text
stringlengths
11
513
இருக்க வேண்டும். அல்லது 4. ஓர் உயர்நீதிமன்றத்திலோ , இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட நீதிமன்றங்களிலோ குறைந்தது பத்தாண்டுகள் வழக்கறிஞராக இருந்தவராக இருக்க வேண்டும். அல்லது குடியரசுத் தலைவர் கருத்தின்படி தனிச்சிறப்பு வாய்ந்த சட்டவியல் நிபுணராக இருத்தல் வேண்டும். உச்சநீதி மன்றத்தின் நீதிபதிகள் அறுபத்தைந்து வயது நிறைவு பெறும்வரை பதவி வகிப்பார்கள். உச்ச நீதிமன்றத்தின் தலைமை இடம் டில்லியில் உள்ளது. இருப்பினும் இந்தியாவின் தலைமை நீதிபதி இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று நீதிமன்றத்தை பிற இடத்திலோ அல்லது
இடங்களிலோ தற்காலிக இருப்பிடமாகக் கொண்டு செயல்படுத்தலாம். உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பு ( JURISDICTION OF SUPREME COURT ) 1. முதலேற்பு அதிகார வரம்பு 2. மேன்முறையீட்டு அதிகார வரம்பு 3. ஆலோசனை அதிகார வரம்பு 4. நீதிப் பேராணை அதிகார வரம்பு 5. இன்னபிற அதிகார வரம்பு 1. முதலேற்பு அதிகார வரம்பு ( Original jurisdiction ) இந்திய அரசியலமைப்பு உச்சநீதிமன்றத்தின் முதலேற்பு அதிகார வரம்பிற்குட்பட்ட வழக்குகளை கீழ்க்கண்டவாறு கூறுகிறது. அ. இந்திய அரசாங்கத்திற்கும் , ஒரு மாநிலம் அல்லது பல மாநிலங்களுக்கும் இடையே எழும் வழக்கு
, அல்லது. ஒருபுறம் , இந்திய அரசாங்கமும் ஏதேனும் மாநிலம் அல்லது மாநிலங்களும் மறுபுறம் பிறிதொரு மாநிலம் அல்லது மாநிலங்கள் இவற்றிற்கிடையே எழும் வழக்கு அல்லது இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே எழும் வழக்கு அடிப்படை உரிமைகள் செயலாக்குவது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் முதலேற்பு அதிகார வரம்புக்கு உட்பட்டவை. 2. மேல்முறையீட்டு அதிகார வரம்பு ( Appellate Jurisdication ) உச்சநீதிமன்றம் தான் இந்தியாவிலேயே இறுதியான மேல் முறையீட்டு நீதிமன்றமாகும். மாநிலங்களின் உயர்நீதி மன்றங்களின் சிவில் (
உரிமையியல் ) மற்றும் கிரிமினல் ( குற்றவியல் ) வழக்குகளின் தீர்ப்புகளுக்கு எதிராக உச்சநீதி மன்றத்திற்கு முறையீடு செய்யலாம். குறிப்பிட்ட வழக்குகளில் அரசியலமைப்பின் பொருள் குறித்து தெளிவான சட்டப் பிரச்சினை உள்ளது என உயர்நீதிமன்றம் சான்று வழக்கினாலன்றி உச்சநீதிமன்றம் அந்த வழக்கை ஏற்றுக் கொள்ளாது. உயர்நீதிமன்றம் இத்தகைய சான்றுகள் வழங்கவில்லை என்றாலும் உச்சநீதிமன்றம் இந்திய எல்லைக்குட்பட்ட எந்த நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தின் ( Tribunal ) தண்டனைக்கெதிராகவும் , கட்டளைக்கெதிராகவும் தனி அனுமதி வழங்கலாம்.
தொடர்பாகவும் சிவில் வழக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யலாம். குற்றவியல் வழக்கு தொடர்பாகவும் , இந்திய எல்லைக்குட்பட்ட எந்த உயர்நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுத்கெதிராகவும் அல்லது குற்றவியல் வழக்கில் வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராகவும் உச்சநீதி மன்றத்திற்கு மேல் முறையீடு செய்யலாம். 3. ஆலோசனை அதிகார வரம்பு ( Advisory Jurisdiction ) ஒரு வழக்கு சட்டவிளக்கம் தொடர்பான அல்லது வேறு எந்த அம்சம் குறித்தும் பொது முக்கியத்துவம் வாய்ந்தது என்று குடியரசுத் தலைவர் கருதினால் அது
தொடர்பான உச்சநீதிமன்றத்தின் கருத்துரையைப் பெறுதவற்காக அனுப்பலாம். அந்த அதிகாரத்தை அரசியலமைப்பு குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ளது. 4. நீதிப்பேராணை அதிகாரவரம்பு ( Writ Jurisdiction ) இந்திய அரசியலைப்பின் விதி 32 ல் வழங்கப்படும் உரிமை மனிதனின் இருதயமும் உயிர்சக்தியும் ஆகும். இவ்வுரிமை மூலம் தனிமனிதனின் உரிமையும் சுதந்திரமும் பாதுகாக்கப்படுகின்றன. உச்சநீதிமன்றம் கீழ்க்கண்ட நீதிப்பேராணைகள் பிறப்பிப்பதற்கு அதிகாரம் உடையது. 1 ) ஆட்கொணர்விப்பு நீதிப்பேராணை 2 ) செயலுறுத்து நீதிப்பேராணை 3 ) தடையுறுத்து நீதிப்பேராணை
4 ) நெறிமுறைக்கேட்பு நீதிப்பேராணை 5 ) தகுதிவினவு நீதிப்பேராணை 1 ) ஆட்கொணர்விப்பு நீதிப்பேராணை ( WRIT OF HABEAS CORPUS ) தவறாக ஒருவர் காவலில் வைக்கப்பட்டால் அவருக்கு நீதி வழங்கும் நீதிமன்றம் காவலில் வைத்த அதிகாரிக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ ஆணை வழங்கி காவலில் வைக்கப்பட்டவரை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரச் செய்வதாகும். காவலில் வைக்கப்பட்டது சரி என நியாயப்படுத்த வேண்டியது காவல் துறையின் கடமை. இல்லையேல் அவரை விடுதலை செய்ய வேண்டும். 2 ) செயலுறுத்து நீதிப்பேராணை ( WRIT OF MANDAMUS ) செய்யத்தவறிய ஒரு குறிப்பிட்ட
செயலை உடனடியாக செய்யக்கோரி நீதிமன்றம் ஆணை பிறப்பிப்பதாகும். இவ்வாணை பிறப்பிக்கப்பட்டதும் குறிப்பிட்ட அலுவலர் அச்செயலை உடனடியாகச் செய்ய வேண்டியவராகிறார். 3 ) தடையுறுத்து நீதிப்பேராணை ( WRIT OF PROHIBITION ) நீதிமன்றம் ஓர் அதிகாரிக்கு ஆணை பிறப்பித்து , அவரது எல்லைக்குட்படாத ஒரு செயலை செய்யாதிருக்குமாறு ஆணை பிறப்பிப்பதாகும். 4 ) நெறிமுறைக்கேட்பு நீதிப்பேராணை ( WRIT OF CERTIORARI ) நீதிமன்றம் தனது கீழ்ப்பட்ட ஒரு அதிகாரிக்கோ அல்லது நீதிமன்றத்துக்கோ ஆணை பிறப்பித்து , குறிப்பிட்ட நீதிமன்ற செயல்முறைகளையும் , அது
தொடர்பான ஆவணங்களையும் தனக்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ மாற்றச் செய்து நியாயமான பரிசீலனைக்கு அனுப்பச்செய்வதாகும். செயலுறுத்து நீதிப் பேராணை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , தடையுறுத்து நீதிப்பேராணை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்பதும் ஆகும். செயலுறுத்து நீதிப் பேராணை நீதித்துறை என்று மட்டுமல்லாமல் நிர்வாகத்துறையின் அதிகாரப்பொறுப்பில் இருப்பவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வழி செய்கிறது. ஆனால் தடையுறுத்து நீதிப்பேராணை மற்றும் நெறிமுறை கேட்பு நீதிப்பேராணை நீதி அல்லது நீதித்துறையோடு தொடர்புடைய அதிகாரம்
செலுத்துவோருக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. 5 ) தகுதிவினவு நீதிப்பேராணை ( WRIT OF QUOWARRANTO ) பாதிக்கப்பட்ட ஒரு நபரின் நியாயமான கோரிக்கையின் அடிப்படையில் அரசாங்கத்தின் அலுவலர் ஒருவரை அவர் எந்த அடிப்படையில் குறிப்பிட்ட பதவியை வகிக்கிறார் என்பதைத் தெளிவுப் படுத்தக்கோரும் நீதிமன்றத்தின் உத்தரவாகும். அ. அவ்வலுவலர் அரசாங்க அலுவராகவும் அவருடைய பதவி சட்ட அடிப்படையில் அல்லது அரசியல் சட்ட அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டும். ஆ. அவ்வலுவலர் , மற்றவருடைய விருப்பத்திற்கு இணங்கவோ அல்லது அவர் சொல்லுபவற்றை
நிறைவேற்றும் வேலை ஆளாகவோ இல்லாமல் சார்பில்லாத உறுதியாக ஏற்படுத்தப்பட்ட அலுவலராக இருக்க வேண்டும். இ. அவ்வலுவலர் நியமிக்கப்பட்டது அரசியலமைப்பு அல்லது சட்டம் அல்லது சட்டம் சார்ந்த பிரச்சினை சம்பந்தப்பட்டதாக இருக்கவேண்டும். அரசாங்க அலுவல்கள் ஆக்கிரமிப்பை எதிர்த்து பாதுகாக்கும் அதிகாரம் மிக்கதாக தகுதி வினவு ஆணை கருதப்படுகிறது. 5. இன்னபிற அதிகார வரம்பு ( Miscellaneous Jurisdiction ) அ. ' உச்சநீதிமன்றம் ’ ஒரு பதிவு ( Court of record ) நீதிமன்றமாக இருக்கும். மேலும் அதன் ஆணைகளை அவமதிப்போரைத் தண்டிக்கும் அதிகாரம்
அனைத்தையும் உடையதாகவும் இருக்கும். ஆ. உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட தீர்ப்புகள் இந்திய எல்லைக்குட்பட்ட எல்லா நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று நீதிமன்ற நடவடிக்கைகளையும் செயல்முறைகளையும் ஒழுங்குபடுத்துவதற்காக விதிகளை இயற்ற உச்சநீதிமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது. ஈ. உச்சநீதிமன்றம் தனக்குக் கீழ்ப்பட்ட அலுவலர்கள் , பணியாளர்கள் ஆகியோரை கட்டுப்படுத்த வல்லது. சட்ட அலுவலர்கள் மற்றும் மத்திய சட்ட செயலி ( Law Officers and the Central Law Agency ) மத்திய அரசு தலைமை வழக்குரைஞர் (
Attorney General ) மேற்கூறப்பட்ட அலுவலர்கள் அனைவரும் அரசியல் சட்ட விதி 76 யின் படி குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் துறையை சார்ந்தஅலுவல்கள் , கடமைகள் நடைமுறைகள் மற்றும் அவைப்பற்றிய சட்டபூர்வ நிலைமைப்பற்றி தேவைப்படும் போதோ அல்லது கேட்டு கொள்ளும்போதோ , குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை கூறும் பணியைச் செய்கிறார்கள். பொது வழக்கறிஞர் இந்திய யூனியனில் சட்டம் சம்பந்தமான துறையின் மிக உயர்ந்த அலுவலர் ஆவார். அவருடைய பணிகளை நிறைவேற்றுவதற்கு அல்லது பணிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள்
நீதிமன்றங்களில் விசாரணை நடைபெறும் போது அவை எத்தகைய நீதிமன்றமாக இருந்தாலும் அங்கு தானே நேரில் ஆஜராகி வழக்கு விசாரணையில் உதவுவதற்கு அனுமதியும் உரிமையும் உடையவர். பொது வழக்கறிஞர் குடியரசுத் தலைவருடைய விருப்பம் உள்ளவரை பதவியில் இருப்பார். அவர் அனுமதிக்கும் ஊதியத்தை அவ்வப்போது பெறுவார். பொது வழக்கறிஞரை அடுத்து இன்னும் ஒரு இந்திய அரசு வழக்கு குறிப்புகள் தயாரிப்பவர் ( Solicitor General of India ) உள்ளார். 7.2.8 இந்திய அரசியல் கட்சிகள் பதினோறாம் வகுப்பு பாடநூலில் அரசியல் கட்சிகள் தோற்றம் , தேவை , விளக்கம் , வகைகள்
எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் தேர்தல் ஆணையம் , அதன் அதிகாரங்களும் , பணிகளும் எடுத்துக்கூறப்பட்டுள்ளன. இந்தப் பாடநூலில் தேசியக் கட்சிகள் , மாநில கட்சிகள் ஆகியவற்றின் அமைப்பு மற்றும் இலக்குகளும் , குறிக்கோள்களும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் படிநிலை அமைப்பிலான கட்டமைப்பைப் பெற்றுள்ளன. கட்சிகள் தனக்குரிய அடிப்படையான சட்டத்தைப் பெற்றுள்ளன. அச்சட்டத்திற்குட்பட்டு கட்சியின் கட்டமைப்பு உருவாக்கப்படுகின்றது. அதன் மேல் நிலையில் , தலைவர் ஒருவர் இருக்கலாம். அவருக்கு துணைபுரிய செயலாளர்கள் மற்றும்
பொருளாளர்கள் இருப்பார்கள். நாட்டின் பல்வேறு நிலைகளிலும் அரசியல் கட்சிகள் தமது மாநாடுகள் உரிய காலகட்டங்களில் நடத்துகின்றன. இத்தகைய மாநாடுகள் கட்சித் தொண்டர்கள் கட்சிக்காக நிதி திரட்டவும் , மக்களின் ஆதரவு திரட்டவும் உபயோகப்படுத்தப்படுகிறார்கள். இந்தியாவில் கிட்டத்தட்ட , எல்லா அரசியல் கட்சிகளும் இந்த முறையைப் பின்பற்றுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் பல அரசியல்கட்சிகள் செயல்படுகின்றன. அவ்வாறு பல அரசியல் கட்சிகள் செயல்படுவதற்கு அவற்றுக்கு இடையே உள்ள கருத்தியல்கள் மற்றும் இலக்குகள் ஆகும். கருத்தியல்கள் மற்றும்
இலக்குகள் அரசியல் கட்சிகள் இயங்குவதற்கு முக்கியமானவையாகும். இந்தியா அதிக மக்கள்தொகை கொண்ட மிகப்பெரிய நாடாகும். மக்களிடையே இன , மொழி , மதம் , வருவாய்நிலை , சமூக நிலை வேறுபாடுகள் உள்ளன. எனவே பொதுவான ஒரு அமைப்பு உருவாவது கடினம். இது கட்சிகளுக்கும் பொருந்தும். இந்தியாவில் தேசிய , மாநில அரசியல் கட்சிகள் உள்ளன. அவற்றைப் பற்றி காண்போம். பிரெஞ்சு அறிஞரான டிரேசி ( 1754 1836 ) என்பவரால் கருத்தியல் என்பது சொல்லாக்கம் செய்யப்பட்டது. மக்களுடைய இலட்சியங்கள் , உறுதிப்பாடுகள் , நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றின்
தொகுப்பினைக் கருத்தியல் குறிப்பிடுகின்றது. அரசாங்கக் கோட்பாடு ஒன்றையும் , அரசியல் நடவடிக்கைக்குரிய நிகழ்ச்சித் திட்டத்தையும் உருவாக்குவதற்குக் கருத்தியல் செயல்திறனை வழங்குகின்றது. அரசியல் கோட்பாடு மற்றும் அரசியல் தத்துவம் ஆகியவற்றைப் போல் அல்லாமல் , நடவடிக்கைக்குரியதொரு நிகழ்ச்சித் திட்டமாய் கருத்தியல் திகழ்கின்றது. அரசியல் சார்ந்த கருத்தியல்கள் பலவாகும். அவைகளுள் தேசியம் , மக்களாட்சி , சமதர்மம் , மதச்சார்பின்மைத்துவம் , மிதவாதம் , பொதுவுடைமை , முதலாளித்தும் போன்றவை குறிப்பிட்டத்தக்கதாகும். பலவகையிலான
அரசியல் கட்சிகளின் இலக்குகள் , குறிக்கோள்கள் , கொள்கைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களில் வாயிலாக கருத்தியல்கள் செயற்பாட்டைப் பெறுகின்றன. இந்தியத் தேசியக் காங்கிரஸ் இந்தியத் தேசியக் காங்கிரஸ் மிகப் பழமையான அரசியல் கட்சியாகும். அது ஏ.ஓ. ஹியூம் என்பவரால் 1885 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் , 28 ஆம் நாளில் நிறுவப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் வரலாறு சுதந்திரப் போராட்டத்தின் வரலாறாக உள்ளது. அரசியல் சுதந்திரம் என்னும் பொதுவான குறிக்கோளை அடையும் பொருட்டு பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் காங்கிரஸ் கட்சியின் கீழ்
அணிதிரண்டனர். எனவே , பிரிட்டிஷ்காரர்கள் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் 15 ஆம் நாளன்று நாட்டையும் அதிகாரத்தையும் காங்கிரஸிடம் ஒப்படைத்தனர். அந்த நாள் முதற்கொண்டு , இரண்டு இடைவெளிகளை அல்லது குறுகிய கால எல்லைகளைத் தவிர்த்து ஏற்றத்தாழ ஐம்பது ஆண்டுகளாய்க் காங்கிரஸ் மைய அரசாங்கத்தில் அதிகாரத்தில் இருந்து வருகின்றது. 1967 ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ அனைத்து இந்திய மாநிலங்களிலும் அதிகாரத்தில் இருந்தது. காந்திஜி , ஜவஹர்லால் நேரு , இராசகோபாலச்சாரியர் , கு. காமராசர் , திருமதி. இந்திரா காந்தி , ராஜீவ் காந்தி , பி.வி.
நரசிம்மராவ் மற்றும் பலர் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஆவர். இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சிப் பிளவுகள் பலவற்றைச் சந்தித்து உள்ளது. அதன் தேர்தல் சின்னம் ' கை ' ஆகும். காங்கிரஸின் அமைப்பு காங்கிரஸ் கட்சியின் தற்போதைய அமைப்பு 1920 ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற கூட்டத்தொடரில் வடிவமைக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதற்கு இணங்க ( 1 ) காங்கிரஸின் உயர்மட்ட அமைப்பாக அனைத்து இந்தியக் காங்கிரஸ் கமிட்டி ( குழு ) அமைந்துள்ளது. ( 2 ) இதற்கு அடுத்த அமைப்பாகக் காங்கிரஸ் செயற்குழு உள்ளது. இதன் உறுப்பினர்கள் அனைத்து இந்தியக்
காங்கிரஸ் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த அமைப்பு அமைச்சரவையைப் போல் உள்ளது. பொதுவாக , மிக மூத்தக் காங்கிரஸ்காரர்கள் இந்த அமைப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ( 3 ) நாடாளுமன்றக் குழு என்ற தனிப்பட்ட அமைப்பு ஒன்றும் உள்ளது. காங்கிரஸ் தலைவரையும் சேர்த்து ஆறு உறுப்பினர்களை அது கொண்டுள்ளது. ( 4 ) காங்கிரஸ் செயற்குழுவின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திற்கென , பிரதேசக் காங்கிரஸ் குழு ஒன்று அமைந்துள்ளது. இந்த அமைப்பு , தனக்கென ஒரு தலைவரையும் , செயல் உறுப்பினர்களையும் பெற்றுள்ளது. ( 5 ) ஒவ்வொரு
மாவட்டத்திற்குமென , மாவட்டக் காங்கிரஸ் குழுக்கள் ( மாநில காங்கிரஸ் குழுவின் கீழ் அமைந்துள்ளன. இதற்குக் கீழ் நிலையில் சில குழுக்களும் மற்றும் ( 6 ) மண்டலக் காங்கிரஸ் குழுக்களும் உள்ளன. பதினெட்டு அல்லது அதற்கு மேற்பட்ட வயதைக் கொண்ட எந்த ஒரு நபரும் காங்கிரஸின் அடிப்படை உறுப்பினராக முடியும். காங்கிரஸின் கருத்தியல் செயல்திட்டங்களிலும் ஒரு சுதந்திரத்துக்கு முன்னர் தேசியச் சுதந்திரம் அடைவதைக் காங்கிரஸ் தலையாய குறிக்கோளாகக் கொண்டிருந்தது. எனினும் , சுதந்திரத்திற்குப் பின்னர் காங்கிரஸின் கொள்கையிலும் மாற்றம்
ஏற்பட்டது. வகுப்பு அல்லது வர்க்க பேதமற்ற , மக்களாட்சிச் சமுதாயம் ஒன்றினை அமைக்கும் குறிக்கோள் 1955 ல் அறிவிக்கப்பட்டது. இக்குறிக்கோளுக்கென , காங்கிரஸ் கட்சியின் ஆவடிக் கூட்டத் தொடரில் “ சமதர்மப் பாங்கிலான சமுதாயம் ” என்னும் தீர்மானம் ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாட்டில் நிலவும் மாறுபடும் தேவைகளுக்குப் பொருத்தமான வேறு பல கொள்கைகளையும் செயல் திட்டங்களையும் காங்கிரஸ் கட்சி தழுவியது. இருப்பினும் கட்சியின் கொள்கைகளில் 1990 ஆம் ஆண்டு முதல் தீவிர மாற்றங்கள் ஏற்பட்டன. பிரதம அமைச்சர் திரு.பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான
அரசாங்கம் முக்கியமான சில பொருளாதார சீர்திருத்தங்களை ஆரம்பித்திருந்தது. இவையும் இதர மாற்றங்களும் சமதர்ம சமதாயக் கொள்கைக்கு முக்கியம் தரவில்லை , வரி விதித்தல் , தொழில் முதலியவைகள் செய்வதற்கு அனுமதி தருதல் போன்றவற்றிற்கு பின்பற்றப்பட்ட கடுமையான விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் தனியார்மயமாக்குதல் , தாராளமயமாக்குதல் மற்றும் உலகமயமாக்குதல் என்று பிரபலமாக இருந்த முறைகளை இந்தியா பின்பற்ற ஆரம்பித்தது. 1996 ம் ஆண்டுக்கு பிறகு வந்த காங்கிரஸ் கட்சி அரசாங்கம் அல்லாத எல்லா கட்சி அரசாங்கங்களுமே
இம்முறைகளை பின்பற்றவேண்டியது அவசியமாயிற்று. 2004 ஆம் ஆண்டு மே மாதம் முதல் பதவிக்கு வந்திருந்த பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசாங்கமும் மேலே சொல்லப்பட்ட கொள்கைகளைப் பின்பற்றி வந்தது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மறுபடியும் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசாங்கம் பதவி ஏற்று செயல்பட்டு வந்தது. இவ்வாறு மாறுதல்கள் ஏற்பட்ட போதும் காங்கிரஸ் கட்சி மற்றும் இதர கட்சி அரசாங்கங்கள் எல்லாமே ஐந்தாண்டு திட்டங்கள் அடிப்படையில் முன்னேற்றம் ஏற்படுத்தும் முறையைப் தொடர்ந்துப்
பின்பற்றின. சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரையிலும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு அவர்கள் காலம் முதல் இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளுடன் நட்புறவு கொள்கையே பின்பற்றி வருகிறது. உச்ச அதிகாரம் உடைய அமெரிக்க அரசாங்கம் மற்றும் சோவியத் யூனியன் போன்ற நாடுகளுடன் காங்கிரஸ் கட்சி அரசாங்கம் நடுநிலைமைக் கொள்கையையும் அணிசேரா கொள்கையையும் கடைப்பிடித்து வந்திருக்கிறது. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி இந்தியாவில் மிகப் பழமை வாய்ந்த இரண்டாவது கட்சியாகப் பொதுவுடைமைக் கட்சி திகழ்கின்றது. 1924 ஆம்
ஆண்டில் அது நிறுவப்பட்டது. ஆனால் , அது நிறுவப்பட்ட பிறகு , உடனடியாக , பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. இதன் விளைவாக , பெருவாரியான பொதுவுடைமைக் கட்சித் தொண்டர்கள் , காங்கிரஸின் வாயிலாகத் தமது பணியினைத் தொடர்ந்து ஆற்றினர். 1942 ல் நடைபெற்ற “ வெள்ளையனே வெளியேறு " எனும் இயக்கத்தை எதிர்த்ததாலும் , இரண்டாம் உலகப்போரை ஆதரித்த காரணத்தாலும் பொதுவுடைமைக் கட்சியின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை 1943 - ல் நீக்கப்பட்டது. அதுவரை , பொதுவுடைமைக் கட்சி சட்டத்திற்குப் புறம்பான ஓர் அமைப்பாக இருந்தது.
