈரானிய பேரரசு ஆகும். ஈரானின் வட கிழக்கு மாகாணமான குராசானில் துருக்கோமென் அப்சர் பழங்குடியினத்தால் ஆளப்பட்ட ஒரு பேரரசு ஆகும். 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்த அரசானது அப்சரித்து அரசமரபால் ஆளப்பட்டது. 1736ஆம் ஆண்டு இது நாதிர் ஷாவால் உருவாக்கப்பட்டது. சபாவித்து அரசமரபின் கடைசி உறுப்பினரை பதவியிலிருந்து நீக்கி விட்டு ஈரானின் ஷாவாக தன்னைத் தானே நாதிர் ஷா அறிவித்துக்கொண்டார்.
மேற்கோள்கள்
முன்னாள் நாடுகள்
பாரசீக மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்
|
592409
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
|
சுபியான் யுத்தம்
|
சுபியான் யுத்தம் (Battle of Sufiyan) என்பது 6 நவம்பர் 1605 அன்று நடைபெற்ற ஒரு யுத்தமாகும். 1603-1618இல் உதுமானிய-சபாவித்து போரின் போது இது நடைபெற்றது. பேரரசர் அப்பாஸ் தலைமையிலான சபாவித்துக்கள் தங்களை விட எண்ணிக்கையில் அதிகமான, நன்றாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த உதுமானிய இராணுவத்தை இந்த யுத்தத்தில் தோற்கடித்தனர். பேரரசர் அப்பாசின் பெரும் ராணுவ வெற்றிகளில் ஒன்றாக இது அமைந்தது. காலின் இம்பர் என்ற வரலாற்றாளரின் கூற்றுப் படி: "உதுமானியர்கள் அங்கேரியில் அடைந்த தோல்விகளை விட சுபியான் யுத்தத்தின் தோல்வியானது மிகப் பெரிய அழிவாக இருந்தது".
குறிப்புகள்
மேற்கோள்கள்
ஈரானின் வரலாறு
|
592419
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF
|
ஆசியச் சின்ன முள் சுண்டெலி
|
ஆசியச் சின்ன முள் சுண்டெலி (Asia Minor spiny mouse)(அகோமிசு சிலிக்கசு) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும்.
விளக்கம்
அகோமிசு சிலிக்கசு குறுகிய நிலப்பரப்பில் வாழும் சமூக கொறித்துண்ணி. இவை பெரிய குழுக்களாக வாழ்கிறது. தலை மற்றும் உடல் நீளம் வரையும் வாலின் நீளம் வரையும் வளரக்கூடியது. இதன் உடல் எடை 48 கிராம் வரை இருக்கும்.
உடலின் மேல் பக்கம் அடர் சாம்பல் நிறமாகவும், ஊதா நிற பிரதிபலிப்புகளுடன் காணப்படும். உடலின் கீழ்ப்பகுதி மஞ்சள்-வெள்ளை நிறத்துடன் பக்கவாட்டுப்பகுதி வெளிர் பழுப்பு நிறத்திலிருக்கும். வால் முடியற்றது, செதில்களுடன் கூடியது, தலை மற்றும் உடலை விடக் குறுகியது. இதன் மரபணு நிறப்புரி எண்ணிக்கை 2n = 36.
கொல்லைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த எலிகள் இனப்பெருக்கம் செய்து சுமார் நான்கு ஆண்டுகள் வாழ்கின்றன. இந்த சிற்றினம் முன்னர் அழிந்து வரும் நிலையில் இருப்பதாகக் கருதப்பட்டதால், இதைப் பாதுகாக்கத் திட்டம் ஒன்று நடைமுறையில் உள்ளது. துருக்கியிலிருந்து இந்த சுண்டெலியினை ஏற்றுமதி செய்வதற்கு அரசாங்க அனுமதி தேவை. உலகில் உள்ள சில உயிரியல் பூங்காக்களில் மட்டுமே இந்த இனத்தைச் சேர்ந்த எலிகள் காணப்படுகின்றன (செஸ்டர், ரிகா, ப்ராக், தாலின் மற்றும் ஹெல்சின்கி மிருகக்காட்சிசாலை).
இந்த சிற்றினம் கெய்ரோ முள் சுண்டெலி (அகோமைசு காகிரினியசு) மற்றும் சைப்ரசு முள் சுண்டெலி (அகோமைசு நேசியோடிசு) ஆகியவற்றுடன் தொடர்புடையது, ஆனால் குறிப்பிடத்தக்க உருவ வேறுபாடுகள் காணப்படுகின்றன.
பரவல்
ஆசியச் சின்ன முள் சுண்டெலி சிற்றினம் துருக்கியில் மட்டுமே காணப்டுகிறது. இது துருக்கியின் தெற்கு கடற்கரையில் மெர்சினின் தென்மேற்கில் அமைந்துள்ள துருக்கிய நகரமான சிலிப்கேக்கு கிழக்கே 17 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் மட்டுமே காணப்படுகிறது.
வாழ்விடம்
ஆசியச் சின்ன முள் சுண்டெலியின் இயற்கை வாழ்விடம் மிதமான காடுகள்; ஆனால் இந்த சிற்றினம் மனித குடியிருப்புகளுக்கு அருகிலும் வாழ்கிறது.
பாதுகாப்பு நிலை
அ. சிலிகசு முன்பு மிக அருகிய இனமாகப் பட்டியலிடப்பட்டது, ஆனால் இப்போது வகைப்பாட்டியல் சிக்கல்கள் காரணமாக தரவு போதாது சிற்றினமாகக் கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
உலகின் பாலூட்டி இனங்கள்
asia-minor-spiny-mouse/acomys-cilicicus Asia Minor spiny mouse (Acomys cilicicus)
கொறிணிகள்
|
592422
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88
|
இந்திய சமயங்களில் விலங்குரிமை
|
இந்து, சமணம், மற்றும் பௌத்தம் உள்ளிட்ட இந்தியச் சமயங்களில் விலங்குரிமை பற்றிய சிந்தனைகள் இச்சமயங்களின் அடிப்படைத் தத்துவமான அகிம்சைக் கோட்பாட்டிலிருந்து எழுகின்றன.
மனிதர்களைப் போலவே விலங்குகளும் ஆன்மாவைக் கொண்டிருக்கின்றன என்று இந்து சமயம் கூறுகிறது. இதன்படி உணர்திற உயிரினங்கள் இறந்த பின்னர் மீண்டும் மனிதனாகவோ அல்லது வேறு விலங்காகவோ மறுபிறவி எடுக்க வல்லவை என்று இந்துக்களால் நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கைகளின் விளைவாக இந்துக்கள் பலரும் சைவ உணவுமுறையைக் கடைப்பிடிப்பவர்களாக உள்ளனர். அகிம்சைக் கோட்பாட்டினைக் இந்து சமயத்தைக் காட்டிலும் கடுமையாக எடுத்துரைக்கும் சமணக் கோட்பாடு சைவ உணவுமுறையை முற்றிலும் கட்டாயமாக ஆக்குகிறது. இந்து, சமண மதங்களைப் போலவே மகாயான பௌத்தமும் விலங்குகளைக் கொல்வதைத் தடை செய்வதால் மஹாயான பௌத்தர்களும் சைவ உணவுமுறையைப் பின்பற்றுபவர்களாக உள்ளனர்.
இந்து மதம்
அனைத்து உயிரினங்களிலும் கடவுளின் ஒரு பகுதி வாழ்வதாகவும் அதுவே ஆத்மா என்று அழைக்கப்படுவதாகவும் இந்து மதம் போதிக்கிறது. இதன் காரணமாகவே விலங்குகள் புனிதமாகக் கருதப்பட்டு மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்று இந்துக் கோட்பாடுகள் கற்பிக்கின்றன.
இந்து மதத்தில் புலி, யானை, எலி என பலதரப்பட்ட விலங்குகளும் போற்றப்படுகின்றன. குறிப்பாக, பசு இறையின் உருவாகப் போற்றப்படுகிறது.
அனைத்து உயிரினங்களின் மீதும் கருணை காட்ட வேண்டுமென்பது காந்தியடிகளின் போதனைகளில் மிக முக்கியமானதாகும். அவர் விலங்குப் பரிசோதனையையும் விலங்கு வன்கொடுமையையும் எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமண மதம்
கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து ஜைன சமூகங்களும் காயமுற்ற விலங்குகளையும் ஆதரவற்ற விலங்குகளையும் பராமரிப்பதற்காக விலங்கு மருத்துவமனைகளை நிறுவியுள்ளன. சமணர்கள் பலரும் வதைகூடங்களிலிருந்து விலங்குகளை மீட்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
பௌத்த மதம்
"நாம் மற்றவர்களுக்குத் துன்பங்களை தராதிருந்தால் மட்டுமே நாம் துன்பத்திலிருந்துத் தப்பிக்க முடியும்" என்று மஹாயான பௌத்தம் போதிக்கிறது. இதன் விளைவாக மகாயான பௌத்தர்கள் சைவ உணவுமுறையினைக் கடைபிடிப்பவர்களாக உள்ளனர்.
இவற்றையும் பார்க்க
இசுலாத்தில் விலங்குகள்
கிறித்தவ சைவ உணவுமுறை
மேற்கோள்கள்
பௌத்த தத்துவங்கள்
இந்துத் தத்துவங்கள்
சைனம்
அறப் போராட்டம்
காந்தியம்
விலங்குரிமை
|
592426
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
|
மின்னணு சுருட்டு
|
மின்னணு சுருட்டு அல்லது வேப் (உறிஞ்சுதல்) [note 1] என்பது புகையிலை புகைப்பதை உருவகப்படுத்தும் ஒரு சாதனம் ஆகும். இது ஒரு அணுவாக்கி, மின்கலம் போன்ற சக்தி மூலத்தையும், திரவத்தால் நிரப்பப்பட்ட கெட்டி அல்லது தொட்டி போன்ற கொள்கலனையும் கொண்டுள்ளது. புகைக்கு பதிலாக, பயனர் நீராவியை உள்ளிழுக்கிறார். எனவே, மின்-சுருட்டு பயன்படுத்துவது பெரும்பாலும் " வாப்பிங் (உறிஞ்சுதல்) " என்று அழைக்கப்படுகிறது. அணுவாக்கி என்பது ஒரு வெப்பமூட்டும் உறுப்பு ஆகும், இது மின்-திரவ எனப்படும் திரவக் கரைசலை ஆவியாக்குகிறது, இது சிறிய நீர்த்துளிகள், நீராவி மற்றும் காற்றின் நுண்ணிய துகளில் (ஏரோசோலில்) விரைவாக குளிர்கிறது. மின்னணு-சுருட்டுகள் உறிஞ்சுதல்(பஃப், ஆங்:pup) அல்லது ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. சில பாரம்பரிய சிகரெட்டுகள் போலவே இருக்கும், மற்றும் பெரும்பாலான வகைகள் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை. நீராவி முக்கியமாக ப்ரோப்பிலீன் கிளைகோல் மற்றும்/அல்லது கிளிசரின், பொதுவாக நிகோடின் மற்றும் சுவையூட்டல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பயனர் நடத்தை உட்பட பல விஷயங்களைப் பொருத்து அதன் சரியான கலவை மாறுபடும். [note 3]
புகைபிடிப்பதை விட வாப்பிங் மிகவும் குறைவான தீங்கு விளைவிக்கும், ஆனால் இதுவும் தீங்கு விளைவிக்க கூடியவையாகும். சிகரெட் புகையை விட மின்னணு-சிகரெட் ஆவியில் குறைவான நச்சுகள் உள்ளன. சிகரெட் புகையில் இல்லாத வேறுசில தீங்கு விளைவிக்கும் பொருட்களின் தடயங்கள் இதில் உள்ளன.
நிகோடின் மிகவும் அடிமையாக்கும் பொருளாகும். நிக்கோடினை உட்கொள்ளும் பயனர்கள் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் நிக்கோடினைச் சார்ந்து இருக்கிறார்கள். இன்றையளவில் நீண்ட காலத்திற்கு மின்னணு-சிகரெட்டுகள் எவ்வளவு தீங்கு விளைவிக்கின்றன என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியாது ஏனென்றால், பலர் புகைபிடிக்கும் போது இருமுறைகளையும் பின்பற்றுவதால் வழமையான புகைபிடிப்பதன் விளைவுகளிலிருந்து மின்னணு முறையில் புகைப்பிடிப்பதன் விளைவுகளைப் பிரிப்பது கடினம். மின்-சிகரெட்டுகள் போதுமான அளவு அல்லது நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படவில்லை.
புகைபிடிப்பதை விட்டுவிட முயற்சிப்பவர்களுக்கு, பரிந்துரைக்கப்பட்ட நிகோடின் மாற்று சிகிச்சையுடன் (NRT) இ-சிகரெட்டைப் பயன்படுத்துவது அதிக விலகல் விகிதத்திற்கு வழிவகுக்கிறது. மருத்துவ உதவியின்றி புகைபிடிப்பதை நிறுத்த முயற்சிப்பவர்களுக்கு, ஆதாரங்கள் தரம் குறைவாக இருப்பதால், மின்-சிகரெட் வெளியேறும் விகிதத்தை உயர்த்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கட்டுமானம்
ஒரு மின்னணு சுருட்டு ஒரு அணுவாக்கி, பேட்டரி போன்ற சக்தி மூலத்தையும், கார்ட்ரிட்ஜ் அல்லது டேங்க் போன்ற மின் திரவத்திற்கான கொள்கலனையும் கொண்டுள்ளது.
மின்-சிகரெட்டுகள் காலப்போக்கில் மேம்பட்டுள்ளன, மேலும் வெவ்வேறு வடிவமைப்புகள் தலைமுறைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. முதல் தலைமுறை மின்-சிகரெட்டுகள் பாரம்பரிய சிகரெட்டுகளைப் போல தோற்றமளிக்கின்றன, மேலும் அவை "சிகாலிக்ஸ்" என்று அழைக்கப்படுகின்றன. இரண்டாம் தலைமுறை சாதனங்கள் பெரியதாகவும், பாரம்பரிய சிகரெட்டுகளைப் போல குறைவாகவும் இருக்கும். மூன்றாம் தலைமுறை சாதனங்களில் மெக்கானிக்கல் மோட்ஸ் மற்றும் மாறி வோல்டேஜ் சாதனங்கள் ஆகியவை அடங்கும். நான்காவது தலைமுறையில் சப்-ஓம் டாங்கிகள் (அதாவது 1 ஓம்க்கும் குறைவான மின் எதிர்ப்பைக் கொண்டிருக்கும்) மற்றும் வெப்பநிலை கட்டுப்பாடு ஆகியவை அடங்கும். முந்தைய தலைமுறைகளில் காணப்படும் ஃப்ரீ-பேஸ் நிகோடினைக் காட்டிலும், புரோட்டானேட்டட் நிகோடினைப் பயன்படுத்தும் பாட் மோட் சாதனங்களும் உள்ளன, அவை அதிக நிகோடினை வழங்குகிறது.
மின் திரவம்
இ-சிகரெட் போன்ற நீராவி பொருட்களில் பயன்படுத்தப்படும் கலவை மின் திரவம் என்று அழைக்கப்படுகிறது. மின் திரவ சூத்திரங்கள் பரவலாக வேறுபடுகின்றன. ஒரு பொதுவான மின்-திரவமானது புரோபிலீன் கிளைகோல் மற்றும் கிளிசரின் (95%) மற்றும் சுவைகள், நிகோடின் மற்றும் பிற சேர்க்கைகள் (5%) ஆகியவற்றால் ஆனது. சுவைகள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ, அல்லது கரிமமாகவோ இருக்கலாம். ஃபார்மால்டிஹைட் மற்றும் உலோக நானோ துகள்கள் போன்ற 80 க்கும் மேற்பட்ட தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மின் திரவங்களில் தடய அளவுகளில் கண்டறியப்பட்டுள்ளன. பல மின்-திரவ உற்பத்தியாளர்கள் உள்ளனர், மற்றும் 15,000 க்கும் மேற்பட்ட சுவைகள் உள்ளன.
பெரும்பாலான நாடுகள் மின் திரவங்களில் என்ன இருக்க வேண்டும் என்பதை ஒழுங்குபடுத்துகின்றன. அமெரிக்காவில், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) கட்டாய உற்பத்தித் தரநிலைகள் மற்றும் அமெரிக்க மின் திரவ உற்பத்தித் தரநிலைகள் சங்கம் (AEMSA) பரிந்துரைத்த உற்பத்தித் தரநிலைகள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் தரநிலைகள் EU புகையிலை தயாரிப்புகள் ஆணையில் வெளியிடப்பட்டுள்ளன.
பிரபலம்
2003 இல் சந்தையில் நுழைந்ததிலிருந்து, மின்-சிகரெட் பயன்பாடு வேகமாக உயர்ந்துள்ளது. 2011 ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 7 மில்லியன் வயதுவந்த மின்-சிகரெட் பயனர்கள் இருந்தனர், 1.1 பில்லியன் சிகரெட் புகைப்பவர்களுடன் ஒப்பிடும்போது 2020 இல் 68 மில்லியனாக அதிகரித்தது. 2021 இல் மின்-சிகரெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 82 மில்லியனாக அதிகரித்தது. இந்த அதிகரிப்புக்கு காரணமாக இலக்கு சந்தைப்படுத்தல், வழக்கமான சிகரெட்டுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த விலை மற்றும் புகையிலையுடன் ஒப்பிடும்போது மின்-சிகரெட்டுகளின் சிறந்த பாதுகாப்பு சுயவிவரம் ஆகியவை கூறப்படுகிறது. சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மின்-சிகரெட் பயன்பாடு அதிகமாக உள்ளது, சீனாவில் அதிக பயனர்கள் உள்ளனர்.
குறிப்புகள்
மேற்கோள்கள்
காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்
21-ஆம் நூற்றாண்டுக் கண்டுபிடிப்புகள்
சீனக் கண்டுபிடிப்புக்கள்
|
592428
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
|
வெள்ளைப்பிட்ட உழவாரன்
|
வெள்ளைப்பிட்ட உழவாரன் அல்லது வெள்ளைப்பிட்ட ஊசிவால் உழவாரன் (white-rumped spinetail or white-rumped needletail) (உயிரியல் பெயர்: Zoonavena sylvatica) என்பது வங்காளதேசம், இந்தியா ( மேற்குத் தொடர்ச்சி மலைகள் ) மற்றும் நேபாளத்தின் காடுகளில் காணப்படும் ஒரு உழவாரன் இனம் ஆகும். இது பெரும்பாலும் காடுகளின் நடுவில் உள்ள நீர்நிலைகளில் காணப்படுகிறது.
விளக்கம்
வெள்ளைப்பிட்ட உழவாரன் பறவையானது ஊர்க்குருவியை விட அளவில் சிறியது. சுமார் 11 செ.மீ நீளமிருக்கும். அலகு கறுப்பாகவும், விழிப்படலம் ஆழ்ந்த பழுப்பாகவும், கால்கள் கறுப்பாகவும் இருக்கும். உடலின் மேற்பகுதி கறுப்பாகவும் பிட்டம் வெள்ளையாகவும் இருக்கும். மோவாய், தொண்டை, மார்பு ஆகியன சாம்பல் பழுப்பாக இருக்கும். அடி வயிறும் வாலடியும் வெண்மையாக இருக்கும். இது பொத்தோற்றத்தில் வீட்டு உழவாரனை ஒத்திருக்கும் இதனை வெண்மையான பிட்டமும் வாலடியையும் கொண்டு பிரித்து அறியலாம்.
நடத்தை
வெள்ளைப்பிட்ட உழவாரன்கள் 20 முதல் 50 வரையான பறவைகள் கூட்டமாக பறந்து இரைதேடும். காடுகளின் மேலும், பல்வெளிகளையடுத்தும், காட்டாறுகளைச் சார்ந்தும் இவை திரியக்காணலாம். அடி மரங்களில் காணப்படும் பொந்துகளில் இவை கூட்டமாகச் சென்று அடையும். பறக்கும் பூச்சிகள், வண்டுகள் முதலியன இதன் உணவாகும். பறக்கும்போது சிக், சிக் என கத்தியபடி பறக்கும்.