சுதந்திரத்துக்குப்பின் , தனது நிலையைப் பொதுவுடைமைக் கட்சி மாற்றியது. அரிவாளுடன் கூடிய நெற்கதிர்கள் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தேர்தல் சின்னமாகும். அமைப்பும் கருத்தியலும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி உலகப் பொதுவுடைமை இயக்கத்தின் ஒரு உறுப்பு ஆகும். தேசியக் கட்சிகளில் ஒன்றென அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும் , கேரளம் , மேற்குவங்காளம் , திரிபுரா ஆகிய மாநிலங்களில் மட்டும் அது செல்வாக்குக் கொண்டுள்ளது. இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் அமைப்பு 1958 ல் அமிர்தசரசில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. போர்
, புரட்சி மற்றும் தீவிரக் கருத்தியலைக் கைவிடும் பொருட்டு கட்சியின் அரசியலமைப்பு மாற்றம் செய்யப்பட்டது. கட்சியின் குறிக்கோள்களை அடைவதற்கென சட்ட மன்ற வகையிலான மக்களாட்சி முறை ஏற்றுக் கொள்ளப்பட்டது. கட்சியின் கட்டமைப்பு , மக்களாட்சி முறையிலான மைய அதிகார ஒருமிப்புக் கொள்கையின் மீது அமைந்துள்ளது. உள் கட்சி ஜனநாயகம் , மையத் தலைமை ஆகிய நியதிகளின் மீது மேற்சொன்ன கொள்கை நிலவுகின்றது. கட்சிக்குள் அதன் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்துவதற்கென்று நிலவும் வாக்குவாதச் சுதந்திரத்தை உள்கட்சிச் ஜனநாயகம் என பொருள் குறிக்கின்றது.
வாதங்களை அடுத்து , செயல்திட்டம் ஒன்றைத் தலைமை தீர்மானித்தவுடன் , கட்சியின் உறுப்பினர்கள் ஒழுங்குக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து , வழிகாட்டு நெறிகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றனர். கட்சியின் துவக்கநிலை , அமைப்பு ‘ கிளை ’ என்று அழைக்கப்படுகின்றது. கிராமம் , பஞ்சாயத்து , நகராட்சிப் பிரிவு , தொழிற்சாலை போன்ற பலவற்றின் அடிப்படையில் அது அமைந்துள்ளது. கட்சியின் கொள்கை நூல்களை விற்பனை செய்தல் , கட்சி உறுப்பினர் கட்டணங்களை வசூலித்தல் போன்றவை அதன் பணிகளாகும். கட்சிக் கிளையின் மேல் நிலைகளில் வட்டார மன்றம் , மாவட்ட
மன்றம் , மாநில மன்றம் மற்றும் தேசிய மன்றம் ஆகியவை உள்ளன. கட்சியின் அரசியலமைப்பைச் செயல்படுத்துதல் , கட்சி மாநாடுகளைக் கூட்டுவித்தல் மற்றும் மைய நிர்வாகக் குழுவிற்குத் தேர்தலை நடத்துதல் போன்ற ஒவ்வொரு முக்கியமான பணியினையும் தேசிய மன்றம் நடத்திவைக்கின்றது. மைய நிர்வாகக் குழு தனது பணிகளைக் கையாள்வதற்குத் தேவையான அமைப்புகளை அமைத்துக் கொள்ளலாம். கட்சியின் மேல் நிலையில் தலைவரும் பொதுச் செயலரும் உள்ளனர். இவ்வகையான கட்சியின் அமைப்பு தனிநபர் வழிபாடு எழுவதைத் தடை செய்கின்றது. அது அதிகாரத்தைப் பரவலாக்கி , மக்களாட்சி
முறையில் கட்சி செயல்படுவதற்கு வலிமையூட்டுகின்றது. தனது பாமரத் தன்மையைத் தக்கவைத்துக் கொள்ள இவ்வமைப்பு கட்சிக்குத் துணைபுரிகின்றது. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மார்க்கிசிய லெனினுடைய சிந்தனையை முழுமையாகக் கடைப்பிடிக்கின்றது. அதே சமயம் அது நாடாளுமன்ற முறையிலான பொதுவுடைமைத் தத்துவத்திலும் நம்பிக்கை கொண்டுள்ளது. பொது மக்களின் அக்கறைக்குப் புறம்பான அல்லது எதிரான பிற்போக்குச் சக்திகளை முறியடிப்பது அதனுடைய குறிக்கோளாகும். முதலாளித்துவ மக்களாட்சியின் ஓர் உறுப்பாயுள்ள நாடாளுமன்றத்தை மக்கள் விருப்பத்தின் உண்மையான ஒரு
கருவியாக உருமாற்றம் செய்வதை விரும்புகின்றது. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி பின்வரும் கொள்கைகளிலும் செயல்திட்டங்களிலும் நம்பிக்கை கொண்டுள்ளது. 1. வங்கிகளைத் தேசிய மயமாக்குதல். 2. இந்திய முற்றுரிமைகளையும் , தனியார் வசமுள்ள அயல்நாட்டு தொழில் நிறுவனங்களையும் அழித்தல். 3. அரசுப் பொதுத்துறையின் எல்லையை விரிவாக்குதல். 4. அரசு வணிகத்தை மேற்கொள்ளுதல். 5. அயல்நாட்டு மூலதனத்தைத் தடுத்து நிறுத்துதல். 6. அதிரடியான வேளாண்மைச் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளுதல். 7. அணிசேரா அயல்நாட்டுக் கொள்கையைக் கடைபிடித்தல். 8. காலனி
ஆதிக்கம் , ஏகாதிபத்தியம் இனவெறி ஆகியவற்றை எதிர்த்தல். மார்க்கிசிய இந்தியப் பொதுவுடைமைக் கட்சி இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 1964 ஆம் ஆண்டில் பிளவுண்டது. சீன ரஷ்ய உறவுகளின் உள்கட்சிப் பிளவு இந்தியப் பொதுவுடைமைக் கட்சி உடைந்ததற்குக் காரணமாய் இருந்தது. பொதுவுடைமை அல்லது கம்யூனிசத் தலைவர்கள் நாட்டில் நிலவிய அரசியல் , பொருளாதார நிலவரங்களை மதிப்பீடு செய்வதில் கருத்து வேற்றுமைகளைக் கொண்டிருந்தனர். மேலும் , ஓர் அணியைச் சேர்ந்தத் தலைவர்கள் நேருவின் அரசாங்கத்திற்குத் தமது ஆதரவை வழங்க விரும்பினர். ஆனால் மற்ற அணியின்
தலைவர்கள் , காங்கிரசை பிற்போக்கான கட்சி என்று கூறி அதற்கு கடுமையான எதிர்ப்பினைக் கோரினர். அவர்களுடைய கருத்தியலான வேறுபாடுகளில் எவ்வுடன்பாடும் தோன்றவில்லை. இறுதியாக , மாற்று கருத்துக் கொண்டோர் தனிப்பட்ட ஒரு மாநாட்டை தெனாலி என்னும் இடத்தில் 1964 ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் நடத்தினர். அவர்கள் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் டாங்கே அணியிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டனர். ஜோதிபாசு , ஈ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடு போன்ற தலைவர்களும் , மற்றவர்களும் இந்திய ( மார்க்சிய ) பொதுவுடைமைக் கட்சி என்ற பெயரில் புதியதொரு கட்சியை
அமைத்தனர். மார்க்கிசிய கட்சியின் அமைப்பு , முக்கியக் குறிக்கோள்கள் , கொள்கைகள் ஆகியவை , இந்தியப் பொதுவுடைமைக் கட்சியோடு பெரும்பாலும் ஒத்துக் காணப்படுகின்றன. கிளை மட்டத்திலிருந்து மேல் நிலை வரை , கட்சியின் கட்டமைப்பிற்கு ஆதாரங்களாய் மக்களாட்சிச் சமதர்மம் , உள்கட்சி ஜனநாயகம் ஆகிய நெறிகள் அமைந்துள்ளன. பாமர மக்களுடன் உயிர்ப்பான இணைப்பைக் கிளை பெற்றுள்ளது. இந்தியாவின் புரட்சிகரமான இயக்கம் , தனக்கே உரித்தான செயல்வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதில் மார்க்கிசியக் கட்சி பற்றுறுதி கொண்டுள்ளது. சீனாவின் அல்லது ரஷ்யாவின்
உருமாதிரி எதுவும் இந்தியாவிற்குப் பொருத்தமுடையதாக இருக்க முடியாது என்று அது நம்புகின்றது. மார்க்கிசியக் கட்சியின் சின்னம் ஒரு சுத்தி , அரிவாள் மற்றும் நட்சத்திரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி , மார்க்கிசியக் கட்சி ஆகியவற்றின் கருத்தியல் வேறுபாடுகள் ஒரு சில பொதுவான இலட்சியங்களையும் செயல் திட்டங்களையும் தவிர , இந்தியப் பொதுவுடைமைக் கட்சியும் , இந்திய மார்க்கிசிய கட்சியும் பின்வரும் கருத்தியலான வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. 1. தொழிலாளர் வர்க்கத்தின் தலைவர்களால் மட்டுமே இந்தியாவில்
புரட்சியைக் கொண்டு வர முடியும் என்று மார்க்கிசியக் கட்சி கருதுகின்றது. ஆனால் , ஏனைய மக்களாட்சிச் சக்திகளோடு நெருக்கமான உறவினைக் கொள்வதன் வாயிலாக சமுதாய உருமாற்றத்தை அடைய முடியும் என்று இந்திய பொதுவுடைமைக் கட்சி நம்புகின்றது. 2. தற்பொழுது செயல்பாட்டில் உள்ள அரசை அகற்றுவதிலும் , அதன் இடத்தில் தொழிலாளர் வர்க்கத்தினால் வழி நடத்திச் செல்லப்படும் மக்களுடைய ஜனநாயக அரசு ஒன்றை இடங்கொள்ளுமாறு செய்வதிலும் , மார்க்கிசியக் கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி , தேசிய மக்களாட்சி முன்னணி ஒன்று