மேற்கோள்கள்
நேபாளப் பறவைகள்
இந்தியப் பறவைகள்
தென்னிந்தியப் பறவைகள்
|
592434
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D
|
வீட்டு உழவாரன்
|
வீட்டு உழவாரன் ( house swift, உயிரியல் பெயர்; Apus nipalensis) என்பது அபோடிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு உழவாரன் இனம் ஆகும். இது யப்பான், நேபாளம், தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது. இது பறக்கும்போது அவற்றின் மூளையின் அரைக்கோளங்களை மாறி மாறி நிறுத்துவதன் மூலம் நீண்ட தூரம் பறக்கும் திறன் கொண்டது. 2012 மேயில், பிரிட்டிஷ் கொலம்பியாவின் லாட்னரில் இதன் ஒரு மாதிரி கண்டுபிடிக்கப்பட்டது, இது வட அமெரிக்காவில் அப்போதுதான் முதலில் அறியப்பட்டது. (2012 பிரிட்டிஷ் கொலம்பியா பதிவு "ஏற்றுக்கொள்ளப்படவில்லை; இது தொடர்புடைய அரிய பறவைக் குழுவின் தோற்றம் நிச்சயமற்றது" - இது ஒரு கொள்கலன் முனையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இறந்த பறவை ஆகும்).
இது முன்னர் நாட்டு உழவாரனின் கிளையினமாகக் கருதப்பட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
BirdLife Species Factsheet
பறவை ஆராய்ச்சி - வீட்டு உழவாரன்
தென்கிழக்காசியப் பறவைகள்
யப்பானியப் பறவைகள்
நேபாளப் பறவைகள்
உழவாரன்கள்
தென் சீனப் பறவைகள்
தைவான் பறவைகள்
|
592437
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%28%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%29
|
நிலநடுக்கம் (இயற்கை நிகழ்வு)
|
நிலநடுக்கம் அல்லது நில அதிர்வு (quake) என்பது கோள் அல்லது நிலா அல்லது விண்மீன் போன்ற ஒரு வான்பொருளின் மேற்பரப்பு அதிரத் தொடங்குவது ஆகும். பொதுவாக நில அதிர்வு அலைகள், ஆற்றல் திடீரென்று வெளியிடப்படுவதால் ஏற்படும் விளைவாகும்.
நிலநடுக்கங்களின் வகைகள் பின்வருமாறு:
புவி நிலநடுக்கம்
புவி நிலநடுக்கம் என்பது புவியின் மேற்பரப்பில் சேமிக்கப்படும் ஆற்றலை திடீரென்று வெளியிடப்படுவதன் விளைவாக ஏற்படும் ஒரு நிகழ்வாகும் , இது நில அதிர்வு அலைகளை உருவாக்குகிறது. புவியின் மேற்பரப்பில் நிலநடுக்கங்கள் நிலத்தின் அதிர்வு அல்லது இடப்பெயர்ச்சி மூலம் தங்களை வெளிப்படுத்தலாம். சில நேரங்களில் இதுசுனாமியையும் ஏற்படுத்தலாம் , இது உயிர் இழப்புக்கும் சொத்துக்கள் அழிவுக்கும் வழிவகுக்கும். நிலநடுக்கம் என்பது புவியின் மேலோட்டுத் தட்டுகள் மோதிக் கொண்டு தரையில் தகைவை(அழுத்தச் செறிவை) ஏற்படுத்துவதால் ஏற்படுகிறது. தரையின் தகைவால் ஏற்படும் திரிபு பெரிதாகி,,பாறைகள் பிளந்து வழிவிட, தளப் பிளவுப் பிழைகள் ஏற்படுகின்றன.
நிலா நிலநடுக்கம்
நிலா நிலநடுக்கங்கள் புவி நில நடுக்கங்களை ஒத்தவையே. ஆனால், இவை வேரு கரணங்கலால் ஏற்படுகின்றன. இவை முதலில் அப்பல்லோ விண்கலப் பயணிகளால் கன்டுபிடிக்கப்பட்டன.. மிகப் புரிய நிலா நிலநடுக்கங்கள் மிகப் பெரிய புவி நில நடுக்கங்களை விட மிகமிக வலிவு குறைந்தவையே. ஆனால், அவற்றின் நேரம் ஒரு மணி வரை அமையலாம். இது நிலாவில் இந்த அதிர்வுகளை ஒடுக்கவல்ல காரணிகள் இல்லாமையால் நீடிக்கிறது.
நிலா நிலநடுக்கங்கள் பற்றிய தகவல்கள் 1969 முதல் 1972 வரை சந்திரனில் வைக்கப்பட்ட நில அதிர்வு அளவீடுகளிலிருந்து தெரியவருகின்றன. அப்பல்லோ 12, 15, 16 பயணங்களால் வைக்கப்பட்ட கருவிகள் 1977 இல் நிறுத்தப்படும் வரை சரியாக செயல்பட்டன.
குறைந்தது நான்கு வகையான நிலநடுக்கங்கள் உள்ளன:
ஆழமான நிலநடுக்கங்கள் (மேற்பரப்புக்கு 700 கி. மீ. கீழே) - அநேகமாக அலைகளால் தோற்றம்
விண்கல் தாக்க அதிர்வுகள்
வெப்ப நிலநடுக்கங்கள் (இரண்டு வார சந்திர இரவுக்குப் பிறகு சூரிய ஒளி திரும்பும்போது குளிர்ந்த சந்திர மேலோடு விரிவடைகிறது)
ஆழமற்ற நிலநடுக்கங்கள் (மேற்பரப்புக்கு 50 - 220 கிலோமீட்டர் கீழே)
மேலே குறிப்பிடப்பட்ட முதல் மூன்று வகை நிலா நிலநடுக்கங்கள் இலேசான நிலநடுக்கங்களாக இருக்கலாம் , இருப்பினும் இந்தமேலீடான நிலநடுக்கம் உடல் அலை அளவுகோல் அளவில் mB=5.5 வரை பதிவு செய்யலாம். 1972 ஆம் ஆண்டுக்கும் 1977 ஆம் ஆண்டுக்கும் இடையில் 28 மேலீடான நிலா நிலநடுக்கங்கள் காணப்பட்டன. ஆழமான நிலநடுக்கங்கள் சில நேரங்களில் கூடுகள் அல்லது கொத்துகள் என்று குறிப்பிடப்படும் தனிமைப்படுத்தப்பட்ட கிலோமீட்டர் அளவிலான நிலத்திட்டுகளுக்குள் ஏற்படுகின்றன.
செவ்வாய் நிலநடுக்கம்
செவ்வாய்க் கோளில் ஏற்படும் நிலநடுக்கம் செவ்வய் நிலநடுக்கம் ஆகும். செவ்வாயில். ஒவ்வொரு மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடும் என்று 2012 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்த பரிந்துரை செவ்வாய்க் கோளை மேலோட்டுத் தட்டுகளின் வரம்புகள் குறித்து அப்போது கிடைத்த சான்றுகளுடன் தொடர்புடையது. சாத்தியமான செவ்வாய் நிலநடுக்கம் என்று நம்பப்படும் ஒரு நடுக்கம் நாசாவின் இன்சைட் லேண்டரால் ஏப்ரல் 6,2019 அன்று முதன்முதலில் அளவிடப்பட்டது , இது தரையிறங்கியின் முதன்மை அறிவியல் இலக்குகளில் ஒன்றாகும்.
வெள்ளி நிலநடுக்கம்
வெள்ளி நிலநடுக்கம் என்பது வெள்ளிக் கோளில் ஏற்படும் நிலநடுக்கமாகும்.
ஒரு வெள்ளி நிலநடுக்கம் ஒரு புதிய நிலத் திட்டையோ நிலச்சரிவையோ அல்லது இரண்டையுமோ உருவாக்கலாம். மெகல்லன் விண்கலம் 1990 நவம்பரில் வெள்ளியைச் சுற்றி முதலில் பறந்தபோது கண்ட நிலச்சரிவு பற்றிய படம் எடுக்கப்பட்டது. மெகெல்லன் இரண்டாவது முறையாக 1991 ஜூலை 23 ,அன்று வெள்ளியைச் சுற்றி வந்தபோதும் கண்ட மற்றொரு படம் எடுக்கப்பட்டது. ஒவ்வொரு படமும் 24 கிலோமீட்டர் (15 மைல்) குறுக்களவும் நீளமும் கொண்டு இருந்தது. இது 2 மைல் தெற்கு அகலாங்கிலும் 74 மைல் கிழக்கு நெட்டாங்கிலும் அமைந்து இருந்தது. இந்த மகெல்லன் பட இணை, அப்ரோடைட்டு டெர்ரா எனும் ஒரு செஞ்சரிவான பள்ளத்தாக்கிற்குள் அமைந்த ஒரு பகுதியைக் காட்டுகிறது , இப்பகுதி பல பிளவுப்பிழை முறிவுகளால் ஆனதாகும் .
சூரிய நிலநடுக்கம்
சூரியன் மீது ஏற்படும் நிலநடுக்கமே சூரிய நிலநடுக்கம் ஆகும்.
சூரிய நிலநடுக்கங்களால் உருவாகும் நில அதிர்வு அலைகள் ஒளிக் கோளத்தில் நிகழ்கின்றன , மேலும் அவை மங்கி மறைவதற்கு முன்பு மணிக்கு 35,000 கிலோமீட்டர் (22,000 ) வேகத்தில் 400,000 கிலோமீட்டர் தொலைவு வரை பயணிக்க வல்லன.
சூரிய நிலந்டுக்கம் 1996 ஜூலை 9 அன்று X2.6 வகை சூரிய வெடிப்பால் சூரியப் புறணிப் பொருண்மை உமிழ்வுடன் ஏற்பட்டது. நேச்சர் இதழில் இதை வெளியிட்ட ஆய்வாளர்கள் இந்த சூரிய ந்டுக்கம் புவிநிலந்டௌக்க அளவுகோலில் 1103 இரிக்ட்டர் அளவுக்குச் சமமானது எனக் கருத்துரைத்துள்ளனர். இதுபுவியில் 1906 இல் சான் பிரான்ன்சிசுக்கோவில் பேரழிவை உருவாக்கிய நிலநடுக்கம் வெளியிட்ட ஆற்றலைப் போல தோராயமாக, y 40,000 மடங்கை விட பெரியதும் புவியில் பதிவாகிய நிலநடுக்கங்களை விட பெரியதும் ஆகும். இந்த நிகழ்வு100–110 பில்லியன் டன் TNT அளவு ஆற்றலுக்கும் அல்லது 2 மில்லியன் இடைநிலை அளவு அணுகுண்டுகளுக்கும் சமமானதாகும். ஓர் இடைநிலை சூரியப் புறணி வெடிப்பு எப்படி இவ்வளவு பேராற்றல் நடுக்க அதிர்வலைகளை உருவாக்கி வெளியிட முடியும் என்பது விளங்கவில்லை.
சூரியனை ஆய்வு செய்வதன் ஒரு பகுதியாக எசா(ESA)வும் நாசாவும் அனுப்பிய சோகோ(SOHO) விண்கலம் சூரிய நிலநடுக்கங்களைப் பதிவு செய்கின்றது.
விண்மீன் நிலநடுக்கம்
விண்மீன் நிலநடுக்கம் என்பது ஒரு நொதுமி விண்மீன் புறணி அல்லது மேலோடு புவி நிலநடுக்கத்தை ஒத்த திடீர் சரிசெய்தலால் ஏற்படும் ஒரு வானியற்பியல் நிகழ்வு ஆகும். விண்மீன் நிலநடுக்கங்கள் இரண்டு வெவ்வேறு இயங்கமைப்புகளின் விளைவாக ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. ஒன்று , நொதுமி விண்மீன் புறணியில் அல்லது மேலோட்டில் செலுத்தப்படும் மிகப்பெரிய அழுத்தங்கள் உருவாக்கும் உட்புற காந்தப்புலங்களில் முனைவான திருப்பங்களால் ஏற்படுகிறது. இரண்டாவது காரணம் தற்சுழற்சி இறக்கத்தின் விளைவாகும். நொதுமி விண்மீன் சட்டக இழுவை காரணமாக நேரியல் வேகத்தை இழப்பதால் , அப்போதுள்ள ஆற்றலின் வடிதல் சுழலும் காந்த இருமுனையமாகி மேலோட்டில் பேரளவு அழுத்தத்தை உருவாக்குகிறது. அது ஒரு குறிப்பிட்ட அளவைக் கடந்தவுடன் அது சுழலாத சமநிலைக்கு நெருக்கமான ஒரு வடிவத்திற்கு, ஒரு முழுமையான கோள வடிவத்துக்குத் தன்னைச் சரிசெய்கிறது.. உண்மையான மாற்றம் மைக்ரோமீட்டர்கள் அல்லது அதற்கும் குறைவான அளவிலேயே இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், இது ஒரு நொடியின் ஒரு மில்லியனுக்கும் குறைவான நேரத்தில் நிகழ்கிறது.
மிக பெரிய பதிவு செய்யப்பட்ட விண்மீன் நிலநடுக்கம் ,2004, திசம்பர் 27 அன்று மீச்செறிவு உடுக்கண வான்பொருளான SGR 1806 - 20 இல் இருந்து கண்டறியப்பட்டது. புவியில் இருந்து 50,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 1037 கிலோவாட்டு திறனுக்குச் சமமான காமா கதிர்களை வெளியிட்டது.புவியிலிருந்து 10 ஒளி ஆண்டுகள் தொலைவில் இது நிகழ்ந்திருந்தால் , இந்த நிலநடுக்கம் புவியில் மிகவும் பாரிய பேரழிவைத் தூண்டியிருக்கலாம்.
அறிவன்கோள்(புதன்) நிலநடுக்கம்
அறிவன் நிலநடுக்கம் என்பது அக்கோளில் ஏற்படும் நிலநடுக்கமாகும்.
2016 ஆம் ஆண்டில் , கோளின் உட்புற குளிர்ச்சித் தாக்க அதிர்வுகள் அல்லது வெப்பம் அல்லது மையத்திலிருந்து கவசத்திலிருந்து எழும் அனற்குழம்பு காரணமாகனாறிவன் கோளில் நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அதன் மேற்பரப்பில் விண்கலங்கள் எதுவும் தரையிறங்கவில்லை என்பதால் இது இன்னும் அளவிடப்படவில்லை அல்லது நிறுவப்படவில்லை.
மேலும் காண்க
காந்த மீன்
நொதுமி விண்மீன்
துடிமீன்
மென்மையான காமா மீள்பதிவி
மேற்கோள்கள்
சூரியன்
கோள் அறிவியல்
நிலநடுக்கவியல்
நிலா சார்ந்த அறிவியல்
புவி
விண்மீன்
செவ்வாய்க் கோள்
புதன்
நிலா
|
592439
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D
|
மென்காமாக் கதிர்மீன்
|
மென் காமாக் கதிர்மீன் (soft gamma repeater) (SGR) என்பது காமா கதிர்கள், எக்ஸ் - கதிர்களின் பெருவெடிப்புகளை ஒழுங்கற்ற இடைவெளியில் உமிழும் வான்பொருள் ஆகும் , இவை ஒரு வகை காந்த விண்மீனகள் அல்லது நொதுமி விண்மீன்கள் என்று ஊகிக்கப்படுகின்றன , அவற்றைச் சுற்றி தொல்படிவ வட்டுகள் உள்ளன.
வரலாறு.
மார்ச் 5,1979 அன்று ஒரு திறன்வாய்ந்த காமா - கதிர் வெடிப்பு காணப்பட்டது. சூரிய மண்டலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பல நோக்கீட்டாளர்கள், சூரிய மண்டலத்தின் சற்று வேறுபட்ட நேரங்களில் வெடிப்பைக் கண்டதால் , அதன் திசையை தீர்மானிக்க முடிந்துள்ளது. மேலும் இது பெரிய மெகெல்லானிக் முகிலில் ஒரு மீவிண்மீன் வெடிப்பு எச்சத்திற்கு அருகில் இருந்து தோன்றியதாகக் காட்டப்பட்டது.
இது ஓரரியல்பு காமாக் கதிர் வெடிப்பு அல்ல என்பது காலப்போக்கில் தெளிவாகியது. மென்காமாக் கதிர், வன் எக்சுக்கதிர் வரம்பில் ஒளியன்கள் குறைவான ஆற்றலைக் கொண்டிருந்தன , மேலும் அதே பகுதியிலிருந்து மீண்டும் மீண்டும் வெடிப்புகள் வந்தன.
நாசாவின் மார்ஷல் விண்வெளி விமான மையத்தில் உள்ள பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சி சங்கத்தின் (யு. எஸ். ஆர். ஏ) வானியலாளர் கிறிஸ்ஸா கவுலியோடௌ மென்மையான காமா ரிபீட்டர்கள் காந்தங்கள் என்ற கோட்பாட்டை சோதிக்க முடிவு செய்தார். கோட்பாட்டின் படி , வெடிப்புகள் பொருளின் சுழற்சியை மெதுவாக்கும். 1998 ஆம் ஆண்டில் மென்மையான காமா ரிபீட்டர் எஸ். ஜி. ஆர் 1806 - 20 இன் கால இடைவெளியை கவனமாக ஒப்பிட்டார். 1993 ஆம் ஆண்டிலிருந்து இந்த காலம் 0.8 வினாடிகள் அதிகரித்துள்ளது , மேலும் இது 8,1010 டெஸ்லா (8,1014 காஸ்) காந்தப்புல வலிமையுடன் ஒரு காந்தத்தால் விளக்கப்படும் என்று அவர் கணக்கிட்டார். மென்மையான காமா ரிப்பீட்டர்கள் உண்மையில் காந்தங்கள் என்று சர்வதேச வானியல் சமூகத்தை நம்ப வைக்க இது போதுமானதாக இருந்தது.
வழக்கத்திற்கு மாறாக கண்கவர் மென்மையான காமா ரிப்பீட்டர் வெடிப்பு SGR 1900+14 ஆகஸ்டு 27,1998 அன்று அனுசரிக்கப்பட்டது. இந்த எஸ்ஜிஆர்க்கு பெரிய தூரம் இருந்தபோதிலும் , 20,000 ஒளி ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது , இந்த வெடிப்பு பூமியின் வளிமண்டலத்தில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தியது. அயனி மண்டலத்தில் உள்ள அணுக்கள் பொதுவாக பகலில் சூரியனின் கதிர்வீச்சால் அயனியாக்கப்பட்டு , இரவில் நடுநிலை அணுக்களாக மீண்டும் இணைகின்றன , அவை இரவு நேரத்தில் சாதாரண பகல் நேர அளவை விட மிகக் குறைவான மட்டங்களில் அயனியாக்கப்படுகின்றன. ரோஸ்ஸி எக்ஸ் - ரே டைமிங் எக்ஸ்ப்ளோரர் (எக்ஸ் - ரே செயற்கைக்கோள்) இந்த நேரத்தில் இந்த வெடிப்பிலிருந்து அதன் வலுவான சமிக்ஞையைப் பெற்றது , இது வானத்தின் வேறு பகுதியில் இயக்கப்பட்டிருந்தாலும் பொதுவாக கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும்.
மென்காமாக் கதிர்மீன்களின் பட்டியல்
அறியப்பட்ட மென்காமாக் கதிர்மீன்கள் பின்வருமாறு:
எண்கள் வானத்திலயீருப்பைத் தருகின்றன , எடுத்துக்காட்டாக, SGR 0525 - 66 5h25m இன் வலது ஏற்றம் மற்றும் - 66 இன் காந்த இறக்கம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கண்டுபிடிப்பு நாள் சில நேரங்களில் 1979/1986 போன்ற வடிவத்தில் தோன்றுகிறது.மென்காமாக் கதிர்மீன்கள் " இயல்பான காமாக் கதிர் வெடிப்புகளைக் காட்டிலும் ஒரு தனி வகை பொருள்களாக ஏற்கப்பட்ட பிறகு, கண்டுபிடித்த ஆண்டுடன் கூடுதலாக இவை தனி வான்பொருளாக ஏற்கப்பட்ட ஆண்டையும் தருகின்றன.
மேற்கோள்கள்
மேலும் படிக்க
On the persistent X-ray emission from the soft gamma-ray repeaters. Usov. 1996
வெளி இணைப்புகள்
வானியல் நிகழ்வுகள்
விண்மீன் வகைகள்
|
592447
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D
|
தேசிய விண்வெளி நாள்
|
சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை நினைவுகூரும் வகையில் தேசிய விண்வெளி நாள் என்பது இந்தியாவில் கொண்டாட ஒதுக்கப்பட்ட ஆண்டின் ஒரு நாளாகும்.
வரலாறு.