அமைக்கப்படும் கருத்திற்கு ஆதரவாக உள்ளது. தற்போதைய அரசாங்க முறை அகற்றப்படுவதை அது எதிர்க்கவில்லை. காலப் போக்கில் பிற்போக்குச் சக்திகள் நீக்கப்பட்டு , கட்சியின் கைப்பிடிக்குள் அதிகாரம் வந்துவிடும் என்று அது கருதுகின்றது. 3. ஆளும் வர்க்கத்தினர் தாமாக முன் வந்து ஒருபோதும் அதிகாரத்தைக் கைவிடமாட்டார்கள் என்பதில் மார்க்சியக் கட்சி நம்பிக்கை வைத்துள்ளது. எனவே தேவையின் பொருட்டு வலிமையைக் கையாள அது விரும்புகின்றது. இந்தியப் பொதுவுடைமைக் கட்சி வன்முறையற்ற சாதனங்களில் நம்பிக்கை கொண்டுள்ளது. பொது மக்களுடைய விருப்பத்தின்
அடிப்படையில் ஒரு தூய்மையான கருவியாக நாடாளுமன்றத்தை உருமாற்றம் செய்வது அதன் குறிக்கோளாகும். பாரதீய ஜனதாக் கட்சி பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னோடியாகப் பழைய பாரதீய ஜன சங்கம் உள்ளது. ஜன சங்கத்தின் மூலத்தோற்றம் , பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்துத் தேசியம் பெற்ற தோற்றத்துடன் இணைந்துள்ளது. 1875 ல் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆரிய சமாஜத்தை நிறுவினார். வட இந்திய இந்துக்களிடையே புதியதொரு ஊக்கத்தை அது உருவாக்கியது. இந்துமதப் புத்துயிர் இயக்கத்திற்குத் தூண்டுதலையும் அது வழங்கிற்று. பின்னர் இந்து மகாசபை , ஜன சங்கம் ஆகியவற்றின்
அடிப்படையான நியதிகளாகப் புதிய கருத்துக்கள் அமைந்தன. 1925 ல் கேசவ் ஹெட்கேவார் என்பவர் ராஷ்டிரிய சுயம் சேவச் சங்கத்தை ( ஆர். எஸ்.எஸ் ) ஒரு கலாச்சார அமைப்பாக அமைத்தார். இந்து சமுதாயம் புத்துயிர் பெறுவது அதன் நோக்கமாயிருந்தது. ஷியாம பிரசாத் முகர்ஜி என்பவர் 1951 ஆம் ஆண்டில் ஜனசங்கத்தை அமைத்துக் கொடுத்தார். ஜனசங்கம் இந்து மகாசபை , ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றின் ஆதரவைப் பெற்றது. 1952 முதல் 1971 வரை இக்கட்சி நிலையான வளர்ச்சியைப் பெற்றது. 1977 ஆம் ஆண்டு மார்ச் திங்களில் மக்களவைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஜனசங்கம் ,
காங்கிரஸ் ( அமைப்பு ) மக்களாட்சிக்கான காங்கிரஸ் , பாரதீய லோக்தளம் மற்றும் சமதர்மக் கட்சி ஆகியவை ஜனதா கட்சி என்னும் ஒரு கொடியின் கீழ் வந்தன. ஜனதா கட்சி 170 இடங்களில் வெற்றி பெற்று மொரார்ஜி தேசாயைப் பிரதம அமைச்சராகக் கொண்டு அரசாங்கத்தை அமைத்தது. ஏ.பி.வாஜ்பாய் போன்ற ஜன சங்கத் தலைவர்கள் காபினெட் தகுதி கொண்ட அமைச்சர்களாயினர். ஜனசங்கத்தின் தலைவர்கள் தமது கட்சியைப் புனரமைத்துப் பாரதீய ஜனதா கட்சியாகப் பெயர் மாற்றம் செய்தனர். “ ஜனசங்கம் ” என்ற சொற்கள் கைவிடப்பட்டன. அதுமுதற்கொண்டு தனது தனிப்பட்ட அடையாளத்தைப் பாரதீய
ஜனதாக் கட்சி வெளிப்படுத்தி வருகின்றது. திரு.ஏ.பி.வாஜ்பாய் மற்றும் திரு.எல்.கே. அத்வானி தலைமையில் தேசிய கட்சியானது. பாரதீய ஜனதாக் கட்சி பிற அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து 1998 இல் மத்தியில் அரசாங்கம் அமைத்தது. மீண்டும் இக்கட்சி 2014 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று , திரு.நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் மத்தியில் பதவியேற்று செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு உள்ளதைப் போல , அதனுடைய அமைப்பும் , மக்களாட்சித் தன்மையைப் பெற்றுள்ளது. தாமரை மலர் பாரதீய ஜனதாக்
கட்சியின் தேர்தல் சின்னமாகும். பாரதீய ஜனதாக் கட்சியின் கருத்தியல் நெறிகள் 1. பாரதீய ஜனதாக் கட்சி மக்களாட்சியை ஒரு அரசாங்க வகையாகவும் , வாழ்க்கைப் போக்காகவும் ஆதரிக்கின்றது. இந்து மக்களாட்சி அரசில் அது நம்பிக்கை பூண்டுள்ளது. பாரதீய சமஸ்கிருதம் மற்றும் மரியாதை ஆகியவற்றின் மீதான அரசியல் பொருளாதாரம் சமூக மக்களாட்சியை அது கடைப்பிடிக்கின்றது. 2. வலிமையான ஒரு தேசத்தை நிர்மாணிக்கும் பொருட்டு , அனைத்துக் குடிமக்களின் சமவாய்ப்பு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றுக்கு அது உறுதியளிக்கின்றது. 3. தேசிய ஒருமைப்பாட்டின்
முக்கியத்துவத்தை அது வலியுறுத்துகின்றது. அரசியலும் பொருளாதாரமும் பன்முகத்துடன் பரவலாக்கப்படுவதை அது அன்புடன் ஆதரிக்கின்றது. 4. பாரதீய ஜனதாக்கட்சி சுதேசிப் பொருளாதாரத்தை அடிப்படையானதும் , இராணுவப் பாதுகாப்பிற்கும் மயமாக்கப்படும் நெறியினை அது கடைப்பிடிக்கின்றது. ஆதரிக்கின்றது. உரிய தொழிற்சாலைகள் தேசிய 5. அயல்நாட்டுக் கொள்கையில் , காங்கிரசுக்கு எதிர்ப்புடையதாய் பாரதீய ஜனதாக் கட்சி உள்ளது. “ அணிசேராக் கொள்கை என்னும் பெயரில் நாட்டின் அக்கறைகளைக் காங்கிரஸ் தியாகம் செய்துள்ளது ” என்ற உணர்வினை அது பெற்றுள்ளது.
விட்டுக் கொடுக்கும் பரஸ்பரம் அல்லது இருதரப்பு அக்கறையின் மீது அயல்நாட்டுக் கொள்கை அமைந்திருக்க வேண்டும் என்பதையும் , நாட்டின் சுய அக்கறையை மேம்படுத்துவதற்குரிய தேவையினையும் அது வலியுறுத்துகின்றது. 6. பொது வாழ்க்கையில் தூய்மை , பாதுகாப்பு , பொருளாதாரத் தேசியம் மற்றும் இந்துத்துவம் ஆகியவற்றைத் தனது கொள்கைத் திட்டங்களாகப் பாரதீய ஜனதாக் கட்சி அறிவித்துள்ளது. ஜனதா தளம் ஜனதா தளம் 1988 ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் அமையப் பெற்று மக்களாட்சித் தன்மையைக் கொண்டுள்ளது. இக்கட்சியின் அமைப்பு , பழைய ஜனதா கட்சியின்
அமைப்பிற்கு இணையானதாகவே உள்ளது. ஜனதா தளத்தின் கொள்கைக் கோட்பாடுகள் மற்றும் செயல் திட்டங்கள் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட எந்த ஒருவரும் , கட்சியில் உறுப்பினராகலாம். ஆனால் , அவர் 18 வயதினை அடைந்தவராக இருத்தல் வேண்டும். காங்கிரஸ் கட்சியில் உள்ளதைப் போன்று , ஜனதா தளத்திலும் சாதாரண உறுப்பினர்களும் , துடிப்புமிக்க உறுப்பினர்களும் உள்ளனர். ஒவ்வொரு உறுப்பினரும் கட்சிக்கு நேர்மையாக இருக்கும் பொருட்டு உறுதிமொழி ஒன்றினை எடுத்துக் கொள்ள வேண்டும். ஜனதாத் தளத்தின் நிர்வாகக் குழுவாக அதன் செயற்குழு அமைந்துள்ளது. கட்சியின்
எந்த ஒரு பதவிக்குமென , செயல் துடிப்பான உறுப்பினர் ஒருவரே தேர்தலில் போட்டியிட முடியும் , வட்டாரம் , மாவட்டம் , மாநிலம் மற்றும் தேசிய நிலைகளில் கட்சிக் குழுக்கள் உள்ளன. ஜனதா தளத்தின் கருத்தியல் நெறிகள் ஜனதா தளத்தின் முக்கியமான கருத்தியலான உள்ளடக்கப் பொருள்களுள் சில பின் வருபவையாகும். காந்திஜியின் இலட்சியங்களுக்கும் , மாண்புகளுக்கும் ஜனதாத் தளம் மதிப்பு கொடுக்கிறது. இந்தியாவில் , மக்களாட்சிச் சமதர்ம அரசு ஒன்றினை நிர்மாணிக்க அது விழைகின்றது. மதச்சார்பற்ற மக்களாட்சியுடனும் சுதந்திரமான இலட்சியங்களுடனும் இக்கட்சித்
தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. அச்சமெனும் அடிமைத்தளையிலிருந்து மக்களை விடுவிக்க ஜனதா தளம் விருப்பம் கொண்டுள்ளது. லஞ்சம் ஊழல் அழித்து மாண்புறு அரசியலை மேற்கொள்ள அது ஆதரவு தருகிறது. ( 1 ) தேர்தல் சீர்திருத்தங்கள் ( 2 ) சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தல் ( 3 ) அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் ( 4 ) நீதித்துறைக்கு மறு உயிர் ஊட்டம் பெறுமாறு செய்தல் ( 5 ). மக்களுடைய பலவகை சுதந்திரங்களைப் பாதுகாத்தல் ( 6 ) நாட்டின் அடிநிலையான மக்களாட்சியை நிலை நிறுத்தல் ( 7 ) மாநிலங்களுக்கு அதிகமான அளவில் அதிகாரம் வழங்கப்பட்டு ,
வலிமையானதொரு கூட்டாட்சி நாட்டைப் பெறுதல் ( 8 ) அரசியல் , சமூகப் பொருளாதார நீதியை நிலைநாட்டல் போன்ற இன்னபிற அதன் மக்களாட்சி முறை மாண்புகளுள் இடம்பெற்றுள்ளன. ஜனதா தளத்தின் பொருளாதாரக் கொள்கை காந்தியக் கருத்தியல்களைச் சார்ந்துள்ளன. வேளாண்மை , குடிசை மற்றும் சிறு அளவுத் தொழில்களில் உச்சத் தன்மையை அது வலியுத்துகிறது. வேலை வாய்ப்பு உரிமை , வேலையில்லாத் திண்டாட்ட ஒழிப்பு , தொழிற்சாலையில் தொழிலாளர்களின் பங்கேற்பு , ஒரு தேசிய வருமானம் , கூலிகள் மற்றும் விலைவாசிகளைப் பற்றிய கொள்கை மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைத்