2023 ஆகத்து 23 அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) சந்திரயான் - 3 இன் தரையிறங்கியையும் தரையூர்தியையும் நிலாவில் வெற்றிகரமாக தரையிறக்கியதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையான மைல்கல்லை எட்டியது. இந்த வெற்றியைக் கொண்டாட , பிரதமர் நரேந்திர மோடி ஆகத்து 23 ஆம் தேதியை " தேசிய விண்வெளி நாளாக " அறிவித்தார்.
மேற்கோள்கள்
இந்தியாவின் சிறப்பு நாட்கள்
ஆகத்து சிறப்பு நாட்கள்
அறிவியல் சிறப்பு நாட்கள்
|
592448
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%20%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D
|
சுப்பண்ணா ஐயப்பன்
|
சுப்பண்ணா ஐயப்பன் (Subbanna Ayyappan)(பிறப்பு: திசம்பர் 10, 1955) என்பவர் இந்திய மீன்வளர்ப்பு துறை அறிவியலாளர் ஆவர்.
கல்வி
ஐயப்பன் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும், மங்களூரில் உள்ள மீன்வளக் கல்லூரியில் மீன் உற்பத்தி மற்றும் மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவர் மீன்வளம், நீரியல் மற்றும் நீர்வாழ் நுண்ணுயிரியல் துறைகளில் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
பதவி
சுப்பண்ணா ஐயப்பன் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் விவசாய அறிவியல் தொடர்பான பல்வேறு அரசு நிறுவனங்களில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இவர் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குநராகவும் சனவரி 2010 முதல் பிப்ரவரி 2016 வரையிலான காலகட்டத்தில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை அரசாங்கத்தின் செயலாளராகவும் இருந்தார். மணிப்பூரின் மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பதவி வகித்துள்ளார். இந்தியாவில் நீலப் புரட்சியை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்திற்குத் தலைமை தாங்கிய முதல் விவசாயம் அல்லாத அறிவியலாளர் இவர்தான்.
ஐயப்பன் 1978-ல் பாரக்பூரில் உள்ள மத்திய உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் அறிவியலாளராக இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தில் தனது பணியைத் தொடங்கினார். 1996ஆம் ஆண்டில், புவனேசுவரத்தில் உள்ள மத்திய உள்நாட்டு மீன் வளர்ப்பு நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இங்கு இவர் இயக்குநராக, மும்பையில் உள்ள மத்திய மீன்வளக் கல்வி நிறுவனத்தில் துணைவேந்தர் பதவியினை வகிக்கும் முன் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். இவர் 2002-ல் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமையகத்தில் துணை தலைமை இயக்குநராகப் பதவி வகித்தார். மேலும் சனவரி 1, 2010 அன்று இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமைச் செயலாளர் ஆனார். இவர் ஐதராபாத்திலுள்ள தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிறுவனர் தலைமை நிர்வாகியும் ஆவார்.
பத்மசிறீ விருது
2022ஆம் ஆண்டில், இந்திய அரசு, பத்ம விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்மசிறீ விருதை, சுப்பண்ண ஐயப்பனுக்கு அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் இவரின் சிறப்பான சேவைக்காக வழங்கியது. "மதிப்பிற்குரிய மீன்வளர்ப்பு அறிவியலாளர் - இந்தியாவின் நீலப் புரட்சிக்கு சக்தியூட்டுவதில் முக்கிய பங்கு வகித்தார்" என்ற இவரது சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.
பிற அங்கீகாரங்கள் மற்றும் விருதுகள்
சுப்பண்ணா ஐயப்பன் மீன்வளர்ப்பு மற்றும் தொடர்புடைய பணி மற்றும் பங்களிப்பிற்காகப் பல அங்கீகாரங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.
ஜஹூர் காசிம் தங்கப் பதக்கம் இந்தியாவில் உயிர் அறிவியல் சங்கத்தால் வழங்கப்பட்டது (1996-1997)
சிறப்பு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழும விருது (1997)
மீன்வளத்தில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளுக்கான குழுத் தலைவராகக் குழு ஆராய்ச்சிக்கான இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழும விருது (1997-1998)
முனைவர் வி. ஜி. ஜிங்ரன் தங்கப் பதக்கம் (2002)
மீன்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான சிறந்த பேராசிரியர் எச். பி. சி. செட்டி விருது, ஆசிய மீன்வள சங்கம், இந்தியக் கிளை (2002)
மேற்கோள்கள்
வாழும் நபர்கள்
1955 பிறப்புகள்
பத்மசிறீ விருது பெற்ற அறிவியலாளர்கள்
|
592452
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF
|
தாய் பட்டாம்பூச்சி பல்லி
|
தாய் பட்டாம்பூச்சி பல்லி அல்லது மலேசியப் பட்டாம்பூச்சி பல்லி என்றும் அழைக்கப்படும் லியோலெபிசு திரிப்ளோயிடா (Leiolepis triploida) என்பது ஓந்திப் பல்லியின் ஒரு சிற்றினமாகும். இது முழுக்க முழுக்க பெண் (கன்னிப்பிறப்பு) உயிரிகளாக உள்ள இனமாகும். இது தெற்கு தாய்லாந்து மற்றும் தீபகற்ப மலேசியாவில் காணப்படுகிறது.
விளக்கம்
லியோலெபிசு திரிப்ளோயிடா சுமார் நீளமுடையது. இது ஒரு மும்மரபுத்திரி சிற்றினமாகும். இது கலவியற்ற முறையில் இனப்பெருக்கம் செய்கிறது. இதன் தாய்வழி மூதாதையர் லியோலெபிசு போக்மெய் ஆகும்.
மேற்கோள்கள்
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - தகவல் இல்லா இனங்கள்
|
592454
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88
|
அம்பாங் சாலை
|
அம்பாங் சாலை அல்லது ஜாலான் அம்பாங் (ஆங்கிலம்: Ampang Road) (Selangor State Route B31); (மலாய்: Jalan Ampang), என்பது மலேசியாவின் கிள்ளான் பள்ளத்தாக்கு, சிலாங்கூர் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம் ஆகிய பகுதிகளில் உள்ள ஒரு முக்கிய சாலை ஆகும். 1880-களில் கட்டப்பட்ட இந்தச் சாலை கிள்ளான் பள்ளத்தாக்கின் பழைமையான சாலைகளில் ஒன்றாக அறியப்படுகிறது.
அம்பாங் ஜெயாவிற்கு ஒரு முக்கிய சாலையாக அமைந்து இருக்கும் இந்தச் சாலையை, துன் ரசாக் சாலை அல்லது உலு கிள்ளான் சாலை வழியாக எளிதில் அணுகலாம். உலு கிள்ளான் சாலை இப்போது கோலாலம்பூர் மத்திய சுற்றுச் சாலை 2-இன் ஒரு பகுதியாக உள்ளது. இந்தச் சாலையை செராஸ் பகுதியில் இருந்து சாமாலின் சாலை (Jalan Shamelin) வழியாகவும் அணுகலாம்.
வரலாறு
1857-ஆம் ஆண்டு, கிள்ளான் நகரில் மலாய் மன்னராக இருந்த ராஜா அப்துல்லா (Raja Abdullah bin Raja Jaafar), வெள்ளீயச் சுரங்கங்களை அமைக்கும் பணிக்குச் சீனத் தொழிலாளர்களைக் கொண்டு வந்ததில் இருந்து, அம்பாங் நகரின் வரலாறு தொடங்குகிறது.
இதற்கு முன்னர் ராஜா அப்துல்லா, 1849-ஆம் ஆண்டில், அம்பாங்கில் வெள்ளீயச் சுரங்கங்களை திறப்பதற்காக மலாக்காவில் இருந்த சீ யாம் சுவான் (Chee Yam Chuan) எனும் வணிகர்; மற்றும் பிற சீன வணிகர்களிடம் இருந்து பெரும் தொகையைப் பெற்றார்.
அம்பாங் காட்டுப்பகுதி
இந்தத் தொழிலாளர்கள் அம்பாங், புடு, பத்து எனும் இடங்கில் சுரங்கங்களை அமைக்க, கோம்பாக் ஆறு மற்றும் கிள்ளான் ஆறு ஆகிய இரு ஆறுகளும் கலக்கும் இடத்தில் தங்கினர்.
பின்னர், இந்தச் சுரங்கங்கள் வணிக மையங்களாக மாறின. அவையே பெரிய நகரமாக உருவெடுக்க வழி வகுத்தது.
அம்பாங் பகுதியின் வளர்ச்சி சீன கடைக்காரர்களை ஈர்த்தது. அந்த வகையில், தனிமைப் படுத்தப்பட்ட நிலையில் இருந்த அம்பாங் காட்டுக் குடியேற்றத்தை ஒரு சிறிய நகரமாக மாற்றுவதற்கும் வழிவகுத்தது.
வளர்ச்சி
1888-ஆம் ஆண்டில், கோலாலம்பூர் சுகாதார வாரியத்தின் (Kuala Lumpur Sanitary Board) தலைவராக சேவை செய்த ஜி. டி. திக்கெல் (G. T. Tickell) என்பவரால் அம்பாங் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.
அப்போதைய பழைய அம்பாங் சாலையில் சிலாங்கூர் குதிரைப் பந்தய மன்றம் (Selangor Turf Club) இருந்தது. அந்த இடத்தில் தான் தற்போதைய பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்கள் (Petronas Twin Towers) உள்ளன.
சௌக்கிட்
அப்போதைய பழைய அம்பாங் சாலையின் கிளைச் சாலையில் லோக் சௌ கிட் நிறுவனத்திற்கு சொந்தமான வீடுகளும் நிலங்களும் இருந்தன. லோக் சௌ கிட் (Loke Chow Kit) எனும் சீன வணிகர் வைத்து இருந்த இடம்தான் இப்போது சௌக்கிட் என்று அழைக்கப்படுகிறது.