தணித்துக் குறைத்தல் போன்ற இலட்சியங்களையும் அது ஏற்றுக் கொண்டுள்ளது. சுயமான தொழில் சார்பிலும் அது நம்பிக்கை கொண்டுள்ளது. அயல் நாட்டு கொள்கையை பொறுத்து , காங்கிரஸை விட ஜனதா தளம் வெகுவாக வேறுபட்டிருக்கவில்லை. ஆனால் , நமது தொழிற்சாலைகளுக்கு இழப்பு ஏற்படாதவகையில் , அயல்நாட்டு முதலீடுகளை அது வரவேற்கின்றது. மாநில அரசியல் கட்சிகள் திராவிட முன்னேற்றக் கழகம் 1916 ல் பிராந்திய அரசியல் தமிழ்நாட்டில் உணரப்பட்டது. அச்சமயம் , தற்போதைய தமிழ்நாடு அன்றைய சென்னை மாநிலத்தின் ஒரு பிரிவாகத் திகழ்ந்தது. சென்னை மாநிலத்தில் வாழ்ந்த
மக்களுள் பிராமணர்கள் அனைத்து நிலைகளிலும் செல்வாக்கு உடையவர்களாக இருந்தனர். எனவே பிராமணரல்லாதவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டும் என்று உணரப்பட்டது. இந்நோக்கத்திற்கென நடேச முதலியார் மற்றும் சிலரால் 1912 ல் திராவிடச் சங்கம் அமைக்கப்பட்டது. பின்னர் திராவிடச் சங்கம் நீதிக்கட்சி என்று பெயர் பெற்றது. அது திராவிடக் கண்ணோட்டத்தையும் குறிக்கோள்களையும் கொண்டதாய் இருந்தது. 1944 ல் பெரியார் திரு.ஈ.வெ.ராமசாமி தலைமையில் திராவிடர் கழகம் அமைக்கப்பட்டது. திரு.சி.என். அண்ணாதுரையும் அதில் சேர்ந்தார். திராவிடக்கழகம் ஒரு
சமுதாயச் சீர்திருத்த இயக்கமாகும். இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு , பெரியாருக்கும் , அண்ணாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு தோன்றியது. அதன் விளைவாக 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17 ம் நாளன்று திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா துவக்கி வைத்தார். 1949 முதல் 1957 தி.மு.க. ஒரு சமுதாய அமைப்பாக மக்களுக்கு பணி ஆற்றியது. நான்கு தென் மாநிலங்கள் உட்கொண்டதாய் , தனிப்பட்ட ஒரு திராவிட நாட்டை உருவாக்கும் குறிக்கோளைத் தி.மு.க கொண்டிருந்தது. ஆனால் பிரிவினைவாதத்தைத் தடை செய்யும் பொருட்டு அரசியலமைப்புத் திருத்தம்
செய்யப்பட்டதால் , 1963 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 23 ம் நாளன்று திராவிட நாடு என்னும் கொள்கை கருத்தியலை அண்ணா கைவிட்டார். தி.மு.கவின் வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. உதயசூரியன் தி.மு.கவின் தேர்தல் சின்னமாகும். 1957 ல் முதன் முறையாகத் தி.மு.க தேர்தலில் போட்டியிட்டது. இதற்கடுத்து வந்த தேர்தல்களில் தி.மு.க. நிலையான வளர்ச்சியைப் பெற்றது. 1967 ல் நடைபெற்ற நான்காவது பொதுத்தேர்தலில் தி.மு.க ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. 1967 ஆம் ஆண்டின் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அண்ணா முதலமைச்சரானார். அவர் 1969
ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 3 ஆம் நாள் வரை பதவியில் நீடித்திருந்தார். அண்ணாவின் மறைவுக்குப் பின் திரு.மு.கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். அவருடைய தலைமையின் கீழ் தேர்தல்களில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சித்தலைவர் என்ற முறையில் திரு.மு.கருணாநிதி 1972 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 13 ம் நாளன்று கருத்து வேறுபாடு காரணமாக திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார். தி.மு.க விலிருந்து வெளியேற்றப்பட்ட
பிறகு , 1972 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 18 ஆம் நாளன்று , தனது சொந்த கட்சியை எம்.ஜி.ஆர் நிறுவினார். அதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று அவர் பெயர் சூட்டினார். 1976 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 12 ஆம் நாளன்று , எம்.ஜி.ஆர் , தனது கட்சியின் பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று மாற்றினார். எம்.ஜி.ஆர் அவர்கள் தனது கட்சி திரு.சி.என். அண்ணாதுரை கொள்கைகளை பின்பற்றும் என அறிவித்தார். கட்சி தொடக்கத்திலிருந்து தற்போது வரை தமிழ்நாட்டு மக்களிடையே மதிப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
எம்.ஜி.ஆர் அவர்கள் டிசம்பர் திங்கள் 1987 ஆம் ஆண்டு மறைந்தார். அவர் மறைவுக்கு பின் , கட்சி செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையின் கீழ் பலமும் , வரவேற்பும் பெற்றுள்ளது. அ.தி.மு.க.வின் அடிப்படை கருத்தியல் ‘ “ அண்ணாயிசம் ’ ” ஆகும். ஏழ்மையையும் தீண்டாமையையும் ஒழிப்பதே அண்ணாயிசத்தின் அடிப்படை கொள்கை ஆகும். மேலும் சுயமரியாதை , பகுத்தறிவு , சோசலிசம் , சமூக சேவையும் அதன் கொள்கைகளாகும். கட்சி மாநில சட்டசபைக்கும் , பாராளுமன்றத்திற்கும் நடக்கும் தேர்தல்களில் பங்கு கொண்டு தன்னுடைய கொள்கைகளுக்கு ஆக்கவடிவம் கொடுக்க வேண்டும்
என்று நம்புகிறது. முதல் முறையாக அ.தி.மு.க 1973 ஆம் ஆண்டு மே திங்கள் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தலை சந்தித்தது. மொத்தத்தில் 52 சதவிகித வாக்குகளை பெற்றது. திரு.காமராஜின் காங்கிரஸ் ( ஓ ) இரண்டாவது , தி.மு.க மூன்றாவது இடத்தை பெற்றது. இந்தத் தேர்தல் தமிழ்நாட்டிலுள்ள பிரதான கட்சிகளின் தேர்தல் முடிவை நிர்ணயிக்கக்கூடிய திருப்புமுனையாக இருந்தது. தெலுங்கு தேசம் தி.மு.க போன்று இது ஒரு மாநில அரசியல் கட்சியாகும். என்.டி.ராமராவ் தெலுங்கு தேசக் கட்சியை 1982 ஆம் ஆண்டு , மார்ச்சுத் திங்கள் 29 ம் நாள்
தோற்றுவித்தார். திரைப்படத்தில் பல்வேறு வேடங்களில் நடித்து புகழ்பெற்றார். இதனால் பலதரப்பு மக்களையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார். அவரை மக்கள் ஒரு தெய்வ நிகர் திருமகனாகப் போற்றி நடந்தனர். தெலுங்குதேசம் கட்சி 1983 , 1985 , 1994 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆந்திர மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றியடைந்தது. ஆந்திரப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக திரு. என். டி. ஆர் அவர்கள் அம்மாநில மக்களுக்கு ஏழ்மையை அகற்றுவதிலும் , வாழ்க்கை தரத்தை உயர்த்துவதிலும் பாடுபட்டார். இவருக்கு பின் 1995 ல் திரு. என். சந்திரபாபுநாயுடு
தொடர்ந்தார். இவர் ஆந்திரப்பிரதேச மாநிலத்தை முன்னேற்ற பல முக்கிய முயற்சிகளை மேற்கெண்டார். தகவல் தொழில் நுட்பத்தில் இவரது முயற்சி எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது. திரு.ஏ.பி.வாஜ்பாய் அரசுக்கு இவருடைய அரசு வெளியிலிருந்து ஆதரவு அளித்தது. 2004 ஆம் ஆண்டு மக்களவைக்கு தேர்தல் நடைபெற்றது. அதே சமயம் , ஆந்திரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. திரு.சந்திரபாபுநாயுடு தலைமையின்கீழ் இயங்கும் தெலுங்கு தேசம் கட்சி தோல்வி அடைந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் 2004 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி
அமைத்தது. இலக்குகளும் குறிக்கோள்களும் 1. மத்திய , மாநில அரசுகளிடையே நல்லுறவு 2. மக்கள் முன்னேற்ற திட்டங்கள் 3. திட்டமிடுதலின் போது மாநிலத்தின் ஈடுபாடு 4. தேர்தல் சீர்திருத்தங்கள் 5. கட்சி தாவல் தடை செய்தல். 6. தேர்தல் செலவினங்கள் அரசினால் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும் போன்றவைகள் ஆகும். அகாலி தளம் இது சமயம் சார்ந்த அரசியல் கட்சியாகும். தொடக்கத்தில் மாஸ்டர். தாராசிங் என்பவர் இதற்கு தலைவராக இருந்தார். இக்கட்சி பஞ்சாபி மொழி பேசும் மக்கள் கொண்ட பஞ்சாபி சுபா என்ற சுதந்திர மாநிலம் வேண்டும் என்று வற்புறுத்தி வந்தது.