போக்குவரத்து
அம்பாங் சாலையின் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் பகுதியில் ஐந்து விரைவுப் போக்குவரத்து நிலையங்கள் உள்ளன:
தாங் வாங்கி இலகு தொடருந்து நிலையம்
கேஎல்சிசி இலகு தொடருந்து நிலையம்
அம்பாங் பார்க் இலகு தொடருந்து நிலையம்
அம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையம்
அம்பாங் இலகு தொடருந்து நிலையம்
வழித்தடம்
பொதுவாக, அம்பாங் சாலை கிழக்கு-மேற்கு திசையில் செல்கிறது. புக்கிட் நானாஸ் நகர்ப் பகுதியைக் கடந்து வடகிழக்கு திசையில் தொடர்கிறது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மலேசியாவில் உள்ள சாலைகள்
சிலாங்கூர் மாநிலத்தின் சாலைகள்
கோலாலம்பூர்
|
592457
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%282023%29
|
ஐஎன்எஸ் மகேந்திரகிரி (2023)
|
ஐஎன்எஸ் மகேந்திரகிரி (INS Mahendragiri), இந்தியக் கடற்படைகாக மகாராட்டிரா மாநிலத்தின் மசாகன் கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்ட 7வது போர்க் கப்பல் ஆகும். இதனை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் 1 செப்டம்பர் 2023 அன்று இந்தியக் கடற்படைக்கு அர்ப்பணித்தார். அதிநவீன அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட மகேந்திரகிரி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு149 மீட்டர் நீளமும், 17.8 மீட்டர் அகலமும் கொண்ட ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க் கப்பல் மணிக்கு 28 கடல் மைல் வேகத்தில் பயணிக்கக் கூடியது.
இந்தியக் கடற்படைக்காக திட்டம் 17 ஆல்ஃபா'' (பி17ஏ) கீழ் கட்டப்பட்ட 7வது போர்க் கப்பல் மகேந்திரகிரியாகும். எதிரிகளின் ரேடாரில் சிக்காத வகையில் மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள், அதிநவீன ஆயுதங்கள், தொலையுணர்வு சாதனங்களுடன் கூடிய இந்தப் போர்க் கப்பல். இது தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட அதிநவீன போர்க் கப்பலாகும். உள்நாட்டிலேயே வடிவமைத்துத் தயார் செய்யப்பட்ட கப்பல்களில் மிகவும் முன்னேறிய வகையைச் சார்ந்தது. இது எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது. இந்திய பசுபிக் கடல் பகுதியில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின்-கடற்படையினரின் சவால்களை சமாளிக்கும் நோக்கத்துடன் இந்தியாவின் தற்சார்பு திட்டத்தின் கீழ் இந்தக் கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.
பி17-ஏ திட்டத்தின்கீழ் மொத்தம் 7 போர்க் கப்பல்கள் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு, கடந்த 2019 முதல் 2022 வரை 5 போர்க் கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.
இந்த வரிசையில் 6-வதாக ஐஎன்எஸ் விந்தியகிரி (2023) என்ற போர்க் கப்பலை இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அண்மையில் நாட்டுக்கு அர்ப்பணித்திருந்தார். பி17ஏ போர்க் கப்பல்களின் கட்டுமானத்துக்காக 75 சதவீத கருவிகள் மற்றும் இதர அமைப்பு முறைகள், உள்நாட்டின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
இந்திய போர்க் கப்பல்கள்
|
592460
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%282023%29
|
ஐஎன்எஸ் விந்தியகிரி (2023)
|
ஐஎன்எஸ் விந்தியகிரி இந்தியக் கடற்படையின் போர்க் கப்பல் ஆகும். இது கொல்கத்தாவில் உள்ள இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான கார்டன் ரீச் கப்பல்கட்டுநர்கள் & பொறியாளர்கள் (GRSE) நிறுவனத்தால் கட்டப்பட்டு, 17 ஆகஸ்டு 2023 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் இந்தியக் கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இக்கப்பலுக்கு விந்தியமலை பெயரில் அழைக்கப்படுகிறது. இது திட்டம் 17 ஆல்பாவின் கீழ் தயாரிக்கப்பட்ட 6வது போர்க் கப்பல் ஆகும். இது நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிராக போரிடக்கூடியது. இக்கப்பல் வழிகாட்டப்பட்ட ஏவுகணை போர்க் கப்பல்கள் என வகைப்படுத்தப்பட்டவை. இது 149 மீட்டர் நீளம் மற்றும் சுமார் 6,670 டன்கள் எடை கொண்டவை. இது மணிக்கு 28 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடியவை. இக்கப்பல் வான், நிலம் மற்றும் கடல் மேற்பரப்பு களங்களில் கண்டறியப்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முடியும். இக்கப்பலின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் அமைப்புகளில் 75% நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டது.
மேற்கோள்கள்
இந்திய போர்க் கப்பல்கள்
|
592465
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%282022%29
|
ஐஎன்எஸ் உதயகிரி (2022)
|
{|
{{Infobox ship characteristics
| Hide header =
| Header caption =
| Ship class = வழி செலுத்திய ஏவுகணைகள் கொண்ட போர்க் கப்பல்
| Ship tonnage =
| Ship displacement =
| Ship length =
| Ship beam =
| Ship height =
| Ship draught =
| Ship draft =
| Ship depth =
| Ship hold depth =
| Ship decks =
| Ship deck clearance =
| Ship ramps =
| Ship ice class =
| Ship power = *2 x டீசல் இயந்திரம் 12V28/33D STC (ஒவ்வொன்றும் 6000 கிலோ வாட்)
2 x ஜெனரல் எலக்டிரிக் இயந்திரம் LM2500
| Ship propulsion =
| Ship sail plan =
| Ship speed =
| Ship range = * at
at
| Ship endurance =
| Ship test depth =
| Ship boats =
| Ship capacity =
| Ship troops =
| Ship complement = 226
| Ship crew =
| Ship time to activate =
| Ship sensors = *பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் HUMSA-NG bow sonar
Israel Aerospace Industries EL/M-2248 MF-STAR, S band Active Electronically Scanned Array radar
| Ship EW = *பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் Ajanta EW suite
4 x Kavach (anti-missile system), Decoy launchers
| Ship armament = *வான் ஏவுகனைகள்:4 × 8-cell Vertical launching system, for a total of 32
Barak 8 missiles (Range: to Gen Next missile defence shield built by Israel and India clears first hurdle, The Times of India, 28 November 2015)போர் கப்பலுக்கு எதிரான ஏவுகணைகள்:2 x 4-cells Vertical launching system, for 8 பிரமோஸ் ஏவுகனைகள்பீரங்கிகள்:1 × OTO Melara 76 mm கடற்படை பீரங்கிகள்
2 × AK-630, Close-in weapon systemநீர்மூழ்கி கப்பலுக்கு எதிரான போர்முறைகள்:2 × மூன்று நீர்மூழ்கிக் குண்டு குழாய்கள்
2 × RBU-6000, நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணைகள்
| Ship armour =
| Ship armor =
| Ship aircraft = 2 × எச்.ஏ.எல். துருவ்
| Ship aircraft facilities =
| Ship notes =
}}
|} ஐஎன் எஸ் உதயகிரி', இந்தியக் கடற்படையில் இணைந்துள்ள திட்டம் 17 ஆல்பாவின் நீலகிரி வகையின் வழி செலுத்திய ஏவுகணைகளும், தாக்கும் திறன் கொண்ட மூன்றாவது போர்க் கப்பல் ஆகும். ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள உதயகிரி மலையின் பெயர் இப்போர்க் கப்பலுக்கு பெயர் இடப்பட்டுள்ளது.
கட்டுமானம் & இயக்கம்
28 டிசம்பர் 2017 அன்று கட்ட ஆரம்பிக்கப்பட்ட ஐஎன்எஸ் உதயகிரி போர்க் கப்பல், கட்டி முடித்த பின்பு 17 மே 2022 அன்று வெள்ளோட்டம் விடப்பட்டது. இது பல சோதனைகளுக்குப் பின் 2024ம் ஆண்டில் இந்தியக் கடற்படையில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம் மற்றும் கொல்கத்தா கார்டன் ரீச் கப்பல் கட்டுநர் & பொறியாளர்கள்'' ஆகிய இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் இப்போர்க் கப்பல் கட்டப்பட்டது.
மேற்கோள்கள்
இந்திய போர்க் கப்பல்கள்
|
592468
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%282019%29
|
ஐஎன்எஸ் நீலகிரி (2019)
|
ஐஎன் எஸ் நீலகிரி, இந்தியக் கடற்படைக்காக மசாகன் கப்பல் கட்டும் நிறுவனத்தில் 28 டிசம்பர் 2017 அன்று துவக்கி, 28 செப்டம்பர் 2019 அன்று கட்டி முடிக்கப்பட்டது. இது 2024ல் இந்தியக் கடற்படையில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கோள்கள்
இந்திய போர்க் கப்பல்கள்
|
592500
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81
|
அந்தோணி முர்மு
|
அந்தோணி முர்மு (Anthony Murmu) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சனதா கட்சியின் உறுப்பினராக பீகார் மாநிலம் இராச்மகால் தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முர்மு ஓர் இயேசு சபை பாதிரியாராக இருந்தார். சந்தால் பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடினார்.
1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதியன்று இல் பாஞ்சியில் நடந்த படுகொலையில் 14 சந்தால்களுடன் சேர்த்து அந்தோணி முர்முவும் கொல்லப்பட்டார்.
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Official biographical sketch in Parliament of India website
1935 பிறப்புகள்
1985 இறப்புகள்
பீகார் அரசியல்வாதிகள்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள்
சந்தாலிகள்
|
592502
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE
|
சுரேசு சந்திர மிசுரா
|
சுரேசு சந்திர மிசுரா (Suresh Chandra Mishra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1903 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். பண்டிட் சுரேசு சந்திர மிசுரா என்றும் அழைக்கப்படுகிறார், சுதந்திர ஆர்வலருமான இவர் பீகாரில் உள்ள முங்கேர் தொகுதிக்கு 1952 முதல் 1957 வரை முதல் மக்களவை உறுப்பினராக பணியாற்றினார். 1920 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் மிசுரா பங்கேற்றார், இந்த இயக்கம் நாட்டில் பிரித்தானிய ஆட்சியிலிருந்து முழு சுதந்திரம் பெறுவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
ஆரம்ப கால வாழ்க்கை
மிசுரா முதலில் தொழிலில் ஒரு விவசாயியாவார். ஒரு சமூக சேவகராகவும் இயங்கினார். இந்தியில் பல வெளியீடுகளை எழுதியுள்ளார்.
இறப்பு
மிசுரா 30 மார்ச் 1993 அன்று தனது 90 ஆவது வயதில் பீகாரில் உள்ள முங்கேரில் இறந்தார்.