இதற்கு பிறகு பஞ்சாப் , அரியானா என்ற 1996 ல் பஞ்சாபி மொழி பேசும் பஞ்சாப் மற்றும் ஹிந்தி மொழி பேசும் அரியானா மாநிலங்கள் நடைமுறைக்கு வந்தன. இதர பிரதேச கட்சிகள் போல அகாலிதளமும் 1967 ஆம் ஆண்டு முதல் தேர்தலில் பங்கேற்று சட்டமன்றம் , மற்றும் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்டு வருகிறது. இக்கட்சி பாரதீய ஜன சங்கம் அல்லது ஜனதா கட்சி அல்லது பாரதீய ஜனதா கட்சியோடு கூட்டு வைத்து தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி அரசாங்கம் அமைத்து ஆட்சி செய்து வருகிறது. இக்கட்சியுடைய முக்கியமான கோரிக்கை சண்டிகர் நகரை பஞ்சாப் மாநிலத்தின்
தலைநகரமாக்க வேண்டும் என்பதாகும். பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களுக்கிடையே ரவி மற்றும் பியாஸ் நதிகளின் நீர்பங்கீடு இரு அரசாங்கங்களுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் என்பது மற்றுமொரு முக்கியமான கோரிக்கை ஆகும். சீக்கியர்களுடைய ராணுவ பண்பாடு நடைமுறைகளுக்கு ஏற்ப இந்திய ராணுவத்தில் நியாயமான எண்ணிக்கையில் அவர்களுக்கு பதவிகள் கொடுக்கப்படவேண்டும் என்பது இன்னும் ஒரு சிறப்பு கோரிக்கை ஆகும். இதர சிறு சிறு கோரிக்கைகள் பின்வருமாறு 1. கிறித்துவர்களுடைய புனித தலைநகரமான வாடிகன் நகருக்குத் தரப்படும் அதே முக்கியத்துவம்
அமிர்தரஸ் நகருக்கும் தரப்படவேண்டும். 2. உள்நாட்டில் வானவெளியில் செல்லும் விமானங்களில் சீக்கியர்கள் அவர்களுக்கே உரிய தலைப்பாகையும் கிரிபான் என்னும் கக்தி போன்ற ஆயுதத்தை எடுத்து செல்ல அனுமதி வேண்டும். கோடிட்ட இடத்தை நிரப்புக. 5. இந்தியக் குடியரசுத் தலைவர் இந்தியாவின் 6. இந்தியக் குடியரசுத் தலைவர் 7. இந்தியப் பிரதம அமைச்சர் தலைவர் ஆவார். 8. இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதியையும் மற்றும் நீதிபதிகளையும் கொண்டிருக்கும். 9. இந்தியத் தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதிகளும் உறுப்பினராக வயது 11. மாநிலங்கள் அவை
உறுப்பினராக வயது 12. துணைக் குடியரசுத்தலைவர் ஆவதற்கு வயது தலைவர் ஆவார். பகுதி ஆ 13. காந்தியக் கொள்கைகள் பற்றி விவரி. 14. அமைச்சரவை பற்றி சிறு குறிப்பு வரைக. 15. மக்கள் அவை தலைவரின் பணிகள் யாவை ? பகுதி இ குடிமகன் ஆவார். 16. காபினெட்டின் அம்சங்கள் மற்றும் பணிகள் யாவை ? 17. இந்தியப் பிரதமரின் பங்கு பணியினை விவரிக்க. 18. மாநிலக் கட்சிகளின் முக்கியத்துவம் பற்றி விவரி. 19. மக்கள் அவையின் அமைப்பு பற்றி விவரி. 25 ஆண்டுகள் 30 ஆண்டுகள் 35 ஆண்டுகள் .நியமிக்கப்படுவார்கள். 20. நாடாளுமன்றத்தின் பணிகள் யாவை. 21. இந்திய
உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பு பற்றி கட்டுரை வரைக. 22. திராவிட அரசியல் கட்சிகளின் குறிக்கோள்கள் பற்றி விவரி. பகுதி ஈ 23. இந்திய அரசியலமைப்பின் சிறப்பியல்புகள் யாவை ? 24. இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் யாவை ? 25. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றத்தை வரையறு. அத்தியாயம் 8 மாநில அரசாங்க அமைப்பு – தமிழ்நாடு முன்னுரை இந்தியாவின் அரசியலமைப்பு மத்திய அரசிற்கும் மாநில அரசுகளுக்கு தனியான நிர்வாக முறையை அளித்து ஒரு கூட்டாட்சி அரசாங்க முறையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 29 மாநிலங்களும் , தலைநகர் பிரதேசமான
புதுடில்லி உள்பட 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. அரசியலமைப்பு , மத்திய மற்றும் மாநிலங்களின் ஆளுமைக்கான பகுதிகளைப் பெற்றுள்ளது. அரசியலமைப்பு விதி 370 ன்படி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் அதற்கென்று தனி அரசியலமைப்பைப் பெற்றிருப்பதைத் தவிர , அரசியலமைப்பின் VI வது பகுதியில் விதி 152 லிருந்து விதி 237 வரை எல்லா மாநில அரசாங்கங்களும் ஒரே மாதிரியான அமைப்பைப் பெற்றுள்ளன என்பதை அது குறிப்பிடுகிறது. விரிவாகக் கூறினால் மத்திய அரசு பெற்றுள்ள பாராளுமன்ற அரசாங்க முறையே எல்லா மாநிலங்களிலும் உள்ளது. ஆளுநர் , முதலமைச்சர் ,
அமைச்சரவை , சட்டத்துறை , நீதித்துறை , செயலகம் , மாவட்ட நிர்வாகம் மற்றும் அதற்குக் கீழுள்ள அமைப்புகள் போன்றவைகளை விளக்குவதன் மூலம் நாம் இங்கே தமிழ்நாட்டின் அரசாங்கத்தை அறியலாம். 8.1 ஆளுநர் மாநிலத்தின் செயல்துறை அதிகாரம் ஆளுநரிடத்தில் உள்ளது. மற்றும் மாநிலத்தின் எல்லா செயல்துறை நடவடிக்கைகளும் ஆளுநரின் பெயரில் செயல்படுத்தப்பட உள்ளன. ஆனால் , பாராளுமன்ற முறைக்கிணங்க. அவர் மாநிலத்தின் பெயரளவுத் தலைவராக செயல்பட கடமைப்பட்டுள்ளார். பொதுவாக , அரசியலமைப்பு விதி 153 க்கிணங்க , ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ஆளுநர் இருப்பார்.
ஆனால் , 1956 ஆம் ஆண்டின் அரசியலமைப்புத் திருத்தம் ஒரு ஆளுநர் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் பதவி வகிக்கலாம் என்று வழிவகை செய்தது. ஆளுநர் என்பவர் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. ஆனால் , ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுகிறார். ஜனாதிபதியின் விருப்பம் உள்ளவரை பதவி வகிக்கிறார். 35 வயது நிரம்பிய எந்த இந்தியக் குடிமகனும் அந்தப் பதவிக்குத் தகுதியுடையவர். ஆனால் , விதி 158 க்கிணங்க அவர் எவ்வித வருவாய்தரும் பதவியை வகித்தல் கூடாது மற்றும் மத்திய அல்லது எந்த மாநிலச் சட்டத்துறையிலும் உறுப்பினராக இருத்தல்
கூடாது. ஆனால் , ஆளுநராக நியமனம் செய்யப்படவேண்டிய ஒரு நபர் பின்வரும் தன்மைகளில் திருப்தி படுத்தவேண்டும் என்று சர்க்காரியா ஆணையம் கூறியுள்ளது. 1. வாழ்க்கைப் பயணத்தில் சிறந்தவராக அவர் இருக்க வேண்டும். 2. மற்ற மாநிலத்திலிருந்து வரும் ஒருவராக அவர் இருக்க வேண்டும். 4. 3. மாநிலத்தின் அரசியலில் நெருங்கிய தொடர்பு இல்லாதவராக அவர் இருக்க வேண்டும். பொதுவாக , அரசியலில் அதிகம் பங்கெடுத்திராத ஒருவராக அவர் இருக்க வேண்டும். குறிப்பாக சமீபகால அரசியலில் பங்கெடுக்காதவராக இருக்க வேண்டும் மற்றும் 5. மேற்கூறப்பட்ட தன்மைகளுக்கேற்ப
ஒரு ஆளுநரை தேர்வு செய்யும் போது , இதுவரை இருந்த சிறுபான்மைக் குழுக்களுக்கு வாய்ப்புத் தர வேண்டுமென்பது தொடர வேண்டும். அரசியலமைப்பிற்கிணங்க , ஆளுநர் ஜனாதிபதியால் நியமனம் செய்யபடுகிறார். ஆனால் , நடைமுறையில் , பிரதம மந்திரியின் பரிந்துரையின்பேரில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார். ஆளுநர் பதவியின் இயல்பான காலம் ஐந்து வருடங்கள் ஆகும். அவருக்கு மறு பதவிக்காலமும் கொடுக்கப்படலாம். அவரின் பதவிக்காலம் முடிவடைந்த போதிலும்கூட பின்னர் வருபவர் பதவியேற்கும் வரை பதவியில் தொடர்கிறார். ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள்
என்று இருக்கின்றபோதிலும் , அவருடைய இராஜினாமாவாலோ அல்லது ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்வதாலோ அவர் பதவி இழக்கலாம். மாநிலச் சட்டத்துறையில் வாக்கெடுப்புப்பெறாத தொகுப்பு நிதியிலிருந்து அவர் தனது சம்பளத்தைப் பெறுகிறார். ஆளுநரின் அதிகாரங்களும் , பணிகளும் ஆளுநர் மாநில செயல்துறையின் தலைவராகத் திகழ்கிறார். மற்றும் அதிகமான அதிகாரங்களையும் அவர் பெற்றுள்ளார். விதி 163 - க்கிணங்க , ஆளுநர் தனது பணிகளையும் அதிகாரங்களையும் செயல்படுத்துகின்றபோது , சில குறிப்பட்ட விதிவிலக்குகளைத்தவிர , முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட
அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையால் வழிநடத்தப்படுகிறார். மாநில அளவிலான செயல்துறைத் தலைவராக ஆளுநர் பின்வருகின்ற பணிகளையும் அதிகாரங்களையும் பெற்றுள்ளார். அ. செயல்துறை அதிகாரங்கள் ஆ. சட்டத்துறை அதிகாரங்கள் நிதி அதிகாரங்கள் ஈ. நீதித்துறை அதிகாரங்கள் உ. தன்விருப்ப அதிகாரங்கள் , மற்றும் ஊ. இதர அதிகாரங்கள். அ. செயல்துறை அதிகாரங்கள். 1. மாநில அரசாங்கத்தின் அனைத்து செயல்துறை நடவடிக்கைகளும் பெயரால் எடுக்கப்படுகின்றன. 5. ஆளுநரின் 2. அவர் முதலமைச்சரையும் மற்ற அமைச்சர்களையும் நியமிக்கிறார். அவர்கள் ஆளுநரின் விருப்பம்
உள்ளவரை பதவி வகிக்கின்றனர். 3. அவர் மாநிலத்தின் தலைமை வழக்கறிஞரை நியமித்து அவரின் சம்பளத்தை நிர்ணயிருக்கிறார். 4. அவர் மாநிலத் தேர்தல் ஆணையரை நியமித்து அவரின் பணி நிலையையும் பதவிக் காலத்தையும் தீர்மானிக்கிறார். அவர் மாநிலப் பொதுப் பணி ஆணையத்தின் தலைவரையும் உறுப்பினர்களையும் நியமிக்கிறார். இருப்பினும் , அவர்கள் ஆளுநரால் அல்லாமல் இந்திய ஜனாதிபதியால் பதவியிலிருந்து விலக்கப்படலாம். 6. அவர் முதலமைச்சரிடமிருந்து மாநில விவகாரங்கள் தொடர்பான எந்தத் தகவலையும் , சட்டமியற்றுதலுக்கான முன்வரைவுகளையும் கேட்கலாம். 8. அவர் ,