மேற்கோள்கள்
இந்திய அரசியல்வாதிகள்
பீகார் அரசியல்வாதிகள்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்
1ஆவது மக்களவை உறுப்பினர்கள்
1993 இறப்புகள்
1903 பிறப்புகள்
|
592503
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B
|
சுதிர் மகாட்டோ
|
சுதிர் மகாட்டோ (Sudhir Mahato) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1990 ஆம் ஆண்டில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2005 ஆம் ஆண்டில் நடந்த சார்க்கண்டு சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டார். சார்கண்ட்டு முக்தி மோர்ச்சா கட்சியின் உறுப்பினராக இச்சாகரிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்கும் பின்னர் சார்க்கண்டு சட்டமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 14 செப்டம்பர் 2006 முதல் 23 ஆகத்து 2008 வரை மது கோடாவின் கீழ் சார்க்கண்டு மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருந்தார்
தனது 53 வயதில் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள காட்சிலாவில் பாரிய மாரடைப்பு காரணமாக 23 சனவரி 2014 அன்று சுதிர் மகாட்டோ இறந்தார்.
மேற்கோள்கள்
2014 இறப்புகள்
1961 பிறப்புகள்
பீகார் அரசியல்வாதிகள்
சார்க்கண்டு
|
592506
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF
|
இலால்குலி அருவி
|
இலால்குலி அருவி (Lalguli falls) என்பது இந்தியாவின் கர்நாடகா, வடகன்னட மாவட்டத்தில் உள்ள யெல்லாபூரில் இருந்து தொலைவில் அமைந்துள்ள ஒரு அருவியாகும். இது அருகிலுள்ள இலால்குலி கிராமத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த அருவிக்கு நீரானது காளி ஆற்றிலிருந்து வருகிறது. சுமார் 250 அடி உயரம் கொண்ட காடுகளின் உள்ளே அடுக்கருவியாக விழுகிறது. அக்டோபர் முதல் திசம்பர் வரையிலான காலகட்டம் அருவியினை பார்வையிடச் சிறந்த காலமாக இருக்கும். கோடைக்காலத்தில் அருவி வறண்டு காணப்படும்.
மேற்கோள்கள்
கர்நாடக அருவிகள்
உத்தர கன்னட மாவட்டம்
|
592508
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF
|
பென்னே கோல் அருவி
|
பென்னே கோல் அருவி (Benne Hole Falls) இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள சிர்சியிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சுற்றுலாத் தலமாகும் .
பென்னே கோல் அருவி மேற்குத் தொடர்ச்சி மலையின் தேவிமனே மலைப் பகுதியில் பாயும் அகநாசினி ஆற்றின் துணை நதியால் உருவாக்கப்பட்டது. பென்னே கோல் என்பதில் 'பென்னே' என்றால் வெண்ணெய் என்றும் 'கோல்’ என்றால் பெரிய நீரோடை என்றும் பொருள். இது இந்த அருவியின் மென்மையான நீரோட்டத்தைக் குறிக்கிறது. இந்த அருவி சிர்சிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த அருவியினை காண சிர்சியிலிருந்து காசேஜ் என்ற கிராமத்தை அடைய வேண்டும். காசேஜிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அருவியின், முதல் 3 கிலோமீட்டர் பயணத் தூரத்தை வாகனம் மூலமும், அடுத்த 2 கிலோ மீட்டர் தூரத்தினை நடந்தும் கடக்கலாம்.
மேற்கோள்கள்
கர்நாடக அருவிகள்
Coordinates on Wikidata
உத்தர கன்னட மாவட்டம்
|
592509
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF
|
செல்வரா அருவி
|
செல்வரா அருவி (Chelavara Falls) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள விராசுபேட்டையில் அமைந்துள்ள இயற்கையான அருவி ஆகும். இது விராசுபேட்டை - தலைக்காவிரி மாநில நெடுஞ்சாலையில் (மா.நெ. 90) விராசுப்பேட்டையிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள செய்யண்டனே கிராமத்திற்கு அருகில் காவிரியின் துணை ஆற்றில் அமைந்துள்ளது.
இது கபே விடுமுறை தங்குமிடம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. குடகின் மிக உயரமான இடமான தடியாண்டமோலுக்கு அருகில் உள்ளது. வாகன நிறுத்துமிடத்திலிருந்து காட்டுக்குள் 200 மீட்டர் நடந்து சென்று அருவியினை அடையலாம்.
இது ஆபத்தான அருவி ஆகும். நீரின் அருகில் சென்றால் நீரோட்டம் உள்ளே இழுக்க வாய்ப்புள்ளது. இது சுமார் 100 அடி ஆழம் கொண்டது. எல்லா இடங்களிலும் ஆபத்து அறிகுறிகள் உள்ளன. தண்ணீரில் இறங்க வேண்டாம் என அப்பகுதியினர் அறிவுறுத்துகின்றனர். இங்கு சுமார் 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மேற்கோள்கள்
கர்நாடக அருவிகள்
குடகு மாவட்டம்
|
592510
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%20%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF
|
தாப்பே அருவி
|
தாப்பே அருவி (Dabbe Falls-Sagara) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் சிமோகா மாவட்டத்தில் சாகரா வட்டத்தில் ஹோசகட்டே அருகே தாப்பே என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு அருவி ஆகும். இந்த அருவியின் உயரம் 110 மீட்டர். சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள முப்பானே இயற்கை முகாமிலிருந்து ஒரு வழிகாட்டியை அழைத்துச் செல்லலாம்.
இது சாகர் முதல் பட்கல் வழித்தடத்தில் அமைந்துள்ளது (சாகரிலிருந்து 35 கி.மீ.). இதன் அருகிலுள்ள தொடருந்து நிலையம் தல்குப்பா ஆகும்.
மேற்கோள்கள்
கர்நாடக அருவிகள்
Coordinates on Wikidata
சிவமொக்கா மாவட்டம்
|
592512
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF
|
விபூதிபுரா ஏரி
|
விபூதிபுரா ஏரி (Vibhutipura Lake) என்பது பெங்களூரு நகரின் தென்கிழக்கில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஏரியாகும். இந்த ஏரி பெல்லந்தூர்-வர்த்தூர் ஏரி தொடரின் ஒரு பகுதியாகும்.
வரலாறு
விபூதிபுராவில் உள்ள ஒரு ஏரி போசாளப் பேரரசினால் (10-14 ஆம் நூற்றாண்டு) உருவாக்கப்பட்டது. 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு இப்பகுதியில் ஒரு கிராமம் மற்றும் குளத்தை உருவாக்கியதை விவரிக்கிறது.
இந்த ஏரியை மாநில வனத்துறை பராமரித்து வந்தது. இதனுடைய நிர்வாகம் பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்திடமும் பின்னர் பெரிய பெங்களூரு மகாநகர பேரவையிடமும் ஒப்படைக்கப்பட்டது.
ஏரியில் கழிவுநீர் வரத்து, குப்பைக் கொட்டுதல் மற்றும் ஆக்கிரமிப்பு போன்றவற்றைத் தொடர்ந்து இப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் விளைவாக ஏரியின் நிர்வாகத்திற்கு ஒரு ஜனரஞ்சக அணுகுமுறை ஏற்பட்டது. குடியிருப்பு சங்கங்கள் மற்றும் விபூதிபுரா கேரே மேம்பாட்டுச் சங்கம் ஏரியை மீட்டெடுப்பதற்காகப் பிரச்சாரம் செய்துள்ளன. மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் நடைபாதை அமைத்தல் மற்றும் வேலி அமைத்தல் ஆகியவை அடங்கும். பொழுதுபோக்கு பயன்பாடு அதிகரித்துள்ளது. ஏரியில் பருவகாலத்தில் நீர் நிரம்பியும் கோட்டைக் காலத்தில் வறண்டுவிடுகிறது. வறண்ட காலத்தின் போது, ஏரியின் படுகையில் மட்டைப்பந்து விளையாடுவதும் மேய்ச்சல் போன்ற அதிகாரப்பூர்வமற்ற நடவடிக்கைகளும் நடைபெறுகிறது. இது குறித்த செய்திகள் ஊடகங்களிலும் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளன.
2023
ஏப்ரல் 2023-ல், ஏரியில் வசிக்கும் நீர் பதுமராகங்கள் சுத்தம் செய்யப்பட்டது. இது ஏரியின் புத்துணர்ச்சிக்கு வழிவகுத்தது. ஏரியில் தண்ணீர் நிரம்பியிருப்பது கண்கொள்ளாக் காட்சி. இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில், தற்போதும் ஏரியில் கழிவுநீர் கலக்கின்றது. ஆறு ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. களை அகற்றும் போது உடைந்த நடைபாதை இன்னும் சீரமைக்கப்படவில்லை.
ஆக்கிரமிப்பு
ஏரிப்பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. வேலி உடைக்கப்பட்டு, பைஞ்சுதை சுவர்கள் எழுப்பப்பட்டு வருகின்றது.
மேற்கோள்கள்
மேலும் படிக்க
Coordinates on Wikidata
கருநாடக நீர்த்தேக்கங்கள்
|
592513
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81
|
மஞ்சு பிரகாசு
|
மஞ்சு பிரகாசு (Manju Prakash) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய பொதுவுடைமைக் கட்சியைச் (மார்க்சியம்) சேர்ந்த இவர் பக்சர் சட்ட மன்றத் தொகுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பீகார் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 1990 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது கணவர் இராம்தியோ வர்மாவும் பிபூதிபூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று பீகார் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். மஞ்சு பிரகாசு பீகார் மகளிர் ஆணையத்தின் தலைவராக பதவி வகித்துள்ளார். 2020 ஆண்டிற்குப் பின்னர் பொதுவுடைமைக் கட்சியின் மார்க்சியப் பிரிவிலிருந்து வெளியேறி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை கட்சியில் சேர்ந்தார். இவரது தந்தை சோதி பிரகாசும் ஒரு பொதுவுடைமை கட்சி உறுப்பினராவார். தலித் தலைவராக இருந்த அவர் உயர் சாதியனரான இராய் இனத்தவரால் கொல்லப்பட்டார்.
தேர்தல் பதிவு
மஞ்சு பிரகாசு 1985, 1990, 1995, 2000, 2010 ஆம் ஆண்டுகளில் பொதுவுடைமைக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியும் மற்றும் 2020 ஆம் ஆண்டில் தனித்து சுயேட்சையாகவும் பிபூதிபூரில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்றார். 1990 மற்றும் 1995 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
1965 பிறப்புகள்
வாழும் நபர்கள்
பீகார் அரசியல்வாதிகள்
பொதுவுடமைவாதிகள்
|
592514
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE
|
சுட்டன் லால் மீனா
|
சுட்டன் லால் மீனா (Chhuttan Lal Meena) (3 செப்டம்பர் 1920 - 8 மார்ச் 1989) இந்திய நாடாளுமன்ற உறுப்பினராவார். இவர் 1971 முதல் 1977 வரை இந்தியாவின் சவாய் மாதோபூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, மஹ்வா மற்றும் நாடோடி சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து இராசத்தான் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார். 1938 முதல் 1951 வரை இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். இவர் இந்திய சுதந்திர போராட்ட வீரர் கும்பா ராம் ஆர்யாவுடன் இணைந்து பணியாற்றினார்.
சான்றுகள்
1989 இறப்புகள்
1920 பிறப்புகள்
இராஜஸ்தான் வரலாறு
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
|
592517
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
|
மனித-வனவிலங்கு மோதல்
|
மனித-வனவிலங்கு மோதல் ( HWC ) என்பது மனிதர்களுக்கும் காட்டு விலங்குகளுக்கும் இடையிலான எதிர்மறையான தொடர்புகளைக் குறிக்கிறது, ஒருபுறம் மக்களுக்கும் அவற்றின் வளங்களுக்கும் விரும்பத்தகாத விளைவுகள், மறுபுறம் வனவிலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள். மனிதனுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான இயற்கை வளங்களுக்கான போட்டியால் ஏற்படும் HWC, மனித உணவுப் பாதுகாப்பு மற்றும் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் நல்வாழ்வை பாதிக்கிறது. பல பிராந்தியங்களில், இந்த மோதல்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்துள்ளது பல தசாப்தங்களாக மனித மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் நில பயன்பாட்டின் மாற்றம் ஆகியவற்றின் விளைவாக.
HWC ஆனது நகர்ப்புற மற்றும் கிராமப்புற நிலப்பரப்புகளில் நிலையான வளர்ச்சி, உணவுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு ஒரு தீவிர உலகளாவிய அச்சுறுத்தலாக உள்ளது. பொதுவாக, HWC இன் விளைவுகள் பின்வருமாறு: பயிர் அழிவு, விவசாய உற்பத்தித்திறன் குறைதல், மேய்ச்சல் நிலங்கள் மற்றும் நீர் வழங்கலுக்கான போட்டி, கால்நடைகள் வேட்டையாடுதல், மனிதர்களுக்கு காயம் மற்றும் இறப்பு, உள்கட்டமைப்புக்கு சேதம் மற்றும் வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளிடையே நோய் பரவும் அபாயம் ஆகியவை அடங்கும்.
2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, மோதல் தணிப்பு உத்திகள் மரணக் கட்டுப்பாடு, இடமாற்றம், மக்கள்தொகை அளவு கட்டுப்பாடு மற்றும் அழிந்துவரும் உயிரினங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றைப் பயன்படுத்தின. சமீபகால நிர்வாகம் இப்போது மோதல்களைத் தீர்ப்பதற்கு ஒரு இடைநிலை அணுகுமுறைகளைப் பயன்படுத்துகிறது. மோதல்களைக் குறைப்பதற்கு அறிவியல் ஆராய்ச்சி, சமூகவியல் ஆய்வுகள் மற்றும் கலைகளைப் பயன்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். மனித-வனவிலங்கு மோதல் மக்கள் மற்றும் விலங்குகள் மீது நேரடி மற்றும் மறைமுக விளைவுகளை ஏற்படுத்துவதால், பல்லுயிர் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் மேலாண்மைக்கு அதன் தணிப்பு ஒரு முக்கிய முன்னுரிமையாகும். மனித-வனவிலங்கு மோதல்களைத் தீர்ப்பதற்கும், சகவாழ்வை வளர்ப்பதற்கும் அடிப்படையான சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார சூழல்களை கணக்கில் எடுத்துக் கொள்ளும் நன்கு அறியப்பட்ட, முழுமையான மற்றும் கூட்டுச் செயல்முறைகள் தேவை.
2023 ஆம் ஆண்டில், IUCN SSC மனித-வனவிலங்கு மோதல் மற்றும் சகவாழ்வு நிபுணர் குழுவானது மனித-வனவிலங்கு மோதல் மற்றும் சகவாழ்வு பற்றிய IUCN SSC வழிகாட்டுதல்களை வெளியிட்டது, இது நல்ல நடைமுறைக்கான அடித்தளங்கள் மற்றும் கொள்கைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. மோதல்கள் மற்றும் வனவிலங்குகளுடன் சகவாழ்வை செயல்படுத்துகிறது.
2013 ஆம் ஆண்டு வரை, பல நாடுகள் தேசியக் கொள்கைகள் மற்றும் வனவிலங்கு மேலாண்மை, மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்புக்கான உத்திகளில் மனித-வனவிலங்கு மோதலை வெளிப்படையாக சேர்க்கத் தொடங்கியுள்ளன. தேசிய அளவில், வனம், வனவிலங்கு, விவசாயம், கால்நடைகள் மற்றும் பிற தொடர்புடைய துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு முக்கியமானது.
|
592518
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE
|
மூல் சந்த் மீனா
|
மூல் சந்த் மீனா (Mool Chand Meena) ஒரு இந்திய அரசியல்வாதியும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் (1992-2006) ஆவார்.
சொந்த வாழ்க்கை
14 பிப்ரவரி 1956 அன்று ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள ஜீவாலி கிராமத்தில் (கங்காபூர் நகரம்) பிறந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் சட்டம் பயின்றார்.
அரசியல்
1970கள் மற்றும் 80களில் உள்ளூர் அரசியல் மற்றும் சமூக குழுக்களுக்கு பல நிர்வாக பதவிகளில் பணியாற்றினார். 1992 இல், 2006 இல் இந்தியாவின் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இராஜஸ்தானி பல்கலைக்கழகங்கள் மற்றும் இராஜஸ்தானை சுற்றியுள்ள பல்வேறு இளைஞர் காங்கிரசு அமைப்புகளில் பணியாற்றினார். இராஜஸ்தானில் உள்ள மாநில சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு குழுக்களில் பணிபுரிந்தார், பின்னர் பிரதேச காங்கிரசு கட்சியின் துணைத் தலைவர் வரை உயர் பதவிகளில் 2003 வரை அங்கு பணியாற்றினார். 2003 இல் துணை தலைமைக் கொறடா ஆனார். 1998 ஆம் ஆண்டில், இவர் இந்திய தேசிய காங்கிரசுகட்சியின் செயலாளராகப் பொறுப்பேற்றார்.
சான்றுகள்
1956 பிறப்புகள்
வாழும் நபர்கள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
|
592520
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE
|
ஜேம்ஸ் மீனா
|
ஜேம்ஸ் மீனா (James Meena) (பிறப்பு 1951) ஒரு அமெரிக்க நிகழ்ச்சி நடத்துனரும் ஆப்பெரா நிர்வாகியுமாவார். ஆப்பெராவின் பொது இயக்குநராகவும் முதன்மை நடத்துனராகவும் இருந்தார். 2000 ஆம் ஆண்டு முதல் வட கரோலினாவின் சார்லட்டில் உள்ள ஆப்பெரா கரோலினாவின் பொது இயக்குநராகவும் முதன்மை நடத்துனராகவும் இருந்து வருகிறார்.
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Articles and interviews
"Conversation with James Meena" from the February 2008 issue of Charlotte Magazine
"Q & A With James Meena" from the October 2010 issue of Charlotte Magazine
"Innovative Opera Carolina Presents Carmen", North Carolina Arts Council, 2010
"Interview with Maestro James Meena", Opera Lively, 2012
Media
Opera Carolina's Madama Butterfly interview and discussion broadcast on the program, Charlotte Talks (Radio WFAE), 11 January 2012
Audio of James Meena conducting a concert of romantic songs and arias on worldofopera.org
Video with James Meena talking about opera on operacarolina.org
James Meena Interview broadcast on News 14 Carolina
வாழும் நபர்கள்
1951 பிறப்புகள்
கலைத் தொழில்களில் அமெரிக்கர்கள்
|
592522
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE
|
ஹரிஷ் மீனா
|
ஹரிஷ் சந்திர மீனா (Harish Chandra Meena) இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியிலும்]] தற்போது (2020 வரை) இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடனும்]] தொடர்புடையவர். இராஜஸ்தானின் தௌசா தொகுதியிலிருந்து 16வது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓய்வு பெற்ற இந்தியக் காவல் பணி அதிகாரியும், முன்னாள் காவல்துறையின் தலைமை இயக்குனருமாவார். இவர் மார்ச் 2009 முதல் டிசம்பர் 2013 வரை இராஜஸ்தானின் காவல்துறையின் தலைமை இயக்குநாக பணியாற்றினார். 1996 ஆம் ஆண்டு இந்திய காவல் பதக்கம் மற்றும் 2002 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதக்கமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Harish Meena Website
Dausa MP Harish Meena inspecting government schools
Ex-DGP Harish Meena proves he's fit for politics
Solar clean energy at Rajourgarh
1954 பிறப்புகள்
வாழும் நபர்கள்
16வது மக்களவை உறுப்பினர்கள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
|
592524
|
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE
|
ரமேஷ் சந்த் மீனா
|
ரமேஷ் சந்த் மீனா (Ramesh Chand Meena) (பிறப்பு: ஜனவரி 15, 1963) ஒரு இந்திய அரசியல்வாதியும் இராஜஸ்தானின் பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி அரசாங்கத்தின் அமைச்சரும் ஆவார். இவர் இராஜஸ்தானின் 13, 14 மற்றும் 15 வது சட்டப் பேரவையில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக சபோத்ரா சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கோல்மா தேவி மீனாவை 14,104 (8.26%) வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சபோத்ரா சட்டமன்ற உறுப்பினராக மூன்றாவது முறையாகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டிசம்பர் 2018 இல், அசோக் கெலட்டின்அமைச்சகத்தில் உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
சான்றுகள்
வாழும் நபர்கள்
1963 பிறப்புகள்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.