தனது பெயரால் அமுல்படுத்தப்படுகின்ற ஆணைகள் தொடர்பான விதிகளை ஏற்படுத்தலாம். ஆனால் , அவை நியாமானதாக பிரச்சினைக்கு இடம் தராதவையாக இருத்தல் வேண்டும். 9. அரசாங்க அவர் எந்த விவாதத்தின் மீதான அமைச்சரவையின் முடிவையும் தன்னிடம் சமர்ப்பிக்கும்படி முதலமைச்சரை கேட்கலாம். 4. 10. விதி 356- ன்படி , மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த ஜனாதிபதிக்கு அவர் பரிந்துரை செய்யலாம். இவ்வித ஆட்சிக் காலத்தில் , ஜனாதிபதியின் முகவராக இருந்துகொண்டு விரிவான செயல்துறை அதிகாரங்களை ஆளுநர் செலுத்துகிறார். 5. செயல்பாடுகளின் ஆ. சட்டதுறை
அதிகாரங்கள் ஆளுநர் மாநிலச் சட்டத்துறையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளார். ஆனால் , அவர் சட்டத்துறையின் எந்த அவையிலும் உறுப்பினர் அல்லாதவர். இத்தன்மையில் , அவர் பின்வருகின்ற சட்டத்துறை அதிகாரங்களைப் பெற்றுள்ளார். சீர்பாட்டிற்காகவும் , அமைச்சர்களிடையே பகிர்ந்தளிக்கவும் அவர் விதிகளை ஏற்படுத்தலாம். 1. அவர் மாநிலச் சட்டமன்ற கூட்டங்களைக் கூட்டவோ அல்லது தள்ளிப்போடவோ மற்றும் கீழவையான மாநில சட்ட சபையை கலைக்கவோ உரிமை பெற்றுள்ளார். அவர் பொதுத்தேர்தல் முடிந்து முதல் கூட்டத்தொடரின் ஆரம்பத்திலும் ஒவ்வொரு வருடத்தின்
முதல் கூட்டத்தொடரின் ஆரம்பத்திலும் சட்டமன்றத்தில் உரையாற்றுகிறார். அச்செயல்பாடுகளை அவர் சட்டத்துறையின் நிலுவையில் உள்ள மசோதா தொடர்பாக இரு சபைகளுக்கும் செய்திகள் அனுப்பலாம். சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகள் காலியாக உள்ளபோது , சட்டசபையில் உள்ள எந்த உறுப்பினரையும் சபைக்கு தலைமை வகிக்க அவர் நியமிக்கலாம். அறிவியல் , கலை , கூட்டுறவு இயக்கம் மற்றும் சமூகப்பணி போன்றவற்றில் சிறப்பு அறிவு அல்லது நடைமுறை அனுபவம் பெற்றுள்ளவர்களை மாநில சட்டமன்றத்தின் மேலவைக்கு ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்களை அவர் நியமிக்கிறார். (
சட்டமன்ற மேலவை 1986 ஆம் ஆண்டு நீக்கப்பட்டது ). 6. ஆங்கிலோ இந்திய சமூகத்திலிருந்து மாநில சட்டமன்றத்தின் கீழவைக்கு ஒரு உறுப்பினரை அவர் நியமிக்கலாம். 7. தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசித்து மாநில சட்டத்துறை உறுப்பினர்களின் தகுதியின்மை பிரச்சினையை அவர் தீர்மானிக்கிறார். மாநிலச் சட்டத்துறையால் இயற்றப்பட்ட ஒவ்வொரு மசோதாவும் அவரின் கையொப்பத்திற்குப் பின்னரே சட்டமாகும். ஆனால் , சட்டத்துறையால் இயற்றப்பட்டு ஒரு மசோதா ஆளுநருக்கு அனுப்பப்படும்போது , அம்மசோதாவிற்கு அவர் சம்மதம் தெரிவிக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம்
அல்லது சட்டத்துறையின் மறுபரிசீலனைக்காக அந்த மசோதாவை திரும்ப அனுப்பலாம். 9. மாநில உயர்நீதிமன்றத்தின் நிலையை பாதிக்கும் வகையில் சட்டத்துறையால் மசோதா இயற்றப்படுமானால் , ஜனாதிபதியின் பரிசீலனைக்காக அம்மசோதாவை அவர் ஒதுக்கி வைக்கலாம். 10. விதி 213 - ன்படி மாநில சட்டத்துறை கூட்டத்தொடரில் இல்லாதபோது அவர் இடைக்காலச் சட்டங்களை இயற்றலாம். ஆனால் , ஆறு மாதங்களுக்குள் அவ்வித இடைக்காலச் சட்டங்கள் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும். ஒரு இடைக்காலச் சட்டத்தை எந்த நேரத்திலும் அவர் விலக்கிக்கொள்ளலாம். மற்றும் , இ. நிதி
அதிகாரங்கள் 1. வருடாந்திர நிதிநிலை அறிக்கை எனப்படும் மாநிலத்தின் வரவுசெலவுத்திட்டம் சட்டமன்றத்தின் முன் வைக்கப்படுகிறதா என்பதைக் கவனிக்க அவர் கடமைப்பட்டுள்ளார். 3. 2. அவரின் முன்பரிந்துரைபெற்ற பின்னரே மாநில சட்டமன்றத்தில் பண மசோதாக்கள் மாநில அரசின் கணக்குள் தொடர்பான மாநில நிதி ஆணையம் , மாநில பொதுப்பணி ஆணையம் , தலைமைக் கட்டுப்பாட்டாளர் மற்றும் தணிக்கையாளர் ஆகியோரின் அறிக்கைகளை மாநில சட்டமன்றத்தின் முன்வைத்திட அவர் கடமைப்பட்டவராக உள்ளார். 4. எவ்வித எதிர்பாராத செலவினத்தைச் சந்திப்பதற்கும் மாநில கூட்டு
நிதியிலிருந்து முன்பணத்தை அவர் ஏற்படுத்தலாம். மற்றும் , 2. அறிமுகப்படுத்தப்பட முடியும். எந்த ஒரு மானியக் கோரிக்கைக்கும் அவரின் பரிந்துரை விதிவிலக்கு அளிக்கப்படமாட்டாது. 5. பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளின் நிதிநிலைமையை ஆய்வு செய்வதற்காக ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் ஒரு நிதி ஆணையத்தை அவர் அமைக்கிறார். 3. ஈ. நீதித்துறை அதிகாரங்கள் 1. ஆளுநர் எவ்வித குற்றத்தின் தண்டனையிலிருந்தும் ஒருவரின் தண்டனையை குறைக்கவோ , தள்ளிவைக்கவோ அல்லது மன்னிப்பு வழங்கவோ முடியும். ஆனால் , ஆளுநரின் மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதியின்
மன்னிப்பு வழங்கும் அதிகாரத்திலிருந்து பின்வரும் வழிகளில் வேறுபடுகிறது. அ. மரண தண்டனைக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க முடியும். ஆனால் ஆளுநரால் முடியாது. கடற்துறை நீதிமன்ற தண்டனையை ஜனாதிபதி மன்னிக்க முடியும். ஆனால் ஆளுநரால் முடியாது. ஆ. தொடர்புடைய உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமனம் செய்கின்றபோது , ஜனாதிபதியால் அவர் கலந்தாலோசிக்கப்படுகிறார். உயர்நீதிமன்றத்துடனான ளான கலந்தாலோசனையில் , மாவட்ட நீதிபதிகளின் நியமனங்கள் , பணியமர்த்துதல் , பதவி உயர்வளித்தல் போன்றவற்றை அவர் செய்கிறார். 4. உயர்நீதிமன்றம் பொதுப்பணி
ஆணையம் ஆகியவைகளுடனான கலந்தாலோசிப்பினால் , மாநிலத்தின் நீதித்துறைப் பணிக்குப் பணியாளர்களை அவர் நியமிக்கிறார். மற்றும் உ. தன்விருப்ப அதிகாரங்கள் 1. ஜனாதிபதியின் பரிசீலனைக்காக எந்த மசோதாவையும் ஆளுநர் அனுப்பிவைக்கலாம். 2. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியின் அமுலாக்கத்திற்காக அவர் பரிந்துரைக்கிறார். 3. மாநிலத்தின் நிர்வாகம் மற்றும் சட்ட விசயங்கள் தொடர்பானத் தகவலை முதலமைச்சரிடமிருந்து அவர் கேட்கிறார். 4. பொதுத் தேர்தலுக்குப் பின்பு சட்ட சபையில் எந்தக் கட்சிக்கும் தெளிவான அல்லது தனிப் பெரும்பான்மை இல்லாதபோது எந்தக்
கட்சியின் தலைவரையும் அமைச்சரவை அமைக்க அவர் அழைக்கலாம். 6. 5. அமைச்சரவை நம்பிக்கையை அதன் மீதான சட்ட சபையில் நிரூபிக்க முடியவில்லையெனில் , அவர் அமைச்சரவையை நீக்கம் செய்யலாம். மற்றும் சட்ட சபையை அமைச்சரவை தனது பெரும்பான்மையை இழந்தால் , அவர் கலைக்கலாம். ஊ. இதர அதிகாரங்கள் மேலே கூறப்பட்ட பணிகள் மற்றும் அதிகாரங்களுடன் , ஆளுநர் பின்வருகின்ற இதரப் பணிகளையும் செயல்படுத்துகிறார். 1. மாநில பொதுப்பணி ஆணையத்தின் வருடாந்திர அறிக்கையை ஆளுநர் பெறுகிறார் மற்றும் அவற்றை அமைச்சரவை , மாநில சட்டமன்றம் போன்றவைகளிடம்
விவாதத்திற்காகச் சமர்ப்பிக்கிறார். 2. மாநில அரசாங்கத்தில் பல்வேறு துறைகளால் மேற்கொள்ளப்பட்ட வரவு மற்றும் செலவினம் தொடர்பான பொதுக் கட்டுப்பாட்டாளர் மற்றும் தணிக்கையாளரின் அறிக்கையை அவர் பெறுகிறார். அரசியலமைப்பு நிலை இந்திய அரசியலமைப்பு மத்தியிலும் , மாநிலங்களிலும் பாராளுமன்ற அரசாங்க முறையை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக , ஒரு பெயரளவு நிர்வாகியாக மட்டுமே ஆளுநர் ஆக்கப்பட்டிருக்கிறார் மற்றும் முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவை உண்மையான செயல்துறையாக அமைகிறது. ஆகவே , முதலமைச்சரைத் தலைவராகப் பெற்றுள்ள
அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையுடன் , ஆளுநர் தனது அதிகாரங்களையும் , பணிகளையு செயல்படுத்தக் கடமைப்பட்டவர். உண்மையில் , இந்தியக் கூட்டாட்சி முறையில் மாநிலத்தின் அரசியலமைப்புத்தலைவர் , மத்திய அரசின் பிரதிநிதி ஆகிய இரட்டைத்தன்மையான பங்கினை ஆளுநர் பதவிக்கு அரசியலமைப்பு வழங்கயுள்ளது. 1952 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டின் ஆளுநர்கள் பெயர் மற்றும் பதவிக்காலம் கீழேதரப்பட்டுள்ளது. கட்சியின் தலைவரை ஆளுநர் அழைக்கிறார். ஆளுநரின் விருப்பம் உள்ளவரை முதலமைச்சர் பதவி வகிப்பார். இருப்பினும் , முதலமைச்சர் பதவியின் இயல்பான
பதவிக்காலம் ஐந்து வருடங்கள் ஆகும். ஆனால் , இராஜினாமாவாலும் , விதி 356 - ன்படி மாநில அவசரநிலை அமுலாக்கத்தாலும் அவர் பதவி இழக்கலாம். முதலமைச்சரின் அதிகாரங்கள் முதலமைச்சர் மாநில நிர்வாகத்தின் தலைவராக இருக்கிறார். அவர் அதிகமான பணிகளையும் , அதிகாரங்களையும் பெற்றுள்ளார். முதலமைச்சரின் பணிகளும் அதிகாரங்களும் பின்வருமாறு அ. அமைச்சரவை தொடர்பானவை ஆ. ஆளுநர் தொடர்பானவை இ. மாநில சட்டத்துறை தொடர்பானவை ஈ மற்ற பணிகளும் அதிகாரங்களும் அ. அமைச்சரவை தொடர்பானவை அமைச்சரவையின் 5. தலைவராக , முதலமைச்சர் பின்வரும் பணிகளையும்
முதலமைச்சர் அதிகாரங்களையும் செயல்படுத்துகிறார். 1. ஆளுநரால் அமைச்சர்களாக நியமிக்கப்படும் நபர்களை பரிந்துரைக்கிறார். 2. அவர் அமைச்சர்களிடையே இலாக்காக்களைப் பகிர்ந்தளிக்கிறார். 3. அவர் அமைச்சரவையை மாற்றியமைக்கிறார் மற்றும் மறுமாற்றமும் செய்கிறார். 4. கருத்து வேறுபாட்டின் காரணமாக அவர் ஒரு அமைச்சரை ராஜினாமா செய்ய வேண்டுகிறார் அல்லது அவரை அமைச்சரவையிலிருந்து பதவி விலக்க ஆளுநருக்கு ஆலோசனைக் கூறுகிறார். அவர் அமைச்சரவை கூட்டங்களுக்குத் தலைமை வகிக்கிறார் மற்றும் அதன் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்துகிறார். 6. அவர்
தனது பதவியை இராஜினாமா செய்வதன்மூலம் அமைச்சரவையை முடிவுக்குக் கொண்டுவரலாம். மற்றும் 7. அவர் அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகளை வழிநடத்துகிறார் , இயக்குகிறார் , கட்டுப்படுத்துகிறார் மற்றும் ஒருங்கிணைக்கிறார். ஆ. ஆளுநர் தொடர்பானவை 1. விதி 167 - ன்படி ஆளுநருக்கும் அமைச்சரவைக்கும் இடையிலான தொடர்பின் பிரதான வழியாக முதலமைச்சர் உள்ளார். மற்றும் 2. பின்வரும் அலுவலர்களின் நியமனம் தொடர்பாக ஆளுநருக்கு அவர் ஆலோசனை கூறுகிறார். அ. மாநில தலைமை வழக்கறிஞர் ஆ. மாநில தேர்தல் ஆணையர் மாநில பொதுப்பணி ஆணையத்தின் தலைவர் மற்றும்
உறுப்பினர்கள். மாநில திட்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாநில நிதி ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள். மாநில சட்டத்துறைத் தொடர்பானவை. 1. மாநில சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டுவது மற்றும் தள்ளிப்போடுவது தொடர்பாக முதலமைச்சர் ஆளுநருக்கு ஆலோசனை கூறுகிறார். 2. சபையில் அரசாங்கக் கொள்கைகளை அவர் அறிவிக்கிறார். சட்ட சபையில் அவர் மசோதாக்களை அறிமுகம் செய்யலாம். மற்றும் எந்த நேரத்திலும் சட்ட சபையைக் கலைப்பதற்காக ஆளுநரிடம் அவர் பரிந்துரை செய்யலாம். ஈ. மற்ற பணிகளும் அதிகாரங்களும் 1. ஆளுங்கட்சியின் தலைவராக ,
கட்சியைக் கட்டுப்படுத்தவும் , நன்னெறிகளை வளர்க்கவும் , முதலமைச்சர் கடமைப்பட்டுள்ளார். மாநிலத்தின் தலைவராக , பல்வேறு பிரிவு மக்களின் கோரிக்கைகளைக் கவனமாக பரிசீலிக்கவும் அவர் கடமைப்பட்டவர். 4. 3. பல்வேறு பணிகளின் அரசியல் தலைவராக , மாநில அளவில் உள்ள பல்வேறு துறைகளின் செயலர்களை மேற்பார்வையிடவும் , கட்டுப்படுத்தவும் மற்றும் ஒருங்கிணைக்கவும் அவர் கடமைப்பட்டவர். 5. மாநில அரசின் சீரான செயல்பாடு மற்றும் சிறந்த மத்திய மாநில உறவுகளுக்காக , மத்திய அரசாங்கத்துடன் ஒரு நல்லுறவை வளர்க்க அவர் கடமைப்பட்டவர். மற்றும்
அமைச்சரவையின் அளவு முதலமைச்சரால் தீர்மானிக்கப்படுகிறது. எனினும் , சமீபத்திய அரசியலமைப்புத் திருத்தத்திற்கிணங்க , சட்டசபை உறுப்பினர்களின் 15 சதவிகித்தை மட்டுமே அவர் அமைச்சர்களாக்க முடியும். இவ்வாறாக , மாநில நிர்வாகத்தில் மிக முக்கியமான மற்றும் உயர்ந்த பங்கில் முதலமைச்சர் செயல்படுகிறார். இருப்பினும் , ஆளுநர் சிறப்பு நிலையைப் பெற்றுள்ள மாநிலங்களில் அவரின் தன்விருப்ப அதிகாரங்கள் முதலமைச்சரின் பங்கு மற்றும் முக்கியத்துவத்தை சிறிதளவு குறைத்துள்ளன. ஆனால் , தமிழ்நாடு போன்ற அமைச்சரவை உறுதிப்பாடுள்ள மாநிலங்களில்
அவ்வாறு இருக்கமுடியாது. பெயரளவுத் தலைவராக இருக்கிறார் மற்றும் மாநில அரசாங்கத்தின் உண்மையான அதிகாரம் அமைச்சரவையிடம் உள்ளது. ஆளுநர் தன் விருப்ப அதிகாரங்களைப் பெற்றுள்ள போதிலும் , அவர் எப்போதாவது அவைகளைச் செயல்படுத்துகிறார். ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல , ஆளுநர் முதலமைச்சரை நியமிக்கிறார் மற்றும் அவரின் பரிந்துரையின்பேரில் மற்ற அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். அமைச்சர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட பதவிக்காலம் இல்லை. மேலும் அவர்கள் ஆளுநரின் விருப்பம் உள்ளவரைப் பதவி வகிப்பர். இருப்பினும் , அமைச்சர்களின் இயல்பான
பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். அவ்வப்போது மாநில சட்டத்துறையால் அமைச்சர்களின் சம்பளங்களும் படிகளும் நிர்ணயிக்கப்படுகின்றன. உள்ளனர். என்ற கொள்கை மத்திய அரசாங்கத்தில் உள்ளதைப் போல மாநிலங்களில் பாராளுமன்ற அரசாங்கமுறை பின்பற்றப்படுவதால் , அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் மாநிலச் சட்ட சபைக்கு பொறுப்புடையவர்களாக உள்ளனர். அமைச்சர்கள் சட்ட சபையில் உறுப்பினர்களாகவும் அதன் விளைவாக , அமைச்சர்கள் ஒரு குழுவாக செயல்படுகின்றனர். “ ஒருவருக்காக அனைவர் மற்றும் அனைவருக்காக ஒருவர் " அமைச்சரவையின் செயல்பாட்டில்
பணிபுரிகிறது. அமைச்சரவையின் கூட்டு முடிவிலிருந்து ஒரு அமைச்சர் தன்னைப் பிரிக்க முடியாது. சட்டசபையின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும்வரை அமைச்சரவை அதிகாரத்தில் இருக்கிறது. சட்ட சபையில் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் , முதலமைச்சரால் தலைமை வகிக்கப்படும் அமைச்சரவை இராஜினாமாவை சமர்பிக்க கடமைப்பட்டுள்ளது. இதற்குக் கூட்டுப் பொறுப்பு என்று பெயர். அமைச்சரவையின் அளவு தொடர்பாக , இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஒரேமாதிரியாக இல்லை. நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் ( ARC ) பின்வருமாறு கூறியுள்ளது. “ பல்வேறு
மாநிலங்களில் உள்ள நிர்வாகத் தேவைகளைப் பரந்த நோக்கில் கணக்கில் எடுத்துக்கொண்டு , உத்திரப்பிரதேசம் , பீகார் , மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரம் போன்ற பெரிய மாநிலங்களில் கிட்டத்தட்ட 20 நபர்களை அமைச்சரவையில் பெற்றிருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம். மதராஸ் ( தற்போது தமிழ்நாடு ) , கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசம் போன்ற நடுத்தர அளவிலான மாநிலங்கள் 14 முதல் 18 வரைஅமைச்சர்கள் இருக்கலாம். கேரளா , ஹரியானா மற்றும் பஞ்சாப் போன்ற சிறிய மாநிலங்கள் 8 முதல் 12 வரை அமைச்சர்களைப் பெற்றிருக்கலாம் ”. இருப்பினும் ,
அமைச்சரவையில் அளவு , தொடர்புடைய மாநில முதலமைச்சரைச் சார்ந்துள்ளது. ஆனால் , சமீபகால அரசியலமைப்புத் திருத்ததிற்கிணங்க , மாநில சட்டசபையின் மொத்த உறுப்பினர்களின் 15 சதவிகிதத்திற்கு மேல் அமைச்சர்களின் எண்ணிக்கை செல்லக்கூடாது. ஒவ்வொரு அமைச்சரும் மாநில சட்டசபையில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். இல்லையென்றால் , ஆறு மாதத்திற்குள் அதன் உறுப்பினராக. தமிழ்நாட்டில் சட்டசபை பலத்திற்கேற்ப ( 234 உறுப்பினர்கள் ) அமைச்சர்களின் எண்ணிக்கை 36 வரை , அதாவது 234 ன் 15 சதவிகிதம் இருக்கலாம். தமிழ்நாட்டில் , அமைச்சரவையின் பணிகளும்
அதிகாரங்களும் பின்வருமாறு , 1. மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு , மக்களின் பாதுகாப்பு மற்றும் மக்களின் சொத்துப் பாதுகாப்பு ஆகியவற்றைப் பராமரித்தல். 2. மாநிலத்தின் கொள்கைகளை உருவாக்குவது , தீர்மானிப்பது மற்றும் அவைகளை சிறப்பாக அமுல்படுத்துவது. 3. சட்டசபையின் சட்டமியற்றும் திட்டங்களை அது தீர்மானித்தல் மற்றும் அனைத்து முக்கிய மசோதாக்களையும் அறிமுகப்படுத்துதல். 4. நிதிக்கொள்கையை முடிவு செய்தல் மற்றும் மாநிலத்தின் பொது நலத்திற்கான வரியமைப்பை வடிவமைத்தல். 5. சமூகப் பொருளாதார மாற்றங்களுக்கான திட்டங்களை தீட்டுதல்
, பல்வேறு துறைகளில் மாநிலத்தைத் தலையெடுக்கச் செய்வது. 6. துறைத்தலைவர்களின் முக்கியமான நியமனங்களைச் செய்தல். 7. மற்ற மாநிலங்களுடனான சிக்கல்மீது விவாதித்து முயற்சிகள் மேற்கொண்டு முடிவெடுப்பது. 8. துணை நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் பற்றி ஆளுநருக்கு ஆலோசனைக் கூறுதல். 9. ஐந்தாண்டுத் திட்டங்களில் மாநிலப் பணியின் பங்கை பரிசீலித்து மற்றும் அதன் கடமைப்பாடுகளை தீர்மானித்தல். 10. மாநில நிதி இருப்புகளிலிருந்து செய்கின்ற செலவினத்திற்காக முன்வரைவை உருவாக்குவது. 11. சட்டசபையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள சாதாரண மசோதாக்கள்